புதிய பதிவுகள்2

ஈழத்தின் ஓவிய, சிற்ப ஆளுகை ரமணி மறைவு  !

1 month 3 weeks ago
ஈழத்தின் ஓவிய, சிற்ப ஆளுகை ரமணி மறைவு ! 29 டிசம்பர் 2025 யாழ்ப்பாணத்து ஓவியர்களில் நாம் மிகவும் இரசித்த ஓரு ஓவியர் ரமணி. வழமையான கோட்டோவியப் பாணிகளில் இருந்து, மாற்றாக நீளக் கோடுகளால் இவர் உருவாக்கிய ஓவியங்கள் எம்மை அதிகம் கவர்ந்தவை. அதுவெ அவருக்கான ஓவியத் தனித்துவமாகவும் அறியப்பட்டிருந்தது. தமிழகத்தில் ம.செ.எனும் மணியன் செல்வனின் ஓவியங்கள் எவ்வாறு அவரை தனித்து அடையாளப்படுத்துமோ, அதுபோலவே ரமணியின் ஓவியப்பாணி வழக்கமான ஓவியங்களில் இருந்து அவரைத் தனித்து அடையாளங்காட்டும். அவரது தமிழ் எழுத்து வடிவங்களும் கூட தனித்துவமான தன்மையில் இருக்கும். கணினியிலான தமிழ் எழுத்து வடிவங்களுக்கு முன்னைய காலத்தில், இலங்கையில் வெளிவந்த பல வெளியீடுகளிலும், பத்திரிகைகளிலும், தலைப்புக்களுக்காக அவரது நளினமான எழுத்து வடிவங்கள் ரமணியை அடையாளப்படுத்தின. ரமணியின் ஓவியங்களை மேலும் ரசிக்கச் செய்தவர், எம்முடைய ஓவிய ஆசிரியர் கிருஷ்ணதாசன். ஒவியர் ரமணிக்கு நெருக்கமான அவர் வரையும் ஓவியங்களிலும், எழுத்துக்களிலும், ரமணியின் ஓவியப்பாணி வெளிப்படும். அவரது அதீதமான அவரது சிலாகிப்புக்களும், ரமணியின் ஓவியங்கள் மீதான எமது ரசணை அதிகமாவதற்கு ஒரு காரணமெனலாம். ரமணி வெறும் ஓவியர் மட்டுமல்ல தேர்ந்த ஒரு சிற்பியும் கூட என்பது பின்னால் நாம் தெரிந்து கொண்ட விடயம். யாழ் இந்துக்கல்லூரி ஆறுமுக நாவலர் பெருமானின் உருவச்சிலை , தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தில் அமைந்துள்ள சிவத்தமிழ்ச்செல்வி தங்கம்மா அப்பாக்குட்டியின் உருவச்சிலை, எனப் பல பெரியார்களின் உருவச்சிலைகளை உருவாக்கிய பெருமைக்குரிய கலைஞர். அன்னாருக்கு எமது அஞ்சலிகள் ! https://4tamilmedia.com/menu-essay/culture/ramani https://www.facebook.com/share/p/1FqsnUuJCN/?mibextid=wwXIfr முகநூலில் இருந்து.. ஈழத்து ஓவியக் கலையின் முகவரி, தன்னிகரற்ற சிற்பி, எம்மையெல்லாம் கலைப் பாதையில் வழிநடத்திய மாபெரும் ஆசான் திருவாளர் வைத்தீஸ்வரன் சிவசுப்பிரமணியம் (ஓவியர் ரமணி) அவர்கள் இறைவனடி சேர்ந்த செய்தி கேட்டு ஆழ்ந்த துயரில் மூழ்கியுள்ளேன். ஓர் ஆசானாக... ஆறாம் வகுப்பிலிருந்தே எனக்கு ஓவியத்தின் அரிச்சுவடியைக் கற்றுத் தந்தவர். வண்ணங்களோடும் கோடுகளோடும் நான் உறவாடக் காரணமானவர். ஒரு மாணவனாக அவரிடம் நான் கற்ற கலைப்பயிற்சிகள் என் வாழ்நாள் சொத்தாகும். அவரது கைவண்ணத்தில் உருவான சிலைகள் வெறும் கற்சிலைகள் அல்ல அவை எமது மண்ணின் வீரத்தையும் வரலாற்றையும் பேசும் சாட்சிகள். நெல்லியடி மத்திய கல்லூரியில் அமைக்கப்பட்ட மில்லர் சிலை மற்றும் தீருவிலில் அமைக்கப்பட்ட போராளிகளின் சிலைகளை அவர் வடித்திருந்தார், குறிப்பாக எமது பாடசாலையில் உருவாக்கப்பட்ட மில்லர் சிலைவடிப்பின் போது அவருக்கு ஒத்தாசையாக இருந்த மாணவர்களில் ஒருவனாக நானும் இருந்தேன் என்பது என் வாழ்வின் பெரும் பாக்கியம். யாழ் இந்துக்கல்லூரியில் உள்ள ஆறுமுக நாவலர் பெருமான், தெல்லிப்பழை துர்க்கையம்மன் கோவிலில் உள்ள தங்கம்மா அப்பாக்குட்டி, சேர் பொன் இராமநாதன் மற்றும் எத்தனையோ மாமனிதர்களின் உருவங்களைச் சிலைகளாகச் செதுக்கி அழியாத புகழை ஈழ மண்ணில் நிலைநாட்டியவர் அவர். ஈழத்து இலக்கிய உலகில் சிறந்த அட்டைப்படங்களை வரைவதில் அவர் ஒரு சகாப்தம். அவரது விளக்கப்படங்களும், அட்டைப்படங்களும் பல நூல்களுக்கு உயிரூட்டின. முன்னாள் அழகியல் உதவி கல்விப் பணிப்பாளராகவும், இராமநாதன் நுண்கலைப் பீட வருகை விரிவுரையாளராகவும் அவர் ஆற்றிய பணிகள் ஈழத்துக் கலைப்பரப்பில் என்றும் நிலைத்து நிற்கும். எனது பெருவிருப்பிற்குரிய குருநாதர் “ரமணி சேர்” அவர்களின் இழப்பால் துயருறும் கலையுலகத்தினருக்கும், எனது அருமை பள்ளித்தோழர்களான அவரது புதல்வர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அந்தக் கலை மேதையின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றேன். ஓம் சாந்தி!

போதையில் வாகனம் செலுத்தினால் குற்றவியல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை

1 month 3 weeks ago
மதுபோதையில் அல்லது கவனக்குறைவாக வாகனத்தை செலுத்தும் சாரதிகளுக்கு கடும் தண்டனை! 29 Dec, 2025 | 12:14 PM மதுபோதையில் அல்லது கவனக்குறைவாக வாகனத்தை செலுத்தினால் அது பாரிய குற்றச் செயலாகும் என பொலிஸ் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவின் பிரதி பொலிஸ் மா அதிபர் டபிள்யு. ஜி. ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார். பொலிஸ் ஊடகப் பிரிவில் இன்று திங்கட்கிழமை (29) காலை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே பொலிஸ் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவின் பிரதி பொலிஸ் மா அதிபர் இதனை தெரிவித்துள்ளார். பொலிஸ் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவின் பிரதி பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவிக்கையில், மதுபோதையில் அல்லது கவனக்குறைவாக வாகனத்தை செலுத்தினால் போக்குவரத்து விதிமீறல் என்பதற்கு மாறாக பாரிய குற்றச் செயல் என்ற ரீதியில் தண்டனை வழங்கப்படும் வீதி விபத்துக்களுக்கு பிரதான காரணம் மதுபோதையில் வாகனங்களை செலுத்துவது தான். எனவே, மதுபோதையில் அல்லது கவனக்குறைவாக வாகனத்தை செலுத்தும் சாரதிகளுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/234657

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் பெற்றுக்கொடுக்க ஜனாதிபதிக்கு மனு

1 month 3 weeks ago
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் பெற்றுக்கொடுக்க ஜனாதிபதிக்கு மனு Dec 29, 2025 - 03:03 PM மலையகத்தில் பாதிக்கப்பட்ட 1,641 குடும்பங்களை இனங்கண்டு அவர்களுக்கான நிவாரணத்தை பெற்றுக்கொடுக்க ஜனாதிபதிக்கு மனுவொன்றை அனுப்புவதற்காக பேரிடர் நிவாரண செயலணி செயற்பட்டு வருகிறது. இதற்கான கலந்துரையாடல் ஒன்று நேற்று (28) ஹட்டனில் நடைபெற்றது. டித்வா புயல் நாடாளவிய ரீதியில் பாரிய பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது. இதில் மலையகத்தில் 127 பேர் பலியாகி 16 பேர் காணாமல் போய் உள்ளனர். இதில் 6 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவகின்றனர். இந்நிலையில் பெருந்தோட்டப் பகுதியில் 1,641 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் 593 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ள நிலையில், அவர்களுக்கு இன்னமும் அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிவாரணங்கள் முழுமையாக கிடைக்கவில்லை. அரசாங்கத்தின் அறிவித்தல் படி 4 இலட்சத்து 56 ஆயிரம் பேர் நிவாரணங்களை பெறுவதற்கு தகுதி பெற்றுள்ளதாகவும் அதில் 3 இலட்சத்து 72 ஆயிரம் பேருக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இது 82 சதவீத எனவும், 4 இலட்சத்து 672 பேர் 50 ஆயிரம் ரூபாய் நிவாரணத்திற்கு தகுதியுடையவர்களாகவும் அதில் 3,262 பேருக்கான நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிவாரணத்தினை பெற்றுக்கொள்வதற்காக பெரும்பாலான தோட்ட மக்கள் விண்ணப்பித்த போதிலும் ஒரு சில செயலகங்களில் விண்ணப்பப்படிவம் கூட ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இதற்கு பிரதான காரணம் அவர்களுக்கு நில உரிமை இல்லாமையும் அவர்கள் தொடர்பான விபரங்கள் தோட்ட முகாமையாளரிடம் பெற்றுக்கொள்ள வேண்டிய நிலை காணப்படுவதனால் இந்த நிவாரணங்கள் பெறுவது தொடர்பான சிக்கல்கள் காணப்படுவதாகவும் குறிப்பிடப்படுகின்றது. எனவே, இது குறித்து பேரிடர் நிவாரண செயலணி கண்டி, நுவரெலியா, பதுளை, மாத்தளை, இரத்தினபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் கலந்துரையாடல்களை மேற்கொண்டு உண்மையாக பாதிக்கப்பட்டவர்களின் விபரங்களை திரட்டி மாவட்ட செயலாளர் ஊடாக ஜனாதிபதிக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் இந்த செயலணியின் ஏற்பாட்டாளர் ஜீவன் ராஜேந்திரன் தெரிவித்தார். பாதிப்பு என்று வரும் போது அனைவருக்கும் பாகுபாடின்றி செயப்பட வேண்டியது பொறுப்பு வாய்ந்தவர்களின் கடமை என்றும் இதன் போது பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர். -மலையக நிருபர் சுந்தரலிங்கம்- https://adaderanatamil.lk/news/cmjqynuc10397o29nehtzeuow

'முழு நாடுமே ஒன்றாக - தேசிய செயற்பாடு' - 971 சந்தேக நபர்கள் கைது

1 month 3 weeks ago
“முழு நாடுமே ஒன்றாக” போதைப்பொருள் சுற்றிவளைப்பில் பலர் கைது! Published By: Digital Desk 1 29 Dec, 2025 | 11:05 AM ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய, நாடு முழுவதும் போதைப்பொருளை தடுக்கும் “முழு நாடுமே ஒன்றாக” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலுடன், இலங்கை பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டுவரும் தொடர்ச்சியான, போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளின் போது பலர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. அதன்படி, நேற்று ஞாயிற்றுக்கிழமை (28) முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளுக்கமைய, 205 கிராம் ஹெரோயின், 379 கிராம் ஐஸ், 302 கிராம் கஞ்சா, 20,114 கஞ்சா செடிகள், 09 கிராம் குஷ்ரக போதைப்பொருள், 03 கிராம் ஹஷீஷ் ரக போதைப்பொருள், 189 போதை மாத்திரைகள், 04 கிலோகிராம் 459 கிராம் 355 மில்லிகிராம் மதனமோதகம் மற்றும் 635 கிராம் மாவா போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. அதேநேரம், குறித்த போதைப்பொருட்களுடன் தொடர்புடைய 737 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், தடுப்புக்காவல் உத்தரவு பெற்ற 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணைகளுக்கமைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.அத்துடன், 740 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதுடன், இருவர் மறுவாழ்வு நிலையங்களுக்கு அனுப்பிவைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/234648

போதையில் வாகனம் செலுத்தினால் குற்றவியல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை

1 month 3 weeks ago
போதையில் வாகனம் செலுத்தினால் குற்றவியல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை Dec 29, 2025 - 01:02 PM இனிவரும் காலங்களில் மதுபோதையில் மற்றும் கவனக்குறைவாக வாகனம் செலுத்துபவர்களுக்கு எதிராக, போக்குவரத்துச் சட்டங்களுக்கு மேலதிகமாகக் குற்றவியல் சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்கப்படும் எனப் போக்குவரத்து நிர்வாகம் மற்றும் வீதி பாதுகாப்புப் பொறுப்பதிகாரி பிரதி பொலிஸ் மா அதிபர் டபிள்யூ. ஜி. ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார். இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டில் வீதி விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். போதைப்பொருள் மற்றும் மதுப்பாவனையே இந்த விபத்துக்களுக்குப் பிரதான காரணம் எனக் குறிப்பிட்ட அவர், இனிவரும் காலங்களில் இத்தகைய விபத்துக்களின் போது போக்குவரத்துச் சட்டங்களுக்குப் மேலதிகமாக குற்றவியல் சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்: "கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டில் வீதி விபத்துக்கள் 271 ஆல் அதிகரித்துள்ளன. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 317 ஆல் அதிகரித்துள்ளது. இருப்பினும், பாரிய விபத்துக்களின் எண்ணிக்கையில் ஓரளவு வீழ்ச்சி காணப்படுகிறது. குறிப்பாக, சாரதிகளின் கவனக்குறைவு மற்றும் அஜாக்கிரதையான செயற்பாடுகளே இந்த விபத்துக்கள் அதிகரிப்புக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளன. நாளாந்த விபத்துக்களை ஆராயும் போது, பாதசாரிகளே அதிகளவில் விபத்துக்களுக்குள்ளாகின்றனர். வருடாந்த விபத்துக்களில் 31 சதவீதமானவை பாதசாரிகள் தொடர்பானவையாகும். அதேபோல் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் பின்னால் அமர்ந்து பயணப்பவர்கள் மற்றும் முச்சக்கர வண்டி சாரதிகளும் அதிகளவில் விபத்துக்களுக்கு முகம் கொடுக்கின்றனர். பல விபத்துக்களுக்குப் போதைப்பொருள் மற்றும் மதுப்பாவனையே காரணமாகிறது என்பதைத் தெரிவிக்க விரும்புகிறோம். இதற்கமைய, இனிவரும் காலங்களில் மதுபோதையில், போதைப்பொருள் பாவித்துக் கவனக்குறைவாக வாகனம் செலுத்துபவர்களுக்கு எதிராகக் குற்றவியல் சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்" என்றார். https://adaderanatamil.lk/news/cmjqublue038to29nasfq1twg

டக்ளஸூக்கு உயிராபத்து ; பாதுகாப்பு வழங்க அழுத்தம் - முன்னாள் ஆளுநர் சுரேன் ராகவன்

1 month 3 weeks ago
டக்ளஸூக்கு உயிராபத்து ; பாதுகாப்பு வழங்க அழுத்தம் - முன்னாள் ஆளுநர் சுரேன் ராகவன் 29 Dec, 2025 | 03:26 PM முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எதிரிகளாலும், எதிர்க்கட்சிகளாலும் உயிர் ஆபத்துக்களை எதிர்கொண்ட ஒருவராவார், அவருக்கான பாதுகாப்பை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசியல் குழு உறுப்பினருமான சுரேன் ராகவன் தெரிவித்தார். கொழும்பில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் இன்று திங்கட்கிழமை (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் பொழுது முன்னாள் ஆளுநரும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சர்வதேச விவகாரங்களுக்கான ஆலோசகரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசியல் குழு உறுப்பினருமான சுரேன் ராகவன் இவ்வாறு கருத்து தெரிவித்தார். தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில் , ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் கூட்டாட்சிகளில் முக்கிய பங்கு வகித்தவர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தற்பொழுது மகர சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ஆனால் அங்கு ஆயிரம் கைதிகள் மட்டுமே அனுமதிக்க பட வேண்டிய போதும் மூவாயிரத்துக்கும் அதிகமான கைதிகள் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகின்றது. ஆகவே முன்னர் பல தடவைகள் எதிரிகளாலும், எதிர்க்கட்சிகளாலும் உயிர் ஆபத்துக்களை எதிர்கொண்ட ஒருவராவார், அவருக்கான பாதுகாப்பை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம் என்றார். https://www.virakesari.lk/article/234674

யாழில் 3012 குடும்பங்களுக்கு மலசலக்கூட வசதி இல்லை!

1 month 3 weeks ago
3012 கக்கூஸ் கட்ட வக்கில்லை….. ஆனால் நாங்கள் எல்லாம் மெத்த படித்த, டி என் ஏ யில் புத்தி கூர்மை ஏறிய, உலகளாவிய வியாபார காந்தங்கள் நிறைந்த சமூகம் எண்ட கதைக்கு மட்டும் பஞ்சமில்லை 😂. எத்தனை வளைவுகள், கோபுரங்கள், சுற்று மதில்களை இந்த 16 வருடத்தில் கட்டி இருப்பீர்கள். அந்த பணத்தில் இதையும் செய்து கொஞ்ச மலையக மக்களையும் குடியமர்த்தி இருக்கலாம். பிகு மனமுண்டானால் மார்க்கபந்து.

"மூன்று கவிதைகள் / 17"

1 month 3 weeks ago
"மூன்று கவிதைகள் / 17" 'புகைப்படக் கவிதை' குறள் தந்த வள்ளுவருடன் நான் குரல் அடக்க எரித்த நூலகத்தில்! குமிழி வாழ்வின் விளிம்பில் இவன் குமுறும் தமிழனின் தாய் நிலத்தில்! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ....................................................................... மின்னலாய் ஒரு பின்னல் [படைத்தல், காத்தல், அழித்தல் & அருளல்] படைத்தல் தொழில் கடினம் என்றாலும் காத்தல் அதனிலும் மேல்! அழித்தல் செய்தவன் ஒருநாள் அருளல் புரிந்து அணைத்தாலும் ஏற்காதே! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] .......................................................................... 'மகளா மருமகளா' மகளா மருமகளா கேட்பவன் யாரடா குலப்பெருமை காக்க மணாட்டி ஆனவளே விளக்கேற்ற வந்த மற்றைய மகளே! திருமணம் முடிந்தது மனையாட்டி ஆகி இருஉடல் சேர்ந்ததும் தாயாய் மாறி சந்ததி பெருக தன்னையே தந்தவளே! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ............................................................. துளி/DROP: 1961 ["மூன்று கவிதைகள் / 17" https://www.facebook.com/groups/978753388866632/posts/33041205765527978/?

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் யாழ். மாவட்ட அமைப்பாளராக சபா குகதாஸ்

1 month 3 weeks ago
தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் யாழ். மாவட்ட அமைப்பாளராக சபா குகதாஸ் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் 12வது தேசிய மாநாட்டை 2026 தை 24 மற்றும் 25ஆம் திகதிகளில் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது. இந்நிலையில் அதற்கு முன்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களின் எட்டு மாவட்டங்களிலும் 225 பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்களை தெரிவு செய்வதற்குமான தெரிவுக் கூட்டங்கள் இடம்பெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று, யாழ். மாவட்ட உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட அமைப்பாளரை தெரிவு செய்யும் கூட்டம் கச்சேரியடியில் உள்ள மண்டபத்தில் நடைபெற்றது. அந்தவகையில் யாழ். மாவட்ட அமைப்பாளராக முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் சபா குகதாஸ் மாவட்ட செயற்குழு உறுப்பினர்களால் ஏக மனதாக தெரிவு செய்யப்பட்டார். அத்துடன் பொதுக்குழு உறுப்பினர்களாக 45 பேர் தெரிவாகினர். கட்சியின் பிரதான பொறுப்புக்களில் மாற்றங்களை ஏற்படுத்தி இளையவர்களுக்கு வழிவிடும் வகையில் 12 வது மாநாடு அமையவுள்ளதாக ரெலோ கட்சி தெரிவித்துள்ளது. https://akkinikkunchu.com/?p=354091

பல்வேறு சேவைகள் அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனம்! ஜனாதிபதி அதிரடி

1 month 3 weeks ago
பல்வேறு சேவைகள் அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனம்! ஜனாதிபதி அதிரடி 29 December 2025 மின்சார விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகள் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, மின்சார விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகள், எரிபொருள், பெற்றோலிய உற்பத்திப் பொருட்கள், எரிவாயு விநியோகம் அல்லது பகிர்ந்தளிப்பு உள்ளிட்ட பல்வேறு சேவைகள் அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் விதிகளுக்கமைய, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, மருத்துவமனைகள், பராமரிப்பு நிலையங்கள், மருந்தகங்கள் மற்றும் இதுபோன்ற நிறுவனங்களில் நோயாளர்களைப் பராமரித்தல், அனுமதித்தல், பாதுகாத்தல், உணவளித்தல் மற்றும் சிகிச்சையளித்தல் தொடர்பான அனைத்து சேவைகளும் அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. நோயாளர் காவு வண்டி சேவைகள், பயணிகள் அல்லது பொருட்கள் போக்குவரத்துக்கான பொது போக்குவரத்து சேவைகள், நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புடன் தொடர்புடைய அனைத்து சேவைகள். உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வழங்குதல், பாதுகாத்தல் மற்றும் விநியோகித்தல் தொடர்பான சேவைகள், அனைத்து மாவட்ட செயலகங்கள், பிரதேச செயலகங்கள் மற்றும் களமட்ட அதிகாரிகளால் ஆற்றப்பட வேண்டிய அனைத்து சேவைகளும் அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. இலங்கை மத்திய வங்கி உட்பட அனைத்து அரச வங்கிகள் மற்றும் காப்புறுதி சேவைகள், உள்ளூராட்சி நிறுவனங்களினால் முன்னெடுக்கப்படும் நீர் வழங்கல், மின்சாரம், கழிவுநீர் அகற்றும் முறைமை, தீயணைப்பு, கழிவு சுத்திகரிப்பு மற்றும் குப்பை அகற்றுதல் உள்ளிட்ட அனைத்து சேவைகளும் அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. https://hirunews.lk/tm/438053/various-services-declared-as-essential-services-president-takes-action

நாங்கள் சமஷ்டியை பற்றி பேசாமல் விடுவோமா? - சி.வீ.கே.சிவஞானம்

1 month 3 weeks ago
நாங்கள் சமஷ்டியை பற்றி பேசாமல் விடுவோமா? - சி.வீ.கே.சிவஞானம் இலங்கை தமிழ் அரசுக் கட்சி சமஸ்டி கட்சி, ஆகவே சமஷ்டியை பற்றி நாங்கள் பேசாமல் விடுவோமா என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சி.வீ.கே.சிவஞானம் கேள்வி எழுப்பியதுடன் இந்திய வெளியுறவு நாங்கள் அதனை வலியுறுத்தினேன் என தெரிவித்தார். சமகால நிலைமைகள் தொடர்பாக சி.வீ.கே.சிவஞானம் நேற்று (28) நடத்திய ஊடக சந்திப்பில் இவ்விடயத்தை தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருடனான சந்திப்பில் அமைச்சரிடம் மகஜர் கையளிக்கப்படவில்லை எனவும் உயர்ஸ்தானிகரிடமே மகஜர் கையளிக்கப்பட்டதாக கஜேந்திரகுமார் தெரிவித்திருந்தார். இவ்வாறான சந்திப்புக்களில் அமைச்சர் மகஜரை கையேற்பதில்லை என்ற இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் அறிவுத்தலுக்கமைய இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவிடம் மகஜர் கையளிக்கப்பட்டது. இந்த சந்திப்பின் அடிப்படை நோக்கம், தேவையற்ற கால தமாதமாகியுள்ள மாகாண சபைத் தேர்தலை நடத்த இலங்கை அரசாங்கத்திற்கு இந்தியா வலியுறுத்த வேண்டும் என்பதே ஆகும். மாகாண சபை தேர்தலை நடத்த நானும் ஏனையவர்களும் வலியுறுத்தினோம். சமஷ்டியை பற்றி நாங்கள் பேசவில்லை என்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்து ஆச்சரியமளிக்கிறது. கலந்துரையாடலை ஆரம்பித்து நானே. கலந்துரையாடலின் இறுதியில் சமஸ்டியை பற்றி பேசினோம். பல விடயங்களை பேசினோம். சந்திப்பு முடியுற தருணத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு நாம் முன்வைத்த கடிதத்தின் நோக்கத்தை மீண்டும் ஜெய்சங்கருக்கு தெளிவுபடுத்தினோம். மாகாண சபையை பொறுத்தவரை இந்தியா இலங்கையுடன் செய்த ஒப்பந்தம் மூலமே அது உருவானது. வயிற்றில் பிறந்த பிள்ளை என சொல்லவில்லை. இந்தியாவின் சிந்தனையில் வந்த பிள்ளை என்றேன். அதை வலியுறுத்தவே மகஜரும் கையளித்தோம். அதேபோல குறித்த சந்திப்பில் எமது இறுதி இலக்கும் நோக்கும் கூட்டாட்சி சமஷ்டி தான் என்பதை தெரிவித்தோம். மகஜரில் இந்த விடயம் இருக்கிறது. நாங்கள் பொய் சொன்னதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சொல்கிறார். நான் உண்மையை தான் கூறுகிறேன். சந்திப்பில் பங்கேற்ற ஏனைய கட்சித்தலைவர்கள் இதை தெளிவுபடுத்துமாறு வலியுறுத்தினார்கள். சர்வதேச ரீதியில் எமது இலக்கை அடைவதற்கான ஆதரவு தேவை. இந்தியா இதற்கு உதவ வேண்டும் என சந்திப்பில் சொன்னோம். நான் சொன்னது பொய் என்றால் இந்தியா மறுதலிக்கும். இராஜதந்திரிகள் எல்லாவற்றுக்கும் பதில் சொல்ல மாட்டார்கள். செயலிலேயே அதை செய்வார்கள். நாங்கள் சமஸ்டி கட்சி, ஆகவே சமஷ்டியை பற்றி பேசாமல் விடுவோமா? நாங்கள் சந்திப்பின் பின்பகுதியில் அதனை வலியுறுத்தினேன். 13 ஆம் திருத்தம் ஒற்றையாட்சிக்குள் முடங்கி போடும் என சொல்லிப்போட்டு கஜேந்திரகுமார் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதாக சொல்கிறார். இது சுய முரண்பாடு. மாகாண சபை முறைமை தீர்வு என்றோ முழுமையாக ஏற்கிறோம் என்றோ ஒரு காலத்திலும் தமிழ் அரசுக் கட்சி சொன்னதில்லை. உண்மைக்கு புறம்பான முறையில் பேசுவது அரசியல் ஜனநாயகத்துக்கு முரண். மன்னாரில் இருக்க கூடிய சூரிய சக்தி அமைப்பதில் பாகிஸ்தானை சேர்ந்த 40 பேர் பணியில் ஈடுபடுவது என்பதையும் நாங்கள் சந்திப்பின் போது தெரிவித்தோம் என தெரிவித்தார். https://adaderanatamil.lk/news/cmjqnqcyt0384o29nw0ca1xjh

சிறந்த சுற்றுலா இடங்களில் இலங்கை!

1 month 3 weeks ago
சிறந்த சுற்றுலா இடங்களில் இலங்கை! அமெரிக்காவின் ‘U.S. News & World Report’ அறிக்கையின்படி, ஆசியாவில் சுற்றுலா செல்வதற்குச் சிறந்த இடங்களின் பட்டியலில் இலங்கை ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்தப் பட்டியலில் ஜப்பானின் புஜி மலை முதலிடத்தில் உள்ளதுடன், அதைத் தொடர்ந்து பிலிப்பைன்ஸின் பலவான், டோக்கியோ மற்றும் தென் கொரியாவின் சியோல் ஆகிய நகரங்கள் உள்ளன. அணுகுவதற்கான வசதி, உள்ளூர் விலைகள், சுற்றுலாத் தலங்கள், கலாச்சாரம் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் விருப்பம் ஆகிய காரணிகளைக் கருத்திற்கொண்டு தரவு பகுப்பாய்வு மூலம் இந்தத் தரவரிசை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன் இலங்கையில் உள்ள மழைக்காடுகள், கடற்கரைகள் மற்றும் பண்டைய இடிபாடுகள், பல பிரபலமான ஆசிய சுற்றுலாத் தலங்களில் காணப்படும் அதிகப்படியான சுற்றுலாப் பயணிகளின் நெரிசல் இன்றி இருப்பது இங்கு சிறப்பாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. “இந்தியாவின் தெற்கு முனையில் அமைந்துள்ள தீவு நாடான இலங்கை, ஆசியாவின் மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலங்கள், மழைக்காடுகள், கடற்கரைகள் மற்றும் இடிபாடுகளைக் கொண்டுள்ளது. இலங்கையில் 26 தேசிய பூங்காக்கள் உள்ளன, அவற்றில் பல யானைகள், சிறுத்தைகள் மற்றும் கரடிகளைப் பார்ப்பதற்கான சபாரி பயணங்களுக்குப் பொருத்தமானவை. இதற்கிடையில், 600 அடி உயரக் கோட்டையான சிகிரியா மற்றும் பொலன்னறுவையின் விகாரைகள், கோயில்கள் போன்ற பண்டைய இடங்கள் அதன் ஈர்ப்பை மேலும் அதிகரிக்கின்றன. தென்னை மரங்களால் சூழப்பட்ட பொன்னிறக் கடற்கரைகள், அமைதியான விடுமுறையைத் தேடுபவர்களுக்கு வெகு தொலைவில் இல்லை” என அந்த அறிக்கையில் இலங்கை குறித்துக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய அமெரிக்காவின் ‘U.S. News & World Report’ அறிக்கையின்படி, 2026 ஆம் ஆண்டில் ஆசியாவில் சுற்றுலா செல்வதற்குச் சிறந்த 20 இடங்கள் இதோ: புஜி மலை, ஜப்பான் டோக்கியோ, ஜப்பான் பலவான், பிலிப்பைன்ஸ் சியோல், தென் கொரியா இலங்கை சியாங் மாய், தாய்லாந்து பூட்டான் ஹனோய், வியட்நாம் பாலி, இந்தோனேசியா புக்கெட், தாய்லாந்து கியோட்டோ, ஜப்பான் சீயாம் ரீப் ஒசாகா, ஜப்பான் கோலாலம்பூர், மலேசியா ஹொங்கொங் மாலைத்தீவு சிங்கப்பூர் ஜெய்ப்பூர், இந்தியா லென்காவி, மலேசியா ஆக்ரா, இந்தியா https://www.samakalam.com/சிறந்த-சுற்றுலா-இடங்களில/
Checked
Wed, 02/25/2026 - 07:41
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed