புதிய பதிவுகள்2

ஆடைகள் குறித்த விமர்சனங்களால் மன அழுத்தத்திற்கு உள்ளானேன்! -சரிகமபவில் இருந்து வெளியேறிய சினேகா!

2 months ago
இங்கு குழப்பமான தகவல்கள் பகிரப்படுகின்றன என நினைக்கின்றேன். சினேகா எனும் இந்த பாடகி ஏற்கனவே இலங்கை தொலைக்காட்சி போட்டி நிகழ்ச்சி மூலம் அறியப்பட்டவர் எனவும், வசதியானவர் எனவும் கூறப்படுகின்றது. பிரச்சனை பாடகி சினேகா விடயத்தில் இரண்டு விதமாக உருவெடுத்ததாக கூறப்படுகின்றது. ஒன்று: சரிகம நிகழ்ச்சியில் இலங்கை போட்டியாளர்கள் வசதி இல்லாத, கஸ்டப்பட்டவர்களாக காண்பிக்கப்படுவதாகவும் சினேகா அவர்கள் இவ்விதமான அனுதாப நோக்கில் சரிகமவினால் நோக்கப்பட்டு விளம்பரப்படுத்தப்பட்டது விமர்சனங்களுக்கு ஆளாகியதாக சொல்லப்படுகின்றது. இரண்டு: பாடகி சினேகா வசதியானவராக காணப்பட்டும் இவர் வசதியற்றவராக தன்னை இனம்காட்டி சரிகம நிகழ்ச்சியில் அனுதாபம் தேடியது விமர்சனத்துக்கு ஆளாகியதாக சொல்லப்படுகின்றது. இவை பாடகி சினேகா சம்மந்தமாக நான் அறிந்த விடயங்கள்.

யாழ்ப்பாணமே நீ  குடிப்பது நல்ல தண்ணியா ? - நிலாந்தன்

2 months ago
எனக்கும் வவுனியாவில் தான் முதன் முதலில் சலக்கடுப்பு என்றால் என்னவென்று அனுபவம் வந்தது. அதற்கு முதல் யாழ்ப்பாணத்திலும், கிளிநொச்சியிலும் காட்டு வெய்யிலில் சைக்கிளில் நாளாந்தம் அலைந்திருக்கிறேன். எதுவும் வரவில்லை. ஆனால், இந்த கொதித்தாறிய நீர் எப்படி சலக்கடுப்பை தடுக்கிறதென தெரியவில்லை, அல்லது உண்மையில் தடுக்குமா என்றும் தெரியவில்லை. ஈகோலையையும், ஏனைய பக்ரீரியாக்களையும் அழிப்பது இலகு. குளோரின் ஒரு வழி, கொதிக்க வைப்பது இன்னொரு வழி.

முதல்வர் ஸ்டாலின் உடல்நிலை.. அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட புதிய அறிக்கை

2 months ago
சீமானைச் சந்தித்தால் தலை கட்டாயம் சுத்தும்! இந்தப் பின்விளைவுக்குப் பயந்து தான், மூளையை off செய்து விட்டு பின்னால் செல்லும் ஆட்கள் மட்டும் சீமானைச் சுற்றி இருக்கிறார்கள்😎!

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English

2 months ago
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 12 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 12 / விஜயனின் பின் ஆட்சி செய்த மன்னர்களும் அது தொடர்பான விபரங்களும் / 'புத்தருடன் இலங்கைக்கு இரத்த தொடர்பு உள்ளதா?' சுத்தோதனர் (Suddhodana) கௌதம புத்தரின் தந்தையும், சாக்கிய குல கபிலவஸ்துவின் மன்னராவார். இவருக்கு தீபவம்சம் மற்றும் மகாவம்சத்தின் படி, தோதோனன், சக்கோதனன், சுக்கோதனன், அமிதோதனன் என்ற [Dhotodana, Sakkodana, Sukkodana and Amitodana] நான்கு சகோதரர்கள் இருந்தனர். ஆனால் இராசவலியின் படி இவருக்கு இரண்டு இளைய சகோதரர்கள் மட்டுமே ஆகும். இவர்களின் இளைய சகோதரர் அமிதோதனாக்கு பண்டு [Pandu] என்ற ஒரு மகனும் இருந்தார். அவர் புத்தரின் குலத்தைச் சேர்ந்தவர், அதனால் அவர் சக்க இளவரசர் பாண்டு [Sakka prince Pandu] என்று அழைக்கப்படுகிறார். அவருக்கு ஏழு இளவரசர்களும் கச்சனா (மகாவம்சத்தின் படி Bhaddakaccana / பத்தகச்சனா / Buddhakachchana / புத்தகாஞ்சனா) என்ற ஒரு இளவரசியும் இருந்தனர். கலிங்க நாட்டிலிருந்து இலங்கைக்கு வந்த உயர் குடியினளான அவளை பண்டுவாசுதேவன் மணம் செய்துகொண்டு அவளை தன் இராணியாக்கினான். அவளுடன் வந்தவர்களைத் தன்னுடன் வந்தவர்களுக்கு மணம் செய்து வைத்தான். மகாவம்சத்தில் ,பாடம் 8-22 முதல் 8-23 வரை, பத்தகச்சனா இலங்கைக்கு வருவது பற்றி, மற்றொரு அற்புதமான கதையைக் காண்கிறோம். அரசன் தன் மகள் பத்தகச்சனாவை முப்பத்தி இரண்டு தோழிகளுடன் விரைவில் கப்பலேற்றி, கங்கையில் கப்பலைப் போகவிட்டான். எவரால் முடியுமோ அவர்கள் என் மகளை எடுத்துக் கொள்ளட்டும்’ என்றான் என்கிறது அந்த வரிகள். பண்டுவாசுதேவா (பண்டுவாச) கூட முப்பத்திரண்டு அமைச்சர்களின் மகன்களுடன் தான் இலங்கை வந்தான் அதே மகாவம்சம்; மேலும் பதினாறு இரட்டையர்கள் முப்பத்தி இரண்டை ஆக்குகிறார்கள் என்பதை நினைவில் கொள்க. ஏனென்றால் விஜயனையும் சேர்த்து அவனுடன், அவன் பெற்றோருக்கு பிறந்தவர்களும் முப்பத்தி இரண்டு தான்! பத்தகச்சனாவும் முப்பத்திரண்டு இளம் பெண் தோழிகளுடன் தான் இலங்கை வந்தார், மற்றொரு மகிழ்ச்சியான தற்செயல் நிகழ்வு. அதுமட்டும் அல்ல, அனைவரும் வழி தவறாமல் இலங்கைக்கு வந்தனர்! அத்துடன் முன்னமே வந்த, பண்டுவாசுதேவாவின் (பண்டுவாச) தோழர்களான முப்பத்திரண்டு இளம் ஆண்களும் இந்த முப்பத்திரண்டு இளம் பெண்களை மணந்தனர். அதேநேரம் பண்டுவாசுதேவா பத்தகச்சனாவை மணந்தார். இன்னொரு நம்பமுடியாத கதை! வழக்கம் போல், திருமணமான முப்பத்திரண்டு சோடிகளும் திருமணத்திற்குப் பிறகு மறைந்து விடுகிறார்கள்!. மகாவம்சத்தின்படி அமிதோதனனின் ஏழு பேரன்களில் ஆறு பேர் இலங்கைக்கு வந்து குடியேறினர். புத்தருடன் இரத்த தொடர்பை ஏற்படுத்த கண்டு பிடிக்கப்பட்ட மற்றொரு கதை அங்கு காணப்படுகிறது; புத்தரின் இரத்த உறவை இலங்கை வரலாற்றில் புகுத்த ஆசிரியர் மிகவும் ஆர்வமாக கதையின் போக்கை அமைத்திருப்பது வெள்ளிடைமலை. இராசவலியில் பண்டுவாசுதேவரின் கதை மகாவம்சத்தில் கொடுக்கப்பட்டதை விட மிகவும் வித்தியாசமானது, ஆனால் அது இங்கே விவரிக்கப்படாது. இராசவலியின் பக்கங்கள் 21 மற்றும் 22 இல் கொடுக்கப்பட்டுள்ள நம்பமுடியாத புராணக் கதை ஆசிரியரின் அளவு கடந்த கற்பனை. எனவே இது எந்த தீவிரமான விமர்சனத்திற்கும் தகுதியற்றது. இலங்கைக்கும் துத்துக்குடிக்கும் இடையில் கடல் இல்லை என்று இராசவலி கூறுகிறது. துாத்துக்குடிக்கும் இலங்கைக்கும் இடையே உள்ள கடற்படுகை அல்லது கடலின் அடித்தளம் கிழக்கு-மேற்கு திசையில் உள்ள பாத்திமெட்ரிக் வரையறைகளின்படி சில இடங்களில் ஆயிரம் மீட்டருக்கும் அதிகமாக உள்ளது. பாத்திமெட்ரிக் வரையறைகள் [Bathymetrical contours] கீழே காட்டப்பட்டுள்ளன. இந்த மகாவம்ச காலத்தில், இரண்டாயிரம் ஆண்டளவில், அது நிலமாக இருக்க சாத்தியமில்லை. மன்னார் (தலை-மன்னார் அல்ல) மற்றும் கிழக்கு-மேற்கு திசையில் இந்தியாவை இணைக்கும் கோட்டிற்கு வடக்கே உள்ள கடற்படுகை அல்லது கடலின் அடித்தளம் கோட்டின் தெற்கே உள்ள கடற்படுகை அல்லது கடலின் அடித்தளத்தில் இருந்து மிகவும் வேறுபட்டது. கடற்படுகை அல்லது கடலின் அடித்தளம் அந்த கோட்டின் வடக்கே சராசரி கடல் மட்டத்திலிருந்து சுமார் 10 மீ முதல் 25 மீ வரை இருக்கலாம், மேலும் கடலின் அடிப்பகுதி அந்த கோட்டின் தெற்கே மிகவும் ஆழமாக இருக்கும். கடந்த இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்குள் கடல் மட்டத்தில் எந்த மாற்றமும் ஏற்பட்டிருக்காது, இருப்பினும் சுமார் ஏழாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு முடிவடைந்த, கடந்த பனிப்பாறை காலத்தில் கடல் மட்டம் சுமார் 120 மீட்டர் குறைந்திருக்கலாம்? ஆனால், 1000மீட்டர் முதல் 4000மீட்டர் வரையிலான பாத்திமெட்ரிக் அளவுகளுடன் ஒப்பிடும்போது 120மீ வீழ்ச்சி அற்பமானது ஆகும். Part: 12 / The Kings who ruled after Vijaya and the related affairs / 'Is Lanka have blood connection with the Buddha?' The Buddha’s father Suddhodana had four brothers as per the Dipavamsa and the Mahavamsa, but two younger brothers as per the Rajavaliya. The younger brother was Amitodana and he had a son Pandu. He belonged to the Buddha’s clan and that is why he is called Sakka prince Pandu. He had seven princes and one princess called Kaccana (Bhaddakaccana as per the Mahavamsa). She came to Lanka and Panduvasa made her his queen. Bhaddakaccana’s coming to Lanka is another fabulous story in the Mahavamsa, 8-22 to 23. Panduvasudeva (Panduvasa) came with thirty-two sons of ministers; remember sixteen twins make thirty-two. Coincidentally Kaccana too came with thirty-two young women friends, another happy coincidence. All came without losing ways to Lanka! Thirty-two sons married the thirty-two young women, another smart story telling! As usual, the thirty-two married couples are forgotten forever after the marriage. Six of the Amitodadana’s seven grandchildren also came to Lanka and settled in Lanka as per the Mahavamsa. It is another invented piece to have blood connection with the Buddha; author must be too eager to have Buddha’s blood relations in Lanka. Panduvasudeva’s tale in the Rajavaliya is very much different from that given in the Mahavamsa, but it will not be described here. The incredible mythical story given in the pages 21 and 22 of the Rajavaliya is the flight of fancy of the author, which merits no serious criticism. The Rajavaliya says that there was no sea between Lanka and Tuttukudi. The seabed levels between Tuttukudi and Lanka is greater than one thousand meters at some stretches as per the Bathymetrical contours in the East-West direction. Bathymetric contours are shown below It is impossible to be land in the time of the episode. The seabed levels north of the line connecting Mannar (not Talai-Mannar) and India in the East-West direction is very much different from the levels south of the line. The seabed levels may be around 10m to 25m below the Mean Sea Level to the North of that line, and the seabed levels are much deeper to the South of that line. No change in seabed level would have taken place within the last two thousand five hundred years, though sea level might have dropped by about 120m during the last glacial period, which ended about seven thousand years back. . The 120m drop is insignificant compared to the Bathymetric levels of 1000metre to 4000metre. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 13 தொடரும் / Will Follow படங்கள் இங்கே பதியமுடியாமல் இருக்கிறது. மன்னிக்கவும்

கலைஞரின் மூத்த மகன் மு.க.முத்து காலமானார்!

2 months ago
செத்தவன் செய்திக்கு அஞ்சலி செலுத்தாத முதல் திரி இதுவோ. சரி... நான் ஒரு பாட்டை போடுகிறேன்... காதலின் பொன் வீதியில் காதலன் பண் பாடினான் பண்ணோடு அருகில் வந்தேன் நான் கண்ணோடு உறவுகொண்டேன்…..

இந்திய இராணுவத்தின் வலிமையைக் கண்டு உலக நாடுகள் வியந்தன! – பிரதமர் மோடி

2 months ago
மஹா குழுமத்தை இந்த கணக்குகளும், தொகைகளும் பாதிப்பதே இல்லை, வசீ. மிகவும் அடிப்படையான சில தேவைகளை பூர்த்தி செய்து கொண்டு அவர்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்தப் பாதிப்புகள் நேரடியாக அங்கு தாக்கத்தை ஏற்படுத்தினால் அவர்களின் மனநிலையில் மாற்றம் வரலாம். ஆனால் இன்று அவர்கள் வெற்றி பெற்று விட்ட, அவர்களின் அமெரிக்காவை மீண்டும் கொண்டு வந்து விட்ட ஒரு மனநிலையிலேயே இருக்கின்றார்கள். மற்றைய அமெரிக்கர்களின் நிலை, அதிகமாக மேற்கு மற்றும் கிழக்குக் கரைகளில் இருக்கும் மக்கள், ஒரு நிச்சயமற்ற தன்மையை எதிர்நோக்கியபடியே இருக்கின்றது. புதிய முதலீடுகளை தவிர்த்து, பாதுகாப்பான வழிகளைப் பற்றி யோசிக்க ஆரம்பித்துள்ளனர். இது ஒரு மூன்றரை வருடங்கள் மட்டுமே என்றும் நம்புகின்றனர். புதிய வேலைவாய்ப்புகளில் ஒரு தேக்கம் ஏற்பட்டு, அதனால் ஒரு சிக்கல் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக புதிதாக கல்லூரிப் படிப்புகளை முடித்தவர்கள். இந்த வகையினர் கொஞ்சம் அவநம்பிக்கையுடனேயே இன்று இருக்கின்றனர். இதற்கு செயற்கை நுண்ணறிவால் உண்டாகிக் கொண்டிருக்கும் தொழில்துறைச் சுனாமியும் ஒரு பிரதான காரணம்.

முதல்வர் ஸ்டாலின் உடல்நிலை.. அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட புதிய அறிக்கை

2 months ago
முதல்வர் 3இட்லி சாப்பிட்டதாக கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.சீமானைச் சந்தித்த பின் ஸ்டாலினுக்கு தலைச்சுற்றல் வந்ததாகத் தகவல்.

இந்திய இராணுவத்தின் வலிமையைக் கண்டு உலக நாடுகள் வியந்தன! – பிரதமர் மோடி

2 months ago
அவரை அப்பா என அழைக்கிறார்களே ஐரோப்பியர்கள்? OBBBA மூலம் அடுத்த 10 ஆண்டில் 3.7 ட்ரில்லியனை அமெரிக்க கருவூலம் இழக்கும் என எதிர்வுகூறுகிறார்களாம், அதே நேரம் DOGE மூலம் அதே 10 ஆண்டில் 1.3 ட்ரில்லியனை ஈட்ட முடியும் என எதிர்பார்க்கிறார்களாம், அதன் இடைவெளி -2.4 ட்ரில்லியன், அதாவது ஆண்டு ஒன்றுக்கு 200 பில்லியன் இழப்பு ஏற்படும் என கணித்துள்ளார்கள். இந்த வரிக்குறைப்பு மற்றும் அரச செலவீட்டுக்குறைப்பு போக அதனை ஈடுகட்ட உலக நாடுகளின் மீதான வரி விதிப்பின் மூலம் ஆண்டு ஒன்றிற்கு மேலதிகமாக 30 பில்லியன் வருமானம் எட்ட முடியும் என கணித்துள்ளார்கள் அதனால் -170 பில்லியன் செலவு ஆண்டு ஒன்றிற்கு ஏற்படும் என கூறுகிறார்கள் அதனை ஐரோப்பியர்களிடம்தான் (NATO) வசூலிக்க உள்ளார் போல உள்ளது. ஜேர்மனி கடந்த ஆண்டு எதிர்மறை பொருளாதார வளர்ச்சியில் உள்ள நிலையில் GDP இல் 3% இராணுவ செலவீட்டிற்கு அதிகரிக்க அரசு திட்டமிட்டுள்ளதாக கூறுகிறார்கள். இந்த நிதிக்கொள்கைகளால் உள்நாட்டு (அமெரிக்க) பொருளாதாரம் பெரிதும் பாதிக்கலாம் என கருத்து நிலவுகிறது, சாதாரண அமெரிக்க மக்களின் மனநிலை எப்படி உள்ளது?

கலைஞரின் மூத்த மகன் மு.க.முத்து காலமானார்!

2 months ago
நல்லாண்மை என்பது ஒருவற்குத் தான்பிறந்த இல்லாண்மை ஆக்கிக் கொளல். சாலமன் பாப்பையா விளக்கம்: ஒருவனுக்கு நல்ல ஆண்மை என்பது அவன் பிறந்த வீட்டையும் நாட்டையும் ஆளும் தன்மையைத் தனக்கு உரியதாக ஆக்கிக் கொள்வதோ. வேறு எது இல்லாவிட்டாலும்….எம் ஜி ஆரிடம் இந்த விடயத்தில் வள்ளுவன் சொன்ன நல்லாண்மை இருந்துள்ளது தெளிவு.

கலைஞரின் மூத்த மகன் மு.க.முத்து காலமானார்!

2 months ago
விசுகு ஐயா 'சினிமாவுக்குப் போன சித்தாளு' என்னும் ஜெயகாந்தன் அவர்கள் எழுதிய குறுநாவலை வாசித்திருக்கின்றீர்களா என்று தெரியவில்லை. இந்தக் கதையில் வரும் பல சம்பவங்கள் இன்றும் பொருந்துபவை மற்றும் அதிர்ச்சியையும், விவாதத்தையும் உண்டாக்குபவை. அந்தக் கதையில் எம்ஜிஆர் இருக்கின்றார், ஆனால் நேரடியாக அல்ல, ஆனாலும் அது எம்ஜிஆர் தான் என்று வாசிப்பவர்களுக்கு சட்டென்று புரிந்துவிடும். எம்ஜிஆர் சுத்தமாகவே ஆண்மையற்றவர் என்று சுட்டும் வசனங்கள் அந்தக் கதையில் உண்டு. நான் இதை வாசித்த பின், எம்ஜிஆருக்கு எந்த வகையிலாவது வாரிசுகள் உண்டா என்ற கேள்வி உண்டானது. ஆனாலும் இப்படி எழுதியதற்காக ஜெயகாந்தனை எம்ஜிஆர் எதுவும் செய்யவேயில்லை. அவர் ஜெயகாந்தனை ஒதுக்கக்கூட இல்லை. இந்தக் கதையின் பின்னும், 'இலக்கியவாதிகள் என்றால் அப்படித்தான் இருப்பார்கள்..............' என்று அவர் ஜெயகாந்தனைப் பற்றி மிகவும் உயர்வானதாகவே சொன்னதாகச் சொல்லுகின்றார்கள்.

பிறப்பு அத்தாட்சிப் பத்திரத்துக்கு தந்தையின் பெயர் அவசியமில்லை ; அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ்

2 months ago
மேற்கு நாட்டு குடியுரிமை சட்டங்கள் கூட ஒரு காலத்தில் தகப்பன் சார்பாகவே இருந்தன. இப்போ எல்லாமும் ஒன்றே. எமது சமூகத்தில் முன்னர் கூட மிக அரிதாகவே தாயார் கைவிட்ட பிள்ளைகள் இருந்தார்கள். ஆனால் ஒப்பீட்டளவில் இனிசலுக்கு மட்டுமே உபகோகப்பட்ட “ஆண் சிங்கங்கள்” அதிகம் இருந்தார்கள். இவர்களை எல்லாம் பிறப்பு சான்றிதழில் இருந்து தூக்கினால் கூட ஒன்றும் குடி மூழ்கிபோகாது🤣.

6 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் கைப்பேசி பயன்படுத்தக் கூடாது!- அமைச்சர் சரோஜா போல்ராஜ்

2 months ago
இந்த விடயத்தில் சரோஜா சாவித்திரி போல்ராஜும், ஜேவிபி கட்சியினரும் நடந்து கொண்ட விதம் மோசமானதே. அவர்கள் உறுதியான நடவடிக்கை எடுத்திருக்கவேண்டும். பின்னர் இந்த விவகாரம் அப்படியே அடங்கிப் போய்விட்டது...........................😒.

அமெரிக்க விசாவுக்கு மேலதிகமாக 250 டாலர்கள் அறவிட தீர்மானம்.

2 months ago
டிரம்ப் நிர்வாகத்தின் சமீபத்தில் இயற்றப்பட்ட உள்நாட்டு கொள்கை மசோதாவில் உள்ள ஒரு விதியின்படி, சர்வதேச பார்வையாளர்கள் தற்போதுள்ள விசா விண்ணப்ப செலவுகளுடன் சேர்த்து குறைந்தபட்சம் $250 புதிய "விசா நேர்மை கட்டணம்" செலுத்த வேண்டும் என்று அமெரிக்கா கோரும். அமெரிக்காவிற்குள் நுழைய குடியேறாத விசாக்களைப் பெற வேண்டிய அனைத்து பார்வையாளர்களுக்கும் இந்தக் கட்டணம் பொருந்தும். இதில் பல ஓய்வு மற்றும் வணிகப் பயணிகள், சர்வதேச மாணவர்கள் மற்றும் பிற தற்காலிக பார்வையாளர்கள் அடங்குவர். 2024 நிதியாண்டில், வெளியுறவுத்துறை புள்ளிவிவரங்களின்படி, அமெரிக்கா கிட்டத்தட்ட 11 மில்லியன் குடியேறாத விசாக்களை வழங்கியது. https://www.cnn.com/2025/07/21/travel/visa-integrity-fee-usa-international-travelers இது நடைமுறைக்கு வந்தால் மற்றைய நாடுகளும் இதனைப் பின் பற்றலாம். ஏற்கனவே இங்கிலாந்து இடைத்தங்கலுக்கு 15-20 டாலர்கள் அறவிடுவதாக சொன்னார்கள்.
Checked
Sun, 09/28/2025 - 03:32
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed