புதிய பதிவுகள்2

AI மூலம் வங்கிப் பாதுகாப்பு முறியடிக்கப்படும் அபாயம்!

2 months ago
AI மூலம் வங்கிப் பாதுகாப்பு முறியடிக்கப்படும் அபாயம்! தகவல் தொழில் நுட்பத்தில் புதிய புரட்சியை AI தொழில் நுட்பம் ஏற்படுத்தியுள்ளது. மருத்துவம், கல்வி, மென்பொருள் என பலதரப்பட்ட துறைகளில் AI ஆதிக்கம் செலுத்தி வருகிறது . இந்நிலையில்” இனி வரும் காலங்களில் (AI) தொழில்நுட்பம் தவறான நோக்கத்துடன் பயன்படுத்தலாம்” என Chat GPT யின் தாய் நிறுவனமான ஓபன் AI நிறுவனத்தின் தலைமை செயற்பாட்டு அதிகாரி சாம் ஆல்ட்மன்( Sam Altman) ஒரு முக்கிய எச்சரிக்கையை விடுத்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்” வரும் காலங்களில், வங்கிகளின் பாதுகாப்பு அம்சங்களை AI முறியடிக்கலாம். அதன் மூலம் பணம் திருடப்படலாம். அத்துடன் அடையாள திருட்டு, இணைய மோசடி, போலி செய்திகள் போன்றனவும் அதிகரிக்கும் அபாயம் காணப்படுகின்றது. எனவே, இத்தகைய தவறாக செயல்களை கட்டுப்படுத்த அரசு, தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும்” என சாம் ஆல்ட்மன் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1440629

தமிழில் உறுதிமொழியுடன் நாடாளுமன்றில் அறிமுகமானார் கமல்ஹாசன்!

2 months ago
தமிழ் நாட்டில் தமிழில் உறுதிமொழி எடுப்பதை உலக அதிசயங்களில் ஒன்றாக இணைத்துக்கொள்ள சிபாரிசு செய்கிறேன்.🙌

கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் கைதி தூக்கிட்டு தற்கொலை

2 months ago
படமும் இணைப்பின் மூலமும் தவறாக இணைத்துவிட்டேன், மாற்றுமாறு முறைப்பாடு செய்துள்ளேன். தவறுக்கு வருந்துகிறேன்.

ஈழத்தமிழர்களின் அரசியற் தலைவரான சம்பந்தனின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது

2 months ago
சம்பந்தனின் இழப்பு.... சிங்களவருக்கு, ஈடுசெய்ய முடியாதது. 😂 சம்பந்தன் அரசியல் தலைவரல்ல, பக்கா.... அரசியல்வியாதி. தமிழரின் தீர்வை இழுத்தடித்து, நல்லாட்சி அரசாங்கத்துக்கு கால அவகாசம் கொடுத்து, ஒன்றுமே இல்லாமல் செய்த ஆளுமை அற்ற தன்னலவாதி. மக்கள் தன்னெழுச்சியாக ஒரு தலைவனுக்கு நினைவு தினம் கொண்டாடுவதற்கும், பாராளுமன்றத்தில் பத்தோடு பதினொன்றாக அஞ்சலி செலுத்துவதற்கும் உள்ள வித்தியாசத்தை கூட புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு இங்கு கருத்து எழுதும் ஆட்கள் உள்ளதை நினைக்க, இந்த நோய்க்கு... வைத்தியமே இல்லை என்று, கடந்து போக வேண்டியதுதான். 🤣 முதலில் ஸ்ரீதரன்... தமிழரசு கட்சி அலுவலகத்தில் சம்பந்தனுக்கு அஞ்சலி செலுத்தட்டும். அதுக்கு வக்கு இல்லை. பாராளுமன்றத்தில் அஞ்சலி செலுத்துகிறாராம். மற்ற ஈர வெங்காயத்தை பிறகு பாப்பம். 😂

மிகச்சிறிய முஸ்லிம் நாடான மாலத்தீவு இந்தியாவுக்கு ஏன் முக்கியம்? 4 காரணங்கள்

2 months ago
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் ரஜ்னீஷ் குமார் பிபிசி தமிழ் 44 நிமிடங்களுக்கு முன்னர் சுமார் 1,200 தீவுகளை உள்ளடக்கிய மிகச்சிறிய நாடு தான் மாலத்தீவு. உலக அளவில் பூகோள ரீதியாக மிகவும் சிதறுண்ட நாடாக மாலத்தீவு உள்ளது. வெறும் 5.21 லட்சம் மக்கள் தொகையே கொண்ட மாலத்தீவில், ஒரு தீவிலிருந்து இன்னொரு தீவிற்குச் செல்ல படகுப் பயணத்தை மேற்கொள்ள வேண்டும். 1965ஆம் ஆண்டு மாலத்தீவு பிரிட்டனிடமிருந்து முழுமையாக சுதந்திரம் பெற்றது. சுதந்திரம் அடைந்த மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, மாலத்தீவு அரசியலமைப்பு ரீதியான இஸ்லாமியக் குடியரசாக மாறியது. சுதந்திரம் பெற்றதிலிருந்து, மாலத்தீவின் அரசியலிலும் மக்களின் வாழ்க்கையிலும் இஸ்லாம் முக்கிய பங்கு வகித்துள்ளது. 2008 ஆம் ஆண்டு மாலத்தீவில் இஸ்லாம் அரசு மதமாக மாறியது. மாலத்தீவு உலகின் மிகச் சிறிய இஸ்லாமிய நாடு. மாலத்தீவின் 60வது சுதந்திர தினம் இன்று(ஜூலை 26) கொண்டாடப்படுகிறது. இதில் இந்திய பிரதமர் நரேந்திர மோதி சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளார். இது பிரதமர் மோதியின் மூன்றாவது மாலத்தீவு பயணம் ஆகும். 2023 ஆம் ஆண்டு முகமது முய்சு அதிபரான பிறகு மாலத்தீவுக்குச் செல்லும் முதல் வெளிநாட்டுத் தலைவர் நரேந்திர மோதி ஆவார். மாலத்தீவில் முய்சு ஆட்சிக்கு வர அவரது இந்திய எதிர்ப்பு பிரசாரமும் ஒரு முக்கிய காரணமாகும். முந்தைய மாலத்தீவு அசு 'இந்தியாவுக்கு முன்னுரிமை' என்ற கொள்கையைப் பின்பற்றி வந்தது. முய்சு அந்தக் கொள்கையை முடிவுக்குக் கொண்டுவருவதாக உறுதியளித்திருந்தார். சீனாவுடனான உறவுகளை முய்சு மேலும் வலுப்படுத்தினார். 7.5 பில்லியன் டாலர் பொருளாதாரத்தைக் கொண்ட மாலத்தீவு பொருளாதார வீழ்ச்சியை சந்தித்த போது, இந்தியா அந்நாட்டை காப்பாற்றியது. இதனால் முய்சு இந்தியா மீதான தனது அணுகுமுறையை மாற்றிக்கொண்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் எழுதியுள்ளது. அதிபரான பிறகு, முய்சு முதலில் துருக்கி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் சீனாவுக்கு பயணம் செய்தார். இதற்குப் பிறகு, இந்தியாவுடனான கசப்பை நீக்க முய்சு ஒரு முயற்சியைத் தொடங்கினார். முன்னதாக இந்தியா குறித்து மாலத்தீவு அரசின் சார்பில் ஆக்ரோஷமான அறிக்கைகள் வந்தபோதும், இந்தியாவின் அதிகாரப்பூர்வ அறிக்கைகளில் பொறுமையும் நிதானமும் வெளிப்பட்டன. இத்தகைய சூழ்நிலையில், ஏழரை பில்லியன் டாலர்கள் மட்டுமே பொருளாதாரம் கொண்ட ஒரு மிகச் சிறிய நாட்டின் மீது இந்தியா ஏன் இவ்வளவு நிதானத்தைக் காட்டியது என்ற கேள்வி எழுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES 1. மாலத்தீவின் இருப்பிடம் மாலத்தீவு அமைந்துள்ள இடம்தான் அதற்கு சிறப்பு. மாலத்தீவு இந்தியப் பெருங்கடலின் முக்கிய கடல் பாதைகளுக்கு அருகில் அமைந்துள்ளது. இந்தியப் பெருங்கடலில் இந்தப் பாதைகள் வழியாக சர்வதேச வர்த்தகம் நடைபெறுகிறது. இந்த பாதை வழியாக வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு எண்ணெய் வருகிறது. இத்தகைய சூழ்நிலையில், மாலத்தீவுடனான இந்தியாவின் உறவுகள் மோசமடைவது எந்த வகையிலும் நல்லதாகக் கருதப்படவில்லை. மாலத்தீவு ஒரு முக்கியமான கடல்வழிப் பாதை என்றும், உலகளாவிய வர்த்தகத்தில் சிறப்புப் பங்கைக் கொண்டுள்ளது என்றும் வங்கதேசத்திற்கான இந்தியாவின் முன்னாள் தூதர் வீணா சிக்ரி கூறுகிறார். "இந்தப் பாதை இந்தியாவின் பொருளாதார மற்றும் மூலோபாய நலன்களுக்கு மிகவும் முக்கியமானது. குறிப்பாக வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியாவின் கச்சா எண்ணெய், எரிவாயு இறக்குமதி இந்தப் பாதை வழியாகவே நடைபெறுகிறது. மாலத்தீவுடனான நல்லுறவு இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பையும் உறுதி செய்யும். இந்தியாவின் கடல்சார் கண்காணிப்பிலும் மாலத்தீவின் ஒத்துழைப்பு முக்கியமானது" என்று சிக்ரி கூறுகிறார். "மாலத்தீவு அமைந்துள்ள இடங்களில், முக்கியமான கடல் பாதைகள் உள்ளன. இந்தப் பாதைகள் பாரசீக வளைகுடாவிலிருந்து கிழக்கு ஆசியா வரை செல்கின்றன. இந்தியாவும் வர்த்தகத்திற்காக இந்தப் பாதையைப் பயன்படுத்துகிறது" என்று சிந்தனைக் குழுவான ORF இன் மூத்த உறுப்பினரான மனோஜ் ஜோஷி கூறுகிறார். 2.பூகோள ரீதியாக இந்தியாவுடனான நெருக்கம் பட மூலாதாரம்,GETTY IMAGES மாலத்தீவு இந்தியாவிற்கு மிக அருகில் உள்ளது. மாலத்தீவு இந்தியாவின் லட்சத்தீவிலிருந்து சுமார் 700 கிலோமீட்டர் தொலைவிலும், இந்தியாவின் பிரதான நிலப்பரப்பில் இருந்து 1,200 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. மனோஜ் ஜோஷி கூறுகையில், "சீனா மாலத்தீவில் கடற்படை தளத்தை அமைத்தால், அது இந்தியாவின் பாதுகாப்புக்கு சவாலாக இருக்கும். சீனா மாலத்தீவில் வலுவாக மாறினால், போர் போன்ற சூழ்நிலையில் இந்தியாவை அடைவது சீனாவுக்கு மிகவும் எளிதாகிவிடும். சீனா மாலத்தீவில் பல திட்டங்களைக் கொண்டுள்ளது. சீனா மாலத்தீவில் கடற்படை தளத்தை உருவாக்க விரும்புவதாக கூறப்படுகிறது. இதுபோன்ற சூழ்நிலையில், இந்தியா எச்சரிக்கையாக இருப்பது அவசியம்." என்கிறார். மேலும் மனோஜ் ஜோஷி கூறுகையில் "மாலத்தீவு இன்னும் இந்தியாவிற்கு ஒரு சவாலாகவே உள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோதியை அழைத்திருந்தாலும், மாலத்தீவு அதிபர் முய்சு பொருளாதார நிர்ப்பந்தம் காரணமாக அவ்வாறு செய்துள்ளார். மாலத்தீவின் பொது மக்கள் கருத்து இன்னும் இந்தியாவிற்கு எதிராக உள்ளது. முய்சு இதைப் பயன்படுத்திக் கொண்டு வெற்றி பெற்றார். முய்சு இந்தியாவுடனான உறவை மேம்படுத்தியிருப்பது, விருப்பத்தின் பேரில் அல்ல கட்டாயத்தால் நிகழ்ந்துள்ளது" என்றார். பட மூலாதாரம்,GETTY IMAGES 3. மாலத்தீவில் சீனாவின் செல்வாக்கு அதிகரிப்பு மாலத்தீவு சீனாவுடன் தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. சீனாவின் லட்சியத் திட்டமான பெல்ட் அண்ட் ரோடு திட்டத்தை மாலத்தீவு வெளிப்படையாக ஆதரித்து, ஈடுபாடு காட்டுகிறது. இந்தியப் பெருங்கடலில் சீனாவின் வளர்ந்து வரும் செல்வாக்கை தடுப்பதில் மாலத்தீவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. மாலத்தீவின் பல முக்கிய திட்டங்களில் இந்தியா முதலீடு செய்துள்ளது. இவற்றில், கிரேட்டர் மாலே இணைப்புத் திட்டம் ( Greater Malé Connectivity Project ) சீனாவிற்கு எதிரானதாகக் கருதப்படுகிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதம், பாதுகாப்புத் துறையில் சீனா தங்களுக்கு உதவும் என்று மாலத்தீவு கூறியிருந்தது. பின்னர் மாலத்தீவு பாதுகாப்பு அமைச்சகம் தனது எக்ஸ் பக்கத்தில், "சீனாவுடன் நாங்கள் கையெழுத்திட்ட ஒப்பந்தம் பாதுகாப்பு உதவியையும் வழங்கும். இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் பலப்படுத்தப்படும்" என்று எழுதியிருந்தது. சீனா மாலத்தீவில் 200 மில்லியன் டாலர் செலவில் சீனா-மாலத்தீவு நட்புப் பாலத்தைக் கட்டி வருகிறது. மாலத்தீவில் சீனாவின் அதிகரித்து வரும் இருப்பு இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக பல ஆய்வாளர்கள் நம்புகின்றனர். கடந்த ஆண்டு ஜனவரியில், முய்சு சீனாவுக்கு சென்றார், இரு நாடுகளும் 20 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன. இந்தியாவின் தேசிய பாதுகாப்பு வருடாந்திர மதிப்பாய்வு 2018 இன் படி, டிசம்பர் 27, 2016 அன்று, மாலத்தீவின் மாலே விமான நிலையத்தை ஒட்டியுள்ள ஒரு தீவை சீனா 50 ஆண்டுகளுக்கு $4 மில்லியனுக்கு குத்தகைக்கு எடுத்தது. ஃபெய்தூ பினோல்ஹு என்பது தலைநகருக்கு அருகிலுள்ள ஒரு மக்கள் வசிக்காத தீவாகும், இது சீனாவிற்கு குத்தகைக்கு விடப்பட்டது. பெல்ட் அண்ட் ரோடு முன்முயற்சியின் கீழ் சீனா இந்தியப் பெருங்கடலில் தனது இருப்பை அதிகரித்து வருகிறது, இதற்காக மாலத்தீவில் பல திட்டங்களில் சீனா பங்கெடுத்து வருகிறது. புதிய திட்டங்களுக்கு ஏலச் செயல்முறையிலிருந்து விலக்கு அளிக்கும் சட்டத்தை மாலத்தீவு ஜூலை 2016 இல் இயற்றியது. இந்த செயல் சீனாவிற்கு சாதகமாகக் கருதப்பட்டது. "பாரசீக வளைகுடாவிலிருந்து வரும் கச்சா எண்ணெய் தொடர்ந்து பாதுகாப்பாக வந்தடைவதற்கு அரபிக் கடலில் ஒரு இராணுவ கட்டமைப்பை உருவாக்க சீனா விரும்புகிறது. மறுபுறம், மாலத்தீவுகள் சீனாவிற்கு எளிதான இடமாக மாறி விடக்கூடாது என்று இந்தியா விரும்புகிறது" என்று மனோஜ் ஜோஷி கூறுகிறார். 4. இந்தியா மீதான முய்சுவின் நிலைப்பாடு "மே 10 ஆம் தேதிக்குப் பிறகு, மாலத்தீவில் எந்த வடிவத்திலும் இந்திய ராணுவ வீரர்கள் இருக்க மாட்டார்கள். சீருடையில் இருந்தாலும் சரி, சிவில் உடையில் இருந்தாலும் சரி, இந்திய ராணுவத்தினர் இனி மாலத்தீவில் இருக்க மாட்டார்கள். இதை நான் முழு உறுதியுடன் சொல்கிறேன்" என்று முய்சு கடந்த ஆண்டு மார்ச் மாதம் கூறியிருந்தார். கடந்த ஆண்டு ஜனவரி 13 ஆம் தேதி முய்சு சீனாவுக்கு சென்றார். இதன் பின்னர் அவருடைய பேச்சுகளில் இந்தியாவின் பெயரை குறிப்பிடாமல் விமர்சனங்களை முன் வைத்தார். "மாலத்தீவுகள் ஒரு சிறிய நாடாக இருக்கலாம், ஆனால் அது தன்னை அச்சுறுத்த யாருக்கும் உரிமை தராது" என்று முய்சு கூறியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக, இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், "அச்சுறுத்தும் நாடு 4.5 பில்லியன் டாலர் மதிப்புள்ள உதவியை வழங்காது" என்று கூறியிருந்தார். அனந்தா மைய சிந்தனைக் குழுவின் தலைமை நிர்வாக அதிகாரி இந்திராணி பாக்சி கூறுகையில், மாலத்தீவில் இந்தியாவுக்கு எதிரான உணர்வு இன்னும் இருப்பதால் இந்தியாவிற்கும் மாலத்தீவு முக்கியமானது. "மாலத்தீவுகள் இந்தியாவை நேசிக்காது, ஆனால் அது ஒரு பாதுகாப்பு சவாலாக மாறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்" என்று பாக்சி கூறுகிறார். கிழக்கு-மேற்கு கப்பல் போக்குவரத்து பாதைக்கு அருகில் இருப்பதால், மாலத்தீவு சீனாவிற்கும் மிகவும் முக்கியமானது. வளைகுடாவிலிருந்து சீனாவிற்கு வரும் அனைத்து எண்ணெய் பொருட்களும் இந்தப் பாதை வழியாகவே வருகின்றன. இது தவிர, மாலத்தீவுக்கு அருகிலுள்ள டியாகோ கார்சியாவில் அமெரிக்கா ஒரு முக்கியமான கடற்படைத் தளத்தைக் கொண்டுள்ளது. 1988ஆம் ஆண்டு, ராஜீவ் காந்தி இராணுவத்தை அனுப்பி அப்துல் கயூமின் அரசாங்கத்தைக் காப்பாற்றினார். 2018 ஆம் ஆண்டில், மாலத்தீவு மக்கள் குடிநீர் பிரச்சினையை எதிர்கொண்டபோது, இந்தியா தண்ணீரை கப்பலில் அனுப்பியது. -இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியுஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c6273lx2x5ko

கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் கைதி தூக்கிட்டு தற்கொலை

2 months ago
இன்றுமுதல் சிறையில் வைக்கப்படுவோரை நிர்வாணமாகவே வைப்பதற்கு அரசு முடிவு செய்துள்ளது. அரைஞான் கொடியும் அறுத்தெறியப்படும். இதற்கான அங்கீகாரத்தை அமைச்சரவையைக் கூட்டி விரைவில் பெறப்படும்.

உயிர்த்தஞாயிறு தாக்குதலில் மறைப்பதற்கு எதுவுமில்லை; ஹரிணி அமரசூரிய

2 months ago
உயிர்த்தஞாயிறு தாக்குதலில் மறைப்பதற்கு எதுவுமில்லை; பொறுப்புக்கூற வேண்டிய அதிகாரிகள் எமது அரசாங்கத்திலிருந்தாலும் நடவடிக்கை என்கிறார் பிரதமர் ஹரிணி அமரசூரிய 25 JUL, 2025 | 03:38 PM (எம்.ஆர்.எம்.வசீம்) உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணையை நாங்கள் முன்னெடுத்துச்செல்வோம். அதில் மறைப்பதற்கு எங்களுக்கு ஒன்றும் இல்லை. அனைத்து விடயங்களையும் முன்வைத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை நிலைநாட்ட நடவடிக்கை எடுப்போம். அதேநேரம் தாக்குதலுக்கு பொறுப்புக்கூற வேண்டிய அதிகாரிகள் எமது அரசாங்கத்துக்கு கீழ் இருக்குமானால், அவர்களுக்கும் சட்டத்தை ஒரேமாதிரி யாக செயற்படுத்த நடவடிக்கை எடுப்போமென பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (25) வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் சமிந்த விஜேசிறி கேட்ட கேள்விக்கு மேலதிக கேள்வியாக முஜிபுர் ரஹ்மான் கேட்ட வினவிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். முஜிபுர் ரஹ்மான் தனது கேள்வியின்போது, உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் சாரா உயிரிழந்ததாக இறுதியாக தெரிவிக்கப்பட்ட டீ.என்.ஏ. அறிக்கையை நாங்களும் ஏற்றுக்கொள்ளவில்லை. அதேபோன்று அன்று எதிர்க்கட்சியில் இருந்த நீங்களும் ஏற்றுக்கொள்ளவில்லை. அதன் பிரகாரம் தற்போது இந்த தாக்குதல் தொடர்பில் அரசாங்கம் விசாரணை ஆரம்பித்திருக்கிறது. அதற்கு நாங்கள் பூரண ஆதரவை வழங்கத் தயார். ஆனால் தாக்குதல் நடந்த சந்தர்ப்பத்தில் கிழக்கு மாகாண கட்டளை தளபதியாக இருந்தவர் தற்போது அரசாங்கத்தில் இருக்கும் பிரதி பாதுகாப்பு அமைச்சர் அநுர ஜயசேகர, அன்று சாய்ந்தமருதில் குண்டு வெடித்தபோது, அந்த இடத்துக்கு ஆரம்பமாக வந்தது இராணுவத்தினராகும். அப்படியானால் சாராவுக்கு என்ன நடந்தது? அவரை யார் கடத்திச்சென்றார்கள் என்பது தொடர்பான தகவல் இராணுவத்துக்கு தெரிந்திருக்க வேண்டும். அநுர ஜயசிங்கவுக்கு தெரியாமல் இராணுவத்தினர் அங்குவர முடியாது.அவரும் அந்த சந்தர்ப்பதில் தெரிந்திருக்காவிட்டாலும் பின்னராவது இதனை தெரிந்திருப்பார். அன்றைய அரசாங்கத்துக்கு இந்த தாக்குதல் தொடர்பில் சம்பந்தம் இருப்பதாக ஜனாதிபதியும் தெரிவித்திருந்தார். அப்படியானால் அன்றைய அரசாங்கத்தின் கிழக்கு மாகாண கட்டளை தளபதியாக இருந்த அநுர ஜயசிங்க, தற்போது அரசாங்கத்தின் பிரதி அமைச்சராக இருக்கும் நிலையில், அவருக்கு கீழ் உள்ளவர்களே தற்போது இந்த தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்தும்போது, அந்தி விசாரணை எவ்வாறு நீதியான விசாரணை என தெரிவிக்க முடியும்? என்றார். அதற்கு பிரதமர் தொடர்ந்து பதிலளிக்கையில், அநுர ஜயசிங்க 2024லேயே பிரதி பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டார். ஆனால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் 2019லே இடம்பெற்றது. இந்த தாக்குதல் தொடர்பில் 2019இல் இருந்து விசாரணை இடம்பெற்று வருகிறது. அப்போது விசாரணைகளை சுயாதீனமாக நடத்த இடமிருந்தது. ஆனால் செய்யவில்லை. இவர்கள் அதிகாரத்தில் இருக்கும்போது இந்த விசாரணையை மேற்கொள்ளவில்லை. அதுதான் பிரச்சினை. ஆனால் நாங்கள் விசாரணை மேற்கொள்வோம். யாரும் குழப்பமடைய தேவையில்லை. எமது பிரதி அமைச்சர் இததொடர்பில் பாராளுமன்றத்திலும் தெரிவித்திருக்கிறார். குற்றப்புலனாய்வு பிரிவிலும் வாக்குமூலம் வழங்கி இருக்கிறார். இவர்களுக்கு பல வருடங்களாக செய்ய முடியாமல் போன இந்த வேலையை, தற்போது நாங்கள் மேற்கொள்வதை பொறுத்துக்கொள்ள முடியாமல் இருப்பது தொடர்பில் எங்களுக்கு செய்வதற்கு ஒன்றும் இல்லை. எனவே உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணையை நாங்கள் முன்னெடுத்துச்செல்வோம். அதில் மறைப்பதற்கு எங்களுக்கு ஒன்றும் இல்லை. அனைத்து விடயங்களையும் முன்வைத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை நிலைநாட்ட நடவடிக்கை எடுப்போம் என்றார். அதேநேரம் சமிந்த விஜேசிறி எம்.பி. எழுப்பிய கேள்விக்கு பிரதமர் பதிலளிக்கையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவில் அவர்களுக்கு வழங்கப்பட்ட கடமை, பொறுப்புக்களை உரிய முறையில் நிறைவேற்ற தவறியமைக்காக குற்றம் சுமத்தப்பட்டுள்ளவர்களின் பெயர் விபரங்களை வெளியிடுவது வழக்கு விசாரணைகளுக்கு பாதிப்பாக அமைவதால் அந்த விபரங்களை தற்போது வெளியிட முடியாது. என்றாலும் அறிக்கையை ஆராய்ந்து பார்க்க யாருக்குவேண்டுமானாலும் முடியும். அத்துடன் விசாரணைகளின் முடிவில் சட்டமா அதிபரின் பரிந்துரைக்கமைய தாக்குதலுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக குற்றவியல் சட்டத்துக்கு கீழ் தண்டனை பெற்றுக்கொடுக்க எமது அரசாங்கம் பின்வாங்கப்போவதில்லை. அதேநேரம் இதற்கு பொறுப்புக்கூக்கூடிய அதிகாரிகள் தற்போது அரசாங்கத்துக்கு கீழ் இருக்குமானால், அவர்களுக்கும் சட்டத்தை ஒரே மாதிரி செயற்படுத்த நடவடிக்கை எடுப்போம் என்றார். https://www.virakesari.lk/article/220921

இங்கிலாந்து இந்திய டெஸ்ட் கிரிக்கெட் தொடர்

2 months ago
சச்சின் சாதனையை நெருங்கிய ஜோ ரூட் - விவேகத்தை விட்டு ஆட்டத்தை தொலைத்த இந்தியா பட மூலாதாரம்,STU FORSTER/GETTY IMAGES கட்டுரை தகவல் எஸ். தினேஷ் குமார் பிபிசி தமிழுக்காக 4 மணி நேரங்களுக்கு முன்னர் ஆண்டர்சன்–சச்சின் தொடரில், இந்த டெஸ்டில்தான் இங்கிலாந்து பெரும்பாலான செஷன்களை கைப்பற்றியிருக்கிறது. செஷன்களை அதிகம் கைப்பற்றியும் தொடரில் பின்தங்கியுள்ள இந்திய அணி, தொடரில் முதல்முறையாக பலவீனமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. முன்றாம் நாளில் பேட்டிங்கிற்கு சாதகமான சீதோஷ்ண நிலை நிலவியதை இங்கிலாந்து அணி பயன்படுத்திக்கொண்டது. இனி, இந்த டெஸ்டை இங்கிலாந்து பறிகொடுப்பதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு. அதேபோல இந்தியா வெல்வதற்கும் வாய்ப்பு மிகவும் குறைவு. இந்த தொடரில் முதல்முறையாக முன்றாம் நாள் முடிவிலேயே ஆட்டம், எந்த திசையில் செல்லப் போகிறது என்பதை யூகிக்க முடிகிறது. இரண்டாம் நாளை இங்கிலாந்துக்கு தாரைவார்த்த இந்தியா, முன்றாம் நாளிலும் பெரிதாக எதையும் சாதிக்கவில்லை. இன்னிங்ஸ் மீண்டும் தொடங்கியவுடன் ரூட்டும் போப்பும் எந்த சிரமமுமின்றி ரன் சேர்ப்பில் ஈடுபட்டனர். நேற்றும் லைன் அண்ட் லென்த்தில் கோட்டைவிட்ட பும்ரா, கால் பக்கமாக தொடர்ச்சியாக பந்துவீசி அடிவாங்கினார். ஆடுகளம் முழுக்கவும் பேட்டிங்கிற்கு சாதகமாக தட்டையாக மாறியதால், இந்திய வேகப்பந்து வீச்சாளர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. விக்கெட்டுக்கு வாய்ப்பு இருப்பது போல தெரியவில்லை என்றால், குறைந்தபட்சம் ரன் வேகத்தையாவது கட்டுக்குள் கொண்டுவந்திருக்க வேண்டும். ஆனால், விக்கெட் கிடைக்காத அதிருப்தியில், விவேகத்தை தொலைத்து கண்டதையும் முயன்று ரன்களை வாரி இறைத்தனர். ரன் ரேட்டை கட்டுப்படுத்தும் விதமாக, ஒரு முனையில் ஜடேஜாவை விரைவாக கொண்டுவந்திருக்க வேண்டும். ரூட், போப் இருவரும் வலக்கை பேட்ஸ்மேன்கள் என்பதால், அதுவொரு நல்ல உத்தியும் கூட. ஆனால், இந்திய கேப்டன் கில் அதையும் செய்யவில்லை. பட மூலாதாரம்,STU FORSTER/GETTY IMAGES சுழற்பந்து வீச்சாளர்களை பயன்படுத்துவதில் கோட்டை விட்ட கில் சுழற்பந்து வீச்சாளர்கள் தொடர்பான இந்திய அணியின் அணுகுமுறை இந்த தொடர் முழுக்கவே, மோசமாக உள்ளது. 'சைனாமேன்' குல்தீப் யாதவ், தொடர்ச்சியாக புறக்கணிக்கப்பட்டு வருகிறார். இங்கிலாந்து அணி, 68 ஓவர்கள் விளையாடிய பிறகு, நேற்று வாஷிங்டன் சுந்தர் பந்துவீச அழைக்கப்படுகிறார். இதற்கும் லார்ட்ஸ் டெஸ்டில் அட்டகாசமாக பந்துவீசி, தனது கரியரின் சிறந்த பந்துவீச்சை அவர் பதிவுசெய்திருந்தார். கில்லின் கேப்டன்சி, உள்ளுணர்வை அடிப்படையாக கொண்டதாக தெரியவில்லை. பயிற்சியாளர்கள், அனலிஸ்ட்கள் கொடுக்கும் ஆலோசனையின்படி களத்துக்கு செல்கிறார். திட்டமிட்டபடி எதுவும் நடக்கவில்லை எனில், வியூகத்தை மாற்றாமல் அதையே திரும்பத் திரும்ப முயன்று பார்த்து சோர்ந்துவிடுகிறார். இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்ஸ் அப்படியே கில்லுக்கு நேரெதிராக இருப்பதை பார்க்கலாம். வாய்ப்பே இல்லாத ஒன்றை கூட, தனது வியூகத்தை பயன்படுத்தி, கடைசி வரைக்கும் முயன்று நிகழ்த்திக்காட்டுகிறார். பட மூலாதாரம்,CLIVE MASON/GETTY IMAGES கடைசியில், ரூட்–போப் பார்ட்னர்ஷிப்பை, வாஷிங்டன் சுந்தர்தான் உடைத்தார். சுந்தரை சீக்கிரம் கொண்டுவந்திருந்தால், இவ்வளவு ரன்களை போப் குவித்திருக்க மாட்டார். பந்து தாறுமாறாக எல்லாம் திரும்பவில்லை என்றபோதும், காற்றில் டிரிஃப்டை (Drift) பயன்படுத்தி, வலக்கை பேட்ஸ்மேனுக்கு வெளியே பந்தை கொண்டுசென்றார். சுந்தரின் டிரிஃப்டை கணிக்க முடியாமல்தான் போப் தவறான லைனில் ஆடி, ஸ்லிப்பில் ராகுலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அபாயகரமான பேட்ஸ்மேனான புரூக், இறங்கிவந்து விளையாட முயன்று ஸ்டம்பிங் ஆனார். வழக்கம் போல, கிடைத்த தொடக்கத்தை பெரிய இன்னிங்ஸாக மாற்றாவிட்டாலும், போப்பின் இன்னிங்ஸ் சிறப்பாக இருந்தது. குறிப்பாக, தலை, உடல் இரண்டையும் முன்னகர்த்தி அவர் வேகப்பந்து வீச்சை எதிர்கொண்டு ரன் சேர்த்த விதம் அபாரமாக இருந்தது. ஒரு பேட்ஸ்மேனுக்கு கால் நகர்வுக்கு நிகராக தலை நகர்வும் அவசியம். சுழற்பந்து வீச்சையும் நன்றாகவே எதிர்கொண்டு ரன் குவித்தார். அவருடைய துருதுருப்பான பேட்டிங், இங்கிலாந்து முன்னாள் பேட்ஸ்மேன் இயன் பெல்லை ஞாபகப்படுத்தியது. நாயகனாக மிளிர்ந்த ஜோ ரூட் சந்தேகமே இன்றி நேற்றைய நாளின் நாயகன் ஜோ ரூட்தான். இங்கிலாந்து கிரிக்கெட் வரலாற்றில் ரூட் அளவுக்கு சுழற்பந்து வீச்சை திறம்பட எதிர்கொண்ட ஒரு பேட்ஸ்மேன் வேறு எவருமில்லை. எப்போது ரன் சேர்த்தார் என்று தெரியாத அளவுக்கு, நேற்றைய நாள் முழுக்கவும் அடக்கமாக ரன் சேர்த்தார். ரிவர்ஸ் ஸ்வீப், ஸ்லாக் ஸ்வீப் உள்பட தனக்குப் பிடித்தமான ஷாட்களையும் தேவைக்கேற்ப பயன்படுத்தி சதத்தை எட்டினார். இந்த தொடர் முழுக்க பிரமாதமாக விளையாடாவிட்டாலும், தொடரில் இங்கிலாந்து முன்னணியில் இருப்பதற்கு ரூட்டின் பேட்டிங்கும் ஒரு முக்கிய காரணம். இங்கிலாந்து பேட்டிங் வரிசையில் இருந்து ரூட்டை எடுத்துவிட்டால், அது ஒரு சாதாரண அணியாக மாறிவிடும். நேற்று ஒரே நாளில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தவர்கள் வரிசையில், டிராவிட், காலிஸ், பாண்டிங் என மூன்று ஜாம்பவான்களையும் முந்தினார். கம்போஜ் பந்தை ஃபைன்லெக் திசையில் தட்டிவிட்டு தனது 38வது சதத்தை பதிவுசெய்த அவர், அதிக சதங்கள் எடுத்தவர்கள் வரிசையில், சங்கக்காராவை சமன்செய்தார். பட மூலாதாரம்,STU FORSTER/GETTY IMAGES ரூட் சதத்தை கடந்த பிறகு, இந்தியா முழு நம்பிக்கையும் இழந்துவிட்டது. களத்தில் இந்திய வீரர்களின் உடல்மொழி, அதிர்ஷ்டத்தில் விக்கெட் ஏதும் கிடைக்காத என ஏங்குவதை போலிருந்தது. பும்ரா வழக்கத்தை விட வேகம் குறைவாக பந்துவீசியது, அவர் உடற்தகுதி குறித்த சந்தேகங்களை எழுப்பியுள்ளது. அறிமுக வேகப்பந்து வீச்சாளர் கம்போஜ் பந்துவீச்சு சுத்தமாக எடுபடவில்லை. சராசரியாக மணிக்கு 120 கிமீ வேகத்தில் செல்லும் அவருடைய பந்துகளை மிகவும் அலட்சியமாக இங்கிலாந்து வீரர்கள் எதிர்கொண்டு ரன் குவித்தார்கள். பிரசித் கிருஷ்ணாவுக்கு இன்னொரு வாய்ப்பு கொடுத்திருக்கலாமோ என்று நிச்சயம் அணி நிர்வாகம் நினைத்திருக்கும். தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பாக, 20 விக்கெட்களை வீழ்த்துவதுதான் இலக்கு என கில் பேட்டி கொடுத்தார். ஆனால், மேட்ச் வின்னர்களை அணியில் சேர்க்காமல், 10-20 உதிரி ரன்களுக்கு ஆசைப்பட்டு ஆல்ரவுண்டர்களை வைத்து அணியை நிரப்பினால், 20 விக்கெட்கள் எடுக்க முடியாது என்பதை கில் இப்போது உணர்ந்திருப்பார். பட மூலாதாரம்,STU FORSTER/GETTY IMAGES இங்கிலாந்து அணி, ஒரே நாளில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 319 ரன்கள் குவித்துள்ளது. பொக்கிஷமாக பாதுகாக்க வேண்டிய பும்ராவை, 28 ஓவர்கள் பந்துவீச பணித்துள்ளார் கேப்டன் கில். அணித் தேர்வில் கவனம் செலுத்திருந்தால், பும்ராவுக்கு இவ்வளவு வேலைப்பளு ஏற்பட்டிருக்காது. கடைசி 3 விக்கெட்களை விரைவாக இழந்தாலும், ஸ்டோக்ஸ் களத் நிற்பதால், நான்காம் நாளில் பெரிய ஸ்கோரை பதிவுசெய்ய இங்கிலாந்து முயற்சிக்கும். நான்காம் நாளில், மதிய உணவு இடைவேளை வரை விளையாடினாலே, பெரிய லீடை (Lead) இங்கிலாந்து எட்டமுடியும். பிறகு, 150 ஓவர்களுக்கு மேல் விளையாட வேண்டிய நெருக்கடிக்கு இந்தியா தள்ளப்படும். தசைப்பிடிப்பால் ரிட்டர்ட் ஹர்ட் ஆன ஸ்டோக்ஸ், வோக்ஸ் ஆட்டமிழந்த பிறகு, மீண்டும் களத்துக்கு வந்தது, அவர் உடற்தகுதி குறித்த சந்தேகங்களை களைந்தது. பட மூலாதாரம்,STU FORSTER/GETTY IMAGES இந்தியா தோல்வியை தவிர்க்க முடியுமா? இந்தியா தோல்வியை தவிர்க்க வேண்டுமானால், கேஎல் ராகுல் எண்ணிலடங்கா பந்துகளை எதிர்கொள்ள வேண்டும். கடைசி 3 இன்னிங்ஸ்களாக ரன்னின்றி தவிக்கும் கேப்டன் கில், பெரிய இன்னிங்ஸ் ஒன்றை விளையாடியாக வேண்டும். இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் சொன்னபடி, ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் உள்ள சுவாரசியம் என்னவென்றால், தொடரின் இறுதிக்கட்டத்தில் வீரர்களுக்கு உடலும் மனதும் சோர்ந்து போயிருக்கும். ஆரம்பகட்டத்தில் இருந்த ஆக்ரோஷம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துகொண்டு வரும். தோல்வியின் விரக்தியில் இருக்கும் அணி, நிதானத்தை இழந்து நிறைய தவறுகளை செய்யத் தொடங்கும். கில் தலைமையிலான இந்திய அணி, இப்போது அப்படிப்பட்ட நிலையில் தான் உள்ளது. இரண்டாம் நாளின் கடைசியில் புதிய பந்தை எடுக்காதது, புதிய பந்தை அனுபவம் இல்லாத கம்போஜிடம் கொடுத்தது, தவறான நேரத்தில் பவுன்சர் பொறியை கையில் எடுத்தது என இந்தியா செய்த தவறுகள் அநேகம். நான்காம் நாள் ஆட்டத்தில் ஏதேனும் அதிசயம் நிகழ்ந்து இந்திய அணி எழுச்சி பெறுமா என்று பார்ப்போம். இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c5ye388y7l2o

ஈழத்தமிழர்களின் அரசியற் தலைவரான சம்பந்தனின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது

2 months ago
பாராளுமன்றத்தின் சிறந்த ஆளுமை : அரசியல்வாதிகளுக்கு உதாரணம் காலஞ்சென்ற இரா. சம்பந்தன் - அரசியல் கட்சி தலைவர்கள் Published By: VISHNU 25 JUL, 2025 | 10:30 PM (எம்.ஆர்.எம்.வசீம்) பாராளுமன்றத்தில் காணக்கிடைத்த மிகச் சிறந்த ஆளுமையாகவும் அரசியல்வாதிகளுக்கு உதாரண புருஷராகவும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் காலஞ்சென்ற இரா.சம்பந்தன் திகழ்ந்தார் என அரசியல் கட்சி தலைவர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் தெரிவித்தனர். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (25) இடம்பெற்ற காலஞ்சென்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ராஜவரோதயம் சம்பந்தன், ஏ. பிலபிற்றிய, டபிள்யூ.ஏ.ஏக்கநாயக்க, லக்கி ஜயவர்த்தன மற்றும் மாலனீ பொன்சேக்கா ஆகியோர் மீதான அனுதாபப் பிரேரணையில் உரையாற்றும் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர். இதன்போது, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் எம்.பியுமான ரவூப் ஹக்கீம் உரையாற்றுகையில், இரா. சம்பந்தன் இந்த பாராளுமன்றத்தில் நாங்கள் காணுகின்ற மிக அபூர்வமான ஆளுமையாகும். சம்பந்தனின் அரசியல் என்பது வெவ்வேறு யுகங்களாக ஆராயப்பட வேண்டியது. சரிதம் எழுதப்படும் போது ஒவ்வொரு யுகங்களில் அவரின் பங்களிப்பு இருந்துள்ளது. தமிழ் சமூகத்தின் விடுதலைக்காக எப்படி செயல்பட்டது என்பது பற்றி நிறைய பேசலாம். தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தில் ஒரு வகிபாகத்தை அவர் வகித்தார். அதற்கு இந்த சபையில் பலரும் சான்று பகிர்வார்கள். அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும் என்று பிரார்த்திக்கின்றேன். என்றார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் எம்.பியுமான ரிஷாத் பதியூதின் கூறுகையில், இரா.சம்பந்தன் இந்த நாட்டில் எல்லோருக்கும் முன்னுதாரமாக திகழ்ந்தவர். நல்ல பண்பான அரசியல் தலைவர். திருகோணமலை மாவட்ட மக்களால் நன்கு நேசிக்கப்பட்டவர். அவர் சகல பிரச்சினைகளின் போதும் அந்தப் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பங்கு வகித்தார். நடுநிலையான போக்கையும், சிறந்த அரசியல் அறிவையும் கொண்ட சம்பந்தன் ஐயாவை இழந்துள்ளோம். இவரை சகல தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய உயர்ந்த அந்தஸ்துள்ளவராக இருந்ததுடன், எதிர்க்கட்சித் தலைவராகவும். இருந்தார். இவர் இங்குள்ள அரசியல்வாதிகளுக்கு உதாரண புருஷராவார் என்றார். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ கூறுகையில், தேசிய அரசியலில் சிறந்தவொரு நபராக சம்பந்தன் இருந்தார். எப்போதும் அரசியல் தீர்வுக்காக முன்னின்றார். பலரும் பயங்கரவாத தீர்வை தேடிப் போன போது, அந்த விடயத்தில் அரசியல் தீர்வு காண செயற்பட்டார். அவர் ஜனநாயக முறைமையில் பாராளுமன்றத்தில் இருந்து மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு முயற்சித்தார். அவரின் குடும்பத்தினருக்கும் அவரின் கட்சியினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம் என்றார். இலங்கை தொழிலாலளர் காங்கிரஸ் தலைவரும் ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் கூறுகையில், சம்பந்தன் ஐயாவுடன் எனக்கு நெருக்கமான உறவு இல்லாவிட்டாலும் அவரின் அனுபவங்கள் அவரின் ஆலோசனைகளை பெற்றுள்ளேன். என்னால் கூறக் கூடிய முன்னுதாரணத்திற்கு அவரையே குறிப்பிடுவேன். மறைந்த ஆறுமுகன் தொண்டமானுக்கும் சம்பந்தன் ஐயாவுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு இருந்தது. அவருக்கு எமது மறியாதை எப்போதும் இருக்கும் அவரின் மறைவு தொடர்பில் அவருடைய குடும்பத்தினருக்கு எனது அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன் என்றார். https://www.virakesari.lk/article/220966

செம்மணியில் பால் போத்தலுடன் காணப்பட்ட குழந்தையின் எலும்புக் கூடு அகழ்ந்தெடுப்பு

2 months ago
அதிகாலையில் கண்விழிக்கு முன்பே, வேலிகளை வெட்டிக்கொண்டும் மதில் பாய்ந்தும் உள்ளே நுழைவார்கள் இராணுவத்தினர். எல்லோரையும் ஒரு பொது இடத்தில கூடும்படி அறிவிப்பார்கள், அங்கே விழித்த கண்ணுடனும் கழுவாத முகத்துடனும் அப்பகுதியில் உள்ளவர்கள் கூடுவோம். தனித்தனியாக விசாரிப்பார்கள் சிலரை தடுத்துவிடுவார்கள். இந்த நேரத்தில் அப்பிரதேசத்திற்கு யாரும் வரவோ அல்லது அங்கிருந்து யாரும் வெளியேறவோ அனுமதிக்கப்பட மாட்டார்கள், சுற்றி வளைப்பு பெயர். அதன் பின் குடும்ப அட்டை என்று ஒன்று கொண்டு வந்தார்கள். அதில் வீட்டிலுள்ளோரின் பெயர்கள் பதியப்பட்டு கிராமசேவகர் பிரதேசசபையினரால் உறுதிப்படுத்தப்பட்டு அங்குள்ள இராணுவத்தினரால் சரி பார்க்கப்பட்டு வீட்டில் தொங்க விடப்பட்டிருக்கும். அவர்கள் சோதனைக்கு வரும்போது அந்த அட்டையில்உள்ளவர்கள் அங்கு இருக்க வேண்டும். ஆட்கள் யாராவது கூட்டியோ, குறைந்தோ இருந்தால் மேலதிக விசாரணை. யாராவது உறவினர்கள் வந்தால், அருகிலுள்ள இராணுவ காவலரணில் அறிவிக்க வேண்டும். அதைவிட வீட்டுக்குள் புகுந்து சோதனை. ஒரு சூட்கேஸு பூட்டி வைத்திருந்தால் கூட திறக்கும்படி செய்து சோதனை செய்வார்கள். இப்படி பல சோதனைகள் பல நேரங்களில் காலம் நேரம் அறிவிப்பு கிடையாது. அகால நேரங்களில் கைது செய்யப்பட்ட பெண்கள் குழந்தைகளின் உடலாக இருக்கலாம். இதை செய்தவர்கள் உயிரோடு இருந்தால் இவைகள் வெளிவரும்போது அவர்களது மனச்சாட்சியை உலுக்காதா? அவர்களால் நிம்மதியாக உறங்க முடியுமா? ஆம், மிருகங்கள் ஒவ்வொரு நாளும் அப்பாவி விலங்குகளை துடி துடிக்க கொன்று புசிக்கின்றன, அடுத்த நாளும், வாழ்நாளெல்லாம் அவர்களது வாழ்க்கை சூழல் அதுவாயிற்றே.

சங்கிலியுடன் எம்ஆர்ஐ ஸ்கேன் அறைக்குள் நுழைந்தவர் மரணம் - நொடி நேரத்தில் எந்திரத்துக்குள் இழுத்த காந்தபுலம்

2 months ago
விமான நிலையங்களில் அந்தக் காந்தப்புல பரிசோதனை வளைவூடாக நான் செல்வதில்லை. வைத்தியர் தந்த எச்சரிக்கை அட்டை ஒன்று என்னிடம் எப்போதும் இருக்கும். அதனைக் காண்பித்தவுடன் என்னைத் தனியாக ஒருவர் அழைத்துத் தடவி பரிசோதிப்பார். ஒருதடவை அழகான இளமங்கை ஒருவர் என்னை அழைத்துத்து உச்சம் தலைமுதல் உள்ளம் கால்வரை தடவி பரிசோதித்த சம்பவமும் உண்டு.🤗

ஆகஸ்ட் 2 - வீரவணக்க நாள்!

2 months ago
ஆகஸ்ட் 2 - வீரவணக்க நாள்! விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த போராளிகள் சிலர், ஐரோப்பிய நாடுகளிலிருந்து இரண்டு நாள்களுக்கு முன்னால் என்னிடம் தொலைபேசியில் உரையாடினர்! தமிழ் ஈழத்திற்காகவும், அந்த மண்ணின் விடுதலைக்காகவும், தொடர்ந்து பல ஆண்டுகள் களத்தில் நின்று, பெரும்படை திரட்டிப் போராடி, உலக வரலாற்றில் ஒரு புதிய சரித்திரத்தைப் படைத்த தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் வீரச் சாவிற்கு வரும் ஆகஸ்ட் 2 அன்று, சுவிட்விசர்லாந்தில் மிகப்பெரும் அளவில் வீரவணக்க நாள் கூட்டம் நடத்த இருப்பதாகவும், அதற்கு உலகத் தமிழர்கள் அனைவரின் ஆதரவும் வேண்டும் என்றும் கூறினார்கள்! மாவீரர்களுக்கும் மரணம் உண்டு! ஆனால் அது மற்றவர்களின் மரணத்தைப் போன்றதன்று! தன் நாட்டிற்காகவும், மக்களுக்காகவும் தன்னலம் துறந்து வாழ்நாள் முழுவதும் போராடி, களத்தில் வீரச் சாவு அடைவது என்பது உலகம் மறக்க முடியாத ஒரு வரலாற்று நிகழ்வு! அத்தகைய மாவீரர்கள் புதைக்கப்படுவதில்லை மண்ணில் - விதைக்கப்படுகிறார்கள்! அவர்களின் வீர மரணத்தைத் தோல்வி என்று கருதி, தலைவர் இன்னும் உயிரோடுதான் இருக்கிறார் என்று சொல்லிக் கொண்டே இருப்பது அவருக்கு நாம் செலுத்த வேண்டிய மிகப்பெரும் வீர வணக்கத்திற்குத் தடையாக ஆகிவிடும்! இதனை உணர்ந்தே, போராளிகள் இயக்கத்தில் தலைவருடன் இருந்த மூத்தவர்கள் சிலர், இந்த முடிவை இப்போது எடுத்து இருக்கிறார்கள்! நவம்பர் 27- மாவீரர்கள் நாள், மே 18 - முள்ளிவாய்க்கால் நினைவு நாள் என்பவைகளைத் தாண்டி, இப்போது ஏன் ஆகஸ்ட் 2 என்று ஒரு வினா எழலாம் ! ஏதோ ஒரு காரணம் கருதியே அவர்கள் இந்த நாளைக் குறித்திருக்கக் கூடும்! எனவே நாள் பற்றிய விவாதங்களுக்கு இடம் தராமல், உலகம் முழுவதும் இருக்கும் தமிழர்கள், தமிழ் உணர்வாளர்கள் அனைவரும் அந்த மாபெரும் தலைவனுக்கு அன்று வீரவணக்கம் செலுத்திட வேண்டும் என்பதே நம் விருப்பம்! - சுப. வீரபாண்டியன் https://www.keetru.com/index.php/2009-11-06-11-47-46/karunchattai-jul25/48395-akast-2-viravanakka-nal

புதிய அரசியலமைப்புக்கான முதற்கட்ட பணிகள் ஆரம்பம் - பிரதமர்

2 months ago
புதிய அரசியலமைப்புக்கான முதற்கட்ட பணிகள் ஆரம்பம் - பிரதமர் Published By: Vishnu 26 Jul, 2025 | 02:24 AM (எம்.ஆர்.எம்.வசீ்ம்) புதிய அரசியலமைப்புக்கான ஆரம்பகட்ட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. எமது ஆட்சி காலத்துக்குள் புதிய அரசியலமைப்பு திருத்தங்களை மேற்கொள்வோமென பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (25) வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில், புதிய அரசிலமைப்பு திருத்தம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் அஜித் பி பெரேரா எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், புதிய அரசியலமைப்பு ஒன்று நாட்டுக்கு தேவையாகும். அது இந்த நாட்டின் அடிப்படை சட்டமாகும். அதனால் அதில் திருத்தம் மேற்கொள்ளும்போது அது தொடர்பில் ஆராயாமல், விசேட நிபுணர்களுடன் கலந்துரையாடாமல், பிரஜைகள் குழுக்களின் கருத்துக்களுக்கு செவிசாய்க்காமல் குறுகிய காலத்தில் மேற்கொள்வது சாத்தியப்படாத ஒன்றாகும். விசேடமாக தற்போது இருக்கும் சில கட்டளைகள்,சட்டங்கள், ஒழுங்குவிதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டி இருக்கின்றன. அதனால் எமது அரசாங்கம் அதுதொடர்பான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. அதன் பிரகாரம் புதிய அரசியல் அமைப்பு திருத்தம் தொடர்பான ஆரம்பகட்ட வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அரசாங்கம் புதிய அரசியலமைப்பு திருத்தம் மேற்கொள்ளும்போது அனைத்து தரப்பினருடன் கலந்துரையாடி, அனைத்து தரப்பினருக்கும் செவிசாய்க்க நடவடிக்கை எடுத்துள்ளது. விசேடமாக மக்கள் மயமான அரசியலமைப்பாக புதிய அரசியலமைப்பு திருத்தப்பட வேண்டும் என்பதே எமது அரசாங்கத்தின் நோக்கமாகும்.அதனால் புதிய அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் சமூக கருத்தாடல் ஒன்றுக்கு திறந்துவிடப்பட வேண்டும், அதேபோன்று பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அரசியல் கட்சிகள் மற்றும் பிரதிநிதித்துவப்படுத்தாத ஏனைய அரசியல் கட்சிகளின் கருத்துக்களுக்கும் செவிசாய்க்கப்படும். அதன் பிரகாரம் அரசாங்கம் வரைபு செய்யப்படும் புதிய அரசியலமைப்பு சமூகத்தில் அனைத்து தரப்பினரின் கருத்துக்களை மதித்து, வரைபு செய்யப்படுகின்ற, இதுவரை காலமும் உருவாகாத மக்கள் மயமான அரசியலமைப்பாக அமையும். அத்துடன் நாட்டின் பிரதான சட்டமான அரசியலமைப்பு அடிக்கடி திருத்தப்படக்கூடாது என்பதால், விசேட நிபுணர்களின் கருத்துக்களை கேட்டு, ஆழமாக ஆராய்ந்து தயாரிப்பதே எமது அரசாங்கத்தின் நோக்கமாகும். அதனால் இதற்காக சில காலம் தேவைப்படும். எமது கொள்கை பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள பிரகாரம் அந்த நடவடிக்கைகளை மேற்கொள்வோம். எமது அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இன்னும் ஒருவருடம் செல்லவும் இல்லை. இன்னும் எங்களுக்கு 4 வருடங்கள் இருக்கின்றன. அதனால் இது தொடர்பில் அவசரப்பட தேவையில்லை. எமது ஆட்சி காலத்துக்குள் புதிய அரசியலமைப்பு திருத்தங்களை மேற்கொள்வோம் என்றார். https://www.virakesari.lk/article/220973

10 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் - 62 வயது முதியவர் கைது

2 months ago
10 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் - 62 வயது முதியவர் கைது செய்திகள் யாழ்ப்பாணம், வேலணை, துறையூர் பகுதியில் 10 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்திய சந்தேகத்தின் பேரில் 62 வயது கடை உரிமையாளர் ஒருவர் ஊர்காவற்றுறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த சனிக்கிழமை (19) அன்று, துறையூர் கடற்றொழில் சங்கத்திற்கு அருகிலுள்ள கடைக்கு சிறுமி ஜூஸ் வாங்கச் சென்றபோது, கடை உரிமையாளர் சிறுமியை குளிரூட்டிக்குள் ஜூஸ் எடுக்குமாறு கூறி, அவர் ஜூஸ் எடுக்க முற்பட்டபோது பின்புறமாக கட்டியணைத்து பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார். பதற்றத்துடன் வீடு திரும்பிய சிறுமி, இச்சம்பவத்தை தனது தாயாருக்கு தெரிவித்தார். ஆனால், சமூகம் மற்றும் அயலவருக்கு அஞ்சிய தாயார், முதலில் பொலிஸ் முறைப்பாடு செய்ய தயங்கினார். பின்னர், சமூக நலன்விரும்பிகளின் முயற்சியால், கடந்த 23ஆம் திகதி கிராம உத்தியோகத்தருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, 24ஆம் திகதி வேலணை பிரதேச செயலகத்தின் சிறுவர் நன்னடத்தை அலுவலகத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. அதே நாளில் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. இதையடுத்து, பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டு, நேற்று (25) பிற்பகல் குறித்த சந்தேக நபரை கைது செய்தனர். அவர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். https://adaderanatamil.lk/news/cmdjnbjn101nmqp4kln447ceb

வடக்கு கிழக்கில் ஆரம்பமாகும் பாரிய போராடடம்!

2 months ago
வடக்கு கிழக்கில் ஆரம்பமாகும் பாரிய போராடடம்! சர்வதேச நீதிப் பொறிமுறையை வலியுறுத்தி வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள 8 மாவட்டங்களிலும் இன்றைய தினம் போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. வடக்கு கிழக்கு சமூக இயக்கத்தின் ஏற்பாட்டில் எட்டு மாவட்டங்களிலும் காலை 10 மணிக்கு இந்த போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளது. இலங்கையில் மனித குலத்திற்கு எதிராக இடம்பெற்ற வன்முறைகள் மற்றும் போர்க் குற்றங்கள் தொடர்பாக எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் எடுக்கப்படும் இலங்கை தொடர்பான தீர்மானத்தை வலுப்படுத்தும் வகையில் இந்த போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, சர்வதேச நீதிப் பொறிமுறையை வலியுறுத்தி வடக்கு கிழக்கு மாகாணங்களில் இடம்பெறவுள்ள போராட்டங்களுக்கு வலு சேர்க்கும் வகையில் மலையக சிவில் அமைப்புகளின் ஏற்பாட்டில் கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்துக்கு முன்பாக இன்று போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. அத்துடன், இலங்கையில் உள்ள சிறைச்சாலைகளில் கொல்லப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளுக்கு நீதி கோரிய நினைவேந்தல் நிகழ்வு யாழ்ப்பாணம் கிட்டு பூங்காவில் இரண்டாவது நாளாக நேற்றும் இடம்பெற்றுள்ளது. நீண்டகாலமாகச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுவிக்குமாறும் இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது. https://newuthayan.com/article/வடக்கு_கிழக்கில்_ஆரம்பமாகும்_பாரிய_போராடடம்!

1983 கறுப்பு ஜூலை; பாதுகாப்பான எதிர்காலத்துக்காக கடந்த காலத்தை நினைவுகூருதல்

2 months ago
நாட்டில் நடந்தது பயங்கரவாதம் ஒழிய இனவாதமல்ல என்று கூறிய, எச்சரித்த இனவாதிகளுக்கு; செம்மணி புதைகுழியில் வெளிவரும் மனித எச்சங்கள், காலங்காலமாக நடந்த வன்முறைகள் அதற்கான சான்றுகள். இனிமேலும் மூடி மறைக்க முடியாதென்கிற சூழலையும், அதான் தாக்கத்தையும் உணர்த்த தொடங்கி விட்டன. அதற்காக எதையாவது செய்வதாக காண்பித்து தம்மை காத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது சிங்களம். அதற்காக ஏதேதோ சொல்லவும் செய்யவும் தலைப்படிருக்கிறது. அது நாங்களல்ல அந்தக்கட்சி என்று விரல் நீட்டி தப்பி விட துடிக்கின்றன. கட்சிகளின் பெயரில் மாற்றமிருந்ததேயொழிய கொள்கைகளில் மாற்றமில்லை என்பதையே தொடர்ந்து மாறி மாறி ஆட்சிக்கு வந்த கட்சிகளும் நிரூபித்தன. நல்லாட்சி ஆட்சிக்கு வந்தபோது, ஏதோ செய்வதாக காட்டிக்கொண்டன. ஐ. நாவில் கால அவகாசமும் பெற்றுக்கொண்டன, இறுதியில் எல்லாவற்றையும் கைவிட்டு ராஜபக்சக்களை மின்சாரகதிரையிலிருந்து நாமே காப்பாற்றினோம் என்று புகழ்ந்து கொண்டார்களே ஒழிய பாதிக்கப்பட்ட தரப்புக்கு எதுவும் செய்யவில்லை. இப்போ, அனுரா ஐ .நா. வை சமாளிக்க இப்படி செய்து நாடகம் ஆடுகிறாரா அல்லது உண்மையிலேயே நாட்டை கட்டியெழுப்ப போகிறாரா? எடுத்த திட்டத்தை கைவிட்டால் அதற்கு இவரும் உடந்தையாவதோடு, இவர் வெகு விரைவில் அரசியலில் இருந்து தூக்கியெறியப்பட்டு, ஏளனம் செய்யப்பட்டு, கைதும் செய்யப்படலாம். இங்கு இனமோ இறைமையோ எதுவுமில்லை, அரசியல் அதிகாரமே முக்கியம். தமிழரை ஒடுக்குவதற்கும் அதுவே உண்மையான காரணம். அதை மறைக்க வேறேதோ புனைகிறார்கள். இந்த பெருச்சாளிகளை கைது செய்யாவிட்டால்; நாட்டை காப்பாற்ற முடியாது. குற்றவாளிகளுக்கு துணை போனவர்கள் இப்போ தம்மை பாதுகாத்து கொள்வதற்காக இரகசியங்களை வெளியிட்டு வருகிறார்கள். இங்கே அரசியல் பழிவாங்கல் என்கிற கூச்சலுக்கு இடமில்லை. தாமதிக்கும் ஒவ்வொரு கணமும் சாட்சிகளுக்கும் இந்த அரசுக்கும் ஆபத்தே.
Checked
Sun, 09/28/2025 - 12:40
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed