3 months ago
வாழ்த்துக்கள்
3 months ago
3 months ago
இந்தியாவில் கடினமான டெஸ்ட் தொடரை சந்திக்கவுள்ள உலக டெஸ்ட் சம்பியன் தென் ஆபிரிக்கா Published By: Vishnu 13 Nov, 2025 | 07:51 PM (நெவில் அன்தனி) இந்தியாவுக்கும் தென் ஆபிரிக்காவுக்கும் இடையிலான 2 போட்டிகள் கொண்ட சுதந்திரக் கிண்ணத்துக்கான இருதரப்பு டெஸ்ட் தொடரும், உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரும் கொல்கத்தா ஈடன் கார்ட்ன்ஸ் விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (14) ஆரம்பமாகவுள்ளது. இந்தியாவில் மிகவும் கடினமான தொடர் தென் ஆபிரிக்காவுக்கு காத்திருக்கிறது என்று கூறினால் அது தவறாகாது. கடந்த 10 வருடங்களில் இந்தியாவுக்கு இரண்டு தடவை டெஸ்ட் கிரிக்கெட் விஜயம் செய்த தென் ஆபிரிக்கா, அந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் படுதோல்விகளை சந்தித்தது. 2015இல் நடைபெற்ற 4 போட்டிகள் கொண்ட தொடரில் 0 - 3 என இளம் வீரர்களைக் கொண்ட இந்தியாவிடம் தென் ஆபிரிக்கா தோல்வி அடைந்தது. அந்த தொடரில் 2ஆவது டெஸ்ட் போட்டி மழையினால் கழுவப்பட்டது. அந்த சந்தர்ப்பத்தில் எதிர்கால டெஸ்ட் அணியைக் கட்டி எழுப்பும் குறிக்கோளுடன் இளம் வீரர்களை இந்தியா களம் இறக்கி அதில் வெற்றியும் கண்டது. தொடர்ந்து 2019இல் உப கண்டத்துக்கு பயணித்த தென் ஆபிரிக்கா, அனுபவம் வாய்ந்த வீரர்களைக் கொண்ட இந்தியாவிடம் 0 - 3 என தோல்வி அடைந்தது. எவ்வாறாயினும் நடப்பு உலக டெஸ்ட் சம்பியன் தென் ஆபிரிக்கா, இம்முறை அனுப வசாலிகளுடன இந்தியாவை எதிர்கொள்ளவுள்ளது. இந்தியா இந்த வருடம் விளையாடிய 8 டெஸ்ட் போட்டிகளில் 4 வெற்றிகள், 3 தோல்விகள், ஒரு வெற்றி தோல்வியற்ற முடிவு என்ற பெறுபேறுகளைக் கொண்டுள்ளது. மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக கடந்த மாதம் நடைபெற்ற இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2 - 0 என்ற ஆட்டங்கள் கணக்கில் முழுமையாக வெற்றியீட்டிய இந்தியா, நாளை ஆரம்பமாகவுள்ள தென் ஆபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வெற்றி பெற முயற்சிக்கும். இந்தத் தொடர் இரண்டு அணிகளினதும் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு இடையிலான போட்டியாக அமையலாம் என எதிர்வுகூறப்படுகிறது. ஆனால், இந்தியா தனது சொந்த மண்ணில் சுழல்பந்துவீச்சாளர்களைக் கொண்டு பல சந்தர்ப்பங்களில் வெற்றியீட்டியதை மறந்துவிடலாகாது. தென் ஆபிரிக்கா இந்த வருடம் விளையாடிய 6 போட்டிகளில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டி உட்பட 5இல் வெற்றிபெற்றிருந்தது. பாகிஸ்தானுக்கு எதிராக கடந்த மாதம் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆபிரிக்கா தோல்வி அடைந்திருந்தது, தென் ஆபிரிக்கா 1989ஆம் ஆண்டிலிருந்து டெஸ்ட் கிரிக்கெட் விளையாடி வருகின்றபோதிலும் இந்தியாவுக்கு எதிராக 1992இலிருந்தே டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. அதற்கு முன்னர் இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து ஆகிய நாடுகளுடன் மாத்திரம் தென் ஆபிரிக்கா விளையாடி இருந்தது. இன ஒடுக்கல் காரணமாக 1970இலிருந்து 1991வரை தென் ஆபிரிக்காவுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. 1991இல் தடை நீக்கப்பட்ட பின்னரே மற்றைய நாடுகளுடன் டெஸ்ட் விளையாட்டில் தென் ஆபிரிக்கா ஈடுபட ஆரம்பித்தது. இந்தியாவுக்கும் தென் ஆபிரிக்காவுக்கும் இடையில் இதுவரை நடைபெற்றுள்ள 44 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் தென் ஆபிரிக்கா 18 - 16 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறது. 10 போட்டிகள் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தன. அணிகள் இந்தியா: ஷுப்மான் கில் (தலைவர்), ரிஷாப் பான்ட் (உப தலைவர்), ஆகாஷ் தீப், ஜஸ்ப்ரிட் பும்ரா, ரவிந்த்ர ஜடேஜா, யஷஸ்வி ஜய்ஸ்வால், த்ருவ் ஜுரெல், குல்தீப் யாதவ், மொஹம்மத் சிராஜ், தேவ்டத் படிக்கல், அக்சார் படிக்கல், கே. எல். ராகுல், சாய் சுதர்ஷன், வொஷிங்டன் சுந்தர். தென் ஆபிரிக்கா: டெம்பா பவுமா (தலைவர்), கோபின் பொஷ், டிவோல்ட் ப்ரவிஸ், டோனி டி ஸோர்ஸி, சைமன் ஹாமர், மாக்கோ ஜென்சன், கேஷவ் மஹாராஜ், ஏய்டன் மார்க்ராம், வியான் முல்டர், சேனுரன் முத்துசாமி, கெகிசோ ரபடா, ரெயான் ரிக்ள்டன், ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ், கய்ல் வெரின், ஸுபய்ர் ஹம்ஸா. https://www.virakesari.lk/article/230282
3 months ago
14 Nov, 2025 | 04:59 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) பிரஜா சக்தி வறுமை ஒழிப்பு தேசிய இயக்கம் தொடர்பாக ஜனாதிபதி அலுவலகம் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை மூலம் பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி சபை பிரதிநிதிகள் கொண்டுள்ள பொறுப்புகள் ,சேவைகளை ஒரு கட்சியின் அரசியல் பிரிவினருக்கு மாற்றுவதற்கான நுட்பமான நிகழ்ச்சித்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதுடன் ,இதுவரை பரவலாக்கப்பட்ட முறையில் செயல்பட்ட மாகாண சபைகள், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கள், பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கள், பிரஜா அபிவிருத்தி சபையின் செயற்பாட்டுக்கு அடிபணியச் செய்யும் ஏற்பாடுகளை உள்ளடக்கியுள்ளதாக பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க்கட்சிகள் கடும் விசனம் வெளியிட்டுள்ளதுடன் இதனை உடனடியாக வாபஸ் பெறுமாறும் வலியுறுத்தியுள்ளன. இது தொடர்பில் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் வெள்ளிக்கிழமை (14) பாராளுமன்ற குழு அறையில் கலந்துரையாடி வெளியிட்ட அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பிரஜா சக்தி வறுமை ஒழிப்பு தேசிய இயக்கத்தை செயற்படுத்துவது தொடர்பாக ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை தொடர்பில் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் கவனம் ஈர்க்கப்பட்டுள்ளது. பிரஜா சக்தி வறுமை ஒழிப்பு தேசிய இயக்கம் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையை ஆழமாக ஆராயும்போது அதில் எழும் பல பிரச்சினைகளை அடையாளம் காண முடியும். இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் முயற்சிக்கப்படுவது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ்மட்ட கட்சி பொறிமுறைக்கு அதிகாரபூர்வ அங்கீகாரத்தை வழங்குவதாகும். அதன் மூலம் பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி சபை பிரதிநிதிகள் கொண்டுள்ள பொறுப்புகள் மற்றும் சேவைகளை ஒரு கட்சியின் அரசியல் பிரிவினருக்கு மாற்றுவதற்கான நுட்பமான நிகழ்ச்சித்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. அந்த சுற்றறிக்கையில் பிரஜா அபிவிருத்தி சபையை நிறுவுவது தொடர்பாக வழங்கப்பட்டுள்ள ஏற்பாடுகளை ஆராயும்போது அதை தெளிவாக அடையாளம் காண முடியும். "பிரஜா அபிவிருத்தி சபையின் தலைவர் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக அல்லது அவரால் நியமிக்கப்படும் பிரதிநிதியாக இருக்க வேண்டும்." பிரஜா அபிவிருத்தி சபையின் பிரதிநிதிகள் நியமிக்கப்படுவதும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவிற்காக நியமிக்கப்பட்ட ஒரு ஏற்பாட்டாளர் மூலமாகும். இந்த ஏற்பாட்டாளர் மற்றும் நியமிக்கப்படும் பிரதிநிதிகள் அனைவரும் கீழ்மட்ட மக்கள் விடுதலை முன்னணி செயற்பாட்டாளர்களாக இருப்பதை தடுக்க முடியாது. அந்த சுற்றறிக்கையின் 5ஆவது பந்தியில் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தொடர்பாக முன்மொழியப்பட்ட திருத்தங்கள் மிகவும் கடுமையானவை. அதன்படி தற்போது செயற்படுத்தப்படும் ஒருங்கிணைப்புக் குழு பொறிமுறை மறுசீரமைக்கப்படும், மேலும் அந்தக் குழுக்கள் பிரஜா சக்தி தேசிய இயக்கத்தில் செயற்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது தெளிவாக பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கள் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களின் மூலம் செயற்படும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சி பிரதிநிதிகளின் பொறுப்புகளை, பொறுப்புக்கூறலை பொதுமக்கள் பிரதிநிதிகளிடமிருந்து பறிப்பதாகும். அந்த சுற்றறிக்கையின் 6ஆவது பந்தியில் அமைச்சுகள் மற்றும் மாகாண சபைகளுக்கு வரவுசெலவுத் திட்டத்தின் மூலம் அபிவிருத்திக்காக ஒதுக்கப்படும் நிதியை திட்டங்களுக்கு ஒதுக்குவது மற்றும் முன்மொழிவதற்கான முக்கிய அங்கமாக பிரஜா சக்தி குழு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சுற்றறிக்கையின் 7ஆவது பந்தியின் 7.4, 7.5 மற்றும் 7.6 பிரிவுகளின்படி பிரஜா சக்தி குழுவால் செயற்படுத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்ட பணிகளை கருத்தில் கொள்ளும்போது, மக்கள் வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சி பிரதிநிதிகள் இனி பிரஜா அபிவிருத்தி செயல்முறையில் பொறுப்பு வாய்ந்த நபர்களாக இல்லாத நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அந்த பிரிவின்படி வறுமை ஒழிப்புக்கான திட்டங்களை திட்டமிடல், செயல்படுத்தல் மற்றும் மேற்பார்வை ஆகியவை பிரஜா சக்தி குழுவிடம் ஒப்படைக்கப்படுகின்றன. அதேபோல் நலன்புரி திட்டங்கள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் அதிகாரமளித்தல் திட்டங்களை செயற்படுத்துதல் மற்றும் மக்களுக்கு பொறுப்புடைய நிறுவன கட்டமைப்பை ஏற்படுத்துதல் ஆகியவை பிரஜா சக்தி குழுவிடம் ஒப்படைக்கப்படுகின்றன. மேலும் திட்டங்களை செயற்படுத்துவதற்கு அனைத்து அமைச்சுகள், மாகாண சபைகள், அரசாங்க நிறுவனங்களை ஒருங்கிணைத்தல் மற்றும் அதற்கு தேவையான வகையில் அமைச்சுகள், மாகாண சபைகள் மற்றும் அரசாங்க நிறுவனங்களை ஒருங்கிணைத்தல் மற்றும் அதற்கு தேவையான வகையில் அரசாங்க திணைக்களங்கள், நிறுவனங்கள் மற்றும் மாகாண தலைவர்கள் குழுக்களை அழைப்பதற்கும் பிரஜா சக்தி செயற்பாட்டுக் குழுவிற்கு வாய்ப்பு உள்ளது. இதுவரை பரவலாக்கப்பட்ட முறையில் செயல்பட்ட மாகாண சபைகள், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கள், பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கள், பிரஜா அபிவிருத்தி சபையின் செயற்பாட்டுக்கு அடிபணியச் செய்யும் ஏற்பாடுகளை வழங்கியுள்ள சுற்றறிக்கையின் 10வது பிரிவில் காட்டப்பட்டுள்ளது பிரஜா அபிவிருத்தி சபைகள் பிரிவுகள் மட்டத்தில் தரவு மற்றும் தகவல் முறைமையைத் தயாரித்து அதை இற்றைவரைப்படுத்தி பராமரித்தல் செய்யப்பட வேண்டும், அதன் மூலம் பிரிவின் பொருளாதார, சமூக, ஒழுக்க நெறிமுறை, சுற்றாடல் பிரச்சினைகளை அடையாளம் காண வேண்டும். பொருத்தமான திட்டங்களை முன்னுரிமை அடிப்படையில் அடையாளம் காணல் மற்றும் ஒருங்கிணைந்த கிராம அபிவிருத்தி திட்டத்தை தயாரித்தல் பிரஜா அபிவிருத்தி சபையால் செய்யப்பட வேண்டும். இது மிகவும் கடுமையான நிலைமை. அரசியலமைப்பின் மூலம் நிறுவப்பட்ட அரசியலமைப்புரீதியான பொது பிரதிநிதித்துவ சபைகள் மற்றும் நியதிச்சட்ட அரசாங்க சேவைகளை அடக்கி, ஒரு அரசியல் கட்சியால் உருவாக்கப்படும் பொறிமுறைக்கு நாட்டின் அபிவிருத்தியை அடிபணியச் செய்வது ஒருதலைப்பட்ச அரசியல் ஆட்சிக்கு அடித்தளம் அமைக்கும் முயற்சியாகும். இது பலகட்சி சனநாயகத்திற்கு எதிரான மரண அடியாகும். பிரஜா சக்தி வறுமை ஒழிப்பு தேசிய இயக்கம் தொடர்பாக வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின் மேலோட்டமான பகுப்பாய்வை அல்ல, அடிமட்டத்தில் உள்ள அபாயத்தை நாம் அடையாளம் காண வேண்டும். எனவே, இந்த சுற்றறிக்கை மற்றும் நிகழ்ச்சித்திட்டம் உடனடியாக திரும்பப் பெறப்பட வேண்டும் என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்துகின்றனர். https://www.virakesari.lk/article/230356
3 months ago
14 Nov, 2025 | 03:51 PM (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) எவ்வித பரிசோனயின்றி விடுவிக்கப்பட சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்களுக்குள்ளும் ஆயுதங்களே இருந்தன என்பதை மீண்டும் நான் பொறுப்புடன் கூறுகின்றேன் .அது தொடர்பான முக்கிய ஆவணங்கள் எனக்கு கிடைத்துள்ளன.குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கோ அல்லது இன்டபோலுக்கு இந்த விடயத்தைக் கொண்டு சென்று விசாரியுங்கள் நான் பதிலளிக்கின்றேன் என யாழ் மாவட்ட சுயேச்சைக் குழு பாராளுமன்ற உறுப்பினரான அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (14) நடைபெற்ற அமர்வின் போது ஒழுங்குப்பிரச்சினை ஒன்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்கள் தொடர்பில் கூறும் போது எனது பெயர் அடிக்கடி பயன்படுத்தப்படுகின்றது. அவை எனது வீட்டில் இருப்பது போன்றுதான் ''அர்ச்சுனாவின் கொள்கலன்கள்'' என்று குறிப்பிடுகிறார்கள்.இதனால் இது தொடர்பில் எனக்கு இங்கே சில விடயங்களை கூற வேண்டியுள்ளது. உண்மையில் இந்த கொள்கலன்கள் பிமல் ரத்நாயக்க துறைமுக அமைச்சராக இருக்கும் போது விடுவிக்கப்பட்ட கொள்கலன்களே. நான் இந்த சபையில் கூறிய விடயங்கள் தொடர்பில் சி.ஐ.டி.க்கு அழைக்கப்பட்டு நான் விசாரணைக்கு ட்படுத்தப்பட்டேன். இதேவேளை நான் ஒருமாத காலமாக ஐரோப்பிய பயணமொன்று சென்றிருந்தேன். அப்போது 323 கொள்கலன்களில் ஆயுதங்கள் இருந்ததாக எனக்கு முக்கிய ஆவணங்கள் கிடைத்துள்ளன. இப்போதும் நான் பொறுப்புடன் கூறுகின்றேன். விடுவிக்கப்ட்ட அந்த சர்ச்சைக்குரிய கொள்கலன்களுக்குள் ஆயுதங்களே இருந்தன. வேண்டுமென்றால் என்னை குற்றப்புலனாய்வு பிரிவுக்கு மட்டுமல்ல இன்டபோலுக்கு கொண்டுசென்றாவது கேளுங்கள். நான் பதிலளிக்கின்றேன். அது தொடர்பில் குழுவொன்றை அமையுங்கள். பயமின்றி கூறுகின்றேன். அதில் ஆயுதங்களே இருந்தன என்றார். https://www.virakesari.lk/article/230342
3 months ago
இன்றைய வானிலை 15 Nov, 2025 | 06:32 AM இலங்கைக்கு கிழக்காக வளிமண்டலத்தின் தாழ் மட்டத்தில் தளம்பல் நிலை தொடர்ந்தும் நிலைகொண்டுள்ளது. இதன் காரணமாக வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில் 100 mm வரையிலான பலத்த மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பிராந்தியங்களின் பல இடங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். ஊவா மாகாணத்திலும் அத்துடன் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் காலை வேளையிலும் மழை பெய்யக்கூடும். மத்திய, சப்ரகமுவ, மேல், தென் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் 75 mm இலும் கூடிய ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும். வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் வானம் முகில் செறிந்து காணப்படும். மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் தென் மாகாணங்களின் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனி மூட்டம் காணப்படும். பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொது மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 20 - 30 km வேகத்தில் வடகிழக்குத் திசையில் இருந்து காற்று வீசும். திருகோணமலை தொடக்கம் காங்கேசன்துறை, மன்னார் ஊடாக புத்தளம் வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 40 km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும். நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்கள் இடைக்கிடையே ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும். காலி தொடக்கம் மாத்தறை, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் கடல் அலையானது சுமார் 2.0 - 2.5 m உயரத்திற்கு மேலெளக்கூடும். இது தரைப் பிரதேசத்திற்கு தாக்கத்தை ஏற்படுத்தாது. இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும். https://www.virakesari.lk/article/230394
3 months ago
சவ்வு மிட்டாய் தும்பு மிட்டாய் அப்பளம் என்று சிறுவயதில் வாங்கி சாப்பிட்டோம். இதிலே தும்பு மிட்டாய் இப்போதும் எனக்கு விருப்பம். சவ்வு மிட்டாய் வெறும் கையால் இழுத்து அழைகிறபடியால் இப்போ கஸ்டம்.
3 months ago
நல்ல பாயிண்ட்....இது நமக்கு காணும்...
3 months ago
நன்றாக இருக்கிறது ...இந்த விற்பனை கதாநாயகர்கள் ....நம்மூரில் வேறு தோற்றமும் ..அன்பு மொழியும் ...அவர்கள் நினைவை ...மீட்க வைத்ததிற்கு நன்றி
3 months ago
ஆதாரம் கேட்டிருக்கிறியள் மானஸ்தன்…தந்து போட்டுத்தான் மறுவேலை பார்ப்பார்.😂. 1987 நேரம் மூக்கு வழிச்சுகொண்டு இருந்த சிறுவனான என்னை UTHR இல் இருந்தவர் என ஒரு புஸ்வாணத்தை இப்படித்தான் முன்பு ஒருதரம் போட்டவர், ஆதாரம் கேட்டதும் இதே போலத்தான் ஒரு மழுப்பல் மழுப்பி விட்டு மாசக்கணக்கில் ஆள் எஸ்.
3 months ago
நான் இணைப்பதை ஓரு சிலரவாது பார்க்கிறீர்களே என்று சந்தோசம் சுவியண்ண..🤭
3 months ago
'சிங்காரச்சுவரில் காதலை நாம் எழுதுவோம்!' சிங்கப் பாறையின் நிழலில் நிற்கிறேன் சித்த மெல்லாம் எனக்கு உன்பெயரே! கண்ணாடிச் சுவர்களைத் தொடும் போது கண்ணே உன்ஞாபகம் என்னை வாட்டுதே! குன்றில் வரைந்த தங்கநிற மங்கையே குட்டி அரவணைப்பு தாராயோ நிழலில்! தீட்டிய சிற்பத்தில் உன்னைக் கண்டேன் தீராத மோகத்தில் அவளைத் தொட்டேன்! சிகிரியாவின் தென்றல் காதலைச் சுமக்கிறது சிறகடித்து வந்து இதயத்தை அணைக்கிறது! சிங்கப்பாறை பற்றி தொல்லியலாளர் எழுதட்டும் சிங்காரச்சுவரில் காதலை நாம் எழுதுவோம்! ["[1] சிங்கப் பாறை" - சிகிரியா குன்று [2] சிகிரியா சுவரோவியங்கள் — மஞ்சள், செம்மஞ்சள் நிறங்களில் தீட்டப்பட்ட வானுலகப் பெண்கள் / தங்கநிற மங்கை [3] ‘மிரர் வால் / mirror wall’ - கண்ணாடி சுவர் அல்லது சிங்காரச் சுவர். அதில் காணப்படும் கல்வெட்டுகள் தோராயமாக கி.பி 8 முதல் 10 ஆம் நூற்றாண்டு வரையிலானவை ஆகும். [4] உதாரணத்துக்கு ஒன்று: “தங்க நிற மங்கையரை கண்டவன், தன் இதயத்தில் ஒளிர்கிறான் — வானில் சூரியன் ஒளிர்வது போல்.”] [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] துளி/DROP: 1899 ['சிங்காரச்சுவரில் காதலை நாம் எழுதுவோம்!'] https://www.facebook.com/groups/978753388866632/posts/32373298478985380/?
3 months ago
இஸ்திரேல் ஈரான் சண்டை நேரம் ஒரு திரியில் ஈரான் பல பயங்கரவாத அமைகளுக்கு உதவுகிறது ...... இஸ்ரேல் அப்படி ஏதாவது ஒரு பயங்கரவாத அமைப்புக்கு உதவுகிறதா? என்று கேட்டு எழுதி இருந்தீர்கள். அது ஒரு விரண்டாவதா திரியாக சென்றுகொண்டு இருந்தது அதனால் அதில் எதையும் எழுதி பிரயோசனம் இல்லை என்று விட்டு கடந்து சென்றேன். அதுக்காக இனி நேரம் செலவிட்டு தேடி எடுத்து போட்டும் என்ன ஆக போகிறது? நான் எழுதியதை பொய் குற்றசாடடக கருதி மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். இருவருக்கும் நேரம் மிகுதி. உங்கள் பல கருத்துக்களை வாசித்து சில தகவல்களை அறிந்து இருக்கிறேன். முட்டு கொடுப்பது என்றுவந்தால் இவர் கூட இப்படி எழுதுகிறார் என்று வாசிக்கும்போது நினைத்தேன்
3 months ago
என்ன மருதங்கேணியாரே, நான் தான் கிடைத்தேனா..................... அப்படி நான் எழுதியதை எடுத்துப் போடுவது தானே.................. நாங்களும் கொஞ்சம் சிரிப்போம் அல்லவா........... நான் விளையாடுவது அதிகம் தான்........... ஆனாலும் பின்னம் தலையில் அடிபட்டு நடுவில கொஞ்ச பக்கம் இன்னும் காணாமல் போகல்ல..................🤣.
3 months ago
முன்பு ஒரு திரியில் ( ஈரானில் குண்டுவீச்சு என்று நினைக்கிறன்) ரசோதரன் ஈரான் பல பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு வைத்திருக்கிறது அப்படி மேற்கு நாடுகள் ஏதாவது ஒரு பயங்கரவாத அமைப்புடன் தொடர்புகள் வைத்திருக்கிறார்களா? என்று மேற்கிற்கு முண்டு கொடுத்து இருந்தார் நான் வாசித்து சிரித்துவிட்டு போனேன். மேற்கு இல்லையென்றால் உலகில் பயங்கரவாதமே இல்லை அல்கைதா முதல் கொண்டு ஐஸ்ஸ் வரை உருவாக்கி வளர்த்து எடுத்து முஸ்லீம் நாடுகளில் போரை உண்டுபண்ணி முஸ்லிம்களை கொலை செய்வதே இவர்கள் வேலை. சிரிய போர் தொடங்கியபோது அப்போதைய செனட்டர் மக் கெய்யின் ( Mc Cain) தலைமையில் இவர்களை துருக்கியில் சந்தித்து அந்த புகைப்படங்கள் வெளியாகி இருந்த்தது அதில் இவரும் இருக்கிறார். ஐஸ்ஸ் வைத்திருந்த அனைத்து டொயட்டா தந்த்ரா ( Toyota Tundra + Tacoma ) பிக்கப் வாகனங்களும் அமெரிக்காவில் இருந்து போனவை சிரியாவில் மூன்று குழுக்களாக போரிடடார்கள் மூன்றுக்குமே சப்பாத்து முதல்கொண்டு முழு ஆயுதமும் கொடுத்தது இஸ்ரேலும் அமெரிக்காவும். நித்தன்யாஹுவிற்கும் ஜூதர்களுக்கும் எப்படி எந்த தொடர்பும் இல்லையோ அதுபோல இவர்க்ளுக்கும் இஸ்லாமியர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை இவர்கள் அனைவரும் சிறுவயதிலேயே மொசாட்டினால் பயிறுவித்து அனுப்ப படடவர்கள். தற்போதைய ஆப்கானிஸ்தான் தலிபான் தலைவர் 2017 இல் டிரம்ப் பின்னால் சிறையில் இருந்து விடுவிக்க பட்டு ஆப்கானிஸ்தான் சென்றவர். இது ஒரு டெக்சாஸ் ( Texas) மாநில ப்ளும்பேர் ( Plumper) ஒரு கார் முகவரிடம் விற்ற பிக்கப் இவை அனைத்தும் அமெரிக்க சான் அந்தோனியோ ( San Antonio) எனும் இடத்தில அசெம்பிளி செய்யபடவை (எல்லாவற்றுக்கும் VN number CarFax history உண்டு )
3 months ago
பிரான்ஸுக்கு ஏற்றுமதி செய்தால் ஈரோவிலும் சம்பாதிக்கலாம்! நான் பாரிஸுக்குப் போனால் பிரெஞ்சு ரெஸ்ரோரண்டில் நத்தை சாப்பிடுவதுண்டு! அப்புறம் லாசப்பல் போனால் எவர்சில்வர் கப்பில் தேத்தண்ணியும், ஒரு வடையும் சாப்பிடுவதும் உண்டு🤪
3 months ago
அவர்கள் எப்போதும் அப்படித்தான். ஏனையோர் ஒத்து ஓடுகிறார்களா, பாத்து ஓடுகிறார்களா, குறுக்கால ஓடுகிறார்களா என்பதை பொறுத்து அவர்களின் தலைவிதி தீர்மானிக்கப்படும்.
3 months ago
3 months ago
ஆஹா நல்ல கதை . ........ இவர்போல மேலும் சிலர் தும்பு மிட்டாஸ் விற்பவர் ஐஸ்கிரீம் விற்பவர் தள்ளு வண்டியில் முறுக்கு , கடலை மற்றும் வண்ண வண்ணமான நொறுக்குத் தீனிகள் விற்பவர்கள் என்று . .......! 😂 சே . ...யாயினி இன்னும் குழந்தைதான் . .......!
3 months ago
2026 வரவு – செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு - 118 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம் Published By: Vishnu 14 Nov, 2025 | 07:15 PM தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சமர்ப்பித்த 2026 ஆம் ஆண்டுக்கான வரவு–செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 14ஆம் திகதி வெள்ளிக்கிழமை (14 ) பாராளுமன்றத்தில் 118 மேலதிக வாக்குகள் வித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்டது. வாக்கெடுப்பில் 160 உறுப்பினர்கள் ஆதரவாகவும், 42 பேர் எதிராகவும் வாக்களித்தனர். மேலும் 8 பேர் வாக்களிப்பில் கலந்து கொள்ளாமல் விலகி நின்றனர். ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியின் பங்காளிக் கட்சியான தமிழ் முற்போக்கு கூட்டணியின் மனோ கணேசன், திகாம்பரம், இராதாகிருஸ்ணன் ஆகியோர் வரவு–செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். அதேபோன்று, ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமானும் ஆதரவு வாக்கை பதிவுசெய்தார். இந்நிலையில், இலங்கை தமிழரசு கட்சியினர் இன்றைய இரண்டாம் வாசிப்பு வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நிதியமைச்சர் பதவியிலும் உள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்கள் கடந்த 7 ஆம் திகதி முன்வைத்த வரவு–செலவுத் திட்டம் குறித்து தொடர்ச்சியான விவாதங்கள் நடைபெற்றதைத் தொடர்ந்து, இன்று சற்று முன் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இந்த நடைமுறையுடன் தேசிய மக்கள் அரசாங்கத்தின் இரண்டாவது வரவு–செலவுத் திட்டமும் வெற்றிகரமாக நிறைவேறியுள்ளது. https://www.virakesari.lk/article/230386
Checked
Tue, 02/17/2026 - 03:47
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed