2 months 2 weeks ago
சர்வதேச அரங்கில் கலக்கும் எம் இளம் தமிழச்சி! விம்பிள்டன் ஜூனியர் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் விளையாடியதன் மூலம் ஒட்டுமொத்த தமிழர்க்கும் பெருமை சேர்த்துள்ள தமிழகத்தின், கோவையைச் சேர்ந்த இளம் டென்னிஸ் வீராங்கணை செல்வி. மாயா ராஜேஷ்வரன் ரேவதி. இவர், 16 வயதில் 76% வெற்றி விகிதத்துடன், இவரின் திறமை அடையாளம் காணப்பட்டு டென்னிஸ் உலகின் சிறந்த பயிற்சி மையமான ரஃபா நடால் அகடமியில் ஊக்கத்தொகையுடன் பயிற்சி பெற்று வருகிறார் செல்வி மாயா, சிறந்த திறமையுடனும் கடின உழைப்புடன் கூடிய விடா முயற்சியுடன் முன்னேறி வரும் இளம் தமிழச்சி இன்னும் பல சாதனைகள் புரிய வாழ்த்துகிறோம்! Vaanam.lk
2 months 2 weeks ago
இன்ஜினுக்கு தேவையான எரிபொருள் மற்றும் காற்று செல்லாமல் தான் மேலே எழும்பும்போது இழுவை திறன்(pulling power) இல்லாமல் இஞ்சின் செயலிழந்து கீழே விழுந்து விட்டது என்று ஒரு ஆட்டோ ஓட்டுநருக்கு கூட தெரியும். கடமை என்பது காலில் கிடக்கும் செருப்புக்கு சமம் என்று கருதக்கூடிய பணியாளர்களை ஒவ்வொரு நிறுவனமும் பதவியில் அமர்த்திருக்கிறது .ரயில் வரும்போது கேட்டை திறந்து விடுவது, சாலையில் பள்ளத்தை தோண்டி போட்டு விட்டு எந்த எச்சரிக்கை பலகையும் வைக்காமல் செல்வது, மனித உயிர்களுடன் விளையாடும் பொறுப்பற்ற பணியாளர்களால், அதிகாரிகளால் அனைத்து நிலைகளிலும் மனித உயிர்கள் மாண்டு போகிறது. உண்மை உரைகல்
2 months 2 weeks ago
கல்கிசை - காங்கேசன்துறை குளிர்சாதனப் பெட்டி வசதியுடன் கூடிய சொகுசு ரயில் சேவை தினசரி ஆரம்பம்! கொழும்பு: இலங்கையின் தெற்கையும் வடக்கையும் இணைக்கும் மிக முக்கியமான ரயில் சேவைகளில் ஒன்றான கல்கிசை - காங்கேசன்துறை இடையேயான குளிர்சாதனப் பெட்டி வசதியுடன் கூடிய சொகுசு ரயில் சேவை (A/C Train), தினசரி சேவையாக அமுலுக்கு வந்துள்ளது. பயணிகளின் நீண்டகால கோரிக்கையை ஏற்று இலங்கை ரயில்வே திணைக்களம் இந்த புதிய சேவையை ஆரம்பித்துள்ளது. முக்கிய அம்சங்கள்: தினசரி சேவை: முன்னர் வார இறுதி நாட்களில் (சனி மற்றும் ஞாயிறு) மாத்திரம் இயக்கப்பட்ட இந்த சொகுசு ரயில், இனிமேல் வாரத்தின் ஏழு நாட்களும் சேவையில் ஈடுபடும். பயண அட்டவணை - கல்கிசையிலிருந்து காங்கேசன்துறை வரை: காலை 5:15 மணிக்கு கல்கிசையில் இருந்து புறப்படும். காலை 5:40 மணிக்கு கொழும்பு புறக்கோட்டை ரயில் நிலையத்தை வந்தடையும். காலை 5:45 மணிக்கு புறக்கோட்டையில் இருந்து காங்கேசன்துறையை நோக்கி தனது பயணத்தைத் தொடங்கும். மதியம் 12:45 மணிக்கு காங்கேசன்துறையை சென்றடையும். பயண அட்டவணை - காங்கேசன்துறையிலிருந்து கல்கிசை வரை: நண்பகல் 1:50 மணிக்கு காங்கேசன்துறையில் இருந்து புறப்படும். மாலை 8:00 மணிக்கு கொழும்பு புறக்கோட்டை ரயில் நிலையத்தை வந்தடையும். மாலை 8:30 மணிக்கு கல்கிசையை சென்றடையும். யாழ் தேவி ரயில் சேவை மாற்றம்: நேர மாற்றம்: இந்த புதிய சொகுசு ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டதன் காரணமாக, பிரபலமான யாழ் தேவி ரயில் சேவையின் புறப்படும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புதிய புறப்படும் நேரம்: யாழ் தேவி ரயில் இனி காலை 6:40 மணிக்கு புறக்கோட்டையில் இருந்து புறப்பட்டு, மாலை 3:00 மணிக்கு காங்கேசன்துறையை சென்றடையும். முந்தைய நேரம்: முன்னதாக யாழ் தேவி ரயில் காலை 5:45 மணிக்கு புறக்கோட்டையில் இருந்து புறப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய குளிர்சாதனப் பெட்டி வசதியுடன் கூடிய சொகுசு ரயில் சேவை, வடக்கு நோக்கிய மற்றும் தெற்கு நோக்கிய பயணிகளுக்கு, குறிப்பாக வணிகப் பயணங்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் வசதியான மற்றும் சொகுசான பயண அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. Dharussafa NEWS
2 months 2 weeks ago
2 months 2 weeks ago
வவுனியா கூமாங்குளம் பகுதியில் பொலிஸார் துரத்தியதில் ஒருவர் உயிரிழப்பு! வவுனியா கூமாங்குளம் பகுதியில் நேற்று (11) இரவு போக்குவரத்து பொலிஸார் துரத்திச்சென்றமையால் நபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதார். இதனால் அப்பகுதி மக்கள் பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டமையால் அந்தப்பகுதியில் பெரும் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு10 மணியளவில் கூமாங்குளம் மதுபான விற்பனை நிலையம் அமைந்துள்ள வீதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் பொலிஸார் வந்துள்ளனர். இதன்போது அவ்வீதியால் மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருந்த நபர் ஒருவரை துரத்திச் சென்றதுடன் அவரது வாகன சக்கரத்தில் தடி ஒன்றினால் தடையினை ஏற்படுத்தியதாகவும் இதனால் நிலை தடுமாறி கீழே வீழ்ந்த குறித்த நபர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதனை அவதானித்த இளைஞர்கள் மற்றும் ஊர்மக்கள் ஆத்திரமடைந்து பொலிஸாரின் இரண்டு மோட்டார் சைக்கிள்களையும் ஒரு வாகனத்தையும் சேதப்படுத்தியதுடன் பொலிசாரின் இச்செயற்பாட்டிற்கு நீதி கிடைக்கவேண்டும் என தெரிவித்ததுடன் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை நீண்டநேரமாக சிறைப்பிடித்து வைத்தனர். இதனால் குறித்த பகுதியில் குழப்பநிலை ஏற்பட்டது. உயிரிழந்தவரின் சடலத்தை அகற்றுவதற்கு மறுப்பு தெரிவித்த இளைஞர்கள் நீதிபதி இங்கு வரவேண்டும் வந்த பின்னரே சடலத்தை அகற்ற அனுமதிப்போம் என தெரிவித்தனர். இந்த நிலையில் வவுனியா சிரேஸ்டபொலிஸ் அத்தியட்சகர் சம்பவ இடத்திற்கு வருகைதந்ததுடன், இந்த மரணத்தை கொலை வழக்காக பதிவுசெய்து அதனுடன் தொடர்புடையை சந்தேகநபர்களை விசாரிப்பதாக தெரிவித்ததுடன், சடலத்தை அகற்றுவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு தெரிவித்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள் பொலிஸார் மீது நம்பிக்கை இல்லை நீதிபதி இங்கு வரவேண்டும் என தெரிவித்தனர். இந் நிலையில் திடீர் மரண விசாரணை அதிகாரி சம்பவ இடத்திற்கு வருகைதந்து மரணம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்தார். இதேவேளை, சம்பவத்தில் உயிரிழந்தவர் கூமாங்குளம் பகுதியை சேர்ந்த 58வயதுடைய இராமசாமி அந்தோணிப்பிள்ளை என்று தெரிவிக்கப்படுகின்றது. https://athavannews.com/2025/1438856
2 months 2 weeks ago
இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவன மோசடியில் நல்லாட்சி அரசாங்கத்துக்கு தொடர்பாம்! இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனம் (SLIIT) தொடர்பான முறைகேடுகள் குறித்து குற்றப் புலனாய்வுத் துறை (CID) மற்றும் இலஞ்ச ஒழிப்பு ஆணையத்திடம் முறைப்பாடு அளிக்குமாறு அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய நாடாளுமன்றக் குழு (COPE) அறிவுறுத்தியுள்ளதாக அமைச்சர் வசந்த சமரசிங்க இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் , SLIIT இல் பதிவாகியுள்ள நிதி மோசடிக்கு நல்லாட்சி அரசாங்கமும் அதன் முழு அமைச்சரவையும் பொறுப்பேற்க வேண்டும் என்றும் கூறினார். மகாபொல புலமைப்பரிசில் நிதியிலிருந்து SLIIT ஐ நீக்கி, அதை ஒரு வரையறுக்கப்பட்ட நிறுவனமாக மாற்றியதன் காரணமாக, நல்லாட்சி அரசாங்கத்தில் நிதி முறைகேடுகள் நடந்ததாக அவர் தெளிவுபடுத்தினார். இந்த விடயத்தை ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு, முன்னாள் ஜனாதிபதிகளான ரணில் விக்கிரமசிங்க, மைத்திரிபால சிறிசேன மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோர் அடங்கிய அப்போதைய அரசாங்கமும் அமைச்சரவையும் விதிமுறைகளை மீறி இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டத்தை கண்டறிந்துள்ளதாகவும் கூறினார். இது தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்க சிஐடி மற்றும் இலஞ்ச ஒழிப்பு ஆணையத்திடம் முறைப்பாடு அளிக்கப்படும். இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தை மீண்டும் மஹாபொல புலமைப்பரிசில் நிதியத்தின் கீழ் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் மேலும் கூறினார். https://athavannews.com/2025/1438835
2 months 2 weeks ago
யாழ்.வேம்படி மகளீர் கல்லூரியின் சாதனை - 120 9ஏ சித்திகள்! 2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்று இரவு வெளியாகிய நிலையில், ஒவ்வொரு பாடசாலைகளின் சிறந்த பெறுபேறுகளும் அந்தந்தப் பாடசாலை நிர்வாகத்தால் வெளியிடப்பட்டு வருகின்றது. அந்த வகையில் வேம்படி மகளீர் கல்லூரியில் 120 9 ஏ சித்திகளும் 36 8ஏ சித்திகளும் 25 7ஏ சித்திகளும் கிடைக்கப்பெற்றுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வேம்படி மகளீர் கல்லூரியில் 265 பேர் பரீட்சைக்குத் தோற்றியிருந்த நிலையில் மேற்குறிப்பிடப்பட்ட 181 மாணவர்களும் சிறந்த பெறுபேற்றைப் பெற்று பாடசாலைக்குப் பெருமை சேர்த்துள்ளனர். பெறுபேறுகளின் அடிப்படையில் வேம்படி மகளீர் கல்லூரியில் 100 வீத சித்தி கிடைக்கப்பெற்றுள்ளது என்று கல்லூரி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் படி, 237,026 மாணவர்கள் உயர்தரக் கல்விக்கு தகுதி பெற்றுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் A.K.S. இந்திகா குமாரி தெரிவித்துள்ளார். இது பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின் எண்ணிக்கையில் 73.45% ஆகும். இதற்கிடையில், அனைத்து பாடங்களிலும் 9 ‘A’ சித்திகளை பெற்ற 13,392 மாணவர்கள் உள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் தெரிவித்தார். https://newuthayan.com/article/யாழ்.வேம்படி_மகளீர்_கல்லூரியின்_சாதனை_-_120_9ஏ_சித்திகள்!
2 months 2 weeks ago
மின்சார சபையின் அலட்சியத்தால் அபாயத்தில் A9வீதி! ஆனையிறவு உப்பளத்தின் முன்பாகவுள்ள இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான மின்கம்பம் சரிந்து விழும் நிலையில் உள்ளதால் அப்பகுதியில் விபத்து ஏற்படும் அபாயம் காணப்படுவதாக A9 வீதியில் பயணிப்போர் தெரிவிக்கின்றனர். பாரியளவு மின் இணைப்பினை கொண்ட குறித்த மின்கம்பமானது கடந்த காலத்தில் ஏற்பட்ட காற்றின் தாக்கத்தினால் கிட்டத்தட்ட 80 வீதம் முறிந்த வண்ணம் காணப்படுகிறது. அத்துடன் குறித்த மின் கம்பமானது இருபுறமும் உள்ள மின்கம்பத்தின் இணைப்பின் பலத்திலே கீழே விழாமல் உள்ளது எனவும், ஆனால் காற்றின் தாக்கம் அதிக அளவு காணப்பட்டால் மின்கம்பம் கீழே விழும் அபாயம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பாரியளவு மின் விபத்துக்கள் மற்றும் ஆனையிறவு உப்பளம் தீப்பற்றி எரியக்கூடிய அபாயம் உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமன்றி A9 வீதியில் பாரியளவு வீதி விபத்துக்கள் ஏற்படும் அபாயமும் காணப்படுகின்றது. எந்நேரமும் மின்கம்பம் கீழே விழும் அபாயம் இருப்பதால் அவ்வீதி வழியாக பயணிக்கும் பயணிகள் பயத்துடனே பயணிக்க வேண்டிய நிலைமை காணப்படுகின்றது. பலமுறை இது தொடர்பில் தெரியப்படுத்தியும் இது தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் இதுவரை ஆனையிறவு உப்பளத்தாலும் மற்றும் இலங்கை மின்சார சபையினாலும் எடுக்கப்படவில்லை. இதனை இலங்கை மின்சார சபை கண்டும் காணாமலும் இருப்பதற்கான காரணமும் தெரியவரவில்லை இவ்வாறே பூநகரி பிரதான வீதியிலும் ஒரு சில மின்கம்பங்கள் சரிந்து விழும் அபாயத்தில் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் ” உரிய தரப்பினர் இது தொடர்பில் உடனடியாக அவதானம் செலுத்தி ஏற்படும் விபத்தையும் அசௌகரியத்தையும் தடுக்குமாறு ஆதவன் செய்திப் பிரிவு வேண்டுகோள் விடுக்கிறது. https://athavannews.com/2025/1438818
2 months 2 weeks ago
எயார் இந்தியா விமான விபத்துக்கான காரணம் குறித்த அறிக்கை வெளியானது ! குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட எயார் இந்தியா விமான விபத்துக்கான காரணம் குறித்த அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது. கடந்த மாதம் 12 ஆம் திகதி இடம்பெற்ற எயார் இந்தியா விமான விபத்தில் 229 பயணிகள், 12 பணியாளர்கள் மற்றும் தரையில் இருந்த 19 பேர் உட்பட 260 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்த விமான விபத்து புலனாய்வுப் பணியகத்துக்கு மத்திய சிவில் போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது. இதன்படி தனது முதல்கட்ட அறிக்கையை விமான விபத்து புலனாய்வுப் பணியகம், மத்திய அரசிடம் தனது அறிக்கையை கடந்த 8-ம் திகதி சமர்ப்பித்தது. இந்த அறிக்கை விவரங்கள் விரைவில் பொது வெளியில் மத்திய அரசு வெளியிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விமான விபத்து தொடர்பான 15 பக்கங்கள் கொண்ட முதற்கட்ட அறிக்கை இன்று (12) வெளியாகியுள்ளது. இந்தியா விமானத்தின் கருப்பு பெட்டியில் இருந்து மீட்கப்பட்ட உரையாடல்களை வைத்து விசாரணை பணியகம் ஒரு அறிக்கையை தயார் செய்து வெளியிட்டு உள்ளது. இதில், விபத்து இடம்பெற்ற தினத்தில் விமானம் புறப்பட்ட 32 நொடிகளில் இரண்டு என்ஜின்களும் திடீரென பழுதானதே விபத்திற்கு காரணம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விபத்துக்குள்ளான விமானத்தின் இரண்டு என்ஜின்களும் கண்டுபிடிக்கப்பட்டு விமான நிலையத்தின் ஒரு கூடாரத்தில் வைக்கப்பட்டுள்ளதுடன் முக்கியமான பாகங்கள் தனியாகப் பிரிக்கப்பட்டு ஆய்வுக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. விமானம் புறப்படும்போது இறக்கை மற்றும் தரையிறங்கும் சக்கரங்கள் சரியான நிலையில் இருந்ததாகவும் ஆனால் விபத்துக்குப் பின்னர் எரிபொருள் கட்டுப்பாட்டு கருவிகள் அணைந்த நிலையில் இருந்ததாகவும் இதன் மூலம் விமானம் நடுவானில் பறக்கும்போது எரிபொருள் தடைபட்டது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குறித்த அறிக்கையில், விமானத்தை முறையாகப் பராமரித்துள்ளார்களா என்பதை அறிய, விமானப் பராமரிப்புப் பதிவுகளை ஆய்வு செய்தார்கள். அதன்படி, விமானத்தில் கடைசியாக L1-1 மற்றும் L1-2 ஆகிய பெரிய பராமரிப்புப் பணிகள் 38,504:12 மணி நேரங்களுக்கு முன்பும், 7,255 முறை விமானம் இயக்கப்பட்ட பின்பும் மேற்கொள்ளப்பட்டன. அடுத்த பெரிய பராமரிப்புப் பணி (D-check) டிசம்பர் 2025-ல் செய்யப்பட இருந்தது. இடது பக்க என்ஜின் (ESN956174) மே 1, 2025 அன்றும், வலது பக்க என்ஜின் (ESN956235) மார்ச் 26, 2025 அன்றும் நிறுவப்பட்டன. விபத்து நடந்த அன்று, விமானத்தில் நான்கு Category ‘C’ Minimum Equipment List (MEL) குறைபாடுகள் இருந்தன. இவை ஜூன் 9, 2025 அன்று கண்டுபிடிக்கப்பட்டன. ஜூன் 19, 2025 வரை அவை சரி செய்யப்படாமல் இருந்தன. விமானத்தின் கதவு கண்காணிப்பு கேமரா, விமான நிலைய வரைபடம், கம்ப்யூட்டர் நெட்வேர்க் மற்றும் விமானத்தில் இருந்த பிரிண்டர் ஆகியவை பழுதடைந்திருந்தன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளன. https://athavannews.com/2025/1438853
2 months 2 weeks ago
ஒருவேளை உங்கள் அன்ராவை நான் அறிந்திருக்க வாய்ப்பிருக்கலாம்.
2 months 2 weeks ago
பரவாயில்லை, நாட்டிலுள்ள எல்லா புதைகுழிகளையும் தோண்டுங்கள், அதற்கான காரணத்தையும் கர்த்தாக்களையும் கண்டு பிடியுங்கள். எல்லா கொலைகளுக்கும் பின்னால் இருப்பது, சிங்கள இனவாதமே. விடுதலைபோரின் எதிராளிகள், இனவாதிகளும் அரசுமேயொழிய சாதாரண மக்களலல்ல. சாதாரண மக்களை தாக்கியது கொன்றது அரசும் அதன் கைக்கூலிகளுமே. அவர்களை இனங்கண்டு தண்டியுங்கள். ஆனால் அதை செய்ய மாட்டார்கள். தன்னை யாரும் தண்டிப்பதில்லை. அவர்களுக்கு பதவிகளும், பதவி உயர்வுகளும் கிடைக்கும். அதைத்தான் பார்த்துக்கொண்டிருக்கிறோமே!
2 months 2 weeks ago
பரவாயில்லை, நாட்டிலுள்ள எல்லா புதைகுழிகளையும் தோண்டுங்கள், அதற்கான காரணத்தையும் கர்த்தாக்களையும் கண்டு பிடியுங்கள். எல்லா கொலைகளுக்கும் பின்னால் இருப்பது, சிங்கள இனவாதமே. விடுதலைபோரின் எதிராளிகள், இனவாதிகளும் அரசுமேயொழிய சாதாரண மக்களலல்ல. சாதாரண மக்களை தாக்கியது கொன்றது அரசும் அதன் கைக்கூலிகளுமே. அவர்களை இனங்கண்டு தண்டியுங்கள். ஆனால் அதை செய்ய மாட்டார்கள். தன்னை யாரும் தண்டிப்பதில்லை. அவர்களுக்கு பதவிகளும், பதவி உயர்வுகளும் கிடைக்கும். அதைத்தான் பார்த்துக்கொண்டிருக்கிறோமே!
2 months 2 weeks ago
அப்பாவி மக்களை கொல்வதற்கென்றே இந்த மருத்துவமனைகளை பயன்படுத்துகிறார்களா? இஸ்ரேலின் தாக்குதல் திட்டம் புரிகிறது. கமாஸை காரணமாக வைத்து அந்த நாட்டை அழிப்பது போர் நிறுத்தம் ஒன்று வருவதற்குமுன் அதை செய்து முடித்து கமாஸை அழித்து விட்டோமென விழா எடுப்பார்கள். இத்தனை மக்கள் நாளாந்தம் கொத்துக்கொத்தாக இறக்கிறார்கள், காரணம் நெதன்யாகு எனும் கொலைக்குற்றவாளி. அவனை கைது செய்ய முடியவில்லை, அதன் பின் மக்கள் எல்லாம் இறந்து புதைகுழியானபின் விசாரணையென உலகத்தை ஏமாற்றும், காலத்தை இழுத்தடிக்கும் செயலை அரங்கேற்றுவார்கள். ஒருதடவையில் பாடம் படிக்காதவர்கள் எப்போதுமே படிக்கச மாட்டார்கள். தாக்கப்பட்டவனையே பழி சொல்வார்கள். கோத்தா சொன்னானே, சர்வதேசம் போரை முடிவுக்கு கொண்டுவர எங்களை வற்புறுத்தியது, நாங்கள் அதற்கு செவிமடுக்காமல் போரை தொடர்ந்து செய்தோம், அதனால் சர்வதேசம் விசாரணை என்கிற பெயரில் பழிவாங்குகிறது. இதுதான் ஒரு இனத்தை அழிக்கும் யுக்தி. எப்போ எதிர்த் தரப்பு தொடர்ந்து தாக்குதல் நடத்தவில்லையோ, அப்போதே போர் முடிவுக்கு வந்துவிட்டது என்று பொருள். தொடர்ந்து ஒரு தரப்பு அதுவும் வென்ற தரப்பு போரை நடத்துவது என்பது மிஞ்சியுள்ள பொதுமக்களை அழித்து, அவர்களுக்கு சொந்தமான நாட்டை, நிலத்தை கைப்பற்றும், அபகரிக்கும் செயல். அதற்கு வேறு விளக்கம், நாம் செய்தது எதிரியுடனான போர் என, கோழைத்தனமான விளக்கம். அதையும் பார்த்துக்கொண்டே மனிதாபிமான சபைகள் நிறுவனங்கள் இருக்கின்றன. அவைகள் நடந்து கொள்ளும் விதமும் ஒவ்வொரு போரின்போதும் வெளியில் வந்து கொண்டே இருக்கின்றன. ஒருவேளை இவர்களே போரை உந்தித் தள்ளுகிறார்களோ என்கிற சந்தேகம் எனக்கு? இவர்களால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு என்ன நன்மை, பாதுகாப்பு? அவர்கள் முன்னாலேயே இவ்வளவு கொடூரங்களும் நிகழ்கின்றனவே.
2 months 2 weeks ago
கிளி/ஊற்றுப்புலம் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை தமது முகப்புத்தகப் பதிவில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்: ஊற்றுப்புலத்தின் வரலாற்று சாதனை.... வெளியாகிய 2024(2025) க/பொ/த சாதாரண தரப்பெறுபேற்றில் எமது பாடசாலை மாணவன் செல்வன் சக்திவேல் குயிலன் 9A சித்திகளைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளான் பாடசாலை சார்பாக 9A சித்தி பெறப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். மாணவனுக்கும் இச் சித்தியினை பெற அவனை நெறிப்படுத்திய எமது பாடசாலையின் மதிப்பிற்குரிய அதிபர் திரு மு.பிரேம்குமார், வகுப்பாசிரியை திருமதி பன்னீர்ச்செல்வி சிவகுமார் , ஆசிரியர்கள்,மற்றும் அவனது பெற்றோருக்கும் பாடசாலை சமூகம் சார்பாக அன்பான வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்கின்றோம்..... இவ் மாணவன் கல்விச் செயற்பாடு மட்டுமன்றி இணைப்பாட விதான செயற்பாடுகளிலும் நற்பண்பிலும் சிறந்து விளங்குபவர் என்பது குறிப்பிட தக்கதது க.பொ.த உயர்தரப்பரீட்சையிலும் சிறந்த பெறுபேற்றினை பெற இறையாசியினை வேண்டி நிற்கின்றோம்
2 months 2 weeks ago
அப்ப கனடாவில் நடந்த கரப்பந்தாட்டப் போட்டிகள் எப்படி? உங்கள் அணி கிண்ணம் ஏதும் வென்று வந்தீர்களா? என்னையும் இந்த அணியொன்றில் இணைத்து வார இறுதியில் சீரியசாகப் பெண்டு நிமித்தி பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தோம். பின்னர் ஒரே நேரத்தில் பல குடும்பங்கள் அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் ஆண்டு விழாவிற்காக வட கரோலினாவிற்குப் போக வேண்டியதாகி விட்டது! ரீம் காலி😂! பின்னர் வட கரோலினா பற்றி விரிவாக எழுதுகிறேன்.
2 months 2 weeks ago
மேலே புலவர் பொங்கியிருப்பதைப் பார்த்தீங்கள் தானே? நா.த.கவாவது இல்லாமல் போறதாவது! இவையள் பாம்பு பூச்சி ஓணாணைக் கூப்பிட்டு சீமான் மாநாடு வைச்சாலும் "இது வரை யாரும் செய்யாததைச் செய்பவன் தான் தலைவன்!" 😎 என்று பின்னால் செல்லும் மூளை பிரஷர் வாஷரால் மினுக்கப் பட்ட ஆட்கள்! இவையள் பெருகிவீனமேயொழிய அருகாயீனம்!
2 months 2 weeks ago
Home > செய்திகள் > குருக்கள் மடத்தில் வெட்டியும், சுட்டும் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் புதைகுழி வழக்கில் நகர்த்தல் பத்திரம் குருக்கள் மடத்தில் வெட்டியும், சுட்டும் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் புதைகுழி வழக்கில் நகர்த்தல் பத்திரம் Friday, July 11, 2025 செய்திகள் குருக்கள் மடத்தில் வெட்டியும், சுட்டும் படுகொலை செய்யப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட முஸ்லிம்களின் மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு, இன்று (11) வெள்ளிக்கிழமை மீண்டும் களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்றில் நகர்த்தல் பத்திரம் மூலம் அழைக்கப்பட்டுள்ளது. இதன்போது சட்டமா அதிபருக்கும், காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்திற்கும், களுவாஞ்சிக்குடி பொலிசாருக்கும் அடுத்த தவணையில் மன்றில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 5 வருடங்களாக இந்த வழக்கு கிடப்பில் போடப்பட்டிருந்துள்ளது. குரல்கள் இயக்க அமைப்பின் சட்டத்தரணிகள் நீதிமன்றில் இதன்போது சென்றிருந்தனர். ஆமா அனுர செம்மணிக்கு காசு கொடுக்கிறாரா...... அல்லது அமைச்சர் பதவிக்கு அச்சாரம் போடுகினமோ
2 months 2 weeks ago
Home > செய்திகள் > குருக்கள் மடத்தில் வெட்டியும், சுட்டும் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் புதைகுழி வழக்கில் நகர்த்தல் பத்திரம் குருக்கள் மடத்தில் வெட்டியும், சுட்டும் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் புதைகுழி வழக்கில் நகர்த்தல் பத்திரம் Friday, July 11, 2025 செய்திகள் குருக்கள் மடத்தில் வெட்டியும், சுட்டும் படுகொலை செய்யப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட முஸ்லிம்களின் மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு, இன்று (11) வெள்ளிக்கிழமை மீண்டும் களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்றில் நகர்த்தல் பத்திரம் மூலம் அழைக்கப்பட்டுள்ளது. இதன்போது சட்டமா அதிபருக்கும், காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்திற்கும், களுவாஞ்சிக்குடி பொலிசாருக்கும் அடுத்த தவணையில் மன்றில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 5 வருடங்களாக இந்த வழக்கு கிடப்பில் போடப்பட்டிருந்துள்ளது. குரல்கள் இயக்க அமைப்பின் சட்டத்தரணிகள் நீதிமன்றில் இதன்போது சென்றிருந்தனர். ஆமா அனுர செம்மணிக்கு காசு கொடுக்கிறாரா...... அல்லது அமைச்சர் பதவிக்கு அச்சாரம் போடுகினமோ
2 months 2 weeks ago
ஜெயலலிதா மற்றும் கருணாநிதி இருவரின் மறைவின் பின், விஜய்காந்தும் முற்றிலும் உடல், உணர்வுகள் தளர்ந்து போக, தமிழ்நாட்டு அரசியலில் ஒரு பெரிய வெற்றிடம் ஏற்பட்டுள்ளது என்றார்கள். ஆனால் அவ்வாறான ஒரு வெற்றிடம் உருவாகவில்லை. ஸ்டாலின் திமுகவை கட்டுக்குள் வைத்துக்கொண்டார். ஓபிஎஸ்ஸும், ஈபிஎஸ்ஸூம் இணைத்தலைமை என்று அதிமுகவை கொண்டு சென்றார்கள். அதனால் சீமான், கமல் போன்றோரின் நிலையில் எந்த பெரிய மாற்றமும் ஏற்படவில்லை. ஆனால், இன்று மீண்டும் ஒரு வெற்றிடம் இருப்பது போல தெரிகின்றது. அதிமுக இருந்த இடம் தெரியாமல் போகப் போகின்றது என்ற ஒரு ஊகம் பரவலாக இருக்கின்றது. அதிமுக பாஜகவுடன் மீண்டும் கூட்டணி சேர்ந்திருப்பதே அவர்களின் வீழ்ச்சியை துரிதப்படுத்தக்கூடும். விஜய்யின் தவெக திமுகவிற்கு ஒரு மாற்றாக, இரண்டாவது பெரிய கட்சியாக வரக்கூடும். அந்த நிலையில் தமிழ்நாட்டில் வேறு எந்தக் கட்சியையும் இன்று காண முடியாதுள்ளது. சீமான் இது போன்ற சிறுபிள்ளைத்தனமான போராட்டங்களை கைவிட்டு விட்டு, பெரிய நீரோட்டத்தில் கலந்து கொள்ளவேண்டும். இது அவருக்கு கிடைத்திருக்கும் மிக நல்லதொரு சந்தர்ப்பம். இவ்வாறான போராட்டங்கள் - கள் இறக்குதல், ஆடு மாடுகளுக்கான மாநாடு, அடுத்தது என்ன........ கடற்கரையில் வலை பின்னுதலா........? - சிறுபிள்ளைத்தனமான போராட்டங்களே. இந்த வகைப் போராட்டங்களை பாரம்பரியமாகவே சிறு கட்சிகளாக இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட செய்வதில்லை. இவை இணையத்திலும், சமூக ஊடகங்களிலும் பரபரப்பான செய்திகளாக ஓரிரு நாட்களாக வருமேயன்றி வாக்குகளாக மாறப்போவதில்லை. திமுகவோ அல்லது அதிமுகவோ அல்லது தங்களை ஒரு பெரும் கட்சியாக எண்ணும் அவரும் இப்படியான ஒரு போராட்டத்தை நடத்துவதுமில்லை. இவை ஒரு விதத்தில் அசட்டுத்தனமான செயல்களே. நாதக இப்போது செய்ய வேண்டியது திமுக அரசு மற்றும் அதிமுக கட்சி மீது தமிழ்நாட்டு மக்களுக்கு இருக்கும் அதிருப்தியை அறிந்து, அதை மூலதனமாக்கி, 2026ம் ஆண்டில் தேர்தலை எதிர்கொள்வதே. தவெக அந்த வழியிலேயே பயணிக்கின்றது. இல்லாவிட்டால், கமல் ஒரு இடத்தில் தேங்கி நின்று இல்லாமல் போனது போலவே நாதகவின் நிலையும் ஆகும்.
2 months 2 weeks ago
இதுதான் ஊடக விபச்சாரம் என்பது.அங்கே சொல்லப்பட் ட கருத்துக்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதுதான் ஊடக அறம். மக்கள் நல்லது கெட்துகளை அலசிப்பார்த்து முடிவெடு;பார்கள். ஆனால் இந்த ஊடகம் மக்களை சிந்திக்கத் தெரியாத ஆடுமாடுகள் போல சிததரித்து தமது கருத்துத் திணிப்பைச் செயகிறார்கள். எதிரிக்கு எரிகிறது என்றால் நீ வளர்கிறாய் என்று அர்த்தம்.இதுதான் ஊடக விபச்சாரம் என்பது.அங்கே சொல்லப்பட் ட கருத்துக்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதுதான் ஊடக அறம். மக்கள் நல்லது கெட்துகளை அலசிப்பார்த்து முடிவெடு;பார்கள். ஆனால் இந்த ஊடகம் மக்களை சிந்திக்கத் தெரியாத ஆடுமாடுகள் போல சிததரித்து தமது கருத்துத் திணிப்பைச் செயகிறார்கள். எதிரிக்கு எரிகிறது என்றால் நீ வளர்கிறாய் என்று அர்த்தம்.சீமான் எதிர்பாளர்கள் பார்த்து சுய இன்பம் காணுவதற்காக இந்த வீடியோ
Checked
Sat, 09/27/2025 - 09:23
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed