புதிய பதிவுகள்2

பாரிய சமூகச் சரிவைச் சந்தித்துக் கொண்டிருக்கும் யாழ்ப்பாணம்

1 month 4 weeks ago
ஈழத்தமிழர்களின் கல்வி மற்றும் கலாச்சார மையமாகத் திகழ்ந்த யாழ்ப்பாணம், இன்று ஒரு பாரிய சமூகச் சரிவைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, யாழ் இளைஞர்களிடையே பரவி வரும் சோம்பேறித்தனமும், அதற்குத் தீனி போடும் புலம்பெயர் உறவுகளின் ‘முட்டாள்தனமான’ பண உதவியும் ஒரு தலைமுறையையே அழிவின் விளிம்பிற்குத் தள்ளிக் கொண்டிருக்கின்றன. யாழ்ப்பாணத்தின் வீதிகளில் இன்று வேலைக்கு ஆட்கள் தேவை என்ற விளம்பரப் பலகைகளை சாதாரணமாகக் காணலாம். ஆனால், எங்கு பார்த்தாலும் இளைஞர்கள் "வேலை இல்லை" என்று புலம்பிக் கொண்டு வெட்டியாகத் திரிவதே யதார்த்தமாக உள்ளது. இன்று யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகங்களில் சிங்கள இளைஞர்களும், சூப்பர் மார்க்கெட்கள் மற்றும் புடவைக்கடைகளில் மலையக இளைஞர் யுவதிகளும் மிகவும் சுறுசுறுப்பாக வேலை செய்கிறார்கள். வெளிமாவட்ட இளைஞர்கள் வந்து யாழ்ப்பாணத்தின் பொருளாதாரத்தை நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், உள்ளூர் இளைஞர்களோ, படித்து முடித்துவிட்டு எவ்வித இலக்கும் இன்றித் திரிகிறார்கள். ஆட்டோ ஓட்டலாமே? துணிக்கடையில் வேலை செய்யலாமே?" என்று கேட்டால், "அது எங்கள் தகுதிக்குக் குறைவானது" என்ற பதில் வருகிறது. வெளிநாட்டில் இருக்கும் உறவினர்களின் கௌரவம் பாதிக்கப்படுமாம்! வெளிநாடுகளில் கௌரவம் பார்க்கும் இந்த உறவினர்களில் பலர், அங்குள்ள அரசுகளை ஏமாற்றி, உடல் உழைப்பை வருத்தி, இரவு பகலாகக் கஷ்டப்பட்டுத்தான் பணம் சம்பாதிக்கிறார்கள். சிலர் மதுக்கடைகளிலும், சிகரெட் விற்பனை நிலையங்களிலும் வேலை செய்து, அடுத்தவர் உடல்நலனைச் சீரழிக்கும் தொழில்கள் மூலம் பணம் சம்பாதித்து இங்கே அனுப்புகிறார்கள். அங்கே அவர்கள் கஷ்டப்பட்டுச் சம்பாதிக்கும் பணத்தைப் பெற்றுக்கொண்டு, இங்கே கையில் லேட்டஸ்ட் iPhone, பல இலட்சம் ரூபாய் பெறுமதியான KTM மோட்டார் சைக்கிள் என ஆடம்பரமாகத் திரியும் இளைஞர்கள், உண்மையில் உழைக்கத் தயங்கும் கோழைகளாகவே இருக்கிறார்கள். உழைக்காமல் கைக்கு வரும் பணம், இயல்பாகவே இளைஞர்களை போதை மற்றும் மதுப் பழக்கத்திற்கு அடிமையாக்குகிறது. அதிகப்படியான பணப்புழக்கம், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் பயன்பாட்டை அதிகரித்துள்ளது. வெளிநாட்டிலிருந்து வரும் பணம் இவர்களை அறிவார்ந்தவர்களாக மாற்றாமல், சமூகத்திற்குப் பாரமான 'காவாலிகளாக' மாற்றிக் கொண்டிருக்கிறது. யாழ் இளைஞர்களை வேலைக்கு அமர்த்தினால், அவர்கள் சரியாக வேலை செய்வதில்லை, சம்பளம் அதிகமாகக் கேட்கிறார்கள், சிறு வேலைகளைச் சொன்னால் முறைக்கிறார்கள் போன்ற காரணங்களால், யாழ்ப்பாணத்து முதலாளிகளே இன்று பிற மாவட்ட இளைஞர்களையே விரும்புகின்றனர். வெளிநாட்டு உறவினர்களின் இந்த பண உதவி என்பது நிரந்தரமானது அல்ல. இந்தப் பரம்பரையுடன் இது முடிந்துவிடும். அடுத்த தலைமுறைப் புலம்பெயர் தமிழர்கள் தங்களின் சொந்தப் பிள்ளைகளுக்கே பணம் சேமிப்பார்களே தவிர, இங்கே இருக்கும் தம்பிக்கோ, மச்சானுக்கோ ஒரு சதம் கூடத் தரமாட்டார்கள். அப்பொழுது, இன்று கஷ்டப்பட்டு வேலை செய்யும் வெளிமாவட்ட இளைஞர்கள், யாழ்ப்பாணத்தின் அனைத்து வியாபார நிறுவனங்களின் உரிமையாளர்களாக மாறியிருப்பார்கள். இன்று ‘கௌரவம்’ பார்த்த யாழ் இளைஞர்கள், அன்று பிற இனத்தவர்களிடம் கையேந்தி நிற்கும் அல்லது கூலி வேலை செய்யும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள். இளைஞர்களே, வேலை என்பது இழிவு அல்ல. உழைக்காமல் உண்பதுதான் பேரிழிவு. எந்த வேலையாயினும் அதனை அர்ப்பணிப்புடன் செய்யுங்கள். புலம்பெயர் உறவுகளே! பணத்தை அனுப்பி உங்கள் உறவுகளைச் சோம்பேறிகளாக மாற்றாதீர்கள். அவர்களுக்குத் தூண்டிலைத் தந்து மீன்பிடிக்கக் கற்றுக் கொடுங்கள் , மாறாகத் தினமும் மீனைத் தந்து அவர்களை முடமாக்காதீர்கள். நமது பொருளாதாரம் நமது கைகளை விட்டுப் போய்க்கொண்டிருக்கிறது. விழித்துக் கொள்ளாவிட்டால், வரலாறு நம்மைச் சோம்பேறிகள் என்றுதான் பதிவு செய்யும். https://www.facebook.com/share/1DZd5Dn3j9/?mibextid=wwXIfr

தையிட்டி திஸ்ஸ விகாரை போலியானது - வட இலங்கையின் சங்க நாயக்க தேரர்

1 month 4 weeks ago
தையிட்டியில் மட்டுமல்ல இலங்கையில் தமிழர்களுக்குச் சொந்தமான பகுதிகள் எங்குமே விகாரைகள் வரப்போவது உறுதி. “நந்தவனத்தில் ஓர் ஆண்டி” பாடல் இலங்கைத் தமிழருக்காகவே பாடப்பட்டதுபோல் உள்ளது.

தையிட்டியில் காணிகளை இழந்தவர்களுக்கு மாற்றுக்காணி அல்லது இழப்பீடு - அமைச்சர் சந்திரசேகரன்

1 month 4 weeks ago
இந்த விகாரை மொட்டுக்கட்சியினருக்கு கௌரவப்பிரச்சனை. அவர்களே இதை பின்னின்று நடத்துகிறார்கள். இவர்களது கட்சியை சேர்ந்த 02 இராணுவ முகாமின் புலனாய்வு துறைக்கு பொறுப்பான அதிகாரியே இதன் பின்னால் இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. திஸ்ஸ விகாரை அகற்றப்பட்டால் பொறுமையாய் இருக்க மாட்டோம் என சரத் வீர சேகர எச்சரிக்கிறார், அனுரா புலம்பெயர்ந்தவர்களுடன் உடன்பாடு செய்து இராணுவ முகாம்களை அகற்றுகிறார், திஸ்ஸ விகாரையை அகற்றப்போகிறார், நாட்டில் பௌத்தத்துக்கு சுதந்திரமில்லை, கொழும்பில் சைவ ஆலயங்கள் இருக்கின்றன, வடக்கில் பௌத்தத்திற்கு சுதந்திரமில்லை என இன்னொரு மொட்டுக்கட்சி அமைச்சர் அப்பட்டமான பொய் கூறுகிறார். சஜித்தும், அரசும் சர்ச்சைக்குரிய திஸ்ஸ விகாராதிபதிக்கு உயரிய அதிகாரங்களை வழங்கும் தலைமைச்சங்க நாயகராக தெரிவு செய்கின்றனர். கொழும்பில் சைவர்கள் இருக்கிறார்கள், அவர்கள் தங்கள் வழிபாடுகளை நிகழ்த்துவதற்கு தங்கள் காசில் நிலம் வேண்டி உரிய அனுமதி பெற்று ஆலயங்களை அமைக்கிறார்கள் வழிபடுகிறார்கள். வடக்கில் எழும் விகாரைகள் அப்படியா? தையிட்டியில் நிலைமை அப்படியா? அங்கு பௌத்தர்கள் வாழ்கிறார்களா? எதற்காக மக்கள் காணியில் விகாரை, யாருக்காக? இராணுவ நிலங்கள், திஸ்ஸ விகாரை அமைந்துள்ள நிலங்கள் சரத் வீரசேகரவுடையதா? அல்லது மொட்டுக்கட்சியுடையதா? அதைப்பற்றி கதைக்க இவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? இப்படி புலம்பெயர் தமிழரை சொன்னால் அனுரா கேட்டுக்கொண்டு அடாவடியாக நடக்கமுடியுமா? சட்டம், நீதி சொல்வதை செய்வதற்கு புலம்பெயர் தமிழர் கதை எதற்கு? பயங்கரவாதச் சட்டம் எதற்கு இன்னும் அமுலில் இருக்கிறது? அது தமிழருக்கு, உரிமையை கேட்பவருக்கு எதிராகவா? இப்படி ஒற்றுமையை அழிக்கும் பேச்சுக்களை பேசும் நபர்களுக்கு எதிராக ஏன் பாவிக்கவில்லை? அப்போ திஸ்ஸ விகாரை அகற்றப்படாதென்றால், இன்னும் பல விகாரைகள் வடக்கில் எழும். அனுரவுக்கெதிராக எல்லா அரசியல் கட்சிகளும் செயற்படுவதால், இவர் பயந்து விட்டாரா? அல்லது தமிழருக்கெதிராக இவரும் மற்றைய கட்சிகளோடு இணைந்துவிட்டாரா? ஒரு இனத்தை அடக்கி, அவர்களது நிலங்களை ஆக்கிரமித்துக்கொண்டு எப்படி மூவினங்களும் ஒற்றுமையாக இந்த நாட்டில் வாழ முடியும் என அனுராதான் விளக்க வேண்டும். ஒரு இனத்தின் உரிமைகளை, நிலங்களை பறிப்பது நல்லிணக்கத்திற்கு குந்தகமா? அல்லது அடாத்தாக பறித்ததை திருப்பி கேட்பதால் நல்லிணக்கம் கெடுகிறதா என இவர்களது ஆசிரியர்கள், சட்டம், நீதி இவர்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். இவர்களது மதமோ, இனமோ, சட்டமோ, நீதியோ எதற்குமே எது சரி என தெரியாது.

தையிட்டி திஸ்ஸ விகாரை போலியானது - வட இலங்கையின் சங்க நாயக்க தேரர்

1 month 4 weeks ago
தேரர் சொன்னத கேட்டனியளே? இது மக்கள் காணியில் உள்ளதாம். நாகவிகாரைக்குரிய காணி, உண்மையான திஸ்ஸ விகாரை இருந்த காணி அருகே உள்ளதாம். தையிட்டியில் இன்னொரு விகாரை வருவது உறுதி.

யானைகள் இறப்பு விகிதத்தில் தெற்காசியாவில் இலங்கை முதலிடம்!

1 month 4 weeks ago
யானைகள் இறப்பு விகிதத்தில் தெற்காசியாவில் இலங்கை முதலிடம்! ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான யானைகள் இறக்கும் இலங்கை, தெற்காசியாவிலேயே அதிக யானை இறப்பு விகிதத்தைப் பதிவு செய்துள்ளது. யானை – மனித மோதல், சேதமடைந்த வேலிகள் மற்றும் காலநிலை பேரழிவுகள் தீவு நாட்டின் சின்னமான வனவிலங்குகளை நெருக்கடியை நோக்கித் தள்ளுவதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக வனவிலங்கு பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. இந்தியாவில் 20,000 முதல் 27,000 யானைகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. எனினும் இலங்கையின் யானைகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாக (சுமார் 6,000 முதல் 7,000 வரை) உள்ளது. இருந்த போதிலும், இலங்கையில் ஆண்டுதோறும் உயிரிழக்கும் யானைகளின் விகிதம் இந்தியாவை விட மிக அதிகமாக இருப்பதாக அதிகாரப்பூர்வ தரவுகள் வெளிப்படுத்துகின்றன. இது வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு கொள்கை குறித்து கடுமையான கவலைகளை எழுப்புகிறது. வனவிலங்கு பாதுகாப்புத் துறையின் கூற்றுப்படி, 2025 ஆம் ஆண்டில் டிசம்பர் நடுப்பகுதி வரை 397 யானைகள் இறந்துள்ளன. இது 2024 ஆம் ஆண்டில் 386 முதல் 388 இறப்புகள் பதிவாகியதைத் தொடர்ந்து வந்துள்ளது. 2023 ஆம் ஆண்டில் நிலைமை மோசமான உச்சத்தை எட்டியது, இது 488 யானை இறப்புகளுடன் பதிவான மிக மோசமான ஆண்டாக உள்ளது. பெரும்பாலான யானை இறப்புகள் மனித யானை மோதலால் தொடர்ந்து நிகழ்கின்றன. துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள், சட்டவிரோத மின்சார வேலிகள், ரயில் மோதல்கள் மற்றும் உணவில் மறைத்து வைக்கப்பட்டுள்ள மேம்படுத்தப்பட்ட வெடிபொருட்கள் காரணமாக யானைகள் கொல்லப்பட்டதாக வனவிலங்கு அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். இந்த ஆண்டு மட்டும், 71 யானைகள் சுட்டுக் கொல்லப்பட்டன, 56 யானைகள் மின்சாரம் தாக்கி இறந்தன, 46 யானைகள் ரயில் விபத்துகளில் கொல்லப்பட்டன, 20 யானைகள் வெடி பொருட்களால் உயிரிழந்துள்ளன. இரண்டு யானைகள் விஷம் வைக்கப்பட்டு உயிரிழந்துள்ளன. குறிப்பாக கவலையளிக்கும் ஒரு சம்பவத்தில், மிஹிந்தலையில் உள்ள சீப்புகுளம் பகுதியில் மூன்று நபர்களால் தீ வைக்கப்பட்ட பின்னர் ஒரு யானை கடந்த வாரம் கொல்லப்பட்டது. ஏனைய யானைகளின் மரணங்கள் கைவிடப்பட்ட கிணறுகளில் வீழ்ந்து ஏற்பட்டதாகவும் அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். டித்வா சூறாவளிக்குப் பின்னர் இந்த நிலைமை மோசமடைந்துள்ளதாக சுற்றுச்சூழல் பிரதி அமைச்சர் அன்டன் ஜெயக்கொடி தெரிவித்தார். ஊடகங்களுக்குப் பேசிய அவர், மின்சார வேலிகள் சேதமடைந்ததால் யானைகள் கிராமங்களுக்குள் நுழைந்துவிட்டதாகக் கூறினார். மின்சார வேலி அமைப்பு முழுமையாக செயல்படவில்லை, மேலும் சில வனவிலங்கு பகுதிகள் இன்னும் தண்ணீரில் மூழ்கியுள்ளன என்றும் அவர் கூறினார். வனவிலங்கு அமைச்சினால் பராமரிக்கப்படும் சுமார் 5,700 கிலோமீட்டர் மின்சார வேலிகளில், 838 கிலோ மீட்டர் வேலிகள் சூறாவளியால் சேதமடைந்தன, அவற்றில் பாதி இப்போது சரிசெய்யப்பட்டுள்ளன. வெள்ளம் காரணமாக நான்கு யானைக் குட்டிகள் இறந்ததாகவும், ஆறு மீட்கப்பட்டதாகவும் யானைப் பாதுகாப்பு பிரதிப் பணிப்பாளர் யு.எல். தௌபிக் தெரிவித்தார். மனித யானை மோதலைக் குறைப்பதற்கும் இலங்கையில் மீதமுள்ள காட்டு யானைகளைப் பாதுகாப்பதற்கும் வலுவான நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய அவசரத் தேவையை இந்த அறிக்கையின் மூலமாக வனவிலங்கு பாதுகாப்புத் துறை வலியுறுத்தியுள்ளது. https://athavannews.com/2025/1457285

தையிட்டி திஸ்ஸ விகாரை போலியானது - வட இலங்கையின் சங்க நாயக்க தேரர்

1 month 4 weeks ago
ஐம்பத்து மூன்று வருடமாக யாழ்ப்பாணத்தில் இருக்கும் இவருக்கு கிடைக்காத பதவி பத்து வருடமாக இருந்த திஸ்ஸ விகாராதிபதிக்கு கிடைத்த பொறாமையாக இருக்கலாம். இந்த விகாரை நிர்மாணித்தது வடக்கின் சங்க நாயக்க தேரருக்கு தெரியும். பொதுமக்களின் காணிகளில் அமைக்கப்படுகிறது என்பதும் தெரியும், அனுமதி பெறாமல் அமைக்கிறார்கள் என்பதும் தெரியும், மதக்குரோதத்தை வளர்பதற்காகவே இது நடைபெறுகிறது என்பதும் நன்றாகவே தெரிந்திருக்கிறது இவருக்கு. ஏனென்றால் ஐம்பத்து மூன்று வருடம் இந்த மண்ணில் இவர் இருக்கிறார், விகாரைக்குரிய காணி தன் பெயரில் இருந்ததாகவும் இவரே முன்பு கூறியிருக்கிறார், அந்த தேரர் தனது பிழைப்புக்காக இந்த விகாரையை நிர்மாணித்ததாகவும் கூறியிருக்கிறார், அப்போதெல்லாம் மௌனமாக இருந்தவர், அதை பற்றிப்பேசாதவர், தடுக்கத்தவறியவர் இப்போ எதற்காக பேசுகிறார்? அப்போ பேசியிருந்தால் எவ்வளவோ நன்மையாக இருந்திருக்கும். இப்போ தன்னுடன் வேண்டுமாம். பேசினால் விகாரை அகற்றப்படுமா?

மக்களையும் கிராம சேவகர்களையும் மோதவிடாதீர்கள் - பொதுமக்கள் ஆதங்கம்

1 month 4 weeks ago
மக்களையும் கிராம சேவகர்களையும் மோதவிடாதீர்கள் - பொதுமக்கள் ஆதங்கம் 26 Dec, 2025 | 03:33 PM வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கென வழங்கப்படும் 15 ஆயிரம் ரூபா நிதியால் கிராம சேவகர்களையும் மக்களையும் மோதவிடாதீர்கள் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து மக்கள் தரப்பில் கூறப்படுவதாவது, அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு என அரசாங்கத்தால் 25ஆயிரம் ரூபா கொடுப்பனவுக்காக பதிவுகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த பதிவுகள் தற்போது நிறைவடைந்த நிலையில் இரண்டாவது கட்டமாக அதே குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு 15 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்குவதற்காக பதிவுகள் மேற்கொள்ளப்படுகின்றன. 25 ஆயிரம் ரூபா கொடுப்பனவானது சிறிய வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட, சிறிய அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட வசதி படைத்த அனைவருக்கும் வழங்கப்பட்ட கொடுப்பனவு. அதே குடும்பத்திற்கு மீண்டும் 15ஆயிரம் ரூபா கொடுப்பதற்கு பதிவுகள் மேற்கொள்ளப்படுகின்றன. வெள்ளத்தால் பாதிக்கப்படாத, மிகவும் வறுமைக்கோட்டுக்குட்பட்ட குடும்பங்கள் உள்ளன. அந்த குடும்பங்களில் 3, 4 பிள்ளைகள் கூட கல்வி கற்கின்ற நிலை காணப்படுகிறது. அவர்கள் அந்த கொடுப்பனவுக்கு உள்வாங்கப்படாமல் போகின்ற சூழ்நிலை அங்கே காணப்படுகிறது. வசதி படைத்தவர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் என்ன வகையில் 25 ஆயிரம் ரூபா கொடுப்பனவும் வழங்கப்படுகிறது, அதேவேளை அந்த குடும்பத்தில் உள்ள மாணவர்களுக்கு 15 ஆயிரம் ரூபா கொடுப்பனவும் வழங்கப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் தமக்கான நிவாரணம் கிடைக்காத நிலையில் கிராம சேவகர்கள் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்களுடன் முரண்படுகின்றனர். இந்த அனர்த்தத்தில் உத்தியோகத்தர்கள் மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் பணி புரிந்தார்கள். இந்நிலையில் இது அவர்களை மேலும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கும். இந்த கொடுப்பனவு கிடைக்காத பல வறிய மாணவர்கள் மன வேதனைக்குள்ளும் தள்ளப்படக்கூடய சூழ்நிலை காணப்படுகிறது. எனவே இந்த கொடுப்பனவானது அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும். அவ்வாறு அனைவருக்கும் வழங்கும்போது மாணவர்களுக்துள்ளும் மனஸ்தாபங்கள் ஏற்படாது. இது குறித்து அரசாங்கமமும், அரச அதிகாரிகளும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசாங்க அதிபர் இதனை ஆளுநர் மட்டத்திற்கு கொண்டு சென்ற அனைத்து மாணவர்களுக்கும் கொடுப்பனவு கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்றனர். https://www.virakesari.lk/article/234468

🕯️ சுனாமி நினைவு நாள்: நாளை 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு வேண்டுகோள்! 🌊🇱🇰

1 month 4 weeks ago
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட சுனாமி ஆழிப்பேரலை நினைவேந்தல் ! Published By: Digital Desk 3 26 Dec, 2025 | 03:13 PM சுனாமி ஆழிப்பேரலை அனர்த்தத்தின் 21 ஆவது ஆண்டு நினைவை முன்னிட்டு இன்றையதினம் நாடளாவிய ரீதியில் பல்வேறு இடங்களிலும் நினைவேந்தல்கள் இடம்பெற்றன. சுனாமி பேரழிவு மற்றும் பிற பேரிடர்களில் இறந்தவர்களை நினைவுகூரும் வகையில், காலை 9.25 மணி முதல் காலை 9.27 மணி வரை இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. காலியில் உள்ள 'பேரலிய சுனாமி நினைவிடத்தில்' இன்று வெள்ளிக்கிழமை (26) காலை 8.30 மணி முதல் காலை 11 மணி வரை விசேட நிகழ்வுகள் இடம்பெற்றன. 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரழிவில், நாட்டில் 35,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 5000 க்கும் மேற்பட்டோர் காணாமல் போனார்கள். பல பில்லியன் கணக்கான மதிப்புள்ள சொத்துக்களும் அழிவடைந்தன. 2005 முதல், டிசம்பர் 26 ஒவ்வொரு ஆண்டும் 'தேசிய பாதுகாப்பு தினம்' என்று அறிவிக்கப்பட்டு, அன்றிலிருந்து நாட்டில் சுனாமி பேரழிவிலும் பல்வேறு பேரழிவுகளிலும் இறந்த அனைவரையும் நினைவுகூரும் வகையில், தேசிய பாதுகாப்பு தின நினைவு நாள் பொதுமக்களின் பங்களிப்புடன் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. இந்த ஆண்டு, 'தேசிய பாதுகாப்பு' தின நிகழ்ச்சிக்காக, டித்வா சூறாவளி காரணமாக நாட்டில் நிலவும் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, மாவட்ட அளவில் அனைத்து மத நிகழ்ச்சிகளையும் நடத்த திட்டமிடப்பட்டது. இன்று டிசம்பர் 26 'தேசிய பாதுகாப்பு தினத்தின்' முக்கிய நினைவு நாள் காலியில் உள்ள 'பேரலிய சுனாமி நினைவிடத்தில்' நடைபெற்றதுடன் நாடளாவிய ரீதியில் பல்வேறு பகுதிகளிலும் நினைவேந்தல்கள் முன்னெடுக்கப்பட்டன. திருகோணமலை - மூதூர் ஆழிப்பேரலையின் தாக்கத்தால் திருகோணமலை, மூதூர் பிரதேசம் பாரிய சேதங்களை எதிர்கொண்டது. இது வரை கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில், மூதூரில் மட்டும் 286 பேர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும், நூற்றுக்கணக்கான குடும்பங்கள் தங்கள் வீடுகள், சொத்துக்கள் மற்றும் வாழ்வாதாரங்களை இழந்து, நீண்டகால வேதனைகளுக்கு உள்ளாகினர். இந்தப் பேரலையில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையிலும், அவர்களின் ஆன்மா சாந்திக்காக துஆ பிரார்த்தனை நிகழ்வு மூதூர் தக்வா நகர் ஏ.சி.பள்ளிவாசலில் காலை 8.30 மணியளவில் ஆரம்பமானது. இந்நிகழ்வு ஈராக் விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பொதுமக்கள், சுனாமியால் பாதிக்கப்பட்டவர்கள், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் உட்பட பலரும் பிரார்த்தனையில் கலந்த நினைவேந்தலில் பங்குபற்றினர். யாழ். உடுத்துறை 21 ஆவது ஆண்டு சுனாமி நினைவேந்தல் நினைவேந்தல் உடுத்துறை சுனாமி நினைவாலயத்தில் நடைபெற்றது. சுனாமி நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் இந்த நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது நினைவுத் தூபிக்கு மலர் மாலை அணிவித்து, மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக தலமை கிராம சேவையாளர் தோமஸ் யூட் மலர் மாலை அணிவித்து அஞ்சலி நிகழ்வை ஆரம்பித்து வைக்க, அதனை தொடர்ந்து வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க தலைவர் தங்கவேல் தங்கரூபன் உட்பட அரசியல் பிரமுகர்கள், பொது அமைப்பின் பிரதிநிதிகள், ஆகியோர் மலர்மாலை அணிவித்து, அஞ்சலி செலுத்தினர். பின்னர் தேசிய கொடியினை மருதங்கேணி பொலிஸ் நிலைய பொறுப்பு அதிகாரி ஏற்றியதை தொடர்ந்து, பொது ஈகைச் சுடரினை வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக தலைமை கிராமசேவகர் தோமஸ் யூட் ஏற்றிவைக்க சம நேரத்தில் சுனாமியால் காவு கொள்ளப்பட்டவர்களுக்கு ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து அஞ்சலி உரைகளை வடமராட்சி கிழக்கு தலைமை கிராம சேவகர் செபமாலை தோமஸ்யூட், பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் உதயகுமார் யுகதீஸ் ஆகியோர் நிகழ்த்தினர். இன்றைய நினைவேந்தலில் சுனாமியால் காவுகொள்ளப்பட்டவர்களது உறவுகள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசியல் பிரமுகர்கள், என பல நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர். திருகோணமலை - பட்டிணமும் சூழலும் பிரதேச செயகம் சுனாமி ஆழிப்பேரலை அனர்த்தத்தின் உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்தி வேண்டி இன்று (26) திருகோணமலை - பட்டிணமும் சூழலும் பிரதேச செயகத்தில் ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நடைபெற்றது. இதில் பிரதேச செயலாளர், கரையோர பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்திக்காக பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தார்கள். தம்பலகாமம் தம்பலகாமம் பிரதேச செயலாளர் திருமதி .ஜெயகௌரி ஸ்ரீபதி தலைமையில் பிரதேச செயலக வளாகத்தில் ஆழிப்பேரலையின் போது உயிர் நீத்த உறவுகளுக்காக இரு நிமிட மௌன அஞ்சலியுடன் இறை வணக்கமும் நடை பெற்றது. இதன் போது சுனாமி தொடர்பிலான நினைவு பேருரையும் இடம் பெற்றதுடன் திட்வா புயல் அனர்த்தம் தொடர்பிலான நினைவுகளும் பேருரைகளான பிரதேச செயலாளர் உரையாற்றினார். இதில் உதவிப் பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன் உட்பட பதவி நிலை உத்தியோகத்தர்கள்,சக உத்தியோகத்தர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர். வவுனியா வவுனியா, பூந்தோட்டத்தில் அமைந்துள்ள இலங்கையின் முதலாவது சுனாமி நினைவாலயத்தில் பூந்தோட்டம் நரசிங்கர் ஆலயத்தின் ஏற்பாட்டில் நினைவு கூறப்பட்டதோடு தித்வா புயலில் பாதிக்கப்பட்டவர்களும் இதன்போது நினைவு கூறப்பட்டிருந்தது. வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்கவினால் சுனாமி பேரவலத்தில் உயிர் நீத்தவர்களுக்கான அஞ்சலி சுடர் ஏற்றப்பட்டதோடு டித்வா புயலினால் உயிரிழந்தவர்களுக்கான அஞ்சலி சுடரினை வன்னி பாராளுமன்ற உறுப்பினர் ப. சத்தியலிங்கம் ஏற்றி வைத்திருந்தார். இதனை அடுத்து இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதோடு நினைவுத்தூபிக்கு மலர் மாலை மற்றும் மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டிருந்தது. இதேவேளை அங்கு கலந்து கொண்டிருந்தவர்களால் அஞ்சலி தீபம் ஏற்றப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. மட்டு.ஓந்தாச்சிமடம் மட்டக்களப்பு, ஓந்தாச்சிமடம் கிராமத்தில் அமைந்துள்ள சுனாமி நினைவுத் தூபியில் உயிரிழந்தவர்களுக்கு சுடர் ஏற்றி, மலர்தூபி உறவினர்கள் அஞ்சலி தெலுத்தினர். இதன்போது மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் உருத்திரன் உதயஸ்ரீதர், பிரதேச சபைத் தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ், விளையாட்டுக்கழக உறுப்பினர்கள், ஏனைய கிராம மட்ட பொது அமைப்புக்கள், உள்ளிட்ட பலர் இதன்போது கலந்து கொண்டிருந்தனர். முல்லைத்தீவு முல்லைத்தீவு சுனாமி நினைவாலயத்தில் நினைவேந்தல் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது. அந்தவகையில் உயிரிழந்தவர்களின் உறவுகள் கதறி அழுது கண்ணீர் மல்க, தமது உயிரிழந்த உறவுகளுக்கு மலர் தூவி, தீபமேற்றி, உணவுப்பொருட்களைப் படையலிட்டு உணர்வுபூர்வமாக அஞ்சலிகளை மேற்கொண்டனர். மேலும் இந்த அஞ்சலி நிகழ்வுகளில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. மட்டக்களப்பு, மண்முனை தென் எருவில் பற்று தேசிய பாதுகாப்பு தினமும், சுனாமி ஆழிப் பேரலையின்21 வது அண்டு நினைவு தினமும் மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையில் தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் தலைமையில் நடைபெற்றது. இதன்போது 2004 ஆம் ஆண்டு ஆழிப்பேரலையில் உயிர் நீத்த உறவுகளுக்காக சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செய்து அகவணக்கம் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் பிரதேச சபை உத்தியோகத்தர்கள், ஏனைய ஊழியர்கள் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தனர். எதிர்வரும் ஜனவரி மாதத்திலிருந்து மண்முனை தென் எருவில் பற்று பிரதேச கடற்கரை அண்மித்த கரையோரப் பிரதேசத்தில் ஒரு லெட்சம் மரக் கன்றுகளை நடுவதற்கு திட்டமிட்டுள்ளதாக பிரதேச சபைத் தவிசாளர் இதன்போது தெரிவித்தார். ஹட்டன் அட்டன் டிக்கோயா நகர சபையின் செயலாளர், ஊழியர்கள், வர்த்தகர்கள் மற்றும் அட்டன் நகர சபை பிரிவு குடியிருப்பாளர்கள் இணைந்து சுனாமியில் உயிரிழந்தவர்களுக்காக இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தினர். மேலும் ஆத்ம சாந்திப் பிரார்த்தனைகளுடன் உயிரிழந்தவர்களுக்கு தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. இம்முறை தேசிய பாதுகாப்பு தினத்தில் சுனாமி பேரழிவினால் மட்டுமன்றி ஏனைய அனர்த்தங்களினாலும் உயிரிழந்தவர்களும் நினைவுகூரப்பட்டனர். புதுக்குடியிருப்பு புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் புதுக்குடியிருப்பு பிரதேச சபையுடன் இணைந்து சுனாமியால் உயிர்நீத்த ஆயிரக்கணக்கானவர்களின் உடல்கள் புதைக்கப்பட்டுள்ள புதுக்குடியிருப்பு ஐயனார் கோவிலடி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சுனாமி நினைவாலயத்தில் உயிரிழந்தவர்களிற்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், சுனாமியால் பறிபோன மூன்று பிள்ளைகளின் தாயாரான மைக்கல் றெசிலின் ராணி அவர்களால் பொது சுடர் ஏற்றப்பட்டதனை தொடர்ந்து ஏனையவர்கள் சுடர் ஏற்றினர். நினைவு தூபிக்கு மலர்மாலை அணிவித்து, மலரஞ்சலி செலுத்தப்பட்டது. புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்தின் தலைவர் த.நவநீதன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் மதகுருமார்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சி.சிவமோகன், வினோநோதாரலிங்கம், புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினர்களான சி.குகனேசன், சி.வேதவனம், வர்த்தக சங்கத்தினர், பொது அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் , பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். முல்லைத்தீவு - கள்ளப்பாடு ஆழிப்பேரலை அனர்த்தத்தினால் உயிரிழந்தவர்களின் 21ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு முல்லைத்தீவு, கள்ளப்பாடு உதயம் விளையாட்டுக்கழக மைதானத்தில் பிரத்தியேகமாக ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டது. அந்தவகையில் ஈகைச்சுடர் மற்றும் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பமாகின. தொடர்ந்து ஆழிப்பேரலையின்போது உயிரிழந்த உறவுகளின் திருஉருவப்படத்திற்கு மலர்தூவப்பட்டு, சுடரேற்றப்பட்டதுடன், ஆழிப்பேரலையினால் காவுகொள்ளப்பட்டவர்களின் உறவினர்கள் கதறி அழுது, கண்ணீர் சொரிந்து தமது அஞ்சலிகளை உணர்வெழுச்சியுடன் மேற்கொண்டனர். மேலும் இந்த நினைவேந்தல் நிகழ்வில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், கரைதுறைப்பற்று பிரதேசசபை செயலாளர் திருமதி.இராஜஜோகினி ஜெயக்குமார், ஒட்டுசுட்டான் பிரதேச காணி உத்தியோகத்தர் சோதிநாதன் சேந்தன், கிராம உத்தியோகத்தர்கள், கள்ளப்பாடு கிராம அமைப்புக்களின் பிரதிநிதிகள், மீனவஅமைப்புக்களின் பிரதிநிதிகள், கள்ளப்பாடு கிராமமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. திருகோணமலை மாவட்ட செயலகம் சுனாமிப் பேரழிவின் 21 ஆண்டுகள் பூர்த்தியாவதை முன்னிட்டு நினைவேந்தல் நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார அவர்களின் தலைமையில் திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இதன்போது, காலை 9.25 மணி முதல் 9.27 மணி வரை நாடு முழுவதும் இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி அனுஷ்டிக்கப்பட்டு, சுனாமி மற்றும் பிற இயற்கை பேரழிவுகளால் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. மேலும், டிசம்பர் 26 ஆம் திகதி இலங்கையில் தேசிய பாதுகாப்பு தினமாக கடைப்பிடிக்கப்படுவதாகவும், சுனாமி உள்ளிட்ட இயற்கை பேரழிவுகளில் உயிரிழந்தவர்களை நினைவுகூறும் நோக்கிலும், பேரழிவு தயார்நிலை மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் நோக்கிலும் இந்நாள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் என மாவட்ட அரசாங்க அதிபர் இதன்போது தெரிவித்தார். இதன்போது மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். சுதாகரன், மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர். யாழ்.வடமராட்சி கிழக்கு - உடுத்துறை சுனாமி ஆழிப் பேரலையின் 21ம் ஆண்டு நினைவு நாள் யாழ்.வடமராட்சி கிழக்கு - உடுத்துறை சுனாமி நினைவாலயத்தில் நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக நடைபெற்றது. சுனாமியால் உயிரிழந்தவர்களுக்காக அமைக்கப்பட்ட தூபிக்கு மாலை அணிவிக்கப்பட்டு 9.25 மணிக்கு பொதுச்சுடர் ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களின் படங்களுக்கு மாலையிட்டு தீபங்கள் ஏற்றி உணவுகளை படையலிட்டு உறவுகள் அஞ்சலித்தனர். https://www.virakesari.lk/article/234452

அமெரிக்காவில் கிறிஸ்மஸ் புயல் ; வெள்ளம்! ; 3 பேர் உயிரிழப்பு ; கலிபோர்னியா, லொஸ் ஏஞ்சல்ஸில் அவசர நிலை பிரகடனம்

1 month 4 weeks ago
அமெரிக்காவில் கிறிஸ்மஸ் புயல் ; வெள்ளம்! ; 3 பேர் உயிரிழப்பு ; கலிபோர்னியா, லொஸ் ஏஞ்சல்ஸில் அவசர நிலை பிரகடனம் 26 Dec, 2025 | 01:19 PM அமெரிக்காவின் கலிபோர்னியா மற்றும் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரப் பகுதிகளில் நேற்று (25) வீசிய “கிறிஸ்மஸ் புயல்” மற்றும் வெள்ள அனர்த்தத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதனால் கலிபோர்னியா, லொஸ் ஏஞ்சல்ஸ் போன்ற நகரங்களில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. கிறிஸ்மஸ் தினத்தன்று எழுந்ததால் “கிறிஸ்மஸ் புயல்” எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் மணிக்கு 88 கிலோ மீட்டர் வேகத்தில் வீசுவதாக கூறப்படுகிறது. அமெரிக்காவில் டிசம்பர் 25ஆம் திகதி முதல் 3 நாட்களுக்கு கனமழை மற்றும் கடும் காற்று, பனிப்பொழிவுக்கு சாத்தியமிருப்பதாக அந்நாட்டின் தேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. குறிப்பாக, தெற்கு கலிபோர்னியா மற்றும் லொஸ் ஏஞ்சல்ஸில் கனமழையும் மேற்கு மற்றும் வடக்கு கலிபோர்னியாவில் கடும் பனிப்பொழிவு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தெற்கு கலிபோர்னியாவில் பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதோடு, கிறிஸ்மஸ் புயல் கடுமையாக வீசி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/234467

அன்புமணிக்கு ராமதாஸ் ’இறுதி’ எச்சரிக்கை! பத்திரிகைகளில் ’பொது விளம்பரம்’ வெளியீடு!

1 month 4 weeks ago
அன்புமணிக்கு ராமதாஸ் ’இறுதி’ எச்சரிக்கை! பத்திரிகைகளில் ’பொது விளம்பரம்’ வெளியீடு! 26 Dec 2025, 8:11 AM பாட்டாளி மக்கள் கட்சி (பாமக PMK) பெயரை பயன்படுத்தக் கூடாது என அன்புமணிக்கு அவரது தந்தையும் பாமக நிறுவனருமான டாக்டர் ராமதாஸ், நாளிதழ்களில் ‘பொது விளம்பரம்’ மூலம் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி இடையேயான மோதலில் கட்சிக்கு இருவரும் உரிமை கொண்டாடி வருகின்றனர். அண்மையில் டெல்லி உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை இருதரப்பும் தங்களுக்கு சாதகமாக முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில் நாளிதழ்களில் இன்று, டாக்டர் ராமதாஸ் ‘பொது விளம்பரம்’ மூலம் அன்புமணிக்கு இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார். அந்த விளம்பரத்தில் கூறப்பட்டுள்ளதாவது; “இதன் மூலம் பொதுமக்கள் அனைவருக்கும் கடைசியாகத் தெரிவிக்கப்படுவது என்னவென்றால், பாட்டாளி மக்கள் கட்சி தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் W.P.(C) No.18311/2025 வழக்கில், 04.12.2025 அன்று வழங்கப்பட்ட தீர்ப்பின் மூலம், மருத்துவர் அன்புமணிக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் என்ற உரிமையோ, கட்சியின் பெயர், கொடி, சின்னம் பயன்படுத்தும் உரிமையோ எதுவும் இல்லை என்பது சட்டப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன், தேர்தல் ஆணையம் 09.09.2025 மற்றும் 27.11.2025 அன்று பிறப்பித்த உத்தரவுகள் அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டவை என்றும், சட்ட அதிகாரமற்றவை என்றும் உயர்நீதிமன்றம் தெளிவாக அறிவித்துள்ளது. எனவே, எந்த அரசியல் கட்சியும், தனிநபரும், அமைப்பும், மருத்துவர் அன்புமணி மற்றும் வேறு எவருடனும் பாட்டாளி மக்கள் கட்சி என்ற பெயரில் அரசியல், தேர்தல் அல்லது நிர்வாக நடவடிக்கைகள் மேற்கொண்டால், அது சட்டப்படி குற்றமாகும். மேற்கண்ட உயர்நீதிமன்றத் தீர்ப்பை மீறி தொடர்ந்து செயல்படுவோர் மீது, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உட்பட சட்டப்படி கடுமையான நடவடிக்கை தவறாமல் மேற்கொள்ளப்படும் என்பதும் இதன் மூலம் கடைசியாக எச்சரிக்கப்படுகிறது. மக்களே… ஒரு உண்மையைத் தெரிந்து கொள்ளுங்கள் நீதியின் முழக்கம் – உண்மை மறைக்க முடியாது இதன் மூலம் பொதுமக்கள் அனைவருக்கும் உறுதியாகத் தெரிவிக்கப்படுவது என்னவென்றால், பாட்டாளி மக்கள் கட்சி தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் W.P.(C) No.18311/2025 என்ற வழக்கில், 04.12.2025 அன்று வழங்கப்பட்ட தீர்ப்பு, உண்மையை சட்டத்தின் முன் நிறுத்திய வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு ஆகும். போலிக்கு சட்டத்தில் இடமில்லை: போலி ஆவணங்களின் அடிப்படையில் கட்சித் தலைமை உரிமை கோரப்பட்ட முயற்சியும், அதனை அங்கீகரிக்க தேர்தல் ஆணையம் 09.09.2025 மற்றும் 27.11.2025 அன்று பிறப்பித்த உத்தரவுகளும், அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டவை என்றும், சட்ட அதிகாரமற்றவை என்றும் நீதிமன்றம் தெளிவாகத் தகர்த்தெறிந்துள்ளது. உண்மை இன்று சட்டமாகியது: இந்தத் தீர்ப்பின் மூலம், மருத்துவர் அன்புமணிக்கு, பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் என்ற உரிமையோ, கட்சியின் பெயர், கொடி, சின்னம் பயன்படுத்தும் உரிமையோ எதுவும் இல்லை என்பது சட்டப்பூர்வமாகவும், நிரந்தரமாகவும் உறுதி செய்யப்பட்டுள்ளது. மக்களை ஏமாற்றும் அரசியல் – இனி இல்லை: நீதிமன்றத் தீர்ப்பிற்குப் பிறகும், கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஒருவர், பாட்டாளி மக்கள் கட்சியின் பெயரைப் பயன்படுத்தி கட்சி தன் கட்டுப்பாட்டில் இருப்பதுபோல் காட்டுவது, மக்களை ஏமாற்றும் சட்டவிரோத அரசியல் செயலாகும். இதனை மக்கள் அறிந்தே ஆக வேண்டும் என்பதற்காகவே, இந்த அறிவிப்பு மாவட்டம் தோறும் வெளியிடப்படுகிறது. இது ஒரு கட்சி அல்ல – இது ஒரு தியாக இயக்கம்: 1980 ஆம் ஆண்டு இயக்கம் தொடங்கி, மின்சாரம் இல்லாத காலம், சாலை இல்லாத கிராமங்கள், மேடு-பள்ளங்கள், வயல் வரப்புகள் வழியாக நடந்து, ராந்தல் விளக்கின் ஒளியில் மக்களின் துயரை கேட்டவன், 96,000-க்கும் மேற்பட்ட ஊர்களை காலால் அளந்தவன், தன்னலமின்றி உழைத்து ஒரு மக்கள் எழுச்சியை அரசியல் இயக்கமாக மாற்றியவன் – நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அய்யா அவர்கள். தியாகத்தின் சொத்து – விற்பனைக்கு அல்ல: அந்தத் தியாகத்தின் பயனாக உருவான பாட்டாளி மக்கள் கட்சி, இன்றும் என்றும் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அய்யா அவர்களிடமே உள்ளது. இந்த இயக்கம் பதவி பேராசைக்கோ, போலி ஆவணங்களுக்கோ ஒருபோதும் அடிமையல்ல. முடிவு எடுக்கும் அதிகாரம் யாரிடம்?: எனவே, பாட்டாளி மக்கள் கட்சியின் பெயரில் எடுக்கப்படும் எந்தவொரு தேர்தல் கூட்டணியும், அரசியல் முடிவும், நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அய்யா அவர்களிடமிருந்தே வர வேண்டும் என்பதே நீதிக்கும் நியாயத்திற்கும் ஒத்த உண்மை. இது எச்சரிக்கை – அலட்சியம் அல்ல: மருத்துவர் அன்புமணிக்கு, பாட்டாளி மக்கள் கட்சியின் பெயரில் எந்தவித அரசியல், தேர்தல் அல்லது நிர்வாக நடவடிக்கைகளையும் எடுக்க ஒரு துளி உரிமையும் இல்லை. அரசியல் கட்சிகள், தனிநபர்கள், அல்லது வேறு எந்த அமைப்பும், மருத்துவர் அன்புமணி மற்றும் வேறு எவருடனும் பாட்டாளி மக்கள் கட்சி என்ற பெயரில் தேர்தல் தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொண்டால், அது சட்டப்படி குற்றமாகும். நீதியை மீறினால் – விளைவுகள் கடுமையானவை: மேற்கண்ட உயர்நீதிமன்றத் தீர்ப்பை மீறி தொடர்ந்து செயல்படுவோர் மீது, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தவறாமல் தொடரப்படும் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://minnambalam.com/pmk-ramadoss-issues-final-warning-to-anbumani/

யுத்தத்தினால் பெண்கள் தாம் விரும்பாத பாத்திரங்களையும் ஏற்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.- ஜி.எல்.பீரீஸ்

1 month 4 weeks ago
யுத்தத்தினால் பெண்கள் தாம் விரும்பாத பாத்திரங்களையும் ஏற்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.- ஜி.எல்.பீரீஸ் வெள்ளி, 26 டிசம்பர் 2025 07:41 AM இலங்கை விவகாரத்தில் இந்தியா, நோர்வே உள்ளிட்ட நாடுகளின் செயற்பாடுகள் தொடர்பாக விமர்சனங்கள் அதிருப்திகள் காணப்பட்டாலும் அந்த விமர்சனங்களை செய்தவர்கள் கூட வௌிநாடுகளின் வகிபாகத்தை முழுமையாக நிராகரிக்கவில்லை என முன்னாள் அமைச்சரும் தகைசார் பேராசிரியரருமான ஜி.எல்.பீரீஸ் தெரிவித்துள்ளார். இலங்கை அரசியலின் சமாதானப் பேச்சுவார்த்தை காலகட்டத்தின் நிகழ்வுகளை ஆராய்ந்து ஜி.எல்.பீரீஸ் அண்மையில் எழுதி வெளியிட்ட "இலங்கை அமைதி செயல்முறை ஒரு உள்பார்வை" எனும் நூலிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த நூலில், யுத்தம் பெருமளவில் பாதித்த தரப்பினராக பெண்களே உள்ளனர். மிகுந்த வேதனைக்கும் மன அழுத்தத்திற்கும் மத்தியில் அவர்களின் வாழ்க்கை வெகுவாக மாற்றமடைந்தது. ஆண்கள் மத்தியில் மரணங்கள் மற்றும் காணாமலாக்கப்படுதல்கள் அதிகரித்தமையானது, விதவைகள் தலைமையிலான குடும்பங்களின் எண்ணிக்கையை அதிகரித்து அடிப்படை வாழ்வில் மாற்றங்களை வலிந்து திணித்தது. பொருளாதார சுமை அதிகரித்து அடக்குமுறையானது. குடும்பங்களை வழிநடத்தும் கட்டாயத்துடன் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் அங்கு அதிகரித்தன. பொருளாதார நெருக்கடி மட்டுமே தனித்த அல்லது ஆதிக்கம் செலுத்தும் காரணியாக அங்கு இருக்கவில்லை. முடிவற்ற பரவலான மற்றும் வாழ்க்கையை மாற்றும் தாக்கம் மற்றும் அழுத்தங்கள் ஊடுருவி, ஸ்தாபிக்கப்பட்டிருந்த சமூக நடத்தை முறைமைகளை அச்சுறுத்தும் காரணிகளாக அமைந்தன. தேவைகளே கண்டுபிடிப்புகளுக்கான தாயாகின்றன. தைரியம் மற்றும் மீண்டெழும் தன்மைக்குத் தங்களைத் தாங்களே தகுதியானவர்களாக வௌிப்படுத்திக் கொண்ட பெண்கள், துரதிஷ்டத்திலிருந்து வாய்ப்பினை அரிதாகவே பயன்படுத்திக் கொண்டனர். வடக்கு, கிழக்கு மாகாணங்களில், பாரம்பரிய உறவுகளின் ஆதரவின்றி பெண்கள் புதிய வாழ்க்கை முறையில் கடினமான சவால்களை எதிர்கொண்டனர். பொருளாதார வாழ்வாதாரத்திற்கும், கலாசார மற்றும் பண்பாடுகள் தொடர்பான ஆதரவிற்கும் புதிய வழிகளைத் தேட வேண்டிய நிலை அவர்களுக்கு ஏற்பட்டது. இவை, பாரம்பரியத்தின் அடிப்படையில் உருவான சமூகக் கட்டமைப்பின் சுமையை குறைப்பதற்குப் பதிலாக, மேலும் அதிகரிக்கவே வழிவகுத்தன. வாழ்வாதாரப் போராட்டத்தில், பெண்கள் தாம் விரும்பாத பாத்திரங்களையும் ஏற்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. இதனால் பாரம்பரிய மனப்பான்மையுள்ளவர்களுக்கும் இவர்களுக்கும் இடையிலான புரிதல் குறைந்ததால் புதிய சிந்தனையுடன் சமூகத்தை மறுசீரமைக்க வேண்டியேற்பட்டது. மறுகட்டமைப்பு மற்றும் அணுகுமுறைகளை மறுசீரமைக்கும் முழுமையான செயன்முறைக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. இந்தியா ஒரு முக்கியமான காரணியாக இருந்தது. கடந்த நூற்றாண்டின் இறுதி இரண்டு தசாப்தங்களிலும் இலங்கை விவகாரங்களில் இந்தியாவின் கரிசனை அதிகரித்திருந்தது. 1987 ஆம் ஆண்டின் இந்தியா - இலங்கை உடன்படிக்கையில் இது தௌிவாக வெளிப்பட்டது.இது அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்துக்கு வழிகோலியது. உள்நாட்டின் சூழ்நிலைகள், இந்தியாவை சமாதானச் செயன்முறையில் முக்கிய வகிபாகத்தை முன்நகர்த்துவதில் தடுத்த போதிலும் இந்தியா அந்த விடயத்தில் நீடித்த கரிசனையை எப்போதும் காண்பித்தது. இந்திய அமைதிப்படை மற்றும் பிற நடவடிக்கைகள் குறித்த பரவலான அதிருப்தி காணப்பட்ட போதிலும், இலங்கையில் பெரும்பான்மையினரிடமும் , இந்தியாவின் உறுதியான பங்குபற்றலை வரவேற்க வேண்டும் என்ற கருத்து குறிப்பிடத்தக்களவில் இருந்தது. நோர்வே, மத்தியஸ்தம் வகித்து மேற்கொண்ட சில நடவடிக்கைகளை விமர்சித்தவர்களும், வௌிநாடுகளின் வகிபாகத்தை முழுமையாக நிராகரிக்கவில்லை. இலங்கையின் சூழலில் வெற்றிகரமான சமாதானப் பேச்சுவார்த்தைக்கு இதன் சில கூறுகள் அவசியம் என்பதை உண்மையில் உணர்ந்தமை மிகுந்த சுவாரஸ்யமானது என்றுள்ளது. இலங்கை அரசியலின் சமாதானப் பேச்சுவார்த்தை காலகட்டத்தின் நிகழ்வுகளை அலசி ஆராயும் முக்கிய நூலாக இவ் நூல் விளங்குவதுடன் சமாதான கால அரசியலையும் வரலாற்றையும் பேராசிரியர்,சிரேஷ்ட அரசியல் ஆளுமை,சட்டவியல் அறிஞர் என்னும் பன்முக ஆளுமை கொண்ட ஒருவரின் குறிப்பேட்டிலிருந்து அறிய விரும்பும் அரசியல் வரலாற்றுத் துறை கல்வியியலாளர்கள், இராஜதந்திரிகள், சமூக செயற்பாட்டாளர்கள், அரசியல்வாதிகள் என்னும் அனைவருக்கும் வரலாற்றின் முக்கிய அத்தியாயங்களை இந்த நூல் மீள் நினைவூட்டுகின்றது. ஆங்கிலமொழியிலான இந்த நூலின் ஆசிரியர் ஜீ.எல்.பீரிஸ் கொழும்பு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தரும் சட்டபீடத்தின் தகைசார் பேராசிரியருமாவார். ஓக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம், லண்டன் பல்கலைக்கழம் உள்ளிட்ட உலகின் பல புகழ்பூத்த பல்கலைக்கழகங்கள் அங்கீகரித்த இலங்கையின் புகழ்பூத்த கல்விமான்களில் இவர் ஒருவராக திகழ்கின்றார். வௌிவிவகாரம், நீதி, அரசியலமைப்பு விவகாரம், இன விவகாரம், தேசிய ஒருமைப்பாடு, ஏற்றுமதி அபிவிருத்தி, சர்வதேச வர்த்தகம் மற்றும் கல்வி உள்ளிட்ட துறைகளில் நாட்டின் அமைச்சரவையில் பதவி வகித்த சிரேஷ்ட அரசியல் ஆளுமையாகவும் இவர் திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது. https://jaffnazone.com/news/53599

🕯️ சுனாமி நினைவு நாள்: நாளை 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு வேண்டுகோள்! 🌊🇱🇰

1 month 4 weeks ago
21 ஆண்டுகள் கடந்தாலும் ஆறாத வடு - முல்லைத்தீவில் கண்ணீர் மல்க இடம்பெற்ற ஆழிப்பேரலை நினைவேந்தல் 26 December 2025 கடந்த 2004ஆம் ஆண்டு இடம்பெற்ற ஆழிப்பேரலை அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் 21ஆம் ஆண்டு நினைவேந்தல் முல்லைத்தீவு ஆழிப்பேரலை நினைவாலயத்தில் இன்று (26) உணர்வுபூர்வமாக இடம்பெற்றது. அந்தவகையில் உயிரிழந்தவர்களின் உறவுகள், தமது உயிரிழந்த உறவுகளுக்கு மலர் தூவி, தீபமேற்றி, உணவுப்பொருட்களைப் படையலிட்டு உணர்வுபூர்வமாக அஞ்சலிகளை மேற்கொண்டனர். அதேவேளை உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்தி வேண்டி மத வழிபாடுகளும் இடம்பெற்றிருந்தன. மேலும் இந்த அஞ்சலி நிகழ்வுகளில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://hirunews.lk/tm/437718/a-scar-that-has-not-healed-even-after-21-years-a-tearful-remembrance-of-the-tsunami-that-occurred-in-mullaitivu

மலையகத்தை அழிக்கும் தமிழர்கள் | போரியல் ஆய்வாளர் அருஸ்

1 month 4 weeks ago
அண்மைய புயற்பேரழிவு மீட்சி மற்றும் சமகால அரசியல் தொடர்பான உரையாடற் காணொளியாதலால் இணைத்துள்ளேன் நன்றி - யுரூப் நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி

தையிட்டி திஸ்ஸ விகாரை போலியானது - வட இலங்கையின் சங்க நாயக்க தேரர்

1 month 4 weeks ago
புத்தன் அனைத்தையும் துறந்து பரிநிர்வாணம் அடைந்து போதித்தவற்றைக் குழிதோண்டிப் புதைத்த சிங்கள இனத்தில் இப்படியான நியாயக்குரல்கள் மிகஅரிதாகத் தோன்றி மறைவது தொடர்கதையானபோதும், அதனை சரியாகக் கையாளமுடியாத தரப்பாகப் பாதிக்கபபட்ட தமிழர் தரப்பு ஏமாந்தே நிற்கிறது.தேரருக்கு மாதந்தோறும் மக்கள் போராடுவதும் பிரச்சினையாக இருக்கிறது. அந்த மக்களின் போராட்டமே இவரைப் பேசவைத்திருக்கலாம். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி

தையிட்டியில் காணிகளை இழந்தவர்களுக்கு மாற்றுக்காணி அல்லது இழப்பீடு - அமைச்சர் சந்திரசேகரன்

1 month 4 weeks ago
ஆவணங்கள் இல்லாமற் போனதற்கும் மக்கள் சொந்த இடங்களை விட்டு குடிபெயர்ந்ததற்கும் யார் காரணம் என்பதையும் விளக்கலாம். அனுமதி பெறாமல் கட்டிய தனியார் கட்டிடங்களை இடிக்க மட்டும் உங்களுக்கு உரிமை சட்டம் உண்டா? யார் மோதல்களை உருவாக்குவது? தம்புள்ள நகரிலிருந்து முப்பது ஆண்டுகள் பழமை வாய்ந்த பத்திரகாளி அம்மன் ஆலயத்தை சட்டவிரோதமாக அமைக்கப்பட்டதாக பௌத்த பிக்குகள்செய்த முறைபாட்டுக்கமைய இரண்டாயிரத்து பதின்மூன்றாம் ஆண்டு ஒரே இரவில், முழுமையாக கோவிலை மூடுவதற்குமுன் செய்ய வேண்டிய மதச்சடங்குகளை செய்வதற்கு விடுக்கப்பட்ட கோரிக்கையையும் மறுத்து இடிக்கப்பட்டது ஏன்? எந்த கட்சிஆட்சியமைத்தாலும் , மதமானாலும் இனமானாலும் சட்டம் ஒன்றுதான், யாவருக்கும் சமந்தான். திருகோணமலையில் விட்ட தவறு இப்போ திஸ்ஸ விகாரையில் வந்து நிற்கிறது, இது தொடர்ந்து ஆட்சி கவிழ்ப்பில் முடியும். அவர்கள் சோதனையில் வென்று விட்டார்கள். அனுரா தோற்றுவிட்டார் இது ஒன்றே போதும் இவரின் தோற்றுப்போன அரசியலுக்கு. இந, மத விரோதிகளுக்கு அடிபணிந்து விட்டார். நீதிமன்றத்தையும் சட்டத்தையும் மதிக்கவில்லை, பின் மக்களுக்கு எப்படி முன்மாதிரி காட்டுவார்? முன்னைய அரசாங்கங்களை விமர்சிக்க, தண்டிக்க இவருக்கு தகுதியுண்டா?
Checked
Wed, 02/25/2026 - 04:40
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed