2 months ago
இந்திய இராணுவத்தின் வலிமையைக் கண்டு உலக நாடுகள் வியந்தன! – பிரதமர் மோடி. இந்திய இராணுவத்தின் வலிமையை கண்டு உலக நாடுகள் வியந்துள்ளதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று ஆரம்பமாகி அடுத்த மாதம் 21ம் திகதி வரை நடைபெறவுள்ள நிலையில், நாடாளுமன்ற வளாகத்திற்கு வெளியே ஊடகவியலாளர்களை சந்தித்துக் கலந்துரையாடிய போதே பிரதமர் நரேந்திர மோடி இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ” இந்த நாடளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வெற்றி கொண்டாட்டம் போன்றது. இந்திய இராணுவத்தின் வலிமையை உலகம் பார்த்துள்ளது. ஒபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது இந்திய இராணுவம் நிர்ணயித்த இலக்குகள் 100 சதவீதம் வெற்றியடைந்துவிட்டன. ஒபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது பயங்கரவாதிகளின் வீடுகள் 22 நிமிடத்தில் தரைமட்டமாக்கப்பட்டன. இந்திய ராணுவத்தின் வலிமையை கண்டு உலக நாடுகள் வியந்தன. உலக நாடுகளின் தலைவர்களை நான் சந்திக்கும்போது இந்தியாவில் தயாரிக்கப்படும் ராணுவ ஆயுதங்கள் தங்கள் ஈர்ப்பதாக கூறுகின்றனர். இந்தியாவில் ஆயுத உற்பத்தி அதிகரித்து வருகிறது. இந்திய தேசியக்கொடி சர்வதேச விண்வெளி நிலையத்தில் பறக்கவிட்டப்பட்டது ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை. அனைத்து எம்.பி.க்களும் நாட்டு மக்களும் ஒரே குரலில் இந்த சாதனையைப் போற்றுவார்கள். நமது எதிர்கால விண்வெளி திட்டங்களுக்கு இது ஊக்கமாக இருக்கும். உலகின் 3ஆவது பெரிய பொருளாதாரம் என்ற நிலையை இந்தியா விரைவில் எட்டும். நாட்டில் பண வீக்கம் குறைந்து வளர்ச்சி அதிகரித்துள்ளது ” இவ்வாறுஇந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1439939
2 months ago
" அடி " என்னும் இரெண்டெழுத்து .......... ! 👍
2 months ago
அடுத்தது கொலை தானே...
2 months ago
எனது ராஜசபையிலே ஒரே சங்கீதம் . ......... ! 😍
2 months ago
வணக்கம் வாத்தியார் .........! ஆண் : ஆட்டுக்குட்டி முட்டையிட்டு கோழிக்குட்டி வந்ததுன்னு யானைக்குஞ்சு சொல்லக்கேட்டு பூனைக்குஞ்சு சொன்னதுண்டு கதையில்ல சாமி இப்போ காணுது பூமி இது மட்டும்தானா இன்னும் இருக்குது சாமி ஆண் : கூத்து மேடை ராஜாவுக்கு ஏ ஏய் ஏ….. கூத்து மேடை ராஜாவுக்கு நூற்றிரெண்டு பொண்டாட்டியாம் நூற்றிரெண்டு பெண்டாட்டியும் வாத்து முட்டை போட்டதுவாம் பட்டத்துராணி அதுல பதினெட்டு பேரு பதினெட்டு பேர்க்கும் வயசு இருபத்து ஆறு மொத்தம் இருபத்து ஆறு ஆண் : சின்ன குட்டிகளின் மேல் ஆணை புது சட்டிகளின் மேல் ஆணை இரு வள்ளுவன் ஏட்டிலுண்டு பரம்பரை பாட்டிலுண்டு கதையில்ல மகராசி ஆண் : காக்கையில்லா சீமையிலே காட்டெருமை மேய்க்கையிலே பாட்டெடுத்து பாடிப்புட்டு நோட்டமிட்ட சின்னப் பொண்ணு சந்தைக்கு போனா நானும் சாட்சிக்கு வர வா சம்பந்தம் பண்ண உனக்கு சம்மதம்தானா காக்கையில்லா சீமையிலே பெண் : ஏ ஏ ஏ ஏஹெய்……… காக்கையில்லா சீமையிலே காட்டெருமை மேய்க்கையிலே காக்க வச்சி நேரம் பாத்து பாக்கு வச்ச ஆசை மச்சான் சந்தைக்கு போறேன் நீங்க சாட்சிக்கு வாங்க க க சம்பந்தம் பண்ண எனக்கு சம்மதம் தாங்க பெண் : அட இந்த பக்கம் பாருங்களே என் கன்னி மொழி கேளுங்களே அட ஏண்டி என்ன வஞ்சனைனு கேக்குறீயே கேக்குறீயே {பழைய நெனப்புடா பேராண்டி பழைய நெனப்புடா} (2) ஆண் : கிட்டப்பாவின் பாட்டை கேட்டேன் சின்னப்பாவை நேரில் பார்த்தேன் கொட்ட கொட்ட வருகுதம்மா சங்கீதமா பெருகுதம்மா ஆண் : வேலைக்கு போனா எனக்கு ஈடுயில்ல பொண்ணு பாட்டுல நின்னா நானும் நூத்துல ஒன்னு என் திறமையை காட்டட்டுமா இரண்டு சங்கதியை போடட்டுமா ஆண் : {ததரின ததரின ததரின ததரின} (2) ........ ! --- ஆட்டிக்குட்டி முட்டையிட்டு---
2 months ago
அவ்வாறே வடக்கில் படுகொலை செய்யப்பட்ட அப்பாவிகளுக்காகவும் குரல் எழுப்பினால் தாழ்ந்து போகமாட்டீர்களே.
2 months ago
2 months ago
2 months ago
நான் ஆணாகப் பிறந்திருப்பதினால் ஆண்களுக்கு வக்காலத்து வாங்க வந்ததாக எண்ணவேண்டாம். இயற்கையின் படைப்பில், அதிகமாக உயிரினங்கள் அனைத்திலும், ஆணைப் பலம்கொண்ட பாதுகாக்கும் இனமாகவும், பெண்ணை மென்மையான பாதுகாக்கப்படும் இனமாகவும் படைத்திருப்பதின் நோக்கம் என்ன?? என் சிறு வயதில் நான் ஒரு ஆங்கிலப் படம் பார்த்தேன், (Jungle cat) அதில் முதலை ஒன்றைக்கண்ட பெண்புலி, தன் குட்டிக்கு அதனால் ஆபத்துவருமோ என்று பயந்து ஏதோ ஒரு சமிக்கை கொடுத்து ஆண்புலியை வரவழைத்தது, ஆண்புலிவந்து அந்த முதலையோடு சண்டையிட்டு அதனைக் கடித்துக் குதறிக் கொன்றது. பயம் நீங்கிய பெண்புலி ஆண்புலியைக் கட்டித் தழுவி தன் ஆனந்தத்தை வெளிப்படுத்தியது. இயக்குனர் சில காலம் காட்டுக்குள் ஒழிந்திருந்ததாலேயே இந்தக் காட்சியைப் படம் பண்ண முடிந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
2 months ago
வேலுபிரபாகரன் என்று ஒரு தமிழ் தயாரிப்பாளர் இன்று இறந்துவிட்டார் அவர் பெரியார் ஆதரவாளர். அவரது நிகழ்வுக்கு வந்த சீமான் பேசுகின்றார் அய்யா ஈவேரா அவர்களுடைய சிந்தனையை உள்வாங்கி புரையோடி கிடக்கின்ற பழக்கங்கள் சாதி ஏற்ற தாழ்வுகள் இந்த மண்ணில் களைவேண்டும் மாற வேண்டும் என்ற சிந்தனை கொண்டவர், அதை அதை பலருக்கு கடத்தியவர் மானிட பற்றாளர் வேலுபிரபாகரன் அயோக்கியனான பெரியாரின் சிந்தனையை உள்நாங்கிய வேலுபிரபாகரன் எப்படி மானிட பற்றாளர் ஆனார் ? பெரியார் பற்றி சீமான் முதல் சொன்னது பாரதிய ஜனதா கட்சியிடம் பெட்டி வாங்கி கொண்டு பேசியது
2 months ago
படங்களுடன் கூடிய பகிர்வுக்கு நன்றி . ......... ! 🙏
2 months ago
வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ திருவிழா ஆரம்பம்! வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா எதிர்வரும் 29ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில், கொடிச்சீலை வடிவமைப்பாளர்களிடம் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு இன்றைய தினம் (21) இடம்பெற்றது. வள்ளியம்மை திருக்கல்யாணப் படிப்புடன் பந்தற்கால் நாட்டுதல் நடைபெற்று பாரம்பரிய முறைப்படி கொடிச்சீலை வழங்கும் மரபுடையவர்களிற்கான காளாஞ்சி ஒற்றை திருக்கை மாட்டுவண்டில் மூலம் நல்லூரிலிருந்து கல்வியங்காடில் வசிக்கும் கொடிச்சீலை வடிவமைப்பாளர்களிடம் எடுத்துச் செல்லப்பட்டு கலாச்சார பெருந்திருவிழாவுக்கான பத்திரிகையும், காளாஞ்சியும் கையளிக்கப்பட்டன. ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா எதிர்வரும் 29ஆம் திகதி காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 25 நாட்கள் மகோற்சவ திருவிழாக்கள் நடைபெறவுள்ளன. மகோற்சவ திருவிழாக்களின் 10ஆம் திருவிழாவான மஞ்ச திருவிழா எதிர்வரும் 07ஆம் திகதியும் , 22ஆம் திருவிழாவான மாம்பழ திருவிழா எதிர்வரும் ஆகஸ்ட்19ஆம் திகதியும் , 24ஆம் திருவிழாவான தேர் திருவிழா ஆகஸ்ட் மாதம் 21ஆம் திகதி காலையும் , மறுநாள் 22ஆம் திகதி காலை தீர்த்த திருவிழா இடம்பெற்று , மாலை கொடியிறக்கம் இடம்பெற்று , மகோற்சவ திருவிழாக்கள் நிறைவு பெறும். https://athavannews.com/2025/1439950
2 months ago
2006 மும்பை ரயில் குண்டுவெடிப்பு: மரண தண்டனை விதிக்கப்பட்டோர் உட்பட 12 பேர் விடுதலை. 2006 ஆம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் ரயில் குண்டு வெடிப்பு தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 12 பேரையும் மும்பை மேல் நீதிமன்றம் இன்று (21) விடுதலை செய்தது. மும்பையின் ரயில் வலையமைப்பை உலுக்கிய இந்த குண்டு வெடிப்பில் 189 பேர் உயிரிழந்ததுடன், 800க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 2015 ஆம் ஆண்டு இது குறித்த வழக்கு விசாரணையில் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்ட மேற்கூறிய 12 நபர்களில் 05 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. மற்றவர்களுக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. இந்த நிலையில் சம்பவம் நடந்து 19 ஆண்டுகளின் பின்னர் இந்த விடுதலை வந்துள்ளது. நீதிபதிகள் அனில் கிலோர் மற்றும் ஷியாம் சந்தக் ஆகியோர் அடங்கிய சிறப்பு நீதிபதிகள் குழு, அரசு தரப்பு வழக்கில் உள்ள கடுமையான குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி மேற்கண்ட தீர்ப்பினை அறிவித்தது. “குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான வழக்கை நிரூபிக்க அரசு தரப்பு முற்றிலும் தவறிவிட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் குற்றம் செய்ததாக நம்புவது கடினம். எனவே, அவர்களின் தண்டனை இரத்து செய்யப்பட்டு, தள்ளுபடி செய்யப்படுகிறது,” என்று நீதிபதிகள் அமர்வு கூறியது. அதேநேரம், வேறு எந்த வழக்கிலும் அவர்கள் தொடர்புபடாது விட்டால் அவர்கள் சிறையில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என்றும் நீதிபதிகள் குழு கூறியது. விசாரணையின் போது மீட்கப்பட்ட வெடிபொருட்கள், ஆயுதங்கள் மற்றும் வரைபடங்கள் குண்டுவெடிப்புகளுடன் தொடர்பில்லாததாகத் தெரிகிறது என்றும் நீதிபதிகள் குழு கூறியது. குண்டுவெடிப்புகளில் என்ன வகையான குண்டுகள் பயன்படுத்தப்பட்டன என்பதைக் கூட அரசுத் தரப்பு நிரூபிக்க முடியவில்லை என்றும் அது சுட்டிக்காட்டியது. 2006 ஜூலை 11 அன்று, மும்பையில் தனித்தனி உள்ளூர் ரயில்களில் 11 நிமிடங்களுக்குள் ஏழு குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன. இந்த குண்டுவெடிப்புகள் இந்தியாவின் மிகக் கொடிய பயங்கரவாதத் தாக்குதல்களில் ஒன்றாக கருதப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1439946
2 months ago
சரியாய் சொன்னேள், போங்கோன்னா ,, தெற்கிலிதுவரை அறுபது துப்பாக்கி சூட்டு சம்பவங்களும் பதினாலு புள்ளி மூணு ஐந்து குழு மோதல்களும் நடந்திடுச்சு . ரவுண்டு டவுன் பண்ணி எழுபத்துனாலே நாலு பிராண்ட் புச்சு ஆர்மி காம்பு பூட்டுப்புடலாமா .. எப்பிடி வசதி ..
2 months ago
கசூரினா கடற்கரையில் பாரிய தீ விபத்து! யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல சுற்றுலா தளங்களில் ஒன்றான கசூரினா கடற்கரையில் நேற்றைய தினம்(21) இரவு பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் அறிந்து கடற்கரைக்கு விரைந்த பிரதேச சபையினர் , கடற்படையினர் ஆகியோர் நீண்ட போராட்டத்தின் பின் தீயினை கட்டுக்குள் கொண்டு வந்தனர். குறித்த தீ விபத்தில் கடற்கரையில் காணப்பட்ட சவுக்கு மரங்கள் , பனை மரங்கள் என்பன தீயில் கருகி சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தீ விபத்துக்கான காரணம் தெரியவராத நிலையில் , பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். https://athavannews.com/2025/1439919
2 months ago
என்ன குழப்பமா, ஒருவருக்குத்தானா?
2 months ago
பெயரை மாற்றி வைத்தால் மட்டும் போதாது. சகோதர இனத்தின் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள ஆக்கிரமிப்பு மனப்பான்மையும் மாறவேண்டும்.
2 months ago
புது அனுபவம் போல் ரொம்ப பயந்துட்டார் முதல் குற்றம் செய்து ஜெயிலுக்கு போகும்போது ஏதோ பெரிசா சாதித்த பெருமை சிறுவர்களாக இருந்தால் தங்கள் கீரோக்களாகி விடும் என்கிற நினைப்பு அடுத்து ஜெயிலில் பலவித பலவயதில் நண்பர்கள் அடுத்த முறை சிக்காமல் எப்படி தப்பு செய்வதென்கிற பாடம் பிறகு அது தொடர்கதை ஒரு பன்னிரண்டு வயது மாணவியை பதினாறு வயது பையன் துஷ்பிரயோகம் போதாதற்கு நண்பர்களும் சேர்ந்து மாட்டுப்படார்கள் அவ்வளவு பேரும் அவர்களை போலீசார் அழைத்துச்செல்லும்போது ஏதோ பெரிதாக சாதித்த பெருமை ஒவ்வொருவர் முகத்திலும் சினிமாவில் துப்பாக்கியை நீட்டி சுட்டுவிட்டு ஊ என்று ஊதிவிட்டு சடடைப்பைக்குள் துப்பாக்கியை திணித்துக்கொண்டு வேகமாக உந்துருளியில் பறக்கிறார். அவர்தான் ஹீரோ. சிறையிலும் அவரின் ஹீரோஜிசந்தான். அங்கே சட்டம், தண்டனை, அதன் வலி, அவமானம் பெரிதாக காட்டப்படுவதில்லை. இதில் இளையோர் மயங்கி, அவ்வளவுதானே செய்துதான் பார்ப்போமே என்று தொடர்கிறார்கள்.
2 months ago
ஆடைகள் குறித்த விமர்சனங்களால் மன அழுத்தத்திற்கு உள்ளானேன்! -சரிகமபவில் இருந்து வெளியேறிய சினேகா! சமூக ஊடகங்களில் வெளிவந்த தனது ஆடைகள் தொடர்பான விமர்சனங்கள் தன்னை மன அழுத்தத்திற்கு உள்ளாக்கியதாகவும், இதன் காரணமாகவே தான் சரிகமப நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியதாகவும் மலையகத்தை சேர்ந்த பாடகி சினேகா தெரிவித்துள்ளார். தமிழகத்தின் பிரபலமான தொலைக்காட்சியான ZEE தமிழ் தொலைக்காட்சியில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இசை நிகழ்ச்சியான சரிகமபவில் இருந்து வெளியேறியது தொடர்பில் ஊடகங்களுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ” சரிகமபவின் ஒவ்வொரு பாடல் சுற்றிலும் நான் அணியும் ஆடைகள் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பல விமர்சனங்கள் எழுந்தன. எனது ஆடைகள் தொடர்பில் வெளியான விமர்சனங்களால் மன அழுத்தத்திற்கு உள்ளாகினேன். அதனால் சரிகமபவில் என்னால் சிறப்பாக பாடமுடியவில்லை. சரிகமப குழுவினர் உள்ளிட்ட அனைவரும் எனக்கு ஆதரவளித்து விமர்சனங்களைப் பொருட்படுத்தாமல் பாடலைப் பாடு என்று ஊக்கமளித்தனர். இருப்பினும் என்னால் சிறந்த முறையில் பாடமுடியவில்லை.இதனாலேயே நான் வெளியேறி வந்துள்ளேன்” என சினேகா உருக்கமாகத் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1439929
2 months ago
லெப்.கேணல் டிக்கான் (வேங்கை) செபஸ்ரியாம்பிள்ளை ஜெயச்சந்திரன் 6ம் வட்டாரம், சாம்பல்தீவு, திருகோணமலை லெப்.கேணல் ரமணன் வெள்ளைச்சாமி கோணேஸ்வரன் சூரியகட்டைக்காடு, நானாட்டான், மன்னார் லெப்.கேணல் ஈகன் முத்துலிங்கம் கலையரசன் ஈச்சந்தீவு, ஆலங்கேணி, திருகோணமலை லெப்.கேணல் இமையவன் விவேகானந்தன் அரவிந்தன் நவிண்டில், கரணவாய் வடக்கு, கரவெட்டி, யாழ்ப்பாணம் லெப்.கேணல் சுடரொளி நல்லையா அருந்தவமாலா யாழ்ப்பாணம் கடற்கரும்புலி மேஜர் மிதுபாலன் வேதாரணியம் ஜெயக்காந்தன் சங்கத்தானை, யாழ்ப்பாணம் கடற்கரும்புலி கப்டன் சயந்தன் தம்பிப்பிள்ளை துரைரத்தினம் அக்கரைப்பற்று, அம்பாறை
Checked
Sun, 09/28/2025 - 00:28
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed