புதிய பதிவுகள்2

நாட்டை கட்டியெழுப்பும் தேசிய நிதியத்திற்கு ‘Rebuilding Sri Lanka’ பல்வேறு அமைப்புகள் நன்கொடை

1 month 3 weeks ago
‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு இலங்கை வங்கி 500 மில்லியன் ரூபா நன்கொடை Published By: Vishnu 31 Dec, 2025 | 08:00 PM டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களின் அன்றாட வாழ்க்கையையும், பேரழிவால் பாதிக்கப்பட்ட நாட்டையும் மீண்டும் கட்டியெழுப்ப உதவும் வகையில் ஆரம்பிக்கப்பட்ட ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு இலங்கை வங்கி 500 மில்லியன் ரூபா நன்கொடையாக வழங்கியுள்ளது. இதற்கான காசோலையை இலங்கை வங்கியின் தலைவர் காவிந்த டி சொய்சா ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் கையளித்தார். இலங்கை வங்கியைப் பிரதிநிதித்துவப்படுத்தி, பதில் பொது முகாமையாளர்/பிரதான நிறைவேற்று அதிகாரி வை.ஏ. ஜயதிலக, பிரதான நிதி அதிகாரி எம்.பி. ருவன் குமார மற்றும் பிரதான சந்தைப்படுத்தல் அதிகாரி சமீர தில்ஷான் லியனகே ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/234890

யாழில் 3012 குடும்பங்களுக்கு மலசலக்கூட வசதி இல்லை!

1 month 3 weeks ago
ஊர் ஒன்று கூடியிருக்கிறது. அடுத்தது என்ன தேரை ஓன்று கூடி இழுப்பதுதானே. குமாரசாமி, நீங்கள் குறிப்பிட்ட நூறு பேர்களோடு நூற்றியொன்றாக என்னையும் சேர்ததுக் கொள்ளுங்கள். “நாட்டுக்குத் தேவையெல்லாம் நாம் தேடலாம்”🙏

இந்திய- தமிழீழப் போர் மூள முன்னர் இந்தியப்படை செய்த நாசங்கள்

1 month 3 weeks ago
@goshan_che @Sasi_varnam @ஈழப்பிரியன் நீங்கள் மூவரும் கூறியதை வைத்து மாவீரர் பட்டியலினுள் தேடிப் பார்த்தேன். மொத்தம் 16 போராளிகள் புளட், இ.என்.டி.எல்.எஃவ்., மற்றும் ரெலோ ஆகிய தேசவிரோத கும்பல்களால் வீரச்சாவடைந்துள்ளனர். அவர்களில் புளட் என்ற கூலிப்படையைச் சேர்ந்தவர்களாலையே அதிகளவான போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர். இவர்கள் அனைவரும் ஓகஸ்ட் 5ம் திகதி புலிகள் தமது ஆயுதங்களை ஒப்படைத்த பின்னரே - ஆயுதமற்றவர்களா பயணித்த போது - இவ்விந்திய கூலிப்படைகளால் தேசத்திற்கு விரோதமான முறையில் கொல்லப்பட்டனர். புலிகள் ஆயுதங்களைக் களைந்த பின்னர் இவர்களிற்கு இந்தியப் படையினர் ஆயுதங்களை வழங்கி புலிகளைக் கொல்ல தூண்டிவிட்டுள்ளனர். ஆக மொத்ததில் இந்தியா நரி வேலை செய்துள்ளது. இதையும் அறியாமல் இந்த இந்தியக் கூலிப்படைகள் தமது சொந்த இனத்தின் விடுதலைக்காகப் போராடிய வீரர்கள் ஆயுதமற்றவர்களாக இருந்தபோது கொன்றுள்ளனர். வெட்கித் தலைகுனிய வேண்டிய செயல்! இவர்களை பின்னாளில் புலிகள் வேட்டையாடியதில் எந்தத் தவறும் இல்லை. (இவர்கள் தவிர இன்னும் 6 போராளிகள் இதே காலகட்டத்தில் வீரச்சாவடைந்துள்ளனர். எனினும் அவர்களில் நால்வர் எதிர்பாராத வெடி நேர்ச்சிகளிலும் இருவர் தமிழீழக் கடற்பரப்பில் சிறிலங்காக் கடற்படையுடனான சமரிலும் வீரச்சாவடைந்துள்ளனர். மொத்தம் 22, ஈழப்பிரியன் அவர்களின் கணக்குச் சரியே.) இந்திய நரிவேலையால் மாவீரரான போராளிகள்: வீரவேங்கை யோகன் - 16.08.1987 வேப்பங்குளம் பகுதியில் புளொட் கும்பலுடன் ஏற்பட்ட மோதலில் வீரச்சாவு வீரவேங்கை அருச்சுனா, வீரவேங்கை ரஞ்சன், வீரவேங்கை கில்மன் - 26.08.1987 நானானட்டான் பகுதியில் புளொட் கும்பலின் வெறியாட்டத்தில் வீரச்சாவு வீரவேங்கை டென்சில் - 02.09.1987 பெரியபண்டிவிரிச்சான் பகுதியில் புளொட் கும்பலின் வெறியாட்டத்தில் வீரச்சாவு கப்டன் தனம், 2ம் லெப்டினன்ட் கண்ணன் - 04.09.1987 குருமன்காட்டுச் சந்தியில் புளொட் கும்பல் நடத்திய தாக்குதலில் வீரச்சாவு 2ம் லெப்டினன்ட் கைலை, வீரவேங்கை இரத்தினம் (சிவகுமார்) - 04.09.1987 பன்றிக்கெய்தகுளம் பகுதியில் புளொட் கும்பல் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் வீரச்சாவு வீரவேங்கை அமீர் (அமல்) - 07.09.1987 குளவிசுட்டான் பகுதியில் புளொட் கும்பல் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் வீரச்சாவு லெப்டினன்ட் கொலின்ஸ் (லூக்) - 07.09.1987 தம்பனை பகுதியில் புளொட் கும்பல் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு வீரவேங்கை ராஜேந்தர் - 12.09.1987 கிளிநொச்சி பகுதியில் ஈ.என்.டி.எல்.எவ் கும்பல் நடத்திய தாக்குதலில் வீரச்சாவு வீரவேங்கை அமலதாஸ் - 26.09.1987 ரெலோ கும்பல் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் வீரச்சாவு வீரவேங்கை தாஸ் - 02.10.1987 கற்கபுரம் பகுதியில் புளொட் கும்பலின் தாக்குதலில் வீரச்சாவு வீரவேங்கை பாபு - 07.10.1987 கற்கபுரத்தில் புளொட் கும்பல் மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவு 2ம் லெப்டினன்ட் விக்கி - 08.10.1987 10ம் வாய்க்கால் பகுதியில் ஈ.என்.டி.எல்.எவ் கும்பல் மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவு

ஆறாம் தர ஆங்கில பாடக் கையேட்டில் ஓரினச்சேர்க்கை உள்ளடக்கம்: ஆசிரியர் சங்கம் கடும் கண்டனம்

1 month 3 weeks ago
ஆறாம் தர ஆங்கில பாடக் கையேட்டில் ஓரினச்சேர்க்கை உள்ளடக்கம்: ஆசிரியர் சங்கம் கடும் கண்டனம் 31 Dec, 2025 | 07:24 PM நாட்டின் ஒழுக்க விழுமியங்களையும் கலாசாரத்தையும் சீரழிக்கும் வகையில், ஆறாம் தர மாணவர்களுக்கான ஆங்கில மொழிப் பாடக் கையேட்டில் ஓரினச்சேர்க்கை தொடர்பான விடயங்கள் சூட்சுமமாகப் புகுத்தப்பட்டுள்ளதாக அகில இலங்கை ஐக்கிய ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பூஜ்ய யெவெல பஞ்ஞாசேகர தேரர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கொழும்பில் அமைந்துள்ள அகில இலங்கை ஐக்கிய ஆசிரியர் சங்கத்தின் தலைமை காரியாலயத்தில் இன்று புதன்கிழமை (31) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் ஊடகங்களுக்கு மேலும் கூறியதாவது, ஒரு ஒழுக்கமான நாட்டில் நிலவ வேண்டிய நற்பண்புகள் மற்றும் கல்வி முறைமை குறித்தே நான் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றேன். கடந்த காலங்களில் திட்டமிட்ட முறையில் பாலினக் கல்வி என்ற பெயரில் ஓரினச்சேர்க்கையை ஊக்குவிக்கும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக ஆய்வாளர்கள் மற்றும் பொதுமக்களால் பலமுறை குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இவ்வாறான நிலையில், தற்போது ஆறாம் தர மாணவர்களுக்கான ஆங்கிலப் பாடக் கையேட்டை வெளியிட்டு, அதனை இணையத்தில் பதிவேற்றியுள்ளனர். அத்துடன் மேலதிகக் கற்றலுக்காக 'சமதியாவ' எனும் இணையத்தளத்தைப் பயன்படுத்துமாறு ஒரு வழிகாட்டி இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த இணையத்தளத்தின் ஊடாகச் சிறுவர்களுக்கு ஓரினச்சேர்க்கை கல்வி தொடர்பான கருத்துக்களே திணிக்கப்படுகின்றன. இதன் பின்னணியில் பாரிய பொருளாதார இலாபங்கள் இருக்கலாம் எனவும், சிறுவர்களை இவ்வாறான விடயங்களில் ஆர்வம் கொள்ளச் செய்யும் ஒரு நுட்பமான தந்திரமே இது எனவும் நாம் கருதுகின்றோம். இது எமது நாட்டின் பண்பாட்டுக்கும் ஒழுக்க விழுமியங்களுக்கும் முற்றிலும் முரணான செயலாகும். ஆகவே, குறித்த பாடக் கையேட்டை உடனடியாக மீளப்பெற வேண்டும். முறையான தெளிவுபடுத்தல்கள் இன்றி மாணவர்களை இவ்வாறான தளங்களுக்கு வழிநடத்தியவர்கள் யாரென உடனடியாக விசாரணை நடத்தப்பட வேண்டும். 'நாங்கள் இதனை வேறொரு நிறுவனத்திடம் ஒப்படைத்துவிட்டோம்' என்று கூறிவிட்டுப் பொறுப்பில் இருந்து எவரும் நழுவிவிட முடியாது என அவர் மேலும் சுட்டிக்காட்டினார். https://www.virakesari.lk/article/234877

50 இந்திய ரோலர்கள் வந்தால் கடற்படையினர் ஒரு ரோலரையே பிடிக்கின்றனர்!

1 month 3 weeks ago
மீன் வருகின்ற பாதையை தடுப்பதால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது - மீனவர் சங்க பிரதிநிதி தெரிவிப்பு! 31 Dec, 2025 | 05:00 PM ஊர்காவற்துறைக்கு செல்கின்ற நீரோட்டம் கீழ் கடலில் இருந்து தங்குவாய்க்கால் ஊடாகத்தான் வரும். அவை எல்லாம் தற்போது தடைப்பட்டுள்ளது. இந்த தடைகளை நீக்கினால் தான் மீன் உற்பத்திகள் அதிகரிக்கும் என நாங்கள் பலமுறை கூறினோம். அதற்கான நடவடிக்கைகள் இன்னமும் மேற்கொள்ளப்படவில்லை என அம்பாள் கடற்றொழிலாளர் சங்கத் தலைவர் இராஜச்சந்திரன் தெரிவித்தார். நேற்றையதினம் நடைபெற்ற காரைநகர் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், இம்முறை இறால் உற்பத்தியானது 10 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. வழமையாக மாரி காலத்தில் வாழ்வாதாரத்தை பெருக்கிக்கொள்ளுகின்ற எங்களுக்கு இம்முறை எதுவும் கிடைக்கவில்லை. இதற்கு காரணம் தடை செய்யப்பட்ட தொழில் முறைகளே. தடை செய்யப்பட்ட தொழில் முறைகள் குறித்து பலமுறை கடற்றொழில் அமைச்சரிடம் கூறினோம். 2026ஆம் ஆண்டுக்குள் தடை செய்யப்பட்ட தொழில்களை அகற்றுவதாக அவர் உத்தரவாதமளித்தார். ஆனால் இன்னமும் அது தீர்க்கப்படவில்லை. எங்கள் பகுதியில் 10 கடற்றொழில் சங்கங்கள் உள்ளன. அவற்றில் 4 சங்கங்கள் தரவைக் கடலை நம்பியும், 10 சங்கங்கள் ஆழ்கடலை நம்பியும் தொழில் செய்கின்றன. ஆழ்கடல் தொழில் செய்யும் மீனவர்களின் வலைகள் உள்ளிட்ட தொழில் முதல்கள் இந்தியன் இழுவைப் படகுகளால் நாசம் செய்யப்படுகின்றன. 50 ரோலர்கள் வந்தால் கடற்படையினர் ஒரு ரோலரையே பிடிக்கின்றனர். அவர்களது கப்பல் பெரிய கப்பல்கள் என்றும், அதனை பிடிப்பதற்கு பெரிய கப்பல்கள் தங்களிடம் இல்லை என்றும் கடற்படையினர் கூறுகின்றனர். இவ்வாறான பிரச்சினைகளால் படிப்படியாக கடற்றொழிலாளர்கள் எண்ணிக்கை குறைவடைதல், அவர்கள் வெளிநாடுகளுக்கு செல்லல், அந்த பிரதேசங்களை விட்டு செல்லல் போன்ற துன்பியல் சம்பவங்கள் இடம்பெறுகின்றன. கடற்றொழிலாளர் வர்க்கமே இல்லாமல் போகின்ற சூழல் ஏற்படுத்தப்படுகிறது என்றார். இது குறித்து நீரியல்வள திணைக்கள அதிகாரி கருத்து தெரிவிக்கையில், அந்த பாலத்தில் இருந்து 50 மீட்டர்கள் தொலைவில் கொடி கட்டினோம். அதற்குள் எவரும் வலை விட வேண்டாம் என்று நாங்கள் சங்கங்களுக்கு கடிதமும் வழங்கினோம். அப்படி இருந்தும் அதற்குள் வலைகளை விடுகின்றார்கள். நவம்பர் மாதம்தான் பருவகாலம். ஆகையால் நவம்பர் மாதம் அங்கு இருக்கின்ற வலைகளை அகற்றுவதற்கு திட்டமிட்டோம். இருப்பினும் டித்வா புயலால் அந்த வலைகளை அகற்ற முடியவில்லை. ஜனவரி அல்லது பெப்ரவரிக்குள் இவற்றை சீர் செய்வோம் என்றார். https://www.virakesari.lk/article/234873

2026 புத்தாண்டு நிகழ்வுகள்

1 month 3 weeks ago
நியூசிலாந்து அவுஸ்திரேலியா Australia New Year Cerebration: Sydney Welcomes 2026 with Jaw-Dropping Midnight Fireworks | AQ1G சிட்னி துறைமுகத்தில் கொண்டாடப்பட்ட புத்தாண்டு பட மூலாதாரம்,EPA ஆஸ்திரேலியாவின் சிட்னி துறைமுகத்தில் வானவேடிக்கைகளோடு புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்றன. சமீபத்தில் சிட்னி கடற்கரைத் தாக்குதலைத் தொடர்ந்து நகரம் முழுவதும் ஆயுதம் ஏந்திய காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார்கள். அந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூறும் விதமாக புத்தாண்டு பிறப்பதற்கு ஒரு மணி நேரம் முன்பு மக்கள் அஞ்சலி செலுத்தினார்கள். பட மூலாதாரம்,DAN HIMBRECHTS/EPA/Shutterstock பிரதமர் ஆன்டணி ஆல்பனீஸி தனது 'நியூ இயர்ஸ் ஈவ்' உரையில், வழக்கமாகப் புத்தாண்டின் தொடக்கத்தில் உணரப்படும் மகிழ்ச்சியானது, கடந்த ஆண்டின் சோகத்தால் தணிக்கப்பட்டதாக அவர் கூறினார். https://www.bbc.com/tamil/live/c70r0qyrrk7t?post=asset%3A9f37d491-1247-4e44-b997-22459aa626d3#asset:9f37d491-1247-4e44-b997-22459aa626d3

தையிட்டியில் கட்டம் கட்டமாக விடுவிக்கப்படவுள்ள காணிகள்!

1 month 3 weeks ago
தையிட்டியில் கட்டம் கட்டமாக விடுவிக்கப்படவுள்ள காணிகள்! Dec 31, 2025 - 03:57 PM தையிட்டி திஸ்ஸ விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளர்களுடன் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் இன்று (31) மு. ப 10.00 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்கள். இக்கலந்துரையாடலில் கருத்துத் தெரிவித்த அரசாங்க அதிபர், தையிட்டி காணி தொடர்பாக, நீண்டகாலமாக தீர்க்கப்படாத விடயங்களுக்கான ஆரோக்கியமான கலந்துரையாடலாக அமைய வேண்டும் என்பதே இக் கலந்துரையாடலின் நோக்கம் எனத் தெரிவித்து, கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுடன் அடுத்த கட்டம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடினார். இதன்போது கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் - ஏகமனதாக திஸ்ஸ விகாரை அமைந்துள்ள காணியின் மட்டுப்பாடான அளவில் எல்லையிட்டு, அதனைத் தவிர்த்து ஏனைய காணிகளை முதல் கட்டமாக விடுவிக்க இணக்கப்பாட்டினை தெரிவித்தனர். இதன்போது அரசாங்க அதிபர் கட்டம் கட்டமாக காணிகளை விடுவிக்க, விகாராதிபதியின் ஒருமித்த சம்மதத்துடன் விடுவிக்க முடியும் எனத் தெரிவித்து, காணி உரிமையாளர்களுடன் விடுவிக்கக் கூடிய காணிகளின் சாத்தியப்பாடுகள் மற்றும் எல்லைகள் தொடர்பாக ஆராய்ந்தார். இக் கலந்துரையாடல் ஆக்கபூர்வமான நடைபெற்றதுடன், கட்டம் கட்டமாக காணிகளை விடுவிப்பதற்கு அரசாங்க அதிபர் தொடர் நடவடிக்கைகளை எடுப்பதற்கு காணி உரிமையாளர்கள் ஏகமனதாக சம்மதம் தெரிவித்தார்கள். இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி), தெல்லிப்பளை பிரதேச செயலாளர் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர். -யாழ். நிருபர் பிரதீபன்- https://adaderanatamil.lk/news/cmjtvgj3y03cfo29nwqune9sh

உலக மேசைப்பந்து தரவரிசையில் முதலிடம் பெற்று தாவி சமரவீர வரலாற்றுச் சாதனை

1 month 3 weeks ago
சர்வதேச மேசைப்பந்தாட்ட தரவரிசை: முதலிடத்தைப் பிடித்தார் இலங்கையின் இளம் நட்சத்திரம் டாவி Published By: Vishnu 31 Dec, 2025 | 06:56 PM (நெவில் அன்தனி) சர்வதேச மேசைப்பந்தாட்ட சம்மேளனத்தினால் கடைசியாக டிசம்பர் மாதம் 29ஆம் திகதி வெளியிடப்பட்ட மேசைப்பந்தாட்ட வீரர்களுக்கான உத்தியோகபூர்வ தரவரிசையில் 11 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் பிரிவில் கல்கிஸ்ஸை சென். தோமஸ் மாணவன் டாவி சமரவீர முதலாம் இடத்தைப் பிடித்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். இலங்கை மேசைப்பந்தாட்ட வரலாற்றில் முன்னொருபோதும் இல்லாத வகையில் இந்த மைல்கல் சாதனையை டாவி சமரவிக்ரம படைத்துள்ளார். எந்தவொரு வயது பிரிவிலும், எந்தவொரு பாலினத்திலும் உலக தரவரிசையில் இலங்கை வீரர் ஒருவர் உயரிய இடத்தை எட்டிப் பிடித்துள்ளது இதுவே முதல் தடவையாகும். இத்தாலியின் பெல்லா இத்தாலியா EFA விலேஜ் ஸ்போர்ட்ஸ் மண்டபத்தில் அண்மையில் நடைபெற்ற உலக மேசைப்பந்தாட்ட இளைய போட்டியாளர் லிஞ்ஞானோ 2025 போட்டியில் (WTT Youth Contender Lignano 2025) சகல போட்டிகளிலும் வெற்றியீட்டி தங்கப் பதக்கத்தை சுவீகரித்ததன் மூலம் டாவி சமரவிக்ரம தரவரசையில் முதலாம் இடத்தைப் பிடித்துள்ளார். இந்த வெற்றியுடன் டாவி சமரவிக்ரம 200 தரவரிசை புள்ளிகளைப் பெற்று முதல் இடத்தில் இருக்கிறார். கடந்த மாதம் வெளியிடப்பட்ட உலக மேசைப்பந்தாட்ட தரவரிசையில் டாவி சமரவிக்ரம 3ஆம் இடத்தில் இருந்தார். அப்போது, 'நான் அடுத்து வருடம் உலக தரவரிiசியல் முதலிடத்தைப் பிடிப்பேன்' என டாவி சமரவிக்ரம நம்பிக்கையுடன் கூறியிருந்தார். அவர் 11 வயதுக்குட்பட்ட பிரிவுக்கான உலக தரவரிசையில் முதலிடத்தில் இருந்தவாறு புத்தாண்டை ஆரம்பிக்கவுள்ளார். இப்போது 2 இடங்கள் முன்னேறி முதலிடத்தை அடைந்து சென். தொமஸ் கல்லூரிக்கும் இலங்கைக்கும் பெருமை தேடிக்கொடுத்துள்ளார். சென் தோமஸ் கல்லூரியில் இந்த வருட முற்பகுதியில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் வருடத்தின் மிகச் சிறந்த விளையாட்டு சாதனையாளர் என்ற விருதை டாவி சமரவிக்ரம வென்றெடுத்தார். இப் பாடசாலையின் வரலாற்றில் மிக இள வயதில் இந்த விருதை வென்றெடுத்த முதலாவது வீரர் டாவி சமரவிக்ரம ஆவார். https://www.virakesari.lk/article/234886

'முழு நாடுமே ஒன்றாக - தேசிய செயற்பாடு' - 971 சந்தேக நபர்கள் கைது

1 month 3 weeks ago
“முழு நாடுமே ஒன்றாக” போதைப்பொருள் சுற்றிவளைப்பில் 885 பேர் கைது! 31 Dec, 2025 | 02:25 PM ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நாடளாவிய ரீதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (30) மேற்கொள்ளப்பட்ட “முழு நாடுமே ஒன்றாக” என்ற தேசிய செயற்பாட்டின் போதைப்பொருள் சுற்றிவளைப்பின் போது 885 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த போதைப்பொருள் சுற்றிவளைப்பின் போது 888 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன்போது, 767 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும், 527 கிராம் ஐஸ் போதைப்பொருளும், 01 கிலோ 056 கிராம் கொக்கேயின் போதைப்பொருளும், 25 கிலோ 808 கிராம் கஞ்சா போதைப்பொருளும், 16591 கஞ்சா செடிகளும், 066 கிராம் ஹசீஸ் போதைப்பொருளும், 1210 போதை மாத்திரைகளும், 101 கிராம் 320 மில்லிகிராம் மதனமோதக மாத்திரைகளும், 060 கிராம் மாவா போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளன. கைதுசெய்யப்பட்டவர்களில் 18 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/234837

2026 புத்தாண்டு நிகழ்வுகள்

1 month 3 weeks ago
புத்தாண்டை வரவேற்றது நியூசிலாந்து உலகின் பல்வேறு பகுதிகள் புத்தாண்டை வரவேற்கத் தொடங்கியிருக்கின்றன. பசிஃபிக் பெருங்கடலில் அமைந்திருக்கும் கிரிடிமதி (Kritimati) தீவு முதல் இடமாக 2026-ஆம் ஆண்டை வரவேற்றது. இந்த இடம் கிரிபட்டி குடியரசின் ஒரு பகுதி. இங்குதான் எப்போதுமே புத்தாண்டு முதலில் பிறக்கிறது. படக்குறிப்பு,கிரிடிமதி தீவு தான் முதலில் புத்தாண்டை வரவேற்றது அதேபோல், நியூசிலாந்தும் கோலாகலமாக புத்தாண்டை வரவேற்றது. ஆக்லாந்து, வெல்லிங்டன் ஆகிய நகரங்களில் வானவெடிகள் வெடித்து மக்கள் புத்தாண்டைக் கொண்டாடினார்கள். பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு,ஆக்லாந்தில் புத்தாண்டு கொண்டாட்டம் பட மூலாதாரம்,Andy Corson படக்குறிப்பு,நியூசிலாந்தின் தீவுகள் விரிகுடாவில் (Bay of Islands) புத்தாண்டு வரவேற்கப்பட்டது https://www.bbc.com/tamil/live/c70r0qyrrk7t?post=asset%3A8cdf8463-159c-4819-84f3-d39b73349b57#asset:8cdf8463-159c-4819-84f3-d39b73349b57

'ரிலீஸ் அதிகம், வெற்றி குறைவு': 2025-ஆம் ஆண்டு தமிழ் சினிமா பற்றிய ஒரு மீள் பார்வை

1 month 3 weeks ago
'ரிலீஸ் அதிகம், வெற்றி குறைவு': 2025-ஆம் ஆண்டு தமிழ் சினிமா பற்றிய ஒரு மீள் பார்வை பட மூலாதாரம்,PradeepRanganathan/Facebook படக்குறிப்பு,டியூட் கட்டுரை தகவல் மீனாட்சி சுந்தரம் பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் 2025-ஆம் ஆண்டு தமிழில் முன்னெப்போதும் இல்லாத வகையில் 285 திரைப்படங்கள் வெளியாயின. பல ஆண்டுகள் தேங்கியிருந்த படங்களும் இந்த ஆண்டு வெளியாயின. சிறிய படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பு, தயாரிப்பாளர்கள் காட்டிய ஆர்வம், சிறிய படங்களை ரிலீஸ் செய்ய திரையரங்குகள் கிடைத்தது என்பன போன்ற பலவும் இதற்கு காரணமாக அமைந்தது என்று திரைத்துறையினர் கூறினர். 2025-ஆம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு எப்படி இருந்தது? வசூல் ரீதியில் வெற்றி பெற்ற படங்கள் தமிழ்த் திரையுலகைச் சேர்ந்த தயாரிப்பாளர்கள், திரையரங்க உரிமையாளர்கள் பிபிசி தமிழிடம் பகிர்ந்த தகவல்களின்படி பின்வரும் திரைப்படங்கள் வெற்றிப் படங்களாக பார்க்கப்படுகின்றன. மதகஜராஜா கூலி டூரிஸ்ட் ஃபேமிலி குட் பேட் அக்லி ஆண்பாவம் பொல்லாதது பறந்துபோ டிராகன் டியூட் மாமன் குடும்பஸ்தன் தலைவன் தலைவி பைசன் மிடில்கிளாஸ் மர்மர் 3 பிஹெச்கே திரையரங்குகளில் சில படங்கள் மட்டுமே வெற்றிகரமாக ஓடின. பல படங்கள் ஓடிடி, மற்ற மொழிகள், சாட்டிலைட் உரிமம் போன்றவற்றால் தயாரிப்பாளர்களுக்கு லாபகரமான படங்களாக அமைந்தன. எதிர்பார்த்த வெற்றியை தராத படங்கள் இந்த ஆண்டு எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாதவை என்று திரைத்துறையினர் குறிப்பிட்ட திரைப்படங்கள். தக் லைஃப் வீரதீர சூரன் விடாமுயற்சி கிஸ் மாஸ்க் ரெட்ரோ குபேரா இட்லிக்கடை மதராசி காதலிக்க நேரமில்லை நேசிப்பாயா ஏஸ் அகஸ்தியா கேங்கர்ஸ் மாரீசன் படைத்தலைவன் கொம்புசீவி ஃபீனிக்ஸ் தேசிங்குராஜா 2 பிளாக்மெயில் பாம் டீசல் காந்தா கும்கி 2 பட மூலாதாரம்,@MadrasTalkies_ படக்குறிப்பு,தக்லைஃப் வரவேற்பு பெற்ற சிறிய பட்ஜெட் படங்கள் சசிகுமாரின் டூரிஸ்ட் ஃபேமிலி, மணிகண்டனின் குடும்பஸ்தன், சூரியின் மாமன், சரத்குமார்-சித்தார்த் நடித்த 3 பிஹெச்கே, விஜய் ஆண்டனியின் சக்தித் திருமகன், ரியோவின் ஆண்பாவம் பொல்லாதது, விக்ரம் பிரபு நடித்த சிறை ஆகிய படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தன. வணிக ரீதியாக ஹிட் ஆகாவிட்டாலும் லிஜோமோல் நடித்த காதல் என்பது பொதுவுடமை, புதுமுகங்களின் மாயகூத்து, டேனியல் பாலாஜியின் பிபி 180, காந்தி கண்ணாடி, அதர்ஸ், வெள்ளக்குதிர, ஒண்டிமுனியும் நல்லபாடனும், அங்கம்மாள், ஹவுஸ்மேட்ஸ், பாலாவின் வணங்கான், எமகாதகி, வேம்பு, லெவன், லவ் மேரேஜ், டிஎன்ஏ, மார்கன், கெவி, வானரன், பேட் கேர்ள், தண்டகாரண்யம், ஆரோமலே, மெட்ராஸ் மேட்னி, ஓஹோ எந்தன் பேபி, பெருசு, நிலவுக்கு என் மேல் என்னடி கோபம், ஆர்யன், லவ் மேரேஜ் ஆகிய படங்கள் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டன. பட மூலாதாரம்,X/@MillionOffl படக்குறிப்பு,டூரிஸ்ட் ஃபேமிலி பிரதீப் ரங்கநாதன், சாய் அபயங்கர் 2025-ஆம் ஆண்டில் பிரதீப் ரங்கநாதன் டிராகன், டியூட் என 2 வெற்றி படங்களை கொடுத்தார். இசைத்துறையை பொறுத்தவரையில் சாய் அபயங்கர் வரவை திரைத்துறையினர் குறிப்பிட்டு சொல்கிறார்கள். அவரது இசையில் வெளியான டியூட் படத்தில் பாடல்கள் ரசிகர்களால் கொண்டாடப்பட்டன. இந்த ஆண்டின் புதுமுக இயக்குநர்களில் அபிஷன் ஜீவிந்த் (டூரிஸ்ட் ஃபேமிலி), ராஜேஸ்வர் காளிசாமி (குடும்பஸ்தன்), கீர்த்தீஸ்வரன் (டியூட்), கலையரசன் தங்கவேல் (ஆண்பாவம் பொல்லாதது), மிடில் கிளாஸ் (கிஷோர் முத்துராமலிங்கம்), சுரேஷ் ராஜகுமாரி (சிறை) ஆகியோர் குறிப்பிடத்தகுந்தவர்கள். பட மூலாதாரம்,AGS Productions படக்குறிப்பு,டிராகன் 'சினிமா வியாபாரமே மாறி விட்டது' 2025 தமிழ் சினிமா குறித்து பிபிசி தமிழிடம் பேசிய தயாரிப்பாளர் தனஞ்செயன், ''சினிமா வியாபாரமே இப்போது மாறி விட்டது. ஓடிடி மூலமாக 38 சதவிகித வருமானம், திரையரங்கம் மூலமாக 21 சதவிகித வருமானம், சாட்டிலைட் 12%, ஆடியோ 5% மற்றும் பிற வருமானம் என நிலைமை மாறியுள்ளது. சிறிய பட்ஜெட், நடுத்தர பட்ஜெட் படங்கள் இந்த ஆண்டு அதிகம் வெற்றி பெற்றுள்ளன. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பெரிய படங்கள் இந்த ஆண்டு ஓடாதது மைனஸ்." என்றார். டூரிஸ்ட் ஃபேமிலி, தலைவன் தலைவி, 3 பிஹெச்கே, மாமன், குடும்பஸ்தன் உள்ளிட்ட குடும்ப படங்கள் ரசிகர்களின் வரவேற்பை பெற்றதாக அவர் குறிப்பிட்டார். பட மூலாதாரம்,@Manikabali87 படக்குறிப்பு,குடும்பஸ்தன் '1,163 தியேட்டர்கள் இருக்கிறது, ஆனாலும்' தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க செயலாளர் திருச்சி ஸ்ரீதர் பேசுகையில், ''2025-ஆம் ஆண்டு 285 படங்கள் வந்துள்ளதாக கணக்கு சொல்கிறார்கள். அதில், மதகஜராஜா, குடும்பஸ்தன், குட் பேட் அக்லி, மாமன், டியூட், டிராகன், பைசன், தலைவன் தலைவி, காந்தாரா சாப்டர் 1 போன்ற சில படங்களே திரையரங்க உரிமையாளர்களுக்கு சந்தோஷத்தைக் கொடுத்தன." என்றார். பெரிய நடிகர்கள் படங்களை விட, நல்ல கதைதான் ஜெயிக்கும் என்பதை 2025-ஆம் ஆண்டு நிரூபித்துள்ளது என்று அவர் தெரிவித்தார். "தமிழகத்தில் இப்போது 1,163 திரையரங்குகள் இருக்கின்றன. பழைய திரையரங்குகள் மூடப்படும் அதேநேரத்தில் புதுப்பொலிவுடன், நவீன தொழில்நுட்பத்துடன் பல திரையரங்குகள் திறக்கப்படுகின்றன. ஆனாலும், வெற்றி படங்களின் எண்ணிக்கை குறைவு" என்றார் அவர். இயக்குநர் பாண்டிராஜ் கருத்து பட மூலாதாரம்,Sathyajothi films இந்த ஆண்டின் வெற்றிப்படங்களில் ஒன்றாக கூறப்படும் 'தலைவன் தலைவி' படத்தின் இயக்குநரானபாண்டிராஜிடம் பிபிசி தமிழ் பேசியது. அவர் கூறுகையில் ''இந்த ஆண்டு வெற்றி படங்களின் பட்டியலில் தலைவன் தலைவி தவறாமல் இடம்பெறுகிறது. இந்த படத்தின் வெற்றிக்கு மக்கள் குடும்பத்துடன் திரையரங்கிற்கு வந்து படம் பார்த்ததுதான் காரணம்." என்றார். 'சத்தம் அதிகம்' என சில விமர்சனங்கள் வந்தாலும் கணவன், மனைவி, மாமனார், நாத்தனார், கொழுந்தன், அப்பா, அம்மா என திரைப்படத்தில் சித்தரிக்கப்பட்ட பல 'உறவுகளை' படம் பார்த்தவர்கள் தங்கள் வாழ்க்கையுடன் இணைத்து பார்த்தனர் என்றார் அவர். "எப்போதுமே உணர்வுப்பூர்வமாக, குடும்ப கதைகளை சொல்லும் படங்கள் தோற்பதில்லை. ஒரு படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர், டிரைலர் வரும்போதே இந்த படத்தை திரையரங்கில் பார்க்கலாம், இந்த படத்தை ஓடிடியில் பார்க்கலாம் என பார்வையாளர்கள் முடிவு செய்துவிடுகிறார்கள். திரையரங்க அனுபவத்தைப் பெறவே சில படங்களை மக்கள் திரையரங்குகளில் பார்க்கின்றனர். சில படங்கள் ஓடிடி-யில் பெரிய ஹிட் ஆகும். அதுவும் வெற்றி படம்தான். சினிமா இன்று மாறிவிட்டது.'' என்றார் இயக்குநர் பாண்டிராஜ். 'பல படங்களின் தலைப்பு கூட மனதில் பதியவில்லை' திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் பேசுகையில், ''இந்த ஆண்டு 25 படங்கள் மட்டுமே தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் என 3 தரப்புக்கும் லாபம் கொடுத்தன. 60 படங்கள் தப்பிவிட்டன. அதாவது, இந்த படங்கள் பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்தவில்லை. மீதமுள்ள 200 படங்கள் ஏமாற்றம் தந்தவை. தக்லைஃப், இட்லி கடை, விடாமுயற்சி, ரெட்ரோ போன்ற பெரிய படங்கள் இழப்பை ஏற்படுத்தின. இந்த ஆண்டு வெளியான பல திரைப்படங்களின் தலைப்பு திரைத்துறையினர் மற்றும் ஊடகத்துறையினரின் மனதில் கூட பதியவில்லை" என்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cx232zp8pjvo

யாழில் 3012 குடும்பங்களுக்கு மலசலக்கூட வசதி இல்லை!

1 month 3 weeks ago
நல்லது அண்ணா. நாளை புதிய வருடப்பிறப்பில் புதிய திரியை துளித்துளியாய் பகுதியில் @goshan_che அண்ணை திறவுங்கோ. நான் சரியான பயனாளிகளை இனம் கண்டு முடிந்தால் நேரில் சென்று உறுதிப்படுத்தி சொல்கிறேன். இது யாழ் இணைய உறவுகளின் கூட்டு முயற்சியாகும்.

இந்திய- தமிழீழப் போர் மூள முன்னர் இந்தியப்படை செய்த நாசங்கள்

1 month 3 weeks ago
இன்னும் ஒரு காரணம் யாழ்ப்பாணத்தில் ஈழநாடு பத்திரிகை காரியாலயம் இந்திய ராணுவத்தால் அடித்து நொறுக்கப்பட்டது. அதோடு புலிகளின் தொலை தொடர்பு கோபுரம் ஒன்றையும் குண்டு வைத்து தகர்த்து இருந்தார்கள். இந்த சம்பவங்களின் + திலீபன் அண்ணா, பன்னிரு வேங்கைகள் சம்பவங்களின் பின்னரே போர் மூண்டது.

இந்திய- தமிழீழப் போர் மூள முன்னர் இந்தியப்படை செய்த நாசங்கள்

1 month 3 weeks ago
நான் அப்போது வட்டுகோட்டை தொழில்நூட்ப கல்லூரியில் படித்துக்கொண்டு இருந்தேன். விடுதலை புலிகளின் இளம் போராளிகள் மூவரை வாகனத்தில் செல்லும் போது இந்திய துணை ராணுவ குழு ஒன்று இடைமறித்து தாக்கி கொன்று இருந்தார்கள். பத்திரிகைகளில் படத்தோடு செய்திகள் வாசித்தது ஞாபகம். நடந்தது வடமராட்சி, சுழிபுரம் அண்டிய பகுதியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

உதவி தேவை: இந்தியக் கடற்படையால் குருநகர் "துறைமுகம்" தாக்கப்பட்டதா?

1 month 3 weeks ago
மேலும் நான் இலங்கை கடற் தொழில் அமைச்சில் [கொழும்பு] கடல் பொறியியல் விரிவுரையாளராக சில ஆண்டு கடமையாற்றிய பொழுது, 1983 க்கு முதல், அங்கு, குறுநகரில் அமைந்துள்ள கடல் தொழில் பயிற்சி நிலையத்துக்கு சில தடவை போய் உள்ளேன். அங்கு பயிற்சி, குருநகர் மீன்பிடித்தல் மற்றும் சிறிய படகுகள் தங்கி இருக்கும் ஜெட்டிகளில் இருந்து புறப்பட்ட மீன் பிடி படகுகளில் தான் நடந்தன - அங்கு பெரிய கப்பல்கள் அல்லது கிரேன்கள் இருக்க வில்லை என்பது நான் நேரடியாக பார்த்தது

400 ஆண்டுகளுக்குப் பிறகு டென்மார்க் அஞ்சல் சேவை கடிதங்களை விநியோகிப்பதை நிறுத்தவுள்ளது.

1 month 3 weeks ago
The U.S. Postal Service (USPS) consistently loses billions annually, reporting a $9.5 billion net loss in Fiscal Year 2024 and a $9 billion loss in FY 2025, despite revenue increases from price hikes. These losses stem from declining traditional mail volume, rising operating costs, inflation, and past obligations, though a 2022 reform act significantly eased retiree health benefit funding, improving "controllable" losses but not overall GAAP result அமெரிக்காவிலும் தபால் திணைக்களம் பல பில்லியன் டாலர்களை ஒவ்வொரு வருடமும் இழக்கிறது. இதை சரிப்படுத்த முடியாமல் அரசு திண்டாடுகிறது.

யாழில் 3012 குடும்பங்களுக்கு மலசலக்கூட வசதி இல்லை!

1 month 3 weeks ago
துளி துளியாய் பகுதியில் இதற்கென ஒரு தனித்திரி திறந்து விடுங்கள். அதனை pin பண்ணி விடுகின்றேன். திரி சரியான விதத்தில் சென்றால் முகப்பிலும் இணைப்பை கொடுக்க முடியும்.
Checked
Wed, 02/25/2026 - 10:43
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed