புதிய பதிவுகள்2

செம்மணி மனித புதைகுழிகளை அடையாளம் காண நவீன கருவிகள்!

2 months ago
இந்த நவீன கருவியின்...நோக்கமே வேறு சார்....இந்தப் புதைகுழி விவகாரத்தை மடைமாற்றும் நோக்கம்...அரூண் சித்தார்த் தூக்கிபிடிக்கும் துணுக்காய் புதை குழி ...இசுலாமியர் தூக்கிபிடிக்கும் குருக்கள் மடம் என்ப்வை ..தோண்டப்பட்டு..புலிச்சாயம் பூசி ..அரசு தன்னை வெள்ளை யடித்துக்கொள்ளும்..அவ்வளவே

பிள்ளையானின் அலுவலகத்தில் கடும்சோதனை

2 months ago
செம்மணி ஆய்வுக்காக வெளிநாட்டிலிருந்து தருவிக்கப்பட்ட ஜி.பி.ஆர் (Ground Penetrating Radar)என்ற நவீன கருவியை பிள்ளையானின் அலுவலக காணிக்குள்ளும் கொஞ்சம் ஓட்டிபார்த்தால் உண்மை தெரிந்துவிடும்.

முன்னாள் அமைச்சர்கள் இருக்கும் வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து 6 தொலைபேசிகள் கண்டுபிடிப்பு!

2 months ago
முன்னாள் அமைச்சர்கள் இருக்கும் வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து 6 தொலைபேசிகள் கண்டுபிடிப்பு! வெலிக்கடை சிறைச்சாலையின் அறை பகுதிகளில் இருந்து ஆறு கையடக்கத் தொலைபேசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சிறைச்சாலை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய சிறைச்சாலை அவசரகால பதிலளிப்பு குழுவினரால் நடத்தப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் ஆறு கையடக்கத் தொலைபேசிகளும் மேலும் சாதனங்களும் கண்டுபிடிக்கப்பட்டதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, குறித்த தொலைபேசிகள் கண்டுபிடிக்கப்பட்ட அறை பகுதிகளிலேயே சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளான பல முன்னாள் அமைச்சர்கள் மஹிந்தானந்த அளுத்கமகே, நளின் பெர்னாண்டோ, எம்.எஸ். ரஞ்சித் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கைதிகள் தங்கியுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. https://athavannews.com/2025/1440814

தீர்மானத்தை மீறி நல்லூர் ஆலயத்திற்கு மணல் விநியோகம் - பொதுமக்கள் குற்றச்சாட்டு!

2 months ago
நல்லூர் திருவிழா முடிவடைந்ததும் செய்தியில் குறித்தபடி மணலை விற்பனை செய்துவிடாமல் எடுத்த இடத்தில் திரும்பவும் கொண்டுபோய் கொட்டிவிட்டால் இந்த மண் பிரச்சினை இப்போதைக்கு தற்காலிகமாக தீர்ந்துவிடும். ஆக மொத்தம் மணலை ஏற்றி இறக்கும் செலவை மட்டும் கோவில் ஏற்றுக்கொண்டால் நல்லது. மேலே குறிப்பிட்ட மண் அகழ்வுக்கான அனுமதியை வைத்திருக்கும் அம்பனில் உள்ள தனி நபர்தான் இங்கு ஏதோ சுத்துமாத்து செய்கிறார் போல் தெரிகிறது. கோவில் விவகாரங்களில் அனைவரும் வெளிப்படைத்தன்மையுடன் செயலாற்றவேண்டும் என்றுதான் அனைவரது எதிர்பார்ப்பாக இருக்கமுடியும். இப்போது நடந்து முடிந்ததை விட்டு அடுத்த ஆண்டு திருவிழாவுக்கு தேவையான மண்ணை பெற்றுக்கொள்ள கோவில் நிர்வாகமும் அம்பன் கிழக்கு கிராம அபிவிருத்தி சபையும் இணைந்து சுமுகமான தீர்வொன்றை காணவேண்டியது மிக அவசியம்.

குட்டிக் கதைகள்.

2 months ago
🌷கரிசக்காட்டுப்பூவே🌷 Sundhari S ·Sortspdeno0m0m6cug390gha0l61u95ut5gt 11ul1t7uiu401g80tml77a8 · ஆப்ரிக்காவில் வாழ்ந்த ஒரு நாட்டு மன்னன் எதிரி நாட்டு மன்னன் மேல் போருக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை. ஆனால் மகாராணியை தனியாக விட்டு செல்ல பயம்! அதனால் ராணியை ஒரு அறையில் தேவையான உணவுகளை வைத்து மன்னர் பூட்டு பூட்டி விட்டார் ! தன்னுடைய உயிர் நண்பனும் மந்திரி கிட்ட அறையின் சாவியை கொடுத்து ! எனக்கு இந்த அரண்மனையில் யார் மேலும் நம்பிக்கை இல்லை ! உன்னை தவிர . இந்தா ராணியின் அறையின் சாவி ! ஒருவேளை நான் நான்கு நாட்களில் போரில் இருந்து வரவில்லை என்றால் ராணியின் அறை கதவை திறந்துவிடு என்று சொன்னார் ! சொல்லிவிட்டு குதிரையின் மேல் ஏறி புறப்பட்டார் . கொஞ்சம் தூரம் சென்று இருப்பார், பார்த்தால் யாரோ ஒருவர் குதிரையில் அவரை நோக்கி வேகமாக வருவதை பார்த்து தன் குதிரையை நிறுத்த, வந்தது தன் நண்பனான மந்திரி. மன்னர் என்ன விஷயம் ஏன் இவ்வளவு வேகமாக வருகிறீர்கள் என்று கேட்க அதற்கு அவர் சொன்னார் ! மன்னா நீங்க மகாராணியை பூட்டிய அறையின் சாவியை விட்டு விட்டு தவறுதலாக வேற சாவியை என்னிடம் கொடுத்து விட்டீர்கள் ! என்றார் ! Voir la traduction

மீண்டும் ஐநாவுக்கு ஒரு கடிதம்? - நிலாந்தன்

2 months ago
மீண்டும் ஐநாவுக்கு ஒரு கடிதம்? - நிலாந்தன் கடந்த இருபதாம் தேதி ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் “டில்கோ” விருந்தினர் விடுதியில் ஒரு சந்திப்பு ஒழுங்கு செய்யப்பட்டது. சந்திப்புக்கான அழைப்பை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் கஜேந்திரன் எடுத்திருந்தார். குறிப்பாக கருத்துருவாக்கிகளை அழைக்கும் பொழுது அவர் அனைத்துலகை விசாரணைப் பொறிமுறை தொடர்பாகக் கதைக்கப் போகின்றோம் வாருங்கள் என்று அழைத்திருந்தார். அதோடு கடந்த 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15 ஆம் தேதி ஐநாவுக்கு அனுப்பப்பட்ட கூட்டுக்கடிதத்தின் தொடர்ச்சியாகவும் கதைக்க வேண்டும் என்று கேட்டிருந்தார். எண்பதுக்கும் குறையாதவர்கள் வந்திருந்தார்கள்.தமிழ்த்தேசியப் பேரவையைச்சேர்ந்த கட்சித்தலைவர்கள்,பிரமுகர்கள், குடிமக்கள் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காப் போராடும் அமைப்புகளை சேர்ந்தவர்கள், அணையா விளக்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தவர்கள்,மத குருக்கள்…என்றிவ்வாறாக பலதரப்பட்டவர்களும் அங்கே வந்திருந்தார்கள். முதலில் கஜேந்திரக்குமார் பேசினார். தொடர்ந்து அங்கு வந்திருந்தவர்கள் பேசினார்கள். ஒரு கட்டத்தில் கஜேந்திரகுமார் அந்தக் கூட்டத்தின் நோக்கம் ஜெனிவாவுக்கு கடிதம் அனுப்புவது என்று சொன்னார். வரும் செப்டம்பர் மாதம் வர இருக்கும் கூட்டத்தொடரை முன்னிட்டு ஒரு கடிதத்தை அனுப்ப வேண்டும். அந்தக் கடிதம் நான்கு ஆண்டுகளுக்கு முன் அனுப்பப்பட்ட கடிதத்தின் தொடர்ச்சியாகவும், அந்தக்கடிதத்தில் ஏற்கனவே கூறப்பட்டவற்றை வலியுறுத்தியும் எழுதப்பட வேண்டும் என்று கஜேந்திரகுமார் கூறினார்.அவரைத் தொடர்ந்து உரையாற்றிய கலாநிதி குருபரனும் அதே கருத்தைக்கூறி அந்த நோக்கத்துக்காகத்தான் அந்த சந்திப்பு ஒழுங்குபடுத்தப்பட்டது என்று கூறினார்.ஆனால் அழைக்கப்பட்ட ஒரு பகுதியினருக்கு அது பொதுவாக சர்வதேசப் பொறிமுறையைக் குறித்து ஆராய்வதற்கு என்றுதான் கூறப்பட்டது. ஜெனிவாவுக்கு கடிதம் எழுதுவதற்காக என்று தெளிவாகக் கூறப்படவில்லை. அதனால் அந்தச் சந்திப்பில் சர்வதேசப் பொறிமுறை ஒன்றை உருவாக்குவதற்கான பரந்துபட்ட வேலைத்திட்டம் தொடர்பாக ஆழமாக உரையாடப்படவில்லை. இக்கட்டுரை ஆசிரியரும் உட்பட சுரேஷ் பிரேமச்சந்திரன்,சிறீகாந்தா, காணாமல் போகச் செய்யப்பட்டவர்களுக்காகப் போராடும் அமைப்பு ஒன்றின் முக்கியஸ்தர்.. போன்றவர்கள் தெரிவித்த கருத்துக்களுக்கும் அப்பால் சந்திப்பு பெருமளவுக்கு ஐநா மனித உரிமைகள் ஆணையாளருக்கு எழுதப்போகும் கடிதத்தை நோக்கியே குவி மையப்படுத்தப்பட்டது. இந்த இடத்தில் அதற்கு முன் அதாவது நான்கு ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட கடிதத்தைப்பற்றிச் சுருக்கமாகக் கூறவேண்டும். அந்தக் கடிதத்தைத் தயாரிக்கும் வேலையை முதலில் தொடங்கியது மன்னாரைச் சேர்ந்த சிவகரன்.அதன்பின் அவர் இக்கட்டுரை ஆசிரியரும் உட்பட வேறு சிலரையும் அதற்குள் ஈர்த்துக் கொண்டார். முதலாவது சந்திப்பு கிளிநொச்சியில் இடம்பெற்றது.இரண்டாவது சந்திப்பு வவுனியாவில். மூன்றாவது சந்திப்பு கிளிநொச்சியில்.இந்த மூன்றாவது சந்திப்பின் விளைவாக ஒரு கூட்டுக்கடிதம் தயாரிக்கப்பட்டது. அந்தக்கூட்டுக் கடிதத்தில் பிரதான அம்சங்கள் இரண்டு.ஒன்று,பொறுப்புக்கூறலை மனித உரிமைகள் பேரவைக்கு வெளியே கொண்டு போக வேண்டும் என்பது.அதாவது இலங்கை இனப்பிரச்சினை தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களை பொறுப்புக்கூற வைப்பதற்கான அந்தப் பொறிமுறையை ஐநா மனித உரிமைகள் பேரவை என்ற மட்டுப்படுத்தப்பட்ட ஆணையைக் கொண்ட ஒரு கட்டமைப்புக்குள் வைத்துக் கொண்டிருக்காமல் ஐநா பொதுச் செயலர் பொறுப்புக்கூறலை மனித உரிமைகள் பேரவையிடமிருந்து தன்னிடம் எடுத்துக்கொண்டு,அதனை பன்னாட்டு நீதிமன்றங்களுக்கு பரிந்துரைக்க வேண்டும் என்பது முதலாவது கோரிக்கை. இரண்டாவது கோரிக்கை,போர்க்களத்தில் நிகழ்ந்த குற்றங்களை விசாரிப்பதற்காக ஒரு பொறிமுறையை உருவாக்குமிடத்து அதற்கு கால வரையறை இருக்க வேண்டும் என்பது. அதன்படி கஜேந்திரக்குமார் 6 மாத காலம் கால அவகாசம் கொடுக்க வேண்டும் என்று கேட்டார்.ஆனால் ஏனைய கட்சிகள் குறைந்தது ஒரு வருடமாவது வழங்கவேண்டும் என்று கேட்டன. முடிவில் இந்த இரண்டு கோரிக்கைகளையும் முன்வைத்து கூட்டுக்கடிதம் எழுதப்பட்டது. 12 ஆண்டுகளில் தமிழ்த் தேசியக் கட்சிகள் இணைந்து அவ்வாறு உலக நிறுவனம் ஒன்றுக்கு ஒற்றுமையாக ஒரு கூட்டுக்கடிதம் எழுதியமை என்பது அதுதான் முதல் தடவை. ஆனால் அந்த கடிதத்திற்கு ஐநா பெருமளவுக்கு சாதகமாக பதில் வினையாற்றவில்லை.பொறுப்புக்கூறலை அவர்கள் தொடர்ந்தும் மனித உரிமைகள் பேரவைக்குள் முடக்கியதோடு, சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிப்பதற்காக உருவாக்கப்பட்ட கட்டமைப்பும் மனித உரிமைகள் பேரவையின் ஆணைக்கு உட்பட்டதாக, அணையாளருடைய அலுவலகத்துக்குள் இயங்கும் ஓர் அலுவலகமாக உருவாக்கப்பட்டது. அதற்குரிய கால எல்லையும் நிர்ணயிக்கப்படவில்லை. இன்றுவரை அது செயல்படுகிறது. அதாவது அந்த கடிதத்தில் முன் வைக்கப்பட்ட இரண்டு கோரிக்கைகளையும் ஐநாவானது தமிழ் மக்கள் திருப்திப்படத்தக்க விதத்தில் நிறைவேற்றவில்லை. இந்நிலையில் இந்த செப்டம்பர் மாதம் வரவிருக்கும் ஐநா கூட்டத் தொடருக்கு முன்னதாக தமிழ்க் கட்சிகள் மீண்டும் ஒரு கூட்டுக் கடிதத்தை அனுப்புவதே டில்கோ சந்திப்பின் நோக்கம் என்று கூறப்பட்டது. ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கைக்கு வந்து போயிருக்கும் ஒரு பின்னணியில்,அவர் கொழும்பில் வைத்துத் தெரிவித்த கருத்துக்கள் தமிழ் மக்களின் கோரிக்கைகளோடு உடன்படாதவைகளாகக் காணப்படும் ஒரு பின்னணியில், கொழும்பில் உள்ள ஐநா அலுவலகம் தெரிவிக்கும் கருத்துக்கள் தமிழ் மக்களுக்கு நம்பிக்கையூட்டத் தவறியிருக்கும் ஒரு பின்னணியில்,இலங்கை அரசாங்கமானது சுயாதீன வழக்குத் தொடுநர் அலுவலகம் ஒன்றை உருவாக்கவிருப்பதாக கஜேந்திரகுமார் அந்தச் சந்திப்பில் தெரிவித்தார். அந்தக் கட்டமைப்பானது நாட்டின் உள்நாட்டுப் பொறிமுறையின் நம்பகத்தன்மையைப் பலப்படுத்தும் நோக்கத்தை கொண்டது.இது ஐநா மனித உரிமைகள் ஆணையாளருடைய எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் உள்நோக்கத்தை கொண்டுள்ளது.இலங்கை அரசாங்கத்தின் சட்டமா அதிபர் திணைக்களமானது அரசாங்கத்தின் ஓர் அங்கமாக இருப்பதனால் அதன் சுயாதீனப் பண்பு குறித்து கேள்விகள் உண்டு.எனவே உத்தேச சுயாதீன வழக்குத் தொடுநர் அலுவலகமானது சுயாதீனமானது என்ற ஒரு தோற்றத்தைக் கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் முயற்சிக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில்,அதுபோன்ற உள்நாட்டுப் பொறிமுறைகளை பலப்படுத்தும் கட்டமைப்புகளை ஏற்றுக்கொள்ளாமல் அனைத்துலக விசாரணையை வலியுறுத்தவேண்டும் என்றும் கஜேந்திரக்குமார் கேட்டுக்கொண்டார். சந்திப்புக்குத் தமிழரசுக் கட்சி அழைக்கப்பட்டிருந்த போதிலும் அது வந்திருக்கவில்லை. அண்மையில் அக்கட்சியின் பதில் தலைவர் சிவஞானம், ஐநாவுக்கு எழுதிய கடிதத்தின் அடிப்படையில் அங்கு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.எனினும் சில நாட்களின் பின் சிவஞானம் நடத்திய ஊடகச் சந்திப்பில்,தமது கட்சி அனுப்பிய கடிதம் உள்நாட்டுப் பொறிமுறையைக் கேட்கவில்லை என்று தெரிவித்திருந்தார். ஐநாவுக்கு கடிதம் எழுதவேண்டும்.அதில் சந்தேகம் இல்லை.தமிழ் மக்கள் தமது பிரச்சினைகளை பேசுவதற்கு திறக்கப்பட்டிருக்கும் ஒரே அனைத்துலக அரங்கம் அதுதான்.அது பலவீனமானது.காஸாவில் மீண்டும் ஒரு முள்ளிவாய்க்காலைத் தடுக்க முடியாத ஐநா தமிழ் மக்களுக்கு எப்படிப்பட்ட ஒரு நீதியைப் பெற்றுத்தரும் என்ற கேள்விக்கு இங்கு விடை முக்கியம். எனினும், தமிழ் மக்கள் ஐநாவுடன்தான் ”என்கேஜ்” பண்ணவேண்டும். அதில் யாருக்கும் சந்தேகம் இல்லை. ஆனால் இங்கு பிரச்சனை என்னவென்றால், ஐநா பொறுப்புக்கூறலை அனைத்துலகை நீதிமன்றங்களிடம் பாரப்படுத்த வேண்டும் என்று ஒரு கடிதத்தைக் கூட்டாக எழுதுவதால் மட்டும் அது நடக்கப் போவதில்லை என்பதைத்தான் கடந்த நான்கு ஆண்டுகளும் நிரூபித்திருக்கின்றன. டில்கோ சந்திப்பில், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காகப் போராடும் அம்மா ஒருவர் தெரிவித்ததுபோல தமிழ் மக்கள் ஐநாவில் முடிவுகளை எடுக்கும் நாடுகளை நோக்கி லொபி செய்ய வேண்டும். ஈழத் தமிழர்கள் நீதிக்கான தமது போராட்டத்தில் அனைத்துலக அரங்கில் தமக்கு ஆதரவான சக்திகளைத் திரட்டிக்கொள்ள வேண்டும்.அவ்வாறு அனைத்துல சமூகத்தைத் தம்மை நோக்கித் திரட்டிக் கொள்வது என்றால், அதற்கு முதல் தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே திரட்டிக் கொள்ள வேண்டும். இது டில்கோ சந்திப்பில் இக்கட்டுரை ஆசிரியரால் சுட்டிக்காட்டப்பட்டது.ஆனால் அத்தகைய பரந்துபட்ட வேலைத்திட்டங்கள் தொடர்பில் அச்சந்திப்பில் பெரிய அளவுக்கு விவாதிக்கப்படவில்லை.அவை ஒரு சந்திப்பில் மட்டும் கூடி முடிவெடுக்கக்கூடிய விடையங்கள் அல்ல. முன்னைய கடிதத்தின் தொடர்ச்சியாக கடந்த நான்கு ஆண்டுகளாக தமிழ்த் தரப்பு தாயகத்தில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அளவுக்கு உழைத்திராத ஒரு பின்னணிக்குள்,ஐநா தமிழ் மக்களுக்கு நம்பிக்கையூட்டா விதத்தில் விடயங்களை நகர்த்திக் கொண்டுவரும் ஒரு பின்னணியில், மீண்டும் ஒரு கடிதம் எழுதுவதை எப்படிப் பார்ப்பது? அதிலும் குறிப்பாக அக்கடிதத்தில் பிரதான கட்சியான தமிழரசுக் கட்சி கையெழுத்துப் போடவில்லை என்றுசொன்னால் அந்த கடிதத்துக்கு ஒப்பீட்டளவில் பெரிய அங்கீகாரம் இருக்காது.தமிழரசுக் கட்சி அவ்வாறு ஒரு கூட்டுக்கடிதத்தில் கையெழுத்து போடக்கூடிய நிலைமைகள் இல்லை என்பதைத்தான் டில்கோ சந்திப்பில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களுக்கு சிவஞானம் கூறிய பதிலுக்கூடாக உணரக்கூடியதாக உள்ளது.ஆயின், தமிழ்த் தரப்பு இரண்டாக நிற்கிறது என்று பொருள். இவ்வாறு தமிழ்த் தரப்பு இரண்டாக நிற்பது என்பது தமிழ் மக்களைப் பிரித்துக் கையாள விரும்புகின்ற வெளிச் சக்திகளுக்கு வாய்ப்பானது. ஏற்கனவே நான்கு ஆண்டுகளுக்கு முன் எல்லாத் தமிழ்த் தேசியக் கட்சிகளும் இணைந்து அனுப்பிய கடிதத்திற்கே ஐநாவின் பதில்வினை சாதகமாக இல்லாத ஒரு பின்னணிக்குள், மீண்டும் ஒரு கடிதத்துக்கு, அதிலும் உள்ளதில் பெரிய கட்சி கையெழுத்திடாத ஒரு கடிதத்துக்கு ஐநாவின் பதில்வினை எப்படியிருக்கும்?. அதிலும் குறிப்பாக கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சிக்கு நிகராக அரசாங்கத்துக்கும் ஏழு ஆசனங்கள் கிடைத்திருக்கின்றன. எனவே தமிழ் மக்களின் விவகாரங்களைக் கையாள்வதற்குத் தனக்கும் ஆணை உண்டு என்று அரசாங்கம் கூறக்கூடிய நிலைமைகள் அதிகமுடைய அரசியல் மற்றும் ராஜீயச் சூழலில், தமிழ்த் தரப்பில் பிரதான,பெரிய கட்சியை இணைத்துக் கொள்ளாமல் ஒரு கடிதத்தை எழுதினால், அது அனைத்துலக அரங்கில் எப்படிப் பார்க்கப்படும்? முதலாவது கடிதத்தின் பின் கடந்த நான்கு ஆண்டுகளாக அந்த கடிதத்தில் எழுதப்பட்டவற்றை நோக்கி அனைத்துலக சமூகத்தை உந்தித்தள்ளும் விதத்தில் தாயகத்தில் குறிப்பிட்டுச் செல்லக்கூடிய நிர்ணயகரமான எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருக்கவில்லை.அதன் விளைவாகவே ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் கொழும்பில் வைத்து அரசாங்கத்துக்கு நோகாமல் கருத்துக் கூறிவிட்டுப் போயிருக்கிறார்.இந்நிலையில்,மீண்டும் ஒரு கடிதத்தை தமிழ்த் தரப்பு எழுதப் போகிறது. கடிதம் எழுத வேண்டும்.ஆனால் அதோடு மட்டும் நிற்கமுடியாது.அனைத்துலக சமூகத்தில் ஆதரவு சக்திகளைத் திரட்ட வேண்டும்.இதுதான் முன்னைய கடிதத்திற்குப் பின்னரான கடந்த நான்கு ஆண்டுகளில் பெற்றுக்கொண்ட பாடம். https://www.nillanthan.com/7576/

யாழில் மது போதையில் தேவாலயத்திற்குள் அத்துமீறி நுழைந்து மாதா சிலையை அடித்து உடைத்த கும்பல் கைது

2 months ago
மனிதமும் மிருகமும் கலந்ததுதான் மனித இனம். எந்தக்கடவுளாக இருந்தாலும், கடவுள் நம்பிக்கை என்பது மனிதர்களில் உறைந்திருக்கும் மிருக குணங்களை அழித்து மனித மனத்தோடு ஆனந்தமாக, அமைதியாக வாழவைப்பது. அழிக்கத்தான் வேண்டும் என்றால் தவறாக உணரப்படும் வழிபாட்டு முறைகளை அழிக்கலாம். “இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க” என்பது அனேகமாக தமிழர்களின் கடவுள் வழிபாட்டில் தலையாக உள்ளதைக் காட்டுகிறது.🙏

பாரம்பரியப் பரீட்சை முறைக்கு மாற்றாக, தொகுதி முறை கல்வித் திட்டம் – பிரதமர்

2 months ago
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை 2026 முதல்: புதிய பாடத்திட்டம் மற்றும் GPA முறைமை – விரிவான வழிகாட்டல் 2026 ஆம் ஆண்டு முதல் அமுலாகவுள்ள க.பொ.ச. சாதாரண தர பரீட்சையின் புதிய பாட அமைப்பையும், GPA (Grade Point Average) மதிப்பீட்டு முறையையும் பற்றிய முழுமையான தகவல்கள் இங்கே வழங்கப்படுகின்றன. இந்த மாற்றங்கள் மாணவர்களின் கல்விப் சுமையை குறைத்து, ஆழமான கற்றலுக்கு வழிவகுத்து, சர்வதேச தரங்களுக்கு ஏற்ற வகையில் அவர்கள் திறன்களை மதிப்பீடு செய்யும் வாய்ப்பை ஏற்படுத்தும். 🔹 புதிய பாடத்திட்டம்: மொத்தம் 7 பாடங்கள் புதிய முறையில், மாணவர்கள் 10 பாடங்கள் கற்க வேண்டிய பழைய முறையைவிட, இப்போது 7 பாடங்கள் மட்டும் கற்க வேண்டியுள்ளது. இது மாணவர்களின் பாடங்களிற்கான பளுவை குறைத்து, ஆழமான கற்றலுக்கு வாய்ப்பு வழங்குவதாகும். ✅ கட்டாய Subjects – 5: இவை அனைத்து மாணவர்களும் கற்கவேண்டியபாடங்கள்: 1. தாய்மொழி – தமிழ், සිංහල அல்லது ஏதேனும் அங்கீகரிக்கப்பட்ட தாய்மொழி (Credits: 3) 2. English – Communication skills, Reading, Writing, Speaking (Credits: 3) 3. Mathematics – Concepts, Problem solving, Logical thinking (Credits: 3) 4. Science – Physics, Chemistry, Biology உள்ளடக்கிய General Science (Credits: 3) 5. Religion – Buddhism, Hinduism, Islam, Christianity (Credits: 2) 🔸 மொத்த கட்டாய Subjects இற்கான Credits: 14 ✅ தேர்ந்தெடுக்கக்கூடிய Subjects – 2: மாணவர்கள் தங்கள் ஆர்வமும் எதிர்கால இலக்குகளையும் பொருத்து, பின்வரும் களங்களில் இருந்து 2 Subjects தேர்வு செய்யலாம். ஒவ்வொன்றுக்கும் Credits: 2. Second National Language Information and Communication Technology History Civic Education Health and Physical Education Technology : Tourism and Hospitality Management Technology Design and Engineering Technology Livestock Product Technology Artistic Product Technology Entrepreneurship and E-commerce Technology Geography Aesthetics Education: Oriental Music Western Music Carnatic Music Oriental Dance Bharatha Dance Western Dance Drama and Theatre Art Entrepreneurship and Financial Literacy ➡️ இந்த 7 Subjects அமைப்பில், மாணவர்கள் பல வகையான பாடங்களில் சிதறி இல்லாமல், தங்களுக்குப் பயனுள்ள துறைகளில் ஆழமாக கவனம் செலுத்த முடியும். 🔹 GPA (Grade Point Average) முறைமை: பழைய A, B, C, S, F எனப்படும் Letter Grade முறைக்கு பதிலாக, GPA முறை அமலுக்கு வருகிறது. GPA என்பது மாணவர்கள் பெற்றுள்ள ஒட்டுமொத்த மதிப்பெண் நிலையை இலக்க முறையில் (Numerical Form) காட்டும் முறை. இது சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட முறைமை ஆகும், மேலும் மாணவர்களின் முழுமையான கல்வி செயல்திறனை துல்லியமாக பிரதிபலிக்க உதவும். ✅ GPA மதிப்பீட்டின் தர விகிதங்கள் உதாரணமாக): % Marks Range Grade Point 90% - 100% 4.0 80% - 89% 3.7 70% - 79% 3.3 60% - 69% 3.0 50% - 59% 2.7 40% - 49% 2.0 (Pass) Below 40% 0.0 (Fail) 👉 இந்த Grade Point values Education Ministry வழியாக அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் வரை இவை மாதிரிப் பட்டியல் மட்டுமே. ✅ GPA கணக்கீட்டு முறை: மாணவர் ஒருவர் 7 Subjects கற்கின்றார் என எடுத்துக்கொள்வோம். அவர் பெற்றுள்ள Grade Points பின்வருமாறு: Mathematics: 3.7 English: 3.3 Mother Tongue: 4.0 Religion: 3.7 Science: 3.0 Optional Subject 1: 3.5 Optional Subject 2: 3.2 📌 Total Grade Points = 3.7 + 3.3 + 4.0 + 3.7 + 3.0 + 3.5 + 3.2 = 24.4 📌 Final GPA = 24.4 / 7 = 3.48 இதன்படி, மாணவரின் Final GPA = 3.48 ஆகும். 🔹 GPA முறைமையின் நன்மைகள்: ✅ துல்லியமான மதிப்பீடு: GPA system மாணவர்களின் ஒட்டுமொத்த திறனை துல்லியமாக பிரதிபலிக்கிறது ✅ குறைந்த மன அழுத்தம்: ஒரு Subject இல் குறைந்த மதிப்பெண் பெற்றாலும், மொத்த GPA அதிகமாக இருக்கலாம் ✅ International Recognition: உலக பல்கலைக்கழகங்களில் GPA முறை ஏற்கப்படுகிறது ✅ A/L Stream தெரிவில் உதவுகின்றது: திறன்கள் மற்றும் ஆர்வங்களை GPA மூலம் தெளிவாக அறிய முடியும் ✅ Relative Assessment: மாணவர்களிடையே ஒப்பீட்டு மதிப்பீடு செய்வது சாத்தியம் 🔹 சவால்கள் மற்றும் முக்கிய கவனத்துக்குரிய அம்சங்கள்: 📌 Awareness: GPA முறைமை பற்றி மாணவர்களும், பெற்றோர்களும், ஆசிரியர்களும் சரியான விளக்கங்களைப் பெற வேண்டும் 📌 Minimum GPA for Pass: ஒருவரை Pass ஆகக் கருத தேவையான GPA மற்றும் ஒவ்வொரு Subject இல் Pass குறியீடு தெளிவாக இருக்க வேண்டும் 📌 Transparency: GPA கணக்கீட்டு முறை மற்றும் Grade Point Conversion பற்றிய நெறிமுறைகள் வெளிப்படையாக இருக்க வேண்டும் இந்த புதிய மாற்றங்கள் இலங்கையின் கல்வி முறைமைக்குள் விசேஷமான மாற்றத்தை உருவாக்கும். அதன் வெற்றி, சரியான திட்டமிடல், செயல் திட்டம், மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்புகளின் ஒத்துழைப்பு ஆகியவற்றின் மீது தழுவியுள்ளது. 📌 மாணவர்களுக்கு அதிகப் பயனுள்ள, குறைந்த அழுத்தமுள்ள மற்றும் சர்வதேச தரத்திற்கு இணையான கல்வி அனுபவம் ஒன்றை இம்மூலம் வழங்க முடியும் என்பதே நம்பிக்கை. இணையத்தில் இருந்து....

இலங்கையில் வதைமுகாம்கள், சித்திரவதைகள் நீண்டகால வரலாற்றைக் கொண்டது

2 months ago
இந்த நிலவன் தற்போது raw மூலம் இயக்கப்படுபவர். இறுதி யுத்தத்தின்போது பலரை காட்டிக் கொடுத்தவர். தற்போதும் சமூக வலைத்தளங்களில் குறிப்பாக ட்விட்டர் தளத்தில் தவறான தகவல்களை கையாண்டு வருகிறார். அண்மையில் கூட குழந்தை போராளிகள் என்ற வாதம் வரும்போது ஆம் இருந்தார்கள் தலைவர் கூட முதல் குழந்தை போராளி என்ற சொல்லாடலை பயன்படுத்துகின்றனர்.

42 ஆண்டுகளாகக் கற்றுக்கொள்ளாத ஒரு தீவு – நிலாந்தன்.

2 months ago
42 ஆண்டுகளாகக் கற்றுக்கொள்ளாத ஒரு தீவு – நிலாந்தன். முதலாவதாக 83 ஜூலை ஒர் இனக்கலவரம் அல்ல. இனக்கலவரம் என்றால் பரஸ்பரம் மோதிக்கொள்ள வேண்டும். அது இன அழிப்பு.நிராயுத பாணிகளாக இருந்த கொழும்பில் வசித்த தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட திட்டமிட்ட ஒரு தாக்குதல். அது திட்டமிடப்பட்டது என்பது முதலாவது. பின்னணியில் அரசு தரப்பைச் சேர்ந்த பிரமுகர்கள் இருந்தார்கள் என்பது இரண்டாவது. எனவே அது தன்னெழுச்சியாக தோன்றவில்லை. அதற்குப்பின் திட்டமிட்டு ஒரு தரப்பு உழைத்தது. தமிழ் மக்களுக்கு ஒரு பாடம் படிப்பிக்க வேண்டும் என்ற ஒர் உள்நோக்கம் அங்கே இருந்தது. அதோடு தமிழ் மக்களின் பொருளாதார வளர்ச்சி காரணமாக தூண்டப்பட்ட பொறாமையை தீர்த்துக்கொள்ள ஒரு சந்தர்ப்பம் தேவைப்பட்டது. இவ்வாறு எல்லாக் காரணிகளும் இணைந்த பொழுது நன்கு திட்டமிட்டு, தேவையான தகவல்கள் திரட்டப்பட்டு, தேவையான ஆட்கள் திரட்டப்பட்டு,அரசாங்கத்தைச் சேர்ந்த சில பிரமுகர்களால் ஊக்குவிக்கப்பட்ட ஒரு தாக்குதல் நடவடிக்கை அது.எனவே அதனை தன்னியியல்பான கலவரம் என்றெல்லாம் அழைக்க முடியாது. அது திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்ட ஒரு இன அழிப்புச் செயற்பாடு. ஆனால் அந்தப் பழிவாங்கல் அல்லது இன அழிப்பு நடவடிக்கை நாட்டை எங்கே கொண்டு வந்து விட்டது ? முதலாவதாக, நாடு வெளிச் சக்திகளுக்கு திறந்து விடப்பட்டது.முதலில் இந்தியா தலையிட்டது. இந்தியா ஒருபுறம் அரசுக்கும் அரசுக்கும் இடையிலான உறவுகளின் ஊடாக இலங்கைக்கு விசேஷ தூதுவர்களை அனுப்பியது. இன்னொருபுறம் தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட்ட கொந்தளிப்பான உளவியலின் பின்னணியில் அங்கு ஏற்கனவே காணப்பட்ட ஆயுதப் போராட்ட அமைப்புகளை இந்தியா ஊக்குவித்தது. தமிழகத்தை ஈழப் போராட்டத்தின்பின் தளமாக திறந்துவிட்டது. அதன் விளைவாக ஆயுதப் போராட்ட இயக்கங்களுக்கு பயிற்சியும் ஏனைய வசதிகளும் அங்கு கிடைத்தன. அதனால் ஈழப் போராட்டம் திடீரென்று வீங்கியது. இங்கு வீக்கம் என்ற சொல் என்னுடையது அல்ல. அது ஏற்கனவே விமர்சகர்களால் பயன்படுத்தப்பட்ட ஒரு சொல். 70களில் தொடங்கி 83 வரையிலும் தமிழ் மக்களுடைய ஆயுதப் போராட்டம் படிப்படையாக மெல்ல மெல்ல வளர்ந்துவந்தது. ஆனால் 83 ஜூலைக்குப் பின் அந்த வளர்ச்சி இயல்பானதோ அல்லது படிப்படியானதோ அல்ல. அது அசாதாரணமான ஒரு வளர்ச்சி. அதனால்தான் அதனை வீக்கம் என்று அழைக்க வேண்டி இருக்கிறது. அந்த வீக்கத்தின் விளைவுதான் போராட்டத்தில் பின்னர் ஏற்பட்ட பல குழப்பங்களும் வீழ்ச்சிகளும் ஆகும். இவ்வாறு ஈழப் போராட்டத்தில் முதலாவது பிராந்தியத் தலையீடு ஏற்பட்டது 83 ஜூலையின் விளைவாகத்தான். அங்கிருந்து தொடங்கி கடந்த 42 ஆண்டுகளாக இலங்கைத் தீவு வெளியாருக்கு திறந்து விடப்பட்ட ஒரு தீவாகத்தான் காணப்படுகின்றது. முதலில் இனப்பிரச்சினை பிராந்தியமயப்பட்டது. அடுத்த கட்டமாக அது அனைத்துலக மயப்பட்டது. இப்பொழுது இனப்பிரச்சினை அனைத்துலக மயப்பட்ட ஒரு பிரச்சினை. இலங்கை அரசாங்கம் கடந்த 16 ஆண்டுகளாக ஐநாவில் நிறுத்தப்பட்டிருக்கிறது. ஓர் அரசுடைய தரப்பாக அதனை அவர்கள் சமாளிக்க முடிகிறது.உள்நாட்டுப் பொறி முறையை வலியுறுத்துவதன் மூலமும் ஐநா தீர்மானங்களை நிராகரிப்பதன் மூலமும் இலங்கை அரசாங்கம் இனப்பிரச்சினையை அனைத்துலக மய நீக்கம் செய்ய முற்படுகிறது.ஆனாலும் யதார்த்தத்தில் இனப்பிரச்சினை அனைத்துலக மயப்பட்டு விட்டது. இதை அதன் கூர்மையான வார்த்தைகளில் சொன்னால் இலங்கை வெளிச் சக்திகளுக்கு திறந்து விடப்பட்டு விட்டது. முதலில் அப்போது இருந்த ஜனாதிபதி ஜெயவர்த்தன மேற்கத்திய கூலிப்படைகளை நாட்டுக்குள் இறக்கினார். மேற்கத்திய ஆயுத தளபாடங்களை நாட்டுக்கு இறக்கினார். மேற்கத்திய ராணுவ ஆலோசகர்களை நாட்டிற்குள் இறக்கினார். அதேசமயம் ஈழத் தமிழ் அகதிகள் இந்தியாவை நோக்கிச் சென்றார்கள். ஐரோப்பாவெங்கும் படர்ந்து சென்றார்கள். முதலாம் கட்டமாக ஈழப் போர் பிராந்திய மையப்பட்டதன் விளைவாக இந்திய அமைதி காக்கும் படை நாட்டுக்குள் இறங்கியது. இந்திய இலங்கை உடன்படிக்கை எழுதப்பட்டது. இரண்டாம் கட்டம், ஈழப்போர் அனைத்துலக மயப்பட்டது. நோர்வியின் அனுசரணையுடனான சமாதான முயற்சிகளின்போது ஸ்கன்டினேவிய நாடுகளைச் சேர்ந்த யுத்த நிறுத்தக் கண்காணிப்பு குழுவினர் நாட்டுக்குள் இறக்கப்பட்டார்கள்.உலகின் வெவ்வேறு தலைநகரங்களில் பேச்சு வார்த்தைகள் இடம்பெற்றன. அடுத்த கட்டம் 2009க்கு பின். கடந்த 16 ஆண்டுகளாக இலங்கை அரசாங்கங்கள் ஐநாவுக்கு பொறுப்பு கூற வேண்டியிருக்கிறது. இப்பொழுது ஈழப் போர் இல்லை. ஆனால் அதன் விளைவாக உருவாக்கப்பட்ட இந்திய இலங்கை உடன்படிக்கையின் எச்சமாகிய 13ஆவது திருத்தம் யாப்பில் உண்டு. இது முதலாவது விளைவு. இரண்டாவது விளைவாக சீனா இச்சிறிய தீவுக்குள் இறங்கிவிட்டது.அம்பாந்தோட்டையிலும் இலங்கைத் தீவின் தலைநகரக் கடலில் சீனப்பட்டினத்தில் சீனா நிரந்தரமாகக் காலூன்றி விட்டது. புவிசார் அரசியலின் அடிப்படையில் இந்த பிராந்தியம் இந்தியாவின் செல்வாக்கு மண்டலத்துக்குள் காணப்படுகிறது. ஆனால் இந்தப் பிராந்தியத்தில் இலங்கைத் தீவில் இருந்து 400 கடல் மைல் தொலைவில் உள்ள சீனா தீவுக்குள் இறங்கிவிட்டது.எனவே பிராந்தியத்துக்குள் தனது மேலாண்மையைப் பேணவேண்டிய நிர்பந்தம் இந்தியாவுக்கு ஏற்பட்டிருக்கிறது. இவ்வாறு பிராந்தியத்தில் உள்ள இரண்டு பேரரசுகளின் இழு விசைகளுக்குள் இப்பொழுது இலங்கை சிக்கியிருக்கிறது. அதாவது இலங்கை இப்பொழுது இறைமை உடைய ஒரு தீவு அல்ல. அது பிராந்திய மற்றும் பூகோள பேரரசுகளின் இழு விசைகளுக்குள் சிக்கியிருக்கும் ஒரு தீவு. கலைத்துவமாகச் சொன்னால் பேரரசுகளால் பங்கிடப்படும் ஓர் அப்பம். யுத்தத்தை வென்று அதன் அடுத்த கட்டமாக யுத்த வெற்றி வாதத்திற்கு தலைமை தாங்கிய ராஜபக்ச குடும்பத்தை அவர்களுக்கு வாக்களித்த சொந்த மக்களே ஆட்சியில் இருந்து அகற்றித் துரத்தினார்கள். சில ஆண்டுகளுக்கு முன் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட பொழுது சிங்கள மக்கள் அதிகமாக புலம் பெயர்ந்தார்கள்.லட்சக்கணக்கான சிங்கள மக்கள் இதுவரை புலம்பெயர்ந்து விட்டார்கள்.யுத்தத்தின் விளைவே பொருளாதார நெருக்கடு.இப்பொழுது யுத்தத்தில் வென்றெடுத்த நாடு தமிழ் மக்களுக்கும் சொந்தமில்லை; சிங்கள மக்களுக்கும் சொந்தமில்லை; முஸ்லிம் மக்களுக்கும் சொந்தமில்லை. 2009 க்குப் பின் முஸ்லிம்களுடைய சொத்துக்களும் முதலீடுகளும் திட்டமிட்டுத் தாக்கப்பட்டன. 83 ஜூலை போல. அதன் விளைவாக முஸ்லிம் மக்கள் மத்தியிலிருந்தும் குறிப்பிடத்தக்க அளவுக்கு பெரு வணிகர்கள் நாட்டை விட்டு வெளியேறி விட்டார்கள்.அல்லது தங்களுடைய முதலீடுகளை வெளியே நகர்த்தி விட்டார்கள். தொடர்ந்து வந்த ஈஸ்டர் குண்டு வெடிப்பின் பின்னணியில் முஸ்லிம்கள் இந்த நாடு தங்களுக்கு பாதுகாப்பானது என்ற உணர்வை இழந்து விட்டார்கள். எனவே தொகுத்துப் பார்த்தால், யுத்தத்தில் வென்ற நாடு ஏனைய எல்லாவற்றிலுமே தோற்றுவிட்டது. மிகக்குறிப்பாக அதன் இறைமையை இழந்து விட்டது. இப்பொழுது அது ஒரு பேரரசுகள் பங்கிடும் அப்பம். 83 ஜூலையிலிருந்து இந்திய தலையீட்டில் தொடங்கி இப்பொழுது அம்பாந்தோட்டையிலும் நாட்டின் தலைநகரத்திலும் சீனா நிரந்தரமாக தங்கி விட்டது. இன்னொரு புறம் ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை பொறுப்புக் கூற வேண்டிய நிலை. இது முதலாவது. இரண்டாவது, ஜூலை 83 விளைவாக தமிழ் மக்களுடைய ஆயுதப் போராட்டம் விரிவடைந்தது.ஒரு கட்டத்தில் நாட்டில் இரண்டு அதிகாரம் மையங்கள் இருந்ததை ஏற்றுக்கொண்டு ரணில்-பிரபாகரன் உடன்படிக்கை செய்ய வேண்டி வந்தது. அதாவது 83 ஜூலையில் தமிழ் மக்களுக்கு ஒரு பாடம் படிப்பிக்க வேண்டும், தமிழ் மக்களை பழிவாங்க வேண்டும்,என்று சிந்தித்து திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட இனஅழிப்பானது தமிழ் மக்களை மேலும் கொதித்து எழச் செய்ததே தவிர அவர்களைப் பணிய வைக்கவில்லை. விளைவாக லட்சக்கணக்கானவர்கள் கொல்லப்படும் ஒரு யுத்த களம் திறக்கப்பட்டது. அனைத்துலக அரங்கில் இலங்கைத் தீவு அவமதிக்கப்பட்டது.தேரவாத பௌத்தத்தின் ஒரே சேமிப்பிடம் என்று தன்னைப் பெருமையாகக் கூறிக் கொள்ளும் ஒரு தீவு இந்த நூற்றாண்டின் முதலாவது பெரிய இன அழிப்புக் களமாக மாறியது. காணாமல் ஆக்கப்பட்டவர்களை அதிகமுடைய ஒரு தீவாக மாறியது.இந்த நாட்டின் முக்கிய படைத் தளபதிகளும் யுத்தத்தில் வென்ற குடும்பமும் அமெரிக்க கண்டத்துக்கு போக முடியாது. பிரித்தானியாவுக்கும் போக முடியாது.அதாவது 83 ஜூலை எந்த நோக்கத்தில் அடிப்படையில் திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்டதோ, அந்த நோக்கம் நிறைவேறவில்லை. தமிழ் மக்களின் எதிர்ப்பைத் தடுத்து நிறுத்த முடியவில்லை.இது இரண்டாவது விளைவு. மூன்றாவது விளைவு,போரின் விளைவாக தமிழ் மக்கள் புலம்பெயர்ந்தார்கள். 10 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் புலம்பெயர்ந்து விட்டார்கள். இது தமிழ் மக்களின் மொத்த ஜனத்தொகைக்குள் மூன்றில் ஒன்றுக்கு கிட்ட வரும். விளைவாக ஈழத் தமிழ் சமூகம் கடந்த இரண்டு தசாப்தங்களிலும் படிப்படியாக உலகில் மிகப் பலமான, மிகத்துடிப்பான, வினைத்திறன் மிக்க ஒரு புலம்பெயர் சமூகமாக எழுச்சி பெற்றிருக்கிறது. 2009க்குப் பின் தோல்வியை ஒப்புக் கொள்ளாது தொடர்ந்து போராடும் ஒரு சமூகமாகவும் அது காணப்படுகிறது. நிதி ரீதியாக பலம் வாய்ந்த, சில நாடுகளின் முடிவெடுக்கும் ராஜதந்திரிகள் மத்தியில் செல்வாக்குமிக்க, ஒரு சமூகமாக புலம் பெயர்ந்த தமிழ் சமூகம் வளர்ந்து வருகின்றது. புலப்பெயர்ச்சியின் விளைவாக எழுச்சிபெற்ற தமிழ் முதலாளிகள் தமிழகத்தின் திரைத்துறை மையமாகிய கோடம்பாக்கத்தில் முதலீடு செய்யும் ஒரு வளர்ச்சியைப் பெற்று விட்டார்கள்.உலகம் முழுவதிலும் அவர்கள் வெற்றிகரமான முதலீட்டாளர்களாகத் தங்களைத் தொடர்ந்து ஸ்தாபித்து வருகிறார்கள்.அவர்களிற் சிலர் இலங்கைக்குள்ளும் திரும்பி வந்து விட்டார்கள். இங்கே அவர்கள் சிங்கள மக்கள் மத்தியில் வங்குரோத்தாகி வரும் சொத்துக்களை விலைக்கு வாங்கி வருகிறார்கள். இலங்கை ரூபாய்களோடு காணப்பட்ட தமிழர்களை கொழும்பிலிருந்து அகற்றுவதற்கு 83 ஜூலை முன்னெடுக்கப்பட்டது. ஆனால் அதே தமிழர்கள் இப்பொழுது டொலர்களோடும் பவுன்ஸ்சோடும் யூரோக்களோடும் நாட்டுக்குள் திரும்பி வருகிறார்கள். அவர்கள் கொழும்பிலும் நாட்டின் ஏனைய பாகங்களிலும் முதலீடு செய்யக்கூடிய, நிதிப் பலமிக்க ஒரு சமூகமாக எழுச்சிபெற்று விட்டார்கள். அதாவது தமிழ் மக்களின் பொருளாதார எழுச்சியைக் கண்டு, புத்திசாலித்தனத்தைக் கண்டு,கெட்டித்தனத்தை கண்டு, பொறாமை கொண்டு தென்னிலங்கையில் அவர்களுடைய சொத்துக்களை அழித்தார்கள். ஆனால் 42 ஆண்டுகளின் பின் இப்பொழுது தமிழ் மக்கள் தென்னிலங்கையில் வங்குரோத்தான சிங்கள முதலாளிகளின் சொத்துக்களை வாங்கும் ஒரு வளர்ச்சிக்கு வந்து விட்டார்கள். இது 83 ஜூலை மாதம் இன அழிப்பை செய்தவர்கள் எதிர்பாராத ஒரு வளர்ச்சி. அவர்கள் தென்னிலங்கையில் இருந்து துரத்திய மக்கள் இப்பொழுது உலகம் முழுவதும் படர்ந்து,பலம் வாய்ந்த ஒரு சமூகமாக,நிதிப் பலம் மிக்க ஒரு சமூகமாக எழுச்சி பெற்று விட்டார்கள்.இது மூன்றாவது முக்கிய விளைவு. எனவே 83 ஜூலை விளைவுகளைத் தொகுத்துப் பார்த்தால் இலங்கைத் தீவு பெற்றவைகளை விட இழந்தவைகளே அதிகம். அது இழந்தவைகளுக்குள் அதன் இறைமையும் அடங்கும். https://athavannews.com/2025/1440767
Checked
Sun, 09/28/2025 - 12:40
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed