2 months ago
செம்மணி மனித புதைகுழிகளை அடையாளம் காண நவீன கருவிகள்! செம்மணி மனிதப் புதைகுழியில், ஜி.பி.ஆர். ஸ்கானர் (தரையை ஊடுருவும் ரேடர்) மூலம், பரந்துபட்ட ஸ்கான் நடவடிக்கைகளை முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் துரிதகதியில் இடம்பெற்று வருகின்றன. செம்மணிப் புதைகுழியில் அகழ்வுப் பணிகள் இடம்பெறும் பகுதிக்கு மேலதிகமாக, செய்மதிப் படங்களை அடிப்படையாக வைத்து துறைசார் நிபுணர் சோமதேவா அடையாளப்படுத்திய இடத்திலும் என்புத் தொகுதிகள் மீட்கப்பட்டிருந்தன. இதையடுத்து, செம்மணியில் குறிக்கப்பட்ட பகுதிக்குள் மட்டும் அகழ்வுப் பணிகளை முன்னெடுக்காமல், பரந்துபட்ட அகழ்வுகள் இடம்பெற வேண்டும் என்று உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் வலியுறுத்தல்கள் முன்வைக்கப்பட்டன. இதைத் தொடர்ந்தே, வெளிநாட்டில் இருந்து ஜி.பி.ஆர். ஸ்கேன் இயந்திரம் கொண்டுவரப்பட்டு அங்கு விரிவான ஆய்வு நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளன. முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் உள்ளிட்ட மனிதப் புதைகுழிகளை ஆய்வு செய்வதற்கு இலங்கையில் இதுவரை ஏ.எம்.ரி. ஸ்கேனரே பயன்படுத்தப்பட்டன. இந்த நிலையில், தரையை ஊடுருவும் ரேடர் (ஜி.பி.ஆர்.) என்று அழைக்கப்படும் ஸ்கானர் மூலம் இலங்கையின் மனிதப் புதைகுழியொன்று ஆய்வு செய்யப்படும் முதலாவது சந்தர்ப்பமாக செம்மணிப் புதைகுழியே பதிவாகியுள்ளது. தரையை ஊடுருவும் ரேடர் (ஜி.பி.ஆர்.) அமைப்பு, கொங்கிரீட்களையும் ஊடுருவி நிலத்துக்குக் கீழ் இருக்கும் விடயங்களை திரையில் வெளிப்படுத்தும் நவீனத்துவம் கொண்டது. கனடா போன்ற நாடுகளில் கட்டடங்களின் கீழ் இருந்த மனிதப் புதைகுழிகளை அவதானிப்பதற்கு இந்த ஸ்கானரே பயன்படுத்தப்பட்டது. இதேவேளை, ஆய்வுப் பணிகளுக்காக செம்மணிப் புதைகுழிக்கு அருகாக உள்ள பல பகுதிகள் துப்புரவு செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த ஸ்கான் ஆய்வில் பல பகுதிகளில் என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகின்றது. பாதுகாப்பு அமைச்சின் அனுமதி வழங்கப்பட்டதும், இந்த ஆய்வு இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1440795
2 months ago
மணல் மாஃபியாக்கள் தினமும் நூற்றுக்கணக்கான உழவு யந்திரங்களில் மண்கடத்தும் போது எதுவும் செய்யாமல் பார்த்துக் கொண்டு இருந்தவர்களுக்கு, நல்லூர் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவுக்காக பக்தர்கள் அங்கப் பிரதட்சணம் செய்யும் போது உடலிற்கு வீதியில் உள்ள கற்கள் உறுத்தாமல் இருக்க மணல் எடுத்தால் எதிர்ப்பு தெரிவிப்பதை எந்த விதத்தில் சேர்ப்பது. நல்லூர் கோவில் என்ன... வருடம் முழுவதுமா மண் எடுக்கப் போகின்றது. திருவிழாவிற்கு மட்டும் தானே எடுக்கின்றார்கள். நல்லூர் கோவில் மண்ணுக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள்.... "ஆபிரஹாம் சுமந்திரனின், அல்லிலோயா" கோஷ்டியாக இருக்குமோ.
2 months ago
பிள்ளையான் குழுவின் அலுவலகமாக செயற்பட்ட பாரிய வீட்டில் சோதனை முன்னெடுப்பு! அம்பாறை மாவட்டத்தில் யுத்தம் நிலவிய காலங்களில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் பொறுப்பாளராக செயற்பட்ட இனிய பாரதி என அழைக்கப்படும் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் கே. புஷ்பகுமார் பயன்படுத்திய அலுவலகங்கள் மற்றும் முகாம்கள் நேற்று பயங்கரவாத புலனாய்வு பிரிவு மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவு அணியிரால் சோதனை மேற்கொண்டிருந்தனர். இதனடிப்படையில் நேற்று இரு வேறு ஜீப் வண்டியில் குற்றப் புலனாய்வு பிரிவினரினால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிந்த சந்தேக நபர்கள் அவ்விடத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்தனர். குறித்த நபர்கள் இனங்காட்டியதற்கு அமைய கடந்த காலத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் அலுவலகம் மற்றும் பிரதான முகாமாக செயற்பட்ட கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவில் அமைந்துள்ள தாளவெட்டுவான் சந்திக்கு அருகாமையில் உள்ள பாரிய வீட்டில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. கடும் பாதுகாப்பிற்கு மத்தியில் அழைத்து வரப்பட்ட சந்தேக நபர்களுடன் நீண்ட நேரமாக குறித்த வீட்டில் தரித்து நின்ற புலனாய்வு பிரிவினர் சோதனை மேற்கொண்ட பின்னர் அங்கிருந்து அவர்கள் வெளியேறி சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1440773
2 months ago
பிள்ளையானின் அலுவலகத்தில் கடும்சோதனை Editorial / 2025 ஜூலை 27 , மு.ப. 10:10 பாறுக் ஷிஹான் யுத்தம் நிலவிய காலங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து2004 ஆண்டு பிரிந்து சென்று தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (ரீ.எம்.வி.பி) அமைப்பு என கருணா அம்மான் எனப்படும் விநாயக மூர்த்தி முரளிதரன் மற்றும்அதன் முக்கியஸ்தராக செயற்பட்ட பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரைசந்திரகாந்தன் தலைமையில் பலர் செயற்பட்டிருந்தனர். இதில் அம்பாறை மாவட்டத்தில் அக்கால கட்டத்தில் பொறுப்பாளராக செயற்பட்டஇனிய பாரதி என அழைக்கப்படும் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் கே. புஷ்ப குமார் பயன்படுத்திய அலுவலகங்கள் மற்றும் முகாம்கள் இன்றுபயங்கரவாத புலனாய்வு பிரிவு மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவு அணியினர்சோதனை மேற்கொண்டிருந்தனர். இதனடிப்படையில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் ஏலவே கைது செய்யப்பட்டுதடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர்கள் வெள்ளை நிற ஆடை அணிந்துஅவ்விடத்திற்கு இரண்டு வெவ்வேறு ஜீப் வண்களில் அழைத்துவரப்பட்டிருந்தனர். அந்த நபர்கள் இனங்காட்டியமைக்கு அமைய கடந்த காலத்தில் தமிழ் மக்கள்விடுதலைப் புலிகளின் அலுவலகம் மற்றும் பிரதான முகாமாக செயற்பட்டகல்முனை தலைமையக பொலிஸ் பிரிவில் அமைந்துள்ள தாளவெட்டுவான்சந்திக்கு அருகாமையில் உள்ள பாரிய வீடு சோதனை மேற்கொள்ளப்பட்டது. கடும் பாதுகாப்பிற்கு மத்தியில் அழைத்து வரப்பட்ட சந்தேக நபர்களுடன் நீண்டநேரமாக குறித்த வீட்டில் தரித்து நின்ற புலனாய்வு பிரிவினர் சோதனைமேற்கொண்ட பின்னர் அங்கிருந்து அவர்கள் வெளியேறி சென்றதாக நேரில்கண்டவர்கள் குறிப்பிட்டனர். தற்போது குறித்த வீட்டின் முன்பகுதி உணவகம் ஒன்றிற்கு வாடகைஅடிப்படையில் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. கடந்த காலங்களில் அம்பாறை மாவட்டத்தில் பாண்டிருப்பு கல்முனைவேப்பையடி மத்தியமுகாம் சொறிக்கல்முனை சம்மாந்துறை சேனைக்குடியிருப்புஅக்கரைப்பற்று திருக்கோவில் விநாயக பரம் காரைதீவு 40 ஆம் கட்டை தம்பட்டைபொத்துவில் கோமாரி காஞ்சிரங்குடா ஊரணி கஞ்சிகுடிச்சாறு என பலமுகாம்களும் அலுவலகங்களும் செயற்பட்டு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது https://www.tamilmirror.lk/செய்திகள்/பிள்ளையானின்-அலுவலகத்தில்-கடும்சோதனை/175-361798
2 months ago
தீர்மானத்தை மீறி நல்லூர் ஆலயத்திற்கு மணல் விநியோகம் - பொதுமக்கள் குற்றச்சாட்டு! வடமராட்சி அம்பன் கிழக்கில் கிராம அபிவிருத்தி சங்கத்தின் தீர்மானத்தை மீறி பொலிஸ் பாதுகாப்புடன் நல்லூர் ஆலயத்திற்கு மணல் விநியோகிக்கப்பட்டதற்கு பொதுமக்கள் கடும் விசனத்தை வெளிப்படுத்தியுள்ளனர். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த திருவிழாவுக்காக வருடம் தோறும் குறிப்பிட்ட மணல்மண் வடமராட்சி கிழக்கு அம்பன் பகுதியில் இருந்து பிரதேச மக்களின் அனுமதியுடன் வழங்கப்பட்டு வந்தது. வருடாந்தம் வழங்கப்படும் மணல்மண் திருவிழா நிறைவடைந்ததும் விற்பனை செய்யப்படுகின்றது. இதனையடுத்து தமது பிரதேசத்தில் கூடியளவில் மணல் அகழப்பட்டுள்ளது என்றும் தொடர்ந்தும் கிராமத்தை அழிவிற்கு உட்படுத்தக் கூடாது என்பதன் அடிப்படையிலும், இம்முறை மணல் மண் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் மணல் மண் வழங்க மறுத்திருந்தனர். அதேவளை தொடர்ச்சியாக அம்பன் கிழக்கில் மட்டும் அகழ கூடாது என்றும் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் இன்றைய தினம் பிரதேச மக்களின் எதிர்ப்பின் மத்தியிலும் பொலிஸ் பாதுகாப்புடன் மண் விநியோகம் இடம்பெற்றது. இன்று காலை 9 மணி முதல் மண் விநியோகம் தொடர்பான முறுகல் நிலை அம்பன் பிரதேசத்தில் பிரதேச செயலர் மற்றும் கிராம மக்களுக்கு இடையில் இடம்பெற்றது. அம்பனிலுள்ள தனிநபர் ஒருவருக்கு கனியமணல் அகழ்வுக்கான அனுமதியைப் பெற்றுக்கொடுத்து நல்லூர் முருகன் ஆலயத்திற்கு பிரதேச செயலரால் மணல் மண் விநியோகம் இடம் பெறுகிறது என்று அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். https://newuthayan.com/article/%C2%A0தீர்மானத்தை_மீறி_நல்லூர்_ஆலயத்திற்கு_மணல்_விநியோகம்_-_பொதுமக்கள்_குற்றச்சாட்டு!
2 months ago
மாணவர்கள் இடைவிலகலை தூண்டுவது வாழ்வாதாரமே! - சபா குகதாஸ் தெரிவிப்பு! மாணவர்களின் வாழ்வாதார வறுமையை ஒழிக்காமல் ஒருபோதும் கல்வியில் உயர்ச்சியை எட்ட முடியாது என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டின் கல்வி முறையில் பல குறைபாடுகள் இருந்தாலும் மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் தடையாக இருப்பது மாணவர்களின் வாழ்வாதார வறுமையே பிரதான இடம் பெறுகின்றது. அண்மைய காலங்களில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாணவர்களின் கல்வி இடை விலகலுக்கு காரணம் கொடிய குடும்ப வறுமை இதனால் பல நூற்றுக்கணக்கான மாணவர்கள் கல்விச் செயற்பாட்டில் இருந்து இடை விலகி கூலி வேலைகளுக்கு செல்வதை காணமுடிகின்றது வேறு பல மாணவர்கள் தவறான வழிகளில் பணம் சம்பாதிக்கும் எண்ணத்தில் சமூக விரோத செயற்பாடுகளில் இறங்கியுள்ளனர். மாணவர்களின் பாடசாலை கல்வியி்ல் இடைவிலகலை தூண்டுவது தற்போதைய கல்வி முறையல்ல மாறாக குடும்ப வறுமையும் வாழ்வாதாரச் சுமையுமே ஆகும். ஆகவே ஜனாதிபதி புதிய கல்விச் சீர் திருத்தத்தை கொண்டு வந்தாலும் மாணவர்கள் தொடர்ச்சியாக 13 ஆம் வகுப்பு வரை கல்வி கற்பதற்கான குடும்பச் சூழலை முதலில் சீரமைக்க வேண்டும். அத்தியாவசிய பொருட்களின் விலைகளில் அரச மானியங்களை வழங்கி வருமானத்திற்கு ஏற்ப பொருட்களை வாங்கக் கூடிய ஏற்பாடுகளை ஐனாதிபதி விரைந்து உருவாக்க வேண்டும் இதன் மூலம் குடும்பங்களின் வாழ்வாதார வருமானச் சுமைகளை குறைத்து மாணவர்கள் பாடசாலைக் கல்வியில் ஆர்வத்துடன் பயனிப்பதற்கு வழி திறக்க முடியும் என தெரிவித்தார் https://newuthayan.com/article/மாணவர்கள்_இடைவிலகலை__தூண்டுவது_வாழ்வாதாரமே!_-_சபா_குகதாஸ்_தெரிவிப்பு!
2 months ago
பலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதற்கு பிரித்தானியா ஆதரவு ! பலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதற்கு பிரித்தானியா ஆதரவு தெரிவித்துள்ளது. ஏற்கனவே பலஸ்தீனத்தை தனி நாடாக பிரான்ஸ் அங்கீகரித்த நிலையில், தற்போது பிரித்தானியாவும் ஆதரிப்பதாக பிரித்தானிய அமைச்சரவை அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார். இதேவேளை, பாலஸ்தீன அரசை தாம் ஆதரிப்பதாகவும் , மேலும் இதுபோன்ற நீண்டகால அரசியல் தீர்வு ஏற்படக்கூடிய சூழ்நிலைகள் உருவாக்கப்படுவதை உறுதிசெய்ய விரும்புகிறோம் எனவும் ஆனால் இப்போது, இன்று, துன்பத்தைத் தணிப்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும் எனவும் மேலும் காசாவில் உள்ள தீவிரமான, நியாயப்படுத்த முடியாத துன்பங்களை நாங்கள் கையாள்கிறோம் எனவும் அதுதான் இன்று நமது முதன்மையான முன்னுரிமையாக இருக்க வேண்டும் எனவும் பிரித்தானிய அமைச்சரவை அமைச்சர் தெரிவித்துள்ளார். பாலஸ்தீன அரசை பிரான்ஸ் அதிகாரபூர்வமாக அங்கீகரிப்பதாக அந்நாட்டு அதிபர் இமானுவேல் மக்ரோன் அறிவித்டதிருந்த நிலையில் இதற்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கடும் விமர்சனத்தை முன் வைத்துள்ளார். https://athavannews.com/2025/1440747
2 months ago
அது மட்டும் இல்லை அதுக்கு மூளையே கிடையாது ஒன்றில் தூதுவர்களை தனியாகத்தான் சந்திப்பார் காரணம் பிட்டுகேடுகள் வெளியாலை தெரியகூடாது . இந்த முஞ்சுஉறு லண்டனில் தான் கறுப்பு கண்ணாடி காருக்குள் ஒளித்து திரியுதாம் வெளியில் வந்தால் தமிழ் சனம் கலைத்து கலைத்து கோவணத்தையும் உருவி அடி போடும் .
2 months ago
முதுகெலும்பு இல்லாத கூட்டம் தேவையற்று சமய சண்டைகளை வளர்க்க விரும்புகினம் .
2 months ago
கோயிலை உடைத்து மதுக்கடை திரிகிற திட்டமாயிருக்குமோ?
2 months ago
சோமரட்ன ராஜபக்சவும் பாதுகாக்கப்படவேண்டும். என்னை வற்புறுத்தி, பயமுறுத்தி வாக்குமூலம் பெற்றனர் என்கிற கதையெல்லாம் சோடிக்கப்படலாம். ஆனால் அவர் நீதிமன்றத்தில், நீதிபதியின் முன்னால் எந்த வற்புறுத்தலின்றி தானாகவே கேள்வி எழுப்பி வாக்குமூலம் அளித்திருந்தார். ஆகவே அவரது உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்படலாம். என்ன; உதயன் கம்மன், சரத் வீரசேகர, விமல் வீரவன்ச போன்றோர் களமிறங்கக்கூடும். ஆனால் முன்போல் கூட்டம் கூடாது இவர்கள் பின்னால். இனிமேலும் மக்களை ஏமாற்றி தம்மை பாதுகாக்க முற்பட்டால், பொதுமக்களால் தாக்குதலுக்குள்ளாகவும் கூடும். இவர்கள் ஊழையிட்டுக்கொண்டு ஓடி வருவதால், இவர்களுக்குப்பின்னால் பெரியதொரு குற்றப்பின்புலம் இருக்கிறது. இவர்களை அழைத்து விசாரிக்கும் விதத்தில் விசாரித்தால் எல்லாம் வெளிவரும். எப்படியும் அகப்படத்தான் போகிறார்கள். இப்படியான அரைகுறைகளை உளறவிடுவதும் நல்லது. அண்மையில் கூட அருண் சித்தார்த் என்கிற குழப்ப காரன், ஒரு கதையை உருட்டிக்கொண்டு வந்தார் யாவரும் அறிந்ததே. அதாவது துணுக்காயில் புலிகளினால் கொலைசெய்யப்பட்ட மக்களின் புதைகுழி ஒன்றுள்ளது, அது தொண்நூறாம் ஆண்டு நடந்தது. அதை ஒருவர் நமக்கு சொன்னார், அவர் இங்கு வருவதற்கு அவருக்கு பயம் என்கிறார். அதே நேரம் புலிகளால் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டவர்கள் என்று கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் தன்னுடன் தொடர்பை ஏற்படுத்தி அறிவித்தார்களாம் என்று ஒரு முன்நாள் ஒட்டுக்குழுவின் பெயரையும் சொன்னார். சரி, புலிகள் செய்த கொலையை, புதைகுழியை அடையாளம் காட்ட சம்பந்தப்பட்டவர் ஏன், யாருக்கு பயப்படவேண்டும்? அங்கு சம்பவ காலத்திற்கு முன் தொடங்கி இன்றுவரை வாழும் மக்கள் கூறுகிறார்கள், அருண் கூறும் காலகட்டத்தில் குறிப்பிட்ட இடத்தில், இந்திய இராணுவத்தை தொடர்ந்து இலங்கை இராணுவமும் அவர்களுடன் ஒட்டி இருந்த ஒட்டுக்குழு, ஓணான் குழுவுமே இருந்தன அப்போ, அங்கு மக்களின் அலறல் சத்தம் கேட்ட வண்ணம் இருந்தன என்றும் புலிகளின் காலத்தில் அங்கே அரிசி ஆலை இயங்கியதாக கூறுகிறார்கள். இந்த இடத்தை வெளியார் யாரும் உடனடியாக அடையாளம் காண முடியாது, இது ஊரின் உள்ளே பல மைல் தூரத்தில் அமைந்துள்ளது, புதிதாக இந்த இடத்திற்கு வரும் யாரும், யாராவது உதவியின்றி உடனடியாக இங்கு வந்து சேர்ந்து விட முடியாது. சம்பவம் நடந்ததாக இவர்கள் கூறும் காலத்தில் சம்பந்தப்பட்டவருக்கு நான்கு வயது, இப்போ யாரையும் கேட்காமல், விசாரிக்காமல் இந்த இடத்திற்கு திடுதிப்பென்று வந்து, இங்கு தொண்நூறாம் ஆண்டு நாலாயிரம்பேர் கொலைசெய்யப்பட்டு புதைக்கப்பட்டார்கள் அதில் எனது தந்தையும் ஒருவர் என்கிறார். அங்கு போலீசார் இருக்கவில்லை, விசாரணை இல்லை, முறைப்பாடு இல்லை, இந்த சம்பவம் பற்றி முன்னெப்போதும் அறியப்படவில்லை. அப்போ; இங்கு புதை குழி ஒன்று இருக்குமென்றால், அதை ஒருவர் இவர்களுக்கு அடையாளம் காட்டியிருந்தால், அதோடு சம்பந்தப்பட்ட ஒருவராலேயே அது சாத்தியம். அது யார்? அவர் கண்டறியப்பட்டு விசாரிக்கப்பட வேண்டும். அதற்கு அருண் சித்தார்த்தை கைது செய்து உண்மையான குற்றவாளி(யை)வாளிகளை கண்டு சட்டத்தின் முன் நிறுத்தி, விசாரணை நடத்தி உண்மைகள் வெளிக்கொணரவேண்டும். நாடு கடனாலும் மனித புதை குழிகளாலும் சூழ்ந்திருக்கிறது. இதிலிருந்து நாடு மீளுமா? அரசியலாளர்கள் இராணுவத்தை வைத்து சாதித்துக்கொண்டதுமல்லாமல் அவர்களை காட்டி தப்பித்துக்கொள்ளவும் முயற்சிக்கிறார்கள்.
2 months ago
எனது மரணம். நாம் எமது வாழ்க்கையில் பிறந்தது முதல் இறக்கும் வரைக்கும் ஏதோ ஒரு இலக்கை நோக்கியே சென்று கொண்டிருப்போம். நாம் பிறந்தவுடன் எமது பிற்காலத்தை ஓரளவு எம்மை பெற்றெடுத்தவர்கள் தீர்மானிப்பர். அது சில/பல வேளைகளில் நூறு வீதம் சரியானதாக இருக்காது. பிறந்து வளர்ந்து புத்திகள் வர புதிய சிந்தனைகள் உதிக்க சிலரது வாழ்க்கை பெற்றோர்கள் கீறிய கோட்டில் செல்லும். பலரது வாழ்க்கை பலவகையில் மாறி மாறி செல்லும். உதாரணத்திற்கு எனது வாழ்க்கை ஜேர்மனியில் அமைந்து முடியும் என நானும் எதிர்பார்க்கவில்லை.என்னை பெற்றெடுத்து வளர்த்தவர்களும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஏனென்றால் என்னை பெற்றெடுத்தவர்கள் எனது எதிர்காலம் பற்றி ஆயிரம் திட்டங்கள் வைத்திருப்பார்கள்.இது இவனுக்கு அது அவளுக்கு என பல கனவுகளை வளர்த்திருப்பார்கள்.பெற்றெடுத்தவர்களுக்கு அது எட்டாக்கனியாக மாறியிருக்கும். இப்படியான சம்பவங்கள் பலருக்கு நடந்திருக்கலாம். பெற்றோரின் கட்டுப்பாடு எனும் கையை விட்டு விலகும் போது பல விடயங்களை நம்மை நாமே அரசர்களாக்கி தீர்மானிக்கின்றோம். அது பல இடங்களில் தனி பறவையாக்கும் போது தானாகவே வந்து சேர்ந்து விடும்.நல்லது கெட்டது தெரியாத பருவத்தில் நாம் செய்வதெல்லாம் வீரமாக தெரியும். புத்திசாலித்தனமாக தெரியும். சரியானதாகவும் தெரியும். அதன் பின் மனித வாழ்வில் திருமண நிகழ்வு என ஒன்று வரும். அது ஒரு கூட்டு வாழ்க்கை.சந்ததிகள் உருவாகும்.சந்தோசங்கள் பெருகும்.சொந்தங்கள் பாசங்கள் உறவுகள் பெருகும். அதில் ஆயிரம் பிரச்சனைகள் வரும் போகும்.நன்மை தீமை என பல சம்பவங்கள் நடந்தேறும்.அப்போது எமக்குள் இருந்த பாசங்கள் விரிவடையும். முன்னர் இருந்த அயல் உறவு பாசங்கள் இல்லாமல் போகும்.....
2 months ago
அதை செய்யாமல் விட்டதிலிருந்து உள்நோக்கம் புரிந்திருக்குமே? ஏவலர் கூட்டம் எப்போதும் காத்திருக்கும் ஏவல் செய்ய, இதுதானே அவர்களது தொழில். இப்போ புரியும் ஏன் நமது பிரச்சனை தீர்க்கப்படாமல் இழுத்தடிக்கப்படுகிறது என.
2 months ago
அதே.👍 வேறு எந்த சிதம்பர ரகசியமும் இல்லை. சம்பந்தனிடம் சாணக்கியமாவது சாணகமாவது.
2 months ago
https://youtu.be/kuL8tvgMt_A இதெல்லாம் பொன்னான காலங்கள். இனி என் வாழ்க்கையில் நினைத்து பார்க்கவே முடியாது. ☹️ https://youtu.be/ebuKzS2fAFg https://youtu.be/El105nYqmjo அருமை.
2 months ago
என்னை பொறுத்தவரை, என் அனுபவத்தில் அவர் ஒரு வெற்றிடத்தை மிகவும் சுயநலமாக ஆனால் மிகவும் அளவுக்கு அதிகமாக பயன் படுத்தி கொண்டார். அதுவே அவரது சாணக்கியம்.
2 months ago
நான் நானாக இருப்பதை தவிர்த்து அழகானது/அறிவானது எதுவும் இல்லை.
2 months ago
இதை பற்றிய இங்குள்ளவர்கலின் கருத்து என்ன? GOV.UKIndia Young Professionals Scheme visaApply for an India Young Professionals Scheme visa to live and work in the UK if you're an Indian citizen aged 18 to 30 - eligibility, fees, documents. பிரிட்டஜனியாவின் சிறும்பான்மை சமூகங்களின் இளம் மட்டத்தின் வேலைவாய்பை தாக்கும் என்றே நன் நினைக்கிறேன். பெரும்பான்மையும் தாக்கலாம், ஆனால் குறைவாகவே இருக்கும். இங்கே தத்துவம், தியரி அடிப்படையில் நன் சொல்லவில்லை . மறுவளமாக, UK இல் இருந்து இந்தியாவிடற்கு வேலைக்கு செல்லும் வாய்ப்புகள் மிக குறைவு. இதில் சுயநலம் இருப்பதை நான் மறுக்கவில்லை. எமது பிரித்தானிய இளம் சமூகம் உருவாகியது எமது பல உழைப்பு, மீண்டும் பெறமுடியாத இழப்பு, தியாகங்கள் ஊடாக.
2 months ago
நாய் வாலை, நிமிர்த்த முடியாது என்று சொல்வார்கள். சிலதுக்கு... கல்லெறி பட்டும் புத்தி வராது. 😂
2 months ago
நாமம் போட்டும் திருந்துற பாடாய் தெரியேல்லையே......இப்பவும் தேவையில்லாமல் மூக்கை நுழைச்சுக்கொண்டுதானே திரியுறார். அதுதான் அந்த சாணக்கியத்தை பத்து வருசமாய் கண்டு களிச்சமே 😁
Checked
Sun, 09/28/2025 - 12:40
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed