2 months ago
23 ஜூலை 2025 விண்வெளியின் விளிம்பில் இருந்து குதித்து ஸ்கை டைவிங் சாகசம் செய்து உலக சாதனை படைத்த இத்தாலியைச் சேர்ந்த ஃபெலிக்ஸ் பாம்கார்ட்னர் என்பவர் உயிரிழந்தார். 56 வயதான இவர், கிழக்கு மார்ச்சே பகுதியில் உள்ள போர்டோ சாண்ட் எல்பிடியா என்ற கிராமத்தின் அருகே பாரா-கிளைடிங் செய்து கொண்டிருந்த போது திடீரென விபத்து ஏற்பட்டு, உணவகம் ஒன்றின் நீச்சல் குளத்தில் விழுந்து உயிரிழந்தார். இது குறித்து, போர்டோ சாண்ட் எல்பிடியா கிராமத்தின் மேயர் மிஸிமில்லியானோ சியார்பெல்லா, வானில் பறக்கும் போது இவருக்கு திடீரென உடல்நல பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்றார். காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் கூட விபத்து ஏற்பட்டிருக்கலாம் என விசாரணையில் தகவல்கள் வெளியாகியுள்ளன. 2012ம் ஆண்டு 1,28,000 அடி உயரத்தில் பூமியின் வளிமண்டலத்தின் மேலடுக்கில் (stratosphere) இருந்து குதித்து, மிக உயரமான ஸ்கை டைவிங் சாதனையை நிகழ்த்தி பிரபலமானார் பாம்கார்ட்னர். ஆஸ்திரியாவை சேர்ந்த இவர் மணிக்கு 1,342 கிமீ வேகத்தில் ஸ்கைடைவிங் செய்த ஒலியின் வேகத்தை முந்தி சாதனை புரிந்தவரும் இவர்தான். தனது அசாத்திய சாகசங்களால் 'பயமறியா ஃபெலிக்ஸ்' (Fearless Felix) எனப் போற்றப்பட்டார். 1999ல் ரியோ-டி-ஜெனிரோவில் உள்ள உலகின் உயரம் குறைந்த பேஸ் ஜம்பில் இருந்து 98 அடி உயரத்திற்கு குதித்து சாதனை படைத்துள்ளார். அதே ஆண்டில் மலேசியாவின் பெட்ரோனாஸ் டவரில் இருந்து குதித்ததன் மூலம், 'உலகிலேயே பாராசூட்டில் இருந்து மிக உயரமாக குதித்த நபர்' என்ற சாதனையை தன்வசப்படுத்தினார். வான்வெளியில் இருந்து குதித்து அசாத்திய சாதனையை நிகழ்த்தியபின் பாம்கார்ட்னர் கூறியதாவது "உலகின் உச்சியில் நிற்கும்போது நீங்கள் மிகவும் அடக்கமாக மாறிவிடுவீர்கள். சாதனைகளை முறியடிக்கவோ, அறிவியல் ஆய்வுகளை தகர்க்கவோ நினைக்க மாட்டீர்கள். உயிரோடு திரும்பினால் போதும் என்றே தோன்றும்" என்றார். 'இவர் மறைந்தாலும், வலிமை மற்றும் கம்பீரத்தின் மறுஉருவமாக அறியப்படுவார்' எனக்கூறி இவரின் கிராம மக்கள் உருக்கமாக அஞ்சலி செலுத்தினர். சமூக வலைதளங்களில் இவரின் பாரா-கிளைடிங் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cp8mgdrp12no
2 months ago
2 months ago
2 months ago
நாடு முழுவதும் காயமடைந்த 20 யானைகள் தற்சமயம் சிகிச்சையில்! நாடு முழுவதும் தற்சமயம் குறைந்தது 20 காயமடைந்த யானைகள் சிகிச்சை பெற்று வருவதாக வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது. சிகிச்சை பெறும் பெரும்பாலான யானைகளுக்கு துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்கு இலக்காகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதன்படி, அனுராதபுரம் வனவிலங்கு வலயத்தில் 8 காட்டு யானைகளும், பொலன்னறுவை வனவிலங்கு வலயத்தில் நான்கு காட்டு யானைகளும், வடமேற்கு வனவிலங்கு வலயத்தில் மூன்று காட்டு யானைகளும், ஊவா வனவிலங்கு வலயத்தில் ஐந்து காட்டு யானைகளும் இவ்வாறு சிகிச்சை பெற்று வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனிடையே, திகம்பதஹ பகுதியில் பதிவான மூன்று காட்டு யானைகள் இறப்புகள் குறித்து விசாரணை நடத்துவதற்கு தேவையான தொழில்நுட்ப மற்றும் பிற உதவிகளை வழங்குமாறு பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களப் பணிப்பாளர் ஜெனரல் ரஞ்சன் மாரசிங்க தெரிவித்தார். https://athavannews.com/2025/1440379
2 months ago
சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்கா திறப்பு நிகழ்வு; ஷாருக்கானுக்கு பதிலாக ஹிருத்திக் ரோஷன்! தெற்காசியாவின் முதல் ஒருங்கிணைந்த சொகுசு ரெசோர்ட்டான “சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்கா”வின் (City of Dreams Sri Lanka) பிரமாண்ட திறப்பு நிகழ்வுக்காக போலிவூட் முன்னணி நட்சரத்திரம் ஹிருத்திக் ரோஷன் இலங்கைக்கு வருகை தரவுள்ளார். முன்னதாக திறப்பு விழாவில் போலிவூட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டது. எனினும், பின்னர் எதிர்பாராத மற்றும் தவிர்க்க முடியாத காரணங்களினால் அவர் தொடக்க நிகழ்வில் கலந்து கொள்ள மாட்டார் என்று ஏற்பாட்டாளர்கள் உறுதிபடுத்தினர். இந்த நிலையில் மேற்கண்ட அறிவிப்பு வந்துள்ளது. இந்தியாவின் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவரான ஹிருத்திக் ரோஷன், ஜான் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் மெல்கோ ரிசார்ட்ஸ் & என்டர்டெயின்மென்ட் இணைந்து உருவாக்கிய மெகா திட்டத்தின் அதிகாரப்பூர்வ திறப்பு நிகழ்வில் இப்போது கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளார். இந்த நிகழ்வு உள்ளூர் மற்றும் சர்வதேச அளவில் குறிப்பிடத்தக்க கவனத்தை ஈர்க்கும் என்று ஏற்பாட்டாளர்கள் எதிர்பார்த்துள்ளனர். 1.2 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான இந்த திட்டம் உலகத் தரம் வாய்ந்த, அதி-ஆடம்பரமான நுவா ஹோட்டல் மற்றும் ஒரு உயர்நிலை ஷாப்பிங் மால் ஆகியவை இதில் அடங்கும். இது இன்றுவரை இலங்கையின் ஆடம்பர வாழ்க்கை முறை துறையில் மிகப்பெரிய தனியார் துறை முதலீடாக அமைகிறது. கொழும்பை உலகளாவிய சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு தலமாக நிலை நிறுத்துவதில் இந்த தொடக்க விழா ஒரு மைல்கல்லாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்காவின் அதிகாரப்பூர்வ ஆரம்ப நிகழ்வு எதிர்வரும் ஆகஸ்ட் 2 அன்று இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1440376
2 months ago
இங்கிலாந்துடன் முக்கிய வர்த்தக ஒப்பந்தம்; இந்தியப் பிரதமர் மோடி லண்டன் விஜயம்! இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் இங்கிலாந்து விஜயமாக வியாழக்கிழமை (23) லண்டன் சென்றடைந்துள்ளார். லண்டன் சென்றடைந்த மோடியை, விமான நிலையத்தில் இந்தோ-பசுபிக் பகுதிக்குப் பொறுப்பான இங்கிலாந்து வெளிவிவகார அமைச்சர் கேத்தரின் வெஸ்ட், புது டெல்லிக்கான இங்கிலாந்தின் உயர் ஸ்தானிகர் லிண்டி கேமரூன் உள்ளிட்டோர் வரவேற்றனர். தனது வருகையை அறிவித்த பிரதமர் மோடி, இந்த பயணம் இந்தியாவிற்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான பொருளாதார கூட்டாண்மையை மேம்படுத்தும் என்று கூறினார். இந்தப் பயணத்தில் மோடி, இங்கிலாந்துடன் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடவுள்ளார். மேலும், இங்கிலாந்துப் பிரதமர் கெய்ர் ஸ்டார்மருடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என்றும், மன்னர் சார்லஸையும் சந்திப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளிலும் செழிப்பு, வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம் ஆகியவற்றில் முக்கியத்துவம் அளித்து, பொருளாதார உறவுகளை மேம்படுத்துவதில் இரு தலைவர்களும் இதன்போது கவனம் செலுத்த வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இரு நாடுகளின் தயாரிப்புகளை மேலும் போட்டித்தன்மை வாய்ந்ததாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட முன்மொழியப்பட்ட வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் இரு நாடுகளுக்கும் இடையே இறக்குமதி மற்றும் ஏற்றுமதி மீதான வரிகளை நீக்க அல்லது குறைக்கும் முயற்சிகளை பிரதமர் மோடியின் வருகை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இரு தரப்பினரும் 2030 ஆம் ஆண்டுக்குள் 120 பில்லியன் அமெரிக்க டொலர் இருதரப்பு வர்த்தக அளவை இலக்காகக் கொண்டுள்ளனர். 2023–24 ஆம் ஆண்டில், இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் 55 பில்லியன் அமெரிக்க டொலர்களை தாண்டியது. இதுவரை 36 பில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்துள்ள இங்கிலாந்து இந்தியாவின் ஆறாவது பெரிய முதலீட்டாளராக உள்ளது. அதேநேரத்தில் இங்கிலாந்தில் உள்ள கிட்டத்தட்ட 1,000 இந்திய நிறுவனங்கள் சுமார் 1,00,000 பேரை வேலைக்கு அமர்த்தியுள்ளன. இங்கிலாந்தில் இந்திய முதலீடுகள் சுமார் 20 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளன. பிரதமர் மோடி பதவியேற்றதிலிருந்து ஐக்கிய இராச்சியத்திற்கு நான்காவது முறையாக இந்த பயணம் அமைந்துள்ளது. அவர் இதற்கு முன்பு 2015, 2018 மற்றும் 2021 இல் கிளாஸ்கோவில் நடந்த COP26 உச்சிமாநாட்டிற்காக விஜயம் செய்திருந்தார். கடந்த ஆண்டில், மோடியும் ஸ்டார்மரும் இரண்டு முறை சந்தித்துள்ளனர் – முதலில் ரியோ டி ஜெனிரோவில் நடந்த G20 உச்சிமாநாட்டிலும், அண்மையில் ஜூன் மாதம் கனடாவின் கனனாஸ்கிஸில் நடந்த G7 உச்சிமாநாட்டிலும் சந்தித்துள்ளனர். https://athavannews.com/2025/1440382
2 months ago
கச்சதீவு விவகாரம்: இலங்கைக்கு இந்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்! கடந்த 10 ஆண்டுகளில் இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் மற்றும் படகுகள் சேதமடைந்தவர்களின் நெருங்கிய உறவினர்களுக்கு இழப்பீடு மற்றும் நிவாரணம் வழங்குவதற்கு, இலங்கை அரசிற்கு இந்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இந்திய நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே வைகோ இவ்வாறு வலியுறுத்தியிருந்தார். இது குறித்து வைகோ மேலும் தெரிவிக்கையில் ”இலங்கைக் கடற்படையினரால் இந்திய மீனவர்கள் தாக்கப்படுவதும் கைது செய்யப்படுவது ஆண்டுதோறும் அதிகரித்து வருகின்றன. 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து இது வரை கைது செய்யப்பட்ட மீனவர்களின் எண்ணிக்கை 150 ஆக பதிவாகியுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட படகுகளின் எண்ணிக்கை 20 ஆகவும் உயர்ந்துள்ளன. இதனால் மீனவ குடும்பத்தினர் பெரும் நிதி நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். அவர்கள் பெரும்பாலும் தங்கள் உறவினர்களை விடுவிப்பதற்காக பெரிய அபராதங்களை கட்ட வேண்டிய சூழல் ஏற்படுகின்றது. கடந்த 13ஆம் திகதி ஆறு இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களின் மோட்டார் பொருத்தப்பட்ட மீன்பிடி படகுகளும் பறிமுதல் செய்யப்பட்ட கொடூரம் நடைபெற்றுள்ளது. பாக் விரிகுடாவில் தமிழக மீனவர்களின் பாரம்பரிய உரிமைகளைப் பறிக்கும் வகையில் இலங்கை கடற்படை தொடர்ந்து அத்துமீறி வருகிறது. இது இந்திய ஒன்றிய அரசுக்கு பெரும் சவாலாக உள்ளது. அடிக்கடி தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதாலும் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதாலும் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகின்றன. எனவே கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் நிபந்தனையின்றி உடனடியாக விடுவிக்க நடவடிக்கைகளை எடுக்குமாறு ஒன்றிய அரசை வலியுறுத்துகிறேன். எதிர்காலத்தில் மீனவர்கள் கைது செய்யப்படுவதைத் தடுக்கவும் மீனவ சமூகத்தின் உரிமைகளைப் பாதுகாக்கவும் ஒன்றிய அரசு தீர்வுகாண வேண்டும். கடந்த 10 ஆண்டுகளில் இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் மற்றும் படகுகள் சேதமடைந்தவர்களின் நெருங்கிய உறவினர்களுக்கு இழப்பீடு மற்றும் நிவாரணம் வழங்குவதற்கு இலங்கை அரசிற்கு இந்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். கச்சத் தீவு ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்து கச்சத் தீவையும் திரும்பப் பெற வேண்டும் என ஒன்றிய அரசை வலியுறுத்துகிறேன்” எனவும் வைகோ தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1440330
2 months ago
இந்த செய்திகளுக்கான மூலம் இருந்தால் பகிர்வும் ஐயனே
2 months ago
முப்பத்தியொண்ணு புள்ளி மூணு நாலு ஏழு பர்சண்ட்டுங்க .. 😀 (31.347%)
2 months ago
77 ....83 ..இரண்டிலும் உயிர் பிழைத்திருக்கின்றேன்...தப்பியது அரும் தப்பு
2 months ago
இந்த சொறியனுக்கே இலங்கை சட்டம் நீதியில் நம்பிக்கை இல்லையென்றால், இவற்றால், இவர்களால் பாதிக்கப்பட்ட நமக்கு இந்த நீதித்துறையில், நீதி கிடைக்குமென்று எப்படி எதிர்பார்க்கமுடியும்? சர்வதேசம் எப்படி உள்ளூர் விசாரணையை சிபாரிசு செய்யவோ, ஊக்கப்படுத்தவோ முடியும்? அனுர இந்த விசாரணைகள் மூலம் தமது நம்பிக்கையை வெளிப்படுத்தி தமது செல்வாக்கை மீள எழுப்பவும், தாமே யுத்த குற்றங்களை விசாரிக்க முடியுமென நிரூபிக்க முயற்சிக்கிறார். அவரால் இவர்களை விசாரித்து தண்டிக்க முடியுமென்றால், சர்வதேசம் தண்டிப்பதற்கு ஏன் முட்டுக்கட்டை போட வேண்டும்? அடுத்த ஐ .நா. தொடருக்கு முன் தடபுடலாக விசாரணையை ஆரம்பித்து, தம்மால் முடியுமென காட்ட முனைப்பு நடைபெறுகிறது. ஆனால் தண்டனை என்பது சாத்தியமா? அது இருக்க, தாம் அகப்படுமுன் கத்தி கூச்சல் போட்டு விசாரணைகளை தடுத்து விட்டால், தாம் தப்பித்துக்கொள்ளலாம் என்பது குற்றவாளிகளின் கற்பனை.
2 months ago
அது என்றால் முழுக்க உண்மை தான். பிற்போக்கான விடயங்களில் இவர்களுக்கிடையில் உள்ள ஒற்றுமையை கண்டு கொண்ட பெரியவர்கள் தமிழ் தலிபான்கள் என்ற பொருத்தமான பெயரை வைத்தனர்.
2 months ago
எங்கள் உறவுகளில், தெரிந்தவர்கள், ஊரவர்கள் என்கிற வட்டத்தில் கூட பலர் சிங்கள பெண்களை, ஆண்களை செய்து வாழ்ந்தும் கெட்டும் இருக்கிறார்கள். இங்கு களத்தில் கூட சிலர் இருக்கலாம். அதில் சிங்களத்துக்கு அநிஞாயத்திற்கு வக்காலத்து வாங்குபவர்களே அதிகம். யாருக்காவது வக்காலத்து வாங்கலாம், ஆனால் நீதிக்கு புறம்பாக, பாதிக்கப்பட்டவர்களை தாக்குவது சரியல்ல, வக்கிரம்.
2 months ago
படத்தில் விமானத்துடன் நிற்பவரை பற்றி எனக்கு எதுவும் தெரியவில்லை அவர் உறவினரோ அல்லது அப்பாவோ அதை செய்தியாக போட்டவர் தாழ்வு மனப்பான்மை சிக்கலால் பாதிக்கபட்டவர்.
2 months ago
இல்லை சிறி, அவர்கள் எல்லோருக்கும் சுமந்திரனை தெரியும், தெரிந்துதான் கூட்டுச்சேர்ந்தார்கள். ஏனெனில் அவர்களும் பதவிகளுக்காக தொழுது பின் திரிபவர்கள் தான். நேற்று வந்த சாணக்கியன், அதுவும் சிங்களத்தின் பாசறையில் இருந்து வந்தவர், வரலாறு தெரியாதவர், நஸீருடன் நடந்த நேர்காணலில் அதை ஏற்றுக்கொண்டவர், வந்ததுமுதல் முஸ்லிம்களோடு ஒட்டிஉறவாடுபவர், தமிழர் மத்தியில் வாய் வீச்சு மட்டும் காட்டுபவர், ஆரம்ப உறுப்பினர்களை பரிகசிப்பவர், கட்சியின் தலைமைக்கு ஆசைப்படுவது தமிழரை எந்தளவுக்கு காப்பாற்றும் என்று தெரியவில்லை.
2 months ago
சிங்கள, தமிழ், முஸ்லீம் மக்களை குறிவைத்து நடாத்தப்பட்ட தாக்குதல்கள்; தங்கள் போரினை நிஞாயப்படுத்தி, மக்களின் எதிர்ப்பை தவிர்த்து, ஆதரவைப்பெறவும், சர்வதேச நாடுகளிடம் நிதி, அனுதாபம், ஆலோசனைகளை பெறவும் நிகழ்த்தப்பட்டன. பொன்சேகாவே கூறியிருந்தார், தன்மீதும் கோத்தா மீதும் நிகழ்த்தப்பட்ட தாக்குதல் வேண்டுமென்றே தங்களை பாதிக்கப்பட்டவர்களாக காட்டவும் போரின் தாக்குதலை அதிகரிக்கவும் செய்யபட்ட தந்திரம் என்று. இன்னும் பல எதிர்பார்க்கிறோம்! இதில் முஸ்லிமகளின் பங்கும் வெளிவர வேண்டும். வானுயர உயர்த்தப்பட்டு பாராட்டப்பட்டவர்கள் பாதாளம் வரை தாழ்த்தப்பட்டு தண்டிக்கப்படவேண்டும். இந்த அழிவு வேண்டுமென்றே வலிந்து திணிக்கப்பட்டது. உண்மைகளை வெளிக்கொண்டு வருவோரின் பாதுகாப்பு அதிகரிக்கப்படவேண்டும். இல்லையேல், மௌனமாக்கப்பட வாய்ப்புண்டு. இன்னும் சிறிது நேரத்தில் உதயன் கம்மன் பில கூப்பாடு போட்டுகொண்டு வருவார் சிங்களத்தை துயிலெழுப்ப.
2 months ago
இனக்கலவரம் யூலை 1983 - ஒரு சாட்சி ஆமர்வீதிச்சந்தியில் கீழே அண்ணரின் உணவகம் மேலே நாலாம் மாடியில் எனது வசிப்பிடம். யூலை 23 இல் தெற்கின் பல பாகங்களிலும் கலவரம் உச்சமடைந்த போதிலும் இதன் முன்னர் பல இனக் கலவரங்கள் வந்தபோதிலும் எமது உணவகமோ எமது கட்டிடமோ தாக்கப் பட்டிருக்கவில்லை என்ற அதீதமான நம்பிக்கை கைகொடுக்க யூலை 24 அதிகாலை வரை நாம் இருப்பிடத்தில் இருந்து நடப்பவைகளை அவதானித்தபடி.... யூலை 24 அதிகாலையில் மொட்டை மாடியில் நின்றபடி பார்த்தபோது தெமட்டகொட பக்கமாக இருந்து சில குழுக்கள் (அநேகமான பதின்ம வயதினர்) வீதியில் இருந்த தமிழ் கடைகளை உடைத்தும் நெருப்பு வைத்தபடியும் ஆமர்வீதி சந்தி நோக்கி வந்து கொண்டிருந்தனர். ஆனாலும் எமக்கு எந்த பயமோ பதட்டமோ ஏற்படவில்லை. காரணம் எமக்கு கீழே ஆமர்வீதி சந்தியில் இருந்து பொலிஸ் நிலையம் வரை வீதியின் நடுவில் 30க்கும் மேற்பட்ட ஆயுதம் தாங்கிய காவல்துறையினர் காவலில் இருந்தனர். அத்தனை பேரும் தெரிந்தவர்கள் அனைவரும் எமது உணவக இலவச வாடிக்கையாளர்கள். ஆமர்வீதிச்சந்தியில் இருந்து ஒரு நூறு மீட்டர் தூரத்தில் குழுக்கள் வந்து கொண்டிருந்த போது அவர்கள் எம்மை நோக்கி வர வழி விடும்படியாக காவலுக்கு நின்ற காவல் துறையினர் திரும்பி செல்ல திரும்பி காவல் நிலையம் நோக்கி நகரத் தொடங்கிய போது தான் நெஞ்சு சுவாசம் ஓங்கி அடிக்க தொடங்கியது. தப்பி ஓடக்கூட நேரம் சுருங்கி விட்டிருந்தது. நாலாம் மாடியில் இருந்து கீழே இறங்கி வருகிறோம் கீழே இரும்பு கதவை உடைத்து தோற்ற கூட்டம் முதலாம் மாடிக்கு பெற்றோல் குண்டுகளை வீசிக் கொண்டிருக்கு அங்கே தீப்பிடிக்க ஆரம்பிக்கிறது.. முதலாம் மாடியின் பின் புறத்திற்கு ஓடி வருகிறோம் அருகில் இருந்த மரக்கடை எரியத் தொடங்கி இருந்தது. உடுத்தியிருந்த சறம் மற்றும் சேட்டை சிங்களவன் அணிவது போல் மாற்றி கட்டியபடி எங்கள் முதலாம் மாடியில் இருந்து பக்கத்து வீட்டு கூரைகளின் நடந்து பின்னால் இருந்த சிங்கள பாடசாலைக்குள் குதித்து அதே குழுக்களுடன் கலந்து வெளியேறி இன்று உயர் வாழ்கிறேன். ஆனாலும் எப்படி தப்பினேன் என்பது இன்றும் அதிசயமாகவே...... அன்று தெரிந்து கொண்டவை. இது எனது நாடல்ல இது எனது அரசல்ல இது எனது காவல்படை அல்ல. சிங்களவர்கள் எமது சகோதரர்கள் அல்ல.
2 months ago
அவருக்கு தெரியுமோ இல்லையோ - அது அவர் தன் தொழில் தகமை, வாய்புகள் பற்றி ஆராய்ந்து முடிவு எடுத்திருப்பார் என நம்பலாம். இன்னும் ஒரு விடயத்தைதுயும் நீங்கள் தெரிந்து கொள்ள என சொல்கிறேன். இதே போல இலகுரக விமானங்களை ஒரு பொழுதுபோக்காக பறக்கும் தமிழ் ஆட்கள் கூட உள்ளார்கள். ஒரு சின்ன விமானத்தின் உரிமையை, அதன் பராமரிப்பை பலர் சேர்ந்து ஒரு சிண்டிகேட் போல வாங்கி கொள்வது, பின்னர் விமான லைசன்ஸ் பெற்று கொண்டு, இந்த விமானத்தில் அவர்களுக்குரிய நேர்ந்த்தில் பறப்பது. இப்படி இந்த வகை விமான ஓட்டி லைசன்ஸ் பெறுவது என்பது ஒன்றும் செய்தி வரும் அளவு சாதனை அல்ல. 🤣 கோஷான், ஜஸ்டின் உங்களை எதிர்த்தால் - ஜேர்மனியில் இருந்து உங்களுக்கு வாழ்த்து கராண்டீட்🤣.
2 months ago
இதை தாம் செய்யவில்லை என எந்தளவு வலுவாக புலிகள் மறுத்தார்கள்?
2 months ago
நானும் பார் சிறியைப் பிடிச்சு ஒரு பார் லைசன்ஸ் எடுக்கப்போறன். என்னை வாழ்த்துவீங்களா பிரண்ட்ஸ்?!😎
Checked
Sun, 09/28/2025 - 06:35
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed