புதிய பதிவுகள்2

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு

2 months 1 week ago
வணக்கம் வாத்தியார் ......... ! பெண் : ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா உண்மைக் காதல் மாறிப் போகுமா ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா பெண் : முன் நாளிலே கொண்ட பொல்லாப்பிலே இந்நாளிலே காதல் மண்ணாவதோ முன் நாளிலே கொண்ட பொல்லாப்பிலே இந்நாளிலே காதல் மண்ணாவதோ ஆண் : சொந்தம் எண்ணியே வாழ்வில் கொண்டோம் காதலே என்னாசை தங்கமே நேசம் மாறுமா பெண் : பகையாலே காதலே அழியாது கண்ணா பகையாலே காதலே அழியாது கண்ணா ஆண் : பண்போடு நாமே இன்பம் காணுவோம் நாளுமே……பாரிலே……. ஆண் : என்னாவியே கண்ணே உன் போலவே மண் மீதிலே வேறு பெண் ஏதம்மா பெண் : இன்பம் மேவுதே உந்தன் சொல்லால் நெஞ்சிலே என்னாசை கண்ணா நீயே என் தெய்வமே ஆண் : அழியாத அன்பிலே இணைந்தோமே ஒன்றாய் பெண் : பண்போடு நாமே இன்பம் காணுவோம் நாளுமே பாரிலே ......... ! --- ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா ---

குளிக்கும் வேலை

2 months 1 week ago
அதிகமாக குளியல் அறையில் விழுந்து காயம் அடைவதும் பனிக்காலங்களில் வீதிகளிலும் வீடுகளிலும் சறுக்கி விழுந்து அல்லல் படுவதும் அதிகமாய் நடக்கத்தான் செய்கிறது ........ஆனால் கடைசிவரை மேலாளர் கண்டு பிடிக்கச் சொன்னதில் ஒன்றும் நடக்கவில்லை .......... ! 😄

புனித நீரூற்றை பாதுகாக்க அதானி குழுமத்திற்கு எதிராகப் போராடும் ஆஸ்திரேலிய பழங்குடிகள்

2 months 1 week ago
இரத்தம் குடிக்கும் அட்டைகளாய் பெரும் நிறுவனங்கள் மாறிவிட்ட பிறகு ஏழை மக்கள் இனம் போராடிக்கொண்டே இருக்க வேண்டியதுதான் .......... !

வரதரின் மீள்வரவும் பின்னணியும்…..!

2 months 1 week ago
அவர்களுக்கு அது கேவலமாக தெரியாது. இனத்தை விற்று, அவர்களுக்கொரு தீர்வு வந்து விடக்கூடாது என்பதற்காக அலைகிறார்கள். தீர்வு வந்தால்; இவர்கள் யாருக்கு சேவகம் செய்வது? எப்படி உயிர் வாழ்வது? இப்போ, இது ஒரு தொழில்! நாளாந்தம் மனித நேயம் பேசிக்கொண்டு நமது இழப்பில் வியாபாரம் செய்கிறார்கள்.

கடத்தல் முயற்சியிலிருந்து தப்பிய சிறுவன்!

2 months 1 week ago
ஓ.... கடத்தல் மன்னர்கள் சிறையில் இருப்பதால், வேறொரு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதா தொழில்? தொழில் அனுபவம் காணாது போலுள்ளது.

தையிட்டி விகாரைக்கு அருகே மற்றுமொரு சட்டவிரோதக் கட்டடம்?

2 months 1 week ago
தங்களது ஊழல்களையும் குற்றங்களையும் மறைப்பதற்காக ராஜ பக்ஸக்கள் செய்யும் திசை திருப்பல்கள். வெகு சீக்கிரம் உயர்த்த ஞாயிறு விசாரணை முடிந்து இவர்களை தூக்கு மேடைக்கோ, சிறைக்கோ ஆயுள் தண்டனையில் அனுப்ப, இதெல்லாம் அடங்கும். மின்சாரக்கதிரையில் ஏற அவதிப்பட்டவர் இங்கே போகட்டும். அவருக்கு தெரியும் தான் செய்த குற்றங்களுக்கு அதுதான் தண்டனையென்பது.

குருக்கள் மடத்தில் வெட்டியும், சுட்டும் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் புதைகுழி வழக்கில் நகர்த்தல் பத்திரம்

2 months 1 week ago
முஸ்லிம்கள் மீது புலிகளின் இனச்சுத்திகரிப்பு என சிறிலங்கா அரசு அதை சுட்டிக்காட்டி அரபு முஸ்லீம் நாடுகளை தன் பக்கம் இழுத்துக்கொண்டது. அன்றைய காலகட்டத்தில் கிழக்கு மாகாணத்தில் அரசு ஆதரவில் இயங்கிய முஸ்லீம் ஊர்காவல் படையினரின் அட்டகாசம் அதிகரித்திருந்தது. தமிழ்க்கிராமங்கள் தாக்குதலுக்குள்ளாக்கியது. அப்பாவித்தமிழ்மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். அதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாகவே இந்தப்படுகொலை நடத்தப்பட்டிருக்கிறது. அந்த மக்கள் நாளாந்தம் படுகொலை செய்யப்பட்டு, விரட்டப்பட்டு, காடுகளிலும் உறவினர் வீடுகளிலும் இழப்புகளோடு தஞ்சமடைந்து இருந்தபோது, இப்போது மனித நேயம் பேசும் ஒருவரும் அந்த மக்களுக்கு பாதுகாப்பளிக்கவில்லையே? அவர்களை காப்பாற்ற வேண்டிய நிலையில் அன்று புலிகளைத்தவிர யாரும் முன்வரவில்லை. அக்காலகட்டத்தில் கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பாக இருந்தவர் விநாயக மூர்த்தி முரளிதரன். அன்று யாழ்ப்பாண தலைமையகத்திற்கு சென்ற விநாயக மூர்த்தி முரளிதரன், கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களின் அடாவடி பற்றி முறையிட்டார். விநாயக மூர்த்தி முரளிதரனின் தூண்டுதலிலேயே யாழ்ப்பாணமுஸ்லீம் மக்கள் வெளியேற்றப்பட்டதாக நம்பப்படுகிறது. கிழக்கு மாகாணத்தின் எதிரொலி இங்கும்நிகழ்ந்து விடக்கூடும் எனும் அச்சம் எழுந்திருக்கலாம், அப்படி ஒரு துர்ப்பாக்கிய நிலையை தவிர்ப்பதற்காக முஸ்லிம்களை வெளியேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் பல உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டிருக்கிறது என்றே நான் கருதுகிறேன். அங்கு அப்படியான ஒரு சூழலை முதலில் வலிந்து தோற்றுவித்தவர்கள் முஸ்லிம்களே! அன்றும் இன்றும் அவர்களுடைய குறிக்கோள், தமிழரை கிழக்கிலிருந்து அழித்தொழிப்பதே. அருண் சித்தார்த் சொல்லுது, குருக்கள் மடத்தில் நடந்த படுகொலைகள் புலிகளால் நடத்தப்பட்டதாம். அதற்காக புனர்வாழ்வளிக்கபட்ட முன்னாள் புலிகளும், புலம்பெயர் புலிகளும் தண்டிக்கப்படவேண்டுமாம், இராணுவத்தோடு சேர்ந்தியங்கும் முன்னாள் புலிகள் தண்டிக்கப்படக்கூடாதாம். காசு கொடுத்து தப்பி போய் வெளிநாடுகளில் இருந்துகொண்டு போராடுகிறார்களாம். இவருக்கு அப்போது தப்பிப்போக காசு இல்லைபோலும், அந்த வயிற்ரறெரிச்சலை கொட்டுது, தனது எஜமானை சிக்க வைப்பதும், இன்னும் இந்த பிரச்சனை மறக்கப்படாமல் இருப்பதற்கும் இவர்களே காரணமாயிருப்பதால், அவர்கள் மீது கோபமும் இப்படி கதைக்க வைக்கிறது. இவன் தமிழனா? இவனை பேசாமல் என்ன செய்வது? எந்த தொழிலும் உயர்வானதே, ஆனால் இவன் இப்போது இனத்தை விற்றுசெய்யும் தொழில் ஈனத்தனமானது, அருவருக்கத்தக்கது. மரியாதையை யாரும் கேட்டுப்பெற முடியாது, அது நமது நடத்தையால் பிறர் நமக்குத் தருவது, பிறருக்கு நமது செயல் மீது ஏற்படும் ஈர்ப்பு.

இனப்படுகொலைக்கு சர்வதேச பொறுப்புக்கூறலை வலியுறுத்தி 21ம் திகதி அவுஸ்திரேலியாவில் போராட்டம் - தமிழ் ஏதிலிகள் பேரவை

2 months 1 week ago
ஈழத்தில் இடம்பெற்ற இனப்படுகொலைக்கு சர்வதேச பொறுப்புக்கூறலை வலியுறுத்தி 21ம் திகதி அவுஸ்திரேலியாவில் போராட்டம் - 'உலகம் இனிமேலும் பார்க்காமல் இருக்க முடியாது, இவை நிலத்தில் காணப்படும் எலும்புகள் இல்லை எங்கள் மக்களின் உயிர்கள்" 18 JUL, 2025 | 10:23 AM அவுஸ்திரேலியாவில் உள்ள அனைத்து ஈழதமிழர் அமைப்புககள் தமிழ் ஈழத்தில் இடம்பெற்ற இனப்படுகொலைக்கு சர்வதேச பொறுப்புக்கூறலை வலியுறுத்தி 21ம் திகதி பேரணியொன்றை முன்னெடுக்கவுள்ளன என தமிழ் ஏதிலிகள் பேரவை தெரிவித்துள்ளது. அந்த அமைப்பு மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, செம்மணி மனித புதைகுழியில் ஆதாரங்கள் மீண்டும் கிடைக்கத்தொடங்கியுள்ளதை தொடர்ந்தே அவுஸ்திரேலியாவில் உள்ள ஈழதமிழர் அமைப்புகள் இந்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளன. அவுஸ்திரேலியாவிற்கான இலங்கை தூதரகத்திற்கு வெளியே ஆரம்பமாகவுள்ள இந்த பேரணி ஐநா அலுவலகத்தை நோக்கியும் பல நாடுகளின் தூதரகத்தை நோக்கியும் செல்லவுள்ளது. 1996 இல் முதலில் தெரியவந்த செம்மணிமனித புதைகுழிகளில் 1990களின் பிற்பகுதியில் இலங்கை இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட தமிழ் பொதுமக்களின் மனித எச்சங்கள் காணப்படுகின்றன. 2025 இல் இடம்பெறும் சமீபத்தைய விசாரணைகளும் பொது அறிக்கைகளும் சர்வதேச தடையவியல் தலையீட்டிற்கானவேண்டுகோள்களை மீண்டும் புதுப்பித்துள்ளன. புதிய அகழ்வுகளும் கண்ணால் கண்டவர்களின் சாட்சியங்களும் நூற்றுக்கணக்கான உடல்கள் இன்னமும் கண்டுபிடிக்கப்படாத நிலையில் புதைகுழிக்குள் இருக்கலாம், என்பதை வெளிப்படுத்தியுள்ள நிலையிலேயே சர்வதேச தடையவியல் தலையீட்டிற்கான வேண்டுகோள்கள் மீண்டும் ஒலிக்கத்தொடங்கியுள்ளன. இந்த புதைகுழிகள் கடந்த காலத்தின் நினைவுச்சின்னங்கள் இல்லை, இலங்கையில் தொடரும் திட்டமிட்ட முறையில் நிராகரிக்கப்பட்டு வரும் இனப்படுகொலைக்கான நிராகரிக்க முடியாத மறுக்க முடியாத ஆதாரங்கள் . தற்போது கிடைத்துள்ள ஆதாரங்களை சர்வதேச சமூகத்தின் கதவுகளிற்கு கொண்டு செல்வதே அவுஸ்திரேலிய பேரணியின் நோக்கம். இந்த பேரணியின் போது தமிழ் இளைஞர்கள், உயிர்பிழைத்தவர்கள், மனித உரிமை பரப்புரையாளர்கள் விசேடமாக தயாரிக்கப்பட் அறிக்கைகள் ஆவணங்களை ஐக்கிய நாடுகளிடமும் வெளிநாட்டு தூதரகங்களிடமும் கையளிப்பார்கள். நிகழ்த்தப்பட்டுள்ள அட்டுழியங்களின் அளவையும், உலகளாவிய பொறுப்புக்கூறலிற்கான அவசர தேவையையும் இந்த ஆவணங்கள் கோடிட்டுக்காட்டும். இந்த ஆவணங்கள்: தமிழ் இனப்படுகொலை இடம்பெற்றது என்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும், செம்மணி மனித புதைகுழி ஏனைய அட்டுழியங்கள் இடம்பெற்ற இடங்களிற்கு சர்வதேச சுயாதீன விசாரணையாளர்கள் செல்வதற்கு இலங்கை அனுமதிக்கவேண்டும் என வேண்டுகோள் விடுக்கவேண்டும். யுத்தகுற்றவாளிகளை நீதியிலிருந்து பாதுகாத்துள்ள இலங்கையின் உள்ளக பொறிமுறைகளிற்கான ஆதரவை நிறுத்தவேண்டும். தமிழர்களின் சுயநிர்ணய உரிமை மற்றும் அவர்களின் தாயகத்தை பாதுகாத்தல் ஆகிய வேண்டுகோளிற்கு ஆதரவளிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்தவையாக காணப்படும். தமிழ் ஏதிலிகள் பேரவையின் உறுப்பினர்கள் இந்த பேரணியில் கலந்துகொள்வார்கள், அதற்கு ஆதரவளிப்பார்கள். தமிழ் அகதிகள் மற்றும் இனப்படுகொலையிலிருந்து தப்பியவர்களை பிரதிநிதித்துவம் செய்யும் அமைப்பு என்ற வகையில் அவுஸ்திரேலியாவின் மௌனம் மற்றும் உடந்தை குறித்த எங்களின் ஆழ்ந்த கரிசனையை வெளியிடுகின்றோம். இந்த குற்றங்களிற்கு காரணமான ஆட்சியாளர்களிடம் அவுஸ்திரேலியா தொடர்ந்தும் தமிழ் மக்களை நாடு கடத்துகின்றது. ஒடுக்குமுறைகள் தொடர்வதற்கான ஆதாரங்கள் தொடர்ந்து வெளியாகின்ற போதிலும் இது இடம்பெறுகின்றது. அதனை சூழவுள்ள மௌனமும் குற்றத்தின் ஒரு பகுதியே என தமிழ் ஏதிலிகள் பேரவையின் பேச்சாளர் ரேணுகா இன்பகுமார் தெரிவித்துள்ளார். நாங்கள் நீதியை கோருகின்றோம் நாங்கள் நினைவுகூறலை கோரவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/220280

கீழடி ஆய்வறிக்கை ஏன் இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை? - விளக்கும் மத்திய அமைச்சர், எழும் விமர்சனங்கள்

2 months 1 week ago
'கீழடியில் என்னுடைய காலக் கணிப்பு சரியானது, அதை மாற்ற மாட்டேன்' - பிபிசி தமிழுக்கு அமர்நாத் ராமகிருஷ்ணா பேட்டி படக்குறிப்பு, இந்தியத் தொல்லியல் துறை நடத்திய முதல் இரண்டு அகழாய்வுகளின் ஆய்வறிக்கையை அமர்நாத் ராமகிருஷ்ணா 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஏஎஸ்ஐயிடம் சமர்ப்பித்தார். கட்டுரை தகவல் முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் தான் அளித்த கீழடி அகழாய்வின் ஆய்வறிக்கையை மாற்றப்போவதில்லை என அங்கே முதல் இரண்டு கட்ட அகழாய்வுகளை மேற்கொண்ட தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா தெரிவித்திருக்கிறார். பிபிசியிடம் விரிவாகப் பேசிய அமர்நாத் ராமகிருஷ்ணன், கீழடி கி.மு. 800 முதல் கி.மு. 500வரையிலான காலத்தைச் சேர்ந்தது என்பது எப்படி முடிவு செய்யப்பட்டது என்பதையும் விளக்குகிறார். மதுரை நகரிலிருந்து 13 கி.மீ. தூரத்தில் உள்ள கீழடி என்ற கிராமத்தில் 2014ஆம் ஆண்டில் இந்தியத் தொல்லியல் துறையால் அகழாய்வு துவங்கப்பட்டது. தொல்லியல்துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையில் 2014 - 15, 2015- 2016 என இரு கட்டங்களாக இந்த அகழாய்வு நடைபெற்றது. இந்த அகழாய்வில் பரந்த அளவில் கட்டடத் தொகுதிகள் கண்டறியப்பட்டன. தமிழ்நாட்டில் நடந்த அகழாய்வுகள் எதிலும் இவ்வளவு பெரிய அளவில் கட்டடத் தொகுதிகள் கண்டறியப்படாத நிலையில், கீழடியில் வெளிவந்த கட்டடத் தொகுதிகள் பரபரப்பை ஏற்படுத்தின. இதற்குப் பிறகு, அந்த அகழாய்வுப் பணியிலிருந்து அமர்நாத் ராமகிருஷ்ணன் மாற்றப்பட்டு, வேறொரு கண்காணிப்பாளரின் கீழ் அடுத்த கட்ட அகழாய்வு நடந்தது. இதற்குப் பிறகு கீழடியில் இந்தியத் தொல்லியல் துறை (ஏஎஸ்ஐ) அகழாய்வுப் பணிகளை நிறுத்திக்கொண்டது. தமிழ்நாடு அரசு, பல கட்டங்களாக கீழடியிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் தொடர்ந்து அகழாய்வுகளை மேற்கொண்டு வருகிறது. கீழடியில் மூன்று பண்பாட்டு காலகட்டங்கள் பட மூலாதாரம்,ARCHAEOLOGICAL SURVEY OF INDIA இந்தியத் தொல்லியல் துறை நடத்திய முதல் இரண்டு அகழாய்வுகளின் ஆய்வறிக்கையை அமர்நாத் ராமகிருஷ்ணா 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஏஎஸ்ஐயிடம் சமர்ப்பித்தார். இந்த அறிக்கை 982 பக்கங்களுக்கு எழுதப்பட்டிருந்தது. அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு இரண்டாண்டுகள் கழிந்துவிட்ட நிலையில், அறிக்கை தொடர்பாக சில கேள்விகளை எழுப்பி, அறிக்கை அமர்நாத் ராமகிருஷ்ணாவிடமே திருப்பி அனுப்பப்பட்டது. கீழடியில் நடந்த அகழாய்வின் அடிப்படையில் பார்க்கும்போது, அங்கே மூன்று பண்பாட்டு காலகட்டங்கள் நிலவியிருக்க வேண்டும் எனக் கருதுவதாக அமர்நாத் ராமகிருஷ்ணன் தனது அறிக்கையில் கூறியிருந்தார். இதில் முதலாவது காலகட்டம் கி.மு. எட்டாம் நூற்றாண்டிலிருந்து கி.மு. ஐந்தாம் நூற்றாண்டு வரை நிலவியிருக்க வேண்டும் என்றும் இரண்டாவது காலகட்டம் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டிலிருந்து கி.மு. முதலாம் நூற்றாண்டின் முடிவுவரை இருந்திருக்கலாம் என்றும் மூன்றாவது காலகட்டம் கி.மு. ஒன்றாம் நூற்றாண்டின் முடிவிலிருந்து கி.பி. மூன்றாம் நூற்றாண்டையும் தாண்டிச் செல்வதாகவும் குறிப்பிட்டிருந்தார். இதன் அடிப்படையில் சில கேள்விகளை இந்தியத் தொல்லியல் துறை எழுப்பியிருந்தது. குறிப்பாக, "முதலாவது காலகட்டம், கி.மு. எட்டாம் நூற்றாண்டிலிருந்து கி.மு. ஐந்தாம் நூற்றாண்டுவரை நிலவியிருக்க வேண்டும் என அறிக்கை கூறும் நிலையில், அதற்கு உறுதியான ஆதாரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். மற்ற இரண்டு காலகட்டங்களையும் ஏஎம்எஸ் காலக் கணிப்பு முறையின்படி (Accelerator Mass Spectrometry) உறுதிசெய்ய வேண்டும். முதல் காலகட்டத்திற்கு தற்போது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள காலக் கணிப்பு மிகக் கூடுதலாகத் தெரிகிறது. அதிகபட்சமாக இந்தக் காலகட்டம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம்" என்று இந்தியத் தொல்லியல் துறை கூறியிருந்தது. அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த மேலும் சில விஷயங்கள் குறித்தும் தொல்லியல் துறை சில திருத்தங்களைச் செய்யும்படி கோரியிருந்தது. கீழடியின் பழமையைக் கண்டுபிடிக்க செய்தது என்ன? பட மூலாதாரம்,KEELADIMUSEUM.TN.GOV.IN படக்குறிப்பு, கீழடி அகழாய்வுத் தளம் - வான்வழிப் பார்வை அமர்நாத் ராமகிருஷ்ணாவைப் பொறுத்தவரை, ஒரு தொல்லியல் தளத்தில் காலத்தை முடிவுசெய்ய ஏஎம்எஸ் முறை மட்டுமே இறுதியானதோ, போதுமானதோ அல்ல. "அகழாய்வு அறிக்கை என்பது அடிப்படையில், நாம் என்னெவெல்லாம் அகழாய்வு செய்திருக்கிறோமோ அதனைத் தொகுத்துத் தரும் அறிக்கைதான். எவ்வாறு கீழடி கண்டுபிடிக்கப்பட்டது, அதன் முக்கியத்துவம் என்ன, ஏன் அதனைத் தேர்ந்தெடுத்தோம், அகழாய்வை எந்த முறையில் மேற்கொண்டோம் என்ற விவரங்கள் இருக்கும். இரண்டாண்டுகளில் மொத்தம் 102 குழிகள் அகழாய்வு செய்யப்பட்டன. அதில் என்னென்ன கிடைத்தன என்பதைத்தான் விரிவான அறிக்கையாகக் கொடுத்திருக்கிறேன். காலக் கணிப்பைப் பொறுத்தவரை, அங்கு கிடைத்த மண்ணடுக்குகளின் (stratigraphy) அடிப்படையில் காலங்கள் கணிக்கப்பட்டுள்ளன. கீழடி தொல்லியல் மேட்டைப் பொறுத்தவரை ஆறு மீட்டருக்கு பல்வேறு காலகட்டங்களைச் சேர்ந்த மண்ணடுக்குகளைக் கொண்ட ஒரு தொல்லியல் மேடு. அந்த ஆறு மீட்டரில் கீழ் பகுதி எப்போது உருவானது, மேல் பகுதி எப்போது முடிவடைந்தது என்பதை காலக் கணிப்பு செய்ய வேண்டும். இதற்கு தொல்லியல் துறையில் மண் அடுக்குகளின் அடிப்படையில் காலத்தை முடிவுசெய்ய வழிமுறைகள் உள்ளன. இந்த முடிவுக்கு, அங்கு கிடைத்த கரிமப் பொருளின் மீது மேற்கொள்ளப்படும் ஏஎம்எஸ் காலக் கணிப்பு துணை நிற்கும். ஒரு இடத்தின் காலத்தைக் கணிக்க ஏஎம்எஸ்சும் ஒரு காரணியாக இருக்கலாம். ஆனால், அது மட்டுமே போதாது. மண் அடுக்குகள்தான் முக்கியமானவை" என்கிறார் அமர்நாத் ராமகிருஷ்ணா. அமர்நாத் ராமகிருஷ்ணா தனது அறிக்கையில் கீழடியின் துவக்க காலகட்டம் (Early Phase) கி.மு. எட்டாம் நூற்றாண்டிலிருந்து கி.மு. ஐந்தாம் நூற்றாண்டுவரை இருக்கலாம் எனக் குறிப்பிட்டிருந்தார். ஆனால், கீழடி அவ்வளவு பழமையான இடமாக இருக்க முடியாது எனவும் அதிகபட்சம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என இந்தியத் தொல்லியல் துறை கூறியிருந்தது. "அகழாய்வில் கிடைத்த தரவுகள்தான் அந்த இடம் எந்த காலகட்டத்தைச் சேர்ந்தது என்ற முடிவைச் சொல்கின்றன. நான் என் விருப்பப்படி அதைச் சொல்ல முடியாது. அகழாய்வு செய்யும்போது ஒவ்வொரு அங்குலமாக எங்களுடைய களக் குறிப்பேட்டில் (Site Notebook) எல்லாவற்றையும் ஆவணப் படுத்துவோம். அதைத் தவிர, அங்கே வரைபடம் வரைபவர் ஒருவரை வைத்து வரைபடங்கள் வரையப்படும். அங்கே எத்தனை அடுக்குகள் இருக்கின்றன, அந்த அடுக்குகள் எப்படி இருக்கின்றன என்பதெல்லாம் பதிவுசெய்யப்படும். இவை எல்லாவற்றையும் ஆவணப் படுத்தி அந்த ஆவணங்களின் அடிப்படையில்தான் காலக்கணிப்பு செய்யப்படுகிறது. அங்கு கிடைத்த மண் அடுக்குகள், தொல் பொருட்கள்தான் காலக் கணிப்பைச் சொல்கின்றன" என்கிறார் அமர்நாத். கீழடியின் முதல் காலகட்டம் 2,800 - 2,500 ஆண்டுகள் பழமையானது என சொல்வது ஏன்? படக்குறிப்பு, அகழாய்வு செய்து ஒரு காலம் கணிக்கப்பட்டிருக்கிறது. அதனை நம் விருப்பத்திற்கு மாற்ற முடியாது என்கிறார் அமர்நாத் ராமகிருஷ்ணன். ஆனால், இந்தியத் தொல்லியல் துறையைப் பொறுத்தவரை, அமர்நாத் ராமகிருஷ்ணா தன் முடிவுகளை ஏஎம்எஸ் காலக் கணிப்பின்படி உறுதிசெய்திருக்க வேண்டும் எனக் கூறியிருக்கிறது. "எல்லா அடுக்குகளிலும் கரிமப் பொருள் கிடைக்கும் என்று சொல்ல முடியாது. அதேபோல கரிமப் பொருட்களை எடுத்த உடனே ஆய்வுக்கு அனுப்பினால்தான் அதன் காலம் சரியாக இருக்கும். அதனை ஐந்தாறு வருடம் வைத்து அனுப்பினால் மாசுபட்டுவிடும். அதில் கிடைக்கும் காலமும், பண்பாட்டு அடுக்கில் கிடைக்கும் காலமும் ஒத்துப்போகாது. இதையெல்லாம் ஆராய்ந்துதான் கடைசியில் ஒரு முடிவுக்கு வருவோம். நாங்கள் தோண்டிய 102 குழிகளில் 88 கரிம மாதிரிகள் கிடைத்தன. இவற்றில் 23 மாதிரிகளைத்தான் என்னால் காலத்தை கணிக்கும் ஆய்வுக்கு அனுப்ப முடிந்தது. 2017ல் 2 மாதிரிகளுக்கு அனுமதி கிடைத்தது. 2020 6 மாதிரிகளுக்கு அனுமதி கிடைத்தது. தமிழகத் தொல்லியத் துறை 10 மாதிரிகளுக்கு நிதி உதவி அளித்தது. அவற்றை 2023ல் ஆய்வுக்கு அனுப்பினோம். ஆகவே பல்வேறு காலகட்டங்களில் மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டன. இப்படி பல்வேறு காலகட்டங்களில் மாதிரிகளை ஆய்வுக்கு அனுப்பும்போது, அதில் மாசுபாடு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. எடுத்த உடனேயே ஆய்வுக்கு அனுப்பும்போதுதான் நம்மால் காலத்தை துல்லியமாகக் கணிக்க முடியும். ஆனால், இந்த விவகாரத்தில் அப்படி நடக்கவில்லை. அப்படி கிடைக்கும் காலக் கணிப்பையும் மண் அடுக்குகளோடு ஒப்பிட்டுத்தான் காலத்தை கணிப்போம். இறுதியில் மண் அடுக்குகள்தான் பேசும். உதாரணமாக, கீழடியில் ஆறு மீட்டருக்கு மண் அடுக்குகள் இருந்தன. இதில் 3 மீட்டரில் கிடைத்த கரிமத்தை சோதித்தபோது, கி.மு. 300 என காலம் வந்தது. எனக்குப் பின்பாக தமிழக தொல்லியல் துறை கீழடியில் மேற்கொண்ட அகழாய்வில் 3.53 மீட்டரில் கிடைத்த கரிம மாதிரி கி.மு. 580 எனக் கிடைக்கிறது. 6 மீட்டர் அளவுக்கு மண் அடுக்குகள் உள்ள பகுதியில், மூன்றரை மீட்டரில் கிடைத்த கரிமம், கி.மு. 580 எனக் காட்டினால், அதற்குக் கீழுள்ள பகுதி இன்னும் பழமையானதாகத்தானே இருக்கும்? ஆகவே, தொல்லியலில் எப்போதுமே மண் அடுக்குகளும் அதில் கிடைக்கக்கூடிய பண்பாட்டு தொல் எச்சங்களும்தான் முக்கியம். கீழடியின் முதல் காலகட்டத்திற்கு கி.மு. 800 முதல் கி.மு. 500 ஏன் கொடுக்கப்பட்டது என்று ஒருவர் கேட்கலாம். அந்த காலகட்டம்தான் ஒரு நகரம் உருவாவவதற்கு முந்தைய ஒரு காலம் இருந்திருக்கிறது. கறுப்பு - சிவப்பு வண்ணப் பானைகள் கிடைத்தன. பெருங்கற்காலத்தில் கிடைத்த பானைகளோடு ஒத்துச் செல்லக்கூடிய பானைகள் அவை. மேலும் புதிய கற்காலத்தைச் சேர்ந்த கற்கருவிகள் கிடைத்தன. ஆனால், அதற்காக அது பெருங்கற்காலத்தைச் சேர்ந்த பகுதி எனச் சொல்லிவிட முடியாது. தங்கள் முன்னோர்களின் நினைவாக அந்தக் கருவிகளை வைத்திருந்தார்கள் என்றுதான் சொல்ல முடியும். அதேபோல, கட்டடங்கள் வருவதற்கு முன்பாக கூரை வீடுகள் இருந்ததற்கான ஆதாரம் கிடைத்தது. இதைவைத்துத்தான் கீழுள்ள பகுதி கி.மு. 800 முதல் கி.மு. 500 வரையிலான காலமாக இருந்திருக்கலாம் என முடிவுசெய்யப்பட்டது. கி.மு. ஒன்றாம் நூற்றாண்டிலிருந்து அந்தப் பகுதி வீழ்ச்சியடைத் துவங்கியது. அதற்குப் பிந்தைய தரவுகள் கிடைக்கவில்லை" என்கிறார் அமர்நாத் ராமகிருஷ்ணன். கரிமப் பொருள் கிடைக்காமல், காலத்தை நிர்ணயித்தது எப்படி? பட மூலாதாரம்,KEELADIMUSEUM.TN.GOV.IN படக்குறிப்பு, இரண்டு அகழாய்வுகளிலும் கிடைத்த பொருட்களின் அடிப்படையில் மூன்று பண்பாட்டு காலகட்டம் அங்கே நிலவியிருக்க வேண்டும் அமர்நாத் ராமகிருஷ்ணன் அறிக்கையில் கூறியிருந்தார். தவிர, கீழடியில் ஆறு மீட்டர் ஆழத்தில் ஏஎம்எஸ் ஆய்வு செய்யத்தக்க கரிமப் பொருட்கள் கிடைக்கவில்லை என்கிறார் அமர்நாத். "நாங்கள் தோண்டிய குழிகளில் ஆறு மீட்டர் ஆழத்தில் கரிமப் பொருட்கள் கிடைக்கவில்லை. ஆனால், கரிமப் பொருளின் மீது செய்யப்படும் ஏஎம்எஸ் சோதனையின் முடிவுதான் இறுதியானதெனச் சொல்ல முடியாது. அப்படியே ஏஎம்எஸ்ஸை ஏற்றுக்கொள்வோம் என்றால், தமிழக தொல்லியல் துறை கீழடியில் மேற்கொண்ட அகழாய்வில் 3.53 மீட்டரில் கிடைத்த கரிம மாதிரி கி.மு. 580 எனக் கிடைத்ததே? அப்படியானால் ஆறு மீட்டர் ஆழத்திற்கு எந்தக் காலத்தைக் கொடுப்பது? கண்டிப்பாக, இதைவிட பின்னோக்கித்தானே இருக்க முடியும்? கி.மு. 800 முதல் கி.மு. 500 வரையிலான காலகட்டத்தில் ஒரு நகரம் உருவாவதற்கான தன்மை அங்கே இருந்திருக்கிறது என எங்கள் முடிவுகள் சொல்கின்றன. பல்வேறு விஷயங்களோடு ஒப்பிட்டுப் பார்த்து எங்கள் கால கணிப்பை அளித்திருக்கிறோம். அதுதான் முக்கியமானது. இந்த காலக் கணிப்போடு, தனித்த கரிமப் பொருளின் காலக் கணிப்பையும் இணைப்போம். தனித்த கரிமப் பொருளின் ஏஎம்எஸ் காலக் கணிப்பை மட்டும் துல்லியமானது எனச் சொல்ல முடியாது" என்கிறார் அவர். இந்த அறிக்கை குறித்து இந்தியத் தொல்லியல் துறை எழுப்பிய பிற கோரிக்கைகளை எளிதில் செய்துவிட முடியும் என்று கூறும் அமர்நாத், கீழடியின் காலம் குறித்த கணிப்பை மாற்ற முடியாது என்கிறார். "இலக்கணப் பிழைகள், படங்களில் உள்ள தவறுகளை பதிப்பிற்குப் போவதற்கு முன்பாக செய்ய தயாராக இருக்கிறோம். அதைச் சரிசெய்திருக்கிறோம். பெயர்களை (nomenclature) மாற்ற வேண்டும் என்கிறார்கள். pre என்பதை early எனக் குறிப்பிட வேண்டும் என்கிறார்கள். அதையெல்லாம் செய்யலாம். ஆனால், காலத்தை மாற்றியமைக்கச் சொன்னால் அது முடியாது. அகழாய்வு செய்து ஒரு காலம் கணிக்கப்பட்டிருக்கிறது. அதனை நம் விருப்பத்திற்கு மாற்ற முடியாது. அப்படி மாற்றியமைக்க வேண்டுமானால் மீண்டும் அகழாய்வு செய்ய வேண்டும். அதில் என்ன கிடைக்கிறது எனப் பார்க்க வேண்டும். அதில் வேறு ஒரு காலக் கணிப்பு கிடைக்கலாம். தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை மேற்கொண்டிருக்கும் அகழாய்வின் முழுமையான முடிவுகள் வரும்போது அவர்கள் என்ன காலத்தை நிர்ணயம் செய்திருக்கிறார்கள் என்பதையும் பார்க்க வேண்டும்" என்கிறார். சிந்துச் சமவெளி அகழாய்வில் கரிமப் பொருள் ஆய்வு செய்யப்பட்டதா? பட மூலாதாரம்,KEELADIMUSEUM.TN.GOV.IN படக்குறிப்பு, கீழடி அகழ்வாய்வு தளம் (கோப்புப்படம்) மேலும் சிந்துச் சமவெளியின் காலம் எந்த ஏஎம்எஸ் முறையின் கீழ் இறுதிசெய்யப்பட்டது எனக் கேள்வியெழுப்புகிறார் அமர்நாத். "சிந்துச் சமவெளி அகழாய்வை ஜான் மார்ஷல் மேற்கொள்ளும்போது ஏஎம்எஸ் முறையே கிடையாது. அப்புறம் எப்படி சிந்துச் சமவெளி கி.மு. 2,500 ஆண்டைச் சேர்ந்தது என எப்படிச் சொல்லப்பட்டது? சிந்துச் சமவெளி நாகரீகத்தைப் பொறுத்தவரை அது ஹரப்பா, மொஹஞ்சதாரோவோடு நிற்கவில்லை. பல இடங்களிலும் அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டு எல்லா இடங்களிலும் மண் அடுக்குகள் ஆய்வு செய்யப்பட்டு, அங்கு கிடைத்த கலாசார, தொல் பொருட்கள் எப்படி பிற இடங்களோடு ஒத்துப்போகின்றன என்று ஆராயப்பட்டது. தமிழ்நாட்டில் காவிரி பூம்பட்டினம், புதுச்சேரி அரிக்கமேடு போன்ற வாழ்விடப் பகுதிகளில் நடந்த அகழாய்வில் இதுபோல விரிவான ஆய்வுகள் செய்யப்படவில்லை. இதைத் தவிர்த்து அகழாய்வு செய்யப்பட்ட இடங்கள் எல்லாமே இறந்தவர்களைப் புதைத்த இடங்கள்தான். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை முதன் முதலில் கொற்கை அகழாய்வில்தான் ஏஎம்எஸ் முறையில் காலக் கணிப்பு செய்யப்பட்டது. அதில் கி.மு. 785ஆம் ஆண்டு எனக் கிடைத்தது. ஆனால், அந்தக் காலக் கணிப்பு ஏற்கப்படவில்லை. அந்த இடம் கி.மு. 300ஐச் சேர்ந்தது என்றுதான் குறிப்பிட்டார்கள். வைகை நதிக் கரையில் நூற்றுக்கும் மேற்பட்ட வாழ்விடப் பகுதிகளைக் கண்டுபிடித்தோம். தேனி மாவட்டத்தில் டொம்பிச்சேரி பகுதியை அகழாய்வு செய்ய கேட்டிருந்தோம். எனக்கு அனுமதி கொடுக்கவில்லை. கொடுத்திருந்தால் ஒப்பிட்டுப் பார்க்க ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கும். இப்போது தமிழ்நாடு அரசு பல இடங்களில் செய்கிறார்கள். அகரம், கொந்தகை, வெம்பக்கோட்டை போன்ற இடங்களில் அகழாய்வு செய்கிறார்கள். இங்கு கிடைக்கும் விவரங்களை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்" என்கிறார் அமர்நாத் ராமகிருஷ்ணா. "கீழடி அறிக்கையில் குறிப்பிடும் காலத்தை மாற்ற முடியாது": அமர்நாத் கீழடியின் காலத்தை மேலும் மேலும் கீழே கொண்டுசெல்வது ஒரு குறுங்குழுவாத மனப்பான்மை என்று சொல்வதை புறக்கணிக்கிறார் அமர்நாத். "நாங்கள் எல்லாவற்றையுமே அகழாய்வுக் கோட்பாடுகளின் அடிப்படையில் தான் கணித்திருக்கிறோம். ராக்கிடி உட்பட இதற்கு முந்தைய எல்லா காலக் கணிப்புகளும் ஏஎம்எஸ் முறைப்படி செய்யப்பட்டவை அல்ல. எல்லாமே இந்தியத் தொல்லியல் துறையின் நெறிமுறைப்படுத்தப்பட்ட காலக் கணிப்பு முறைகளின் அடிப்படையில்தான் கணிக்கப்பட்டிருக்கின்றன. அதே முறையில்தான் இங்கேயும் கணித்திருக்கிறோம். இங்கே கூடுதலாக ஏஎம்எஸ் கணிப்பும் செய்யப்பட்டுள்ளது. வட இந்தியாவில் நடந்த ஆய்வுகளில் எப்படி காலக் கணிப்பு செய்யப்பட்டதோ, அப்படித்தான் இங்கேயும் செய்யப்பட்டிருக்கிறது. வேறெந்த புதிய முறையிலும் இதனைச் செய்யவில்லை" என்கிறார் அமர்நாத் ராமகிருஷ்ணன். மேலும், ஒரு அகழாய்வு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டால் அந்த அகழாய்வாளருடன் நடக்கும் விவாதத்தில்தான் சந்தேகங்கள் கேட்பது, விளக்கங்கள் கேட்பது போன்றவை நடைபெறும் எனக் குறிப்பிடும் அமர்நாத் ராமகிருஷ்ணன், இதுபோல கடிதம் அனுப்பப்பட்டதில்லை என்கிறார். மேலும், அறிக்கையில் உள்ள காலக் கணிப்பை மாற்றப்போவதில்லை என்கிறார் உறுதியாக. "நான் கேட்ட கேள்விகளுக்கான விளக்கத்தை அளித்துவிட்டேன். எப்போதுமே விளக்கம் கேட்பது என்பது, ஒரு விவாதத்தில்தான் கேட்கப்படும். இதுபோல எழுத்துப் பூர்வமாக கேட்க மாட்டார்கள். என் அறிக்கையை கொடுத்து, அதில் பிரச்னை இருக்கும் இடங்களைச் சுட்டிக்காட்டினால், அதனை விளக்குவதற்கான வாய்ப்பை அளிக்க வேண்டும். பொதுவாக அப்படித்தான் நடக்கும். அதற்கு விளக்கம் அளிப்போம். அந்தத் திருத்தங்களைச் செய்து அச்சுக்கு அனுப்புவோம். இனி என் அறிக்கை மாற்ற வேண்டுமென்றால், மீண்டும் அகழாய்வு செய்ய வேண்டும். ஏனென்றால், இப்போது சொல்லப்பட்ட முடிவு ஒரு அகழாய்வின் முடிவு. அது சரியில்லை என்றால் மீண்டும் அகழாய்வு செய்து ஒரு அறிக்கையை அளியுங்கள். இதைத் தவிர வேறு ஏதும் நான் சொல்ல முடியாது" என்கிறார் அவர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c1wp1e70l0ro

குருக்கள் மடத்தில் வெட்டியும், சுட்டும் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் புதைகுழி வழக்கில் நகர்த்தல் பத்திரம்

2 months 1 week ago
காலங்காலமாக ஒரு இனத்தை குறிவைத்து, அவர்களது பொருளாதாரம், உடைமை, உயிர் என்பவற்றை தாக்கி அழித்து துரத்தும்போது, சிங்களத்தோடு தோளோடு தோள் நின்று வாரிச்சுருட்டியது இந்த ஈனப்பட்ட இனம். முள்ளிவாய்க்கால் அவலம் முடிந்து மக்கள் பிரதிநிதி என்று பாராளுமன்றம் போனவர், முஸ்லிம்களின் மேடைகளில் தோன்றி முஸ்லிம்களுக்கு நடந்தது இனச்சுத்திகரிப்பு என்று கூப்பாடு போட்டார். ஆனால் குறிவைத்து அப்பப்போ தாக்கியழிக்கப்பட்ட இனப்படுகொலைக்கு ஆதாரம் காணாது என்று உரத்துச்சொல்லிப்போட்டு, இன்றும் இந்த மக்களின் பிரதிநிதி தான் என்று அடாவடி பண்ணுகிறாரோ அது தெரியவில்லையா? கிழக்கு மாகாணத்த்துக்கு ஒரு முஸ்லீம் முதலமைச்சராக வந்தால் கிழக்கை முற்றாக கைப்பற்றி முஸ்லீம் மாகாணமாக மாற்றவேண்டும், வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் என்பதை இல்லாது செய்ய வேண்டுமென்ற முஸ்லிம்களோடு சேர்ந்து முதலமைச்சர் பதவியை விட்டுக்கொடுத்தாரே தாங்கள் அறியவில்லையா? ஊர்காவற்படை என்பது தமிழருக்ககெதிராக அரசாங்கத்தால் ஆரம்பிக்கப்பட ஒரு ஆயுத குழு. அது கிழக்கில் செய்த அட்டூ ழியங்கள் யாவரும் அறிவர். அப்படியான ஒரு அழிவு வடக்கில் ஏற்படக்கூடாது என்பதற்காகவே இவர்கள் வடக்கிலிருந்து வெளியேற்றப்படிருக்கலாம். அதற்காக அவர்கள் பின் மன்னிப்பும் கேட்டிருந்தார்கள். ஆனால் இவர்கள் செய்தவற்றிற்கு மன்னிப்பு கேட்டார்களா? இல்லாதது பொல்லாதது எல்லாவற்றையும் அப்பப்போ கூறி தமிழர் தான் குற்றவாளிகள் என அவர்கள் நிறுவுகிறார்கள், அதற்கு வக்காலத்து கொடுப்பதும் நாம் தான். சிங்களம் தமிழரை தாக்கினால் அவர்களோடு கேளாமலேயே ஒன்று சேர்ந்து தாக்குகிறார்கள் தமிழரை,சிங்களம் முஸ்லீம்களுக்கு எதிராக வன்முறை கிளம்பியபோது ஒரு முஸ்லீம் அரசியல்வாதி சொன்னார் நாட்டை இரண்டுபடுத்தும் போரில் முஸ்லிம்களை கேளாமலேயே தாம் அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கி போரிட்டபோதும் அரசாங்கம் தங்கள் மீது வன்முறையை கட்டவிழ்ப்பதாக தெரிவித்திருந்தார். ஆனால் தங்களுக்கு அந்த நேரத்தில் தமிழரிடமிருந்து ஆதரவு தரவேண்டுமென்றும் பேசினார்கள். எப்படி இருக்கிறது அவர்களது நிஞாயம்? தமிழர் அதிகாரம் கேட்டால் மட்டும் தங்களுக்கும் வேண்டுமென்று கூச்சலிடுகிறார்கள். கேட்க வேண்டியது, அது என்ன அவர்களோடு சேர்ந்து கூடிக்குலாவுவது, தமிழர் கேட்டவுடன் மட்டும் இவர்களுக்கும் அந்த ஆசை வருகிறது? இந்த இனம் ஒரு கொள்கை இல்லாமல் ரத்தம் குடித்து வாழும் இனம். அதனால் சிங்களம் இவர்களை பயன்படுத்துகிறது. ஹிஸ்புல்லா, நசீர் போன்றவர்கள் அவர்களுடன் சேர்ந்தவர்கள் கிழக்கில் வேண்டுமென்றே கொலைகளை நடத்தினர் தமிழருக்கெதிராக. அதை ஹிஸ்புல்லாவே வெளிப்படையாக கூறியிருக்கிறான். கிழக்கு முஸ்லிம்களுடைய மாகாணமாக்குவதற்காக திட்டமிட்டு படுகொலைகளை நடத்தி அந்த மக்களை விரட்டினான். இப்போ பாருங்கள்... முழுமையான விசாரணைநடத்தி பறிக்கப்பட்ட நிலங்கள் மீள அந்த மக்களிடம் ஒப்படைக்கப்படவேண்டுமென்கிற நிலை வந்தால், வந்தால்.... முஸ்லிம்கள் எப்படி மாறுவார்கள் என்று! ஹி ஹி என்று கொண்டு, எந்த வெட்கமோ, குற்ற உணர்வோ இல்லாமல் வந்து ஒட்டிக்கொள்வார்கள்.

நாட்டின் வரலாற்றில் மிகப்பெரிய லொட்டரி பரிசு!

2 months 1 week ago
கொக்ரெல்லையைச் சேர்ந்த வெற்றியாளருக்கு ரூ.47 கோடி லொட்டரி பரிசு தொகை வழங்கி வைப்பு Published By: DIGITAL DESK 3 18 JUL, 2025 | 10:47 AM இலங்கை வரலாற்றில் மிகப்பெரிய லொட்டரி பரிசு தொகையை வென்றவருக்கு 47 கோடி ரூபாய் மதிப்புள்ள காசோலையை தேசிய லொத்தர் சபை வழங்கியுள்ளது. மெகா பவர் 2210 ஆவது சீட்டிழுப்பில், 47 கோடியே 45 லட்சத்து 99 ஆயிரத்து 422 ரூபா சூப்பர் பரிசுடன் கூடிய வெற்றி பெற்ற லொட்டரி சீட்டை, கொக்கரெல்ல பகுதியைச் சேர்ந்த விற்பனை முகவரான எச்.ஏ. ஜானகி ஹேமமாலா விற்பனை செய்துள்ளார். தேசிய லொத்தர் சபை ஏற்பாடு செய்த விடேச நிகழ்வு ஒன்றில் கொழும்பு மேயர் வ்ராய் கெலி பல்தசாரினால் லொட்டரி பரிசை வென்ற நபருக்குரிய காசோலை உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டுள்ளது. துணை மேயர் ஹேமந்த வீரகோன், தேசிய லொத்தர் சபை தலைவர் M.D.C.A. பெரேரா மற்றும் பொது முகாமையாளர் ஏ.எம். ஆரிஃப் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர். https://www.virakesari.lk/article/220275

இலங்கையர்களுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் எச்சரிக்கை!

2 months 1 week ago
ஐரோப்பிய ஒன்றிய அதிகாரி என கூறி நிதி மோசடி; பொதுமக்களுக்கு எச்சரிக்கை! 18 JUL, 2025 | 10:30 AM இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் அதிகாரி என கூறி பொதுமக்களை ஏமாற்றி நிதி மோசடியில் ஈடுபடும் சந்தேக நபர் குறித்து எச்சிரிக்கையாக இருக்குமாறு ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. இந்த மோசடியில் ஈடுபடும் சந்தேக நபர் இளம் தொழில்முனைவாளர்ளை அணுகி, ஐரோப்பிய ஒன்றியத்தின் மூலம் நிதியுதவிகள் மற்றும் மானியங்கள் வழங்கப்படும் என பொய்யான வாக்குறுதிகளை அளித்து பண மோசடியில் ஈடுப்பட்டுவருவதாக பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. நிதியுதவியை எளிதாக்க மூன்றாம் தரப்பு முகவர்களை ஈடுபடுத்துவதில்லை என்றும், மானிய விண்ணப்பங்கள் அல்லது கொள்முதல்கள், கேள்விப்பத்திரங்களைச் செயலாக்குவதற்கு தனி நபர்கள் அல்லது அமைப்புகளிடமிருந்து பணம் கோருவதில்லை என்றும் ஐரோப்பிய ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது. பொதுமக்கள் அனைவரும் இவ்வாறான நபர்களிடம் இருந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், இதுபோன்ற ஏமாற்று செயல்கள் தொடர்பில் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறைப்பாடு அளிக்க வேண்டும் என்றும் ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது. https://www.virakesari.lk/article/220277

புனித நீரூற்றை பாதுகாக்க அதானி குழுமத்திற்கு எதிராகப் போராடும் ஆஸ்திரேலிய பழங்குடிகள்

2 months 1 week ago
படக்குறிப்பு, ஆஸ்திரேலியாவின் இரண்டாவது பெரிய மாகாணமான மத்திய குயின்ஸ்லாந்து கட்டுரை தகவல் மோனிகா கார்ன்சி & பிபிசி ஐ புலனாய்வுப் பிரிவு‎ 17 ஜூலை 2025 ஆஸ்திரேலியாவின் இரண்டாவது பெரிய மாகாணமான மத்திய குயின்ஸ்லாந்தில் வாங்கன் மற்றும் ஜகலிங்கோ பழங்குடி நிலத்தின் தூசி நிறைந்த பகுதியில், 1,300 நாட்களுக்கும் மேலாக, பாரம்பரிய சடங்கு முறைப்படி நெருப்பு எரிந்து வருகிறது. நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் போராட்டத்தின் தளத்தை இந்தச் சுடர் குறிக்கிறது. உள்ளூர்ப் பழங்குடி சமூகத்தின் ஒரு பகுதிக்கும், நாட்டின் சர்ச்சைக்குரிய சுரங்கத் திட்டங்களில் ஒன்றான கார்மைக்கேல் நிலக்கரிச் சுரங்கத்திற்கும் இடையிலான நீண்டகால மோதலின் மையமாக இந்தப் போராட்டம் அமைந்துள்ளது. உள்ளூரில் பிராவஸ் என்ற பெயரில் இயங்கும் இந்தியாவின் அதானி குழுமத்திற்குச் சொந்தமான இந்தச் சுரங்கம் சாலையின் மறுபுறம் தான் அமைந்துள்ளது. இது வாங்கன் மற்றும் ஜகலிங்கோ (W&J) மக்களின் பாரம்பரிய நிலத்தில் அமைந்துள்ளது. ஏட்ரியன் பர்ரகுப்பா மற்றும் அவரது மகன் கோடி மெக்காவோய், பிராவஸ் சுரங்க நிறுவனத்திற்கு எதிராக நீண்ட காலமாகப் போராடி வருகின்றனர். அவர்கள் இதை ஓர் ஆன்மீக நிலைப்பாடாகவும், கலாசாரத்தைப் பாதுகாக்கும் போராட்டமாகவும் கருதுகின்றனர். "என் நிலத்தில் ஒரு சுரங்கம் என் நாட்டை அழிக்க முயல்கிறது. அந்த நாடுதான் என் வரலாற்றையும், நான் யார் என்பதையும், என் மூதாதையர்கள் பற்றிய அறிவையும் தெரிந்துகொள்ளும் பாதை" என்று கூறுகிறார் ஏட்ரியன். இவர்களுடைய போராட்டத்தின் மையத்தில் தூங்கமபுல்லா நீரூற்றுகள் உள்ளன. இது வானவில் பாம்பு முண்டகுட்டாவால் உருவாக்கப்பட்ட புனித இடம் என்று வாங்கன் மற்றும் ஜகலிங்கோ மக்கள் நம்புகின்றனர். பழங்குடிக் கதைகளில் நீர், நிலம் மற்றும் படைப்புடன் தொடர்புடைய சக்தி வாய்ந்த மூதாதையர் என முண்டகுட்டா கருதப்படுகிறார். ஹைட்ரோகார்பன் தடயங்கள் தூங்கமபுல்லா நீரூற்றுகள், வறண்ட நிலத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் ஒரு பெரிய நிலத்தடி நீர் அமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளன. இவை கலிலி படுகையின் மேல் அமைந்துள்ளன. உலகின் மிகப்பெரிய பயன்படுத்தப்படாத நிலக்கரி இருப்புகளில் ஒன்றுதான் கலிலி படுகை. இது 247,000 சதுர கி.மீ. பரப்பளவில், 30 பில்லியன் டன்களுக்கு மேல் நிலக்கரியைக் கொண்டுள்ளது. மெல்போர்னில் உள்ள கிரிஃபித் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆஸ்திரேலியாவின் முன்னணி நீர்ப் புவியியலாளர்களில் ஒருவரான பேராசிரியர் மேத்யூ குர்ரெல் உள்பட சில விஞ்ஞானிகள், இந்த இடம் சுற்றுச்சூழல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது மற்றும் பாதிக்கப்படக் கூடியது என்று கூறுகின்றனர். "நாங்கள் சில விஷயங்களை கவனித்தோம். அவ்வப்போது அந்த ஊற்று நீரில் ஹைட்ரோகார்பன்கள் கண்டறியப்பட்டன" என்று பல ஆண்டுகளாக அந்தப் பகுதியை ஆய்வு செய்து வரும் கல்வியாளர் குர்ரெல் கூறுகிறார். "சுரங்கம் தொடங்கிய பிறகுதான் ஹைட்ரோகார்பன்கள் அதிகமாகிவிட்டன என்றால், அதற்கான காரணத்தை விளக்க வேண்டும். இது சுரங்க நடவடிக்கைகளுடன் தொடர்புடையதாக இருந்தால், ஊற்று நீரின் தரம் உடனடியாக அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது என்பதற்கான எச்சரிக்கை இது." மேலும், "சுரங்கத்தால் ஏற்படும் தாக்கம், அனுமதி அளிக்கப்பட்டபோது கணிக்கப்பட்டதைவிட அதிகமாக இருப்பதற்கான அறிகுறிகளை நாங்கள் காண்கிறோம். இதனால், அந்த அனுமதியை முழுமையாக மறு மதிப்பீடு செய்ய வேண்டும்," என்று அவர் வலியுறுத்துகிறார். சுரங்க நடவடிக்கைகள், நிலத்தடி நீரில் முதலில் எதிர்பார்த்ததைவிட அதிக தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதற்கான பல புதிய சான்றுகள் தற்போது வெளியாகி வருகின்றன. படக்குறிப்பு, நிலத்தடி நீரில் முதலில் எதிர்பார்த்ததைவிட இது அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதற்கான பல புதிய சான்றுகள் தற்போது வெளியாகி வருகின்றன. பேராசிரியர் மேத்யூ குர்ரெல் மற்றும் டாக்டர் ஆங்கஸ் கேம்ப்பெல் இணைந்து எழுதி, 2024இல் மதிப்பாய்வு செய்யப்பட்ட ஆய்வு, அதானி/பிராவஸின் நிலத்தடி நீர் மாதிரியாக்கம் குறித்து கவலைகளை எழுப்பியுள்ளது. பிராவஸ் இந்தக் கண்டுபிடிப்புகளை நிராகரித்து, ஆய்வின் ஆசிரியர்களில் சிலர் நிலக்கரிக்கு எதிராகப் பிரசாரம் செய்பவர்கள் என்று குற்றம் சாட்டியது. ஆனால், அந்த ஆய்வின் ஆசிரியர்கள் இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளனர். கார்மைக்கேல் சுரங்கம் நிலத்தடி நீரில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்த அதானியின் பகுப்பாய்வை, ஆஸ்திரேலியாவின் தேசிய அறிவியல் முகமை (CSIRO) 2023இல் மதிப்பாய்வு செய்தது. இந்த மதிப்பாய்வு, நடந்து கொண்டிருக்கும் ஒரு நீதிமன்ற வழக்கில் ஆராயப்படும் ஆதாரங்களின் ஒரு பகுதியாக உள்ளது. அதானி குழுமத்தின் மாதிரிகள், நீரூற்றுகளில் சுரங்கத்தின் தாக்கத்தை மதிப்பிடுவதற்கு "ஏற்றவை அல்ல" என்று அந்த மதிப்பாய்வு முடிவுகள் கூறுகின்றன. கடந்த 2023இல், அதானி/பிராவஸின் நிலத்தடி நீர் கண்காணிப்புத் தரவுகளை மதிப்பாய்வு செய்த பிறகு, தூங்கமபுல்லா நீரூற்றுகளில் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்த நிச்சயமற்ற தன்மை காரணமாக, அரசு அவர்களின் நிலத்தடி சுரங்கத் திட்டத்தைத் தடை செய்தது. இந்தத் தடையை எதிர்த்து அதானி நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது. சுற்றுச்சூழல் ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் தரநிலைகளை முழுமையாகப் பின்பற்றியதாகவும் அந்நிறுவனம் வலியுறுத்துகிறது. "நாங்கள் நிலத்தடி நீர் விதிமுறைகளை மீறவில்லை. தற்போது செய்யும் அல்லது எதிர்காலத்தில் செய்ய அனுமதிக்கப்பட்ட சுரங்க நடவடிக்கைகளால் தூங்கமபுல்லா நீரூற்றுக்கு எந்த ஆபத்தும் இல்லை" என்று பிராவஸ் பிபிசிக்கு அளித்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. "நீரூற்றுகளின் கலாசார, சுற்றுச்சூழல் மதிப்புகளைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்" என்று குயின்ஸ்லாந்து சுற்றுச்சூழல் அமைச்சர் ஆண்ட்ரூ பவல் பிபிசியிடம் தெரிவித்தார். பிளவுபட்ட சமூகம் படக்குறிப்பு, ஏட்ரியன் பர்ரகுப்பா, அவரது மகன் கோடி மெக்காவோய் ஆகியோர் சுரங்கம் தங்கள் புனித நீராதாரத்தை அச்சுறுத்துவதாகக் கூறுகின்றனர். கார்மைக்கேல் சுரங்கத்திற்கு ஒப்புதல் அளித்த அரசாங்கத்தின் முடிவு, ஆஸ்திரேலியாவை கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளாக இரு துருவங்களாகப் பிரித்துள்ளது. ஏட்ரியன் பர்ரகுப்பா மற்றும் அவரது குடும்பத்தினர், இந்தச் சுரங்கம் தூங்கமபுல்லா நீரூற்றுகள் போன்ற புனித நீர் ஆதாரங்களை அச்சுறுத்துவதாகக் கூறுகின்றனர். பழங்குடி ஆஸ்திரேலியர்கள் தங்கள் மூதாதையர் தாயகத்தை "நாடு" என்று அழைக்கின்றனர். ஆனால், இந்தச் சுரங்கம், தங்கள் உரிமைகளையும், கலாசாரத்தையும், நிலத்துடனான தொடர்பையும் புறக்கணிப்பதாக அவர்கள் வாதிடுகின்றனர். கடந்த 2007இல் ஏற்றுக்கொள்ளப்பட்ட பழங்குடி மக்களின் உரிமைகள் குறித்த ஐ.நா. பிரகடனம், "சுரங்கம் போன்ற நில உரிமைகளைப் பாதிக்கும் திட்டங்களுக்கு முன், சுதந்திரமான, முன்கூட்டிய மற்றும் தகவலறிந்த ஒப்புதலைப் பெற வேண்டும்" என்று கூறுகிறது. இது சட்டப்பூர்வமாகப் பிணைக்கப்படவில்லை என்றாலும், மாநிலங்களுக்கும் பழங்குடி மக்களுக்கும் இடையிலான உறவில் நல்லிணக்கம் ஏற்படுவதற்கான ஒரு கட்டமைப்பாக உள்ளது. கார்மைக்கேல் சுரங்கம், காலநிலை விவாதத்தில் ஒரு முக்கியப் புள்ளியாக உள்ளது. இதற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்களை நடக்கின்றன. அதே நேரம், உள்ளூர் சுரங்க சமூகங்கள் இதற்கு வலுவான ஆதரவு அளிக்கின்றன. குயின்ஸ்லாந்து அரசு, இந்தத் திட்டம் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் மற்றும் ஏற்றுமதியை அதிகரிக்கும் போன்ற காரணங்களால் அனுமதி வழங்கியது. ஆஸ்திரேலியா, உலகின் முன்னணி நிலக்கரி உற்பத்தியாளர்களில் ஒன்றாக உள்ளது. கார்மைக்கேல் சுரங்கம், ஆசிய-பசிபிக் பகுதிக்கு நிலக்கரியை ஏற்றுமதி செய்கிறது. இந்தப் பகுதியில் நிலக்கரிக்கான தேவை அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் பல பொருளாதாரங்கள் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை நோக்கி நகர்கின்றன. சுரங்கத் தொழிலாளர்கள் பலர் வசிக்கும் நகரத்தில் 486 மில்லியன் டாலருக்கும் அதிகமாக முதலீடு செய்துள்ளதாக பிராவஸ் கூறுகிறது. ஆனால் மோசமான பணிச்சூழல் குறித்த குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. பத்திரிகையாளர் கிம் நுயென், கார்மைக்கேல் சுரங்கம் தொடர்பான செய்திகளைப் பல ஆண்டுகளாக வெளியிட்டு வருகிறார். "பாதுகாப்பற்ற தூசி அளவுகளுக்கு மத்தியில் நீண்டகாலமாக இருக்கிறோம், தரமற்ற உள்கட்டமைப்பில் வேலை செய்ய வற்புறுத்தப்படுகிறோம், எங்களுக்கு உள்ள கவலைகளைக் கூறும்போது, அச்சத்துடனேயே பணியிடச் சூழலை எதிர்கொள்கிறோம்" என்று அவரிடம் பேசிய சுரங்கத் தொழிலாளர்கள் கூறியுள்ளனர். படக்குறிப்பு, உலகின் மிகப்பெரிய பயன்படுத்தப்படாத நிலக்கரி இருப்புகளில் ஒன்றான கலிலி படுகைக்கு மேலே தூங்மாபுல்லா நீரூற்றுகள் அமைந்துள்ளன. குயின்ஸ்லாந்தின் சுரங்கப் பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணையம், 2019 முதல் 2024 வரை 875 பக்கங்கள் மதிப்புள்ள கடுமையான விபத்து அறிக்கைகளை உறுதிப்படுத்தியது. ஆனால், சுரங்கத்தில் நிகழும் சம்பவங்களின் விகிதம் "தொழில்துறை சராசரிகளுடன் ஒத்துப் போவதாகக்" கூறியது. "எங்களிடம் பூஜ்ஜிய இறப்பு சாதனை உள்ளது. நாங்கள் உயர்வான தரநிலைகளைப் பராமரிக்கிறோம், அனைத்து சட்டங்களையும் கடைபிடிக்கிறோம். மக்கள் தங்கள் தனிப்பட்ட விவரங்களைக் குறிப்பிடாமலோ அல்லது நேரிலோ குறைகளை எழுப்ப ஊக்குவிக்கிறோம். அவை உடனடியாகத் தீர்க்கப்படுகின்றன" என்று பிராவஸ் பதிலளித்தது. மாநில அரசு, பழங்குடி மக்களின் ஒப்புதல் இல்லாமல் சுரங்கத்தை அங்கீகரிப்பதாக அறிவித்த பிறகு, 12 வாங்கன் மற்றும் ஜகலிங்கோ (W&J) குடும்பங்களில் ஏழு குழுக்கள், சமூக நிதிக்கு ஈடாக அதானியுடன் நில ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. "இது குடும்பங்களைப் பிளவு செய்துவிட்டது. நிலம் அழிக்கப்படுவது பற்றி மிகவும் வேதனையாக உணர்கிறேன். ஆனால், நாங்கள் சுரங்கத் திட்டத்திற்கு ஒப்புக்கொள்ளாவிட்டாலும், அவர்கள் எப்படியும் செயல்படுத்தியிருப்பார்கள். அதிலிருந்து எங்களால் என்ன பெற்றுக்கொள்ள முடிந்ததோ அதை பெற்றுக்கொண்டோம்" என்று வாங்கன் மற்றும் ஜகலிங்கோ (W&J) குழுவைச் சேர்ந்த ஜாக்கி ப்ரோடெரிக் எனும் பெண் கூறுகிறார். சிலர் இந்த நில ஒப்பந்தம் மிக உயர்ந்த விலை கொடுத்து வந்ததாக நம்புகின்றனர். "இந்த நாட்டில் சுரங்கம்தான் கடவுள். ஒரே ஒரு சுரங்கம் ஒரு முழு நாட்டையும் பிரித்துவிட்டது" என்கிறார் கோடி மெக்காவோய். "புதைபடிவ எரிபொருள் எதிர்ப்பு இயக்கத்தில் ஏட்ரியன் பர்ரகுப்பாவும் அவரது கூட்டாளிகளும் பல ஆண்டுகளாக எங்கள் நிறுவனத்தை இழிவுபடுத்தவும், குயின்ஸ்லாந்து மற்றும் ஆஸ்திரேலிய சட்டத்தின்படி, பாதுகாப்பாகவும், பொறுப்புடனும் செயல்பட்டு வரும் எங்கள் கார்மைக்கேல் சுரங்கத்தை நிறுத்தவும் முயன்றனர்" என்று ஓர் அறிக்கையில் பிராவஸ் கூறியது. நில உரிமை கோரிக்கை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, வாங்கன் மற்றும் ஜகலிங்கோ பழங்குடி மக்கள் "தண்ணீரில் இருந்து வருவதாகவும்" அதை அடிப்படை ஆதாரமாகக் கருதுவதாகவும் கூறுகிறார்கள். கடந்த 1915இல், குயின்ஸ்லாந்தின் பழங்குடியினர் பாதுகாப்புச் சட்டம், பழங்குடி மக்களை அவர்களின் நிலத்தில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்ற அனுமதித்தது. வாங்கன் மற்றும் ஜகலிங்கோ (W&J) மக்கள், 1,000 கி.மீ.க்கும் அதிகமான தொலைவுக்கு அனுப்பப்பட்டனர். குடும்பங்கள் பிரிக்கப்பட்டு, பழங்குடி கலாசாரத்தைப் பின்பற்றுவது தடை செய்யப்பட்டது. நிலத்துடனான நீடித்த தொடர்பை நிரூபித்தால், பழங்குடி மக்களுக்கு வரையறுக்கப்பட்ட நில உரிமைகளை 1993இல், பூர்வீக உரிமைச் சட்டம் வழங்கியது. இதில் சுரங்கத் திட்டங்களில் பேச்சுவார்த்தை நடத்தும் உரிமையும் அடங்கும். கடந்த 2004இல், வாங்கன் மற்றும் ஜகலிங்கோ பழங்குடி மக்கள் பூர்வீக உரிமைக்கான கோரிக்கையைப் பதிவு செய்தனர். இதன் மூலம், அதானி குழுமத்துடன் பேச்சுவார்த்தை நடத்தும் உரிமை பெற்றனர். அதானி குழுமம் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு சலுகைகளை வழங்கியது. ஆனால், 2012 மற்றும் 2014இல் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. எனவே, அதானி குழுமம் பழங்குடி ஒப்புதல் இல்லாமல், பூர்வீக உரிமை தீர்ப்பாயத்தின் மூலம் ஒப்புதல் கோரியது. கடந்த 2021ஆம் ஆண்டு, 17 வருட நீண்ட கால எதிர்பார்ப்புக்குப் பிறகு, வாங்கன் மற்றும் ஜகலிங்கோ (W&J) சமூகத்தின் பூர்வீக உரிமை கோரிக்கையை ஒரு நீதிபதி நிராகரித்தார். அந்தத் தீர்ப்பால், அவர்கள் எதிர்கால சுரங்க வளர்ச்சித் திட்டங்கள் தொடர்பான ஆலோசனைகளில் கலந்துகொள்வதற்கும், சுரங்கத் திட்டங்கள் தங்கள் நிலத்தைப் பாதிக்கும்போது இழப்பீடு பெறுவதற்குமான உரிமையை இழந்தனர். அதற்குக் காரணம், அவர்கள் நிலத்துடன் போதுமான தொடர்பு இருப்பதை சட்டரீதியாக நிரூபிக்கத் தவறியதாகக் கூறப்பட்டது. "ஒரு நீதிபதி இறுதியில், அந்தப் பகுதியில் பூர்வீக உரிமை இல்லை என்று தீர்மானித்தார். இப்போது, அந்தத் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய, ஆஸ்திரேலிய உயர்நீதிமன்றத்தில் 'சிறப்பு அனுமதி' கோர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது," என்று குயின்ஸ்லாந்து தெற்கு பூர்வீக உரிமை சேவையின் தலைவர் டிம் விஷார்ட் கூறினார். "இந்தக் கட்டமைப்பு நியாயமானது என்று நான் நினைக்கவில்லை, ஆனால் தற்போது எங்களிடம் இருப்பது இதுதான்" என்றும் அவர் கூறுகிறார். தொடரும் சட்டப் போராட்டம் படக்குறிப்பு,திவாலானபோதும், நீதிமன்ற இழப்புகள் மற்றும் சொந்த சமூகத்திலேயே பிளவுகள் ஏற்பட்டபோதும், ஏட்ரியனும் அவரது குடும்பத்தினரும் தளர்ந்துவிடவில்லை. ஏட்ரியன் பர்ரகுப்பா, குயின்ஸ்லாந்து உச்சநீதிமன்றத்தில் நீதித்துறை மறு ஆய்வு வழக்கைத் தொடர்கிறார். கார்மைக்கேல் சுரங்கம், தூங்கமபுல்லா நீரூற்றுகள் போன்ற புனித தலத்தை அச்சுறுத்துவதன் மூலம் வாங்கன் மற்றும் ஜகலிங்கோ (W&J) மக்களின் மனித உரிமைகளை மீறுவதாக அவர் வாதிடுகிறார். இந்த வழக்கு, குயின்ஸ்லாந்து மனித உரிமைச் சட்டத்தின் பிரிவு 28ஐ அடிப்படையாகக் கொண்டது. இது பழங்குடி மக்களின் கலாசாரத்தைப் பின்பற்றுவதற்கும், நிலம் மற்றும் நீருடனான தொடர்பைப் பேணுவதற்குமான உரிமையைப் பாதுகாக்கிறது. இதுவொரு முன்னுதாரண வழக்காக இருக்கும் என்று ஏட்ரியன் மற்றும் கோடியின் வழக்கறிஞர் அலிசன் ரோஸ் கூறுகிறார். "கலாசாரத்தையும் நாட்டையும் பாதுகாக்க விரும்பும் பிற பூர்வீக மக்களால் பின்பற்றப்படும் ஒரு முக்கியமான வழக்காக இது அமையும்," என்று அவர் குறிப்பிட்டார். இது அரசுக்கு எதிராக ஏட்ரியன் தொடுக்கும் நான்காவது வழக்கு. இதில் (இலவச) வழக்கறிஞர்களைப் பயன்படுத்தி இவர் போராடுகிறார். முன்னதாக, ஒரு நீதிமன்ற வழக்கை எதிர்த்துப் போராடியதில், 680,000 டாலர் செலவானதன் காரணமாக பயங்கர நஷ்டத்தைச் சந்தித்தார். ஆனால் திவாலான போதும், நீதிமன்ற இழப்புகளைச் சந்தித்தபோதும், சமூகப் பிளவுகள் இருந்தபோதும், ஏட்ரியனும், அவரது மகன் கோடியும், அவர்களது குடும்பமும் மனம் தளரவில்லை. "நாங்கள் தண்ணீரில் இருந்து வருகிறோம். தண்ணீர் இல்லாமல், நாம் அனைவரும் இறந்துவிடுவோம். நிலம் இல்லாமல், எங்களுக்கு எதுவுமே இல்லை" என்கிறார் ஏட்ரியன். இந்த மனித உரிமை வழக்கை ரத்து செய்ய நீதிமன்றத்தைக் கோரியுள்ளது அரசு. அதன் தீர்ப்பு இன்னும் வெளிவரவில்லை. - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cnvm97q6d5go

9-வளைவு பாலத்தை இரவிலும் பார்வையிட வாய்ப்பு

2 months 1 week ago
9-வளைவு பாலத்தை இரவிலும் பார்வையிட வாய்ப்பு July 18, 2025 11:03 am எல்ல தெமோதர ஒன்பது வளைவு பாலம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியை சுற்றுலாப் பயணிகளுக்கு கவர்ச்சிகரமானதாக மாற்றுவதற்காக ரயில்வே திணைக்களமும் மத்திய கலாச்சார நிதியமும் இணைந்து புதிய திட்டத்தை ஆரம்பித்துள்ளன. இத்திட்டத்தின் நோக்கம், இரவு நேரத்தில் மின் விளக்குகளால் பாலத்தை ஒளிரச் செய்து, சுற்றுலாப் பயணிகளுக்கு பார்வையிடும் வாய்ப்பை வழங்குவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இத்திட்டம் 2025 ஓகஸ்ட் முதல் செயல்படுத்தப்படும் என்று ரயில்வே பொது மேலாளர் தம்மிக ஜயசுந்தர தெரிவித்துள்ளார். இப்பகுதி மேம்படுத்தப்பட்டு சுற்றுலாப் பயணிகளின் ஈர்ப்பு அதிகரித்த பின்னர், பார்வையிடுவதற்கு ஒரு குறிப்பிட்ட கட்டணம் வசூலிக்கப்படும். உள்ளூர் சுற்றுலாப் பயணிகளுக்கு குறைந்தபட்ச கட்டணம் அறவிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. https://oruvan.com/opportunity-to-visit-the-9-arch-bridge-at-night/

காசாவின் ஒரேயொரு கிறிஸ்தவ தேவாலயம் மீது இஸ்ரேல் தாக்குதல் - மூவர் பலி

2 months 1 week ago
காசாவின் ஒரேயொரு கிறிஸ்தவ தேவாலயம் மீது இஸ்ரேல் தாக்குதல் - மூவர் பலி Published By: RAJEEBAN 18 JUL, 2025 | 08:02 AM முன்னாள் பாப்பரசர் பிரான்சிஸ் நாளாந்தம் தொடர்பை பேணிய காசாவின் ஒரேயொரு கிறிஸ்தவ தேவாலயத்தின் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டுள்ளனர். தேவாலயத்தின் பணியாளர் ஒருவரும் தேவாலயத்தின் வளாகத்தில் உள்ள கரித்தாஸ் கூடாரத்தில் உளவியல் சிகிச்சை பெற்றுவந்த பெண்ணொருவரும் அவருடன் இருந்த மற்றுமொரு பெண்ணும் கொல்லப்பட்டுள்ளதாக கரித்தாஸ் இன்டநஷனல்ஸ் தெரிவித்துள்ளது. உயிர்தப்புவதை நோக்கமாக கொண்டு தேவாலயத்தில் தஞ்சமடைந்திருந்த மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் குறித்து பெரும் அதிர்ச்சியடைந்துள்ளதாக கரித்தாஸ் இன்டநஷனலின் செயலாளர் நாயகம் அலிஸ்டர் டட்டன் தெரிவித்துள்ளார். இவர்களின் மரணம் முற்றுகையின் கீழ் பொதுமக்கள் மருத்துவஉதவியாளர்கள் எதிர்கொண்டுள்ள மோசமான நிலையை மீண்டும் நினைவுபடுத்துகின்றது என தெரிவித்துள்ள அவர் ஏற்பட்ட இழப்புகள் குறித்து நாங்கள் துயரடைகின்றோம் சம்பந்தப்பட்ட தரப்பினரை வாழ்க்கையின் புனிதத்தினையும் அதனை பாதுகாப்பதற்கான தளத்தையும் மதிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம் என தெரிவித்துள்ளார். பத்துபேர் காயமடைந்துள்ளனர் சிலருக்கு ஆபத்தான காயங்கள் ஏற்பட்டுள்ளன எறிகணை சிதறல்களால் காயங்கள் ஏற்பட்டுள்ளன என அல் அஹ்லில் அராபிய மருத்துவமனையின் மருத்துவ பணியாளர்ப்ராஹிம்சகல்லா கார்டியனிற்கு தெரிவித்துள்ளார். தேவாலயம் தாக்கப்பட்டதாக மருத்துவமனைக்கு அறிவிக்கப்பட்டதாக சகல்லா கூறினார். "நான் ஆம்புலன்ஸில் ஏறி நேராக தேவாலயத்திற்குச் சென்றேன்" என்று அவர் மேலும் கூறினார். "இந்த இஸ்ரேலியஇராணுவம் திமிர்பிடித்தது - அது கிறிஸ்தவரா அல்லது முஸ்லிம் என்று வேறுபடுத்திப் பார்ப்பதில்லை அது ஒரு தேவாலயமா மசூதியா வீடா அல்லது ஒரு பள்ளியா என்பது கூட கவலையில்லை. நாங்கள் ஒரு கொடூரமான போரின் நடுவே வாழ்கிறோம். 21 மாத காலப் போரின் போது குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உட்பட நூற்றுக்கணக்கான பாலஸ்தீனியர்கள் தங்கியிருந்த தேவாலய வளாகத்தையும் ஷெல் தாக்குதல் சேதப்படுத்தியது. தேவாலயத்திற்கு அடுத்துள்ள ஒரு பள்ளியில் தங்கியுள்ள இடம்பெயர்ந்த 75 வயது கிறிஸ்தவரான அட்டாலா டெர்சி கூறினார்: “நான் சில நிமிடங்கள் வெளியே இருந்த பிறகு வகுப்பறைக்குத் திரும்பியபோது ஒரு பெரிய வெடிப்பு ஏற்பட்டது. போர் தொடங்கியதிலிருந்து வெடிப்பின் சத்தம் இவ்வளவு தீவிரமாக இருந்தது இதுவே முதல் முறை ஏப்ரல் மாதம் இறப்பதற்கு முன்பு முன்னாள்பரிசுத்த பாப்பரசர் அர்ஜென்டினாவைச் சேர்ந்த கேப்ரியல் ரோமனெல்லியை ஒவ்வொரு மாலையும் அழைப்பார். ஹமாஸ் இஸ்ரேல் மீதான தாக்குதல்கள் காசாவில் பேரழிவுப் போரை தூண்டிய இரண்டு நாட்களுக்குப் பிறகுஇ அக்டோபர் 9 2023 அன்று அவர் வழக்கத்தைத் தொடங்கினார். https://www.virakesari.lk/article/220272

காவுவாங்கும் வல்லைப்பாலம்; தவிசாளர் நிரோஷ் சுட்டிக்காட்டு

2 months 1 week ago
காவுவாங்கும் வல்லைப்பாலம்; தவிசாளர் நிரோஷ் சுட்டிக்காட்டு வல்லைப்பாலம் பழுதடைந்து பல உயிர்களைக் காவு வாங்கியிருக்கின்றது. எனவே, இதற்கு என்ன தீர்வு? என்று வலிகாமம் கிழக்கு பிரதேசசபைத் தவிசாளர் தியாகராசா நிரோஷ் கேள்வி எழுப்பியுள்ளார். யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் நேற்று இடம்பெற்ற ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் அவர் மேலும் தெரிவித்ததாவது:- வலிகாமம் கிழக்கின் எல்லைப் பகுதியில் அமைந்திருக்கும் வல்லைப் பாலம் மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. ஆறுக்கும் மேற்பட்ட உயிர்கள் அண்மைக்காலத்தில் பறிபோயுள்ளன. அத்துடன், காயங்களை ஏற்படுத்திய, வாகனங்கள் சேதமடைந்து பல விபத்துகளும் அண்மையில் இடம்பெற்றுள்ளன. வல்லைப் பாலம் மேலும்மேலும் ஆபத்தானதாக மாறிவரும் நிலையில், அதைச் சீரமைப்பதற்கு உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்-என்றார். இதற்குப் பதில் வழங்கிய மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத்ததலைவரும் அமைச்சருமான சந்திரசேகரன், வல்லைப் பாலம் தொடர்பில் காத்திரமான நடவடிக்கை எடுக்கப்படும். எதிர்வரும் வரவு-செலவுத் திட்டத்தில் அதற்குரிய நிதி ஒதுக்கப்படும் என்றார். இதையடுத்து, வல்லைப் பாலத்தில் போதியளவு மின்விளக்குகள் இல்லை என்ற விடயத்தை இளங்குமரன் எம்.பி. சுட்டிக்காட்டினார். இதற்குப் பதில் வழங்கிய தவிசாளர், 'கடந்த காலங்களில் வல்லைப் பாலத்தில் போதியளவு மின் விளக்குகள் பூட்டப்பட்டன. எனினும், அவை காலப்போக்கில் திருடப்பட்டுவிட்டன. உடனடித் தேவை கருதி சில சோலர் விளக்குகளைப் பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் - என்றார். https://newuthayan.com/article/காவுவாங்கும்_வல்லைப்பாலம்;_தவிசாளர்_நிரோஷ்_சுட்டிக்காட்டு

பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் கோயிலுக்கு பிரத்தியேக பாதையூடாக சென்று வழிபட அனுமதி!

2 months 1 week ago
பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் கோயிலுக்கு பிரத்தியேக பாதையூடாக சென்று வழிபட அனுமதி! ஆடிப்பிறப்பன்று படைத்தரப்பு அறிவிப்பு பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்துக்கு தினமும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையில் தற்காலிகமாக அமைக்கப்பட்ட பிரத்தியேக பாதை ஒன்றின் ஊடாகச் சென்று வழிபாடுகளை மேற்கொள்ள இராணுவத்தினர் ஆடிப்பிறப்பான நேற்று வியாழக்கிழமை முதல் அனுமதி வழங்கியுள்ளனர். பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்துக்கு கட்டுப்பாடுகள் இன்றி மக்கள் வழிபடுவதற்கான அனுமதியை 35 வருடங்களின் பின்னர், ஜூன் மாதம் 27ஆம் திகதி இராணுவத்தினர் வழங்கியிருந்தனர். ஆனால் ஜூன் மாதம் 28 ஆம் திகதி பாதுகாப்புக் காரணங்கள் எனக் கூறி ஆலயத்திற்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இந்நிலையிலே நேற்று முதல் ஆலயத்திற்குச் செல்ல மீண்டும் அனுமதி வழங்கப்படுவதாக இராணுவத்தினர் அறிவித்துள்ளனர். 35 வருட காலமாக உயர்பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள குறித்த ஆலயத்துக்கு கடந்த ஆறுமாத காலத்துக்கு முதலே சுதந்திரமாக சென்று வழிபட அனுமதி வழங்கப்படும் என இராணுவத்தினர் அறிவித்திருந்த போதிலும் அது நடைமுறைக்கு வரவில்லை. விசேட தினங்களில் மாத்திரம் கடுமையான கட்டுப்பாடுகளுடன், ஆலயத்துக்குச் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில், 'ஆலயத்துக்கு மாத்திரம் செல்வதற்கு' என உயர்பாதுகாப்பு வலயத்தினுள் பிரத்தியேக பாதை அமைக்கப்பட்டு. அந்தப்பாதை ஊடாக மக்கள் ஆலயத்துக்கு மாத்திரம் சென்று வழிபட்டு திரும்ப இராணுவத்தினர் அனுமதி வழங்கியுள்ளனர். ஆலயத்துக்குச் செல்வதற்காக அந்தப் பகுதி மக்கள் தமது சொந்த நிதியிலேயே குறித்த பிரத்தியேகப் பாதையை அமைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. https://newuthayan.com/article/பலாலி_இராஜ_இராஜேஸ்வரி_அம்மன்_கோயிலுக்கு_பிரத்தியேக_பாதையூடாக_சென்று_வழிபட_அனுமதி!

யாழ். மாவட்டச் செயலர் தன்னிச்சைச் செயற்பாடு!

2 months 1 week ago
யாழ். மாவட்டச் செயலர் தன்னிச்சைச் செயற்பாடு! ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் எம்.பி.க்கள் கூட்டுப்பாய்ச்சல் யாழ் மாவட்டச் செயலர் தன்னிச்சையான செயற்பாடுகளை மேற்கொள்கின்றார். அவை தொடர்பில் எமக்கு முறைப்பாடுகள் குவிந்தபடி உள்ளன என்று யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான இ.சந்திரசேகர், இணைத் தலைவரான வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன், யாழ் மாவட்ட செயலாளர் ம.பிரதீபன் ஆகியோரின் பங்கேற்புடன் நேற்று நடைபெற்றது. அப்போது ஒருகட்டத்தில், யாழ். மாவட்டத்தில் அண்மையில் இடம்பெற்ற மணல் கடத்தலின்போது கைப்பற்றப்பட்ட வாகனத்தை விடுவிக்க யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர் பணித்ததாக நான் அறிந்தேன்' என நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் குற்றஞ்சாட்டினார். இதனை மறுதலித்த மாவட்டச் செயலர் மருதலிங்கம் பிரதீபன். ஆதாரம் இல்லாமல் பொதுவெளியில் இவ்வாறு கதைக்கக் கூடாது. நான் அவ்வாறு எதுவிதமான செயலிலும் ஈடுபடவில்லை' - என்றார். இதனையடுத்து ஆளுங்கட்சியான தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரான கருணைநாதன் இளங்குமரன், 'இங்குள்ள பலர் பக்கச்சார்பாக நடக்கின்றனர். இதனால் பல பிரதேச செயலாளர்களும், நிர்வாக அதிகாரிகளும் பழிவாங்கப்படுகின்றனர். அந்தப் பழிவாங்கலால் திட்டமிட்ட இடமாற்றங்களுக்கும் உட்படுகின்றனர் எனக் குற்றஞ்சாட்டினார். அதனை ஆமோதித்த அர்ச்சுனா எம்.பி. "யாழ்.மாவட்டச் செயலரின் பழிவாங்கலால் தாம் பாதிக்கப்பட்டுள்ளனரென எட்டு பிரதேச செயலாளர்கள் என்னிடம் முறையிட்டுள்ளனர்" - என்றார். அதனைத் தொடர்ந்து ஆளும்கட்சி எம்.பி.க்களான பவானந்தராஜா, இளங்குமரன் ஆகியோர் மாவட்டச்செயலர் மீது சரமாரியான குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். அத்துடன், பிரதேச செயலாளர்களின் இடமாற்றங்களை இரத்துச் செய்து, வடக்கு ஆளுநர் தலைமையில் குழு அமைத்து இடமாற்றங்களை தீர்மானிக்கவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்களால் வலியுறுத்தப்பட்டது. எனினும் முடிவேதுமின்றி கூட்டம் அவசர அவசரமாக முடிவுறுத்தப்பட்டது. https://newuthayan.com/article/யாழ்._மாவட்டச்_செயலர்_தன்னிச்சைச்_செயற்பாடு!
Checked
Sat, 09/27/2025 - 21:27
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed