புதிய பதிவுகள்2

'கள் இறக்கும் போராட்டம்' - பனை மரம் ஏறிய சீமான்

3 months 1 week ago
தமிழ்நாட்டில் சட்டபூர்வமான மது விற்பனையிலும் மக்கள் அதிகமாக உயிரிழக்கின்றார்கள். அதனால் அரசு சம்பந்தப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு மானியம் என வழங்குகின்றது. எனவே அதுவும் ஒருவகை ஊக்கிவிப்பு.😎 வரும் காலத்தில் டாஸ்மாஸ்க்கில் மது அருந்தி உயிரிழப்பவர்களுக்கு மாதாந்த ஓய்வூதியம் வழங்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை.😋

வட பகுதி மனித புதைகுழிகள்; உறுதிப்படுத்தப்படாத வாய்மொழி மூல தகவல்கள் என நீதியமைச்சர் தெரிவிப்பு

3 months 1 week ago
கண்டிப்பாக! அதோடு சேர்த்து ஒரு கதையும் புனைவார்கள். அப்போ, அவர்கள் படையில் குழந்தைகளும் இருந்தனர் என்பதை ஏற்றுக்கொள்ளவேண்டி வரும். நிர்வாணப்படுத்துவது சிங்களவரின் மரபு. அதை அப்படியே நிலைநிறுத்தி, தம்மை அடையாளப்படுத்த ஒரு துப்பை விட்டுச்சென்றுள்ளனர். அவர்கள் எத்தனை கதையெழுதினாலும் அவை, தம்மை மறைப்பதற்கும் சிங்கள மக்களை ஏமாற்றுவதற்குமே உதவும். இன்று அந்த உடல்கள் வெளிவந்தனவென்றால்; அவை வெறும் உடலங்கள் மட்டுமல்ல, அவற்றோடு சேர்ந்து உண்மையும் வெளிவந்துள்ளன. அவற்றை மறைக்க யராலும் முடியாது. வேண்டுமென்றால் என். என். பியின் முகத்திரை கிழியும். இந்த லட்ஷணத்தில சர்வதேசம் போர்க்குற்ற விசாரணை செய்ய வேண்டாமென கூற இவர்களுக்கு தகுதியில்லை. இவர்களிடமிருந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியோ நிவாரணமோ கிடைக்காது என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார் நீதியமைச்சர்.

அணுகுண்டு தயாரிக்கும் கட்டத்தை இரான் நெருங்கிவிட்டதா? விரிவான அலசல்

3 months 1 week ago
வணக்கம் நொச்சியார்!உங்கள் எழுத்து நியாயபூர்வமானது. ஆனால்...... இந்த உலகு யதார்த்தம் இல்லாது வன்மம் நிறைந்த உலகு. அதை ஒவ்வொரு மூலை முடுக்களிலும் நேரடியாகவே காணலாம்.இப்படியிருக்கும் போது உனக்கொரு சட்டம் எனக்கொரு சட்டம் எனும் ஆதிக்கவாதிகளிடம் இன்னும் எதனை எதிர்பார்க்கின்றீர்கள்?

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்

3 months 1 week ago
தாய்வானை அண்டியுள்ள கடலில் நிலைகொண்டிருந்த அமெரிக்காவின் நிமிற்ஸ் விமானத் தாங்கிக் கப்பலும் நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றும் வேகமாக வளைகுடா நோக்கி நகர்கிறன. இன்னொரு விமானத் தாங்கியும் இக் கடல் பகுதிக்கு வரவுள்ளதாகக் கூறப்படுகிறது. ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் தாக்குதல் விமானங்கள் தயார்படுத்தப்படுகின்றன.

'கள் இறக்கும் போராட்டம்' - பனை மரம் ஏறிய சீமான்

3 months 1 week ago
நடக்கிற விசயத்த கதையுங்கோ. அமெரிக்க உணவு முறைகளை இந்த உலகமே ஏற்கவில்லை என்பது உங்களுக்கு தெரியும் என நினைக்கின்றேன். ஆனால் அமெரிக்கா இல்லாமல் இந்த உலகமே இல்லை என்ற நிலையும் இருக்கின்றது. கூட்டி கழித்து பாருங்கள்.

யாழில் திட்டமிட்ட எரிபொருள் தட்டுப்பாடு ஏன்?

3 months 1 week ago
அதனால் தான் இன்றும் நிமிர்ந்து நிலைத்து நிற்கின்றார்கள். இல்லையேல் சோமாலியா எத்தியோப்பியா மாதிரி யாழ்ப்பாணிகளை எலும்பும் தோலுமாக ஆக்கியிருப்பார்கள்.

வட பகுதி மனித புதைகுழிகள்; உறுதிப்படுத்தப்படாத வாய்மொழி மூல தகவல்கள் என நீதியமைச்சர் தெரிவிப்பு

3 months 1 week ago
யே.வி.பி யின் இயல்பான இனவாதமுகம் என்.பி.பி என்ற முகத்திரையைக் கிழித்து மெல்ல மெல்ல மேலெழுந்து வருகிறது. வாக்களித்த மக்கள் சிந்திக்க வேண்டும். மாற்றென்பது சிங்களத்தின் கைக்கூலிகளைத் தேர்வு செய்வதல்ல என்பதை இவளவு விரைவாக உணரவைப்பார்களென எதிர்பார்க்கவில்லை நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி

அணுகுண்டு தயாரிக்கும் கட்டத்தை இரான் நெருங்கிவிட்டதா? விரிவான அலசல்

3 months 1 week ago
இரண்டு போரரங்கு மூன்றாக விரிவடைந்துள்ளது.உலகை அழித்துவரும் முதலாளித்துவ உலகின் முரண். மேற்கினது செல்லப்பிள்ளையான இஸ்ரேல் அணு ஆயுதத்தை வைத்திருக்கலாம். தயாரிக்கலாம். ஏன் ஈரான் வைத்திருக்கக்கூடாது. இஸ்ரேல் தான்தோன்றித் தனமாக மக்களையும் அழிப்பதோடு, ஐ.நாவின் விதிகளையோ அனைத்துலகால் பின்பற்ற அறிவுறுத்தப்படும் மனிதநேயங்களையோ மதிக்காது கொலைக்களங்களைத் திறந்துவரும்சூழலில் ஈரான் போன்ற நாடுகள் தம்மைப் பாதுகாக்க ஆயுதங்களைத் தயாரிப்பதை எப்படித் தவறாகக்கொள்ளமுடியும். ஈராக்கிலும் இப்படித்தான் செய்தார்கள். பின்னர் லிபியா, சிரியா... ஈரானில் வந்து நிற்கிறார்கள். கடந்த 5 நாட்களில் பலஸ்தீன மக்கள் படும் துயரத்தில் லட்சத்தில் ஒரு துளியையாவது இஸ்ரேலியர்கள் உணர்ந்திருப்பார்களாயின் அந்த மக்கள் எதிர்காலத்தில் கடும்போக்கு அரசியல்வாதிகளை நிராகரிப்பதோடு, ஆக்கிரமிப்பு மனோபாவத்தையும் கைவிட்டுப் பலஸ்தீனத்தை ஒரு அயல் தேசமாக ஏற்று வாழ்வதே இரு இனங்களும் அமைதியாக வாழ்வதற்கான வழியாகஇருக்கும். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி

வட பகுதி மனித புதைகுழிகள்; உறுதிப்படுத்தப்படாத வாய்மொழி மூல தகவல்கள் என நீதியமைச்சர் தெரிவிப்பு

3 months 1 week ago
இந்த காபன் 14 இனை அளவிடும் இயந்திரம் (Accelerator Mass Spectrometer) இலங்கையில் இருப்பதாக நான் அறியவில்லை. இருப்பதானால் கொழும்பு பல்கலையில் இருக்க வேண்டும். ஆனால், மிகவும் விலையுயர்ந்த, பராமரிப்பு தேவையான இயந்திரம். எனவே இன்னும் இல்லை என நம்புகிறேன். இந்தியாவில் சில உயர் நிலை ஆய்வு நிறுவனங்களில் இந்த இயந்திரங்கள் இருக்கின்றன. அவற்றை தொல்லியல் மாதிரிகளை பரிசோதிக்க மட்டும் பாவிக்க முடியும். அண்மைக் கால உடல்களை காபன் 14 காலம் கணிக்க, சட்ட மருத்துவ (forensic) அனுபவம் உள்ள அமெரிக்க அல்லது ஐரோப்பிய ஆய்வகங்களுக்குத் தான் அனுப்ப வேண்டும். புளோரிடாவில் இருக்கும் Beta Analytics என்ற நிறுவனம் இதைச் செய்ய வேண்டிய உணர் திறன் மிக்க இயந்திரத்தை வைத்திருக்கிறது (இங்கே தான் திருக்கேதீஸ்வர அகழ்வு எச்சங்கள் அனுப்பப் பட்டன). இந்தக் காலக் கணிப்பை செய்வதற்கு முன்னர் (அல்லது சம காலத்தில்) இலங்கையில் செய்யக் கூடிய சில சட்ட மருத்துவ பரிசோதனை முறைகளை முன்னிறுத்த வேண்டுமென்பது என் அபிப்பிராயம். எச்சங்களின் பௌதீக பரிசோதனைகள் மூலம் தோட்டாக்கள், தாக்குதல், வெட்டுக்கள் என்பவற்றை ஒரு முறையான forensic pathologist மூலம் ஆராய வேண்டும். அத்தோடு ஒவ்வொரு உடலில் இருந்தும் டி.என்.ஏ யை எடுத்துப் பாதுகாக்க வேண்டும். காணாமல் போனவர்களின் பெற்றோர், சகோதரர், பிள்ளைகளின் டி.என்.ஏ மாதிரிகளோடு இவற்றை ஒப்பிடலாம். இந்த டி.என்.ஏ பரிசோதனை செய்யும் வசதி கொழும்பில் இருக்கிறது.

வட பகுதி மனித புதைகுழிகள்; உறுதிப்படுத்தப்படாத வாய்மொழி மூல தகவல்கள் என நீதியமைச்சர் தெரிவிப்பு

3 months 1 week ago
நல்ல தகவல் ஜஸ்டின். தற்போழுது கண்டெடுக்கப்படும் செம்மணி போன்ற மனித தடயங்களை, அதன் காலப்பகுதி, மரணம் நடந்த மூலக்காரணம் என்ன என்பதை கண்டறிய எந்த மருத்துவ விஞ்ஞான வகையில் அணுகலாம்? இலங்கையில் இருந்து புளோரிடா கொண்டு செல்வத்திற்கான காரணம் என்ன? இலங்கையில் அந்த தொழில் நூட்பம் இல்லையா? தெரிந்து கொள்ளலாமா?

மண்டை தீவு செம்பாட்டுத்தோட்ட தோமையார் தேவாலய மனித புதைகுழி; டக்ளஸ் தேவானந்தாவை விசாரியுங்கள் - சிறீதரன் வலியுறுத்தல்

3 months 1 week ago
17 JUN, 2025 | 08:25 PM (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) மண்டைதீவு செம்பாட்டுத்தோட்டம் தோமையார் தேவாலயப்பகுதியில் உள்ள மனிதப் புதைகுழி தொடர்பில் ஈ.பி.டி.பி.யின் செயலாளரும் முன்னாள் அமைச்சரும் இராணுவ ஒட்டுக் குழுத் தலைவருமாக இருந்தவரான டக்ளஸ் தேவானந்தாவிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக்குழுத் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரன் சபையில் வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (17) நடைபெற்ற அமர்வின் போது மண்டைதீவு செம்பாட்டுத் தோட்டம், புனித தோமையார் ஆலயத்தின் அருகாமை, திருக்கேதீஸ்வரம், முல்லைத்தீவு குமுழுமுனை, கொக்குத்தொடுவாய் யாழ்ப்பாணம் செம்மணி சிந்துப்பாத்தி மனிதப் புதைகுழிகள் தொடர்பில் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்சன நாணயக்காரவின் கவனத்திற்கு கொண்டு வந்து கேள்வி எழுப்புகையில் மேற்கண்டவாறு வலியுறுத்தினார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, மண்டைதீவு செம்பாட்டுத்தோட்டம் தோமையார் தேவாலயப்பகுதியில் உள்ள மனிதப் புதைகுழியில், 1990களில் வேலணை, மண்கும்பான், அல்லைப்பிட்டி, மண்டைதீவுப் பகுதிகளில் இருந்து அழைத்துவரப்பட்ட சிறுவர்களும் இளைஞர்களுமே புதைக்கப்பட்டார்கள் என வடக்கு மற்றும் கிழக்கு மனித உரிமை அமைப்புகள் குறிப்பிடுகின்றன. 3ஆம் வட்டாரம், மண்டைதீவைச் சேர்ந்த சூசைதாஸ் யேசுரட்ணம் தர்மராணி என்ற தாயார், தனது இரு பிள்ளைகள் உட்பட்ட 84 பேர் மண்டைதீவில் காணாமலாக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான நீதியைப் பெற்றுத்தருமாறும் 2025.04.30 ஆம் திகதி ஜனாதிபதிக்கு ஒரு கடிதத்தை அனுப்பி, அதன் பிரதியை எனக்கும் கிடைக்கச் செய்துள்ளார். இப்பகுதியில் படுகொலை செய்யப்பட்டவர்களின் புகைப்படங்களுடன் வெளிவந்த அறிக்கைகள் உள்ளன. மண்கும்பான், அல்லைப்பிட்டி, மண்டைதீவுப் பகுதிகளில் இருந்து அழைத்துவரப்பட்ட சிறுவர்களும், இளைஞர்களுமே படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டார்கள். இவர்களை இராணுவத்தினர் அழைத்து சென்ற போது பெற்றோர், உறவினர்கள் அப்போது தீவுப்பகுதியில் இராணுவ ஒட்டுக்குழுவின் தலைவராகவிருந்த டக்ளஸ் தேவானந்தாவிடம் ஓடிச்சென்று அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு மன்றாடியபோது இராணுவத்தினர் விசாரித்து விட்டு விடுவிப்பார்கள் என டக்ளஸ் கூறியுள்ளார். ஆனால் அவர்கள் எவரும் விடுவிக்கப்படாது படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டார்கள். எனவே மண்டைதீவு செம்பாட்டுத்தோட்டம் தோமையார் தேவாலயப்பகுதியில் உள்ள மனிதப் புதைகுழி தொடர்பில் ஈ.பி.டி.பி.யின் செயலாளரும் முன்னாள் அமைச்சரும் இராணுவ ஒட்டுக் குழுத் தலைவருமாக இருந்தவரான டக்ளஸ் தேவானந்தாவிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/217728

வட பகுதி மனித புதைகுழிகள்; உறுதிப்படுத்தப்படாத வாய்மொழி மூல தகவல்கள் என நீதியமைச்சர் தெரிவிப்பு

3 months 1 week ago
கார்பன் வயது கணிப்பைப் பற்றி ஏன் பேசுகிறார்கள் என்பது எனக்குப் புரியவில்லை. மேலதிக தகவலுக்காக கீழே இருக்கும் கட்டுரையை வாசிக்கலாம். University of Chicago NewsCarbon-14 dating, explainedFirst developed in the late 1940s at UChicago, carbon dating can determine the age of organic materials as old as 60,000 years. ஆனால் சுருக்கமாக இது தான் காபன் திகதி கணித்தல்: 1. காபன் 14 (C14) என்கிற மூலக்கூறு கதிரியக்கத்தை வெளியிடும். எனவே, ஒரு மாதிரியில் இருக்கும் காபன் 14 இன் அளவை கதிரியக்கத்தை அளக்கும் கருவிகள் கொண்டு அளக்கலாம். 2. ஒரு உயிர் சுவாசிக்காமல் விட்ட கணத்தில், அதனுள் காபன் 14 புதிதாகச் சேர்வதும் நின்று விடும். 3. இறந்த அந்த உயிரியின் உடலில் அது வரை சேர்ந்த காபன் 14 மெதுவாக அழிய ஆரம்பிக்கும் (decay). இந்த அழிவு எவ்வளவு மெதுவாக நிகழும்? காபன் 14 இனைப் பொறுத்த வரை அதன் அரைவாசி அழிவடைய ~5,700 ஆண்டுகள் எடுக்கும். இதனை காபன் 14 இன் அரை வாழ்வுக் காலம் (half-life) என்பார்கள். 4. இவ்வளவு மெதுவாக அழிவடையும் காபன் 14 இனை வைத்துக் கொண்டு மிக அண்மையில் (1990 என்று வைத்துக் கொண்டாலும்) இறந்த உடல் எச்சங்களின் வயதைக் கணிப்பது மிகவும் கடினமானது. எனவே, சாதாரணமாக காபன் 14 வயது கணித்தல் சில நூறு ஆண்டுகள் முதல் 50,000 ஆண்டுகள் வரையான வயதைக் கணிப்பதற்கே பயன்படுகிறது. ஒரு சில சந்தர்ப்பங்களில் மட்டும், காபன் 14 இனை வித்தியாசமாகப் பயன்படுத்தி 1980 இல் இறந்த உடல்களின் வயதைக் கணிக்கப் பயன்படுத்தியிருக்கிறார்கள். அதைப் பற்றிய சுவாரசியமான கட்டுரை கீழே இருக்கிறது. https://www.science.org/doi/10.1126/science.321.5895.1434 ஆனால், இந்த முறை இலங்கையில் இருந்து எடுக்கப் படும் உடல்களில் பயன்படுத்தக் கூடியதா என்பது இன்னும் தெரியாது.

கிழக்கு பல்கலைக்கழகத்தின் 11 ஆவது புதிய உபவேந்தராக நியமிக்கப்பட்ட பேராசிரியர் பரராஜசிங்கம் பிரதீபன் கடமைகளை பெறுப்பேற்றார்

3 months 1 week ago
Published By: VISHNU 17 JUN, 2025 | 06:27 PM கிழக்கு பல்கலைக்கழத்தின் 11 வது உபவேந்தரா நியமிக்கப்பட்ட முன்னாள் விஞ்ஞானபீட பீடாதிபதி பேராசிரியர் பரராஜசிங்கம் பிரதீபன் செவ்வாய்க்கிழமை (17) தனது கடமைகளை பெறுப்பேற்றுக் கொண்டார். குறித்த பல்கலைக்களத்தின் 11 வது உபவேந்தரை தெரிவு செய்வதற்கான நேர்முக பரீட்சை பல்கலைக்கழகத்தின் பேரவையினால் கடந்த இரண்டு மாத்திற்கு முன்னர் பல்கலைகழகத்தில் இடம்பெற்றது. இதில் 8 பேர் களமிறங்கிய நிலையில் முதல் நிலையில் முன்னாள் விஞ்ஞானபீட பீடாதிபதி பேராசிரியர் பரராஜசிங்கம் பிரதீபன், உட்பட 3 பேர் தெரிவு செய்யப்பட்டு பல்கலைகழக மானிய ஆணைக் குழுவிற்கு அனுப்பிய அந்த பெயர் பட்டியலை ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளனர்; இதனடிப்படையில் முதல் நிலையிலுள்ளதையடுத்து முன்னாள் விஞ்ஞானபீட பீடாதிபதி பேராசிரியர் பரராஜசிங்கம் பிரதீபனை ஜனாதிபதி கிழக்கு பல்கலைக்கழகத்தின் 11 வது உபவேந்தராக நியமித்து அதற்கான கடிதத்தினை செவ்வாய்க்கிழமை (17) அனுப்பிவைத்துள்ளார். இதனையடுத்து புதிய உபவேந்தர் செவ்வாய்க்கிழமை (17) பகல் 12.00 மணியளவில் தமது கடமையை உத்தியோக பூர்வமாக பெறுப்பேற்றுக் கொண்டார். https://www.virakesari.lk/article/217755

யாழ். செம்மணியில் 3 அடி ஆழத்தில் மனித எலும்புக்கூடு மீட்பு ; பாரிய புதைகுழியாக இருக்கலாமென அச்சம்

3 months 1 week ago
செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம்; அகழ்வாய்வுகள் முழுமையாக இடம்பெறுவதுடன், வெளிப்படைத் தன்மைஅவசியம் - ரவிகரன் எம்.பி Published By: VISHNU 17 JUN, 2025 | 06:06 PM யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வாய்வுகள் முழுமையாக மேற்கொள்ளப்படுவதுடன், அகழ்வாய்வுகளில் வெளிப்படைத்தன்மை அவசியமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். அதேவேளை இறுதிக்கட்டயுத்தத்தின்போது இடம்பெற்ற மனித உரிமைமீறல்கள் மற்றும், யுத்தக்குற்றங்களுக்கு இதுவரை உரியவகையில் பொறுப்புக்கூறப்படவில்லை என்பதை இதன்போது சுட்டிக்காட்டிய நாடாளுமன்ற உறுப்பினர், அந்தவிடயத்தில் கடந்த அரசாங்கங்களைப்போலவே இந்த அரசாங்கமும் செயற்பட்டு வருவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். நாடாளுமன்றில் செவ்வாய்க்கிழமை (17) உரையாற்றுகையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், யாழ்ப்பாணம் செம்மணி சிந்துபாத்தி மயான புதைகுழி அகழ்வுப் பணிகள் உரிய வகையில் முன்னெடுக்கப்பட வேண்டுமென இவ்வுயரிய சபையிலே வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றேன். குறித்த செம்மணி மனிதப் புதைகுழியிலிருந்து இதுவரை 19 முழுமையான மனித எலும்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்தப் புதைகுழியினை எதிர்வரும் 20ஆம் திகதி முதல் தொடர்ச்சியாக 45 நாட்களுக்கு அகழ்வு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது. இதற்கான உத்தரவு நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டிருக்கின்றது. இந்தப் புதைகுழியினை அகழ்வு செய்து உரியவகையில் விசாரணைகளை மேற்கொண்டு உண்மை நிலைமைகள் கண்டறியப்படவேண்டுமெனவும், இந்த விட யத்தில் அரசாங்கமானது உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கின்றேன். இந்தப் புதைகுழியில் அடையாளம் காணப்பட்டுள்ள எலும்புக்கூடுகளை வைத்துப் பார்க்கும்போது சிறுவர்கள், பெண்கள் அடித்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் வலுவடைந்துள்ளது. இதனைவிட அடையாளம் காணப்பட்டுள்ள எலும்புக் கூடுகளில் ஆடைகள் அணிந்திருந்தமைக்கான சான்றிதழ்கள் இல்லை என்றும் கூறப்படுகின்றது. எனவே, இந்த சடலங்கள் நிர்வாணமாக புதைக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. திட்டமிட்ட வகையில் படுகொலைகள் செய்யப்பட்ட பின்னர் சடலங்கள் இங்கு புதைக்கப்பட்டிருக்கலாம் என்றே கருதவேண்டியுள்ளது. மேலும் செம்மணிப் பகுதியில் புதைகுழிகள் உள்ள விடயம் கடந்த 1999ஆம்ஆண்டு வெளிப்படுத்தப்பட்டிருந்தது. சுண்டுக்குளி மகளிர் கல்லூரி மாணவி கிருஷாந்தி குமாரசாமி கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்ட 6 இராணுவ வீரர்களுக்கு ட்ரயல் அட்பார் நீதிமன்றம் மரணதண்டனை வழங்கித் தீர்ப்பளித்திருந்தது. இதில் பிரதான சந்தேகநபரான இராணுவ லயன்ஸ் கோப்ரல் சோமரத்ன நீதிமன்றத் தீர்ப்பையடுத்து, செம்மணி பகுதியில் இராணுவத்தினரால் 600பேர்வரையில் படுகொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்டுள்ளதாக தகவலை வெளிப்படுத்தியிருந்தார். இந்த விவகாரமானது அன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. செம்மணியில் அப்பாவிப் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதனையடுத்து, செம்மணி புதைகுழி தோண்டும் நடவடிக்கை அன்று இடம்பெற்றிருந்தது. லயன்ஸ் கோப்ரல் சோமரத்ன அடையாளம் காட்டிய சிலபகுதிகள் அந்தவேளையில் அகழப்பட்டன. அதில் 25 எலும்புக் கூடுகள் வரையில் மீட்கப்பட்டிருந்தன. அதன்பின்னர் இந்த நடவடிக்கை கிடப்பில் போடப்பட்டது. தற்போது செம்மணி பகுதியில் அகழ்வு இடம்பெற்றதையடுத்து மீண்டும் புதைகுழியொன்று அடையாளம் காணப்பட்டிருக்கின்றது. கடந்த மூன்று தசாப்த காலமாக வடக்கு, கிழக்கில் இடம்பெற்ற கொடூர யுத்தம் காரணமாக இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டிருந்தனர். இறுதி யுத்தத்தின் போது பல்லாயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டனர், ஆயிரக்கணக்கானவர்கள் காணாமலாக்கப்பட்டனர், ஆயிரக்கணக்கானவர்கள் படுகாயமடைந்திருந்தனர், தொண்ணூறாயிரம் பெண்கள் விதவைகளாக்கப்பட்டனர், ஒன்பதாயிரம் சிறுவர்கள் அனாதரவாக்கப்பட்டனர். இவ்வாறு பேரிழப்புகளை தமிழ்மக்கள் சந்தித்திருந்தனர். யுத்தகாலத்தில் இராணுவத்தரப்பினரால் பலவேறு பகுதிகளில் படுகொலைகள் அரங்கேற்றப்பட்டிருந்தன. யுத்தம் முடிவடைந்து தற்போது 16வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் பல இடங்களில் புதைகுழிகள் தோண்டப்பட்டுள்ளன. வடக்கு, கிழக்கைப் பொறுத்தவரையில் இதுவரை 13 இடங்களில் புதைகுழிகள் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. இதில் பலஇடங்களில் புதைகுழிகள் தோண்டப்பட்டுள்ளன. மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் 2013ஆம் ஆண்டு புதைகுழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. இந்தப் புதைகுழி அவ்வப்போது அகழப்பட்டதுடன் 2018ஆம் ஆண்டுவரை இந்தப்பணிகள் இடம்பெற்றிருந்தன. இங்குமீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் அமெரிக்காவிலுள்ள புளோரிடா மாநிலத்துக்கு ஆய்வுக்காக அனுப்பப்பட்டிருந்தன. ஆனால், மீட்கப்பட்ட எலும்புக் கூடுகள் மன்னர் காலத்தைச் சேர்ந்தவை என்று கூறப் பட்டிருந்தது. இதன் உண்மைதன்மை என்ன என்பது தொடர்பில் ஆராய்வதற்கு பின்னர் எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. இதேபோன்று மன்னார் நகரிலுள்ள ச.தொ.ச கட்டடத்துக்கு அருகில் 2018ஆம் ஆண்டு அகழ்வுப்பணி இடம்பெற்றபோது அங்கும்மனிதப் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டது. அந்தப் பகுதிகளிலும் அகழ்வுப்பணி இடம்பெற்றதுடன் இந்தவிவகாரம் தற்போதும் நீதிமன்றத்தில் உள்ளது. முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய்பகுதியில் அகழ்வுப்பணி இடம்பெற்றபோது 2023ஆம் ஆண்டு ஜூன்மாதம் மனித புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வாறு பல்வேறு இடங்களிலும் அகழ்வுப் பணிகள் இடம்பெறுகின்ற போது மனிதப் புதைகுழிகள் தென்படுகின்றமை வடக்கு, கிழக்கைப் பொறுத்தவரையில் வழமையானவிடயமாக மாறிவிட்டது. யுத்தகாலத்தில் கொன்று குவிக்கப்பட்ட தமிழ் மக்கள் ஆங்காங்கே புதைக்கப்பட்டிருந்தனர். அந்த புதைகுழிகளே தற்போது வெளிப்பட்டுவருகின்றன. செம்மணிப் பகுதியில் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள புதைகுழி தொடர்பில் உரிய விசாரணைகள் நடத்தப்படவேண்டும். அகழ்வுப்பணிகள் உரியவகையில் மேற்கொள்ளப்பட்டு எந்தக்காலப்பகுதியில் இந்தப் படுகொலைகள் இடம்பெற்றன, இதற்கு பொறுப்பானவர்கள் யார் என்ற விடயங்கள் கண்டறியப்படவேண்டும். இறுதி யுத்தத்தின்போது பல்லாயிரக் கணக்கான மக்கள் காணாமல்போகச் செய்யப்பட்டுள்ளனர். படையினரிடம் சரணடைந்தவர்கள், படையினர்களிடம் உறவினர்களால் ஒப்படைக்கப்பட்டவர்கள், படையினரால் கைது செய்யப்பட்டவர்கள், படைத்தரப்பினரால் கடத்தப்பபட்டவர்கள் எனப் பலரும் காணாமல் போகச்செய்யப்பட்டிருந்தனர். இவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்னநடந்தது என்றவிடயம் இதுவரை மர்மமாகவே உள்ளது. இவ்வாறு காணாமல்போகச் செய்யப்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டார்களா என்ற சந்தேகம் பாதிக்கப்பட்ட மக்கள்மத்தியில் காணப்படுகின்றது. இதேபோன்றே இறுதி யுத்தத்தின்போது பல்லாயிரக்கணக்கான மக்கள் கொன்று குவிக்கப்பட்டிருந்தனர். முள்ளிவாய்க்கால் பகுதியில் திறந்த நிலப்பரப்பில் இவர்கள்மீது தாக்குதல் நடாத்தப்பட்டது. புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து மக்கள் இராணுவக் கட்டுப்பாட்டுக்கு வந்தபோது தாக்குதல்களில் பெருமளவானோர் பலியாகியிருந்தனர். இவ்வாறு பலியானவர்கள் அந்தந்த இடங்களிலேயே புதைக்கப்பட்டிருந்தனர். செம்மணியில் இளைஞர், யுவதிகள் கொன்று புதைக்கப்பட்டமை, கிருஷாந்தி குமாரசுவாமி கொலை வழக்கின் இறுதியிலேயே தெரியவந்தது. ஆனாலும், அந்த புதைகுழிகள் தொடர்பில் அன்றைய காலப்பகுதியில் உரியவிசாரணைகள் நடத்தப்பட்டிருக்கவில்லை. அந்தப் படுகொலைகளுக்கு காரணமானவர்கள் தண்டிக்கப் பட்டிருக்கவில்லை. அதன் பின்னணியில் செயற்பட்டவர்கள் குறித்த தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டிருக்கவில்லை. அன்று கிருஷாந்தி குமாரசாமியின் கொலைவழக்கின் பிரதான சந்தேக நபரான லான்ஸ் கோப்ரல் சோமரத்ன தகவலை வெளிப்படுத்தி யிருக்காவிடின் செம்மணி புதைகுழி விவகாரம் வெளிவந்திருக்கமாட்டாது. இந்தப் புதைகுழி விவகாரம் தொடர்பில் தகவல்கள் வெளிப் படுத்தப்பட்ட போதும் உரியவகையில் புதைகுழிகள் அகழப்படாமையினால்தான் தற்போது செம்மணியில் மீண்டும் புதைகுழி அடையாளம் காணப்பட்டிருக்கிறது. வடக்கு, கிழக்கைப் பொறுத்தவரையில் பல்வேறு இடங்களில் புதைகுழிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அந்தப் புதைகுழிகள் தொடர்பில் உரியவிசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். தற்போது செம்மணியில் கண்டு பிடிக்கப்பட்டுள்ள புதைகுழியில் பெருமளவானோர் கொன்று புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணியில் 19எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதில் சிறுவர்கள், பெண்கள் ஆகியோரின் எலும்புக்கூடுகளும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. எனவே, இந்த புதைகுழி அகழ்வுக்கான சகல ஏற்பாடுகளையும் அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும். இதற்கான சகல ஒத்துழைப்புகளையும் அரசாங்கம் வழங்க வேண்டும். அகழ்வுச்செயற்பாட்டை நிறுத்தாது இதனை முழுமைப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இறுதி யுத்தத்தின்போது இடம்பெற்ற மனிதஉரிமை மீறல்கள் மற்றும், யுத்தக்குற்றங்கள் தொடர்பில் இன்னமும் உரியவகையில் பொறுப்புக்கூறப்படவில்லை. தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் அந்த விடயத்தில் கடந்த அரசாங்கங்களைப் போன்றே செயற்பட்டு வருகின்றது. இந்த புதைகுழி விவகாரத்தில் அரசாங்கம் வெளிப்படைத்தன்மையுடன் செயற்படவேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகின்றேன் - என்றார். https://www.virakesari.lk/article/217753

யாழில் திட்டமிட்ட எரிபொருள் தட்டுப்பாடு ஏன்?

3 months 1 week ago
எங்கு, எப்போ, என்னென்ன… தட்டுப்பாடுகள் வரும் என, பல மாதங்கள் முன்பே துல்லியமாக கணிக்கும்… யாழ்ப்பாணிகளின் மூளைக்கு, இந்த உலகில் எவனும் கிட்ட நெருங்க முடியாது. 😂 🤣

யாழில் திட்டமிட்ட எரிபொருள் தட்டுப்பாடு ஏன்?

3 months 1 week ago
எரிபொருள் குறித்து அதிரடி அறிவிப்பு! எரிபொருள் பற்றாக்குறை குறித்த போலி மற்றும் தவறான செய்திகளால் பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். ஈரான் - இஸ்ரேல் பகுதிகளில் நிலவும் போர் சூழல் காரணமாக இலங்கையில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று சமூக ஊடகங்களில் பரவும் தவறான செய்திகளை அவதானிக்க கூடியதாக உள்ளதாவும் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். மேலும் அடுத்த 2 மாதங்களுக்கு தேவையான எரிபொருள் இருப்பு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் உள்ளதாகவும் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, பொதுமக்கள் போலிச் செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம் எனவும் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கேட்டுக்கொண்டுள்ளார். https://adaderanatamil.lk/news/cmc0dgyf80007qp4ktbq7jcua

வட பகுதி மனித புதைகுழிகள்; உறுதிப்படுத்தப்படாத வாய்மொழி மூல தகவல்கள் என நீதியமைச்சர் தெரிவிப்பு

3 months 1 week ago
காட்டெருமையின் எலும்பையும், கடவாய் பல்லையும் புத்தரின் விலா எலும்பு, தெத்த பல்லு என்று சொல்லி சரித்திரம் எழுதவும், படுகொலை செய்யப்பட்ட தமிழனின் உடல் எச்சத்தை போர்த்துகீசு என்று சொல்லி மறைத்து ஆடுவதும் சிங்களவருக்கு கைவந்த கலை.

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்கின்றார் ஐநாவின் மனித உரிமை ஆணையாளர் - அரசாங்கம் அனுமதி

3 months 1 week ago
ஐநாமனித உரிமை ஆணையாளர் தனது இலங்கை விஜயத்தின் போது மனித புதைகுழிகளை பார்வையிடவேண்டும் - முள்ளிவாய்க்காலிற்கு விஜயம் மேற்கொள்ளவேண்டும் - சர்வதேச அரசசார்பற்ற அமைப்புகள் கடிதம் Published By: RAJEEBAN 17 JUN, 2025 | 08:15 PM ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் வோல்கர் துர்க்(Volker Türk) தனது இலங்கை விஜயத்தின் போது உள்நாட்டு யுத்த மீறல்களுடன் தொடர்புபட்ட செம்மணி மனித புதைகுழி போன்றவற்றையும் ஜேவிபி கிளர்ச்சி காலத்தைய மனித புதைகுழிகளையும் பார்வையிடவேண்டும் என சர்வதேச அரசசார்பற்ற அமைப்புகள் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளன. முள்ளிவாய்க்காலிற்கு விஜயம் மேற்கொள்ளுங்கள், இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் மனித உரிமைகளுடன் தொடர்புபட்ட சர்வதேசத்தவர்கள் அனைவரும் முள்ளிவாய்க்காலிற்கு சென்று யுத்தத்தின் இறுதி அட்டுழியங்களை பார்வையிடவேண்டும் அதன் மூலம் அரசாங்கம் அவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றதை ஏற்றுக்கொள்ளவேண்டும், அதற்கு தீர்வு காணவேண்டும் என்பதை வலியுறுத்துகின்றோம் என்ற செய்தியை பாதிக்கப்பட்டவர்களிற்கும் அவர்களது குடும்பத்தாருக்கும் தெரிவிக்கவேண்டும் என ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் வோல்கர் துர்க்கிற்கு(Volker Türk) எழுதியுள்ள கடிதத்தில் சர்வதேச அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன. வடக்கிலும் கிழக்கிலும் தெற்கிலும் உள்ள பலவந்தமாக காணாமலாக்கப்படுதலால் பாதிக்கப்பட்டவர்களை சந்தியுங்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் வாக்குறுதியளித்தபடி அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கவேண்டும், என பகிரங்கமாக வேண்டுகோள் விடுங்கள் எனவும் சர்வதேச அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துள்ளன. ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க தலைமையிலான இலங்கையின் ஓரளவு புதிய அரசாங்கம் தேர்தலிற்கு முன்னர் புதிய வாக்குறுதிகளை வழங்கிய போதும் ஆனால் அதிகாரத்திற்கு வந்த பின்னர் அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான அரசியல் உறுதிப்பாட்டை சிறிதளவு கூட வெளிப்படுத்தவில்லை என சர்வதேச அரசசார்பற்ற அமைப்புகள் தெரிவித்துள்ளன. ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் வோல்கர் துர்க்கிற்கு(Volker Türk) அவரது இலங்கை விஜயம் குறித்து எழுதியுள்ள கடிதத்தில் சர்வதேச அரசசார்பற்ற அமைப்புகள் இதனை தெரிவித்துள்ளன. முன்னைய அரசாங்கங்களின் கொள்கைகளையே இதுவரை அனுரகுமாரதிசநாயக்க அரசாங்கம் பின்பற்றி வருவதாக சர்வதேச அரசசார்ப்பற்ற அமைப்புகள்தமது கடிதத்தில் தெரிவித்துள்ளன. https://www.virakesari.lk/article/217758

இஸ்ரேல் vs இரான் ராணுவ பலம் குறித்த ஓர் ஒப்பீடு - யாருடைய ராணுவம் பலம் மிக்கது?

3 months 1 week ago
அளவில் சிறிய இஸ்ரேல், பெரிய நாடான இரானுடன் மோதுவது எப்படி சாத்தியமாகிறது? - அதிநவீன போர் தளவாடங்கள் கிடைப்பது எப்படி? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இஸ்ரேலிடம் F-35 போன்ற அமெரிக்கத் தயாரிப்பு ஜெட் விமானங்கள் உள்ளன, ஆனால் இரானில் அதன் இலக்குகளை அடைய அவை போதுமானதா? கட்டுரை தகவல் எழுதியவர், ஜோனாதன் பீல் பதவி, பிபிசி செய்தியாளர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் இரானுடனான இஸ்ரேலின் மோதலை பார்க்கும்போது, அது பொருந்தாத ஒன்றாக தோன்றலாம், அதாவது 90 லட்சம் மக்கள்தொகையைக் கொண்ட ஒரு நாடு, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் 8.8 கோடி மக்கள்தொகையைக் கொண்ட ஒரு பெரிய நாட்டுடன் மோதுகிறது. ஆனால், இஸ்ரேலின் வலிமையான மற்றும் அதிநவீன, அமெரிக்காவால் மட்டுமே வழங்கப்படும் பெரிய ஆயுதக்கிடங்குடன் கூடிய ராணுவப் படைகள் காரணமாக, அந்நாட்டால் தன்னைவிட பெரிய எதிரியை விட மேலோங்கி இருக்க முடிகிறது. மத்திய கிழக்கில் தற்போது நடைபெற்று வரும் போரில் இருநாடுகளுக்கிடையேயான ஒப்பீடுகள் குறித்து பிபிசி இங்கே ஆராய்கிறது. இரான் இதுவரை சாதித்தது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES டெஹ்ரானின் வான்வெளியை தன் கட்டுப்பாட்டுக்குள் எடுத்துவிட்டதாக, இஸ்ரேல் ஏற்கெனவே தெரிவித்துள்ளது. இரானின் சில பழைய போர் விமானங்கள் புறப்பட்டதற்கான அறிகுறிகளே இல்லை எனும் நிலையில், இஸ்ரேலின் கூற்று முற்றிலும் முரணானதாக உள்ளது. இஸ்ரேலிடம் உள்ள அமெரிக்காவால் தயாரிக்கப்பட்ட போர் விமானங்கள், குறுகிய தொலைவிலிருந்து, சுட்டு வீழ்த்தப்படும் என்ற கவலை பெரிதளவில் இல்லாத, துல்லியமாக தாக்கவல்ல குண்டுகளை வீசும் திறன் படைத்ததாக உள்ளன. கடந்தாண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேல் இரானின் எஸ்300 ஏவுகணை கட்டமைப்பை தொலைதூர ஆயுதங்கள் மூலம் இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியது. இதில், இரான் வான் பாதுகாப்பு அமைப்பால் ஏற்படும் பெருமளவு அச்சுறுத்தல்கள் அழிக்கப்பட்டன. சமீப நாட்களாக இஸ்ரேலிய வான் படை, தரையில் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் ரேடார்கள் மற்றும் லாஞ்சர்களை (launchers) குறிவைத்து வருகிறது. தாக்குதல் தொடங்குவதற்கு முன்பாகவே, இரானின் பதில் தாக்குதல்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதற்கு தயாராகும் வகையில், இரானுக்குள் உளவுப் பிரிவினர் அனுப்பப்பட்டனர். இரானின் மீதமுள்ள வான் பாதுகாப்பு அமைப்பை குறிவைப்பதற்காக, இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட் முகவர்கள் அந்நாட்டுக்குள் டிரோன்களை கடத்திவந்து பயன்படுத்தினர். இரானின் உயர்மட்ட படைத் தளபதிகளும் இஸ்ரேலிய தாக்குதல்களில் கொல்லப்பட்டதன் மூலமும் இரானின் பதில் தாக்குதல்கள் மட்டுப்படுத்தப்பட்டன. இரானால் இப்போதும் மீண்டும் தாக்க முடியுமா? பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு, மத்திய கிழக்கில் மிகப்பெரிய ஏவுகணை கையிருப்பு இரானிடம் இருப்பதாக அமெரிக்கா கூறியது. இஸ்ரேல் தன் தாக்குதல்களை தொடங்குவதற்கு முன்பாகவே, மத்திய கிழக்கின் "மிகப்பெரிய பாலிஸ்டிக் ஏவுகணை" என அமெரிக்கா விவரிக்கும் ஏவுகணை அமைப்பு இரானிடம் இருந்தது. அதன் எண்ணிக்கை 2,000 முதல் 3000க்கு இடைப்பட்டதாக இருக்கும். அந்த ஏவுகணை அமைப்புகள் சிலவும் அவற்றை தயாரிக்கக்கூடிய ஆலைகளும் இஸ்ரேலால் ஏற்கெனவே தாக்கப்பட்டன. இரானின் தரைவழியே தாக்கி அழிக்கக்கூடிய, மூன்றில் ஒருபங்கு லாஞ்சர்களை தாங்கள் அழித்ததாக, இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் தெரிவித்துள்ளன. இருப்பினும், டெஹ்ரானால் இஸ்ரேல் மீது சரமாரியாக ஏவுகணைகளை வீச முடிந்தது, அவற்றில் சில இஸ்ரேலின் அதிநவீன வான் பாதுகாப்பு அமைப்பையும் ஊடுருவி தாக்கியது. தற்போது இரானின் தரைவழியிலான லாஞ்சர்களுள் மூன்றில் ஒருபங்கை அழித்தவிட்டதாக இஸ்ரேல் ராணுவம் கூறுகிறது. ஆனால், இரானின் ஏவுகணை அமைப்புகள் குறைக்கப்பட்டிருக்கலாம், ஆனால் அழிக்கப்படவில்லை. இது, இஸ்ரேலுக்கு மிகப்பெரும் நேரடியான அச்சுறுத்தலாக உள்ளது. இஸ்ரேலிய தாக்குதல்களையும் தாண்டி, இரானிடம் இன்னும் பல குறுகிய தூர வான் பாதுகாப்பு ஏவுகணைகள் உள்ளன. பாதுகாப்பு தொடர்பான சிந்தனை மையமான ருசி (Rusi) அமைப்பின் ஜஸ்டின் ப்ராங்க் கூறுகையில், டெஹ்ரானை விட தாங்கள் வான் பாதுகாப்பு அமைப்பில் ஆதிக்கம் செலுத்துவதாக இஸ்ரேல் கூறினாலும், அதை இன்னும் அந்நாடு அடையவில்லை. மேலும், இரானிடமிருந்து வரும் குறுகிய தூர ஏவுகணைகளால் இன்னும் அச்சுறுத்தல் உள்ளது. இரானுக்கு நட்பு நாடுகள் உள்ளதா? அவை என்ன செய்ய முடியும்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இரான் மீதான தாக்குதல்களுக்குப் பிறகு, திங்களன்று டெஹ்ரானில் உள்ள இஸ்லாமிய குடியரசு இரான் செய்தி நெட்வொர்க் அமைப்பால் பயன்படுத்தப்படும் ஒரு கட்டிடத்தை இஸ்ரேல் தாக்கியது. ராணுவ ஆலோசனைகள், ஆயுதங்கள் மற்றும் தொழில்நுட்பம் ரீதியாக, காஸாவில் ஹமாஸ் மீதும் லெபனானில் ஹெஸ்பொலா மீதும் இரான் பல ஆண்டுகளாக கவனம் செலுத்தியுள்ளது. ஆனால், கடந்த இரு ஆண்டுகளாக இஸ்ரேலிய நடவடிக்கையால், தன் எல்லைகளிலிருந்து இஸ்ரேலை அச்சுறுத்துவதற்கான அந்த அமைப்புகளின் திறன் பெருமளவில் குறைந்துள்ளது. காஸாவில் ஹமாஸ் பெருமளவில் அழிக்கப்பட்டுள்ளது, அதேபோன்று ஹெஸ்பொலாவின் பலம், தனக்கு நிதியுதவி வழங்கும் ஒரு நாட்டின் (இரான்) மீதான இஸ்ரேலிய தாக்குதலுக்கு எதிர்வினையாற்ற முடியாத அளவுக்கு குறைந்துள்ளது. ஏமனில் மிக தொலைவில் ஹூத்திகள் இருந்தபோதிலும், அவர்களால் அவ்வப்போது இஸ்ரேலின் மீது ஏவுகணைகளை வீச முடிந்தது. இந்தாண்டு தொடக்கத்தில் ஹூத்தி அமைப்பு, அமெரிக்காவின் குண்டுவீச்சிலிருந்து தப்பித்து, சில அமெரிக்க ரீப்பர் டிரோன்களை, குறுகிய தூர தரை மற்றும் கடல் வாயிலாக தாக்கக்கூடிய ஏவுகணைகள் மூலமாக சுட்டு வீழ்த்தியது. மற்ற நாடுகள் இதில் என்ன செய்ய முடியும்? இந்த பிராந்தியத்தில் மேற்கத்திய நாடுகளின் நலன்களை தாக்கும் திறன் இரானுக்கு உள்ளது. இராக்கில் இரானால் ஆதரிக்கப்படும் ஆயுதக் குழுக்கள், அப்பிராந்தியத்தில் மேற்கத்திய ராணுவ தளங்களை இலக்கு வைத்துள்ளன. அமெரிக்கா மற்றும் பிரிட்டன் மோசமான சூழல்களுக்கு தயாராகி வருகிறது. பாக்தாத்தில் அமெரிக்க ராணுவ துருப்புகளுடன் 100 பிரிட்டன் துருப்புகள் உள்ளன. அவர்களின் பாதுகாப்பு கருதியே, பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டாமர் சைப்ரஸுக்கு கூடுதலாக ஆர்ஏஎஃப் டைஃபூன் விமானங்களை அனுப்புவதற்கு சமீபத்தில் உத்தரவிட்டார். பஹ்ரைனில் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ராணுவத்தின் கடற்படையினரும் கப்பல்களும் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த போர் எந்தளவுக்கு செல்கிறதோ, அந்தளவுக்கு அப்பிராந்தியத்தில் உள்ள மேற்கத்திய படைகளுக்கு ஆபத்து அதிகரிக்கும். ஆனால், ஹோர்முஸ் நீரிணையில் (Straight of Hormuz) உள்ள உலகின் முக்கியமான கப்பல் போக்குவரத்து பாதையை தடுப்பதற்கான அல்லது செயலிழக்கச் செய்வதற்கான திறன் இரானிடம் உள்ளது. இந்த மோதலை விரிவாக்குவது இரானுக்கு விவேகமான யோசனையாக இருக்காது, ஆனால் அந்த முடிவை தேர்ந்தெடுத்தால் அந்நாட்டால் அதை செய்ய முடியும். இஸ்ரேலால் அதன் இலக்கை அடைய முடியுமா? பட மூலாதாரம்,GETTY IMAGES தற்போதைய சூழலில் இஸ்ரேலின் கை ஓங்கியுள்ளது, ஆனால் இந்த ராணுவ நடவடிக்கையை தொடர்வது, அமெரிக்க ஆதரவை சார்ந்தே பெரிதும் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவிடமிருந்து இஸ்ரேல் பில்லியன் கணக்கான டாலர்கள் மதிப்பில் ராணுவ உதவியை பெறுகிறது. அமெரிக்காவால் தயாரிக்கப்பட்ட ஜெட் விமானங்களிலிருந்து ஏவப்படும் ஆயுதங்கள் பலவும் அமெரிக்காவிலிருந்தே இஸ்ரேலுக்கு வந்துள்ளன. இஸ்ரேலின் அயர்ன் டோம் வான் பாதுகாப்பு அமைப்புக்கும் கூட இடைமறிக்கும் ஏவுகணைகள் சிலவும் அமெரிக்காவில் தான் தயாரிக்கப்பட்டவை. இரானின் நிலத்தடியில் அமைக்கப்பட்டுள்ள அணுசக்தி கட்டமைப்புகளை தாக்குவதற்காக இஸ்ரேல் பயன்படுத்தும் 'பதுங்குகுழிகளை தாக்கவல்ல வெடிகுண்டுகள்' பெரும்பாலும் அமெரிக்காவில் இருந்து பெறப்பட்டவை. அவற்றை பயன்படுத்துவதற்கு ஆதரவாக உள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இரானின் அதி உயர் தலைவர் அலி காமனேயியை கொல்வதற்கான இஸ்ரேலின் திட்டங்களை நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோன்று, இரானின் ஃபோர்டோவில் உள்ள நிலத்தடி அணுசக்தி வளாகத்துக்குள் ஊடுருவத் தேவைப்படும் ஒரே ஆயுதமான 13,600 கிலோ பெரியளவிலான வெடிகுண்டை (Massive Ordnance Penetrator) இஸ்ரேல் அணுக அமெரிக்கா அனுமதிக்கவில்லை, இதையும் அமெரிக்க B2 மூலோபாய குண்டுவீச்சு விமானங்களால் (US B2 strategic bombers) மட்டுமே வழங்க முடியும். அமெரிக்க ராணுவ ஆதரவு தொடர்ந்தாலும் இஸ்ரேலுக்கு சில வரம்புகள் இருக்கும். இஸ்ரேலின் விமானப் படையின் பலம், இரானின் அணுசக்தி திட்டத்தை பின்னுக்குத் தள்ளக்கூடும், ஆனால் அது அதை அழிக்காது. இரானிய ஆட்சியைக் கவிழ்க்கும் இஸ்ரேலின் நம்பிக்கை மிகவும் சாத்தியமற்றதாகத் தெரிகிறது. விமானத் தாக்குதல்கள் பயத்தையும் குழப்பத்தையும் சேதங்களையும் உருவாக்கக்கூடும். ஆனால், 2011ம் ஆண்டில் லிபியாவைப் பற்றியோ அல்லது காஸா மீதான இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதலையோ நினைத்துப் பாருங்கள், அவை அரிதாகவே தெளிவான வெற்றியை அளிக்கின்றன. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cx23ednw7j1o
Checked
Thu, 09/25/2025 - 00:07
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed