2 months ago
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா – கொடிச்சீலைக்கான காளாஞ்சி கையளிப்பு July 21, 2025 10:50 am வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழாவை முன்னிட்டு கொடிச்சீலை வடிவமைப்பாளர்களிடம் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு இன்று (21.08.2025) காலை இடம்பெற்றது. வள்ளியம்மை திருக்கல்யாணப் படிப்புடன் பந்தற்கால் நாட்டுதல் நடைபெற்று பாரம்பரிய முறைப்படி கொடிச்சீலை வழங்கும் மரபுடையவர்களிற்கான காளாஞ்சி மாட்டுவண்டில் மூலம் நல்லூரிலிருந்து கல்வியங்காட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டு கலாச்சார முறைப்படி பெருந்திருவிழாவுக்கான பத்திரிகையும், காளாஞ்சியும் கையளிக்கப்பட்டன. ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா இம்மாதம் 29ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://oruvan.com/annual-festival-of-nallur-kandaswamy-temple/
2 months ago
நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிக்கத் தயாராகும் அரசாங்கம் அரசாங்கம் நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிக்கத் தயாராகி வருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது கடந்த கால தேர்தல் பிரச்சாரத்தின் போது தற்போதைய ஆட்சியாளர்களால் மக்களுக்கு அளிக்கப்பட்ட ஒரு முக்கிய வாக்குறுதியாகும். தற்போதைய ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழித்து புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்துவதாக அறிவித்தார். இருப்பினும், அரசியலமைப்பு வரைவுக் குழுவை நியமிப்பதோ அல்லது அது தொடர்பான எந்தவொரு ஆரம்ப வேலைகளோ இதுவரை செய்யப்படவில்லை. இத்தகைய சூழ்நிலையில், நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கான ஒரு திட்டத்தை சமர்ப்பிக்க ஜனாதிபதி தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும், அரசாங்கம் நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிக்கவில்லை என்றால், எதிர்க்கட்சி ஏற்கனவே அந்த திட்டத்தை ஒரு தனிநபர் பிரேரணையாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. https://akkinikkunchu.com/?p=333556
2 months ago
ஜப்பான் மேற்சபை தேர்தல் - பெரும்பான்மையை இழந்தது ஆளும் கட்சி 21 Jul, 2025 | 10:57 AM ஜப்பானின் மேற்சபையில் ஆளும் லிபரல் ஜனநாயக கட்சி பெரும்பான்மையை இழந்துள்ளது அந்த நாட்டு அரசியலில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. எனினும் பிரதமர் சிகேரு இசிபா பதவி விலகும் எண்ணம் எதுவுமில்லை என தெரிவித்துள்ளார். அதிகரிக்கும் விலைகள் அமெரிக்காவின் வரி அதிகரிப்பு குறித்த அச்சுறுத்தல் போன்றவற்றினால் ஆளும்கட்சி மீது அதிருப்தியில் உள்ள மக்கள் ஞாயிற்றுக்கிழமை மிகவும் கடுமையான போட்டி நிலவிய தேர்தலில் வாக்களித்தனர். 248 உறுப்பினர்கள் கொண்ட மேற்சபையில் தனது கட்டுப்பாட்டை தக்கவைப்பதற்கு ஆளும் கட்சிக்கு 50 ஆசனங்கள் தேவைப்பட்ட நிலையில் அந்த கட்சி 47 ஆசனங்களை மாத்திரம் பெற்றுள்ளது. பிரதான எதிர்க்கட்சியான அரசமைப்பு ஜனநாயக கட்சி 22 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.மேற்சபை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஆறுவருடங்கள் . ஜப்பான் நாடாளுமன்றத்தின் கீழ்சபையில் ஏற்கனவே பெரும்பான்மையை இழந்துள்ள நிலையிலேயே ஆளும் கட்சி மேற்சபையிலும் பெரும்பான்மையை இழந்துள்ளது. இதேவேளை மிகவும்கடுமையான தேர்தல் முடிவை முழுமனதுடன் ஏற்றுக்கொள்வதாக 68 வயது பிரதமர் சிகேரு இசிபா தெரிவித்துள்ளார். நீங்கள் தொடர்ந்தும் பிரதமராகவும் கட்சி தலைவராகவும் நீடிப்பீர்களா என்ற கேள்விக்கு ஜப்பான் பிரதமர் ஆம் அது சரியானது என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/220518
2 months ago
"சிறுபான்மை இனம்" என்ற பதத்திற்குப் பதிலாக "சகோதர இனம்" என்ற பதம் அறிமுகம் 21 Jul, 2025 | 10:53 AM கண்டி மாவட்ட சர்வமத அமைப்பும், தேசிய சமாதான பேரவையும் இணைந்து "சிறுபான்மை இனம்" என்ற பதத்திற்குப் பதிலாக "சகோதர இனம்" என்ற பதத்ததைப்பிரயோகிக்கும் வேலைத்திட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளது. மேற்படி வேலைத்திட்டத்தைப் பிரபல்யப்படுத்தும் வகையில் பரவலாக ஸ்டிகர்களையும் சுவரொட்டிகளையும் ஒட்டுப் வேலைத்திட்டம் ஒன்றையும் ஆரம்பித்துள்ளது. கண்டி மாவட்ட சர்வமத அமைப்பின் ஏற்பாட்டாளர் காமினி ஜயவீர இது பற்றித் தெரிவிக்கையில், நாம் நீண்டகாலமாக இன ஒற்றுமைக்காகப் பாடுபட்டு வருகிறோம். அதில் ஒரு அங்கமாக ‘சிறுபான்மை இனம்’ என்ற பதற்குப் பதிலாக ‘சகோதர இனம்’ என்ற சொல்லைப் பாவிப்பது தொடர்பாக நீண்டகாலமாக முயற்சி செய்து வருகிறோம். இதற்காக, தேசிய சமாதான பேரலை எமக்கு ஒத்துழைப்பை வழங்கி வருகிறது. தேசிய மட்டத்தில் இதணை நாம் முன் எடுக்க உள்ளோம். எமது மாதாந்த அமர்வு மற்றும் பல்வேறு வகையான செயலமர்வுகளில் நாம் சகோதர இனம் என்ற சொல்லையே பயன் படுத்துகிறோம். பெரும் பான்மை, அல்லது சிறுபான்மை என்ற பதங்களைப் பயன் படுத்தும் போது ஒரு இனத்தை உயர்த்துவது போன்ற மன நிலையும் மற்றும் ஒரு இனத்தை தாழ்த்துவது போன்ற மன நிலையும் ஏற்படுகிறது. அதே நேரம் சகோதர இனம் என்று கூறும் போது சகோதர உணர்வு ஏற்படுகிறது. எனவே அத்தகைய சொற்பிரயோகத்தை பிரபல்யப்படுத்தும் பல நிகழ்வுகளை ஒழுங்கு செய்து வருகிறோம். அதில் ஒன்றாகவே மேற்படி ஸ்டிகர் போராட்டமும் அமைந்துள்ளது என்றார். https://www.virakesari.lk/article/220516
2 months ago
செம்மணிப்புதைகுழி வழக்கைக் கையிலெடுத்தது குற்றப்புலனாய்வுப் பிரிவு; அகழ்வில் இன்று பிரசன்னமாவர் செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு நடவடிக்கைகளின் அடுத்த கட்டப் பணிகள் இன்று ஆரம்பமாகவுள்ள நிலையில், இன்று அகழ்வு நடவடிக்கைகளின்போது குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் பிரசன்னமாவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. செம்மணி, சித்துப்பாத்தி மனிதப்புதைகுழி தொடர்பான விசாரணைகள் இதுவரை யாழ்ப்பாணம் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வந்தன. இந்த விசாரணைகளை மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவின் கீழ் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. பொலிஸ்மா அதிபரின் உத்தரவுக்கு அமையவே நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. சித்துப்பாத்தி மனிதப்புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டு இன்று மீண்டும் ஆரம்பமாகவுள்ளன. இன்று குற்றப்புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் அகழ்வு நடவடிக்கைகளின் போது பிரசன்னமாவார்கள் என்று தெரியவருகின்றது. https://newuthayan.com/article/செம்மணிப்புதைகுழி_வழக்கைக்_கையிலெடுத்தது_குற்றப்புலனாய்வுப்_பிரிவு;_அகழ்வில்_இன்று_பிரசன்னமாவர்
2 months ago
மைத்திரி, ரணில் மற்றும் கோட்டாவை நீதியில் முன்நிறுத்துங்கள் – கத்தோலிக்க திருச்சபை கோரிக்கை உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதிகள் மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்க மற்றும் கோட்டபாய ராஜபக்ச ஆகியோரை நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கத்தோலிக்க மக்கள் தொடர்பு பணிப்பாளர் அருட்தந்தை ஜூட் கிருஷாந்த இதனை தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக குற்றவாளிகளாகக் கண்டறியப்பட்ட எவரும் அவர்களின் பதவியைப் பொருட்படுத்தாமல் தண்டிக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக கடமை தவறிய குற்றச்சாட்டுகள் தொடர்பாக மாநில புலனாய்வு சேவையின் முன்னாள் இயக்குநர் நிலந்த ஜயவர்தனவை சேவையிலிருந்து நீக்கியதற்காக அவர் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்தார். “ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் ஆறு ஆண்டுகளாக முன்வைத்து வரும் இந்தக் கோரிக்கையை நிறைவேற்றுமாறு ஜனாதிபதி, ஐஜிபி மற்றும் சிஐடியின் இயக்குநர் ஜெனரலிடம் நாங்கள் வேண்டுகோள் விடுக்கிறோம். அப்போதுதான் எதிர்காலத்தில் மக்கள் நியாயமாகவும் நியாயமாகவும் வாழக்கூடிய ஒரு நாடு கட்டியெழுப்பப்படும்.” என அவர் மேலும் தெரிவித்துள்ளார். https://www.samakalam.com/மைத்திரி-ரணில்-மற்றும்-க/
2 months ago
ஜெனீவாவில் முறையிட, ஓய்வு பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் சங்கம் தீர்மானம்! adminJuly 21, 2025 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் இரத்து செய்வதை எதிர்த்து ஓய்வு பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் சங்கம், ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் நாடாளுமன்றங்களுக்கு இடையேயான ஒன்றியத்தில் முறைப்பாடு செய்ய முடிவு எடுத்துள்ளன. இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள சங்கத்தின் செயலாளர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமசிறி மானகே,“ முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்ய அமைச்சரவை ஏற்கனவே முடிவு எடுத்துள்ளது. இது மிகவும் நியாயமற்ற முடிவு என்று கூறி தங்கள் மருந்துகளைப் பெற ஓய்வூதியம் வரும் வரை காத்திருக்கும் வயதான நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் இந்த முடிவால் பெரும் சிக்கலில் சிக்குவார்கள்” என்றும் சுட்டிக்காட்டினார். ஒரு குடும்பத்தின் அடிப்படைத் தேவைகளைக் கூட ஓய்வூதியத்தால் பூர்த்தி செய்ய முடியாத சூழ்நிலையில் ஓய்வூதியத்தை இரத்து செய்வதால் ஏற்படும் சூழ்நிலையை பரிசீலிக்குமாறும் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார் https://globaltamilnews.net/2025/218142/
2 months ago
கசூரினா கடற்கரையில் தீ! adminJuly 21, 2025 யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல சுற்றுலா தளங்களில் ஒன்றான கசூரினா கடற்கரையில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு (20.07.21) பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் அறிந்து கடற்கரைக்கு விரைந்த பிரதேச சபையினர் , கடற்படையினர் ஆகியோர் நீண்ட போராட்டத்தின் பின் தீயினை கட்டுக்குள் கொண்டு வந்தனர். குறித்த தீ விபத்தில் கடற்கரையில் காணப்பட்ட சவுக்கு மரங்கள், பனை மரங்கள் என்பன தீயில் கருகி நாசமாகியுள்ளது தீ விபத்துக்கான காரணம் தெரியவராத நிலையில், காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். https://globaltamilnews.net/2025/218136/
2 months ago
2 months ago
சிறையில் ஒபாமா; ட்ரம்ப் வெளியிட்ட சர்ச்சைக்குரிய காணொளி! அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அண்மைய இலக்கு முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவாகத் தெரிகிறது. 2016 ஆம் ஆண்டு தேர்தலில், ஒபாமாமோசடி செய்ததாக ட்ரம்ப் நிர்வாகம் குற்றம் சாட்டிய சில நாட்களுக்குப் பின்னர், முன்னாள் ஜனாதிபதி வெள்ளை மாளிகை ஓவல் அலுவலகத்திற்குள் புலனாய்வுப் பிரிவு (FBI) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதைக் காட்டும் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட காணொளியை ட்ரம்ப் பகிர்ந்துள்ளார். இந்த காணொளி, எவரும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர் அல்ல என்று கூறுவதோடு தொடங்குகிறது. பின்னர், முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உட்பட பல்வேறு ஜனநாயகக் கட்சித் தலைவர்கள், “யாரும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர் அல்ல” என்று கூறுவதைக் காட்டுகிறது. காணொளியின் சில நொடிகளுக்குப் பின்னர், ஒபாமா செம்மஞ்சள் நிற சிறைச்சலை சீருடையுடன், தடுப்புக் காவலில் இருப்பதை காட்டுகின்றது. ட்ரம்ப் தனது சமூக தளத்தில் வெளியிட்ட இந்த காணொளி வைரலாகி, விமர்சனங்களையும் பெற்றுள்ளது. 2016 தேர்தலில் ட்ரம்பின் வெற்றியைக் குறைமதிப்பிற்கு உட்படுத்த முயற்சிப்பதாக தேசிய புலனாய்வு இயக்குநர் (DNI) குற்றம் சாட்டியுள்ள பின்னணியில் இந்த காணொளி வந்துள்ளது. ஒபாமா மற்றும் முன்னாள் மூத்த அமெரிக்க தேசிய பாதுகாப்பு அதிகாரிகள் மீது வழக்குத் தொடரப்பட வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார். இதனிடையே, சுவாரஸ்யமாக இந்த ஆண்டு தொடக்கத்தில் ஜனவரியில் நடந்த முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டரின் இறுதிச் சடங்கில் ட்ரம்ப் மற்றும் ஒபாமா நட்புடன் உரையாடினர். அவர்களின் எதிர்பாராத நட்பு தருணத்தின் படங்கள் சமூக ஊடகங்களில் வைரல் ஆகியது. https://athavannews.com/2025/1439913
2 months ago
நான் எழுதினது ... தங்கச்சிக்கு ஆசைப்பட்டு அவசரப்பட்ட தம்மபிக்கு பாருங்கோ....🙃
2 months ago
ஆபிரிக்க நாடுகளில் இந்த வழக்கம் உள்ளது. பள்ளி மாணவிகளுக்குக் குழந்தைகள் பிறந்தால் காலை நேரப் பிரார்த்தனையின் போது எல்லா மாணவர்களுக்கும் அறிவிப்பார்கள். மாணவியியும் தனது குடும்பப் பெயரை தந்தையாரின் பெயராக உபயோகிக்க அனுமதியும் உண்டு..! பார்ப்பனரால் அறிமுகப் பட்ட எமது பெயர் வைக்கும் முறையால், எங்களுக்குப் பிரச்சனைகள் ஏற்படக் கூடும் என்று நினைக்கிறேன்.
2 months ago
தங்கச்சி.
2 months 1 week ago
உலகிலேயே ஆணின் பெயரை மட்டும் சந்ததி பெயராக எடுத்து செல்கின்றார்கள்.
2 months 1 week ago
ஓ....அப்ப பழைய நினைப்பு இப்பவும் இருக்கோ? 😎
2 months 1 week ago
அந்த இடத்தில் ஒரு ஆமி காம்ப் திறக்கவேண்டும்..🤣
2 months 1 week ago
சொல்லத்தான் வந்தேன் தேவையில்லை என்றாகி விட்டது. எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது. அன்று அந்த சம்பவம் நடந்திருக்கக்கூடாது என சுட்டிக்காட்டப்பட்டு வருத்தம் தெரிவிக்கப்பட்டது, இன்று அது அப்படி நடந்திருக்காவிட்டால் இன்று இதை தவிர்த்திருக்க முடியாதுஎன எண்ணத் தோன்றும். அன்று உண்மை தெரியாமல் தவித்த உள்ளம் இன்று அது வெறும் தந்திரம் என தெளிவடைகிறது. நாம் ஒரு நிகழ்ச்சி நிரலோடு சுற்றுகிறோம், காலம் தன் நிகழ்ச்சி நிரலோடு சுற்றுகிறது. அறியப்படாத உண்மையுமில்லை, வெளிவராத ரகசியமுமில்லை. அன்று காதோடு காதாக பேசியது, இன்று கூரை மீதிருந்து அறிவிக்கப்படுகிறது. நேற்று தீயாகி எனப்பட்டவன் இன்று துரோகம் வெளிப்பட்டு நிற்கிறது.
2 months 1 week ago
மேலும் முன்னேற வாழ்த்துகள்
2 months 1 week ago
ஆம் ,முந்திய துடிப்பு இப்போது இல்லை என்றபடியால் மெதுவாகவே ஓட்டுவேன்.
2 months 1 week ago
மிருதங்க இசை வித்துவான் சண்முகரட்ணம் பிரணவநாதன் காலமானார் Posted on July 19, 2025 by தென்னவள் ஈழத்து இசைப்பாரம்பரியத்தின் முன்னோடிக் கலைஞர் மிருதங்க வித்துவான் சண்முகரட்ணம் பிரணவநாதன் காலமானார். அவர் கடந்த (16) ஆம் திகதி உடல்நலக் குறைவால் ஜேர்மனியில் காலமானார். 1951 ஓகஸ்ட் 13 ஆம் திகதி அன்று யாழ்ப்பாணம் உடுவிலில் இசைப்புலவர் சண்முகரட்ணம் மற்றும் ஜெயலக்ஷ்மி தம்பதியருக்கு மகனாகப் பிறந்த பிரணவநாதன், தனது தந்தையார் வழியிலேயே இசைப்புலைமை பெற்று, மிருதங்கக் கலையில் தேர்ச்சி பெற்று விளங்கினார். இலங்கையின் புகழ் பெற்ற கர்நாடக இசை வித்துவான் கலாசூடாமணி சண்முகராகவனின் இளைய சகோதரர் இவராவர். தாயகத்திலிருந்து புலம்பெயர்ந்து ஜேர்மனி நாட்டில் வாழ்ந்து வந்த இவர் ஐரோப்பிய நாடுகளில் நடைபெற்ற பல நூறு நிகழ்ச்சிகளில் மிருதங்க இசை மீட்டி மக்களை மகிழ்வித்து வந்தவர். இவரது மிருதங்க நாதம் என்பது மிகவும் உன்னதமானது. பாடகர்கள் ஒவ்வொருவருக்கும் ஏற்ற விதத்தில் மிருதங்க நாதத்தை வழங்கிப் புகழ்பெற்றவர். ஆடற்கலை அரங்கேற்றங்களிலும் இவரது மிருதங்க இசை மீட்டல் ஆடல் புரிகின்றவர்களுக்கு மிகச்சிறப்பான ஒத்திசைவாக இருக்கும். பல மாணாக்கர்களை ஐரோப்பிய தேசத்தில் உருவாக்கிய பெருமைக்குரியவர். அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகத்தின் முதுநிலைத் தேர்வு நடுவராகவும் பிரபல்யமான மிருதங்க ஆசிரியராகவும், அணிசேர் கலைஞருமாக விளங்கிய பிரணவநாதன் சங்கீதரத்தினம், லயஞானகுமாரன் ஆகிய பட்டங்களையும் பெற்றிருக்கிறார். இந்தியாவின் புகழ்பெற்ற இசைக்கலைஞர்களான சஞ்சய் சுப்ரமணியம், உன்னிகிருஷ்ணன், சுதா ரகுநாதன் உள்ளிட்ட பல முன்னணி கலைஞர்களுக்கு தனது மிருதங்க லயத்தால் அழகு சேர்த்தவர் ஐரோப்பிய நாடுகளில் கர்நாடக இசையைப் பரப்பும் பணியில் முன்னணி பங்கு வகித்தவர். மிகவும் நுண்ணியதுடன் அதீத ஈடுபாட்டுடனும், இசைக்காக வாழ்ந்த அற்புத மிருதங்க வித்துவான். அவரது மறைவு ஈழத்து இசைப்பாரம்பரியத்துக்கு பேரிழப்பாகும். அவரது நினைவுகள் அவர் மீட்டிப் பதிவாகியுள்ள மிருதங்க இசையூடாக இவ்வுலகம் உள்ளவரை ஒலித்துக்கொண்டே இருக்கும். அவரது நினைவுகளும் நிலைபெற்றிருக்கும். https://www.kuriyeedu.com/?p=686915
Checked
Sun, 09/28/2025 - 00:28
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed