புதிய பதிவுகள்2

உன்னால் முடியும் தம்பி

2 months 2 weeks ago
பலி கொடுக்க அழைத்துபோகும் ஆட்டுக்குட்டியை போல( சும்மா சிரிக்க மட்டும் ) ...கனடா அமெரிக்க பக்கத்தில சில மணி நேரங்களென்றபடியால் சமாளித்து விடடீர்கள் . முதல் வேலையாக மகன்கள் சொல்லியிருப்பார்கள் இனிமேல் இப்படி புக் பண்ணாதீங்க அப்பா ...மலிவு பார்க்கப்போனால் இப்படித்தான் இசகு பிசகாக மட்டுப் படுவோம்.

லாராவின் சாதனையை முறியடிக்காத முல்டர்

2 months 2 weeks ago
அவர் 334 அடித்தபோது இன்னும் ஒரு ஓவர் மட்டுமே மீதமிருந்தது. அவர் அப்போதே டிக்லேர் பண்ணியிருந்தாலும் மற்றய அணி அடுத்தநாள் தான் ஆடியிருக்கமுடியும். அந்த அப்துல் காதர் நீங்கள் நினைப்பதுபோல லெக்ஸ்பின் ஜாம்பவானில்லை! அவர் ஒரு சாதாரண இடதுகை பந்துவீச்சாளரும் கேப்டனும் மட்டுமே. அந்த பாக்கிஸ்தான் டீம் 1994 இங்கிலாந்து டீமைவிட சொத்தை டீம். https://www.espncricinfo.com/series/england-tour-of-west-indies-1993-94-61748/west-indies-vs-england-5th-test-63641/full-scorecard

அகதிகளைப் பரிமாற்ற பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா திட்டம்!

2 months 2 weeks ago
வந்திட்டு திரும்பி போனால் சரி... (இதற்குப் பதிலாக, பிரான்ஸில் இருந்து அங்கீகாரம் பெற்ற சமமான எண்ணிக்கையிலான அகதிகளை, பாதுகாப்பு சோதனைகளுக்குப் பின்னர் பிரித்தானியா ஏற்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.)

உன்னால் முடியும் தம்பி

2 months 2 weeks ago
இவர் அவர் இல்லை............... இவர் அவராக இருப்பாரோ என்று செயற்கை நுண்ணறிவு உய்த்தறிந்து இப்படி ஒரு படத்தை கீறியிருக்கின்றது...............🤣. செயற்கை நுண்ணறிவை தொடர்ந்து நச்சரிக்கவும் மனது வர மாட்டேன் என்கின்றது. செயற்கை நுண்ணறிவு செயற்படும் Data Centers இருக்கும் அழகான, அமைதியான கிராமங்கள் எவ்வளவு பெரிய சிக்கலில் மாட்டுப்பட்டிருக்கின்றன என்ற செய்திகள் வெளியே வர ஆரம்பித்துவிட்டன. அங்கங்கே நீர்வளம் அருகி அல்லது கெட்டுப் போய்க் கொண்டிருக்கின்றது. செயற்கை நுண்ணறிவை கேள்விகள் கேட்கும் போது, 'Please......' என்னும் ஒரு சொல்லை ஒரு தடவை தவிர்த்தால் ஒரு சிறிய போத்தல் தண்ணீர் மிச்சமாகும் என்று Sam Altman (CEO of OpenAI) சமீபத்தில் சொல்லியிருந்தார். அப்படியாயின் மொத்தமாக எவ்வளவு நீர் இதற்கு தேவைப்படுகின்றது என்ற கணக்கு மலைக்கவைக்கின்றது. கப்பலின் ஓட்டைகளை அடைப்பது போல உலகம் போய்க் கொண்டிருக்கின்றது போல. ஒரு ஓட்டையை அடைத்தால், இன்னொரு இடத்தில் புதிய ஓட்டை ஒன்று உருவாகின்றது.

முதல் முறையாக ஆடு மாடுகளுக்கான மாநாடு நடத்தும் சீமான்.. தயார் நிலையில் மாடுகள்!

2 months 2 weeks ago
இதில் இருக்கும் சில தகவல்கள் தவறானவை, அனேகமாக நா.த.க அணியின் சமூகவலை ஊடகங்களினால் பரப்பப் படுபவை, அதைச் சுட்டிக் காட்ட மட்டுமே இதை எழுதுகிறேன்: 1. தமிழ் நாடு அரசு மேய்ச்சல் நிலங்களை தனியாருக்கு விற்பதில்லை, அப்படி விற்கும் ஏற்பாடுகள் சட்டத்தில் இல்லை. ஆனால், தனியார்/அரச கூட்டுத்தாபனங்கள் சில தொழில் முயற்சிகளைச் செய்யும் போது அந்த நிலம் குத்தகையாக வழங்கப் படும். மேய்ச்சல் நிலம் இப்படியாக அண்மையில் பறி போன ஒரு சந்தர்ப்பம் ஒரு சூரிய மின்படலப் பண்ணை (Solar farm) அமைக்கப் பட்ட சந்தர்ப்பமாக இருக்கிறது. ஆடு மாடுகள் வெளியிடும் மீதேன் வாயுவினால் சூழல் மாசடையும். சூரியப் படலங்களை அமைத்தால் அந்த மாசடைதலால் வரும் விளைவை பசுமைத் தொழில் நுட்பம் மூலம் கொஞ்சம் நிவர்த்திக்கலாம். இது சரியான சமன் செய்யும் முயற்சி தான். 2. அதை விட தமிழ் நாடு உயர் நீதிமன்றம் (தமிழ் நாடு அரசு அல்ல!) சில வனப் பாதுகாப்புப் பிரதேசங்களில் கால்நடை மேய்க்கத் தடை விதித்திருக்கிறது. புலி வேட்டை போன்ற சட்ட விரோத நடவடிக்கைளைத் தடுக்கும் இந்த நடவடிக்கையும் புரிந்து கொள்ளக் கூடியதே. 3. "ஆவின்" (AAVIN) பால் பற்றித் தெரிந்த யாரும் தமிழ்நாடு பாலுற்பத்தியில் பின் தங்கி பால் பொருட்களை பெருவாரியாக இறக்குமதி செய்கிறது என்ற தரவை நம்ப மாட்டார்கள். பாலுற்பத்தியில் தமிழ் நாடு இந்தியாவின் முதல் 10 இடங்களுக்குள் வருகிறது. கடந்த 20 ஆண்டுகளில் தமிழ் நாட்டின் வருடாந்த பாலுற்பத்தி இரட்டிப்பாக அதிகரித்திருக்கிறதேயொழிய வீழ்ச்சியடையவில்லை. இந்த தரவுகளையெல்லாம் சீமான் அணியினர் நம்பவும் மாட்டார்கள், தங்கள் ஆதரவாளர்களை தேடிப் பார்க்குமாறு ஊக்குவிக்கவும் மாட்டார்கள். எனவே பொய்யில் கட்டியமைக்கப் பட்ட ஒரு வாக்கு வேட்டை முயற்சி இந்த மாடுகளுக்கான மாநாடு!

அகதிகளைப் பரிமாற்ற பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா திட்டம்!

2 months 2 weeks ago
அகதிகளைப் பரிமாற்ற பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா திட்டம்! பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஆகிய இரு நாடுகளும் ‘One in, One out‘ எனப்படும் புதிய திட்டத்தின் கீழ், அகதிகளை பரிமாற்றும் முயற்சியை தொடங்கியுள்ளன. இது தொடர்பான உத்தியோக பூர்வ அறிவிப்பு நேற்றைய தினம் வெளியானது. பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் பிரித்தானிய விஜயத்தினை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. சட்டவிரோத குடியேற்றத்தை தடுத்தல் மற்றும் அகதிகளை கட்டுப்படுத்தவே இத் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத் திட்டத்தின் கீழ், சிறு படகுகள் மூலம் இங்கிலாந்துக்குள் சட்டவிரோதமாக நுழையும் அகதிகள் பிரான்ஸுக்கு திருப்பி அனுப்பப்படவுள்ளனர். இதற்குப் பதிலாக, பிரான்ஸில் இருந்து அங்கீகாரம் பெற்ற சமமான எண்ணிக்கையிலான அகதிகளை, பாதுகாப்பு சோதனைகளுக்குப் பின்னர் பிரித்தானியா ஏற்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து வழியாக கடந்த சில ஆண்டுகான அதிகளவிலான புகலிடக்கோரிக்கையானர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர். அத்துடன் குறித்த பகுதியில் ஆட்கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளும் இடம்பெற்று வருவதாகக் கூறப்படுகின்றது. இந்நிலையிலேயே குறித்த திட்டம் இன்னும் சில வாரங்களில் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறித்த விடயம் உலக நாடுகள் மத்தியில் பெரும் பேசுபொருளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1438838

முதல் முறையாக ஆடு மாடுகளுக்கான மாநாடு நடத்தும் சீமான்.. தயார் நிலையில் மாடுகள்!

2 months 2 weeks ago
நேற்றிலிருந்து றாலைப் போட்டுவிட்டு தம்பி ஒருவர் காவல் இருக்கிறார். இப்போ நீங்க தான் தூண்டிலில் மாட்டியிருக்கிறீர்கள். பார்ப்போம்.

இரசித்த.... புகைப்படங்கள்.

2 months 2 weeks ago
தாய்லாந்தின் வடக்கு பகுதியில் உள்ள ஒரு கரும்புத் தோட்டத்தில் நுழைந்து கரும்புகளை ருசித்துக் கொண்டிருந்த குட்டி யானை ஒன்று, தோட்ட உரிமையாளர் டார்ச் அடித்துப் பார்த்தபோது, பதற்றமடைந்து ஒரு கம்பத்தின் பின்னால் மறைந்து கொண்ட சம்பவம் வைரலாகி வருகிறது. டைரக்டர் மதுரை மைந்தன்

செம்மணியில் புத்தகப் பை, பொம்மையோடு மீட்கப்பட்ட எலும்புக்கூடு தொடர்பில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

2 months 2 weeks ago
இந்தச் செய்திகள் படங்களை சிங்கள பத்திரிகைகளில் போடுகிறார்களா?

செம்மணியில் புத்தகப் பை, பொம்மையோடு மீட்கப்பட்ட எலும்புக்கூடு தொடர்பில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

2 months 2 weeks ago
நிராயுதபாணிகளாய் வெள்ளைக்கொடியொடு நின்ற மேனிகளை நிர்வாணமாக்கிய அவமானச்சின்னமே வாளேந்திய சிங்கம் என உலகறியட்டும். மிருகம் புணர்ந்து பிறந்த இனத்தின் மிருகத்தனத்தை இன்னும் உலகறியட்டும். எம்மினப்பெண்களை அவுத்து அம்மணமாக்கிய அசிங்கங்களின் கோரமுகம் உலகமறியட்டும். பிணமான பின்னும் புணர்ந்த பௌத்த இனமானம் எதுவென உலகம் அறியட்டுமே... #செம்மணி ஈழப்பிரியன்✍️ Rj Prasath Santhulaki

உடல் மொழியை புரிந்துக்கொள்ளுங்கள்! ஆரோக்கியம் அனுபவியுங்கள்.......!

2 months 2 weeks ago
#சுகர்னு docter கிட்ட போறாங்க .. அவரும் செக் பண்ணிட்டு 1 mg tablet கொடுக்கிறார். #ஒரு_வருஷம் கழிச்சு சுகர் ஏறிடுச்சுனு 2 mg tablet கொடுக்கிறார். 😂#மறுபடியும் சுகர் ஏறிடுச்சுனு ரெண்டு combination tablet கொடுக்கிறார். மறுபடியும் சுகர் ஏறிடுச்சுனு இன்சுலின் போட சொல்றார். 🧔#அப்புறம் சுகர் கூட BP சேர்ந்திடுச்சுனு PRESSURE மாத்திரை போட சொல்றார். அப்புறம் கொலஸ்ட்ரால் சேர்ந்திடுச்சுனு அதுக்கு ஒரு மாத்திரை போட சொல்றார். அப்புறம் கால்ல புண்ணு வந்திடுச்சுனு காலை வெட்டி எடுக்க சொல்லுறான். காலை வெட்டி எடுத்ததும் ஒரு வருஷத்துல உயிர் போய்டுது. இதுல எந்த இடத்துலயும் அவன் DOCTER ரை திட்டுவதோ, குறை சொல்வதோ இல்லை. 1. தான் சாப்பிடற டேப்லெட் மேல சந்தேகம் வரல. 2. மாத்திரை சாப்பிட்டும் நோய் அதிகமாகிட்டே போகுதேனு அவன் யோசிக்கல. 3. ஒரு நோய் வந்து அப்புறம் மூணு நோய் ஆகிடுச்சேனு அவன் சிந்திக்கவில்லை. 4. வாரம் 300 ரூபாய்க்கு மாத்திரை சாப்பிட்டா போதும்னு நம்புறான். TABLET சாப்பிட்டா கிட்னி FAILURE ஆகும்னு அந்த அட்டையில் ஓரமா எழுதி இருக்கிறதை அவன் படிக்கிறது இல்லை. அந்த மாத்திரையோட பக்க விளைவை பத்தி அவன் சிந்திக்கிறதும் இல்லை. வீட்டுல இருக்கிற வெந்தயத்தை , காய்கறிகள் வெச்சே இதை சரி செய்யலாம்னு ஒருத்தன் சொன்னா, அவனை கிறுக்கன்னு சொல்லுவான். பாடையில போகற வரைக்கும் அக்கு பிரஷர், இயற்கை மருத்துவம், சித்தா, யோகா இதெல்லாம் வேலைக்கு ஆகாதுன்னு ஏதோ நிபுணர் மாதிரியே பேசிட்டு, தானும் செத்தது இல்லாம, தன்னோடு மேலும் நாலு பேர கூட்டிட்டு போக ரெடியா இருப்பான். 👆👆👆இந்த பதிவு நகைசுவையாகவும் , யதார்த்தமான உண்மையை வெளிப்படுத்தியதால் பதிவிடுகிறேன். மனம் கெட்டால் உடல் கெடும், உடல் கெட்டால் மனம் கெடும். அதனால் மனதுக்கும், உடலுக்குமான, முறையான மன அமைதிக்கான தியானமும், உடல் நலனுக்கான உடற்பயிற்சியும் தொடர்ந்து செய்து வந்தாலே தன்னை நோயிலிருந்து தற்காத்துக் கொள்ள முடியும். சிந்திப்பவர்கள் மட்டுமே அனைத்து நோய்களில் இருந்தும் விடுபடுவர்.. வாழ்க வையகம் வாழ்க வளமுடன் ################### ############### ஒருவர் தவறான உணவை உட்கொண்டார் என்று வைத்துக் கொள்வோம். தொண்டை வரைக்கும் அவர் கட்டுப்பாட்டில் நஞ்சு இருப்பதால் அது உள்ளே சென்றுவிடும்! அதற்குப் பின் அதை மூளை கவனித்துக்கொள்ளும்.❗ 1.உடம்புக்குக் கூடாத இந்த நஞ்சை வாந்தி மூலம் வெளியேற்றுமாறு இரைப்பைக்குப் பணிக்கும். 2.இரைப்பை வாந்தி மூலம் வெளியேற்றித் தள்ளும் போது அவர் உடனே டாக்டரை நாடி "டொம்பெரிடன்" (Domperidone) ஒன்றைப் போட்டு நிறுத்தி விடுவார். 3.இன்னும் உள்ளுக்குள் நஞ்சு இருப்பதால் இரைப்பையிடம் மூளை விசாரிக்கும். 4.நான் என்ன செய்ய அரசே, இவன் விடவில்லையே என்று இரைப்பை ஒதுங்கி விடும். 5.ஆனால் மூளை இறைவன் கொடுத்த பொறுப்பை சரியாக நிறைவேற்ற பேதியாக தள்ளுமாறு குடலைப் பணிக்கும். 6.உடனே மூளையின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு குடல் வாயிற்றோட்டமாக அனுப்ப எத்தனிக்கும். 7.வயிறு கலக்கிக்கொண்டு வரவே மீண்டும் டாக்டரை நாடிச் செல்வார். அவரும் ஒரு " லோபிரமைட் " (Loperamide) ஐக் கொடுத்து நிறுத்திவிடுவார். 8.உடலில் மீண்டும் அதே நஞ்சைக் கண்ட மூளை குடலிடம் விசாரிக்க இரைப்பை சொன்ன அதே பதிலை குடல் சொல்லும். 9.மூளை அடுத்து சளியாக மாற்றி வெளியேற்றுமாறு நுரையீரலை பணிக்கும். 10.அப்போது இருமல் வரவே பழையபடி வைத்தியரை நாடி "இருமல் மருந்து" (Cough Syrup) ஒன்றை சாப்பிடுவார். 11.நான்காவதாக அதை வெளியேற்ற மூளை தோலை நாடும். 12.சொறி சிறங்கு முலம் தோல் வெளியேற்ற முனையும் போது "தோல் மருந்து" (Anti Allergic medicines) வகைகளை பாவித்து அதையும் நிறுத்தி விடுவார். வெளியேறும் அனைத்து வழிகளும் அடைபட்ட நிலையில் நஞ்சை வெளியேற்றும் வரை மூளை ஓயாது என்பதால் வேறு வழியைத் தேடும். 13 உடம்புக்குள் ஒரு குப்பைத்தொட்டியை (கட்டி) உருவாக்கி அதில் நஞ்சை சேமிக்கும். கொஞ்ச நாளில் நம்மவர் ஸ்கேன் பண்ணிப் பார்த்து அதையும் வெட்டி வீசி விடவே மூளை ”இனி யாரையும் நம்பி பிரயோஜனம் இல்லை” என்று நஞ்சைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும். அது "மூளை கேன்சர் கட்டி" (Brain Tumour) ஆக மாறும் அபாயம் உண்டு. எமது உடலுக்கு எது தேவையோ அதை நீங்கள் தெளிவாகப் புரியும் பாஷையில் மூளை சொல்லும். உடலுக்குத் தண்ணீர் தேவை என்றால் அது தாகம் என்ற பாஷையில் உங்களோடு பேசும். வாய்மொழியைக் கூட நாம் கவனிக்காது விட்டு விடுவோம் என்பதாலோ என்னவோ எந்நேரமும் கவனிக்க ஏதுவான உணர்ச்சி மொழியால் மூளை பேசுகிறது. ☘ உடலுக்கு சக்தி தேவைப்பட்டால் பசி எனும் உணர்ச்சி மொழியால் மூளை பேசும். குளிர் வந்தால் போர்த்தச் சொல்லும். வெப்பம் வந்தால் குளிக்கச் சொல்லும். இப்படி உடலுக்குத் தேவையபானவற்றை உணர்வை மொழியாக்கி மூளை சொல்லும்போது அதற்கெல்லாம் வைத்தியரை நாடி நாம் போவதில்லை. பசிக்கிறது மருந்து தாருங்கள் என்று வைத்தியசாலை போவோமா? அல்லது சிற்றுண்டிச் சாலை போவோமா? இதை நோய் என்று அறிமுகப் படுத்தியது யார்? வயிற்றோட்ட உணர்வை மூளை ஏற்படுத்தியது நஞ்சைக் கழிக்கவே. இதையும் நோய் என்று அறிமுகப் படுத்தியது யார்? சொறி என்று சொன்னாலே சொறிந்து விடு என்று தானே அர்த்தம். கையைக் கூட நம்மை அறியாமல் மூளை சொறியவைக்கிறது என்றால் இதை நோய் என்று அறிமுகப்படுத்தியது யார்? மூக்கு ஒழுகுதல், சளி பிடித்தல், இருமல், காய்ச்சல், இவைகளை நோய்கள் என்று நினைப்பது அறியாமை! இதற்கு மருத்துவம் செய்து இரசாயன வில்லைகளை விழுங்குவது அறியாமையின் உச்சம்! இவைகள் நம் உடல் முழு ஆரோக்யம் நிலையில் உள்ளதை காட்டுகிறது! இவைகள் நம் உடல் கழிவுகளை வெளியேற்றும் அற்புத இறை செயல்! மருத்துவம், உடல் சுத்திகரிக்கும் செயலை தடுத்து, கழிவுகளை உடலிலேயே தங்கவைத்து, மேலும் சேர்த்து, நோய்களை பெரிதாக்கி புற்று நோய்வரை கொண்டு செல்லும்! உடல் மொழியை புரிந்துக்கொள்ளுங்கள்! ஆரோக்கியம் அனுபவியுங்கள்.......! - இணையத்தில் படித்தது. -

LTTE பாதுகாத்த இரகசிய பதுங்குக்குழி கண்டுபிடிப்பு.

2 months 2 weeks ago
LTTE பாதுகாத்த இரகசிய பதுங்குக்குழி கண்டுபிடிப்பு, அகழ்வின் பல கண்டுபிடிப்புகளாம்! தமிழீழ விடுதலைப் புலிகள் பயன்படுத்தியதாகக் கருதப்படும் பாரிய அளவிலான நிலக்கீழ் பதுங்குக்குழி ஒன்றை அகழ்ந்தெடுக்கும் பணிகள் நேற்று (ஜூலை 10, 2025) காலை 10.30 மணியளவில் முல்லைத்தீவு – புதுக்குடியிருப்புப் பகுதியில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஆரம்பமாகியுள்ளன. போரின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பகுதியாக இது அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதுக்குடியிருப்பு, எட்டாம் வட்டாரம், மந்துவில் கிராமத்தில் உள்ள ஒரு தனியார் காணியில் அமைந்துள்ள இந்த நிலக்கீழ் பதுங்குக்குழி, விடுதலைப் புலிகளின் தலைவர் மற்றும் தளபதிகள் முக்கிய சந்திப்புக்களை மேற்கொள்வதற்காகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இரண்டு ஏக்கர் பரப்பளவிலான இந்தக் காணி, போர்க் காலத்தில் விடுதலைப் புலிகளின் முகாமாகச் செயற்பட்டுள்ளது. சுமார் 20 அடி ஆழத்தில் அமைக்கப்பட்டிருந்த இந்தப் பதுங்குக்குழியின் வாயில்கள், 2009 ஆம் ஆண்டு போர் முடிவுக்கு வந்த பின்னர் ஏற்பட்ட குண்டுத் தாக்குதல்களால் மூடப்பட்டிருந்ததால், மக்கள் இதன் இருப்பை பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. போருக்குப் பின்னர், இந்தக் காணியில் கண்ணிவெடி அகற்றும் இராணுவத்தினர் நிலை கொண்டிருந்தனர். அண்மைக் காலமாக, இந்தப் பதுங்குக்குழிக்குள் விடுதலைப் புலிகளின் தங்கம் அல்லது ஆயுதங்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற வதந்திகள் பரவியதால், சிலர் காணி உரிமையாளர்களுக்குத் தெரியாமல் நிலத்தைத் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதையடுத்து, புதுக்குடியிருப்புப் பொலிஸார் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு, நீதிமன்ற நடவடிக்கைகளை முன்னெடுத்தனர். முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கை அடுத்து, புதன்கிழமை (ஜூலை 09, 2025) இந்த நிலக்கீழ் பதுங்குக்குழியை அகழ்வதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நேற்று மாலை சம்பவ இடத்திற்கு வருகை தந்த முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன், குறித்த பகுதிகளை நேரில் பார்வையிட்டார். கிராம சேவையாளர், விஷேட அதிரடிப் படையினர், குண்டு செயலிழக்கும் பிரிவினர், பொலிஸார் உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலையில், கனரக இயந்திரங்கள் கொண்டு துப்பரவுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பதுங்குக்குழிக்குள் நீர் நிரம்பியிருந்ததால், அதனை வெளியேற்றும் நடவடிக்கைகளும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டன. நீதிபதி பிரதீபனின் பணிப்புரைக்கமைய, நேற்று காலை 10.30 மணியளவில் அகழ்வுப் பணிகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன. இந்தப் பதுங்குக்குழிக்குள் என்னென்ன பொருட்கள் கண்டுபிடிக்கப்படும் என்ற பெரும் எதிர்பார்ப்பு அப்பகுதி மக்கள் மத்தியிலும், பாதுகாப்புத் தரப்பினர் மத்தியிலும் நிலவி வருவதாகச் சொல்லப்பட்டாலும் நேற்று எதுவுமே அங்கே கண்டெடுக்கப்படவில்லை என்று தெரியவருகிறது. Vaanam.lk

பிரித்தானியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி விலக்கு!

2 months 2 weeks ago
பிரித்தானியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி விலக்கு! இலங்கை உட்பட வளர்ந்து வரும் நாடுகளிலிருந்து ஆடை உள்ளிட்ட பொருட்களை வரியின்றி இறக்குமதி செய்வதற்குப் பிரித்தானிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை போன்ற நாடுகள், பிரித்தானியாவுடன் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவதனை இலகுபடுத்தும் நோக்கிலும், பிரித்தானிய மக்களுக்கு குறைந்த விலையில் பொருட்களைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கிலும், இந்த புதிய வர்த்தக திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த செயற்பாடு, இலங்கை உள்ளிட்ட நட்பு நாடுகளின் பொருளாதார வளர்ச்சியை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பிரித்தானிய அரசாங்கத்தின் புதிய வர்த்தக திட்டம், தொடர்பில் கருத்துரைத்துள்ள இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் என்ரூ பெட்றிக், இது இலங்கையின் ஆடைத்துறைக்கும் பிரித்தானியாவின் நுகர்வோருக்கும் கிடைத்த வெற்றி என்று குறிப்பிட்டுள்ளார். பிரித்தானியா, இலங்கையின் இரண்டாவது பெரிய ஏற்றுமதி சந்தையாக விளங்குவதுடன் மொத்த வர்த்தகத்தில் 60 சதவீதத்துக்கும் அதிகளவான ஆடைகள் பிரித்தானியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையின் ஆடைகள் மாத்திரமின்றி, பரந்த அளவிலான பொருட்களுக்கும் பிரித்தானியாவின் வர்த்தக திட்டத்தை, வளர்ந்து வரும் நாடுகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1438801

சோழர் காலத்தில் ஏரிகள் எப்படி இயங்கின? நீர்ப்பாசன நுட்பத்தை காட்டும் கல்வெட்டு

2 months 2 weeks ago
அறிவுபூர்வமான நாகரீகம் எப்போது வீழ்ச்சியடைந்தது ? வெள்ளைக்ராரன் வந்த பின்னரா அதற்கு முன்பா ? பல திரிகளிலும் நீங்கள் முன்வைக்கும் கேள்விகளுக்கு இங்கு பொறுமையாகப் பலர் பதில் எழுதுகிறார்கள். பதில் தரப்படாத உருட்டல்கள் எவை என்று பட்டியலிடுங்கள் ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.

முதல் முறையாக ஆடு மாடுகளுக்கான மாநாடு நடத்தும் சீமான்.. தயார் நிலையில் மாடுகள்!

2 months 2 weeks ago
ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்வாதாரங்கள் வேறுபடும். அந்த வகையில் தமிழ்நாட்டு மக்களுக்கு ஆடு மாடுகளுக்கான மேய்ச்சல் நிலங்களுக்கு தடையும் தட்டுப்பாடும் நிலவுகின்றது.அரசு மேய்ச்சல் நிலங்களை தனியாருக்கு விற்று விட்டது.இதையெல்லாம் யாரும் பேச மாட்டார்கள். பால் பொருட்கள் வெளி மாநிலங்களில் இறக்குமதியாகின்றது. கால் நடைகளுக்கான தீனிகளும் வெளி மாநிலங்களிலிருந்து இறக்குமதியாகின்றது. இதையெல்லாம் வளம் மிக்க தமிழ்நாட்டில் ஏன் எதற்காக என்றெல்லாம் விவாதிக்க மாட்டார்கள். இது மாநாடு அல்ல. ஒருவகை போராட்டம் மட்டுமே. மூலைக்கு மூலை மதுபானசாலைகள் இருக்கும் போது கள் உற்பத்தி செய்வதில் தப்பில்லை என்பது என் கருத்து.
Checked
Sat, 09/27/2025 - 09:23
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed