புதிய பதிவுகள்2

யாழில். 17 நாட்களின் பின் மீட்கப்பட்ட சிறுமி! இளைஞர் கைது

2 months 2 weeks ago
நேற்று மாலை நான் அருந்தப்பில் உயிர் தப்பினேன், நீங்கள் சொல்வதில் இருக்கும் ஒரு புள்ளிங்கோ 80-90 கி.மீ வேகத்தில் என்னை விலத்தி சென்றார். நான் ஒரு மில்லி செக்கன் வேகமாக வீதியில் ஏறிவிட்டேன். எப்போதும் பொறுமையாக ஆறுதலாக எல்லோரும் சென்றபின் வீதியை கடப்பேன். நேற்று கொஞ்சம் அவசரப்பட்டுவிட்டேன். ஆனாலும் புள்ளிங்கோ வேகமாக வருவது தெரியவே இல்லை. சிறுமி காணாமல்போய் வந்த சம்பவத்தில் முறை மச்சானுக்கு வெளிநாட்டில் மச்சாளோடு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்க உள்நாட்டு மச்சாள் சிறுமியை தவறான நடத்தைக்கு உட்படுத்தி இருந்தார்!

மட்டக்களப்பில் தெய்வ உருவெடுத்து ஆடியவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு : தெய்வ உருவெடுத்து ஆடிய மற்றுமொருவரின் தாக்குதலில் ஒருவர் காயம் !

2 months 2 weeks ago
மட்டக்களப்பில் தெய்வ உருவெடுத்து ஆடியவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு : தெய்வ உருவெடுத்து ஆடிய மற்றுமொருவரின் தாக்குதலில் ஒருவர் காயம் ! 11 JUL, 2025 | 10:00 AM மட்டக்களப்பு, ஏறாவூர் களுவங்கேணி பிரதேசத்தில் பேச்சியமன் கோவிலில் இடம் பெற்ற வருடாந்த சடங்கின் போது தெய்வம் ஆடிய ஒருவர் திடிரென மயங்கிவிழுந்து உயிரிழந்துள்ளார். இதேவேளை, தெய்வ உருவெடுத்து ஆடிய மற்றுமொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கியதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் நேற்று வியாழக்கிழமை (10) இரவு 9.30 மணிக்கு இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தையடுத்து அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள களுவங்கேணி சிங்காரத்தோப்பு கிராமத்திலுள்ள பேச்சியம்மன் ஆலயத்தில் வருடாந்த திருவிழாவான இறுதி நாள் சடங்கு சம்பவதினமான நேற்று இரவு 9.30 மணியளவில் இடம்பெற்றது. இதன் போது பக்தர்கள் ஆலயத்தினுள் தெய்வம் ஆடிக் கொண்டிருந்தபோது 37 வயதுடையவர் திடீரென மயங்கி வீழ்ந்ததையடுத்து அவர் அங்கு உயிரிழந்துள்ளார். இதனையடுத்து அங்கு தெய்வம் ஆடிக் கொண்டிருந்த ஒருவர் அங்கு நின்ற ஒருவர் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல் நடாத்தியதில் அவர் படுகாயமடைந்த நிலையில் மட்டு போதனா வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டதையடுத்து தாக்குதலை மேற்கொண்டவர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளதையடுத்து அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. இதனையடுத்து உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக செங்கலடி வைத்தியசாலையில் ஓப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/219707

வடக்கு, கிழக்கில் கைப்பற்றப்பட்ட காணிகளில் 91 சதவீதமானவை விடுவிப்பு

2 months 2 weeks ago
வடக்கு, கிழக்கில் கைப்பற்றப்பட்ட காணிகளில் 91 சதவீதமானவை விடுவிப்பு 11 July 2025 ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க், தமது இலங்கை விஜயத்தின் போது இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டு பொருளாதார ரீதியாகப் பயன்படுத்தப்படும் காணிகளை விடுவிப்பது தொடர்பிலும், இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது இலங்கை விஜயம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயமும் சேர்க்கப்பட்டுள்ளதாக உயர்ஸ்தானிகர் அலுவலகம் தெரிவித்துள்ளது. ஆங்கில ஊடகமொன்றுக்கு கருத்துரைத்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் உறுப்பினரான ஜேர்மி லோரன்ஸ் (Jeremy Laurence) இந்த விடயத்தை உறுதிப்படுத்தியுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க், தமது இலங்கை விஜயத்தின் போது வடக்கு கிழக்கில் காணி விடுவிப்பு தொடர்பில் விசேட கவனம் செலுத்தியதாக ஜேர்மி லோரன்ஸ் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், 2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த போது கைப்பற்றப்பட்ட காணிகளில் 91 சதவீதமான காணிகள் விடுக்கப்பட்டுள்ளதாகவும் முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி குறித்த ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. https://hirunews.lk/tm/409807/91-percent-of-seized-lands-in-the-north-and-east-released

35 வருடங்களின் பின் தேரில் ஆரோகணித்த கண்ணகி அம்பாள்!

2 months 2 weeks ago
35 வருடங்களின் பின் தேரில் ஆரோகணித்த கண்ணகி அம்பாள்! adminJuly 11, 2025 மயிலிட்டி வீரமாணிக்கதேவன்துறை கண்ணகி அம்பாள் ஆலய தேர் திருவிழா 35 ஆண்டுகளின் பின்னர் நேற்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்றது. கண்ணகி அம்மன் ஆலய வருடாந்திர அலங்கார உற்சவம் கடந்த 26ம் திகதி ஆரம்பமாகி தொடர்ந்து உற்சவங்கள் நடைபெற்று 14ஆம் நாளா நேற்றைய தினம் தேர்த்திருவிழா இடம்பெற்றது கடந்த 1990ஆம் ஆண்டு யுத்தம் காரணமாக மயிலிட்டி பகுதி மக்கள் தமது சொந்த இடங்களில் இருந்து இடம்பெயர்ந்தனர். அதனை தொடர்ந்து அப்பகுதி உயர்பாதுகாப்பு வலயமாக இராணுவத்தினரால் பிரகடனப்படுத்தப்பட்டது. அக் கால பகுதியில் இராணுவ கட்டுப்பாட்டிற்குள் இருந்து ஆலயம் சேதமடைந்ததுடன், ஆலயத்தின் சித்திர தேரும் முற்றாக அழிக்கப்பட்டது. யுத்தம் நிறைவடைந்த பின்னர் பல்வேறு மக்கள் போராட்டங்களை தொடர்ந்து மயிலிட்டி பகுதியில் மக்கள் மீள் குடியேற அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து, ஆலயத்தை மக்கள் தமது நிதி பங்களிப்பில் புனரமைத்தனர். அதனை அடுத்து, மக்களின் நிதி பங்களிப்பில் ஆலயத்திற்காக சித்திர தேர் உருவாக்கப்பட்டு, கடந்த 07ஆம் திகதி சித்திர தேர் வெள்ளோட்டம் இடம்பெற்று, நேற்றைய தினம் வியாழக்கிழமை கண்ணகி அம்பாள் புதிய சித்திர தேரில் ஆரோகணித்து பக்தர்களுக்கு அருட்காட்சியளித்தார். https://globaltamilnews.net/2025/217752/

2024 O/L பரீட்சை முடிவுகள்: 13,392 மாணவர்கள் 9 ஏ சித்தி!

2 months 2 weeks ago
2024 O/L பரீட்சை முடிவுகள்: 13,392 மாணவர்கள் 9 ஏ சித்தி! 2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் மொத்தம் 237,026 மாணவர்கள் க.பொ.த உயர்தரத்திற்குத் தகுதி பெற்றுள்ளதாக இலங்கை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி தெரிவித்தார். இந்த எண்ணிக்கை பரீட்சை எழுதிய மொத்த பரீட்சார்த்திகளின் எண்ணிக்கையில் 73.45% ஆகும். மேலும், ஒன்பது பாடங்களிலும் ‘ஏ’ சித்திகளைப் பெற்று மொத்தம் 13,392 மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர். இந்த சாதனை மொத்த பரீட்சார்த்திகளின் எண்ணிக்கையில் 4.15% ஆகும் என்றும் அவர் மேலும் கூறினார். https://athavannews.com/2025/1438746

2025 உயர் தரப் பரீட்சை திகதி அறிவிப்பு!

2 months 2 weeks ago
2025 உயர் தரப் பரீட்சை திகதி அறிவிப்பு! 2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை எதிர்வரும் நவம்பர் 10 ஆம் திகதி முதல் டிசம்பர் 5 ஆம் திகதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை இலங்கை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி தெரிவித்தார். இதற்கிடையில், 2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை 2026 பெப்ரவரியில் நடைபெற உள்ளது. https://athavannews.com/2025/1438749

கல்பிட்டியில் கடற்படைக்கு எதிராக ஒன்று திரண்ட மக்கள்

2 months 2 weeks ago
கல்பிட்டியில் கடற்படைக்கு எதிராக ஒன்று திரண்ட மக்கள். கல்பிட்டி, தளுவ பகுதியைச் சேர்ந்த மக்கள் நேற்றைய தினம் கடற்படையினருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். கடற்படையினர் என தம்மை அறிமுகப்படுத்திய இருவர் கிராமவாசி ஒருவரைத் தாக்கியதற்கு எதிராகவும், போதைப்பொருள் கடத்தலுக்கு கடற்படையும் பொலிஸாரும் ஆதரவு வழங்குவதாகவும் குற்றம் சாட்டியே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப் போராட்டத்தின் போது கடற்படையைச் சேர்ந்தவர்கள் என சந்தேகிக்கப்படும் சிவில் உடையணிந்த இருவர் வந்து அதை வீடியோ பதிவு செய்ததால், அங்கு பதற்றமான சூழல் உருவானது. அப்போது அங்கு வந்த நுரைச்சோலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் எனத் தெரிவித்தார். எனினும், இக்குற்றச்சாடை கடற்படையினர் ஏற்க மறுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1438757

பாகிஸ்தான் மோசடி மையத்தில் சோதனை; இலங்கையர்கள் உட்பட 149 பேர் கைது!

2 months 2 weeks ago
பாகிஸ்தான் மோசடி மையத்தில் சோதனை; இலங்கையர்கள் உட்பட 149 பேர் கைது! பாகிஸ்தான் பொலிஸார் ஒரு மோசடி மையத்தில் நடத்திய சோதனையில் 149 பேரை கைது செய்துள்ளதாக அந்நாட்டின் தேசிய சைபர் குற்றப் புலனாய்வு நிறுவனம் (NCCIA) வியாழக்கிழமை (10) தெரிவித்துள்ளது. பைசலாபாத் நகரில் செயல்பட்டு வரும் இந்த வலையமைப்பு குறித்து கிடைத்த இரகசிய தகவலை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இந்த மையம் பிரமிட் திட்டங்களில் ஈடுபட்டுள்ளதாகவும், போலி முதலீடுகள் என்ற பெயரில் மக்களை ஏமாற்றி ஏராளமான பணத்தை மோசடி செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்டவர்களில் 78 பாகிஸ்தானியர்கள், 48 சீனர்கள், எட்டு நைஜீரியர்கள், நான்கு பிலிப்பைன்ஸ் நாட்டவர்கள், இரண்டு இலங்கையர்கள், ஆறு பங்களாதேஷினர், இரண்டு மியான்மர் நாட்டவர்கள் மற்றும் ஒரு சிம்பாப்வே நாட்டவரும் அடங்குவர். 149 பேரில் பதினெட்டு பேர் பெண்கள் என்று அந்த நிறுவனம் மேலும் கூறியது. மோசடியில் பாதிக்கப்பட்டவர்கள் முதலில் தங்கள் முதல் முதலீட்டில் ஒரு சிறிய வருமானத்தைப் பெறுவார்கள் என்றும், பின்னர் பெரிய தொகைகளை ஒப்படைக்க வற்புறுத்தப்படுவார்கள் என்றும் பொலிஸ் வட்டாரங்கள் கூறுகின்றன. சந்தேக நபர்கள் புதன்கிழமை (09) நீதமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். அவர்களில் 87 பேர் ஐந்து நாள் தடுப்புக் காவலில் வைக்க NCCIA-யிடம் ஒப்படைக்கப்பட்டனர். மேலும் 62 சந்தேக நபர்கள் ஜூலை 23 வரை நீதிமன்ற காவலில் மாவட்ட சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர். https://athavannews.com/2025/1438754

கனேடிய பொருட்களுக்கு 35% வரி விதித்த ட்ரம்ப்!

2 months 2 weeks ago
கனேடிய பொருட்களுக்கு 35% வரி விதித்த ட்ரம்ப்! எதிர்வரும் ஒகஸ்ட் 1 முதல் கனேடிய பொருட்களுக்கு 35% வரி விதிக்கப் போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். பெரும்பாலான வர்த்தக பங்காளிகள் மீது 15% அல்லது 20% மொத்த வரிகளை விதிக்கப்போவதாக ட்ரம்ப் அச்சுறுத்தியதோடு, ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அதன் பொருட்களுக்கான புதிய வரி விகிதத்தை விரைவில் அறிவிப்பதாகவும் கூறியிருந்தார். இந்த நிலையில், புதிய வர்த்தக ஒப்பந்தத்தை எட்டுவதற்கு இரு நாடுகளும் சுயமாக விதித்துக் கொண்ட காலக்கெடுவிற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் மேற்கண்ட அறிவிப்பு வந்துள்ளது. கனடா மீதான அண்மைய வரிகளை ட்ரம்ப் வியாழக்கிழமை (10) சமூக ஊடகங்களில் வெளியிட்டார். அதில், கனடாவுக்கான புதிய வரிகள் ஒகஸ்ட் 1 முதல் அமலுக்கு வரும் என்றும் கனடா பதிலடி கொடுத்தால் அது அதிகரிக்கும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி எச்சரித்தார். அமெரிக்கா ஏற்கனவே சில கனேடிய பொருட்களுக்கு 25% முழுமையான வரியை விதித்துள்ளது. இந்த நிலையில் 35% வரி என்பது வொஷிங்டனுடன் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்த முயன்ற கனேடிய பிரதமர் மார்க் கார்னிக்கு ஒரு அடியாகும். இந்த வாரம் ஜப்பான், தென் கொரியா மற்றும் இலங்கை உள்ளிட்ட அமெரிக்க வர்த்தக பங்காளிகளுக்கு ட்ரம்ப் அனுப்பிய 20க்கும் மேற்பட்ட கடிதங்களில் இந்தக் கடிதமும் ஒன்றாகும். கனடாவின் கடிதத்தைப் போலவே, ஒகஸ்ட் 1 ஆம் திகதிக்குள் வர்த்தக பங்காளிகள் மீது அந்த வரிகளை அமுல்படுத்துவதாக ட்ரம்ப் உறுதியளித்துள்ளார். அண்மைய வரி அச்சுறுத்தல் கனடா-அமெரிக்கா-மெக்ஸிகோ ஒப்பந்தத்தின் (CUSMA) கீழ் வரும் பொருட்களுக்குப் பொருந்துமா என்பது தெளிவாகத் தெரியவில்லை. ட்ரம்ப் அலுமினியம் மற்றும் எஃகு இறக்குமதிகளுக்கு உலகளாவிய 50% வரியையும், அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படாத அனைத்து கார்கள் மற்றும் லொரிகளுக்கும் 25% வரியையும் விதித்துள்ளார். செப்பு இறக்குமதிகளுக்கு 50% வரியையும் அண்மையில் அவர் அறிவித்தார், இது அடுத்த மாதம் நடைமுறைக்கு வர திட்டமிடப்பட்டுள்ளது. கனடா அதன் பொருட்களில் நான்கில் மூன்று பங்கினை அமெரிக்காவிற்கு விற்கிறது. மேலும் இது ஒரு வாகன உற்பத்தி மையமாகவும், உலோகங்களின் முக்கிய விநியோகஸ்தராகவும் உள்ளது. மெக்ஸிகோவிற்கு அடுத்தபடியாக அமெரிக்காவின் இரண்டாவது பெரிய வர்த்தக பங்காளியாகவும், அமெரிக்க ஏற்றுமதிகளை அதிகம் வாங்குபவராகவும் கனடா உள்ளது. அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியக தரவுகளின்படி, கடந்த ஆண்டு இது $349.4 பில்லியன் அமெரிக்க பொருட்களை இறக்குமதியும், $412.7 பில்லியன் பொருட்களை அமெரிக்காவிற்கு ஏற்றுமதியும் செய்துள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் அமெரிக்காவுடனான வர்த்தக சவால்களைச் சமாளிப்பதற்கான உறுதிமொழியுடன் தனது லிபரல் கட்சியை மீண்டும் தேர்தல் வெற்றிக்கு அழைத்துச் சென்ற கார்னி, ஜூலை 21 ஆம் திகதிக்குள் அதன் முக்கிய வர்த்தக பங்காளியுடன் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை பேச்சுவார்த்தை நடத்துவதை நோக்கமாகக் கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1438739

கடற்புலிகளின் வேவ் ரைடர் (Wave Rider) வகுப்புப் படகுகள் - ஆவணம்

2 months 2 weeks ago
புதிய படகுகளின் பெயர்கள் மற்றும் படங்களுடன் சில தவறான தகவலகள் நீக்கப்பட்டு ஆவணம் புதுப்பிக்கப்பட்டுள்ளது

அமைதிக்கான நோபல் பரிசுக்காக ட்ரம்பின் பெயரை பரிந்துரைத்தார் இஸ்ரேல் பிரதமர் !

2 months 2 weeks ago
அண்மைக்காலத்தில் அமெரிக்காவை ஆண்ட ஜனாதிபதிகளில் கிளின்ரனும் ஒபாமாவும் குறிப்பிடத் தக்கவர்கள். பொஸ்னியர்கள் மீதான சேர்பியர்களின் இனவழிப்பை முடிவிற்குக் கொண்டுவந்ததில் கிளின்ரனின் பங்கு குறிப்பிடத் தக்கது. அவ்வாறே ஈராக்கிலும், அப்கானிஸ்த்தானிலும் நடந்துவந்த போர்களை நிறுத்தவேண்டும் என்று நடவடிக்கைகளில் இறங்கியதுடன், 2001 இல் இரட்டைக் கோபுரத் தாக்குதலினை நடத்தி, மூவாயிரம் அமெரிக்கர்களைப் பலியெடுத்த சர்வதேச இஸ்லாமிய அடிப்படைவாதியான பின்லாடனைத் தேடி, வேட்டையாடி, கொல்லப்பட்டவர்களுக்கான நீதியினை ஒபாமா பெற்றுக்கொடுத்திருந்தார். அத்துடன் ஈரானின் முல்லாக்களுடன் அணுவாயுத உற்பத்தியைக் கைவிட்டு, பொருளாதாரத்தினை முன்னேற்றும் நடவடிக்கைகளுக்கு உதவ முன்வந்திருந்தார். ஈழத்தமிழர் படுகொலையில் ஒபாமாவோ அல்லது ஹிலரியோ எதனையும் செய்யவில்லை என்பது உண்மையே. இறுதிநேரத்தில் அமெரிக்கர்கள் செய்யமுயன்றதாகக் கூறப்படும் சில நடவடிக்கைகளை இந்தியா முன்னின்று தடுத்துவிட்டதென்பதை அன்றிருந்த இந்திய பாதுகாப்புச் செயலாளர் சிவ் சங்கர மேனன் வெளிப்படையாகவே கூறியிருந்தார்.

அமைதிக்கான நோபல் பரிசுக்காக ட்ரம்பின் பெயரை பரிந்துரைத்தார் இஸ்ரேல் பிரதமர் !

2 months 2 weeks ago
இலங்கையில் பிள்ளையானுடன் இணைந்து, பலநூற்றுக்கணக்கான தமிழர்களைக் கடத்திச் சென்று, படுகொலை செய்த இனியபாரதி எனும் நபருக்கு மகிந்த ராஜபக்ஷ இலங்கையின் சாதாரணக் குடிமகன் ஒருவருக்கு வழங்கப்படக் கூடிய அதிகூடிய கெளரவங்களான தேசமான்ய, தேசாபிமான என்கிற விருதுகளைக் கொடுத்து மகிழ்ந்தபோது, உலகில் நடக்கும் போர்களை 24 மணிநேரத்திற்குள் நிறுத்துவேன் என்று கூறிக்கொண்டு ஆட்சிக்கு வந்து, ரஸ்ஸிய உக்ரேன் போரில் உக்ரேனியர்களைப் பலவீனப்படுத்தி, ரஸ்ஸியாவின் சர்வாதிகாரிக்குக் கொம்பு சீவி, பலஸ்த்தீனத்தில் இனக்கொலையில் ஈடுபட்டிருக்கும் இஸ்ரேலினை உற்சாகப்படுத்திக் கொண்டிருக்கும் டொனால்ட் ட்ரம்ப்பிற்கு இனக்கொலையினை நடத்தும் நெத்தன்யாகுவே நோபல் பரிசை சிபாரிசு செய்வதொன்றும் புதினமில்லை.

உன்னால் முடியும் தம்பி

2 months 2 weeks ago
அனைவர் வாழ்வின் விமானப் பயணத்தின் போதும் நடந்திருக்கக் கூடிய ஒரு சம்பவத்தை… நகைச்சுவையுடன் விவரித்த விதம் அழகு. அதிலும் அந்த கடைசிப் பந்தி அருமை. 😂

சம்பந்தனை தமிழ்ச்சமூகம் மறந்துவிட்டதா?

2 months 2 weeks ago
நீங்கள் மாவீரர்களைக் குறிப்பிடவில்லை என்று எடுத்துக்கொள்கிறேன். ஏனென்றால், அரசியலைத் தொழிலாகச் செய்து வயது முதிர்மையினால் மரணிப்பவர்களுக்கும், தமது இளம் வயதில், தமது வாழ்க்கையினை, தனது மக்களின் விடிவிற்காக அர்ப்பணித்துச் சென்றவர்களுக்கும் இடையில் பாரிய‌ வேறுபாடு இருக்கிறது.

உன்னால் முடியும் தம்பி

2 months 2 weeks ago
உன்னால் முடியும் தம்பி -------------------------------------- இவ்வளவு மலிவாக விமானச்சீட்டை வாங்கி விட்டோமே என்ற சந்தோசம் அமெரிக்காவிலிருந்து கனடா வந்த விமானப் பயணத்திலேயே தொலைந்து போயிருந்தது. அது இன்னொரு கதை. இது அதே மலிவு விலையில் கனடாவிலிருந்து திரும்பி அமெரிக்கா போகும் கதை. எங்கள் நான்கு பேர்களுக்கும் விமானத்தின் நாலு இடங்களில் நடு இருக்கைகளை கொடுத்திருந்தார்கள். கனடா விமான நிறுவனத்தின் இணையதளத்தில் இருக்கைகளை மாற்ற முற்படும் போது, ஒவ்வொரு புது இருக்கைக்கும் பயணச்சீட்டுக்கு கொடுத்திருந்த அளவில் கட்டணம் மீண்டும் கேட்டார்கள். சரி, விமானநிலையத்தில் போய் இலவசமாகக் கேட்டுப் பார்ப்போம் என்று விமான நிலையம் போய்ச் சேர்ந்தோம். கீழே நின்றவர்கள் பெட்டிகளை மட்டும் வாங்கிக் கொண்டார்கள். இருக்கைகள் அவர்களின் பொறுப்பில் வருவதில்லை என்றும், புறப்படும் கதவில் போய் கேளுங்கள் என்றும் சொன்னார்கள். கதவில் நின்ற அழகான, பணிவான பெண்ணிடம் அவரை விட பணிவாக நான் கேட்டேன். சிறிது நேரம் கணினியில் அவர் சுற்றிப் பார்த்தார். பின்னர் இருப்பதெல்லாம் நடு இருக்கைகள் மட்டுமே, அவை கூட முன்னுக்கு பின்னாகவும் இல்லை என்றார். விமானம் விழுந்தால், கடைசிக் கணத்தில் நால்வரும் தனித்தனியாக விழப் போகின்றோமே என்ற கவலையும், அக்கம் பக்கம் சரிந்து அடுத்தவர்கள் தோள்களில் விழாமல் தூங்கி வழியவேண்டுமே என்ற யோசனையுடனும் என்னுடைய நடு இருக்கையில் அமர்ந்தேன். வலக்கை பக்கம் ஒரு பெரிய பெண் வந்து இருந்தார். இடைக்கை பக்கம் ஒரு பெரிய ஆண் வந்து இருந்தார். என்னுடைய கைகளை இன்னும் கொஞ்சம் உள்ளுக்குள் இழுத்துக் கொண்டேன். சமீபத்தில் ஒரு இந்தியர் விமானப் பயணத்தின் போது அருகில் இருந்த பெண்ணுடன் ஏதோ செய்து கைது செய்யப்பட்டிருந்தார். கைபடாமல் இருக்க வேண்டும். அந்தப் பெண் ஏதோ எடுத்துக் கொண்டு என் பக்கம் திரும்பினார். அவரின் பெரிய கை என் விலாவில் நேராக இறங்கியது. 'மன்னிக்கவும், மன்னிக்கவும்............' என்று பதறினார். இடைக்கை பக்கம் அமர்ந்திருந்தவர் மடியில் ஒரு புத்தகம் வைத்திருந்தார், 'The Road To Character' என்று புத்தகத்தின் தலைப்பு இருந்தது. இந்த புத்தகத்தை பற்றி நான் கேள்விப்பட்டதேயில்லை. அதில் இருந்த எழுத்தாளர் பெயரும் கொஞ்சம் கூட பரிச்சயமற்றது. அருகில் இருந்த பெண்ணின் முன்னால் இருந்த சிறிய திரை அப்படியே உறைந்து போய் நின்று கொண்டிருந்தது. அவர் அந்த திரையில் ஒவ்வொரு புள்ளியையும் தனது விரல்களால் அமத்தினார். திரை அசையவே இல்லை. ஒரு விமான பணிப்பெண்ணைக் கூப்பிட்டார். விமானத்தின் இந்தப் பகுதியில் நடுவில் இருந்து வலப்பக்க முடிவு வரை உள்ள எவருக்கும் திரை வேலை செய்யவில்லை என்றார் பணிப்பெண். அங்கே பாருங்கள், இவருடையை திரை கூட வேலை செய்யவில்லை என்று என் முன்னால் இருந்த திரையைக் காட்டினார். நான் பணிப்பெண்ணைப் பார்த்தேன். பணிப்பெண் என்னுடைய திரையைப் பார்த்தார். அருகில் இருந்த பெண் திரையையும் என்னையும் பார்த்தார். நான் அந்த திரையை ஒரு தடவை கூட தொட்டிருக்கவில்லை. அது அப்படியே இருட்டாகவே இருந்தது. சரிசெய்துவிடுகின்றோம் என்றபடியே பணிப்பெண் அங்கிருந்து மெதுவாக நகர்ந்தார். எனக்கு இரண்டு பக்கமும் இருந்தவர்கள் பெரும் குடும்பங்களாக வந்திருந்தார்கள். குழந்தைகள், சிறுவர்கள், ஆண்கள், பெண்கள் என்று இரு பக்கங்களும் கூட்டங்களாக இருந்தார்கள். அமெரிக்காவை சுற்றிப் பார்க்கப் போகின்றார்கள் என்று அவர்களின் உரையாடல்களில் இருந்து தெரியவந்தது. கொஞ்சம் துணிந்தவர்கள் போல. அதிபர் ட்ரம்பையும் மீறி இவர்கள் கனடாவிலிருந்து அமெரிக்கா வந்து கொண்டிருக்கின்றார்கள். இடக்கை பக்கம் இருந்தவரின் இரண்டு வயதான குழந்தை ஒன்று மிகவும் சந்தோசத்துடன் முன்னுக்கு இருந்த இருக்கையை கால்களால் உதைத்துக் கொண்டேயிருந்தது. சிறிது நேரம் போக, உதை வாங்கிக் கொண்டிருந்தவர், அவர் ஒரு இந்திய பெண்மணி, எழும்பி வந்தார். குனிந்து மெதுவாக அவர்களிடம் ஏதோ சொன்னார். சிரித்துக் கொண்டே உதைக்கும் இரண்டு வயது குழந்தை இப்பொழுது இடம் மாற்றப்பட்டது. தந்தையின் மடியில் அந்தப் புத்தகத்தின் மேல் அமர வைக்கப்பட்டார். எனக்கும் பின்னால் இருந்து இன்னொரு குழந்தையிடம் இருந்து உதைகள் விழுந்து கொண்டேயிருந்தது. பரவாயில்லை, குழந்தைகள் அழாமல், அடம்பிடிக்காமல் வருவதே பெரிய விடயம் என்று பேசாமல் இருந்துகொண்டேன். தந்தையின் மடியில் இருந்து மிகவும் சிநேகபூர்வமாக என்னைப் பார்த்து சிரித்தார். சுருட்டை முடியும், பளிங்குக் கண்களும் கொண்ட ஒரு அழகான பொம்மை போல அந்தக் குழந்தை இருந்தது. திடீரென இரு விரல்களை மடக்கிக் கொண்டு மூன்று விரல்களை காட்டியது. இது இரண்டு விரல்களால் காட்டப்படும் சமாதானத்திற்கும் மேலே. பக்கென்று சிரிப்பு வந்தது. என்னை விட அதிகமாக சிரித்தது குழந்தை. மூன்று விரல்களும், சிரிப்பும், சில கதைகளுமாக பயணம் பறந்து கொண்டிருந்தது. அந்த இந்தியப் பெண் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தார். விமானம் நின்றதும் ஒவ்வொருவராக வரிசையில் இறங்கினர். எனக்கு வலது பக்கம் இருந்த பெண் அவரது தலைக்கு மேலே இருந்த அவரது பொருட்களை எடுத்துக் கொண்டு அவரது குடும்பத்துடன் இறங்கினார். என்னுடைய பொருட்கள் இடது பக்கம் மேலே இருந்தது. ஆனால் இடது பக்க குடும்பம் இறங்கவில்லை. எதையோ தேடிக் கொண்டேயிருந்தார்கள். இவர்களுக்கு நடுவில் புகுந்து என்னுடைய பொருட்களை எப்படி எடுப்பது என்றபடியே எழும்பி நின்று கொண்டிருந்தேன். 'ஓ.............. மன்னிக்கவும், உங்களின் பொதி இங்கே மேலேயா இருக்கின்றது................' என்று கேட்டார் அந்தக் குழந்தையின் தாய். ஆமாம் என்றேன். அவரே அதை எடுத்துக் கொடுக்க முன்வந்தார். 'நீங்கள் ஏன் எடுத்துக் கொடுக்க வேண்டும். அவரே எடுத்துக் கொள்வார் தானே............' என்று இழுத்தார் அவரின் கணவர். அந்தப் பெண் அதை காதில் வாங்கிக் கொள்ளாமலேயே என்னுடைய பொதியை எடுத்துக் கொடுத்தார். குட்டிக் குழந்தை மீண்டும் மூன்று விரல்களைக் காட்டி சிரித்தது. அப்படியே வலப்பக்கத்தால் நான் வெளியே வந்தேன். 'The Road To Character' என்ற அந்தப் புத்தகம் அந்த இருக்கையிலேயே அப்படியே திறக்கப்படாமல் கிடந்தது. அது வெறுமனே பயணம் போய் வருகின்றது போல.

முதல் முறையாக ஆடு மாடுகளுக்கான மாநாடு நடத்தும் சீமான்.. தயார் நிலையில் மாடுகள்!

2 months 2 weeks ago
சும்மா சொடக்கு பண்ண வைப்பதற்கு (click bait க்கு) தலைப்பை மாற்றி எழுதி, பொழுது போக்கில் காசு பார்க்க எத்தனிக்கும் ஊடகங்கள், ஏனெனில் பொழுதுபோக்கில் உள்ள போட்டி நெருப்பு அவர்களை கருக்கி விட்டது. உரைக்கு எடுக்கப்பட்டு இருக்கும் விடயங்கள் யதார்தமானவை. இப்படியான தலைப்பு ஆடு மாடுகளை கொண்டுவந்தவர்களும் ஆடு, மாடுகள் போன்றவர்கள் என்று எண்ணவைக்கும் என்பதை சிந்தியாமல் எழுதப்பட்ட செய்தி.
Checked
Sat, 09/27/2025 - 09:23
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed