2 months 2 weeks ago
தமிழ்நாட்டு அரசே டாஸ் மார்க்கில் சரக்கு விற்கிக்றது.காலம் காலமாக தமிழ்மக்களால் அருந்தப்பட்டு வந்த கள்ளுக்குத் தடை விதிக்கின்றது.காரணம் சாராய ஆலை வியாபாரிகள் எல்லோரும் முக்கிய அரசியல்வாதிகள். அவர்களின் சாராயததை விட கள்ளில் அற்ககோல் வீதம் மிகக் குறைவு.கள்ளுக் குடிப்பதால் ஒருவருக்குஏற்படும் பாதகத்தை விட இவர்களின் சாராயத்தைக் குடிப்பதால் பெரும்பாதிப்பு ஏற்படும் என்பது எல்லோரூக்கும் தெரிந்த விடயம் சீமானை கண்மூடித்தனமாக எதிர்ப்பவர்களுக்கு இது வெல்லாம் கண்ணுக்குத் தெரியாது. இந்தியாவின் முன்னேறிய மாநிலமான கேரளாவில் கள்ளுக்குத்தடை இல்லை. பாண்டிச்சேரியில் கள்ளுக்குத் தடை இல்லை. அங்கு ஆட்சியில் இருப்பவர்கள் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் போலஊழல்வாதிகள் அல்ல.பெரியாரின் மண்ணில்தான் தமிழ் ஒரு காட்டுமிராண்டி மொழி.கள் ஒரு மது.பெரியாரின் சீடர்கள் விற்பது அமிர்தம். இவையெல்லாம் சீமான் எதிர்ப்பாளர்களின் கண்களுக்குத் தெரியாது. சீமான் எது செய்தாலும் அது தவறு. பெரியாரின் சீடர்கள் எது செய்தாலும் அது தமிழநாட்டு மக்களின் நலனுக்காக என்று நம்புவர்கள்.
2 months 2 weeks ago
இந்த மாணவனது தகவலை படத்தோடு பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சிறியண்ண...பலதும் , பத்திலும் பகிரப்பட்டுள்ளது..எனக்கு சிலவேளைகளில் படங்களோடு தகவல்களை பகிர முடியாமல் போகிறது ஏன் என்று தெரியவில்லை.நான் உட்பட முடிந்தவர்கள் தங்களால் முடிந்த உதவியை செய்து இவ்வாறன மாணவர்களை மேற் கொண்டு கற்பதற்கு ஊக்கபடுத்த வேண்டும் என்பதற்காகவே சில விடையங்களை இங்கும் இணைப்பேன்.🖐
2 months 2 weeks ago
அவர்கள் ஒரு மிகச் சிறிய தொகையினர்.
2 months 2 weeks ago
அந்த பையன் பார்த்த பார்வை இருக்கே நீயுமா அப்பா ?
2 months 2 weeks ago
2 months 2 weeks ago
இறுதியில் மூளைதான் இறுதி முடிவு எடுக்கிறது. வயிற்றுக்குள்ளே ஒரு இடதுசாரி அரசாங்கமே நடக்கிறது என்பதைத் தத்துரூபமாக விளக்கப்பட்டுள்ளது. 😂 இன்னொன்றையும் இக் கட்டுரையில் சேர்த்திருக்கலாம். சர்க்கரை நோய் கண்டவுடன் சனி பகவானுக்கு நேர்த்தி வைத்து பூசைகள் செய்ய வேண்டும். ஏனென்றால் ... இப்படியான குப்பைகளை நம்பும் தமிழர்களும் உள்ளனர்.
2 months 2 weeks ago
பதிவை இரண்டு முறை வாசித்து "அந்த கிராமத்தின்" பெயர் ஊற்றுப்புலம் என்று கண்டுபிடித்தேன். 😂
2 months 2 weeks ago
இவ்வளவு புத்தகங்களையும் எழுதியவர்கள், சேகரித்தவர். பாதுகாப்பவர்,போற்றப்படவேண்டியவர்கள்.அழியாதசெல்வம் கல்வி. நூலகம் ஒரு அறிவுப்பெட்டகம்
2 months 2 weeks ago
அமெரிக்கனும் புத்திசாலி தான் அதே நேரம் அமெரிக்காவில் குடியேறிய ஈழ தமிழர்களும் ரஷ்யாவில் சீனாவில் குடியேறாது தவிர்த்து கொண்ட ஈழதமிழர்களும் எப்பவுமே புத்திசாலிகள் தான். இதை புரிந்து கொண்டவன் பிஸ்தா
2 months 2 weeks ago
இப்ப ஆடுமாடுகள் எல்லாம் கள்ளுக் குடிச்சுப்போட்டு கவுண்டு கிடப்பதாகக் கேள்வி!
2 months 2 weeks ago
2 months 2 weeks ago
குழந்தைக் குட்டி உள்ள குட்டிக் கதையாகினும் நகைச்சுவை நன்றாக இருந்தது . ........ ! 😂
2 months 2 weeks ago
அமெரிக்கன் எப்பவும் புத்திசாலிதான் 🤣
2 months 2 weeks ago
11 JUL, 2025 | 07:07 PM மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள விடத்தல் தீவு கிராமத்தின் பன்னாட்டு மாநாடு வெள்ளிக்கிழமை (11) காலை 8.30 மணியளவில் மன்னார் நகர மண்டபத்தில் ஆரம்பமானது. குறித்த மாநாடு விடத்தல் தீவு கிராமத்தைச் சேர்ந்த துறைசார் வல்லுனர்கள். கல்விமான்கள் மற்றும் சமூக முன்னேற்றத்திற்காக பணியாற்றும் நபர்கள் ஒன்று சேரும் ஒரு அரிய சந்திப்பாக குறித்த நிகழ்வு வெள்ளிக்கிழமை (11) காலை ஆரம்பமானது. குறித்த நிகழ்வு 2 வது நாளாக சனிக்கிழமையும் (12) இடம்பெற உள்ளது. மேலும் இம் மாநாடு பொருளாதாரம் ,கல்வி, சுற்றுச்சூழல், சமயம், கலாச்சாரம், பண்பாடு மற்றும் விளையாட்டு போன்ற பல்வேறு துறைகளில் நடைபெறும் நிகழ்வுகளை ஆய்வு செய்து ஆவணப் படுத்துவதோடு இவ்விடயங்களில் பரஸ்பர புரிதலை ஏற்படுத்தி மக்களின் வாழ்வியலை மேம்படுத்தும் ஒரு முக்கிய அமர்வாக இடம்பெற்று வருகின்றது. மன்னாரில் அமைந்துள்ள விடத்தல்தீவு கிராமத்தின் சிறப்பும், பண்பாடும் மற்றும் கலை கலாசார பாரம்பரியமும் இம்மாநாட்டின் 2ஆம் நாள் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெறவுள்ளது. போரின் அனர்த்தங்களினால் உருக்குலைந்து போன விடத்தல் தீவு போன்ற கிராமங்களின் பொருளாதார, சமூக கலாசார அம்சங்களை மீள்கட்டியெழுப்புவதற்கும் ஆவணப்படுத்துவதற்குமான இம் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை (11) காலை 8.30 மணியளவில் முதல் நாள் நிகழ்வுகள் ஆரம்பமானது. இதன் போது விருந்தினர்கள் மன்னார் மாவட்டச் செயலகத்தில் இருந்து மாலை அணிவிக்கப் பட்டு வாத்திய இசையுடன் நகரசபை மண்டபம் நோக்கி அழைத்து வரப்பட்டனர். குறித்த முதல் நாள் நிகழ்வில் விருந்தினர்களாக வவுனியா பல்கலைக்கழக உப வேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் அருளம்பலம் அற்புதராஜா, வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், உள்ளடங்களாக அழைக்கப்பட்ட விருந்தினர்கள் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/219757
2 months 2 weeks ago
11 JUL, 2025 | 04:28 PM மக்கள் சுதேச மருத்துவத்தை ஆர்வத்துடன் தேடிச் செல்லும் போக்கு அதிகரித்து வருகின்றது. ஏனைய மருத்துவங்களால் பக்க விளைவுகள் ஏற்படுகின்றன என அவர்கள் நம்புவதன் காரணமாக சுதேச மருத்துவத்தை தேடிச் செல்கின்றனர். இந்த மாற்றத்தை சரிவரப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். கிளிநொச்சி மத்திய சித்த மருந்தகத்தின் புதிய கட்டடம் வடக்கு மாகாண ஆளுநரால் வெள்ளிக்கிழமை (11) கிளிநொச்சி மத்திய பேருந்து நிலையத்துக்கு அருகில் திறந்து வைக்கப்பட்டது. வடக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்களத்தின் ஆணையாளர் வைத்தியர் தி.சர்வானந்தன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், பிரதம விருந்தினராக ஆளுநர் கலந்துகொண்டதுடன், சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாண பிரதம செயலாளர் தனுஜா முருகேசன், கௌரவ விருந்தினராக வடக்கு மாகாண சுகாதார சுதேச மருத்துவ, சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு சேவைகள் அமைச்சின் செயலர் ப.ஜெயராணி, கிளிநொச்சி மாவட்டச் செயலர் சு.முரளிதரன் ஆகியோர் கலந்துகொண்டனர். ஆளுநர் தனது உரையில், திணைக்களங்களுக்கு சிறப்பான பௌதீக வளம் இருந்தால் மக்களுக்குத் தேவையான சேவையை வழங்க முடியும். நாங்கள் அரச சேவைக்கு இணைந்து கொண்ட 1991ஆம் ஆண்டிலிருந்து 2010 ஆம் ஆண்டு வரையிலான காலம் போருடனேயே இருந்தது. அந்தக் காலப் பகுதியில் பௌதீக வளங்கள் சிறப்பாக இல்லாவிட்டாலும் மக்களுக்கு திருப்திகரமான சேவையை நாம் வழங்கியிருந்தோம். எங்களுடைய சுகாதாரத் திணைக்களத்தின் கீழ் உள்ள மருத்துவமனைகளுக்கு மிகப் பெரிய கட்டடங்கள் மற்றும் நவீன உபகரணங்கள் கிடைக்கப்பெற்றன. ஆனால் மனித வளம் இல்லாமையால் அவை இயங்காமல் இருக்கின்றன. இவை எல்லாவற்றுக்கும் அப்பால் பௌதீக வளங்கள் இருந்தாலும் மக்களுக்கு தரமான – சிறப்பானதொரு சேவையை வழங்கினாலேயே அந்தத் திணைக்களங்களை நோக்கி மக்கள் வருவார்கள். மக்கள் எவ்வளவு விரும்பி திணைக்களங்களை நோக்கிச் செல்கின்றார்களோ அதில்தான் அந்தத் திணைக்களங்களின் வெற்றி தங்கியிருக்கின்றது. திணைக்களங்களும் மக்களுக்குச் சிறப்பான சேவையை வழங்கினால்தான், அந்தத் திணைக்களங்களுக்கு மேலதிக உதவிகளைச் செய்யவேண்டும் என்ற உந்துததல் எங்களுக்கும் ஏற்படும். எனவே மக்களுக்கு சிறப்பான சேவையை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு செயற்பட வேண்டும் என்பதுடன், நகரின் மத்தியில் திறக்கப்பட்டமையால் சித்த மருந்தகத்தை நோக்கி மக்கள் வருவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் என்பதையும் நினைவிலிருத்தி செயற்படவேண்டும் என்றார். வடக்கு மாகாண ஆளுநரால் வளாகச் சுற்றாடலில் மரக்கன்றுகளும் நடுகை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/219751
2 months 2 weeks ago
பிள்ளைகளின் தலையில் பூ வைக்க வேண்டும் என்ற ஆசையை நிறைவேற்றிய அம்மா.
2 months 2 weeks ago
🤣........................ நானே ஒரு பூனைக்குட்டி போல ஆகிவிட்டேன் அந்த விமானப் பயணத்தில்......... கனடாவிலிருந்து திரும்பி வந்தவுடன் ஓடிப் போய் குட்டிகளைத்தான் எட்டிப் பார்த்தோம். ஒரு குட்டியும் அங்கிருக்கவில்லை. அன்று நாள் முழுவதும் குட்டிகள் கண்களில் படவேயில்லை குட்டிகளை யாரோ பிடித்துக் கொண்டு போய்விட்டார்கள் போல என்று கவலையாகவும், பரவாயில்லை, அவைகள் எங்காவது வீடுகளில் வளரட்டும் என்று ஒரு ஆறுதலாகவும் இருந்தது. நேற்று மீண்டும் பார்க்கும் போது மூன்று குட்டிகள் நின்றன. ஒன்றைத்தான் காணவில்லை. பொதுவாக மனிதர்கள் இல்லாத பிரச்சனைகளை அவர்களே உருவாக்கி, அதற்குள் சுற்றிச் சுழல்வார்கள் என்று சொல்வார்கள். உருவாக்கிக் கொண்டிருக்கின்றேன் போல...............🤣.
2 months 2 weeks ago
பட மூலாதாரம்,BADRI NARAYANAN படக்குறிப்பு, பவபூரணி கட்டுரை தகவல் சேவியர் செல்வக்குமார் பிபிசி தமிழ் 8 மணி நேரங்களுக்கு முன்னர் கோவை தனியார் மருத்துவக் கல்லுாரியில் படித்து வந்த பட்டியலினத்தைச் சேர்ந்த மாணவி பவபூரணி கழிவறையில் உயிரிழந்து கிடந்தது பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளதாக அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர். இந்த மரணம் குறித்து தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் தாமாக முன் வந்து கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் கோவை மாநகர காவல் ஆணையர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பி, 5 நாட்களுக்குள் இதுபற்றி விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில், மருத்துவ மாணவி மூச்சுத்திணறலால் (asphyxia) உயிரிழந்திருப்பது பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளதாகவும், அதற்கான காரணம் குறித்து உடற்கூறு ஆய்வக முடிவுகள் வந்த பின்பே தெரியவருமென்றும் கோவை மாநகர காவல் ஆணையர் சரவணசுந்தர் பிபிசி தமிழிடம் தெரிவித்துள்ளார். மீண்டும் படிக்க வந்த பவபூரணி நாமக்கல் மாவட்டம் வகுரம்பட்டியைச் சேர்ந்த கந்தசாமியின் மகள் பவபூரணி (வயது 29), கோவை பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லுாரியில் மயக்க மருந்தியல் முதுகலை முதலாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த ஜூலை 6 ஞாயிற்றுக்கிழமையன்று காலையில், பவபூரணி இறந்துவிட்டதாக அவருடைய தந்தைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 5 ஆம் தேதி சனிக்கிழமையன்று இரவு, அறுவை சிகிச்சை தீவிர சிகிச்சைப் பிரிவில் பவபூரணி பணியாற்றி வந்ததாகவும், மறுநாள் காலை 6 மணியளவில் பணி மருத்துவர் அறையிலுள்ள கழிவறையில் இறந்து கிடந்ததாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. பவபூரணியின் தந்தை கந்தசாமி, கூலித்தொழிலாளி. தாயார் இறந்து விட்டார். பவபூரணி மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லுாரியில் கடந்த 2014–2020 ஆம் ஆண்டுகளில் எம்.பி.பி.எஸ். முடித்த பின்பு, அதே மருத்துவமனையில் தொடர்ந்து பணியாற்றி வந்துள்ளார். இந்த ஆண்டு நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று, கோவை பி.எஸ்.ஜி. கல்லுாரியில் சேர்ந்துள்ளார் என்று பவபூரணியின் உறவினர்கள் தகவல் தெரிவித்தனர். பவபூரணியின் மரணம் தொடர்பாக, பீளமேடு காவல் நிலையத்தில் மர்ம மரணம் என்ற பிரிவில் (CRPC 174) வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்த பின், குடும்பத்தினரிடம் உடல் ஒப்படைக்கப்பட்டு, அடக்கம் செய்யப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனையில் வெளிக்காயம் எதுவுமில்லை என்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், அவருடைய உடற்கூறு மாதிரிகள், ஆய்வகப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றும் பீளமேடு போலீசார் தெரிவித்தனர். இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய பீளமேடு காவல் நிலைய ஆய்வாளர் அர்ஜூன், ''கழிவறைக்குச் சென்ற அவர் வெகுநேரமாக வரவில்லை என்றதும் சக மாணவிகள் சென்று பார்த்துள்ளனர். கழிவறை கதவை உடைத்துத் திறந்தபோது, அவர் உள்ளே கீழே விழுந்து கிடந்துள்ளார். அவருக்கு அருகில் ஒரு சிரிஞ்சும், மருந்து பாட்டிலும் இருந்துள்ளது. அவரை வெளியே கொண்டு வந்து பரிசோதித்தபோது, அவர் இறந்துவிட்டது தெரியவந்துள்ளது. '' என்றார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,(சித்தரிப்புப் படம்) தற்கொலைக்கான முகாந்திரம் இல்லை - உறவினர்கள் பவபூரணியின் மரணம் குறித்து தங்களுக்கு தாமதமாக தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும், தாங்கள் வரும் முன்பே அவரின் நகைகள் உள்ளிட்ட உடைமைகளை காவல்துறையிடம் ஒப்படைத்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் கூறியதில் சந்தேகம் எழுவதாக அவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். பவபூரணி தற்கொலை செய்து கொண்டிருக்க வாய்ப்புள்ளதாக காவல்துறையினர் கூறும் நிலையில், அவர் தற்கொலை செய்து கொள்ள முகாந்திரமே இல்லை என்கின்றனர் பவபூரணியின் உறவினர்கள். பிபிசி தமிழிடம் பேசிய பவபூரணியின் சித்தப்பா கோவிந்தராஜ், ''எங்களுக்கு முதலில் தகவல் தெரிவித்த போது, பாத்ரூமில் வழுக்கி விழுந்து இறந்து விட்டதாகக் கூறினர். ஆனால் நேரில் சென்றபோது வெவ்வேறு விதமாகத் தகவல் தெரிவித்தனர். முதல் நாள் இரவு பவபூரணி, மருத்துவமனையில் பணியில் இருந்துள்ளார். அவருடன் கூடவே 2 பெண் டாக்டர்கள் இருந்துள்ளனர். அதிகாலை 3 மணியளவில் பவபூரணி, கழிவறை சென்றிருக்கிறார். அதன்பின் அவர் வரவேயில்லை. வேறு ஒரு நோயாளி இரவில் வந்ததால் அவர்கள் கவனிக்கவில்லை என்றும், 6 மணிக்குதான் கழிவறையில் சென்று பார்த்ததாகவும் கூறினர்.'' என்றார். மேலும் தொடர்ந்த அவர், ''கழிவறையை தட்டியபோது திறக்கவில்லை என்றும், பின்னாலுள்ள கண்ணாடி வழியாக பார்த்தபோது அவர் கீழே விழுந்து கிடந்ததாகவும், அதன் பின் கதவைத் தள்ளித் திறந்ததாகவும் உடனிருந்த பெண் டாக்டர்கள் கூறினர். ஆனால் காலை 8:30 மணிக்குதான் எங்கள் அண்ணனுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். நாங்கள் சென்றபோது அவர்கள் கூறிய தகவல்களில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. அதனால் சிசிடிவி கேமரா காட்சிகளைக் கேட்டோம். அவர்கள் காண்பிக்கவில்லை.'' என்றார். பட மூலாதாரம்,NCSC.NIC.IN படக்குறிப்பு,தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் இதுபற்றி விசாரித்து 5 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு கோவை மாவட்ட ஆட்சியர், மாநகர காவல் ஆணையர் ஆகியோருக்கு உத்தரவிட்டுள்ளது தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் சுயமாக முன் வந்து விசாரணை! அதன்பின் காவல்துறையினர் அவர்களின் மொபைலில் சில காட்சிகளைக் காண்பித்தனர் என்று கூறிய கோவிந்தராஜ், அவர்கள் காண்பித்த காட்சியில் பவபூரணியும், மற்றொரு பெண்ணும் நடந்து செல்வது மட்டும்தான் தெரிந்தது என்றும், கழிவறை கதவை உடைத்தது, அவரைத் தூக்கி வந்தது, பரிசோதித்தது போன்ற எந்தக் காட்சிகளையும் காண்பிக்கவில்லை என்றும் தெரிவித்தார். இதே கருத்தைத் தெரிவித்த பவபூரணியின் தம்பி பத்ரி நாராயணன், ''முதல் நாள் இரவு 7 மணிக்கு, 'நான் டூட்டியில் இருக்கிறேன். ரூமுக்கு வந்து பேசுறேன்' என்றார். அதுதான் அவர் என்னிடம் கடைசியாகப் பேசியது. அப்போது அவர் இருந்த மனநிலைக்கு, அவர் மறுநாள் காலையில் இப்படி இறந்திருப்பது பல விதமான சந்தேகங்களை எழுப்புகிறது.'' என்றார். பவபூரணியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சந்தேகம் எழுப்புவதற்கு முன்பே, இந்த மரணம் குறித்து பல்வேறு தரப்புக்கும் புகார் மனுக்கள் சென்றுள்ளன. பட்டியலினத்தைச் சேர்ந்த பவபூரணியின் மரணம் குறித்து, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் தாமாகவே முன் வந்து விசாரணை மேற்கொண்டு, இதுபற்றி விசாரித்து 5 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகர காவல் ஆணையர் ஆகியோருக்கு உத்தரவிட்டுள்ளது. பவபூரணியின் மரணம் குறித்து தமிழ்நாடு மருத்துவ மாணவர் சங்கம் வெளியிட்டுள்ள சமூக ஊடகப்பதிவில், ''மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், உரிய காரணம் என்னவென்று மருத்துவமனை நிர்வாகம் கூற மறுப்பதாகவும் பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர். மாணவியின் மர்மமான மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிந்து இதுபோல் இனியொரு மரணம் நடக்காத வகையில் அதற்கேற்ற உடனடி நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கம் வலியுறுத்துகிறது.'' என்று கூறியுள்ளது. இதுபற்றி பிபிசி தமிழிடம் பேசிய சங்கத்தின் நிர்வாகி மது, ''மருத்துவமனை நிர்வாகமும் தெளிவான காரணத்தைச் சொல்ல மறுக்கிறது. காவல்துறை சார்பிலும் சரியான தகவல்களைத் தர மறுக்கிறார்கள். அதனால்தான் இந்த விஷயம் பற்றி சமூக ஊடகத்தில் பகிரங்கமாக எங்கள் பதிவை வெளியிட்டோம். நியாயமான விசாரணை நடக்க வேண்டுமென்பதே எங்கள் கோரிக்கை.'' என்றார். பட மூலாதாரம்,GETTY IMAGES அதேபோன்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் ஆகிய அமைப்புகளும், கோவை மாவட்ட ஆட்சியரிடம் இதுதொடர்பாக மனு கொடுத்துள்ளன. இதுபோன்று உயர் கல்வி படிக்கும் பட்டியலினத்தைச் சேர்ந்த மாணவர்கள் தொடர்ந்து மரணிப்பது பற்றி விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டுமென்று அவர்கள் அந்த மனுக்களில் வலியுறுத்தியுள்ளனர். பிபிசி தமிழிடம் பேசிய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகி தினேஷ் ராஜா, ''எய்ம்ஸ் உட்பட பல்வேறு மருத்துவக் கல்லுாரிகளிலும் பட்டியலின மாணவர்கள், மாணவிகள் மர்மமான முறையில் இறப்பது தொடர்ந்து வருகிறது. இந்த மரணத்திலும் பல சந்தேகங்கள் எழுந்துள்ளன. இது இயற்கை மரணமா அல்லது தற்கொலையா என்பதை காவல்துறை நியாயமான விசாரணையில் உறுதி செய்யவேண்டும். முக்கியமாக பிரேத பரிசோதனை அறிக்கையை வெளிப்படையாக மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.'' என்றார். தனது சகோதரியின் மரணத்தில் தங்களுக்கு பல்வேறு சந்தேகங்கள் இருப்பதால், அதில் தேசிய மனித உரிமை ஆணையம் தலையிட வேண்டுமென்று மெயில் அனுப்பியிருப்பதாகத் தெரிவித்தார் பவபூரணியின் தம்பி பத்ரி நாராயணன். ''எனது அக்கா இரவு ஒன்றே முக்கால் மணிக்கு வார்டிலிருந்து வெளியே வந்ததாக சிசிடிவி காட்சியில் தெரிகிறது. அதன்பின் காலை 6 மணி வரை அந்த கழிவறையை யாருமே பயன்படுத்தவில்லை என்பது பல சந்தேகங்களை எழுப்புகிறது. அது டாக்டருக்கான தனி அறை என்றனர். ஆனால் வேறு சில படுக்கைகளும் அதில் இருக்கின்றன. பணியில் இருக்கும் டாக்டர் பல மணி நேரமாக வராமல் இருப்பதை ஏன் யாருமே சென்று பார்க்கவில்லை என்ற கேள்வியும் எழுகிறது.'' என்று பிபிசி தமிழிடம் தெரிவித்தார் பத்ரி நாராயணன். தனது அக்கா விழுந்து கிடந்த கழிவறையை திறந்து பார்த்த சக மாணவியான மற்றொரு பெண் டாக்டருக்கும், தன்னுடைய அக்காவுக்கும் இடையில் வாக்குவாதம் நடந்ததாக அங்கிருப்பவர்கள் கூறியதாகத் தெரிவிக்கிறார் பத்ரி நாராயணன். மற்ற மாணவர்களுக்கு இருப்பது போல தனது அக்காவுக்கும் நிர்ணயிக்கப்பட்டதை விட 3 மடங்கு அதிகமான பணி அழுத்தம் இருந்த விஷயமும் தனக்குத் தெரியுமென்று கூறினார். பவபூரணி யாரையும் காதலிப்பதாகவோ, திருமணம் செய்ய விருப்பமுள்ளதாகவோ தங்களிடம் எந்த விஷயத்தையும் பகிர்ந்தது இல்லை என்று அவரது கோவிந்தராஜ் கூறுகிறார் பவபூரணியின் மரணம் குறித்து பல்வேறு தரப்பிலும் எழுப்பப்படும் சந்தேகங்கள் குறித்து, கோவை பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லுாரி நிர்வாகத்திடம் கருத்து கேட்க பிபிசி தமிழ் முயன்றது. இதுகுறித்து நிர்வாகத்தரப்பு பதிலை கேட்டுச் சொல்வதாக மக்கள் தொடர்பு அலுவலர் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் எந்த பதிலும் தரப்படவில்லை. இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய கோவை மாநகர காவல் ஆணையர் சரவணசுந்தர், ''மாணவி விழுந்து கிடந்த கழிவறையில் அவருக்கு அருகில் இருந்த சிரிஞ்ச்சில் இருந்த மருந்தை ஆய்வுக்கு அனுப்பியுள்ளோம். பிரேத பரிசோதனையில், முதற்கட்டமாக பவபூரணியின் மரணத்துக்கு மூச்சுத்திணறலே (asphyxia) காரணமென்று தெரியவந்துள்ளது. ஆனால் மூச்சுத்திணறலுக்கு ரத்த அழுத்தம் போன்ற உடல்ரீதியான பாதிப்பு காரணமா அல்லது அவர் எடுத்த ஊசி மருந்து காரணமா என்பது தெரியவில்லை.'' என்றார். பவபூரணியின் இதயம், நுரையீரல், மண்ணீரல் உள்ளிட்ட பல்வேறு உடல் பாகங்களின் மாதிரிகளும் ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவித்த காவல் ஆணையர் சரவணசுந்தர், அது வருவதற்கு சில வாரங்களாகலாம் என்பதால் அவற்றின் முடிவு வரும் வரை இறப்புக்கான காரணம் குறித்து எந்த முடிவுக்கும் வரமுடியாது என்றும் கூறினார். - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/clyz1j5jmd2o
2 months 2 weeks ago
2 months 2 weeks ago
11 JUL, 2025 | 02:56 PM கிரிந்த மீன்பிடி துறைமுகத்தில் மணல் அகழ்வும் திட்டத்தை கொரிய நிறுவனத்திற்கு ஒப்படைத்து அரசாங்கத்திற்கு 2.63 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாக நஷ்டத்தை ஏற்படுத்தியதாக கூறப்படும் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனுவெல இன்று வெள்ளிக்கிழமை (11) உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கு இன்று கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனுவெல முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது, இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் நீதிமன்றில் முன்வைத்த கோரிக்கைகளை கருத்தில் கொண்ட நீதிவான், ராஜித சேனாரத்னவை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பில் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/219735
Checked
Sat, 09/27/2025 - 09:23
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed