புதிய பதிவுகள்2

உதிக்கும் திசை நோக்கி உன்னத பயணம்... | நெடுந்தொடர்

1 month 4 weeks ago
இதில் சில பாகங்கள் விடுபட்டுள்ளன. அவை அனைத்தையும் சேகரித்து முழுமையான நூலாக்கி இதை வெளியிட்டு வைக்குமாறு தமிழ் மக்களை கேட்டுக்கொள்கிறேன். இது எமது தேசத்தின் இன்றியமையாத நூலாகும். இதை ஈழத்தமிழர்கள் தான் வெளியிடவேண்டும் என்றில்லை. தமிழகத் தமிழர்களும் வெளியிடலாம். யார் குற்றினாலும் அரிசியானால் சரி.

சிறைக்குள் சிங்களப் படைவீரர்களைக் கொன்ற வேடர் இனப் புலிவீரன்

1 month 4 weeks ago
இத்தகவலானது வன்வளைக்கப்பட்ட தமிழீழத் தலைநகர் திருமலையிலிருந்த சூடைக்குடா வதைமுகாமிலிருந்து தப்பிய தமிழீழப் புலனாய்வுத்துறையின் வெளியகப் பிரிவில் ஊர்தி ஓட்டுநராக பணியாற்றிய போராளியின் வாக்குமூலம் ஆகும். இப்போராளி 2009 சனவரி மாதம் குடும்பச் சிக்கல் காரணமாக உறவினர்களாலையே காட்டிக்கொடுக்கப்பட்டு பிடிபட்டார். பின்னர் சூடைக்குடா வதைமுகாமிலிருந்து தப்பியோடினார். இவர் 2022ம் ஆண்டு வழங்கிய ஓர் வாக்குமூலத்தின் ஒரு பகுதியிலிருந்த தகவலே இங்கு கட்டுரையாக்கப்பட்டுள்ளது. குறித்த வேடர் இனப் போராளியும் தமிழீழ புலனாய்வுத்துறையில் கடமையாற்றிக் கொண்டிருந்தவர் ஆவார். அவரும் சூடைக்குடாவிலிருந்து தப்பிய போராளியும் ஒருவருக்கொருவர் அறிமுகமானவர்களாவர். அவ் வேடர் இனப் போராளியை இவர் சிறைப்பட்டிருந்த காலத்தில் தான் சூடைக்குடா வதைமுகாமிற்கு சிங்களவர் சிறைப்படுத்தி கொண்டுவந்தார்கள். அவ்வேடர் இனப் போராளி உயர்ந்த நெடுவலானவர். அவரை கொண்டு வந்த உடனேயே தான் விடுதலைப்புலி என்பதை ஒத்துகொண்டதோடு தன்னிடம் கைச்சுடுகலனொன்று உள்ளதென்றும் அதைத் தருவதாகவும் தெரிவித்தார். எனவே அவருக்கு உடனே சித்திரவதை நடக்கவில்லை. அவ்வேடர் இனப் போராளியை இந்தத் தமிழ்ப் போராளி அடைக்கப்பட்டிருந்த கட்டிடத்திற்கு அருகிலிருந்த ஆழிப்பேரலை வீட்டுத் திட்டத்தில் அமைக்கப்பட்ட தகரக் கொட்டிலுக்குள் அடைத்திருந்தார்கள். கொண்டுவந்த அடுத்தநாள் வேடர் இனப் போராளிக்கு பின்னால் போடப்பட்டிருந்த மாஞ்சை (கைவிலங்கு) கழட்டி முன்னுக்கு மாற்றும் போது உதறிக்கொண்டு சிங்களப் படையினன் ஒருவருக்கு இடித்தார். இடித்த இடியில் மூக்கு உடைந்தது. உடனே திமிறி எழுந்து அருகிலிருந்த கம்பியை எடுத்து அடித்தார். அடித்த அடியில் இரு கடற்படையினரின் தலையுடைந்து செத்து மடிந்தனர். மற்றொருவருக்கு கை தூளாய்ப் போனது. இந்தக் களேபரம் நடந்துகொண்டிருக்கையில் வாசலில் காவலாளியாக நின்ற மற்றொரு கடற்படையினன் ஓடிவந்து வெடிவைத்தான், அவ்வேடர் இனப் புலிவீரனை நோக்கி. படபடவென்று வெடிபட்டது. அந்த இடத்திலேயே தலை சிதறியது போல வீழ்ந்து வீரச்சாவடைந்தான், அவ்வேடர் இனப் புலிவீரன். இவை அனைத்தையும் மற்ற புலனாய்வுத்துறைப் போராளி தனது கண்களால் கண்டதாக சோகத்துடன் வாக்குமூலத்தில் பதிவுசெய்தார். ஊர் பெயர் எதுவும் எம்மால் அறிந்திரமுடியா அவ் வேடர் இனப்புலிவீரனுக்கு எம் தலை சாய்த்து வீரவணக்கத்தை தெரிவித்துகொள்வோம். ஆக்கம் & வெளியீடு நன்னிச் சோழன்

ஜெர்மனிக்கான பன்டேஸ்பேங்கின் முன்னறிவிப்பு: பொருளாதாரம் படிப்படியாக மீண்டு வரும்.அரசாங்க செலவினங்களும் ஏற்றுமதிகளும் வளர்ச்சியை ஆதரிக்கின்றன - பணவீக்கம் மெதுவாகக் குறைகிறது.

1 month 4 weeks ago
ஜேர்மனியின் பொருளாதாரத்தை பற்றி பெரிதாக கூறுவதற்கு ஒன்றுமில்லை....அதுவும் இன்றைய நிலையில்.... தினசரி வேலை இழப்புகள்.... மாதாந்தம் சிறு சிறு முதலீட்டு கொம்பனிகள் மூடு விழாக்கள்.... அதே போல் பெரிய தொழிற்சாலைகளில் பல வேலை இழப்புகள்.... ஜேர்மனியின் மூலதனமே உருக்கு தொழிற்சாலைகளும் கார் உற்பத்தி நிறுவனங்களும் தான்....அதனை தொடர்ந்து லாபகரமாக நடத்த முடியாத நிலையில் இருக்கின்றார்கள். காரணம் எரி சக்தியின் அளவில்லா விலையேற்றம்.கொஞ்சம் யோசித்து பாருங்கள் வீட்டு பாவனைக்கும்,வாகன பாவனைக்கும் எரி சக்தி எமக்கு எவ்வளவு தாக்கத்தை எற்படுத்துகின்றது என. சாதாரண எங்களால் இதனை சமாளிக்க முடியவில்லை எனும் போது..... 24 மணித்தியாலமும் இயங்கும் பெரிய தொழிற்சாலைகளின் நிலை எப்படியிருக்கும் என...? பெரிய நிறுவனங்கள் தங்களுக்குள் இருக்கும் பெரிய பிரச்சனை எரிசக்தி என நேரடியாகவே அறிக்கைகள் மூலம் தெரிவித்து விட்டனர். மந்த நிலையில் இருந்து முன்னேறிய காலம் போய் விட்டது. மூன்றாம் உலக நாடுகளும் முன்னேறிக்கொண்டு வருகின்றன.

உதிக்கும் திசை நோக்கி உன்னத பயணம்... | நெடுந்தொடர்

1 month 4 weeks ago
பாகம் - 28 11.12.1990 அன்பான வாசகர்களே! 36 நாட்களாக வெளிவந்த “உதிக்கும் திசைநோக்கி உன்னத பயணம்" கட்டுரை தொடரைப் படித்திருப்பீர்கள். கிழக்கு மாகாணத்தின் இன்றைய நிலையை நேரில் தெரிந்துகொள்ள திரு. மாத்தயா அங்கு சென்றபோது அவருடன் கூடச்சென்ற நான் என்னால் முடித்தவரை அந்த மக்களின் அவல நிலைகளை வெளிப்படுத்த முயன்றிருக்கிறேன். இந்தக் கட்டுரைத் தொடரின் மூலம் வெளிப்படுத்தக்கூடியதாக இருந்தது பத்துவீதமே என நான் கருதுகிறேன். அந்த அவலங்களின் உண்மை வடிவத்தை முழுமையாக எழுத்தில் வடிக்க என்னால் முடியவில்லை. அந்தளவுக்கு எழுத்துத் துறையில் எனக்கு அனுபவமில்லை. இத்துறையைப் பொறுத்தவரை நான் கற்றுக்குட்டிதான். உச்சக்கட்ட இன அழிப்பு, அவலங்கள் நிறைந்துள்ள அம்பாறை மாவட்டத்திற்கு எம்மால் போக முடியாததால் இக்கட்டுரை எந்த விதத்திலும் முழுமையானதல்ல. அத்துடன் தொடராக இத்தனைநாள் வாசகர்களை ஒரே நிலையில் வைத்திருப்பதில் எந்தளவுக்கு வெற்றிகண்டுள்ளேன் என்பதும் தெரியவில்லை. என்னோடு கூடவந்த நிதர்சனம் படப்பிடிப்பாளர்கள் இவற்றை வீடியோ மூலம் பட மாக்கியுள்ளார்கள். எனவே இவற்றை நேரில் காணும் சந்தர்ப்பம் உங்களுக்குக் கிடைக்கும்போது அங்குள்ள நிலைமையின் கோரத்தை, அவலத்தை இதைவிடக் கூடுதலாக உங்களால் தெரிந்து கொள்ளமுடியும் எனக் கருதுகிறேன். இக்கட்டுரைத் தொடரை ஆரம்பிக்கையில் அங்குள்ள கலாசாரங்கள், இயற்கை அமைப்பு, குடியேற்றங்கள் அனைத்தையும் வெளிக்கொணர வேண்டுமென்றுதான் நினைத்தேன். ஆனால் அவலங்களையே முழுமையாக என்னால் கொண்டுவர முடியவில்லை. அதைவிட கட்டைபறிச்சானில் ஒரு தாக்குதலில் 60 இராணுவக் கொமாண்டோக்கள் பலியான சம்பவம் போன்ற விடயங்களை எழுத முடியவில்லை. முடிந்தால் அவற்றையும் புத்தகவடிவில் தர முயற்சிக்கிறேன். நாங்கள் அங்கு சென்றபோது இருந்த நிலைமைகளை விட இப்போதைய நிலைமை இன்னும் மோசம் திருமலையிலிருந்து மட்டக் களப்பு சென்று திரும்ப முன்னர் நான்கு இராணுவ முகாம்' கள் அங்கே கூடிவிட்டன. இப்போது மேலும் பல முகாம்கள் திறக்கப்பட்டுள்ளன . 1010 சதுரமைல் உள்ள திருக்கோணமலை மாவட்டத்தில் தற்போது 108 சிறிலங்காப் படை முகாம்கள் உள்ளன. அந்தளவுக்கு ஆக்கிரமிப்பின் வேசம் உச்சநிலையிலுள்ளது. இதைவிட சிங்கள, முஸ்லிம் ஊர்காவல் படைகளின் காவல் நிலைகள் வேறு. இத்தனைக்கும் மத்தியில் தான் அங்கு போராளிகள் போராடுகின்றார்கள். எஞ்சி இருக்கும் மக்கள் இவர்களுக்குக் கைகொடுக்கிறார்கள். குடியிருப்புக்களில் மக்கள் இல் லாத இடங்களில் போராளிகள் எதிர் நோக்கும் சிரமங்கள் எடுத்துரைக்க முடியாதவை. எந்தத் தகவல்களுமோ போராளிகளுக்குக் கிடைக்கமாட்டா. சகலத்தையும் போராளிகளே செய்ய வேண்டும். ஆனாலும் தங்கள் மண்ணை மீட்டெடுக்க வேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக உள்ளார்கள். அம்பாறை மாவட்டத்தின் அவலங்கள்தான் மிக அதிகம். இன அழிவைக் கூடுதலாகச் சந்தித்த மாவட்டம் இதுவேதான். அம்பாறை, மட்டக்களப்பு, திருமலை இந்த மூன்று மாவட்டங்களிலும் படுகொலை செய்யப்பட்ட மக்களின் எண்ணிக்கையை விட இந்தப் படுகொலைகள் எவ்வளவு காலத்துக்குள் மேற்கொள்ளப் பட்டிருக்கின்றன என்பதை அவதானித்தால் தான் இன அழிப்பின் வேகம் புரியும்; கை கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டோர் கழுத்தை நெரிக் கையில்... வருத்தத்துடன், அதேவேளை தவிர்க்க முடியாமல் மேற்கொள்ளப்பட்ட சில முடிவுகளுக்கு காரணங்கள் புரிந்திருக்குமென நினைக்கிறேன். அகதி முகாம் படுகொலைகள், சுற்றி வளைப்புக்கள், பயணங்களின் போது கடத்தப்படுதல் என்று பல்வேறு வடிவங்களில் இவை மேற் கொள்ளப்படுகின்றன. வேதனைக்குரிய விடயம் என்னவென்றால் இந்த அவலங்களை மூடிமறைக்க, அவற்றை நியாயப்படுத்த சிறிலங்காவின் தேசியப் பத்திரிகைகள், அதிலும் குறிப்பாக தமிழ்ப் பத்திரிகைகள் எடுத்துவரும் பகீரதப் பிரயத்தனங்கள் தான் - வந்தாறு மூலை அகதிகள் முகாமிலிருந்து அகதிகள் வெளியேற்றம் இதற்கு சிறு உதாரணம். தடுத்து வைக்கப்பட்டோர் பற்றிய தகவலைப் பெறுதல், நோயாளிகளை பராமரித்தல் காயமடைந்தோருக்கு வைத்திய வசதி, அகதிமுகாம் மக்களுக்கு உணவு, அவர்களுக்கான வைத்திய வசதி போன்றனவெல்லாம் தங்களுடைய கடமைகள். இவற்றில் எவரும் தலையிடாதீர்கள். தலையிட முடியாது என்றெல்லாம் இராணுவம் இல்லாத பகுதிகளில் முழக்கமிடும், (ஏன் சண்டித்தனம் என்று கூடச் சொல்லலாம்) செஞ்சிலுவைச் சங்கத்தினர் போன்றோர் கிழக்கு மாகாணத்தில் எந்தளவு “பொறுப்புடன்” கடமை புரிந்துள்ளனர் என்பதும் கேள்விக் குறியே; முடிந்தால் எனது அன்புக்குரிய வாசகர்கள் இந்த அமைப்புகள் தங்கள் பணி குறித்து அச்சிட்டு வைத்திருக்கும் பிரசுரங்களை வாங்கி கிழக்கின் இன்றைய நிலைமையையும் ஒப்பிட்டால் உண்மை விளங்கும். இந்த மூன்று மாவட்டங்களிலும் சுமார் ஐயாயிரம் பேர் டிசம்பர்-10 (தற்போதைய நிலவரப்படி) வரையில் கொல்லப்பட்டுள்ளார்கள். ஆயிரக் கணக்காணோர் கைதாகியுள்ளனர். தடுப்புக்காவலில் இருப்போர் பற்றி அறிகிறார்களோ இல்லையோ, இவர்கள் கண்ணெதிரே கைது செய் யப்படுவதே அலட்சியமாகிறது இவர்களுக்கு. அடுத்து “கோட்டையைக் கைப்பற்றுவதில் மட்டக்களப்பு ஆயுதங்களின் பங்களிப்பு கணிசமானது. அதைவிட மட்டக்களப்பு போராளிகளும் அங்கு போராடியிருக்கிறார்கள். வீரமரணமடைத்திருக் கின்றார்கள்” என்று திரு. நியூட்டன் கூறிய வார்த்தை அவதானிக்கப்படவேண்டியவை, இன்று வடமாகாணத்தில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் மக்களைப் பாதுகாப்பதில் கிழக்கு மாகாண மக்களின் பங்களிப்பை இந்த வார்த்தைகள் உணர வைக்கும், பதிலுக்கு நாம் அவர் களுக்காக என்ன செய்துள்ளோம். வெட்கப்பட வேண்டிய விடயம். இந்தப் போரினால் எல்லோருமே பாதிக்கப்பட்டுள்ளார்கள்தான். பாலுக்குச் சீனி இல்லையென்ற பிள்ளைக்கும் கூழுக்கு உப்பு இல்லையென்ற பிள்ளைக்கும் ஒரேயளவு கவலைதான் என்பார்கள், கூழே இல்லாத பிள்ளைகளுக்கு...? இந்தக் கட்டுரைத் தொடரைப் படித்த எவருக்காவது கிழக்கு மாகாண மக்களுக்கு உதவ வேண்டும். அந்த அவலங்களுக்கு முடிவுகட்ட வேண்டும் என்று சிந்தனை பிறந்திருக்குமாயின் இத்தொடரை எழுதிய நோக்கம் வெற்றி பெற்றதென்றே கருத வேண்டும். அன்பான வாசகர்களே! எங்கள் பார்வைகளை அகலமாக்கிக் கொள்வோம். அவர்களை நோக்கி எங்கள் கரங்கள் நீளட்டும். உதிக்கும் திசையிலுள்ளோர் உயிர் பெறட்டும். நீங்கள் சம்மதம் தானே? நன்றி. கரும்பறவை (முற்றும்)

பற்சமயத்தவருக்கு நடந்த வித்துடல் விதைப்புகள்

1 month 4 weeks ago
2009 இறுதிப்போர் காலப்பகுதியில் மாவீரர் துயிலுமில்லங்கள் எவ்வாறு நகர்ந்திருந்தது என்பதனை விளக்கும் போராளி இனியவன் அவர்கள் Video: 2009 இறுதிப்போரில் மாவீரர் துயிலுமில்லங்கள் நகர்த்தப்பட்ட...2009 இறுதிப்போர் காலப்பகுதியில் மாவீரர் துயிலுமில்லங்கள் எவ்வாறு நகர்ந்திருந்தது என்பதனை விளக்கும் போராளி இனியவன் அவர்கள்

“60 வயதுக்கு மேல் இளமையாக இருப்பது எப்படி?” – ஆரோக்கியத்திற்கான 5 எளிய மந்திரங்கள்!

1 month 4 weeks ago
இளமை என்பதை விட சாகும் வரைக்கும் தேகாரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் ஒரு நாளைக்கு குறைந்தது 8 மணித்தியாலமாவது உடம்பு அசையும் படி ஏதாவது வேலை செய்து கொண்டிருக்க வேண்டும். நவீன காலத்து எண்ணைகளும் அதன் மூலம் தயாரிக்கப்படும் உணவுகளையும் அறவே தவிர்க்க வேண்டும். இது எனது சொந்த அனுபவம்.👆 அதை விட ஜேர்மனியில் இன்றும் முக்கியமாக வயதானவர்களும் ஏனையவர்களும் பன்றி கொழுப்பை பாணில் பூசி சாப்படுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அதே பன்றி கொழுப்பை உணவுகளை சமைப்பதற்கும் பயன்படுத்துகின்றனர். ஒரு சிக்கலுமில்லை.ஒரு சிதம்பர ரகசியமும் இல்லை.😎

ஈழத் தமிழர்கள் மீதான இலங்கை முஸ்லிம் ஊர்காவல்படை மற்றும் ஆயுத குழுக்களின் அட்டூழியங்கள் | ஆவணக்கட்டு

1 month 4 weeks ago
80, 90களில் நடந்த தென் தமிழீழக் கரூரங்கள் தொடர்பான போர்க்கால இலக்கியப் பாடல்கள் பாடல்: காற்றில் ஏறிவரும் இறுவட்டு: வெல்லும் வரை செல்வோம் இசை: இசைப்பிரியன் பாடலாசிரியர்: உதயலட்சுமி பாடியவர்: மேரி வெளியீடு: ஜெயந்தன் படையணி, தமிழீழ விடுதலைப்புலிகள் பாடல் வரிகள்: காற்றில் ஏறிவரும் எங்கள் கதையைக் கொஞ்சம் கேளுங்கள். கண்ணீர்க் கடலோடும் வாழ்க்கைப் படகைப் பாருங்கள். படுவான்கரையின் சிவப்பு நிறம் - அதுவே எங்கள் வாழ்வின் நிறம். எழுவான் கதிர்கள் மேனி தொடும் - இனியெம் வாழ்வு மேலுயரும். வாவியில் பாடும் மீன்களுக்கு எங்கள் மேனியை தீனாய்ப் போட்டனர்! கூப்பிய கைகளை வெட்டி எறிந்து பிள்ளைகள் உயிரைக் குடித்தனர்! மகிழடித்தீவின் மரங்களைக் கேளும் - உயிர் விலை என்ன, கூறிவிடும்! கொக்கட்டிச்சோலை மணல் வெளி எங்கும் குருதியே கோலம் கீறியது. இருவிழி நிறையக் கனவுகளோடு எழுவாய் எழுவாயம்மா நீ! பூபதித் தாயின் பூமியில் பிறந்தாய், புயல்களின் வடிவம் அன்றோ நீ! மலைகளைத் தாவும் காற்றின் வேகம் மனங்களுக்குண்டு கொண்டு எழுவாய் நீ! எவரோ எழுதும் சிலை நீ இல்லை, அலைகடல் போல எழுவாய் நீ! கோவில்களோடு தெய்வங்கள் சாக வைத்த நெருப்பு எரியுது! தேவியர் பாட்டில் தென்றல்கள் மாறி தேய்பிறை வானம் அழுகுது! வயல்வெளி எங்கும் பயிர்களின் நாற்று வன்முறைத் தீயில் அவிகிறது! அதிரடிக்காரன் எழுதிய தீர்ப்பே எங்களின் விதியாய் மாறியது! --> எழுத்துணரியாக்கம்: இனந்தெரியா யாழ் கள உறுப்பினர் ++++++++++++++++++++++++++++ பாடல்: தென் தமிழீழம் தேய்ந்தழிந்து இறுவட்டு: ?? இசை: ?? பாடலாசிரியர்: அறியில்லை பாடியவர்: ?? வெளியீடு: ?? பாடல் வரிகள்: தென் தமிழீழம் தேய்ந்தழிந்து போகுதே! தென் தமிழ் மக்கள் தினமும் நூறு சாகிறார்! தீயில் அவர் வேகுகிறார், பசியில் அவர் மாள்கிறார்! தீராத கொடுமைகளை எதிரி அங்கு இழைக்கிறான்! மீன்பாடும் மட்டு. நகர், அம்பாறை, திருமலையும் மிருகவெறிச் சிங்களவர் குடிமனையாய் மாறுதே! இனமழிக்கும் ராணுவத்தின் வதைமுகாம்கள் வளருதே! இன்னல் செய்யும் துரோகக் கும்பல் பெருகி அங்கு வளருதே! நெய்தல் நிலம், வயல்வெளிகள், நதியோரம், காட்டுநிலம் ஐயகோ எம் தமிழர் ஆண்ட நிலம் யாவுமே! அன்னியனின் குடிமனைகள் அங்கு நிதம் வளருதே! இழந்த மண்ணை மீட்பதற்கும் இன்னலுறும் எம்மினத்தைக் காப்பதற்கும் ஈழமே எழுச்சிகொள்! எழுந்திடு! எழுந்திடு! இனமழிப்பு நடக்குதே வேங்கையாய் விரைந்திடு! --> எழுத்துணரியாக்கம்: நன்னிச் சோழன் *****

பிரபஞ்சம் அதன் முடிவை நோக்கிச் செல்கிறதா? விஞ்ஞானிகள் கண்டுபிடித்தது என்ன?

1 month 4 weeks ago
பூமியை படைத்த இயற்கை ஆறறிவு கொண்ட மனிதனை நம்பி அதிக தூரம் சென்றுவிட்டது. அண்மைக்கால அழிவுகளை பார்க்கும் போது அந்த இயற்கை திரும்பி வந்து கொண்டிருக்கின்றது என நினைக்கின்றேன். ☹️

'ஒன்டன் செட்ரோன்' எனப்படும் வாந்தி ஏற்படுவதை தூண்டுவதை தடுக்கும் மருந்து பாவனையிலிருந்து முற்றாக நீக்கம்

1 month 4 weeks ago
இன்றைய உலகின் மருத்துவமும் மருந்துகளும் எல்லாம் வியாபார நோக்குடனேயே செல்கின்றது.எங்கடை பரியாரிமாரின்ர ஓசி மருத்துவம் எல்லாம் மலையேறி விட்டது. டாக்குத்தர் ஒரு மருந்தை எழுதி தந்தால் மருந்தகர் மலிஞ்ச மருந்தை தருவார். கேட்டால் மருந்துகள் எல்லாம் கொம்பனி வித்தியாசமே தவிர மற்றும்படி மருந்துகளின்ரை செயல்பாடு எல்லாம் ஒரு மாதிரித்தான் என்பினம்.இல்லை எனக்கு டாக்குத்தர் எழுதி தந்த மருந்து தான் வேணும் எண்டால் காசு கொஞ்சம் கூட வரும் எண்டு வெருட்டுவினம். மருத்துவதுறை மக்கள் சேவை என்பது இப்போதெல்லாம் இல்லை. தொட்டது பட்டதிற்கெல்லாம் காசு....காசு. அதை விட இப்போதெல்லாம் மொழி அரைகுறையாக தெரிந்த மருத்துவர்களே அதிகம். சிரியா,ஈராக்,துருக்கி என அங்கே மருத்துவத்தை படித்து விட்டு இங்கே டாக்குத்தர் வேலை பார்க்கின்றார்கள்.ஜேர்மனியர்களே பயந்து பயந்து முகத்தை சுளிக்கின்றார்கள்.

யுத்தத்தினால் பெண்கள் தாம் விரும்பாத பாத்திரங்களையும் ஏற்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.- ஜி.எல்.பீரீஸ்

1 month 4 weeks ago
என்னது இருந்தாற்போல் இவருக்கு இவ்வளவு கரிசனை? வெளிநாட்டு மத்யஸ்த்தோடு நடந்த இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் இவர் பங்குபற்றியிருந்தார், நீதியமைச்சராக இருந்திருக்கிறார், அழிப்பு வேலை செய்த அரசாங்க கட்சிகளில் முக்கிய அமைச்சராக இருந்திருக்கிறார், கல்விமான் வேறு. அப்போதெல்லாம் வராத கரிசனை, இப்போ எப்படி வந்தது? சரி, இதையெல்லாம் எழுதி எதை மாற்றியமைக்கப்போகிறார்? ஓய்வு பெற்றபின் வயதான காலத்தில் துடிப்போடு இருக்க இப்படியெல்லாம் புத்தகம் எழுதுகிறார்களோ?

தலைவர் பிரபாகரனை முடித்து விடுமாறு கேட்டுக்கொண்ட சம்பந்தன் I கருணாநிதி I ஜெயலலிதா - பாட்டலி சம்பிக்கரணவக்க தெரிவப்பு!

1 month 4 weeks ago
சமராய்வுதலைவர் பிரபாகரனை முடித்து விடுமாறு கேட்டுக்கொண்ட சம்பந்தன...தினக்குரலில் வெளியாகிய செய்தியை இங்கே அப்படியே தரப்படுகிறது: சம்பந்தன், கருணாநிதி, ஜெயலலிதா உட்பட சர்வதேச, உள்ளூர் தலைவர்கள் பிரபாகரனை முடித... தினக்குரலில் வெளியாகிய செய்தியை இங்கே அப்படியே தரப்படுகிறது: சம்பந்தன், கருணாநிதி, ஜெயலலிதா உட்பட சர்வதேச, உள்ளூர் தலைவர்கள் பிரபாகரனை முடித்து விடுமாறு கூறினர்- பாட்டலி சம்பிக்கரணவக்க தெரிவப்பு! இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்ட வேளையில் பிரபாகரனைக் கொன்று விடக் கூறிய தலைவர்கள்! சம்பந்தன், கருணாநிதி, ஜெயலலிதா உட்பட சர்வதேச, உள்ளூர் தலைவர்கள் பிரபாகரனை முடித்து விடுமாறு கூறினர். இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றியை பெற்றுவரும் போது, 'முடித்துக் கொள்ளுங்கள்' என சிவசங்கர் மேனனும் எங்களுக்கு கட்டளை வழங்கினார். பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவிப்பு இறுதிப் போரின் போது புதுமாத்தளன் பகுதியில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்ட வேளையில், அவரை மீட்க பல்வேறு தரப்பினரால் முயற்சிகள் முன்னெ டுக்கப்பட்ட போதும், அவரை மீட்க முடியாது என்ற நிலைமை உருவாகியிருந்த போது, சம்பந்தன்; கருணாநிதி, ஜெயலலிதா உட்பட அனைத்து சர்வதேச மற்றும் உள்ளூர் தலைவர்களும் பிரபாகரனை முடித்து விடுமாறு கூறினர் என்றும் முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். முன்பக்கத் தொடர்ச்சி... 'நியூஸ் சென்ரர்' என்ற யூடியுப் செய்தி பிரி வுக்கு வழங்கிய நேர்காணலொன்றிலேயே சம்பிக்க ரணவக்க இவ்வாறு கூறியுள்ளார். இந்த நேர்காணலில் சம்பிக்க ரணவக்க மேலும் தெரிவித்துள்ளதாவது, இறுதிக் கட்ட போர் காலத்தில் இந்தியா வில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெறும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஏனென்றால் பாரதிய ஜனதா கட்சி விடுதலைப் புலிகளுக்கு சார்பானவர்கள், பேர்டினன்ட் மற்றும் இன் றிருக்கும் அண்ணாமலை போன்றோரும் அதில் உள்ளடங்குவர். நாங்கள் எதிர்பார்க்காத நிலையில், காங்கி ரஸ் கட்சி வெற்றியை பெற்றுவரும் போது, சி வசங்கர் மேனனும், முடித்துக் கொள்ளுங்கள் என எங்களுக்கு கட்டளை வழங்கினார். அதற்கு முன் சம்பந்தன் மற்றும் இலங்கை யின் தமிழ்தலைவர்கள், கருணாநிதி, ஜெயல லிதா, சர்வதேச, உள்ளூர் தமிழ் தலைவர்கள் அனைவரும் சந்தித்து பேசினர். அச்சந்தர்ப் பத்தில், இலங்கை இராணுவம் விடுதலைப் புலிகளின் தலைவரை சுற்றிவளைத்ததால் அவரை மீட்பதா என கலந்துரையாடல்கள் நடைபெற்றன. மேலும், கனடா உட்பட குமரன் பத்ம நாபன் ஊடாக சர்வதேச ஒத்துழைப்பும் மேற்கொள்ளப்பட்டது. அதனுடாக விடுத லைப் புலிகளின் தலைவரை கடல் மார்க்க மாக கொண்டு செல்வதற்கு எதிர்ப்பார்க்கப் பட்டது. அதற்கு அமெரிக்காவின் மெரைன் ஒத்துழைப்பும் பெறப்பட்டது. இறுதியில் சம்பந்தன் உட்பட அனைத்து சர்வதேச மற் றும் உள்ளூர் தலைவர்களும் பிரபாகரனை முடித்து விடுமாறு கூறினர். குறிப்பாக ஜெயலலிதாவின் கூற்றில், நான் தான் உலக தமிழ் தலைவர்களின் தலைவி. ஆனால் பிரபாகரன் சர்வதேச தமிழர்களின் தலைவராக நினைக்கிறார். அவருக்கு முடிவு கட்டவும் என்று சொல்லியுள்ளார். இந்த சம்பாசனைகள் அனைத்தும் சிவசங்கர் மேன னுடனான இறுதிச் சந்திப்பில் தெரிவிக்கப் பட்டதாகும். பலத்துடன் இருக்கும் போது கொண்டாடு வார்கள். ஆனால் பலம் குறைந்து விட்டால் அனைவரும் சேர்ந்து மிதிப்பார்கள். இது உலக நியதி. இன்றிருக்கும் தலைவர்களுக் கும் இவை படிப்பினையாகும். ஆனால், இறுதி யுத்தத்தில் அமெரிக்கா கடற் புலிகளின் வலுவை இல்லாதொழிக்க உதவி செய்வதற்கு காரணம் ஒன்று உள்ளது. அதாவது யேமனிலுள்ள அமெரிக்க தளத் திற்கு அல்-கொய்தா தாக்குதல் நடத்தியது. அதன் தொழில்நுட்பத்திற்கு விடுதலைப் புலிகளே உதவியது நிரூபணமானதால் அமெ ரிக்கா எங்கள் பக்கம் சார்ந்தது. முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கீரன் னாகொட அவுஸ்திரேலியா கடல் பரப்புக்கு சென்று விடுதலைப் புலிகளின் கப்பல்கள் மற்றும் ஆயுதக் கடத்தல் போன்றவற்றை முறியடிக்க அமெரிக்காவும் உதவியது. அவ் வாறு செய்திருக்காவிட்டால் இன்று யுத்தம் முடிவில்லாமல் தொடர்ந்திருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது!

1 month 4 weeks ago
கொஞ்ச நாளாக இவரின் தியாக, வீர பேச்சுக்களை காணோமே என்று ஏங்கினேன், இன்றைக்கு விடை கிடைத்து விட்டது. இவர்களை தன்னோடு சேர்க்கவும் மாட்டார், தன்னை எதிர்க்கவும் விட மாட்டார் அனுரா. சும்மா எச்சரிப்பு மட்டுந்தான்!

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English

1 month 4 weeks ago
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 73 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 73 / பின் இணைப்பு – மகாவம்சத்தின் சுருக்கம் / அத்தியாயம் 01 முதல் அத்தியாயம் 37 வரை அத்தியாயம் 9 அபயனின் பட்டாபிஷேகம் பற்றியது. பண்டுவசுதேவனுக்கு [அல்லது பண்டுவாசுதேவவுக்கு] பத்து மகன்களும், ஒரு மகளும் இருந்தனர். மூத்தவன் அபயன் அல்லது அபய [Abhaya], இளையவள் உம்மத சித்தா அல்லது உன்மாதசித்திரா [Unmada Chitra]. இவள் மிகவும் அழகானவள். பண்டுவாசுதேவ முப்பது ஆண்டுகள் ஆட்சி செய்தார். மேலும் மகாவம்சத்துக்கு முன்னர் இயற்றப்பட்ட தீபவம்சம் இவனை பண்டுவாசன் என்று குறிப்பிடுவதைக் கொண்டு, இவன் பாண்டிய நாட்டில் இருந்து வந்தனர் என்றும் வரலாற்றறிஞர்கள் வாதிடுகின்றனர்.[மயிலை சீனி. வேங்கடசாமி (2007, திருவள்ளுவர் ஆண்டு - 2038). சங்ககாலத் தமிழக வரலாறு - 2. சென்னை: மீனா கோபால் பதிப்பகம். pp. (209 - 211)/232.] இதற்கு ஆதாரமாக விஜயன் பாண்டியனின் மகளை மணந்ததைக் குறிப்பிட்டு மீண்டும் இலங்கையை ஆள ஆட்சியாளர் இல்லை என்பதால் பண்டுவாசனை பாண்டியன் இலங்கைக்கு அனுப்பியதாக குறிப்பிடுகின்றனர். உம்மத சித்தாவின் மகன் தனது அனைத்து மாமாக்களையும் கொல்வான் என்று ஒரு ஜோதிடர் கணித்தார்; இதனால், அவளுக்கு ஒரு மகன் பிறந்தால், மாமாக்கள் எல்லோரும் அவனைக் கொல்ல முடிவு செய்தனர். இந்த வேளையில், சக்க இளவரசர் பாண்டுவின் மகன்களும் இலங்கைக்கு வந்தனர். அதாவது, கௌதம புத்தரின்) தந்தை சுத்தோதனனின், இளைய சகோதரன், அமிதோதனாவின் பேரன்களும், பேத்தியைத் தொடர்ந்து இலங்கை வந்தனர்? நம்பினால் நம்புங்கள், மகாவம்சத்தின் கதை இது?? எனவே மீண்டும் கௌதம புத்தருடன் மற்றொரு உயிரியல் தொடர்பு கண்டுபிடிக்கப்பட்டது! ராமர், அனுராதா, விஜிதா, திகாயு, ரோஹண [Rama, Anuradha, Vijita, Dighayu, Rohana] ஆகியோர், இலங்கை வந்த சக்க பாண்டுவின் மகன்கள் ஆவார்கள். அங்கு அவர்களின் சகோதரியே ராணியாவார். நாளடைவில், இளவரசி உம்மத சித்தா திகாயுவின் மகனுடன் [Dighagamini / தீககாமினி] உறவு வைத்து கர்ப்பமானார். ஒரு மகன் பிறந்தார், ஆனால் இந்த பையனுக்காக மற்றொரு பெண்ணை மாற்றுவதன் மூலம், பையன் காப்பாற்றப்பட்டு, இரகசியமாக வளர்க்கப்பட்டான். அவனுக்கு பண்டு காபய [பண்டுகாபயன் / Pandukabhaya] என்று பெயரிடப்பட்டது. பண்டு காபய பிறந்து அபயன் பட்டாபிஷேகம் செய்யப்பட்டபோது, பண்டுவாசுதேவன் இறந்தார். "பண்டு கபாயன்" என்ற பெயரில், பண்டு என்றால் "பழைய", கபாயன் என்றால் "சிவன்" என்றும் இது இந்துக்களின் பழ‌ம்பெரும் தெய்வ‌மான "முந்துசிவ‌ன்" என்ற‌ பெய‌ரை ஒத்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதேவேளை, இதே 'பண்டு' என்ற சொல்லே பாண்டியன் (பண்டு+இயன்) என்ற பெயரின் வேர்ச்சொல்லுமாகும் என்பதையும் அறிக. மேலும் தீபவம்சத்தில், பண்டுகாபயாவை பகுண்டக சோரா [Pakundaka chora] என்று குறிப்பிடப்பட்டுள்ளது, அதாவது திருடன் என்று பொருள்படுகிறது. [In Pali, the word "chora" (छोर) means "thief" or "robber"] எனவே விஜயன் குலத்துடன் எந்த தொடர்பும் இல்லை என்றாகிறது. அத்தியாயம் 10: பண்டுகாபயனின் குழந்தைப் பருவம் முதல் பட்டாபிஷேகம் வரையிலான வாழ்க்கையைப் பற்றி, நம்பமுடியாத திருப்பங்களைக் கொண்ட கதைகள் போன்று, பல விசித்திரக் கதைகள் இங்கு உள்ளன. பண்டுகாபயன் முப்பத்தேழு வயதில் முடிசூட்டப்பட்டான். மேலும் அவன் எழுபது ஆண்டுகள் ஆட்சி செய்தான். எனவே, அவன் நூற்று ஏழு ஆண்டுகள், திடகாத்திரமாக வாழ்ந்திருக்க வேண்டும்? ஏனென்றால் அதுவரை மன்னனாகவே ஆட்சி செய்துள்ளார். நம்பமுடியாத அளவிற்கு நீண்ட ஆயுள் கொண்ட மன்னன். நாம் முன்பு கூறியவாறு, தீபாவம்சம் அவனை பகுண்ட மற்றும் பகுண்டகன் [Pakunda and Pakundaka] என்றும் குறிப்பிடுவதுடன், தீபாவம்சத்தின் 11 - 1 & 2 இல்: 1. அபயனின் இருபதாம் ஆண்டு ஆட்சி நிறைவடைந்த நிலையில், பகுண்டனும் தனது இருபதாம் ஆண்டு அகவை நிறைவடைந்தார். பகுண்டகன் பிறந்து முப்பத்தேழாவது ஆண்டு நிறைவடைந்தபோது அவன் மன்னனாக முடிசூட்டப்பட்டார். 2. அபயனின் இருபதாம் ஆண்டுக்குப் ஆட்சிக்குப் பிறகு பகுண்டகன் ஒரு கொள்ளையனாக வாழ்ந்தான்; பதினேழு ஆண்டு கொள்ளை வாழ்வின் பின், அவன் தன் தாய் மாமன்கள் ஏழு பேரையும் கொன்று, அனுராதபுர நகரில் அரசனாக முடிசூடிக் கொண்டான் என்று கூறுகிறது. என்றாலும், அவன் பதினேழு ஆண்டுகள் ஒரு கொள்ளையனாக வாழ்ந்ததாக தீபவம்சம் கூறும் அதேவேளை, மகாவம்சம் இதைப் பற்றி அமைதியாக உள்ளது. பண்டு கபாயன் பதினாறு வயதைக் கடந்தபோது தனது மனைவி சுவண்ணபாலியை [Suvannapali] மணந்தார். மூத்தசிவா [மூத்தசிவன் / Mutasiva] பண்டுகபயனின் மகன், அறுபது ஆண்டுகள் ஆட்சி செய்தார். இதுவும் ஒரு நீண்ட ஆட்சி. ஆனால் மகாவம்சம் அவரைப் பற்றியோ அல்லது அவரது நீண்ட ஆட்சியைப் பற்றியோ அதிகம் எதுவும் கூறவில்லை; அவரது ஆட்சி சுமார் ஆறு வசனங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அது ஏன் ? ஒருவேளை, அவரது பெயர் தமிழில் ஒலிப்பதால் இப்படி இருக்குமா? அவரது தாயார் சுவண்ணபாலி ஆகும். சுவண்ணபாலி அல்லது சுவர்ணபாலி, சுவர்ணலதா போன்ற பெயர்களைக் கொண்ட தமிழ்ப் பெண்கள் தமிழ்நாட்டில் இருந்தனர், இன்னும் இருக்கின்றனர் என்பதையும் நோக்குக. Part: 73 / Appendix – Summary of the Mahavamsa / Chapter 01 to Chapter 37 Chapter 9: This is about the consecrating of Abhaya. Panduvasudeva had ten sons, and one daughter. Abhaya is the eldest, and youngest is the daughter Citta, very beautiful one. Panduvasudeva ruled for thirty years. A soothsayer predicted that Citta’s son would kill his uncles; the uncles wanted to kill if a son is born to her. Sakka Pandu’s sons also came to Lanka. Another biological connection with Gautama Buddha is invented! Rama, Anuradha, Vijita, Dighayu, Rohana are the sons of Sakka Pandu who came to Lanka where their sister already came and became the queen. Princess Citta had an affair with the son of Dighayu and became pregnant. A son was born, but by interchanging with another girl for this boy, the boy was saved and was brought up clandestinely. An ancient tale is copied here. He was named Pandukabhya. Panduvasudeva died when Pandukabhya was born and Abhaya was consecrated. Another coincidence is invented. Chapter 10: There are many fairy tales like stories with many unbelievable twists and turns about Pandukabhaya’s life from childhood to the consecration. To quote from the page 52 of Reference 22: “It is interesting to note how the Chroniclers availed themselves of the Indian legend of Devagabbha, Nandagopa, Vasudeva, and Kamsa as contained in the Ghata Jataka“. Indian Puranic stories are liberally used to spin stories here. Pandukabhaya was crowned when he was thirty-seven years old, and he ruled for seventy years. He must have lived for one hundred and seven years, incredibly a long life. The Dipavamsa refers him as Pakunda and Pakundaka, refer 11 - 1 of the Dipavamsa. The Dipavamsa says that he lived as a robber for seventeen years. The Mahavamsa is selectively silent on this. Pandukabhaya took his wife, Suvannapali, when he has passed sixteen years of age. Mutasive was the son of Pandukabhaya, and he ruled for sixty years. It is also a long reign, but the Mahavamsa has nothing much to say about him or about his long reign; his rule was mentioned in passing in about six verses. Could the reason be that his name sounds Tamil? His mother was Suvannapali. There were Tamil ladies with names Suvannapali, Suvarnalatha etc. in Tamil Nadu. Mahanama, author of the Mahavamsa, must have decided to erase this Tamil identity of sixty years by not giving any importance to it. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 74 தொடரும் / Will follow துளி/DROP: 1956 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 73 https://www.facebook.com/groups/978753388866632/posts/33009567578691797/?

திருமதி சீலாவதி என்ற 5 போராளிகளின் சிங்களத் தாய்

1 month 4 weeks ago
சிங்களத் தாயாரான திருமதி சீலாவதி அவர்களின் 5 பிள்ளைகளும் தவிபு அமைப்பில் போராளிகளாகயிருந்தனர். அவர்களில் 3 பேர் மாவீரர்களாயினர். கப்டன் சிவரூபன், வீரவேங்கை சிவரூபன், வீரவேங்கை இளமயில் ஆகியோரே மாவீரர்களாயினர். இவரின் ஏனைய இரு பிள்ளைகளில் ஒருவரை இயக்கத்திலிருந்து இயக்கமே விடுவித்தது, பெற்றாரிற்கு உதவிக்காக. எனினும் அவர் கிபிர் வான்குண்டுவீச்சில் 2009 ம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் இறந்து போனார். மற்றையவர் பேருக்குப் பின்னர் திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார். இவரின் கணவர் தமிழராவார்.
Checked
Wed, 02/25/2026 - 04:40
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed