புதிய பதிவுகள்2

ஐரோப்பாவில் விமானி உரிமம் பெற்ற மன்னார் இளைஞன்!

2 months ago
வர வர "The Onion" மாதிரி செய்திகள் போடுகிறது ஆதவன். ஜோர்ஜ் புஷ் ஜனாதிபதியாக இருந்த காலத்தில், இந்த நையாண்டிப் பத்திரிகையை பல்கலையினுள் ஓடித் திரியும் உள்ளகப் பேருந்தில் இலவசமாக வாசிக்கக் கிடைக்கும். ஒரு தடவை "ஜனாதிபதி புஷ் அவரது பாரியாரின் ஜனன உறுப்பிற்கு விஜயம் செய்தார்" என்று ஒரு பெரிய தலையங்கம் போட்டு அசத்தியிருந்தார்கள்😂!

பொருளாதார ரீதியில் உலகின் மிகவும் சக்திவாய்ந்த நாடுகளின் பட்டியல் வெளியானது!

2 months ago
gdp அளவீடு முறை வேறு பல பலம் / பலவீனங்களை மறைகிறது. உ.ம். ஆக அமெரிக்காவின் பெரிய வெளிக்கடன், சீனாவின் மிக குறைந்த கடன். அத்தத்துடன், கேந்திர முக்கியத்துவத்தில் சீன (அல்லது மற்ற நாடுகள் ) அடைந்துள்ள முன்னேற்றம், முடக்க, பின்தங்கிய நிலை போன்றவை.

பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்துக்கு தந்தையின் பெயர் அவசியமில்லை ; அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ்

2 months ago
ஆண் சிங்கம் இன்னொரு ஆணுக்கும் தன் துணைக்கும் பிறந்த குட்டிகளை கொல்லும். சில சமயம் தன் குட்டிகளை கூட என நினைக்கிறேன். அதேபோல் ஏனைய சில மிருகங்களிடமும் குட்டிகளை கொல்லும் வழக்கம் உண்டு. அத்துடன், பிறப்பின் போதே குட்டிகளை கைவிடும் உயிரினங்களும் உண்டு. பென்குவின் போல உறைபனியில் நின்றபடி, ஆண் அதன் குஞ்சுகளை அடைகாக்கும் இனக்களும் உண்டு. பொதுப்படையாக “மிருகங்கள் கூட செய்யாது” என்பது ஒரு பேச்சுக்காக சொல்வது மட்டுமே.

செம்மணி மனிதப் புதைகுழி: இன்று இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் மீண்டும் ஆரம்பம்!

2 months ago
செம்மணி புதைகுழியில் இன்று.. குழந்தையின் பால் போச்சி, 08 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை சிறு குழந்தையினுடையது என சந்தேகிக்கப்படும் எலும்பு கூட்டு தொகுதி உட்பட 08 மனித எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் , குழந்தைகள் பால் அருந்தும் போத்தல், ஆடைகளை ஒத்த துணிகள் என்பன அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி பகுதியில் "தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல - 01" மற்றும் "தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல - 02" என நீதிமன்றினால் அடையாளப்படுத்தப்பட்ட மனித புதைகுழிகளில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. யாழ்ப்பாணம்.com

ஐரோப்பாவில் விமானி உரிமம் பெற்ற மன்னார் இளைஞன்!

2 months ago
வேற என்ன. அண்மையில் விடத்தல் தீவில் சர்வதேச மாநாடு என்று ஒரு தலைப்பு…பறந்து விழுந்து போய் பார்த்தால், ஒவ்வொரு நாட்டிலும் இருந்து விடத்தல் தீவை சேர்ந்த புலம்பெயர் புண்ணியாவான்களின் ஒன்று கூடலாம். அடுத்த முறை எங்கள் அகண்ட குடும்பம் சாமத்திய வீட்டில் சந்தித்தால் அதை சர்வதேச மாநாடு என போடும்படி ஆதவனுக்கு சொல்ல போறேன்🤣.

யாழ். செம்மணியில் 3 அடி ஆழத்தில் மனித எலும்புக்கூடு மீட்பு ; பாரிய புதைகுழியாக இருக்கலாமென அச்சம்

2 months ago
செம்மணி மனிதப் புதைகுழியில் இன்று 8 எலும்புக்கூடுகள் அடையாளம் : இதுவரை 80 மனித எலும்புக்கூடுகள்! Published By: VISHNU 22 JUL, 2025 | 07:12 PM யாழ். அரியாலை செம்மணி சிந்துப்பாத்தி பகுதியில் அடையாளங்காணப்பட்டுள்ள மனிதப் புதைகுழியிலிருந்து செவ்வாய்க்கிழமை (22) 8 எலும்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு நடவடிக்கையின் 2 ஆம் கட்டத்தின் 17ஆவது நாள் அகழ்வு இன்று இடம்பெற்றது. அந்தவகையில், இன்று மேலும் 8 மனித எலும்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டன. எச்சங்களில், 6 முதல் 7 வரை சிறுவர்கள் மற்றும் குழந்தைகளுடையதாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்படுள்ளன . குழந்தைகள் அருந்தும் பால் போத்தல் என சந்தேகிக்கப்படும் பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.. இன்றைய கண்டுபிடிப்புகளுடன், இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் மொத்த எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளது , இவற்றில் 65 எலும்புக்கூடுகள் ஏற்கனவே முழுமையாக தோண்டி எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/220671

யாழ்ப்பாண தமிழ் பெண்கள், சிங்களவர்களை திருமணம் முடிப்பது அதிகரிப்பு.

2 months ago
அல்வாயன் நீங்கள் கூறியது போல்... ஐரோப்பாவில் இயங்கும் சில திருமண சேவையின் இணையப் பக்கங்களை பார்த்த போது, முன்பு இல்லாத அளவிற்கு எல்லோரும் தமது சாதியிலேயே திருமண சம்பந்தங்களை எதிர்பார்ப்பது ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் இருந்தது.

முன்னாள் ஜனாதிபதிகளுக்கான சிறப்புரிமைகளை இரத்து செய்யும் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்

2 months ago
Published By: VISHNU 22 JUL, 2025 | 05:51 PM (எம்.மனோசித்ரா) நாட்டின் முன்னாள் ஜனாதிபதிகளுக்கான சிறப்புரிமைகள் மற்றும் சலுகைகளை இரத்து செய்வதற்கான புதிய சட்ட மூலத்தை தயாரிப்பதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அனைத்து ஜனாதிபதிகளுக்கும் பொதுவாகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. எவருக்கும் சிறப்புரிமை வழங்கப்படவில்லை என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் செவ்வாய்கிழமை (22) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், முன்னாள் ஜனாதிபதிகளுக்கு சட்ட ரீதியாக வழங்கப்பட்டுள்ள அனைத்து சிறப்புரிமைகளும் இதன் மூலம் இரத்து செய்யப்படும். இந்த சட்ட மூலம் வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். பாராளுமன்றத்தில் அனுமதி கிடைத்த பின்னரே சட்டத்தை நடைமுறைப்படுத்தக் கூடிய கால அவகாசம் தொடர்பில் குறிப்பிட முடியும். மிகக்குறுகிய காலத்துக்குள் அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும். இங்கு எந்தவொரு நபருக்கும் சிறப்புரிமை வழங்கப்பட மாட்டாது. முன்னாள் ஜனாதிபதிகள் அனைவரும் ஒரே மட்டத்திலேயே நடத்தப்படுவர். தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் அனைத்து ஜனாதிபதிகளுக்கும் பொதுவாகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு எனும் போது முன்னாள் ஜனாதிபதிகள் மாத்திரமின்றி நாட்டு பிரஜைகளும் கவனத்தில் கொள்ளப்படுவர். அனைவரது பாதுகாப்பையும் கருத்திற் கொண்டு உரிய நடவடிக்கைககள் முன்னெடுக்கப்படும். 1986 ஆம் ஆண்டின் 04 ஆம் இலக்க ஜனாதிபதியின் உரித்துக்கள் (நீக்கல்) சட்டமூலத்தை பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 'வளமான நாடு – அழகான வாழ்க்கை' எனும் அரசாங்க கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டதற்கமைய, முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தவர்களுக்கு வழங்கப்படுகின்ற விசேட சிறப்புரிமைகளை இரத்துச் செய்வதற்கு இயலுமாகும் வகையில் 1986 ஆம் ஆண்டின் 04 ஆம் இலக்க ஜனாதிபதியின் உரித்துக்கள் சட்டத்தை நீக்குவதற்காக சட்டமூலமொன்றை தயாரிப்பதற்காக கடந்த ஜூன் 16ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த பணிகளுக்காக சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள ஜனாதிபதியின் உரித்துக்கள் (நீக்கல்) சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளதுடன், அதற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைக்கப் பெற்றுள்ளது. அதற்கமைய, குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் பாராளுமன்ற அங்கீகீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்கும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என்றார். https://www.virakesari.lk/article/220665

செம்மணி புதைகுழி: சர்வதேச விசாரணைக்கு அவுஸ்திரேலிய கிறீன்ஸ் கட்சி வலியுறுத்து

2 months ago
22 JUL, 2025 | 05:27 PM செம்மணி புதைகுழி விவகாரத்தில் பாதிக்கப்பட்ட "தமிழ் மக்களுக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும்" - என்று அவுஸ்திரேலிய கிறீன்ஸ் கட்சியின் நியூ சவூத் வேல்ஸ் மாநில செனட்டர்டேவிட் சூபிரிட்ஜ் வலியுறுத்தியுள்ளார். "உண்மையை ஒருபோதும் புதைக்க முடியாது. இலங்கையில் தமிழ் மக்கள்மீது கட்டாயமாக நடத்தப்பட்ட காணாமல் ஆக்கப்படுதல் மற்றும் இனப்படுகொலையை நினைவூட்டும் வகையில் செம்மணி புதைகுழி அமைந்துள்ளது. 29 ஆண்டுகள் கடந்தும் குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை. நீதி நிலைநாட்டப்படவில்லை. எனவே செம்மணி உட்பட இலங்கையில் அடையாளம் காணப்பட்ட மனித புதைகுழிகள் குறித்து சர்வதேச அளவில் கண்காணிக்கப்படும் தடயவியல் விசாரணை அவசியம்" - எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். https://www.virakesari.lk/article/220658

ஐரோப்பாவில் விமானி உரிமம் பெற்ற மன்னார் இளைஞன்!

2 months ago
பாராட்டுக்கள்! ஆனால் இது ஏன் ஆதவன் செய்தியாக வருமளவு அதிசயமென எனக்கு விளங்கவில்லை! ஊர்ச்சங்கங்களின் வேலையாக இருக்குமோ😂? நான் அறிந்த வரையில், பல ஆண்டுகளாக சில ஈழத்தமிழர்கள் பாரிய தாரை (jet) இயந்திரங்களைக் கொண்ட பயணிகள்/சரக்கு விமானங்களை இயக்கும் கப்ரன் தர விமானிகளாக இருந்து வருகிறார்கள். கேணல் சங்கர், கனடா எயார் இல் சரக்கு விமானங்களை இயக்கிய ஒரு கப்ரன் என நினைக்கிறேன். இந்த தம்பி பெற்றிருப்பது, பயிர்களுக்கு மருந்தடிக்கும் (dusting) சிறிய விமானங்களை அவை ஒன்றுக்கு மேற்பட்ட இயந்திரங்களைக் கொண்டிருந்தால் இயக்கும் அனுமதிப் பத்திரம். இந்த லைசென்சை வைத்துக் கொண்டு சில பயணிகள் விமான சேவைகள் இன்னும் பயன்படுத்தும் turboprop விமானங்களையும் இயக்க முடியாது. ஏன் இவ்வளவு ஆர்ப்பாட்டமென்று விளங்கவில்லை!

புனர்வாழ்வு பெற்ற விடுதலைப் புலி உறுப்பினர் கொழும்பில் துப்பாக்கியுடன் கைது

2 months ago
கொழும்பில் ஒரு தமிழர் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டார். அவர் வழங்கிய தகவலின் பேரில் வவுனியாவில் ஒரு வீட்டில் 5600 போதை மாத்திரைகள் , 10கிராம் ஐஸ் போதைப் பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. இது முழுக்க முழுக்க பாதாள உலக கோஸ்டியினரின் போதைப் பொருள் கடத்தல் கும்பல் என்று தெரிந்தும் வேண்டுமென்றே மீண்டும் புலிகள் என்று வதந்தி பரப்பப்படுகிறது. கைது செய்யப்பட்ட பிள்ளையான் வழங்கிய தகவலின் பேரில் ஈஸ்டர் குண்டு தாக்குதல் தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அடுத்து சுரேஸ்சாலே எந்நேரமும் கைது செய்யப்படலாம் என்ற நிலை உருவாகியுள்ளது. இதனால் தமக்கு ஆபத்து வந்துவிட்டது என்பதை உணர்ந்த கோத்தபாயா கும்பல் அதில் இருந்து தப்புவதற்காக மீண்டும் புலிகள் என்ற வதந்தியைப் பரப்புகின்றனர். இதற்காக அவர்கள் ஒரு தாக்குதலைக்கூட தென்னிலங்கையில் நிகழ்த்தலாம் என்பதால் அரசு இதற்கு இடங்கொடாது விரைந்து கோத்தபாயாவை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். தோழர் பாலன்

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி விடுதலை விருட்சம் நாட்டும் நிகழ்வு

2 months ago
விடுதலை நீர் தந்து தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை நோக்கிய பயணத்தில் இணையுங்கள் - வேலன் சுவாமி Published By: RAJEEBAN 22 JUL, 2025 | 03:59 PM விடுதலைநீர் தந்து தமிழ் அரசியல்கைதிகளின் விடுதலையை நோக்கிய பயணத்தில் இணையுங்கள் என பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி அமைப்பின் ஏற்பாட்டாளர் தவத்திரு வேலன் சுவாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஏற்பாட்டில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை நோக்கிய பயணம் தொடர்ந்துகொண்டிருக்கின்றது. ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்ட விடுதலை விருட்சம் என்கின்ற தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை நோக்கியும் தமிழ் இனத்தின் விடுதலையை நோக்கியதுமான அந்த பயணம் இன்று விடுதலை விருட்சத்திற்கு நீர்வழங்கி அனைவரும் பேராதரவு கொடுத்து, விடுதலை மரத்தை வளர்த்தெடுக்கவேண்டும். விடுதலைக்காக நாங்கள் அனைவரும் எங்களை அர்ப்பணிக்கும்போதுதான் அதுசாத்தியமாகும். தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையாகயிருக்கட்டும் தமிழ் இனத்தின் விடுதலையாகயிருக்கட்டும், எங்கள் இனத்திற்காக எங்களை நாங்கள் அர்ப்பணிப்பதற்கான அடையாளமாக இந்த விடுதலை விருட்சம், தமிழர் தாயகத்தின் எட்டு மாவட்டங்களிலும் நாட்டப்படயிருக்கின்றது. அந்த விடுதலை விருட்சங்களிற்கு நீர் ஊற்றிவளர்க்கவேண்டிய அடிப்படை உணர்வை இந்த விடுதலை நீர் வழங்குதல் எடுத்துக்காட்ட இருக்கின்றது. கிட்டுபூங்காவில் 24, 25ம் திகதிகளில் நடைபெறவிருக்கின்ற இந்த விடுதலையை நோக்கிய போராட்டத்திலே அனைத்து உறவுகளும் கலந்துகொள்ளும் விதத்திலும், ஊர்தியொன்று ஒவ்வொரு பிரதேசமாக வலம்வரயிருக்கின்றது. அந்த ஊர்திக்கு அந்த பிரதேசங்களில் இருக்கின்ற மக்கள் பேராதரவை வழங்கி, விடுதலை நீரை வழங்கி அந்த விடுதலை நீர் சேகரிக்கப்பட்டு, தாயகத்தின் எட்டு மாவட்டங்களிலும் நாட்டப்படுகின்ற விடுதலை விருட்சங்களிற்கு வழங்கப்படவிருக்கின்றது. ஆகவே தமிழர்களாக நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து எமது உறவுகளின் விடுதலைக்காகவும் இனத்தினது தேசத்தினது விடுதலைக்காகவும் ஒன்றுபடுவதற்கான முயற்சியை குரல்அற்றவர்களின் குரல் அமைப்பு ஏற்படுத்தியுள்ளது. ஆகவே எமது உறவுகள் பெருமளவிலே திரண்டு இதற்கு ஆதரவு வழங்கவேண்டும், விடுதலை நீரை வழங்கி ஆதரவு செய்யவேண்டும். 24, 25 ம்திகதிகளில் கிட்டு பூங்காவிற்கு வருவதன் ஊடாக அங்கு பெரிய மக்கள் எழுச்சியை ஏற்படுத்துவதன் ஊடாக எமது தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை நாங்கள் சாத்தியமாக்கி தொடர்ந்து இனத்தின் விடுதலையை நோக்கி நாங்கள் பயணிக்க முடியும். https://www.virakesari.lk/article/220640

உள்நாட்டு யுத்தத்தின் இறுதி பகுதியில் சரணடைந்தவர்களின் பெயர் விபரங்களை இலங்கையின் காணாமல்போனோர் அலுவலகம் பெற்று வெளியிடுவதை உறுதிப்படுத்துங்கள் - ஐநா அமைப்பிற்கு சர்வதேச மன்னிப்புச்சபை பரிந்துரை

2 months ago
Published By: RAJEEBAN 22 JUL, 2025 | 02:57 PM இலங்கையின் உள்நாட்டு மோதலின் முடிவில் சரணடைந்தவர்களின் பெயர் விபரங்களை பெற்று வெளியிடுவதன் மூலம் காணாமல்போனோர் அலுவலகம் காணாமல்போனோரை தேடுவதற்கான அதன் ஆணையை நிறைவேற்றுவதில் குறிப்பிடதக்க முன்னேற்றத்தை காண்பிக்கவேண்டும் என சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது. பலவந்தமாக காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பில் ஐக்கியநாடுகள் குழுவிற்கு சமர்ப்பித்துள்ள 22 பக்க அறிக்கையில் சர்வதேச மன்னிப்புச்சபை இதனை தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகளின் பலவந்தமாக காணாமல்போனோர் தொடர்பான குழுவின் 29 வது அமர்வு செப்டம்பர் 22 முதல் ஒக்டோபர் 3ம் திகதி வரை நடைபெறவுள்ள நிலையிலேயே சர்வதேச மன்னிப்புச்சபைதனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. இந்த அமர்வில் ஐநாவின் குழு பலவந்தமாக காணாமல்போதலில் இருந்து அனைத்து நபர்களையும் பாதுகாப்பது தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் இன் கீழ் இலங்கை தனது கடப்பாடுகளை எவ்வாறு நிறைவேற்றியுள்து என்பது குறித்து ஆராயவுள்ளது. இலங்கை இந்த உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் பல பரிந்துரைகளையும் அவதானிப்புகளையும் சர்வதேச மன்னிப்புச்சபை22 பக்க அறிக்கை முன்வைக்கின்றது. சர்வதேச மன்னிப்புச்சபை மேலும் தெரிவித்துள்ளதாவது இலங்கையின் உள்நாட்டு மோதலின் முடிவில் சரணடைந்தவர்களின் பெயர் விபரங்களை பெற்று வெளியிடுவதன் மூலம் - பலவந்தமாக காணாமலாக்கப்படுதலில் தொடர்புபட்ட படையினர் மற்றும் பிற குற்றவாளிகளிடம் இது வரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் குறித்த புதுப்பிக்கப்பட்ட தகவல்களை வழங்குவதன் மூலம் காணாமல்போனோர் அலுவலகம் காணாமல்போனோரை தேடுவதற்கான அதன் ஆணையை நிறைவேற்றுவதில் குறிப்பிடதக்க முன்னேற்றத்தை காண்பிப்பதை உறுதிப்படுத்தவேண்டும். தொடரும் மனித புதைகுழி அகழ்வுகள் தொடர்பில் மிகவும் அவசரமாக காணாமல்போனவர்கள் அலுவலகம் வெளிநாட்டு தொழில்நுட்ப நிபுணத்துவத்தை கேட்டுப்பெற்றுக்கொள்வதை உறுதிப்படுத்தவேண்டும். காணாமல்போனவர்களின் அலுவலகத்திற்கு வழங்கப்பட்ட ஆணையை நிறைவேற்றுவதில் காணாமல்போனவர்களின் அலுவலகம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை காண்பிக்காதமைக்கு அதன் தலைமைத்துவத்தை பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்துங்கள்.அதன் நடவடிக்கைகள் குறித்து ஒழுங்கமைக்கப்பட்ட மாற்றங்களை மேற்கொள்ளுங்கள்அந்த அலுவகத்திற்கு நியமிக்கப்படுபவர்கள் திறமைசாலிகள் அர்ப்பணிப்புள்ளவர்கள் சுயாதீனமானவர்களாக விளங்குவதை உறுதி செய்யுங்கள். பல தசாப்தங்களாக பதில்களைக் கோரும் காணாமல் போனவர்களின் குடும்பங்களின் கோரிக்கைகளை அவசரமாகவும் உண்மையாகவும் கவனத்தில் கொள்ள வேண்டும். காணாமல்போனவர்கள் எங்கிருக்கின்றாகள் தெளிவுபடுத்தாமல்,அவர்கள் உள்ள இடத்தை சுயாதீனமாக ஆராயாமல், காணாமல்போனமைக்கான சூழ்நிலைகளை தெரிவிக்காமல்,உயிருடன் இல்லை என உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மனித எச்சங்களை அவர்களின் குடும்பத்தவர்களிடம் வழங்காமல் இது தொடர்பான விடயத்திற்கு அதிகாரிகள் முடிவை காணமுயலக்கூடாது. பாதிக்கப்பட்டவர்களின் உண்மை நீதி மற்றும் இழப்பீட்டிற்கான உரிமைகளிற்கு அதிகாரிகள் முன்னுரிமை வழங்கவேண்டும்,அவற்றை மதிக்கவேண்டும்,அதற்கு உதவவேண்டும். நிறுவனத்திற்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இடையே நிலவும் நம்பிக்கை மற்றும் அறிவு இடைவெளியைக் குறைக்க இன்னும் பல தொலைநோக்குப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். https://www.virakesari.lk/article/220633

கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் காலமானார்

2 months ago
"மார்க்சிஸ்ட் தலைமையை மீறி கூடங்குளம் போராட்டத்திற்கு ஆதரவு" - அச்சுதானந்தன் கண்ட போராட்ட களங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் 5 மணி நேரங்களுக்கு முன்னர் கேரள மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சராகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராகவும் இருந்த வி.எஸ். அச்சுதானந்தன், மாநில எல்லைகளைத் தாண்டியும் சுற்றுச்சூழல் பிரச்னைகளில் ஆர்வம் காட்டியவர். கட்சியின் நிலைப்பாட்டைத் தாண்டியும் கூடங்குளம் அணு உலை போராட்டத்துக்கு ஆதரவு அளித்தவர். கேரள மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரான வேலிக்ககத்து எஸ். அச்சுதானந்தன், முதுமையின் காரணமாக திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனையில் ஜூலை 21ஆம் தேதி உயிரிழந்தார். கடைசி சில நாட்கள் வரை மிகுந்த ஆரோக்கியத்துடன் இருந்த அச்சுதானந்தன், மூச்சுத் திணறல் காரணமாக ஜூன் 23ஆம் தேதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கேரளாவின் ஆலப்புழாவில் உள்ள கடற்கரையோர கிராமமான புன்னப்ராவில் 1923ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20ஆம் தேதி சங்கரன் - அக்கம்மா தம்பதிக்குப் பிறந்தார். தாயை நான்கு வயதிலும் தந்தையை பதினொரு வயதிலும் இழந்த அச்சுதானந்தன் ஏழாம் வகுப்போடு கல்வியை நிறுத்திக்கொண்டு, 11 வயதிலேயே வேலைக்குச் செல்லும் நிலைமைக்குத் தள்ளப்பட்டார். அந்த தருணத்தில் தீவிரமாக இருந்த இந்திய விடுதலைப் போராட்டம், தொழிலாளர் இயக்கங்கள் அவரைத் தீவிரமாக ஈர்த்தன. 1940ஆம் ஆண்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த அவர், சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு சில ஆண்டுகள் சிறையில் இருந்தார். பல தருணங்களில் தலைமறைவு வாழ்க்கையை வாழ வேண்டியிருந்தது. 1946ஆம் ஆண்டில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் நடந்த புன்னப்புரா - வயலார் இடதுசாரி இயக்கத்தினரின் போராட்டத்தில் பங்கேற்ற வி.எஸ். அச்சுதானந்தன் காவல் துறையின் கடுமையான தாக்குதலுக்கு உள்ளானவர். பட மூலாதாரம்,GETTY IMAGES 1964ஆம் ஆண்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இரண்டாக பிளவுபட்டபோது, தேசிய கவுன்சிலில் இருந்து வெளியேறிய 32 பேரில் அச்சுதானந்தனும் ஒருவர். புதிதாக உருவான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனத் தலைவர்களில் ஒருவர். மக்கள் ஆதரவை பெற்ற அச்சுதானந்தன் ஊழல், நில மாஃபியா உள்ளிட்ட பல விவகாரங்களில் தீவிரமான நிலைப்பாடுகளை எடுத்த வி.எஸ். அச்சுதானந்தனுக்கு எப்போதுமே மக்கள் ஆதரவு இருந்துவந்தது. கேரள மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினராக, எதிர்க்கட்சித் தலைவராக பல ஆண்டுகள் இருந்த வி.எஸ். அச்சுதானந்தனுக்கு 82வது வயதில்தான் கேரள மாநிலத்தின் முதலமைச்சராகும் வாய்ப்பு கிடைத்தது. 2006ஆம் ஆண்டில் முதலமைச்சரான வி.எஸ். அச்சுதானந்தன், தனது ஆட்சிக் காலத்தில் அதிரடியான சில நடவடிக்கைகளை மேற்கொண்டார். மூணாறில் இருந்த ஆக்கிரமிப்புகளை எதிர்ப்புகளை மீறி அகற்றினார். இது கட்சிக்குள்ளும் சலசலப்பை ஏற்படுத்தியது. கேரளாவில் ஐடி துறைக்கு முக்கியத்துவம் தர ஆரம்பித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES "வி.எஸ். அச்சுதானந்தன் கட்சியின் தலைமைக் குழுவில் இருந்தபோது நான் மத்தியக் குழுவுக்கு தேர்வானேன். இதனால், பல ஆண்டுகள் அவரோடு இணைந்து செயல்படும் வாய்ப்புக் கிடைத்தது. அர்ப்பணிப்பு, தன்னடக்கம், தான் கொண்ட கொள்கையில் மன உறுதி, மக்கள் நலனே பிரதானமானது போன்ற விஷயங்களில் அவர் ஒரு முன்னுதாரணமாக இருந்தார்." என நினைவுகூர்கிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலரும் மூத்த தலைவருமான ஜி. ராமகிருஷ்ணன். 1964ல் அப்போதைய கல்கத்தாவில் நடந்த 7வது மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவானது. அந்த மாநாடு புதிய மத்தியக் குழுவை தேர்வுசெய்தது. சுந்தரைய்யா பொதுச் செயலாளராகத் தேர்வுசெய்யப்பட்டார். அந்த மாநாட்டில் என். சங்கரய்யாவும் வி.எஸ். அச்சுதானந்தனும் மத்தியக் குழுவுக்கு தேர்வுசெய்யப்பட்டார்கள் என கூறுகிறார் ஜி.ராமகிருஷ்ணன். பட மூலாதாரம்,GETTY IMAGES "சமீபத்தில் என். சங்கரய்யா காலமான நிலையில், வி.எஸ். அச்சுதானந்தன் தற்போது காலமாகியிருக்கிறார். இதன் மூலம், முதல் முதலில் உருவான மத்தியக் குழுவில் இடம்பெற்று, நீண்ட காலம் அதில் பணியாற்றிய ஒரு உறுப்பினராக அச்சுதானந்தனைச் சொல்ல முடியும். ஒரு சாதாரண விவசாய தொழிலாளர் குடும்பத்தில் பிறந்து, சுதந்திரப் போராட்ட காலத்தில் புன்னப்புரா - வயலார் போராட்டம் என்ற நிலப்பிரபுத்துவத்துக்கு எதிரான போராட்டத்தில் கிருஷ்ணப்பிள்ளையின் வழிகாட்டுதலில் கலந்துகொண்டார். இடதுசாரி இயக்கத்தில் ஒரு பெருமிதமிக்க வரலாற்றைக் கொண்டவர் அச்சுதானந்தன்" என தெரிவித்தார் ஜி. ராமகிருஷ்ணன். தமிழ்நாட்டின் சூழல் போராட்டங்களில் ஆர்வம் காட்டியவர் வி.எஸ். அச்சுதானந்தனுக்கும் தமிழ்நாட்டிற்கும் பெரிய அளவிலான தொடர்புகள் இருந்ததில்லை. இருந்தாலும், தமிழ்நாட்டில் நடந்த சூழல் போராட்டங்களில் அவர் ஆர்வம் காட்டினார். தமிழ்நாட்டில் 2012ஆம் ஆண்டில் கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமாக நடந்துகொண்டிருந்தபோது, அந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார். 2011- 2012ஆம் ஆண்டுகளில் கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம் தமிழ்நாட்டில் தீவிரமடைந்தபோது, கேரள மாநில எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார் வி.எஸ். அச்சுதானந்தன். அவர் கூடங்குளம் அணு மின் நிலையத் திட்டத்துக்கு தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வந்தார். இத்தனைக்கும் அவர் சார்ந்திருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அணு உலைத் திட்டத்துக்கு எதிராக இல்லாத நிலையிலும் வி.எஸ். அச்சுதானந்தன் அத்தகைய நிலைப்பாட்டை எடுத்தார். இந்த நிலையில், 2012ஆம் ஆண்டு கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம் தீவிரமாக இருந்த நிலையில், அந்தப் போராட்டத்துக்கு நேரில் ஆதரவு தெரிவிப்பதற்காக செப்டம்பர் மாதம் 18ஆம் தேதி கூடங்குளத்துக்கு வர முடிவுசெய்தார் அச்சுதானந்தன். அதேபோல, தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ ஆய்வுக்கூடம் அமைக்கும் திட்டத்திற்கும் எதிர்ப்புத் தெரிவித்தார். நியூட்ரினோ ஆய்வுக்கூடம் பற்றியும், அதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்தும் அந்த பகுதியில் வசிக்கும் மக்களுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்த வேண்டும். ஆய்வுக்கூடத்துக்காக பூமிக்கு அடியில் சுரங்கம் அமைக்கும் பணியை மத்திய அரசும், தமிழக அரசும் உடனடியாக நிறுத்த வேண்டும் எனக் குரல் கொடுத்தார். "பக்கத்து மாநிலத்தில் எதிர்க்கட்சித் தலைவராகத்தான் இருந்தாலும்கூட, தமிழ்நாட்டில் மக்கள் போராடும் ஒரு பிரச்சனைக்காக வி.எஸ். அச்சுதானந்தன் குரல் கொடுத்தார். கட்சியின் மாநில அமைப்பும் சரி, தேசிய அளவிலும் சரி அணு உலைக்கு ஆதரவாக இருந்தும்கூட, அதற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தார் வி.எஸ். அச்சுதானந்தன். போராடும் மக்கள், தமிழர்களா மலையாளியா என்று பார்க்காமல் அவர்களுக்காக நின்றார். நெருக்கடியான அந்த காலகட்டத்தில் போராடிவந்த மக்களுக்கு இது மிக முக்கியமானதாக இருந்தது. பல முறை அவரை அவருடைய வீட்டில் சந்தித்துப் பேசியிருக்கிறேன். எளிதில் அணுகக்கூடியவராகவும் மனம்விட்டுப் பேசக்கூடியவராகவும் இருந்தார்" என்கிறார் கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டக் குழுவைச் சேர்ந்த சுப. உதயகுமார். குடியரசு துணைத் தலைவர் பதவியில் இருந்து விலகியது ஏன்? ஜெகதீப் தன்கரை சூழும் ஊகங்கள் பிரிக்ஸை மிரட்டும் டிரம்ப்: இந்தியா, சீனா, ரஷ்யா ஓரணியில் திரளுமா? இந்தியாவில் ஐரோப்பிய வல்லரசுகளின் விதியை தீர்மானித்த 'வந்தவாசிப் போர்' பிரம்மபுத்திரா ஆற்றில் சீனா அணை கட்டுவதால் இந்தியா, வங்கதேசத்திற்கு என்ன பாதிப்பு? ஆனால், முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் எல்லா கேரள அரசியல்வாதிகளைப் போலவேதான் அவருடைய நிலைப்பாடும் இருந்தது. முல்லைப் பெரியாறு அணை மிகுந்த அபாயத்தில் உள்ளது என்றும் புதிய அணையைக் கட்ட வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்திவந்தார். பல தருணங்களில் அவர் எடுத்த நிலைப்பாடுகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. இருந்தபோதும், கேரள மாநிலத்தின் கடந்த 80 ஆண்டு கால அரசியலை வி.எஸ். அச்சுதானந்தனைத் தவிர்த்துவிட்டு விவாதிக்க முடியாது என்ற பாரம்பரியத்தை விட்டுச் சென்றிருக்கிறார் வி.எஸ். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/czey475denlo

தமிழர் பண்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் நல்லூர் திருவிழாக் காலத்தை பேணுங்கள் - ஆறுதிருமுருகன்

2 months ago
22 JUL, 2025 | 02:51 PM (எம்.நியூட்டன்) தமிழர் பண்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் வழிபாட்டுக் காலத்தை பேணுமாறும் புனிதமான திருவீதியில் எவரும் மறந்தும் பாதணிகளை அணிந்து செல்லாமல், புனிதத்தைப் பேணுமாறும் ஆறுதிருமுருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார். நல்லூர் திருவிழாக் காலம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : நல்லூரானின் பெருந்திருவிழாவை முன்னிட்டு நாம் ஆயத்தமாவோம். ஈழத்திருநாட்டின் ஈடு இணையற்ற பெருங்கோவிலாக விளங்குவது நல்லூர்க் கந்தசுவாமி கோவில். இத்திருக்கோவிலின் வருடாந்த பெருந்திருவிழா இம்மாதம் 29ஆம் திகதி செவ்வாய்க்கிழமையன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி சிறப்பாக நடைபெறவுள்ளது. பல இலட்சம் மக்கள் நல்லூர் வீதியில் முருகனைக் காண ஒன்றுகூடப் போகிறார்கள். வடக்கில் உள்ள மக்கள் இந்த வாரமே தங்கள் வீடுகளைப் புனிதப்படுத்தி நல்லூரான் திருவிழாவிற்காக தங்கள் வசிப்பிடத்தையும் புனிதப்படுத்தத் தொடங்கியிருப்பார்கள். நல்லூர் சுற்றாடல் தெய்வீகக் களைகட்டத் தொடங்கிவிடும். தண்ணீர்ப்பந்தல்கள் அமைக்கும் வேலைகள் ஆரவாரமாக தொடங்கிவிடும். அழகன் முருகன் திருவீதியில் அரோகரா சத்தம் இருபத்தைந்து நாட்களும் ஓங்கி ஒலிக்கும். வீதியெல்லாம் புதிய மணல் பரப்பி அங்கப் பிரதிஷ்டை மற்றும் அடியடித்துக் கும்பிடும் அடியவர்க்கு வசதிகள் செய்வார்கள். தெய்வீகச் சூழலாக மாறும் நல்லூர்ச் சுற்றாடலின் சிறப்பு எழுத்தில் வடித்துவிடமுடியாது. நல்லூர்க் கந்தன் ஆலயத்தை உருவாக்கி பரம்பரை பரம்பரையாக காத்துவரும் மாப்பாணர் பரம்பரைக்கு சைவ உலகம் என்றும் நன்றிக்கடன் பட்டது. போரில் அழிந்த சைவத் தமிழர்களின் திருக்கோவிலை தமது சொந்த நிலத்தில் தமது குடும்பத்தின் முயற்சியால் உருவாக்கி கடந்த மூன்று நூற்றாண்டுகள் உன்னதமாக கட்டிக்காத்து வரும் மாப்பாணர் குடும்பத்தின் மகத்துவத்தை எல்லோரும் நன்கு அறிவர். திசைகள் தோறும் கோபுரங்கள் உள்வீதி முழுவதும் உவமை இல்லா அழகுக் காட்சிகள் உருவாக்கி உலகம் வியக்க வைக்கும் நல்லூரான் தனித்துவத்தை எவரும் குறைத்து மதித்து விடமுடியாது. சர்வதேசமே நல்லூர்ச் சிறப்பை வியந்து போற்றுகிறது. அமெரிக்க ஹவாய் சைவ ஆதீனம் வெளியிட்டு வரும் நூலில் உலகம் முழுவதும் வாழும் சைவ மக்கள் சீரிய ஒழுங்கைப் பின்பற்றுவதற்கு நல்லூரை தரிசியுங்கள் என கூறியுள்ளார்கள். இந்திய மத்திய அரசின் நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்கள் “அப்பப்பா என்ன அதிசயம்? நல்லூர்க் கந்தசுவாமி கோயிலுக்குள் கால் எடுத்து வைத்தவுடன் எம்மை மறந்து விடுகிறோம். ரம்மியமான இத்திருக்கோவில் சிறப்புப் பற்றி உலகமே வியக்கிறது” என உரைத்தமை அனைவரும் அறிவர். அன்பர்களே நல்லூர்ப் பெருந்திருவிழாக் காலங்களில் குடும்பம் குடும்பமாக சென்று வழிபாடு செய்வதற்கு ஆயத்தமாகுங்கள். தமிழர் பண்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் வழிபாட்டுக் காலத்தை பேணுங்கள். புனிதமான திருவீதியில் எவரும் மறந்தும் பாதணிகளை அணியாதீர்கள். விசேட தேவையுடையவர்கள் வழிபாடு செய்ய வரும்போது தொண்டர்கள் உதவுங்கள். சுற்றுச்சூழலில் வசிப்பவர்கள் ஆன்மிக அலங்காரங்களை தாம் வசிக்கும் இடங்களில் ஏற்படுத்துங்கள். படம்பிடித்து முருகனை தேடுவதை விட பக்தியோடு அவனை அகத்தால் உள்வாங்குங்கள். வீதியில் சுவாமி புறப்பட்டால் வேடிக்கைக்கு இடமில்லை. வேலனிடம் விடிவு கேட்டுப் பிரார்த்திப்பதே எமக்கு வேலை என உணருங்கள். சஞ்சலமின்றி இறைவன் எமக்குத் தந்த இந்த இனிய நாட்களை ஆனந்தமாகக் கழிப்பதற்கு ஆயத்தமாகுங்கள். அலங்காரக் கந்தனை தரிசிக்க வரும் அடியவர்களாகிய நாம் எளிமையாக நின்று வணங்குவோம். எமது அடுத்த தலைமுறைக்கு எடுத்துக்காட்டாக வழிபாட்டு மரபை முன்னெடுத்துச் செல்வோம். எல்லோரும் நல்லூரான் பெருவிழாவைக் கண்ணாரக் காண்போம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/220631

குரோதம் கொண்டு வந்த ரயிலில் இப்போது சகோதரத்துவம் சுமந்து வருகிறோம் – மகேஷ் அம்பேபிட்டிய

2 months ago
Published By: DIGITAL DESK 2 22 JUL, 2025 | 05:04 PM அன்று ரயிலேறி யாழ்ப்பாணத்துக்கு வைராக்கியம், குரோதம், பிரிவினையை கொண்டு வந்தனர். அதன் மூலம் யாழ். நூலகத்தை எரித்து நாசமாக்கினார்கள். இன்று நாம் ரயிலேறி சகோதரரத்துவத்தை கொண்டு வருகின்றோம். வடக்கையும், தெற்கையும் இணைக்கும் உறவு பாலத்தை ஏற்படுத்த வருகின்றோம் என சோசலிச இளைஞர் சங்கத்தின் தேசியக் குழு உறுப்பினர் மகேஷ் அம்பேபிட்டிய தெரிவித்தார். சகோதரத்துவ தினம் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பு இன்று செவ்வாய்க்கிழமை (22) யாழ். தேசிய மக்கள் சக்தி மக்கள் தொடர்பாடல் காரியாலயத்தில் நடைபெற்றது. இதன் போது கருத்து தெரிவிக்கையிலேயே இவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், சோசலிச இளைஞர் சங்கத்தின் ஏற்பாட்டில் 2008 ஆம் ஆண்டு முதல் சகோதரத்துவ தின நிகழ்வுகளை நடத்தி வருகின்றோம். சகோதரத்துவத்தை கட்டியெழுப்புவதற்காக 17 ஆண்டுகளாக செயற்படுகின்றோம். இம்முறை கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு சகோதரத்துவ ரயில் பயணம் இடம்பெறவுள்ளது. 1981 மே 31 ஆம் திகதி யாழ்.வந்த ரயில் நிலையத்தில் குருணாகல் ரயில் நிலையத்தில் இருந்து அரசியல் குழுவொன்று ஏறியது. காமினி லொக்குகே, காமினி திஸாநாயக்க, காமினி ஜயவிக்கிரம, சிறில் மெத்திவ், கிறிஸ்டன் பெரேரா, ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட குழுவினர் வைராக்கியம், குரோதம், பிரிவினையை எடுத்து வந்தனர். அவற்றை எடுத்து வந்துதான் ஆசியாவின் மிக்பெரிய பொக்கிஷமான நூலகத்தை எரிந்தனர். எனவேதான் அந்த ரயிலில் சகோதரத்துவத்தை நாம் நாளை புதன்கிழமை (23) எடுத்துவருகின்றோம். 1981 இல் ஆரம்பமான குரோதம் 1983 இல் கறுப்பு ஜுலையாக மாறியது. இறுதியில் பிரச்சினை போர்வரை வந்தது. இந்த கறுப்பு புள்ளி இன்னும் நீங்கவில்லை. ஆட்சியாளர்களும் அரசியலுக்காக மக்களை பிரித்தாளும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். வடக்கையும், தெற்கையும் தமது அரசியலுக்காக அரசியல்வாதிகள் பிரித்தார்கள். தமது சுகபோக வாழ்வுக்காக மக்களை பிரித்தார்கள். அந்த யுகம் தற்போது முடிந்துவிட்டது. புதிய நாடு உருவாகி வருகின்றது. புதிய யுகத்தை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கின்றோம். தேசிய சமத்துவமே அரசாங்கத்தின் நோக்கம். அதற்காக ஜனாதிபதியும் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றார் என்றார். https://www.virakesari.lk/article/220629
Checked
Sun, 09/28/2025 - 03:32
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed