புதிய பதிவுகள்2

2006 ஆம் ஆண்டு கெப்பிட்டிக்கொல்லாவை பொதுமக்கள் பேரூந்து மீது நடத்தப்பட்ட கிளேமோர் தாக்குதல் மகிந்த ராஜபக்ஷவிற்காக நடத்தப்பட்டிருக்கலாம் ‍- ஜனாதிபதி ஊடகப் பிரிவின் செயலாளர் அநுருத்த லொக்குஹப்புவாராச்சி தெரிவிப்பு

2 months ago
குற்றவாளிகளுக்கான தண்டனைகளிலிருந்தான முற்றான விலக்கு எனும் கொள்கை 2005 ஆம் ஆண்டு தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினரான ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை முதல் மிக அண்மைக்காலத்தில் நடத்தப்பட்ட உயிர்த்தஞாயிறுத் தாக்குதல்கள் வரை பல படுகொலைகள் மற்றும் வன்முறைகளுடன் நேரடியான தொடர்பிருப்பதாகக் குற்றஞ்சாட்டப்பட்டபோதிலும்கூட இன்றுவரை பிள்ளையானினால் அரசியலில் தொடர்ச்சியாகத் தாக்குப்பிடித்துக்கொண்டிருக்க முடிவது குறித்து அநுருத்த கேள்வியெழுப்புகிறார். ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலையினையடுத்து 2015 ஆம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்ட பிள்ளையான் 2020 ஆம் ஆண்டு முக்கிய சாட்சியம் மீளப்பெற்றுக்கொள்ளப்பட்டமையினையடுத்து சிறையிலிருந்து விடுதலையாகியிருந்தார். பின்னாட்களில் பிள்ளையானை பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் ஈஸ்ட்டர் குண்டுத்தாக்குதல் குறித்து அவ்வப்போது விசாரித்திருந்த‌போதிலும் ஒருபோதும் அவர்மீது சட்டபூர்வாமான குற்றச்சாட்டினைப் பதியவில்லை. "பிள்ளையான் போன்ற நபர்கள் அதிகாரத்திலுள்ளவர்களிடம் வெகு சாதாரணமாக நட்புப் பாராட்டி வரும் நிலையில் இனங்களுக்கிடையிலான இணக்கப்பாடு என்பது எப்போதும் ஒரு கனவாகவே இருக்கும். மேலும் நீதி என்பது வசதிக்காகப் பாவிக்கப்படும் கருவியாகவே தெரியும்" என்றும் அவர் கூறுகிறார். அநுருத்தவின் அறிக்கையூடாக எழுப்பப்படும் கேள்விகள். குறிப்பாக கெப்பிட்டிக்கொல்லாவைப் படுகொலைகள் குறித்த அன்றைய அரசின் வெளிப்படுத்தலினை அவர் கடுமையாக கேள்விக்குள்ளாக்குகிறார். 2006 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் மிரர் பத்திரிக்கையில் எழுதிய ரொஜர் ஞானேந்திரன், "பட்டப்பகலில், முற்றான இராணுவ மயப்படுத்தப்பட்ட சிங்களப் பிரதேசத்தினுள், அதிலும் 45 நிமிட நேரத்திற்கு முன்னர்தான் இராணுவத்தினரால் சல்லடை போடப்பட்டு பரிசோதிக்கப்பட்ட வீதியின் ஓரத்தில் கிளேமோர்க் குண்டுகளை வெடிக்கவைப்பதென்பது புலிகளுக்குச் சாத்தியமானதா?" என்று கேள்வியெழுப்பியிருந்தார். மேலும், அரச இராணுவத்தினரால் அல்லது அவர்களால் இயக்கப்படும் இன்னொரு குழுவினரால் அன்றி இத்தாக்குதலை நடத்தியிருக்க முடியாது என்று அவ்வறிக்கை அன்று கூறியிருந்தது. தாக்குதல் நடந்தவிடத்திற்கு மகிந்த அதிரடியாகப் பிரசன்னமாகியிருந்தமை, கொல்லப்பட்டவர்களின் மரணச் சடங்கிற்கான செயற்பாடுகள் உடனடியாகவே செய்துகொடுக்கப்பட்டமை, தாக்குதல் நடந்தவுடன் உடனடியாகவே சர்வதேச ஊடகங்களுக்கான அறிக்கை வெளியிடப்பட்டமை, தாக்குதல் நடந்த மறுகணமே வன்னியில் கட்டவிழ்த்துவிடப்பட்ட அகோரமான விமானக் குண்டுவிச்சு என்பவற்றைப் பார்க்கும்போது இத்தாக்குதல் ஏற்கனவே திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டது தெரியவரும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இன்னொரு வகையில் கூறுவதானால் புலிகள் மீது வலிந்த தாக்குதல்களை ஆரம்பிப்பதற்கான நியாயப்படுத்தலினை கெப்பிட்டிக்கொல்லாவைத் தாக்குதலைத் தானே நடத்தியதன் மூலம் அரசு செய்துகொண்டது. "மேலும், இப்படுகொலைக்கான பழியினை புலிகள் மீது போட்டுவிட்ட யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழு, இத்தாக்குதலுக்கான சாட்சியங்களை முன்வைப்பதை விடுத்து, "சிங்கள மக்களைக் கொல்லும் தேவையும், அதனைச் செய்யும் ஆற்றலும் புலிகளுக்கு மட்டுமே இருப்பதால், இத்தாக்குதலினை அவர்களே செய்தார்கள் என்று நம்புகிறோம்" என்று கூறியிருந்தமையானது புலிகள் மீதான சந்தேகம் என்பது எவ்வித விசாரணைக்கும் அப்பாற்பட்டு நிறுவனமயப்படுத்தப்பட்டிருந்தது என்பதைத்தான் காட்டுகின்றது.

2006 ஆம் ஆண்டு கெப்பிட்டிக்கொல்லாவை பொதுமக்கள் பேரூந்து மீது நடத்தப்பட்ட கிளேமோர் தாக்குதல் மகிந்த ராஜபக்ஷவிற்காக நடத்தப்பட்டிருக்கலாம் ‍- ஜனாதிபதி ஊடகப் பிரிவின் செயலாளர் அநுருத்த லொக்குஹப்புவாராச்சி தெரிவிப்பு

2 months ago
இத்தாக்குதல்களால் பயனடைந்தது யார்? இத்தாக்குதல்களை யார் நடத்தினார்கள் என்று கேட்பதற்குப் பதிலாக, இத்தாக்குதல்களால் பயன்பெற்றது யாரென்பதை நீங்கள் சிந்திக்கவேண்டும் என்று வாசகர்களிடம் அவர் கோருகிறார் . "மகிந்தவைப் பொறுத்தவரை இத்தாக்குதல்கள் சிங்களத் தேசியவாதத்தினை உருவேற்றி விட்டதுடன், அவரது கனவான முற்றான போர் மூலம் தீர்க்கமான வெற்றி எனும் குறிக்கோளிற்கு உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் ஆதரவினை பெருமளவில் திரட்ட முடிந்திருந்தது". "பிள்ளையானையும் அவரது துணை ராணுவக் குழுவான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளையும் பொறுத்தவரையில் இத்தாக்குதல்கள் அவர்களை மகிந்தவிற்கு மிகவும் விசுவாசமானவர்கள் எனும் அந்தஸ்த்தினை வழங்கியதுடன், அவர்களுக்கான அரசியல் நியாயப்பட்டினையும் பிற்காலத்தில் ஏற்படுத்திக் கொடுத்திருந்தது". "ஆனால் புலிகளைப்பொறுத்தவரையில் அவர்களுக்கு சர்வதேசத்தில் இருந்த நியாயப்பட்டினையும், அனுதாபத்தினையும் இத்தாக்குதல்கள் கடுமையாகச் சிதைவடையச் செய்திருந்ததுடன், அரசுசார்பான நிலைப்பாட்டினை சர்வதேசம் எடுக்கவும் காரணமாகியிருந்தது". இத்தாக்குதல்களில் பிள்ளையான் ஆற்றியிருக்கும் பங்கு என்பது அவரது திடீர் அரசியல் எழுச்சியுடனும், மகிந்தவின் மீள்வருகையின் பின்னர் பிள்ளையான் கிழக்கு மாகாண முதலமைச்சர் எனும் அந்தஸ்த்தினைப் பெற்றுக்கொண்டதுடனும் இணைத்துப் பார்க்கப்படல் அவசியம் என்று அநுருத்த கூறுகிறார். அதுமட்டுமல்லாமல் 2008 ஆம் ஆண்டு கொழும்பு உயர் பாதுகாப்பு வலயம் ஒன்றில் பிள்ளையானின் ஒருங்கிணைப்புச் செயலாளரைப் படுகொலை செய்தது, பிள்ளையானை ஒரு காலத்தில் வளர்த்துவிட்டதுமான அதே அரச புலநாய்வுக்கட்டமைப்பு தான் என்று கருதும் அநுருத்தை, அப்படுகொலையின் மூலம் அது பிள்ளையானுக்கு வழங்கிய செய்தி , "நீ எனக்குக் கீழ் சேவை செய்யலாம், ஆனால் ஒருபோதும் என்னை மீறி நடக்கமுடியாது" என்பதுதான் என்றும் அநுருத்த கூறுகிறார்.

2006 ஆம் ஆண்டு கெப்பிட்டிக்கொல்லாவை பொதுமக்கள் பேரூந்து மீது நடத்தப்பட்ட கிளேமோர் தாக்குதல் மகிந்த ராஜபக்ஷவிற்காக நடத்தப்பட்டிருக்கலாம் ‍- ஜனாதிபதி ஊடகப் பிரிவின் செயலாளர் அநுருத்த லொக்குஹப்புவாராச்சி தெரிவிப்பு

2 months ago
2006 ஆம் ஆண்டு வைகாசியில் வெலிக்கந்தைப் பகுதியில் வயல்களில் வேலைசெய்த 13 விவசாயிகள் படுகொலை செய்யப்பட்டமை மற்றும் அதேயாண்டு ஆனியில் நடந்த கெப்பிட்டிக்கொல்லாவைத் தாக்குதல் ஆகியவற்றில் சுமார் 75 சிங்களப் பொதுமக்கள் கொல்லப்பட்டிருந்தார்கள். இலங்கையில் அப்போது இடபெற்றுவந்த போரிற்கான சர்வதேசத்தினதும், உள்நாட்டினதும் நிலைப்பாடுகளை தீர்மானித்த மிக முக்கியமான சம்பவங்கள் என்று இவற்றைக் கூறினால் அது மிகையாகாது. இத்தாக்குதல்களுக்கும் தமக்கும் எதுவித தொடர்பும் இல்லை என்று புலிகள் அறிவித்திருந்தபோதிலும், இத்தாக்குதலின் பின்னணியில் யார் இருந்தார்கள் என்பதற்கான சாட்சியங்களை அன்றிருந்த யுத்த நிறுத்தக் கண்காணிப்புகுழுவினால் அழுத்தம் திருத்தமாக வழங்க முடியாது போயிருந்தது. ஆனாலும், அநுருத்த இதுபற்றிக் கூறுகையில், அக்காலத்தில் இலங்கை இராணுவப் புலநாய்வுத்துறையினருடன் மிக நெருக்கமாகச் செயற்பட்ட அமைப்பான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் குழுவின் பிரமுகர்களான கருணா மற்றும் பிள்ளையானின் செயற்பாடுகள் இத்தாக்குதல்களின் பின்னால் இருந்திருக்கின்றன என்று சந்தேகிக்கின்றார். மிகவும் பாதுகாப்பானதும், இராணுவ மயப்படுத்தப்பட்டதுமான சிங்களப் பிரதேசங்களுக்குள் இராணுவத்தினரினதும், அவர்களோடு சேர்ந்தியங்கும் கருணா ‍ பிள்ளையான் ஆயுதத் தாரிகளினதும் அனுமதியின்றியோ, அவர்களின் ஆதரவு இன்றியோ அல்லது அவர்களுக்குத் தெரியாமலோ புலிகளாலோ அல்லது வேறு எவராலுமோ இவ்வாறான தாக்குதல்களை நடத்துவதென்பது மிகவும் கடிணமானது என்று அவர் வாதிடுகிறார்.

2006 ஆம் ஆண்டு கெப்பிட்டிக்கொல்லாவை பொதுமக்கள் பேரூந்து மீது நடத்தப்பட்ட கிளேமோர் தாக்குதல் மகிந்த ராஜபக்ஷவிற்காக நடத்தப்பட்டிருக்கலாம் ‍- ஜனாதிபதி ஊடகப் பிரிவின் செயலாளர் அநுருத்த லொக்குஹப்புவாராச்சி தெரிவிப்பு

2 months ago
ஜனாதிபதி ஊடகப்பிரிவின் இயக்குநர் அநுருத்த லொக்குஹப்புவாராச்சி 2006 ஆம் ஆண்டு சிங்களப் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களான கெப்பிட்டிக்கொல்லாவை பேரூந்து மீதான கிளேமோர் தாக்குதல் மற்றும் வெலிக்கந்தை விவசாயிகள் மீதான தாக்குதல்கள் குறித்து அன்றைய அரசாங்கம் வெளியிட்ட தகவல்கள் குறித்து தமக்குக் கடுமையான சந்தேகங்கள் இருப்பதாகக் கூறுகிறார். மேலும் இத்தாக்குதல்களின் பின்னணியில் அரச உயர்மட்டத்தின் சில புள்ளிகளான மகிந்த ராஜபக்ஷ மற்றும் பிள்ளையான் போன்றோர் இருக்கலாம் என்று கூறியிருப்பதுடன், இத்தாக்குதல்களால் புலிகள் அடைந்த நலன்களைக் காட்டிலும் மகிந்தவும் பிள்ளையானும் மிக அதிகளவான நலன்களை அடைந்திருக்கிறார்கள் என்றும் கூறுகிறார். "எல்லையோர பிரதேசத்தின் பேய்கள்" எனும் தலைப்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தனது குற்றங்களுக்கான தண்டனைகள் அனைத்திலும் இருந்து விலக்களிக்கப்பட்டிருந்த பிள்ளையானின் வன்முறைகள் குறித்து பேசியிருக்கும் அநுருத்த, இப்படுகொலைகளுக்கான காரணத்தை ஆராய்வதோடு இக்கொலைகளை நீண்டகாலமாகவே மகிந்த அரசு புலிகள் மீது சுமத்தியிருந்தமை குறித்தும் தனது கடுமையான சந்தேகங்களை எழுப்புகிறார். ஜனாதிபதி அநுரவின் சர்வதேச ஊடகத்துறையின் இயக்குநராகவும், மூலோபாய தொலைத்தொடர்புப் பிரிவின் ஆலோசகராகவும் அநுருத்தை மிக அண்மையிலேயே நியமிக்கப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத் தக்கது. "இப்படுகொலைகள் இரண்டுமே உடனடியாக புலிகள் மீது சுமத்தப்பட்டன. மகிந்த ராஜபக்ஷ அப்போது வரிந்திருந்த முற்றான போர் எனும் முயற்சிக்கு மிகுந்த வலுச்சேர்க்கும் காரணியாக இத்தாக்குதல்கள் அமைந்திருந்தன. ஆனாலும் இருபது வருடங்களுக்குப் பின்னர் மகிந்தவின் இத்தாக்குதல்கள் தொடர்பான விவரணங்கள் மீது மிகக் கடுமையான சந்தேகங்களையும் கேள்விகளையும் நாம் எழுப்பவேண்டியிருக்கிறது.இத்தாக்குதல்களை உண்மையாகவே திட்டமிட்டது யார்? போரிற்குப் பின்னரான அரசியல் கட்டமைப்பில் இக்கொலைகளின் உண்மையான சூத்திரதாரிகளுக்குத் த‌ண்டணைக்குப் பதிலாக அரசியற் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருவது எங்கணம்?" என்று அவர் கேள்வியெழுப்புகிறார்.

2006 ஆம் ஆண்டு கெப்பிட்டிக்கொல்லாவை பொதுமக்கள் பேரூந்து மீது நடத்தப்பட்ட கிளேமோர் தாக்குதல் மகிந்த ராஜபக்ஷவிற்காக நடத்தப்பட்டிருக்கலாம் ‍- ஜனாதிபதி ஊடகப் பிரிவின் செயலாளர் அநுருத்த லொக்குஹப்புவாராச்சி தெரிவிப்பு

2 months ago
2006 ஆம் ஆண்டு கெப்பிட்டிக்கொல்லாவை பொதுமக்கள் பேரூந்து மீது நடத்தப்பட்ட கிளேமோர் தாக்குதல் மகிந்த ராஜபக்ஷவிற்காக நடத்தப்பட்டிருக்கலாம் ‍- ஜனாதிபதி ஊடகப் பிரிவின் செயலாளர் அநுருத்த லொக்குஹப்புவாராச்சி தெரிவிப்பு 2006 ஆம் ஆண்டு நாட்டின் பல பகுதிகளிலும் அடுத்தடுத்து பொதுமக்களை இலக்குவைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டன. கெப்பிட்டிக்கொல்லாவையில் பயணித்துக்கொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேரூந்து மீது நடத்தப்பட்ட இரு கிளேமோர்த் தாக்குதல்களில் 64 பொதுமக்கள் கொல்லப்பட்டதோடு இன்னும் நாற்பது பேர்வரையில் காயமடைந்தனர். இத்தாக்குதல் நடத்தப்பட்டு 30 நிமிடங்களிலேயே இப்பகுதிக்கு விஜயம் செய்த மகிந்த ராஜபக்ஷெ, பொதுமக்களுடன் பேசியதோடு இத்தாக்குதல்களுக்குக் காரணமான புலிகளை முற்றாக அழிப்பேன் என்றும் சபத‌மிட்டிருந்தார். ஆரம்பத்தில் இத்தாக்குதலை புலிகள் செய்திருக்க வாய்ப்பில்லை என்று கூறிய யுத்த நிறுத்தக் கண்காணிப்புக்குழு இரு நாட்களின் பின்னர் தனது சுருதியை மாற்றி புலிகள் செய்திருக்கலாம் என்று கூறியிருந்தது. புலிகளோ இத்தாக்குதலுக்கும் தமக்கும் எதுவித சம்பந்தமும் இல்லை என்று கூறியிருந்தனர். இலங்கை காவல்த்துறை உடனடியாகவே இத்தாக்குதலை புலிகள் மீது சுமத்தியிருந்ததுடன் சர்வதேச ஊடகங்கள் அனைத்திலும் இச்செய்தி மிகப்பிரபலமாக சித்தரிக்கப்பட்டிருந்தது. சமாதானப் பேச்சுக்களில் அதிகாரம் அற்ற அதிகாரிகளுடன் தாம் இனிமேல் பேசப்போவதில்லை என்று புலிகள் அறிவித்த மறுநாள் இத்தாக்குதல் நடத்தப்பட்டமையினால் புலிகளுக்கெதிரான மேற்குலகின் நிலைப்பாட்டினை இத்தாக்குதல் மேலும் உறுதிப்படுத்தியிருந்ததும் குறிப்பிடத் தக்கது. இத்தாக்குதல் நடத்தப்பட்டபோது கொழும்பிலிருந்து கெப்பிட்டிக்கொல்லாவை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த இராணுவ உலங்குவானூர்தியில் மகிந்த இருந்திருக்கின்றார். அதாவது தாக்குதல் நடத்தப்பட்டவேளை மகிந்தவின் வானூர்தி கெப்பிட்டிக்கொல்லாவை நோக்கிப் பறந்துகொண்டிருக்கிறது. அதாவது தாக்குதல் நடத்தப்படுவது குறித்து மகிந்த அறிந்திருக்கிறார். ஆகவேதான் தாக்குதல் நடந்த பகுதிக்கு அருகிலிருந்த இராணுவ முகாமிலிருந்து இராணுவத்தினர் வருகை தந்த நேரத்தில் மகிந்தவும் அப்பகுதிக்கு வந்திருக்கிறார். தாக்குதல் நடந்தவிடத்தில் உடனடியாகவே மகிந்த பிரசன்னமாகியிருந்தமை அன்றைய இராணுவ மற்றும் காவல்த்துறை அதிகாரிகளை அதிர்ச்சிக்குள்ளாகியிருந்தபோதிலும் எவரும் அதுகுறித்தும் பேசும் திராணியைக் கொண்டிருக்கவில்லை என்று கூறப்படுகிறது. இனி இத்தாக்குதல் குறித்து தற்போதைய அரசின் ஜனாதிபதி ஊடகப்பிரிவின் செயலாளர் என்ன கூறுகிறார் என்பதைப் பார்க்கலாம்.

போராட்டங்களை கட்டுப்படுத்துவதற்காக அவசரகால சட்டத்தை ரணில் விக்ரமசிங்க அமல்படுத்தியதில் மனித உரிமை மீறல் - உயர் நீதிமன்றம் தீர்ப்பு

2 months ago
அவசரகால சட்டத்தை ரணில் விக்ரமசிங்க அமல்படுத்தியதில் மனித உரிமை மீறல் - நீதிமன்ற தீர்ப்பினால் அடுத்து வரும் ஜனாதிபதிகளுக்கு எற்படும் சவால் பட மூலாதாரம்,PMD SRI LANKA படக்குறிப்பு, 2022ம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவசரகால சட்டத்தை அமல்படுத்தினார் கட்டுரை தகவல் ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின்போது போராட்டங்களை கட்டுப்படுத்துவதற்காக 2022ம் ஆண்டு ஜீலை மாதம் 17ம் தேதி அப்போதைய பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் ஊடாக நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட அவசரகால சட்ட விதிமுறைகள் மூலம் அடிப்படை மனித உரிமை மீறப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. உயர் நீதிமன்ற நீதிபதிகள் முர்து பெர்ணான்டோ, யசந்த கொதாகொட இந்த தீர்ப்பை இன்று (ஜூலை 23) வழங்கினர். அப்போதைய பதில் ஜனாதிபதியான ரணில் விக்ரமசிங்க பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் 02வது சரத்தின் ஊடாக அமல்படுத்திய அவசரகால சட்டமானது, தன்னிச்சையான மற்றும் அதிகாரமற்ற தீர்மானம் என, உயர் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் அமர்வில் குழாமில் பெரும்பான்மையான நீதிபதிகள் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளனர். எனினும், பதில் ஜனாதிபதியாக செயற்பட்ட ரணில் விக்ரமசிங்கவினால் அமல்படுத்தப்பட்ட அவசரகால சட்டத்தின் ஊடாக அடிப்படை மனித உரிமை மீறப்படவில்லை என, மூவரடங்கிய நீதிபதிகள் அமர்வில் இருந்த நீதிபதி அர்ஜீன ஒபேசேகர தனது தீர்ப்பை அறிவித்திருந்தார். மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம், இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் மற்றும் லிபரல் இளையோர் அமைப்பு ஆகியோரினால் இந்த அடிப்படை உரிமை மீறல் தொடர்பாக மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. மனுதாரர்களுக்கு வழக்கு கட்டணத்தை செலுத்துமாறும் அரசாங்கத்துக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ரணில் விக்ரமசிங்க அவசரகால சட்டத்தை ஏன் அமல்படுத்தினார்? பட மூலாதாரம்,PMD SRI LANKA உலகம் முழுவதும் பரவிய கொரோனா பெருந்தொற்று உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் இலங்கையில் 2022ம் ஆண்டு பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. கோட்டாபய ராஜபக்ஸவின் ஆட்சி காலத்திலேயே இந்த பொருளாதார நெருக்கடி கடுமையான தாக்கத்தை நாட்டில் ஏற்படுத்தியது. அரிசி, பால்மாவு, எரிபொருள், எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவியதுடன், பொருட்களின் விலை பல மடங்கு அதிகரித்திருந்தது. இந்த நிலையில், அப்போதைய ஆட்சியாளரான கோட்டாபய ராஜபக்ஸவின் அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் போராட்டங்களை ஆரம்பித்திருந்தனர். இந்த போராட்டம் வலுப்பெற்ற நிலையில், நாட்டில் வன்முறை சம்பவங்களும் பதிவாகியிருந்தன. இந்த நிலையில், 2022ம் ஆண்டு ஜீலை மாதம் 09ம் தேதி நாட்டில் பாரிய போராட்டங்கள் வெடித்தன. ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம், பிரதமர் அலுவலகம், பிரதமர் மாளிகை உள்ளிட்ட அரச கட்டடங்கள் போராட்டக்காரர்களினால் முற்றுகையிடப்பட்டு, அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டன. இதையடுத்து, அப்போதைய ஜனாதிபதியாக பதவி வகித்த கோட்டாபய ராஜபக்ஸ, நாட்டை விட்டு தப்பிச் சென்றார். மாலத்தீவு நோக்கி சென்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, அங்கிருந்து சிங்கப்பூர் ஊடாக தாய்லாந்து சென்றார். பட மூலாதாரம்,PMD SRI LANKA இவ்வாறான பின்னணியில், அப்போதைய பிரதமராக பதவி வகித்த ரணில் விக்ரமசிங்க, ஜீலை மாதம் 13ம் தேதி பதில் ஜனாதிபதியாக பதவி பிரமாணம் செய்துகொண்டார். பதில் ஜனாதிபதியாக பதவியேற்ற ரணில் விக்ரசிங்க, 2022ம் ஆண்டு ஜீலை மாதம் 17ம் தேதி அவசரகால சட்டத்தை அமல்படுத்தியிருந்தார். ஜனாதிபதியாக பதவியேற்பதற்கான ரகசிய வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் நடைபெறவிருந்த நிலையிலேயே, ரணில் விக்ரமசிங்க இவ்வாறு அவசரகால சட்டத்தை அமல்படுத்தியதாக அப்போது ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டிருந்தன. இந்தநிலையில், நாடாளுமன்றத்தில் நடைபெற்ற ரகசிய வாக்கெடுப்பின் ஊடாக ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவியேற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து, காலி முகத்திடலில் ஒன்று கூடியிருந்த போராட்டக்காரர்களை இரவோடு இரவாக பாதுகாப்பு பிரிவின் உதவியுடன் கலைப்பதற்கு ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்திருந்தார். அப்போது, பிபிசி தமிழ் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பல ஊடகவியலாளர்களும் பாதுகாப்புப் பிரிவினரால் தாக்கப்பட்டிருந்தனர். இறந்து போன குட்டியை 3 நாள் பிரியாத யானை - விலங்குகளும் துக்கம் அனுசரிக்குமா? இலங்கை போரின்போது சரணடைந்த 29 சிறார்கள் புதைக்கப்பட்டார்களா? புத்தகப் பையுடன் சிறுவன் எலும்புக்கூடு: செம்மணி புதைகுழியில் தோண்டத்தோண்ட வரும் எலும்புக்கூடுகள் இலங்கையில் தோண்டத்தோண்ட வெளிவரும் மனித புதைகுழிகள் - என்ன நடக்கிறது? அவசரகால சட்டத்தைப் பயன்படுத்தி, பாதுகாப்புப் பிரிவின் உதவியுடன் போராட்டக்காரர்கள் கலைக்கப்பட்டமை அப்போது பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இவ்வாறான நிலையிலேயே, 2022ம் ஆண்டு ஜூலை மாதம் 17ம் தேதி அமல்படுத்திய அவசரகால சட்டம், மனித உரிமை மீறல் என தீர்ப்பளிக்குமாறு கோரி அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த தீர்ப்பின் ஊடாக ரணிலுக்கு பாதிப்பா? பட மூலாதாரம்,U.R.D.SILVA படக்குறிப்பு, ரணில் விக்ரமசிங்கவுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது - மூத்த வழக்கறிஞர் யூ.ஆர்.டி.சில்வா இந்த தீர்ப்பின் ஊடாக ரணில் விக்ரமசிங்கவுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என, மூத்த வழக்கறிஞர் யூ.ஆர்.டி.சில்வா, பிபிசி தமிழுக்கு தெரிவிக்கின்றார். ''இந்த தீர்ப்பின் ஊடாக ரணில் விக்ரமசிங்கவுக்கு பாதிப்பு ஏற்படாது. அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக நஷ்ட ஈடுகளை செலுத்த உத்தரவு பிறப்பிக்கப்படலாம். அது வேறொரு விடயம். நான் அறிந்த விதத்தில் இந்த தீர்ப்பின் ஊடாக ரணில் விக்ரமசிங்கவுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்பட போவதில்லை.'' என மூத்த வழக்கறிஞர் யூ.ஆர்.டி.சில்வா தெரிவிக்கின்றார். பதில் ஜனாதிபதியாக பதவி வகித்த காலப் பகுதியில் ரணில் விக்ரமசிங்கவினால் அவசரகால சட்டம் அமல்படுத்தப்பட்டமையின் ஊடாக அடிப்படை மனித உரிமை மீறப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கிய நிலையில், அந்த தீர்ப்பானது அடுத்து பதவிக்கு வரும் ஜனாதிபதிகளுக்கு பாரிய சவாலானதாக அமையும் என மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர், சட்டத்தரணி பிரதீபா மஹனாமஹேவா பிபிசி தமிழுக்கு தெரிவித்தார். ''அவசரகால சட்டத்தை போராட்ட காலத்தில் அமல்படுத்தியமையினால், பெரும்பாலானோர் அதற்கு விருப்பம் தெரிவிக்கவில்லை. இது சட்டவிரோதமானது என்ற நிலையிலேயே நீதிமன்றத்தை நாடியிருந்தனர். 2022ம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட அவசரகால சட்டத்தின் ஊடாக, 1978ம் ஆண்டு அரசியலமைப்பின் 12ஃ1 சரத்தின் கீழ் மனித உரிமை மீறப்பட்டுள்ளதாக பலர் கூறியிருந்தனர். ஏனென்றால், இந்த இடத்தில் பாரிய போராட்டங்கள், மக்கள் ஒன்று கூடல்கள் இருக்கவில்லை. தேவையேற்படும் பட்சத்தில் கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தியிருக்கலாம். மேல் மாகாணத்திற்கு மாத்திரம் அவசரகால சட்டத்தை அமல்படுத்தயிருக்கலாம். நீர் தாரை பிரயோகம் மேற்கொண்டிருக்கலாம். எனினும், நாடு முழுவதும் அவசரகால சட்டம் அமல்படுத்தியமையினாலேயே பிரச்னை ஏற்பட்டது. இந்த வழக்கின் தீர்ப்பு மிக முக்கியமானது. முன்னாள் ஜனாதிபதிக்கு இந்த தீர்ப்பின் ஊடாக வழக்கின் கட்டணத்தை மாத்திரமே செலுத்த வேண்டி ஏற்பட்டுள்ளது. அவருக்கு இல்லாது போவதற்கு ஒன்றும் இல்லை.'' என அவர் குறிப்பிடுகின்றார். பட மூலாதாரம்,HANDOUT படக்குறிப்பு, பிரதீபா மஹனாமஹேவா, மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் ''எனினும், இந்த தீர்ப்பானது அடுத்து வரும் ஜனாதிபதிகளுக்கு மிகவும் முக்கியமானது தீர்ப்பாக அமைகின்றது. அரசாங்கத்தினால் அவசரகால சட்டமொன்றை அமல்படுத்துவதற்கு வரைவுகளை உயர்நீதிமன்றம் வெளியிட்டுள்ளது. அதனை அமல்படுத்துவதற்கு சட்ட மாஅதிபரின் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்து வரும் ஜனாதிபதி ஒருவர் சரியாக விடயங்களை சரியாக அவதானித்தே இந்த சட்டத்தை அமல்படுத்த வேண்டும். அடுத்து வரும் ஜனாதிபதிகளுக்கு தமது தன்னிச்சையான தீர்மானத்தின் ஊடாக அவசரகால சட்டத்தை அமல்படுத்த முடியாது. சட்ட மாஅதிபரின் முழுமையாக ஆலோசனைகளை பெற்று, அரசியலமைப்பில் மனித உரிமை மீறப்படாத வகையில் அவசரகால சட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஏனென்றால், இந்த தீர்ப்பானது அந்தளவிற்கு பாரதூரமானது.'' என அவர் கூறுகின்றார். நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி ஜனாதிபதி ஒருவரினால் அவசரகால சட்டம் அமலுக்கு கொண்டு வரும் பட்சத்தில், அதன் ஊடாக மனித உரிமை மீறப்படுமாக இருந்தால் உயர்நீதிமன்றத்தில் மீண்டும் அது இல்லாது செய்யப்படும் நிலைமை தற்போது ஏற்பட்டுள்ளதாகவும் மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர், சட்டத்தரணி பிரதீபா மஹனாமஹேவா பிபிசி தமிழுக்கு தெரிவித்தார். அத்துடன், அடிப்படை மனித உரிமை மீறல் தொடர்பான மனுக்கள் மீதான விசாரணைகளில் நீதிமன்றத்தினால் தண்டனைகள் வழங்கப்படாது என கூறிய அவர், அந்த வழக்கில் அரசாங்கம் தோல்வியுறும் பட்சத்தில் வழக்கு கட்டணத்தை மாத்திரமே செலுத்த வேண்டிய நிலைமை ஏற்படும் என குறிப்பிடுகின்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c0l437zz04ko

புனர்வாழ்வு பெற்ற விடுதலைப் புலி உறுப்பினர் கொழும்பில் துப்பாக்கியுடன் கைது

2 months ago
வவுணதீவு இரட்டைக் கொலை சம்பவத்திலும்... விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் மீது இந்தக் கொலைகள் சுமத்தப்பட்டு, பலர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். குற்றம் செய்யாதவர்களை மாட்டி விட்டதில்... அப்போதைய மட்டக்களப்பு மாவட்ட புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரியும், சஹ்ரான் ஹாஷிம் தலைமையிலான பயங்கரவாதக் குழுவிற்கும் தொடர்பு இருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 2018 ஆம் ஆண்டு நடந்த கொலையின் உண்மை 2025,ம் ஆண்டுதான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதுவரை தமிழ் அப்பாவிகளை போட்டு சிங்களவனும், சோனகனும் சித்திரவதை செய்வார்கள்.

"உணவுக்காக சொர்க்கத்திற்கு செல்ல விரும்பும் குழந்தைகள்" - பரவும் பட்டினிநிலை குறித்து மனிதாபிமான அமைப்புகள் எச்சரிக்கை

2 months ago
"ஒவ்வொரு நாள் காலையிலும் ஒரே கேள்வி மீண்டும் மீண்டும் காசாவில் எதிரொலிக்கின்றது; இன்று எனக்கு உணவு கிடைக்குமா ?; உணவுக்காக சொர்க்கத்திற்கு செல்ல விரும்பும் குழந்தைகள்" - பரவும் பட்டினிநிலை குறித்து மனிதாபிமான அமைப்புகள் எச்சரிக்கை Published By: RAJEEBAN 23 JUL, 2025 | 12:54 PM காசாவின் பல பகுதிகளிற்கு பட்டினிநிலை பரவ ஆரம்பித்துள்ளது என நூற்றிற்கும் மேற்பட்ட மனிதாபிமான அமைப்புகள் கூட்டாக எச்சரித்துள்ளன. சேவ் த சில்ரன் எல்லைகள் அற்ற மருத்துவர்கள் அமைப்பு உட்பட பல சர்வதேச அமைப்புகள் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளன. பாலஸ்தீனியர்கள் நம்பிக்கை மற்றும் மனவேதனையின் பிடியில் சிக்குண்டுள்ளனர். அவர்கள் யுத்தநிறுத்தம் மற்றும் மனிதாபிமான உதவிகளிற்காக காத்திருக்கின்றனர். ஆனால் அவர்கள் காலையில் முன்னரை விட மோசமான நிலையிலேயே கண்விழிக்கின்றனர் என சர்வதேச மனிதாபிமான அமைப்புகள் தெரிவித்துள்ளன. இது தொடர்பில் சேவ் த சில்ரன் மேலும் தெரிவித்துள்ளதாவது, இஸ்ரேலிய அரசாங்கத்தின் முற்றுகை தற்போது காசா மக்களை பட்டினியால் வாட்டிவதைக்கும் நிலையில் மனிதாபிமான பணியாளர்களும் பட்டினிகிடப்பவர்களின் பட்டியலில் இணைந்துகொள்கின்றனர். தங்கள் குடும்பத்தவர்களிற்கு உணவை பெறுவதற்கான முயற்சியில் சுடப்படும் ஆபத்தை அவர்கள் எதிர்கொள்கின்றனர். மனிதாபிமான உதவிகள் தற்போது முற்றாக முடிவடைந்துள்ள நிலையில் தங்களின் பணியாளர்கள் வலுவிழப்பதை மனிதாபிமான அமைப்புகள் கண்முன்னால் பார்க்கின்றன. இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ள காசா மனிதாபிமான அமைப்பின் மனிதாபிமான பொருட்களை விநியோகிக்கும் திட்டம் நடைமுறைக்கு வந்து இரண்டு மாதங்களின் பின்னர் 109 சர்வதேச அமைப்புகள் பரவும் பட்டினி நிலை குறித்து எச்சரிப்பதுடன் உலக நாடுகளை பின்வரும் நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றன. காசாவிற்கான அனைத்து தரைவழிப்பாதையையும் திறவுங்கள். உணவு, சுத்தமான நீர், மருந்துகள், எரிபொருள் போன்றவற்றின் விநியோகம் கொள்கை ரீதியிலான ஐநா பொறிமுறை மூலம் மீள இடம்பெறுவதை உறுதி செய்யுங்கள். முற்றுகையை முடிவிற்கு கொண்டுவந்து யுத்த நிறுத்தத்திற்கு இணங்குங்கள். ஒவ்வொரு நாள் காலையிலும் ஓரே கேள்வி மீண்டும் மீண்டும் காசாவில் எதிரொலிக்கின்றது - இன்று எனக்கு உணவு கிடைக்குமா? என்பதே அது என்கின்றார் மனிதாபிமான அமைப்பின் பிரதிநிதியொருவர். உணவு விநியோகம் இடம்பெறும் பகுதிகளிற்கு அருகில் நாளாந்தம் படுகொலைகள் இடம்பெறுகின்றன. ஜூலை 13ம் திகதி வரை உணவுதேடும்போது 875 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என ஐநா உறுதி செய்துள்ளது. ஆயிரக்கணக்கானவர்கள் காயமடைந்துள்ளனர். இதற்கிடையில் இஸ்ரேலியப் படைகள் கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் சோர்வடைந்த பாலஸ்தீனியர்களை வலுக்கட்டாயமாக இடம்பெயரச்செய்துள்ளன. ஜூலை 20 அன்று வெளியிடப்பட்ட மிக சமீபத்திய இடம்பெயர்வு உத்தரவு பாலஸ்தீனியர்களை காசாவின் மொத்த நிலப்பரப்பில் 12 வீதத்திற்குள் மட்டுப்படுத்துகின்றது. தற்போதைய சூழ்நிலை காசாவில் செயற்படுவதை சாத்தியமற்றதாக்குகின்றது என உலக உணவு திட்டம் தெரிவிக்கின்றது. போர் தந்திரோபாயமாக பொதுமக்களை பட்டினி போடுவது ஒரு போர்க்குற்றமாகும் காசாவிற்கு வெளியே களஞ்சியங்களிலும் காசாவிற்குள்ளேயும் பெருமளவு உணவுப்பொருட்கள் குடிநீர் போன்றவை பயன்படுத்தப்படாத நிலையில் உள்ளன. மனிதாபிமான அமைப்புகள் அவற்றை விநியோகிப்பது தடை செய்யப்பட்டுள்ளது தடுக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலிய அரசாங்கத்தின் கட்டுப்பாடுகள் தாமதங்கள் போன்றவை பெரும் குழப்பம், பட்டினி, உயிரிழப்பு போன்றவற்றை உருவாக்கியுள்ளது. உளவியல் சமூக ஆதரவை வழங்கும் ஒரு உதவி பணியாளர் குழந்தைகள் மீதான பேரழிவு தாக்கத்தைப் பற்றிப் பேசினார்: "குழந்தைகள் தங்கள் பெற்றோரிடம் சொர்க்கத்திற்குச் செல்ல விரும்புவதாகச் சொல்கிறார்கள் ஏனென்றால் குறைந்தபட்சம் சொர்க்கத்திலாவது உணவு இருக்கிறது." குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியவர்களிடையே கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு வரலாறு காணாத அளவில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். கடுமையான நீர் சார்ந்த வயிற்றுப்போக்கு போன்ற நோய்கள் பரவி வருகின்றன, சந்தைகள் காலியாக உள்ளன கழிவுகள் குவிந்து கிடக்கின்றன. பெரியவர்கள் பசி மற்றும் நீரிழப்பால் தெருக்களில் சரிந்து விழுகின்றனர். காசாவில் சராசரியாக ஒரு நாளைக்கு 28 லாரிகள் மட்டுமே விநியோகிக்கப்படுகின்றன. இது இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு போதுமானதாக இல்லை அவர்களில் பலர் வாரக்கணக்கில் உதவி இல்லாமல் தவிக்கின்றனர். ஐ.நா தலைமையிலான மனிதாபிமான அமைப்பு தோல்வியடையவில்லை அது செயற்படுவது தடுக்கப்பட்டுள்ளது - தடுக்கப்படுகின்றது. https://www.virakesari.lk/article/220714

வவுணதீவு இரட்டைக் கொலை: பொலிஸ் புலனாய்வு அதிகாரி கைது – உண்மை வெளிச்சத்திற்கு!

2 months ago
கொழும்பில் கைது செய்யப் பட்ட முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினருக்கு பின்னாலும்... எத்தனை சதி வேலைகள் பின்னப் பட்டு இருக்கின்றதோ யாரறிவர்.

யாழ். செம்மணியில் 3 அடி ஆழத்தில் மனித எலும்புக்கூடு மீட்பு ; பாரிய புதைகுழியாக இருக்கலாமென அச்சம்

2 months ago
யாழ். செம்மணி மனிதப் புதைகுழியில் இன்று 5 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்; மொத்த எண்ணிக்கை 85 ஆக உயர்வு Published By: VISHNU 23 JUL, 2025 | 10:08 PM யாழ்ப்பாணம், அரியாலை செம்மணி சிந்துப்பாத்தி மனித புதைகுழியில் இருந்து இன்று புதன்கிழமை (23) மேலும் 5 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் காப்பு போன்ற வளையம் ஒன்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் மொத்த எண்ணிக்கை 85 ஆக உயர்ந்துள்ளது. இவற்றில் 67 எலும்புக்கூடுகள் முழுமையாக தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. கடந்த மூன்று நாட்களில் 20 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 2 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. செம்மணி பகுதியில் "தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல - 01" மற்றும் "தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல - 02" என நீதிமன்றினால் அடையாளப்படுத்தப்பட்ட மனித புதைகுழிகளில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இரண்டாம் கட்ட பணிகளுக்காக 45 நாட்கள் நீதிமன்றினால் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இரண்டாம் பகுதி அகழ்வு பணிகள் இன்றைய தினம் 18ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டது அதன் போது இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் இன்றைய தினம் புதன்கிழமை 05 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதேவேளை செம்மணி மனித புதைகுழியில் அகழ்வு பணிகள் இதுவரையில் கட்டம் கட்டமாக 27 நாட்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதன் போது, இன்றைய தினத்துடன் 67 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த மூன்று தினங்களிலும் 20 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/220760

சீன, இலங்கை உறவுகளை மேம்படுத்த பல திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன சின்ங்சியா மாநில வெளிவிவகாரத்துறை பிரதி பணிப்பாளர் தெரிவிப்பு

2 months ago
Published By: VISHNU 23 JUL, 2025 | 08:24 PM (சீனாவிலிருந்து இராஜதுரை ஹஷான்) இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான பல்துறை உறவுகளை நிலையானதாக மேம்படுத்த இருதரப்புக்கும் இடையில் பல திட்டங்கள் தற்போது வகுக்கப்பட்டுள்ளன. இலங்கையுடனான எரிசக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி வலுத்திட்டங்கள் துரிதகரமாக செயற்படுத்தப்படும். இலங்கையுடனான வரலாற்று சிறப்புமிக்க நட்புறவை பல்துறைகளில் மேம்படுத்துவோம் என சீனாவின் சின்ங்சியா மாநிலத்தின் வெளிவிவகாரத்துறை பிரதி பணிப்பாளர் நாயகம் ஃபேன் ஹவ்ஃபெங் தெரிவித்தார். சீன குடியரசின் அழைப்புக்கமைய சீனாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கையின் பல்துறை சார்ந்த தரப்பினர்கள் நேற்று புதன்கிழமை சீனாவின் சின்ங்சியா மாநிலத்தின் உத்தியோகபூர்வ வெளிவிவகாரத்துறை அலுவலகத்தின் அதிகாரிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டனர். இச்சந்தர்ப்பத்தில் சின்ங்சியா மாநிலத்தின் வெளிவிவகாரத்துறை பிரதி பணிப்பாளர் நாயகம் ஃபேன் ஹவ்ஃபெங் வருமாறு குறிப்பிட்டார். இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான தொடர்பிலான உறவை ஒரு வரையறைக்குள் உடபடுத்த முடியாது. இரு நாடுகளுக்கும் இடையில் வரலாற்று ரீதியில் தொடர்பு காணப்படுகிறது. சீனா இலங்கையின் நெருங்கிய நண்பன் என்றே குறிப்பிட வேண்டும். இலங்கையில் அரசாங்கங்கள் மாற்றமடைந்தாலும் சீனா தொடர்பான கொள்கை ஒருமித்த தன்மையிலும்,உறுதியான நிலையிலும் உள்ளது. இரு நாடுகளின் அரசுகளுக்கு அப்பாற்பட்டு மக்கள் மத்தியிலும் நல்லிணக்கம் காணப்படுகிறது. இலங்கையின் வெளிவிவகாரம், வர்த்தகம் மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்தியில் சீனா கூடிய அவதானம் செலுத்தியுள்ளது. சிறந்த நண்பன் என்ற அடிப்படையில் நெருக்கடியான நிலையில் இலங்கையுடன் கைகோர்த்துள்ளோம். பூகோள நெருக்கடி மற்றும் இரத காரணிகளால் கடந்த காலப்பகுதியில் இலங்கை பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டது. அக்காலப்பகுதியில் இலங்கைக்கு பல வழிகளில் ஒத்துழைப்பு வழங்கினோம். பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை துரிதமாக எழுச்சிப்பெற்றமை மகிழ்ச்சிக்குரியது. இலங்கை பொருளாதார ரீதியில் நிலையான அபிவிருத்தியடைய வேண்டும். இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்த விசேட அவதானம் வெளிவிவகாரத்துறை அமைச்சு மட்டத்தில் மேற்கொள்ளப்படுகிறது. இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொள்வதற்கு எமது நாட்டு மக்கள் ஆர்வமாக உள்ளார்கள். ஆகவே இரு நாடுகளுக்கும் இடையில் வலுவான முறையில் சுற்றுலாத்துறை அபிவிருத்தி செய்யப்படும். இலங்கையின் கலை மற்றும் கலாசாரங்களை மேம்படுத்த விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. அத்துடன் இலங்கையின் எரிசக்தி திட்டங்களை மேம்படுத்த முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம். எரிசக்தி மேம்பாடு தொடர்பில் ஏற்றுக்கொள்ளப்பட்ட இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முறையாக செயற்படுத்தப்படும் என்றார். https://www.virakesari.lk/article/220759

இராமேஸ்வரம்- தலைமன்னார் கப்பல் போக்குவரத்து விரைவில்...

2 months ago
மன்னார் - இராமேஸ்வரம் படகு சேவைக்கு அரசு அனுமதித்தால் நாங்கள் நிதி தர ஆயத்தமாக உள்ளோம் - சாணக்கியன் 23 JUL, 2025 | 04:42 PM மன்னார் - இராமேஸ்வரம் படகு சேவைக்கு அரசு அனுமதித்தால் நாங்கள் நிதி தர ஆயத்தமாக உள்ளோம் என பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (22) போக்குவரத்து அமைச்சிடம் கேள்வியெழுப்பி உரையாற்றியபோது மன்னார் - இராமேஸ்வரம் இடையில் பயணிகள் கப்பல் சேவைகளை ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் சபையில் கோரிக்கை விடுத்திருந்தார். அதனை தொடர்ந்து, மன்னார் - ராமேஸ்வரம் படகுச் சேவை குறித்து விளக்கிக் கூறிய சாணக்கியன், போக்குவரத்து அமைச்சகம் இந்த செயல்முறையை விரைவுபடுத்த முடிந்தால், மன்னார் - ராமேஸ்வரம் படகு சேவையை மீண்டும் தொடங்குவதற்கான நிதிப் பங்களிப்பினை பெற, நாங்கள் உங்களுக்கு உதவ முடியும் என குறிப்பிட்டார். மேலும் அவர் கூறுகையில், மன்னார் - இராமேஸ்வரம் இடையே குறைந்தளவான போக்குவரத்து தூரமே உள்ளது. ஆனால், காரைக்கால் - காங்கேசன்துறை இடையிலான படகு சேவைகள் தொடர்பிலேயே அரசாங்கம் கூறுகிறது. அந்தப் படகு சேவை மிக நீளமானது ஆகும். இது நீண்ட தூரமாகும். வடக்கில் இந்த சேவைகளை அபிவிருத்தி செய்வதன் ஊடாக மக்கள் மிகவும் நன்மையடைவர். அத்துடன் வியாபார நடவடிக்கைகளும் வலுப்பெறும் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான வாய்ப்புக்களும் உருவாகும். இலங்கை - இந்திய நாடுகளுக்கு இடையில் பயணிகள் படகு சேவையை ஆரம்பிக்கும் விடயத்தில் இந்தியாவும் இதனை முன்னெடுத்துச் செல்லத் தயாராக இருக்கிறது. இது தொடர்பில் இலங்கை அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/220745

சம்பூர் கடற்கரையோர பகுதியில் மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு

2 months ago
சம்பூரில் மனித எச்சங்கள்; எதிர்வரும் 30ஆம் திகதி அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிபதி உத்தரவு Published By: DIGITAL DESK 3 23 JUL, 2025 | 03:06 PM (துரைநாயகம் சஞ்சீவன்) திருகோணமலை மாவட்டத்தில் மூதூர், சம்பூர் பகுதியில் காணப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பாக எதிர்வரும் 30ஆம் திகதி அறிக்கை சமர்ப்பிக்குமாறு சட்ட வைத்திய அதிகரிக்கும், தொல்பொருளியல் திணைக்களத்திற்கும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். குறித்த பகுதிக்கு இன்று புதன்கிழமை (23) விஜயம் மேற்கொண்டு கள ஆய்வை மேற்கொண்டிருந்த நீதிபதி குறித்த இடத்தை பார்வையிட்டதுடன், அங்கு வருகை தந்திருந்த திணைக்கள அதிகாரிகளுடன் கலந்துரையாடியதோடு சட்ட வைத்திய அதிகரிக்கு குறித்த இடத்தில் அகழ்வுப்பணியை முன்னெடுப்பது தொடர்பாக மிதிவெடி அகற்றும் நிறுவனத்துடன் கலந்துரையாடி அறிக்கை சமர்ப்பிக்குமாறும், தொல்லியல் திணைக்களத்திடம் குறித்த இடத்தில் மயானம் இருந்ததா என்பது தொடர்பில் ஆராய்ந்து அது தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்குமாறும் குறித்த அறிக்கைகளை இரு தரப்பினரும் எதிர்வரும் 30 ஆம் திகதி நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு மூதூர் நீதிமன்ற நீதிபதி எச்.எம். தஸ்னீம் பௌசான் உத்தரவிட்டுள்ளார். குறித்த இடத்திற்கு அரச பகுப்பாய்வு திணைக்களம், சட்ட வைத்திய அதிகாரி, தொல்பொருள் திணைக்களம், புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கங்கள் பணியகம் காணாமல் போனோர் அலுவலகம், குற்றவியல் தடய காட்சிகள் அலுவலகம் (SOCO) ஆகிய திணைக்களங்களின் அதிகாரிகள் இன்றைய தினம் (23) வருகை தந்து சம்பவ இடத்தை பார்வையிட்டிருந்தனர். சம்பூர் சிறுவர் பூங்காவை அண்மித்துள்ள கடற்கரையோர பகுதியில் ஆயுபு என்ற மிதிவெடி அகற்றும் நிறுவனம் மிதிவெடி அகற்றுவதற்கான அகழ்வுப்பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது கடந்த ஞாயிற்றுக்கிழமை (20) குறித்த பகுதியில் இருந்து சிதைந்த மனித மண்டை ஓடு மற்றும் எலும்புப்பகுதிகள் கண்டெடுக்கப்பட்டன. இதன் பின்னர் சம்பவ இடத்திற்கு வருகை தந்த மூதூர் நீதிமன்ற பதில் நீதிபதி எம்.எம்.நஸ்லீம் குறித்த இடத்தை பார்வையிட்டதோடு குறித்த பணியை 23ஆம் திகதிவரை தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்குமாறும் குறித்த பகுதியை நீதிமன்றின் முன்னிலையில் அரச பகுப்பாய்வு திணைக்களம், சட்ட வைத்திய அதிகாரி, தொல்பொருள் திணைக்களம், புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கங்கள் பணியகம் காணாமல் போனோர் அலுவலகம், குற்றவியல் தடய காட்சிகள் அலுவலகம் (SOCO) ஆகிய திணைக்களங்களின் பிரசன்னத்துடன் புதன்கிழமை (23) அகழ்வதற்கும் உத்தரவிட்டுள்ளதுடன் பொலிஸாரை குறித்த பகுதியில் பாதுகாப்புக் கடமைகளுக்காக ஈடுபடுத்துமாறும் பொலிஸாருக்கு நீதிபதி அறிவுறுத்தியிருந்தார். அந்தவகையில் குறித்த பகுதிக்கு இன்றைய தினம் குறித்த திணைக்களங்களின் அதிகாரிகள் பிரசன்னமாகியிருந்தனர். அத்துடன் குறித்த பகுதியானது தொடர்ந்தும் பொலிஸாரின் பாதுகாப்பின்கீழ் இருந்து வருகின்றது அப்பகுதிக்குள் எவரும் செல்ல அனுமதிக்கப்படவில்லை. எதிர்வரும் 30ஆம் திகதி கிடைக்கப்பெறுகின்ற இரு தரப்பினரதும் அறிக்கைகளை ஆராந்தபின்னர் அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என தெரிய வருகின்றது. https://www.virakesari.lk/article/220726

செம்மணி மனிதப் புதைகுழி: இன்று இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் மீண்டும் ஆரம்பம்!

2 months ago
செம்மணி மனித புதைகுழி: இன்றைய தினம் 5 மனித எச்சங்கள் அடையாளம்! யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் இன்றைய தினம் புதன்கிழமை 05 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் காப்பு போன்ற வளையம் ஒன்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது. கடந்த மூன்று நாட்களில் 20 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 2 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. செம்மணி பகுதியில் “தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல – 01” மற்றும் “தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல – 02” என நீதிமன்றினால் அடையாளப்படுத்தப்பட்ட மனித புதைகுழிகளில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இரண்டாம் கட்ட பணிகளுக்காக 45 நாட்கள் நீதிமன்றினால் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இரண்டாம் பகுதி அகழ்வு பணிகள் இன்றைய தினம் 18ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டது. இதன் போது இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் இன்றைய தினம் 05 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதேவேளை செம்மணி மனித புதைகுழியில் அகழ்வு பணிகள் இதுவரையில் கட்டம் கட்டமாக 27 நாட்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதன் போது, இன்றைய தினத்துடன் 67 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த மூன்று தினங்களிலும் 20 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1440356

டெல்லியில் இடிக்கப்பட்ட 'மதராஸி கேம்ப்' - 4 தலைமுறைகளாக வாழ்ந்து வரும் தமிழர்களின் நிலை என்ன?

2 months ago
மதராசி கேம்ப் இடிப்பு: டெல்லியில் வீடுகளை இழந்த 380 தமிழ் குடும்பங்கள் இப்போது எப்படி உள்ளன? கட்டுரை தகவல் சங்கரநாராயணன் சுடலை பிபிசி தமிழ் 23 ஜூலை 2025, 09:15 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் நேற்று வரை கூப்பிடு தூரத்தில் இருந்த பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்து வந்த உங்கள் குழந்தை நாளை முதல் பள்ளிக்குச் செல்ல 50 கி.மீ. பயணிக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால் உங்களுக்கு எப்படி இருக்கும்? ஐந்தாயிரம் ரூபாய் சம்பளம் தரும் வேலைக்காக 8 ஆயிரம் வாடகை கொடுத்து பெருநகரத்தில் தங்க வேண்டிய சூழலை கற்பனை செய்து பார்க்க முடியுமா? நேற்று வரை தமிழ்வழியில் படித்த குழந்தையை, நாளை முதல் இந்தி வழிக் கல்வியில் சேர்க்க நேர்ந்தால் என்ன ஆகும்? "இதுதான் இன்று தங்களின் நிலை" எனக் கூறுகின்றனர் முன்பு டெல்லி ஜங்புராவில் வசித்த தமிழர்கள். ஜூன் 1ஆம் தேதி டெல்லி ஜங்புராவில் மதராசி கேம்ப்(Madrasi Camp) என்று அழைக்கப்படும் தமிழர் குடும்பங்கள் வசித்த பகுதி இடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தமிழ்நாட்டிற்குத் திரும்பிவிட நினைக்கும் மக்களுக்குத் தேவைப்படும் அனைத்து உதவிகளையும் செய் துகொடுக்கத் தயாராக இருப்பதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. மறுபுறம், மதராசி கேம்ப் இடிக்கப்பட்ட நேரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டெல்லி முதல்வர் ரேகா குப்தா, "குடிசைப் பகுதிகளில் வளர்ச்சிப் பணிகளுக்காக ரூ.700 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக" கூறினார். இது நடந்து ஏறக்குறைய ஒன்றரை மாதம் நிறைவடைந்துவிட்டன. அங்கிருந்து வெளியேற்றப்பட்ட மக்களின் நிலை குறித்து அறிவதற்காக பிபிசி தமிழ் தலைநகரில் வசித்த தமிழர்களைத் தேடிப் பயணித்தது. படக்குறிப்பு, உயர்நீதிமன்றத் தீர்ப்பின்படி குடியிருப்புகள் ஜூன் 1ஆம் தேதி இடித்து அகற்றப்பட்டன. பல ஆண்டுகளுக்கு முன்பு நாட்டின் தலைநகரில் குடியேறிய இந்த மக்கள், இத்தனை ஆண்டுகளில் தங்கள் சொந்த ஊரின் வேரை மறந்து டெல்லிவாசிகளாகவே மாறிப் போயிருக்கின்றனர். ஆனால், இவர்கள் தற்போது தங்கள் குடியிருப்புகளை இழந்துவிட்டதாக கவலையில் உள்ளனர். அவர்கள், "ஆக்கிரமிப்பு அகற்றத்தின் போது புதிய குடியிருப்பு கொடுப்பதற்காக அரசு வகுத்துள்ள கொள்கை விதிகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும்" என்று கோரிக்கை வைக்கின்றனர். முதலில் ஜங்புராவுக்கு சென்றபோது, மதராசி கேம்பில் இருந்த சுமார் 380 வீடுகளும் முழுமையாக இடிக்கப்பட்டு மணல் மேடுகளே எஞ்சியிருந்தன. பின்னர் அங்கிருந்து புதிதாக வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ள நரேலா பகுதி நோக்கிப் பயணித்தோம். நரேலா, தலைநகர் டெல்லியின் வடமேற்கில் அமைந்துள்ள ஒரு தொழிற்பேட்டை. ஒரு காலத்தில் விவசாய பூமியாக மிளகாய் உற்பத்திக்குப் புகழ்பெற்ற இடமாக இருந்த நரேலா தற்போது தலைநகர விரிவாக்கத்தால், தொழிற்பேட்டையாக மாறியிருப்பதாகக் கூறுகின்றனர் உள்ளூர்வாசிகள். நாங்கள் சென்ற போது டெல்லி வளர்ச்சிக் குழுமத்தால் (DDA) கட்டப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்புகளும், வீடுகளும் எங்களை வரவேற்றன. ஆச்சரியப்படுத்தும் வகையில் இத்தனை குடியிருப்புகளுக்கும் மத்தியில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலான வீடுகளிலேயே மக்கள் குடியேறியிருந்தனர். படக்குறிப்பு,முழுவதுமாக இடிக்கப்பட்டுள்ள ஜங்புரா மதராசி கேம்ப் நரேலாவில் குடியேறியுள்ள கணேஷ் பிரபு அவருடைய இருப்பிடத்தை கூகுள் மேப் மூலம் பகிர்ந்ததால் நமது வாகனத்தில் எளிதாக அங்கு செல்ல முடிந்தது. பிபிசி குழு கார் மூலம் சென்றதால் சுமார் 1 மணிநேரத்தில் இந்த இடத்தைச் சென்றடைய முடிந்தது. பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தினால் கூடுதலாக நேரம் ஆகலாம் என நரேலாவுக்கு சென்று திரும்பியவர்கள் கூறினர். ஒரு வழியாக அங்கிருந்த ஒரு மிகப்பெரிய குப்பை மேட்டில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் சுற்றளவுக்கு உள்ளாக தமிழ்க் குடும்பங்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த 'பாக்கெட் 5' என்னும் இடத்தைக் கண்டுபிடித்தோம். அந்த வளாகத்தின் பாதுகாப்புக்கென இருந்த காவலாளி, எங்கள் வருகையைப் பதிவு செய்துகொண்டு உள்ளே அனுமதித்தார். அங்கு கணேஷ் பிரபு எங்களை வரவேற்றார். படக்குறிப்பு, மளிகைக் கடை நடத்தி வந்த கணேஷ் பிரபு தற்போது தனக்கு வாழ்வாதாரம் இல்லை எனக் கூறுகிறார் "நான் மதராசி கேம்பில் சிறிய பெட்டிக்கடை வைத்திருந்தேன். ஆக்கிரமிப்பு அகற்றத்தின்போது அது இடிக்கப்பட்டுவிட்டது. எனக்கு வேறு வேலை தெரியாது. இப்போது எனக்கு இங்கே இரண்டாவது மாடியில் வீடு கொடுத்துள்ளார்கள். கீழே வீடு இருந்தால் இங்கேயும் கடை வைத்துப் பிழைத்துக் கொள்வேன்" என்றார். அங்கும் தரைத்தளத்தில் வசிக்கும் சிலர் குடியிருப்பிலேயே கடைகளை அமைத்திருந்ததைப் பார்க்க முடிந்தது. தொடர்ந்து பேசிய கணேஷ் பிரபு, "எனக்கு இன்று பிழைக்க வழி இல்லை. வாடகை கொடுத்து குடியிருக்க என்னால் முடியாது. எனது மகன்களை மதுரையில் எனது பெற்றோரிடம் விட்டுவிட்டேன். நான் மட்டும் தனியாக இருக்க வேண்டும் என்பதால் டெல்லி நகருக்கு உள்ளாக என்னால் வாடகை கொடுக்க முடியாது. எனவே இங்கு வந்துவிட்டேன்" என்றார். "இந்த வீடுகள் ஒதுக்கப்படுவதற்காக வழக்கு தொடர்ந்த வழக்கறிஞர் பிரசாந்த் என்பவரின் தாயார் பெயரில் 4வது தளத்தில் வீடு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனாலும் சில சிக்கல்களைக் காரணம் காட்டி அவர்களுக்கு வீட்டைக் கொடுக்க மறுக்கின்றனர்" என்று கூறிய கணேஷ் பிரபு அந்த வீட்டைக் காண்பித்தார். இவர்களுக்கு இருக்கும் முக்கியமான பிரச்னை தண்ணீர்தான். "பல வீடுகள் காலியாக இருக்கும் நிலையில், அவற்றில் குழாய் அடைப்புகள் சரி வரப் பொருத்தப்படாமல் இருக்கின்றன. இதனால் குடியிருப்பில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் தண்ணீரைச் சேமிக்க முடிவதில்லை" என கணேஷ் பிரபு கூறுகிறார். படக்குறிப்பு, மொத்தம் 170 குடும்பங்களுக்கு வீடு ஒதுக்கப்பட்ட நிலையில் 3 தனிநபர்களை மட்டுமே நரேலாவில் பார்க்க முடிந்தது நரேலாவில் குடியேறியிருக்கும் அஞ்சலை பிபிசி தமிழிடம் பேசினார். "அங்கே (ஜங்புரா) இருக்கும்போது காலை 7.30 மணிக்கெல்லாம் வேலைக்குச் சென்று விடுவேன். 10 மணிக்கு வீடு வந்துவிட்டு, பின்பு மீண்டும் வேலைக்குச் செல்வேன். மாதத்திற்கு 8 ஆயிரம் ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை என்னால் சம்பாதிக்க முடிந்தது. ஆனால் இங்கே வந்த பின்னர் என்னால் வேலைக்குச் செல்ல முடியவில்லை. நான் எப்படிச் சாப்பிடுவது?" எனக் கேள்வி எழுப்பினார். "நான் வீடுகளில் பாத்திரம் துலக்குவது போன்ற வேலைகளைச் செய்துதான் பிழைப்பு நடத்துகிறேன். இங்கே நரேலாவில் இப்படி வேலை கொடுப்பதற்கான மக்கள் யாரும் இல்லை. நாங்கள் எப்படி பிழைப்பு நடத்துவது?" என்று கேள்வி எழுப்பினார். தமிழ்க் குடும்பங்களைத் தேடிச் சென்ற எங்களால் மூன்று பேரிடம் மட்டுமே பேச முடிந்தது. அவர்கள் தவிர வீடு ஒதுக்கீடு பெற்ற உலகநாதன் என்பவர், மற்ற தமிழ்க் குடும்பங்களுக்கு ஒதுக்கப்பட்ட வீடுகளைச் சுத்தம் செய்யும் பணியை ஏற்றிருக்கிறார். தமக்கு வேறு வேலை ஏதுமில்லாத சூழ்நிலையில், தற்காலிக வேலையாக இது அமைந்துள்ளதாக அவர் கூறுகிறார். வீடு ஒதுக்கீடு பெற்ற மற்றவர்கள், வேலை செய்யும் இடத்திற்கு அருகில் இந்த இடம் இல்லை என்பதால் தாங்கள் வசித்த பழைய இடத்திற்கு அருகிலேயே வாடகைக்கு வீடு எடுத்துக் குடியேறியுள்ளனர். கூலி வேலையில் சொற்ப ஊதியமே பெறும் தாங்கள் வாடகை செலுத்தவே முடியாமல் திண்டாடுவதாகவும் அவர்கள் கவலையை வெளிப்படுத்தினர். நரேலாவில் தமிழ்க் குடும்பங்கள் தவிர சிஆர்பிஎஃப் போன்ற மத்திய காவல் படைகளில் பணியாற்றுவோருக்கும் அரசு சார்பில் வீடு ஒதுக்கப்பட்டுள்ளது. டெல்லியின் பல்வேறு பகுதிகளில் குடிசைகள் அகற்றப்பட்டு வெளியேற்றப்பட்ட மக்களுக்கும் இங்கே வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. சுமார் 8 மாதங்களுக்கு முன்னதாக இந்தப் பகுதியில் குடியேறிய சில இந்தி பேசும் சிறுவர்கள் தங்களுக்கு இருக்கும் பிரச்னைகளைப் பகிர்ந்து கொண்டனர். பள்ளி செல்வதற்கே காலை 5 மணிக்கு வீட்டிலிருந்து புறப்படும் நிலை இருப்பதாக அவர்கள் கூறினர். கல்லூரியில் முதலாமாண்டு படித்து வரும் மற்றொரு இளைஞரும் பிபிசி தமிழிடம் இதே கவலையைப் பகிர்ந்துகொண்டார். "என்னால் இங்கு வந்த பின்னர் கல்வியைத் தொடர முடியவில்லை. நான்தான் எனது குடும்பத்தின் முதல் தலைமுறையாக பட்டம் பயில்கிறேன். ஆனால் இங்கிருந்து டெல்லி நகருக்குள் கல்விக்காகச் சென்று திரும்புவது இயலாத ஒன்றாக இருக்கிறது. இங்கே மருத்துவ வசதிகள் இல்லை. யாருக்கேனும் உடல்நிலை சரியில்லை என்றால் 40 கி.மீ. தாண்டித்தான் செல்ல வேண்டும். அங்கே நகருக்குள் நாங்கள் இருந்த போது எங்களுக்கு எய்ம்ஸ் மருத்துவமனை அருகிலேயே இருந்தது" என்றார். படக்குறிப்பு, நரேலாவில் வீடுகள் மட்டுமே இருக்கின்றன அடிப்படை வசதிகள் இல்லை என்கின்றனர் 'மொத்தம், 170 குடும்பங்களுக்கு வீடு ஒதுக்கப்பட்டன' என்ற தகவலுக்கும், அங்கு இயல்பில் உள்ள சூழலுக்கும் முரண் இருந்ததால் மீண்டும் ஜங்புரா பகுதிக்கே திரும்பினோம். ஜங்புராவில் மீண்டும் ஒரு ஞாயிற்றுக்கிழமை காலைப் பொழுதில் நாங்கள் நுழைந்தோம். அங்கு மக்களைப் போராட்டத்திற்கு அழைத்துச் செல்ல ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகள் தயாராகிக் கொண்டிருந்தனர். நரேலாவில் வீடு ஒதுக்கப்படாத மக்களுக்கு வீடு ஒதுக்க வேண்டும், ஏற்கெனவே வீடு பெற்றவர்களுக்கு அடிப்படை வசதிகளைச் செய்து தர வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்னிறுத்தி இந்தப் போராட்டம் நடந்தது. அங்கிருந்த அன்பழகி என்ற பெண் பிபிசியிடம் பேசுகையில், "நான் இங்கிருந்து நரேலாவுக்கு வேனில் சென்று பார்த்தேன். ஓலா டாக்சியில் செல்வதற்கு 750 ரூபாய் வாங்கி விட்டனர். அங்கிருந்து திரும்ப வருவதற்கு மாலை 6 மணிக்குப் புறப்பட்டோம். இங்கு வந்து சேர இரவு 11 மணி ஆகிவிட்டது. வீட்டு வேலை செய்வதற்காக தினமும் இவ்வளவு தொலைவு என்னால் பயணிக்க முடியாது" என்றார். மேலும் "எனது பேரப்பிள்ளைகள் இங்குள்ள பள்ளியில் படிக்கிறார்கள். அவர்கள் நரேலாவுக்கு சென்றால் படிப்பைக் கைவிடும் நிலைமை ஏற்பட்டுவிடும்" என்றும் அன்பழகி கூறினார். இதேபோன்று போராட்டத்தில் பங்கெடுப்பதற்காக தயாராகிக் கொண்டிருந்த ஜானகி பேசுகையில், "ஏற்கெனவே நரேலாவில் வீடு பெற்ற 170 பேர் போக மேலும் 26 பேருக்கு வீடு கொடுக்க வேண்டும் என நீதிமன்ற உத்தரவு இருக்கிறது. ஆனால் அதிகாரிகள் அந்த வீடுகளை ஒதுக்கவில்லை" என்று கூறினார். படக்குறிப்பு, ஏற்கெனவே வீடு ஒதுக்கீடு பெற்றவர்களும் தங்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் இல்லை என்கின்றனர் டெல்லி லோதி பார்க்கில் தில்லி தமிழ்ப் பள்ளிகள் கூட்டமைப்பு நடத்தும் பள்ளியில் இந்தக் குழந்தைகள் படிக்கின்றனர். அங்கிருந்த குழந்தை பள்ளியில் படித்த தமிழ்ப் பாடலை பாடிக் காட்டினார். இனி இந்தக் குழந்தைகளின் கல்வி எதிர்காலம் கேள்விக்குள்ளாகி இருப்பதாக மக்கள் அஞ்சுகின்றனர். இவர்கள்போக, வீரம்மா, செல்வி ஆகிய இரு பெண்கள் வீடுகளில் வேலை பார்த்துவிட்டு, ஓய்வாக ஒரு பூங்காவில் அமர்ந்திருந்தனர். இவர்களில் வீரம்மாவுக்கு வீடு கிடைத்துள்ளது. செல்விக்கு வீடு கிடைக்கவில்லை. "ஆனால் எங்கள் இருவரின் நிலையும் ஒன்றுதான்" என்கிறார் வீரம்மா. "பிழைப்பின்றி வீடு மட்டும் கிடைத்தால், அதை வைத்து என்ன செய்வது?" என்று கேள்வி எழுப்புகிறார். இதேபோன்று மூதாட்டி செல்லம்மாள் பேசுகையில், "45 வருடங்களாக இதே ஊரில் இருக்கிறேன். கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள சேப்பாக்கம்தான் எனக்கு சொந்த ஊர். நான் இப்போது 5 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிறேன். ஆனால் 8 ஆயிரம் ரூபாய் வாடகை கொடுக்க வேண்டும். ஏற்கெனவே, வீட்டு உரிமையாளர். வாடகை பிரச்னையில் காலி செய்யச் சொல்கின்றனர்" என்றார். படக்குறிப்பு, வீடு பெற்றவர்களுக்கும், பெறாதவர்களுக்கும் பொதுவாக இருக்கும் பிரச்னை வேலைவாய்ப்பு. தமிழ்நாடு அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட உதவித்தொகை இந்த குடும்பத்தினர் அனைவருக்குமே கிடைத்துள்ளது. குடும்பத்திற்கு 8 ஆயிரம் ரூபாய் பணமும் 4 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மளிகைப் பொருட்களையும் பெற்றிருப்பதாக வீரப்பன் என்பவர் பிபிசி தமிழிடம் பகிர்ந்து கொண்டார். இன்றைய சூழ்நிலையில் உணவுக்கே கஷ்டப்படும் மக்களுக்கு இது மிகப்பெரிய உதவி. ஆனால் இவர்களுக்கு நிரந்தரத் தீர்வு தேவை எனவும் வீரப்பன் கூறுகிறார். கடந்த 2010ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத் தீர்ப்பு குடிசைகள் அகற்றப்படும்போது, அங்கு வசிக்கும் மக்கள் அவர்களின் வேலைவாய்ப்பு கிடைக்கும் இடத்திற்கு அருகில் மாற்று குடியிருப்பு வழங்கப்பட வேண்டும் என்று உறுதியளிக்கிறது (Gainda Ram vs. Municipal Corporation of Delhi, [2010 (10) SCC 715]). தொலைதூர இடங்களுக்கு இந்த மக்கள் மாற்றப்பட்டால், வேலை வாய்ப்புக்காக மீண்டும் அதே இடங்களில் குடியேறுவார்கள் என ஆய்வறிக்கைகளைச் சுட்டிக்காட்டி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும் டெல்லி குடிசைவாசிகள் மறுவாழ்வு மற்றும் மீள்குடியேற்றக் கொள்கை 2015ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதன்படி, தலைநகர் டெல்லியின் குடிசைப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் ஓட்டுநர்கள், காய்கறி வியாபாரிகள், வீட்டுவேலை செய்பவர்கள் என முக்கியத்துவம் வாய்ந்த பொருளாதாரப் பங்களிப்புகளைச் செய்கின்றனர். கடந்த காலத்தில் நடுத்தர மற்றும் மேல் தட்டு மக்களுக்கான வீடுகளைக் கட்டும்போது இவர்களுக்கான வீட்டு வசதி திட்டமிடப்படவில்லை. இதன் விளைவாகவே டெல்லி முழுவதும் வேலை வாய்ப்பு கிடைக்கும் இடங்களைச் சுற்றி குடிசைகள் அதிகரித்ததாகவும் அந்தக் கொள்கை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. டெல்லியில் 2015ஆம் ஆண்டுக்குப் பிறகு எந்த புதிய குடிசைப் பகுதியும் உருவாவது அனுமதிக்கப்படாது எனக் குறிப்பிடும் இந்த கொள்கை, ஏற்கெனவே குடிசைகளில் குடியிருப்பவர்கள் எவ்வாறு மீள்குடியேற்றம் செய்யப்பட வேண்டும் என்பதையும் விளக்குகிறது. தமிழ்நாடு அரசு கூறுவது என்ன? பட மூலாதாரம்,AKS VIJAYAN/X படக்குறிப்பு, டி.ஆர்.பாலுவுடன் டெல்லி முதல்வரைச் சந்தித்தபோதும் நரேலாவில் அடிப்படை வசதிகளைச் செய்து தருமாறு வலியுறுத்திதாக ஏ.கே.எஸ்.விஜயன் குறிப்பிட்டார். ஜங்புராவாசிகளுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் செய்யப்பட்டுள்ள உதவிகள் குறித்து அறிவதற்காக தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயனிடம் பேசினோம். தமிழ்நாடு அரசு சார்பில் ஜங்புராவாழ் தமிழர்களுக்குத் தேவையான "வசதிகளைச் செய்து தரத் தயாராக இருக்கிறோம்" என முதலமைச்சர் உறுதி அளித்துள்ளதாக அவர் கூறினார். "தமிழ்நாட்டிற்கு யார் வந்தாலும் எங்கே அவர்கள் வசிக்க விரும்புகிறார்களோ அந்த மாவட்ட ஆட்சியரோடு தொடர்புகொண்டால் அங்கு அவர்களுக்கு இலவசமாக பட்டா வழங்கி வீடுகளைக் கட்டித் தருகிற திட்டதை நிறைவேற்றித் தருவோம் என்று சொல்லியிருந்தார். அதைத்தான் நாங்கள் அவர்களிடமும் கூறினோம்." ஆனால், தாங்கள் மூன்று தலைமுறைகளாக இங்கேயே இருந்துவிட்டதாகவும், இப்போது அங்கு வந்து என்ன செய்வது எனத் தெரியவில்லை எனவும் கூறிய மக்கள் தாங்கள் இங்கேயே இருந்து விடுவதாகவும் கூறியதாக அவர் குறிப்பிடுகிறார். மேலும், "தமிழ்நாட்டிற்கே வந்துவிடலாம்" என்று நினைப்பவர்களுக்குத் தேவைப்படும் அனைத்து வகையான உதவிகளையும் தமிழ்நாடு முதலமைச்சர் செய்துகொடுக்கத் தயாராக இருப்பதாகவும் ஏ.கே.எஸ். விஜயன் குறிப்பிட்டார். அதோடு, "திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலுவுடன் சேர்ந்து டெல்லி முதலமைச்சரைச் சந்தித்தபோதும், நரேலா பகுதியில் அடிப்படை வசதிகளைச் செய்து தருமாறு" தமிழ்நாடு அரசு சார்பில் வலியுறுத்தியதாகவும் அவர் கூறினார். டெல்லி அரசின் நிலைப்பாடு என்ன? மதராசி கேம்ப் இடிக்கப்பட்ட நேரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா, தாம் பொறுப்பேற்ற பின்னர் குடிசைப் பகுதிகளில் வளர்ச்சிப் பணிகளுக்காக 700 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறியிருந்தார். "குடிசை வாழ் மக்களின் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும். அதே நேரத்தில் யமுனை நதியும் பாதுகாக்கப்பட வேண்டும்" என ரேகா குப்தா தெரிவித்ததாக ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவித்தது. ஆக்கிரமிப்புகள் அகற்றம் நடந்து கிட்டத்தட்ட ஒன்றரை மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், இது தொடர்பாக டெல்லி தென்கிழக்கு மாவட்ட ஆட்சியர் அனில் தம்பா மற்றும் ஜங்புரா எம்எல்ஏ தர்விந்தர்சிங் தாகூர் ஆகியோரைத் தொடர்புகொள்ளப் பல வழிகளில் பிபிசி முயன்றும் அவர்கள் பதில் அளிக்கவில்லை. அவர்கள் தரப்பில் விளக்கம் தரப்படும் பட்சத்தில் அதுவும் இந்தக் கட்டுரையில் சேர்க்கப்படும். இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cn7d5lkj56xo
Checked
Sun, 09/28/2025 - 06:35
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed