புதிய பதிவுகள்2

01.11.1990 மணலாறு முந்திரிகைக்குளத்தில் அமைக்கப்பட்ட சிறிலங்காப்படைமுகாம் தாக்கியழிக்கப்பட்ட வரலாற்று...

1 month 4 weeks ago
01.11.1990 மணலாறு முந்திரிகைக்குளத்தில் அமைக்கப்பட்ட சிறிலங்காப்படைமுகாம் தாக்கியழிக்கப்பட்ட வரலாற்று... தமிழீழத்தின்.இதயபூமியான மணலாற்றில் தமிழர்களின் பாரம்பரிய நிலப்பரப்பிலிருந்து தமிழர்களை விரட்டிவிட்டு அதாவது வடக்குகிழக்கு மாகாணங்களைப் பிரிப்பதற்காக தமிழர்களின் தொடர் நிலப்பரப்பினைச் சிதைப்பதிற்கான நோக்கத்திற்காகவும் சிங்களபௌத்த பேரினவாதத்தின் திட்டமிட்ட சிங்கள குடியேற்றத்தை அதாவது சிங்கள மக்களைக் குடியேற்றுவதற்காகவும் அச்சிங்கள மக்களைப் பாதுகாப்பதற்காகவும் அமைக்கப்பட்ட பல மினிமுகாம்களில் மணலாறு முந்திரிகைக்குள மினிமுகாமும் ஒன்றாகும். இம்மினிமுகாமில் நூற்றிற்க்கும் மேற்பட்ட சிங்கள இராணுவத்தினர் இருந்தனர். 1990 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இப்பகுதியில் பெருமளவான சிங்களமக்களை குடியேற்றுவதற்கான முயற்சிகளில் இம்முகாம் படையினர் தீவிரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். இத்தகவல்களை மணலாற்று வேவு அணிகள் அப்போது மணலாறு மாவட்டத் தளபதியாக இருந்த லெப்.கேணல் அன்பு அவர்களிடம் கொடுத்தனர். வேவுத்தரவுகளை தீவிரமாக ஆராய்ந்த தளபதி அன்பு அவர்களும் தளபதி மேஐர். வீமன் அவர்களும் நிலமையின் விபரீதத்தை உணர்ந்து இம்முகாமை தாக்கி அழிக்கவேண்டும். எனமுடிவெடுத்து தலைவர் அவர்களிடம் இத்தகவல்கள் அனைத்தையும் தெரிவித்தனர். தலைவர் அவர்கள் அனைத்துத் தகவல்களையும் கேட்டறிந்தார். அதன் சாதகபாதக நிலைகளையும் எவ்வாறு தாக்குதல் நடாத்தவேண்டும் எனவும் அத்தாக்குதலின்போது சிங்களப் பொதுமக்களுக்குச் சிறுசேதமும் ஏற்படக்கூடாதென உறுதியாக தலைவர் அவர்கள் தளபதிக்கு கூறினார். இம்முகாம் கட்டாயம் அழிக்கப்படவேண்டும் எனக் கூறியதோடு அதற்கான ஆலோசனைகளையும் வழங்கி தளபதிகளை வழியனுப்பிவைத்தார். தலைவர் அவர்கள் கொடுத்த ஆலோசனைகளுக்கமைவாகவும் தலைவர் அவர்களின் சிந்தனைக்கேற்ப கடும்பயிற்சி இலகுவான சண்டை என்றதன் அடிப்படையில் வேவுநடவடிக்கைகளில் பெறப்பட்ட தகவல்களுக்கேற்ப தாக்குதலுக்கான பயிற்சிகள் தொடங்கப்பட்டன. தாக்குதலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட போராளிகளுக்கு மேஐர் செங்கோல் அவர்கள் தலைமையிலான போராளிகளால் முறையே நிசாம் வெட்டை மற்றும் ஜீவன் ஆகிய முகாம்களில் பயிற்சிகள் நடைபெற்றன. பயிற்சிகள் முடிவடைந்து தாக்குதற் திட்டம் தளபதி அன்பு அவர்களால் விளங்கப்படுத்தப்பட்டதுடன் தலைவர் அவர்களால் கொடுக்கப்பட்ட அறிவுரைகளையும் அன்பு அவர்கள் தெளிவாகக் கூறினார். தாக்குதலுக்கான இருநூறுபேர் கொண்ட அணிகள் தாயர்படுத்தப்பட்டன. இவ்வணிகள் கொக்குத்தொடுவாயிலிருந்து படகுகளில் சென்று கொக்கிளாய் கடல்நீரேரியைக்கடந்து தரையிறங்கி அங்கிருந்து நடந்துசென்று 01.11.1990 அன்று அதிகாலை ஒரு மணிவரை முந்திரிகைக்குள முகாமருகில் காத்திருந்து. அதிகாலை ஒருமணியளவில் மணலாறு முந்திரிகைக்குளத்தில் அமைக்கப்பட்ட சிங்களப்படையின் முகாம் மீது ஒரு வெற்றிகர அதிரடித்தாக்குதலைத் தொடுத்து வெற்றிகொண்டனர். குறிப்பிட்ட சிலநிமிடத்தில் முகாம் புலிகளின் பூரணகட்டுப்பாட்டிற்க்குள் வந்தது. தொடர்ந்து அந்தமுகாமை தக்கவைத்திருந்த போராளிகள் படைமுகாமை முற்றுமுழுதாக அழித்தொழித்துவிட்டு கைப்பற்றிய ஆயுதங்களுடன் தளம் திரும்பினார்கள். இதன் பின்னும் இதனை அண்டியபகுதிகளில் பல்வேறு தாக்குதல்கள் விடுதலைப்புலிகளால் படையினர் மீதுமேற்கொள்ளப்பட்டதால் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம் தடுத்து நிறுத்தப்பட்டது. இவ்வாறுதான் எம் தாயக பகுதி மீதான சிங்களத்தின் ஆக்கிரமிப்பு ஆசைகள் முறியடிக்கப்பட்டு வந்தன. இவ்வெற்றிகர அதிரடித் தாக்குதல்களுக்கான வேவுத்தகவல்களை மேஐர் .ரம்போ கப்டன்.விமல்ராஜ் தலைமையிலான போராளிகளால் சொல்லமுடியாத அர்ப்பணிப்புக்களுடன் சிறுகச்சிறுகச் சேகரித்துக்கொடுத்தனர். படைமுகாமின் தாக்ககுதல்களை களத்தில் நின்று மேஐர்.சங்கர் அவர்கள் வழிநடாத்த களமருத்துவத்தை கப்டன் இளங்கோ அவர்கள் தலைமையிலான போராளிகள் செவ்வனவே செய்தனர். இவ் அனைத்து நடவடிக்கைகளையும் ஒருங்கினைத்து முல்லை மணலாறு மாவட்டத் தளபதி அன்பு அவர்கள் வழி நடத்தினார். (1991ம் ஆண்டு முற்பகுதியின் பின்னர் தான் இயக்கத்தின் வளர்ச்சியும் அதன் நிர்வாக கட்டமைப்புக்காகவுமாக ஒருமாவட்டத்தில் சிறப்புத்தளபதி, தளபதி, துணைத்தளபதி எனும் கட்டமைப்பு பரிணாம வளர்ச்சி அடைந்தது.) இவ்வெற்றிகரத் தாக்குதலை களத்தில் நின்று வழிநடாத்திய.. மேஐர் .சங்கர்.அவர்களுடன் 2ம் லெப்ரினன்.மதுவன். வீரவேங்கை .முசோலினி . ஆகியோர் வீரச்சாவடைந்தனர். நீண்டகாலமாக 2ம் லெப்.மதுவனைப் பார்க்காத பெற்றோர் மதுவனைப் பார்பதற்காக மணலாற்று முகாமிற்க்குவந்திருந்தனர். ஆனால் அவ்வெற்றிச்சமரில் வீரச்சாவடைந்த மகனின் வித்துடலுடனே மதுவனின் பெற்றோர் வீடுதிரும்பினர். இப்படியான பல்வேறு அர்பணிப்புக்கள் தியாகங்கள் நிறைந்த போராட்டமாக தமிழீழவிடுதலைப் போராட்டம் திகழ்கிறது. கிட்டத்தட்ட முப்பதான்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற இச்சம்பவமானது அன்று இக்களமுனையில் நின்றவர்களால் மறக்கமுடியாத பெரும் சோக நிகழ்வாக இன்றும் அப்போராளிகளால் நினைவுகூரப்படுகிறது. அக்களமுனையில் நின்று இன்று புலம்பெயர்ந்து வாழ்பவர்களின் உள்ளத்திலிருந்து...... களத்தில்

(மாவீரர்) கணேசினி - பூவொன்று புயலானது!

1 month 4 weeks ago
பூவொன்று புயலானது! ❤️💛 பலாலி கிழக்கை பூர்வீக இடமாக கொண்ட கந்தசாமி-சின்னத்தங்கச்சி இணையரிற்கு இளைய மகளாக பிறந்தவள் தான் விஜயராணி. குடும்பத்திலே அவளுக்கு 3சகோதரர்களும் 1சகோதரியுமாக, அவளது குடும்பம் பலாலியிலே மிகவும் செளிப்புடன் வாழ்க்கையை வாழ்ந்துவந்தனர். விஜயராணி தனது ஆரம்பக்கல்வியை பலாலி வடக்கு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையிலே கற்றாள்,பின்னர் 1990.ஆனி.15 > பலாலி இடப்பெயர்வு காரணமாக தனது கல்வியை கொடிகாமம் திருநாவுக்கரசு மகாவித்தியாலயத்திலும் (தற்போது மத்திய கல்லூரியாக பெயர் மாற்றம் பெற்றுள்ளது) பின்னர் அச்சுவேலி- பத்தைமேனியில் வசித்த காலத்தில்- இடைநிலைக்கல்வியை அச்சுவேலி புனித தெரேசாள் மகளீர் கல்லூரியிலுமாக கற்றிருந்தாள். சிறுவயதிலிருந்தே மிகவும் துடிப்பானவளாக, பயமறியாதவளாக தன்னை வளர்த்துக்கொண்டவள், குறிப்பாக அன்றைய கால கட்டத்தில் வீதியால் செல்லும் சிங்களப் படைகளுடன் வாய்ச்சண்டை போடுவாள். எங்கட மண்ணில உவங்களுக்கு இங்க என்ன வேலை என்று அவள் அடிக்கடி தனக்குள் முனுமுனுத்துக்கொள்வாள். 2002 காலப்பகுதியிலே தாயின் இழப்பு அவளையும் அவளது குடும்பத்தையும் மிகவும் பாதித்திருந்தது. அந்த இழப்பிலிருந்து மீள்வதற்கு விஜயராணி மிகவும் கஷ்டப்பட்டாள், ஏனெனில் அச்சுவேலி வைத்தியசாலையில் அவளது மடியிலே தாயின் உயிர்பிரிந்தது அவளை மிகவும் வாட்டியிருந்தது! 2001/2002 போர்நிறுத்த ஒப்பந்தத்தின் நிமிர்த்தம் > விடுதலை பு*லிகளின் அரசியல் பிரிவினர் யாழ்குடாநாட்டுக்கு வருகை தந்திருந்த காலம் அச்சுவேலியிலே ஆண்,பெண் அரசியல் பிரிவு போராளிகள் தமது பணிகளை பக்கத்து பக்கத்து வீடுகளிலிருந்து மேற்கொண்டனர். பெண் போராளிகளுடன் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்ட விஜயராணி அவர்களுடன் மிகவும் பாசத்தோடு பழகலானாள், பின் அவர்களை தனது வீட்டிற்கு அழைத்து உணவு உபசரிப்பு வழங்குவதை வழக்கமாக கொண்டிருந்தாள். தானும் அவர்களை போன்று தேசத்துக்கான தனது கடமையை செய்யவென எண்ணி 2003ம் ஆண்டின் பிற்பகுதியிலே பெண்போராளிகளின் உதவியுடன் வன்னிநோக்கி தனது தேசத்துக்கான பயணத்தை ஆரம்பித்தாள். 3மாத அடிப்படை பயிற்சியை பெற்றுக்கொண்டவள் பயிற்சிப்பாசறையிலே மிகவும் திறம்பட செயற்பட்டு தன்னை புடம்போட்டுக்கொண்டாள். இயக்கம் அவளுக்கு இட்ட பெயர் 'கணேசினி'. கணேசினியை 2ம் லெப். மாலதி படையணி உள்வாங்கிக்கொணடது. அன்றிலிருந்து அவள் சக தோழிகளுடன் மிகவும் பாசத்துக்குரியவளானாள். சிறிது காலத்தின் பின்னர் லெப்.கேணல் குட்டிசிறீ மோட்டார் படையணி கணேசினியை உள்வாங்கியது! கணேசினி வன்னிக்கு சென்று இயக்கத்திலே சேர்ந்திருந்தமையால் அவளது தந்தையும் மூத்த சகோதரனும் மற்றும் சகோதரியும் வன்னிக்கு இடம்பெயர்ந்தனர். இளைய சகோதரன் இவளுக்கு பின்னர் தன்னையும் போராட்டத்தோடு இணைத்துக்கொண்டார். வன்னியிலே தனது சகோதரியின் திருமண நிகழ்வுக்கு வருகை தந்தவள், காதிலே தோடும் போடச் சம்மதிக்கவில்லை, கழுத்திலே ஓர் சிறிய செயினை எல்லோரது வற்புறுத்தலால் போட்டுக்கொண்டாள். அவளவு தூரம் இயக்க மரபை மிகவும் இறுக்கமாக்கிக்கொண்டாள். 2006.ஆகஸ்ட்.11 போர் மீள வடபோர் முனையிலே ஆரம்பமானது. முகமாலை, மன்னார் என களமுனைகள் மாறி மாறி மிகவும் உறுதியுடன் போரிட்டாள். வாகனங்கள் ஓடவும் திறமைாக கற்றுத்தேர்ந்திருந்தாள். படிப்படியாக தனது திறமையினூடாக தன்னை வளர்த்துக்கொண்டவள் பின்னர் லெப்.கேணல் குட்டிசிறீ மோட்டார் படையணியின் ஓர் பகுதி தாக்குதலணி பொறுப்பாளராக உயரும் அளவுக்கு தன்னை மாற்றியிருந்தாள். இறுதிக்கட்ட போர் உக்கிரமடைந்து மன்னார் களமுனை வழியாக சிங்கள இராணுவம் படிப்படியாக முன்னேறி கிளிநொச்சி வழியாக பரந்தனை ஊடறுத்து முல்லைத்தீவு நோக்கிய போர்ச்சூழல் உச்சம் பெற்ற காலப்பகுதியில் 2009 தை/ மாசி மாதமளவில் அவளது தந்தையும் மூத்த சகோதரனும் அவளை சந்திக்கின்ற வாய்ப்பு கிடைத்தபோது அவர்கள் கேட்டுக்கொண்டது நீ என்ன செய்யப்போகிறாய் என்று? அவள் கூறிய பதில்- நீங்கள் பாதுகாப்பாக சனங்களோடு போங்கோ, என்னை எதிர்பார்க்க வேண்டாம், இயக்கம் என்ன முடிவு எடுக்குதோ அதே முடிவு தான் தானும் என கூறிய பின் அங்கிருந்து நகர்ந்து சென்றுவிட்டாள். அந்த சந்திப்பு தான் அவர்கள் அவளை இறுதியாக கண்டது. பின்னர் 10.03.2009 அன்று நடந்த சமரிலே கணேசினி தன்னை ஈழ மண்ணின் விடுதலைக்காக பல்லாயிரம் மாவீரர்கள் வரிசையிலே தன்னையும் இணைத்துக்கொண்டாள்! 15ம் திகதியளவிலே தான் வீரச்சாவு செய்தி கிடைத்ததாக சக பெண்போராளிகள் வாயிலாக பின்னர் அறியக்கிடைத்தது. மாவீரர் கண்ட கனவு நிச்சயம் ஓர் மெய்ப்படும் என்பது எமது அசைக்க முடியாத நம்பிக்கை! குறிப்பு: கணேசினி அவர்களது வீரச்சாவுக்கு பின்னர் இயக்கம் அவளுக்கு வழங்கிய தரநிலை பற்றி யாரேனும் அறிந்திருப்பின் இங்கே குறிப்பிடவும். நன்றி. 27.11.2025

வீரவேங்கை சந்திரபாபு

1 month 4 weeks ago
எனது மாமாவின் மகன் , மைத்துனன் , என்னைவிட இரண்டு வயது தான் அதிகம் ,ஆறடி உயரம் , சிறுவயதிலிருந்தே மிகுந்த ஆளுமையானவர் , விளையாட்டு கிரிக்கெட் முதல் கொண்டு கல்வி வரை மட்டுமல்லாது தமையனோடும் எங்களோடு போடும் குத்து சணடை தொடக்கம் விளையாட்டு வரை எப்போதும் அவர் இருந்தால் அது எங்களுக்குச் சிறிய திருவிழாதான். என் மாமா மாவட்ட நீதிபதியாக கடமையாற்றியவர் முதலில் மட்டக்களப்பு , சாவகச்சேரி பின்னர் யாழ்ப்பாணம் மாவட்ட நீதிபதியாக கடமையாற்றியவர் . அதனால் ராகவனும் மட்டக்களப்பு , முதல் சாவகச்சேரி இந்து கல்லூரியிலும் , யாழ் இந்து கல்லூரியிலும் கல்வி பயின்றவர் . சிறுவனாக இருக்கும் போதே மிக உயர்ந்த சிந்தனை கொண்டு இருந்தவர் , ஒரு விமான ஓட்டியாக படிப்பேன் என்று அடிக்கடி சொல்லிக்கொண்டிருப்பார். யாழப்பாணத்தில் மிக அரிதானவர்கள் தான் டாக்டர் , என்ஜெனியரை தாண்டி பறக்கிற உயர்ந்த சிந்தனைகளை கொண்டவர்கள் . யாழ் இந்து கல்லுரியில் 8 பாடங்களிலும் " D" எடுத்தவர்கள் இவன் மட்டும் முக்கியமானவனல்ல இவனது உற்ற நண்பர்களும் தான் , இன்னும் அவர்கள் இவனை இறுதி வழியனுப்ப வந்து அழுது கொண்டு இருந்தது இன்னும் மறக்கமுடியாது . வல்வை வைத்தீஸ்வரன் சிவன் கோயில் தான் எங்களுக்கு குல தெய்வம் , ஸ்கூல் லீவு விட்டு ஊருக்கு வந்தால் கோயில் பந்தம் பிடிப்பது முதல் அந்த சுற்று வட்ட வீடுகள் எல்லாம் நாங்கள் கால் பதித்த இடம் தான் . நாங்களும் வீட்டில் விக்கிரங்கள் வைத்திருக்கின்றோம் , எங்கட வீட்டுக்கு அவர்கள் வந்தால் என் முருகன் சாமிக்கு கொடி ஏற்றி 10 நாளில் தேர் , பூங்காவனம் தீர்த்தம் எல்லாம் வைப்போம் நான் தான் ஐயர் , அவர்கள் வீட்டுக்கு நாங்கள் போனால் பிள்ளையார் சாமிக்கு கொடி ஏற்றி திருவிழா நடத்தி 10ம் நாள் தீர்ததமாடுவோம் . அவர் தான் ஐயர் . உண்மையான கோயில விட இங்க பக்தியும் , ஒழுக்கமும் உண்மையாக இருக்கும் . அவனோட கதையை நான் சுருக்கமாக சொல்லோணுமென்றால் , நானும் அவனும் கடைசியாக சந்தித்தது கோண்டாவிலில் 1990 களில் தமிழீழ விடுதலை புலிகள் மாணவர் அமைப்பு (SOLT ) பொறுப்பாளர்களுக்கான போது கூட்டம் நடைபெற்றது . நான் வடமராட்ச்சியில் இருந்தும் , அவர் வலிகாமத்திலிருந்தும் சென்றிருந்தோம் , அது போர் முனைக்கு எங்களை தயார் படுத்துவதாக இருந்தாலும் , அவர்கள் இறுதி இலக்கு ஒன்றுதான் . டேய் " நாங்க சந்தித்ததை வீட்டில சொல்லாதே என்றான் " அதற்கு பிறகு அவன் கதைத்தது அப்பவும் இப்பவும் சரியாக விளங்கவேயில்லை . பின்னாளில் அதை சொல்லுவதற்கு தைரியமும் வரவில்லை . அவர் ஒரு தனித்துவமான ஆளுமை. அந்த வயதில், அந்த காலத்தில், அத்தகைய உயர்ந்த சிந்தனையும் தைரியமும் கொண்டவரை நான் வேறு யாரிடமும் காணவில்லை. இன்றும் — ஒருபோதாவது ராகவன் திரும்பி வருவானோ என எங்கள் பிள்ளைகளிள் கூட தேடல் உண்டாகி விடுகிறது. இது நடந்து கொண்டிருப்பது 1990 காலம் .. இலங்கை சட்ட அரசாங்கத்தில் மிகவும் முக்கியமான , பொறுப்பான பதவிகளில் நீதித்துறை முக்கியமானது , யாழ் மாவட்ட நீதிபதிக்கு யப்பானிலிருந்து புதிய கார்களை இறக்குமதி செய்து அரசாங்கம் வழங்கியிருந்தது , அவரது 16 வயதில் கொழும்பிலிருந்து தானே ஒட்டிக்கொண்டு யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தார் . சில நாட்களிலேயே விடுதலை புலிகள் பாசறையில் சேர்ந்தார். மாமாவின் பதவி காரணமாக இந்த விஷயம் எங்களில் யாருடனும் முறையாக பகிரப்படவுமில்லை. . கிட்டத்தட்ட ஆறு மாதங்களே. ஒருநாள் சில போராளிகள் என் வீட்டின் வாசலில் மறைந்த வீரரின் உடலுடன் வந்தனர். "சந்திரபாபு வீடு இதுதானா?" என்று கேட்டபோது நான் பதட்டத்தால் "இல்லை, இங்கே அப்படி ஒருவரில்லை" என்றேன். மனம் கேற்கவில்லை , மேலே சென்று உடலை பார்த்தேன். அது எங்கள் ராகவன் தான். கோட்டை சமரில் வீரமரணம் அடைந்திருந்தார். ஆம் கோட்டை சமரில் அவர் வீர்மரணமடைந்துவிட்டார். அடுத்த கணங்கள் எவ்வாறு போனது என்று விபரிக்கமுடியாது . 35 ஆண்டுகள் கடந்தாலும் இன்னும் அவன் விடுமுறைக்கு வந்து ஆழ்மனதில் சில வேளை விளையாடுவான் . இன்னும் அந்த வீரன் அவரது குரல் இன்றும் என் உள்ளத்தில் ஒலிக்கிறது. திரும்பிப் போக முடியாத காலத்துக்கு எதிரே. குற்றஉணர்வுடன் வாழ்கின்றோம் Navajeevan Anantharaj

வான்புலிகள் இன் படிமங்கள் | LTTE Sky Tigers Images

1 month 4 weeks ago
குண்டுவைத்து தகர்க்கப்பட்ட புலிகளின் கட்டுமானம் முழுமைபெறாத மரபுவழி நிலை-இறக்கை வானூர்தி இது பொறி மற்றும் நடுப்பகுதி என்று எண்ணுகிறேன்.

வான்புலிகள் இன் படிமங்கள் | LTTE Sky Tigers Images

1 month 4 weeks ago
குண்டுவைத்து தகர்க்கப்பட்ட புலிகளின் கட்டுமானம் முழுமைபெறாத மரபுவழி நிலை-இறக்கை வானூர்தி இது வால் என்று நினைக்கிறேன். மற்றது இது முழுமையாக கட்டிமுடிக்கப்படவில்லை.

வான்புலிகள் இன் படிமங்கள் | LTTE Sky Tigers Images

1 month 4 weeks ago
குண்டுவைத்து தகர்க்கப்பட்ட புலிகளின் கட்டுமானம் முழுமைபெறாத மரபுவழி நிலை-இறக்கை வானூர்தி வான்புலிகளின் நிலை-இறக்கை வானூர்தியானது பாதி கட்டப்பட்ட குறையியிலேயே புலிகளால் குண்டுவைத்து தகர்க்கப்பட்டிருக்கிறது என்பது கிடைக்கப்பெற்றுள்ள படிமங்கள் மூலம் அறியக்கூடியதாக உள்ளது. சிங்களவரின் கைகளிற்கு தமது தொழில்நுட்பம் கிடைக்கக்கூடாது என்ற நோக்கிலேயே புலிகள் இவ்வாறு செய்துள்ளனர் என்பதை ஊகித்தறியலாம். இது வானூர்தி முகப்பு என்று எண்ணுகிறேன். எனினும் வானூர்தி தொடர்பில் அறிந்தவர்கள் இவற்றை கண்டுபிடிக்கவும்.

வான்புலிகள் இன் படிமங்கள் | LTTE Sky Tigers Images

1 month 4 weeks ago
தமிழீழ வான்படையால் உருவாக்கப்பட்டுக்கொண்டிருந்த வானூர்திக்கான வரைபட மாதிரி கீழே நீங்கள் காண்பது மரபுவழி நிலை-இறக்கை வானூர்தி (Conventional fixed wing aircraft) ஆகும்.

வான்புலிகள் இன் படிமங்கள் | LTTE Sky Tigers Images

1 month 4 weeks ago
வானூர்தி தொடர்பான கட்டுமான கல்விக்கு புலிகள் பாவித்த ஆங்கில நூல்கள்: இந்தப் படிமங்கள் யாவும் புதுக்குடியிருப்பு மேற்கிலிருந்த புலிகளின் வானூர்தி கட்டுமான தொழிற்சாலையிலிருந்து எடுக்கப்பட்டன. வானூர்தி தொடர்பான கல்வியை புலிகள் ஆங்கிலத்தில் மேற்கொண்டுள்ளனராக்கும்:

1998ம் ஆண்டு செக். குடியரசில் கடத்தப்பட்ட 4 வானூர்திகளும் குற்றம்சாட்டப்பட்ட புலிகளும்

1 month 4 weeks ago
இது 1998ம் ஆண்டு யாழிலிருந்து வெளியாகும் நாளேட்டில் வெளியிடப்பட்ட செய்தி. முழு விரிப்பு எனக்குத் தெரியாது. இருப்பினும் அறிந்தவற்றை இங்கே வரலாறாக எழுதி வைத்துச் செல்கிறேன். செக் குடியரசிலிருந்த (அப்படித்தான் நினைவு) ஓர் வானூர்தி தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏறத்தாழ 10இற்கும் மேற்பட்ட தெற்காசியர்கள் வேலைசெய்து வந்ததாகவும் ஒருநாள் பின்னேரம் அவர்கள் அங்கிருந்த 4 வானூர்திகளை களவாடிச் சென்றுவிட்டனர் என்பதுதான் முக்கிய செய்தியே. அந்த வானூர்தி களவாடல் நிகழ்விற்குப் பிறகு ஒரு கிழமை கழித்து நான்கு வானூர்திகளுக்குமான உரிய பணம் காசோலையில் அனுப்பி வைக்கப்பட்டதாக அந்நிறுவனம் செய்தி வெளியிட்டிருந்தது. இந்நிகழ்விற்கும் புலிகளுக்கும் தொடர்பிருப்பதாக அக்காலத்திய சிங்கள அரசாங்கம் குற்றம் சுமத்தியதை அந்நிறுவனம் மறுத்தது. ஆருக்கேனும் நேரமிருந்தால் அக்காலத்திய யாழ் செய்தித்தாள்களை புரட்டி இச்செய்தியை கண்டுபிடியுங்கள். நன்றி

அமரசிறி : கருணாகரன்

1 month 4 weeks ago
பரவாயில்லையே AIயும் என்னைப் போலவே சிந்தனையை கொண்டிருக்கிறதே.😇 நீண்ட கதையானாலும் முடிவுவரை கட்டிப்போட்டிருந்தது உண்மை. ஆனாலும் AIயின் முடிவுரை உண்மைதான். இப்படியான நிகழ்வுகளின் வலிகள் வாழ்நாள் முழுதும் தொடரும் என்பது உண்மையே.

🚨 கனடாவில் இந்திய மாணவர் சுட்டுக் கொலை ! 🇨🇦

1 month 4 weeks ago
🚨 கனடாவில் இந்திய மாணவர் சுட்டுக் கொலை ! 🇨🇦 written by admin December 26, 2025 கனடாவின் டொராண்டோ(Toronto) பல்கலைக்கழகத்தின் (University of Toronto) ஸ்கார்பரோ (Scarborough) வளாகத்திற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 20 வயதுடைய இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 📝 முக்கிய விபரங்கள்: சம்பவம்: ஸ்கார்பரோ பகுதியில் உள்ள ஒரு வணிக வளாகத்திற்கு அருகில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்: உயிரிழந்தவர் 20 வயதுடைய இந்திய மாணவர் என்பதை டொராண்டோ காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர். (அவரது விபரங்கள் குடும்பத்தினருக்கு அறிவிக்கப்பட்ட பின்னர் முழுமையாக வெளியிடப்படும்). காவல்துறை நடவடிக்கை: துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர்களைத் தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இது ஒரு திட்டமிடப்பட்ட தாக்குதலா அல்லது தற்செயலானதா என்பது குறித்து விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. பின்னணி: கனடாவில் அண்மைக் காலங்களில் இந்திய மாணவர்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து வருவது பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. Tag Words: #TorontoShooting #IndianStudent #CanadaNews #Scarborough #UniversityOfToronto #SafetyAlert #StudentDeath #InternationalStudents #TamilNews https://globaltamilnews.net/2025/225028/

அமரசிறி : கருணாகரன்

1 month 4 weeks ago
நீண்ட கதை என்பதால் படிக்க மிகவும் நேரம் எடுத்தது. எனினும் எமது போராட்டத்தினுள் வாழ்ந்தவர்களுக்கு முக்கியமான கருப்பொருள். நானும் எனது கண்முன்னே இயக்கம் ஒரு பெண்ணை சரியாகச் சுடாமல் அந்தப் பெண் தவழ்ந்தவாறே “தண்ணீர்” கேட்டதையும், ஒரு முதியபெண் இரங்கிக் கொடுத்த தண்ணீரைக் குடிக்கும்போது இயக்கம் மீண்டும் வந்து நெஞ்சில் இரத்தம் கொப்பளிக்க “சரியாகச்” சுட்டதையும் நேரில் பார்த்திருந்தேன். சுட்டவர் சுடப்பட்டவரை நேரே கண்ணைப் பார்க்காமல் தலையைத் திருப்பிச் சுட்டதுதான் எப்போதாவது நினைவில் வரும். மற்றும்படி ஒபரேசன் லிபரேசன் காலத்தில் இராணுவத்தால் கொல்லப்பட்ட பலரின் உடல்களை “புதினம்” பார்த்திருந்தேன். ஆனால் அவைகள் தொந்தரவு செய்யும் அளவுக்கு நினைவுகளில் வருவதில்லை. Google AI tool Gemini ஐ கீழே உள்ளவாறு கேட்டேன்.. நான்: பின்வரும் இணைப்பில் உள்ள நீண்ட சிறுகதையை கதைகள் படிப்பதில் ஆர்வமுள்ளவர்களுக்கு ஏற்ற வகையில் சுருக்கி, இக்கதையின் நிறை குறைகளை ஒரு தேர்ந்த இலக்கிய விமர்சகர் போன்று விமர்சிக்கமுடியுமா? https://akazhonline.com/?p=11045 Gemini: கருணாகரன் எழுதிய "அமரசிறி" என்னும் சிறுகதையின் சுருக்கமும், ஒரு இலக்கிய விமர்சகர் பார்வையில் அக்கதைக்கான விமர்சனமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. கதைச்சுருக்கம் இலங்கையின் போர்க்காலச் சூழலையும், போருக்குப் பிந்தைய மனவடுக்களையும் மையமாகக் கொண்டு இக்கதை நகர்கிறது. உளநல மருத்துவரான மேகதாஸ், தனது நண்பரான ஒரு எழுத்தாளரை (கதையின் சொல்லியை) சந்தித்து ஒரு விசித்திரமான வேண்டுகோளை விடுக்கிறார். தனது நோயாளி ஒருவரின் கதையைச் சிறுகதையாகவோ அல்லது கட்டுரையாகவோ எழுதி வெளியிட வேண்டும் என்றும், அதன் மூலம் சிங்கள மொழியில் யாரேனும் அதை மொழிபெயர்த்து அந்தத் தகவல் சம்பந்தப்பட்ட நபர்களைச் சென்றடைய வேண்டும் எனவும் கேட்கிறார். அந்த நோயாளியின் பெயர் ஞானச்செல்வன். முன்னாள் போராளியான இவர், போர்க்காலத்தில் 'அமரசிறி' என்ற சிங்களச் சிப்பாயைச் சிறைபிடித்த நினைவுகளால் மனதளவில் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார். போர்க்களத்தில் எதிரியாகச் சந்தித்தாலும், அமரசிறியிடம் ஏற்பட்ட மனிதாபிமான உரையாடல்களும், அவர் காட்டிய குடும்பப் புகைப்படமும் ஞானச்செல்வனின் மனதில் ஆழமாகப் பதிந்துவிடுகின்றன. ஆனால், போரின் இறுக்கமான சூழல் காரணமாக அமரசிறியைக் கொல்லவேண்டிய கட்டாயம் ஞானச்செல்வனுக்கு ஏற்படுகிறது. ஆண்டுகள் கடந்தும், அந்தக் கொலைக்குரிய குற்றவுணர்ச்சி (Guilt) ஞானச்செல்வனைத் தூங்கவிடாமல் வதைக்கிறது. அமரசிறியின் முகம் நினைவிலிருந்து மங்கிக்கொண்டே போவது அவருக்கு மேலும் பதற்றத்தைத் தருகிறது. ஓவியர் ஒருவரைக்கொண்டு அமரசிறியின் முகத்தை வரைய முயல்கிறார். மருத்துவரிடம் தனது நினைவுகளை அழிக்குமாறு கெஞ்சுகிறார். ஆனால் மருத்துவர் மேகதாஸ், "உங்களை மட்டும் குணப்படுத்த முடியாது, அமரசிறியின் குடும்பமும் இந்தக் காயத்தின் ஒரு பகுதி" என்று கூறி, அமரசிறியின் குடும்பத்தைக் கண்டறிந்து அவர்களிடம் மன்னிப்புக் கோருவதே அல்லது உண்மையைச் சொல்வதே முழுமையான நிவாரணம் என்று வழிகாட்டுகிறார். அமரசிறியின் குடும்பத்தைத் தேடும் ஒரு முயற்சியாகவே இக்கதை எழுதப்படுகிறது. இலக்கிய விமர்சனம் நிறைகள் (Strengths): 1. ஆழமான உளவியல் பார்வை: வழக்கமான போர்க்காலக் கதைகளைப் போல வெறும் வன்முறையையோ அல்லது இழப்பையோ மட்டும் பேசாமல், இக்கதை 'குற்றவுணர்ச்சி' (Survivor’s Guilt) என்ற உளவியல் சிக்கலை மிக நுட்பமாகக் கையாளுகிறது. எதிரியைக் கொல்வது வீரமாகக் கருதப்படும் போர்க்களத்தில், அந்த எதிரியை ஒரு சக மனிதனாகப் பார்த்த பிறகு ஏற்படும் மனப்போராட்டத்தை ஆசிரியர் மிக நேர்த்தியாக வெளிப்படுத்தியுள்ளார். 2. கதாபாத்திர வார்ப்பு: ஞானச்செல்வனின் பாத்திரம் மிக அழுத்தமாகப் படைக்கப்பட்டுள்ளது. அவன் ஒரு கொலையாளி என்பதைத் தாண்டி, அவனுக்குள் இருக்கும் மென்மையான மனிதன் படும் வேதனை வாசகனைக் கலங்கடிக்கிறது. அதேபோல் மருத்துவர் மேகதாஸ், வெறும் மருத்துவராக மட்டுமல்லாமல், சமூகத்தின் காயங்களை ஆற்ற நினைக்கும் ஒரு தத்துவவாதியாகவும் மிளிர்கிறார். "வலி என்பது ஒரு விளக்கு. அது உங்களை மட்டும் ஒளி வீசிப் பார்க்கச் சொல்வதில்லை; அது பாதிக்கப்பட்டவர்களின் இருளையும் ஒளி வீசிப் பார்க்கச் சொல்கிறது" போன்ற வசனங்கள் கதையின் தரத்தை உயர்த்துகின்றன. 3. மனிதம் பேசும் களம்: இனம், மொழி, தேசம் ஆகியவற்றைக் கடந்து மனிதநேயத்தை முன்னிறுத்துவது இக்கதையின் மிகப்பெரிய பலம். சிங்களச் சிப்பாயான அமரசிறியை ஒரு எதிரியாகச் சித்தரிக்காமல், அவனும் ஒரு குடும்பத் தலைவன், அவனுக்கும் கனவுகள் இருந்தன என்பதை ஞானச்செல்வனின் நினைவுகள் வழியே கடத்திய விதம் சிறப்பு. 4. கதை சொல்லும் முறை: கதைக்குள் கதை (Story within a story) என்ற உத்தியை ஆசிரியர் பயன்படுத்தியுள்ளார். இது கதைக்கு ஒரு ஆவணத் தன்மையையும் (Documentary feel), நம்பகத்தன்மையையும் கொடுக்கிறது. ஒரு தேடுதலுக்கான கருவியாக இக்கதை படைக்கப்பட்டிருப்பது வாசிப்பனுபவத்தை மேன்மைப்படுத்துகிறது. குறைகள் (Weaknesses): 1. நீளமான முன்னுரை: கதையின் ஆரம்பத்தில் வரும் மருத்துவக் கல்லூரி விரிவுரைக்காட்சிகள் மற்றும் சூழல் விவரிப்புகள் கதைக்குத் தேவையான பின்புலத்தை அமைத்தாலும், அவை சற்று நீளமாக இருப்பது போன்ற உணர்வைத் தருகின்றன. வாசகன் நேரடியாக மையக்கருவிற்குள் நுழைய இது சற்று தாமதப்படுத்துகிறது. 2. நாடகத்தன்மை: சில இடங்களில் மருத்துவர் பேசும் வசனங்கள் இயல்பான உரையாடலாக இல்லாமல், வாசகனுக்குப் போதிப்பது போன்ற தொனியில் (Didactic tone) அமைகின்றன. குறிப்பாக, ஓவியம் வரையும் காட்சிகள் மற்றும் அதைச் சார்ந்த விவரிப்புகள் இன்னும் கொஞ்சம் இயல்பாக இருந்திருக்கலாம். முடிவுரை: "அமரசிறி" ஒரு சாதாரண சிறுகதை அல்ல; அது போருக்குப் பிந்தைய மனசாட்சியின் குரல். போர் முடிந்துவிட்டாலும், அது மனித மனங்களில் ஏற்படுத்தும் வடுக்கள் வாழ்நாள் முழுவதும் தொடரும் என்பதை இக்கதை ஆணித்தரமாக உணர்த்துகிறது. ஒரு தேர்ந்த இலக்கியப் படைப்பாகவும், அதே சமயம் ஒரு வரலாற்று ஆவணமாகவும் இக்கதை முக்கியத்துவம் பெறுகிறது. வாசிப்பவர்களின் மனதில் ஈரம் கசியவைக்கும் ஒரு கனமான படைப்பு இது.

தையிட்டி திஸ்ஸ விகாரை போலியானது - வட இலங்கையின் சங்க நாயக்க தேரர்

1 month 4 weeks ago
ஏற்கெனவே அல்ல, இன்றும் தமிழர்கள் புத்தரைக் கடவுளாகவே வணங்குகிறார்கள், வழிபடுகிறார்கள். சாதி, சமயம், மதம் கடந்து எங்கு ஒரு கடவுளுக்குரிய கோவிலைக் கடந்து செல்லும் சந்தர்ப்பம் நேரும்போதும் நெஞ்சில் கைவைத்து மானசீகமாகவேனும் தமிழர்கள் வணங்கிச் செல்வதைக் காணலாம். தமிழ் இனத்தவரைத் தவிர வேறு எந்த இனத்தவரிடையும் இந்தப் பண்பைக் காண்பது அரிது.

“60 வயதுக்கு மேல் இளமையாக இருப்பது எப்படி?” – ஆரோக்கியத்திற்கான 5 எளிய மந்திரங்கள்!

1 month 4 weeks ago
எதுக்கும் முதல் போடவேண்டும் என்பதை போல, 60 களில் ஆரோக்கிய்யம் இயன்ற அளவு அவரவர் கட்டுபாட்டில் இருக்க, ஆக குறைந்தது 50 வயதில் இருந்து தயார் படுத்த வேண்டும். விரும்பியதை கைவிடட வேண்டும் என்பது அல்ல, உணவில், அசைவில் .. போன்றவற்றில் வேண்டிய, அல்லது இயன்ற மாற்றங்கள் மாற்றங்கள்

தேசங்களின் குரல்கள்

1 month 4 weeks ago
இங்கேயும் அப்படித்தான். அவர்கள் பார்வையில் இந்தியனாகத்தான் என்னைப் பார்த்தார்கள். ஒரு சிலர் “ஆபிரிக்காவா?” என்றும் கேட்டதுண்டு. அதிகம் எதற்கு, என்னை முதன் முதலாக சந்தித்த போது, தமிழ்சிறி என்னை பிறேஸிலியன் என்றே நினைத்துக் கொண்டாராம். சரி..சரி.. நானும் ஒத்துக்கொள்கிறேன்😊 தமிழ், சிங்களம் எனப் பிரிந்திருந்தாலும் ஆங்கிலம் எங்களுக்குப் பொது மொழியாகவே இருக்கிறது. ஒருவேளை கூட்டுக் கோழிக்கு, அவர்களுடனான பழக்கத்தில் அந்தத் தொனி வந்திருக்கலாம்.

அமரசிறி : கருணாகரன்

1 month 4 weeks ago
நீண்ட கதை. பார்த்தவுடன் பிறகு வாசிக்கலாம் என்று விட்டுவிட்டேன். அதிகாலையில், அமைதியான நேரங்களில்தான் நான் அதிகம் வாசிப்பேன். இன்று 'அமரசிறி'யை வாசிக்க முடிந்தது. வாசிக்கத் தொடங்கியபோது, பல நினைவுகள் வந்து குழப்பிக் கொண்டிருந்தன. அதனால், நின்று நிதானித்து வாசிக்க, நினைத்த நேரத்தை விட கொஞ்சம் அதிகமான நேரம் எனக்குத் தேவைப்பட்டு விட்டது. சில விஷயங்கள், அதை நாங்களே செய்யாவிட்டாலும், பார்வையில் விழுந்து விட்டாலே நினைவில் தங்கிவிடும். என்னிடமும் பல நினைவுகள் இருக்கின்றன. இன்றுவரை அதை மறக்க முடியவில்லை. எப்போதாவது, அவை வந்து போகின்றன. 'அமரசிறி'யை வாசிக்கும் போதும், அந்த நினைவுகள் வந்து நின்று தொல்லைகளும் தந்தன. எண்பதுகளின் ஆரம்பம். வெளிநாட்டுக்கு இடம் பெயர்வதற்கான எண்ணம் எனக்குள் தோன்றிய காலம். பத்திரகாளி கோவில் வாசலோடு இருந்த திண்ணையில் அமர்ந்து, நண்பர்களுடன் கதைத்துக் கொண்டிருந்தேன். திடீரென வீதியில் சலசலப்பு. வெள்ளை வானில் இருந்து கைகள் கட்டப்பட்டவரை ஒருவர் அழைத்து வந்தார், இல்லை, இழுத்துக் கொண்டு வந்தார். அவர்களின் பின்னால் ஆயுதம் ஏந்திய இருவர் வந்து கொண்டிருந்தனர். இழுத்துக் கொண்டு வந்தவர் எனக்கு நன்கு தெரிந்தவர், பின்னாளில் கடற்படைத் தளபதியான சூசை. அப்போதிருந்த பதட்டத்தில் எல்லோரும் போல், நானும் எழுந்து கொண்டேன். என்னை கடந்து போகும் போது, சூசை மட்டுமல்ல, இழுத்து வந்தவரும் என்னைப் பார்த்தார், அல்லது எங்களைப் பார்த்தனர். அந்த மனிதர், "தண்ணீர்" என்று கேட்டார். ஒரு நொடிதான், இழுத்துக் கொண்டு செல்லப்பட்டுவிட்டார். அந்த ஒரு நொடியிலான அவரது பார்வையும், "தண்ணீர்" கேட்ட அவரது குரலும், இன்றும் நினைவில் வந்து, வந்து போகின்றன. நடப்பதைப் பார்க்க கூட்டம் கூடியது. நான் பத்திரகாளி கோவிலின் முன்னாலேயே நின்று விட்டேன். "காட்டிக் கொடுப்பவர்களுக்கும், துரோகிகளுக்கும் இதுதான் தண்டனை" என்ற சூசையின் குரல் கேட்டது. தொடர்ந்து ஒரு துப்பாக்கியின் வெடிச்சத்தம். நின்று கொண்டிருந்த காந்தி சிலைக்குப் பின்னால், கம்பத்தில் கட்டப்பட்டிருந்தவரின், தலை தொங்கிய நிலையில், நெற்றியில் பொட்டு வைக்கப்பட்டிருந்தது. எங்கள் நகரத்தில் நடந்த முதல் சம்பவம் இதுதான். அவர் மலையகத்தைச் சேர்ந்தவர். அவரது பெயர் சிவனுகணேசன். நாற்பது வருடங்களுக்கு மேலாக, அடிக்கடி என்னிடம் வந்து போகிறவர்களில் சிவனுகணேசனும் ஒருவர்.

ஆல்கஹால் இல்லாத பியர், வைன் போன்ற பானங்கள் உடலுக்கு நல்லதா?

1 month 4 weeks ago
அண்மையில் நானும் இந்த மதுவல்லாத பியரில் கொஞ்சம் நாட்டம் காட்டுகிறேன். இப்போதைக்கு ஹைனிக்கன் 0%, ஸ்டெல்லா 0% சுவை நன்றாக உள்ளது. ஏனையவை பிடிக்கவில்லை. ஆனால் கவனமாக இருக்க வேண்டும் சிலது zero sugar ஆனால் அல்கஹோல் இருக்கும். பார்த்து வாங்காவிட்டால் கற்பு பறிபோய்விடும்😂
Checked
Wed, 02/25/2026 - 04:40
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed