புதிய பதிவுகள்2

முதல் முறையாக ஆடு மாடுகளுக்கான மாநாடு நடத்தும் சீமான்.. தயார் நிலையில் மாடுகள்!

2 months 2 weeks ago
இந்த மாநாட்டைத் தொடர்ந்து பூச்சி புழுக்களுக்கான மாநாடொன்றினையும் செந்தமிழன் சீமான் அண்ணா நடாத்தவேண்டும்!😁

முதல் முறையாக ஆடு மாடுகளுக்கான மாநாடு நடத்தும் சீமான்.. தயார் நிலையில் மாடுகள்!

2 months 2 weeks ago
இப்ப தான் சரியான இடத்தை பிடித்திருக்கிறார் சீமான்..என்ன வாய் பேசாப் பிராணிகள் பாவங்கள்..,🤭

சம்பந்தனை தமிழ்ச்சமூகம் மறந்துவிட்டதா?

2 months 2 weeks ago
எங்கட ஆட்களில் ஒரு பகுதியினருக்கு இன்னும் உலக வாழ்க்கையில் எது முக்கியமென்பது பற்றிய அறிவு கிடையாது என்பதைக் காட்டும் பதிவு. பிறக்கிறோம், இறக்கிறோம். இடையில் ஏனையோரை தட்டிச் சுத்தாமல், பிராண்டி வாழாமல், கொல்லாமல் வாழ முடிந்தால் அதுவே போதும். இதை விட்டு விட்டு , செத்த பின்னர் என்னைக் கொண்டாட வேண்டும், நினைவுகூர வேணும், புகழ ஒரு கூட்டம் வேணுமென்பதெல்லாம் வாழ்க்கையின் அர்த்தம் தெரியாத பினாத்தல் ரீமின் ஐடியாக்கள். இந்தப் பதிவைக் கூட சொந்தப் பெயரில் எழுத இயலாத இந்த முகநூல் பதிவர், இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். தன் வாழ்க்கையில் சம்பந்தர் செய்ததை விட எதுவும் செய்து விடாமையால் தான் ஒளிந்து நின்று எழுதுகிறார் போல இருக்கு என ஊகிக்கிறேன்😎!

லாராவின் சாதனையை முறியடிக்காத முல்டர்

2 months 2 weeks ago
நீங்கள் சொல்வதுதான் காரணம் என்றால் அதை ஏன் முல்டர் சொல்லவில்லை? சொன்னால் சிம்பாவ்வே ஒரு சோப்பிளாங்கி டீம் என சொல்வது போல் ஆகிவிடும். என்னை பொறுத்தவரை கெயில் சொன்னதுதான் சரி. டெஸ்ட் கிரிகெட் என்றால் அது டெஸ்ட்கிரிகெட்தான். லாரா முதன் முதலில் 375 அடித்து உடைத்த சாதனை சேர் கரி சோர்பஸ் 365 அடித்த சாதனையை, அது அப்துல்காதர் விளையாடிய பாகிஸ்தான் அணிக்கு எதிராக சோபர்ஸ் எடுத்தது, ஆனால் லாரா அதை உடைத்தது ஒரு சதம் பெறுமதியில்லாத 1994 இங்கிலாந்து போலிங்க்குக்கு எதிராக. அதற்காக லாரா 364 இல் hit wicket லா அவுட் ஆக முடியும்🤣. விட்டு கொடாமல் விளையாடுவது என்பது விளையாட்டின் அடிப்படை. அது இல்லாவிட்டால் அது விளையாட்டே இல்லை.

செங்கடல் பகுதியில் கப்பல் மீது ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் - மூவர் பலி

2 months 2 weeks ago
ஐரோப்பாவிற்குச் சென்று கொண்டிருந்த கப்பல்கள் தான் தாக்கப் பட்டிருக்கின்றன. இப்படித் தொடர்ந்தால் கப்பல் கம்பனிகளின் காப்புறுதிச் செலவு உயரும். உயரும் செலவைக் கப்பல் கம்பனிகள், தன் வாடிக்கையாளர்களை நோக்கி நகர்த்த, அந்த வாடிக்கையாளர்கள் பொருட்களை வாங்கும் நுகர்வோர் மீது சுமத்துவர். உக்ரைன் போர் ஆரம்பித்த நேரம் "ஐயோ தக்காளி விலை கூடிற்றுது, நேட்டோ தான் காரணம்" என்று அழுத ஐரோப்பியத் தமிழர்கள் இங்கும் வந்து ஹௌதிகளைத் திட்டாமல் அமெரிக்காவைத் தான் திட்டுவர்😂!

சம்பந்தனை தமிழ்ச்சமூகம் மறந்துவிட்டதா?

2 months 2 weeks ago
வரலாற்றின் குப்பைத் தொட்டியில் சம்பந்தர். சம்பந்தனை மறந்து விட்டார்கள் என்று பதிவுகள் வந்த பின்னர் தான் ஏற்பாடு தீவிரம். நான்கு நாட்களுக்கு முதல் சம்பந்தரின் நினைவு நாள் என்பதே இப்போதுதான் எதேச்சையாக ஒரு செய்தியைத் தேடிய போது தெரிய வந்தது. இறந்து ஒரு வருடத்திலேயே இந்த நிலை என்பது கொஞ்சம் ஆச்சர்யம்தான். யாராவது நினைவு கூர்ந்திருக்கிறார்களா? என்று பூதக் கண்ணாடி வைத்துத் தேடியும் ஒன்றும் சிக்கவில்லை. வரலாற்றின் குப்பைத் தொட்டிக்குப் போய் விட்டார் சம்பந்தர். இது நடக்கும் என்பது எமக்குத் தெரியும். ஆனால் இவ்வளவு சீக்கிரமாக - அதுவும் இந்த சமூக வலைத் தள யுகத்தில் தூக்கி வீசப்பட்டிருப்பது நமக்கே கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது. ஆனால் ஜோசெப் பரராஜசிங்கம் தொடக்கம் சிவனேசன், ரவிராஜ் உட்பட எண்ணற்ற அரசியல்வாதிகளின் நினைவுதினங்களையும், தமக்காய் ஈகையாகிய மறவர்கள் தினங்களையும் மக்கள் இன்னும் நினைவு கூர்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். இந்த உளவியல்தான் என்ன? 'சம்பந்தர்'களை இந்த இனம் அவர்களைப் புதைத்த ஈரம் காயும் முன்னம் மறந்து விடுகிறது என்பதன் பின்னால் இருப்பது இந்தத் தேசத்தின் இறைமை. அதை அடகு வைத்தவர்களை மக்களும் மன்னிப்பதில்லை - வரலாறும் மன்னிப்பதில்லை. நாளை 'சுத்துமாத்து' களுக்கும் இதே தீர்ப்புத்தான். ஏனென்றால் வரலாறு ஈவிரக்கமில்லாதது அது யாரையும் மன்னிப்பதில்லை. யாழ்ப்பாண புலனாய்வு

லாராவின் சாதனையை முறியடிக்காத முல்டர்

2 months 2 weeks ago
இது மட்டும் அல்ல, இதே போல் இன்னொரு உத்திதான், மறுநாள் காலையில் ஒப்னர்களை ஒரு அரை மணி நேரம் பீல்டிங்கில் நிற்க வைத்து விட்டு, டிக்ளேர் செய்வதும். டெஸ்ட் நிபுணரனா உங்களுக்கு நான் சொல்ல தேவையில்லை, எமது அணியின் ஸ்கோர் என்ன, என்ன ரேட்டில் அடித்துள்ளோம், மைதானத்தின், சூழலின் தட்பவெட்ப, நிலை களுக்கு அமைய வேறு, வேறு உத்திகள் கையாளப்படும். இங்கே டெயிலர் நான் சொன்ன உத்தியை கைக்கொள்ள விரும்பினார், ஆனால் அது பிழையாக பொருள் கொள்ளப்படும் என்பதால், அடுத்த நாள் காலையில் டிக்ளேர் பண்ணினார். பிரட்மனோடு சமன் ஆனதுமே டிக்லேர் பண்ணுவதுதான் அவர் நோக்கம் என்றால், 334 அடித்ததும் டிக்ளேர் பண்ணி இருப்பார். தொடர்ந்து நாள் முடியும் வரை விளையாடி இருக்க மாட்டார். உங்களுக்கான பதிலை கிறிஸ் கெயில் தருகிறார் 🤣. There may have been a school of thought that given the disparity between South Africa, the newly-crowned World Test Championship winners, and Zimbabwe, ranked 12th in the ICC's Test rankings, somewhat lessened Mulder's achievement. But Gayle was at pains to point out the 'opponent doesn't matter'. "It's the same cricket, Test cricket," Gayle said. "Sometimes you can't even get one run against a team like Zimbabwe, if you want to put it that way. Gayle blasted nearly 20,000 runs across all three formats for the West Indies "It doesn't matter the opponent, if you get 100 against any team, that's a Test century. If you get a double or triple, 400, that's Test cricket. That's the ultimate game. "Like I said, he panicked and he blundered, straight up."

அமைதிக்கான நோபல் பரிசுக்காக ட்ரம்பின் பெயரை பரிந்துரைத்தார் இஸ்ரேல் பிரதமர் !

2 months 2 weeks ago
இடது சாரிகளை விட வலதுசாரிகள் உங்களை சுரண்டாமல், சொகுசாக நடத்துகிறார்கள் என்கிறீர்களா? மண்ணிறத்தோலோடு உங்கள் போன்றோர் வலதுசாரிகளிடம் கூழைக் கும்பிடு போட்டால் கூட உங்களை ஒரு தூரத்தில் தான் வைத்திருப்பர். ஏனெனில் வலது சாரி வாத்தின் உள்ளீடே xenophobia தான். இது புரியாமல் "இறைச்சிக் கடைக்காரனுக்கு வாக்குப் போட்ட கோழிகள்" போன்ற அமெரிக்க பலஸ்தீனர்கள் போல பலர் இருக்கிறீர்கள்😎. மிஷேல் ஒபாமா என்ன சொன்னார் என்பது விளங்காமல் தான் "அவர் ஒபாமாவை வறுக்கிறார்" என்றிருக்கிறீர்கள் என்பது புரிந்ததால், அவர் சொன்னதை அப்படியே பிரசுரித்த கார்டியனை செய்தியை இணைத்தேன். "வாசிப்பு, தேடல், விளங்கிக் கொள்ளல்" என்பன ட்ரம்ப் பக்தர்களின் strong suit அல்ல! 😂 என்பதை அறிந்ததால் நீங்கள் கடந்து போவீர்கள் என்றும் அறிந்திருக்கிறேன். ஒபாமா ஜனாதிபதியாக வர முதலே உலகின்/அமெரிக்க சமூகத்தின் தீவிரவாதப் போக்குகளுக்கு எதிராகக் குரல் கொடுத்த ஒருவர் , ஐரோப்பிய நாடுகளில் இருந்த முற்போக்கு சக்திகளுக்குக் கூட அதனால் நன்மைகள் விளைந்தன. இதற்காகத் தான் கொடுத்தார்கள்.இதைப் பற்றியும் வாசிக்காதீர்கள்😎! சோசியல் மீடியாவில் தலையைக் கொடுத்து விட்டு சும்மா அலட்டிக் கொண்டிருங்கள்!

லாராவின் சாதனையை முறியடிக்காத முல்டர்

2 months 2 weeks ago
என்னுடைய புரிதல் இன்மை பற்றிய உங்கள் புரிதலுக்கு நன்றி🤣. உங்கள் புரிதலை பார்க்க நீங்கள் டெஸ்ட் பிளேயர் போல உள்ளது, நான் அப்படி இல்லை, சாதாரண கிளப் பிளேயர்தான். ஆனால் டெஸ்ட் பார்ப்பதால் கேள்வி ஞானம் கொஞ்சம் உண்டு. நான் இங்கே மூக்கு சாத்திரம் பார்த்து வாய்க்கு வந்த படி எழுதவில்லை. டெய்லரே கூறியுள்ளார். 2ம் நாள் முடிவில், தான் 3ம் நாள் காலையில் மேலும் அரை மணிநேரம் விளையாடி விட்டு, டிக்லேர் பண்ணவே யோசித்தேன். விளையாட்டை வெல்ல அதுவே மிக சிறந்த முடிவாக இருந்திருக்கும் என. ஆனால் அப்படி செய்தால் - அது பிரட்மனை முந்த என்றே பொருள் கொள்ளப்படும் என்பதால், 2ம் நாள் இரவு நன்றாக யோசித்து டிக்லேர் செய்யும் முடிவை எடுத்தேன் என. ஆகவே 👇 இது பற்றி டெய்லர் கூறியது https://www.cricket.com.au/news/3311645/on-this-day-taylor-equals-bradman-with-334 அவரின் கூற்றுப்படி: “I think ideally I would have batted on for 20 minutes just to put their openers out in the field for 20 more minutes before we declared”. "But I thought if I did that I would then end up on 340 not out or something like that and I think people would have assumed that I'd batted on just for my own glory. "I didn't want to send that message either so the more I thought about it, I came to the decision that the best thing I can do is declare (and) end up on the same score as Sir Donald, which I'm more than delighted with.

யாழில். 17 நாட்களின் பின் மீட்கப்பட்ட சிறுமி! இளைஞர் கைது

2 months 2 weeks ago
சும்மாதான்...எறிந்து பார்ப்பம்...இது வெளிநாட்டுக்காசு செய்யிற வேலைதான்...ஒன்ரில் மோட்டச்சயிக்கில் வாங்கி ஓடி போஸ்ரோடை ..அல்லது ரிப்பரோடை மோதி இல்லாமல் போவினம்...அல்ல்து பெட்டையோடயோ..பொடியனோடைய தொடர்புபட்டு...எக்குத்தக்காய் நடந்து மாட்டுப் படுவினாம் ..இது எல்லாம் கொலஸ்திரோல்.. கூடி குணம் பாருங்கோ..

அமைதிக்கான நோபல் பரிசுக்காக ட்ரம்பின் பெயரை பரிந்துரைத்தார் இஸ்ரேல் பிரதமர் !

2 months 2 weeks ago
மனைவிமார்கள் சொல்லும் குற்றம் குறைகளை வைத்தும் ஒருவர் மதிப்பிடப்படலாம் என்றால், ஆபிரகாம் லிங்கன் கூட ஒன்றும் இல்லை என்று ஆகிவிடுவார். அல்பேர்ட் ஐன்ஸ்டைன் கூட அவருடைய நோபல் பரிசைத் திருப்பிக் கொடுக்கவேண்டும். ஓபாமாவிற்கு கொடுத்த நோபல் பரிசு விவாதத்திற்கு உட்பட்டதே. ஆனால் அவருக்கு அந்தப் பரிசை முன்மொழியவும், அதைக் கொடுக்கவும் தேவையான சரியான உறுதியான நடவடிக்கைகளை ஓபாமா அவரது பதவியின் முதல் வருடத்திலேயே எடுத்திருந்தார். ஓபாமாவை எந்த தனிநபர்களும் அரசியல் சார்பாகவோ அல்லது நலம் கருதியோ முன்மொழியவில்லை. மாறாக, நோபல் பரிசுக் குழுவே அவரை தெரிந்தெடுத்தது. ஒபாமாவை தெரிந்தெடுத்தற்கான காரணங்களாக நோபல் குழுமம் பின்வருபனவற்றை சொல்லியிருந்தார்கள்: இஸ்லாமிய நாடுகளுடன் இணக்கத்தை உண்டாக்கும் முயற்சிகளை மேற்கொண்டது. அமெரிக்காவில் இன்றும் கூட ஓபாமா மீது வைக்கப்படும் ஒரு குற்றச்சாட்டு அவர் இஸ்லாமிய நாடுகளுக்கு பெருமளவில் விட்டுக் கொடுத்தார் என்பதே. அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தங்களை புதுப்பித்தது அல்லது உண்டாக்கியது. யுத்தங்கள் அற்ற ஒரு சமாதான உலகை நோக்கிய நடவடிக்கைகளை அவர் முயற்சித்தார். ட்ரம்பின் சமாதான நடவடிக்கைகள் வெறும் பேச்சளவிலேயே இருக்கின்றன. ஏற்கனவே இருக்கும் ஒப்பந்தங்களை கூட தவிர்த்துவிட்டு, புதிய ஒப்பந்தங்களை பயமுறுத்தலின் ஊடாகவே அவர் செய்ய முனைகின்றார். அவைகளும் கூட மிகவும் ஒரு பக்கச் சார்பாக, அமெரிக்காவின் நலன்களை மட்டுமே முன்னிறுத்துகின்றன. இவர் உலகின் மீது தொடுத்திருக்கும் வர்த்தகப் போர்கள் கூட உலகின் ஸ்திரத்தன்மையை குலைத்துக் கொண்டிருக்கின்றன. இன்று என்ன, நாளை என்ன என்று எதுவும் தெரியாத நிலையிலேயே அமெரிக்கர்களும், உலகமும் இவரின் நடவடிக்கைகளை பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். பலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேல் நடத்திக் கொண்டிருக்கும் கொடுமை உலகம் கண்ட மிகக்கொடிய சில கொடுமைகளில் ஒன்று. 'ஒரு பை அரிசிக்காக பலஸ்தீனியர்கள் அவர்களின் உயிர்களைக் கூட விட தயாராக இருக்கின்றார்கள்...................' என்ற வசனம் எந்த மனிதனையும் அழவைக்கும். அமெரிக்காவும், ட்ரம்பும் நினைத்தால் இந்தக் கொடுமையை இன்றே நிற்பாட்டமுடியும். ஆனால் காசாவில் உல்லாச விடுதிகளைக் கட்டுவதைப் பற்றியே ட்ரம்பும், அவரது குடும்பமும் அக்கறையாக உள்ளது. ஈரானுடனான முரண்பாட்டில் கூட ட்ரம்ப் சமாதானத்தை தேடவில்லை. இன்னும் பல இப்படியே போய்க் கொண்டிருக்கின்றன. நான் மேலே குறிப்பிட்டவற்றை விட, இன்றைய திகதியில் உலகில் மிகப்பெரும் அட்டூழியங்கள் செய்யும் இஸ்ரேலின் தலைவரே ட்ரம்பை முன்மொழிந்திருக்கின்றார் என்ற ஒரு தகவலே ட்ரம்பிற்கு இந்தப் பரிசு கிடைக்கக் கூடாது என்பதற்கான பிரதான காரணம்.

மண் மக்களிற்கான நீதிக்கா பேசும்போது செம்மணியிடமிருந்து நாம் எதனை செவிமடுக்கின்றோம்?

2 months 2 weeks ago
Published By: RAJEEBAN 10 JUL, 2025 | 11:23 AM Sakuna M. Gamage daily mirror கனேரு மரத்தின் கீழ் நீ கீழே விழுந்துகிடந்தாய் உன் மார்பிலிருந்து குருதி வழிந்தோடியது நான் உன்னை இழந்தேன் இந்த தேசத்திற்கு அது இழப்பில்லை ஆனால் பூமிக்கு... ' உன்னால் எழுந்திருக்க முடிந்தாலும் எழுந்திருக்காதே" நீதியே புதைக்கப்பட்டிருக்கும் போது மக்கள் உண்மையில் எங்கு செல்ல முடியும்? அவர்களுக்காக யார் பேசுவார்கள்? சொல்ல முடியாத போர்க் காலத்தில் ரத்ன ஸ்ரீ விஜேசிங்கே எழுதிய ஒரு சிங்களக் கவிதையில் எழுதிய இந்த வரிகள் இன்று இன்னும் அதிகளவில் மனதை வேதனைக்குட்படுத்தும் அதிர்வுடன் திரும்பி வருகின்றன. ஜூலை 2025 இல் செம்மணியில் இரண்டாம் கட்ட மறு அகழ்வாராய்ச்சியின் ஏழாவது நாளில், ஒரு குழந்தையின் எலும்புக்கூடு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு ஆழமற்ற கல்லறைக்கு முன்னால் நான் நின்றேன், இன்னும் ஒரு யுனிசெஃப் பள்ளிப் பையையும், அதற்குள் ஒரு சிறிய பொம்மையையும் சுமந்து சென்றேன். இது வெறும் போரின் நினைவு அல்ல. இது தண்டனையின் கொடூரமான தொடர்ச்சி. செம்மணியிடமிருந்து நாம் கேட்பது கடந்த காலத்தின் எதிரொலி அல்ல, அது நிகழ்காலம் உடைந்து திறப்பது. அது மௌனத்தை நிராகரிக்கும் மண். செம்மணியிலிருந்து வெளிப்படுவது வெறும் ஆதாரம் மட்டுமல்ல; அது ஒரு குற்றச்சாட்டு. அது மனசாட்சியின் வீழ்ச்சி. இந்தத் தீவின் மேற்பரப்பிற்குக் கீழே எலும்புகள் மட்டுமல்ல, ஆனால் திட்டமிடப்பட்டு மௌனமாக்கப்பட்ட கதைகள்-மறதியின் மீது தனது யுத்தத்திற்கு பிந்திய அமைதியை கட்டியெழுப்பும் அரசாங்கத்தினால் அடக்கப்பட்ட குரல்கள் உள்ளன என்பதற்கான ஒரு கடும் நினைவூட்டலாகும். செம்மணிக்குத் திரும்புவது நினைவுடன் மோதுவதாகும். இது மௌனத்திற்கு பதில் கூறுதலாகும். நினைவில் வைத்திருப்பதற்கு பதில் மறப்பதற்காக உருவாக்கப்பட்ட நீதித்துறைக்கு எதிரான குற்றச்சாட்டாகும். 1996 ஆம் ஆண்டு கிருஷாந்தி குமாரசாமியின் கூட்டுப் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை, செம்மணிப் புதைகுழிகள் கண்டுபிடிக்கப்படுவதற்கு வழிவகுத்தது அழிப்பதில் சிறப்பு தேர்ச்சி பெற்ற அரசாங்கத்தின்மனச்சாட்சியை உறுத்துவதற்காக தற்போது மூன்று தசாப்தத்திற்கு பின்னர் கிருஷாந்தி குமாரசாமியிமண்ணிற்குள் காணாமல்போன ஆயிரக்கணக்கானவர்களின் கதைகளும் திரும்பிவருகின்றன. செம்மணியை மீண்டும் தோண்டி எடுத்தல்: செயல்முறை மற்றும் வலி செம்மணியின் புதைகுழிகளை மீண்டும் அகழும் நடவடிக்கை2025 ஆம் ஆண்டு கிட்டத்தட்ட தற்செயலாகத் தொடங்கியது. பிப்ரவரியில் ஒரு கட்டுமானத் திட்டம் எலும்புகளை கண்டுபிடித்தது. இது அதிகாரப்பூர்வ தலையீட்டைத் தூண்டியது. அகழ்வாராய்ச்சியின் முதல் கட்டத்திற்குப் பிறகு, தடயவியல் தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவா குறைந்தது 19 எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்பதை உறுதிப்படுத்தினார். இதில் 10 மாதங்களுக்கும் குறைவான மூன்று குழந்தைகள் அடங்கும். ட்ரோன்கள் மற்றும் செயற்கைக்கோள் படங்கள் அதிக சாத்தியமான புதைகுழிகளை அடையாளம் கண்டன, ஆனால் அறியப்பட்ட பகுதியில் 40 வீதத்திற்கும்க்கும் குறைவானது தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. இது ஒரு தனிமைப்படுத்தப்பட்ட தொல்பொருள் முயற்சி அல்ல. இது ஒரு தேசிய அதிர்ச்சி தளம், உண்மையின் புதைகுழி. ஜூலை 4 (வெள்ளிக்கிழமை), யாழ்ப்பாணத்தில் உள்ள செம்மணி புதைகுழி பகுதியில்அகழ்வாராய்ச்சி குழுக்கள் மேலும் நான்கு எலும்புக்கூடு எச்சங்களை கண்டுபிடித்தன, அவற்றில் இரண்டு குழந்தைகளுடையவை என்று நம்பப்படுகிறது. இது நடந்துகொண்டிருக்கும் நடவடிக்கையின் போது தோண்டி எடுக்கப்பட்ட மொத்த எச்சங்களின் எண்ணிக்கையை 40 ஆக . அதிகரித்துள்ளது. மனித உரிமை வழக்கறிஞர் ரனிதா ஞானராஜாவால் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட காணாமல் போனவர்களின் குடும்பங்கள், செயலற்ற பார்வையாளர்களாக அல்லm மாறாக நினைவின் தீவிர பாதுகாவலர்களாக அகழ்வாராய்ச்சியில் இணைந்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் மட்டும் 600 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இன்னும் காணாமல் போன அன்புக்குரியவர்களைத் தேடி வருகின்றன. கடந்த கால துரோகங்கள் மீண்டும் நிகழும் என்று பலர் அஞ்சுகின்றனர்: முழுமையற்ற தோண்டியெடுப்புகள், நீதித்துறை ஏய்ப்புகள் மற்றும் இறுதியில் அரசியல் மௌனம். அவர்களின் அச்சங்கள் நன்கு நிறுவப்பட்டவை. மன்னார் முதல் களவாஞ்சிகுடி வரையிலும், மாத்தளை முதல் சூரியகந்த வரையிலும் உள்ள புதைகுழிகளை விசாரித்த இலங்கையின் வரலாறு, தடைகளின் பட்டியலாக இருந்து வருகிறது. மன்னார் அகழ்வாராய்ச்சியில் 2018 மற்றும் 2019 க்கு இடையில் 346 உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இன்றுவரை, எந்த அடையாளங்களும் உறுதிப்படுத்தப்படவில்லை, பொறுப்புக்கூறல் நிறுவப்படவில்லை, இழப்பீடு வழங்கப்படவில்லை. இந்த அதிகாரத்துவ அலட்சியம் செயல்முறையின் தோல்வி மட்டுமல்ல, இது ஒரு நெறிமுறை தோல்வி. ஒரு தார்மீக சரிவு மனிதநேயத்தின் மரணம் செம்மணியில் வெளிப்படும் துயரம் வெறும் உள்ளூர் மட்டுமல்ல. அது உலகளவில் மனித மதிப்புகளின் பரந்த வீழ்ச்சியுடன்ஆழமாகப் பின்னிப் பிணைந்துள்ளது. 2025 ஆம் ஆண்டில், காசாவில் இருந்து போர்க்குற்றங்கள் நேரடியாக ஒளிபரப்பப்படும், குழந்தைகளின் இறப்புகள் நிகழ்நேரத்தில் கணக்கிடப்படும், மற்றும் ஐக்கிய நாடுகள் சபையில் பெரும் வல்லரசு வீட்டோக்களால் சர்வதேச சட்டம் முடக்கப்படும் ஒரு உலகில் நாம் வாழ்கிறோம். இனப்படுகொலை இனி மறைக்கப்படவில்லை, அது முழு பார்வையில் நிகழ்த்தப்படுகிறது. ஜனநாயக மனிதநேயம் ஒரு அர்த்தமுள்ள உலகளாவிய சக்தியாக இறப்பதை நாம் காண்கிறோம். அமைதி மற்றும் கண்ணியத்தைப் பாதுகாக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட இரண்டாம் உலகப் போரின் சாம்பலில் இருந்து பிறந்த நிறுவனங்கள், சக்தியற்றவையாக மாற்றப்பட்டுள்ளன. ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் பேசுகிறது, ஆனால் புவிசார் அரசியல் தண்டனையின்மைக்கு முன்னால் அதன் வார்த்தைகள் அதிக முக்கியத்துவம் பெறவில்லை. காசாவில் பொதுமக்கள் மீது இஸ்ரேலின் குண்டுவீச்சும், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் முழுமையான செயலற்ற தன்மையும் இந்த சரிவை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன இருப்பினும் ஜூன் 2025 இன் பிற்பகுதியில் மனித உரிமைகளுக்கான ஐ.நா. உயர் ஆணையர் வோல்கர் டேர்க், செம்மணி புதைகுழி இடத்திற்கு ஒரு புனிதமான விஜயத்தை மேற்கொண்டார். சமீபத்தில் 19 எலும்புக்கூடு எச்சங்கள், அவற்றில் மூன்று குழந்தைகள், வெளிவந்த அகழ்வாராய்ச்சி பகுதியை டேர்க்நேரில் ஆய்வு செய்தார். இந்த காட்சியை " மிகவும் உணர்ச்சிவசப்படவைப்பது என்று அழைத்தார் மற்றும் சுயாதீன தடயவியல் நிபுணர்களின் அவசரத் தேவையை வலியுறுத்தினார்.. செம்மணியை முன்னிலைப்படுத்துவதன் மூலம், பொறுப்புக்கூறல் மற்றும் சர்வதேச மேற்பார்வையை வலியுறுத்தும் அதே வேளையில், இலங்கையின் உள்நாட்டுப் போரின் கொடூரமான பாரம்பரியத்தை டேர்க் அடிக்கோடிட்டுக் காட்டினார். இந்தப் பின்னணியில் செம்மணி ஒரு உலகளாவிய கதையின் ஒரு பகுதியாக மாறியுள்ளது.. பூமி உடைந்த ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்படாத கடமைகள் வடிவமைப்பால் மறுக்கப்பட்ட நீதி ஆகியவற்றின் கல்லறையாக மாறிவிட்டது என்பதை இது நமக்குச் சொல்கிறது. இடைக்கால நீதி மற்றும் மறதியின் கலாச்சாரம் செம்மணியில் முதல் மனிதபுதைகுழி அரசால் அல்ல, மாறாக ஒரு தகவல் தெரிவிப்பவரால் அம்பலப்படுத்தப்பட்டது. 1998 ஆம் ஆண்டில், கிருஷாந்தி குமாரசாமியின் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலையில் தனது பங்கிற்காக மரணதண்டனையை எதிர்கொண்ட கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ, புதைகுழிகள் இருப்பதை வெளிப்படுத்தினார். அவர் பெயர்களைக் குறிப்பிட்டு தன்னுடன் இணைந்து செயற்பட்டவர்களின் விபரங்களை வெளியிட்டார் அரசு நீதியுடன் அல்ல மாறாக ஒரு அவதூறு பிரச்சாரத்துடன் பதிலளித்தது. இறுதியாக 1999 இல் அகழ்வாராய்ச்சி தொடங்கியபோது 15 உடல்கள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டன. பெரும்பாலானவை கண்கள் கட்டப்பட்டிருந்தனஇ கைகள் கட்டப்பட்டிருந்தன,மரணதண்டனை பாணியில் புதைக்கப்பட்டன. மீதமுள்ள சந்தேகத்திற்குரிய புதைகுழிகள் ஒருபோதும் தொடப்படவில்லை. இது தற்செயல் நிகழ்வு அல்ல. தொடர்ந்து வந்த அரசாங்கங்கள் எந்த கட்சியாக இருந்தபோதிலும் மக்கள் எந்த ஆணையை வழங்கியிருந்தாலும் செம்மணி புதைகுழியை மறப்பதில் ஈடுபட்டன. உயர் பதவியில் இருந்த அதிகாரிகள் பாதுகாக்கப்பட்டனர். சாட்சிகள் அச்சுறுத்தப்பட்டனர், அல்லது காணாமல் போனார்கள். தண்டனை பெற்ற வீரர்களின் தலைவிதி கூட தெளிவாகத் தெரியவில்லை, பலர் 2010 களில் பொது வாழ்க்கையில் மீண்டும் தோன்றினர். ஜனாதிபதி மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. சட்ட அறிஞர் கிஷாலி பிண்டோ-ஜெயவர்தன பொருத்தமாக கூறியது போல் "இங்கே இடைக்கால நீதி ஆதாரங்கள் இல்லாததால் தடைபடவில்லை மாறாக அதிகாரத்துவம் மற்றும் பயத்தில் உண்மையை வேண்டுமென்றே புதைப்பதன் மூலம் தடைபடுகிறது." NPP அரசாங்கத்திடமிருந்து ஒரு பெரும் மௌனம் 2024 இல் தேசிய மக்கள் சக்தி பொதுமக்கள் மத்தியில் காணப்பட்ட விரக்தி, ஆழமாக வேரூன்றிய ஊழல் மீதான விரக்தி, கட்டுப்பாடற்ற இராணுவமயமாக்கல் மற்றும் அரசியல் உயரடுக்கைப் பாதுகாக்கும் தண்டனையிலிருந்து தப்பிக்கும் தொடர்ச்சியான கேடயம் ஆகியவற்றின் ஆகியவற்றின் மீதான விரக்தி அலைகளை அடிப்படையாக வைத்து ஆட்சிக்கு வந்தது. கட்சியின் வாக்குறுதிகள் துணிச்சலானவை: உண்மை நீதி மற்றும் நல்லிணக்கம். அதன் வெற்றி சிங்கள தெற்கில் மட்டுமல்ல தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் வடக்கு மற்றும் கிழக்கிலும் வரலாற்று சிறப்புமிக்கதாக இருந்தது. பதவியேற்று எட்டு மாதங்கள் ஆகியும் செம்மணி மீதான மௌனம் காதை பிளக்கின்றது. விஜயம் எதனையும் அரசாங்கத்தின் பிரதிநிதிகள் மேற்கொள்ளவில்லை. அறிக்கை எதுவும் இல்லை. தற்காலிக அறிக்கைகள் ஒரு குறியீட்டு சமிக்ஞைகள் கூட இல்லை. காணாமல்போனவர்களின் எலும்புகளை மண் மீண்டும் வழங்கும் இலங்கையின் மிகவும் அபகீர்த்திக்குரிய மனித புதைகுழிகள் மீண்டும் தோண்டப்படுவது குறித்து நீதிக்காக குரல்கொடுப்பதாக போராடுவதாக தெரிவிக்கும் அரசாங்கம் பெரும் அலட்சியத்தை வெளிப்படுத்துகின்றது. https://www.virakesari.lk/article/219593

குஜராத்: பாலம் திடீரென இடிந்ததால் ஆற்றுக்குள் விழுந்த வாகனங்கள் - என்ன நடக்கிறது?

2 months 2 weeks ago
திடீரென இடிந்து விழுந்த பாலம், வாகனங்களோடு ஆற்றுக்குள் விழுந்தனர் பலர் - உயிரிழந்தோர் எண்ணிக்கை 15ஆக அதிகரிப்பு! குஜராத் மாநிலம் வடோதரா மாவட்டம் பத்ரா தாலுகாவில் மஹிசாகர் (மஹி) ஆற்றின் குறுக்கே கம்பீரா – முஜிப்புர் பகுதிகளை இணைக்கும் பாலம் இருந்தது. வழக்கம்போல நேற்று காலை வாகனங்களில் ஏராளமானோர் பள்ளி, கல்லூரிகளுக்கும், வேலைக்கும் சென்று கொண்டிருந்தனர். திடீரென பாலத்தின் ஒரு பகுதி இடிந்து ஆற்றில் விழுந்தது. இதனால் பாலத்தில் சென்ற பலர் வாகனங்களுடன் ஆற்றில் விழுந்தனர். இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக இதுவரை உயர்ந்துள்ளது. அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஆற்றில் நீந்திச்சென்று பலரை மீட்டனர். தகவலறிந்து விரைந்துவந்த `பொலிஸார், தீயணைப்புப் படையினர், மாநில மீட்புப் படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர், இருப்பினும் பலர் காயமடைந்ததுடன் பலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த துயர சம்பவம் குறித்து மாநில மற்றும் மத்திய அரசு விஷேட கவனம் செலுத்தி வருகிறது. Vaanam.lk

ஆண்டு முழுக்க ஒரு நாள் விடாமல் 366 மாரத்தான்கள் ஓடிய மனிதர் - இதயத்தில் ஏற்பட்ட மாற்றம்

2 months 2 weeks ago
பட மூலாதாரம்,DÓKIMOS PRODUÇÕES படக்குறிப்பு, மனித உடல் தீவிர உடல் செயல்பாட்டிற்கு எவ்வாறு எதிர்வினையாற்றுகிறது என்பதைப் பார்க்க ஹூகோ ஃபாரியஸ் இந்த சவாலை ஏற்றுக்கொண்டார் கட்டுரை தகவல் ஜூலியா கிரான்சி பிபிசி நியூஸ் பிரேசில் 3 மணி நேரங்களுக்கு முன்னர் கடந்த 2023இல் ஹுகோ ஃபாரியஸ் 366 மாரத்தான்களை அடுத்தடுத்து நிறைவு செய்து ஒரு உலக சாதனையைப் படைத்தார். அதாவது தொடர்ந்து ஓர் ஆண்டுக்கும் மேலாக மழையோ, வெயிலோ, உடல்நலக் குறைவோ, காயமோ எது வந்தபோதிலும், தினசரி 42 கிலோ மீட்டருக்கு மேல் ஓடியிருக்கிறார். இந்த அசாதரண சாதனையைச் செய்த 45 வயதான பிரேசில் தொழிலதிபர் ஹூகோ, 12 மாதங்களில் 15,000 கி.மீ ஓடும்போது அவரது இதயம், அதற்கு எவ்விதம் எதிர்வினையாற்றுகிறது என்பதை ஆய்வு செய்வதற்கான மருத்துவ ஆய்வில் பங்கேற்றார். "நான் பெரிய தடகள வீரர் அல்ல. அதற்கு முன்பு எனது வாழ்நாளில் நான் ஒரு மாரத்தான் மட்டுமே ஓடியிருந்தேன்," என்றார் அவர். "ஆனால் ஒரு புதிய அத்தியாயத்தை உருவாக்க, விளையாட்டு மூலம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டுமென்ற ஆர்வம் எனக்குள் வளர்ந்தது" பட மூலாதாரம்,CLAYTON DAMASCENO படக்குறிப்பு, தனது பயணம் பிறருக்கு உந்துசக்தியாக இருக்கும் என ஃபாரியஸ் நம்புகிறார் தினசரி வாழ்க்கை மீது அதிகரித்த அதிருப்தியின் விளைவாக, தனது வேலையை விட்டுவிட்டு, விளையாட்டுத் துறை சார்ந்த ஒரு சவால் மீது கவனம் செலுத்த வேண்டுமென அவர் முடிவெடுத்தார். "வாழ்வில், செய்துகொண்டிருந்த அனைத்தையும் அப்படியே நிறுத்திவிட்டு, 'நான் இதற்காகத்தான் பிறந்திருக்கிறேனா? திரும்பத் திரும்ப 35 -40 வருடங்கள் இதையே செய்வதற்காகத்தான் நான் பிறந்தேனா?' என்று என்னைச் சிந்திக்க வைத்த ஒரு தருணம் வந்தது," என ஹுகோ பிபிசி நியூஸ் பிரேசிலிடம் கூறினார். ஹூகோ, "18 வயதாகும் முன்பே நமக்கான தொழிலைத் தேர்ந்தெடுக்க, நிலைத்தன்மையைத் தேட, ஒரு குடும்பத்தை உருவாக்க, ஓய்வு காலத்திற்குத் தயாராக வேண்டுமென்று மிக இளைய வயதில் இருந்தே நாம் கற்றுக்கொள்கிறோம்." "இந்த நிலையில், மக்களை வித்தியாசமான முறையில் ஊக்குவிக்க வேண்டுமென்றும், அதற்கு என்னால் ஏதாவது செய்ய முடியும் என்றும் எண்ணத் தொடங்கினேன்." அறிவியல்ரீதியான பங்களிப்பு பட மூலாதாரம்,HANDOUT படக்குறிப்பு, சாவ் பாலோசாவ் பாலோ ஹார்ட் இன்ஸ்டிடியூட் இன்கோர் என்ற நிறுவனத்தைச் சேர்ந்த இதயவியல் நிபுணர்கள் ஹூகோ ஃபாரியஸின் இதய செயல்பாட்டைக் கண்காணித்தனர் கடந்த 1984இல் தெற்கு அட்லான்டிக்கை படகில் கடந்த பிரேசில் படகோட்டி ஏமிர் கிளின்க் தனக்கு உத்வேகமாக இருந்ததாக ஹூகோ கூறுகிறார். "ஆனால் அவரைப் போல படகோட்டுவதற்குப் பதிலாக நான் ஓடுவேன்," என்று அவர் முடிவெடுத்தார். அவர் தனது முத்திரையைப் பதிக்க விரும்பினார், எனவே இதற்கு முன் செய்யப்படாத ஒரு சவாலை அவர் தேடினார். பெல்ஜிய தடகள வீரர் ஸ்டெஃபான் எங்கெல்ஸ் ஏற்கெனவே ஒரு வருடத்தில் 365 மாரத்தான்களை ஓடியிருக்கிறார் என்பதை அறிந்த அவர், அதைவிட ஒரு நாள் கூடுதலாக மாரத்தான் ஓடத் திட்டமிட்டார். பயணம், பயிற்சி மற்றும் பல தொழில்முறை வல்லுநர்களின் உதவியை உள்ளடக்கிய விரிவான செயல் திட்டத்தை ஹூகோ எட்டு மாதங்களில் வடிவமைத்தார். "என்னால் இதைத் தனியாகச் செய்ய முடியாது என்று தெரியும். மருத்துவர்கள், பயிற்சியாளர்கள், பிசியோதெரபிஸ்ட் உள்ளிட்ட தொழில்முறை வல்லுநர்கள், மற்றும் மனநல நிபுணர் உள்படப் பல்துறை நிபுணர்கள் கொண்ட ஒரு குழுவை உருவாக்கினேன்," என்கிறார் அவர். "நன்கு நிறுவப்பட்ட ஒரு தொழில் வாழ்க்கையை முற்றிலும் நிச்சயமற்ற ஒன்றுக்காக மாற்றிக்கொண்டேன். எனவே இது கவலை மற்றும் பாதுகாப்பின்மையை உருவாக்குகிறது. எனவே மனபாரத்தைக் குறைத்து குறிக்கோள் மீது கவனம் செலுத்த இந்தக் கோணத்தைப் பற்றிய புரிதல் கொண்ட ஒரு தொழில்முறை நிபுணர் இருப்பது அவசியம். தனது முயற்சியில் பங்கேற்க அவர் அழைப்பு விடுத்த தொழில்முறை அமைப்புகளில் ஒன்றுதான் சாவ் பாலோ ஹார்ட் இன்ஸ்டிடியூட் இன்கோர். "எனது இதயம் இந்த சவாலுக்கு எப்படி எதிர்வினையாற்றுகிறது - அளவில் பெரிதாகுமா அல்லது சிறியதாகுமா, அரித்மியா(சீரற்ற இதயத் துடிப்பு) ஏற்படுமா அல்லது வேறு ஏதேனும் மாற்றங்கள் ஏற்படுகிறதா - என்பதை ஆய்வு செய்ய என்னுடன் இணைந்து பணியாற்ற முடியுமா என்று அந்த நிறுவனத்தின் இதயவியல் நிபுணர்களிடம் கேட்டேன்." "ஏனெனில், இதன்மூலம் நான் அறிவியலுக்கும் பங்களிப்பு செய்ய விரும்பினேன்." பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் இதயவியல் நிபுணர் மற்றும் ஆய்வாளரான மரியா ஜானியேர் ஆல்வ்ஸ் இந்த ஆய்வில் பங்கேற்றார். "இது இதற்கு முன் யாரும் செய்யாத ஒன்று. இதயத்தின் மீது குறிப்பிடத்தக்க தாக்கத்தை இது ஏற்படுத்தக்கூடும்," என விளக்குகிறார் அவர். ஹூகோ "இதயநோய் அபாயம் இல்லாமல்" சவாலை முடிக்கும் வகையில் விஞ்ஞானிகள் "தீவிரமற்ற அளவுகளை முக்கியமாகக் கொண்டு" அவருக்கான வரம்புகளை நிர்ணயம் செய்தனர். ஹூகோ, மாதந்தோறும் எர்கோஸ்பைரோமெட்ரி (உடற்பயிற்சியின் போது ஒரு நபரின் சுவாசம் மற்றும் வளர்சிதை மாற்றச் செயல்பாடுகளை மதிப்பிடப் பயன்படுத்தப்படும் ஒரு முறை) மற்றும் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ஈ.சி.ஜி) சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டார். "பெரிய அளவிலும், நுண்ணிய அளவிலும் இதயத்தில் ஏற்படும் மாற்றங்களைக் கண்காணிப்பது மற்றும் உடல் பயிற்சியால் ஏற்படும் ஒழுங்கின்மை, தகவமைப்பு அல்லது தவறான தகவமைப்பு ஆகியவற்றின் அறிகுறிகள் ஏதேனும் இருந்தால் அவற்றைக் கவனிப்பது இதன் நோக்கமாக இருந்தது," என்று மருத்துவர் ஆல்வ்ஸ் கூறினார். 'பாதுகாப்பு மணடலம்' பட மூலாதாரம்,DÓKIMOS PRODUÇÕES படக்குறிப்பு, ஹூகோ ஃபாரியஸ் உடலின் மீதான அழுத்தத்தால் அவருக்கு காயங்கள் ஏற்படாமல் இல்லை இந்த சவாலை ஹுகோ 2023, ஆகஸ்ட் 28ஆம் தேதி நிறைவு செய்தார். மொத்தமாக, 15,569 கி.மீ ஓடி முடிப்பதற்கு அவருக்கு சுமார் 1,590 மணிநேரம் எடுத்தது. இந்தச் சாதனை அவருக்கு ஒரு கின்னஸ் உலக சாதனையைப் பெற்றுத் தந்தது. நாளின் எஞ்சிய பகுதியைத் தனது குடும்பத்துடன் நேரம் செலவிடவும், உடல் ஓட்டத்தால் ஏற்பட்ட அழுத்தத்தில் இருந்து மீள்வதற்கும், தசைகளை வலுப்படுத்துவதற்கான பயிற்சிகளைச் செய்வதிலும் கவனம் செலுத்த வசதியாக இரு குழந்தைகளின் தந்தையான இவர் எப்போதும் காலை நேரத்திலேயே ஒடினார். அதே போல் அவர் எப்போதும் சாவ் பாலோ மாகாணத்தில் உள்ள அமெரிக்கானா நகரில் கிட்டத்தட்ட ஒரே பாதையிலேயே ஓடினார். உடற்பயிற்சியின் கால இடைவேளை மற்றும் அளவு அதிகம் இருந்தபோது இதய தசை பாதிப்புக்கான எந்த அறிகுறியும் இல்லை என்று அறிவியல் இதழான அர்கிவோஸ் பிரேசிலிரோஸ் டி கார்டியோலோஜியாவில் (Arquivos Brasileiros de Cardiologia) வெளியிடப்பட்ட இந்த ஆய்வு முடிவு செய்தது. எந்த இதய தசை மாற்றமும் பெரும்பாலும் இயற்கையான, ஆரோக்கியமான உடலியல் ரீதியானவையாக இருந்ததுடன் எந்த நோயின் அறிகுறியாகவும் இருக்கவில்லை. "எல்லாவற்றுக்கும் மேலாக, விளையாட்டுப் பயிற்சியின் தீவிரம் மிதமாக இருக்கும் வரை அதிக அளவு விளையாட்டுப் பயிற்சிகளுக்கு ஏற்ப இதயம் தன்னைத் தகவமைத்துக் கொள்வது சாத்தியம் என்பதை இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது," என்கிறார் மருத்துவர் ஆல்வ்ஸ். "குறிப்பிட்ட வரம்புகள் இருந்தாலும், பயிற்சிகளுக்கு இடையில் உடல் சீராவதற்குப் போதிய அவகாசம் இருந்தால் பயிற்சி பெற்ற ஒரு வீரரின் இதயத்தால், மிகத் தீவிர அழுத்தத்தைப் பொறுத்துக் கொள்ள முடியும் என்ற கருத்தை இது வலுப்படுத்துகிறது" என இந்த ஆய்வுடன் தொடர்பில்லாத விளையாட்டு இதயவியல் நிபுணர் ஃபிலிப்போ சாவியோலி பிபிசியிடம் தெரிவித்தார். பட மூலாதாரம்,DÓKIMOS PRODUÇÕES படக்குறிப்பு, ஃபாரியஸ் தனது இதயத்திற்கு எந்த பாதிப்பும் இல்லாமல் சவாலை நிறைவு செய்ததாக நிபுணர்கள் கூறுகின்றனர் சராசரியாக 140 பிபிஎம் (ஒரு நிமிடத்திற்கான இதயத் துடிப்பு எண்ணிக்கை) என்ற இதயத் துடிப்புடன் ஹூகோ மிதமான தீவிரத்தில் ஓடினார். இது அவரது வயதிற்கு எதிர்பார்க்கப்படும் அதிகபட்ச இதயத் துடிப்பில் சுமார் 70-80% ஆகும் என்று ஃபிலிப்போ சாவியோலி கூறினார். "ஆக்ஸிஜன் பயன்பாட்டையும் ஆற்றல் உற்பத்தியையும் சமநிலையில் வைத்திருக்க வல்ல ஒரு பாதுகாப்பான வரம்புக்குள் இது அவரை வைத்திருந்தது," என்று அவர் விளக்கினார். மருத்துவர் சாவியோலியின் கூற்றுப்படி, "நீண்டநேர தினசரி உடற்பயிற்சியின் போதும்கூட இந்த வரம்புக்குள் ஓடுவது இதயத்திற்கு ஏற்படும் பாதிப்புகளான வீக்கம், வடு அல்லது அரித்மியா போன்றவை ஏற்படுவதற்கான ஆபத்தைக் குறைக்கிறது." ஹூகோ இந்த சவாலை அதீத தீவிரத்தில் மேற்கொண்டிருந்தால், அதன் விளைவுகள் தீங்கு விளைவிக்கக் கூடியவையாக இருந்திருக்கும் என்று சுட்டிக்காட்டும் அவர், போதிய பயிற்சி அல்லது மருத்துவ கண்காணிப்பு இல்லாமல் இத்தகைய சவாலை மேற்கொள்வது ஆபத்தானது என்றும் எச்சரித்தார். "இதிலுள்ள அபாயம் கணிசமானது மற்றும் அறிவுறுத்தத்தக்கது அல்ல," என்றார் அவர். "உரிய தயாரிப்பு இல்லாமல் இதைச் செய்தால், அரித்மியா, வீக்கம் அல்லது திடீர் இறப்புகூட ஏற்பட வாய்ப்பு உள்ளது" என்றும் அவர் எச்சரித்தார். 'உங்கள் திறன் மீது நம்பிக்கை கொள்ளுங்கள்' ஹூகோவை பொறுத்தவரை ஆய்வின் முடிவு ஒரு வரவேற்கத்தக்க ஆச்சர்யமாக இருந்தது. "நான் என் வாழ்வில் அடைய முடியும் என கற்பனைகூடச் செய்திராத உடல் தகுதியை எட்டினேன். அதிலும், பின்விளைவுகள் ஏதும் இல்லை என்பதைக் கவனிக்க வேண்டியது மிகவும் முக்கியம்" என்றார். ஆனால் அந்த சவால் அபாயங்கள் இல்லாததாக இருக்கவில்லை. "குளிர், வெயில், மழை, போக்குவரத்து, காயம் என நான் அனைத்து விதமான ஆபத்துகளையும் எதிர்கொண்டேன்" என்கிறார் அவர். அவர் மூன்றுமுறை வயிற்றுப்போக்கை தாங்கிக்கொள்ள நேர்ந்தது. அதில் மிக மோசமான வயிற்றுப் போக்கு ஐந்து நாட்களுக்கு நீடித்தது. "நான் 4 கிலோ எடை இழந்தேன், என் உணவு மற்றும் தண்ணீர் உட்கொள்ளும் முறையைச் சீரமைத்துக்கொள்ள வேண்டியிருந்தது. ஆனால் நாங்கள் தொடர்ந்து கொண்டிருந்தோம்." தனது 120வது மாரத்தானை ஓடிய நேரத்தில், நெடுந்தூர ஓட்டப் பந்தய வீரர்கள் மத்தியில் பொதுவாகக் காணப்படும் பிளான்டர் ஃபாஸியிடிஸ் (Plantar fasciitis) எனப்படும் கால் பாதத்தின் அடிப்பகுதியில் வலியை ஏற்படுத்தும் வீக்கத்தால் அவர் பாதிக்கப்பட்டார். பின்னர் தனது 140ஆவது மாரத்தானை ஒட்டிய கட்டத்தில் கீழ்வயிறு மற்றும் உள் தொடையில் உள்ள தசைநார்கள் மற்றும் தசைகளைப் பாதிக்கும் புபால்ஜியா (Pubalgia) அல்லது விளையாட்டால் ஏற்படும் ஹெர்னியா எனப்படும் இடுப்புக்குக் கீழ் பகுதியில் ஏற்படும் காயத்தால் பாதிக்கப்பட்டார். பட மூலாதாரம்,DÓKIMOS PRODUÇÕES படக்குறிப்பு, ஃபாரியஸ் தனது 366ஆவது மாரத்தானின் இறுதிக் கட்டத்தை தனது குடும்பதினருடன் சேர்ந்து கடந்தார் அதன் பின்னர் ஹூகோ அந்த அனுபவம் குறித்து ஒரு புத்தகத்தை எழுதினார். அத்துடன் அவர் தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கிறார். அவரது அடுத்த சவால், அமெரிக்க கண்டங்களின் முழு நீளத்தையும் - அலாஸ்காவில் உள்ள ப்ரூதோ பே (Prudhoe Bay) முதல் அர்ஜென்டினாவில் உள்ள உஷுவையா (Ushuaia) வரை - ஓடி முடிக்கும் முதல் மனிதராக வேண்டும் என்பதுதான். "உடல் உழைப்பின் நன்மைகள் குறித்தும் மனிதர்கள் அற்புதமான விஷயங்களைச் செய்யக் கூடியவர்கள் என்பது குறித்தும் உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் நோக்கம்," என்று அவர் கூறினார். "யாரும் தினசரி மாரத்தான் ஓட வேண்டிய தேவை இல்லை. ஆனால் அனைவரும் தங்கள் திறன் மீது உண்மையாக நம்பிக்கை கொள்ள வேண்டும்" என்கிறார் ஹூகோ. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c8xv9n29gkro

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: "வரலாற்றை வடிவமைக்கும் கைகள்..." - வெப் சீரிஸ் எப்போது வெளியீடு?

2 months 2 weeks ago
ஹன்ட் ( The Hunt )என்னும் பெயரில் ராஜீவ் காந்தி கொலை விசாரணை பற்றிய வெப் தொடர் ஒன்று வந்துள்ளது. நான் இன்னும் பார்க்கவில்லை. அதனால் அது பற்றி எழுத முடியவில்லை. ஆனால் பொதுவாக இவ்வாறான நடந்த சம்பவங்களை படமாக்குபவர்கள் ஆய்வு செய்து உண்மைகளை கண்டறிந்து படமாக்குவதில்லை. பொலிஸ் என்ன சொல்கிறதோ அதையே ஊடகங்கள் வெளியிடும். ஊடகங்கள் என்ன வெளியிடுகின்றனவோ அதையே இவர்கள் படமாக்குவார்கள். உதாரணமாக ராஜீவ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட கோடியாக்கரை சண்முகம் மரணம் பற்றி ஊடகங்கள் உண்மையை கண்டறிந்து எழுதவில்லை. கமிசனர் தேவாரம் தலைமையில் 300 பொலிசார் பாதுகாப்பில் வேதாரணியத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட கோடியாக்கரை சண்முகம் மரத்தில் தொங்கி தற்கொலை செய்துவிட்டார் என்று தேவாரம் கூறியதை ஊடகங்கள் அப்படியே வெளியிட்டன. நீதிமன்றம்கூட அது குறித்து கேள்வி எழுப்பாமல் அது தற்கொலை மரணம் என்று ஏற்றுக்கொண்டது. ஆனால் உண்மை என்னவெனில் விசாரணையின்போது கோடியாக்கரை சண்முகம் வேதாரணியம் காங்கிரஸ் எம்எல்.ஏ ராஜேந்திரன் பெயரைக் கூறிவிட்டார். ராஜேந்திரன் மூப்பனாரைக் கைகாட்டுவார். அதனால் ராஜேந்திரனையும் மூப்பனாரையும் காப்பாற்றுவதற்காக கோடியாக்கரை சண்முகம் அடித்துக் கொல்லப்பட்டு மரத்தில் தொங்கவிடப்பட்டார் என்றே அன்று பேசப்பட்டது. தோழர் பாலன்

ஒட்டிசம் பாதிப்புள்ள பிள்ளைகளுக்கு பராமரிப்பு நிலையங்களை அமைப்பதற்கான தேசிய அளவிலான பொறிமுறை

2 months 2 weeks ago
ஓட்டிசத்தினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் நலன் கருதி விசேட நடவடிக்கை. ஓட்டிசம் மற்றும் நரம்பியல் வளர்ச்சி பிரச்சினைகள் உள்ள குழந்தைகளுக்காக பராமரிப்பு நிலையங்களை நிறுவுவதற்கு தேசிய அளவிலான பொறிமுறையை தயாரிப்பதற்கான கூட்டுத் திட்டத்திற்கான எண்ணக்கரு ரீதியான முன்மொழிவை இரண்டு வாரங்களுக்குள் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் எண்ணக்கருவின் அடிப்படையில் செயல்படுத்தப்படும் இந்த திட்டம் குறித்து சமூக சக்தி செயலகத்தின் தலைமையில் நேற்று (09) பிற்பகல் நடைபெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதியின் செயலாளர் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இந்த திட்டம் சம்பந்தப்பட்ட துறைசார் அமைச்சுக்கள் மற்றும் நிறுவனங்களால் செயல்படுத்தப்படுவதோடு ஒருங்கிணைப்பு பணிகளை ஜனாதிபதி அலுவலகம் மேற்கொள்ளும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் மகளிர் மற்றும் சிறுவர்கள் ஓட்டிசம் பாதிப்புள்ள பிள்ளைகளுக்கு பராமரிப்பு நிலையங்களை அமைப்பதற்கான தேசிய அளவிலான பொறிமுறை முன்னெடுக்கப்பட்டது. ஓட்டிசம் மற்றும் நரம்பியல் வளர்ச்சி பிரச்சினைகள் உள்ள குழந்தைகளுக்காக பராமரிப்பு நிலையங்களை நிறுவுவதற்கு தேசிய அளவிலான பொறிமுறையை தயாரிப்பதற்கான கூட்டுத் திட்டத்திற்கான எண்ணக்கரு ரீதியான முன்மொழிவை இரண்டு வாரங்களுக்குள் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் மகளிர் மற்றும் சிறுவர்கள் விவகார அமைச்சிற்கு ஒதுக்கப்பட்ட ரூ. 250 மில்லியன் நிதியை சமூக சேவைகள் திணைக்களத்தால் மாவட்ட செயலாளர்களுக்கு வழங்குதல், பராமரிப்பு நிலையங்களை செயல்படுத்த தேவையான மனிதவள அபிவிருத்தித் திட்டத்தைத் தயாரிப்பது, இந்தத் திட்டத்துடன் தொடர்புடைய துறைசார் நிறுவனங்களை இணைத்து அறிவியல் பின்னணியுடன் கூடிய புதிய மாதிரியொன்றைத் தயாரிப்பது குறித்து ஆராயப்பட்டது.இந்த விடயங்களை உள்ளடக்கிய ஒரு பொறிமுறையைத் தயாரிப்பதற்கான எண்ணக்கரு ரீதியான முன்மொழிவை இரண்டு வாரங்களுக்குள் தயாரிக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க அதிகாரிகளுக்கு மேலும் அறிவுறுத்தினார். ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளர் கபில ஜனக பண்டார, பெண்கள் மற்றும் சிறுவர்கள் விவகார அமைச்சின் செயலாளர் கே.டீ.ஆர். ஓல்கா, கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சின் செயலாளர் சம்பத் மந்திரிநாயக்க,மேலதிகச் செயலாளர் எச்.ஏ. ஹேமா பெரேரா, சமூக சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் தர்ஷனி கருணாரத்ன, சுகாதார அமைச்சின் சமூக சுகாதாரப் பிரிவின் பணிப்பாளர் வைத்திய நிபுணர் வருணி ரசாதரி, சமூக சுகாதார பிரதிப் பணிப்பாளர் வைத்திய நிபுணர் ஆசிரி ஹேவமாலகே மற்றும் லேடி ரிட்ஜ்வே மருத்துவமனை பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் சந்துஷித சேனாதிபதி உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். https://athavannews.com/2025/1438718
Checked
Sat, 09/27/2025 - 06:23
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed