2 months ago
ஆடி மாத "தற்காப்பு கேடயம்" 😂
2 months ago
2 months ago
பிறந்தநாளை முன்னிட்டு விசேட தேவையுடைய பிள்ளைகளுக்கு சிற்றுண்டிகள் வழங்கப்பட்டது 21/07/2025 டென்மார்க்கைச் சேர்ந்த ஐங்கரன் சிவகுமார் மற்றும் லண்டனைச் சேர்ந்த அருணேஸ் கணேஸ்குமார் ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு விசேட தேவையுடைய பிள்ளைகளுக்கு சிற்றுண்டிகள், பிஸ்கற் வழங்கப்பட்டது. இருவரும் பல்கலையும் கற்று பல்லாண்டுகள் வளத்துடன் வாழ வாழ்த்துகிறோம். இந்நிகழ்வை சிறப்புற ஒழுங்கமைத்து நடத்திய செயலாளர் திரு த.மோகன்றூபன் (PHI) முன்னாள் உபசெயலாளர் திரு இ.சிறிதரன் (அதிபர்) ஆகியோருக்கு எமது நன்றிகள். மேலும் இந்நிழவுக்கு உறுதுணையாகவும் ஊக்கமாகவும் இருக்கும் திரு இ.சிவகுமார் அவர்களுக்கும் எமது உளமார்ந்த நன்றிகளைத் தெரிவிக்கிறோம். மேலும் இது போல உதவிகள் வழங்க விரும்பின் எம்மைத் தொடர்பு கொள்ளலாம். T.P : +94 77 777 5448. ஒளிப்பதிவு திரு த.மோகன்றூபன்.
2 months ago
செம்மணி மனித புதைகுழிகள்: மேலும் 7 எலும்புக்கூட்டு தொகுதிகள் மீட்பு Published By: VISHNU 21 JUL, 2025 | 07:45 PM யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் 07ஆம் திகதி திங்கட்கிழமை 07 மனித எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இன்று அடையாளம் காணப்பட்டுள்ள 07 மனித எலும்பு கூட்டு தொகுதிகளுடன் சேர்த்து மொத்தமாக 72 எலும்பு கூட்டு தொகுதிகள் இங்கே கண்டெடுக்கப்பட்டுள்ளன. செம்மணி பகுதியில் "தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல - 01" மற்றும் "தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல - 02" என நீதிமன்றினால் அடையாளப்படுத்தப்பட்ட மனித புதைகுழிகளில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இரண்டாம் கட்ட பணிகளுக்காக 45 நாட்கள் நீதிமன்றினால் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் முதல் 15 நாட்கள் தொடர்ச்சியாக அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் கடந்த 10ஆம் திகதியுடன் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டு 11 நாட்களின் பின்னர் இன்றைய தினம் 16ஆவது நாளாக அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டது. அதன் போது இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் 07 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றினை நாளைய தினம் செவ்வாய்க்கிழமை அகழ்ந்து எடுக்கும் பணிகள் முன்னெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மனிதப்புதைகுழி தொடர்பான விசாரணைகள் இதுவரை யாழ்ப்பாணம் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், பொலிஸ்மா அதிபரின் உத்தரவுக்கு அமைய, இந்த விசாரணைகளை மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவின் கீழ் ஒப்படைக்கபட்டுள்ள நிலையிலையே குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் அகழ்வு இடம்பெறும் இடத்தில் பிரச்சன்னமாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/220579
2 months ago
21 JUL, 2025 | 05:34 PM அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தமிழர் இறையாண்மையை மீட்டுத் தந்தால், 50 இலட்சம் கையெழுத்துக்களை திரட்டி நோபல் அமைதிப் பரிசுக்கு அவரைப் பரிந்துரை செய்வோம் என்று தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் தெரிவித்துள்ளது. வவுனியாவில் சங்கத்தினரால் இன்று (21) முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் பின்னர், அவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே இதனைத் தெரிவித்தனர். அவர்கள் மேலும் கூறுகையில், 1948 முதல் அடுத்தடுத்து வந்த சிங்கள ஆட்சியாளர்களால் எடுத்த அனைத்து நடவடிக்கைகளும் பாகுபாடு, நில அபகரிப்புகள், காணாமல் ஆக்குதல், கொலைகள் என்ற வரையறைக்குள் மாத்திரமே செயற்பட்டன. அந்த வகையில் பல உலகத் தலைவர்கள் வந்து போய்விட்டார்கள். ஆனால், இன்று ஒரே ஒரு தலைவருக்கு மட்டுமே செயற்பட தைரியமும் தெளிவும் உள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பேசும்போது உலகம் அதை கேட்கிறது. சிலர் மரியாதைக்காகவும், மற்றவர்கள் பயத்திற்காகவும் அதனை கேட்கின்றனர். ஆனால், அவர் காரியங்களைச் செய்து முடிக்கிறார். ஜனாதிபதி டிரம்பிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தால் தமிழர்களுக்கு நீதியை மீட்டெடுக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். தமிழ் இறையாண்மையை மீட்டெடுக்க அவர் எங்களுடன் நின்றால், உலகெங்கிலும் உள்ள தமிழ் தாய்மார்கள் மற்றும் புலம்பெயர்ந்தோர், நோபல் அமைதிப் பரிசுக்கு அவரைப் பரிந்துரைக்கும் வண்ணம் ஐந்து மில்லியன் கையெழுத்துக்களை சேகரிப்போம் என உறுதியளிக்கிறோம். உலகம் ஒருபோதும் எதிர்பார்க்காத அமைதித் தூதராக டிரம்ப் மாறட்டும் என்றனர். https://www.virakesari.lk/article/220562
2 months ago
நுவரெலியாவில் பலத்த மழை ; கிரகரி வாவியில் மட்டுப்படுத்தப்பட்ட படகுச் சவாரி 21 JUL, 2025 | 04:20 PM நுவரெலியாவில் பெய்துவரும் பலத்த மழை மற்றும் காற்று காரணமாக கிரகரி வாவியில் இடைநிறுத்தப்பட்டிருந்த படகுச் சவாரி இன்று (21) மட்டுப்படுத்தப்பட்ட அளவில் சேவையினை வழங்க ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ந்து பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால் நுவரெலியா கிரகரி வாவியில் படகுச் சவாரியானது சனி (19), ஞாயிறு (20) ஆகிய இரு தினங்களும் முற்றாக நிறுத்தப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து, மீண்டும் இன்று காலை காற்றின் வேகம் சற்று குறைந்து காணப்பட்ட நிலையில், ஒரு சில படகுகளுக்கு மாத்திரம் சேவையில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அதன் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால் சுற்றுலாப்பயணிகளின் பாதுகாப்பு கருதி கிரகரி வாவியில் படகு சவாரி தற்காலிகமாக நிறுத்தப்பட்டு மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நுவரெலியாவில் மழையுடன் காற்றின் வேகம் அதிகரித்ததால் சுற்றுலாப்பயணிகளின் வருகை சற்று குறைந்துள்ளது. மேலும், சுற்றுலாப்பயணிகளின் பாதுகாப்பு கருதி, மிதி படகுகள் இயக்க முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வாவி பகுதியில் காற்றில் ஈரப்பதம் அதிகரித்து கடும் குளிர் நிலவி வருகிறது. அத்துடன் மழையால் உள்ளூர் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/220549
2 months ago
Published By: RAJEEBAN 21 JUL, 2025 | 04:12 PM மனிதபுதைகுழிகளில் காணப்படும் மனித எச்சங்களை அகழ்வதற்கு அவசியமான நிதி நிபுணத்துவம் மற்றும் வளங்களை இலங்கை அரசு வழங்கவேண்டும் என பரிந்துரைத்துள்ள இலங்கை மனித உரிமை ஆணைக்குழு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ரோம்சட்டத்தினை ஏற்றுக்கொள்வது குறித்து இலங்கை ஆராயவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தனது அறிக்கையொன்றில் மேலும் தெரிவித்துள்ளதாவது- இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஐக்கிய நாடுகளின் பலவந்தமாக காணாமல்போனோர் தொடர்பான குழுவிடம் தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. ஐக்கிய நாடுகளின் பலவந்தமாக காணாமல்போனோர் தொடர்பான குழுவின் 29 வது அமர்வு செப்டம்பர் 22 முதல் ஒக்டோபர் 3ம் திகதி வரை நடைபெறவுள்ள நிலையிலேயே இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழு தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. இந்த அமர்வில் ஐநாவின் குழு பலவந்தமாக காணாமல்போதலில் இருந்து அனைத்து நபர்களையும் பாதுகாப்பது தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் இன் கீழ் இலங்கை தனது கடப்பாடுகளை எவ்வாறு நிறைவேற்றியுள்து என்பது குறித்து ஆராயவுள்ளது. இலங்கை இந்த உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் பல பரிந்துரைகளையும் அவதானிப்புகளையும் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் 25 பக்க அறிக்கை முன்வைக்கின்றது. நபர் ஒருவர் பலவந்தமாக காணாமலாக்கப்படுதல் மனித உரிமையை மிக மோசமாக மீறும் செயல் என்பதை இலங்கை மனித உரிமை ஆணைக்குழு மீண்டும் நினைவூட்டியுள்ளது. பலவந்தமாக காணாமலாக்கப்படுதல் என்பது இலங்கையின் அனைத்து பகுதிகளிலும் இடம்பெற்றுள்ளதுடன் அனைத்து சமூகங்களையும் பாதித்துள்ளது. குறிப்பாக தெற்கில் கிளர்ச்சி வடக்குகிழக்கில் ஆயுத மோதல்கள் குறித்த சூழமைவின் பின்னணியில். பல ஆண்டுகளாக பலவந்தமாக காணாமலாக்கப்படுதல் உண்மை மற்றும் பொறுப்புக்கூறலுக்காக தொடர்ந்து குரல் கொடுப்பதில் குடும்பங்கள் ஆர்வலர்கள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகளின் முக்கிய முயற்சிகளையும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அங்கீகரிக்கின்றது. பொருளாதார சவால்கள் மற்றும் பராமரிப்பு பொறுப்புகள் மற்றும் அச்சுறுத்தல்கள் மற்றும் மிரட்டல்களைச் சமாளிக்க வேண்டியிருந்த போதிலும் இலங்கையில் பலவந்தமாக காணாமலாக்கப்படுதல் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தவும் உண்மை மற்றும் பொறுப்புக்கூறலுக்காக வாதிடவும் பெண்கள் முயற்சிகளை வழிநடத்தியுள்ளனர் என்பதை இது குறிப்பாக அங்கீகரித்தது இலங்கை அரசாங்கம் கடந்த காலங்களில் வெளியிட்ட உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் அடிப்படையில் மனிதஉரிமைகள் ஆணையத்தின் அறிக்கை கடந்த கால விசாரணை ஆணையங்களால் 27000க்கும் மேற்பட்ட காணாமல் போனோர் வழக்குகள் பரிசீலிக்கப்பட்டன என்பதையும் காணாமல் போனோர் தொடர்பான 21000க்கும் மேற்பட்ட புகார்களை காணாமல்போனோர் அலுவலகம் பெற்றுள்ளது என்பதையும் நினைவு கூர்ந்தது. மே 17 மற்றும் 18 2009 அன்று பாதுகாப்புப் படைகளிடம் சரணடைந்த பின்னர் 1000க்கும் மேற்பட்ட காணாமல் போன சம்பவங்கள் தொடர்பாக கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணையத்தின் கண்டுபிடிப்புகளையும் இந்த அறிக்கை மேற்கோள் காட்டியது. மனித உரிமைகள் ஆணையத்தின் அறிக்கை இலங்கையில் தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கும் பிரச்சினையை குறிப்பாக எடுத்துக்காட்டியது. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு இலங்கை அரசாங்கத்திற்கு பின்வரும் பரிந்துரைகளை முன்வைத்துள்ளது. வழமையான சட்ட அமுலாக்கல் அதிகாரிகளிடமிருந்து சுயாதீனமான இபலவந்தமாக காணாமலாக்கப்பட்டமை குறித்து விசாரணை செய்வதற்கான குற்றவாளிகளை நீதியின் முன்நிறுத்துவதற்கான பரந்துபட்டஅதிகாரங்களை கொண்ட புதிய நிரந்தர நிறுவனமொன்றை உருவாக்கவும் ஆட்கொணர்வு வழக்குகள்பலவந்தமாக காணாமலாக்கப்படுதல் சட்டத்தின் கீழ் உள்ள வழக்குகள் மற்றும் உயர் நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளிற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு அவற்றின் விரைவான முடிவை உறுதி செய்வதற்குத் தேவையான சட்ட சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்துதல் வலுக்கட்டாயமாக காணாமல் போதல் சட்டத்தின் கீழ் ‘பரந்துபட்ட மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட காணாமலாக்கப்படுதலை ஒரு குறிப்பிட்ட குற்றமாகச் சேர்க்கவும் பலவந்தமாக காணாமலாக்கப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படும் பண பணமற்ற மற்றும் முன்மாதிரியான சேதங்களுக்கு இழப்பீட்டு வழிகாட்டுதல்களை சர்வதேச தராதரங்களின் அடிப்படையில்வகுத்தல்; ஆதாரங்கள் பாதுகாக்கப்படுவதையும் உயிரிழந்தவர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்காக வலுவான விசாரணை இடம்பெறுவதையும் உறுதி செய்வதற்காக மனித புதைகுழிகளில் உள்ள மனித எச்சங்களை அகழ்வதற்கு அவசியமானநிதி உதவி தொழில்நுட்ப உதவி ஏனைய வளங்களை வழங்குங்கள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ரோம் சட்டத்தின் ஒரு தரப்பினராக மாறுவதைக் கருத்தில் கொள்ளுங்கள். இது பரந்துபட்ட மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட காணாமலாக்கப்படுதலைமனிதகுலத்திற்கு எதிரான குற்றமாக பட்டியலிடுகிறது. https://www.virakesari.lk/article/220545
2 months ago
ஓ.... உத்தரவின்றி, திறந்த வீட்டிற்குள் நுழைந்து இருக்கின்றார். மனைவி ஏதாவது சதி செய்து... ஆளை, மேல்லோகம் அனுப்பினாரோ என்ற கோணத்திலும் விசாரிக்கப் பட வேண்டும்.
2 months ago
அவராக போகவில்லையாம் அண்ணை! மனைவி ஸ்கான் செய்ய சென்றவர், உதவிக்கு அழைத்து ஆபத்தில் மாட்டிவிட்டுள்ளார்.
2 months ago
Published By: DIGITAL DESK 2 21 JUL, 2025 | 01:43 PM வடக்கு ஊடகத் துறையிலும் பகிர்ந்தறியும் கற்றல் மற்றும் துறைமட்ட ஒத்துழைப்பு ஆகியவற்றுக்கு இந்திய தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கும் என இந்திய துணைத்தூதுவர் சாய் முரளி தெரிவித்துள்ளார். இந்தியா துணைதூதரகத்தின் ஏற்பாட்டில், “பிரஸ் ஃபார்வர்ட்: பத்திரிகைத் துறை, கதையாக்கம் மற்றும் தொழில்நுட்பத்தைப் பற்றிய உரையாடல்” எனும் தலைப்பில் யாழ்ப்பாணத்தில் கடந்த 19ஆம் திகதி ஊடகவியலாளர்களுக்கான பயிற்சி பட்டறை நடாத்தப்பட்டது. அதில் வடமாகாணத்தை சேர்ந்த ஊடகவியலாளர்கள், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகவியல் துறை மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் என சுமார் 100 பேர் பங்கேற்றனர். குறித்த நிகழ்வினை ஆரம்பித்து உரையாற்றும் போதே துணைத்தூதுவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ஊடகத் துறையிலும் பகிர்ந்தறியும் கற்றல் மற்றும் துறைமட்ட ஒத்துழைப்பு ஆகியவற்றின் முக்கியத்துவத்தில் இந்தியா வைக்கும் நம்பிக்கையை வலியுறுத்தினார். அத்துடன் தொழில்முறை மேம்பாடு மற்றும் திறன்மூட்டலுக்கான ஒத்துழைப்பு ஆகியவற்றில் இந்தியா தொடர்ந்த அக்கறையுடன் செயல்படுவதாக உறுதிபட தெரிவித்தார். மேலும் வடமாகாணத்தில் இந்தியா மேற்கொள்ளும் விரிவான ஒத்துழைப்பு முயற்சிகளில் இந்திய வீடமைப்பு திட்டம், பண்டைய கோயில்களின் மறுசீரமைப்பு, புகையிரத உட்கட்டமைப்பு அபிவிருத்தி, மின் திட்டங்கள், பல்கலைக்கழக கட்டிடங்கள், மற்றும் யாழ் திருவள்ளுவர் பண்பாட்டு மையம் போன்ற இந்தியாவின் பன்முக செயல்பாடுகள் மானுடய உதவி, கல்வி ஒத்துழைப்பு, கலாசார பரிமாற்றம் மற்றும் திறன் மேம்பாட்டுப் பட்டறைகள் போன்றவற்றையும் உள்ளடக்கியது என்றார். குறித்த பயிற்சி பட்டறையில், இந்தியாவின் முன்னணி ஊடக நிறுவனமான ‘பிஹைண்ட்வுட்ஸ்’ நிறுவனத்தைச் சேர்ந்த சிவதனுஷ் மற்றும் கிருத்திகா மருதநாயகம் ஆகியோர் நேரில் கலந்து கொண்டதுடன், ‘தி ஹிந்து’ பத்திரிகையின் பிரதான நிருபர் (தரவுப் பத்திரிகைத் துறை) விஞ்ஞேஷ் ராதாகிருஷ்ணன் மற்றும் ‘பிபிசி தமிழ்’ ஊடக நிறுவனத்தின் ஊடகவியலாளர் பிரபுராவ் ஆனந்தன் ஆகியோர் மெய்நிகர் ஊடாக கலந்துகொண்டனர். அவர்கள் தமது ஊடகத் துறையின் நடப்பு போக்குகள் மற்றும் நடைமுறை அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். பயிற்சி பட்டறையின் நிறைவில் கலந்து கொண்டவர்களுக்கான சான்றிதழ்களை இந்திய துணை தூதுவர் வழங்கி வைத்தார். https://www.virakesari.lk/article/220533
2 months ago
9 கிலோ சங்கிலியை போட்டுக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு போகின்ற ஆள் என்றால்... மண்டை பழுதான ஆளாக இருக்க வேண்டும். 🤣 அதுசரி... இவர் போட்டிருந்த துலா கயிறு போன்ற அந்த யானை கட்டுகின்ற சங்கிலியை... அங்கிருந்த ஊழியர்கள் ஒருவரும் கவனிக்காமாலா எம்.ஆர்.ஐ. ஸ்கேன் செய்ய உள்ளே அனுப்பியவர்கள். @ஈழப்பிரியன் இது உங்க ஏரியா. 😂 இதை... ட்ரம்ப் ஐயா கேள்விப்பட்டால், ரொம்ப கடுப்பாகப் போகின்றார். 😜
2 months ago
நிலாந்த ஜெயவர்த்தனவிற்கு மரண தண்டனை வழங்கவேண்டும் என்பது கத்தோலிக்க திருச்சபையின் நிலைப்பாடில்லை - அருட்தந்தை சிறில் காமினி 21 JUL, 2025 | 01:31 PM உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பொலிஸ் சேவையிலிருந்து நீக்கப்பட்டுள்ள பிரதி பொலிஸ்மா அதிபர் நிலாந்த ஜெயவர்த்தனவிற்கு மரணதண்டனை வழங்கவேண்டும் என்பது கத்தோலிக்க திருச்சபையின் நிலைப்பாடில்லை என கொழும்பு மறைமாவட்டத்திற்கான தகவல் தொடர்பு இயக்குநர் அருட்தந்தை சிரில் காமினி பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார் . இலங்கை கத்தோலிக்க திருச்சபையின் மக்கள் தொடர்பு இயக்குநர் அருட்தந்தை ஜூட் கிரிசாந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பொலிஸ் சேவையிலிருந்து நீக்கப்பட்டுள்ள பிரதி பொலிஸ்மா அதிபர் நிலாந்த ஜெயவர்த்தனவிற்கு மரணதண்டனை வழங்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளமை குறித்து கருத்து தெரிவிக்கையில் அருட்தந்தை சிரில்காமினி பெர்ணாண்டோ இவ்வாறு தெரிவித்துள்ளார். ஜூட் தனது தனிப்பட்ட கருத்தினையே ஞாயிற்றுக்கிழமை தெரிவித்ததாக குறிப்பிட்டார் என தெரிவித்துள்ள சிரில் காமினி பெர்ணாண்டோ இந்த விடயம் தொடர்பில் எந்த பிரச்சினையும் இல்லை என தெரிவித்துள்ளார். இலங்கை கத்தோலிக்க திருச்சபையும், உலகளாவிய திருச்சபையும் மரணதண்டனையை ஏற்றுக்கொள்வதில்லை என அவர் தெரிவித்துள்ளார். 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழு மற்றும் உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையிலேயே நிலாந்த ஜெயவர்த்தன பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ள சிறில் காமினி பெர்ணாண்டோ ஜனாதிபதி ஆணைக்குழுவின் அனைத்து பரிந்துரைகளையும் நடைமுறைப்படுத்தவேண்டும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம், என குறிப்பிட்டுள்ளார் உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்த விசாரணையின் மூலம் மேலும் பல விடயங்கள் தெரியவரும் என எதிர்பார்க்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார். சிஐடியின் இயக்குநராக ஷானி அபயசேகரவையும்,பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக ரவிசெனிவிரட்னவையும் நியமிக்கவேண்டும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை 2020இல் பதவி இடமாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகளை மீண்டும் பணிக்கு அமர்த்தவேண்டும், என்பதே கர்தினாலின் விருப்பம் அவர் பெயர் எதனையும் குறிப்பிடவில்லை என அருட்தந்தை சிறில் காமினி பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/220532
2 months ago
என்னுடைய பிற்போக்குத்தனம் இருக்கட்டும்....இலங்கை போன்ற நாட்டுக்கு ...தந்தை பெயர் அற்ற குழந்தை முறை அனாவசியமானது...இதனைவிட எத்தனையோ தேவைகள் நாட்டில் இருக்கின்றன ...முதலில் அதில் கவனம் செலுத்தலாம் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து..
2 months ago
பின்னே…. எங்களுக்கு எந்த தீமையும் செய்ய முடியாத தமிழ் நாட்டு அரசியல்வாதிகளை மட்டும் வாட்டி எடுப்போம்… ஆனால் நாம் வாழும் நாடுகளை, நாம் கொலிடே போகும் இலங்கை அரசியல்வாதிகளை கண்டுக்க மாட்டோம் என்றால் அதை சொல்லத்தானே வேணும்? ஏலும் எண்டால் இலங்கை போய் அனுரவின் புஞ்சி அம்மே பற்றி சிறி அண்ணையை ஒரு யூடியூப் பதிவு போடச்சொல்லவும். 🤣
2 months ago
தமிழ் நாட்டு மக்கள் நலனுக்கு ? ஆம் ஈழத்தமிழர் நலனுக்கு - இல்லை. இந்த இடத்தில்தான் உங்கள் “நானும் தமிழ் நாட்டு மக்களின் நலனுக்காகவே எழுதுகிறேன்” வேடம் கலைந்து போகிறது 🤣. கள்ளு குடிச்சால் இன்னொரு ஈரல் முளைக்கும்?
2 months ago
திருவனந்தபுரத்தில் 5 வாரமாக சிக்கியுள்ள பிரிட்டனின் அதிநவீன போர் விமானம் புறப்படத் தயார் - என்ன நடந்தது? படக்குறிப்பு,அவசரநிலையைத் தொடர்ந்து F-35B விமானம் திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது. கட்டுரை தகவல் கீதா பாண்டே அஷ்ரஃப் படன்ன பிபிசி செய்திகள் திருவனந்தபுரம், கேரளா 8 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியாவின் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் ஐந்து வாரங்களுக்கும் மேலாக நிற்கும் பிரிட்டனின் அதிநவீன போர் விமானம் செவ்வாய்க்கிழமையன்று புறப்பட உள்ளது. F-35பி எனும் அந்த போர் விமானம், "இன்று ஹேங்கரிலிருந்து வெளியே கொண்டு வரப்படும். பிறகு செவ்வாய்க்கிழமை புறப்பட வேண்டும் என திட்டமிடப்பட்டுள்ளது," என்று பிபிசியிடம் தெரிவித்த விமான நிலைய செய்தித் தொடர்பாளர், அதுகுறித்து, "எங்களிடம் தொழில்நுட்ப விவரங்கள் எதுவும் இல்லை"என்று கூறினார். கடந்த ஜூன் 14-ஆம் தேதி, இந்தியப் பெருங்கடலின் மீது பறந்து கொண்டிருந்த போது மோசமான வானிலை காரணமாக, கேரளாவின் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் F-35பி விமானம் தரையிறக்கப்பட்டது. பின்னர், அதில் தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டது. இந்தியாவில் இவ்வளவு நீண்ட காலம் இந்த விமானம் தங்கியிருந்தது மக்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தியது. இவ்வளவு நவீன விமானம் எப்படி ஒரு வெளிநாட்டில் இவ்வளவு நாட்கள் சிக்கித் தவிக்க முடியும் என்ற கேள்விகளையும் எழுப்பியது. பட மூலாதாரம்,PTI படக்குறிப்பு,திருவனந்தபுரம் விமான நிலையத்தில் உள்ள பராமரிப்பு மற்றும் பழுது சரிசெய்யும் மையத்திற்கு, ஜெட் விமானம் இழுத்துச் செல்லப்பட்டுள்ளது. எச்.எம்.எஸ். (HMS) பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ் போர்க்கப்பலைச் சேர்ந்த F-35பி விமானம் திரும்ப முடியாமல் போனதால், ராயல் கடற்படையின் பொறியாளர்கள் அதைச் சரிசெய்ய வந்தனர். ஆனால், அவர்களால் விமானத்தைப் பழுதுபார்க்க முடியவில்லை. இரண்டு வாரங்களுக்கு முன், பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் 14 பொறியாளர்கள் கொண்ட குழுவை, "திருவனந்தபுரம் விமான நிலையத்துக்கு F-35பி விமானத்தை ஆய்வு செய்து பழுதுபார்க்க" அனுப்பியதாகத் தெரிவித்தது. அந்தக் குழு, விமானத்தின் இயக்கம் மற்றும் பழுது பார்க்கும் செயல்முறைக்குத் தேவையான சிறப்பு உபகரணங்களுடன் வந்ததாக ஓர் அறிக்கை தெரிவிக்கிறது. அப்போது எடுக்கப்பட்ட வீடியோக்களில், F-35பி விமானம் இழுத்துச் செல்லப்படுவது தெரிந்தது. தொழில்நுட்ப வல்லுநர்களால் விமானத்தை சரிசெய்ய முடியாவிட்டால், அதைப் பிரித்து சி-17 குளோப்மாஸ்டர் போன்ற பெரிய சரக்கு விமானத்தில் எடுத்துச் செல்ல வேண்டியிருக்கும் என்பது போன்ற ஊகங்கள் இருந்தன. கடந்த இரண்டு வாரங்களாக, இந்தியாவில் உள்ள பிரிட்டன் தூதரகமும் பாதுகாப்பு அதிகாரிகளும் பழுதுபார்ப்பு விவரங்களைப் பகிர்ந்து கொள்ள மாட்டோம் என்று பிபிசியிடம் தெரிவித்தனர். ஆனால் திங்களன்று, "விமானம் பறக்கத் தகுதியாகி விட்டது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது" என்று விமான நிலைய அதிகாரி ஒருவர் பிபிசியிடம் கூறினார். திங்கட்கிழமை காலை அதனை ஹேங்கரில் இருந்து வெளியே எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது, அது புறப்படும் சரியான நேரம் "இன்னும் தெரிவிக்கப்படவில்லை, லண்டனுக்கு செல்லும் வழியில் எந்த விமான நிலையத்தில் எரிபொருள் நிரப்பப்படும், அல்லது தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் உபகரணங்களை திருப்பி கொண்டு செல்லும் விமானம் எப்போது வரும்" என்பது இன்னும் தெரிவிக்கப்படவில்லை என்று அவர் குறிப்பிட்டார். அமெரிக்காவைச் சேர்ந்த லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் எஃப்-35பி போர் விமானங்கள் மிகவும் நவீன ஸ்டெல்த் (எதிரி ரேடார்களுக்கு எளிதில் புலப்படாத) போர் விமானங்களாகும். குறுகிய தூரத்தில் மேலெழும்பிப் பறக்கும் திறன் மற்றும் செங்குத்தாகத் தரையிறங்கும் இவற்றின் ஆற்றல் மிகவும் பாராட்டப்படுகிறது. திருவனந்தபுரம் விமான நிலைய ஓடுதளத்தில் தனியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த "எஃப் -35பி" விமானம் கேரளாவின் பருவமழையில் நனையும் காட்சிகள் சமூக வலைதளங்களில் நகைச்சுவைகளும், மீம்ஸ்களும் உருவாகக் காரணமாக அமைந்தன. "கடவுளின் சொந்த நாடு" என்று வர்ணிக்கப்படும் கேரளாவின் இயற்கை அழகை விட்டு இந்த விமானம் வெளியேற விரும்பவில்லை என்று பலரும் கூறத் தொடங்கினர். மேலும், 110 மில்லியன் டாலர் (80 மில்லியன் யூரோ) மதிப்புள்ள இந்த போர் விமானம் சிக்கியிருந்த விவகாரம், பிரிட்டன் நாடாளுமன்றத்திலும் விவாதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cd6gdjq1vx9o
2 months ago
முதல்வர் ஸ்டாலின் உடல்நிலை.. அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட புதிய அறிக்கை Mani Singh SPublished: Monday, July 21, 2025, 21:40 [IST] சென்னை: தமிழக முதல்வர் ஸ்டாலின் லேசான தலைசுற்றல் காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சில பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் அவரது உடல்நலம் குறித்து அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. மு.க.ஸ்டாலின் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவலறிந்து அவரது மனைவி துர்கா ஸ்டாலின், மகனும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின், மருமகள் கிருத்திகா, மகள் செந்தாமரை, மருமகன் சபரீசன், பேரன் இன்ப நிதி உள்ளிட்ட குடும்பத்தினர் விரைந்து வந்தனர். தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன், எ.வ. வேலு, மா. சுப்பிரமணியன், மா.சுப்பிரமணியன் உள்பட அமைச்சர்களும், நிர்வாகிகளும் வருகை தந்தனர். அப்பல்லோ மருத்துவமனையில் லேசான தலைசுற்றல் காரணமாக முதல்வர் ஸ்டாலின் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது. இந்த நிலையில் அவரது உடல்நலம் குறித்து அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:- முதல்வர் ஸ்டாலின் மேலும் 3 நாட்கள் ஓய்வெடுக்க வேண்டும். மருத்துவரின் அறிவுரைப்படி வேறுசில பரிசோதனைகளை செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனையில் இருந்தவாறே உத்தியோகப்பூர்வ கடமைகளை முதல்வர் நிறைவேற்றுவார். முன்னதாக, இன்று காலை அப்பல்லோ மருத்துவமனையின் மருத்துவ பணிகள் இயக்குனர் அனில் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், மு.க. ஸ்டாலின் வழக்கமான காலை நடைப்பயிற்சி மேற்கொண்ட போது, லேசான தலைச்சுற்றல் ஏற்பட்டிருக்கிறது. இந்த அறிகுறிகளை மதிப்பீடு செய்வதற்காக, அவர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தேவையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன' என்று கூறப்பட்டிருந்தது. https://tamil.oneindia.com/news/chennai/doctors-advise-cm-stalin-to-rest-for-3-more-days-apollo-hospital-new-report-722259.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=News-Cards டிஸ்கி விரைவில் முதலமைச்சர் இட்லி சாப்பிட்டார், நலமாக உள்ளார் ? முதல்வர் ஸ்டாலின் அப்பல்லோவில் இருந்து டிஸ்சார்ஜ் எப்போது? உதயநிதி ஸ்டாலின் கொடுத்த பதில் Mani Singh SUpdated: Monday, July 21, 2025, 21:03 [IST] சென்னை: முதல்வருக்கு நாளை சில பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட இருப்பதாகவும் இரண்டு நாட்கள் ஓய்வு எடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாகவும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். முதல்வர் ஸ்டாலின் 2 நாட்களில் வீடு திரும்புவார் என்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். இதையடுத்து இதற்கு பரிசோதனை செய்வதற்காக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகிறது. முதல்வர் ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து அமைச்சர் துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்தனர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் துரைமுருகன், முதல்வர் ஸ்டாலின் நலமுடன் உள்ளதாக தெரிவித்தார். இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் 2 நாட்களில் வீடு திரும்புவார் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். முதல்வரை சந்தித்துவிட்டு வந்தபோது செய்தியாளர்களை சந்தித்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:- முதல்வருக்கு நாளை சில பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது. இரண்டு நாட்கள் ஓய்வு எடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். 2 நாளில் வீடு திரும்புவார்" என்று கூறினார். முன்னதாக நடிகர் ரஜினிகாந்த் முதல்வர் ஸ்டாலினிடம் உடல்நலம் குறித்து விசாரித்துள்ளார். இதேபோல் நடிகர் கமல்ஹாசனும் முதல்வர் ஸ்டாலின் உடல் நலன் குறித்து கேட்டறிந்துள்ளார். https://tamil.oneindia.com/news/chennai/when-will-chief-minister-stalin-be-discharged-from-apollo-hospital-udhayanidhi-says-this-722255.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=News-Cards
2 months ago
Published By: RAJEEBAN 21 JUL, 2025 | 02:26 PM இஸ்ரேல் உணவு விநியோகத்தினை முடக்கியுள்ள நிலையில் காசாவில் பட்டினியால் நான்குவயது சிறுமி உயிரிழந்த பரிதாபம் இடம்பெற்றுள்ளது. ஞாயிற்றுக்கிழமை நான்கு வயது ரஜான் அபு ஜகெர் உயிர்வாழ்வதற்கான தனது போராட்டத்தினை முடித்துக்கொண்டுள்ளாள். பட்டினி மற்றும் மந்தபோசாக்கினால் ஏற்பட்ட பாதிப்புகளால் இந்த சிறுமி மத்திய காசாவில் உள்ள மருத்துவமனையில் உயிரிழந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 2023 ஒக்டோபர் ஏழாம் திகதிக்கு பின்னர் காசாவில் 76 சிறுவர்கள் மந்தபோசாக்கினால் உயிரிழந்துள்ளனர் என காசாவின் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மார்ச் மாதம் இஸ்ரேல் உணவுவிநியோகத்தை தடை செய்த பின்னரே மந்தபோசாக்கு பட்டினியால் அனேக மரணங்கள் இடம்பெற்றுள்ளன என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. கடந்த நான்கு நாட்களில் உயிரிழந்த சிறுவர்களில் ரசானும் ஒருவர் .மூன்று மாத குழந்தையொன்றும் உயிரிழந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் காசாவில் பட்டினி காரணமாக 18 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவித்துள்ள காசாவின் சுகாதார அமைச்சு இது அந்த பகுதியில் நெருக்கடி நிலை மேலும் மோசமடைவதை வெளிப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது. ரசானை சிஎன்என் ஒரு மாதத்திற்கு முன்னர் சந்தித்தது, அவ்வேளை அவள் ஏற்கனவே பட்டினியால் பலவீனமானவளாக உடல் மிகவும் மெலிந்தவளாக காணப்பட்டாள். சிறுமியின் தாயார் தஹிர் அபு டகெர் பால்மா வேண்டுவதற்கு தன்னிடம் பணம் இல்லை என தெரிவித்திருந்தார். யுத்தத்திற்கு முன்னர் அவளது உடல்நிலை சிறப்பானதாக காணப்பட்டது, ஆனால் யுத்தம் ஆரம்பித்த பின்னர் மந்தபோசாக்கு காரணமாக அவளின் உடல்நிலை மோசமடைய தொடங்கியது, அவளை வலுப்படுத்துவதற்கு எதுவுமில்லை என தாயார் தெரிவித்திருந்தார். https://www.virakesari.lk/article/220540
2 months ago
21 JUL, 2025 | 03:15 PM (நெவில் அன்தனி) சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் நடத்தப்படும் ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் அடுத்த மூன்று அத்தியாயங்களினது இறுதிப் போட்டிகளையும் இங்கிலாந்திலேயே நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் பேரவையின் வருடாந்த பொதுச் சபைக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டது. இதற்க அமைய 2027, 2029, 2031 ஆகிய வருடங்களில் நடைபெறவுள்ள ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் அத்தியாயங்களினதும் இறுதிப் போட்டிகள் இங்கிலாந்தில் அரங்கேற்றப்படும். 2021, 2023, 2025 ஆகிய மூன்று வருடங்களில் நடைபெற்ற இறுதிப் போட்டிகளை இங்கிலாந்து மற்றம் வேல்ஸ் கிரிக்கெட் சபை வெற்றிகரமாக நடத்தியதை கருத்தில் கொண்டே அடுத்த மூன்று அத்தியாயங்களுக்கான இறுதிப் போட்டிகளை நடத்துவதற்கான அனுமதியை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சபைக்கு ஐசிசி வழங்கியுள்ளது. இந்தக் கூட்டத்தின்போது இடம்பெயர்ந்துள்ள ஆப்கானிஸ்தான் வீராங்கனைகளுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பான முன்னேற்றம் குறித்தும் ஆராயப்பட்டது. ஐசிசியின் பிரதித் தலைவர் இம்ரான் கவாஜாவின் மேற்பார்வையில் ஐசிசி, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை, இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சபை, கிரிக்கெட் ஒஸ்ட்ரேலியா ஆகியன கூட்டிணைந்து இதற்கான முயற்சியைத் தொடர்கின்றன. இந்த திட்டம் உயர் செயல்திறன் கொண்ட முயற்சிகள், உள்நாட்டு விளையாட்டு வாய்ப்புகள் மூலம் கட்டமைக்கப்பட்ட ஆதரவு வழங்குவதையும் இந்தியாவில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஐசிசி மகளிர் உலகக் கிண்ணம், இங்கிலாந்தில் நடைபெறவுள்ள 2026 ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ணம் உட்பட முக்கிய ஐசிசி உலகளாவிய நிகழ்ச்சிகளில் ஆப்கானிஸ்தானை பங்குபற்றச் செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இதேவேளை, ஐக்கிய அமெரிக்க கிரிக்கெட் நிறுவனத்தின் முந்தைய நிலைப்பாட்டை உன்னிப்பாக அவதானித்து வருவதாக ஐசிசி கூறியுள்ளது. அடுத்த மூன்று மாத காலத்திற்குள் விரிவான நிருவாக சீர்திருத்தங்களை செய்வதுடன் சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தலை நடத்த வேண்டும் எனவும் ஐசிசி வலியுறுத்தியுள்ளது. இதேவேளை, ஐக்கிய அமெரிக்க கிரிக்கெட் நிறுவனமானது பொருத்தமானதாகக் கருதும் நடவடிக்கைகளை எடுக்கும் உரிமையை ஐக்கிய அமெரிக்க கிரிக்கெட் நிறுவன ம் கொண்டுள்ளதாகவும் ஐசிசி தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/220543
2 months ago
எங்கை இருந்த பிரச்சனையை எங்கை கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறானுகள் பாருங்க...😂
Checked
Sun, 09/28/2025 - 03:32
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed