2 months ago
மற்றொரு பழங்காலத்து வள்ளம். இது இது கடந்து வந்த பாதை நெடியது.
2 months ago
மத்திய கிழக்கின் முக்கிய நகரமான துபாயில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் காரணமாக, பல பகுதிகள் இடுப்பளவு வெள்ள நீரில் மூழ்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கை, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் காலநிலை மாற்றத்தால் கடுமையான பாதிப்புக்கள் பதிவாகி வரும் நிலையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸிலும் தற்போது மழை அதிகரித்துள்ளது. இந்நிலையில், துபாய் பொலிஸார், கனமழை பெய்து வருவதன் காரணமாக பாதுகாப்பு கவலைகள் எழும்பியுள்ளதால், அப்பகுதி மக்களை வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை மேலும், நகரின் சில பகுதிகளில் வரலாறு காணாத மழை பெய்து ஒரு வருடம் கடந்துள்ள நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்நகர மக்களின் தொலைபேசிகளுக்கு அனுப்பப்பட்ட எச்சரிக்கையில், வெள்ளிக்கிழமை நண்பகல் வரை மிகவும் கவனமாக இருக்கவும், தேவைப்படாவிட்டால் முற்றிலும் வெளியே செல்வதைத் தவிர்க்கவும் துபாய் பொலிஸார் வலியுறுத்தியுள்ளது என்று செய்திகள் தெரிவிக்கின்றன. வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில், குறிப்பாக துபாய் மற்றும் அபுதாபியில், கனமழை எச்சரிக்கைகள் நடைமுறையில் இருந்ததாக அந்நாட்டு தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கலீஜ் டைம்ஸின் அறிக்கையின்படி, மாறிவரும் வானிலை காரணமாக அபுதாபி சிவில் பாதுகாப்பும் மக்களை எச்சரிக்கையாக இருக்குமாறு கோரியுள்ளது. அத்துடன், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும், திடீர் வெள்ளம் ஏற்படக்கூடிய பகுதிகளிலிருந்து விலகி இருக்கவும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இதற்கிடையில், சமூக ஊடக தளமான X இல், மழை மற்றும் மூடுபனி நகர வானலையை மூடியதால், சின்னமான புர்ஜ் கலீஃபா கிட்டத்தட்ட முற்றிலும் அடர்ந்த மேகங்களுக்குப் பின்னால் மறைந்திருப்பதைக் காட்டும் காட்சிகளும் வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. Tamilwinவெள்ளத்தில் மூழ்கிய துபாய்.. மத்திய கிழக்கிலும் பதற்றத்தை...மத்திய கிழக்கின் முக்கிய நகரமான துபாயில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் காரணமாக, பல பகுதிகள் இடுப்பளவு வெள்ள நீரில் மூழ்கிய...
2 months ago
பாகுபாடற்ற அரசியல் சந்திப்புக்களுக்கு நல்ல உதாரணம். சுமந்திரன் கொம்பனியை மட்டும் சந்திக்கும் வெளிநாட்டு ராஜதந்திரிகளுக்கு நல்ல செருப்படி.
2 months ago
"போருக்கென்றும் ஆதரவாய் நாமிருந்தவர் எல்லைப் போரின் படையாகி புலியோடு நின்றவர்"
2 months ago
யாழ்ப்பாணத்தில் பாவிக்கப்பட்ட வள்ளங்கள் இரண்டு இது போன்ற வள்ளங்களின் மேல் பாய் கட்டி ஓடுவதும் உண்டு. ஆதாரம்:
2 months ago
யாழ். வள்ளம் கடலேற்றல், நவீன காலம்
2 months ago
குளச்சல் துறைமுகத்தில் 1900s
2 months ago
சிறுத்தைப்படைக்கு கடைசி வரைக்கும் ஒரு பாடல்கூட அவங்கள் வெளியிடேல.😒😖
2 months ago
ஓசையில்லா சமரின் நாயகர்களிற்கு பாடல்கள் சூரியப்புதல்விகள் இறுவட்டிலுள்ள 'வேகமுடன் களமாடி' என்ற போர்க்கால இலக்கியப்பாடலானது பெண் வேவுப்புலிகள் பற்றிய பாடல் ஆகும். தேசத்தின் புயல்கள் பாகம் - 03 என்ற இறுவட்டிலுள்ள 'வெளுத்த வானம்' என்ற போர்க்கால இலக்கியப்பாடலானது கரும்புலிகளுக்கு வழிகாட்டும் வேவுப்புலிகள் பற்றியதாகும். புதிய காற்று இறுவட்டிலுள்ள 'கண்களின் ஓரம்' என்ற வாணி சுகுமார் அவர்களால் பாடப்பட்ட போர்க்கால இலக்கியப்பாடலானது வேவுப்புலிகள் பற்றிய பாடல் ஆகும். உறங்காத கண்மணிகள் திரைப்படத்தில் வரும் 'இனத்தின் அடிமை இருளை' என்ற போர்க்கால இலக்கியப் பாடல் பூநகரி தளம் மீதான தாக்குதலுக்கான வேவில் வீரச்சாவடைந்த வேவுப்புலிகளுக்காகப் பாடப்பெற்றதாகும். அடிக்கற்கள் என்ற இறுவட்டில் கரும்புலிகளின் மகிமை பற்றிய எத்தனை எத்தனை மாபெரும் என்ற போர்க்கால இலக்கியப் பாடலானது இடம்பெற்றுள்ளது. அலைகள் தழுவும் கரையில் நிமிர்ந்து என்ற போர்க்கால இலக்கியப் பாடலானது ஓயாத அலைகள் - 1 நடவடிக்கையின் வெற்றிக்கு வித்திட்ட வேவுப்புலி வீரர்களின் நினைவாய் பாடப்பெற்றதாகும். தாகம் என்ற இறுவட்டிலுள்ள "வெற்றி பெற்றோம் வீருடனே" என்ற பாடலானது வேவுப்புலிகள் வேவின் போது படும் இன்னல்களை எடுத்துரைக்கிறது. பூநகரி நாயகன் என்ற இறுவட்டிலுள்ள "மழை மேகம்" என்ற பாடலானது தவளை பாச்சல் நடவடிக்கையில் வீரச்சாவடைந்த வேவுப்புலிகள் மேல் பாடப்பட்டதாகும். ஆக்கம் & வெளியீடு: நன்னிச் சோழன்
2 months ago
அன்னபூரணி என்ற கலப்பெயர் கொண்ட தோணி, வெளிநாட்டில்
2 months ago
நில உயிர்கள் -------------------- ஒரு பக்கமாக சாய்ந்து நின்று பார்த்துக் கொண்டிருந்தவர்கள் யுத்தங்களால் இழப்பன்றி வேறு எதுவும் இல்லை சமாதானம் சமாதானம் என்றனர் நாடு நகரம் குடும்பம் குழந்தை எதிர்காலத்துடன் இப்படியே போனால் உன்னைக் கூட இழக்கப் போகின்றாய் என்றனர் எத்தனை நாளைக்குத்தான் முடியும் மூன்று வாரங்கள் கூட தாங்க மாட்டாய் என்றனர் மூன்று வாரங்கள் தாண்டி மூன்று வருடங்களும் வந்து போனது ஒரு மலையை உளியால் பிளப்பது போல என் வீட்டுக்குள் வரும் பலசாலியை என்னால் முடிந்த வரை நிறுத்தப் போராடுகின்றேன் அவர்களின் கணக்கு சரியே நான் இழந்து கொண்டேயிருக்கின்றேன் என் குலமும் நிலமும் வளமும் அழிந்து கொண்டிருக்கின்றன இழந்து இழந்து எதற்காகப் போராடுகின்றாய் இப்போது கூட நீ அடங்கினால் ஒரு மூலையில் ஒதுங்கினால் உயிர் தப்பி பலசாலியுடன் வாழலாம் என்கின்றனர் சாய்ந்து நிற்பவர்கள் உயிர் விட்ட பின்னும் நிலமாகப் பரந்து நீராக ஓடி அங்கே புதிய உயிர்களாக நித்தியமாக வாழும் மனிதர்களை நீங்கள் பார்த்திருக்கின்றீர்களா..........? உங்கள் வீட்டுக்குள்ளும் ஒரு பலசாலி வரும் போது பணிந்து குனிந்து வழிவிடுவீர்களா...............?
2 months ago
2 months ago
1826 காலப்பகுதியில் தலைமன்னார் பகுதியில் கொண்டு வந்து இறக்கிய நாள் தொட்டு பெருந்தோட்ட பயிர் செய்யக்கூடிய நிலத்தை நோக்கி பயணப்பட்டு, தாமாகவே பாதைகளையும் உருவாக்கிக் கொண்டு, பற்றை காடுகள், மலை சரிவுகள் கொடிய விஷம் கொண்ட பாம்புகள், அட்டைகள், மலேரியா, அம்மை நோய் இதையெல்லாம் தாண்டி சிலோனை தேயிலைக்கு முதலாம் தர நாடாக மாற்றிய சக தமிழனை வெறுமனே 3 - 4 மணித்தியால நகர்வில் வரும் பாரம்பரிய தமிழர் நிலத்தில் இந்த தமிழர்கள் வந்து எந்த தொழிலை, எப்படி செய்வார்கள்இ அவர்கள் வயிற்றுப பிழைப்பை எப்படி பார்ப்பார்கள் என்று நம்மவர்கள் அதீத கலக்கம் அடைவது மிகவும் கவலைக்குரிய நிலைப்பாடு. அந்த தமிழ் தோட்டத் தொழிலாளர்கள் இன்னும் கூட பிரதேச சபைஇ கிராமசபை மற்றும் எந்த ஒரு பிரிவுக்குள்ளும் உள்வாங்குப்படவில்லை என்ற உண்மை இவர்களுக்கு தெரியுமா தெரியாது. நவீன Artificial Intelligence உலகில் பெரிய தோரை, கங்காணி, கணக்குப்பிள்ளை, கிளாக்கரு இவர்களின் தயவில் கூழை கும்பீடு போட்டு வாழ்வது உசிதம் என்றும் நினைக்கிறார்கள் போல உள்ளது.
2 months ago
வேறு, வேறு தளங்களில் வந்த செய்தி..இந்த பெண் ஏற்கனவே கணவரது நடவடிக்கைகள் காரணமாக பொலிசில் முறைப்பாடு செய்துள்ளார்.அவர்கள் எந்த வித நடவடிக்கையும் எடுக்காத பட்சத்திலயே இப்படி நடந்திருக்கிறது..கணவரின் அடியினால் ஒரு பக்க காது கேட்காமலேயே போய் விட்டதாகவும் சொல்லி இருக்கிறார்.நான்கு பிள்ளைகளில் இருவர் திருமணம் செய்து தனியாக போய் விட்டவர்கள்.மற்றய இரண்டு பிள்ளகைளும் இப்போ தனித்து விடப்பட்டுள்ளதாகவும் சொல்லப் பட்டிருந்தது.நான் வாசித்ததை தான் இற்கு பதிகிறேன்.நன்றி
2 months ago
அதற்கு முன், தனியார் காணிகளில் இருக்கும் இராணுவம் வெளியேறட்டும், ஆக்கிரமித்திருக்கும் விகாரைகள் அகற்றப்படட்டும், சொந்த ஊரிலேயே அகதிகளாக வாழும் மக்கள் தங்கள் சொந்தக்காணிகளில் குடியேறி சுதந்திரமாக நிம்மதியாக வாழட்டும், பின்னர் நடக்கலாம். "மூஞ்சசூறு தான் போக வழியில்லையாம் விளக்குமாத்தையும் தூக்கிக்கொண்டு ஓடிச்சாம்." தனக்குக்கண்டுதான் பிறற்குத்தானம். தனக்கே இல்லையாம் பிறருக்கு எப்படி? உண்மையை ஏற்றுக்கொள்ளாமல் மற்றவரை குற்றம் சாட்டி தாங்கள் ஏதோ பெரு வள்ளல்கள், சாதனையாளர்கள் போல் பாவனை.
2 months ago
இரவிவிரவா வீட்டில இல்லாமல் வேலை வேலை என்று ஓடித்திரிந்து வீட்டுக்குக் காலையில் வந்த மனுசனுக்கு இரவில் வீட்டலை இல்லாமல் வெளியில் என்ன வேலை இருக்கு என்ற கடுப்பில் மணிசி போட்டுத்தள்ளியிருக்கு போல. இரவில் வீட்டில் இருந்திருந்திருந்தால் 3 நேரமும் புட்டு அவிச்சு கொடுத்திருக்கும். மனைவியின் பக்கத்தில் இருக்கிற நியாயத்தையும் யோசிச்சுப் பார்க்க வேணும். நான் இனி மவேலையை விட்டுப் போட்டு முழுநேரமும் வீட்டிலைதான் இருக்கப் போறன்.
2 months ago
அநேகமாக தமிழ் அரசியல் வியாதிகள் இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டு, வடக்கில் மக்கள் இந்திய தூதுவராலயத்திற்கு எதிராக செய்த ஆர்ப்பாடத்திற்கு, அமெரிக்காவின் நகர்விற்கு மன்னிப்பு கேட்டு ஆறுதல் சொல்வார்கள். அவர்களால் வேறு என்ன செய்ய முடியும்? எடுத்ததற்கெல்லாம் இந்தியாவுக்கு பயணம் செய்து மந்திராலோசனை செய்வது தடுபடும். இனி இவர்களுக்கு அரசியல் கையை மீறிப்போன ஒன்று. ஜதார்த்ததை புரியாமல் ஆடியதால் இல்லையில்லை ஏமாற்றியதால் வந்த வினை. தமிழர் இனி வேறொரு வல்லரசின் அடிமைகள் அவ்வளவே.
2 months ago
மாவீரர் நினைவு மண்டபம் வட்டக்கச்சி மாவீரர்களின் திருவுருவப்படங்களிற்கான பொதுமக்களின் மலர்வணக்கத்திற்கென்று சிறப்பாக கட்டப்பட்ட மண்டபம்.
2 months ago
மாவீரர் நினைவு மண்டபம் விடத்தல்தீவு 2004
2 months ago
Blackburn Brothers 2௦ களில் அஸ்டாவை வாங்கினார்கள் குஜராத்திகள் 6.8 பில்லியன் மில்லியன் அல்ல பில்லியன் கொஞ்ச நாளில் இந்த செய்திதான் கபடி கபடி 😄
Checked
Mon, 02/23/2026 - 19:29
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed