புதிய பதிவுகள்2

ஜனாதிபதி இலங்கை முழுவதும் அவசர நிலை பிரகடனம்

1 month 3 weeks ago
அவசரகால சட்டம் மீண்டும் நீடிப்பு – அதிவிசேட வர்த்தமானி வெளியீடு Published By: Vishnu 28 Dec, 2025 | 07:14 PM நாட்டில் நிலவும் பொது பாதுகாப்பு சூழ்நிலையை கருத்தில் கொண்டு, ஏற்கனவே அமலில் உள்ள பொது அவசரகால நிலைமையை மேலும் நீடிப்பதாக ஜனாதிபதியின் செயலாளர் 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் அறிவித்துள்ளார். பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதுடன், நாட்டின் இயல்பு நிலை, அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகள் தடையின்றி வழங்கப்படுவதை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த அவசரகால நிலைமையைத் தொடர முடிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/234608

Rebuilding Srilanka நிதியத்திற்கு நன்கொடை வழங்கிய தோட்டத் தொழிலாளர்கள்

1 month 3 weeks ago
Rebuilding Srilanka நிதியத்திற்கு நன்கொடை வழங்கிய தோட்டத் தொழிலாளர்கள் Dec 28, 2025 - 01:11 PM சில தோட்டத் தொழிலாளர்கள் தமது ஒருநாள் சம்பளத்தை Rebuilding Srilanka நிதியத்திற்கு நன்கொடை வழங்கியுள்ளனர். பொகவந்தலாவை கொட்டியாகல (NC பிரிவு) தோட்டத் தொழிலாளர்களே "டித்வா" புயலினால் பாதிக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டுக்காக அரசாங்கத்தினால் நிர்வகிக்கப்படும் நிதியத்திற்கு தமது நிதியை வழங்கியுள்ளனர். அதற்கமைய குறித்த நிதியத்திற்கு 108,000 ரூபாவினை பொகவந்தலாவை கொட்டியகல (NC பிரிவு) தோட்டத் தொழிலாளர்கள் சார்பில் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தியோகப்பூர்வ நிகழ்வொன்று நேற்று இடம்பெற்ற நிலையில், அதில் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான மஞ்சுள சுரவீர மற்றும் கிருஷ்ணன் கலைச்செல்வி ஆகியோர் கலந்து கொண்டனர். -மலையக நிருபர் சதீஸ்குமார்- https://adaderanatamil.lk/news/cmjpf7i4n037bo29ngy088u5z

“தமிழர்கள் ஓட்டு போதும்; திராவிடர்கள் ஓட்டு வேண்டாம்!” - நாதக பொதுக் குழுவில் சீமான் பேச்சு

1 month 3 weeks ago
நீங்கள் குறிப்பிட்ட ஊர்களில் எனது ஊரும் அடங்கியுள்ளது.சத்தியமாக நான் அவரின் அம்பி இல்லை.😂

யாழ் உள்ளக விளையாட்டு அரங்கு நிதி கட்டடங்கள் திணைக்களத்துக்கு மாற்றம்!

1 month 3 weeks ago
அடைந்தால் மகாதேவி என்பது போல நீங்க பலாலியில் போய் இறங்க துடியாக துடிக்கிறீர்கள். உங்கள் ஆசை நிறைவேற வாழ்த்துக்கள். காரியம் கை கூடும் நாள் செல்லும்.

யாழ் மாவட்டத்தில் 95 வீதமான நிதி செலவு செய்யப்பட்டுள்ளது – யாழ் அரசாங்க அதிபர் பிரதீபன் பெருமிதம்!

1 month 3 weeks ago
மொத்தமாக செலவு செய்யப்பட்டுள்ளது என்று சொல்வதை விட புள்ளி விபரங்களுடன் எந்த எந்த திட்டங்களுக்கு எவ்வளவு பணம் செலவாகியது என்ற விபரத்தையும் மக்களுக்கு வழங்கலாமே?

யாழ் மாவட்டம் முழுவதும் சுமார் 3000 குடும்பங்கள் மலசல கூட வசதிகள் இன்றி சிரமம்!

1 month 3 weeks ago
இந்தக் கூட்டங்களின் காணொளிகளைப் பார்க்க பிபி எகிறிக் கொண்டு போகிறது. அத்தனை பேரயைும் சுட்டுத் தள்ள வேணும் போல உள்ளது.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

1 month 3 weeks ago
@கிருபன் இன்னமும் விளையாட்டு வீரர்களை ணஅணிகள் அறிவிக்கவில்லை. இருந்தும் ஆளாளுக்கு குத்துமதிப்பில் ஏதோ ஒரு பெயரைப் போடுகிறார்கள். விளையாட்டு வீரர்களின் பெயர்களை அறிவிக்கும் போது அவரவர் பதிந்த வீரர்கள் இல்லாவிட்டால் திருத்தம் செய்யலாமா ? நானும் அதை ஒன்றை எதிர்பார்த்தே பதியாமல் இருக்கிறேன்.

யாழ் மாவட்டம் முழுவதும் சுமார் 3000 குடும்பங்கள் மலசல கூட வசதிகள் இன்றி சிரமம்!

1 month 3 weeks ago
யாழ் மாவட்டம் முழுவதும் சுமார் 3000 குடும்பங்கள் மலசல கூட வசதிகள் இன்றி சிரமம்! யாழ்ப்பாண மாவட்டத்தில் சுமார் 3,012 குடும்பங்கள் மலசலக்கூட வசதிகள் இன்றி வாழ்ந்து வருவதாக யாழ். மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. நேற்றுமுன் தினம் யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழுக் கலந்துரையாடலின் போது, நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரன் மூர்த்தி எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே இத்தகவல் தெரிவிக்கப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன், சாந்தை கிராமத்தில் பல குடும்பங்கள் மலசலக்கூட வசதிகள் இன்றி வாழ்ந்து வருவதாகவும், அவர்களின் சுகாதாரப் பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்தி மலசலக்கூடங்களைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார். இதற்குப் பதிலளித்த துறைசார் அதிகாரிகள், யாழ். மாவட்ட புள்ளிவிபரங்களின்படி மாவட்டம் முழுவதும் சுமார் 3,012 குடும்பங்களுக்கு மலசலக்கூட வசதிகள் இல்லை என்பது தெரியவந்துள்ளதாகக் குறிப்பிட்டனர். https://athavannews.com/2025/1457523

யாழ் மாவட்டத்தில் 95 வீதமான நிதி செலவு செய்யப்பட்டுள்ளது – யாழ் அரசாங்க அதிபர் பிரதீபன் பெருமிதம்!

1 month 3 weeks ago
யாழ் மாவட்டத்தில் 95 வீதமான நிதி செலவு செய்யப்பட்டுள்ளது – யாழ் அரசாங்க அதிபர் பிரதீபன் பெருமிதம்! இந்த ஆண்டு யாழ் மாவட்டத்திற்கு பொது நிர்வாக உள்நாட்டு அலுவலர்கள் அமைச்சு மற்றும் ஏனைய அமைச்சுக்களால் கிடைக்கப் பெற்ற சுமார் 7869.8 மில்லியன் ரூபாய்களில் சுமார் 6735.8 மில்லியன் ரூபாய்கள் செலவு செய்யப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார். நேற்று முன்தினம் யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி கலந்துரையாடலின் போது தலைமை உரையை ஆற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் இவ் வருடம் நிறைவடைய உள்ள நிலையில் யாழ் மாவட்ட செயலகத்துக்கு பொது நிர்வாக உள்நாட்டல்கள அமைத்து மற்றும் ஏனைய அமைச்சுகள் மூலம் கிடைக்கப்பெற்ற நிதிகள் 15 பிரதேச செயலக நீதியாக உரிய முறையில் செலவு செய்யப்பட்டுள்ளது. பொது நிர்வாக உள்நாட்ட அலுவலர்கள் அமையத்தினால் யாழ் மாவட்ட செயலகத்துக்கு ஒதுக்கப்பட்ட 2700.9 மில்லியனில் 2625.2 மில்லியன் செலவு செய்யப்பட்டுள்ளது. ஏனைய அமைச்சுகள் மூலம் 5368.8 மில்லியன் ரூபா கிடைக்கப்பட்டுள்ள நிலையில் 4210.5 மில்லியன் ரூபா செலவு செய்யப்பட்டுள்ளது. தீவக வீதிகள் வேலைத் திட்டம் நாட்டிலே ஏற்பட்ட இடர் நிலை காரணமாக உரிய காலப் பகுதியில் நிறைவு செய்யப்படாத நிலையில் அதற்கான நிதியை மீளப் பெற்றுக் கொடுப்பதற்கு அமைச்சர் சந்திரசேகரன் நடவடிக்கை எடுத்துள்ளார். ஆகவே இவ் வருடம் நிறைவடைய இம்மாதம் 31 ஆம் திகதி வரை கால அவகாசம் இருக்கின்ற நிலையில் தற்போது இடம் பெற்று வரும் வேலைகளுக்கான கொடுப்பனவுகள் இம்மாத இறுதி வரை வழங்குவதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார். Athavan Newsயாழ் மாவட்டத்தில் 95 வீதமான நிதி செலவு செய்யப்பட்டுள்ளது...இந்த ஆண்டு யாழ் மாவட்டத்திற்கு பொது நிர்வாக உள்நாட்டு அலுவலர்கள் அமைச்சு மற்றும் ஏனைய அமைச்சுக்களால் கிடைக்கப் பெற்ற சுமார் 7869.8 மில்லியன் ரூபாய்களில் சுமார் 6735.8 மில்லியன் ரூபாய்கள் செலவு செய்யப்

“தமிழர்கள் ஓட்டு போதும்; திராவிடர்கள் ஓட்டு வேண்டாம்!” - நாதக பொதுக் குழுவில் சீமான் பேச்சு

1 month 3 weeks ago
தொகுதியா….. நாதக நிச்சயம் வெல்லும் தொகுதிகளாவன: இலண்டன் கிழக்கு, டொரெண்டோ மேற்கு, மந்துவில், சங்கரத்தை, உடையார்கட்டு, முள்ளியவளை, செட்டிகுளம், நிலாவெளி, வெருகல், வாகரை, பாண்டிருப்பு, மாந்தை மேற்கு, திருக்கோவில். தவெக கணிசமான வாக்குகளை அள்ளும். ஆனால் விஜையின் தொகுதியில் மட்டும் வெல்லலாம். பிகு நீங்கள் கேட்டிருக்க வேண்டிய கேள்வி, நாதக ஏதாவது ஒரு தொகுதியில்லாவது டெபாசிட்டை காப்பாத்துமா? என்பதே.

2025: அனுர அலையில் தொடக்கி மனிதாபிமான அலையில் முடிந்த ஆண்டு - நிலாந்தன்

1 month 3 weeks ago
2025: அனுர அலையில் தொடக்கி மனிதாபிமான அலையில் முடிந்த ஆண்டு - நிலாந்தன் இந்த ஆண்டு பிறந்த போது நாட்டில் “அனுர அலை” வீசியது. இந்த ஆண்டு முடியும் போது புயலுக்கு பின்னரான ஒரு மனிதாபிமான அலை நிலவுகிறது. இரண்டுமே அலைகள்தான். இரண்டுமே அரசாங்கத்தைப் பலப்படுத்தும் அலைகள்தான். அனுர அலை என்பது தமிழ் நோக்கு நிலையில் தமிழ்த் தேசியக் கட்சிகளை பின்னுக்குத் தள்ளியது. அது நாடாளுமன்றத் தேர்தலில் நிரூபிக்கப்பட்டது. தமிழ் மக்கள் மத்தியில் உள்ள பெரிய கட்சியாகிய தமிழரசுக் கட்சிக்குக் கிடைத்த அதீயளவு ஆசனங்கள்தான் அரசாங்கத்துக்கும் கிடைத்தன. யாருக்கு வாக்களிக்கிறோம் என்பது தெரியாமலேயே தமிழ்மக்கள் வாக்களித்திருந்தார்கள். இப்படிப் பார்த்தால் இந்த ஆண்டு தொடங்கும் பொழுது அது தமிழ்த்தேசிய அரசியலுக்குப் பாதகமான ஓர் ஆண்டாகத்தான் தொடங்கியது. அந்தத் தோல்விக்கான காரணங்களைக் கண்டுபிடித்து அவற்றைச் சரி செய்யும் விடயத்தில் தமிழ்த்தேசிய அரசியல் எந்த அளவுக்கு முன்னேறியிருக்கிறது? உள்ளூராட்சி சபைகளில் பெற்ற வெற்றிகள் சற்று ஆறுதல் தரக்கூடும். ஆனால் கடந்த வாரம் கரைத்துறைப் பற்று பிரதேச சபையில் என்ன நடந்தது? வடக்கில் அரசாங்கம் முதலாவது உள்ளூராட்சி சபையை கைப்பற்றியிருக்கிறது. அதற்கு என்ன காரணம்? சந்தேகத்துக்கிடமின்றி தமிழ் கட்சிகளுக்கு இடையிலான ஐக்கியமின்மைதான் முதலாவது காரணம். அந்த ஐக்கியமின்மையை சரிசெய்யத் தேவையான தலைமைத்துவம் தமிழரசுக் கட்சியிடம் இல்லை என்பதுதான் இரண்டாவது காரணம். சிதறிக் கிடக்கும் தமிழ்த்தேசிய கட்சிகளை ஒன்றிணைப்பதற்கு கடந்த ஓராண்டுக்கு மேலான காலப்பகுதியில் அதாவது ஜனாதிபதி தேர்தலுக்குப் பின் மூன்று முயற்சிகள் எடுக்கப்பட்டன. முதலாவது,தமிழ் தேசிய மக்கள் முன்னணி முன்னெடுத்த நாடாளுமன்ற உறுப்பினர்களை ஒன்றாக்கும் முயற்சி. தமிழரசுக் கட்சி அதைத் தோற்கடித்தது. இரண்டாவது,தமிழ்த்தேசியப் பேரவை என்ற பெயரில் கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சி. அதுவும் இப்பொழுது ஏறக்குறைய தோற்கும் நிலைக்கு வந்துவிட்டது. மூன்றாவது அண்மையில் தமிழரசுக் கட்சியும் டிரிஎன்ஏயும் சந்தித்து மாகாண சபைத் தேர்தல்களை ஒன்றாக எதிர்கொள்வைத்தற்கான பேச்சுவார்த்தை. ஆனால் அந்த ஒற்றுமை முயற்சிகள் எவ்வளவு தூரம் வெற்றி பெறும் என்பதற்கு கரத் துறைப் பற்று பிரதேச சபை ஓர் ஆகப் பிந்திய உதாரணமாக அமையுமா? தேர்தலை நோக்கி உருவாக்கப்படும் கூட்டுக்கள் நிலைத்திருக்காது என்பதைத்தான் கடந்த 16 ஆண்டுகளும் நிரூபித்திருக்கின்றன. எனவே தமிழ்த் தேசிய நோக்கு நிலையிலிருந்து பார்த்தால் ஆண்டு தொடங்கும் போது இருந்த அதே கட்சி நிலைமைகள்தான் ஆண்டு முடியும் போதும் காணப்படுகின்றன. மே 18ஐ நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் கிராமம் அமைந்திருக்கும் கரத்துறைப் பற்று பிரதேச சபையைத் தக்கவைக்க முடியாத தமிழ் கட்சிகள் இனிமேல் மாகாண சபைத் தேர்தல் ஒன்று நடந்தால், அதில் ஒன்றாக நின்று அரசாங்கத்தை எதிர்கொள்ளும் என்று எப்படி நம்புவது? இந்த ஆண்டு பிறந்த போது ஒருபுறம் அனுர அலையின் விளைவுகளால் தமிழ் தேசிய அரசியல் சேதத்துக்கு உள்ளாகியிருந்தது. அதேசமயம் இன்னொருபுறம் யாரும் எதிர்பாராமல் திறக்கப்பட்ட செம்மணிப் மனித புதை குழியானது தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு புதிய அனைத்துலக வாய்ப்புகளைத் திறந்துவிட்டது. மனிதப் புதைகுழி என்பது உணர்வு பூர்வமானது. அது உள்ளூரில் மக்களைத் திரட்ட உதவும். இன்னொரு புறம் பொறுப்புக் கூறும் விடயத்தில் உலக சமூகத்துக்கு எடுத்துக் காட்டத்தக்க ஆகப்பிந்திய உதாரணமாகவும் அது அமைந்தது. அதன் காரணமாகத்தான் ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் செம்மணிக்கு வர வேண்டியிருந்தது. ஆனால் ஐநா செம்மணிக்கூடாக பொறுப்புக்கூறலை அணுகவில்லை என்பதைத்தான் கடைசியாக நிறைவேற்றப்பட்ட ஐநா தீர்மானம் உணர்த்துகின்றது. அதாவது தமிழ் மக்கள் ஐநாவில் பலமாக இல்லை என்பதைத்தான் அது உணர்த்தியது. உள்நாட்டிலும் தமிழ் மக்கள் பலமாக இல்லை அனைத்துலக அளவிலும் தமிழ் மக்கள் பலமாக இல்லை. ஆண்டு பிறந்த போதும் பலமாக இல்லை. ஆண்டு முடியும்போதும் பலமாக இல்லை. இந்த ஆண்டின் ஆகப்பிந்திய தோல்வி கரைத்துரைப் பற்று பிரதேச சபை. ஒரு புயலுக்கு பின்னரான அரசியலில்,தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டத்தில் ஆதீனத் தலைவரும் உட்பட பல போராட்டக்காரர்கள் மீது பலப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட நாளுக்கு அடுத்த நாள் அதிலும் குறிப்பாக, இந்திய வெளியுறவு அமைச்சர் கொழும்புக்கு வருகை தந்த அதே நாளில்,வடக்கில் முதலாவது பிரதேச சபையை தமிழ் தேசியத் தரப்பு அரசாங்கத்திடம் இழந்திருக்கிறது. அரசாங்கம் புயலுக்கு பின் முன்னரைவிடப் பலமாகக் காணப்படும் ஓர் அரசியல் சூழலில் தமிழ்த் தேசியத் தரப்புக்கு ஏற்பட்ட தோல்வி இது. ஆண்டின் முடிவில் நாட்டைத் தாக்கிய புயலின் விளைவாக ஒரு மனிதாபிமானச் சூழல் உருவாகியது. அந்த மனிதாபிமானச் சூழலை ஜேவிபி உள்நாட்டில் கிராமங்கள் தோறும் நிவாரண அரசியலாக,தொண்டு அரசியலாக திட்டமிட்டுக் கட்டமைத்தது. அதன்மூலம் எதிர்க்கட்சிகளை பெருமளவுக்கு பலவீனப்படுத்தியது. ஆண்டு தொடங்கும்போது பலவீனமாக இருந்த எதிர்க்கட்சிகள் இடையில் நுகேகொட பேரணிமூலம் தலையெடுக்க முயற்சித்தன. ஆனால் புயல் வந்து அரசாங்கத்தை மீண்டும் பலப்படுத்தி விட்டது. அண்மையில் உலகளாவிய 120 நிபுணர்கள் அடங்கிய குழு வெளியிட்ட அறிக்கை அதைக் காட்டுகிறது. கடனை மீளக்கட்டமைக்கும் விடயத்தில் அரசாங்கத்துக்குச் சாதகமாக முடிவெடுக்குமாறு அந்த அறிக்கை கேட்டிருக்கிறது. அதாவது புயலுக்கு பின்னரான மனிதாபிமான அலை என்பது உள்நாட்டில் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளை கடந்து போவதற்கு அரசாங்கத்துக்கு உதவுகிறது. அனைத்துலக அளவில் கடனை மீள கட்டமைக்கும் நெருக்கடியிலிருந்து விடுபட உதவியிருக்கிறது. புயலின் பின்னரான மனிதாபிமானச் சூழலுக்குள் முதலில் இறங்கியது இந்தியா. அதிகமாக உதவியதும் இந்தியா. இயற்கை அழிவு ஒன்றுக்குப் பின்னரான இலங்கைத் தீவின் அரசியலில் இந்தியா தன்னுடைய பிடியை மேலும் பலப்படுத்தியிருக்கிறது. இப்பொழுது தொகுத்துப் பார்க்கலாம். இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தது அனுர அலை, அது மூன்றில் இரண்டு பெரும்பான்மை. இந்த ஆண்டின் முடிவில் இருப்பது மனிதாபிமான அலை. அது இலங்கை அரசாங்கத்தைப் பலப்படுத்தும் அலை. எதிர்க்கட்சிகளை மேலும் வாயடைக்கச் செய்யும் அலை. இந்த இரண்டு அலைகளுமே எதிர்கட்சிகளை மட்டுமல்ல தமிழ்த்தேசியக் கட்சிகளையும் பலவீனப்படுத்தியிருக்கின்றன. புயலுக்குப் பின்னரான மனிதாபிமான அலையின் பின்னணியில், தமிழ்த் தேசியப் பேரவை தமிழகத்தை நோக்கிச் சென்றது. தமிழரசுக் கட்சியும் டிரிஎன் ஏயும் கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகத்தை நோக்கிச் சென்றன. ஆனால் தமிழ்த் தேசியக் கட்சிகள் இந்தியாவை நோக்கிச் சென்ற அதே காலகட்டத்தில், இந்தியா கொழும்பை நோக்கி அதன் வெளிவிவகார அமைச்சரை அனுப்பியது. தமிழ்க் கட்சிகள் இந்திய வெளிவிவகார அமைச்சரைச் சந்தித்தபோது ஒருமித்த நிலைப்பாட்டோடு இருக்கவில்லை என்பதைத்தான் பின்னர் வெளிவந்த அறிக்கைகள் காட்டுகின்றன. அதிலும் குறிப்பாக இந்திய வெளிவகார அமைச்சர் கொழும்புக்கு வந்த அதே நாளில்தான் கரைத்துறைப்பற்று பிரதேச சபையை தமிழ்க் கட்சிகள் அரசாங்கத்திடம் பறி கொடுத்தன. எனவே இந்த ஆண்டு முடியும்போது தமிழ் மக்களின் உடனடி பிரச்சினைகளுக்கும் இந்த அரசாங்கம் தீர்வைத் தரவில்லை. உதாரணமாக,அரசியல் கைதிகள் முழுமையாக விடுவிக்கப்படவில்லை. பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்படவில்லை அதற்குப் பதிலாக புதிய சட்டம் வருகிறது. சிங்கள பௌத்த மயமாக்கல்,நிலப்பறிப்பு போன்ற பெரும்பாலான உடனடிப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கவில்லை. திருமலையில் அண்மையில் வைக்கப்பட்ட புத்தர் சிலை வைக்கப்பட்ட இடத்திலேயே இருக்கிறது. அதாவது தமிழ் மக்களின் உடனடிப் பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கவில்லை. நிரந்தரப் பிரச்சனைக்கும் பேச்சுவார்த்தைகள் தொடங்கவில்லை. அதேசமயம் ஆண்டின் இறுதியில் வீசிய புயல் அரசாங்கத்தைப் பலப்படுத்தியிருக்கிறது. அது எதிர்கொள்ளக் கடினமான பிரச்சினைகளையும் வாக்குறுதிகளையும் ஒத்திவைப்பதற்கு வேண்டிய அவகாசத்தை அரசாங்கத்திற்கு வழங்கியிருக்கிறது. கடந்த மூன்று தசாப்த காலத்துக்குள் ஏற்பட்ட இரண்டாவது இயற்கைப் பேரிடர் ஒன்றுக்குப் பின்னரான மனிதாபிமான அலை இது. இந்த மனிதாபிமான அலையை,ஜேவிபியின் கிராமமட்ட வலையமைப்பு திட்டமிட்டு எதிர்க்கட்சிகளுக்கு எதிராகவும் அரசாங்கத்தை பலப்படுத்தும் நோக்கத்தோடும் கட்டமைத்து வருகிறது. ஜேவிபியின் கிராமமட்ட வலைப்பின்னலுக்கூடாக உள்ளூர் தொண்டர்களும் தன்னார்வலர்களும் இந்த மனிதாபிமான அலையைக் கட்டியெழுப்பினார்கள். இலங்கைக்கான ஐநாவின் வதிவிடப் பிரதிநிதி கூறுவதுபோல,இது ஓர் அசாதாரணமான சகோதரத்துவநிலைதான். ஆனால் இதே போன்றதொரு மனிதாபிமான அலை 2004ஆம் ஆண்டு சுனாமிப் பேரழிவின் பின்னரும் தோன்றியது. அப்பொழுது யுத்த நிறுத்தம் நிலவியது. எனவே அது நாடு முழுவதுமான ஒரு மனிதாபிமான அலையாகக் காணப்பட்டது. அந்த மனிதாபிமானச் சூழலை அரசியல் தீர்வு ஒன்றுக்கான சாதகமான நிலைமைகளைக் கனியவைப்பதற்கான ஒரு சூழலாக மாற்றலாமா என்று பரிசோதிப்பதற்கு அப்பொழுது சமாதானத்தை முன்னெடுத்த மேற்கு நாடுகள் முயற்சித்தன. அதன் விளைவாக உருவாக்கப்பட்ட மனிதாபிமானக் கட்டமைப்புத்தான் சுனாமிக்கு பின்னரான பொதுக் கட்டமைப்பாகும். அந்தக் கட்டமைப்பு வெற்றிகரமாக இயங்கி இருந்திருந்தால் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான ஒரு பரிசோதனைக் கட்டமைப்பாக அது அமைந்திருக்கக்கூடும். ஒரு மனிதாபிமானச் சூழலை அவ்வாறு அரசியல் உள்நோக்கத்தோடு பயன்படுத்த மேற்கு நாடுகள் முயற்சித்தன. முதற்கட்டமாக அதில் வெற்றியும் அடைந்தன. அரசாங்கமும் விடுதலைப்புலிகள் இயக்கமும் சுனாமி பொதுக் கட்டமைப்புக்கு இணங்கின. ஆனால் அந்த மனிதாபிமானச் சூழலுக்குள் இனவாத அலையைத் தூண்டியா ஜேவிபி அதைத் தோற்கடித்தது. சுனாமிக்குப் பின்னரான ஒரு மனிதாபிமானச் சூழலை இனவாதத்தின் மூலம் தோற்கடித்த அதே இயக்கத்தை அடித்தளமாகக் கொண்ட இப்போதுள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது, புயலுக்குப் பின்னரான மனிதாபிமானச் சூழலை தன்னைப் பலப்படுத்துவதற்கும் எதிர்க்கட்சிகளை பலவீனப்படுத்துவதற்கும் கெட்டித்தனமாகப் பயன்படுத்துகின்றது. ஆனால் இந்த அசாதாரண மனிதாபிமானச் சூழலை அரசாங்கம் இனவாதத்துக்கு எதிராக கட்டமைக்கவில்லை. அவ்வாறு கட்டமைக்கும் என்று நம்பத்தக்கதாக தேசிய மக்கள் சக்தியின் கடந்த ஓராண்டு காலம் அமையவில்லை. https://www.nillanthan.com/8034/

பனியால் சூழப்பட்ட சவுதி அரேபியாவின் பாலைவன நிலப்பரப்புகள்!

1 month 3 weeks ago
காலநிலை தொடர்பாக நடைபெறும் மாநாடுகள் வடையும் தேனீரும் அருந்தும் மாநாடுகள் போல் தோன்றுகின்றன. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி

மட்டு. மண்முனை மேற்கு பிரதேசத்திற்குள் நுழைந்தது 20 மேற்பட்ட காட்டு யானைகள் ; விரைந்து செயற்பட்டனர் ஜீவராசிகள் பாதுகாப்பு உத்தியோகஸ்த்தர்கள்

1 month 3 weeks ago
மட்டு. மண்முனை மேற்கு பிரதேசத்திற்குள் நுழைந்தது 20 மேற்பட்ட காட்டு யானைகள் ; விரைந்து செயற்பட்டனர் ஜீவராசிகள் பாதுகாப்பு உத்தியோகஸ்த்தர்கள் 28 Dec, 2025 | 05:04 PM மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை மேற்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கரவெட்டி, மகிழவெட்டுவான், நரிப்புல்தோட்டம், போன்ற பல பிரதேசங்களில் நீண்ட நாட்களாக காட்டு யானைகள் தொல்லைகளும் அட்டகாசங்களும் அதிகரித்த வண்ணம் உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் அப்பகுதியிலுள்ள மக்களின் பயன்தரும் தென்னை, வாழை, உள்ளிட்ட பயிரினங்களையும் காட்டுயானைகள் துவம்சம் செய்து வருவதாகவும் அங்குள்ள மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். இது இவ்வாறு இருக்க சனிக்கிழமை (27) அப்பகுதியைச் சூழ சுமார் இருபதிற்கு மேற்பட்ட காட்டுயானைகள் உலாவித்திரிந்ததனால் மக்கள் பீதிடைந்தநிலையில் காணப்பட்டனர். இந்நிலையில் அங்குள்ள மக்கள் விடுத்த கோரிக்கைக்கு வன ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள உத்தியோகஸ்த்தர்கள் அப்பகுதிக்கு விரைந்து அப்பகுதி மக்களுடன் இணைந்து காட்டு யானைக் கூட்டத்தை விரட்டுவதற்கு எடுத்த முயற்சியின் பலனாக பல்வேறு பிரேயத்தனங்களுக்கு மத்தியில் பாதுகாப்பாக காட்டுயானைகள் வனப்பகுதிக்குள் அனுப்படுத்தியுள்னர். எனினும் காட்டுயானைகள் மக்கள் குடியிருப்புக்களுக்குள் உள்நுளையாமலிருப்பதற்காக வேண்டி அங்குள்ள காட்டுயானைகளை நிரந்தரமாக அப்புறப்படுத்தி, யானைப் பாதுகாப்பு வேலிகளை அமைப்பதற்கு அதிகரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுகின்றனர். https://www.virakesari.lk/article/234601

“தமிழர்கள் ஓட்டு போதும்; திராவிடர்கள் ஓட்டு வேண்டாம்!” - நாதக பொதுக் குழுவில் சீமான் பேச்சு

1 month 3 weeks ago
இரண்டிற்கும் இடையே வித்தியாசம் உள்ளது. திராவிட நாடு ஒன்றை வலாற்காரமாக பிடித்து வைத்துக் கொண்டு சீமான் இவ்வாறு சொன்னால் இரண்டும் ஒரே தன்மையை உடையன. சீமானின் தமிழ் தேசியக் கொள்கையை ஏற்றுக் கொள்ள முடியாது என்பதை உணர்ந்தாலும் அதன் மூலம் திராவிட நாடு ஒன்றை ஏற்பது குறித்து மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன.

வறுமையிலும் மலர்ந்த மனிதாபிமானம் - தமிழக வாழ் இலங்கையர்களின் பாரிய நிவாரண உதவிகள்

1 month 3 weeks ago
வறுமையிலும் மலர்ந்த மனிதாபிமானம் - தமிழக வாழ் இலங்கையர்களின் பாரிய நிவாரண உதவிகள் 28 December 2025 இலங்கையில் அண்மையில் நிலவிய அதிதீவிர வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, தமிழகத்தின் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கையர்கள் தங்களின் வலுவான ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாகப் பாரிய நிவாரண உதவிகளை வழங்கியுள்ளனர். குறித்த நிவாரண உதவிகள் சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தில் முறையாகக் கையளிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தமிழர்களுக்கான மறுவாழ்வு மையத்தின் அதிகாரிகள் எமது செய்தி சேவைக்கு தெரிவித்தனர். இதன்படி தமிழகத்தின் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கையர்கள், 2 கொள்கலன்களில் அத்தியாவசிய நிவாரணப் பொருட்களையும், தமது ஒருங்கிணைந்த முயற்சிகள் மூலம் 12,33,604 இந்திய ரூபாய் நிதியுதவியையும் (இலங்கை ரூபாயில் சுமார் 42,50,000) வழங்கியுள்ளனர். இதற்கமைய குறித்த நிவாரணப் பொருட்கள் கடந்த 26ஆம் திகதி சென்னையிலிருந்து இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், இவை உரிய திணைக்கள அதிகாரிகள் ஊடாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகிக்கப்படவுள்ளன. மேலும் இக்கட்டான காலகட்டத்தில் அனர்த்த சூழ்நிலையைச் சமாளிக்கவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவளிக்கவும் இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட உடனடி நடவடிக்கைகளுக்குத் தமிழகத்தின் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கையர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள 106 மறுவாழ்வு முகாம்களில் சுமார் 60,000 இலங்கையர்கள் வசிக்கின்றனர். மேலும் 40,000 பேர் முகாம்களுக்கு வெளியே தங்கியிருந்து, அந்தந்தப் பகுதி காவல்துறையில் பதிவு செய்துகொண்டு வாழ்ந்து வருகின்றனர். இந்தநிலையில் இடப்பெயர்வு உள்ளிட்ட பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ள போதிலும், அவர்கள் இலங்கையில் பேரழிவால் பாதிக்கப்பட்டவர்களுக்காகக் கூட்டாக நிவாரண உதவிகளைத் திரட்டிய செயலானது, அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதற்கமைய குறித்த உன்னதமான பங்களிப்பிற்காக இலங்கை அரசாங்கம் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் இலங்கையர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை இலங்கையில் அண்மையில் நிலவிய அதிதீவிர வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, தமிழகத்தில் இருந்து அடுத்த வாரத்தில் மற்றுமொரு நிவாரண கொள்கலன் அனுப்பி வைக்கப்படவுள்ளது. சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் இதனை எமது செய்தி சேவைக்கு தெரிவித்தது. அதிதீவிர வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, தமிழகத்தில் இருந்து இதுவரை 4 கொள்கலன்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதற்கமைய ஆடைகள், உலர் உணவு பொருட்கள், பாதுகாப்பு உபகரணங்கள், மருந்துகள் மற்றும் சுகாதார நப்கின்கள் உள்ளிட்டவை அடங்கும். மக்களின் தேவைக்கருதி அடுத்த வாரத்தில் மேலும் ஒரு நிவாரண கொள்கலன் அனுப்பி வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://hirunews.lk/tm/438008/humanitarianism-blossoms-even-in-poverty-massive-relief-assistance-from-sri-lankans-living-in-tamil-nadu

யாழ் உள்ளக விளையாட்டு அரங்கு நிதி கட்டடங்கள் திணைக்களத்துக்கு மாற்றம்!

1 month 3 weeks ago
இலண்டனின் ஹைட்பார்க், நியோர்க்கின் சென்ரல் பார்க் போல பேணப்படவேண்டிய இடம் பழைய பூங்கா. சும்மா கையூட்டுக்காக அதை நாசம் பண்ணாமல், வேறு இடத்தில் உள்ளக விளையாட்டரங்கை அமைக்க வேண்டும்.

கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பில் அதிபர் தரச் சங்கத்தின் எச்சரிக்கை

1 month 3 weeks ago
கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பில் அதிபர் தரச் சங்கத்தின் எச்சரிக்கை கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதன் மூலம் வெற்றிகரமான பலன்களைப் பெற வேண்டுமானால், அது குறித்து அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் ஆக்கப்பூர்வமான கலந்துரையாடல்களை மேற்கொண்டு நெகிழ்வுத்தன்மையுடன் செயற்பட வேண்டுமென அதிபர் தரச் சங்கத்தின் பொதுச் செயலாளர் நிமல் முதுன்கொடுவ தெரிவித்துள்ளார். அவ்வாறான கலந்துரையாடல்களை முன்னெடுக்காமல், ஜனவரி 5ஆம் திகதி முதல் பிற்பகல் 2.00 மணி வரை பாடசாலைகளை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டால், தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக அவர் மேலும் குறிப்பிட்டார். இதன்படி, ஜனவரி 5ஆம் திகதிக்கு முன்னர் இதற்குத் தெளிவான பதிலொன்றை வழங்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார். அத்துடன் 6ஆம் தரத்திற்கான கல்விச் சீர்திருத்தங்களை மேற்கொள்வதன் மூலம் ஏனைய வகுப்புக்களிலும் உயர்தர வகுப்புக்களிலும் பாரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும், இப்பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டுமானால் கல்வித் தொழிற்சங்கங்கள் மற்றும் துறைசார் நிபுணர்களுடன் கலந்துரையாட வேண்டும் எனவும் நிமல் முதுன்கொடுவ வலியுறுத்தியுள்ளார். உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் கலந்துரையாடுவதன் மூலம் நாட்டின் கல்விச் சீர்திருத்தங்களை அமுல்படுத்த முடியாது என்றும் அவர் தெரிவித்தார். கல்விச் சீர்திருத்தங்களை அமுல்படுத்துவதற்கு முன்னர் பின்பற்ற வேண்டிய சில நடைமுறைகள் இருப்பதாகவும், அவற்றைப் பின்பற்றாமல் இறுதியில் செய்ய வேண்டிய சீர்திருத்தங்களை முதலில் செய்ய முயற்சிப்பதால் இதனை வெற்றிகொள்ள முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார். குறிப்பாக, பாடசாலைகளை பிற்பகல் 2.00 மணி வரை நடத்துவதும், பாடவேளைகளை 50 நிமிடங்கள் வரை நீடிப்பதும் தோல்வியடைந்துள்ளதாகவும், அதனை உடனடியாக மீளப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். ஜனவரி 5ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டதும் 6ஆம் தரத்திற்கும், ஜனவரி மாத இறுதியில் 1ஆம் தரத்தில் சேர்க்கப்படும் மாணவர்களுக்கும் கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ள போதிலும், தற்போது அது பாரிய சிக்கலாக மாறியுள்ளதாக செயலாளர் குறிப்பிட்டார். ஏனைய தரங்களுக்கான பாடசாலை நேர அட்டவணைகளைத் தயாரிக்குமாறு கூறப்பட்டாலும், அது இதுவரை நான்கு முறை சுற்றறிக்கைகள் மூலம் மாற்றப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார். கடந்த ஆண்டுகளில் இந்த காலப்பகுதியில் பாடசாலை நேர அட்டவணைகள் அங்கீகரிக்கப்பட்டிருந்த போதிலும், இந்த ஆண்டு அதற்கான அனுமதியைப் பெறுவதற்கு கல்வி அமைச்சு தேவையான ஒத்துழைப்பை வழங்கவில்லை என அவர் தெரிவித்தார். இது அதிபர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பிரச்சினையாக மாறியுள்ளதோடு, நேர அட்டவணைகளை அங்கீகரிப்பதற்கான அறிவுறுத்தல்கள் வலய மற்றும் கோட்டக் கல்வி அலுவலகங்களுக்கு வழங்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 40 நிமிடப் பாடவேளைகளுக்காகத் தயாரிக்கப்பட்ட பாடத்திட்டத்தை 50 நிமிடப் பாடவேளைகளுக்கு அமைய முன்னெடுப்பது சிக்கலானது என்றும், அதனை எவ்வாறு செய்வது என்பது குறித்து கல்வி அமைச்சு இதுவரை எவ்வித அறிவித்தலையும் வழங்கவில்லை என்றும் அவர் ஊடகங்களிடம் தெரிவித்தார். மேலும், சீர்திருத்தங்கள் தொடர்பான எந்தவொரு தொகுப்புகளும் (Modules) இதுவரை எந்தப் பாடசாலைக்கும் கிடைக்கவில்லை எனவும், இந்நிலையில் ஜனவரி 5ஆம் திகதி பாடசாலைகளை ஆரம்பித்து கற்பித்தல் நடவடிக்கைகளை எவ்வாறு முன்னெடுப்பது என்பதில் பெரும் கேள்விக்குறி நிலவுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். https://adaderanatamil.lk/news/cmjpklfcw037go29n5vtsxvm0
Checked
Wed, 02/25/2026 - 07:41
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed