2 months 2 weeks ago
செம்மணியில் புத்தகப் பை, பொம்மையோடு மீட்கப்பட்ட எலும்புக்கூடு தொடர்பில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு! யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து நீல நிறப் பாடசாலைப் புத்தகப் பை, சிறுவர்கள் விளையாடும் பொம்மை என்பவற்றோடு அகழ்ந்தெடுக்கப்பட்ட மனித என்புத் தொகுதி தொடர்பான மனித என்பு ஆய்வு அறிக்கையை எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு சட்ட வைத்திய அதிகாரி பிரணவன் செல்லையாவுக்கு யாழ். நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜாவால் உத்தரவொன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழி தொடர்பான அகழ்வுப் பணிகள் யாழ். நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜாவின் கண்காணிப்பில் துறைசார் நிபுணரும் பேராசிரியருமான ராஜ் சோமதேவாவின் தலைமையில் இடம்பெற்றிருந்தன. சட்ட மருத்துவ அதிகாரி பிரணவன் செல்லையா தலைமையிலான குழுவினரும் அகழ்வுப் பணிகளின் போது முன்னிலையாகியிருந்தனர். நேற்றைய தினம் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டன. எதிர்வரும் 21ஆம் திகதி அகழ்வுப் பணிகள் மீள ஆரம்பமாகவுள்ளன. இந்நிலையில் செம்மணி மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளின் போது எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட நீல நிறப் பாடசாலைப் புத்தகப் பையோடு, சிறுவரினுடையது எனச் சந்தேகிக்கப்படும் என்புத் தொகுதி ஒன்று அடையாளம் காணப்பட்டிருந்தது. அந்த என்புத் தொகுதிக்கு அருகில் சிறுவர்கள் விளையாடும் பொம்மை, ஆடை, சிறுமிகள் பயன்படுத்தும் காலணி, சிறு கண்ணாடி வளையல்கள் என்பனவும் அடையாளம் காணப்பட்டு அகழ்ந்து எடுக்கப்பட்டிருந்தன. மீட்கப்பட்ட எலும்பு கூட்டு தொகுதிகள் அனைத்தும் சட்ட வைத்திய அதிகாரியின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், புதைகுழிகளில் இருந்து மீட்கப்பட்ட , பை , காலணிகள் , கண்ணாடி வளையல்கள் , ஆடையை ஒத்த துணிகள் , பொம்மை உள்ளிட்ட பொருட்கள் சான்று பொருட்களாக அடையாளப்படுத்தப்பட்டு , நீதிமன்ற கட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அகழ்ந்தெடுக்கப்பட்ட அந்த மனித என்புத் தொகுதி தொடர்பான மனித என்பு ஆய்வு அறிக்கையை எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்னர் யாழ். நீதிவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு சட்ட வைத்திய அதிகாரி பிரணவன் செல்லையாவுக்கு நீதிவான் ஏ.ஏ. ஆனந்தராஜாவால் கட்டளை ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1438781
2 months 2 weeks ago
மத்தள விமான நிலையம் தொடர்பான அரசாங்கத்தின் திட்டம்! மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம் (MRIA) வணிக நோக்கமின்றி நிர்மாணிக்கப்பட்டுள்ளது என்று விமான போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். இது குறித்து ஊடகங்களிடம் உரையாற்றிய அமைச்சர், இது கைவிடப்பட்ட விமான நிலையமாக மாறிவிட்டது, இதன் காரணமாக நாடு பெரும் கடனை எதிர்கொள்கிறது. குறிப்பாக இலங்கை தற்போது 2030 வரை செலுத்த வேண்டிய 260 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை எதிர்கொள்கிறது. இதனிடையே, மத்தள விமான நிலையத்தை விமானங்கள் தரையிறங்கி புறப்படும் ஒரு செயல்பாட்டு நிறுவனமாக மேம்படுத்த அரசாங்கம் முயற்சிக்கிறது. இது ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளில் நடக்கக்கூடிய ஒன்றல்ல. இந்த விமான நிலையத்திற்கான செலவு மற்றும் கடன் செலுத்துதல்களை நாங்கள் தற்போது எதிர்கொள்கிறோம். இது ஒரு முக்கிய விமான நிலையமாக இல்லாவிட்டாலும், மாற்று விமான நிலையமாக இது அவசியம். விமான பராமரிப்பு போன்ற பிற செயல்பாடுகளுக்கு விமான நிலையத்தைப் பயன்படுத்தவும், பிரதான விமான நிலைய வளாகத்திற்கு வெளியே உள்ள நிலத்தை சூரிய மின்சக்தி திட்டங்களுக்குப் பயன்படுத்தவும் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றது என்றும் கூறினார். நேற்று மத்தள விமான நிலையத்தின் ஆய்வு சுற்றுப்பயணத்தில் ஈடுபட்ட பின்னரே அமைச்சர் இந்த விடயங்களை குறிப்பிட்டார். https://athavannews.com/2025/1438782
2 months 2 weeks ago
நல்லதொரு போராட்டம். வெளிநாட்டில் உள்ள தமிழ் அமைப்புகளும் இப் போராட்டத்துக்கு ஆதரவு தருவதுடன் சர்வதேச நீதி அமைப்புகளை நேரடியாகத் தொடர்பு கொண்டு மேலதிக அழுத்தங்களைக் கொடுக்கலாம்.
2 months 2 weeks ago
அடுத்த வாரம் மும்பையில் திறக்கப்படும் டெஸ்லாவின் காட்சியறை! மின்சார வாகன நிறுவனமான டெஸ்லா, தனது புதிய காட்சியறையை ஜூலை 15 ஆம் ஆம் திகதி மும்பையின் ஜியோ வேர்ல்ட் டிரைவில் திறக்கவுள்ளது. பல வருட திட்டமிடல் மற்றும் ஊகங்களுக்குப் பின்னர் இந்திய சந்தையில் நுழைய விரும்புவதால், அமெரிக்காவை தளமாகக் கொண்ட மின்சார வாகன (EV) தயாரிப்பாளருக்கு இது ஒரு முக்கிய படியாகும். பில்லியனர் எலான் மஸ்க் தலைமையிலான நிறுவனம், இந்திய சந்தையில் நுழைவதன் ஒரு பகுதியாக கடந்த மார்ச் மாதத்தில் மும்பையில் உள்ள இடத்திற்கான குத்தகையைப் பெற்றது. 4,000 சதுர அடி பரப்பளவிலான இந்த காட்சியறை மும்பையின் ஆடம்பர சில்லறை விற்பனை இடங்களில் ஒன்றில், நகரின் ஆப்பிள் ஃபிளாக்ஷிப் காட்சியறைக்கு அருகில் அமைந்துள்ளது. இந்த இடம் பார்வையாளர்கள் டெஸ்லாவின் மின்சார கார்கள் மற்றும் தொடர்புடைய தொழில்நுட்பங்களை ஆராயவும் அனுமதிக்கும். இதனிடையே, டெஸ்லா அதன் குறைந்து வரும் விற்பனை எண்ணிக்கையுடன் போராடி வருகிறது. மேலும் கடந்த 6 மாதங்களில் அதன் பங்கு 23.17% சரிவைக் கண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. https://athavannews.com/2025/1438802
2 months 2 weeks ago
பாகிஸ்தானில் பேருந்தில் சென்றவர்கள் மீது பயங்கரவாதத் தாக்குதல்: 9 பேர் உயிரிழப்பு. பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பஸ்சில் சென்ற 9 பயணிகளை கிளர்ச்சியாளர்கள் சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் குவெட்டாவில் இருந்து லாகூர் சென்று கொண்டிருந்த பஸ்சில் துப்பாக்கியுடன் ஏறிய கிளர்ச்சியாளர்கள் குழு, அதில் இருந்த பயணிகளை தீவிரமாக சோதனை செய்தனர். பின்னர் சில பயணிகள் கடத்தப்பட்ட நிலையில் அதில் 9 பேரை கிளர்ச்சியாளர்கள் கொடூரமான முறையில் சுட்டுக்கொன்றனர். மாகாணத்தின் சோப் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் இந்த சம்பவம் நடந்ததாகவும் சுட்டுக்கொல்லப்பட்ட ஒன்பது பேரும் பஞ்சாப் மாகாணத்தின் வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்களது உடல்கள் குண்டுத் துளைத்த காயங்களுடன் மலைகளில் கண்டெடுக்கப்பட்டதாகவும் உதவி ஆணையர் சோப் நவீத் ஆலம் தெரிவித்தார். எவ்வாறு இருப்பினும் இந்த கொடூர சம்பவத்திற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை. பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்த மக்களையும், பலுசிஸ்தானில் வெவ்வேறு நெடுஞ்சாலைகளில் செல்லும் பயணிகள் பஸ்களையும் கிளர்ச்சியாளர்கள் குறிவைப்பது இது முதல் முறை அல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது. Athavan Newsபாகிஸ்தானில் பேருந்தில் சென்றவர்கள் மீது பயங்கரவாதத் தாக்...பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பஸ்சில் சென்ற 9 பயணிகளை கிளர்ச்சியாளர்கள் சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தானின் குவெட்டாவில் இருந்து லாகூர் சென்று கொண்டிருந...
2 months 2 weeks ago
எல்லாப் பாடங்களிலும் ஏ சித்தியடைந்தவர்களின் எண்ணிக்கை வீதம் 4.15% என்பது சிறப்பானது. வாழ்த்துகள். இருந்தாலும் மொத்தமாகச் சித்தியடைந்த வீதம் 73.45% என்பது போதுமானதல்ல. அதிலும் தமிழர் பகுதிகளில் இன்னும் குறைவாக இருக்கலாம். உலகம் முழுவதும் கல்வித் தர நிலை உயர்ந்து வரும் நிலையில் இலங்கையிலும் கல்வி வளர்ச்சி அதிகரிக்க வேண்டும்.
2 months 2 weeks ago
வரி அச்சுறுத்தலுக்கு மத்தியில் டெனால்ட் ட்ரம்பின் சூப்பர் மேன் அவதாரம்! உலகளாவிய தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்து, தனது கட்டண அச்சுறுத்தால் சந்தை ஏற்ற இறக்கங்களைத் குழப்பத்தில் ஆழ்த்தி வரும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை, வெள்ளை மாளிகை ‘சூப்பர்மேன்’ என்று சித்தரித்துள்ளது. 79 வயதான அவரை “நம்பிக்கையின் சின்னம்” என்று அழைத்த வெள்ளை மாளிகை, ஜேம்ஸ் கன் இயக்கிய சூப்பர்மேன் திரைப்படம் வெள்ளிக்கிழமை (11) வெளியானதைத் தொடர்ந்து, சூப்பர்மேன் கதாப்பாத்திரத்தில் AI-உருவாக்கிய ட்ரம்பின் படத்தை வெளியிட்டது. வெள்ளை மாளிகை அல்லது ட்ரம்ப்பால் AI-உருவாக்கப்பட்ட படங்களைப் பகிர்வது புதுமையல்ல. கடந்த மே மாதம் போப் லியோ தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பு, அமெரிக்க ஜனாதிபதி போப் போன்ற AI-உருவாக்கப்பட்ட தனது படத்தைப் பகிர்ந்து கொண்டார். ஒகஸ்ட் 1 முதல் கனடா இறக்குமதிகளுக்கு 35 சதவீத வரி விதிக்கப்படும் என்று ட்ரம்ப் வியாழக்கிழமை (10) அறிவித்தார். இது இரண்டு வட அமெரிக்க அண்டை நாடுகளுக்கிடையேயான விரிசலை ஆழப்படுத்தும் நடவடிக்கையாகும். ஏனைய பெரும்பாலான வர்த்தக பங்காளிகள் மீது 15 முதல் 20 சதவீதம் வரை முழுமையான வரிகளை விதிக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார். அமெரிக்க ஜனாதிபதி இதுவரை 22 நாடுகளுக்கு வரி அறிவிப்பு கடிதங்களை வெளியிட்டுள்ளார். இதில் இலங்கையில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 30 சதவீத வரிகளும் அடங்கும். https://athavannews.com/2025/1438830
2 months 2 weeks ago
கடவுளைக் காப்பாற்றிய மக்களுக்கு நன்றி.
2 months 2 weeks ago
2 months 2 weeks ago
கிழக்கினை வெளிக்கவைக்கிறோம் என்கிற போர்வையில் இருண்ட பேய் யுகத்தை கட்டவிழ்த்த பிரதேசவாத மிருகங்கள் சில மாதங்களுக்கு முன்னர் கிழக்கு மாகாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரான பேராசிரியர் ரவீந்திரநாத்தைக் கொழும்பில் இருந்து கடத்திச் சென்று படுகொலை செய்த காரணத்திற்காக பிள்ளையான் என்றழைக்கப்பட்ட சிவநேசதுரை சந்திரகாந்தன் எனும் மனித குலத்திற்கெதிரான பாதகன் அரசாங்கத்தால் கைதுசெய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவது நடக்கிறது. இவனது வாக்குமூலங்களுக்கு அமைவாக இவனுடன் சொந்த இனத்தின்மேலேயே இரத்தக் குளியல் நடத்திய இன்னும் பல பாதகர்கள் இப்போது வரிசையாக அரசினால் கைதுசெய்யப்பட்டு வருகிறார்கள். இனியபாரதி, செழியன் என்று ஆரம்பித்து பல கோடரிக் காம்புகள் தேடித் தேடிக் கைதுசெய்யப்பட்டு வருகின்றன. இவர்களின் கைதுகளையடுத்து இவர்கள் பற்றிய விபரங்கள் வெளிவரத்தொடங்கியிருக்கும் இத்தருணத்தில் மனிதவடிவில் நடமாடிய இப்பிரதேசவாத மிருகங்களின் செயற்பாடுகள் குறித்துப் பலரும் தமது அச்சம் தவிர்த்து வெளிப்படையாகப் பேசத் தொடங்கியிருக்கின்றனர். அந்த வகையில் கிழக்கின் மூத்த பத்திரிக்கையாளரும், தமிழ்த் தேசியத்தை இன்றுவரை நேசித்துவருபவரும், பிள்ளையான் எனும் இரத்தவெறிபிடித்த பிரதேசவாதியினால் இலக்குவைக்கப்பட்டுத் தப்பி வாழ்பவருமான திரு துரைரட்ணம் அவர்கள் ஐ.பி.சி தமிழுக்கு வழங்கிய செவ்விகள் பாகம் ஒன்று, பாகம் இரண்டு என்று வெளிவந்திருக்கின்றன. பத்திரிக்கையாளர் நடேசன் உட்பட பலரை வடமாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்பதற்காகவே கொன்று தனது இச்சை தீர்த்த இம்மிருகங்கள் அக்காலத்தில் கிழக்கில் ஆடிய இரத்தக் குளியல் குறித்த சதிகளைக் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
2 months 2 weeks ago
கிண்கிணி கிண்கிணி எனவரும் மாதா கோயில் மணியோசை .......... ! 😍
2 months 2 weeks ago
வணக்கம் வாத்தியார் ......... ! ஆண் : கண்டேன் கல்யாணப் பெண் போன்ற மேகம் கண்டேன் கல்யாணப் பெண் போன்ற மேகம் அங்கே உல்லாச ஊர்வல ஓடம் மணமகன் மணமகள் மணவறைக் கோலமே பெண் : செம்பொன் மீனாட்சி நடத்தும் ராஜாங்கம் சிரிக்கும் பூந்தோட்டமோ இது சேலை முந்தானை விரிக்கும் பூமாது ஆடும் கொண்டாட்டமோ ஆண் : அலைகள் நீரோட்டம் அம்மன் தேரோட்டம் பருவப் பெண்ணாட்டமோ பனி மலைகள் தாலாட்டும் மலர்கள் பாராட்டும் கலைகள் வெள்ளோட்டமோ பெண் : சிறு அத்தாணி முத்தாரமோ இந்த அத்தானின் அச்சாரமோ சிறு அத்தாணி முத்தாரமோ இந்த அத்தானின் அச்சாரமோ ஆண் : ராஜாவின் வட்டாரமோ இந்த ராஜாத்தி வித்தாரமோ ஆண் : இடையின் மீதாக வளையும் வண்ணங்கள் இளமைப் பூப்பந்தலோ இலையும் மூடாமல் தலையும் வாராமல் அசையும் பொன் பூக்களோ பெண் : நடையில் அன்னங்கள் அடையும் இல்லங்கள் இடையில் வைத்தார்களோ நளினப் பொன்மேனி சுவையைப் பாரென்று உனக்கே தந்தார்களோ ஆண் : சுகம் ஒன்றாக வைத்தார்களோ நம்மை ஒன்றாக்க வைத்தார்களோ பெண் : கண் பார்க்க வைத்தார்களோ உன்னை பெண் பார்க்க வைத்தார்களோ ஆண் : வரிசைப் பல்முத்து அழகுப் பூங்கொத்து நகையில் நான் ஆடவா வதனச் செவ்வல்லி சரியும் வண்ணத்தில் மெதுவாய் நான் பாடவா பெண் : அடிமைப் பெண்ணேனும் உடமை உன்னோடு அதிகம் நான் சொல்லவா அணைக்கும் கையுண்டு ரசிக்கும் பெண்ணுண்டு பருவம் தேனல்லவா ஆண் : நான் கண்ணாடி பார்த்தாலென்ன பெண் : அதைக் கன்னத்தில் பார்த்தாலென்ன ஆண் : நெஞ்சத்தைப் பார்த்தாலென்ன பெண் : அதை மஞ்சத்தில் பார்த்தாலென்ன ......... ! --- கண்டேன் கல்யாணப் பெண் போன்ற மேகம் ---
2 months 2 weeks ago
2 months 2 weeks ago
இயற்கை எல்லா உயிரினங்களும் தூங்குவதற்கு சிறப்பான படுக்கைகளைத் தயாரித்துத்தான் வைத்திருக்கு . ........என்ன , அவற்றை அவைதான் தேடிக் கண்டு பிடிக்கவேணும் ......... ! 😂
2 months 2 weeks ago
அடியார்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கம் ........ ! 🙏
2 months 2 weeks ago
குரல்தர வல்ல அதிகாரிகள் தம் கருத்தை தெரிவித்தார்கள்.
2 months 2 weeks ago
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்.🙌 மூனா அவர்களின் முன்னேற்றத்திற்கு காரணம்…..உறவுகளுக்கு இப்போது விளங்கியிருக்கும்.😁
2 months 2 weeks ago
லார்ட்ஸ் டெஸ்டில் 'நங்கூரமிட்ட' ரூட் – இங்கிலாந்தின் பாஸ்பால் பாணிக்கு சவால் விடுத்த இந்தியா பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஜோ ரூட் மாஸ்டர்கிளாஸ் நடத்திக்காட்டினார் கட்டுரை தகவல் எஸ். தினேஷ் குமார் கிரிக்கெட் விமர்சகர் 11 ஜூலை 2025, 02:04 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் பாஸ்பால் (Bazball) அணுகுமுறை காலாவதியாகிவிட்டது, இங்கிலாந்து அணி இந்தியாவின் கட்டுக்கோப்பான பந்துவீச்சுக்கு அடிபணிந்துவிட்டது என சமூக ஊடகங்கள் முழுக்க எக்கச்சக்க பதிவுகளை பார்க்க முடிகிறது. ஆனால், உண்மையில் நேற்று லார்ட்ஸ் டெஸ்டின் முதல் நாளில் இங்கிலாந்து அணி பாஸ்பால் பாணியில்தான் பேட்டிங் செய்தது. "பாஸ்பால் என்பது வெறுமனே அதிரடியாக விளையாடுவது மட்டுமல்ல; தேவைப்படும் சமயத்தில் அணியின் நலனுக்காக அடக்கி வாசிப்பதும் பாஸ்பால் தான்" என்று ஒருமுறை இங்கிலாந்து முன்னாள் ஆல்ரவுண்டர் மொயின் அலி கூறியது இப்போது நினைவுக்கு வருகிறது. இந்தியா இங்கிலாந்துக்கு இடையே நேற்று லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கிய 3வது டெஸ்டில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ், வழக்கத்துக்கு மாறாக பேட்டிங்கை தேர்வு செய்தது ஆச்சர்யம்தான். பட மூலாதாரம்,GETTY IMAGES வழக்கமாக லார்ட்ஸ் ஆடுகளம், வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும். இந்தமுறை புற்களை அதிகம் விடாமல், ஆடுகளத்தை தயார் செய்திருக்கிறார்கள். முதல் 10–15 ஓவர்களை தாக்குப்பிடித்து விளையாடிவிட்டால், அதன்பிறகு பேட்டிங்கிற்கு சாதகமாக களம் மாறும் என்பது இங்கிலாந்தின் நம்பிக்கையாக இருந்திருக்கலாம். ஆனால், ஆடுகளம் மெதுவாகவும் (Slow), இரட்டை வேகம் (Two paced) கொண்டதாகவும் இருந்தது. அதாவது ஒரு பந்து தாறுமாறாக பவுன்ஸ் ஆகும். அடுத்த பந்து எதிர்பார்த்த அளவுக்கு பவுன்ஸ் ஆகாமல் தாழ்வாக செல்லும். இதுபோன்ற ஒரு ஆடுகளத்தில் எப்படி பேட்டிங் செய்ய வேண்டும் என ஜோ ரூட் மாஸ்டர்கிளாஸ் நடத்திக்காட்டினார். ஹைலைட்ஸ் மட்டும் பார்ப்பவர்களுக்கு ரூட்டின் நேற்றைய இன்னிங்ஸ் சுவாரஸ்யமாக இருக்காது. ஆடம்பரமான கவர் டிரைவ்களோ கண்ணைப் பறிக்கும் ஸ்கொயர் கட்டுகளோ இந்த இன்னிங்சில் எதிர்பார்க்க முடியாது. ஆடுகளத்தின் மெதுவான தன்மையை புரிந்துகொண்டு பந்தை நன்றாக உள்வாங்கி தன் பலத்துக்கு ஏற்ப விளையாடி உழைத்து ரன் சேர்த்தார் ரூட். பவுண்டரிகள் கூட நேர்க்கோட்டில் விளையாடியும் தேர்ட் மேன், பைன் லெக் திசையில் தட்டிவிட்டு ரன்களை எடுத்தார். பும்ராவை எதிர்கொள்ள தயங்கிய ரூட், ஆரம்பத்தில் அவர் ஓவரை புத்திசாலித்தனமாக தவிர்த்தார். போப் உடனான அவருடைய பார்ட்னர்ஷிப், இந்த இன்னிங்சில் இங்கிலாந்துக்கு ஒரு வலுவான அடித்தளத்தை அமைத்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இங்கிலாந்து வீரர்கள் ரூட் மற்றும் பென் ஸ்டோக்ஸ் கட்டுக்கோப்பான பந்துவீச்சு... ஆனாலும்! போப் வழக்கம் போல பதற்றத்துடன் இன்னிங்ஸை தொடங்கினாலும், போகப் போக ஆடுகளத்தின் தன்மைக்கேற்ப தன் ஆட்டத்தை தகவமைத்துக்கொண்டார். பும்ராவின் ஓவர்களை ரூட் எதிர்கொள்ள தயங்கிய போது, பொறுப்பை ஏற்றுக்கொண்டு விளையாடி தனது சக வீரரின் நெருக்கடியை போக்கினார். இந்தியாவின் பந்துவீச்சு கட்டுக்கோப்பாக இருந்தாலும், அது கடந்த டெஸ்டை போல அபாயகரமானதாக தோற்றமளிக்கவில்லை. அதற்கு ஆடுகளத்தின் மெதுவான வேகம் மட்டுமில்லாமல் லார்ட்ஸ் ஆடுகளத்தின் ஸ்லோப்பை (Slope) பயன்படுத்தி பந்துவீசுவதில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் தடுமாறியதும் முக்கிய காரணம். லார்ட்ஸ் மைதானத்தில் pavilion end இல் இருந்து Nursery end நோக்கி பந்துவீசும் போது, அங்கு ஒரு சிறியதாக ஒரு சரிவு இருக்கும். அதை சரியாகப் பயன்படுத்தி வீசினால், பந்தை உள் நோக்கி கொண்டு சென்று பேட்ஸ்மேனுக்கு நெருக்கடி கொடுக்கலாம். ஆனால், கடந்த டெஸ்டில் சாதித்த ஆகாஷ் தீப், அனுபவமின்மை காரணமாக ஸ்லோப்பை நேற்று சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஓய்வுக்கு பிறகு அணிக்கு திரும்பிய பும்ரா, தொடக்கத்தில் சரியான லைன் அண்ட் லெங்த்தில் பந்துவீசி, இங்கிலாந்தின் தொடக்க வீரர்கள் எளிதாக ரன் குவிக்க முடியாமல் செய்தார். நிதிஷ் குமார் தந்த திருப்புமுனை ஓய்வுக்கு பிறகு அணிக்கு திரும்பிய பும்ரா, தொடக்கத்தில் சரியான லைன் அண்ட் லெங்த்தில் பந்துவீசி, இங்கிலாந்தின் தொடக்க வீரர்கள் எளிதாக ரன் குவிக்க முடியாமல் செய்தார். பாஸ்பால் யுகத்தில் மிகவும் மெதுவான முதல் செஷன் இதுவாகத்தான் இருக்க முடியும். பும்ராவின் துல்லியமான பந்துவீச்சில் கைகள் கட்டப்பட்டிருந்த தொடக்க வீரர்களான டக்கெட்டும் கிராலியும் நிதிஷ் குமார் வந்தவுடன் ரன் குவிக்கும் ஆசையில் ஆட்டமிழந்தனர். முதன்மை வேக வீச்சாளர்கள் சரியான லெங்த் பிடிக்க முடியாமல் சிரமப்பட்ட நிலையில், பேட்டிங் ஆல்ரவுண்டரனான நிதிஷ் குமார், தனது High arm பந்துவீச்சு ஆக்சனில் ஆட்டத்தின் முதல் திருப்புமுனையை ஏற்படுத்தினார். இந்த டெஸ்ட் தொடரில் பும்ராவை ஓரளவுக்கு இங்கிலாந்து நன்றாக விளையாடியதாகவே சொல்லலாம். 200 பந்துகளுக்கு மேல் விக்கெட் எடுக்காமல் பும்ரா பந்துவீசி வருகிறார் என ஒரு புள்ளிவிவரம் திரையில் காட்டப்பட்ட சமயத்தில், உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் புரூக்கின் விக்கெட்டை வீழ்த்தினார். என்ன மாதிரியான ஒரு பந்து அது! ஆடுகளம் சுத்தமாக ஒத்துழைக்கவில்லை, இங்கிலாந்து அணி நங்கூரம் போல விளையாடியது. விக்கெட் எடுத்தால் மட்டும்தான் இந்தியாவுக்கு வாழ்வு. இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒரு அபாரமான nip backer மூலம் கொஞ்சமே கொஞ்சம் பந்தை நகர்த்தி புரூக்கின் ஸ்டம்புகளை தகர்த்தார். இங்கிலாந்து அணி, வலுவான நிலைமைக்கு நகர்ந்து கொண்டிருந்த சமயத்தில் போப்பின் விக்கெட்டை ஜடேஜா கைப்பற்றினார். ரிஷப் பந்த் கையில் ஏற்பட்ட காயம் காரணமாக பெவிலியன் திரும்பிய நிலையில் மாற்று வீரராக விக்கெட் கீப்பிங் செய்த ஜூரெல் அபாரமான கேட்ச் பிடித்தார். இந்த இன்னிங்சில் இந்தியாவுக்கு நிறை கேட்ச் வாய்ப்புகள் கைக்கு எட்டவில்லை. பீல்டர்கள் மீது தவறில்லை என்றாலும் இன்னும் கவனமாக இருந்திருந்தால் இன்னும் சில விக்கெட்களை எடுத்திருக்கலாம். எப்போது இந்தியாவின் கைக்கு ஆட்டம் மாறும்? ரூட்டிடம் சென்று, "பாஸ்பால் விளையாடு இப்போது" என சிராஜ் சைகை செய்ததும், 'போரிங் கிரிக்கெட்' என இங்கிலாந்தின் தற்காப்பு ஆட்டத்தை கில் கிண்டல் அடித்ததும் ஆட்டத்துக்கு சுவாரஸ்யம் கூட்டின. மூன்றாவது, நான்காவது நாள்களில் சுழற் வீச்சுக்கு ஆடுகளம் சாதகமாக மாறும் என கணிக்கப்படும் சூழலில், குல்தீப் யாதவ் இல்லாமல் களமிறங்கியது சரியான முடிவா என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை. 99 ரன்களுடன் களத்தில் உள்ள ரூட்டை இன்று விரைவில் ஆட்டமிழக்க செய்து, எஞ்சியுள்ள விக்கெட்களை விரைவில் வீழ்த்தினால் மட்டும்தான் ஆட்டம் இந்தியாவின் கைக்கு வரும். முழு உடற்தகுதியுடன் இல்லாத ஸ்டோக்ஸ் இன்று எப்படி இன்னிங்ஸை தொடங்கப் போகிறார் என்பதும் ஆட்டத்தின் போக்கை தீர்மானிக்கும் என கூறலாம். பாஸ்பால் பேச்சுகளை எல்லாம் உதறிவிட்டு பார்த்தால், லார்ட்ஸ் டெஸ்டில் முதல் நாளில் 251–4 என்பது நல்ல ஸ்கோர் என்றே சொல்ல வேண்டும். நான்காவது இன்னிங்சில் பேட்டிங் செய்ய வேண்டும் என்பதை மனதில் வைத்துக்கொண்டு, நாளை பேட்டிங் செய்யும் வாய்ப்பு கிடைத்தால், இந்தியா மிகப்பெரிய ஸ்கோரை குவித்தாக வேண்டும். ஒட்டுமொத்தமாக கட்டுக்கோப்பான பந்துவீச்சு, நேர்த்தியான பேட்டிங் என பக்கா டெஸ்ட் மேட்ச்சாக லார்ட்ஸ் டெஸ்டின் முதல் நாள் மாறியுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cg75e2p8ejmo
2 months 2 weeks ago
காசாவில் ஊட்டச்சத்து மருந்திற்காக வரிசையில் காத்துநின்றவர்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் - சிறுவர்கள் உட்பட பலர் பலி 11 JUL, 2025 | 10:13 AM மத்திய காசாவில் உள்ள ஒரு மருத்துவமனையின் முன் ஊட்டச்சத்து மருந்துகளுக்காக வரிசையில் நின்றவர்கள் மீது இஸ்ரேல் மேற்கொண்டவரிசையில் எட்டு குழந்தைகள் மற்றும் இரண்டு பெண்கள் உட்பட குறைந்தது 15 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக ஒரு மருத்துவமனை தெரிவித்துள்ளது. டெய்ர் அல்-பலாவில் உள்ள அல்-அக்ஸா மருத்துவமனையில் இருந்து எடுக்கப்பட்ட காணொளி மருத்துவர்கள் காயங்களுக்கு சிகிச்சை அளிக்கும்போது பல குழந்தைகள் மற்றும் பிறரின் உடல்கள் தரையில் கிடப்பதைக் . காண்பித்துள்ளது. இந்த மருத்துவமனையை நடத்தும் அமெரிக்காவை தளமாகக் கொண்ட உதவி குழுவான ப்ராஜெக்ட் ஹோப், இந்தத் தாக்குதல் சர்வதேச சட்டத்தின் அப்பட்டமான மீறல் என்று கூறியது. இஸ்ரேலிய இராணுவம் "ஹமாஸ் பயங்கரவாதி"யைத் தாக்கியதாகவும், பொதுமக்களுக்கு ஏதேனும் தீங்கு ஏற்பட்டால் வருந்துவதாகவும் கூறியது. இஸ்ரேலும் ஹமாஸும் போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், வியாழக்கிழமை இஸ்ரேலிய தாக்குதல்களில் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் 66 பேரில் அவர்களும் அடங்குவர். ஊட்டச்சத்தின்மை தொற்றுநோய் உட்பட பல நோய்களிற்கான மருத்துகளை பெறுவதற்காக மருத்துவநிலையம் திறப்பதற்காக காத்திருந்த மக்கள் மீதே இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்டது என புரொஜெக்ட் ஹோப் தெரிவித்துள்ளது. திடீரென ஆளில்லா விமானங்களின் சத்தத்தை கேட்டோம் அதன் பின்னர் வெடிப்பு இடம்பெற்றது என சம்பவத்தை நேரில் பார்த்த யூசுவ் அல் அய்டி என்பவர் ஏஎவ்பிக்கு தெரிவித்துள்ளார். நிலத்திற்கடியில் பூமி அதிர்ந்தது,எங்களை சுற்றியிருந்த அனைத்தும் குருதியாகவும் பெரும் அலறல்களாகவும் மாறியது என அவர் தெரிவித்துள்ளார். சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட காட்சிகள் தாக்குதலின் உடனடி விளைவுகளைக் காட்டின பெரியவர்களும் சிறு குழந்தைகளும் ஒரு தெருவில் கிடந்தனர்இ சிலர் பலத்த காயமடைந்தனர் மற்றவர்கள் நகரவில்லை. அருகிலுள்ள அல்-அக்ஸா மருத்துவமனையின் பிணவறையில் இறந்த குழந்தைகளின் உறவினர்கள் இறுதிச் சடங்குகளைச் செய்வதற்கு முன்பு வெள்ளை துணிகள் மற்றும் உடல் பைகளில் போர்த்தி அழுதனர். ஒரு பெண் பிபிசியிடம் தனது கர்ப்பிணி மருமகள் மணாலும் அவரது மகள் பாத்திமாவும் அவர்களில் இருந்ததாகவும் மணலின் மகன் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்ததாகவும் கூறினார். "சம்பவம் நடந்தபோது குழந்தைகளுக்கு மருந்துப் பொருட்களைப் பெறுவதற்காக அவர் வரிசையில் நின்றிருந்தார்" என்று இன்டிசார் கூறினார்.அருகில் நின்ற மற்றொரு பெண் "அவர்கள் என்ன பாவத்திற்காக கொல்லப்பட்டார்கள்?" என்று கேட்டாள். "நாங்கள் முழு உலகத்தின் காதுகளுக்கும் கண்களுக்கும் முன்பாக இறந்து கொண்டிருக்கிறோம். முழு உலகமும் காசா பகுதியைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. இஸ்ரேலிய இராணுவத்தால் மக்கள் கொல்லப்படாவிட்டால் அவர்கள் உதவி பெற முயற்சிக்கும் போது இறக்கிறார்கள்." புரொஜெக்ட் ஹோப் ப்ராஜெக்ட் ஹோப்பின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ரபிஹ் டோர்பே உதவி குழுவின் மருத்துவமனைகள் "காசாவில் ஒரு புகலிடமாக இருந்தன அங்கு மக்கள் தங்கள் சிறு குழந்தைகளை அழைத்து வருகிறார்கள் பெண்கள் கர்ப்பம் மற்றும் பிரசவத்திற்குப் பிந்தைய பராமரிப்பு பெறுகிறார்கள்இமக்கள் ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு சிகிச்சை பெறுகிறார்கள் மேலும் பல" என்று கூறினார். "ஆயினும்கூட இன்று காலை கதவுகள் திறக்கும் வரை வரிசையில் நின்ற அப்பாவி குடும்பங்கள் இரக்கமின்றி தாக்கப்பட்டன" என்று அவர் மேலும் கூறினார். "திகிலடைந்து மனம் உடைந்து இனி நாங்கள் எப்படி உணர்கிறோம் என்பதை சரியாகத் தெரிவிக்க முடியவில்லை." "இது சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் அப்பட்டமான மீறலாகும் மேலும் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தாலும் காசாவில் யாரும் எந்த இடமும் பாதுகாப்பாக இல்லை என்பதை இது தெளிவாக நினைவூட்டுகிறது. இது தொடர முடியாது." யுனிசெஃப் தலைவர் கேத்தரின் ரஸ்ஸல் கூறினார்: "உயிர்காக்கும் உதவியைப் பெற முயற்சிக்கும் குடும்பங்களைக் கொல்வது மனசாட்சிக்கு விரோதமானது." https://www.virakesari.lk/article/219708
2 months 2 weeks ago
சர்வதேச நீதிப் பொறிமுறையை வலியுறுத்தி வடக்கு, கிழக்கு தழுவிய ரீதியில் போராட்டம்; எதிர்வரும் ஜுலை 26 இல் ஒன்றிணைய வடக்கு கிழக்கு சமூக இயக்கம் அழைப்பு Published By: VISHNU 11 JUL, 2025 | 05:43 AM சர்வதேச நீதிப் பொறிமுறையை வலியுறுத்தி வடக்கு, கிழக்கு தழுவிய ரீதியில் எதிர்வரும் ஜுலை 26ஆம் திகதி பாரிய மக்கள் போராட்டத்தினை மேற்கொள்ள அனைவரையும் ஒன்றிணையுமாறு வடக்கு கிழக்கு சமூக இயக்கம் அழைப்பு விடுத்துள்ளது. இவ்வமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கண்டுமணி லவகுசராசா பாதிக்கப்பட்ட உறவுகள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், சிவில் அமைப்புக்கள, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், ஊடகவியலாளர்கள் என அனைவருக்கும் விடுத்துள்ளார். இவ்வழைப்பில் , இலங்கையில் மனித குலத்திற்கு எதிராக இடம்பெற்ற வன்முறைகள் மற்றும் போர் குற்றங்கள் தொடர்பாக எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஐ.நா. மனித உரிமை பேரவையில் எடுக்கப்படும் இலங்கை தொடர்பான தீர்மானம் வலுப்பெறும் வகையில் மேற்கொள்ளப் படுவதற்கு மக்கள் போராட்டத்தினை மேற்கொள்ள வேண்டிய சூழ் நிலைக்கு தமிழ் மக்களாகிய நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம். குறிப்பாக இலங்கை தொடர்பான விடயம் ஐ. நா. மனித உரிமை பேரவையில் நிகழ்ச்சி நிரலில் வைக்கப்பட்டு காலம் தோறும் புதுப் புது தீர்மானங்கள் இலங்கை அரசின் இணை அனுசரணையுடன் மேற்கொள்ளப் பட்டுக் கொண்டே செல்கிறது. இற்றைவரை இதுதீர்மானங்கள் ஊடாக குறிப்பாக வடக்கு கிழக்கில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு எந்த நன்மைகளும் கிடைத்ததில்லை. இவ்வாறாணதொரு சூழ்நிலையில் இலங்கையின் அரசியல், பொருளாதாரம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான விடயங்களை அவதானிப்பதற்காக அண்மையில் இலங்கைக்கு வருகை தந்த ஐ.நா.மனித உரிமை உயர்ஸ்தாணிகரின் வருகை பின்னர் வெளியிடப் பட்டுள்ள அறிக்கையில் எமது தமிழ் மக்களின் தொடர்ச்சியான பிரச்சினைகளுக்கான தீர்வினை வழங்க கூடிய ஆரோக்கியமான விடயங்கள் உள்ளடக்கப் படவில்லை என்பதை இட்டு வருத்தப் படுகிறோம். அத்துடன் அண்மையில் ஐ.நா.சபையின் இலங்கைக்கான வாதிவிடப் பிரதியால் ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய ஊடக நேர்காணல் கூட எமது மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்விற்குரிய பொறிமுறையாக அமையாத நிலையை நாங்கள் ஊடக செய்திகள் ஊடாக பார்க்கிறோம். இலங்கை அரசின் உள்ளக பொறி முறை ஊடாக தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு அமையப் போவதில்லை மாறாக சர்வதேச பொறி முறைகள் ஊடாகவே தமிழ் மக்களுக்கான தீர்வுகள் எட்டப்பட வேண்டும் என்பதனை வலியுத்தி பல தடவைகள் இலங்கைக்கு உள்ளேயும், சர்வதேசத்திலும் கோரி வருகின்றோம். இந் நிலையில் ஐ. நா இலங்கை தொடர்பான பிரச்சினைகளுக்கு உள்ளக பொறி முறைகள் ஊடகவே தீர்வினை மேற்கொள்ள வேண்டும் எனும் கருத்தினை தங்களது அறிக்கைகளிலும், ஊடக நேர் காணல்களிலும் குறிப்பிடுவதை நாம் ஏற்றுக் கொள்ளவில்லை. இந்நிலையில் தமிழ் மக்கள் தங்களுக்கான பிரச்சினைக்குரிய தீர்வு உள்நாட்டு பொறிமுறையை கடந்து சர்வதேச நீதிப் பொறி முறையின் ஊடாக கிடைக்க வேண்டும் என்பதனை மீள வலியுறுத்தி எதிர்வரும் ஜுலை 26ஆம் திகதி வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் பாரிய மக்கள் போராட்டம் ஒன்றினை ஏற்பாடு செய்ய எண்ணி உள்ளோம். எனவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க அனைவரின் பங்களிப்பினை வழங்குமாறு அனைவரையும் அன்புடன் வேண்டுகின்றோம் என்றார். https://www.virakesari.lk/article/219702
Checked
Sat, 09/27/2025 - 09:23
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed