புதிய பதிவுகள்2

'கள் இறக்கும் போராட்டம்' - பனை மரம் ஏறிய சீமான்

3 months 1 week ago
புகையிலை உற்பத்தியால் உணவுப்பயிர் பயிருடுவதற்கு நில பற்றாக்குறை வருமென்பது பொய்க்கதை. ஏனெனில் நான் விவசாய குடும்பத்தில் பிறந்து விவசாயத்தால் வளர்ந்தவன் என்ற முறையில் எனக்கு எல்லாம் தெரியும். இப்ப மட்டும் என்ன வாழுதாம்? உப்பிற்கும் வெங்காயத்திற்கும் வெளிநாட்டை நம்பித்தானே இருக்கின்றார்கள்.

தமிழீழ புரட்சிப் பாடலாசிரியர் பண்டிதர் வீ. பரந்தாமன் ஐயா காலமானார்

3 months 1 week ago
I அஞ்சலி I I பண்டிதர் பரந்தாமன் I இரண்டாம் ஈழப்போர் தொடங்கிய தொண்ணூறுகளில் தன்னுடைய நாற்பதுகளிலிருந்த பண்டிதர் ஆசிரியர் வேலையைவிட்டு விலகி முழுநேர உறுப்பினராக சீருடையணிந்து புலிகளில் இணைந்தார். சங்க காலக் கவிதைகளில் ஒரு அதிபதியான பரந்தாமனின் பொற்காலமும் சங்ககாலத்திலேயே இருந்தது. விடுதலைப் புலிகளின் பொற்காலமான தொண்ணூறுகளில் புராதன சங்ககாலம் “தமிழீழத்தில்” Re Enact பண்ணப்படுவதாக ஒரு குழந்தையின் முகச்சாயலைக் கொண்டிருந்த பண்டிதர் உண்மையிலேயே நம்பினார். சங்ககாலத்திலேயே வாழ்ந்து கொண்டிருந்த பண்டிதர் சங்ககால மொழியையும் பதங்களையும் கொண்டு பிரச்சாரமில்லாத சில நல்ல கவிதைகளையும் எழுதியுள்ளார். பண்டிதர் பரந்தாமனுடைய மகனும் வேறொரு பிரிவில் எங்கள் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தான். அவனும் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் விடுதலைப் புலிகளில் போய்ச் சேர்ந்தான். மகன் புலிகளில் இணைவதை பண்டிதர் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஊக்குவித்திருந்தார். அதுமட்டுமின்றி தன் மகன் இணைந்ததை மிகப்பெருமையாகச் சொல்லியும் திரிந்தார். புலிகள் யாழை விட்டு வன்னிக்குச் சென்றபோது பண்டிதரும் வன்னிக்குப் போனார். ஈழப்போர் முடிந்தபின் புனர்வாழ்வுபெற்று தன் ஊருக்கு திரும்பி தன் எஞ்சிய நாட்களை நேற்று இறக்கும்வரை வாழ்ந்துவந்தார். அந்தணன் - அவர் மகன் ஊருக்கு திரும்பவில்லை. விடுதலைப் புலிகளின் போராட்டத்தை ஒரு மாயையிலிருந்தாலும் நியாயமானதாக நம்பியவரும் கவிஞர் முருகையனைப் போன்ற Hypocrite அல்லாதவருமான நேர்மையான மனிதனும் கவிஞரும் சொல்லப்பட்ட தமிழாசிரியருமானவர் பண்டிதர் பரந்தாமன். பகுத்தறிவுத் தந்தை என வர்ணிக்கப்படும் தென்புலோலியூர் கந்த முருகேசனார் இவருடைய குரு. ஹாட்லிக்கல்லூரியில் நான் படித்த காலப்பகுதியில் இவர் ஆசிரியராக இருந்தாலும் இவரிடத்தில் தமிழ் படித்திருக்ககூடிய பாக்கியம் எனக்குக் கிடைக்கவில்லை. பண்டிதரின் நல்ல கவிதையொன்று I நல்லையல்லை நெடுவெண்ணிலவே I இல்லும் இழந்தனம் ஊரும் இழந்தனம் ஏல்லாம் இழந்தே ஏதிலியர் ஆனோம் வேற்றூர் தன்னில் வெய்யிலுக்கொதுங்கல் போற்றெருவோரம் புளியோ வேம்போ ஆலோ அரசோ அருநிழல் தேடி ஓலை மறைப்பில் உழலும் வாழ்க்கை ஒழியுநாள் வருமோ? முன்னாள் எம்மூர் உழுது வித்திய பழனச் செந்நெல் அலைகடற் படுத்த விளைமீன் குழம்பொடு ஆர உண்டே மூரல் முறுவலர் சேர இருந்து திங்கள் சொரிந்த பாலொழிப் பரப்பில் மாலைத் தென்றல் முல்லை நறுமணம் முகந்து வீச மேனி சிலிர்ப்ப இன்பில் மிதந்த எழில் வாழ்வு கழிந்தது மாதோ இன்னாள் ஏர்க்களம் யாவும் போர்க்களம் ஆன வாரியிடையே வலைஞர் செல்லார் குயிலும் கோழியும் கூவல் மறந்தன கிள்ளை மழலையும் கேளா நல் ஆன் கன்று துள்ளா கறவை சுரவா எல்லாம் அழுக்காறுடையான் உள்ளம் போல் புல்லென்றாகிப் போன யாமோ கடுவெயில் அருவழி நெடுந்தொலை ஏகி கான விறகு கட்டி விற்கும் அல்லல் வாழ்க்கையே ஆனோம் இங்ஙன் சிறுவர் மகிழார் இளையோர் நயவார் பாடுநர் நோக்கார் பகையறக் களத்தில் ஆடுநர் வேண்டார் நீடொழி பரப்பி மெல்ல வானில் வருகுவை நல்லை அல்லை நெடுவெண்ணிலவே ❤️ இவர் கிளிநொச்சியில் உள்ள பண்டிதர் பரந்தாமன் கவின்கலைக் கல்லூரியின் நிறுவனர் ஆவார். மேலும், இவர் எழுதிய “தமிழர் உறவுமுறைச் சொல் வழக்கு அகராதி” என்ற நூல் குறிப்பிடத்தக்கது. கெரில்லாப் போர் விரகுகள் என்ற விடுதலைப் போராட்டம் சார்ந்த முக்கிய நூலையும் இவர் எழுதியுள்ளார். அத்துடன் மனிதரும் கடவுளும் மற்றும் வேர் – அடி வழித் தமிழ்ச் சொற்பிறப்பியற் சிற்றகரமுதலி முதலிய நூல்களையும் இவர் எழுதியுள்ளார். - நட்சத்திரன் செவ்விந்தியன் https://www.facebook.com/share/p/15mXpGm7oi/?

போர் பதற்றத்துல தப்பு பண்ணிட்டோம்! காஷ்மீரில் நடந்த தவறு! - இந்தியாவிடம் மன்னிப்பு கேட்ட இஸ்ரேல்!

3 months 1 week ago
ஈராக் அணுஆயுதம் தயாரிக்கிறது என்று சொல்லி அமெரிக்கா அந்த நாட்டை துவம்சம் செய்தது. அதன் பின் செய்த ஆய்வறிக்கையில் அப்படி ஏதும் அங்கு நடைபெறவில்லை என சுட்டிக்காட்டப்பட்டது. அதற்காக அமெரிக்கா வருந்தவுமில்லை மன்னிப்பு கேட்கவுமில்லை. தங்கள் சுயநலத்திற்காக ஏதோவொரு காரணத்தை காட்டி அந்த நாட்டின் வளங்களை சுரண்டி அரசியலில் முரண்பாடுகளை தோற்றுவித்து அந்த நாட்டை சுடுகாடாக்குவது இவர்களின் வழமை. இவர்கள் அணுஆயுதம் தயாரிக்கலாம், வைச்சிருக்கலாம், தாக்கலாம் ஆனால் மற்ற நாடுகளை கட்டுப்படுத்துவது. இதற்கெல்லாம் இவர்கள் விலை கொடுப்பார்கள். மத்திய கிழக்கிலே அவர்கள் தங்கள் சட்டங்களோடு வாழ்ந்து வந்தவர்களை, அவர்களின் வளங்களை சுருட்ட புகுந்து அவர்களை உலகெங்கும் இழுத்துவிட்டு அவர்களின் கொலைவெறியை மற்றயவர்கள் மேல் திணித்தது அமெரிக்கா. அமெரிக்காவுக்குள் அவர்கள் குடியேறுவதற்கு தடை விதித்த ட்ரம், அவர்கள் நாட்டுக்குள் புகுந்து அவர்களின் வளங்களை சுரண்டியது சரியா? கண்டிப்பாக மத்திய கிழக்கினாலேயே அமரிக்காவிற்கு அழிவு.

'கள் இறக்கும் போராட்டம்' - பனை மரம் ஏறிய சீமான்

3 months 1 week ago
புகையிலையாலும் பொருள் ஈட்டித் தமிழர்கள் வளர்ச்சி பெற்றது உண்மை. அதனை அழிப்பதற்காகவே கரிசனை கொண்டன சிங்கள அரசுகள்.😲

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் (WTC) இறுதிப் போட்டி

3 months 1 week ago
தென் ஆப்ரிக்க கிரிக்கெட் அணி இட ஒதுக்கீட்டிற்கு பிறகு விமர்சனங்களை கடந்து சிகரம் தொட்ட வரலாறு பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,டெம்பா பவுமா கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் "உலகை மாற்றும் சக்தி, ஊக்கமளிக்கும் சக்தி விளையாட்டுக்கு இருக்கிறது. வேறு எதையும் விட மக்களை ஒன்றிணைக்கும் சக்தி விளையாட்டுக்கு இருக்கிறது. விரக்தி மட்டுமே இருக்கும் இடத்தில் விளையாட்டு நம்பிக்கையை விதைக்கும். விளையாட்டு, மக்களை ஊக்குவிக்கவும் ஒன்றிணைக்கவும் வேண்டுமென்றால், அது முதலில் அனைத்து மக்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்." - இது தென் ஆப்ரிக்க முன்னாள் அதிபர், நோபல் பரிசு வென்ற நெல்சன் மண்டேலாவின் வார்த்தைகள். கிரிக்கெட் என்பது 11 பேர் ஆடும் விளையாட்டு. இதில் திறமையுள்ள அனைத்து தரப்பினருக்கும் சமமான வாய்ப்பு வழங்கினால்தான் அது "ஜென்டில்மேன் கேமாக" இருக்க முடியும். தென் ஆப்ரிக்காவில் நிறவெறி தென் ஆப்ரிக்காவில் 1991-ஆம் ஆண்டுக்கு முன்பு வரை நிலவிய நிறவெறி காரணமாக அந்த அணியே சர்வதேச கிரிக்கெட்டில் தடை செய்யப்பட்டிருந்தது. அதன் பிறகு கிரிக்கெட்டில் தடம் பதித்த தென் ஆப்ரிக்கா தான் விளையாடிய முதல் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட்டிலேயே சிறப்பாக ஆடி அரையிறுதி வரை முன்னேறியது. இங்கிலாந்துக்கு எதிரான அந்த அரையிறுதியில்தான் தென் ஆப்ரிக்கா வெற்றி பெற 13 பந்துகளில் 22 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஆட்டம் மழையால் தடைபட, பின்னர் அந்த இலக்கு ஒரு ரன்னில் 21 ரன்கள் என்று மாற்றியமைக்கப்பட்டது சர்ச்சையாகி இன்று வரையிலும் பேசப்படுகிறது. பட மூலாதாரம்,CRAIG GOLDING/FAIRFAX MEDIA VIA GETTY IMAGES படக்குறிப்பு,1992 ஒருநாள் உலகக்கோப்பையில் இங்கிலாந்து - தென் ஆப்ரிக்கா அரையிறுதி ஆட்டத்தில் ஒரு காட்சி. அதுமுதல் கிரிக்கெட் உலகில் தென் ஆப்ரிக்கா வலுவான அணியாக வலம் வந்தாலும் கூட நாக் அவுட் என்றாலே அந்த அணி நெருக்கடிக்குள்ளாகி கோட்டை விட்டு விடுகிறது. லீக் ஆட்டங்களில் அனைத்திலுமே வென்றிருந்தாலும் கூட, ஐசிசி தொடர்களின் அரையிறுதி, இறுதிப்போட்டிகளில் முற்றிலும் வேறு விதமாக ஆடி தொடரை விட்டே வெளியேறிவிடுவது வாடிக்கையாகவே தொடர்ந்தது. அதனால்தான், அந்த அணி 'சோக்கர்ஸ்' (chokers) என்ற பெயரையும் பெற்றது. மறைந்த ஹன்சி குரோனியே தலைமையில் கடந்த 1998ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியை வென்றபின் 27 ஆண்டுகளாக தென் ஆப்ரிக்கா அணி ஐசிசி கோப்பைக்காக காத்திருந்தது. அந்த கனவை 27 ஆண்டுகளுக்குப் பிறகு கருப்பினத்தைச் சேர்ந்த டெம்பா பவுமா கேப்டனாகி உலகக்கோப்பையையே அந்த அணிக்கு பெற்றுக் கொடுத்துள்ளார். டி20, ஒருநாள், டெஸ்ட் என சர்வதேச அளவில் ஆடப்படும் மூன்று வகை கிரிக்கெட்டிலும் டெஸ்ட் வெற்றிகளே மிகவும் மதிப்பு வாய்ந்தவையாக கிரிக்கெட் நிபுணர்களால் கருதப்படுகிறது. அந்த டெஸ்டில் உலக சாம்பியனாக, அதுவும் கிரிக்கெட்டின் மெக்கா என்று அழைக்கப்படும் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் சாதித்திருப்பது தனிச்சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. பட மூலாதாரம்,CRAIG PRENTIS /ALLSPORT படக்குறிப்பு,1999 உலகக்கோப்பை சூப்பர் சிக்ஸ் சுற்றில் தென் ஆப்ரிக்கா - ஆஸ்திரேலியா ஆட்டம் டை ஆனது. தென் ஆப்ரிக்காவில் கிரிக்கெட் வந்தது எப்படி? தென் ஆப்ரிக்காவின் பூர்வீகக்குடி ஆப்ரிக்க கருப்பினத்தவர்கள்தான். ஆனால், 1652ம் ஆண்டு ஏப்ரல் 6ம் தேதியில் இருந்து தென்ஆப்ரிக்காவில் ஐரோப்பிய காலனி ஆதிக்கம் தொடங்கியது. டச்சு கிழக்கிந்திய நிறுவனம் கேப்டவுனில் தடம் பதித்தது. அந்த நிறுவனம் படிப்படியாக தனது கிளைகளையும், அதிகாரத்தையும் விஸ்தரிப்பு செய்து, 17 மற்றும் 18ம் நூற்றாண்டில் ஆழப் பதித்தது. பிரெஞ்சு புரட்சி நடந்தபோதுதான், ஆங்கிலேயர் ஜேம்ஸ் ஹென்றி தலைமையில் 1795ல் கேப்டவுனை கைப்பற்றினர். இங்கிலாந்தில் விளையாடப்பட்டு வந்த கிரிக்கெட் தென் ஆப்ரிக்காவில் அறிமுகமானது. 1843-ம் ஆண்டில் போர்ட் எலிசபெத்தில் முதல் கிரிக்கெட் கிளப் தொடங்கப்பட்டது. 1889-ம் ஆண்டில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்துக்கு அடுத்தபடியாக டெஸ்ட் விளையாடும் அணியாக தென் ஆப்ரிக்கா மாறியது. தென் ஆப்ரிக்காவில் கிரிக்கெட் அணி உருவான காலத்தில் இருந்து 100 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த அணியில் வெள்ளையின வீரர்கள் மட்டுமே நிரம்பி இருந்தனர். 80 சதவிகிதம் கருப்பின மக்கள் வாழும் நாட்டின் தேசிய கிரிக்கெட் அணியில் அவர்களுக்கு இடம் தரப்படவில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES நிறவெறியால் தடை தென் ஆப்ரிக்காவில் சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்திய நிறைவெறி, விளையாட்டில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தியது. 1956-ஆம் ஆண்டில் முதன்முதலாக விளையாட்டுக் கொள்கையை தென் ஆப்ரிக்க அரசு வெளியிட்டது. அதில் தென் ஆப்ரிக்க அணி சார்பில் வெள்ளையினத்தவர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. நிறவெறிச் சட்டம் 1960களில் தீவிரமாகக் கடைபிடிக்கப்பட்டது. இந்த நிறவெறியால் ஒலிம்பிக், ரக்பி, பிஃபா ஆகியவை தென் ஆப்ரிக்க அணியை தடை செய்தன. 1970 முதல் 1990ம் ஆண்டுவரை ஐசிசி அமைப்பும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க தென் ஆப்ரிக்க அணிக்கு தடை விதித்திருந்தது. இடஒதுக்கீடு அறிமுகம் தென் ஆப்ரிக்காவில் நிறவெறி முடிவுக்கு வந்து தடைகள் விலக்கப்பட்ட போதிலும்கூட, அனைத்து விளையாட்டுகளிலும் வெள்ளையின வீரர்களே நிரம்பியிருந்தனர். 1998-ஆம் ஆண்டு நிறவெறி தடைச் சட்டமும், விளையாட்டுகளில் கருப்பினத்தவருக்கான இடஒதுக்கீடும் கொண்டு வரப்பட்ட பின்புதான் தென் ஆப்ரிக்காவில் மாற்றத்துக்கான துளிர்விட்டது. விளையாட்டில் இடஒதுக்கீடு முறை இதன் தொடர்ச்சியாக 2013-ம் ஆண்டு தென் ஆப்ரிக்க அணியில் வீரர்கள் தேர்வு குறித்து அந்நாட்டு அரசே வகுத்தது. அதன்படி 11 வீரர்கள் கொண்ட தென் ஆப்ரிக்க தேசிய கிரிக்கெட் அணியில் 6 வீரர்கள் கருப்பு கலப்பின வீரர்கள் இருக்க வேண்டும், அதில் 2 பேர் ஆப்ரிக்க கருப்பின வீரர்களாக இருக்க வேண்டும், 5 பேர் வெள்ளையின வீரர்களாக இருக்கலாம். இந்த இடஒதுக்கீடு முறை வந்த பின்பே சமூகத்தின் அனைத்து பிரிவு வீரர்களும் தென் ஆப்ரிக்க அணியில் இடம் பெற்றனர். கருப்பின வீரர்கள் அணிக்குள் வந்தபோதிலும்கூட சக வெள்ளையின வீரர்களின் நிறவெறிப் பேச்சும் செயலும் தொடர்ந்ததாக சர்ச்சைகள் உண்டு. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தென் ஆப்ரிக்க அணியில் இடஒதுக்கீடு முறை நடைமுறைக்கு வந்தபின் அணிக்குள் வந்த முதல் கருப்பின ஆப்ரிக்க வீரர் வேகப்பந்துவீச்சாளர் மகாயா என்டினி மகாயா என்டினி குற்றச்சாட்டு தென் ஆப்ரிக்க முன்னாள் வீரர் என்டினி, சக வீரர்களால் எவ்வாறு நிறவெறியுடன் நடத்தப்பட்டேன், கேலி கிண்டலுக்கு ஆளானேன் என்று தென் ஆப்ரிக்க ஒளிபரப்பு கழகத்துக்கு அளித்த ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். என்டினி பேசுகையில் "நான் அணிக்குள் வந்த நேரத்தில் தனிமையாகவே உணர்ந்தேன். இரவு சாப்பிட வேண்டுமென்றால் சக வீரர்கள் யாரும் என்னை உடன் அழைத்துச் செல்லமாட்டார்கள், 'சாப்பிடப் போகிறோம் வா' என்று கூட அழைக்க என் அறைக் கதவை தட்டமாட்டார்கள். என் கண் முன்னே, என்னிடம் ஆலோசனை கேட்காமலே, சக வீரர்கள் திட்டங்களை அவர்களாகவே வகுப்பார்கள். காலை உணவு சாப்பிட சென்றால் என் அருகேகூட எந்த வீரரும் அமரமாட்டார். சக வீரர்களால் புறக்கணிக்கப்பட்டு தனிமையாக இருப்பதால் சக வீரர்களுடன் பேருந்தில் செல்வதற்கு பதிலாக நடந்தே மைதானத்துக்கு செல்லலாம் எனத் தோன்றியது. என்னை எந்த வீரரும் புரிந்து கொள்ளவில்லை" எனத் தெரிவித்திருந்தார். வெள்ளையர் அல்லாத முதல் கேப்டன் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தென் ஆப்ரிக்க அணிக்கு வெள்ளைய இனத்தவர் அல்லாத முதல் கேப்டனாக ஆஸ்வெல் பிரின்ஸ் நியமிக்கப்பட்டார். தென் ஆப்ரிக்க அணிக்கு வெள்ளைய இனத்தவர் அல்லாத முதல் கேப்டனாக ஆஸ்வெல் பிரின்ஸ் நியமிக்கப்பட்டார். அவரும் சக வீரர்களால் நிறவெறிப் பாகுபாட்டுடன் நடத்தப்பட்டதாக ஒருமுறை வேதனையுடன் பகிர்ந்திருந்தார். தென் ஆப்ரிக்க சமூக நீதி மற்றும் தேசிய கட்டமைப்புக்கான விசாரணையில் பிரின்ஸ் பேசுகையில், "தென் ஆப்ரிக்க அணி வெள்ளையினத்தவர் அல்லாதவருக்கு தனிமையான இடம். ஒரு புதிய வீரர் வெள்ளையராக இருந்தால் வீரர்கள் உங்களை விரும்புகிறார்களா அல்லது இல்லையா என்பதை நடக்கும் சம்பவங்களை வைத்து புரிந்து கொள்ளலாம். ஆனால் வீரர் வெள்ளையராக இல்லாவிட்டால் இது எதுவுமே நடக்காது" எனத் தெரிவித்தார். தென் ஆப்ரிக்காவில் இடஒதுக்கீடு முறை கொண்டு வரப்பட்டு கருப்பின வீரர் என்டினி, கருப்பு கலப்பின வீரர்கள் ஹாசிம் அம்லா, டுமினி, ஆஷ்வெல் பிரின்ஸ் உள்ளிட்ட பல திறமையான வீரர்கள் தென் ஆப்ரிக்காவுக்கு கிடைத்த போதிலும் அவர்கள் "கோட்டா ப்ளேயர்ஸ்", அதாவது 'இடஒதுக்கீடு வீரர்கள்' என்ற விமர்சனத்தை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஹாசிம் ஆம்லா தொடர்ந்த நிறவெறி 2021-ஆம் ஆண்டில் தென் ஆப்ரிக்க அணியின் பயிற்சியாளராக இருந்த மார்க் பவுச்சர் தன்னை நிறவெறியுடன் நடத்தினார் என்ற ஆடம்ஸ் குற்றம்சாட்டினார். உலகளாவிய பிளாக் லிவ்ஸ் மேட்டர்ஸ் இயக்கத்தின் போது, தென் ஆப்ரிக்காவைச் சேர்ந்த முன்னாள் வீரர்கள் 30 பேர் தாங்கள் எவ்வாறு நிறவெறியால் பாதிக்கப்பட்டோம் என்பதை உலகுக்கு வெளிப்படுத்தினர். கருப்பினத்தவருக்கும் வாய்ப்புகளை வழங்க இடஒதுக்கீடு முறை தீவிரமாக அமல்படுத்தப்பட்ட நிலையில், தென் ஆப்ரிக்காவின் தோல்விகளுக்கு இந்த இட ஒதுக்கீடே காரணம் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. 2015-ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் நியூசிலாந்திடம் தென் ஆப்ரிக்கா அடைந்த தோல்விக்கு கருப்பின கலப்பு வீரர் பிலாண்டர் மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. 2007-ஆம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடரில் அரையிறுதியில் ஆஸ்திரேலியாவிடம், தென் ஆப்ரிக்கா தோல்வி அடைந்தது. அந்த ஆட்டத்தில் வேகப்பந்து வீச்சாளர் என்டினி சேர்க்கப்படவில்லை. இந்த ஆட்டம் பற்றி கிரேம் ஸ்மித் ஒருமுறை நினைவுகூர்கையில் " நண்பர்களே, நான் விளையாடக் கூடாது என சொன்னீர்கள் என்றால் என் முகத்தைப் பார்த்து நான் விளையாடக் கூடாது என்று சொல்லுங்கள். இட ஒதுக்கீடு முறைதான் பிரச்னை என சொல்லாதீர்கள். முடிவுகள் தவறாக நடந்த போது, இட ஒதுக்கீட்டால் அணிக்குள் வந்த வீரர்கள் மீது தவறு. விஷயங்கள் சரியாக நடந்த போது, மற்றவர்கள் ஹீரோக்கள். நான் தேசிய அணிக்காக விளையாடிய வரைக்கும், அது ஒரு அணியே இல்லை. நாங்கள் ஒன்றுமில்லை" என வேதனையுடன் தெரிவித்திருந்தார். என்டினி தனது 100வது டெஸ்டுக்குப் பிறகு, முறையான மரியாதையின்றி அணியிலிருந்து நீக்கப்பட்டதாக விமர்சனம் எழுந்தது, ஒரு மாதத்துக்குள் அவரது ஒப்பந்தத்தையும் அணியிலிருந்து இழந்தார். அப்போது என்டினி ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் "நாங்கள் எப்போது வென்றாலும், அது மகிழ்ச்சியாக இருந்தது, ஆனால் நாங்கள் தோற்ற போதெல்லாம் முதலில் குற்றம் சாட்டப்பட்டது நான்தான்" என்று தெரிவித்தார். இடஒதுக்கீடு முறை தேவையா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,2019ம் ஆண்டு தென் ஆப்ரிக்க ரக்பி அணிக்கு முதல் முறையாக கருப்பினத்தைச் சேர்ந்த சியா கோலிசி கேப்டனாக நியமிக்கப்பட்டார். தென் ஆப்ரிக்க அணி நீண்டகாலம் ஐசிசி உலகக் கோப்பையை வெல்ல முடியாமைக்கு அணிக்குள் நிலவிய இடஒதுக்கீடு முறைதான் காரணம் என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வந்தது. ரக்பி உலகக் கோப்பையை 1995 மற்றும் 2007ம் ஆண்டுகளில் தென் ஆப்ரிக்கா வென்ற போது அதில் பெரும்பாலும் வெள்ளையின வீரர்கள்தான் இருந்தனர், ஒன்று அல்லது இருவர் மட்டுமே கருப்பின வீரர்கள் இருந்தார்கள். இடஒதுக்கீடு முறை இல்லாத அணிதான் ரக்பி உலகக் கோப்பையை வென்றது என்ற வாதம் வைக்கப்பட்டது. ஆனால், 2019ம் ஆண்டு தென் ஆப்ரிக்க ரக்பி அணிக்கு முதல் முறையாக கருப்பினத்தைச் சேர்ந்த சியா கோலிசி கேப்டனாக நியமிக்கப்பட்டார். அணியில் 11 வெள்ளையர் அல்லாத வீரர்கள் இருந்தார்கள். இந்த புதிய மாற்றத்துக்கான தென் ஆப்ரிக்க அணியில் இருந்த வீரர்கள் பெரும்பாலும் நிறவெறி தடைக்குப்பின் பிறந்த இளம் வீரர்கள், இவர்கள் தங்கள் தேசத்துக்காக பங்களிப்பு செய்ய கிடைத்த வாய்பை சரியாகப் பயன்படுத்தி, உலக சாம்பியன் பட்டத்தை வென்றனர். அதன் மூலம் இடஒதுக்கீடு முறையால்தான் தென் ஆப்ரிக்கா கோப்பையை வெல்ல முடியாமல் போனது என்ற வாதத்தை அவர்கள் தவிடுபொடியாக்கினர். தென் ஆப்ரிக்க கிரிக்கெட் அணிக்குள்ளும் படிப்படியாக கருப்பின வீரர்கள், கலப்பின வீரர்கள் கொண்டுவரப்பட்டு படிப்படியாக மாற்றம் நடந்தது. மாற்றத்துக்கான வெற்றி தென் ஆப்ரிக்காவின் இந்த இடஒதுக்கீடு முறை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வெற்றிக்கு காரணமாக அமைந்ததா என்பது குறித்து விளையாட்டுப் பிரிவு மூத்த பத்திரிகையாளர் முத்துகுமார் பிபிசி தமிழிடம் கூறுகையில், "இட ஒதுக்கீட்டால் திறமையற்றவர்களுக்கு வாய்ப்பு கிடைத்துவிடும் என்ற வாதத்தை இந்த வெற்றி மாற்றியுள்ளது. தென் ஆப்ரிக்காவில் கொண்டுவரப்பட்ட இடஒதுக்கீடு முறை கருப்பினத்தவர் மற்றும் கலப்பின மக்களுக்கும் சமமான வாய்ப்பளிக்கிறது, வெள்ளையின மக்களுக்கும் வாய்ப்பளிக்கிறது. தென் ஆப்ரிக்காவின் இந்த சாம்பியன்ஷிப் வெற்றியை கிரிக்கெட் வெற்றியாக, கிரிக்கெட் தொழில்நுட்பம் சார்ந்த வெற்றியாக மட்டும் பார்க்கக்கூடாது. சமூக மாற்றத்துக்கான வெற்றியாகவும் இதை பார்க்க வேண்டும். கருப்பின வீரர்களுக்கு உரிமைகள் மறுக்கப்பட்டிருந்த ஒரு தேசத்தில், கருப்பின கேப்டன் தலைமையில் அந்த அணி சாம்பியன்ஷிப் வென்றது மாற்றத்துக்கான வெற்றியாகும்" என்றார். யார் இந்த பவுமா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அணியினருடன் டெம்பா பவுமா கேப்டவுன் நகரில் உள்ள லாங்கா எனும் புறநகர் பகுதியைச் சேர்ந்த ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர் டெம்பா பவுமா. முறையான கிரிக்கெட் பயிற்சிக் கூடத்துக்கு செல்ல முடியாமல் தெருக்களிலும், சாலைகளிலும் கிரிக்கெட் விளையாடி பவுமா பயிற்சி எடுத்தார். சான்டன் நகரில் புனித டேவிட் பள்ளியில் பள்ளிப் படிப்பையும், நியூலாந்தில் கல்லூரிப் படிப்பையும் பவுமா முடித்தார். 2008ம் ஆண்டிலிருந்துதான் பவுமாவின் கிரிக்கெட் வாழ்க்கை தொடங்கியது. கட்டெங், லயன்ஸ் போன்ற உள்நாட்டு அணிகளில் பவுமா விளையாடத் தொடங்கினார். இவரின் ஆட்டத்தைப் பார்த்து, 2012ம் ஆண்டு தென் ஆப்ரிக்க ஏ அணியில் இலங்கை அணிக்கு எதிரான தொடரில் விளையாட வாய்ப்புக் கிடைத்தது. இந்த தொடரிலும் பவுமா சிறப்பாக செயல்படவில்லை, இருப்பினும் ஆஸ்திரேலிய ஏ, இந்தியா ஏ அணிக்கு எதிரான தொடர்களில் பவுமாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டதில் அவரின் திறமை வெளிப்பட்டது. 2017ம் ஆண்டில் கேப் கோப்ராஸ் அணிக்காக பவுமா ஆடத்தொடங்கி, அதன்பின் லயன்ஸ், டர்பன் ஹீட், ஜோஸி ஸ்டார்ஸ் அணிகளுக்காக பவுமா விளையாடினார். 2014ம் ஆண்டில் தென் ஆப்ரிக்க டெஸ்ட் அணியில் பவுமாவுக்கு வாய்ப்புக் கிடைத்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கினார். 2016ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் சதம் அடித்து, தென் ஆப்ரிக்க கிரிக்கெட்டில் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த முதல் கருப்பினத்தவர் என்ற பெருமையை பவுமா பெற்றார். 2016ம் ஆண்டு செப்டம்பர் 25ம் தேதி அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் தென் ஆப்ரிக்க அணிக்காக பவுமா அறிமுகமாகினார். அறிமுக போட்டியிலேயே பவுமா சதம் அடித்து அசத்தி, ஒருநாள் போட்டியில் சதம் அடித்த முதல் கருப்பினத்தவ வீரர் என்ற பெருமையை பவுமா பெற்றார். டெஸ்ட் கேப்டன் பொறுப்பு 2019ம் ஆண்டில்தான் டி20 போட்டியில் பவுமா அறிமுகமானார். 2019, செப்டம்பர் 18ம் தேதி இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டியில் பவுமா அறிமுகமாகினார். 2021, மார்ச் 4ம் தேதி, தென் ஆப்ரிக்க ஒருநாள் அணிக்கு கேப்டனாக பவுமா நியமிக்கப்பட்டார். தென் ஆப்ரிக்க அணிக்கு முழுநேர, நிரந்தர கேப்டனாக நியமிக்கப்பட்ட முதல் கருப்பின வீரர் என்ற பெருமையை பவுமா பெற்றார். 2022ம் ஆண்டு தென் ஆப்ரிக்க டெஸ்ட் அணியின் கேப்டனாக பவுமா நியமிக்கப்பட்டு, 10 போட்டிகளில் அணியை வழிநடத்தினார். இதில், 9 வெற்றிகளுடன், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று கொடுத்துள்ளார். பவுமா இதுவரை 42 ஒருநாள் போட்டிகளுக்கு கேப்டனாக செயல்பட்டு அதில் 22 வெற்றிகளையும், 25 டி20 போட்டிகளுக்கு கேப்டனாக இருந்து 15 வெற்றிகளையும் பெற்றுக் கொடுத்துள்ளார். கனவிலும் நினைக்கவில்லை சாதாரண பின்புலத்தில் பிறந்து, வளர்ந்த பவுமா இன்று கிரிக்கெட்டின் மெக்கா என்றழைக்கப்படும் லார்ஸ்ட் மைதானத்தில், தனது தேசத்துக்காக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வென்று அவர் அசத்தினார். லார்ட்ஸ் மைதானத்தில் விளையாடியது குறித்து பவுமா கூறுகையில், "லார்ட்ஸ் மைதானத்தில் நான் விளையாடுவேன் என்று கனவில் கூட நினைத்தது இல்லை." எனத் தெரிவித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c0eqe2xjgwqo

கனடாவில் திறந்துவைக்கப்பட்டது தமிழர் இனவழிப்பு நினைவுத்தூபி - பெருமளவு தமிழர்கள் கனடா அரசியல்வாதிகள் பங்கேற்பு

3 months 1 week ago
கனடாவில் தமிழ் இனப்படுகொலை நினைவுத்தூபியின் விளக்குகள் அழிப்பு - கனடிய தமிழர் தேசிய அவை கடும் கண்டனம் Published By: RAJEEBAN 16 JUN, 2025 | 10:23 AM பிரம்டனில் உள்ள தமிழ் இனப்படுகொலை நினைவுத்தூபியை வேண்டுமென்றே சேதப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து கனடிய தமிழர் தேசிய அவை கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது. இது குறித்து கனடிய தமிழர் தேசிய அவை மேலும் தெரிவித்துள்ளதாவது. பிரம்டனில் உள்ள தமிழ் இனப்படுகொலை நினைவுத்தூபியை வேண்டுமென்றே சேதப்படுத்தும் நடவடிக்கைகள் ஜூன் 15 2025 இல் இடம்பெற்றமை குறித்து கனடிய தமிழர் தேசிய அவை தனது ஆழ்ந்த கண்டனத்தை தெரிவித்துக்கொள்கின்றது. தமிழ் இனப்படுகொலை நினைவுத்தூபியின் முக்கியமான அம்சங்களை வெளிச்சம்போட்டுக்காட்டும் விளக்குகள் அழிக்கப்பட்டுள்ளன. மே 27ம் திகதி இரவும் இவ்வாறான வேண்டுமென்றே சேதப்படுத்தும் நடவடிக்கைகள் இடம்பெற்றிருந்தன. வேண்டுமென்றே முன்னெடுக்கப்படும் கண்டிக்கப்படவேண்டிய இந்த இழிவுபடுத்தும் நடவடிக்கைகள் தமிழ் இனப்படுகொலையின் போது பலியானவர்களின் நினைவுகளை அவமதிப்பதுடன், பன்முகத்தன்மை கொண்ட எங்கள் கனடா சமூகத்திற்கு அடித்தளமாக உள்ள உண்மையின் மதிப்புகள் நல்லிணக்கம் போன்றவற்றை குறைமதிப்பிற்கு உட்படுத்துகின்றன. https://www.virakesari.lk/article/217583

'கள் இறக்கும் போராட்டம்' - பனை மரம் ஏறிய சீமான்

3 months 1 week ago
உள் நாட்டில் புகையிலை சாகுபடிக்கு போடப்பட்டுள்ள தடைக்கான முக்கிய காரணம் மக்களின் சுகாதார நலன் மீதுள்ள கரிசனை மட்டும் தான் என்று கொள்வது தவறு. பணப்பயிராக புகையிலை சாகுபடியில் விவசாய நிலங்களை பயன்படுத்தும்போது அத்தியாவசிய உணவுப்பயிர் உற்பத்தி செய்வதற்கான விவசாய நிலங்களுக்கு உள் நாட்டில் பற்றாக்குறை ஏற்படும். இதனால் உணவுத் தட்டுப்பாடு, விலை அதிகரிப்பு, அன்னிய செலாவணி வீணடிப்பு மற்றும் உணவுக்காக வெளி நாடுகளை தங்கியிருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

யாழ்கள உலக டெஸ்ட் சாம்பியன் (WTC) கணிப்பு போட்டி

3 months 1 week ago
முதல்வர் கிருபனுக்கு வாழ்த்துக்கள் 👏💐 ஈழப்பிரியன், வாதவூரானுக்கும் வாழ்த்துக்கள்👏 போட்டியை நடத்திய கோஷானுக்கும், திரியை கலகலப்பாக வைத்திருந்த செம்பாட்டானுக்கும், போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றிகள்❤️ தென்னாபிரிக்காவின் முதல் வெற்றியை மைதானத்தில் இருந்து பார்த்த கோஷானின் நேரடி ஒலிபரப்பிற்கும் நன்றிகள்! இதற்காகவே பிள்ளைகள் சொன்னபடி அவுஸ்திரேலியாவை தெரிவுசெய்தேன்! அவர்கள் சொன்னபடி எதிர்மறையாகவே நடந்தது! ஏனென்றால் என் ராசி அப்படி!!😜 வீட்டு மடிக்கணணியில் யாழ் களம் வராததால் உடனே பதிய முடியவில்லை! தென்னாபிரிக்கா வென்றது மிக்க மகிழ்ச்சி! ஒரு கறுப்பின தலைவரின்கீழ்தான் வெல்லவேண்டுமென்று இருந்திருக்கிறது போலும்!!

கள் இறக்கும் போராட்டத்தை சட்டம் அனுமதிக்கிறதா?

3 months 1 week ago
கள் இறக்கும் போராட்டத்தை சட்டம் அனுமதிக்கிறதா? 15 Jun 2025, 9:17 PM – ரவிக்குமார் ( Section 4 (1) (e) of Tamil Nadu Prohibition Act, 1937 இன் படி யாராவது கள் இறக்கினால் அவருக்கு 3 மாதங்கள் வரை சிறை தண்டனை விதிக்கலாம். ) கள்ளுக்கடையைத் திறக்கவேண்டும் என்று சொல்பவர்கள் ஒரு கேள்வியைக் கேட்கிறார்கள். ‘மற்ற மதுவகைகளை அரசாங்கம் அனுமதிக்கிறது. சாராயம் விற்கிறார்கள். அயல்நாட்டு மதுவகைகளைத் தயாரித்து விற்கிறார்கள். அவையெல்லாம் செயற்கையாக இரசாயனப் பொருட்கள் கலந்து தயாரிக்கப்படுகிறது. கள் என்பது இயற்கையாக வடிகிற ஒரு பொருள். அது ஒரு இயற்கை உணவு. அது உடம்புக்கு நல்லது. சாதாரண ஏழைகள் சாப்பிடக் கூடியதாக இருக்கிறது. அதனால் நிறைய பேருக்கு வேலை வாய்ப்புக் கிடைக்கும். அப்படி இருக்கும்போது சாராயத்தையும், பிராந்தி விஸ்கி போன்றவற்றையும் விற்க அனுமதிக்கிற அரசாங்கம் அதன் மூலம் பெருமுதலாளிகளுக்கு லாபம் சேர்ப்பதற்குத் துணைபுரிகின்ற இந்த அரசாங்கம் ஏன் கள்ளை மட்டும் விற்கக் கூடாது என்று தடைபோடுகிறது?’ என்று கேட்கிறார்கள். அவர்களுடைய இந்த கோரிக்கையை அரசியல் கட்சிகள் சிலவும் ஆதரிக்கின்றன. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று பனை மரத்தில் ஏறி கள் இறக்கும் போராட்டத்தை நடத்தியதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. கஞ்சா வளர்க்கும் போராட்டத்தை நடத்துவார்களா? கள்ளுக் கடை திறப்பதை ஆதரித்துப் பேசுகிறவர்கள் இது இயற்கையாகக் கிடைக்கிற ஒரு பொருள் என்று வாதிடுகிறார்கள். ‘‘கஞ்சாவும் கூட இயற்கையாகக் கிடைக்கும் ஒரு மூலிகைதான்‘‘ என்று சொல்கிறவர்களும் இருக்கிறார்கள். அவர்களின் ஆதரவைத் திரட்டுவதற்காக கஞ்சா வளர்க்கும் போராட்டத்தையும் நடத்துவார்களா? கள் நல்லது என எந்த மருத்துவர் சொன்னார்? கள் குடித்தால் உடம்புக்கு நல்லது என எந்த மருத்துவரும் சொன்னது இல்லை. மருத்துவ ரீதியாகப் பார்த்தால் கள் என்பது சிலர் சொல்வது மாதிரி உடலுக்குக் கேடு விளைவிக்காதது அல்ல. ஏனென்றால் அதில் ஐந்து சதவீதம் முதல் பத்து சதவீதம்வரை ஆல்கஹால் இருக்கிறது. நான்கு சதவீதத்துக்குமேல் ஆல்கஹால் இருக்கும் ஒரு பொருளைத் தொடர்ந்து உட்கொண்டால் அது மிகவும் மோசமாக உடலைப் பாதிக்கும். குறிப்பாக மூளையைப் பெரிதும் பாதிக்கும். கள் அருந்துவதால் என்சைம்கள் பாதிக்கப்படுகின்றன.அதனால் நினைவாற்றல் குறைகிறது . இந்த விஷயங்கள் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டவையாகும். கள் அருந்துவதால் ஏற்படும் கேடுகள் கள் அருந்துவதால் ஏற்படும் பாதிப்புகள் பற்றிக் கேரளப் பல்கலைக் கழகத்தின் பயோ கெமிஸ்ட்ரி துறையைச் சேர்ந்த இந்திரா, விஜயம்மாள், ஜே.ஜே.லால் மற்றும் ஸ்ரீரஞ்சித்குமார் ஆகிய நான்கு ஆய்வாளர்கள் விரிவான ஆய்வுகளைச் செய்திருக்கிறார்கள். கள் குடிப்பதால் வளர் பருவத்தில் உள்ளவர்களுக்கு எந்த மாதிரியான கேடுகள் ஏற்படும் என்றும் அவர்கள் கண்டறிந்து சொல்லியிருக்கிறார்கள். சினையாக இருந்த எலிகளைப் பிடித்து அவற்றுக்குத் தினமும் குறிப்பிட்ட அளவு கள்ளைப் புகட்டி அவை குட்டி போட்டதற்குப் பிறகு ஆராய்ந்து பார்த்ததில் அந்தக் குட்டிகளுக்குக் கடுமையான உடல் பாதிப்பு ஏற்பட்டிருந்தது கண்டறியப்பட்டுள்ளது. அதே விதமான பாதிப்புகள் மனிதர்களுக்கும் ஏற்படும் என்பதை அந்த மருத்துவ நிபுணர்கள் தெரிவித்திருக்கிறார்கள். இயற்கையான ‘ஒரிஜினல்‘ கள்ளைக் குடித்தாலே பிரச்சனை என்னும்போது ‘ கலப்பட கள்‘ குடித்தால் என்ன ஆகும் என்பதற்கு கேரளாவில் அவ்வப்போது கலப்படம் கள் குடித்ததால் ஏற்படும் மரணங்களே சாட்சி. கள்ளில் கலப்படம் ஒரு கள்ளுக்கடையை லாபகரமாக நடத்த வேண்டுமென்றால் அதற்குப் போதுமான கள் உற்பத்தி செய்யப்படவேண்டும். அப்படி உற்பத்தி செய்வதற்கு அந்த அளவுக்குத் தென்னை மரங்கள் இருக்கவேண்டும். தென்னை மரம் வைத்திருப்பவர்கள் தொடர்ந்து அவற்றைக் கள் இறக்குவதற்கு விடமாட்டார்கள். காய்ப்பு பொய்த்துவிடும் என்பதால் ஒரு வருடம் விட்டு ஒரு வருடம்தான் கள் இறக்க விடுவார்கள். அப்படிச் செய்யும்போது கள் இறக்கப் போதுமான மரங்கள் கிடைக்காமல் போய்விடும். இதைச் சமாளிப்பதற்கு மட்டுமின்றி அதிக லாபம் சம்பாதிப்பதற்கும் கள்ளுக் கடைக்காரர்கள் கண்டுபிடித்துள்ள உபாயம்தான் கலப்படக் கள் என்பதாகும். கலப்படக் கள் தயாரிப்பதற்கு என்னென்ன பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன என்று தெரிந்தால் நாம் கனவில்கூட கள்ளுக்கடையைப் பற்றி நினைக்கமாட்டோம். கள்ளில் உயிருக்கு ஆபத்தான கலப்பட பொருட்கள் ஸ்பிரிட், க்ளோரல் ஹைட்ரேட், வெள்ளை நிற சாந்து இவைதவிர டையாஸ்பாம் என்னும் மாத்திரையும்கூட கள்ளில் கலக்கப்படுகிறது. இப்படிக் கலப்படம் செய்து தயாரிக்கப்படுகிற ‘கள்ளில்’ இருக்கும் போதை நாற்பது சதவீத ஆல்கஹாலின் போதைக்குச் சமம் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இப்படி ‘ செயற்கைக் கள்‘ தயாரிப்பதற்கு மட்டுமின்றி இயற்கையாக இறக்குகிற கள்ளிலும்கூட க்ளோரல் ஹைட்ரேட்டைக் கலந்து அதில் தண்ணீர் ஊற்றி கூடுதல் கள்ளை உற்பத்தி செய்வது அநேகமாக எல்லா கள்ளுக் கடைகளிலும் உள்ள நடைமுறையாகும்.‘ இருநூறு லிட்டர் கள்ளில் எழுபது லிட்டர் ஸ்பிரிட்டைக் கலந்து அதில் க்ளோரல் ஹைட்ரேட், டயாஸ்பாம் மாத்திரை போன்றவற்றைச் சேர்த்து தண்ணீர்விட்டுக் கலக்கினால் பத்தாயிரம் லிட்டர் கலப்படக் கள் கிடைக்கும். க்ளோரல் ஹைட்ரேட் என்னும் இந்த வேதிப் பொருள் மயக்க மருந்தாகப் பயன்படுத்தப்படுவதாகும். இதைக் கொஞ்சம் அதிகமாக சாப்பிட்டுவிட்டால் மயக்கம், இருதய பாதிப்பு, வாந்தி எனப் பல்வேறு உடல்நலக் கேடுகள் வருவதோடு கல்லீரல் நிரந்தரமாகப் பாதிக்கப்படும் என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.அதுமட்டுமின்றி இதைத் தொடர்ந்து பாவித்துவந்தால் அந்த நபர் நிரந்தரமாக இதற்கு ‘அடிக்ட்‘ ஆகிவிடுவாரென்றும் அவர்கள் எச்சரித்திருக்கிறார்கள். ஆக, கள் இயற்கை உணவு என்பதும் அதைக் குடித்தால் உடம்புக்கு நல்லது என்பதும் அப்பட்டமான பொய்யே தவிர வேறொன்றுமில்லை. கள் குடிப்பதற்கு ஆதரவான பேச்சு யாவும் அடிப்படையில் மதுவுக்கு ஆதரவான பேச்சே தவிர வேறில்லை. கள்ளுக் கடைகளால் லாபம் ஈட்டி முதலாளிகள் ஆனவர்கள் வேண்டுமானால் சுயநலத்துக்காக அதை ஆதரிக்கலாம். கள்ளுக் கடைகளால் சுயமரியாதையையும் வாழ்க்கையையும் இழந்தவர்கள் அதை ஆதரிக்க முடியாது. மது ஆதரவு பிரசாரத்துக்கு தடை மது அருந்துவதை ஆதரித்துப் பிரச்சாரம் செய்ய சட்டப்படி அனுமதி இல்லை. மது அருந்துவதை ஆதரித்து விளம்பரம் செய்வது 1995 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. கள் இறக்கினால் 3 மாதங்கள் சிறை கள் இறக்குவதென்பது தமிழ்நாட்டில் சட்டப்படி குற்றமாகும். Section 4 (1) (e) of Tamil Nadu Prohibition Act, 1937 இன் படி ஒருவர் கள் இறக்கினால் 3 மாதங்கள் வரை அவருக்கு சிறை தண்டனை விதிக்கலாம் . சனநாயக ரீதியான போராட்டங்களுக்கு அனுமதி அளிக்கத் தயங்கும் தமிழ்நாடு அரசு இதுபோன்ற போராட்டங்களை எப்படி அனுமதிக்கிறது ? என்பது வியப்பளிக்கிறது. Ref: https://indiankanoon.org/doc/77545447/ கட்டுரையாளர் குறிப்பு: முனைவர் டி.ரவிக்குமார், நாடாளுமன்ற உறுப்பினர் (விழுப்புரம் மக்களவைத் தொகுதி), எழுத்தாளர்-மொழிபெயர்ப்பாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர். https://minnambalam.com/oes-the-law-permit-protests-supporting-toddy/#google_vignette

வீழும் விழுமியங்கள்: இஸ்ரேலைக் கண்டிக்க இந்தியா தயங்குவது ஏன்?

3 months 1 week ago
வீழும் விழுமியங்கள்: இஸ்ரேலைக் கண்டிக்க இந்தியா தயங்குவது ஏன்? 16 Jun 2025, 9:33 AM ராஜன் குறை தமிழ்நாட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் மூன்றாம் உலகப் போர் மூளக்கூடிய சூழல் உருவாகி வருவதைச் சுட்டிக் காட்டியதுடன், இஸ்ரேல் நாட்டின் மனிதாபிமானமற்ற போக்கையும், அத்துமீறும் ராணுவ தாக்குதல்களையும் கண்டித்துள்ளார். எட்டு கோடிக்கும் அதிகமான மக்கள் தொகுதியின் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் தலைவராக அவர் இவ்வாறு கூறியிருப்பது முக்கியமானது, வரவேற்கத்தக்கது. காரணம், ஈரான் நாட்டின் அணு ஆற்றல் உற்பத்தி கேந்திரங்களின் மீது இஸ்ரேல் இரு தின ங்களுக்கு முன்பு தாக்குதல் நட த்தியுள்ளது. தொடர்ந்து அவற்றை முற்றிலும் தாக்கி அழிக்கும் திட்டமும் வைத்துள்ளதாக நிபுணர்கள் கூறுகிறார்கள். இதற்கு பதிலடியாக ஈரானும் இஸ்ரேலின் மீது டிரோன் தாக்குதல்கள் நட த்த த் துவங்கியுள்ளது. இஸ்ரேலின் வான்வழிப் பாதுகாப்புக் கவசங்களைக் கடந்து அந்த டிரோன்கள் இஸ்ரேலில் சேதங்களை விளைவித்துள்ளன. பதிலுக்கு ஈரான் தலைநகர் டெஹ்ரான் பற்றியெறியும் என இஸ்ரேல் எச்சரித்துள்ளது. இந்த தாக்குதல்கள் தொடர்ந்தால் சீனா ஈரானுக்கு பாதுகாப்பு அளிக்க முன்வந்தால், இது உலகப் போராக மாறும் சூழ்நிலை மிகத் தூலமாக நிலவுகிறது. இஸ்ரேலின் பிரதமர் நெதான்யாஹு பாரதப் பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார். பிரதமர் மோடி போர்ச் சூழல் தவிர்க்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. ஆனால் ஐக்கிய நாடுகள் சபை இஸ்ரேலைக் கண்டித்துக் கொண்டுவந்த தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்காமல் புறக்கணித்துள்ளது. உலக நாடுகளில் பெரும்பாலானவை, 142 நாடுகள் இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளன. ஆனால் இந்தியா வாக்களிக்காதது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. உலக நாடுகளிலிருந்து தனிமைப்படுவதுடன், இந்திய வெளி உறவுக் கொள்கை அறம் சார்ந்ததா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இருபதாம் நூற்றாண்டில் இந்தியா கடைபிடித்துவந்த வெளியுறக் கொள்கைக்கு மாறானதாக, முரணானதாக இன்றைய வெளியுறவுக் கொள்கை அமைந்துள்ளது. இந்த பிரச்சினையை சற்றே ஆழமாக புரிந்து கொண்டால்தான் பாஜக அரசாங்கம் செய்யும் தவறு என்ன என்பதையும் பரிசீலிக்க முடியும். இஸ்ரேலின் உருவாக்கம் இஸ்ரேல் என்பது இயற்கையாக வரலாற்றின் போக்கில் உருவான தேசமல்ல. அது புராண கதைகளின் அடிப்படையில் யூதர்களுக்கு கடவுளால் வாக்களிக்கப்பட்ட நிலம் (promised land) என்ற மத நம்பிக்கையின் அடிப்படையில் இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா ஆகியவற்றின் ஆதரவுடன் உருவாக்கப்பட்டது. அதில் பல்வேறு நாடுகளில் வாழ்ந்து வந்த யூதர்களும் பாலஸ்தீனம் “திரும்பி வர”, குடியேற அனுமதிக்கப்பட்டார்கள். அந்த நிலத்தில் வசித்த வந்த பாலஸ்தீனியர்கள் திடீரென அந்நியப்படுத்தப் பட்டார்கள். அவர்களுக்கென்று தனி நாடும் அமைத்துத் தரப்படவில்லை. அவர்கள் இஸ்ரேலின் முழுமையான குடிமக்களாகவும் அங்கீகரிக்கப்படவில்லை. பல்வேறு நாடுகளில் வசித்துவந்த யூதர்களின் மூதாதையர்கள் பாலஸ்தீனத்தலிருந்துதான் சென்றார்கள் என்று நிறுவுவது சாத்தியமில்லை. கடவுள் யூதர்களுக்கு பாலஸ்தீன நிலத்தை வாக்களித்ததையும் நிரூபிக்க முடியாது. என்றாலும் அது மத நம்பிக்கை அல்லவா என்று கேட்கலாம். அதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது. அது என்னவென்றால் கடவுள் வாக்களித்தாரே தவிர கையளிக்கவில்லை என்பதுதான். யூதர்கள் கடவுள் சொற்படி கேட்டு நடக்காததால் கோபமடைந்த கடவுள் அவர்களை சொந்த நாடற்றவர்களாக வாழும்படி சபித்துவிட்டார் என்பதுதான் யூதர்களின் உண்மையான மத நம்பிக்கை. அதனால் தீவிர மத நம்பிக்கையாளர்களான யூதர்கள், Orthodox Jews, இஸ்ரேல் நாட்டு உருவாக்கத்தையோ, அங்கே அனைத்து யூதர்களுக்கும் குடியேறும் உரிமை இருக்கிறது என்பதையோ ஏற்பதில்லை. எனவே இஸ்ரேலின் உருவாக்கம் உண்மையான யூத மத நம்பிக்கைக்கும் எதிரானது எனலாம். ஹாலுகாஸ்ட் (Holocaust) இந்த நிலையில் எப்படி இரண்டாம் உலகப் போர் முடிந்தவுடன் பிரிட்டன் வசமிருந்த பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் என்ற நாட்டை உருவாக்க நேர்ந்தது, முடிந்தது என்றால் அதற்குக் காரணம் ஹிட்லர் நட த்திய ஹாலுகாஸ்ட் என்று குறிப்பிடப்படும் யூத இனப்படுகொலை (1933-1945). ஜெர்மானிய தேசம் ஆரியர்களுக்கு சொந்தமானது, அதில் யூதர்கள் வாழத் தகுதியற்றவர்கள் என்று கூறிய ஹிட்லர் யூதர்களை வதை முகாம்களில் அடைத்தான். பின்னர் காஸ் சேம்பர்களில் அவர்களை கொத்துக் கொத்தாக கொன்றழித்தான். இந்த கொடூர நிகழ்வுகளால் அதிர்ச்சியடைந்த உலகம் யூதர்களுக்கு தனி நாடு இருப்பது நல்லது என நினைத்ததால்தான் இஸ்ரேலின் உருவாக்கம் சாத்தியமானது. அடுத்து மற்றொரு கேள்வி எழ வேண்டும். ஹாலூகாஸ்ட் எப்படி சாத்தியமானது? ஹிடலர் ஏன் தன்னை ஆரிய இனம் என்று அழைத்துக்கொண்டான்? யூத மதத்தின் வளர்ந்த நிலைதான் கிறிஸ்துவம் எனலாம். ஆனால் யூத மதம் தன்னை கிறிஸ்துவத்திலிருந்து தனிமைப்படுத்திக்கொள்வதில் தீவிர முனைப்புக் காட்டியது. கார்ல் மார்க்ஸ் 1843-ஆம் ஆண்டு எழுதிய “யூதர்கள் பிரச்சினை குறித்து” (On Jewish Question) என்ற சிறிய கட்டுரையைப் படித்தால் எப்படி பத்தொன்பதாம் நூற்றாண்டில் உருவாகி வந்த புதிய குடியாட்சி அரசாங்கங்களில் யூதர்களின் தனித்துவம் குறித்த கேள்விகள் எழுந்தன என்பதைக் காணலாம். யூதர்கள் மத ரீதியாக, சமூக ரீதியாக விலகியிருந்த து மட்டுமல்லாமல், பெருமளவு பண த்தை வட்டிக்குத் தருபவர்களாக, வர்த்தக நிதியாதாரமாக இருந்தார்கள். யூதர்களின் சுயநலமும், பணப்பற்றும் அவர்களின் தனித்த அடையாளங்கள் என மார்க்ஸ் குறிப்பிடுகிறார். கார்ல் மார்க்ஸும் ஒரு யூதர்தான் என்பதுடன், ராபை எனப்படும் யூத மதகுருவின் பெயரனும் ஆவார். அந்த கட்டுரையின் இறுதியில் யூதர்களின் சமூக விடுதலை என்பது சமூகமே யூத மத த்திலிருந்து விடுதலை அடைவதுதான் என்று கூறுகிறார் (the social emancipation of the Jew is the emancipation of the society from Judaism). பத்தொன்பதாம் நூற்றாண்டின் மானுடவாத சிந்தனை அடிப்படையில் அவர் இவ்வாறு கூறுகிறார் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இன்றைய நிலையில் மதச்சார்பற்ற அரசியலே இன்னமும் காலூன்றவில்லை என்பதைக் காண வேண்டும். யூத, கிறிஸ்துவ மதங்களின் மீது ஐரோப்பிய சிந்தனையாளர்களுக்கு இருந்த அதிருப்தியின் பின்னணியில்தான், ஐரோப்பியர்கள் சமஸ்கிருத மொழியை பயின்றபோது உருவாக்கிய ஆரிய இனக் கோட்பாடு பலரையும் கவர்ந்தது. சமஸ்கிருத மொழிக்கும், ஐரோப்பிய மொழிகளுக்கும் இருந்த ஒற்றுமைகளை ஆராய்ந்தபோது சமஸ்கிருதம் பேசிய ஆரியர்களின் மத்திய ஆசியாவிலிருந்து வந்த மூதாதையர்களின் ஒரு பிரிவினர்தான் ஐரோப்பாவிற்கும் சென்றனர் என்ற கருதுகோள் உருவானது. அதனடிப்படையில்தான் ஜெர்மானியர்கள் தூய ஆரிய இனத்தவர் என்ற ஹிடலரின் இனவாதாக் கோட்பாடு உருவானது. அது யூத இனப் படுகொலைக்கு வழி வகுத்தது. அது ஏற்படுத்திய அதிர்ச்சியில் யூதர்களுக்கென்று பாலஸ்தீனத்தில் ஒரு நாடு உருவாவதற்கு ஆதரவு பெருகியது. சையனிசமும் இந்திய எதிர்ப்பும் பாலஸ்தீனத்தில் இஸ்ரேலுக்கான நிலத்தை கையளிக்கும் சையனிச (Zionist) வேலைத்திட்ட த்தை காந்தி கடுமையாக எதிர்த்தார். “இங்கிலாந்து எப்படி இங்கிலீஸ்காரர்களுக்கு சொந்தமோ, ஃபிரான்ஸ் எப்படி ஃபிரெஞ்சுக்காரர்களுக்கு சொந்தமோ அப்படி பாலஸ்தீனம் அரேபியர்களுக்குச் சொந்தமானது. அதில் யூதர்களை குடியேற்றி இஸ்ரேலை உருவாக்குவது தவறு” என்று காந்தி திட்டவட்டமாகக் கூறினார். அதிலிருந்தே பாலஸ்தீனியர்களின் உரிமைகளை இந்தியா ஆதரித்து வந்தது. உள்ளபடி சொல்லப்போனால் 1948 முதல் 1992 வரை இந்தியா இஸ்ரேல் என்ற நாட்டுடன் அரசுமுறை உறவு வைத்துக்கொள்ளவில்லை. இந்தியாவின் உருவாக்கத்தில் மத ரீதியான தேசியத்திற்கு இடமளிக்க க் கூடாது என்பதே காங்கிரசின் நிலைபாடாக இருந்தது. முஸ்லீம் லீக்கும், ஜின்னாவும் மத அடிப்படையில் பாகிஸ்தான் நாட்டைக் கோரினாலும், இந்தியா மத அடிப்படையிலான தேசியத்தை ஏற்கவில்லை. மக்களின் மதநல்லிணக்க அடிப்படையில் காந்தியும், அரசின் மதச்சார்பின்மை என்ற அடிப்படையில் நேருவும் மத அடையாள தேசியத்தினை முழுமையாக எதிர்த்து நின்றனர். அதனால் மத அடையாளத்தின் பேரில், புராணக் கற்பனையின் பேரில் உருவான இஸ்ரேலை அவர்களும், அவர்கள் வழி வந்த காங்கிரசும் முழுமையாக ஏற்கவில்லை எனலாம். குறிப்பாக அங்கே பன்னெடுங்காலமாக வசித்த வந்த பாலஸ்தீனியர்களின் உரிமைக் கோரிக்கைகளை ஆதரித்தனர். அதனால் பாலஸ்தீனிய விடுதலை இயக்கம் (PLO) துவங்கப்பட்டபோது அதனை அரபு நாடுகள் தவிர்த்து முதலில் அங்கீகரித்த நாடு இந்தியாவாகத்தான் இருந்தது. பாலஸ்தீனிய விடுதலை இயக்கத்தின் நெடுநாள் தலைவர் யாசர் அராஃபத் (1929 – 2004) இந்தியாவின் நெருங்கிய நண்பராக இருந்தார். குறிப்பாக பிரதமர் இந்திரா காந்தியை (1917-1984) அவர் தன் மூத்த சகோதரி என்றே கூறினார். தலைநகர் டில்லியில் PLO அலுவலகம் 1974-ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. பாலஸ்தீனிய மாணவர்கள் வந்து கல்வி பயின்றனர். முஸ்லீம் நாடான பாகிஸ்தான் இஸ்ரேலின் ஆதரவு சக்தியான அமெரிக்காவிற்கு நெருக்கமாக இருந்ததும், இந்தியா அணி சேராத நாடாக விளங்கினாலும் ரஷ்யாவின் சோஷலிச கொள்கைகளுக்கும், மக்கள் விடுதலை இயக்கங்களுக்கும் ஆதரவாக விளங்கியதும் குறிப்பிடத் தக்கது. இவ்வாறான கொள்கை சார்ந்த நிலைபாடு இந்தியாவிற்கு நம்பகத்தன்மையை, மரியாதையைப் பெற்றுத் தந்தது. இஸ்ரேலுடனான பாஜக அரசாங்கத்தின் நெருக்கம் சோவியத் ரஷ்யா 1991-ஆம் ஆண்டு உடைந்த சிதறிய பிறகு, இரு துருவ உலகம் முடிவுக்கு வந்து, உலகில் அமெரிக்காவே ஒற்றைத் துருவமாக விளங்குவதாக க் கருதப்பட்டது. சுதந்திரவாத முதலீட்டிய பொருளாதாரம், சுதந்திர சந்தை பொருளாதரம், உலகமயமான வர்த்தகம் என புதிய உலகளாவிய உலக பொருளாதார அமைப்பு உருவானது. இந்தியாவில் ராஜீவ் காந்தி படுகொலைக்குப் பிறகு பதவியேற்ற நரசிம்ம ராவ் அரசு இந்திய வர்த்தக கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, உலகமயமாதலை தொடங்கி வைத்தது. அத்தகைய சூழலில்தான் இஸ்ரேலையும் இந்தியா 1992-ஆம் அங்கீகரித்து அரசுமுறை உறவுகளைத் துவங்கியது. வெகுகாலமாகவே இந்திய வலதுசாரி, பார்ப்பனீய மனோபாவக்காரர்களுக்கு இஸ்ரேலின் மீது கவர்ச்சியும், சார்பும் உண்டு. இது அரேபிய முஸ்லீம்களுக்கு எதிரான மன நிலையுடன் இணைந்தது எனலாம். அறுபதுகளில் அரபு-இஸ்ரேல் போர்களில் இஸ்ரேலின் வெற்றியை இவர்கள் கொண்டாடினர். இந்த பின்னணியில்தான் ஆர்.எஸ்.எஸ், பாஜக-வின் இஸ்ரேல் ஆதரவு மன நிலையை புரிந்துகொள்ள வேண்டும். சையனிச சிந்தனைக்கும், இந்துத்துவ சிந்தனைக்கும் உள்ள ஒப்புமைகளையும் புறக்கணிக்க முடியாது. தந்தை நிலம், தாய் நிலம் என்ற சிந்தனைக்குப் பதிலாக “புனித நிலம்” என்ற மத அடையாளவாத தேசியத்தை முன்னிறுத்தபவைதான் இரண்டுமே என்பதை மனதில் கொள்ளவேண்டும். இதெற்கெல்லாம் மேலாக இஸ்ரேலின் ஹைஃபா துறைமுகம் அதானி குழுமத்தின் நிர்வாகத்தில்தான் இருக்கிறது. பிரதமர் மோடி 2017-ஆம் ஆண்டு இஸ்ரேலுக்கு சென்ற போது, அந்த நாட்டிற்குச் சென்ற முதல் இந்திய பிரதமராக இருந்தார். அதனைத் தொடர்ந்து இந்தியா பல முதலீடுகளைச் செய்தது. அதானி போர்ட்ஸ் நிறுவனம் ஹைஃபா துறைமுக நிர்வாகத்தை எடுத்துக்கொண்டது. இதன் மூலம் அரசுமுறை உறவுகள் கடந்து, இஸ்ரேலுடன் வலுவான பொருளாதார உறவும் இந்தியாவிற்கு ஏற்பட பாஜக அரசும், அதானி நிறுவனமும் வழிசெய்துள்ளன எனலாம். இரானின் தாக்குதல்களுக்கு ஹைஃபா துறைமுகம் ஆட்பட்டுள்ள நிலையில் அதானி பங்குகளின் மதிப்பும் சரிந்துள்ளது. சரி செய்துவிடலாம் என்றுதான் கூறுகிறார்கள். காஸா இனப்படுகொலையும், ஈரான் மீதான தாக்குதலும் காஸாவில் இயங்கும் தீவிரவாத ஹமாஸ் இயக்கம்தான் இஸ்ரேலின் மீது தாக்குதல் நட த்தியது. இஸ்ரேல் பிரதமர் நெதான்யாஹுவின் லிகுட் கட்சியும், ஹமாசும் 1993-ஆம் ஆண்டு ஏற்பட்ட இஸ்ரேல்-பாலஸ்தீனிய ஆஸ்லோ உடன்படிக்கையை ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஹாமாஸை காரணமாக க் கொண்டு காஸாவில் பொதுமக்களை, குழந்தைகளை இஸ்ரேல் இரக்கமின்றி கொன்று குவித்து வருவது உலகெங்கும் பெரும் எதிர்ப்பலைகளை உருவாக்கியுள்ளது. பல்வேறு நாடுகளில் பெரும் மக்கள் திரள் ஊர்வலங்கள் நடக்கின்றன. சூழலியல் நடவடிக்கையாளர் கிரேடா துன்பர்க் தலைமையில் உணவு பொருட்களுடன் காஸா நோக்கி படகில் சென்ற குழு இஸ்ரேல் அரசால் கைது செய்யப்பட்டது. அமெரிக்காவும், இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளும் தனக்கு ஆதரவாக இருக்கும் துணிவில் இஸ்ரேல் ஈரான் மீதும் தாக்குதலைத் தொடுத்துள்ளது. இரானின் அணு ஆயுத தயாரிப்புக் கேந்திரங்களைத்தான் தாக்கியதாக க் கூறினாலும் இது நிச்சயம் அத்துமீறல் என்பதில் ஐயமிருக்க முடியாது. ஈரானுக்கு ஆதரவாக சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் களமிறங்கினால் உலகப் போர் மூளும் சாத்தியம் அதிகரித்து விடும். ஏற்கனவே உக்ரைன்-ரஷ்யப் போர் பதட்டமான நிலையில்தான் உள்ளது என்னும்போது மேலும் மற்றொரு பதட்டமான யுத்த முனை உருவாவது ஆபத்தானது. அமெரிக்க அதிபர் டிரம்ப்போ எடுத்தேன் கவிழ்த்தேன் என்று மனம்போன போக்கில் பேசுபவராக இருக்கிறார். அனைத்து நாடுகளையும் மிரட்டி பணியவைக்க முயல்கிறார். உலக அரசியல் நிகழ்வுகளை பின் தொடர்பவர்களுக்கு உறக்கம் வருவதில்லை. உலகின் எந்த பகுதியில் வெடிக்கும் யுத்தமும் உலக நாடுகள் அனைத்தையும் பாதிக்கத்தான் செய்யும். தமிழ்நாடும் விதிவிலக்கல்ல. அதனை மனதில் கொள்ளும்போது முதல்வர் ஸ்டாலின் இஸ்ரேலைக் கண்டித்து விடுத்துள்ள அறிக்கை முக்கியமானது. இந்திய அரசும் துணிந்து அறம் சார்ந்த நிலைபாட்டினை எடுக்க வேண்டும் என்பதே அரசியல் பார்வையாளர்களின் எதிர்பார்ப்பு. கட்டுரையாளர் குறிப்பு: ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி https://minnambalam.com/why-india-hesitates-to-condemn-israel/

ஒருவாக்கு வித்தியாசத்தில் வவுனியா மாநகரசபையை கைப்பற்றியது சங்கு கூட்டணி!

3 months 1 week ago
ஒருவாக்கு வித்தியாசத்தில் வவுனியா மாநகரசபையை கைப்பற்றியது சங்கு கூட்டணி! June 16, 2025 10:39 am வவுனியா மாநகரசபையில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியை சேர்ந்த சுந்தரலிங்கம் காண்டீபன் முதல்வராக தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் அந்த கூட்டை சேர்ந்த ஜனநாயக தேசிய கூட்டணி உறுப்பினர் பரமேஸ்வரன் கார்த்தீபன் பிரதிமுதல்வராக தெரிவுசெய்யப்பட்டுள்ளனர் வவுனியா மாநகரசபைக்கான முதல்வர், பிரதி முதல்வர் தெரிவு வடக்குமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவநந்தினி தலைமையில், வவுனியா மாநகரசபையின் ஒன்றுகூடல் மண்டபத்தில் இன்று காலை நடைபெற்றது. இதன்போது முதல்வர் தெரிவு மற்றும் பிரதி முதல்வர் தெரிவுகள் பகிரங்க வாக்களிப்பின் மூலம் நடத்தப்பட்டது. அந்தவகையில் சங்கு கூட்டணியின் சார்பாக போட்டியிட்ட சு.காண்டீபனுக்கு ஆதரவாக 11வாக்குகளும், தேசியமக்கள்சக்தி சார்பாக போட்டியிட்ட சிவசோதி சிவசங்கருக்கு 10 வாக்குகளும் கிடைக்கப்பெற்றன. இதனடிப்படையில் சங்கு கூட்டணியைச் சேர்ந்த சு.காண்டீபன் புதிய முதல்வராக தெரிவு செய்யப்பட்டார். இதனையடுத்து பிரதி முதல்வருக்கான தெரிவு இடம்பெற்றது. பிரதி முதல்வராக ஜனநாயக தேசிய கூட்டணி சார்பில் போட்டியிட்ட பரமேஸ்வரன் கார்த்தீபனுக்கு ஆதரவாக 11 வாக்குகளும், சுயேட்சைகுழுவை சேர்ந்த சிவசுப்பிரமணியம் பிரேமதாஸ் அவர்களுக்கு 10வாக்குகளும் ஆதரவாக அளிக்கப்பட்டது. இதனையடுத்து ஜனநாயக தேசியகூட்டணியின் உறுப்பினர் பரமேஸ்வரன் கார்த்தீபன் பிரதிமுதல்வராக தெரிவுசெய்யப்பட்டார். https://oruvan.com/the-sanku-alliance-captured-the-municipal-council-by-a-margin-of-one-vote/

முக்கிய வழக்குகளை கையில் எடுத்த அநுர – சிக்கவுள்ள இரு ராஜபக்சர்கள்..!

3 months 1 week ago
முக்கிய வழக்குகளை கையில் எடுத்த அநுர – சிக்கவுள்ள இரு ராஜபக்சர்கள்..! நாமல் ராஜபக்ச மற்றும் யோசித ராஜபக்ச ஆகியோரிடம் குற்றப்பத்திரிகை ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், பல வழக்குகள் தொடர்பில் விரைவில் சட்டமா அதிபர் திணைக்களத்திலிருந்து குற்றப்பத்திரிகையை வெளியிடுவார்கள் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்; நாட்டில் உள்ள பல விசாரணைகள் தொடர்பில் நீதவான் நீதிமன்றத்திற்கு ஏராளமான வழக்குகள் தொலைநகல் மூலம் அனுப்பப்பட்டுள்ளன. அதன் பிறகு அந்த விடயங்கள் தொடர்பில் உயர் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்ய வேண்டும்.அதுதான் கடைசி படி. அதன் பிறகு நீதிமன்றத்திற்கு தண்டனை வழங்க அதிகாரம் உள்ளது. அரச நிறுவனங்களின் முக்கியமான பங்கு, வழக்குகளை விசாரித்து உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரும் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்வதாகும். இப்போது கெஹெலிய ரம்புக்வெல்ல, மேர்வின் சில்வாவின் விசாரணை முடிவுக்கு வருகிறது. குற்றப்பத்திரிகை மிக விரைவில் ஒப்படைக்கப்படும். இந்நிலையில் கிரிஷ் பரிவர்த்தனை தொடர்பாக நமாலுக்கு குற்றப்பத்திரிகை வழங்கப்பட்டுள்ளது. யோசிதாவிடமும் குற்றப்பத்திரிகை ஒப்படைக்கப்பட்டுள்ளது. பல வழக்குகள் தொடர்பில் விரைவில் சட்டமா அதிபர் திணைக்களத்திலிருந்து குற்றப்பத்திரிகையை வெளியிடுவார்கள். அதன் பிறகு, நீதிமன்றத்திற்குச் செல்வதே பணி. என கூறியுள்ளார். https://akkinikkunchu.com/?p=329020

வலி. வடக்கில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு 35 ஆண்டுகள்! - 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் மீள் குடியேற்றப்படவில்லை!

3 months 1 week ago
35 வருடங்களின் பின்னர் பலாலி கிழக்கு அம்மன் ஆலயத்தில் மக்கள் சுதந்திரமாக வழிபட அனுமதி General15 June 2025 இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலிருந்த பலாலி கிழக்கு அருள்மிகு ஸ்ரீ இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் இன்று முதல் பொதுமக்கள் வழிபாடு செய்ய உத்தியோகபூர்வமாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இன்றிலிருந்து மக்கள் சுதந்திரமாக ஆலயத்துக்கு சென்று வழிபட முடியுமென்றும் இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். இன்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், இராணுவ அதிகாரிகள், பொது மக்கள் உள்ளிட்ட பலரும் ஆலயத்திற்கு விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டனர். இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் காரணமாகக் கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15ஆம் திகதி ஆலய சூழலில் உள்ள பகுதிகளான பலாலியில் இருந்து மக்கள் வெளியேறியதைத் தொடர்ந்து அப்பகுதி இராணுவ உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டது. இந்நிலையிலேயே இன்று முதல் மக்கள் அங்கு சுதந்திரமாக செல்வதற்கு இராணுவத்தினர் உத்தியோகபூர்வமாக அனுமதி வழங்கியுள்ளனர். https://hirunews.lk/tm/407239/after-35-years-people-are-allowed-to-worship-freely-at-the-palali-east-amman-temple

பரமக்குடியில் வயதான பெண் படு கொலை – இலங்கை பெண்ணும் மகனும் கைது!

3 months 1 week ago
பரமக்குடியில் வயதான பெண் படு கொலை – இலங்கை பெண்ணும் மகனும் கைது! adminJune 16, 2025 இந்தியாவின் பரமக்குடியில் வயதான பெண்ணைக் கொன்று தங்க நகைகளைத் திருடிய குற்றச்சாட்டில் இலங்கைத் தமிழ்ப் பெண் ஒருவர் மற்றும் அவரது மகன் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை அகதியான கரூர் மாவட்டம் குளித்தலையை சேர்ந்த 52 வயதான அன்னலட்சுமி, பரமக்குடியில் உள்ள 92 வயதான ஞானசவுந்தரியின் வீட்டில் பணிப்பெண்ணாகப் பணியாற்றி வந்ததாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். வயதான பெண்ணின் மரணம் குறித்து அன்னலட்சுமி உறவினர்களுக்குத் தகவல் அளித்திருந்தார். பரமக்குடி நகர காவற்துறையினருக்கு தகவல் தெரிவித்த பின்னர் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், வயதான பெண்ணின் வீட்டிலிருந்து சுமார் 7.5 பவுன் தங்க நகைகள் காணாமல் போனது தெரியவந்தது. பணிப்பெண்ணிடம் நடத்திய விசாரணையில், அவர் இரவில் வயதான பெண்ணைக் கொன்று, கரூரிலிருந்து வந்த அவரது மகன் 36 வயது பிரபுவிடம் தங்க நகைகளைக் கொடுத்தது தெரியவந்தது. இதனையடுத்து காவற்துறையினர் அந்தப் பெண்ணையும் அவரது மகனையும் கைது செய்து, திருடப்பட்ட நகைகளை மீட்டுள்ளனர். https://globaltamilnews.net/2025/216866/

வலி. வடக்கில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு 35 ஆண்டுகள்! - 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் மீள் குடியேற்றப்படவில்லை!

3 months 1 week ago
6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் மீள் குடியேற்றப்படவில்லை! வலி. வடக்கில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு 35 ஆண்டுகள்! adminJune 16, 2025 வலிகாமம் வடக்கில் இருந்து தாம் வெளியேற்றப்பட்டு 35 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், இன்னமும் தம்மை தமது சொந்த இடங்களில் மீள் குடியமர்த்தவில்லை என அப்பகுதிகளில் இருந்து இடம்பெயர்ந்துள்ள மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் அவர்கள் தெரிவிக்கையில், போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு 16 ஆண்டுகள் கடந்துள்ளபோதும் எங்களின் காணிகள் உயர் பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் இன்னமும் இராணுவத்தினரின் கட்டுபாட்டிலையே உள்ளது. 1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15ஆம் ஆண்டு எமது சொந்த இடங்களில் இருந்து யுத்தம் காரணமாக வெளியேற்றப்பட்டோம். நாம் வெளியேறினதும், எமது பகுதிகளை உயர் பாதுகாப்பு வலயம் என இலங்கை இராணுவம் அறிவித்துக் கையகப்படுத்திக்கொண்டது. அந்தப் பகுதியில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட நாம் பல இடங்களில் குடியேறி உள்நாட்டுக்குள்ளையே அகதிகளாக வாழ்கின்றோம். போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னரும் உயர்பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் எமது காணிகள் இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ளன. அந்தக் காணிகளை விடுவிக்கவேண்டும் என்றும் – இடம்பெயர்ந்த மக்களைச் சொந்த இடங்களில் மீள்குடியமர அனுமதிக்கவேண்டும் என்றும் பல ஆண்டுகளாகக் கோரிக்கைகளை விடுத்து வருகின்ற போதிலும், அவை இன்னமும் இராணுத்தால் விடுவிக்கப்படவில்லை. இடையிடையே சில பிரதேசங்களில் மீள்குடியமர்வு அனுமதிக்கப்பட்டபோதும், இன்னமும் பெரும் நிலப்பரப்பு இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டு – வளம்மிக்க அந்தப் பிரதேசத்தின் பயன்கள் இராணுவத்தால் சுரண்டப்பட்டு வருகின்றது. வலிகாமம் வடக்கில் இன்னமும் 2 ஆயிரத்து 700 ஏக்கருக்கு மேற்பட்ட நிலப்பரப்பு இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ளது. அந்தப் பிரதேசத்தை பாதுகாப்பு என்ற போர்வையில் இராணுவத்தினர் கையகப்படுத்தியிருந்தாலும், அந்தப் பிரதேசத்தின் வளங்களைச் சுரண்டி வருமானம் ஈட்டுவதிலேயே இராணுவம் முனைப்பாக இருக்கின்றது. தற்போது வலிகாமம் வடக்கில் இராணுவத்தின் வசமுள்ள தமிழ் மக்களின் காணிகளில் 50 சதவீதமானவற்றில் இராணுவத்தினர் விவசாய நடவடிக்கைகளையும், பண்ணைகளை யும் முன்னெடுக்கின்றனர். 10 சதவீதமான காணிகளில் மைதானங்கள், வர்த்தக நிலையங்கள், பொழுதுபோக்கு அம்சங்கள் என்பன இராணுவத்தினரால் அமைக்கப்பட்டுள்ளன. அங்கிருந்து பெறப்படும் விவசாய அறுவடையையும், அவற்றின் ஊடான வருமானத்தையும் இராணுவமே பெற்றுக்கொண்டுவருகின்றது. அதேநேரம், ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சிக்காலத்தில் தையிட்டிப் பகுதியில் விடுவிக்கத் தயாராகவிருந்த பெண்கள் விடுதி ஒன்றில் தற்போது இராணுவத்தினால் வர்த்தக நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த காலங்களில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில், இராணுவத்தினர் பிரதேச செயலகங்களிடமோ அல்லது உரிய அரச நிர்வாகங்களிலோ எந்தவித அனுமதியும் பெறாது கட்டுமானங்களையும், வர்த்தக நடவடிக்கைகளையும் முன்னெடுக்கின்றனர். அதேபோன்று காங்கேசன்துறையில் தல்செவன விடுதியைச் சுற்றியுள்ள கடற்கரைப் பகுதி, அங்குள்ள சில வீதிகள் இன்னமும் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றன. விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் மறைமுகமாக இராணுவத்தின் ஆளுகை தற்போதும் தொடர்கின்றது. வலிகாமம் வடக்கைச் சொந்த இடமாகக் கொண்ட 6 ஆயிரத்துக்கும் அதிகமான குடும்பங்கள் தற்போதும் பல்வேறு இடங்களில் இடர்பெயர்ந்து வாழ்கின்றனர். அவர்களின் விவசாய நிலங்கள் இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தங்களின் வாழ்வாதாரங்களை இழந்து பொருளாதார நெருக்கடிகளுடன் தங்களின் வாழ்க்கையைக் கொண்டு நகர்த்துகின்றனர். பாடசாலைகள், பாடசாலை மைதானங்கள், ஆலயங்கள், மயானங்கள் எனப் பலவும் இன்னமும் இராணுவத்தின் வசமே இருக்கின்றது. போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு 16 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், உயர்பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டிருக்கும் பிரதேசங்கள் விடுவிக்கப்பட வேண்டும் என தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருகின்றோம் என தெரிவித்தனர். https://globaltamilnews.net/2025/216869/
Checked
Wed, 09/24/2025 - 21:03
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed