புதிய பதிவுகள்2

CEB யோசனை குறித்த பொது மக்களின் கருத்து கோரல் விரைவில்

1 month 3 weeks ago
CEB யோசனை குறித்த பொது மக்களின் கருத்து கோரல் விரைவில் Jan 2, 2026 - 08:02 PM 2026 ஆம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையான காலப்பகுதிக்கான எதிர்பார்க்கப்படும் செலவு 137,016 மில்லியன் ரூபாவாகும் எனவும், தற்போதுள்ள கட்டணங்களின் கீழ் கிடைக்கும் வருமானம் 113,161 மில்லியன் ரூபாவாக மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் இலங்கை மின்சார சபை தனது யோசனையில் சுட்டிக்காட்டியுள்ளது. இதற்கமைய, 13,094 மில்லியன் ரூபா வருமானப் பற்றாக்குறை நிலவுவதால், மொத்த மின்சாரக் கட்டணத்தை 11.57% சதவீதத்தால் அதிகரிக்க வேண்டும் என மின்சார சபை முன்மொழிந்துள்ளது. 2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டுக்கான மின்சாரக் கட்டணத் திருத்த யோசனையை இலங்கை மின்சார சபை, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் (PUCSL) கையளித்துள்ளது. இதில் நிலையான கட்டணம் மற்றும் அலகுக் கட்டணம் ஆகிய இரண்டையும் அதிகரிக்க மின்சார சபை பிரேரித்துள்ளது. முன்மொழியப்பட்ட திருத்தங்களுக்கு அமைய, வீட்டுப் பாவனை மின்சாரக் கட்டணங்கள் முதல் 60 அலகுகள் வரை இரண்டு கட்டங்களாகக் கட்டணத் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது. முதல் 30 அலகுகள் (0-30): ஒரு அலகுக்குத் தற்போது அறவிடப்படும் 4.50 ரூபா கட்டணத்தை 5.29 ரூபாவாக அதிகரிக்கவும், மாதாந்தக் கட்டணத்தை 80 ரூபாவிலிருந்து 14.11 ரூபாவால் அதிகரித்து 94.11 ரூபாவாக மாற்றவும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. 31 முதல் 60 அலகுகள் வரை ஒரு அலகுக்கு அறவிடப்படும் 8 ரூபா கட்டணத்தை 9.41 ரூபாவாக அதிகரிக்கவும், மாதாந்த நிலையான கட்டணத்தை 37.03 ரூபாவால் அதிகரித்து 247.03 ரூபாவாக நிர்ணயிக்கவும் முன்மொழியப்பட்டுள்ளது. 61 முதல் 90 அலகுகள் வரை ஒரு அலகுக்குத் தற்போது அறவிடப்படும் 18.50 ரூபா கட்டணத்தை 21.76 ரூபாவாக அதிகரிக்க யோசிக்கப்பட்டுள்ளது. 91 முதல் 120 அலகுகள் வரை ஒரு அலகுக்கு 24 ரூபாவாக உள்ள கட்டணத்தை 28.23 ரூபாவாக அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது. 121 முதல் 180 அலகுகள் வரை ஒரு அலகுக்கு 41 ரூபாவாக உள்ள கட்டணத்தை 48.23 ரூபாவாக அதிகரிக்க யோசிக்கப்பட்டுள்ளது. 181 அலகுகள் அல்லது அதற்கு மேல் ஒரு அலகுக்கு 61 ரூபாவாக இருந்த கட்டணத்தை 71.76 ரூபாவாக அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது. இந்த வகைகளுக்கான மாதாந்த நிலையான கட்டணங்களையும் இதற்குச் சமாந்தரமாக அதிகரிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. மத வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அறநிலையங்களில் முதல் 30 அலகுகள் வரை ஒரு அலகுக்கு 4.50 ரூபாவாக உள்ள கட்டணத்தை 5.29 ரூபாவாக அதிகரிக்கவும், 75 ரூபாவாக இருந்த மாதாந்தக் கட்டணத்தை 88.23 ரூபாவாக அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ளது. 31 முதல் 90 அலகுகள் வரை அலகு ஒன்றின் விலையை அதிகரிக்கவும், அந்த வகையின் மாதாந்தக் கட்டணத்தை 35.27 ரூபாவால் அதிகரிக்கவும் கோரப்பட்டுள்ளது. 91 முதல் 120 அலகுகள் வரை அலகு ஒன்றின் விலையை 9.41 ரூபாவாகவும், 121 முதல் 180 அலகுகள் வரை அலகு ஒன்றின் விலையை 22.35 ரூபாவாகவும் அதிகரிக்க யோசிக்கப்பட்டுள்ளது. 181 அலகுகள் அல்லது அதற்கு மேல் அலகு ஒன்றின் விலையை 26 ரூபாவிலிருந்து 30.59 ரூபாவாக அதிகரிக்கக் கோரப்பட்டுள்ளது. கைத்தொழிற்சாலைகள் மற்றும் ஹோட்டல்களில் 300 அலகுகள் அல்லது அதற்குக் குறைவான அலகு ஒன்றின் விலை 8 ரூபாவிலிருந்து 9.41 ரூபாவாக அதிகரிக்கக் கோரப்பட்டுள்ளது. 300 அலகுகளுக்கு மேற்பட்டவைக்கு அலகு ஒன்றின் விலை 17 ரூபாவிலிருந்து 20 ரூபாவாக அதிகரிக்க மின்சார சபை கோரிக்கை விடுத்துள்ளது. எனினும், இலங்கை மின்சார சபையினால் பராமரிக்கப்படும் மின்சார வாகன மின்னேற்றும் நிலையங்களின் (EV Charging Stations) கட்டணங்களில் எவ்வித அதிகரிப்பும் மேற்கொள்ளப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்சார சபையின் இந்த யோசனையை ஆய்வு செய்து, அது குறித்துப் பொதுமக்களின் கருத்துக்களைக் கேட்டறிய நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதற்கமைய ஜனவரி மாதம் இரண்டாவது வாரமளவில் பொதுமக்களின் கருத்துக்களைப் பெறும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், 6 வார காலப்பகுதிக்குள் கட்டணத் திருத்தம் தொடர்பான தனது இறுதித் தீர்மானத்தைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிக்கவுள்ளது. https://adaderanatamil.lk/news/cmjwz39dm03g9o29nohkdrc5h

“கைலாசா” நித்யானந்தா புதிய ஆண்டில் மக்களுக்குச் சொன்ன செய்தி!

1 month 3 weeks ago
“கைலாசா” நித்யானந்தா புதிய ஆண்டில் மக்களுக்குச் சொன்ன செய்தி! 02 Jan, 2026 | 03:43 PM அனைத்தையும் சாட்சியாகப் பார்க்கத் தொடங்கினால் இந்த புத்தாண்டு உங்களுக்கு ஒரு புதிய பிறவியாக அமையும் என்று சர்ச்சைக்குரிய ஆன்மிகவாதியான நித்யானந்தா தெரிவித்துள்ளார். புத்தாண்டு செய்தியாக நித்தியானந்தா தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியிலேயே இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். “இந்த 2026ஆம் ஆண்டில் நீங்கள் செய்யவேண்டியது ஒன்றே ஒன்றுதான். சாட்சி பாவம். அனைத்தையும் சாட்சியாகப் பார்க்கத் தொடங்கினால் இந்த புத்தாண்டு உங்களுக்கு ஒரு புதிய பிறவியாக அமையும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அந்தப் பதிவின் முடிவில் “பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவின் திருவண்ணாமலையில் பிறந்த நித்யானந்தா, கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களிலும் பல நாடுகளிலும் ஆன்மிக சொற்பொழிவு ஆற்றி பிரபலமடைந்தார். அத்துடன் பல பாலியல் குற்றச்சாட்டுக்களிலும் சிக்கி உலகளவில் பேசப்படும் இவர், இந்திய பொலிஸாரால் தேடப்பட்டு வரும் நிலையில், இந்தியாவிலிருந்து வெளியேறி, கைலாசா என்ற தீவை உருவாக்கி, அங்கு தனது சீடர்களுடன் வசித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இவர் இறந்துவிட்டதாக செய்திகள் பரவியபோதும் அதை அவரும் அவரது சீடர்களும் மறுத்துவந்ததோடு, நித்யானந்தா உரையாற்றுவது போன்ற பல காணொளிகள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. இந்நிலையிலேயே தற்போது நித்யானந்தா புத்தாண்டு செய்தியொன்றை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/235029

நாட்டை கட்டியெழுப்பும் தேசிய நிதியத்திற்கு ‘Rebuilding Sri Lanka’ பல்வேறு அமைப்புகள் நன்கொடை

1 month 3 weeks ago
‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு TRC நிதி நன்கொடை Jan 2, 2026 - 05:35 PM இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் ஊழியர்களின் ஒரு நாள் சம்பளம் மற்றும் நலன்புரி தேவைக்காக ஒதுக்கப்பட்ட நிதி, ஊழியர்களின் வேண்டுகோளுக்கு இணங்க,‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு 12,803,174.35 ரூபாவை நன்கொடையாக வழங்கியது. அதற்கான காசோலையை இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் எயார் வைஸ் மார்ஷல் பந்துல ஹேரத் (ஓய்வு), பணிப்பாளர் (நிர்வாகம்) விங் கமாண்டர் சேனக ருவன்பத்திரண (ஓய்வு) மற்றும் பணிப்பாளர் (நிதி) எம்.கே. ஜயந்த ஆகியோர் நேற்று (01) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் கையளித்தனர். https://adaderanatamil.lk/news/cmjwtulls03fzo29n2iqzqgew

விடுதலைப் புலிகள் மருத்துவ அணியின் சரித்திரமாகும் சல்லியர்கள் – விமர்சனம்!

1 month 3 weeks ago
'3 ஆண்டுகள் தாமதம்' – சல்லியர்கள் படத்தின் திரையரங்கு வெளியீட்டில் என்ன சிக்கல்? பட மூலாதாரம்,@vhouseofficial கட்டுரை தகவல் முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் 2 ஜனவரி 2026, 14:27 GMT புதுப்பிக்கப்பட்டது 16 நிமிடங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டில் குறைந்த செலவில் உருவாகும் திரைப்படங்களுக்குப் போதுமான திரையரங்குகள் கிடைப்பதில்லை எனவும் இம்மாதிரி திரைப்படங்களுக்கு திரையரங்குகளைத் தர உரிமையாளர்கள் மறுக்கிறார்கள் எனவும் திரைப்படத் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி குற்றம்சாட்டியிருக்கிறார். இதன் பின்னணி என்ன? நடிகர் கருணாசும் பி. கரிகாலன் என்பவரும் இணைந்து 'சல்லியர்கள்' என்ற திரைப்படத்தைத் தயாரித்திருக்கின்றனர். கருணாஸ், சத்யாதேவி, மகேந்திரன் உள்ளிட்டோர் நடித்திருக்கும் இந்தப் படத்தை தி. கிட்டு என்பவர் இயக்கியிருக்கிறார். சல்லியர்கள் படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வெளியிடுகிறார். இந்தப் படம், இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரின் இறுதி நாட்களில் பணியாற்றிய மருத்துவர்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இந்தத் திரைப்படத்தை வெளியிட திரையரங்குகளை அணுகியபோது, பெரும்பாலான திரையரங்குகள் முன்வரவில்லையெனக் குற்றம் சாட்டியிருக்கிறார் சுரேஷ் காமாட்சி. சமீபத்தில் அந்தப் படத்தின் பிரத்யேகக் காட்சிக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர் இந்தப் பிரச்னையின் பின்னணியை விளக்கினார். பட மூலாதாரம்,@vhouseofficial 'படம் எடுத்து 3 ஆண்டுகள்' "சல்லியர்கள் படத்தை எடுத்து முடித்து மூன்றாண்டுகளாகிவிட்டன. படம் எனக்குப் பிடித்திருந்ததால் அதனை வெளியிட முடிவுசெய்தேன். இதற்கு முன்பு, இந்தப் படத்தின் வெளியீட்டிற்கு என மூன்று, நான்கு முறை தேதி குறித்தோம். ஆனால், திரையரங்குகள் போதுமான அளவுக்குக் கிடைக்காததால் வெளியிடும் தேதிகளை மாற்றிக்கொண்டே வந்தோம். '' என்றார் சுரேஷ் காமாட்சி. மேலும் ''அடுத்த வாரம் 'பராசக்தி'யும் 'ஜனநாயகனு'ம் வருவதால் இந்த வாரம் எந்தப் படமும் வெளியாகவில்லை. ஆகவே இந்த வாரத்தைத் தேர்வுசெய்து, சல்லியர்கள் படத்தை வெளியிட முடிவுசெய்தோம். ஆனால், இந்த வாரமும் படத்தை வெளியிட இயலாத சூழல் ஏற்பட்டுவிட்டது. தமிழ்நாடு முழுவதும் மொத்தமாகவே 27 காட்சிகள்தான் இந்தப் படத்திற்குக் கிடைத்திருக்கின்றன. குறிப்பாக, தமிழ்நாடு முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட திரையரங்குகளை இயக்கிவரும் ஒருபெரிய திரையரங்க நிறுவனம், சல்லியர்கள் படத்திற்கு என ஒரு காட்சியைக்கூட கொடுக்கவில்லை. இந்தப் படத்தை ஏன் புறக்கணிக்கிறார்கள் எனத் தெரியவில்லை. வேறு மாநிலங்களில் இதைச் செய்ய முடியுமா? தயாரிப்பாளர் சங்கங்கள் எதுவும் செய்வதில்லை. சின்னப் படங்கள் வந்தால்தானே புதிய நடிகர்கள் வருவார்கள்? புதிய இயக்குநர்கள் வெளியில் வருவார்கள்? தவிர இந்தப் படம் ஈழப் போராட்டம் குறித்த திரைப்படம். அப்படியிருந்தும் இந்த நிலை" என்கிறார் சுரேஷ் காமாட்சி. இதையடுத்து இந்தப் படத்தை, வியாழக்கிழமையன்று (ஜனவரி 1) ஓடிடியில் வெளியிட முடிவுசெய்திருப்பதாகவும் கூறினார் சுரேஷ் காமாட்சி. இதையடுத்து விவகாரம் சமூக வலைதளங்களில் பேசுபொருளானது. இந்த விவகாரம் குறித்து பிபிசியிடம் பேசிய சுரேஷ் காமாட்சி, "சிறிய திரைப்படம் என்றாலே ஓடாது என முடிவுகட்டி, திரையரங்குகளைத் தர மறுக்கிறார்கள். படத்தைத் திரையிடுங்கள். ஆட்கள் வராவிட்டால் தூக்கிவிடுங்கள். தரவே முடியாது என்றால் எப்படி? படம் வெளியாகும் முன்பே, படம் ஓடவே ஓடாது என முடிவுசெய்வதற்கு இவர்கள் யார்? பெரிய நிறுவனங்களின் படங்களைத் தவிர வேறு யாருமே படங்களை திரையிட முடியாத சூழல் வந்துவிட்டது. ஒரு திரைப்படம் தியேட்டர்களில் வெளியாகி எட்டு வாரங்களுக்குப் பிறகுதான் ஓடிடிகளுக்கு கொடுக்க வேண்டும் என்கிறார்கள் திரையரங்க உரிமையாளர்கள். ஆனால், திரையரங்குகளில் அந்தப் படமே வெளியாகவே முடியாது என்றால், என்ன செய்வது? அதனால்தான் நேரடியாக ஓடிடியிலேயே வெளியிட்டுவிட்டேன்" என்கிறார் அவர். பட மூலாதாரம்,@vhouseofficial 'அரங்குகளைத் தர மறுக்கிறார்கள்' 'சல்லியர்கள்' படத்தைத் தயாரித்த கருணாசும் இதே கருத்தையே சொல்கிறார். "ஒரு காலத்தில் திரையரங்குகள் தனித்தனியாக இயங்கிவந்தன. கார்ப்பரேட் நிறுவனங்கள் சிறிய சிறிய திரையரங்குகள், தனி திரையரங்குகள் எல்லாவற்றையும் ஒப்பந்தங்களின் மூலம் தங்கள் பெயரில் இயக்க ஆரம்பித்தார்கள். அதற்குப் பிறகு சிறிய தயாரிப்பில் உருவாகும் திரைப்படங்களுக்கு அரங்குகளைத் தர மறுக்கிறார்கள். அப்படியானால், சிறிய திரைப்படங்களைத் தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் என்ன செய்வது? இப்போது முன்னணி நடிகர்களாக, இயக்குநர்களாக இருப்பவர்கள் எல்லாம் ஒரு காலத்தில் புதுமுக நடிகர்களாகவும் இயக்குநர்களாகவும் இருந்தவர்கள்தானே? அவர்களது திரைப்படங்களுக்கு அந்த காலகட்டத்தில் திரையரங்குகள் கிடைத்ததால்தானே அவர்கள் வளர முடிந்தது?" எனக் கேள்வியெழுப்புகிறார் அவர். தயாரிப்பாளர்கள் சங்கங்கள் வலுவாக இல்லாததுதான் பிரச்னை என்கிறார் சுரேஷ் காமாட்சி. "தயாரிப்பாளர் சங்கங்கள் இதற்காக குரல் கொடுக்க வேண்டும். திரையரங்க உரிமையாளர்களின் சங்கங்கள், விநியோகிஸ்தர்களின் சங்கங்கள் ஆகியவை அவரவர் நலன்களைக் காக்கும் வகையில் தீவிரமாக இயங்குகின்றன" என்கிறார் அவர். பட மூலாதாரம்,@vhouseofficial ஆனால், இதில் வேறு சில கோணங்களும் இருக்கின்றன என்கிறார்கள் திரைத்துறையின் பல்வேறு பிரிவுகளில் இயங்குபவர்கள். "சிறிய திரைப்படங்களை வெளியிடுவது என்பது இப்போது எல்லாத் தரப்பிற்குமே கடினமான காரியமாகிவிட்டது. சற்று முகம் தெரிந்த நடிகர்கள் இருந்தால்தான் ரசிகர்கள் திரையரங்குகளுக்கே வருகிறார்கள். திரையரங்க உரிமையாளர்களைப் பொறுத்தவரை, நல்ல படமா, மோசமான படமா என்றெல்லாம் பார்ப்பதில்லை. ஒரு காட்சிக்கு எவ்வளவு பேர் வருவார்கள் என்றுதான் பார்ப்பார்கள்.'' என்கிறார் இயக்குநரும் விநியோகிஸ்தரும் 'OTTPLUS' ஓடிடியின் சிஇஓவுமான கேபிள் சங்கர். ''ஒரு படத்தில் நடித்திருக்கும் நடிகர்கள், இயக்குநர்கள் யாரெனத் தெரியவில்லையென்றால் மிகக் குறைவான ஆட்களே வருவார்கள். இதில் திரையிடும் செலவுகூட திரையரங்கிற்கு கிடைக்காது. ஒரு காட்சிக்கு நான்கைந்து பேர் மட்டுமே வந்தால் ஏசிக்கான செலவு, மின்சாரச் செலவு, சுத்தம் செய்யும் ஆட்களுக்கான செலவு போன்றவற்றில் பாதிகூட கிடைக்காது. அப்படியிருக்கும் நிலையில், யார் சிறிய படங்களைத் திரையிட வருவார்கள்?'' என்கிறார் கேபிள் சங்கர் ''ஆனால், சில சிறிய திரைப்படங்கள் ஆச்சரியம் தருகின்றன. சில நாட்களுக்கு முன்பாக பேச்சி என்று ஒரு படம் வந்தது. அந்தப் படத்திற்கு சென்னையிலும் செங்கல்பட்டிலும் சேர்த்து மொத்தமே 12 காட்சிகள்தான் கொடுக்கப்பட்டன. ஆனால், வரவேற்பு இருந்ததால் அடுத்த வாரம் காட்சிகளின் எண்ணிக்கை 21ஆக உயர்ந்தது. இதற்கு அடுத்த வாரம் காட்சிகளின் எண்ணிக்கை 56ஆக உயர்ந்தது. அந்தப் படம் சுமார் 80 லட்சத்திற்கு மேல் வசூல் கிடைத்தது. ஆனால் எல்லாப் படங்களுக்கும் இதுபோல நடப்பதில்லை என்பதுதான் பிரச்சனை" என்கிறார் அவர் ஆனால், இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும் என்கிறார் கேபிள் சங்கர். "சல்லியர்கள் படத்திற்கு நடந்தது அநியாயம். சிறிய திரைப்படங்களுக்கு பெரும் எண்ணிக்கையில் திரையரங்குகள் கிடைக்காது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் மிகப் பெரிய திரையரங்கு குழுமம், ஒன்றிரண்டு திரையரங்குகளைக்கூட தரவில்லை என்பதை எப்படிப் புரிந்துகொள்வது எனத் தெரியவில்லை. எல்லா மாநிலங்களிலும் அந்தந்த மாநில மொழி திரைப்படங்களுக்கு முன்னுரிமை தருகிறார்கள். அதுபோன்ற நிலை இங்கும் வரவேண்டும்" என்கிறார் கேபிள் சங்கர். 'முன்பே கூறியிருந்தால் ஏதாவது செய்திருக்க முடியும்' ஆனால், திரையரங்க உரிமையாளர்களின் பார்வை வேறாக இருக்கிறது. குறைந்த செலவில் தயாராகும் திரைப்படங்கள் ஒவ்வொரு வாரமும் பெரும் எண்ணிக்கையில் வெளியாகும் நிலையில், பெரும்பாலான படங்களுக்கு முதல் காட்சிக்கே ஆள் வருவதில்லை என்கிறார்கள் அவர்கள். ஆனால், சல்லியர்கள் திரைப்படத்தைப் பொறுத்தவரை முன்பே தங்களிடம் கூறியிருந்தால் ஏதாவது செய்திருக்க முடியும் என்கிறார் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன். "ஒவ்வொரு வாரமும் ஐந்து - ஆறு சிறிய திரைப்படங்கள் வருகின்றன. பெரும்பாலான படங்களுக்கு முதல் காட்சிக்கே 4 -5 பேர்கூட வருவதில்லை. ஏதோ இவர்களுக்கு மட்டும்தான் தமிழ் உணர்வு இருப்பதைப் போல பேசுகிறார்கள். எங்களுக்கும் தமிழ் உணர்வு இருக்கிறது. வியாழக்கிழமை படத்தை வெளியிட முடிவுசெய்துவிட்டு, புதன்கிழமையன்று என்னிடம் சொன்னால் என்ன செய்ய முடியும்?'' என்கிறார் அவர் ''மூன்று - நான்கு நாட்கள் முன்னதாகச் சொல்லியிருந்தால்கூட ஏதாவது செய்திருக்க முடியும். ஒவ்வொரு வாரமும் 6 படங்கள் வரும் நிலையில், எத்தனை படங்களுக்கு திரையரங்குகளைத் தர முடியும்? இன்று நாளிதழைத் திறந்து பாருங்கள். எத்தனை படங்களின் வெளியீடு குறித்த விளம்பரங்கள் வந்திருக்கின்றன? இதில் ஏதாவது நாம் அறிந்த படமாக இருக்கிறதா? வரும் படங்களை திரையிடுங்கள், ஓடினால் தொடருங்கள் இல்லாவிட்டால் தூக்கிவிடுங்கள் என்கிறார்கள். காட்சிகளை திரையிடும் செலவுகூட வராத படங்களை போட்டால், அதில் வரும் இழப்பை எப்படி எதிர்கொள்வது? ஆனால், சல்லியர்கள் படத்தைப் பொறுத்தவரை என்னிடம் முன்பே கூறியிருந்தால், சம்பந்தப்பட்ட தொடர் திரையரங்கு நிறுவனத்திடம் பேசி சில திரையரங்குகளைப் பெற்றுத் தந்திருக்க முடியும்" என்கிறார் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன். தற்போது சல்லியர்கள் திரைப்படம், 'ஓடிடிபிளஸ்' ஓடிடியில் வெளியாகிவிட்டது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cvgdlzy7edro

தையிட்டி விவகாரம் – சிங்கள ஊடகங்களில் விளம்பரம் செய்ய தீர்மானம்!

1 month 3 weeks ago
நம்ம விளம்பரத்துக்கு எதிர் விளம்பரம்போட நாமல் ,சஜித் போன்றோர் முன்னிற்பர் ..அவர்களுக்கு தேவை அதிகம் ...காசுமிருக்கு

கனடாவில் சிகிச்சைக்கு சென்ற யுவதியிடம் தமிழ் மருத்துவர் பாலியல் சேட்டை..!

1 month 3 weeks ago
கனடாவில் தட்டி தவறிகைபட்டாலே காசு பறிப்புத்தான்.. முதல் நடந்த வழ்க்கு பிரபல்மாகவிருந்தது ...ஆங்கிலப் பத்திரிகைகளும் முன்னுரிமை கொடுத்தன..

அடிப்படை சுகாதார வசதி திட்டம்

1 month 3 weeks ago
ஏற்கனவே நீங்கள் எமது அமைப்பிற்கு நன்கொடை வழங்கி இருந்தீர்கள் அண்ணா. கடந்த வருடத்தில் இருந்து தான் காரைநகரில் 2 குடும்பங்களுக்கு மாதாந்த உதவி, குடிநீர் விநியோகம்(பேர்மிங்காம் 2016 உதவும் கரங்கள்) செய்கிறோம். பயனாளிகளின் வங்கிக் கணக்கிற்கு பணத்தை அனுப்பி ஒவ்வொரு கட்ட பணி முடிவடையும்போதும் அவர்கள் பணத்தை மீளப்பெற்று பயன்படுத்தும்படியும் செய்யலாம். (அரசின் வீட்டுத் திட்ட நிதி தொழிநுட்ப உத்தியோகத்தரின் சிபார்சின் பின்னரே வங்கியில் இருந்து மீளப்பெற முடியும்.) அல்லது பகுதி பகுதியாக ஒப்பந்தகாரர் கட்ட கட்ட அவருக்கு பணம் அனுப்பலாம். இது இரண்டும் சரிவரவில்லை என்றால் எனது பெயரில் வங்கியில் கதைத்து இன்ன நோக்கத்திற்காக என புதிய வங்கிக் கணக்கை திறந்து தருகிறேன். எல்லோருடைய கருத்துகளையும் பெற்று செயற்படுத்துவோம்.

அவனை எனக்குத் தெரியும் - ப.தெய்வீகன் 

1 month 3 weeks ago
நன்றி கவி ஐயா. பெயரும் மயூரன் என்று நினைவில் இருந்தது. மயூரன் சுகுமாரன் (Myuran Sukumaran, ஏப்ரல் 17, 1981 - 29 ஏப்ரல் 2015), லண்டனில் பிறந்த இலங்கைத் தமிழ் வம்சாவழியைச் சேர்ந்த ஓர் ஆத்திரேலியர் ஆவார். இவர் ஒரு தற்காப்புக் கலை விற்பன்னரும், ஓவியரும் ஆவார். அவுஸ்திரேலியாவின் சிட்னி மாநகரப் புறநகரான ஓபன் நகரில் வாழ்ந்தவர். போதைப் பொருள் கடத்தியமைக்காக இந்தோனேசியாவில் பாலியில் 2005 ஏப்ரல் 17 இல் கைது செய்யப்பட்ட "பாலி ஒன்பது" என்ற ஒன்பது பேர்களின் தலைவர்களில் ஒருவராக இவர் கணிக்கப்படுகிறார். மயூரன் பாலியின் டென்பசார் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு, 2006 பெப்ரவரி 14 இல் இவருக்கு "சுட்டுக் கொலை" செய்யப்படும் முறையிலான மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டது.[2] https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D

கனடாவில் சிகிச்சைக்கு சென்ற யுவதியிடம் தமிழ் மருத்துவர் பாலியல் சேட்டை..!

1 month 3 weeks ago
அதேநேரம் இப்போது பலதுறைகளிலும் இப்படியான குற்றச் சாட்டுக்களை வைத்து பணம் பண்ணுவதை குறிக்கோளாக கொண்டு களம் இறங்குகிறார்கள். தீர விசாரித்தாலே நடந்த உண்மைகள் தெரியவரும்.

தையிட்டி விவகாரம் – சிங்கள ஊடகங்களில் விளம்பரம் செய்ய தீர்மானம்!

1 month 3 weeks ago
பத்திரிகைகள் இப்போ காய்ந்து போய் கிடக்கின்றன. பணத்தைக் கொடுத்தால் போடுவார்கள். உண்மையில் சிங்கள பத்திரிகையாளர்கள் தாங்களாகவே முன்வந்து சிங்கள மக்களுக்கு தமது அரசுகள் செய்ததை விளம்பரப் படுத்தியிருக்க வேண்டும்.

கனடாவில் சிகிச்சைக்கு சென்ற யுவதியிடம் தமிழ் மருத்துவர் பாலியல் சேட்டை..!

1 month 3 weeks ago
உண்மைதான்..பின்னர் மனநோய் சிகிச்சை பெற்றதை ஆதாரமாகக்காட்டி..வ்ழக்கில் இருந்து தப்பித்தார்...மனைவியும் இதே துறையில் வைத்தியராக உள்ளார்..இண்டுக்கு மேற்பட்ட மருத்துவ நிலையங்களை நடாத்துகின்றனர்..காசு பணம் கூடிவிட்டால்...

நியூயோர்க் நகரத்தின் முதல்வராக இந்திய ஆபிரிக்க வம்சாவளியை சேர்ந்த மம்டானி இன்று பதவியேற்கிறார்.

1 month 3 weeks ago
இங்கு இங்கிலாந்தில் முஸ்லிம்கள் அதிகார பதவிகளுக்கு வந்தார்கள் அவ்வளவுதான் கதை பேர்மிங்கம் லேச்ட்டேர் ஈஸ்ட்காம் போன்ற இடம்கள் தற்போதைய நிலை சொல்லும் கதை .

அடிப்படை சுகாதார வசதி திட்டம்

1 month 3 weeks ago
களத்தில் கேர்ணல் சங்கர் ஞாபகார்த்தமாக என இந்தத் திட்டம் பெயர் சூட்டப்பட்டாலும் அதே பெயரில் நாட்டில் இயங்க முடியாது என்றால் நாட்டில் அதை இன்னொரு பெயரால் நடைமுறைப்படுத்த வேண்டும். அப்படியென்றால் மட்டுமே யாழ்களத்தை விட்டு வெளியே சென்று நண்பர்கள் உறவினர்களிடம் இதற்கான நிதி உதவிகளைக் கோரலாம் என்று நினைக்கின்றேன்.

அடிப்படை சுகாதார வசதி திட்டம்

1 month 3 weeks ago
நன்றி ஏராளன் தகவலுக்கு காரைநகரின் பெயரை வைத்துப் பல அமைப்புக்கள் உள் நாட்டிலும் வெளி நாட்டிலும் இருக்கும் நிலையிலே........ (ஆலயங்கள் கட்டுதல், புனரமைத்தல், கும்பாபிஷேகம் செய்தல் என்பன தான் அந்த அமைப்புக்களின் முதன்மையான திட்டங்கள்) உங்கள் அமைப்பு இப்படியான உதவிகளை பல காரைநகர் மக்களுக்காகச் செய்து வருவது பாராட்டப்பட வேண்டிய விடையம்.. நாங்கள் குறுகிய காலம் அங்கே தங்கி நிற்கும் நிலையால் இப்படியானவர்களை அடையாளம் காண முடிவதில்லை பாடசாலை, மாணவர்கள், கல்வி, பரிசளிப்பு, என்ற நிலையிலே தான் பலருடைய தனிப்பட்ட உதவிகளும் செல்கின்றன. இனிமேலாவது சரியான வழியில் செல்வார்கள் என் நம்புவோம் 🙏 அடுத்த கட்டமாக எப்படி எந்த வகையில் எங்கள் பங்களிப்பினை செய்யலாம்? ஏராளன் உங்கள் அமைப்பின் வங்கி இலக்கத்தைப் பயன்படுத்தலாமா? அல்லது உங்களால் இதற்கென ஒரு புதிய வங்கி கணக்கை ஆரம்பிக்கலாமா ? அல்லது ஏதாவது மாற்று வழி உள்ளதா ?

அவனை எனக்குத் தெரியும் - ப.தெய்வீகன் 

1 month 3 weeks ago
ஏராளன், இருக்கின்றது என்றல்ல அதேதான். எனக்கும் அவனைத் தெரியும். அவன் பெயர் மயூரன். இதை வாசித்தபோது,மயூரன் சுகுமாரன், மொட்டடையடித்தபடி இருந்த புகைப்படம் நினைவுக்குள் வந்தது. தமிழன், சிட்னி, ஓவியங்கள் என்று எலாமே ஒத்துப் போகின்றது. மிகுதி நிச்சயம் கற்பனையாகத்தான் இருக்கும். அந்தத் தாயின் வலி புரிகிறது. சர்வதேசமட்டுமல்ல உலகின் பல மனிதநேய அமைப்புகள் கேட்டும் இந்தனேசியா மரணதண்டனையை விடாப்பிடியாக நின்று எட்டுப் பேருக்கும் நிறைவேற்றியது. அவர்களுடைய சட்டம் அப்படி.
Checked
Wed, 02/25/2026 - 13:43
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed