2 months 4 weeks ago
யாழ்கள அனுர காவடிகளுக்கான பதிலா அது?👆 அரைச்ச மாவை திருப்பியும் அரைக்காமல்..... வேறு வழிகள் இருந்தால் சொல்லுங்கள். ஈழத்தமிழர்கள் அன்று தொடக்கம் தம் நலனுக்காக காவடி எடுத்துக்கொண்டே இருக்கின்றார்கள். தமது நேர்த்தி நிறைவேறும் வரை.... நான் கருத்து வெற்றிக்காக கருத்து எழுதுபவனல்ல. இன்றைய யதார்த்தம் எதுவோ அதுவே தகும்.
2 months 4 weeks ago
பனையின் கவலை! ********************** என் மண்ணைப் பற்றி பிடித்ததனால் மரமாக நிற்கின்றேன் பிள்ளைகளை மாடுழக்கி தோலுரித்து பற்களால்- உதிரக்கழி உறிஞ்சி தூக்கியெறிய வந்தவனோ பனம் பாத்தியென்று மண்தோண்டி மூடிச்சென்றான். நாளை வடலியாக வளருமென்ற நம்பிக்கையில்தான் நான் வாழுகின்றேன். -பசுவூர்க்கோபி.
2 months 4 weeks ago
எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டிய உண்மை, அமெரிக்காவில் (அல்லது எந்த மேற்கு நாட்டிலும்) வருமானம் இல்லா விட்டால் வாழ முடியாது. வருமானம் வேலையின் மூலம் பெற்றுக் கொள்ள முடியாதோர், அல்லது வரும் வருமானம் போதாமல் இருப்போர் ஆகிய தரப்பினருக்காக 60 களில் உருவாக்கப் பட்ட SNAP உணவுத் திட்டத்தைப் பற்றி அபிலாஷ் நுனிப்புல் மேய்ந்திருக்கிறார். இது பணவீக்கம் அதிகரித்தமையால் மக்கள் பட்டினி கிடக்க ஆரம்பித்த பின்னர் உருவான திட்டமல்ல. வறுமைக் கோட்டுக்கு கீழே இருப்போருக்கான உதவித் திட்டம் அவ்வளவு தான். வறுமை இல்லையானால் பெற்றுக் கொள்ள முடியாது. மற்றபடி இது மட்டுமே அமெரிக்காவில் உணவு உதவி புரியும் திட்டம் என்றும் சொல்ல முடியாது. பல்வேறு தொண்டு அமைப்புகளும், உள்ளூர் அரசு அமைப்புகளும், பள்ளிக் கூடங்களும் கூட குழந்தைகள் பட்டினி கிடக்காமல் இருக்க திட்டங்கள் வைத்திருக்கிறார்கள். தெருவில் நிற்கும் இந்தியர்களை மாடமாளிகையில் வாழும் இந்தியர்கள் பார்த்துக் கொள்வதை விட சிறப்பாக இங்கே வாழும் மக்கள் இத்தகைய திட்டங்களுக்கு நன்கொடை வழங்கி ஏனையோரின் பசி தீர்க்க உதவுகிறார்கள்.
2 months 4 weeks ago
என்னை. பொறுத்த மட்டில். சாவகச்சேரி. எனது. தொகுதி. அந்த மக்கள. என்னுடைய. சிறு வயதிலிருந்து. இங்கே வரும்வரை. கிட்டத்தட்ட. 27. ஆண்டுகளாக. பெரும்பான்மையாக. தமிழரசுக் கட்சியை. ஆதரித்து வந்துள்ளார்கள். ஏன். நான். கூட. எங்கள். இரத்தினம். நவரத்தினம். தேர்தல். காலங்களில் இப்படி பல. கோஷங்களை. எழுப்பி. உள்ளோம். என்ன. பலன ? அந்த. மக்கள். வேறு. வழியின்றித். தான். அர்ச்சுனாவை. தெரிவு. செய்தார்கள். இங்கே. தமிழரசு. கட்சிக்கு. ஒரு. செய்தி சொல்லப்பட்டுள்ளது. நீங்கள். ஒழுங்ககா. இல்லாவிடில். எந்த. விடுகாலிக்கும். நாங்கள். எங்களது. வாக்கைப். போடுவோம். இந்த. துணிவு. மற்றைய. தொகுதி. மக்களுக்கு. இல்லை என்பது. கவலையான. விடயம் அர்ச்சுனாவை. தெரிவு. செய்ததால். எந்த. நட்டமும் இல்லை. அவரது. இடத்துக்கு வேறு நபர். தெரிவு. செய்யப்பட்டாலும் அந்த. நபரும் எதுவுமே. செய்திருக்க. மாட்டார். பதவியைப் பற்றிக் கவலைப்படமால். பாரளுமன்றத்தில். கதைக்கிறார் இல்லையா. ? அது. பிழையாகவுமிருக்கலாம். சரியாகவுமிருக்கலாம். அவர். பயப்படமால். மூன்று மொழிகளிளும். கதைக்கிறார். மற்றைய. தமிழ். பாரளுமன்ற. உறுப்பினர்கள். அனைவரும். பயத்தவர்கள். பதவி. பறிக்கப்படும். ்்்சட்டம். பாயும். என்று. பயத்தவர்கள். எந்த ஒரு விடயத்திலும். சாதிக்க. முடியாது. அவரால் அடக்கி ஒடுங்கி. இருக்கவும் நீங்கள் விரும்புவது போல். நடக்கும். முடியும் தமிழரசு கட்சியல் அல்லது. தமிழ். காங்கிரஸ். இல்லை ஜே வி பி. உடன் மகிந்தவின். கட்சியில். இணைய. முடியும். செய்யவில்லை. ஏன். அவன். ஒரு பைத்தியம். எங்கள். இலங்கை. பாரளுமன்றத்தில். இருப்பவர்கள். பைத்தியமாகத். தான் இருப்பார்கள் எதுவும் செய்யமால் தொடர்ந்தும் பல. தமிழர்கள். பாரளுமன்றம். போகிறார்கள். ஏன் எதுவும். செய்ய. முடியாது. என்று தெரிந்தும். போக. வேண்டும். இவர்களுக்கு ஏன்வாக்கு. போட. வேண்டும் ? அர்ச்சுனாவை. ஏன். பேசுகிறீர்கள். ? அவர். ஒரு வருடத்தில். பேசிய. பேச்சுக்களை. 30. ஆண்டுகளுக்கு. மேல். பாரளுமன்றம். போனவார்கள். பேசியதில்லை. குறிப்பு. ்்்்குழந்தைகள் உடன். நடக்க. மாட்டார்கள் விழுந்து. விழுந்து. தான். சரியாகநடக்கப். பழக முடியும் கார். ஒடப் பழகுவது கூட. பிழை விட்டுதான். பழகிறோம். ்்்இப்படியாக. ஒவ்வொரு. விடயமும். செயல்களும் பிழை விட்டு. பிழை விட்டு தான். சரியாக. செய்யமுடியும். இலங்கைபாரளுமன்றத்தில். இயற்றப்பட்ட ஒரு. நல்ல. சட்டத்தை. சொல்லுங்கள். பார்ப்போம் சிங்களவருக்கு. அல்லது தமிழருக்கு இல்லை. முஸ்லிகளுக்கு. ஒரு. நல்ல. சட்டம்் இயற்றப்பட்டுள்ளதா. ? இல்லை. எனவே. இந்த. மன்றத்தில்் எப்படியும். கதைக்கலாம். அர்ச்சுனா. கதைப்பதைப் பார்த்து மற்றவர்களில் பயம். களையப்பட. வேண்டும். இல்லாமால். போகும்
2 months 4 weeks ago
இலங்கையிலும் பாராளுமன்றத்திற்கு வெளியே இதைச் செய்ய முடியாது. அர்ச்சுனா மட்டுமல்ல, கஜேந்திரகுமார் போன்றோர் கூட பாராளுமன்ற சிறப்புரிமையைப் பயன்படுத்தி உள்ளே பேசலாம். அதற்கும் கட்டுப் பாடுகள் உண்டு - பேசி ஒலி/ஒளி போடலாம். ஆனால், கட்டுப் பாடுகளை மீறினால் அப்படியொரு உரை நிகழ்ந்ததற்கான அடையாளமே இல்லாமல் ஹன்சாட்டிலிருந்து உரையை அகற்றி விட முடியும். இதை விட நுணுக்கமான வேறு விடயங்களும் உண்டு. இலங்கை அரசியலைமைப்பின், "பிரிவினை கோருதல் குற்றம்" என்று சொல்லும் "6 வது திருத்தச் சட்டத்தை ஏற்றுக் கொள்கிறேன்" என்று சத்தியப் பிரமாணம் எடுத்துத் தான் பா.உ க்கள் எல்லோரும் பதவியேற்றிருக்கிறார்கள். ஆனால், அனல் பறக்கும் பேச்சுக்களை மட்டும் கவனமாகப் பேசுவர்!
2 months 4 weeks ago
அப்படியா! அப்ப இலங்கையில் பாராளுமன்றத்திற்கு வெளியே கூட்டம் போட்டு புலிக்கொடியேற்றி தலைவர் பிரபாகரனுன் கொள்கைகளை நான் பொறுப்பேற்று நடத்தப் போகிறேன் என்று கூறலாமே! அடக்கி ஆளும் நாட்டில் தானே போராடவேண்டும் உஙலகள் கூற்றுப்படி.
2 months 4 weeks ago
2 months 4 weeks ago
நாய்க்கு கல் எறிவதே உங்க வேலையா போச்சு. அப்புறம் துரத்துது கடிக்குது என்று முறைப்பாடு வேற. எதுக்கும் சாத்தான் வருமட்டும் பொறுத்திருப்போம்.
2 months 4 weeks ago
In the U.S., about 41.7 million people received benefits from the Supplemental Nutrition Assistance Program (SNAP) on average per month during fiscal year 2024 — about 12.3% of the population. இலங்கையிலும் ஏதோ ஒரு பெயரில் 10 ஆயிரம் கொடுக்கிறார்கள் என எண்ணுகிறேன். மத்திலுள்ள மாநிலங்களில் உள்ள ஏழைகள் சிகப்பு கட்சிக்கு வாக்கைப் போடுகிறார்கள். இந்த தடவை கொஞ்சம் மாட்டிக் கொண்டார்கள். இவர்களுக்கான மருத்துவ காப்புறுதியையும் மாற்றுகிறார். இதன் தாக்கம் இன்னும் கொஞ்ச காலத்தில் தெரியும்.
2 months 4 weeks ago
2 months 4 weeks ago
அமெரிக்காவின் அவலம் அமெரிக்காவில் உள்ள மத்திய, கீழ்மத்திய வர்க்கத்தினரில் ஒரு பகுதியினர் சம்பளத்துக்கென்று வேலையிருந்தும் வருமானத்தைக் கொண்டு வாழ்க்கையை ஓட்ட முடியாத நிலையில் இருக்கிறார்கள். பணவீக்கம் அந்தளவுக்கு அதிகரித்துள்ளது. இவர்களைக் காப்பாற்றுவதற்காக உணவுச் சலுகைச் சீட்டை அரசு அறிமுகப்படுத்தியது. வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு இ.பி.டி எனப்படும் மின்னணு பயன் பரிமாற்ற அட்டையைக் கொடுக்கிறார்கள். 40 மில்லியனுக்கு மேல் மக்கள் இதைப் பயன்படுத்துகிறார்கள். மளிகைக் கடை, சூப்பர் மார்க்கெட்டுகளில் இதைக் கொண்டு பொருள் வாங்கலாம். இதில் ஒரு பெரிய சிக்கல் அரசு முடிந்தளவுக்கு மக்களை இந்த திட்டத்தில் இருந்து வெளியேற்றவே முயல்கிறது என்பது. ரெண்டாயிரத்து சொச்சம் டாலர்களே ஒரு குடும்பத்தின் மாத வருமானமாக இருக்க வேண்டும் என வரையறை உண்டென்றாலும் (இதில் பல நுணுக்கமான விதிமுறைகள் இருக்கலாம்) சம்பளத்தில் சிறிதே தொகை ஏறினால் கூட அட்டையில் உள்ள பணத்தைக் குறைத்துவிடுவார்கள். உதாரணத்திற்கு (இந்திய ரூபாய் கணக்குப்படி)உங்கள் சம்பளம் மாதத்திற்கு 15,000. ஒருநாள் உங்கள் கணக்கில் ஆயிரம் கூடுதலாக வந்தால் அரசு உங்களுக்கான மானியத்தை ரத்து பண்ணிவிடும் என வையுங்கள். நீங்கள் எங்கே போவீர்கள்? ஆயிரம் ரூபாயைக் கொண்டு ஒரு மாதத்துக்கான செலவையெல்லாம் நடத்திவிட முடியுமா? முடியாது. இப்போது மக்கள் மிக மலிவான பொருட்களை மட்டும் வாங்கி அதையே மூன்றுவேளைகளும் உண்கிறார்கள். அதுவும் கிடைக்காதபோது வீட்டுக்குள் பசியுடன் காத்திருக்கிறார்கள். இதைக் குறித்து கார்டியன் இதழில் ஒரு கட்டுரை படித்தேன். நாட்கணக்காக பாக்கெட்டில் கிடைக்கும் ஒரே துரித உணவைச் சாப்பிடுகிறார்கள். காய்கறிகள், சத்தான உணவுகளை கண்ணிலே பார்க்க இயலாது என ஒருவர் அதில் பேட்டியளித்திருக்கிறார். "ஆரம்பத்தில் ஸ்னேப் அட்டையைப் பயன்படுத்தவே கூச்சமாக இருந்தது, யாராவது பார்த்தால் கௌரவம் போய்விடுமே என ஒதுங்கி நடப்பேன், ஆனால் ஊரில் பலரும் அதைப் பயன்படுத்துகிறார்கள் எனத் தெரிந்த பின்னரே நான் இயல்பானேன். நாங்கள் இப்போதெல்லாம் பரஸ்பரம் பார்த்து புன்னகைத்துக் கொள்கிறோம்." என்கிறார் அவர். யோசித்துப் பார்த்தால் நியாய விலைக் கடைகளில் பொருள் வாங்குவதற்கோ அரசு தரும் உரிமைத் தொகையைப் பெறுவதற்கோ நாம் கூச்சப்படுவதில்லை. அது 'நியாயமானது' எனும் உணர்வு நமக்கு உள்ளதைப் போல வலதுசாரி முதலீட்டிய நாடான அமெரிக்காவில் இல்லை. அங்கு 'ஏழ்மையை' ஒரு சமூக அநீதியாகக் காணும் புரிதல் குறைவு. தோல்வியுற்றவர்களே ஏழைகள் என்பதே அவர்களின் விழுமியம். ஸ்னேப் நிர்வாகி ஒருவர் சொல்வதாக மற்றொரு கார்டியன் கட்டுரையில் சொல்கிறார்கள்: "ஸ்னேப் தொகையை அரசு நிறுத்திவிட்டது. கடைசி சில்லறைக் காசையும் பயன்படுத்திவிட்டோம். இப்படியே போனால் எங்களுக்கு சாப்பிட பூனை உணவு மட்டும்தான் மீதமிருக்கும்." டிரம்ப் அடிப்படையில் ஏழைகளுக்கு உரிமைத்தொகை வழங்குவதற்கு எதிரானவர். ஆனால் இந்த ஏழைகளே இவர்களுக்கு அதிகமாக வாக்களிக்கிறார்கள் என ஒரு புள்ளிவிபரம் சொல்கிறது (உங்கள் பணத்தையெல்லாம் வந்தேறிகளான இஸ்லாமியர், ஆசியர்கள், லத்தீன் அமெரிக்கர்கள் எடுத்துக்கொள்கிறார்கள், கம்யூனிஸ ஆதரவாளர்களான முற்போக்காளர்கள் இதை ஆதரிக்கிறார்கள் எனச் சொல்லி ஏமாற்றி வாக்குகளை அவர் அள்ளிவிடுகிறார்.) அவர் ஏற்கனவே பேசியபடி ஸ்னேப்புக்கான நிதியை நிறுத்திவிட்டார். நீதிமன்றம் தலையிட்டு வலியுறுத்தியபடி அவர் சிறிது தொகையை மட்டும் கொடுப்பதாகச் சொல்கிறார். இதனிடையே அங்கே பட்டினி கிடக்கும் மாத வருமானத்தினரின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. நம்மூரில் விடுமுறை நாட்களிலும் குழந்தைகளுக்கு சத்துணவு கொடுக்கிறார்கள். அங்கு அதுவும் இல்லை. பட்டினிதான். இப்போதும்கூட இதனால் மக்களுக்கு டிரம்ப் மீது கோபம் வந்து கலகம் செய்ய மாட்டார்கள். எல்லாவற்றுக்கும் காரணம் வந்தேறிகள்தாம் என்று சொல்லி அவர்கள் வாக்குகளை அறுவடை செய்துவிடுவார். இந்தியா அமெரிக்காவை விட பல மடங்கு மேலானது எனும் உணர்வு எனக்கு ஒருநாள் வரும் என நான் கற்பனையே பண்ணியிருக்கவில்லை. இங்கு உங்களுக்கு மாத வருமான வேலை இருந்தாலே போதும், மூன்று வேளையும் உணவுக்குப் பஞ்சமில்லை. வேலையும் இருக்க வீடும் இல்லாத தெருவில் வாழும் பெண்களுக்கு கூட கர்நாடகாவில் அரசு விடுதியை நடத்துகிறது. மாநில அரசுகள் பெண்களுக்கு மாதமாதம் உரிமைத்தொகை கொடுப்பது தேர்தல் யுக்தியாகிவிட்டது. சலுகையையோ மானியத்தொகையையோ உரிமைத்தொகைகளையோ அரசோ கட்சிகளோ அவமதிப்பதில்லை. ஏழ்மை குறித்த குற்றவுணர்வு மேல்மத்திய, மேல்வர்க்கத்திடம் தாராளமாக உள்ளது. என்னதான் குப்பைக்கூளமாக, மதவெறியர்களாக, ஏற்றத்தாழ்வுகள் மிகுந்த நாம் இருந்தாலும் அடிப்படையான பாதுகாப்பு வலையொன்றை வைத்திருக்கிறோம். நான் கடந்த மாதம் வயநாடு சென்றிருந்தபோது அங்கு ஒரு வீட்டின் முன்பு பத்து பெண்கள் சீருடை அணிந்து சீரமைப்புப் பணியைச் செய்து கொண்டிருப்பதைப் பார்த்தேன். விசாரித்தபோது அவர்கள் நூறு நாள் வேலைத்திட்டம் போன்ற ஒன்றைச் சேர்ந்தவர்கள் என்றும், பொதுமக்களுக்கு வேலை செய்ய ஆள் தேவைப்பட்டால் அரசிடம் விண்ணப்பித்து இவர்களின் சேவையைப் பெற்றுக்கொள்ளலாம் என்றார்கள். அரசின் முகமையில் இவர்கள் வருவதால் அடிப்படைப் பாதுகாப்பு உண்டு. உடலுழைப்பு வேலைகளுக்கு அங்கு ஆள் கிடைக்காத நிலையில் இதனால் பொதுமக்களும் பயன்பெறுகிறார்கள். தனியாரிடம் உழைப்பாளிகளைப் பணயம் வைக்காமல் அரசு தொழில் நிர்வாகத்தில் நேரடிப் பங்கு வகிப்பது எவ்வளவு முக்கியம் என்பதற்கு நல்ல உதாரணம் இது. வாக்குகளைத் திருடித்திருடி பாஜக இன்னும் பத்திருபது ஆண்டுகள் ஆண்டாலும் வேலை செய்து சம்பாதித்துக்கொண்டே ஏழையாகவும் பரதேசியாகவும் இருக்கும் நிலை இந்தியர்களுக்கு வரப்போவதில்லை. இந்த பாதுகாப்பு நடைமுறைகளும் கட்டமைப்பும் இல்லாததாலே அமெரிக்காவில் பணவீக்கமும் அதிகரித்ததும் எளிய மக்களும் மத்திய் வர்க்கமும் தெருவுக்கு வருகிறார்கள். முதலீட்டிய-சார்பு சமூகங்கள் பெங்களூர் நகராட்சி போடும் சாலையைப் போன்றவை. எப்போது அது உடைந்து வாகனம் உள்ளே போகும் எனத் தெரியாது. Posted Yesterday by ஆர். அபிலாஷ் https://thiruttusavi.blogspot.com/2025/11/blog-post_18.html @Justin , @ஈழப்பிரியன் அண்ணாக்கள் மேலுள்ள தகவல்கள் உண்மையா?!
2 months 4 weeks ago
சுமந்திரனின் படம் போட்டு 3 மணி நேரமாகிறது! @satan நலமாக இருக்கிறாரா? எங்கே காணவில்லை😇?
2 months 4 weeks ago
என்னது? காசு ..இல்லையா? சரி போகட்டும்! "Money is not everything" credit cards, letter of credit, unlimited credit line..என்று பல விடயங்கள் இருக்கே? அதில ஒன்றை எடுத்து "வியாபாரக் காந்தமாக" வலம் வரலாமே😂?
2 months 4 weeks ago
இராஜதந்திர மோதல் ; ஜப்பானிய கடல் உணவு இறக்குமதியை தடை செய்யும் சீனா Published By: Digital Desk 3 19 Nov, 2025 | 03:55 PM இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர மோதல் தீவிரமடைந்து வருவதால், ஜப்பானிய கடல் உணவுகளின் அனைத்து இறக்குமதியையும் சீனா மீண்டும் தடை செய்யும் என ஜப்பானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பசிபிக் கடலில் விடப்பட்டுவரும் புக்குஷிமா அணு நிலையத்தின் சுத்திகரிக்கப்பட்ட நீரை மேலும் கண்காணிக்க வேண்டிய அவசியம் உள்ளதாக சீனா ஜப்பானுக்கு அறிவித்துள்ளது. இதனையடுத்து, சீனாவால் ஜப்பான் கடல் உணவுகளுக்கு மீண்டும் இறக்குமதி தடைவிதிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்தத் தடை நடைமுறைக்கு வரும் நிலையில், பீஜிங் –டோக்கியோ இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் அதிகரித்துள்ளது. ஜப்பான் பிரதமர் சனே தகாய்சி நவம்பர் மாதம் 7-ஆம் திகதி பாராளுமன்றத்தில் பேசியபோது, “தாய்வானின் மீது சீனா தாக்குதல் நடத்தி, அது ஜப்பானின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான நிலையை உருவாக்கினால், டோக்கியோ இராணுவ நடவடிக்கை எடுக்கக்கூடும்” என தெரிவித்துள்ளார். இந்தக் கருத்துக்கள் சீனாவில் கடும் எதிர்ப்பு அலையை ஏற்படுத்தியுள்ளதால் இரு நாடுகளின் உறவில் புதிய பதற்றத்தை உருவாக்கியுள்ளது. ஜப்பான் பிரதமர் தகாய்சியின் கருத்துகள் சீன அதிகாரிகள் மற்றும் அந்நாட்டு அரச ஊடகங்களின் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. இதன் பின்னர், சீனாவில் உள்ள ஜப்பான் பிரஜைகள் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை எடுக்கவும், கூட்டம் அதிகமாகும் பகுதிகளைத் தவிர்க்கவும் டோக்கியோ அரசு அறிவுறுத்தியது. தகாய்சியின் கருத்துகளுக்குப் பின்னர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், ஓசாகாவில் உள்ள சீனத் தூதரகத்தின் தூதர் சுஏ ஜியான், ஜப்பான் பிரதமரை குறிக்கும் விதத்தில் “அந்த அசுத்தமான கழுத்தை வெட்டி எறிவோம்” என மிரட்டல் விடுத்தார். பின்னர் அந்தப்பதிவு அழிக்கப்பட்டதை தொடர்ந்து, சீன தூதரை அழைத்து விளக்கம் கோரப்பட்டதாக ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது. ஜப்பானுக்கு பயணம் செய்ய வேண்டாம் என சீன குடிமக்களுக்கு பீஜிங் அறிவுறுத்தியுள்ளது. மேலும், தகாய்சி தனது கருத்துக்களை திரும்பப்பெற வேண்டும் என்றும் கோரியுள்ளது. இதற்கு பதிலாக, டோக்கியோ அரசு, அந்த கருத்துக்கள் அரசின் நிலைப்பாட்டிற்கு ஏற்பவே உள்ளதாக தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/230811
2 months 4 weeks ago
19 Nov, 2025 | 04:03 PM (எம்.மனோசித்ரா) இலங்கையின் வரலாற்றில் புத்தர் சிலையை கைது செய்த முதல் ஆட்சியாளராக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க சாதனை படைத்துள்ளார். புத்தரை கைது செய்வதற்கு சமமாக இடம்பெற்ற இந்த சம்பவத்தால் ஒட்டுமொத்த பௌத்த சமூகமும் அதிர்ச்சியடைந்துள்ளது. எமது நாளைய பேரணியில் இவ்வாறான சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக இந்த அரசாங்கத்தின் முடிவை ஆரம்பிப்பிக்கின்றோம் என பிவிதுரு ஹெல உருமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார். கொழும்பில் புதன்கிழமை (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், நாளை வெள்ளிக்கிழமை இந்த அரசாங்கத்தின் முடிவின் ஆரம்பிப்பதைக் குறிக்கும் நுகேகொடை பேரணியில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, பிவிதுரு ஹெல உருமய, ஸ்ரீலங்கா மகாஜன கட்சி, ஜனதா சேவக கட்சி, நவ ஜனதா பெரமுன உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் பங்கேற்கவுள்ளன. எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பல பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்கத்திற்கு எதிராக நடத்தப்படும் முதல் எதிர்ப்புப் பேரணிக்குத் தமது ஆதரவைத் தெரிவிக்கும் பொருட்டு, மக்களுடன் இணைந்து பேரணியில் கலந்துகொள்ள இருப்பதாக எங்களுக்கு அறிவித்துள்ளனர். பங்கேற்காத சில கட்சிகளும் இந்தப் பேரணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளன. அவர்கள் அனைவரின் சகோதரத்துவத்திற்கும் நாங்கள் தலைவணங்கி நன்றி தெரிவிக்கின்றோம். எங்களிடம் உள்ள வரையறுக்கப்பட்ட வளங்களைக் கொண்டு இந்தப் பேரணியை ஏற்பாடு செய்யும்போது, எங்களுக்கு இருந்த மிகப் பெரிய சவால் என்னவென்றால், இந்தப் பேரணிக்கு எப்படி விளம்பரம் கொடுப்பது என்பதுதான். ஏனெனில், எங்களிடம் உள்ள வரையறுக்கப்பட்ட வளங்களைக் கொண்டு இந்தப் பேரணிக்கு விளம்பரம் கொடுப்பது எப்படி என்ற சவால் எங்களுக்கு இருந்தது. ஆனால், அரசாங்கத்தினால், இலங்கையின் வரலாற்றில் எதிர்க்கட்சியின் பிரசாரப் பேரணி ஒன்றுக்கு கிடைத்ததிலேயே அதிகபட்ச விளம்பரத்தை, தற்போது 21ஆம் திகதி நுகேகொடை நகரில் நடைபெறும் பேரணிக்கு வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி வரவுசெலவுத் திட்ட உரையின் போதும், மாவீரர் தின உரையின்போதும், ஏன் பாராளுமன்றத்திற்கு ஓடிச்சென்று திருகோணமலையில் புத்தர் சிலை பற்றி பேசியபோதும் நுகேகொடை பேரணியை நினைவுபடுத்துவதற்கு மறக்கவில்லை. அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களும் தினமும் நினைவுபடுத்தி இந்தப் பேரணியை வெற்றிபெறச் செய்ய, எதிர்க்கட்சியின் சகோதரக் கட்சிகளைப் போலவே, அரசாங்கத்தின் பக்கத்திலிருந்தும் எங்களுக்கு வழங்கிய அந்த ஆதரவை நாங்கள் மிகுந்த நன்றியுடன் நினைவுகூருகிறோம். பேரணி நடைபெறுவதற்கு முன்பே, அது இலங்கை வரலாற்றின் மிக வெற்றிகரமான பேரணியாக மாறிவிட்டது. ஏனெனில், இவ்வளவு பெரியதொரு அரசாங்கத்தை பயமுறுத்திய வேறு எந்தவொரு பேரணியும் இலங்கையின் வரலாற்றில் பதிவு செய்யப்படவில்லை. திருகோணமலை புத்தர் சிலை சம்பவம், 21ஆம் திகதி பேரணியை வெற்றிபெறச் செய்வதற்காக நாங்கள் செய்த ஒரு தந்திரம் என்று ஜனாதிபதி உட்பட அரசாங்கத்தின் பல முக்கியஸ்தர்கள் கூறுகின்றனர். அவ்வாறெனில் பிக்குகளைத் தாக்கி, புத்தர் சிலையை அகற்றுவதற்கு பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கியது நாங்களா? உண்மையில், இலங்கை வரலாற்றில் புத்தர் சிலையை கைது செய்த முதல் ஆட்சியாளராக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க சாதனை படைத்துள்ளார். புத்தரை கைது செய்வதற்கு சமமான, ஒட்டுமொத்த பௌத்த சமூகமும் அதிர்ச்சியடைந்த ஒரு சம்பவமாக இந்த திருகோணமலை விவகாரம் பதிவாகியுள்ளது. நாட்டை ஆட்சி செய்த ஏகாதிபத்தியவாதிகள்கூட பௌத்த மதத்தை இவ்வளவு அவமானப்படுத்தவில்லை என்பதை நாங்கள் மிகவும் வேதனையுடன் நினைவுபடுத்த விரும்புகிறோம். நுகேகொடை பேரணியை எண்ணி அரசாங்கம் அச்சமடைந்துள்ளது. பெரும் மழை பெய்தாலும், காற்று வீசினாலும், அரசாங்கம் ஊரடங்குச் சட்டம் விதித்தாலும், அரசாங்கம் இந்தப் பேரணியைத் தடை செய்தாலும், 21ஆம் திகதி மாலை நுகேகொடை நகரில் இந்தப் பேரணி நிச்சயம் நடைபெறும் என்றார். https://www.virakesari.lk/article/230817
2 months 4 weeks ago
18 Nov, 2025 | 07:03 PM இந்தியா - ரஷ்யா உறவுகள் இரு நாடுகளின் பரஸ்பர நலனுக்கு மட்டுமல்ல, உலக நலனுக்கும் முக்கியமானது என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். தற்போது எஸ்.ஜெய்சங்கர் ரஷ்யாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பான எஸ்சிஓவில் அங்கம் வகிக்கும் உறுப்பு நாடுகளின் பிரதமர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டத்தில் இந்திய பிரதிநிதிகளுக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தலைமை வகிக்கிறார். இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற ஜெய்சங்கர், அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கே லாவ்ரோவை சந்தித்தார். இந்தச் சந்திப்பின்போது, இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு விடயங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. அதன்பின் ஜெய்சங்கர் பேசுகையில், இந்தியா - ரஷ்யா உறவுகள் இரு நாடுகளின் பரஸ்பர நலனுக்கு மட்டுமல்ல, உலக நலனுக்கும் முக்கியமானது. உக்ரைன், மத்திய கிழக்கு மற்றும் ஆப்கானிஸ்தான் மோதல் உள்ளிட்டவை குறித்த கருத்துக்களை கூட்டத்தில் பரிமாறிக்கொள்வோம். அமைதியை நிலைநாட்டுவதற்கான ரஷ்யாவின் சமீபத்திய முயற்சிகளை இந்தியா ஆதரிக்கிறது என்று தெரிவித்தார். https://www.virakesari.lk/article/230744
2 months 4 weeks ago
பிரான்சில். தடை உண்டு. ஆகவே கூட்டத்தில். குழப்பம். ஏற்படமால். இருக்கவும். கூட்டம். தொடர்ந்து. நடக்கவும். ஆனால். இலங்கையிலும். தடை உண்டு. தான். அது. எங்கள். நாட்டை. அடக்கி ஆளும். நாடு. அங்கே. தான். நாங்கள். போராடுகிறோம். போராட வேண்டும். மாறாக. பிரான்சில் இல்லை. அதன். சட்டத்தை. மதிக்க. வேண்டும் அல்லவா ? சரியா. ஔ.?
2 months 4 weeks ago
வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு புதிய அரசியல் தீர்வொன்று அவசியம் - ஜனாதிபதி 19 Nov, 2025 | 07:12 PM வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு புதிய அரசியல் தீர்வொன்று அவசியம் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பு விடுத்த கோரிக்கைக்கு அமைவாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் அந்தக் கட்சி பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (19) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. மாகாண சபைத் தேர்தல் மற்றும் புதிய அரசியலமைப்பொன்றின் அவசியம் குறித்து இதன் போது ஆராயப்பட்டதோடு, வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தொடர்ந்தும் பழைய அரசியல் தீர்வு பொருத்தமற்றது என்பதால் அதற்காக புதிய அரசியல் தீர்வினை நோக்கிச் செல்ல வேண்டுமென அரசாங்கம் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இங்கு குறிப்பிட்டார். அதற்காக அனைவரின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் நீண்ட காலமாக பிரதேச மட்டத்தில் எதிர்கொள்ளும் மீன்படி மற்றும் காணி பிரச்சினைகள், உட்கட்டமைப்பு வசதி மற்றும் அபிவிருத்தி தேவைகள் என்பன குறித்தும் இதன் போது ஆராயப்பட்டது. பிரதிநிதிகள் முன்வைத்த சில பிரச்சினைகளுக்கு எதிர்காலத்தில் தீர்வு பெற்றுக் கொடுக்குமாறு அதே சந்தர்ப்பத்தில் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார் வடக்கு அபிவிருத்திக்காக அரசாங்கம் முன்னெடுக்கும் எந்தவொரு திட்டத்திற்கும் தமது கட்சி ஒத்துழைப்பு வழங்கும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரதிநிதிகள் இந்த சந்திப்பில் சுட்டிக்காட்டினர். அத்தோடு, இனவாதத்திற்கு எதிராக அரசாங்கம் மேற்கொள்ளும் எந்தவொரு தீர்மானத்திற்கும் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சி என்ற வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒத்துழைப்பு வழங்கத் தயாராக உள்ளது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் இங்கு சுட்டிக்காட்டினார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தி சி.வி.கே. சிவஞானம் பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ். ஸ்ரீ தரன், எஸ். ராசமாணிக்கம், பி. சத்தியலிங்கம், ஜி. ஸ்ரீ நேசன்,ரீ. ரவிகரன், கே. கோடீஸ்வரன், கே. எஸ். குகதாசன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, ஜனாதிபதியின் சிரேஸ்ட மேலதிகச் செயலாளர் ரோஷன் கமகே ஆகியோரும் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றனர். https://www.virakesari.lk/article/230839
2 months 4 weeks ago
அன்புள்ள... நியூசிலாந்து அக்காச்சிக்கு, 🙂 அடுத்த முறை, நம்மூருக்கு வரும் போது, துடை தெரிய... "மினி ஸ்கேர்ட்" போடாமல், முஸ்லீம் பெண்கள் மாதிரி, முழு உடம்பையும் மூடி "பர்தா" போட்டுக் கொண்டு வாருங்கள். இப்ப... நம்ம ஊரு, ரொம்ப கெட்டுப் போச்சுதுங்க. 😂
2 months 4 weeks ago
உசாரய்யா உசாரு!
Checked
Wed, 02/18/2026 - 00:55
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed