புதிய பதிவுகள்2

புனர்வாழ்வு பெற்ற விடுதலைப் புலி உறுப்பினர் கொழும்பில் துப்பாக்கியுடன் கைது

2 months ago
தாம் குற்றச்செயலுக்கு பயன்படுத்தும் தமிழருக்கு, இராணுவ புலனாய்வு என்கிற பெயரில் சம்பளம் வழங்கி, இப்படியான தாக்குதலுக்கு பயன்படுத்துகிறார்கள். டக்கிளஸ் கூட இப்படி சிலரை பயன்படுத்தி அவர்களின் பணத்தில் பல லட்ஷங்களை கொள்ளையடித்திருக்கிறார். சுரேஷ் சாலேயே இந்த வேலைகளை கவனித்து வந்திருக்கிறார். இப்போ பயத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் தாறுமாறாக ஓடி தாங்களாகவே மாட்டுப்படப்போகிறார்கள். சுரேஷ் சாலேயை கைது செய்வதற்கு பலமான சாட்சிக்காக காத்திருக்கிறார்கள். அதற்கிடையில் சுரேஷே பலமான ஆதாரத்தை கொடுக்கப்போகிறார் போலுள்ளது. அவன் கைது செய்யப்பட்டால், ராஜபக்ச குடும்பம் சிக்கும். அதற்கிடையில் ஏதோ ஒரு அனர்த்தம் நிகழ்த்த முயல்வார்கள், முடிந்தால் சாலேயின் கதையே முடியலாம்.

2006 ஆம் ஆண்டு கெப்பிட்டிக்கொல்லாவை பொதுமக்கள் பேரூந்து மீது நடத்தப்பட்ட கிளேமோர் தாக்குதல் மகிந்த ராஜபக்ஷவிற்காக நடத்தப்பட்டிருக்கலாம் ‍- ஜனாதிபதி ஊடகப் பிரிவின் செயலாளர் அநுருத்த லொக்குஹப்புவாராச்சி தெரிவிப்பு

2 months ago
அரசில் அதிகாரத்தில் இன்று உள்ளவர்களும், அன்றிருந்த சில புலநாய்வார்களும் கெப்பிட்டிக்கொல்லாவை மற்றும் வெலிக்கந்தைத் தாக்குதல்களை மகிந்தவுக்காக பிள்ளையானே நடத்தினான் என்று கூறும்போதும் எம்மவர்களில் சிலர் இதனை நம்பத் தயாராக இல்லை. அதாவது புலிகளே இதனைச் செய்யக் கூடியவர்கள், அவர்களுக்கே இத்தேவை இருந்தது எனும் புலிகள் குறித்த தமது இயல்பான கணிப்பீட்டில் இருந்து இவற்றினை மறைக்கப் பார்க்கிறார்கள். ஆனால், அவர்கள் நம்பவில்லை என்பதற்காக இவை நடைபெறவில்லை என்பது ஒன்றும் கட்டாயம் இல்லை. 2019 இல் தாம் மீண்டும் பதவிக்கு வருவதற்காக 270 அப்பாவிகளைக் கொன்றவர்கள் 2006 இல் தமது யுத்தம் மூலமான தீர்விற்கு நாட்டையும், சர்வதேசத்தையும் தயார்ப்படுத்துவதற்காகவே தமது இனத்தில் பலரைக் கொன்றார்கள் என்பதை எம்மவர்களில் பலருக்கு நம்பக் கடிண‌மாக இருப்பது வியப்பே. நீங்கள் கேட்டுக்கொண்டமையினால் தமிழ் கார்டியன் இணையத்தில் வந்த இணைப்பினைத் தருகிறேன். இத்தாக்குதல்கள் குறித்து செய்தியாளர் நிலாம்டீன் இரு யூடியூப் காணொளிகளை அண்மையில் பதிந்திருக்கிறார். அவற்றையும் முடிந்தால் இணைத்துவிடுகிறேன். கேளுங்கள். Sri Lankan presidential media official questions LTTE’s role in 2006 massacres | Tamil Guardian https://youtu.be/uiR9yw5W3Q4?si=38FeGveyJXsjyX1V https://youtu.be/ujr1w3faxEo?si=b5hIBMPgv0md2ngl

எழுத்தாளனின் பெயர் சூட்டப்பட்ட வீதி - மாத்தளை மலரன்பனுக்கு கௌரவம்!

2 months ago
24 JUL, 2025 | 12:47 PM ஒரு எழுத்தாளனின் பெயரை ஒரு வீதிக்கு சூட்டி, அந்த எழுத்தாளனை கௌரவித்த நிகழ்வொன்று அண்மையில் மாத்தளையில் நடைபெற்றுள்ளது. மாத்தளை மலரன்பன் என்ற எழுத்தாளன் நான்கு முறை அரச சாஹித்திய விருதை வென்றவர். அமைதியான குணப்பண்புடைய இவர் பல புத்தகங்களை எழுதி வெளியிட்டுள்ளார். அவரது எழுத்துப்பணியை கௌரவிக்கும் வகையில் மாத்தளை மாவட்டத்தில் நோர்த் மாத்தளை என்ற இடத்தில் உள்ள அவரது இல்லத்தினை அண்மித்த ஆயுர்வேத மத்திய நிலையத்திற்குச் செல்லும் வீதி “ஆறுமுகம் மலரன்பன் வீதி” எனப் பெயரிடப்பட்டு, எழுத்தாளன் மாத்தளை மலரன்பனுக்கு பாரிய பாராட்டு விழாவும் அண்மையில் நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் புத்தசாசன சமய விவகார, கலாசார அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி மற்றும் மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபயகோன் உட்பட பலரும் கலந்துகொண்டனர். வாழும்போது வாழ்த்தப்படும், அங்கீகரிக்கப்படும் கலைஞர்கள், எழுத்தாளர்களின் பட்டியலில் மாத்தளை மலரன்பனும் இடம்பிடித்துள்ளார். https://www.virakesari.lk/article/220802

புனர்வாழ்வு பெற்ற விடுதலைப் புலி உறுப்பினர் கொழும்பில் துப்பாக்கியுடன் கைது

2 months ago
அருண் சித்தார்த் சொல்லியிருக்கு, கிழக்கு முஸ்லீம் படுகொலைகளுடன் தொடர்புடைய புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள், புலம்பெயர் புலிகள் தண்டிக்கப்படவேண்டுமாம். ஆனால் இராணுவத்துடன் இயங்கும் புலிகள் தண்டிக்கப்படக்கூடாதாம். அதாவது இராணுவத்தோடு இயங்கும் முன்னாள் போராளிகள், இராணுவம் எனும் பெயரில், முன்னாள் போராளிகளுடன் ஏற்பட்ட மோதலில் சுட்டுக்கொல்லப்பட்டார் அல்லது இராணுவத்தின் தாக்குதலில் புலிப்பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டார். நாட்டில் அப்பப்போ தமக்கு ஆதரவாக அல்லது தமக்கு நேரும் விசாரணைகளை திசை திருப்ப மோதல்களை உருவாக்க இப்படியான தமிழரை பயன்படுத்த இவ்வாறு செயற்படுத்துகிறார்கள். ஆனால் இவர்கள் யாரின் கட்டுப்பாட்டில் இருக்கிறார்கள், இயங்குகிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். அவர்கள் தாங்களாக சிந்திக்கவோ, இயங்கவோ முடியாத நிலை. ஆகவே முன்னாள் புலிகளை சாட்டி செய்ய்யப்படும் குற்றச்செயல்களுக்கு இராணுவ புலனாய்வே பொறுப்பெடுக்க வேண்டும். அதோடு இவர் முன்னாள் புலி, தாக்குதலை நடத்தவே வந்தார் என்று சொன்னால்; வடக்கிலுள்ள இராணுவம் அதற்கு பொறுப்பெடுத்து வெளியேற வேண்டும். அவர்களால் எந்தப்பயனுமில்லை, அவர்களே முன்னாள் புலிகளை போதைப்பொருள் கடத்தவும், இப்படியான தாக்குதல்களை நடத்தி நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள் என்பதற்கு இதுவே தகுந்த ஆதாரம். தமிழரை கொத்துக்கொத்தாக அழித்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இல்லையேல் தர்மம் அவர்களை எந்த வழியிலேனும் தண்டிக்கும். அப்போ யாரும் யாரையும் குற்றம் சாட்டி கலவரங்களை ஏற்படுத்தவோ, ஊழையிடவோ முடியாது.

அன்ரன் பாலசிங்கத்திற்கு பிரான்ஸில் சிலை!

2 months ago
அன்டன் பாலசிங்கத்தின் சிலையை நிறுவுவதற்கு இடம்பெறும் நடவடிக்கைகள் குறித்து அரசாங்கம் பிரான்ஸ் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவேண்டும் - முன்னாள் இராணுவ அதிகாரி ஜகத்டயஸ் Published By: RAJEEBAN 24 JUL, 2025 | 12:39 PM தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கத்தின் சிலையை நிறுவுவதற்கு பிரான்ஸ் தலைநகரில் இடம்பெறும் நடவடிக்கைகள் குறித்து தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பிரான்ஸ் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவேண்டும் என முன்னாள் இராணுவ அதிகாரி லெப் ஜெனரல் ஜகத்டயஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். புலம்பெயர் தமிழர்களை திருப்திபடுத்தும் விதத்திலான பிரான்சின் செயற்பாடுகளை இலங்கை கடுமையாக எதிர்க்கவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இலங்கையிலும் இந்தியாவிலும் விடுதலைப்புலிகள் மேற்கொண்ட நடவடிக்கைகளில் இருந்து பிரிட்டிஸ் பிரஜையான பாலசிங்கத்தின் நடவடிக்கைகளை பிரித்து பார்க்கமுடியாது, மன்னிக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார். கனடா இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றது என தெரிவித்து இரண்டு முன்னாள் ஜனாதிபதிகளிற்கு பயணத்தடையை விதித்துள்ளதன் பின்னணிலேயே அன்டன் பாலசிங்கத்திற்கு பிரான்சில் சிலையை நிறுவும் நடவடிக்கைகளை பார்க்கவேண்டும் என ஜகத் டயஸ் தெரிவித்துள்ளார். சரியான நிலைப்பாட்டை முன்வைப்பதற்கான ஒருங்கிணைந்த உத்தியில்லாத நிலையில் வெளிநாட்டு அரசியல் கட்சிகளின் ஆதரவுடன் தமிழ்புலம்பெயர்ந்தோர் தங்கள் பிரிவினைவாத திட்டத்தை சிறந்த முறையில் முன்னெடுத்துவருகின்றனர் என தெரிவித்துள்ள முன்னாள் இராணுவ அதிகாரி ஆனால் இந்த சவாலை எதிர்கொள்வதில் எங்கள் நாடாளுமன்றம் முற்றிலும் அலட்சியமாக உள்ளது, இலங்கைக்கு எதிரான திட்டங்களை எதிர்கொள்ளும் தனது கடப்பாட்டினை அலட்சியம் செய்கின்றது என தெரிவித்துள்ளார். அவர்கள் விடுதலைப்புலிகளை பரிசுத்தமானவர்களாக்க பகல் இரவாக அவர்கள் செயற்படுகின்றனர், நிகழ்வுகளில் விடுதலைப்புலிகளின் கொடிகளை ஏற்றுவதும் அவர்களின் சிலைகளை நிறுவுவதும் இந்த மூலோபாயத்தின் ஒரு பகுதி என ஜகத்டயஸ் தெரிவித்துள்ளார். பிரான்ஸ் சிலை தொடர்பில் எங்களின் தூதரகம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறித்து அரசாங்கம் பொதுமக்களிற்கு தெளிவுபடுத்தவேண்டும் என தெரிவித்துள்ள அவர் சிலையை நிறுவும் திட்டம் இடம்பெறுகின்ற போதிலும் அரசாங்கமோ எதிர்கட்சியோ இதுவரை இது குறித்து வாய்திறக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/220801

செம்மணி புதைகுழிக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் - கருணாஸ் வேண்டுகோள்!

2 months ago
24 JUL, 2025 | 12:03 PM எல்லா தேசங்களிலும் மண்ணைத் தோண்டினால் வளங்கள்தான் கிடைக்கும். ஆனால் ஈழ தேசத்தில் மட்டும்தான் எங்கு தோண்டினாலும் பிணங்கள் கிடைக்கின்றன. இப்போது அந்தப் பிணங்கள் காலத்தின் கறையான் அரித்து எலும்புக்கூடுகளாய் மாறி, அவை ஈழத்தில் நிகழ்ந்தது இனப்படுகொலைதான் என்பதை அடையாளம் காட்டுகின்றன. செம்மணி மனிதப் புதைகுழியானது தமிழினப் படுகொலையின் சாட்சியாகும். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், செம்மணி புதைகுழிக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என தென்னிந்திய பிரபல நடிகரும் முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் தலைவருமான சேது கருணாஸ் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், இனப்படுகொலைக்கு செம்மணிதான் சாட்சி. இதற்கு முன்னால் எத்தனையோ இனப்படுகொலை சாட்சிகளைப் பன்னாட்டு அவையில் முன்னிறுத்தினோம். ஆனால் நீதிக்கு இடம் தராத ஐ.நா அவைகள் கள்ள மெளனம் காத்தது. இந்த செம்மணி அகழாய்வு உண்மையிலாவது, இனப்படுகொலையின் இன்னல்களை சர்வதேச சமூகம் உணர்ந்து கொள்ளட்டும். செம்மணி மனிதப் புதைகுழி 2009ஆம் ஆண்டிற்கு முன் நிகழ்ந்திருக்கிலாம் அல்லது பின் நிகழ்ந்திருக்கலாம். எப்போது நடந்தாலும், சிங்களவரால் நிகழ்த்தப்பட்டது. இனப்படுகொலைதான் என்பதை செம்மணியும் மற்ற அகழ்வாய்வுகளும் வெளிப்படுத்தியிருக்கின்றன. 2009க்கு பின்னும் கூடுதலாய் அதே புதைகுழி உத்தியை சிங்கள பேரினவாத அரசு கையாண்டுள்ளது என்பது இப்போது கூடுதலாய் வெளிப்பட்டிருக்கிறது. சமகாலத்தில் செம்மணியை விட சர்வதேச சமூகத்திற்கு வேறென்ன சான்று வேண்டும்!? இதுவரை 80க்கும் மேற்பட்ட அகழ்வாய்வு தொகுப்புகள் கிடைத்துள்ளன. எந்த நாட்டிலும் இதுபோல், அகழாய்வில் அதிர்ச்சியில்லை. தமிழர் அகழாய்வில் முன்னோர் வாழ்வியல் படித்துள்ளோம். ஆனால், தமிழீழ தேசத்தில்தான் எலும்புக் கூடுகளின் வலியை உணரமுடிகிறது. தாயும் குழந்தையும் கட்டி அணைத்தபடி மடிந்த எலும்புக்கூடுகளின் காட்சி, காலம் கடந்தும் நம் காயங்களை மீண்டும் காயப்படுத்துகிறது. பள்ளிச்சிறுவர்களின் புத்தகப் பை, பொம்மையோடு கண்டறிந்த அகழாய்வு கொடுமையின் உச்சத்தை தொடுகிறது. எண்ணிலடங்கா எலும்புக்கூடுகளில் சிறுவர் சிறுமியர் அதிகம் என்பதை உலகம் கண்டுணரா அதிர்ச்சி. வதைக்கப்பட்டும் புதைக்கபட்டும் வல்லுறவில் மறைக்கப்பட்டும் எத்தனைப் பெண்கள்! அத்தனையும் செம்மணியில் எலும்புக்கூட்டின் சாட்சியங்கள். இன்னும் இலங்கை அகழாய்வு நீண்டாலும் கள்ள மெளனம் சாதிக்கும் இவ்வுலகம். நாம் சிங்கள பெளத்த பேரினத்தின் அநீதிகளை பன்னாட்டு அவையில் எடுத்துரைப்போம். மக்கள் திரள் போராட்டம் வழியாய் நமக்கான நீதிக்குக் குரல் கொடுப்போம். ஒன்றிய அரசு, அண்டை நாட்டில் நிகழ்ந்த அநீதிக்கு ஐ.நா அவையில் குரல் கொடுக்க வேண்டும்! இதற்கு முன் தமிழினத்திற்கு செய்ததை, செம்மணி மனிதப் புதைகுழியை அறிந்தும் கண்டும் காணமல் இருக்கக்கூடாது. தமிழ்நாட்டு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் செம்மணி மனிதப் புதைகுழி படுகொலைக்கு, சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, இலங்கை அரசை பன்னாட்டு நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டுகோள் விடுக்கவேண்டும். மேலும் ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும். செம்மணி நமது தமிழினப் படுகொலைக்கு சாட்சியத்திற்கு அடையாளம். ஆனாலும், இன்னும் இதுபோன்ற தோண்டப்படாத அகழாய்வுகள் இன்னும் எத்தனையோ உள்ளன. காலம் ஈழத் தமிழனத்திற்கு நல்ல தீர்ப்புகள் வழங்கும். நாம் தொடர்ந்து போராடுவோம் என குறிப்பிடப்பட்டுள்ளார். https://www.virakesari.lk/article/220790

மனிதனால் உருவாக்கப்பட்ட பட்டினியால் பெரும் துன்பத்தில் காசா - உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர்

2 months ago
"ஒரு பை மாவுக்கு உயிரையும் கொடுப்பேன்" - பட்டினியின் பிடியில் தவிக்கும் காஸா மக்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் ஸ்வாமிநாதன் நடராஜன் மற்றும் காஸா லைஃப்லைன் புரோகிராம் பிபிசி உலக சேவை 4 மணி நேரங்களுக்கு முன்னர் "நான்கு நாட்களாக சாப்பிடாததால் எனது இரண்டு குழந்தைகளும் அழுதுகொண்டிருந்தனர்," என்கிறார் காஸாவை சேர்ந்த ஒருவர். "வீட்டுக்கு ஒரு பை மாவு கொண்டுவந்துவிட முடியும் என்ற நம்பிக்கையில் நான் விநியோக இடத்தை அடைந்தேன். ஆனால் அங்கு சென்ற போது என்ன செய்வது என எனக்கு தெரியவில்லை," என அவர் பிபிசி நியூஸ் அரபியிடம் தெரிவித்தார். "காயமடைந்தவர்களை காப்பாற்ற முயற்சிப்பதா, உயிரிழந்தவர்களை தூக்கிச் செல்வதா அல்லது மாவைத் தேடுவதா? எனது குழந்தைகள் உணவு உட்கொள்ள ஒரே ஒரு பை மாவை வீட்டுக்கு கொண்டு செல்ல முடியும் என்றால் நான் மரணத்தை ஏற்றுக்கொண்டிருப்பேன் என இறைவன் மீது ஆணையாகச் சொல்கிறேன்." பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, காஸாவில் சுமார் 900,000 குழந்தைகள் பட்டினியால் அவதிப்படுகின்றனர், அவர்களில் 70,000 பேர் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஒரு மருத்துவர் பிபிசியிடம் தெரிவித்தார் மக்கள் அமெரிக்க மற்றும் இஸ்ரேல் ஆதரவு பெற்ற சர்ச்சைக்குரிய காஸா மனிதநேய அறக்கட்டளை (GHF) விநியோகிக்கும் உதவியை மட்டுமே நம்பியுள்ள நிலையில், ஊட்டச்சத்து குறைபாடு, பட்டினி, உதவி மையங்கள் அருகே கொலைகள் எல்லாம் காஸாவில் கவலையளிக்கும் பிரச்னைகளாகி வருகின்றன. "காஸா மனிதநேய அறக்கட்டளை (GHF) மே 27ஆம் தேதி செயல்படத் தொடங்கியதிலிருந்து, காஸாவில் உணவு பெற முயன்றபோது 1,000-த்திற்கும் மேற்பட்ட பாலத்தீனர்கள் இஸ்ரேலிய ராணுவத்தால் கொல்லப்பட்டுள்ளனர்," என்கிறார் ஐ.நா மனித உரிமைகள் அலுவலகத்தின் செய்தித்தொடர்பாளர் தமீன் அல்-கீதான். "ஜூலை 21ஆம் தேதி வரை காஸாவில் உணவை பெற முயன்றபோது 1,054 பேர் கொல்லப்பட்டதாக நாங்கள் பதிவு செய்திருக்கிறோம், இதில் 766 பேர் காஸா மனிதநேய அறக்கட்டளை அமைந்துள்ள இடங்களுக்கு அருகிலும், 288 பேர் ஐநா மற்றும் பிற மனிதநேய அமைப்புகளின் உதவி வாகனங்களுக்கு அருகிலும் கொல்லப்பட்டுள்ளனர்," என அவர் பிபிசி உலக சேவையிடம் தெரிவித்தார். அதிகரிக்கும் இறப்புகள் மே மாத இறுதியில் தெற்கு மற்றும் மத்திய காஸாவில் பல உதவி மையங்களில் குறைவான அளவு உதவிகளை வழங்கி காஸா மனிதநேய அறக்கட்டளை தனது செயல்பாடுகளை தொடங்கியது. அதற்கு முன்பு 11 வாரங்கள் இஸ்ரேல் காஸாவை முடக்கி எந்த உணவையும் அந்தப் பகுதிக்குள் நுழைய அனுமதிக்கவில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பாலத்தீன சுகாதார அமைச்சகத்தின் கூற்றுப்படி ஊட்டச்சத்து குறைபாட்டால் கடந்த 48 மணி நேரத்தில் 12 குழந்தைகள் உட்பட 33 பேர் இறந்துள்ளனர் கடந்த 72 மணி நேரத்தில் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் பட்டினியால் அந்தப் பகுதியில் 21 குழந்தைகள் உயிரிழந்திருப்பதாக காஸா நகரில் செயல்படும் ஷிபா மருத்துவமனையின் இயக்குநர் முகம்மது அபு சல்மியா சொல்கிறார். காஸாவில் சுமார் 900,000 குழந்தைகள் பட்டினியால் வாடுவதாகவும், அவர்களில் 70,000 பேர் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் பிபிசியிடம் தெரிவித்தார். கவலையளிக்கும் எண்ணிக்கையில் இறப்புகளை சந்திப்பதாகவும், குறிப்பாக நீரிழிவு மற்றும் சிறுநீரக நோயாளிகள் அபாயத்தில் இருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். கடந்த 48 மணி நேரத்தில் 12 குழந்தைகள் உட்பட 33 பேர் உயிரிழந்திருப்பதாக ஹமாஸ் தலைமையிலான சுகாதார அமைச்சகத்தை சேர்ந்த செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார். 2023-ஆம் ஆண்டு போர் தொடங்கியது முதல் ஊட்டச்சத்து குறைபாட்டால் ஏற்பட்ட இறப்புகள் 101-ஆக உள்ளன, இதில் 80 பேர் குழந்தைகள் என்று அவர்கள் மேலும் கூறுகின்றனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, முகமது ஸகரியா அய்யூப் அல்-மதூக் போன்ற இளம் குழந்தைகள் உயிருக்கே அச்சுறுத்தலான ஊட்டச்சத்து குறைபாட்டை எதிர்கொள்கின்றனர் பட்டினியை எதிர்கொள்ளும் நிலை உலக உணவு திட்டத்தின்(WFP) கூற்றுப்படி காஸாவின் மொத்த மக்கள் தொகையுமே பட்டினியை எதிர்கொண்டிருக்கிறது. "ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்து வருகிறது, 90,000 பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் உடனடி சிகிச்சை தேவைப்படுகிறது. மூன்றில் ஒருவர் பல நாட்களுக்கு உண்ணாமல் இருக்கின்றனர்," என ஞாயிறன்று வெளியிட்ட அறிக்கையில் உலக உணவு திட்டம் தெரிவித்துள்ளது. "ஒரு கிலோ கிராம் மாவு பையின் விலை உள்ளூர் சந்தைகளில் 100 டாலர்களை தாண்டிவிட்ட காரணத்தால் பெரும்பாலான மக்களுக்கு உணவு கிடைப்பதற்கு உணவு உதவிதான் ஒரே வழி." பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தற்காலிக சந்தைகளில் ஒரு கிலோ மாவு 90 முதல் 100 டாலர்கள் வரை விற்கப்படுகிறது மார்ச் மாதத்தில் காஸாவிற்குள் செல்லும் அனைத்து பாதைகளும் மறித்த இஸ்ரேல், உணவு, எரிபொருள் மற்றும் மருந்துகள் நுழைவதை தடுத்ததுடன், இரண்டு வாரங்கள் கழித்து ஹமாஸுடனான இரண்டு மாத போர் நிறுத்தத்தை முறித்துக்கொண்டு ராணுவ தாக்குதலை தொடங்கியது. சமாளிக்க முடியாமல் திணறிக்கொண்டிருக்கும் காஸா மருத்துவ அமைப்புக்கு தேவையான அத்தியாவசிய மருந்துகள், தடுப்பூசிகள் மற்றும் மருத்துவ உபகரணங்களையும் கூட இந்த முடக்கம் தடுத்துவிட்டிருக்கிறது. மே மாதம் மத்தியிலிருந்து 4400 லாரி மனிதாபிமான உதவிப்பொருட்கள் இஸ்ரேலிலிருந்து காஸாவிற்குள் நுழைந்திருப்பதாக இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது. எல்லையில் காஸா பகுதியில் ஐநாவால் எடுத்துக்கொள்ளப்பட மேலும் 700 லாரி நிறய உதவிப் பொருட்கள் காத்துக்கொண்டிருப்பதாக அது மேலும் தெரிவித்துள்ளது. காஸா பகுதியில் உதவிப் பொருட்களுக்கு பற்றாக்குறை இல்லை என வலியுறுத்தும் இஸ்ரேல், ஹமாஸ் மனிதாபிமான உதவிப்பொருட்களை திருடி தனது ஆயுததாரிகளுக்கு தருவதற்காகவோ அல்லது அதை விற்று பணம் திரட்டுவதற்காகவோ பதுக்குவதாக குற்றம்சாட்டியுள்ளது. திங்கள்கிழமை பிரிட்டன், கனடா பிரான்ஸ் உட்பட 28 நாடுகள் காஸாவில் பொதுமக்கள் அனுபவிக்கும் துயரம் புதிய ஆழத்தை எட்டிவிட்டிருப்பதாகவும் உடனடியாக போர் நிறுத்தம் ஏற்படவேண்டும் எனவும் வலியுறுத்தின. இஸ்ரேலின் உதவி விநியோகிக்கும் முறை ஆபத்தானது என்றும், உதவியை துளித்துளியாக தருவதையும், உணவு மற்றும் தண்ணீரைத் தேடும் மக்களின் "மனிதநேயமற்ற கொலைகளை" கண்டிப்பதாகவும் ஒரு கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த நாடுகளின் அறிக்கையை நிராகரித்த இஸ்ரேலின் வெளியுறவுத்துறை, அது உண்மையோடு தொடர்பில்லாமல் இருப்பதாகவும், ஹமாஸுக்கு தவறான செய்தியை அனுப்புவதாகவும் தெரிவித்தது. ஆனால் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆதரவு பெற்ற காஸா மனிதநேய அறக்கட்டளை மே மாதம் இறுதியில் உதவிகளை விநியோகிக்க தொடங்கியது முதலே உதவியை தேடிவரும் போது பாலத்தீனர்கள் கொல்லப்படுவது பற்றிய செய்திகள் கிட்டத்தட்ட தினமும் வெளிவந்துகொண்டிருக்கின்றன. "நாங்கள் வறுமையில் வாடுகிறோம்" பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, உலக உணவுத் திட்டத்தின் கூற்றுப்படி, மூன்றில் ஒரு நபர் பல நாட்களுக்கு உணவு உண்ணமால் இருக்கிறார் "இன்று சந்தையில் ஒரு கிலோ மாவு 200 ஷெகெல்ஸுக்கு [$90] விற்கப்படுகிறது...ஆனால் நாங்கள் வறியவர்களாக இருக்கிறோம்," என பிபிசி நியூஸ் அரபியிடம் சொல்கிறார் அலா முகமது பெக்கித். "மிகவும் அடிப்படையான தேவைகளைக் கூட எங்களால் நிறைவேற்ற முடியவில்லை." உதவி மையங்களுக்கு அருகே இருக்கும் மக்கள் தினசரி சந்திக்கும் தாக்குதல்கள் குறித்தும் அவர் பேசுகிறார். "ஒரு இளைஞர் என் அருகே அமர்ந்துகொண்டிருந்தார், ஆனால் திடீரென அவர் தலையில் சுடப்பட்டார்," என்கிறார் அவர். "தோட்டா எங்கிருந்து வந்ததென்றுகூட எங்களுக்கு தெரியவில்லை. நாங்கள் உயிர் பிழைப்பதற்காக அங்கிருந்தோம், ஆனால் ரத்தத்தில் மூழ்குவதை பார்த்தோம். இன்று ஒரு பை மாவை எடுக்கும் யாராக இருந்தாலும் தோட்டாவை சந்திக்கிறார்கள்." காஸா மனிதநேய அறக்கட்டளை காஸாவில் நடத்தும் உதவி மையங்களை நாடும் பொதுமக்கள் "பாதிக்கப்பட்டதாக" வெளியான தகவல்களை ஆய்வு செய்துவருவதாக இஸ்ரேல் ராணுவம் கடந்த மாதம் பிபிசியிடம் தெரிவித்திருந்தது. "பாதிக்கப்பட்டதாக சொல்லப்படும் சம்பவங்கள் ஆய்வு செய்யப்படுகின்றன," என்றும் சட்டம் மற்றும் இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் உத்தரவுகளுக்கு மாறாக நடந்ததாக எழும் எந்த ஒரு குற்றச்சாட்டும் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு, தேவைக்கு ஏற்ப மேலும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அந்த அறிக்கை தெரிவித்தது. பாலத்தீன மரணங்கள் பற்றி காஸாவின் ஹமாஸ் அதிகாரிகள் மிகைப்படுத்தப்பட்ட எண்ணிக்கையை பயன்படுத்துவதாக குற்றம்சாட்டும் இஸ்ரேல் அதே நேரம் "உடனடியாக ஏற்பட்ட அபாயத்தை" அகற்றுவதற்காக "எச்சரிக்கையாக சுட்டதாக" ஒப்புக்கொண்டுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, உணவு உதவி பெறுவதற்காக காஸாவில் மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருக்கின்றனர் மிகவும் சமீபத்திய தாக்குதல் இந்த வாரம் இஸ்ரேல் டாங்குகள், மத்திய காஸாவில் அமைந்துள்ள டெய்ர் அல்-பலாஹிற்கு முதல்முறையாக நுழைந்துள்ளன, இதனால் பொதுமக்கள் அங்கிருந்து இடம்பெயரத் தொடங்கியுள்ளனர். டெய்ர் அல்-பலாஹின் தெற்கு பகுதியில் உள்ள ஆறு நகரப் பகுதிகளை உடனடியாக காலி செய்யும்படி இஸ்ரேலிய ராணுவம் ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டதையடுத்து ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். அடுத்து செல்வதற்கு தங்களுக்கு போக்கிடம் இல்லை என அங்கிருந்த பொதுமக்கள் பிபிசியிடம் தெரிவித்தனர். ஹமாஸுடனான 21 மாத போரில் இஸ்ரேல் தரையில் பெரிய அளவில் தாக்குதல் நடத்தாத ஒரு சில காஸா பகுதிகளில் டெய்ர் அல் பலாஹவும் ஒன்று. ஹமாஸ் அங்கு பிணைக் கைதிகளை வைத்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் காரணமாகவே ராணுவம் டெய்ர் அல்-பலாஹ் மாவட்டங்களில் இருந்து விலகி இருந்ததாக இஸ்ரேல் வட்டாரங்கள் கூறியுள்ளன. காஸாவில் எஞ்சியுள்ள 50 பிணைக் கைதிகளில் குறைந்தது 20 பேர் இன்னும் உயிருடன் இருப்பதாக நம்பப்படுகிறது. டெய்ர் அல்-பலாஹ்யை காலி செய்ய பிறப்பிக்கப்பட்ட உத்தரவு பல ஆயிரம் பாலத்தீனர்களை பாதித்துள்ளதாகவும் மனிதாபிமான முயற்சிகளுக்கு "மற்றுமொரு பேரழிவு அடி" என்றும் ஐநா தெரிவித்துள்ளது. இந்த பகுதிகளில் இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கான டஜன் கணக்கான முகாம்கள், உதவிப்பொருட்களுக்கான கிடங்குகள், சுகாதார மையங்கள் மற்றும் முக்கியமான தண்ணீர் உள்கட்டமைப்பு உள்ளன. இஸ்ரேலின் டெய்ர் அல்-பலாஹ் தாக்குதலின்போது தனது வளாகம் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டதாகவும், தனது ஊழியர்களின் வசிப்பிடம் மூன்று முறை தாக்கப்பட்டு, குழந்தைகள் உட்பட அந்தப்பகுதியில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர் எனவும் உலக சுகாதார அமைப்பு(WHO) சொல்கிறது. இஸ்ரேல் ராணுவம் வளாகத்திற்குள் நுழைந்து, ஆண் ஊழியர்களின் ஆடைகளை அகற்றி அவர்களுக்கு கைவிலங்கிட்டு சம்பவ இடத்திலேயே விசாரித்து, நான்கு பேரை தடுப்பு காவலில் வைத்ததாவும் அதில் மூவர் பின்னர் விடுவிக்கப்பட்டதாகவும் அந்த ஐநா அமைப்பு கூறுகிறது. இந்த சம்பங்கள் குறித்து இஸ்ரேல் ராணுவம் கருத்து ஏதும் கூறவில்லை. 'மனிதன் ஏற்படுத்திய பேரழிவு' மீண்டும் தாக்குதல் தொடங்கியிருந்தாலும், கடல்நீர் சுத்திகரிப்பு நிலையம் உட்பட முக்கிய கட்டமைப்புகளை பாதுகாக்க அதன் ஊழியர்கள் காஸாவில் தங்கியிருப்பார்கள் என ஐநா சொல்கிறது. "காஸாவில் நடப்பது மனிதனால் ஏற்பட்ட பேரழிவு," என ஐ.நாவின் பாலத்தீன அகதிகள் முகமையின்(Unrwa) தகவல் தொடர்பு இயக்குநர் ஜூலியட் டூமா சொல்கிறார். இஸ்ரேல், பாலத்தீன அகதிகள் முகமையை காஸாவில் செயல்பட தடை விதித்தது 6000 லாரிகள் நிறைய உதவிப் பொருட்களை வழங்குவதை தடுத்துள்ளது என பிபிசியிடம் பேசிய டூமா சொல்கிறார். "கடந்த 24 மணி நேரத்தில் பசி மற்றும் பட்டினியால் Unrwa-வைச் சேர்ந்த சில சகாக்கள் பணியில் இருக்கும்போது மயக்கமடைந்ததாக எங்கள் ஊழியர்கள் தெரிவித்தனர்," எனக்கூறி பணியாளர்களுக்கு ஏற்பட்ட தாக்கத்தை சுட்டிக்காட்டுகிறார். "ஒரு மில்லியன் குழந்தைகள் உட்பட காஸாவின் மக்களை மொத்தமாக தண்டிக்கும் திட்டமிட்ட அரசியல் முடிவால் ஏற்பட்ட பட்டினி," என்கிறார் அவர். நவம்பர் 2024-ல், சர்வதேச குற்றவியல் நீதிமன்ற நீதிபதிகள் குழு ஒன்று, "பட்டினி போடுவதை ஒரு வகையான போராக பயன்படுத்தியதற்கு" இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கல்லன்ட் ஆகியோருக்கு "குற்றப் பொறுப்பு" இருப்பதாக கருத "நியாயமான காரணங்கள்" உள்ளன என்று முடிவு செய்தது. ஆனால் பட்டினி போடுவதை ஒரு போர்க்கருவியாக பயன்படுத்தியதாக கூறப்படுவதை இஸ்ரேல் மறுத்துள்ளது. இந்த குற்றச்சாட்டுகள் "பொய்யானவை மற்றும் அபத்தமானவை" என நெதன்யாகு தெரிவித்தார். அக்டோபர் 2023-ல் இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியதிலிருந்து காஸாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 59,000-ஐ தாண்டிவிட்டதாக ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காஸா சுகாதாரத்துறை சொல்கிறது. 1200 பேர் உயிரிழந்து 251 பேர் பிணைக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்ட ஹமாஸ் தலைமையிலான தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில் இஸ்ரேலின் தாக்குதல் தொடங்கியது. அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் ஹமாஸை பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளன. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cdr31kllpyxo

கறுப்பு ஜூலை இலங்கையின் வரலாற்றில் ஒரு சோகமான பகுதி - கனடா பிரதமர் கருத்து!

2 months ago
இலங்கையில் இனப்படுகொலையே நடக்கவில்லை, அப்படி கதைப்பவர்களுக்கு எதிராக சட்டம் பாயும் என்று ஒரு பகுதி அச்சுறுத்துகிறது. இன்னொரு பகுதி அதற்கான ஆதாரங்கள் போதாது நிறுவுவதற்கு என்று வாதாடுகிறது. இத்தனைக்கும் காரணமான தாய் நாடு என்று இன்றும் நம்மவர் நம்பும் நாடு மௌனம் காக்கிறது. ஆனால் எங்கோ இருந்து ஒரு நாடு, இங்கு நடந்தது இனப்படுகொலைதான், தமிழரை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் என்று உரத்து சொல்கிறது. வழமைபோல் இது தேர்தல் உத்தி என்று கடந்து போகுமா இலங்கை?

நாசா – இஸ்ரோ கூட்டுத்திட்டம் நிசார் விண்வெளியில் என்ன செய்யப் போகிறது? 5 கேள்வி – பதில்கள்!

2 months ago
பட மூலாதாரம்,NASA/JPL-CALTECH படக்குறிப்பு, நாசா, இஸ்ரோ கூட்டு முயற்சியில் உருவாகும் நிசார் செயற்கைக்கோள் ஜூலை 30க்குள் ஏவப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கட்டுரை தகவல் க.சுபகுணம் பிபிசி தமிழ் 6 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்க விண்வெளி அமைப்பான நாசா மற்றும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ இணைந்து முன்னெடுக்கும் கூட்டுத் திட்டமான நிசார் (NISAR) செயற்கைக்கோள் ஜூலை 30-ஆம் தேதிக்குள் விண்ணில் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாசா – இஸ்ரோ செயற்கைத் துளை ரேடார் (NASA-ISRO Synthetic Aperture Radar) என்று அழைக்கப்படும் இந்த செயற்கைக்கோள், எல்-பேண்ட், எஸ்-பேண்ட் ரேடார் அமைப்புகளைப் பயன்படுத்தும் முதல் செயற்கைக்கோள். இது ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து ஏவப்படும். நிசார் திட்டம், அமெரிக்கா மற்றும் இந்தியாவின் விண்வெளி ஒத்துழைப்பில் ஒரு முக்கியமான படி என்று இந்த ஆண்டின் தொடக்கத்தில் அதிபர் டிரம்ப் மற்றும் பிரதமர் மோதி தெரிவித்தனர். இந்தத் திட்டத்தின் கீழ் ஏவப்படும் செயற்கைக்கோள், விண்வெளியில் இருந்து பூமியில் மாறி வரும் நிலைமைகளைப் பற்றி விரிவான ஆய்வுகளை மேற்கொள்ளும். இது காடுகள், பனிக்கட்டிகள், பனிப்பாறைகள், பூமியின் சுற்றுச்சூழலில் ஏற்படும் மாற்றங்கள், கண்டத்தட்டுகளின் நகர்வுகள் ஆகியவற்றைக் கண்காணிக்கும். இந்தச் செயற்கைக்கோள் சேகரிக்கும் தரவுகள் இயற்கைப் பேரிடர்களுக்கு எதிர்வினையாற்றுவது, உள்கட்டமைப்பைச் சரிபார்ப்பது, விவசாயிகளுக்கு உதவுவது எனப் பலவிதங்களில் பயன்படும் என்றும் நேற்று வெளியான செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாசா, இஸ்ரோவின் கூட்டுத்திட்டமான இந்த நிசாரின் முக்கியத்துவம் என்ன? அதன்மூலம் இரு நாடுகளும் சாதிக்கப் போவது என்ன? இந்தத் திட்டம் பற்றிய ஐந்து முக்கிய கேள்விகளையும் அவற்றுக்கான பதில்களையும் இங்கு காண்போம். 1. நிசார் திட்டத்தின் நோக்கம் என்ன? எப்படிப் பயனளிக்கும்? பட மூலாதாரம்,NASA படக்குறிப்பு, நிசார் திட்டத்தின் கீழ் ஏவப்படும் செயற்கைக்கோள், பூமியின் தெளிவான ஒளிப்படங்களைப் பதிவு செய்யும். நாசாவும் இஸ்ரோவும், நிசாரை ஏவிய பிறகு, அது பூமியை மிகவும் விரிவாக, தெளிவாகப் படம் பிடிக்கும். அவற்றால் ஒரு அங்குல நிலத்தில் நிகழும் சிறிய அசைவுகளைக்கூட மிகத் துல்லியமாகக் காட்ட முடியும். அதாவது, ஒரு நிலத்தின் சிறு பகுதியளவு சில சென்டிமீட்டர் அளவுக்கு மூழ்கினாலும் அல்லது இடம் மாறினாலும், அந்த மாற்றத்தைக் கண்டறிய இதனால் முடியும். நிசார் செயற்கைக்கோள் 12 நாட்களுக்கு ஒருமுறை பூமியின் மேற்பரப்பை முழுவதுமாக ஸ்கேன் செய்யும். அதன்மூலம் கிடைக்கும் ஒளிப்படங்கள் மூலம், நிலநடுக்கம் போன்ற இயற்கைப் பேரிடர்களுக்கு முன்னரும் பின்னரும் நிலப்பரப்பில் நடக்கும் மாற்றங்களைப் பார்க்க முடியும் பனிப்பாறைகள் மற்றும் பனிக்கட்டிகளில் மெதுவாக நிகழும் நகர்வுகளைக் காணலாம் காடு உருவாக்கம் அல்லது காடழிப்பு என காடுகளில் ஏற்படும் மாற்றங்களைக் கண்காணிக்க இயலும் வளர்ச்சித் திட்டங்கள் போன்ற காடுகளில் ஏற்படும் மாற்றங்களையும் கண்காணிக்க முடியும் நிசார் திட்டத்தில் பயன்படுத்தப்படும் செயற்கைத் துளை ரேடார் (SAR) எனப்படும் சிறப்பு தொழில்நுட்பம்தான் இந்தத் துல்லியமான படங்களைப் பெற உதவுகிறது. 2. செயற்கைத் துளை ரேடார் (SAR) என்றால் என்ன? பட மூலாதாரம்,NASA படக்குறிப்பு, நிசார் செயற்கைக்கோளில் உள்ள ஆன்டனா 12 மீட்டர் நீளமுடையது. செயற்கைத் துளை ரேடார் அல்லது SAR என்பது ஆற்றல் சிக்னல்களை பூமியின் மேற்பரப்பை நோக்கி அனுப்பி, அவை மோதிய பிறகு அவற்றில் எவ்வளவு ஆற்றல் திரும்புகிறது என்பதை அளவிடுவதன் மூலம் தரவுகளைச் சேகரிக்கும் ஒரு செயல்முறை. வழக்கமான ரேடாரை போலவே, SAR மைக்ரோவேவ் சிக்னல்களை அனுப்பி, அவை மீண்டும் எதிரொலிப்பதைப் பதிவு செய்கிறது. ஆனால் இந்த செயற்கைக்கோள் நகரும்போது பல அளவீடுகளை எடுத்து மேம்பட்ட கணினி செயலாக்கத்தைப் பயன்படுத்தி அவற்றை இணைக்கிறது. இதுதான் இறுதி படங்களை மிகவும் தெளிவாக்குகிறது. இந்த தொழில்நுட்பம் இல்லாமல் அதே அளவுக்குத் தெளிவான ஒளிப்படங்களைப் பெறுவதற்கு, ஒரு செயற்கைக்கோளுக்கு 19 கிலோமீட்டர் அகலமுள்ள ரேடார் ஆன்டனா தேவைப்படும். நிசார் செயற்கைக்கோளின் ஆன்டனா சுமார் 12 மீட்டர் அகலம் கொண்டது. அதாவது ஒரு பேருந்து அளவுக்கு நீளமானது. ஆனால், இந்த செயற்கைக்கோள் மூலம் 10 மீட்டர் வரை சிறிய பகுதிகளைக்கூட மிகத் தெளிவாகவும், கூர்மையாகவும் படம் பிடிக்க முடியும். அதோடு, அந்தச் சிறிய நிலப்பகுதியில் நிகழும் சில சென்டிமீட்டர் அளவிலான மாற்றங்களைக்கூட இந்தத் தொழில்நுட்பத்தில் துல்லியமாக அடையாளம் காண முடியும். இதுகுறித்துப் பேசியுள்ள நாசாவின் முன்னாள் நிபுணர் சார்லஸ் எலாச்சி, "பூமியின் மாற்றங்களை மிகத் தெளிவாகவும் துல்லியமாகவும் காண SAR உதவுகிறது. பூமி எவ்வாறு செயல்படுகிறது, காலப்போக்கில் எவ்வாறு மாறுகிறது என்பதைப் பற்றி விஞ்ஞானிகள் அதிகம் தெரிந்துகொள்ள நிசார் உதவும்," என்று தெரிவித்துள்ளார். 3. செயற்கைத் துளை ரேடார் எவ்வாறு செயல்படும்? பட மூலாதாரம்,NASA/JPL-CALTECH படக்குறிப்பு, பூமியின் ஒளிப்படங்களை துல்லியமாகப் பதிவு செய்வதற்காக விஞ்ஞானிகள் சாமர்த்தியமான ஒரு தீர்வை கண்டுபிடித்தனர். சூரிய ஒளியைச் சார்ந்து செயல்படும் வழக்கமான கேமராக்களை போலன்றி, இது அதன் சொந்த சிக்னல்களை அனுப்பிப் படம் பிடிக்கிறது. இந்த சிக்னல்கள் மலைகள், காடுகள் அல்லது ஈரமான மண்பரப்பு ஆகியவற்றில் மோதிய பிறகு, மீண்டும் சென்சாரை நோக்கிப் பிரதிபலிக்கிறது. இந்தப் பிரதிபலிப்பு, தெளிவான படங்களை எடுப்பதற்கு உதவுகிறது. SAR-ஐ அண்டார்டிகாவின் பனிப்பாறைகள், எண்ணெய்க் கசிவுகள், ஈரநிலங்கள் ஆகியவற்றை விரிவாக ஆய்வு செய்யப் பயன்படுத்தலாம். இதன்மூலம் கிடைக்கும் ஒளிப்படத்தின் தரம், அதிலுள்ள ஆன்டனா எவ்வளவு பெரிதாக உள்ளது என்பதைப் பொறுத்தது. ஆன்டனா பெரிதாக இருந்தால் படம் தெளிவாக இருக்கும். ஆனால், ஒரு செயற்கைக்கோளில் 4 கி.மீ நீளம்கொண்ட ஒரு பிரமாண்ட ஆன்டனாவை வைப்பது சாத்தியமில்லை. எனவே, விஞ்ஞானிகள் இதற்கு சாமர்த்தியமான ஒரு தீர்வைக் கண்டுபிடித்தனர். ஒரு பிரமாண்ட ஆன்டனாவுக்கு பதிலாக சிறிய ஆன்டனாவையே பயன்படுத்தி, செயற்கைக்கோள் நகரும்போது அதிக அளவிலான அளவீடுகளைப் பதிவு செய்கிறார்கள். பின்னர் அந்த அளவீடுகளை மொத்தமாக இணைத்து ஒரு பிரமாண்ட ஆன்டனாவில் இருந்து கிடைத்தது போலச் செய்கிறார்கள். இதுவே, இந்தச் செயல்முறை 'செயற்கை' துளை ரேடார் என அழைக்கப்படுவதற்குக் காரணம். இதன்மூலம், இந்தச் செயற்கைக்கோள் பல சிறிய அளவீடுகளைப் பயன்படுத்தி, ஒரு பெரிய கட்டமைப்பின் தேவையின்றியே, அதில் கிடைக்கக்கூடிய தெளிவான, உயர்தர ஒளிப்படங்களை எடுக்கிறது. 4. நாசா, இஸ்ரோவின் கூட்டுத் திட்டம் விவசாயத்திற்கு எப்படி உதவும்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மண்ணின் ஈரப்பதம், பயிர்களின் ஆரோக்கியம் போன்ற தகவல்களை நிசார் செயற்கைக்கோள் மூலம் பெறுவது, விவசாயிகள் திட்டமிட்டுப் பயிரிடுவதற்கு உதவிகரமாக இருக்கும். இந்த செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்படும் துல்லியமான படங்கள், உலகெங்கும் உள்ள விவசாயிகளுக்கு உதவும் என்று நாசா குறிப்பிட்டுள்ளது. அதாவது, பயிர்களின் வளர்ச்சி, தாவரங்களின் ஆரோக்கியம், மண்ணின் ஈரப்பதம் போன்ற முக்கியமான தகவல்களை வழங்கும். இந்தத் தகவல்கள் விவசாயிகளுக்குப் பயிர்களை நடவு செய்வது, தண்ணீர்ப் பாய்ச்சுவது, அறுவடை செய்வது ஆகியவற்றுக்குச் சரியான காலகட்டத்தைப் புரிந்துகொள்ள உதவும். இது நேரத்தை மிச்சப்படுத்தவும், தண்ணீரைச் சிறப்பாகப் பயன்படுத்தவும் உதவுவதோடு, காலநிலை மாற்றங்களால் ஏற்படும் விளைவுகளை உணர்ந்து செயல்படவும் வழிவகுக்கும். "விவசாயத்தில் சரியான திட்டமிடல் முக்கியம். நடவு, பாசனம் என அனைத்திற்குமே சிறந்த நேரம் என்பதை அறிந்திருக்க வேண்டும். அதைத் துல்லியமாகத் தெரிந்துகொள்ள இந்த செயற்கைக்கோள் உதவிகரமாக இருக்கும்," என்று கூறியுள்ளார் நிசார் திட்டத்தில் பணியாற்றும் விஞ்ஞானி நரேந்திர தாஸ். நிசார் செயற்கைக்கோளில், பயிர்கள் மற்றும் மண்ணின் தன்மையை ஆராய ஒரு சிறப்பு ரேடார் பயன்படுத்தப்படுகிறது. அதன்மூலம், மண்ணிலும் தாவரங்களிலும் எவ்வளவு தண்ணீர் உள்ளது, பயிர்களின் ஆரோக்கியம் ஆகியவற்றைச் சொல்ல முடியும். இதன் மூலம் விவசாயிகள் தங்கள் பயிர்களில் வாரந்தோறும் நிகழும் மாற்றங்களைப் பார்க்கலாம். பயிர்கள் எவ்வாறு வளர்கின்றன என்பதைத் துல்லியமாகத் தெரிந்து கொள்வதன் மூலம் அரசுகள் அதிக நன்மை பயக்கும் விவசாயக் கொள்கைகளை வகுக்கலாம். எடுத்துக்காட்டாக, இதில் கிடைக்கும் தரவுகளைப் பயன்படுத்தி, நெல் எப்போது நடப்பட்டது, செடிகள் எவ்வளவு உயரமாக உள்ளன, அவை பூக்கின்றனவா என்பனவற்றை அறிய முடியும். இதில் நெல் வயல்களின் ஈரப்பதம் எவ்வளவு என்பதையும் தெரிந்துகொள்ள முடியும். அதன் மூலம், வயல் நிலம் வறண்டிருப்பதாகத் தோன்றினால் அல்லது பயிர்கள் ஆரோக்கியமற்று தோற்றமளித்தால், விவசாயிகள் தங்கள் அணுகுமுறையை விரைவாக மாற்றிக்கொள்ள முடியும். 5. நிசார் திட்டத்தில் நாசா, இஸ்ரோவின் பங்கு என்ன? நிசார் திட்டம் தொடர்பாக இஸ்ரோ, நாசா இடையே 2014 செப்டம்பர் 30ஆம் தேதி ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. 2024இல் விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில் செயற்கைக்கோள் உருவாக்கத்தில் ஏற்பட்ட தாமதம் காரணமாக அது நடக்காமல் போனது. கடந்த டிசம்பர் 2024இல் இந்திய அரசு வெளியிட்ட அறிக்கைப்படி, 12 மீட்டர் நீளமுள்ள ஆன்டனாவில் சில முன்னேற்றங்களைச் செய்வதற்காக நாசா வல்லுநர்கள் அதைக் கடந்த அக்டோபரில் அமெரிக்காவுக்கு எடுத்துச் சென்றனர். பட மூலாதாரம்,GETTY IMAGES அதோடு, செயற்கைக்கோளின் சில பாகங்கள் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டு இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த ஒப்பந்தத்தின்படி, ஒரு எல் பேண்ட் சிந்தெடிக் அபெர்ட்சர் ரேடார், ஒரு ஜிபிஎஸ் ரிசீவர், அறிவியல் தகவல்களுக்கான ஒரு தொடர்பு அமைப்பு, அதிக திறன் கொண்ட சாலிட்-ஸ்டேட் ரெக்கார்டர் (இது தான் செயற்கைக்கோளின் ஹார்ட் டிரைவ்) மற்றும் ஒரு பேலோட் டேட்டா சப் சிஸ்டம் ஆகியவற்றை நாசா வழங்கியுள்ளது. மறுபுறம், இந்தச் செயற்கைக்கோளில் எல் பேண்ட் எஸ்.ஏ.ஆர் மற்றும் எஸ் பேண்ட் எஸ்.ஏ.ஆர் என்கிற இரண்டு ரேடார் கருவிகள் இடம்பெற்றிருக்கும். இந்தக் கருவிகளை இஸ்ரோ தயாரித்துள்ளது. இந்தச் செயற்கைக்கோளை ஏவுவதற்கான அமைப்பு மற்றும் இதர விஷயங்களை இஸ்ரோ பராமரித்து வருகிறது. நிசார், ஜூலை 30ஆம் தேதி விண்ணில் ஏவத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியாவின் ஸ்ரீஹரிகோட்டாவில் அமைந்துள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து, ஜி.எஸ்.எல்.வி மார்க் 2 ராக்கெட் மூலம் இந்த செயற்கைக்கோள் பூமியின் சுற்றுப்பாதைக்கு அனுப்பப்படும். இந்த செயற்கைக்கோளின் மையப்பகுதி 5.5 மீட்டர் நீளமுடையது. இதில், 12 மீட்டர் நீளமுள்ள ரேடார் ஆன்டனா பொருத்தப்பட்டுள்ளது. அதோடு, 5.5 மீட்டர் நீளத்திற்கு இரண்டு சூரிய மின்தகடுகள் செயற்கைக்கோளில் பொருத்தப்பட்டுள்ளன. மூன்று ஆண்டுகள் செயல்படும் வகையில் திட்டமிடப்பட்டுள்ள நிசார் திட்டத்தில், நாசா 1.1589 பில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளது. இஸ்ரோ இந்தத் திட்டத்தில் 91.167 மில்லியன் டாலர் (ரூ.7.88 பில்லியன்) முதலீடு செய்துள்ளது. - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cvg12vxd5lyo

ஆடி அமாவாசை விரதம். உங்கள் பகுதியில் இன்று காத்தோட்டிக் காய் என்ன விலை.

2 months ago
ஆடி அமாவாசை விரதம். உங்கள் பகுதியில் இன்று காத்தோட்டிக் காய் என்ன விலை. Sangaravel Pirabashithitan Piraba மானிப்பாய் 1 காய் 150 ரூபாய் Roopa Muraleetharan வவுனியா ஒரு காய் 200/- Tharsana Kumar 1kg 4000 ரூபாய் point Pedro Kandeepan Rajathurai 10,150 Rupees. (London £25 per kg) Ramalingam Bhaskaran காத்தோட்டிக்காய் , இதன் சாதாரண விலை 50/=...70/= ஓகே. மேலதிகவிலை மடவேலை? காரணம் ஆடிஅமாவாசை அன்று மட்டுமே நாம் பாவிக்க உள்ளோம். We are not fools like others...in... marketing... Giritharasharma RN கிலோ 4600/- மருதனார்மடம் Sweeththa Suvi Suvi சாவகச்சேரி ஒரு காய் 500 Devi Sri எலுமிச்சை போல் உள்ளது இதான் விலை இவ்வளவா Dhayan Geeve Kilinochchi poonakary oru kaai 300 ரூபாய் Rasaiyah Naguleshwaran கல்மடுவில்400 ரூபாய் Suventhiny Pulenthirarasa One Rs 50 Rupan Rupan திருநெல்வேலி 1kg 10000/= K.K Shanthirakumar 400 ரூபா Thulasi Sana சாவகச்சேரில 1kg 6000Rs Sarogini Gnanasothiyan யாழ்ப்பாணத்தில் வியாபாரிகள் பேய்களாக மாறிவருகின்றனர். எல்லாம் அழிவுக்குத்தான். 1 காய் 500 ரூபாய் Kulam Kulam கொழும்பில் ஒரு காய் 15.00 ரூபா. Chinniah Satheeshkumar London -எட்டாயிரம் இலங்கை ரூபாய் Sivabalan Siva 200 வவுனியா நீங்கா நினைவுகள் யாழ்ப்பாணம் ஒரு காய் 450/= Nirojan Niroy Thellipalai 1kg 6000 Suriya Ruba 400 Panchalingam Thusha 100g 600/= Sundar Durai இது என்ன காய்...பார்த்ததில்லை.... தமிழ்நாடு, இந்தியா Sathees Thevarajah தவிச்ச முயல் அடிப்பதில் நாங்கள் கெட்டி காரர் தானே??? Sivanuja Kugasooriyar 250 Perampalam Kanagaratnam தவிச்சமுயல். Sangavy Sangavy Sangavy 100 Jeyamani Sivanadarajah உடுப்பிட்டியில் ஒரு காய் 100/= நம்ம யாழ்ப்பாணம்

கறுப்பு ஜூலை இலங்கையின் வரலாற்றில் ஒரு சோகமான பகுதி - கனடா பிரதமர் கருத்து!

2 months ago
தமிழ் மக்களிற்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட இனப்படுகொலை குறித்த புதிய ஆதாரங்கள் வெளியாகியுள்ள நிலையில் கறுப்பு ஜூலையின் வலிகள் மீண்டும் எதிரொலிக்கின்றன - கனடாவின் எதிர்கட்சி தலைவர் Published By: RAJEEBAN 24 JUL, 2025 | 11:23 AM தமிழ் மக்களிற்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட இனப்படுகொலை குறித்த புதிய ஆதாரங்கள் வெளியாகியுள்ள நிலையில் கறுப்பு ஜூலையின் வலிகள் மீண்டும் எதிரொலிக்கின்றன என கனடாவின் கென்சவேர்ட்டிவ் கட்சியின் தலைவர் பியர் பொய்லியர் தெரிவித்துள்ளார். கறுப்பு ஜூலையை குறிக்கும் முகமாக வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ள அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, தமிழ் பாரம்பரியத்தை கொண்ட கனேடியர்கள் கறுப்பு ஜூலையை நினைவு கூருவதற்கு தயாராகும் இவ்வேளையில் நாங்கள் மீண்டுமொரு முறை இலங்கையில் தமிழர்களிற்கு எதிரான வன்முறையின் ஈவிரக்கமற்ற பாரம்பரியத்தை எதிர்கொண்டுள்ளோம். இலங்கையில் செம்மணி மனித புதைகுழி அகழ்வுகள் ஆரம்பமாகி இந்த வாரத்துடன் ஒரு வாரமாகின்றது. இந்த மனித புதைகுழியிலிருந்து கைக்குழந்தைகள் என கருதப்படும் உடல்கள் உட்பட தமிழர்களின் பெருமளவு உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. தமிழ் மக்களின் உயிர்கள் கௌவரத்திற்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட இனப்படுகொலை குறித்த புதிய ஆதாரங்கள் வெளியாகியுள்ள நிலையில் கறுப்பு ஜூலையின் வலிகள் மீண்டும் எதிரொலிக்கின்றன. வழமையான கட்டுமானபணியாக ஆரம்பித்தது - நடுங்கவைக்கும் கண்டுபிடிப்பாக மாறியது- தொழிலாளர்கள் நிலத்திற்கடியில் மனித உடல்களை கண்டுபிடித்தனர். நீதிமன்ற உத்தரவுகள் காரணமாக தற்போது ஆழமற்ற மனித புதைகுழிகள், கண்கள் கட்டப்பட்டு கொலை செய்யப்பட்டவர்கள், சிறுவர்கள் தனிப்பட்ட ரீதியில் எதிகொண்ட பாதிப்புகள் - விளையாட்டுப்பொருட்கள், புத்தகபைகள், ஆடைகள் - தெரியவந்துள்ளன. ஈவிரக்கமற்ற தன்மை ஆழம் காணமுடியாதது, தமிழ் கனேடியர்கள் தங்கள் இதயங்களில் பல தசாப்தங்களாக அறிந்திருந்த விடயங்களை - அதாவது இலங்கையின் உள்நாட்டு போரின் போது தங்களின் உறவுகள் காணாமல்போவது தற்செயலாக இடம்பெற்றது இல்லை என்பதை- செம்மணி மனித புதைகுழி நிரூபித்துள்ளது. அவர்கள் கொண்டு செல்லப்பட்டார்கள் - மௌனமாக்கப்பட்டார்கள் - இரகசியமாக புதைக்கப்பட்டார்கள். உயிர்தப்பியவர்களிற்கு உறுதியான ஆதரவை வழங்கவேண்டிய, பாரிய அநீதிகள் எங்கு இடம்பெற்றாலும, நீதிக்கான தேடலில் உறுதியாகயிருக்கவேண்டிய தார்மீக பொறுப்பு கனடாவிற்குள்ளது. மிக நீண்டகாலமாக இந்த சுமையை சுமக்கும் இங்குள்ள மற்றும் உலகெங்கிலும் உள்ள தமிழர்களிற்கு ஆதரவாக இருக்கவேண்டிய பொறுப்பும் உள்ளது. https://www.virakesari.lk/article/220788

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி விடுதலை விருட்சம் நாட்டும் நிகழ்வு

2 months ago
அரசியல் கைதிகளின் விடுதலைக்கான “விடுதலை நீர்” சேகரிப்பு கொழும்பில் 24 JUL, 2025 | 10:36 AM குரலற்றவர்களின் குரல் அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் விடுதலைக்கான “விடுதலை நீர்” சேகரிப்பு கொழும்பில் இடம்பெற்றது. சேகரிக்கப்பட்ட நீரை மக்கள் போராட்ட முன்னணியின் ராஜ்குமார் ரஜீவ்காந் யாழ்ப்பாணத்தில் இன்று கையளிப்பார் இந்தப் போரட்டத்துக்கான எமது ஒத்துழைப்பாக சேர்க்கப்பட்ட இந்த நீரை யாழ் கிட்டுப்பூங்காவில் இடம்பெறும் நிகழ்வில் நான் கையளிப்பேன். நீண்டகாலமாக சிறையில் வாடும் அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலையாக வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார் https://www.virakesari.lk/article/220780

புனர்வாழ்வு பெற்ற விடுதலைப் புலி உறுப்பினர் கொழும்பில் துப்பாக்கியுடன் கைது

2 months ago
2009´ல் இவர் ஆறு வயது சிறுவன். தற்போது புனர்வாழ்வு அளிக்கப் பட்ட முன்னாள் போராளியாம். கேட்கிறவன் கேனையன் என்றால்......

அடுத்த போர்? தாய்லாந்து - கம்போடியா இடையே பீரங்கி சண்டை.

2 months ago
தாய்லாந்துக்கும் – கம்போடியாவுக்கும் இடையிலான எல்லைப் பகுதியில் இன்று (24) அதிகாலையில் மோதல்கள் வெடித்ததாக இரு நாடுகளின் இராணுவங்கள் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளன. பல வாரங்களாக நிலவி வந்த பதற்றத்திற்குப் பிறகு, முதலில் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக இரு நாட்டு இராணுவங்களும் ஒன்றின் மீது மற்றொன்று பழி சுமத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த தாக்குதலில் தாய்லாந்து நாட்டவர்கள் இருவர் கொல்லப்பட்டதாகவும், இரு தாய்லாந்து படையினர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. சர்ச்சைக்குரிய எல்லைப்பகுதியில் அமைந்துள்ள டா மொயின் தாம் கோயிலுக்கு அருகிலுள்ள பகுதியில் கம்போடியப் படைகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தாய்லாந்து இராணுவம் வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கம்போடியா ஒரு கண்காணிப்பு வானூர்தியைப் பயன்படுத்திய பின்னர் கனரக ஆயுதங்களுடன் படைகளை அப்பகுதிக்கு அனுப்பியதாகவும் தாய்லாந்து இராணுவம் மேலும் தெரிவித்துள்ளது. கம்போடிய பாதுகாப்பு அமைச்சின் செய்தித் தொடர்பாளர், தாய்லாந்துப் படைகளின் தூண்டுதலற்ற அத்துமீறல் இருந்ததாகவும் கம்போடியப் படைகள் தற்காப்புக்காக பதிலடி கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. Vaanam.lk

1983 கறுப்பு ஜூலை; பாதுகாப்பான எதிர்காலத்துக்காக கடந்த காலத்தை நினைவுகூருதல்

2 months ago
இந்த யோசனை உண்மையில் செயற்பட வேண்டுமானல் இனிப் பிறக்கப்போகும் சிங்களப் பிள்ளைகள் காடையர்களாக இல்லாது மனிதர்களாகப் பிறக்கவேண்டும். இருக்கும் சிங்களக் காடையர்கள் மனிதர்களாக மாறவேண்டும். அதுவரை யோசனை விழலுக்கு இறைத்த நீ்ர்தான். இது தவறான இடுகை. உலகில் மிகவும் சாதுவான உயிரினங்கள்கூட ஆபத்து வரும்போது அதிலிருந்து தப்புவதற்கு வீறுகொண்டு எழவேசெய்யும். இலங்கை சுதந்திரம் அடைந்தபின்னர் ஆட்சிக்கு வந்த சிங்கள அரசுகளும், அந்த இனத்தின் புத்த பிக்குகளும், இலங்கையில் தமிழர்களை அழிப்பதற்கு மேற்கொண்ட செயற்பாடுகளே இலங்கை இராணுவத்திற்கு எதிரான தாக்குதலைத் தமிழர்கள் மேற்கொள்ள வைத்தது.

ஐரோப்பாவில் விமானி உரிமம் பெற்ற மன்னார் இளைஞன்!

2 months ago
எனது இரண்டாவது மகன் இதில் பறக்க விரும்பி படிக்க கேட்டான். மறுத்து விட்டேன். அதற்கு நான் சொன்ன காரணம் அவனுக்கு அதிசயமாக இருந்தது. அப்பா இப்படி எல்லாமா யோசிப்பீங்க என்றான். இப்பொழுது வேறு துறையில் படித்து குடும்பம் குழந்தை என்று நல்ல நிலையில் உள்ளான். இப்ப அப்பா அன்று சொன்னது சரி என்று உணர்ந்து உள்ளான். நான் சொன்னது : விமானிகளுக்கு குடும்பம் பிள்ளை குட்டிகள் சரிவராது. நீ படித்து திருமணம் செய்து பேரப் பிள்ளைகளை பெத்து தரும் எல்லைக்குள் இருந்தால் போதும் என்பது.

ஐரோப்பாவில் விமானி உரிமம் பெற்ற மன்னார் இளைஞன்!

2 months ago
பிரான்சில் ஒரு ஈழத் தமிழரின் மகன் பிரஞ்சு இராணுவத்தில் தாக்குதல் விமானத்தின் விமானியாக இருந்தார். பெயர் தெரியாது, சில வருடங்களுக்கு முன் இறந்து விட்டார்.
Checked
Sun, 09/28/2025 - 06:35
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed