3 months ago
[ஆங்கிலம் அதிகம் தெரியாத கூ முட்டைகள் அதிகம் வாழும் நாடு ஜேர்மன்] சீமான் பல இலட்சங்களை செலவு செய்து தமிழ்நாட்டில் தமிழை நிராகரித்து தனது மகன்களுக்கு ஆங்கிலம் மூலம் கல்வி கற்ப்பிக்கும் நோக்கத்தை விளங்கி கொண்டேன்
3 months ago
தலைவர் 150 போராளிகளுடன் இருக்கிறார்................அருனா தனது சகோதரிய நேரில் சென்று பார்த்ததாகவும் , அதை வெளி உலகிற்க்கு பரப்பின ஆட்கள் இதுக்கை வந்து முட்டை கண்ணீர் விடுவதை பார்க்க வேடிக்கையா இருக்கு.................... ஈரானியர் ஒற்றுமையா இருந்த படியால் தான் அமெரிக்கா போட்ட பல பொருளாதார தடையையும் தாண்டி பலதை சாதிச்சு இருக்கினம்........................ எதிரிக்கு விலை போன கூட்டத்தோட தொடர்பில் இருப்பவர்கள் ஒற்றுமையை பற்றி கதைக்க சிறு தகுதி கூட இல்லை.....................சொந்த சகோதரி குடும்பத்தின் தியாகத்தை கொச்சை படுத்தின பையித்தியம் தான் டென்மார்க்கில் வசிக்கும் தலைவரின் மனைவியின் அக்கா.......................இப்படியான சில்லரைகள் எதிரிய விட ஆபத்தானவர்கள்.......................தமிழீழத்தை ஆண்டவரே பார்த்துக்கட்டும்🙏👍........................
3 months ago
சரியாகச் சொன்னீர்கள் முல்லாக்கள் ஆட்சியில் தொடர் துன்பம் அனுபவித்து வருகின்ற ஈரான் மக்களும் அணுவாயுத போர் வெறி அற்ற அயல்நாடுகளில் உள்ள முஸ்லிம் மதவெறி அமைப்புகளுக்கு ஆயுதங்கள் வழங்கி ஊக்குவிக்காத பதிலுக்கு தங்கள் வாழ்க்கையை மேம்படுத்தும் ஈரான் அரசு மாற்றத்தையே அவர்கள் விரும்புகின்றனர்
3 months ago
அமெரிக்காவுக்கு வால் பிடிப்பவர்கள் 2006ம் ஆண்டு இலங்கை அரசுக்கு போர் கப்பல அமெரிக்கா இலவசமாய் கொடுத்தவை.....................2009க்கு பிறக்கு அமெரிக்காவோ அல்லது இஸ்ரேலோ நேட்டோ நாடுகள் ஈழத்தை பெற்று தந்து விட்டார்களா....................விடுதலைப் புலிகள் மீதான தடையை தன்னும் நீக்கினார்களா........................ ஒன்றும் நடக்க வில்லை.....................அநீதி எங்கு நடந்தாலும் அநீதி அநீதி தான் ஈரானுக்கு இஸ்ரேல் அமெரிக்கா செய்தது பக்கா அநீதி😡.........................அமெரிக்கா ஒன்றும் போற்றி புகழக் கூடிய நாடு கிடையாது , எங்கட நாட்டில் எண்ணை வளம் தங்கம் இருந்து இருக்கனும் அமெரிக்கன் எங்கட பக்கம் நின்று இருப்பான்...................அமெரிக்காவை பற்றி நங்கு தெரிந்தவர்களுக்கு இது புரியும்😉.....................
3 months ago
இவர்கள் அளவுக்கு ஈரான் எங்கட போராட்டத்தை அழிக்க துணை போக வில்லை திருமாளவன் கனிமொழி கூட தான் மகிந்த ராசபக்ச கூட படம் எடுத்தவை................இவர்கள் செய்ததை விடவா ஈரான் எங்கட போராட்டத்துக்கு துரோகம் செய்தது..........................இலங்கை பிச்சைக் கார நாடு , ஈரான் இலங்கை அரசு கேட்க்க காசு உதவி செய்து இருக்கலாம்.................போர் தளபாடங்கள் ஈரான் இலங்கைக்கு கொடுத்தது என்று நான் அறிந்தது இல்லை மகிந்தா ஈரான் ஜனாதிபதிய சந்திச்சா அது எமக்கு எதிரான சந்திப்பா....................... 2009 இன அழிப்புக்கு முதல் இடம் இந்தியா.................................
3 months ago
ரஞ்சித் அவர்களே, எவளவு கடுமைகளைக் கடந்து வந்திருக்கிறீர்கள். மனம் கரைந்துபோகிறது. உறவுகளைக் கடந்த தூய உள்ளங்களால் இந்த உலகு நகர்வதாக நான் சிந்திப்பதுண்டு. அப்படியான ஒருவராக உங்கள் அன்ரா இருக்கிறார். உங்களோடும், அவர் உதவிய பலரோடும் என்றும் நிலையாக வாழ்வார்.
3 months ago
தமக்குள் ஒற்றுமை மற்றும் ஐக்கியம் அற்ற எந்த நாடும் எந்த இனமும் வெற்றி பெற்று விடமுடியாது. நாமே சாட்சி.
3 months ago
எல்லாத்திலும் இருந்து மீண்டு வருவினம்...................துரோகத்தால் ஈரான் இழந்தவை பல....................இப்பவாவது விழித்து கொண்டினமே.........................
3 months ago
@வீரப் பையன்26 ஈரானிடம் சவுண்ட் விட்ட அளவிற்கு சரக்கு ஏதும் இல்லை. சரக்கு இல்லாமல் சவுண்ட் விட்டது பெரிய தவறு. இது மற்றைய பல நாடுகளுக்கும் நல்லதொரு படிப்பினை. வான் எல்லை பாதுகாக்கபட முடியாத நிலையில் அணுவாயுதமும் பயன் அற்றது.
3 months ago
வாசிக்கவே மனம் நெகிழ்ந்து விட்டது ......... நாங்கள் மனிதரைப் பற்றி யோசிக்கும்போது சிலர் தெய்வமாகவே வாழ்ந்துவிட்டுப் போகிறார்கள் . ........ உங்களது அன்ரா எப்போதும் உங்களுக்குத் துணையாய் இருப்பார் . ......... !
3 months ago
எனது கருத்துப்படி ...யூனியர் சரிகமாப சிறார்களுக்குப் பெரும் ஏமாற்றமாக இருக்கும். அவர்களுடான் கூட வந்த பெற்றார்களுக்கும் தான். சனிக்கிழமையாக இருந்தால் மறு நாள் வைத்திருக்கலாம் ...விதி செய்த சதியா? அதிஷ்டமின்மையா ? காலநிலை செய்த கோலமா ?
3 months ago
கடந்த 10 ஆம் திகதி காலை. ஆறு மணியிருக்கலாம், கொழும்பிலிருந்து அக்கா தொலைபேசியில் எனக்குக் குறுந்தகவல் அனுப்பியிருந்தாள். சிஸ்ட்டர் அன்ரா இறைவனடி சேர்ந்துவிட்டார் என்பதே அச்செய்தி. மனதில் "அடக் கடவுளே" என்று ஒரு கவலை, சோகம். எப்பொழுதும் எங்களுடன் இருப்பார்கள் என்று நாம் சிலரை நம்பியிருப்போம். அவ்வாறானவர்களில் இழப்பு என்பது உடனடியாக எமக்கு எந்த உணர்வையும் தந்துவிடாதவை. ஆனால் நாட்கள் செல்லச் செல்ல அவர்களின் இழப்பின் பாரிய தாக்கம் எம்மை வருத்தத் தொடங்கும், அவர்கள் இல்லாத வெளியினை உணரத் தொடங்குவோம். அப்படித்தான் சிஸ்ட்டர் அன்ராவும் எனக்கு. அவரது மரணச் செய்தி கேட்டவுடன் யாழ்ப்பாணம் செல்வதா, இல்லையா என்று மனம் சிந்திக்கத் தொடங்க, மாமா தொலைபேசியில் வந்தார்."ரஞ்சித், நானும் மாமியும் போறம், உன்னால வர ஏலாது எண்டு நெய்க்கிறன், நீ இருந்துகொள், நாங்கள் போட்டு வாறம்" என்று கூறினார். அப்போதாவது நான் போயிருக்கலாம், ஆனால் முயலவில்லை, அதற்கும் காரணங்கள் இருந்தன. 2023 இல் அன்ரா உயிருடன் இருந்தபோது அவருடன் பேசிவிட்டு வந்துவிட்டேன், அவரை மகிழ்வுடன் சந்தித்துவிட்டேன், இனிமேல் அவர் இறந்தபின்னர் சென்று என்னத்தைச் செய்ய? என்று எனக்கு நானே சமாதானம் செய்துகொண்டு இருந்துவிட்டேன். அவரது இறுதிச் சடங்குகளில் பங்குகொண்டவர்களின் பேச்சினை ஒளிப்படம் மூலம் கேட்கும் வாய்ப்புக் கிடைத்தது. எத்தனையோ பேருக்கு அவர் உதவியிருக்கிறார். வன்னியில் அவருடன் மனநல சேவையில் பணியாற்றிய பெண்மணி தனது பேச்சின்போது கண்கள் கலங்கப் பேசிக்கொண்டிருந்ததைப் பார்த்தபோது மனம் கரைந்துபோனது. எத்தனையோ பேரின் வாழ்வை நல்வழிப்படுத்தி, ஒளியேற்றி, உருவகம் கொடுத்து வழிநடத்தி, தனது கல்வியறிவையும், திறமைகளையும் தனது சமூகத்திற்குக் கொடுத்து, இறுதிவரை தொண்டாற்றிய ஒரு ஆளுமை அமைதியாகிப் போனது. எனது வாழ்நாளில் பல ஆளுமைகளைக் கண்டிருக்கிறேன். இவர்களால் எனது வாழ்வு மாற்றப்பட்டு, வழிநடத்தப்பட்டு வந்திருக்கிறது. இந்த ஆளுமைகளில் முதன்மையானவர் எனது சிஸ்ட்டர் அன்ரா. அவரது ஆத்மா சாந்தியடையட்டும்!
3 months ago
எங்களை அழிக்கத் துணை நின்றவர்கள் தங்களைத் தாங்களே அழித்துக் கொள்கிறார்கள். தயாளன் கனியன்
3 months ago
ஐந்து பெரிது ஆறு சிறிது வைரமுத்து “சீ மிருகமே!” என்று மனிதனைத் திட்டாதே மனிதனே எந்த விலங்கும் இரைப்பைக்கு மேலே இன்னொரு வயிறு வளர்ப்பதில்லை எங்கேனும் தொப்பைக் கிளியோ தொப்பை முயலோ பார்த்ததுண்டா ? எந்த விலங்குக்கும் சர்க்கரை வியாதியில்லை தெரியுமோ? இன்னொன்று : பறவைக்கு வேர்ப்பதில்லை எந்த பறவையும் கூடுகட்டி வாடகைக்கு விடுவதில்லை எந்த விலங்கும் தேவையற்ற நிலம் திருடுவதில்லை கவனி மனிதனே கூட்டு வாழ்க்கை இன்னும் குலையாதிருப்பது காட்டுக்குள்தான் அறிந்தால் ஆச்சரியம் கொள்வாய் உடம்பை உடம்புக்குள் புதைக்கும் தொழு நோய் விலங்குகளுக்கில்லை மனிதா இதை மனங்கொள் கர்ப்பவாசனை கண்டு கொண்டால் காளை பசுவை சேர்வதில்லை ஒருவனுக்கொருத்தி உனக்கு வார்த்தை புறாவுக்கு வாழ்க்கை எந்த புறாவும் தன் ஜோடியன்றி பிறஜோடி தொடுவதில்லை பூகம்பம் வருகுது எனில் அலைபாயும் விலங்குகள் அடிவயிற்றில் சிறகடிக்கும் பறவைகள் இப்போது சொல் அறிவில் ஆறு பெரிதா ? ஐந்து பெரிதா ? மரணம் நிஜம் மரணம் வாழ்வின் பரிசு மாண்டால் மானின் தோல் ஆசனம் மயிலின் தோகை விசிறி யானையின் பல் அலங்காரம் ஒட்டகத்தின் எலும்பு ஆபாரணம் நீ மாண்டால் … சிலரை நெருப்பே நிராகரிக்கும் என்பதால் தானே புதைக்கவே பழகினோம் “சீ மிருகமே !” என்று மனிதனைத் திட்டாதே மனிதனே கொஞ்சம் பொறு காட்டுக்குள் என்ன சத்தம் … ஏதோ ஒரு மிருகம் இன்னொரு மிருகத்தை ஏசுகிறது ” அட சீ மனிதனே !” All reactions: 5K5K
3 months ago
2002 இல் சிட்னிக்கு குடிபெயர்ந்த காலத்தில் இருந்து 2018 ஆம் ஆண்டுவரை நான் அவரைச் சென்று பார்க்கவில்லை. அவரிடமிருந்து வரும் கடிதங்களுக்கோ அல்லது மின்னஞ்சல்களுக்கோ எப்போதாவது பதில் எழுதுவதுடன் அவருக்கான எனது நன்றிக்கடன் முடிந்துவிடும். எத்தனையோ முறை என்னுடன் தொலைபேசியில் பேச அவர் முயன்றிருக்கிறார்.எக்காரணமும் இன்றி அவருடன் பேசுவதற்கான சந்தர்ப்பங்களை தவறவிட்டிருக்கிறேன். சிலவேளை அவர் எனக்காகச் செய்த தியாகங்கள், பலரிடம் அவர் பட்ட அவமானங்கள் குறித்து நாம் பார்க்கத் தவறியிருக்கலாம். ஒரு கன்னியாஸ்த்திரியாக இருந்தபோதும், பெற்றோரைக் காட்டிலும் அதிகமாக என்னை நேசித்து, எனது வாழ்வை நெறிப்படுத்தி இன்றுவரை வாழும் பாக்கியத்தை அவர் ஏற்படுத்தித் தந்துவிட்டுச் சென்றிருக்கிறார், இது எனக்கு இன்றுவரை புரியவில்லை. நீண்ட 16 வருடங்களுக்குப் பின்னர் அவரை 2018 ஆம் ஆண்டு சித்திரையில் யாழ்ப்பாணத்தில் சென்று சந்தித்தேன். நான் மனதில் பதிந்து வைத்திருந்த சிஸ்ட்டர் அன்ராவின் உருவத்திற்கும் அன்று நான் பார்த்த அன்ராவிற்கும் இடையே எத்தனை வேறுபாடு? பம்பரம் போலச் சுழன்று, ஒரே நேரத்தில் பல பணிகளைச் செய்து, தன்னிடம் உதவிவேண்டி வருவோருக்கு இல்லையென்று சொல்லாது, முயன்றவரை உதவிடும் சிஸ்ட்டர் அன்ரா பல நினைவுகளைத் தொலைத்து, மனதளவிலும், உடலளவிலும் நலிந்து போயிருந்தார். ஆனாலும், முகத்தில் மாறாத அதே புன்னகையும், அன்பும், விகடமும் சேர்த்த பேச்சும் அவரை விட்டு அகலவில்லை. மீண்டும் அவரை 2023 கார்த்திகையில் சென்று சந்தித்தேன். எப்படி இருக்கிறீர்கள் அன்ரா என்று கேட்டபோது, "83 வயதில் ஒருவர் எப்படி இருக்கமுடியுமோ, அப்படி இருக்கிறேன்" என்று கூறினார். வெகுவாக இளைத்திருந்தார். சக்கர நாற்காலியில் வைத்து அவரைப் பராமரித்துக்கொண்டிருந்தார்கள். சுமார் 30 - 40 நிமிடங்களுக்கு மேல் அவரால் தொடர்ந்து அமர்ந்திருந்து பேசமுடியாது என்பதை நான் உணர்ந்துகொண்டேன். ஆனாலும் அவரைக் கண்டதில் சந்தோசம்.
3 months ago
வீரப் பையன், இந்தத் திரியில் நீங்கள் பல பொய்யான தகவல்களை எழுதியுள்ளீர்கள். மேற்கோள் காட்டியுள்ளது போன்று ஆதாரமற்ற சமூக வலைத் தளங்களில் உலாவும் குறுஞ்செய்திகளை நீங்கள் நம்புபவராக இருக்கலாம். அவற்றை யாழில் கொண்டு வந்து ஒட்டி அதன் நம்பகத் தன்மையைக் கெடுக்காதீர்கள். நன்றி.
3 months ago
3 months ago
சூரியக்கதிர் ராணுவ நடவடிக்கையின் பின்னர் சிஸ்ட்டர் அன்ரா வன்னிக்குச் சென்றுவிட்டார். அங்கிருந்தபோதிலும் தவறாமல் எனக்குக் கடிதம் எழுதுவதோடு, பிறந்தநாள், கிறிஸ்மஸ் காலங்கள் என்று வர்ணக் காட்டுடன் வாழ்த்துக்கள் அவரிடமிருந்து வரும். ஆரம்பத்தில் தொடர்ச்சியாக அவருக்குப் பதில் எழுதிவந்த நான் சிறிது சிறிதாக பதில் எழுதுவதைக் குறைத்துக்கொண்டேன், காரணம் ஏதும் இன்றி. ஆனாலும் அவர் மாறவில்லை, "உனக்கு நேரம் கிடைக்காதென்று தெரியும், கிடைக்கும்போது நீ எழுது, ஒன்றும் அவசரமில்லை " என்று பதில் வரும். தனது அக்காவின் பிள்ளைகளைத் தனது சொந்தப்பிள்ளைகளாகவே நடத்திவந்ததினால் உருவாகிய பாசம் அவரை அலைக்கழித்திருக்கும். வன்னியில் பல தொண்டு நிறுவனங்களுடன் அவர் சேர்ந்து இயங்கிவந்தார். யுத்தத்தினால் உளநலம் பாதிக்கப்பட்டவர்களைப் பராமரிப்பது, அவ்வாறு பராமரிப்பவர்களுக்கான பயிற்சிகளை வழங்குவது, யுத்தத்தினால் உறவுகளை இழந்த பெண்கள், பிள்ளைகளை அழைத்துவந்து கற்பிப்பது, தொழிற்பயிற்சி வழங்குவது என்று சமூகத்துடன் தன்னை நெருக்கமாகப் பிணைத்துக்கொண்டார். தாயக விடுதலையில் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்த அவர் புலிகளையும், தலைவரையும் வெகுவாக நம்பினார். பொடியள் இருக்குமட்டும் எனக்குப் பயமில்லை என்று அடிக்கடி என்னிடம் கூறியிருக்கிறார். திருக்குடும்ப கன்னியர் மடத்தினால் அவருக்கென்று மோட்டார் உந்துருளி ஒன்று வழங்கப்பட்டிருந்தது. அதில் வன்னிமுழுதும் அவர் பயணித்து தேவைப்பட்டவர்களுக்கு தன்னாலான உதவிகளைச் செய்துவந்தார். 2002 ஆம் ஆண்டு வன்னிக்கான ஏ - 9 பாதை திறக்கும் நிகழ்வில் புலிகளின் தளபதிகளின் பின்னால் அன்ராவும் நிற்கும் காணொளியொன்று இன்னமும் இணையத் தளத்தில் இருக்கிறது. பிற்காலத்தில் புலிகளின் மருத்துவப் பிரிவில் இயங்கிய போராளிகளில் சிலருக்கு மனநல பயிற்சிகளை அவர் வழங்கியிருந்தார்.
3 months ago
இன்று அதிகாலை, அமெரிக்கா ஈரானின் முக்கிய அணுசக்தி மையங்களை நேரடியாக தாக்கியது. இந்த தாக்குதலுக்காக B-2 வகை ஸ்டெல்த் விமானங்கள் பயன்படுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விமானங்கள் ரேடாரில் சிக்காமல் செயல்படுவதால், தாக்குதலை முன்கூட்டியே தடுப்பது சாத்தியமாகவில்லை. இருப்பினும், இது முற்றிலும் சாத்தியமற்றது அல்ல என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். B-2 விமானங்கள் கடந்த காலத்தில் உருவாக்கப்பட்ட மாடல்களாகும். தற்போது உருவாகி வரும் புதிய தொழில்நுட்ப வளர்ச்சிகளுக்கு முன்னால், இவை சவால்களை சந்திக்கக்கூடியவை. B-2 விமானத்தின் பிரதான சிறப்பு அம்சம் “ஸ்டெல்த்” (Stealth) தொழில்நுட்பம் ஆகும். இது, ரேடார் கதிர்களை உறிஞ்சி விமானத்தின் இருப்பை மறைக்கும் தன்மை கொண்டது. பொதுவாக, பூமியில் இருந்து அதிக அதிர்வெண்கள் கொண்ட கதிர்கள் வானத்தில் செலுத்தப்படுகின்றன. அவை எந்த பொருளும் இல்லையெனில் திரும்பி வராது. ஆனால், விமானம் போன்ற பொருட்கள் இருந்தால், கதிர்கள் அதில் பட்டு திரும்ப வரும், இதன் அடிப்படையில் விமானம் இருப்பதை கண்டறிய முடியும். B-2 விமானங்கள் இந்தக் கதிர்களை உறிஞ்சும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. எனவே, சாதாரண ரேடார்களில் இவை பிடிபடுவதில்லை. ஆனால், இந்த தொழில்நுட்பத்தை பராமரிக்க அதிக செலவுகள் தேவைப்படும். மேலும், B-2 ஒரு பழைய மாடல் என்பதால், புதிய குறைந்த அதிர்வெண் ரேடார் அமைப்புகள் மற்றும் அகச்சிவப்பு கண்காணிப்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி இதை கண்டுபிடிக்க முடியும் என நிபுணர்கள் கூறுகின்றனர். ஸ்டெல்த் தொழில்நுட்பத்தின் இடையூறுகள் விமானங்கள் தரையிறங்கும் அல்லது புறப்படும் போது, அதிக உயரத்தில் இருந்து குறைந்த உயரத்திற்கு நகரும். இந்த தருணங்களில் விமானம் ரேடாரில் சற்று புலப்படும் வாய்ப்பு உள்ளது. மேலும், எரிபொருள் நிரப்பும், ஆயுதங்களை ஏற்றும் நேரங்களில் ஸ்டெல்த் திறன் குறையக்கூடும். இந்த நேரங்களில் B-2 விமானங்களை அடையாளம் காணும் சாத்தியம் அதிகமாகிறது. B-2 விமானங்களின் வடிவமைப்பு, உயர் அதிர்வெண் ரேடார் அலைகளை சிதறடிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால், குறைந்த அதிர்வெண் ரேடார் அலைகள் (long wavelength) விமானத்தின் முழுமையான வடிவத்துடன் பொருந்தி போகும். இதனால், அலைகள் முழுமையாக சிதறாமல், எதிரொலியை ஏற்படுத்தி விமானத்தை சற்று வெளிப்படுத்தக்கூடும். ரஷ்யாவின் Nebo-M போன்ற உயர் தொழில்நுட்ப ரேடார் அமைப்புகள் இதற்கான திறனை கொண்டிருக்கின்றன. மேலும், பெரும்பாலான ரேடார் அமைப்புகள் ஒரு இடத்தில் இருந்து சிக்னலை அனுப்பி அதே இடத்தில் எதிரொலியை பெறுகின்றன. ஆனால் Multistatic Radar Systems பல இடங்களில் இருந்து சிக்னல் அனுப்பி, பல கோணங்களில் எதிரொலியைப் பெறும். இதனால், B-2 விமானம் ஒரு கோணத்தில் மறைந்திருந்தாலும், மற்ற கோணங்களில் ரேடாரில் சிக்க வாய்ப்பு உள்ளது. ஈரானின் எதிர்கால சாத்தியக்கூறுகள் தற்போதைக்கு, ஈரானிடம் இந்த உயர் தொழில்நுட்ப ரேடார் அமைப்புகள் இல்லாமல் இருக்கலாம். ஆனால், ரஷ்யா போன்ற நாடுகளின் ஆதரவுடன், விரைவில் ஈரான் இத்தகைய தொழில்நுட்பத்தைப் பெறும் வாய்ப்பு உள்ளது. இதனால் எதிர்காலத்தில், B-2 விமானங்களை எதிர்த்து பாதுகாப்பு அமைப்புகளை நிறுவும் சாத்தியமுள்ளது. பழமையும் புதுமையும், Jakki Mohan.
3 months ago
வெள்ளவத்தையில் வாழ்ந்த காலம் முதல், நான் பல்கலைக்கழகம் செல்லும் காலம்வரை சிஸ்ட்டர் அன்ராவின் முயற்சியினால் எனக்கும் அக்காவிற்குமான செலவுகளுக்கு அவுஸ்த்திரேலியாவில் இருந்து எனது மாமாவே பணம் அனுப்பி வந்தார். சிலவேளைகளில் எமக்கு உதவுவது குறித்து கடுமையான விமர்சனங்கள் அன்ரா மீது சில உறவினர்களால் முன்வைக்கப்பட்டன. "உவன் படிக்கப்போறதில்லை, ஏன் சும்மா மினக்கெடுகிறாய்?" என்றெல்லாம் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. ஆனால் சிஸ்ட்டர் அன்ராவோ எதையுமே சட்டை செய்யவில்லை. எங்கள் இருவரையும் எப்படியாவது படிப்பித்து, கரையேற்றிவிட வேண்டும் என்பதே அவருக்கு இருந்த நோக்கமெல்லாம். 1994 ஆம் ஆண்டு தம்பி ஒரு முறை எங்களைப் பார்க்க கொழும்பிற்கு வந்திருந்தான். அப்போது நாங்கள் கிருலப்பனையில் தங்கியிருந்தோம். எங்களைக் கண்டவுடன் எங்களுடனேயே தங்கிவிடலாமா என்று அவன் அன்ராவைக் கேட்டான். அவனையும் தகப்பனார் அடித்துத் துரத்திவிட்டிருக்க, பாதிரிமார்களாகப் படிக்கும் கல்லூரியொன்றில் அவனையும் அன்ரா சேர்த்துவிட்டிருந்தார். அதன் விடுமுறை ஒன்றின்போதே எங்களைப் பார்க்க வந்திருந்தான். சிஸ்ட்டர் அன்ராவே அவனை எம்மிடம் கூட்டி வந்திருந்தார். அவனையும் எங்களுடன் தங்கவைக்க முடியுமா என்று அன்ரா கேட்டபோது அக்காலப்பகுதியில் எம்முடன் தங்கியிருந்த இன்னுமொரு சித்தியும், அம்மம்மாவும், 'இப்பவே உவை ரெண்டுபேரையும் வைச்சுப் பாக்கேலாமக் கிடக்கு, அதுக்குள்ள உவனையும் கொண்டு வந்துட்டியோ?" என்று கூறி முற்றாக மறுத்துவிட்டார்கள். மனமுடைந்து யாழ்ப்பாணம் திரும்பிய தம்பி, சூரியக்கதிர் ராணுவ நடவடிக்கையின்போது கரவெட்டிக்கு இடம்பெயர்ந்து, அங்கிருந்து இயக்கத்தில் சென்று இணைந்துகொண்டான். ஐந்து வருட சேவையின்பின்னர் 2000 இல் மாவீரராகியும் போனான்.
Checked
Thu, 09/25/2025 - 12:07
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed