புதிய பதிவுகள்2

புனர்வாழ்வு பெற்ற விடுதலைப் புலி உறுப்பினர் கொழும்பில் துப்பாக்கியுடன் கைது

2 months ago
பிரபாகரன் படைகள் போதைப் பொருளுக்கும் அடிமையானவர்கள் என்று நசூக்காக ஒரு விடயம் இதற்குள் செருகப்பட்டுள்ளது. இனி நாடகங்கள் பெரிதாக மேடைபோட்டு நடாத்தப்படும்.

இலங்கையின் சனத்தொகையில் பெண்கள் முன்னிடம்!

2 months ago
இலங்கையின் சனத்தொகையில் பெண்கள் முன்னிடம்! இலங்கையில் ஆண்களை விட பெண்கள் வீதம் அதிகரித்துள்ளதாக வடமேற்கு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியர் அமிந்த மெத்சில் தெரிவித்துள்ளார். நாட்டில் ஆண் மக்கள்தொகை குறைவது எதிர்காலத்தில் பல நெருக்கடிகளை உருவாக்கக் கூடும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 1995 ஆம் ஆண்டில் 100 பெண்களுக்கு 100.2 ஆண்கள் இருந்த நிலையில், தற்போது அது 100 பெண்களுக்கு 93.7 ஆண்களாகக் குறைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். பெண்களின் ஆயுட்காலம் அதிகரிப்பு, பெண்களின் பிறப்பு வீதம் உயர்வு, மற்றும் இளம் ஆண்களின் வெளிநாட்டு இடம்பெயர்வு ஆகியவை இந்த மாற்றத்திற்கு முக்கிய காரணங்களாக அமைந்துள்ளதாக பேராசிரியர் அமிந்த மெத்சில் கூறினார். https://newuthayan.com/article/இலங்கையின்_சனத்தொகையில்_பெண்கள்_முன்னிடம்!

வலி. வடக்கில் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள 234 ஏக்கர் காணியில் மக்களை மீள் குடியேற்ற பேச்சு!

2 months ago
வலி. வடக்கில் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள 234 ஏக்கர் காணியில் மக்களை மீள் குடியேற்ற பேச்சு! adminJuly 22, 2025 விவசாய நடவடிக்கைகளுக்காக எனும் நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்ட காணிகளில் மக்களை நிரந்தமாக குடியமர்த்த யாழ்.மாவட்ட கட்டளை தளபதியுடன் பேச்சுக்களை நடாத்தி வருவதாக மாவட்ட செயலர் தெரிவித்துள்ளார். மயிலிட்டி மீள்குடியேற்ற சங்க பிரதிநிதிகள் மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபனை அவரது அலுவலகத்தில் சந்தித்து காணி விடுவிப்பு தொடர்பாக கலந்துரையாடினர். மயிலிட்டி மீள்குடியேற்ற சங்க பிரதிநிதிகள் கடந்த வாரம் ஜனாதிபதி செயலகத்தில் குறித்த விடயம் சம்பந்தமாக அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடியதன் அங்கமாக, மாவட்ட செயலரை சந்தித்து வர்த்தமானி அறிவித்தல் மூலம் காணிகள் சுவீகரிக்கப்பட்டிருந்த தன்மையை வெளிக்காட்டி அதனை வர்த்தமானி அறிவித்தலில் இருந்து நீக்குவதற்குரிய நடவடிக்கையை மேற்கொள்ளுமாறும் கோரிக்கையை முன்வைத்தனர். அதன் போதே மாவட்ட செயலர் மேற்கண்டவாறு தெரிவித்தார் மேலும் தெரிவிக்கையில், காணி விடுவிப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பாக தெளிவுபடுத்தியதுடன், அதற்கமாய கட்டம் கட்டமாக காணி விடுவிக்கப்பட்டுவருவதாகவும் தெரிவித்தார். ஜனாதிபதி கடந்த ஜனவரி மாதம் 31 ஆம் திகதி யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட போது, யாழ் மாவட்ட காணி விடுவிப்பு தொடர்பாக தெளிவுபடுத்தப்பட்டதாகவும், மற்றும் பலாலி வீதியின் முக்கியத்துவம் தொடர்பாகவும் பிரஸ்தாபிக்கப்பட்டதற்கமைய, அவ்வீதித் தடை அகற்றப்பட்டு மக்கள் பாவனைக்கு திறக்கப்ட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் ஏற்கனவே விடுவிக்கப்பட்டிருந்த 234 ஏக்கர் காணிகள் விவசாய தேவைகளுக்காக மாத்திரம் விடுவிக்கப்பட்டிருப்பதாவும், குடியிருப்புக்காக அந்த காணிகளை விடுவிப்பதற்கு யாழ் மாவட்ட கட்டளைத் தளபதியுடன் கலந்துரையாடி தொடர் நடவடிக்கைகள் எடுப்பதாகவும் தெரிவித்தார். இக்கலந்துரையாடலில் மாவட்ட மேலதிக செயலர் (காணி) திரு. பா.ஜெயகரன், மீள்குடியேற்ற கிளை உத்தியோகத்தர்கள், மீள்குடியேற்ற சங்க பிரதிநிதிகள் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க , ஜனாதிபதியாக இருந்த கால பகுதியில் வலி. வடக்கில் 234 ஏக்கர் காணிகள் விவசாய நடவடிக்கைகளுக்கு மாத்திரம் எனும் நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்டது. குறித்த காணிகள் இன்னமும் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள நிலையில் , விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் காணிகளுக்கு காலையில் சென்று மாலையில் திரும்பி விடவேண்டும், அக்காணிகளில் தங்கி நிற்பதற்கோ , தற்காலிக கொட்டகைகளையோ அமைக்க இராணுவத்தினர் இதுவரையில் அனுமதி வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2025/218196/

உலக வங்கி பொருளாதார நிபுணர் குழுவினர் யாழ் . பழைய கச்சேரியை பார்வையிட்டனர்!

2 months ago
உலக வங்கி பொருளாதார நிபுணர் குழுவினர் யாழ் . பழைய கச்சேரியை பார்வையிட்டனர்! adminJuly 22, 2025 மரபுச் சுற்றுலா மேம்பாடு மற்றும் தொடர்ச்சியாக பேணுதல் என்ற அடிப்படையில் பழைய கச்சேரியினை புனரமைப்பு செய்தல் தொடர்பாக மாவட்ட செயலருடன் உலக வங்கி பொருளாதார நிபுணர் குழுவினர் நேற்றைய தினம் திங்கட்கிழமை (21.07.25) பழைய கச்சேரியினை பார்வையிட்டு ஆராய்ந்தனர். இதற்கு முன்னராக மாவட்டச் செயலகத்தில் உலக வங்கி குழுவினருடன் நடைபெற்ற கலந்துரையாடலில் சுற்றுலாத் துறை அபிவிருத்தி செய்யும் நோக்கில் பழைய கச்சேரி மற்றும் யாழ்ப்பாண கோட்டை புனரமைப்பின் அவசியம் தொடர்பாக – உலக வங்கி குழுவினரிடம் மாவட்ட செயலரினால் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தன. அந்நிலையிலேயே உலக வங்கி பொருளாதார நிபுணர் குழுவினர் பழைய கச்சேரி கட்டடத்தினை பார்வையிட்டுள்ளனர். மேலும், வடக்கு கிழக்கு மாகாணங்களின் நிலையான பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கும் வகையில் உட்கடுமாணம் மற்றும் சுற்றுலாத்துறையினை விருத்தி செய்தல் தொடர்பிலான ஜனாதிபதியின் வழிகாட்டலுக்கு அமைவாக, கடந்த இரு மாதங்களாக வடக்கின அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று சம்பந்தப்பட்ட திணைக்களங்களுடன் செயற்றிட்டங்களையும் அதன் சாத்தியநிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2025/218199/

காணியை விட்டு வெளியேறுமாறு தையிட்டி விகாரதிபதிக்கு கடிதம்!

2 months ago
காணியை விட்டு வெளியேறுமாறு தையிட்டி விகாரதிபதிக்கு கடிதம்! adminJuly 22, 2025 ஆக்கிரமிக்கப்பட்ட காணியில் இருந்து உடனடியாக வெளியேறுமாறும் , தவறின் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தையிட்டி விகாரையின் விகாரதிபதிக்கு வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளர் கடிதம் மூலம் அறிவுறுத்தியுள்ளார். தையிட்டியில் உள்ள தனது காணியில் அடாத்தாக சட்டவிரோத கட்டடம் ஒன்றினை அமைத்து வருவதாக எமக்கு ஒருவர் முறைப்பாடு அளித்துள்ளார். எனவே முறைப்பாட்டாளர் குறிப்பிட்டுள்ள காணியில் , தங்களுக்கு சட்ட ரீதியான உரித்து காணப்பட்டால் , அவற்றுக்கான ஆவணங்களை பிரதேச சபையில் சமர்ப்பிக்கவும். அவ்வாறு இல்லாத பட்சத்தில் உடனடியாக அக்காணியில் இருந்து வெளியேற வேண்டும். தவறின் தங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தையிட்டி விகாராதிபதி ஜிந்தோட்ட நந்தரமா தேரோவிற்கு தவிசாளர் சோ. சுகிர்தன் கடிதம் மூலம் அறிவித்துள்ளார். https://globaltamilnews.net/2025/218206/

‘நட்புறவுப் பாலம்’ என்ற பெயரில் சதி – எதிர்ப்பை வெளிக்காட்டுங்கள் என அழைப்பு!

2 months ago
‘நட்புறவுப் பாலம்’ என்ற பெயரில் சதி – எதிர்ப்பை வெளிக்காட்டுங்கள் என அழைப்பு! adminJuly 22, 2025 யாழ்ப்பாணத்தில் ‘நட்புறவுப் பாலம்’ என்ற பெயரில் அநுரகுமார திசாநாயக்கவின் அரசு ஒரு பாரிய சதித்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும், எனவே அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அன்றைய தினம் கறுப்புக் கொடி கட்டி தமிழ் மக்கள் தங்கள் எதிர்ப்பையும் துக்கத்தையும் வெளிப்படுத்த வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். கொக்குவிலில் உள்ள தனது அலுவலகத்தில் நேற்றைய தினம் (21.07.25) நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், “ஜூலை 23 என்பது தமிழ் மக்களுக்கு கறைபடிந்த ஒரு நாள். 1983ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற பாரிய இனப்படுகொலையை மறைப்பதற்கும், அதன் வரலாற்றை மழுங்கடிப்பதற்கும் அநுர அரசு ஒரு சதித்திட்டத்தை மிகச் சாதுர்யமாக முன்னெடுக்க முயல்கிறது. இதற்காக, தென்னிலங்கையில் இருந்து ஒரு தொகுதி நபர்களை யாழ்ப்பாணத்திற்கு அழைத்து வந்து, அநுர அரசின் ஆதரவாளர்களைப் பயன்படுத்தி, மக்களை ஏமாற்றி, இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை உருவாக்குவதாகக் கூறி ‘நட்புறவுப் பாலம்’ என்ற நிகழ்வை நடத்த திட்டமிடுகிறது. எனவே தமிழ் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். தென்னிலங்கையிலிருந்து வரவுள்ளவர்களுடன் இணைந்து அநுர அரசின் ஆதரவாளர்களின் இந்த முயற்சியில் தமிழ் மக்கள் பங்கேற்கக் கூடாது. அந்த நாளை ஒரு கறைபடிந்த நாளாகக் கருதி, கறுப்புக் கொடி கட்டி எமது துக்கத்தையும் எதிர்ப்பையும் வெளிப்படுத்துவோம் என தெரிவித்தார். https://globaltamilnews.net/2025/218208/

அமெரிக்க மசகு எண்ணெய் கொள்வனவு குறித்து இலங்கை அவதானம்!

2 months ago
அமெரிக்க மசகு எண்ணெய் கொள்வனவு குறித்து இலங்கை அவதானம்! இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வர்த்தக பற்றாக்குறையைக் குறைக்கும் முயற்சியில், அமெரிக்க மேற்கு டெக்சாஸ் இடைநிலை (WTI) மசகு எண்ணெயைக் கொள்முதல் செய்வதற்கான சாத்தியக்கூறுகளை அரசாங்கம் ஆராய்ந்து வருவதாகக் கூறப்படுகிறது. அமெரிக்காவிற்கும் பிற வர்த்தக பங்காளிகளுக்கும் இடையிலான வர்த்தக பற்றாக்குறையின் அடிப்படையில் பரஸ்பர வரிகளை விதிக்கும் தீர்மானத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்டுள்ளார். இதனால், இலங்கை உட்பட பல நாடுகள் அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகத்துடன் இணைந்து கட்டண விகிதங்களைக் குறைப்பதற்கான ஒப்பந்தங்களை மேற்கொண்டு வருகின்றன. அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் ஏப்ரல் மாதத்தில் இலங்கை ஏற்றுமதிகளுக்கு 44% வரி விகிதத்தை அறிவித்த போதிலும், அது எதிர்வரும் ஆகஸ்ட் 1 முதல் அமுலுக்கு வரும் வகையில் தற்போது 30% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. கட்டண விகிதத்தை மேலும் குறைக்கும் முயற்சியில் உள்ளூர் அதிகாரிகள் தொடர்ந்து ட்ரம்ப் நிர்வாக அதிகாரிகளுடன் விவாதங்களை நடத்தி வருவதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, எண்ணெய் கொள்முதல் செய்யும் போது டெண்டர் செயல்பாட்டில் அமெரிக்க WTI மசகு எண்ணெயை சேர்ப்பது குறித்து தற்போது கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் நிர்வாக பணிப்பாளர் டாக்டர் மயூரா நெத்திகுமாரகே குறிப்பிட்டுள்ளார். தற்போது இலங்கை, வளைகுடா பிராந்தியத்திலிருந்து மசகு எண்ணெய் இருப்புக்களை கொள்முதல் செய்கிறது என்றும், இருப்பினும், WTI மசகு எண்ணெய் விற்பனையில் ஈடுபட்டுள்ள அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களை எதிர்கால டெண்டர் செயல்பாட்டில் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் கூறினார். இருப்பினும், விலைக் கருத்தில் கொண்டு இலங்கைக்கு எந்த வகையான மசகு எண்ணெயை இறக்குமதி செய்வது என்பது குறித்து முடிவு எடுக்கப்படும். அமெரிக்கா தனது கட்டண விகிதங்களைக் குறைக்க முடிவு செய்தால், அது இறக்குமதி மற்றும் ஏற்றுமதி இரண்டிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் என்றும் அவர் குறிப்பிட்டார். பரஸ்பர கட்டணங்களை மேலும் குறைப்பதற்கான தகுதியாக வர்த்தக இடைவெளியைக் குறைப்பதற்காக அமெரிக்காவிலிருந்து (அமெரிக்கா) எண்ணெய் கொள்முதல் செய்வதை பரிசீலிக்க இலங்கை தயாராக உள்ளது என்று வர்த்தக பேச்சுவார்த்தைகளை நன்கு அறிந்த அமைச்சர் ஒருவர் தெரிவித்தார். நிதி திட்டமிடல் மற்றும் பொருளாதார அமைப்பிவிருத்தி பிரதியமைச்சர் கலாநிதி அணில் ஜயந்த பெர்னாண்டோவின் தகவலுக்கு அமைவாக, கடந்த ஆண்டு இலங்கையின் மொத்த எரிபொருள் இறக்குமதி 4.3 பில்லியன் டொலர்களாக இருந்தது. அமெரிக்கா தனது சந்தையில் நுழையும் இலங்கைப் பொருட்கள் மீது 30 சதவீத வரிகளை விதித்துள்ளது. இருப்பினும், இந்த விகிதத்தை மேலும் குறைப்பதற்காக ஆகஸ்ட் 1 ஆம் திகதி வரை இலங்கை பேச்சுவார்த்தை நடத்த கதவுகள் திறந்திருக்கும். 2024 ஆம் ஆண்டில், அமெரிக்காவிற்கான இலங்கையின் ஏற்றுமதி மொத்தம் 3 பில்லியன் டொலர்களாக இருந்தது. அதே நேரத்தில் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவை 368.2 மில்லியன் டொலர்களாக இருந்தன. இதன் விளைவாக இலங்கைக்கு ஆதரவாக 2.6 பில்லியன் டொலர் வர்த்தக உபரி ஏற்பட்டது. அமெரிக்கா இலங்கையின் மிகப்பெரிய ஏற்றுமதி சந்தையாகும், இது இலங்கையின் மொத்த ஏற்றுமதியில் 27% ஆகும். அமெரிக்காவிற்கான இலங்கையின் முக்கிய ஏற்றுமதிகளில் ஆடைகளும் அடங்கும். https://athavannews.com/2025/1440003

போதைப்பொருள் தொடர்பான சோதனையில் 1,241 நபர்கள் கைது!

2 months ago
போதைப்பொருள் தொடர்பான சோதனையில் 1,241 நபர்கள் கைது! நாடு தழுவிய சிறப்பு நடவடிக்கையின் போது, சட்டவிரோத போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத மதுபானம் வைத்திருந்தது உட்பட போதைப்பொருள் தொடர்பான குற்றங்களில் ஈடுபட்ட மொத்தம் 1,241 நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொது பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் உத்தரவின் பேரிலும், பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் ஒருங்கிணைப்பிலும் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. பொலிஸாரின் கூற்றுப்படி, இந்த நடவடிக்கையில் 254,679 மில்லி கிராம் கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன் (ஐஸ்), 112,567 மில்லிகிராம் ஹெராயின் மற்றும் 3,738,356 மில்லிகிராம் கஞ்சா ஆகியவை கைப்பற்றப்பட்டன. இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக 21,132 நபர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும், 7,922 வாகனங்கள் மற்றும் 6,545 மோட்டார் சைக்கிள்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். https://athavannews.com/2025/1440099

2025 இல் இலங்கைக்கு 569 மில்லியன் டொலர் நேரடி முதலீடுகள்!

2 months ago
2025 இல் இலங்கைக்கு 569 மில்லியன் டொலர் நேரடி முதலீடுகள்! இந்த ஆண்டு (2025) இதுவரை 57 திட்டங்களுக்கு முதலீட்டு வாரியம் (BOI) ஒப்புதல் அளித்துள்ளதாக கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க தெரிவித்தார். அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களின் மொத்த மதிப்பு 569 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என்றும், அதில் 507 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள முதலீடுகள் ஏற்கனவே நாட்டிற்குள் நுழைந்துள்ளன. 2024 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த புள்ளிவிவரங்கள் 101% அதிகரிப்பைக் குறிக்கின்றன என்றும் அவர் குறிப்பிட்டார். இலங்கை ஸ்திரத்தன்மையிலிருந்து வளர்ச்சிக்கு மாறி வருவதாகவும், வெளிநாட்டு நேரடி முதலீடுகளின் வருகையை அனுமதிக்கும் வணிகத்தை எளிதாக்குவதில் அரசாங்கம் தொடர்ந்து முன்னேற்றம் அடைந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். இதனிடையே, ஜூன் மாதத்தில் இலங்கையின் பிரதான பணவீக்கம் சற்று குறைந்துள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளி விபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மே மாதத்தில் 0.6% ஆக இருந்த பணவீக்கம் ஜூன் மாதத்தில் 0.3% ஆகக் குறைந்துள்ளது. மே மாதத்தில் 5.9% ஆக இருந்த உணவுப் பணவீக்கமும் ஜூன் மாதத்தில் 4.2% ஆகக் குறைந்துள்ளது. https://athavannews.com/2025/1440066

புனர்வாழ்வு பெற்ற விடுதலைப் புலி உறுப்பினர் கொழும்பில் துப்பாக்கியுடன் கைது

2 months ago
டி-56 துப்பாக்கியுடன் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் கைது? பேலியகொட பகுதியில் T-56 துப்பாக்கியுடன் ஒருவர் கிரிபத்கொட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட சோதனையின் போது, குறித்த நபர் நேற்று (21) மாலை கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து ஒரு T-56 துப்பாக்கி, 30 தோட்டாக்கள், ஒரு மெகசின் மற்றும் 5 கிராம் 560 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் என்பனவும் கைப்பற்றப்பட்டன. குறித்த நபர் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் என்றும், பின்னர் இராணுவத்தால் புனர்வாழ்வளிக்கப்பட்டவர் என்றும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சந்தேக நபர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 30 வயதுடையவர் ஆவார். மேலும், அவர் ஒரு குற்றத்தைச் செய்வதற்காக துப்பாக்கியுடன் வந்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர். எவ்வாறெனினும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிரிபத்கொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://athavannews.com/2025/1440095

பொருளாதார ரீதியில் உலகின் மிகவும் சக்திவாய்ந்த நாடுகளின் பட்டியல் வெளியானது!

2 months ago
பொருளாதார ரீதியில் உலகின் மிகவும் சக்திவாய்ந்த நாடுகளின் பட்டியல் வெளியானது! 2025ஆம் ஆண்டின் உலகின் மிகவும் சக்திவாய்ந்த 20 நாடுகளின் தரவரிசைப் பட்டியலை Forbes எனப்படும் பிரபல சஞ்சிகை வெளியிட்டுள்ளது. உலகின் சக்திவாய்ந்த நாடுகளுக்கான போட்டி – பொருளாதார வலிமை,மக்கள் தொகை மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி போன்ற காரணிகளால் தீர்மானிக்கப்படுகிறது. அந்தவகையில் 1 ஆவது இடத்தில் அமெரிக்காவும், 2 ஆவது இடத்தில் சீனாவும், 3 ஆவது இடத்தில் ஜேர்மனியும் , 4 ஆவது இடத்தில் இந்தியாவும், 5 ஆவது இடத்தில் ஜப்பானும், 6 ஆவது இடத்தில் பிரித்தானியாவும், 7 ஆவது இடத்தில் பிரான்ஸும், 8 ஆவது இடத்தில் இத்தாலியும், 9 ஆவது இடத்தில் கனடாவும், 10 ஆவது இடத்தில் பிரேஸிலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1440070

பங்களாதேஷ் விமான விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 27 ஆக உயர்வு!

2 months ago
பங்களாதேஷ் விமான விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 27 ஆக உயர்வு! டாக்காவின் மைல்ஸ்டோன் கல்லூரி மற்றும் பாடசாலை வளாகத்தில் பங்களாதேஷ் விமானப்படை பயிற்சி விமானம் மோதி இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் 25 பேர் சிறுவர்கள் என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேநேரம், விபத்தில் காயமடைந்த சிறுவர்கள் உட்பட 78 பேர் டாக்காவின் பல்வேறு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் ஐந்து பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர் என்று தேசிய தீக்காயங்கள் மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிறுவனத்தில் செவ்வாய்க்கிழமை (22) காலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தலைமை சுகாதார ஆலோசகரின் சிறப்பு உதவியாளர் பேராசிரியர் எம்.டி. சயதுர் ரஹ்மான் தெரிவித்தார். இதுவரை உயிரிழந்தவர்களின் 20 உடல்கள் அந்தந்த குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். அதேநேரம், நேற்று (திங்கட்கிழமை) உறவினர்கள் மற்றும் பிரதேசவாசிகளின் கூட்டம் அதிகமாக இருந்ததால், பாதுகாப்பை பலப்படுத்த தேசிய தீக்காயங்கள் மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிறுவன வளாகத்தில் இன்று முதல் இராணுவம் நிறுத்தப்பட்டுள்ளதாக மருத்துவமனை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். தலைநகரில் உள்ள குர்மிடோலாவில் உள்ள விமானப்படை தளத்திலிருந்து வழக்கமான பயிற்சிப் பணிக்காக நேற்று பிற்பகல் 1:06 மணிக்கு (0706 GMT) புறப்பட்ட சிறிது நேரத்திலேயே F-7 BGI விமானம் விபத்துக்குள்ளானது. விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதாக இராணுவம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தின் பின்னணியில் அரசாங்கம் ஒரு நாள் துக்க தினத்தை அறிவித்தது, கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டன, அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் சிறப்பு பிரார்த்தனைகள் செய்யப்பட்டன. https://athavannews.com/2025/1440071

முதல்வர் ஸ்டாலின் உடல்நிலை.. அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட புதிய அறிக்கை

2 months ago
சென்னை ஆப்பலோ மருத்துவமனியில் எங்கள் முதல்வர் தங்கிஇருந்து சிகிச்சைபெறும் இடத்தில் உள்ள அனைத்து சிசிடிவி கமேராக்களையும் இயக்கநிலையில் வைக்கும்படி கேட்டுகொள்கிறேன்.
Checked
Sun, 09/28/2025 - 03:32
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed