1 month 4 weeks ago
கடலூரில் பாவிக்கப்பட்ட கடற்கலம் இதற்கு தூம்புக்கட்டை (outrigger) ஒன்று உள்ளது. சோழமண்டல கடற்கரையில் தூம்புக்கட்டை பாவிக்கப்படுவதில்லை என்ற கருத்தை இப்படிமம் இல்லாமல் செய்கிறது.
2 months ago
போருக்கு பிந்திய கால(post - war) முன்னெடுப்புக்களை இலங்கை ஆட்சியாளர்கள் இதுவரை மேற்கொள்ளவில்லை, மறுவளமாக நிலமையினை மோசமாக்கும் செயல்களையே முன்னெடுக்கிறார்கள். புலம் பெயர் உறவுகளும் போர்க்கால மனநிலையிலேயே தேங்கிவிட்டார்கள் (தனி நாடு), அரசுகள் தவறவிட்ட விடயங்களில் ஒன்றான பொருளாதார மீழ்கட்டமைப்பிற்கு புலம் பெயர் உறவுகள் உதவியிருக்கலாம். அங்குள்ள அரசியல் கட்சிகள் மக்களை ஒருங்கிணைக்க முயற்சிக்கவில்லை, இது ஒரு இனப்பிரச்சினையாக மட்டும் பார்க்கின்ற நிலை நிலவுகிறது, இது சிறுபான்மையினரது பிரச்சினை, அது பல வடிவங்களில் உருவாகிறது, அனைவரும் சமம் எனும் எண்ணும் நிலையினை சமூகத்தில் உருவாக்க முடியாத ஒரு தோல்வி நிலை உள்ளது. தற்போது இலங்கை ஒரு கலைத்து போட்ட சீட்டு கட்டு போல உள்ளது சுயநலமிகள் தமக்குத்தேவையானவற்றை அதிலிருந்து உருவுகிறார்கள். இது இவ்வாறு தொடர்ந்தால் மீண்டும் ஒரு உள்நாட்டு போர் உருவாகலாம் (40% உள்நாட்டு போர்கள் ஒரு தசாபத்தில் மீண்டும் ஆரம்பித்ததாக கூறுகிறார்கள்), அது மீண்டும் தேவையற்ற அழிவுகளையே கொண்டுவரும், மக்கள் வாழ்கை நிலை மேலும் மோசமாகும். தற்போதய உலக ஒழுங்கு மாற்றம் ஒரு அமைதியற்ற சூழலை இலங்கையில் தோற்றுவிக்க ஏதுவான நிலைகளை உருவாக்கிவிடும், இலங்கைக்கு தேவையான ஒரு தேசிய அரசாங்கம் இந்த காலத்தின் அவசியம் (அதிகார பரவலாக்கத்தினை பெரும்பான்மை எப்போதும் ஒரு சந்தேக கண்ணுடன் பார்க்கின்றது) இறுக்கமான சட்டத்திற்கான அதிகாரம், சமூக சமத்துவம், சமூக பொருளாதார அபிவிருத்தி என்பன அவசியமாகிறது. இலங்கை, இந்த நூற்றாண்டின் ஒரு தோற்று போன தேசம், அதற்கு அனைவரும் காரணம்.
2 months ago
ஆம், இது எனக்கு நினைவில் கொண்டுவருவது அந்த தொடரூந்து நிலையங்களின் அறிவுப்பும், அதன் தொனியும். அந்த அறிவுப்பு எல்லோரையும் அறிவுப்பு முடியும் வரை கட்டி வைத்து இருக்கும். இப்போதும் அப்படியா அறிவுப்பு? முன்பு மகோவில் புகையிரத சந்தியில் இருந்தே மட்டக்கிளப்புக்கு, இப்பொது புதிய பாதை?
2 months ago
இன்று பிறந்தநாளைக் கொண்டாடும் தம்பி ஏராளனுக்கு வாழும்வரை சுகமாகவும் வளமாகவும் வாழ வேண்டுகிறேன்.
2 months ago
மன்னார் வளைகுடாவில் ஓடிய ஓர் வகை பெயர் தெரியா கடற்கலம்
2 months ago
பாம்பன் பாலத்திற்கு அண்டிய பகுதிகளில் (இராமேஸ்வரம் கடற்பரப்பு) ஓடிய கடற்கலம்
2 months ago
தூத்துக்குடியில் ஓடிய ஓர் பாய் வள்ளம் 1900கள்
2 months ago
இதன் வகை பெயர் தெரியவில்லை 1900+ ஆதிரம்பாக்கத்தில் ஓடிய பாய்மரம்கொண்ட கடற்கலம். இதற்கு கடிசு உண்டு.
2 months ago
இதன் வகை பெயர் தெரியவில்லை 1900+ கீழ்க்கரையில் உருவோட்டிய ஒரு வகையான கடற்கலம். இவற்றிற்கு தூம்புக்கட்டை (outrigger) இருந்தது. ஒற்றை நெடுங்கட்டை (boom) இரட்டை நெடுங்கட்டை
2 months ago
சங்கீ!
2 months ago
இதன் வகை பெயர் தெரியவில்லை 1900+ திருப்பலக்குடியில் உருவோடிய நீளம் குறைந்த ஒற்றைப்பாய் கொண்ட கடற்கலம். இதற்கு கடிசும் (balance board) சுக்கானும் உண்டு.
2 months ago
இதன் வகை பெயர் தெரியவில்லை 1900+ ஆதிரம்பாக்கத்தில் ஓடிய பாய்மரம்கொண்ட கடற்கலம். இதற்கு Washtakes உண்டு. (தென் தமிழீழத்திலிருந்த வள்ளங்கள் போன்று தோற்றமளிக்கிறது)
2 months ago
2 months ago
2 months ago
2 months ago
உடும்பன்குளம் மாவீரர் துயிலுமில்லதிலிருந்த ஒரு வகையான சிலை இரு படையணிக் கொடிகள் பறப்பதைக் காண்க இது குடும்பிமலை வடிவத்திலுள்ளது
2 months ago
நக்கல், நையாண்டிகள் எல்லாம் ஒரு புறம் போக தையிட்டி விகாரைக்கு எதிராக முன்னெடுக்கப்படும் போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு நம்மவர்களே கல்லெறிவது இலங்கை அரசின் நீண்டகால அடக்குமுறை கொள்கைகளுக்கும், திட்டமிட்ட சிங்கள மயப்படுத்தலுக்கும் கிடைக்கும் பெரு வெற்றி! இனி அடுத்தகட்டம் நம்மவர்களே விகாரை கட்ட லொக்கேசன் எடுத்து கொடுப்பதோடு, காணி, காசு, பொருள் நன்கொடைகள் தொடக்கம், இலவசமாக கட்டுமான பணிகளும் செய்து கொடுப்பார்கள்.
2 months ago
மழை வெள்ளத்தில் சிலிப்பர்கட்டைகள் அடித்து செல்லப்பட்டுவிட்டன, ரயில்வே பாலங்கள் உடைந்துவிட்டன என சொல்லப்பட்டது. இவ்வளவு வேகத்தில் அனைத்தும் சரிசெய்யப்பட்டு விட்டனவா? @சுவைப்பிரியன் எதற்கும் லைப் ஜெக்கெற், பெரு நடைக்கு தேவையான பூட்ஸ், உலர் உணவு, தண்ணீர், படுக்கும் பை, ரோச் லைட் இவை எல்லாம் எடுத்துக்கொண்டு ரயிலில் ஏறவும்.
2 months ago
இந்த ஆண்டின் வட அமெரிக்கத் தமிழ் சங்கங்களின் (FeTNA) வருடாந்த ஒன்று கூடல் வட கரோலினாவில் 3 நாட்கள் நடந்தது. அழைப்பிதழில் வாகீசனும் வந்து நிகழ்ச்சி செய்வார் என்று இருந்தது, ஆனால் அவர் வரவில்லை. ஏன் வரவில்லை என்று விசாரித்த போது சில தகவல்கள் தெரிய வந்தன. இந்த நிகழ்ச்சிக்காக ஒரு 3 பேர் கொண்ட கலைஞர் குழுவாக அமெரிக்க விசாவுக்கு விண்ணப்பித்திருக்கிறது வாகீசன் குழு. குழுவின் முகாமையாளர் என்ற பெயரில் இராசையா உமாகரனைக் குறிப்பிட்டு விண்ணப்பித்திருக்கிறார்கள். உமாகரனின் முகநூல் பதிவுகளை அமெரிக்க விசாப் பிரிவில் பரிசீலித்திருப்பார்கள் போல. வாகீசன் குழுவுக்கு அமெரிக்க விசா மறுக்கப் பட்டிருக்கிறது.
2 months ago
முல்லைத்தீவில் 12 வயது சிறுமி உயிரிழப்பு - தீர்வு கோரும் பிரதேச மக்கள் Dec 24, 2025 - 07:09 PM முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 12 வயதுடைய சிறுமி ஒருவர் உயிரிழந்த நிலையில், அது தொடர்பான முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என முல்லைத்தீவு சிலாவத்தை மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த 20 ஆம் திகதி ஒவ்வாமை காரணமாக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் குறித்த சிறுமி அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர், கடந்த 21 ஆம் திகதி அந்த சிறுமி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. வைத்தியசாலையில் சிறுமிக்கு வழங்கப்பட்ட தடுப்பூசியின் காரணமாகவே சிறுமி உயிரிழந்தாக பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். சம்பவம் தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்பட்டு, உரிய தீர்வு வழங்கப்பட வேண்டும் என பிரதேச மக்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்நிலையில், உயிரிழந்த சிறுமியின் இறுதிக்கிரியைகள் இன்று (24) இடம்பெற்ற நிலையில் அவரது நண்பர்கள் சிறுமியின் உடலை சுமந்து சென்று சிறுமிக்காக நீதிக்கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது. -முல்லைத்தீவு நிருபர் தவசீலன்- https://adaderanatamil.lk/news/cmjk29f030335o29n7uysh1yz
Checked
Tue, 02/24/2026 - 19:36
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed