2 months ago
இது என்ன தரவுகள் எல்லாம் தாறீங்க… செல்லாது…செல்லாது…. கருணாநிதிக்கு நாக்கு பச்சை கலர் அவர் ஒரு ஏலியன் எண்டு சொன்னாலும் ஏத்துகொள்ள வேண்டும். அதுதான் தன்மானமுள்ள புலம்பெயர் ஈழதமிழனுக்கு அழகு 🤣. மக்ரோனின் அம்மா பிறந்தது 1950. அவரின் மனைவி பிறந்தது 1953. இது என்ன மாடல்? அல்லது நாம் பஞ்சம் பொழைக்கும் நாடு ஒன்றின் தலைவர் என்பதால் கள்ள மெளனமா🤣.
2 months ago
நம்ம தல மேல ஆயிரம் விமர்சனம் இருந்தாலும்… மோடி ஜிப்பாவ சந்தில வச்சி உருவ நம்ம தல போல யாரும் இல்லை🤣 தல போல வருமா🤣 மல்லாவி எண்டா கிளிநொச்சி பக்கம்தானே🤣
2 months ago
இராசாத்தி அம்மாள் பிறப்பு - 1945, கலைஞருடன் திருமணம் - 1966, கனிமொழி பிறப்பு - 1968 மு.க.முத்து பிறப்பு - 14.01.1948 ஆகவே சித்தியைவிட 2+ வருடங்கள் இளையவர்.
2 months ago
👉தமிழ் நாட்டிலுள்ள ஏனைய அரசியல்வாதிகள் அனைவரும் சீமானை விட நேர்மை,ஒழுக்க சீலர்களாக, நியாய பூர்வ உள்ளம் நிறைந்தவர்களாக இருப்பின்......👈 சீமானை எதிர்ப்பதில் நியாயம் இருக்கின்றது.👇 திமுக போகத்திற்கு போகம் பாஜகவுடன் கள்ள உறவு வைத்திருந்ததை/வைத்திருப்பதை யாராலும் மறக்கவும் மறுக்கவும் முடியாது.😎
2 months ago
2 months ago
உலக நாடுகள் என மோடி குறிப்பிட்டவை, சோமாலியா, நைகர், எத்தியோப்பியா, மொசாம்பிக், புருண்டி, சியாரா லியோன் (சன்னி லியோன் அல்ல) மாலாவி போன்ற நாடுகள்.
2 months ago
செம்மணி மனித புதைகுழி: இன்றைய தினம் 7 மனித எச்சங்கள் அடையாளம்! இடைநிறுத்தப்பட்ட யாழ்.செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் இன்றைய தினம்(21) மீள ஆரம்பிக்கப்பட்டன. அந்தவகையில் இன்றைய தினம் மேலும் 07 மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை செம்மணி மனித புதைகுழி அகழ்வில் 65 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1440043
2 months ago
ஐரோப்பாவில் விமானி உரிமம் பெற்ற மன்னார் இளைஞன்! மன்னார் – விடத்தல்தீவு கிராமத்தை சேர்ந்த அனுஜன் என்ற இளைஞர் ஐரோப்பாவில் விமானி உரிமத்தை பெற்றுள்ளார். 1998ஆம்ஆண்டு பிறந்த அனுஜன், தமது ஆரம்ப கல்வியை மன்னார் லூயிஸ் முன்பள்ளியிலும் தொடர்ந்து தரம் 1 தொடக்கம் 3 வரை புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியிலும் கல்வி கற்றுள்ளார். இதனைத் தொடர்ந்து தனது உயர் கல்வியினை அவர் பின்லாந்து தேசத்தில் தொடர்ந்துள்ளார். அங்கு மின்னியல் மற்றும் தானியங்கி தொழில்நுட்பத்தில் தொழில் சார்ந்த உயர்நிலை இரண்டாம் நிலை தரத்தின் தகுதியையும் மின்னியல் பொறியியலாளர் பட்டத்தையும் பெற்றுக்கொண்டார். பின்னர் ஐரோப்பிய ஒன்றிய விமானப் பாதுகாப்பு நிறுவனத்தின் (EASA) விமானங்களுக்கான வணிக விமானி உரிமம், EASA CPL(A) MULTI-ENGINE PISTON (MEP) மற்றும் கருவிகளின் மதிப்பீடு ( (IR), செயல்திறன் அடிப்படையிலான வழிநடத்துதல் (PBN) மற்றும் ADVANCED UPRT தடுப்புமுறை மற்றும் மீட்பு பயிற்சி அதாவது விமான கட்டுப்பாட்டு இழப்பிலிருந்து மீட்பு பயிற்சி ஆகியவற்றைப் பெற்றுள்ளார். இதனையடுத்து ATPL ஏர்லைன் போக்குவரத்து விமானி ஒருவர் பெறக்கூடிய விமான உரிமத்தை பெற்றுள்ளார். இது ஒரு விமானி பெறக்கூடிய அதிக தரம்வாய்ந்த உரிமமாகக் கருதப்படுவதுடன் இவ்வுரிமத்தை கொண்டு ஒருவர் வணிக விமானங்களில் தலைமை விமானியாக (Captain)பணியாற்ற முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1440041
2 months ago
ஒரு மலையகத்தை சேர்ந்த பெண்களின் முன்னேற்றத்துக்கான பாதை என்பது கடினமான பாதை. ஒரு யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண்ணின் முன்னேற்றத்துக்கான வழிகளை விட மிக கடினமானதும் தடைகள் நிறைந்ததும் ஆகும். அவ்வாறான நிலையிலும் இப் பெண் தன் திறமையினால் மட்டும் முன்னேறி வரும் போது, அவரை மிகவும் மோசமாக விமர்சித்தவர்களில் யாழ்ப்பாணத்தவர்களின் எண்ணிக்கை அதிகம். அத்துடன் கொழும்பு மற்றும் தெற்கைச் சேர்ந்த முஸ்லிம்களும் சமூக வலைத்தளங்களில் இவரை மிக மோசமாக விமர்சித்து இருந்தனர். இலங்கையின் பொருளாதாரத்தின் ஆணி வேர்களில் ஒன்றாக இருக்கும், அதே நேரம் சமூக, கல்வி மற்றும் பொருளாதார ரீதியில் மிகவும் பின் தங்கிய சமூகமாகவும் இருப்பவர்களில் இருந்து தன் திறமையினால் முன்னேறத் துடிப்பவரைக் கூட பின் தள்ளி குப்புற வீழ்த்தி சுகம் காணுகின்றவர்களாக எம் மக்களில் பலர் மாறி விட்டனர்.
2 months ago
கோழிக்கு அரிசி போட்டது போல அப்பப்ப சொல்லிக் கொண்டே இருங்கள். முதலில் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குங்கள்.
2 months ago
நான் எழுத நினைத்ததை நழுங்கள் எழுதிவிட்டீர்கள்.
2 months ago
உதய கம்மன்பிலவுக்கு எதிரான வழக்கை மீண்டும் எடுத்துக்கொள்வதற்கான திகதி நிர்ணயம்! முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை மீண்டும் எதிர்வரும் நவம்பர் 21 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்காக கொழும்பு மேல் நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது. போலி அதிகார பத்திர உரிமம் ஒன்றை தயாரித்து அவுஸ்திரேலிய வர்த்தகர் ஒருவருக்குச் சொந்தமான 20 மில்லியன் ரூபா மதிப்புள்ள நிறுவனத்தை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறி முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக சட்டமா அதிபரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று (21) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆர்.எஸ்.எஸ். சப்புவித முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் வழக்கை எதிர்வரும் நவம்பர் 21 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதேவேளை, முந்தைய அரசாங்க காலத்தின் போது, அவுஸ்திரேலிய வர்த்தகரான பிரையன் ஷாடிக் என்பவருக்குச் சொந்தமான 20 மில்லியன் ரூபா மதிப்புள்ள நிறுவனப் பங்குகளை போலி அதிகார பத்திர உரிமம் தயாரித்து முறைகேடாகப் பயன்படுத்தியதாக முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில மீது இந்த வழக்கு தொடரப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1440017
2 months ago
5 விமானங்களை பாகிஸ்தான் சுட்டு விழுத்தியதா நம்ம தலை சொல்லியிருக்காபில!🤣
2 months ago
முன்பே எழுதியதுதான் என் தமிழ் நாட்டு அரசியல் பார்வை பெரும்பாலும் அந்த மக்களின் நலன் சார்ந்தே. அவர்களின் சுக, சகஜ வாழ்வுக்கு எந்த கட்சி ஆட்சிக்கு வர வேண்டும் அல்லது வரக்கூடாது என்பதே முதலாவது கருதுபொருள். நான் சார்ந்த ஈழதமிழரின் பழி தீர்த்தலுகளுக்காக தமிழ் நாட்டு மக்களை சகதியில் தள்ளி விடுவதில் எனக்கு உடன்பாடில்லை. (உங்கள் நிலைப்பாடும் இதுவே என நீங்கள் சொன்னாலும் எடுப்பது என்னமோ எதிர் நிலைப்பாடுதான்). இரெண்டாவதாக, ஈழதமிழர் அரசியலுக்கும் சீமான் மூலம் ஆர் எஸ் எஸ் தமிழ் நாட்டில் நிலைகொள்வது ஆபத்தானதே. ஆகவே, தமிழ் நாட்டு, ஈழதமிழர் நலனில் அக்கறை உள்ள என்னால் நேரடி ஆர் எஸ் எஸ் (பாஜக), மறைமுக ஆர் எஸ் எஸ் (நாதக) வை ஆதரிக்க முடியாது. இதனால்தான் திமுகவை வீழ்த ஆர் எஸ் எஸ் அல்லாத வேறு எந்த சக்தி வந்தாலும் அதை நான் எதிர்ப்பதில்லை, ஆதரிப்பேன். உதாரணம் தவெக. செத்தவர்கள் பற்றி பச்சை பொய்யை பேசி, தன் விம்பத்தை உயர்த்த முயல்வது அண்ணனுக்கு புதுசா என்ன? தாயை புணர சொன்னவர் பெரியார் - சீமான். Vs அய்யா ஈவேரா அவர்களுடைய சிந்தனையை உள்வாங்கி புரையோடி கிடக்கின்ற பழக்கங்கள் சாதி ஏற்ற தாழ்வுகள் இந்த மண்ணில் களைவேண்டும் மாற வேண்டும் என்ற சிந்தனை கொண்டவர், அதை அதை பலருக்கு கடத்தியவர் மானிட பற்றாளர் வேலுபிரபாகரன் - இதுவும் அதே சீமான் தான். வேறவாய் vs நாறவாய் 🤣 இந்த பைத்தியத்தை இன்னும் நம்பி கொண்டு யாழிலும் சிலர் 🤣
2 months ago
பாவம் சிறுமி சினேகா. இவர் பாட்டுப்படிக்கப் பயின்றாரே தவிர உலகைப் படிக்கத் தவறிவிட்டார். இவர் இசை நிகழ்ச்சியான சரிகமபவில் இருந்து வெளியேறினாலும் இன்று உலகறிந்த பாடகி ஆகிவிட்டார். நிச்சயம் இசை மன்றங்கள் இவரை அழைத்துப் பெருமைப்படுத்தும்.🙌
2 months ago
உலக நாடுகள்: ஆமா…அப்படியே ஷாக் ஆயிட்டோம்…அவ்….
2 months ago
ஆமா ஆமா உலகமே பின்பக்கத்தால் சிரித்ததைத் கண்டு நாமும் வியந்து போனோம். பிரான்ஸ் இன்னமும் அழுது கொண்டிருக்கிறது.
2 months ago
இதை பெற்றோர்களுக்கு சொல்லி பிரயோசமில்ல. வேறு விளையாட்டுச் சாமான்கள் தருகிறோம். இனிமேல் கைபேசிகளை தொடாதீர்கள் என்று சொல்லிப் பாருங்கள்.
2 months ago
6 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் கைப்பேசி பயன்படுத்தக் கூடாது!- அமைச்சர் சரோஜா போல்ராஜ். ”ஆறு வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமிகள் கைப்பேசிகளை பயன்படுத்துவதற்குப் பெற்றோர் அனுமதிக்கக் கூடாது” என மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் வலியுறுத்தியுள்ளார். “சிறுவர்கள் உலகை வெல்ல வாய்ப்பளியுங்கள்” என்ற தொனிப்பொருளில் விஹாரமகா தேவி பூங்காவில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ” ஆரம்ப வயதுகளில் குழந்தைகள் திரைச் செயல்பாடுகளில் மட்டுமல்லாமல், கற்றல், சமூக தொடர்பு, மற்றும் விளையாட்டு போன்ற பன்முகவளர்ச்சிகளிலும் ஈடுபட வேண்டும். பெற்றோர் குழந்தைகளுக்கான வளர்ச்சி சூழலை அமைத்துக் கொடுக்க வேண்டும். சிறுவர்களின் மனநலத்தையும், உடல் வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் இது தொடர்பாக விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டியது அவசியமாகும்” இவ்வாறு அமைச்சர் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1439988
2 months ago
செம்மணி மனிதப் புதைகுழி: இன்று முதல் அகழ்வுப் பணிகள் மீண்டும் ஆரம்பம்! இடைநிறுத்தப்பட்ட யாழ்.செம்மணி மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் இன்று மீள ஆரம்பமாகியுள்ளன. செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அபிவிருத்திப் பணிகளின் போது மனித என்பு எச்சங்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றின் உத்தரவுக்கமைய கடந்த மே மாதம் 15ஆம் திகதி முதல் முதலாம் கட்ட அகழ்வுப் பணிகள் ஆரம்பமாகின. அப் பகுதியில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக மே மாதம் 17ஆம் திகதி அகழ்வுப் பணிகள் இடைநிறுத்தப்பட்டன.பின்னர் ஜூன் மாதம் 2 ஆம் திகதி திகதி அகழ்வுப் பணிகள் மீள ஆரம்பமாகி ஜூன் மாதம் 7ஆம் திகதியோடு முதலாம் கட்ட அகழ்வுப் பணிகள் நிறைவுக்கு வந்தன. மொத்தமாக 9 நாட்கள் இடம்பெற்ற செம்மணி மனிதப் புதைகுழியின் முதலாம் கட்ட அகழ்வுப் பணியில் 19 என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டிருந்தன. செம்மணி மனிதப் புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளை 45 நாட்கள் மேற்கொள்வது எனவும், 15 நாட்களுக்கு ஒருமுறை சிறிய இடைநிறுத்தல்களுடன் அகழ்வுப் பணிகளை மேற்கொள்வது எனவும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றால் தீர்மானிக்கப்பட்டது. அதன் பிரகாரம் செம்மணி மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட முதல் 15 நாட்களுக்கான அகழ்வுப் பணிகள் கடந்த ஜூன் மாதம் 26 ஆம் திகதி தொடக்கம் ஜூலை மாதம் 10 ஆம் திகதி வரை என 15 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெற்றன. முதலாம் கட்ட அகழ்வு மற்றும் இரண்டாம் கட்டத்தின் முதல் 15 நாள்கள் இடம்பெற்ற அகழ்வு என மொத்தமாக 24 நாட்கள் இடம்பெற்ற செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வில் இருந்து இதுவரை 65 என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. மேலும், பாடசாலை புத்தகப்பை, சிறுமிகளின் ஆடைகள், பாதணிகள், காற்சங்கிலிகள், சிறிய பிளாஸ்டிக் வளையல்கள், பிளாஸ்டிக் பூமாலை உட்பட பல்வேறு சான்றுப் பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன. இந்நிலையில், செம்மணி மனிதப் புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் இன்று காலை மீள ஆரம்பமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1439979
Checked
Sun, 09/28/2025 - 00:28
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed