2 months 4 weeks ago
டொல்பின்னால்... பெண் கொல்லப் பட்டதை, இப்போதான் முதன் முதலாக கேள்விப் படுகின்றேன்.
2 months 4 weeks ago
வடமராட்சிக் கடற்பரப்பில் நூற்றுக்கணக்கில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய இழுவைப் படகுகளால் வடமராட்சி மீனவர்களின் பல இலட்சம் ரூபாபெறுமதியான வலைகள் அறுத்து அழிக்கப்பட்டுள்ளன. இந்தவிடயம் தொடர்பில் வடமராட்சி மீனவர்கள் தெரிவித்ததாவது: வடமராட்சிக் கடற்பரப்பில் கடந்த சில நாள்களாக இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் அதிகரித்து வருகின்றது. ஒவ்வொரு நாளும் வடக்கு மீனவர்களின் வலைகள் வகைதொகை இன்றி அழிக்கப்படுகின்றன. இதனால், பல லட்சம் ரூபா நிதி இழப்பு ஏற்படுவதுடன். உயிர் பயத்தில் கடற்றொழில் நடவடிக்கையையும் கைவிட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. ஆனால் அரக்க வரும் இந்தியப் படகுகளைக் கட்டுப் படுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தற்போதைய அரசாங்கம் சொல்கின்ற போதிலும், செயலில் எந்த மாற்றத்தையும் நாங்கள் காணவில்லை. எனவே, இந்திய மீனவர்களின் அத்துமீறல் தொடர்ந்தால், அவற்றைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை நாங்கள் கையிலெடுப்போம். அதன் பின்னர் ஏற்படும் அசம்பாவி தங்களுக்கு நாம் பொறுப்பாளியாக படைகளைப்போல் முடியாது - என்றனர். தற்போது கடற்கொந்தளிப்புக் காரணமாகவும், கடல் இரைச்சல் காரணமாவும் இந்த இழுவைப் படகுகள் மிகவும் அண்மையில் வந்த பின்னரே அவற்றை உணரக்கடியதாக உள்ளது. இராட்சத படகுகள் கடந்து செல்லும்போது ஏற்படும் கொந்தளிப்பால் எமது சிறிய படகுகள் கவிழும் ஆபத்து ஏற்படுகின்றது. மரணத்தோடு உறவடியே மீனவர்களாகிய நாம் ஒவ்வொரு நாளும் கறுக்கும் சென்று கரை திரும்புகின்றோம் ஆனால் அரக்க வரும் இந்தியப் படகுகளைக் கட்டுப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தற்போதைய அரசாங்கம் சொல்கின்ற போதிலும், செயலில் எந்த மாற்றத்தையும் நாங்கள் காணவில்லை. எனவே, இந்திய மீனவர்களின் அத்துமீறல் தொடர்ந்தால், அவற்றைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை நாங்கள் கையிலெடுப்போம். அதன் பின்னர் ஏற்படும் அசம்பாவி தங்களுக்கு நாம் பொறுப்பாளியாக படைகளைப்போல் முடியாது - என்றனர். இந்திய மீனவர்கள் அட்டூழியம்; வடமராட்சி மீனவர்களின் வலைகள் அறுத்தழிப்பு!
2 months 4 weeks ago
‘திருமணத்துக்கு முந்தைய பாலியல் உறவு சாதாரணமாகிவிட்டது’ - உயர் நீதிமன்றம் வேதனை மதுரை: திருமணத்துக்கு முந்தைய பாலியல் உறவு சர்வ சாதாரணமாகிவிட்டது என உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. நெல்லையை சேர்ந்தவர் தேவா விஜய். இவர் மீது இளம் பெண் ஒருவர் வள்ளியூர் காவல் நிலையத்தில் பாலியல் புகார் அளித்தார். புகாரில் இருவரும் கல்லூரியில் படிக்கும் போது காதலித்ததாகவும், திருமணம் செய்வதாக கூறி 9 ஆண்டுகளாக பாலியல் உறவு கொண்டதாகவும், பின்னர் திருமணம் செய்ய மறுத்துவிட்டதாகவும் இளம் பெண் கூறியிருந்தார். இப்புகாரின் பேரில் தேவா விஜய் மீது வள்ளியூர் போலீஸார் வழக்கு பதிவு செய்தார். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி தேவா விஜய் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுத் தாக்கல் செய்தார். மனுவை விசாரித்து நீதிபதி பி.புகழேந்தி பிறப்பித்த உத்தரவு: மனுதாரரும், புகார் அளித்த இளம்பெண்ணும் ஏறக்குறைய 9 ஆண்டுகளாக பாலியல் உறவில் இருந்து வந்துள்ளனர். இந்த நீண்ட கால பாலியல் உறவின் போது புகார்தாரர் எதிர்ப்பு தெரிவிக்கமால் இருந்ததை பார்க்கும் போது இருவர் இடையே இருந்து வந்த பாலியல் உறவு இருவரின் சம்மதத்தின் அடிப்படையில் நடைபெற்ற உறவு என்பதை குறிக்கிறது. ADVERTISEMENT அப்போது தன்னை திருமணம் செய்வதாக கூறி மனுதாரர் ஏமாற்றினார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. நீதிமன்றம் தற்போது சமூகத்தில் நிலவும் உண்மை நிலவரங்களை அறியாமல் இல்லை. திருமணத்திற்கு முந்தைய பாலியல் உறவு இன்றைய காலகட்டத்தில் சர்வ சாதாரணமாக ஆகிவிட்டது. இருவர் தாமாக முன்வந்து ஒரு உறவை ஏற்படுத்திக் கொண்டு நீண்ட காலம் உடல் ரீதியான நெருக்கத்தில் ஈடுபட்ட நிலையில், அந்த உறவில் முறிவு ஏற்படும் போது குற்றவியல் சட்டத்தினை பயன்படுத்துவது தவறு. சம்பந்தப்பட்ட இருவருக்கிடையே என்ன நடக்கிறது என்பது அவர்களின் தனிப்பட்ட விருப்பத்தின் எல்லைக்குள் வருகிறது. அந்த உறவு பாசத்தின் அடிப்படையில் நிறுவப்பட்டதா, திருமண எதிர்பார்ப்பா, வெறும் பரஸ்பர இன்பம் என்பதா என்பது அவர்களுக்கு மட்டுமே தெரியும். இதுபோன்ற விஷயங்களில் நீதிமன்றம் உறுதியாக தீர்மானிப்பது சாத்தியமில்லை. தனிப்பட்ட நடத்தையை ஒழுக்கப்படுத்தவோ அல்லது தனிப்பட்ட ஏமாற்றத்தை வழக்காக மாற்றவோ குற்றவியல் செயல்முறையைப் பயன்படுத்த முடியாது. ஏனெனில் நீதிமன்றங்கள் தனிமனித ஒழுக்கத்தை பார்த்து தீர்ப்பு வழங்க முடியாது, வற்புறுத்தல், ஏமாற்றுதல் அல்லது இயலாமையால் சம்மதம் என பாதிக்கப்படும் இடங்களில் மட்டுமே சட்டம் தலையிடுகிறது. தனிப்பட்ட முரண்பாடுகளை தவறான நடத்தையாக சித்தரிக்க யாருக்கும் உரிமை இல்லை. உணர்ச்சி ரீதியான விளைவுகளைத் தீர்ப்பதற்கு சட்டத்தை தவறாக பயன்படுத்த முடியாது. மனுதாரர் மீதான வழக்கு தொடர்வது சட்ட செயல்முறையை துஷ்பிரயோகம் செய்வதற்கு சமம் என்று இந்த நீதிமன்றம் கருதுகிறது. எனவே மனுதாரர் மீதான வழக்கு ரத்து செய்யப்படுகிறது இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார். ‘திருமணத்துக்கு முந்தைய பாலியல் உறவு சாதாரணமாகிவிட்டது’ - உயர் நீதிமன்றம் வேதனை | High Court expresses concern over premarital sex becoming normal - hindutamil.in
2 months 4 weeks ago
தொண்டி கடலோர பகுதிகளில் துள்ளி குதித்து விளையாடிய டால்பின்கள் ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி கடலோரப் பகுதிகளில் இன்று காலை டால்பின்கள் கூட்டம் கூட்டமாக துள்ளி குதித்து விளையாடின. டால்பின்கள் கூட்டமாக கடலின் மேல் பகுதிக்கு வந்து குதித்து விளையாடுவது வழக்கமாக நடைபெறும் நிகழ்வு அல்ல. எனவே பல டால்பின்கள் ஒரே நேரத்தில் துள்ளி குதித்து நீந்தியதை தொண்டி கடலோரப் பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் கண்டு ரசித்தனர். இந்த அழகான காட்சிகளை அப்பகுதியினர் பலர் செல்போன்களில் வீடியோ எடுத்துள்ளனர். கரைக்கு மிகவும் அருகில் டால்பின் கூட்டங்கள் வருவதற்கான காரணம் குறித்து பாண்டிச்சேரி பல்கலைக்கழக பேராசிரியர் கு.சிவக்குமார் பிபிசி தமிழிடம் கூறுகையில், கடல் பசு, திமிங்கலம், டால்பின், உள்ளிட்ட சில கடல் வாழ் உயிரினங்கள் அடிக்கடி வசிப்பிடத்தை மாற்றி வேறு இடத்திற்கு குடியேறும் வழக்கத்தை கொண்டவை என்றார். “இவ்வகையான கடல் வாழ் உயிரினங்கள் மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, கேரள கடற்கரை வழியாக தமிழக கடற்பகுதிக்கு பின்னர் மீண்டும் அவை மகாராஷ்டிரா செல்லும். பருவமழை காலங்களில் மழை நீர் கடலில் சேர்வதன் காரணமாக கடல் நீரில் உப்பு தன்மை குறைவதால் கடல் புற்கள் நல்ல வளர்ச்சி அடையும். பொதுவாக கடல் மீன்கள் கடல் புற்களுக்கு மத்தியில் வாழ்விடத்தை அமைத்து கொள்ளும். அப்படி அமைக்கும் போது கடல் மீன்களை உண்ணும் கடல் பசு, கடல் ஆமை, திமிங்கலம், டால்பின் போன்றவை கடல் புற்களை நோக்கி கரை பகுதிக்கு வர நேரிடுகிறது” என்றார். https://www.bbc.com/tamil/live/c7v8pjqg0n7t?post=asset%3Aaaefd337-afc4-43de-904d-cbf95e77caac#asset:aaefd337-afc4-43de-904d-cbf95e77caac
2 months 4 weeks ago
கொஞ்சம் பொறுங்கோ. தலைவன் Trump பங்குச்சந்தையில எல்லாம் வாங்கி முடிஞ்ச பிறகு நிலைமை சாதாரணமா வந்திடும். பிறகு திருப்பி வித்திட்டு மறுபடியும் பங்குச்சந்தை இறங்கிறதுக்கு இப்பிடி எதாவது செய்யலாம்.
2 months 4 weeks ago
இவையள் என்னமோ திறம் மாதிரி. டெல்லி, மும்பை போன்ற விமனநிலையங்களில தமிழ் ஆட்களை இவையள் படுத்திற பாட்டுக்கு இது பரவாயில்லை என்று தான் சொல்லனும்.
2 months 4 weeks ago
பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் நோபெர்டோ பரெதஸ் பிபிசி ஒரு மணி நேரத்துக்கு முன்னர் லத்தீன் அமெரிக்காவுக்கு அருகில் உள்ள கடல் பகுதிக்கு அமெரிக்காவின் யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர் ஃபோர்டு விமானந்தாங்கி போர்க்கப்பல் வந்தடைந்துள்ளது. இது அமெரிக்கா மற்றும் வெனிசுவேலாவுக்கு இடையிலான அதிகரிக்கும் பதற்றத்தில் ஒரு திருப்புமுனையாகும். 1989 பனாமா மீதான படையெடுப்புக்கு பிறகு, இந்த பிராந்தியத்தில் அமெரிக்காவின் பெரிய அளவிலான நடவடிக்கையை இது குறிக்கிறது. மூன்று தசாப்தங்களுக்கு முன்பு போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டுகளை மானுவல் நோரிகா எதிர்கொண்டதைப் போல இப்போது வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவும் அதே போன்ற குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளார். அந்த குற்றச்சாட்டுகளை அவர் உறுதியாக மறுக்கிறார். வெனிசுவேலாவின் கரையோரங்களுக்கு அருகில் உலகின் மிகப்பெரிய மற்றும் மிகவும் அதிநவீன விமானந்தாங்கி கப்பலை நிலைநிறுத்தினாலும், அமெரிக்கா அதன் நோக்கங்களை தெளிவாக வெளிப்படுத்தவில்லை. எவ்வாறாயினும், வெனிசுவேலா எதையும் எதிர்கொள்ளும் நிலைக்கு தயாராக இருப்பதாகத் தெரிகிறது. கடந்த வாரம், பாதுகாப்பு அமைச்சர் விளாடிமிர் பாட்ரினோ லோபஸ், மதுரோவின் அரசாங்கத்துக்கான (வெனிசுவேலா அதிபர்) அச்சுறுத்தலை எதிர்கொள்ள, நாடு முழுவதும் பொதுமக்கள் படைகளுடன் சேர்ந்து நிலம், கடல், வான்வழி, நதி மற்றும் ஏவுகணை படைகளை "பெரியளவில் நிலைநிறுத்த" இருப்பதாக அறிவித்தார். ஒரு தொலைக்காட்சி உரையில், இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக கிட்டத்தட்ட 200,000 துருப்புக்களை அணி திரட்ட மதுரோ உத்தரவிட்டுள்ளார் என்று பாட்ரினோ லோபஸ் கூறினார். அமெரிக்க விமானந்தாங்கி கப்பலின் வருகை என்பது, வெனிசுவேலாவில் செயல்படுவதாக டிரம்ப் குற்றம் சாட்டும் போதைப்பொருள் கும்பல்களுக்கு எதிரான அவரது ராணுவ நடவடிக்கையின் தீவிரப்படுத்தலாகப் பார்க்கப்படுகிறது. இந்த நடவடிக்கை, படகு மற்றும் கப்பல்களில் பயணித்த 80க்கும் அதிகமான உயிர்களை ஏற்கனவே பறித்துள்ளது. ஆனால் சில ஆய்வாளர்கள் இந்த நடவடிக்கை மதுரோவை பலவீனப்படுத்துவதற்கான அல்லது கவிழ்ப்பதற்கான பரந்த உத்தியின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்று வாதிடுகின்றனர். கடந்த ஆண்டு நடைபெற்ற வெனிசுவேலா அதிபர் தேர்தல் ஒரு மோசடி என எதிர்க்கட்சிகள் மற்றும் சர்வதேச பார்வையாளர்களால் முத்திரை குத்தப்பட்டது. அமெரிக்கா மதுரோவின் அரசாங்கம் சட்டவிரோதமானது என்று கருதுகிறது. 'பலவீனமான படைப்பலம்' மதுரோவின் படைகள் உலகின் மிக சக்திவாய்ந்த ராணுவத்தின் தாக்குதலைத் தாங்க முடியுமா? செப்டம்பரில், மதுரோ வெனிசுவேலாவைப் பாதுகாக்க 80 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தயாராக இருப்பதாகக் கூறினார். அத்தகைய எண்ணிக்கையிலான ஒரு படைக்கு ஆயுதம் வழங்கும் வாய்ப்பும் இருப்பதாக அவர் தெரிவித்தார். நிபுணர்கள் அந்த எண்ணிக்கையை கடுமையாக மறுக்கின்றனர். "அது உண்மை இல்லை. உண்மையான எண்ணிக்கை மிகக் குறைவு. மதுரோ கடந்த ஆண்டு 40 லட்சம் வாக்குகளை கூட பெற முடியவில்லை," என்று 2020 முதல் 2023 வரை கொலம்பியாவில் அமெரிக்க மூத்த தூதரக அதிகாரியாக இருந்த ஜேம்ஸ் ஸ்டோரி பிபிசியிடம் கூறினார். "ராணுவத்திலிருந்து வெளியேறும் விகிதம் அதிகமாக உள்ளது," என்றார் அவர். உத்தி ஆய்வுகளுக்கான சர்வதேச நிறுவனத்தின் (ஐஐஎஸ்எஸ்) ஓர் அறிக்கை, வெனிசுவேலாவில் 123,000 துருப்புக்கள், அத்துடன் 220,000 பொதுமக்கள் படை மற்றும் 8,000 ரிசர்வ் படையினர் இருப்பதாக மதிப்பிடுகிறது. பட மூலாதாரம், Getty Images வெனிசுவேலா வீரர்கள் அரிதாகவே பயிற்சி பெறுகிறார்கள், மேலும் சாவிஸ்டா படையில் உள்ள பல உறுப்பினர்களிடம் ஆயுதம் இல்லை என்று ஜேம்ஸ் ஸ்டோரி கூறினார். "ஒருவேளை ராணுவத்தில் ஒரு சில திறமையான பிரிவுகள் இருக்கலாம், ஆனால் ஒரு போரிடும் சக்தியாக, அவை குறிப்பாக திறமையானவை அல்ல." வெனிசுவேலாவின் ராணுவம் முன்பு இருந்ததைப்போல் இல்லை என்று கூறும் அவர், ஆனால் பிராந்தியத்தில் சில தனித்துவமான வளங்கள் இன்னும் அதற்கு உள்ளன எனத் தெரிவித்தார். 2006-இல் முன்னாள் அதிபர் ஹ்யூகோ சாவேஸ் ரஷ்யாவிடமிருந்து வாங்கிய சுமார் 20 சுகோய் போர் விமானங்களைத் தவிர, வெனிசுவேலா 1980-களில் அமெரிக்காவின் முக்கிய பிராந்திய கூட்டாளியாக இருந்தபோது, ஒரு டஜனுக்கும் அதிகமான அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட F-16 விமானங்களையும் வாங்கியது. "சுகோய் தாக்குதல் ஜெட் விமானங்கள் பிராந்தியத்தில் உள்ள வேறு எதையும் விட உயர்ந்தவை, சில இன்னும் செயல்படுகின்றன. F-16 களைப் பொறுத்தவரை, ஒன்று அல்லது இரண்டு இன்னும் வேலை செய்கின்றன என்று நான் நினைக்கிறேன்," என்று ஜேம்ஸ் ஸ்டோரி குறிப்பிட்டார். விமான எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் அக்டோபர் பிற்பகுதியில், அமெரிக்காவுடன் அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், வெனிசுவேலா ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட 5,000 இக்லா-எஸ் விமான எதிர்ப்பு ஏவுகணைகளை "முக்கிய வான் பாதுகாப்பு நிலைகளில்" நிலைநிறுத்தியுள்ளதாக மதுரோ அறிவித்தார். "உலகில் உள்ள எந்த ராணுவ சக்தியும் இக்லா-எஸ் இன் சக்தியை அறிந்திருக்கும்," என்று மதுரோ ஒரு தொலைக்காட்சி ராணுவ நிகழ்வின் போது கூறினார். பட மூலாதாரம், Getty Images இக்லா-எஸ் (Igla -S) என்பது குறுகிய தூர, குறைந்த உயரத்தில் செயல்படும் வான் பாதுகாப்பு அமைப்பாகும், இது க்ரூஸ் ஏவுகணைகள், டிரோன்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் குறைந்த உயரத்தில் பறக்கும் விமானங்களை சுட்டு வீழ்த்தும் திறன் கொண்டது. வெனிசுவேலா சீனாவால் தயாரிக்கப்பட்ட VN-4 கவச வாகனங்களையும் கொண்டுள்ளது. சமீபத்திய ஆண்டுகளில், தாக்குதல்களை நடத்தும் திறன் கொண்ட ஆயுதமேந்திய டிரோன்களைக் கொண்ட ஒரே தென் அமெரிக்க நாடாக வெனிசுவேலா உள்ளது. இதை மதுரோ 2022-இல் ஒரு ராணுவ அணிவகுப்பின் போது காட்சிப்படுத்தினார். வெனிசுவேலா இரானிடமிருந்து கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளை ஏவும் வசதி கொண்ட பேகாப்-III எனும் வேகமான தாக்குதல் படகுகளையும் பெற்றுள்ளது. அன்டோனியோ ஜோஸ் டி சுக்ரே 100 மற்றும் 200 (ANSU-100 மற்றும் ANSU-200) ஆகியவை இரானிய மாடல்களின் மேம்படுத்தப்பட்ட பதிப்புகளை அடிப்படையாகக் கொண்ட வெனிசுவேலாவில் தயாரிக்கப்பட்ட டிரோன்கள் ஆகும். கூடுதலாக, ரஷ்ய நாடாளுமன்ற உறுப்பினர் அலெக்ஸி ஜுராவ்லெவின் கூற்றுப்படி, ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட பான்ட்சிர்-எஸ் 1 மற்றும் புக்-எம் 2 இ ஏவுகணை அமைப்புகள் சமீபத்தில் ஐஎல் -76 போக்குவரத்து விமானங்களில் வெனிசுவேலாவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. 'எளிதாக' வீழ்த்தக்கூடிய ஓர் அமைப்பு ஆனால் "வெனிசுவேலா இருப்பதாகக் கூறுவதற்கும் உண்மையில் செயல்படுவதற்கும் இடையே ஒரு பெரிய இடைவெளி உள்ளது" என்று 100-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி மையங்களின் நெட்வொர்க்கான பொருளாதார மற்றும் சமூக ஆராய்ச்சிக்கான பிராந்திய ஒருங்கிணைப்பாளர் அமைப்பில் (CRIES) வெளியுறவுக் கொள்கை மற்றும் பாதுகாப்பில் நிபுணத்துவம் பெற்ற சர்வதேச ஆய்வாளர் ஆண்ட்ரே செர்பின் பாண்ட் கூறுகிறார். வெனிசுவேலாவுக்குள் நேரடி தாக்குதல்கள் மேலும் தீவிரமடையக்கூடும் என்று வரும் அறிக்கைகளுக்கு மத்தியில், நாட்டின் வான் பாதுகாப்பு அமைப்புகள் அதிக கவனத்தை ஈர்த்துள்ளன. ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட பெச்சோரா எனும் தரையிலிருந்து வானில் ஏவப்படும் ஏவுகணை அமைப்புகள் போன்றவை, இப்போது பயன்பாட்டில் இல்லாத 1960-களுக்கு முந்தைய வடிவமைப்பை கொண்டவை. அவை அமெரிக்க தொழில்நுட்பத்தால் "எளிதாக வீழ்த்தப்படலாம்" என்று செர்பின் பாண்ட் பிபிசியிடம் கூறினார். பட மூலாதாரம், Getty Images கொரில்லா போர் மதுரோவும் அவரது நெருக்கமான வட்டமும் ஒரு கொரில்லா போரை நடத்த தயாராகி வருவதாக பல ஆய்வாளர்கள் நம்புகின்றனர். செப்டம்பரில், வெனிசுவேலாவின் உள்துறை அமைச்சர் டியோஸ்டாடோ கபெல்லோ நாடு ஒரு "நீடித்த போருக்கு" தயாராக இருப்பதாக எச்சரித்தார். சிறிது நேரத்திற்குப் பிறகு, மதுரோவின் அரசாங்கம் பொலிவேரியன் தேசிய ஆயுதப் படையிடம், ஏழை சமூகங்களைச் சேர்ந்த தன்னார்வலர்களுக்கு ஆயுதங்களைப் பயன்படுத்த பயிற்சி அளிக்க உத்தரவிட்டது. வெனிசுவேலா மக்கள் மதுரோவின் பின்னால் அணிதிரள்வார்கள் என்ற கருத்தை ஜேம்ஸ் ஸ்டோரி நிராகரிக்கிறார். "மதுரோ ராணுவத்தாலோ அல்லது மக்களாலோ நன்கு விரும்பப்படவில்லை, அதனால்தான் மக்கள் அவரைப் பின்தொடர்வார்கள் அல்லது ஒரு கொரில்லா போரில் அவரை ஆதரிப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை," என்று அவர் கூறினார். ''வெனிசுவேலா ராணுவம் அமெரிக்காவுடன் ஓர் உண்மையான மோதலுக்கு தயாராக இல்லை,'' என்று கூறுகிறார். "ஒரு அண்டை நாடான கொலம்பியா அல்லது பிரேசில் உடனான மோதலில் வெனிசுவேலாவின் வழக்கமான ஆயுத அமைப்புகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்," என்று அவர் விளக்கினார், ''ஆனால் அவை அமெரிக்காவிற்கு உண்மையான அச்சுறுத்தலை ஏற்படுத்தாது'' என்றும் தெரிவித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cx2lekv1dn8o
2 months 4 weeks ago
இந்தச் சஜித்துக்கு வாக்குப் போடச் சொன்ன சுமத்திரனு; இப்ப ஏன்குத்தி முறிகிறார். அவரால் நல்லாட்சி என்று அன்பாக அழைக்கப்பட்டு நியமிக்கப்படாத அமைச்சராக ரணிலோடு மதன்நிலவு அனபவித்த போது வடக்கு கிழக்கு எங்கும் 1000 விகாரைகள் அமைக்கப்படும் என்ற ரணிலின் திட்டமே இப்போது நடைமுறைப்படுத்தப்படுகிறது. ஆகவே இந்த புத்தவிகாரைகள் அமைக்கும் திட்டத்திற்கு சுமந்திரன் எதிர்ப்பு தெரிவிக்காமல் ஆதரவாக இருந்துள்ளார். இப்போது பதவி இல்லாத காரணத்தால் நானும் அரசியலில் ஆக்டிவ் ஆக இருக்கிறேன் என்பதற்கான அறிக்கைகளை விட்டுக்கொண்டிருக்கிறார்.
2 months 4 weeks ago
18 Nov, 2025 | 04:41 PM ரஷ்யாவுடன் வர்த்தகத்தில் ஈடுபடும் எந்த நாட்டின் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதிக்கும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர்களை சந்தித்தபோதே இதனைத் தெரிவித்துள்ள ட்ரம்ப், “குடியரசு கட்சி எம்.பிக்கள் செனட் சபையில் பொருளாதார தடைகளுக்கான சட்ட மசோதாக்களை தாக்கல் செய்துகொண்டே இருப்பார்கள். இதுதான் அவர்களுடைய பணி. ரஷ்யாவுடன் வர்த்தகத்தில் ஈடுபடும் எந்த நாட்டின் மீதும் அமெரிக்கா பொருளாதார தடைகளை மேற்கொள்ளும். இதில் பாரபட்சம் இல்லை. அது எந்த நாடாக இருந்தாலும் சரி. இந்த பட்டியலில் ஈரானையும் சேர்க்கச் சொல்லியிருக்கிறேன்” என்றார். ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றது முதல் கடுமையான பல அறிவிப்புகளை அடிக்கடி வெளியிட்டு சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். குறிப்பாக, பிற நாடுகளுக்கு பரஸ்பர வரி விதிப்பதாக அவர் தொடர்ந்து மிரட்டி வருவதோடு, உலக நாடுகளிடையே நிலவி வரும் யுத்தங்களை நிறுத்துவதற்காக வரி விதிப்பை தான் கடுமையாக்கி வருவதாகவும் பல சந்தர்ப்பங்களில் தெரிவித்திருக்கிறார். 2022இல் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததை தொடர்ந்து அந்நாட்டின் மீது ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடை விதித்தன. குறிப்பாக, ரஷ்யாவின் கச்சா எண்ணெய் வர்த்தகத்தை முடக்குவதற்காக பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டன. இந்நிலையில், ட்ரம்ப் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகள் மீது அதிகப்படியான வரியை விதித்து, ரஷ்யா மீதான தனது எதிர்ப்பினை வெளிப்படுத்தினார். இவ்வாறான சந்தர்ப்பத்திலேயே, மீண்டும், ரஷ்யாவுடன் வர்த்தகத்தில் ஈடுபடும் எந்த நாட்டின் மீதும் அமெரிக்கா பொருளாதார தடை விதிக்கும் என ட்ரம்ப் மிரட்டலான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/230718
2 months 4 weeks ago
மனிதர்களுடன் நெருக்கமாக உள்ள பிராணிகளில்... டொல்பின், நாய், பூனை போன்றவை முக்கியமானவை என நினைக்கின்றேன். யானை போன்ற மற்றைய விலங்குகள் மனிதர்களுடன் நெருக்கமாக பழகினாலும் சில நேரங்களில் ஆக்ரோசமாக மாறி விடும்.
2 months 4 weeks ago
மாற்று அவயவங்களுக்காக இந்தியா சென்ற வடக்கு கிழக்கைச் சேர்ந்த குழு! Nov 18, 2025 - 01:35 PM யாழ். பல்கலைக் கழகத்தின் ஒழுங்கமைப்பில் வடக்கு கிழக்கில் வாழும் அவயவங்களை இழந்த மற்றுமொரு தொகுதியினருக்கான மாற்று அவயவங்கள் பொருத்தும் இரண்டாம் கட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்ட 35 பேர் கொண்ட குழு சென்னை சென்றுள்ளது. கனேடிய அரசு, கனடா வாழ். இலங்கை புலம்பெயர் மக்கள் ஆகியோரின் நிதிப்பங்களிப்புடன் யாழ். பல்கலைக் கழகம் முன்னெடுக்கும் இந்த திட்டமானது வடக்கு கிழக்கில் அவயவங்களை இழந்து வாழும் மக்களின் மறுவாழ்வை மையப்படுத்தியதாக குறித்த திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. இதன் அடிப்படையில் மாற்று அவயவங்கள் பொருத்தும் திட்டத்தின் இரண்டாம் கட்டம் செயற்பாடுகளுக்காக 35 பேர் கொண்ட மாற்றுத் திறனாளிகள் இன்று (18) சென்னைக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளனர். யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து இன்று காலை குறித்த 35 பேர் கொண்ட அவயவங்களை இழந்த குழு சென்னை சென்றுள்ளது. யுத்தம் மற்றும் இதர பாதிப்புகளால் பாதிப்புற்று பல்வேறு இடர்பாடுகளுடன் வாழும் மாற்றுத் திறனாளிகளின் வழமையான செயற்பாடுகளை இலகுபடுத்தும் நோக்குடன் நவீன தொழில் நுட்பங்களுடன் கூடிய, இலகுவாகக் கையாளக்கூடிய வகையில் உருவாக்கப்பட்ட செயற்கை அவயவங்கள் குறித்த 35 பேருக்கும் "சென்னை ஸ்பாக் மிண்டா" நிறுவனத்தினூடாக வழங்கப்படவுள்ளதாக குறித்த ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது. -யாழ். நிருபர் பிரதீபன்- https://adaderanatamil.lk/news/cmi4ah7da01qoo29n08rl60us
2 months 4 weeks ago
யாழ் பல்கலைக் கழகத்தின் ஒழுங்கமைப்பில் வடக்கு கிழக்கில் வாழும் அவயவங்களை இழந்த மற்றுமொரு தொகுதியினர் சென்னை சென்றுள்ளனர்! யாழ் பல்கலைக் கழகத்தின் ஒழுங்கமைப்பில் வடக்கு கிழக்கில் வாழும் அவயவங்களை இழந்த மற்றுமொரு தொகுதியினர் சென்னை சென்றுள்ளனர் கனேடிய அரசு, கனடா வாழ் இலங்கை புலம்பெயர் மக்கள் ஆகியோரின் நிதிப்பங்களிப்புடன் யாழ் பல்கலைக் கழகம் முன்னெடுக்கும் இந்த திட்டமானது, வடக்கு கிழக்கில் அவயவங்களை இழந்து வாழும் மக்களின் மறுவாழ்வை மையப்படுத்தியதாக குறித்த திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. இதன் அடிப்படையில் மாற்று அவயவங்கள் பொருத்தும் திட்டத்தின் இரண்டாம் கட்டம் செயற்பாடுகளுக்காக 35 பேர் கொண்ட மாற்றுத் திறனாளிகள் இன்றைய தினம் யாழ் .சர்வதேச விமான நிலையத்திலிருந்து சென்னைக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளனர். யுத்தம் மற்றும் இதர பாதிப்புகளால் பாதிப்புற்று பல்வேறு இடர்பாடுகளுடன் வாழும் மாற்றுத் திறனாளிகளின் வழமையான செயற்பாடுகளை இலகுபடுத்தும் நோக்குடன் நவீன தொழில் நுட்பங்களுடன் கூடிய, இலகுவாகக் கையாளக்கூடிய வகையில் உருவாக்கப்பட்ட செயற்கை அவயவங்கள் குறித்த 35 பேருக்கும் சென்னை ஸ்பாக் மிண்டா” நிறுவனத்தினூடாக வழங்கப்படவுள்ளதாக குறித்த ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது. https://athavannews.com/2025/1453092
2 months 4 weeks ago
அண்ணை, விசா எடுக்காட்டியும் சனத்திற்கு இலவசமாக விளையாட்டு காட்டும் டொல்பின்களுக்கு நன்றி தான் சொல்லவேணும்.
2 months 4 weeks ago
அதுகளுக்கு என்ன... விசா எடுக்காமல், நாடு நாடாக சுத்தி திரியுதுகள். 🐋 🐬 🙂
2 months 4 weeks ago
18 Nov, 2025 | 12:31 PM இலங்கையில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் கிடைக்கப்பெற்ற அதி கூடிய மழை வீழ்சியாக யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் 101.7 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர் என் சூரியராஜா தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த 24 மணித்தியாலத்துக்குள் யாழ். மாவட்டத்தில் கிடைக்கப்பெற்ற அதி கூடிய மழைவீழ்ச்சி காரணமாக நான்கு குடும்பங்களைச் சேர்ந்த 14 பேர் பாதிப்புக்கு உள்ளாகி உள்ள நிலையில் 4 வீடுகள் பகுதி அளவில் சேதமடைந்துள்ளன. மேலும் செவ்வாய்க்கிழமை (18) வரை மழை நீடித்து குறைவதற்கான சாத்தியங்கள் உள்ள நிலையில் எதிர்வரும் 22 ஆம் திகதி மீண்டும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் மழை பெய்வதற்கான எதிர்ப்பு கூறல்கள் விடப்படுகின்று. வடக்கு கிழக்கு மாகாணங்களில் எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கும் மழையானது எதிர்வரும் 27 ஆம் திகதி வரை நீடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. கடற் தொழிலாளர்களைப் பொறுத்தவரையில் சூறாவளிக்கான எச்சரிக்கைகள் விடப்படாத நிலையில் மழை பெய்யும் போது இடி மின்னல் தாக்கங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ள நிலையில் கடற் தொழில் நடவடிக்கைகளின் போது எச்சரிக்கையாக இருக்குமாறு வேண்டப்படுகின்றனர் என்றார். https://www.virakesari.lk/article/230670
2 months 4 weeks ago
இராமநாதபுரம் கடற்கரையோர பகுதிகளில் உலாவரும் மன்னாரில் தென்பட்ட டொல்பின்கள் 18 Nov, 2025 | 12:28 PM மன்னார் இலுப்பைக்கடவை கடற்பகுதிக்கு கூட்டமாக வருகை தந்த டொல்பின்கள் தற்போது இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, தொண்டி கடலோரப் பகுதிகளுக்கு சென்ற நிலையில் செவ்வாய்க்கிழமை (18) காலை முதல் குறித்த டொல்பின் கூட்டம் கூட்டமாக கரையோர பகுதிகளுக்கு வருகை தந்துள்ளன. இந்த அற்புதமான காட்சி அப்பகுதி மக்களை வெகுவாக கவர்ந்துள்ளன. பொதுவாக அரிதாகவே நிகழும் இத்தகைய நிகழ்வு, இன்று பல டொல்பின்கள் ஒரே நேரத்தில் துள்ளி குதித்து நீந்துவது, காண்போரை வியப்பில் ஆழ்த்தியது. இத்தகைய ஒரு நிகழ்வு, அதாவது இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான டொல்பின்கள் ஒரே நேரத்தில் கடலோர பகுதிக்கு வந்து துள்ளி குதிப்பது, இதுவே முதல்முறை என்று அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் தெரிவித்தனர். https://www.virakesari.lk/article/230668
2 months 4 weeks ago
பாதாள உலகத்துடன் தொடர்புடைய அரசியல்வாதிகள் பற்றிய தகவல் வெளியானது Nov 18, 2025 - 12:02 PM சமீபத்தில் கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலம் பாதாள உலகத்துடன் தொடர்புடைய அரசியல்வாதிகள் பற்றிய தகவல்கள் வௌியாகியுள்ளதாகப் பொதுப் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். இன்று (18) பாராளுமன்ற வரவு செலவுத் திட்டக் குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார். இந்தத் தகவல்கள் தொடர்பில் விசாரணைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் கூறினார். மேலும் 80 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்குச் சிவப்பு அறிவித்தல்கள் வௌியிடப்பட்டுள்ளதாகவும், அவர்களைக் கைது செய்ய சர்வதேசப் பொலிஸாருடன் இணைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். அண்மையில் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளிடம் மேற்கொண்ட விசாரணைகளின் மூலம் ஓகஸ்ட் 30 ஆம் திகதிக்குப் பின்னர் 7 T56 ரக துப்பாக்கிகள், ஒரு T81 ரக துப்பாக்கி, 6 பிஸ்டல்கள், 9 ரிவோல்வர்கள், வேறு 2 ஆயுதங்கள் மற்றும் 909 தோட்டாக்கள் ஆகியன கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். https://adaderanatamil.lk/news/cmi474yvb01qio29nqzuhha26
2 months 4 weeks ago
“முழு நாடுமே ஒன்றாக” போதைப்பொருள் சுற்றிவளைப்பு : 931 பேர் கைது! Published By: Digital Desk 1 18 Nov, 2025 | 11:02 AM நாடு முழுவதும் போதைப்பொருளை தடுக்கும் “முழு நாடுமே ஒன்றாக” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய, இலங்கை பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டுவரும் தொடர்ச்சியான, போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளின்போது, பலர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, நேற்று திங்கட்கிழமை (17) முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளுக்கமைய, 677 கிராம் ஹெரோயின், 1 கிலோகிராம் 177 கிராம் ஐஸ், 63 கிலோகிராம் 495 கிராம் கஞ்சா, 23,097 கஞ்சா செடிகள், 273 கிராம் குஷ்ரக போதைப்பொருள், 49 கிராம் ஹஷீஷ் ரக போதைப்பொருள், 1357 போதை மாத்திரைகள் மற்றும் 2 கிலோகிராம் 319 கிராம் மாவா போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. அதேநேரம், குறித்த போதைப்பொருட்களுடன் தொடர்புடைய 931 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.மேலும், தடுப்புக்காவல் உத்தரவு பெற்ற 34 பேரும், சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணைக்கமைவாக இருவரும்; கைது செய்யப்பட்டுள்ளனர். அதேநேரம், 936 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதுடன், 64 பேர் மறுவாழ்வு நிலையங்களுக்கு அனுப்பிவைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/230655
2 months 4 weeks ago
இலங்கை தேசிய T-20 அணியில் இடம்பிடித்த வியாஸ்காந்த் Nov 18, 2025 - 01:56 PM பாகிஸ்தானில் நடைபெறும் டி20 முத்தரப்பு தொடருக்கான இலங்கையின் தேசிய ஆடவர் அணியில் சுழற்பந்து வீச்சாளர் விஜயகாந்த் வியாஸ்காந்த் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார். ‘ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ்’ போட்டியில் இலங்கை ‘ஏ’ அணியில் இடம் பெற்றிருந்த அவர் கட்டாரில் இருந்து அவர் நேரடியாக பாகிஸ்தானுக்கு பயணம் செய்வார் என ஶ்ரீ லங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரின் வனிந்து ஹசரங்கவுக்கு காயம் ஏற்பட்டிருந்த நிலையில் அவர் இன்னும் முழுமையாக குணமடையாததால், வியாஸ்காந்த் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த முத்தரப்பு தொடரில் எதிர்வரும் 20 ஆம் திகதி இலங்கை சிம்பாப்வே அணியை எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cmi4b80oa01qqo29n1uakqsyu
2 months 4 weeks ago
Published By: Digital Desk 3 18 Nov, 2025 | 03:09 PM (இணையத்தள செய்திப் பிரிவு) ஏஐ கருவிகள் சொல்லும் அனைத்தையும் மக்கள் கண்மூடித்தனமாக நம்பக்கூடாது என கூகிளின் தாய் நிறுவனமான ஆல்பபெட்டின் தலைவர் சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். பிபிசிக்கு வழங்கிய நேர்காணலிலேயே இதனை அவர் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, ஏஐ மாதிரிகளில் பிழைகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் மற்றைய கருவிகளுடன் அவற்றைப் பயன்படுத்த வேண்டும். இதன்மூலம், ஏஐ தொழில்நுட்பத்தை மட்டுமே நம்பியிருக்காமல், செழுமையான தகவல் அமைப்பைக் (information ecosystem) கொண்டிருப்பதன் முக்கியத்துவத்தை இது எடுத்துக்காட்டுகிறது. "இதனால்தான் மக்கள் கூகிள் தேடலையும் பயன்படுத்துகிறார்கள், மேலும் எங்களிடம் துல்லியமான தகவல்களை வழங்குவதில் அதிக உறுதியுடன் இருக்கும் பிற தயாரிப்புகளும் உள்ளன." "நீங்கள் ஆக்கப்பூர்வமாக ஏதேனும் எழுத விரும்பினால்" ஏஐ கருவிகள் உதவியாக இருந்தாலும், மக்கள் "இந்தக் கருவிகள் எதற்குச் சிறந்ததோ அதற்காகப் பயன்படுத்தக் கற்றுக்கொள்ள வேண்டும், சொல்லும் அனைத்தையும் கண்மூடித்தனமாக நம்பக்கூடாது" "எங்களால் முடிந்த அளவு துல்லியமான தகவல்களை வழங்குவதற்காக நாங்கள் செய்யும் பணியில் பெருமை கொள்கிறோம், ஆனால் தற்போதைய அதிநவீன ஏஐ தொழில்நுட்பத்தில் சில பிழைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன," https://www.virakesari.lk/article/230693
Checked
Tue, 02/17/2026 - 18:52
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed