2 months 4 weeks ago
கடன் பாக்கி வைக்காதீர். காரணம்.... 👆
2 months 4 weeks ago
ஏ.ஐ துறையில் இது நடந்தால் 'எந்த நிறுவனமும் தப்பிக்காது' - சுந்தர் பிச்சை எச்சரிக்கை கட்டுரை தகவல் ஃபைசல் இஸ்லாம் பொருளாதார ஆசிரியர் ரேச்சல் க்ளன் வணிக செய்தியாளர் 18 நவம்பர் 2025, 12:15 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் செயற்கை நுண்ணறிவுக்காக்கான மவுசு குறைந்தால் ஒவ்வொரு நிறுவனமும் பாதிக்கப்படும் என்று கூகுளின் தாய் நிறுவனமான ஆல்ஃபபெட்டின் தலைவர் சுந்தர் பிச்சை பிபிசியிடம் தெரிவித்துள்ளார். பிபிசி நியூஸிடம் பிரத்யேகமாக பேசிய சுந்தர் பிச்சை, செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) முதலீட்டின் வளர்ச்சி ஒரு "அசாதாரண தருணம்" என்றாலும், தற்போது அதில் சில "பகுத்தறிவற்ற தன்மை" உள்ளது என்றார். சமீபத்திய மாதங்களில் ஏ.ஐ தொழில்நுட்ப நிறுவனங்களின் மதிப்பு உயர்ந்துள்ளதால் சிலிக்கான் பள்ளத்தாக்கு மற்றும் அதற்கு அப்பால் இது பற்றிய அச்சங்கள் நிலவி வருகின்றன. மேலும் நிறுவனங்கள் வளர்ந்து வரும் இந்த தொழில்துறையில் பெரிய அளவில் செலவு செய்கின்றன. செயற்கை நுண்ணறிவு மவுசு சரிந்தால் ஏற்படும் தாக்கத்திலிருந்து கூகுள் தப்பித்துக் கொள்ளக்கூடுமா என்று கேட்டதற்கு, அந்த பிரச்னையை கூகுள் சமாளிக்க முடியும் என்று சுந்தர் பிச்சை கூறினார். ஆனால் ஒரு எச்சரிக்கையையும் வெளியிட்டார். "நாங்கள் உட்பட எந்த நிறுவனமும் அதிலிருந்து தப்பிக்க முடியாது என்று நான் நினைக்கிறேன்," என்று அவர் கூறினார். கூகுளின் கலிபோர்னியா தலைமையகத்தில் ஒரு விரிவான பிரத்யேக நேர்காணலில், அவர் எரிசக்தி தேவைகள், காலநிலை இலக்குகளை அடைவதில் தாமதம், பிரிட்டனில் முதலீடு, அவரது ஏ.ஐ மாதிரிகளின் துல்லியம் மற்றும் வேலைகளில் ஏ.ஐ புரட்சியின் தாக்கம் ஆகியவற்றை குறித்தும் பேசினார். செயற்கை நுண்ணறிவு (AI) சந்தையின் நிலை குறித்து முன்பைவிட மிக அதிகமாக தீவிரமான ஆய்வு இருக்கும் நேரத்தில் இந்த நேர்காணல் வந்துள்ளது. பட மூலாதாரம், Getty Images போட்டி யாருடன்? ஆல்ஃபபெட் பங்குகளின் மதிப்பு ஏழு மாதங்களில் இரட்டிப்பாகி 3.5 ட்ரில்லியன் டாலராக உயர்ந்துள்ளன. இதற்கு காரணம், கூகுள் நிறுவனத்துக்கு ChatGPT-ஐ உருவாக்கிய OpenAI உடனான போட்டியை சமாளிக்கும் திறன் அதிகம் உள்ளது என்று சந்தையில் நம்பிக்கை இருப்பதுதான். அல்பபெட் நிறுவனம் உருவாக்கி வரும் ஏ.ஐக்கான சிறப்பு சூப்பர் சிப்கள் மீது தற்போது அதிக கவனம் செலுத்தப்படுகிறது. இந்த சிப்கள், சமீபத்தில் உலகில் முதல்முறையாக $5 டிரில்லியன் மதிப்பை எட்டிய, என்வீடியா நிறுவனத்துடன் போட்டியிடுகின்றன. மதிப்பீடுகள் அதிகரித்து வரும் நிலையில், சில ஆய்வாளர்கள் OpenAI-ஐ சுற்றியுள்ள சிக்கலான 1.4 டிரில்லியன் டாலர் மதிப்புள்ள ஒப்பந்தங்கள் குறித்து சந்தேகம் தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டு OpenAI- யின் வருமானம் மிகக்குறைவாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது முதலீட்டில் ஆயிரத்தில் ஒரு பங்கிற்கும் குறைவான வருவாயைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பட மூலாதாரம், Getty Images டாட்காம் ஏற்றத்தின் போது, 2000 -ஆம் ஆண்டில் அந்த சந்தை வீழ்ச்சியடைவதற்கு முன்பே, 1996-ஆம் ஆண்டில் அமெரிக்க மத்திய வங்கித் தலைவர் ஆலன் கிரீன்ஸ்பான் சந்தையில் நிலவிய "பகுத்தறிவற்ற உற்சாகம்" குறித்து எச்சரித்தார். அதே கருத்துக்களை எதிரொலிக்கும் தொனியில் பேசிய சுந்தர் பிச்சை, இது போன்ற முதலீட்டு சுழற்சிகளில் தொழில்துறை "மிகையாக முதலீடு செய்யக்கூடும்'' என்று கூறினார். "நாம் இப்போது இணையத்தை திரும்பிப் பார்க்கலாம். நிறைய அதிகப்படியான முதலீடு (அப்போது) இருந்தது, ஆனால் இணையம் ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்து யாருக்கும் சந்தேகங்கள் இல்லை," என்று அவர் கூறினார். "ஏ.ஐயும் அதே மாதிரியாக இருக்கும் என்று நான் எதிர்பார்க்கிறேன். எனவே இது பகுத்தறிவு மற்றும் இது போன்ற ஒரு தருணத்தில் பகுத்தறிவற்ற கூறுகள் இரண்டையும் கொண்டுள்ளன என்று நான் நினைக்கிறேன்" என்றார். சிப் முதல் யூடியூப் தரவு, அதிநவீன அறிவியல் வரை – அனைத்தையும் சொந்தமாக கொண்டிருப்பது கூகுளின் தனித்துவம் என்றும் இதனால் செயற்கை நுண்ணறிவு சந்தை மாற்றங்களை சமாளிக்கும் நிலையில் கூகுள் இருப்பதாக பிச்சை கூறினார். சுந்தர் பிச்சையின் நிறுவனம் பிரிட்டனிலும் தனது தடத்தை விரிவுபடுத்தி வருகிறது. செப்டம்பரில், ஆல்ஃபபெட் பிரிட்டனின் செயற்கை நுண்ணறிவு துறையில் முதலீடு செய்வதாக அறிவித்தது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் உள்கட்டமைப்பு மற்றும் ஆராய்ச்சிக்கு 5 பில்லியன் பவுண்டுகள் முதலீட்டை உறுதி செய்துள்ளது. லண்டனை தளமாகக் கொண்ட அதன் முக்கிய செயற்கை நுண்ணறிவு பிரிவான டீப்மைண்ட் உட்பட பிரிட்டனில் "அதிநவீன" ஆராய்ச்சிப் பணிகளை ஆல்ஃபபெட் உருவாக்கும் என்று பிச்சை கூறினார். அதிகபடியான மின்சார தேவைகள் முதல் முறையாக, கூகுள் "காலப்போக்கில்" "நமது (ஏஐ) மாதிரிகளை பயிற்றுவிக்க" ஒரு நடவடிக்கையை எடுக்கும் என்று அவர் கூறினார். இது பிரிட்டன் அரசாங்கம் அழுத்தம் கொடுக்கும் ஒரு நடவடிக்கையாகும். இந்த நடவடிக்கை அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு அடுத்தபடியாக மூன்றாவது ஏ.ஐ "வல்லரசு" ஆக பிரிட்டனை உறுதிப்படுத்தும் என்று பிரிட்டன் அமைச்சர்கள் நம்புகின்றனர். "பிரிட்டனில் மிகவும் குறிப்பிடத்தக்க முறையில் முதலீடு செய்ய நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்" என்று பிச்சை கூறினார். இருப்பினும், சர்வதேச எரிசக்தி முகமையின் கூற்றுப்படி, கடந்த ஆண்டு உலகின் மின்சார நுகர்வில் 1.5% ஆக இருந்த செயற்கை நுண்ணறிவின் அதிகபடியான மின்சார தேவைகள் குறித்தும் அவர் எச்சரித்தார். "ஆற்றலை அடிப்படையாகக் கொண்டு ஒரு பொருளாதாரத்தை கட்டுப்படுத்த (நெருக்கடிக்கு உள்ளாக்க) விரும்பவில்லை. அது விளைவுகளை ஏற்படுத்தும் என்று நான் நினைக்கிறேன்," என்று அவர் கூறினார். தனது நிறுவனத்தின் விரிவடைந்து வரும் ஏ.ஐ முயற்சிகள் காரணமாக மின்சார தேவைகள் தீவிரமாக இருப்பதால், நிறுவனத்தின் காலநிலை இலக்குகளில் சறுக்கல் இருக்கின்றன என்பதையும் அவர் ஒப்புக்கொண்டார். ஆனால் புதிய எரிசக்தி தொழில்நுட்பங்களில் முதலீடு செய்வதன் மூலம் 2030-க்குள் நிகர பூஜ்ஜியத்தை அடைவதற்கான இலக்கை ஆல்ஃபபெட் இன்னும் கொண்டுள்ளது என்று வலியுறுத்தினார். 'மிக ஆழமான தொழில்நுட்பம்' ஏ.ஐ நாம் வேலை செய்யும் முறையையும் மாற்றும் என்று சுந்தர் பிச்சை கூறினார். இது மனிதகுலம் பணியாற்றிய "மிக ஆழமான தொழில்நுட்பம்" என்று கூறினார். "சமூக இடையூறுகளுக்கு நடுவில் நாம் செயல்பட வேண்டும்," என்று அவர் கூறினார், இது "புதிய வாய்ப்புகளை உருவாக்கும்" என்றும் கூறினார். "இது சில வேலைகளை உருவாக்கி மாற்றும், மேலும் மக்கள் மாற்றத்துக்கு தயாராக இருக்க வேண்டும்," என்று அவர் கூறினார். ஏ.ஐக்கு ஏற்ப மாற்றிக் கொள்பவர்கள் "சிறப்பாக செயல்படுவார்கள்" என்றார். "நீங்கள் ஒரு ஆசிரியராக [அல்லது] மருத்துவராக இருக்க விரும்புகிறீர்களா என்பது முக்கியமல்ல. அந்த தொழில்கள் அனைத்தும் இருக்கும். ஆனால் அந்த தொழில்கள் ஒவ்வொன்றிலும் சிறப்பாகச் செயல்படும் நபர்கள் இந்த கருவிகளை எவ்வாறு பயன்படுத்துவது என்பதைக் கற்றுக்கொண்டவர்களாக இருப்பார்கள்," என்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c8749jzjxn2o
2 months 4 weeks ago
என்னுடைய புரிதலின்படி பெண் பயணி பாதை விசாரிக்க நிறுத்தி உள்ளார், பையன் பாதையை விளங்கப்படுத்திய பின் பிளீஸ் என கெஞ்சிக்கொண்டு குற்றத்தை செய்திருக்கிறார். பயணி பாதுகாப்பு நிமித்தம் காணொளிப் பதிவை தொடர்ந்து செய்திருக்கலாம் அல்லது யுரியூப்பர் ஆக இருக்கலாம்!
2 months 4 weeks ago
அண்ணை உங்கள் கருத்தை அந்த தம்பிக்கு அனுப்பியுள்ளேன்.
2 months 4 weeks ago
ஐயனார் கோயில்கள் முன்பே பரவலாக உள்ளன. ஐயப்பன் கோயில்கள் வெவ்வேறு இடங்களில் இப்போது உள்ளதாக தேடல் மூலம் அறிந்தேன். இலங்கையை விட்டு வெளியேறிய பின்பே ஐயப்பன் ஆலயம் அவ்வப்போது செல்கின்றேன். வழமையான சுவாமி தரிசனம் பெறுகின்றேன். ஐயப்ப பக்தர்கள் கடைப்பிடிக்கும் முறைகளை பின்பற்றுவது இல்லை.
2 months 4 weeks ago
ஜொர்ஜிய
2 months 4 weeks ago
சேமிப்பு பரிதாபங்கள்..
2 months 4 weeks ago
உன்ர தமிழ படிச்சா நிச்சயம் உன் காதலி மரணித்திருப்பாள்
2 months 4 weeks ago
கவிதைக்கெல்லாம் ஊறுகா மாமி வரி போடுது..
2 months 4 weeks ago
எம்.ஜி.ஆர் கடிகாரம் இன்னும் ஒடுதாமே.. அது நிற்காதாமே.. றிக் றிக் சவுண்டு கேட்குதா ..? காதை வச்சு கேளு..
2 months 4 weeks ago
திருமலையில் அடாத்தாக சிலை வைத்த பிக்குகளுடன் முன்னணியில் நின்ற இனவாதிக்கும், நாமலுக்கும்... 21 ஆம் திகதி நடக்கவுள்ள எதிர்க்கட்சி பேரணிக்கும் உள்ள தொடர்பு இல்லை என்று கூறிவிட முடியாது என்பதற்கான ஆதாரம். மட்டக்களப்பு மண்வாசம்
2 months 4 weeks ago
2 months 4 weeks ago
அண்ணை வழுக்கையா ஒரு இளநீர் வெட்டுணே..
2 months 4 weeks ago
2 months 4 weeks ago
2 months 4 weeks ago
2 months 4 weeks ago
2 months 4 weeks ago
அப்படி வாங்கினால் இரண்டு விடயங்களை நிச்சயம் செய்யுங்கள். பள பள (satin) வெள்ளையாக இருக்கும் உள் வர்ணத்தை off white ஆக, அல்லது வேறொரு வெளிர்நிறமாக மாற்றி விடுங்கள். தரையை இப்படி வளுக்கல் தரையாக வைத்திருக்காமல், எங்கள் ஊர் லேலண்ட் பஸ்களில் இருக்கும் உராய்வு கொண்ட (friction) தரையாக மாற்றுங்கள். இல்லா விட்டால், கனடா இலண்டனில் இருந்து இதற்காகவே கூட்டமாக பிளைற் பிடித்து வந்து படகில் வழுக்கி விழுந்த பின்னர் நஷ்ட ஈடு கேட்டு வழக்குப் போடுவார்கள்😂. நீங்கள் நஷ்ட ஈடு கொடுக்க இயலாமல் படகை நீங்களே மூழ்கடித்து விட்டு அதற்குரிய காப்புறுதியை எடுத்துக் கொண்டு பிரிட்டனுக்கு வந்து விட வேண்டியிருக்கும்! பிகு: இப்படித் தப்பிப் போவது தவறென்று யோசிக்காதீர்கள்! பிரிட்டன் சட்டங்களில் இதற்குரிய ஓட்டைகள் சலுகைகள் உங்களுக்கு இருக்கும், யாழ் களத்திலேயே உங்களுக்கு லோயரைப் பிடிக்கலாம்😎!
2 months 4 weeks ago
தெலுங்கு சர்வ பிண்டி ( நம்மட பருத்தி துறை தோசை போல..)
2 months 4 weeks ago
திருகோணமலை புத்தர் சிலை பிரச்சினை முடிந்துள்ளது. நீதிமன்றமும் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஏன் இன்னும் ஆடுகின்றீர்கள்.இனவாதிகள் இனவாத தீயை பற்றவைத்துக் கொண்டு திரிகிறார்கள். இனவாதத்துக்கு ஒருபோதும் இடமளிக்க போவதில்லை. மீண்டும் பழைய இனவாத நாடகத்தை ஏற்படுத்த முடியாது .அதற்கு இடமும் கிடையாது என ஜனாதிபதியும் பாதுகாப்பு அமைச்சருமான அநுரகுமார திசாநாயக்க உறுதியளித்தார். அத்துடன் திருகோணமலை புத்தர் சிலை பிரதிஷ்டை பகுதி இவ்வளவு காலம் விகாரையாக பயன்படுத்தப்படவில்லை. சிற்றூண்டி சாலையாகவே பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே மத வழிபாட்டிடத்தை அமைப்பது போலவே வேறு கதையும் இதனுள் இருப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். பாராளுமன்றத்தில் இன்று இடம் பெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சுக்கான நிதிஒதுக்கீடுகள் மீதான குழு நிலை விவாதத்தில் பதிலளித்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு உறுதியளித்த அவர் மேலும் பேசுகையில், திருகோணமலை விவகாரம் தற்போது சர்ச்சைக்குரியதாக காணப்படுகிறது. ஆகவே இவ்விடயம் பற்றி குறிப்பிட வேண்டும் . இந்த நாட்டில் இனவாதம் பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு முகங்களில் வந்துள்ளது. கடந்த காலங்களில் ஆட்சிகள் கவிழும் போது, ஊழல் மோசடிகள் தொடர்பான குற்றச்சாட்டுகள், ஜனநாயக ரீதியிலான பிரச்சினைகள் மற்றும் பொருளாதார வீழ்ச்சி ஆகிய காரணங்கள் இருந்தன. ஆனால் இப்போது எங்கள் அரசாங்கத்தின் மீது இதுபோன்ற எந்த குற்றச்சாட்டுகளும் கிடையாது. இதன்படி தோல்வியடைந்த தரப்புகளுக்கு அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்திற்கான நியாயப்படுத்தக்கூடிய தொனிப்பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை. இதனால் அவர்களுக்கு இனவாதத்தை உருவாக்க வேண்டிய தேவை எழுகின்றது. பொலிஸார் சட்டத்தை போன்று இதுபோன்ற விடயங்களிலும் அவதானம் செலுத்த வேண்டும். சட்டத்தை செயற்படுத்தும் போது சமூகத்தில் ஏற்படக்கூடிய குழப்ப நிலைகள் தொடர்பிலும் அவதானம் செலுத்த வேண்டும். இந்நிலையில் திருகோணமலை புத்தர் சிலை சம்பவம் தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு செயலாளரிடம் அறிக்கையொன்றை கோரியிருந்தேன். அதன்படி பாதுகாப்பு காரணங்களுக்காக அந்த புத்தர் சிலை அங்கிருந்து பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டதாக பொலிஸ் நிலையப் பதிவுகளில் உள்ளன. அடுத்ததாக இந்த மோதல் பொலிஸாருக்கும் இனவாத குழுக்களுக்கும் இடையிலேயே ஏற்படும். இதனால் மீண்டும் அந்த புத்தர்சிலை அந்த இடத்தில் பிரதிஸ்டை செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் 2014இல் வழங்கப்பட்ட உரித்தொன்று இருக்கின்றது. இவ்வளவு காலம் இது விகாரையாக பயன்படுத்தப்படவில்லை. சிற்றூண்டி சாலையாகவே பயன்படுத்தப்பட்டுள்ளது. அந்த சிற்றூண்டிசாலையின் சட்டவிரோத நிர்மாணம் இருப்பதாக அதனை அகற்றுவதற்கு கரையோர பாதுகாப்பு அதிகாரசபையின் பணிப்பாளரால் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவுக்கு எதிராக மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளது. சுற்றாடல் அமைச்சின் செயலாளரும் அதனை அகற்ற வேண்டும் என்ற நிலைப்பாட்டை அறிவித்துள்ளார். இதனை தொடர்ந்து பொலிஸாருக்கும், கரையோர பாதுகாப்பு அதிகார சபை மற்றும் நகர அபிவிருத்தி அதிகாரசபையுடன் நடத்தி கலந்துரையாடலின் போது பிக்கு ஒருவர் இதற்காக ஒருவார கால அவகாசம் கோரியுள்ளார். இந்த அவகாசம் 14ஆம் திகதியுடன் முடிவடைந்துள்ளது. இவ்வாறான நிலைமையிலேயே புத்தர் சிலை தொடர்பான பிரச்சினை எழுந்துள்ளது. இது மத வழிபாட்டிடத்தை அமைப்பது போலவே வேறு கதையும் இதனுள் இருப்பதாக தெரிகின்றது. அதனை விகாரைக்கு சொந்தமான இடம் என்பதால் இதில் விகாரை இருந்ததாக பொதுமக்கள் நினைக்கலாம். ஆனால் விகாரையின் தேரர் ஒருவருக்கு சொந்தமான இடமொன்று இருந்தது. அங்கு வழிபாடு செய்யும் இடம் இருக்கவில்லை. குறிப்பிட்ட சம்பவத்தின் பின்னர் மாவட்ட செயலக அலுவலகத்தில் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளனர். கரையோர பாதுகாப்பு அதிகார சபைக்கு சொந்தமான பகுதி மற்றும் விகாரைக்குரிய காணி ஆகியன அளக்கப்பட்டு அதனை பிரிப்பதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது. அத்துடன் நீதிமன்றம் அங்கே புதிய கட்டிடங்களை அமைக்க கூடாது என்று உத்தரவிட்டுள்ளது இப்போது திருகோணமலை புத்தர் சிலை பிரச்சினை முடிந்துள்ளது. நீதிமன்றமும் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஏன் இன்னும் ஆடுகின்றீர்கள். இனவாதிகள் இனவாத தீயை பற்றவைத்துக் கொண்டு திரிகிறார்கள்.இனவாதத்துக்கு ஒருபோதும் இடமளிக்க போவதில்லை. நான் மட்டுமல்ல இந்த நாட்டின். பௌத்த மக்களும் இனவாதத்துக்கு இடமளிக்க போவதில்லை. தமிழ், முஸ்லிம்களும் இடமளிக்க போவதில்லை. மீண்டும் பழைய இனவாத நாடகத்தை ஏற்படுத்த முடியாது. இது வரலாற்றில் மட்டுமே இருக்கும். நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் இலங்கையில் இனவாதம் எழுதப்படாது என்பதை குறிப்பிட்டுக் கொள்கிறேன் என்றார். Tamilmirror Online || திருகோணமலை புத்தர் சிலை பிரச்சினை முடிந்துள்ளது: ஜனாதிபதி
Checked
Tue, 02/17/2026 - 18:52
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed