புதிய பதிவுகள்2

100 வயதை கடந்த கம்பீரம் - ஆசியாவின் மிகவும் வயதான யானை ‘வத்சலா’ மரணம்!

2 months 2 weeks ago
09 JUL, 2025 | 12:41 PM போபால்: ஆசியாவின் மிக வயதான யானையான 'வத்சலா', நேற்று (செவ்வாய்க்கிழமை) மத்தியப் பிரதேசத்தில் உள்ள பன்னா புலிகள் காப்பகத்தில் உயிரிழந்தது. அந்த யானைக்கு 100 வயதுக்கு மேல் இருக்கும் என மதிப்பிடப்படுகிறது. ஆசியாவின் மிகவும் வயதான பெண் யானையான ‘வத்சலா’ பல ஆண்டுகளாக, பன்னா புலிகள் காப்பகத்தில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் அடையாளமாக இருந்தது. மிகவும் வயதான யானையாக இருந்ததால், அது காப்பகத்தில் உள்ள மற்ற யானைகள் குழு அனைத்தையும் வழிநடத்தியது. காப்பகத்தில் உள்ள மற்ற பெண் யானைகள் குட்டிகளைப் ஈன்றெடுக்கும் போது, ‘வத்சலா’ ஒரு பாட்டி போல செயல்பட்டு குட்டிகளை கவனித்துக்கொண்டது என பன்னா புலிகள் காப்பகம் தெரிவித்துள்ளது. வத்சலா யானையின் முன் கால்களின் நகங்களில் ஏற்பட்ட காயங்கள் காரணமாக, காப்புக்காட்டின் ஹினௌடா பகுதியில் உள்ள கைரையன் வடிகால் அருகே எழுந்து நடக்க இயலாமல் படுத்துக் கொண்டது. வனத்துறை ஊழியர்கள் இந்த யானையை தூக்க நிறைய முயற்சிகள் மேற்கொண்டனர். ஆனால் வத்சலா யானை நேற்று பிற்பகலில் உயிரிழந்தது. வயது முதிர்வு காரணமாக, சமீப காலமாக இந்த யானை பார்வையை இழந்ததால், அதனால் நீண்ட தூரம் நடக்க முடியவில்லை என புலிகள் காப்பகம் தெரிவித்தது. வத்சலா யானைக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, ம.பி முதல்வர் மோகன் யாதவ் தனது எக்ஸ் பதிவில், "'வத்சலாவின்' நூற்றாண்டு கால தோழமை முடிவுக்கு வந்தது. இன்று (நேற்று) மதியம், 'வத்சலா' பன்னா புலிகள் காப்பகத்தில் தனது இறுதி மூச்சை நிறுத்திக்கொண்டது. அது வெறும் யானை அல்ல; அவள் நம் காடுகளின் அமைதியான பாதுகாவலர், தலைமுறைகளுக்கு ஒரு தோழி, மத்தியப் பிரதேசத்தின் உணர்ச்சிகளின் சின்னம். புலிகள் காப்பகத்தின் இந்த அன்பான உறுப்பினர் தனது கண்களில் அனுபவங்களின் கடலையும், கைகளில் அரவணைப்பையும் சுமந்து வாழ்ந்தார். வத்சலா இன்று நம்மிடையே இல்லை என்றாலும், அவளுடைய நினைவுகள் நம் மண்ணிலும் இதயங்களிலும் என்றென்றும் வாழும். 'வத்சலா'வுக்கு பணிவான அஞ்சலிகள்!" என்று கூறினார். https://www.virakesari.lk/article/219563

போராட்டக்காரர்களை கொல்ல உத்தரவிட்ட ஷேக் ஹசீனா – வெளியான ஆடியோ பதிவு கூறுவது என்ன?

2 months 2 weeks ago
போராட்டக்காரர்களை கொல்ல உத்தரவிட்ட ஷேக் ஹசீனா – வெளியான ஆடியோ பதிவு கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கடந்த ஆண்டு ஜூலை 25ஆம் தேதி, வங்கதேசத்தில் மாணவர்கள் சூரையாடியதாகக் கூறப்பட்ட மெட்ரோ ரயில் நிலையத்தை ஷேக் ஹசீனா பார்வையிட்டபோது... கட்டுரை தகவல் கிறிஸ்டோபர் கில்ஸ், ரித்தி ஜா, ரஃபித் ஹுசைன் & தாரேகுஸ்ஸமன் ஷிமுல் பிபிசி ஐ புலனாய்வு பிரிவு & பிபிசி வங்க மொழி சேவை 10 ஜூலை 2025, 05:27 GMT கடந்த ஆண்டு வங்கதேசத்தில் நடந்த மாணவர்கள் போராட்டத்திற்கு எதிராக கொடிய அடக்குமுறையைக் கையாள அப்போதைய பிரதமர் ஷேக் ஹசீனா அனுமதி அளித்ததாக, அவரது தொலைபேசி அழைப்புகளில் ஒன்றின் ஆடியோ பதிவு காட்டுகிறது. இந்த ஆடியோ பதிவு பிபிசி ஐ குழுவினரால் சரிபார்க்கப்பட்டது. கடந்த மார்ச் மாதம் இணையத்தில் கசிந்த இந்த ஆடியோவில், போராட்டக்காரர்களுக்கு எதிராக "கொடிய ஆயுதங்களைப் பயன்படுத்த" தனது பாதுகாப்புப் படைகளுக்கு அதிகாரம் அளித்திருப்பதாகவும், "அவர்களை எங்கு கண்டாலும் பாதுகாப்புப் படையினர் சுடுவார்கள்" என்றும் ஹசீனா கூறுகிறார். இந்த ஆடியோ பதிவை வங்கதேசத்தில் உள்ள வழக்கறிஞர்கள் ஷேக் ஹசீனாவுக்கு எதிரான முக்கிய ஆதாரமாகப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர். அவர் வங்கதேசத்தில் இல்லையென்றாலும், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார். கடந்த ஆண்டு கோடையில் ஏற்பட்ட அரசுக்கு எதிரான போராட்டத்தில் 1,400 பேர் வரை உயிரிழந்ததாக ஐ.நா. புலனாய்வாளார்கள் தெரிவிக்கின்றனர். இந்தியாவுக்கு தப்பிச் சென்ற ஷேக் ஹசீனா மட்டுமின்றி அவரது கட்சியும், ஹசீனாவுக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளையும் நிராகரிக்கின்றனர். ஹசீனாவின் அவாமி லீக் கட்சியின் செய்தித் தொடர்பாளர், "அவர் சட்டவிரோதமாக எதையும் செய்யத் திட்டமிட்டதாகவோ அல்லது கடுமையாக பதிலளித்ததாகவோ" ஆடியோவில் காட்டப்படவில்லை என்று கூறி, குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். ஷேக் ஹசீனாவின் ஆடியோ பதிவு குறித்த பின்னணி கடந்த ஆண்டு கோடையில் அரசாங்கத்தை எதிர்த்து வீதிகளில் போராடிய போராட்டக்காரர்களைச் சுடுவதற்கு அவர் நேரடியாக அனுமதி அளித்தமைக்கான மிக முக்கியமான சான்றாக, ஷேக் ஹசீனா அடையாளம் தெரியாத மூத்த அரசு அதிகாரி ஒருவருடன் பேசியதாக வெளியான ஆடியோ பதிவு இருக்கிறது. கடந்த 1971ஆம் ஆண்டு சுதந்திரப் போரில் போராடியவர்களின் உறவினர்களுக்கான அரசுப்பணி இட ஒதுக்கீட்டிற்கு எதிராகத் தொடங்கிய போராட்டங்கள், 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த ஹசீனாவை பதவியில் இருந்து நீக்கிய ஒரு வெகுஜன இயக்கமாக உருவெடுத்தது. 1971 போருக்குப் பிறகு வங்கதேசம் கண்ட மிக மோசமான வன்முறைப் போராட்டம் இது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதியன்று, டாக்காவில் உள்ள ஷேக் ஹசீனாவின் வீட்டை மக்கள் கூட்டம் முற்றுகையிட்டது. அதற்கு முன்பு, அவர் ஹெலிகாப்டரில் தப்பினார். அன்றைய தினத்தில், மிக மோசமான வன்முறைச் சம்பவங்களில் சில நிகழ்ந்தன. பிபிசி உலக சேவை மேற்கொண்ட விசாரணையில், வங்கதேச தலைநகரில் போராட்டக்காரர்களை போலீசார் கொன்றது பற்றிய புதிய தகவல்கலைக் கண்டறிந்தது. இதில், முன்னர் அறியப்பட்டதைவிட அதிக அளவிலான மக்கள் உயிரிழந்துள்ளனர் என்ற தகவலும் அடங்கும். தற்போது கசிந்துள்ள ஆடியோ குறித்த தகவலறிந்த நபர் ஒருவர் பிபிசியிடம் பேசியபோது, அந்த உரையாடல் ஜூலை 18ஆம் தேதி நடந்ததாகவும், அதன்போது ஹசீனா டாக்காவில் உள்ள அவரது இல்லத்தில் இருந்ததாகவும் கூறினார். வங்கதேசத்தின் போராட்டத்தில் அதுவொரு முக்கியமான தருணமாக இருந்தது. போராட்டக்காரர்களை போலீசார் கொல்லும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டன. அதையடுத்து, பாதுகாப்பு அதிகாரிகள் மீது பொதுமக்கள் சீற்றம் கொண்டு எதிர்வினையாற்றினர். ஹசீனாவின் தொலைபேசி அழைப்புக்குப் பிறகு சில நாட்களில், டாக்கா முழுவதும் ராணுவ பாணியிலான துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டதாக பிபிசி பார்த்த போலீஸ் ஆவணங்கள் தெரிவிக்கின்றன. ஆடியோ உண்மை என்பதை உறுதி செய்த பிபிசி பட மூலாதாரம்,AFP பிபிசி ஆய்வு செய்த ஆடியோ பதிவு, ஷேக் ஹசீனா சம்பந்தப்பட்ட பல தொலைபேசி அழைப்புகளில் ஒன்று. இந்த அழைப்புகள், தகவல் தொடர்புகளைச் சரிபார்த்துக் கண்காணிக்கும் வங்கதேசத்தில் உள்ள ஓர் அரசு நிறுவனமான தேசிய தொலைத்தொடர்பு கண்காணிப்பு மையத்தால் பதிவு செய்யப்பட்டன. இந்தத் தொலைபேசி அழைப்பின் ஆடியோ இந்த ஆண்டு மார்ச் மாத தொடக்கத்தில் கசிந்தது. ஆனால், யாரால் இது இணையத்தில் கசிந்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை. போராட்டங்களுக்குப் பிறகு, ஹசீனாவின் தொலைபேசி அழைப்புகளின் ஏராளமான பதிவுகள் இணையத்தில் வெளியாகியுள்ளன. அவற்றில் பல சரிபார்க்கப்படவில்லை. ஜூலை 18ஆம் தேதியன்று பதிவான தொலைபேசி உரையாடல், ஷேக் ஹசீனாவின் குரல் தொடர்பான அறியப்பட்ட ஆடியோ பதிவுகளுடன் ஒப்பிட்டு சரிபார்க்கப்பட்டது. வங்கதேச காவல்துறையின் குற்றப் புலனாய்வுத் துறை, அந்தப் பதிவில் உள்ள குரல் அவரது குரலுடன் ஒத்துப் போவதை உறுதி செய்தது. ஆடியோ தடயவியல் நிபுணர்களான இயர்ஷாட்டுடன் பதிவை பகிர்ந்துகொண்டதன் மூலம் பிபிசி தனது சுயாதீன பகுப்பாய்வை மேற்கொண்டது. அவர்கள் இந்த உரையாடல் திருத்தப்பட்டதற்கோ அல்லது மாற்றப்பட்டதற்கோ எந்த ஆதாரமும் இல்லை என்றும், அது செயற்கையாக உருவாக்கப்பட்டிருக்க வாய்ப்பில்லை என்றும் கூறினர். பட மூலாதாரம்,GETTY IMAGES இந்த ஆடியோ பதிவு ஓர் அறையில், ஸ்பீக்கரில் பேசப்பட்டிருக்கலாம் என்று இயர்ஷாட் நிபுணர்கள் கூறினர். தனித்துவமான தொலைபேசி ஒலி அதிர்வெண்கள் மற்றும் பின்னணி இரைச்சல் காரணமாக அவர்களால் அதை அறிய முடிந்தது. ஆடியோ பதிவு முழுவதும் இருந்த மின்சார நெட்வொர்க் அதிர்வெண் ஒன்றை இயர்ஷாட் நிபுணர்கள் அடையாளம் கண்டனர். உரையாடலைப் பதிவு செய்யும் சாதனங்கள் மின் சாதனங்களில் இருந்து சிக்னல்களை எடுக்கும்போது இது நிகழ்கிறது. இது அந்த ஆடியோ பதிவு உண்மையான மற்றும் திருத்தப்படவில்லை என்பதற்கான அறிகுறியாக உள்ளது. ஷேக் ஹசீனாவின் உரையாடலில் உள்ள, ரிதம், ஒலிப்பு முறை, சுவாச ஒலிகள் ஆகியவற்றைப் பகுப்பாய்வு செய்து, நிலையான இரைச்சல்களை அடையாளம் கண்டதன் மூலம், ஆடியோ செயற்கையாக மாற்றப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று இயர்ஷாட் நிபுணர்கள் கண்டறிந்தனர். "இந்த ஆடியோ பதிவுகள், ஷேக் ஹசீனாவின் பங்கை நிறுவுவதற்கு மிக முக்கியமானவை. அவை தெளிவாக உள்ளன, முறையாக அவரால் நடவடிக்கைகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன." என்று பிரிட்டிஷ் சர்வதேச மனித உரிமைகள் வழக்கறிஞர் டோபி கேட்மேன் பிபிசியிடம் கூறினார். ஷேக் ஹசீனா மற்றும் பிறருக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றமான வங்கதேசத்தின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்திற்கு கேட்மேன் ஆலோசனை வழங்கி வருகிறார். அவாமி லீக் செய்தித் தொடர்பாளர் ஒருவர் இதுகுறித்துப் பேசுகையில், "பிபிசி குறிப்பிடும் ஆடியோ பதிவு உண்மையானதா என்பதை எங்களால் உறுதிப்படுத்த முடியாது" என்று தெரிவித்தார். வங்கதேச வரலாற்றில் மிகக் கொடூரமான போலீஸ் வன்முறை பட மூலாதாரம்,GETTY IMAGES ஷேக் ஹசீனாவுடன், முன்னாள் அரசு மற்றும் காவல்துறை அதிகாரிகளும் போராட்டக்காரர்களின் கொலைகளில் தொடர்புபடுத்தப்பட்டுள்ளனர். மொத்தம் 203 பேர் மீது சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர்களில் 73 பேர் காவலில் உள்ளனர். பிபிசி ஐ புலனாய்வுக் குழு, 36 நாட்களில் போராட்டக்காரர்களுக்கு எதிரான காவல்துறை தாக்குதல்களை விவரிக்கும் நூற்றுக்கணக்கான வீடியோக்கள், புகைப்படங்கள் மற்றும் ஆவணங்களைப் பகுப்பாய்வு செய்து சரிபார்த்தது. தலைநகர் டாக்காவின் பரபரப்பான ஜத்ராபரியில் ஆகஸ்ட் 5ஆம் தேதியன்று நடந்த ஒரு சம்பவத்தில், குறைந்தது 52 பேர் போலீசாரால் கொல்லப்பட்டதாக விசாரணையில் கண்டறியப்பட்டது. இது வங்கதேசத்தின் வரலாற்றில் மிக மோசமான போலீஸ் வன்முறைச் சம்பவங்களில் ஒன்று. அந்த நேரத்தில் வெளியிடப்பட்ட ஆரம்பக்கட்ட அறிக்கைகள் ஜத்ராபரியில் அன்று 30 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவித்தன. இந்தப் படுகொலை எவ்வாறு தொடங்கியது, முடிந்தது என்பது பற்றிய புதிய விவரங்களை பிபிசி புலனாய்வு வெளிப்படுத்தியது. நேரில் கண்ட சாட்சிகள் விவரித்த காட்சிகள், சிசிடிவி பதிவுகள், டிரோன் படங்களைச் சேகரித்ததன் மூலம், போராட்டக்காரர்களிடம் இருந்து போலீசாரை பிரித்துவிட்ட ராணுவ வீரர்கள் அந்த இடத்தை விட்டு வெளியேறிய உடனே போராட்டக்காரர்கள் மீது போலீசார் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தியதை பிபிசி ஐ புலனாய்வு உறுதி செய்தது. சுமார் 30 நிமிடங்களுக்கும் மேலாக, சந்துகள், நெடுஞ்சாலையில் தப்பிச் செல்ல முயன்ற போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதற்கு முன்பு காவல்துறை அதிகாரிகள் அருகிலுள்ள ராணுவ முகாமில் தஞ்சம் புகுந்தனர். சில மணிநேரங்களுக்குப் பிறகு போராட்டக்காரர்கள் பதிலடி கொடுத்ததில், குறைந்தது ஆறு காவல்துறை அதிகாரிகள் கொல்லப்பட்டனர். ஜத்ராபரி காவல் நிலையத்திற்குத் தீ வைக்கப்பட்டது. கடந்த ஆண்டு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நடந்த வன்முறைச் சம்வபங்களில் ஈடுபட்டதற்காக 60 காவல்துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டதாக வங்கதேச காவல்துறையின் செய்தித் தொடர்பாளர் பிபிசியிடம் தெரிவித்தார். "அப்போதைய காவல்துறையின் சில அதிகாரிகள் அதிகப்படியான பலத்தைப் பயன்படுத்தியதால் வருந்தத்தக்க சம்பவங்கள் நடந்தன. வங்கதேச காவல்துறை முழுமையான, பாரபட்சமற்ற விசாரணைகளைத் தொடங்கியுள்ளது" என்று காவல்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். ஷேக் ஹசீனா மீதான குற்றவியல் விசாரணை பட மூலாதாரம்,AFP படக்குறிப்பு, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அரசாங்க எதிர்ப்புப் போராட்டக்காரர்கள் தீ வைத்ததைத் தொடர்ந்து, எரிந்த நிலையில் இருந்த ஜத்ராபரி காவல் நிலையத்தைக் காண மக்கள் திரண்டனர் ஷேக் ஹசீனாவின் விசாரணை கடந்த மாதம் தொடங்கியது. மனித குலத்திற்கு எதிரான குற்றங்களைச் செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதில் பொதுமக்களுக்கு எதிரான வன்முறையை ஏற்படுத்துதல், தூண்டுதல், சதித்திட்டம் தீட்டுதல், படுகொலைகளைத் தடுக்கத் தவறியது ஆகிய குற்றச்சாட்டுகள் அடங்கும். ஷேக் ஹசீனாவை நாடு கடத்த வேண்டும் என்ற வங்கதேசத்தின் கோரிக்கையை இந்தியா இதுவரை நிறைவேற்றவில்லை. விசாரணைக்காக ஹசீனா வங்கதேசத்திற்குத் திரும்புவது சாத்தியமில்லை என்று டோபி காட்மேன் கூறுகிறார். போராட்டக்காரர்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்ட பாதுகாப்புப் படையின் செயல்களுக்கு அதன் தலைவர்கள் பொறுப்பல்ல என்று அவாமி லீக் கூறுகிறது. பிரதமர் உள்பட அதன் உயர்மட்டத் தலைவர்கள் சிலர் மக்கள் கூட்டத்திற்கு எதிராக கொடிய பலத்தைப் பயன்படுத்துவதில் தனிப்பட்ட முறையில் ஈடுபட்டதாகவோ அல்லது அதற்கு உத்தரவிட்டதாகவோ கூறப்படும் கூற்றுகளை அவாமி லீக் செய்தித் தொடர்பாளர் ஒருவர் முற்றிலும் மறுத்துள்ளார். "மூத்த அரசு அதிகாரிகளால் எடுக்கப்பட்ட முடிவுகள் நல்லெண்ணத்தில் எடுக்கப்பட்டவை மற்றும் உயிரிழப்பைக் குறைக்கும் நோக்கம் கொண்டவை," என்றும் அவர் தெரிவித்தார். ஷேக் ஹசீனா மற்றும் அவரது அரசின் நடவடிக்கைகள் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களாக இருக்கலாம் என்று நம்புவதற்கு நியாயமான காரணங்களைக் கண்டறிந்ததாகக் கூறும் ஐ.நா புலனாய்வாளர்களின் கண்டுபிடிப்புகளை அவாமி லீக் கட்சி நிராகரித்துள்ளது. இதுகுறித்து கருத்து கேட்க வங்கதேச ராணுவத்தை பிபிசி அணுகியது. ஆனால், எந்தப் பதிலும் கிடைக்கவில்லை. ஷேக் ஹசீனாவின் வீழ்ச்சிக்குப் பிறகு, நோபல் பரிசு வென்ற முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசாங்கம் வங்கதேசத்தை நிர்வகித்து வருகிறது. அவரது அரசாங்கம் தேசிய அளவிலான தேர்தலுக்குத் தயாராகி வருகிறது. அவாமி லீக் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கப்படுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c8xv9vjzllvo

மக்கள் போராட்டத்தால்; வங்கதேசத்தை விட்டு வெளியேறிய ஷேக் ஹசீனா எங்கே?

01.11.1990 முந்திரிகைக்குளம் சிறிலங்காப் படைமுகாம் தாக்குதல் !

2 months 2 weeks ago
01.11.1990 மணலாறு முந்திரிகைக்குளத்தில் அமைக்கப்பட்ட சிறிலங்காப்படைமுகாம் தாக்கியழிக்கப்பட்ட சம்பவம் தொடர்பான ஒரு பார்வை…. தமிழீழத்தின்.இதயபூமியான மணலாற்றில் தமிழர்களின் பாரம்பரிய நிலப்பரப்பிலிருந்து தமிழர்களை விரட்டிவிட்டு அதாவது வடக்குகிழக்கு மாகாணங்களைப் பிரிப்பதற்காக தமிழர்களின் தொடர் நிலப்பரப்பினைச் சிதைப்பதிற்கான நோக்கத்திற்காகவும் சிங்களபௌத்த பேரினவாதத்தின் திட்டமிட்ட சிங்கள குடியேற்றத்தை அதாவது சிங்கள மக்களைக் குடியேற்றுவதற்காகவும் அச்சிங்கள மக்களைப் பாதுகாப்பதற்காகவும் அமைக்கப்பட்ட பல மினிமுகாம்களில் மணலாறு முந்திரிகைக்குள மினிமுகாமும் ஒன்றாகும்.இம்மினிமுகாமில் நூற்றிற்க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் இருந்தனர்.1990 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இப்பகுதியில் பெருமளவான சிங்களமக்களை குடியேற்றுவதற்கான முயற்சிகளில் இம்முகாம் படையினர் தீவிரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். இத்தகவல்களை மணலாற்று வேவு அணிகள் தளபதி லெப்.கேணல்.அன்பு அவர்களிடம் கொடுத்தனர்.வேவுத்தரவுகளை தீவிரமாக ஆராய்ந்த தளபதி அன்பு அவர்களும் தளபதி மேஐர். வீமன் அவர்களும்நிலமையின் விபரீதத்தை உணரந்து இம்முகாமை தாக்கி அழிக்கவேண்டும். எனமுடிவெடுத்து தலைவர் அவர்களிடம் இத்தகவல்கள் அனைத்தையும் தெரிவித்தனர்.அனைத்துத்தகவல்களையும் அதன் சாதகபாதக நிலைகளையும் எவ்வாறு தாக்குதல் நடாத்தவேண்டும் எனவும் அத்தாக்குதலின்போது பொதுமக்களுக்குச் சிறுசேதமேற்படக்கூடாதெனவும் கூறிய தலைவர் அவர்கள்.இம்முகாம் கட்டாயம் அழிக்கப்படவேண்டும் எனக் கூறியதோடு அதற்கான ஆலோசனைகளையும் வழங்கி தளபதிகளை வழியனுப்பிவைத்தார். தலைவர் அவர்கள் கொடுத்த ஆலோசனைகளுக்கமைவாகவும் தலைவர் அவர்களின் சிந்தனைக்கேற்ப கடும்பயிற்சி இலகுவான சண்டை என்றதன் அடிப்படையில் வேவுநடவடிக்கைகளில்பெறப்பட்ட தகவல்களுக்கேற்ப தாக்குதலுக்கான பயிற்சிகள் தொடங்கப்பட்டன. தாக்குதலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட போராளிகளுக்கு மேஐர் செங்கோல் அவர்கள் தலைமையிலான போராளிகளால் முறையே நிசாம் வெட்டை மற்றும் ஐீவன் ஆகிய முகாம்களில் பயிற்சிகள் நடைபெற்றன.பயிற்சிகள் முடிவடைந்து தாக்குதற் திட்டம் தளபதி அன்பு அவர்களால் விளங்கப்படுத்தப்பட்டதுடன் தலைவர் அவர்களால் கொடுக்கப்பட்ட அறிவுரைகளையும் அன்பு அவர்கள் தெளிவாகக் கூறினார். தாக்குதலுக்கான இருநூறுபேர் கொண்ட அணிகள் தாயர்படுத்தப்பட்டன.இவ்வணிகள் கொக்குத்தொடுவாயிலிருந்து படகுகளில் சென்று கொக்கிளாய் கடல்நீரேரியைக்கடந்து தரையிறங்கி அங்கிருந்து நடந்துசென்று 01.11.1990அன்று அதிகாலை ஒரு மணிவரை முந்திரிகைக்குளமுகாமருகில் காத்திருந்து. அதிகாலை ஒருமணியளவில் மணலாறு முந்திரிகைக்குளத்தில் அமைக்கப்பட்ட இலங்கைப்படையின் முகாம் மீது ஒரு வெற்றிகர அதிரடித்தாக்குதலைத் தொடுத்து வெற்றிகொண்டனர்.குறிப்பிட்ட சிலநிமிடத்தில் முகாம் புலிகளின் பூரணகட்டுப்பாட்டிற்க்குள் வந்தது. தொடர்ந்து அந்தமுகாமை தக்கவைத்திருந்த போராளிகள் படைமுகாமை முற்றுமுழுதாக அழித்தொழித்துவிட்டு கைப்பற்றிய ஆயுதங்களுடன் தளம் திரும்பினார்கள்.இதன் பின்னும் இதனை அண்டியபகுதிகளில் பல்வேறு தாக்குதல்கள் விடுதலைப்புலிகளால் படையினர் மீதுமேற்கொள்ளப்பட்டதால் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம் தடுத்து நிறுத்தப்பட்டது. இவ்வெற்றிகர அதிரடித் தாக்குதல்களுக்கான வேவுத்தகவல்களை மேஐர் .ரம்போ கப்டன்.விமல்ராஜ் தலைமையிலான போராளிகளால் சொல்லமுடியாத அர்ப்பணிப்புக்களுடன் சிறுகச்சிறுகச் சேகரித்துக்கொடுத்தனர். படைமுகாமின் தாக்ககுதல்களை களத்தில் நின்று மேஐர்.சங்கர் அவர்கள் வழிநடாத்த களமருத்துவத்தை கப்டன் இளங்கோ அவர்கள் தலைமையிலான போராளிகள் செவ்வனவே செய்தனர். இவ் அனைத்து நடவடிக்கைகளையும் ஒருங்கினைத்து முல்லை மணலாறு மாவட்டத் தளபதி(1991ம் ஆண்டு முற்பகுதியின் பின்னர் தான் இயக்கத்தின் வளர்ச்சியும் அதன் நிர்வாககட்டமைப்புக்காகவுமாக ஒருமாவட்டத்தில் சிறப்புத்தளபதி, தளபதி, துணைத்தளபதி எனும் கட்டமைப்பு வந்தது.) அன்பு அவர்கள் வழிநடாத்தியிருந்தார். இவ்வெற்றிகரத்தாக்குதலை களத்தில் நின்று வழிநடாத்திய.. மேஜர் சங்கர் (அரியரட்ணம் லோகிதன் தம்பலகாமம், திருகோணமலை.) அவர்களுடன் 2ம்லெப்ரினன்.மதுவன் ( 2ம் லெப்டினன்ட் மதுவன் தவராஜசிங்கம் விஜயசேகரன் மீசாலை தெற்கு, சாவகச்சேரி, யாழ்ப்பாணம்.) வீரவேங்கை .முசோலினி (வீரவேங்கை முசோலினி ஆபிரகாம் தயாசீலன் 7ம் வட்டாரம், கட்டைபறிச்சான், திருகோணமலை.) ஆகியோர் வீரச்சாவடைந்தனர். நீண்டகாலமாக 2ம் லெப்.மதுவனைப் பார்க்காத பெற்றோர் மதுவனைப் பார்பதற்காக மணலாற்று முகாமிற்க்கு வந்திருந்தனர். ஆனால் வெற்றிச்சமரில் வீரச்சாவடைந்த மகனின் வித்துடலுடனே மதுவனின் பெற்றோர் வீடுதிரும்பினர்.இப்படியான பல்வேறு அர்பணிப்புக்கள் தியாகங்கள் நிறைந்த போராட்டமாக தமிழீழவிடுதலைப்போராட்டம் திகழ்கிறது. கிட்டத்தட்ட முப்பதான்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற இச்சம்பவமானது அன்று இக்களமுனையில் நின்றவர்களால் மறக்கமுடியாத நிகழ்வாக இன்றும் அப்போராளிகளால் நினைவுகூரப்படுகிறது. -அக்களமுனையில் நின்று இன்று புலம்பெயர்ந்து வாழ்பவர்களின் உள்ளத்திலிருந்து…… https://irruppu.com/2021/01/20/01-11-1990-%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b1%e0%af%81-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81/

ஒட்டிசம் பாதிப்புள்ள பிள்ளைகளுக்கு பராமரிப்பு நிலையங்களை அமைப்பதற்கான தேசிய அளவிலான பொறிமுறை

2 months 2 weeks ago
Published By: DIGITAL DESK 2 10 JUL, 2025 | 05:24 PM ஒட்டிசம் மற்றும் நரம்பியல் வளர்ச்சி பிரச்சினைகள் உள்ள குழந்தைகளுக்காக பராமரிப்பு நிலையங்களை நிறுவுவதற்கு தேசிய அளவிலான பொறிமுறையை தயாரிப்பதற்கான கூட்டுத் திட்டத்திற்கான எண்ணக்கரு ரீதியான முன்மொழிவை இரண்டு வாரங்களுக்குள் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் எண்ணக்கருவின் அடிப்படையில் செயல்படுத்தப்படும் இந்த திட்டம் குறித்து சமூக சக்தி செயலகத்தின் தலைமையில் புதன்கிழமை (09) பிற்பகல் நடைபெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதியின் செயலாளர் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இந்த திட்டம் சம்பந்தப்பட்ட துறைசார் அமைச்சுக்கள் மற்றும் நிறுவனங்களால் செயல்படுத்தப்படுவதோடு ஒருங்கிணைப்பு பணிகளை ஜனாதிபதி அலுவலகம் மேற்கொள்ளும். இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் மகளிர் மற்றும் சிறுவர்கள் விவகார அமைச்சிற்கு ஒதுக்கப்பட்ட ரூபா. 250 மில்லியன் நிதியை சமூக சேவைகள் திணைக்களத்தால் மாவட்ட செயலாளர்களுக்கு வழங்குதல், பராமரிப்பு நிலையங்களை செயல்படுத்த தேவையான மனிதவள அபிவிருத்தித் திட்டத்தைத் தயாரிப்பது, இந்தத் திட்டத்துடன் தொடர்புடைய துறைசார் நிறுவனங்களை இணைத்து அறிவியல் பின்னணியுடன் கூடிய புதிய மாதிரியொன்றைத் தயாரிப்பது குறித்து ஆராயப்பட்டது. இந்த விடயங்களை உள்ளடக்கிய ஒரு பொறிமுறையைத் தயாரிப்பதற்கான எண்ணக்கரு ரீதியான முன்மொழிவை இரண்டு வாரங்களுக்குள் தயாரிக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க அதிகாரிகளுக்கு மேலும் அறிவுறுத்தினார். ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளர் கபில ஜனக பண்டார, பெண்கள் மற்றும் சிறுவர்கள் விவகார அமைச்சின் செயலாளர் கே.டீ.ஆர். ஓல்கா, கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சின் செயலாளர் சம்பத் மந்திரிநாயக்க, மேலதிகச் செயலாளர் எச்.ஏ. ஹேமா பெரேரா, சமூக சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் தர்ஷனி கருணாரத்ன, சுகாதார அமைச்சின் சமூக சுகாதாரப் பிரிவின் பணிப்பாளர் வைத்திய நிபுணர் வருணி ரசாதரி, சமூக சுகாதார பிரதிப் பணிப்பாளர் வைத்திய நிபுணர் ஆசிரி ஹேவமாலகே மற்றும் லேடி ரிட்ஜ்வே மருத்துவமனை பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் சந்துஷித சேனாதிபதி உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/219669

லாராவின் சாதனையை முறியடிக்காத முல்டர்

2 months 2 weeks ago
உங்களுக்கு டெஸ்ட் ஆட்டம் பற்றிய புரிதல் குறைவென்றே தோன்றுகிறது. அவர் உண்மையிலேயே டெஸ்டை வெல்லவேண்டும் என்று நினைத்திருந்தால் இரண்டாம்நாள் முடிவுக்கு அரைமணி நேரம் முதலே டிக்கிலயர் செய்து எதிரணியை ஆறு ஓவர்களாவது ஆடப்பண்ணியிருக்க வேண்டும். அவர் பிரட்மனின் சாதனையை சமன் செய்ய நினைத்தாரே ஒழிய முறியடிக்க விரும்பவில்லை என்றே தோன்றுகிறது!

யாழில். 17 நாட்களின் பின் மீட்கப்பட்ட சிறுமி! இளைஞர் கைது

2 months 2 weeks ago
உறவுக்காற சிறுமி தான், உயிரோடு இருக்கிறாவா இல்லையா என பெற்றோர் உறவினர் தவித்த தவிப்பிருக்கே? போனை நிறுத்திவிட்டார். இன்னொரு சம்பவம் 11ஆம் ஆண்டில் மாணவன் 9ஆம் ஆண்டில் கற்கும் மாணவியை தவறான நடவடிக்கைக்கு உட்படுத்திவிட்டு அதனை பெருமையாக ஆசிரியரிடம் கூறியிருக்கிறார். அந்த மாணவியும் பாடசாலை வராதிருந்துள்ளார். இப்போது அதிபர் தலையிட்டு மாணவியை மருத்துவப் பரிசோதனைகளுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

எருதாக மாறி நிலத்தை உழுத முதியவரின் விவசாய கடனை அடைத்த அமைச்சர்

2 months 2 weeks ago
எருதாக மாறி நிலத்தை உழுத முதியவரின் விவசாய கடனை அடைத்த அமைச்சர் லத்தூர்: மகாராஷ்டிர மாநிலம் மராத்வாடா பகுதி லத்தூர் மாவட்டத்தில் உள்ள ஹடோல்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அம்பதாஸ் பவார் (75). இவருக்கு 2.5 ஏக்கர் நிலம் உள்ளது. ஆனால், இந்த நிலத்தை உழுது பயிர் செய்வதற்கு தேவையான எருதுகள் அல்லது டிராக்டரை வாங்க அவருக்கு வசதி இல்லை. அவற்றுக்கு ஒரு நாளைக்கு ரூ.2,500 வாடகை கேட்பதால், தானே எருதாக மாறி அம்பதாஸ் பவாரும் அவரது மனைவி முக்தாபாயும் பல ஆண்டுகளாக நிலத்தை ஒரு மரக்கலப்பை மூலம் உழுது விவசாயம் செய்து வருகின்றனர். விவசாய கடனை கூட அடைக்க முடியாமல் மிகவும் வறுமையில் வாடி வருகின்றனர். இந்த வீடியோ கடந்த வாரம் சமூக வலைதளங்களில் வைரலானது. அதை பார்த்த நெட்டிசன்கள் மிகவும் பரிதாபப்பட்டு கருத்துகள் தெரிவித்திருந்தனர். இதையடுத்து மகாராஷ்டிர கூட்டுறவுத் துறை அமைச்சர் பாபாசாகேப் பாட்டில் கடந்த சனிக்கிழமை அம்பதாஸ் பவார் வீட்டுக்கு நேரடியாக சென்றார். மேலும், கூட்டுறவு சொசைட்டியில் பவார் பெயரில் இருந்த விவசாய கடன் ரூ.42,500-ஐ அமைச்சர் பாட்டில் முழுமையாக செலுத்தினார். அத்துடன், கடன் பாக்கி இல்லை என்ற சான்றிதழை உடனடியாக பவாருக்கு வழங்கும்படியும் உத்தரவிட்டார். முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை லத்தூர் மாவட்ட ‘கிரந்திகாரி ஷேத்கரி சங்காதன்’ என்ற அமைப்பு நிலத்தை உழுவதற்கு 2 மாடுகளை வாங்கி மேள தாளத்துடன் பவார் வீட்டுக்கு ஓட்டிச் சென்றனர். அங்கு மாடுகளை அவருக்கு பரிசாக வழங்கினர். இதற்கிடையில், தெலங்கானாவை சேர்ந்த அறக்கட்டளை ஒன்று, பவாரை சந்தித்து ரூ.1 லட்சத்துக்கான காசோலையை வழங்கியது. சமூக வலைதளங்களில் வெளிவந்த ஒரு வீடியோ வயது முதிர்ந்த ஒரு ஏழை விவசாயியின் வறுமையை போக்கியுள்ளதை பலரும் பாராட்டி வருகின்றனர். எருதாக மாறி நிலத்தை உழுத முதியவரின் விவசாய கடனை அடைத்த அமைச்சர் | Minister pays off agricultural debt of old man - hindutamil.in

அமைதிக்கான நோபல் பரிசுக்காக ட்ரம்பின் பெயரை பரிந்துரைத்தார் இஸ்ரேல் பிரதமர் !

2 months 2 weeks ago
இடதுசாரிகளின் பித்தலாட்டமும், சுரண்டல்களும் வலதுசாரிகள் மீதான ஈர்ப்புக்கு வழி வகுத்துவிட்டது. உங்கள் அளவிற்கு எனக்கு புரியப்போவது இல்லை. கார்டியன் எப்படி உருட்டுகின்றது என்பதை அறிய ஆர்வம் இல்லை. உங்களுக்கு கிளுகிளுப்பு ஏற்படுத்தக்கூடிய நியூ யோர்க் டைம்ஸ் பத்திகள் வாசிப்பது உண்டு. ஒபாமாவுக்கு நோபல் பரிசு கொடுக்கப்பட்டதை உங்களால் ஏற்றுக்கொள்ள முடிகின்றதா?

லாராவின் சாதனையை முறியடிக்காத முல்டர்

2 months 2 weeks ago
நான் என்னநினைக்கிறன் எண்டால் சிம்பாவேக்கு எதிராக சாதனை செய்தால் குறைவாகநினைப்பார்கள் என்று தான் முல்டர் சாதனைக்கு முயற்சி செய்யவில்லை. இதுவே அவுஸ்ரேலியா போன்ற அணியுடன் கட்டாயம் முயன்றிருப்பார்

உணவு செய்முறையை ரசிப்போம் !

2 months 2 weeks ago
கோடைகாலம் ஆரம்பித்து விட்ட்து. இம் மாதம் எல்லோரும் குடும்பமாகவும் சங்கங்கள் மூலமும் ஒன்று கூடல் நடத்துவார்கள் அதில் முக்கியம் இடம்பெறும் கூல்.அதன் சுவை தரம் சேர்மான பொருட்களில் இருக்கிறது . விசேடமாக ஓடியல் மா ஊற வைத்து "கசப்பு "வடித்துவிட்டு (ரெண்டுமூன்று தடவை ) நண்டு றால் மீன் (சதைப் பற் றான ) பொருத்தமான மரக்கறிவகை இட்டு காரத்துக்கு மிளகாய் உள்ளியுடன் அரைத்து விட்டுபுட்டு உப்பு அளவாக சேர்த்து உடன் சூட்டுடன் குழுவாக உண்ண (குடிக்க )வேண்டும்

அகழ்வுப் பணி ஆரம்பிக்கப்படாத பிள்ளையானின் தீவுச்சேனை மீது ஏன் இன்னும் விசாரணை மேற்கொள்ளவில்லை - சாணக்கியன் இராசமாணிக்கம்

2 months 2 weeks ago
10 Jul, 2025 | 10:27 AM (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) அரசாங்கம் செய்த குற்றங்களை பிறிதொரு அரசாங்கம் விசாரிப்பதில் சிக்கல்கள் உள்ளன என்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ள நிலையில், உண்மையான நீதி வேண்டுமாயின் செம்மணி உள்ளிட்ட மனித புதைகுழிகள் தொடர்பில் சர்வதேச விசாரணைகள் அவசியமானது. அகழ்வுப் பணி ஆரம்பிக்கப்படாத பிள்ளையானின் தீவுச்சேனை மீது ஏன் இன்னும் விசாரணை மேற்கொள்ளவில்லை என இலங்கை தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் கேள்வியெழுப்பினார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (09) நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, செம்மணி மனித புதைகுழி விவகாரம் தொடர்பில் நீதி மறுக்கப்பட்டது என்பது நல்லிணக்கத்திற்கு பாதகமான ஒரு விடயமாக அமையும். பொறுப்புக்கூறல் என்பது நல்லிணக்கம் உருவாக முக்கிய விடயமாக உள்ளது. குறிப்பாக 1998 / 99 காலப்பகுதியில் சோமரட்ன ராஜபக்ஷ எனும் நபர் வாக்குமூலத்தின் அடிப்படையில் செம்மணி பிரதேசத்தில் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு 15 மனித எச்சங்கள் எடுக்கப்பட்டுள்ளது. இவ் எச்சங்கள் ஸ்கொட்லாந்தில் கிளாஸ்கோவில் உள்ளதாக அறிகின்றோம். ஏன் இவற்றை இலங்கை அரசாங்கம் ஆய்வு செய்யவில்லை? டி.என்.ஏ பரிசோதனை இலங்கை அரசாங்கத்திற்கு மேற்கொள்ள வசதிகள் இல்லாத நிலையில் ஏன் இலங்கை அரசாங்கம் சர்வதேசத்தின் உதவியை நாட தயங்குகின்றது? அன்று இந்த எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டன. இப்போதும் அங்கு அகழ்வுகள் நடக்கின்றன. அரசாங்கம் செய்ய குற்றங்களை அரசாங்கம் விசாரிப்பதில் சிக்கல்கள் உள்ளன என ஜனாதிபதி கூறியுள்ளார். இதானாலேயே நாங்கள் சர்வதேச விசாரணை ஒன்றினை எதிர்பார்க்கின்றோம். அரசாங்கம் ஊழல் ஒழிப்பிற்கு விசேட அலுவலகம் ஒன்றை உருவாக்க யோசிப்பது போல் ஏன் மனித உரிமை மீறல்களை விசாரிக்க அலுவலகம் அமைக்கவில்லை? ஆரையம்பதியில் கொல்லப்பட்ட விஜிதா, மட்டக்களப்பில் கொல்லப்பட்ட ரிபாயா, பிறேமினி,மனித புதைகுழி உள்ள கொக்குத்தொடுவாய்,மாத்தளை, செம்மணி, மற்றும் இன்னும் அகழ்வுப் பணி ஆரம்பிக்கப்படாத பிள்ளையானின் தீவுச்சேனை ஆகியவற்றின் மீது ஏன் இன்னும் விசாரணை மேற்கொள்ளவில்லை? இதனால் இந்த விடயத்தில் சர்வதேச விசாரணைகள் அவசியமானது என்றார். அகழ்வுப் பணி ஆரம்பிக்கப்படாத பிள்ளையானின் தீவுச்சேனை மீது ஏன் இன்னும் விசாரணை மேற்கொள்ளவில்லை - சாணக்கியன் இராசமாணிக்கம் | Virakesari.lk

அநுரகுமார திசாநாயக்கவின் பெயரை திருத்தியமைத்து மீண்டும் அறிக்கையை வெளியிட்ட டொனால்ட் டிரம்ப்

2 months 2 weeks ago
10 Jul, 2025 | 12:24 PM இலங்கையிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட வரி தொடர்பில் இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு அனுப்பிய அறிக்கையை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீண்டும் வெளியிட்டுள்ளார். இலங்கையிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை 30 வீதமாக நிர்ணயித்துள்ளதாக அறிவித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு அறிக்கை ஒன்றை நேற்று புதன்கிழமை (09) வெளியிட்டிருந்தார். இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இந்த அறிக்கையை மீண்டும் வெளியிட்டு முன்னதாக வெளியிட்ட அறிக்கையில் இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் பெயர் "அருண குமார திசாநாயக்க" என்று தவறாக எழுதப்பட்டிருப்பதாகவும் தற்போது அது சரிசெய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், இலங்கையிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை 30 வீதமாக நிர்ணயித்துள்ளதை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீண்டும் உறுதி செய்துள்ளார். மேலும், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் இணைந்து இருதரப்பு வர்த்தக உறவுகளை மேம்படுத்த விரும்புவதாகவும், இலங்கை அமெரிக்காவின் அசாதாரண பொருளாதாரம் எனவும் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் பொருளாதார தடைகளை நீக்கினால் வரி மற்றும் கட்டணங்களை சரிசெய்ய முடியும் எனவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். இலங்கையிலிருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட வரியானது எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் அமுல்படுத்தப்படும் எனவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நினைவுபடுத்தினார். புதிய அறிக்கை ; பழைய அறிக்கை ; அநுரகுமார திசாநாயக்கவின் பெயரை திருத்தியமைத்து மீண்டும் அறிக்கையை வெளியிட்ட டொனால்ட் டிரம்ப் | Virakesari.lk

உணவு செய்முறையை ரசிப்போம் !

2 months 2 weeks ago
சென்ற பிக் பாஸ் காலங்களில் "சம்மந்தி" என்று இதற்கு பெரிய மவுசு ...எல்லோர் வாயிலும் பேச்சிலும்" சம்மந்தியா "அது என்ன சதா தேங்காய் துவையல் தான் ...

செம்மணி மனித புதைகுழி: இன்றுடன் அகழ்வு பணிகள் தற்காலிகமாக நிறுத்தம்.

2 months 2 weeks ago
செம்மணியில் மீட்கப்பட்ட எலும்பு கூடுகளின் எண்ணிக்கை 65ஆக உயர்வு - இன்றுடன் அகழ்வு பணிகள் தற்காலிகமாக நிறுத்தம் 10 Jul, 2025 | 04:25 PM செம்மணி மனித புதைகுழியில் இருந்து இதுவரையில் மீட்கப்பட்ட எலும்பு கூட்டு தொகுதிகளின் எண்ணிக்கை 65ஆக உயர்வடைந்துள்ளது. அதேவேளை இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் கடந்த 15 நாட்களாக தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த நிலையில் , இன்றைய தினம் வியாழக்கிழமை மதியத்துடன் , தற்காலிகமாக அகழ்வு பணிகள் இடைநிறுத்தப்பட்டு , எதிர்வரும் 21ஆம் திகதி முதல் மீள அகழ்வு பணிகளை முன்னெடுக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வு பணியின் 15ஆம் நாள் பணிகள் இன்றைய தினம் வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்டது. அதன் போது, புதைகுழிகளில் அடையாளம் காணப்பட்ட 65 மனித எலும்பு கூட்டு தொகுதிகளும் முற்றாக இன்றைய தினம் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் அகழ்வு நடவடிக்கைகள் இன்றைய தினத்துடன் 24 நாட்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதில் "தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல - 01" மனித புதைகுழியில் இருந்து 63 எலும்பு கூடுகளும் , "தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல - 02" புதைகுழியில் இருந்து இரண்டு எலும்பு கூடுகளும் மீட்கப்பட்டுள்ளன. அதேவேளை "தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல - 02" புதைகுழியில் குழப்பகரமான முறையில் மனித எலும்பு சிதிலங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. மீட்கப்பட்ட எலும்பு கூட்டு தொகுதிகள் அனைத்தும் சட்ட வைத்திய அதிகாரியின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், புதைகுழிகளில் இருந்து மீட்கப்பட்ட , பை , காலணிகள் , கண்ணாடி வளையல்கள் , ஆடையை ஒத்த துணிகள் , பொம்மை உள்ளிட்ட பொருட்கள் சான்று பொருட்களாக அடையாளப்படுத்தப்பட்டு , நீதிமன்ற கட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளன. செம்மணியில் மீட்கப்பட்ட எலும்பு கூடுகளின் எண்ணிக்கை 65ஆக உயர்வு - இன்றுடன் அகழ்வு பணிகள் தற்காலிகமாக நிறுத்தம் | Virakesari.lk

யாழில். 17 நாட்களின் பின் மீட்கப்பட்ட சிறுமி! இளைஞர் கைது

2 months 2 weeks ago
அவசரம் அவசரம் எதிலும் அவசரம்.அறியாத வயது ...சந்தில சிந்து பாடிய வரை யும் உள்ளே தள்ளனும். தண்டனை கடுமையாகும் வரை குற்றங்கள் குறையாது .

வடக்கின் உப உணவுப் பயிர்ச்செய்கை வீழ்ச்சியடைந்து வருகிறது; சிறீதரன் எம்.பி

2 months 2 weeks ago
10 Jul, 2025 | 07:58 PM (இராஜதுரை ஹஷான்) யாழ்ப்பாண மாவட்ட விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாமையால், வடக்கின் உப உணவுப் பயிர்ச்செய்கை வீழ்ச்சியடைந்து வருவதுடன்,விவசாயிகளின் வாழ்வாதாரமும் முற்றாகப் பாதிப்படைந்து வருவதாக தமிழ் அரசுக் கட்சியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிவஞானம் முன்வைத்த கேள்விகளுக்கு வெள்ளிக்கிழமை விரிவான பதிலளிப்பதாக உணவு பாதுகாப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (9) நடைபெற்ற அமர்வின் போது 27/2 இல் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்கவிடம் வருமாறு கேள்வியெழுப்பினார். விவசாய மாவட்டமான யாழ்ப்பாணத்தில் நெற்செய்கைக்கு மேலாக உப உணவுப் பயிர்களான சின்ன வெங்காயம், வேதாளக்காய் வெங்காயம், உருளைக்கிழங்கு,திராட்சை,கரட், கரணைக்கிழங்கு,பீற்றூட், வாழை, மரவள்ளி, மிளகாய் போன்ற பயிர்கள் வலிகாமம் வடக்கு,வலிகாமம் கிழக்கு, வலிகாமம் மேற்கு, வடமராட்சி தெற்கு மேற்கு, வடமராட்சி கிழக்கு, தீவகம்,தென்மராட்சி போன்ற பெரும் பிரதேசங்களின் பேரூர்களில் செய்கை மேற்கொள்ளப்படுகிறது வருகின்றன. குறிப்பாக, இவ்வூர்களில் வாழும் விவசாயிகள் சின்ன வெங்காயம் உற்பத்தி செய்து, அறுவடை செய்யும் போது இறக்குமதி வரி விதிப்பு செய்யப்படுவது வழமை. ஆனால் கடந்த மூன்று வருடங்களாக இவ்வரி விதிப்பு நடைமுறைப்படுத்தப்படவில்லை. காலநிலைப் பாதிப்புகளையும் கடந்து உப உணவுப் பயிர்ச்செய்கையில் ஈடுபடும் யாழ்ப்பாண விவசாயிகளின் நடைமுறை இடர்பாடுகள் எவை என்பதையும், யாழ்ப்பாணச் சின்ன வெங்காயத்துக்கான கேள்வி தற்போது வெகுவாகக் குறைந்துள்ளதையும், கடந்த இரண்டு வருடங்களாக உற்பத்திக்கான மானிய அடிப்படையிலான விதை உருளைக்கிழங்கு கிடைக்கப்பெறவில்லை என்பதையும்,சின்ன வெங்காயம் அறுவடை செய்யப்படும் காலத்தில், விவசாயிகளைப் பாதுகாக்கும் வகையில் அரசால் இறக்குமதிகளுக்கு எதிரான வரி விதிக்கப்படுமா? என்பதையும், கடந்த மூன்று ஆண்டுகளாக ஏன் இந்த வரி விதிப்பு நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதையும் அமைச்சர் சபைக்கு அறிவிக்க வேண்டும். அதேவேளை, இவ்வருடம் தொடர் மழை காரணமாக சின்ன வெங்காயச் செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் தங்கள் முதலை முழுமையாக இழந்துள்ளதுடன், உற்பத்திப் பொருளின் தரமும் குறைந்துள்ளது. இத்தகைய பாதிப்பை எதிர்கொண்டுள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மீளமைக்கும் வகையில் நஷ்டஈடு வழங்கும் திட்டம் அரசிடம் உள்ளதா என்றும் காலாகாலமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் சிறப்பாக உற்பத்தி செய்யப்பட்ட உருளைக்கிழங்குச் செய்கை பாதிப்படையும் வகையில், மானிய அடிப்படையிலான விதைக் கிழங்கு கிடைக்கப் பெறாமைக்கும், தரமான புதிய இனங்கள் அறிமுகம் செய்யப்படாமைக்கும் காரணம் என்ன என்பதை அமைச்சர் இச்சபைக்கு அறிவிப்பாரா, பார உலோகம் நிறைந்துள்ளதாக கூறப்படுவதன் அடிப்படையில் கிருமிநாசினிப் பயன்பாடு குறைவடைந்துள்ள நிலையில், இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்திற்கு பார உலோகம் உண்டா - இல்லையா என்பதை மக்களுக்கு எவ்வாறு தெளிவுபடுத்துவது என்பதற்கு அமைச்சரின் பதில் என்ன ?வடக்கு மாகாணத்தில் மட்டும் இந்த உற்பத்திப் பொருட்களுக்கு பத்திற்கு ஒன்று கழிவு செய்யப்படுகிறது. ஆனால் இந்தக் கழிவுமுறை தம்புள்ள,மற்றும் ஏனைய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வெங்காயங்களுக்கு ஏன் பின்பற்றப்படுவதில்லை எனவும் சுட்டிக்காட்டினார். பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் முன்வைத்த கேள்விகளுக்கு இன்று வெள்ளிக்கிழமை தரவுகளுடன் பதிலளிப்பதாக அமைச்சர் வசந்த சமரசிங்க குறிப்பிட்டார். வடக்கின் உப உணவுப் பயிர்ச்செய்கை வீழ்ச்சியடைந்து வருகிறது; சிறீதரன் எம்.பி | Virakesari.lk

யாழ் பேருந்து நிலையத்தின் பகுதிகளில் உள்ள பிரச்சினைகள் தொடர்பில் நேரடி விஜயம் செய்து ஆராய்ந்தார் முதல்வர் மதிவதனி

2 months 2 weeks ago
யாழ் பேருந்து நிலையத்தின் பகுதிகளில் உள்ள பிரச்சினைகள் தொடர்பில் நேரடி விஜயம் செய்து ஆராய்ந்தார் முதல்வர் மதிவதனி 10 Jul, 2025 | 05:25 PM யாழ்ப்பாணம் மாநகரத்தின் மத்தியில் பொது மக்கள் அதிகம் வந்து செல்லும் பகுதிகளில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கும் வகையில் விசேட திடீர் கள விஜயம் ஒன்றினை யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் மதிவதனி விவேகானந்தராசா கடந்த 8ம் திகதி மேற்கொண்டிருந்தார். மேற்படி விஜயத்தில் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம், பேருந்து நிலையத்திற்கு அருகாமையில் உள்ள கடைகள், வீதியோர பழங்கள் விற்பனை ஊடாக போக்குவரத்து செய்ய முடியாமல் பொது மக்கள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பில் ஆராய்ந்து நடைபாதையில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த விற்பனைப் பொருட்களை அப்புறப்படுத்துமாறு கடை நடாத்துனர்களுக்கு முதல்வரால் அறிவுறுத்தப்பட்டது. முதல்வரின் அறிவுறுத்தலை மீறி தொடர்ந்தும் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் நடைபாதையில் விற்பனைப் பொருட்கள் காட்சிப்படுத்தப்படுமாக இருந்தால் மாநகர வருமான வரி பரிசோதகர்களினால் முன்னறிவித்தல் இன்றி பொருட்கள் மாநகர வாகனங்களை கொண்டு வந்து அகற்றப்படும் என்றும் வியாபாரிகளுக்கு தெளிவுபடுத்தப்பட்டது. முதல்வரின் மேற்படி விஜயத்தில் மாநகரசபை உறுப்பினர்கள், மாநகர பொதுச் சுகாதார பொறியியற் பிரிவு அதிகாரிகள், மாநகர பிரதான வருமானவரி பரிசோதகர் உள்ளிட்ட பலர் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். யாழ் பேருந்து நிலையத்தின் பகுதிகளில் உள்ள பிரச்சினைகள் தொடர்பில் நேரடி விஜயம் செய்து ஆராய்ந்தார் முதல்வர் மதிவதனி | Virakesari.lk

முல்லைத்தீவில் விடுதலைப் புலிகளின் தங்கம்?

2 months 2 weeks ago
புதுக்குடியிருப்பில் விடுதலைப்புலிகள் பயன்படுத்திய பதுங்கு குழியைத் தோண்டும் பணிகள் முன்னெடுப்பு! 10 Jul, 2025 | 05:29 PM தமிழீழ விடுதலைப்புலிகள் பயன்படுத்திய பாரியளவிலான நிலக்கீழ் பதுங்கு குழியைத் தோண்டும் நடவடிக்கை இன்று வியாழக்கிழமை (10) காலை 10.30 மணியளவில் முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியில் ஆரம்பிக்கப்பட்டது. 8ம் வட்டாரம், மந்துவில் கிராமத்தில் உள்ள தனியார் காணி ஒன்றில் போரின் முன்னர் விடுதலைப்புலிகளின் தலைவர் மற்றும் தளபதிகள் பயன்படுத்தினர் என்று கருதப்படும் நிலக்கீழ் பதுங்குகுழியைத் தோண்டும் நடவடிக்கை புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.பி.ஆர்.ஹெரத் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது. இரண்டு ஏக்கர் வரையிலான குறித்த காணி, விடுதலைப்புலிகளின் முகாமாகக் காணப்பட்டது. இந்தக் காலட்டத்தில், விடுதலைப் புலிகளின் தலைவர் மற்றும் தளபதிகள் உள்ளிட்டவர்கள் சந்திப்புக்களை மேற்கொள்வதற்காகப் பாரியளவில் நிலக்கீழ் பதுங்குகுழி ஒன்று அமைக்கப்பட்டது. 2009ஆம் ஆண்டு போருக்கு பின்னர், குறித்த காணியில், கண்ணிவெடி அகற்றும் இராணுவத்தினர் நிலை கொண்டிருந்தனர். போரின் குண்டுத் தாக்குதல்களால், பதுங்குகுழியின் வாயில்கள் மூடப்பட்ட நிலையில், அதனை மக்கள் பொருட்படுத்தவில்லை. இந்த நிலக்கீழ் பதுங்கு குழி சுமார் 20 அடி ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலக்கீழ் பதுங்குகுழியில், விடுதலைப்புலிகளின் தங்கமோ அல்லது ஆயுதங்ளோ புதைக்கப்பட்டிருக்கலாம் எனச் சிலர் வீட்டின் உரிமையாளர்களுக்குத் தெரியாமல் நிலத்தைத் தோண்டும் நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர். அதன் பின்னர் புதுக்குடியிருப்புப் பொலிஸார் அந்தப் பகுதியைப் பார்வையிட்டு, நீதிமன்ற நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர். முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டு நேற்று புதன்கிழமை (09) குறித்த நிலக்கீழ் பதுங்குகுழியைத் கிராம சேவையாளர், விஷேட அதிரடி படையினர், குண்டு செயலிழக்கும் பிரிவினர், பொலிஸார், உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு அழைக்கப்பட்ட நிலையில் குறித்த பகுதியில் கனரக இயந்திரம் கொண்டு துப்பரவு பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்ததுடன் நிலக்கீழ் பதுங்குகுழியில் நீர் நிரம்பிக் காணப்படுவதால் அதனையும் வெளியேற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது. நேற்றையதினம் (09) மாலை சம்பவ இடத்துக்குச் சென்ற முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் குறித்த பகுதிகளை பார்வையிட்டதுடன், தொடர்ந்தும் இன்று காலை அகழ்வுப் பணிகளை முன்னெடுக்க பொலிஸாருக்கு பணித்திருந்தார். அதனை தொடர்ந்து இன்று காலை 10.30 மணியளவில் அகழ்வு பணி ஆரம்பமாகியது. புதுக்குடியிருப்பில் விடுதலைப்புலிகள் பயன்படுத்திய பதுங்கு குழியைத் தோண்டும் பணிகள் முன்னெடுப்பு! | Virakesari.lk
Checked
Sat, 09/27/2025 - 06:23
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed