புதிய பதிவுகள்2

பாலஸ்தீன தேசத்தை அங்கீகரிக்கின்றது பிரான்ஸ் - அடுத்தமாதம் அறிவிப்பு

2 months ago
இலங்கை அரசை போலவே இஸ்ரேலும் உணவை ஆயுதமாக பயன்படுத்துகிறது, உலக நாடுகளிலிருந்து வரும் உணவு பொருள்களை வழங்குவதற்கு இஸ்ரேல் அமெரிக்க நிறுவனத்தின் மூலமான உணவு பங்கீட்டினை வலியுறுத்துகின்றது, இதன் மூலம் அமெரிக்க இஸ்ரேல் இணைந்து உணவை ஓர் ஆயுதமாக பயன்படுத்துகின்ற நிலை காணப்படுகிறது, தன்னார்வ நிறுவனங்களின் மூலம் வினியோகிக்கப்படும் உணவு கமாசிற்கு சென்று விடும் என குற்றம் சாட்டும் இஸ்ரேல் விமானம் மூலம் பாரசூட்டில் உணவு பகிர்வதனை தடுக்கமாட்டோம் என கூறுயுள்ளதாம், ஆனால் பாரசூட்டில் முன்னர் உணவு போட்டதில் பொதுமக்கள் சிக்கி உயிர் இழந்துள்ள நிலையில் அதனை செய்ய உலக நாடுகள் விரும்ப்பாது, இஸ்ரேலின் குற்றச்சாட்டான தன்னார்வ நிறுவனங்களின் உணவு பரிமாற்றத்தினால் கமாஸ் உணவினை பெறும் என்றால் விமானத்திலிருந்து போடும் போது அது கமாசிற்கு கிடைக்காதா? நெத்தயாகு செலன்ஸ்கி போல அதிகாரத்திற்காக எந்த எல்லைக்கும் போகும் நபர்.

சங்கிலியுடன் எம்ஆர்ஐ ஸ்கேன் அறைக்குள் நுழைந்தவர் மரணம் - நொடி நேரத்தில் எந்திரத்துக்குள் இழுத்த காந்தபுலம்

2 months ago
90 களில் வந்த படமா? சின்ன வயதில் படம் பார்ப்பதுண்டு 90 களில் இல்லை பின்னர் வெளிநாடு வந்த பின்புதான் பார்க்க ஆரம்பித்தேன், தொலைக்காட்சியில் இந்த படத்தில் ஒன்றை தற்செயலாக பார்த்தேன், சுவாரசியமாக இருந்தது, இந்த படத்தின் ஆரம்பம் அவ்வளவு சுவாரசியமில்லாமல் இருந்ததாக உணர்ந்தேன் ஆனால் பின்னர் படம் சுவாரசியமாக இருந்தது. டொமினோ பாதிப்பு எனும் உத்தியினை படத்தின் சுவாரசியதிற்காக பயன்படுத்துகிறார்கள் என கருதுகிறேன், வண்ணாத்து பூச்சியின் இறக்கையின் அதிர்வு ஒரு சுனாமியினை உருவாக்கும் என்பது போல ரூப் கோல்ட்பேர்க் முறையில் மரணம், மரணத்தினை தவிர்க்க முயலுபவர்களுடன் முகமில்ல்லாத ஒரு எதிரியாக போரிடுவது சுவாரசியத்தினை ஏற்படுத்துகிறது என கருதுகிறேன்.

இந்திய இராணுவத்தின் வலிமையைக் கண்டு உலக நாடுகள் வியந்தன! – பிரதமர் மோடி

2 months ago
இது ஒரு முக்கிய பிரச்சினை, ஏனோ பெரிதாக கவனத்திற்கு வருவதில்லை, எதிர்கால சந்ததியின் எதிர்காலம் குறித்த உங்கள் அக்கறை புரிகிறது, ஆனால் பெரும்பாலும் இக்கால கட்டத்தில் பெரிதாக இந்த விட்யங்களில் மக்கள் அக்கறை அற்றவர்களாக இருக்கிறார்கள். இந்த தலைமுறையினர் கூட தமெக்கென சொந்த வீடுகளற்றவராகவும் நிலங்களற்றவராகவும் மாறுகின்ற நிலை ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது. 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பரேட்டோ எனும் பொருளியலாளரின் 80/20 எனும் தத்துவம் இயல்பியல் விதியில் தவிர்க்க முடியாத உண்மை என கூறினார்கள், ஆனால் தற்போது 1% உலக வளத்தின் 44% மேலாக உரிமை கொண்டாடுகின்றனர் என கிரெடிட் சுய்ஸ் மற்றும் யுபிஸ் வங்கியின் 2022-2023 அறிக்கை கூறுகிறது. இது அதிகார வர்க்கத்தின் ஆதரவுடன் நிகழுகிறது, அமெரிக்காவில் 1% மொத்த அமெரிக்க வளத்தில் காற்பங்கினை தமது உரிமையாக்கியுள்ளார்கள், அவுஸ்ரேலியாவில் 20% மொத்த அவுஸ்ரேலிய வளத்தில் 60% -65% தமது உரிமையாக கொண்டுள்ளார்கள். இந்த வளப்பரம்பல் சமநிலை இன்மையால் பொருளாதார சுனாமி அடிக்கடி ஏற்பட்டு உலக பொருளாதாரம் பேரழிவிற்குள்ளாகிறது, இதில் என்ன வருத்தம் என்றால் சாமானியமானவர்கள்தான் இந்த கொள்கையினை கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்கிறார்கள், இந்த கொள்கைகளால் பாதிக்கப்படும் மக்களே இந்த கொள்கைகளை ஆதரிக்கும் மனப்பாண்மை எவ்வாறு தோன்றியது என தெரியாவிட்டாலும் மக்கள் அடிபடையில் கூட்ட மனப்பாண்மை கொண்டவர்களாக இருப்பதே இதற்கான காரணமாக இருக்கும் என கருதுகிறேன். இலங்கையில் சிறிய மீனவர்களின் வாழ்வாதாரங்களை கேள்விக்குள்ளாக்கும் அயல்நாட்டு பெரும் முதலாளிகள் ஒரு புறமும் அதானி குழு என மறு புறம் என நாட்டை கொள்ளையடிக்கிறார்கள், ஆட்சியில் இருக்கும் அரசுகளுக்கு தட்டி கேட்டால் ஆட்சி அதிகாரம் பறிபோய் விடும் எனும் எண்ணத்தில் அதனை கண்ணை மூடி கண்டு கொள்ளாது விடுகிறார்கள், பனையால் விழுந்தவனை மாடேறி மிதிப்பது போல சாதாரண மக்களை பரம ஏழையாக்கும் இந்த நிலை தொடர்கிறது.

கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் கைதி தூக்கிட்டு தற்கொலை

2 months ago
குடும்பச் சண்டைக்கு எல்லாம் விளக்கமறியலில் வைத்தா விசாரிப்பார்கள். கிளிநொச்சி காவல் நிலையத்தில்…. அதுகும் மதியம் 12 மணிக்கு நடந்த கொலையை, கிளிநொச்சி பொலிசாருக்கு விசாரிக்க தகுதி இருக்கா? அப்படி விசாரித்தாலும் அவர்களிடம் இருந்து உண்மை வெளிவந்து விடுமா?

புனர்வாழ்வு பெற்ற விடுதலைப் புலி உறுப்பினர் கொழும்பில் துப்பாக்கியுடன் கைது

2 months ago
பொம்மை விளையாடும், புட்டியில் பாலருந்தும் குழந்தையும் பயங்கரவாதி, செஞ்சோலையில் கல்வி கற்ற குழந்தைகளும் பயங்கரவாதிகள் சிங்களத்திற்கு. தற்போது முப்பது வயதுள்ளவருக்கு, பதினாறு ஆண்டுகளுக்கு முன் எத்தனை வயது? அதற்கு முன் அவர் புலி இயக்கத்தில் சேர்ந்து பயிற்சி எடுத்து களத்திற்கு போக எத்தனை வருடம் எடுத்திருக்கும்? அப்போ எத்தனை வயதில் அவர் புலிகள் இயக்கத்தில் சேர்ந்திருப்பார்? முள்ளிவாய்க்கால் வீழ்ச்சியின் பின், வயதானோர், பெண்கள், குழந்தைகள், மத குருமார் எந்த பாகுபாடுமில்லாமல் கைது செய்து புலிகள் என்று முத்திரை குத்தியது, கொன்றது, காணாமலாக்கியது சிங்களம். அது எந்தக்கணக்கு?

கறுப்பு ஜூலை : 13 இராணுவத்தினர் கொல்லப்படாவிட்டாலும் அது இடம்பெற்றிருக்கும் : சட்டத்தரணி ஸ்ரீநாத் பெரேரா

2 months ago
முதலில் தாக்குதல் நடத்தி, ஒரு இனத்தை அழிவின், இருளின் விளிம்புக்கு துரத்தினோம் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும், அதற்காக மன்னிப்பு கோரவேண்டும், இனிமேல் இப்படி நடக்காது என உறுதி செய்து பொறுப்பு எடுக்கவேண்டும். அப்போதான் உண்மையான நம்பிக்கை, நல்லிணக்கம், சமாதானம் ஏற்படும். அதைவிட்டு அந்த மக்களின் நிலங்களை பறிப்பதாலேயோ, அவர்களுக்கு பொருத்தமில்லாத கட்டிடங்களை எழுப்புவதாலேயோ, அவர்களை அச்சுறுத்துவதாலேயோ, அல்லது அவர்களை குற்றம் சுமத்துவதாலேயோ இழந்த ஐக்கியதை ஒருநாளும் கட்டியெழுப்ப முடியாது. மாறாக சந்தேகம், வெறுப்பு, பகைமை மட்டுமே வளரும். இதை புரிந்து கொள்ள அரசியல்வாதிகளுக்கும் அனுபவமில்லை, மத தலைவர்களுக்கும் ஞானமில்லை, கற்றவர்களுக்கும் அறிவில்லை. நமது தலைவர்களும் புலிகளை குற்றம் சுமத்தி இல்லாத குற்றத்திற்கு மன்னிப்பு கோரி அவர்களை நிஞாயப்படுத்துவதை விடுத்து, பிரச்சனைக்கான மூல காரணத்தை விளக்கி, எங்கிருந்து பிரச்சனை ஆரம்பித்தது, யார் ஆரம்பித்தார்கள் என்பதை விளக்க வேண்டும், ஏற்றுக்கொள்ள தூண்ட வேண்டும். அதை செய்வதற்கு வரலாறு தெரியாவிட்டால் விலகியிருக்க வேண்டும். நாம் குற்றவாளிகள் என்று அவர்களை சந்தோஷப்படுத்த முனைந்தால்; அவர்கள் தங்களை நிஞாயவாதிகளாக காட்டி நம்மை இல்லாமற் செய்ய வழி வகுக்கும். இதுவரையில் இத்தனை மக்களை கொன்றவர்கள், எங்களை விரட்டியவர்கள் ஒரு தடவையாவது மன்னிப்பு கேட்டார்களா? அல்லது தவறு நடந்து விட்டதென ஏற்றுக்கொண்டார்களா? ஆக்கிரமிப்பை நிறுத்தித்தான் கொண்டார்களா? ஒரு பக்கம் சமாதான கரம் நீட்டி பயனில்லை. தாக்குதலாளி உணரவேண்டும் உணர வைக்கப் பட வேண்டும்.

கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் கைதி தூக்கிட்டு தற்கொலை

2 months ago
சாரத்தின் ஒரு பகுதிக்கு இவ்வளவு பலம் இருக்கு என்று இதுவரை நான் நினைத்திருக்கவில்லை. அது சரி, எங்கே எப்படி தூக்குப்போட்டார்? சாரம் மட்டும் போதாதே தூங்குவதற்கு?

தமிழில் உறுதிமொழியுடன் நாடாளுமன்றில் அறிமுகமானார் கமல்ஹாசன்!

2 months ago
உலக நாயகனுக்கு வாழ்த்துக்கள்! இதுவும் ஒரு பிக் பொஸ் நிகழ்ச்சியாக அமையுமோ? யார் யாரை வெற்றிகரமாக வெளியில் அனுப்புகின்றார் என பார்ப்போம்.

இங்கிலாந்து இந்திய டெஸ்ட் கிரிக்கெட் தொடர்

2 months ago
வாசிங்டன் சுந்தர் கொஞ்சம் செய்கிறார் போல் உள்ளது. சாய் சுதர்சனுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து இப்போது முன்னிலையில். ஆனால் இந்தியாவை வெற்றிகொள்ளுமா என்பது சந்தேகமே.

மேலும் 40 நாடுகளுக்கு விசா விலக்கு!

2 months ago
இந்தியர்கள் அதிகம் செலவு செய்யாவிட்டாலும் சுற்றுலா செய்வதில் விருப்பம் உடையவர்கள். ஆனால்…. பாகிஸ்தான்காரர் சுத்துமாத்து வியாபார புத்தி உடையவர்கள். என்ன நடக்கப் போகின்றது என்று பொறுத்து இருந்து பார்க்க வேண்டும்.

கள் போதைப் பொருளா அல்லது உணவுப்பொருளா? குழந்தைகளும் அதை குடிக்கலாமா?

2 months ago
உங்கள் அனுபவம் எனக்கில்லை என்றாலும் அம்மாள் வருத்தம் மனிதர்களுக்குத்தான் வரும் என்பதை அறிந்துள்ளேன்.

கள் போதைப் பொருளா அல்லது உணவுப்பொருளா? குழந்தைகளும் அதை குடிக்கலாமா?

2 months ago
கள்ளு அப்பம் புளிக்க வைக்கவும் பாவிக்கிறவை.அதோட கள்ளு உடம்புக்கு குளிர்ச்சி தரும் எண்டும் சொல்லுறவை.கள்ளு கெமிக்கல் சேர்க்காத இயற்கை தந்த மது பானம். அதை அளவோடு பருகினால் வாழ்க்கை முழுவதும் ஆனந்தம்...ஆனந்தம்.😍

சங்கிலியுடன் எம்ஆர்ஐ ஸ்கேன் அறைக்குள் நுழைந்தவர் மரணம் - நொடி நேரத்தில் எந்திரத்துக்குள் இழுத்த காந்தபுலம்

2 months ago
நான் உந்த குகைக்குள் பல தடவைகள் படுத்து எழும்பி வந்திருக்கிறன்.அரணா கொடி தொடக்கம் காப்புக்கயிறு வரைக்கும் உருவி எடுத்துப்போட்டுத்தான் அந்த அறைப்பக்கமே விடுவார்கள். அது மட்டுமல்லாமல் உடம்புக்குள் ஏதாவது உலோகங்கள் ஏதாவது பொருத்தப்பட்டிருக்கின்றதா என கேட்டு உறுதி செய்த பின்னரே அறையினுள் செல்ல அனுமதிப்பார்கள். கட்டுப்பல்லுக்காரர்களும் கவனமாக இருக்க வேண்டும். உடம்புக்குள் அதாவது கால்பகுதி,மண்டைப்பகுதியில் உலோகங்கள் பொருத்தப்பட்டிருந்தால் விமான நிலையங்களிலும் ஒரு சில பிரச்சனை இருக்கும் என கேள்விப்பட்ட ஞாபகம்.

ஈழத்தமிழர்களின் அரசியற் தலைவரான சம்பந்தனின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது

2 months ago
போன வாரமளவில் ஒரு முகநூல் பதிவர் "பூதக் கண்ணாடியோடு" நினைவு தினம் தேடி அலைந்தார் என்று எழுதியிருந்தாரே? அவர் இன்னும் இருக்காரா சார்? 😂
Checked
Sun, 09/28/2025 - 12:40
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed