புதிய பதிவுகள்2

செம்மணி படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் ஆர்ப்பாட்டம்!

2 months 1 week ago
செம்மணி புதைக்குழி, அநுர அரசுக்கு ஒரு அக்னிப் பரீட்சை!-மனோ கணேசன். “செம்மணி புதைக்குழி விவகாரம் அநுர அரசுக்கு ஒரு அக்னிப் பரீட்சை ஆகும்” என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். செம்மணி படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு புகையிரத நிலையத்திற்கு முன்பாக நீதிக்கான மக்கள் சக்தி அமைப்பினரால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு தனது ஆதரவினை தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மனோ கணேசன் மேலும் தெரிவித்துள்ளதாவது” ” இன்று, இலங்கையர் அரசு என கூறி, ஆட்சிக்கு வந்திருக்கும் அநுர அரசுக்கு அக்னி பரீட்சை. இதை கடந்து தம்மை நிரூபிக்க வேண்டிய கடப்பாடு இந்த நாட்டின் தலைவருக்கு இருக்கிறது. இது மட்டுமல்ல, தெற்கிலும் பல புதை குழிகள் இருப்பதாக ஆதாரங்கள் ஆங்காங்கே வெளிபட்டுள்ளன. அவற்றையும் ஆய்வு செய்து நீதியை நிலை நாட்டுங்கள். எங்களது நல்லாட்சியில் பல்வேறு காரியங்களை நாமும், வடகிழக்கு தமிழ் கட்சிகளும் நிர்ப்பந்தம் செய்து ஆரம்பித்தோம். ஐநா சபைக்கு கொண்டு போனோம். தீர்மானங்கள் நிறைவேற்றினோம். அரசியல் கைதிகளை கணிசமாக விடுவித்தோம். காணிகள் கணிசமாக விடுவித்தோம். காணாமல் போனோர் அலுவலகம், நஷ்ட ஈட்டு அலுவலகம், ஆகியவற்றை அமைத்தோம். யுத்த அவலத்துக்கு மூல காரணமான தேசிய இனப் பிரச்சினைக்கு “அதிகாரபகிர்வு” தீர்வை தேடி, புதிய அரசியலமைப்பு பணியை செய்தோம். அனைத்தையும் நான்கு ஆண்டுகளில் செய்து முடிக்க முடியவில்லை. முடியாது. ஆனால் நாம் நல்ல ஆரம்பத்தை தந்தோம். நாம் ஆரம்பித்த இந்த பணிகளை அப்படியே முன்னே கொண்டு செல்ல வேண்டியதே இந்த அரசின் கடமை. முதலிப் காணாமல் போனோர் அலுவலக அதிகாரிகளை அங்கே அனுப்புங்கள். அதை செய்யுங்கள் என நான் அநுர குமார திசாநாயக்கவை நான் கோருகிறேன்” இவ்வாறு மனோ கணேசன் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1439581

யாழ்.மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று!

2 months 1 week ago
யாழ்.மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று! யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் அதன் தலைவர் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தலைலையில், இணைத்தலைவர் வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகனின் பங்கேற்புடன் இன்றைய தினம் (17) யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாண மாவட்டத்தில் 2025 ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடலாகவே குறித்த கூட்டம் இடம்பெற்றது. இக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஸ்ரீபவானந்தராசா , ஜெய்சந்திரமூர்த்தி ரஜீவன், க. இளங்குமரன் , சிவஞானம் சிறிதரன் , கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் அருச்சுனா இராமநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். அத்துடன் திணைக்கள தலைவர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டுள்ளனர். இக்கூட்டத்தில் வீதி அவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் சுத்திகரிப்பு, போக்குவரத்து, மின்சாரம், வீடமைப்பு, சட்டம் ஒழுங்கு, கடற்றொழில், விவசாயம் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டது. https://athavannews.com/2025/1439557

செம்மணி படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் ஆர்ப்பாட்டம்!

2 months 1 week ago
செம்மணி படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் ஆர்ப்பாட்டம்! செம்மணி படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து தற்போது கொழும்பு புகையிரத நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. நீதிக்கான மக்கள் சக்தி அமைப்பினரால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த ஆர்ப்பாட்டத்தில் சிவில் சங்க உறுப்பினர்கள், ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்துக்கொண்டுள்ளனர். https://athavannews.com/2025/1439568

இலங்கை - இந்திய மீன்பிடி உரிமை ஒப்பந்தம் தொடர்பில் பேச்சுவார்த்தை

2 months 1 week ago
இந்தியாவில்... தடை செய்யப் பட்ட வலைகளை பயன் படுத்தி... கடல் வளத்தை அழித்த பின், அயல் நாட்டுக்கு வந்து மீன் பிடிப்பது எந்த விதத்தில் நியாயம். இப்பிடியான வலைகளை பயன்படுத்தாமல் இருக்க... இந்திய அரசு கவனம் செலுத்தாமல் இருந்து விட்டு, அல்லது லஞ்சம் வாங்கிக் கொண்டு கண்டும் காணாமல் இருந்து விட்டு இப்போ... அயல் நாட்டிற்கு வந்து கடலை நாசம் அறுப்பது மாபெரும் குற்றம். இலங்கை கடற்படை... இப்படி வருபவர்கள் மீது, தயவு தாட்சண்ணியம் பார்க்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். இயற்கை தந்த நமது கடலை... நாசம் பண்ணுவதை அனுமதிக்க முடியாது.

தங்கம் கடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நடிகைக்கு ஓராண்டு சிறைத் தண்டனை!

2 months 1 week ago
தங்கம் கடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நடிகைக்கு ஓராண்டு சிறைத் தண்டனை! தங்கம் கடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கன்னட நடிகை ரன்யா ராவ்வுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து பெங்களூரு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கன்னட நடிகையான ரன்யா ராவ் கடந்த மார்ச் மாதம் 3 ஆம் திகதி தங்கம் கடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில், 14 கிலோ தங்கத்தைத் தனது உடலில் மறைத்துக் கடத்தி வந்த குற்றச்சாட்டிலே குறித்த நடிகை கைது செய்யப்பட்டார். இதை அடுத்து அவரது வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் கணக்கில் வராத 2.67 கோடி ரூபாய் பணமும் , 2.06 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளும் கைப்பற்றப்பட்டன. இதேவேளை, தங்க கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ரன்யா ராவ் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ள நிலையில், ரன்யா ராவுக்கு சொந்தமான 34 கோடி ரூபாய் மதிப்புடைய சொத்துக்களை அந்நாட்டு அமுலாக்கத்துறை முடக்கியுள்ளது. மேலும் குறித்த தங்கக் கடத்தல் வழக்கில் நடிகை ரன்யா ராவுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து பெங்களூரு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் இந்த ஓராண்டு சிறைத் தண்டனை காலத்தில் ரன்யா ராவுக்கு பிணை வழங்கக்கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1439533

பிரேசில், சீனா மற்றும் இந்தியா மீது 100% வரி விதிக்கப்படலாம்! -மார்க் ருட்டே எச்சரிக்கை

2 months 1 week ago
பிரேசில், சீனா மற்றும் இந்தியா மீது 100% வரி விதிக்கப்படலாம்! -மார்க் ருட்டே எச்சரிக்கை. ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் இந்தியா, சீனா, பிரேசில் போன்ற நாடுகள் மீது 100 சதவீத வரி விதிக்கப்படலாம் என நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ருட்டே எச்சரிக்கை விடுத்துள்ளார். ரஷ்யா-உக்ரேன் போரை நிறுத்தும் முயற்சியில், அமெரிக்கா தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், அடுத்த 50 நாட்களுக்குள் ரஷ்யா போர்நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்பதில்லை என்றால், ரஷ்யாவுக்கு கடுமையான தடைகள் விதிக்கப்படுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த நாடுகளுடன் வணிக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நாடுகளுக்கும் அமெரிக்காவின் secondary sanctions அமுல்படுத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். இது தொடர்பாக மார்க் ருட்டே, அமெரிக்க செனட் உறுப்பினர்களுடன் நடத்திய கலந்துரையாடலின் கூறியதாவது: ‘பிரேசில், சீனா மற்றும் இந்தியா போன்ற நாடுகள் ரஷ்யாவுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்கின்றன. போர்நிறுத்தம் ஏற்படாவிட்டால், இந்த நாடுகள் மீது 100% வரி விதிக்கப்படும். எனவே, ரஷ்ய ஜனாதிபதி புதினை அழுத்தம் கொடுக்க வேண்டும். இல்லை என்றால் ரஷ்யா சந்திக்கும் பாதிப்பை இந்நாடுகளும் சந்திக்க நேரிடும்‘ எனத் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1439560

கனடாவில் அமைச்சர் கெரி ஆனந்தசங்கரிக்கு எதிராக எழுந்துள்ள குற்றச்சாட்டு

2 months 1 week ago
கோசான்... நான், பகிடிக்கு சொல்ல வில்லை. நீங்கள் வக்கீல் சம்பந்தமாக படித்திருக்கின்றீர்கள் எனது நீண்ட நாள் சந்தேகம். நீங்கள் சொல்லாட்டிலும்... குடுமி காட்டிக் கொடுத்து விடும். 😂

புத்தத் துறவிகளை பாலியல் வீடியோ மூலம் மிரட்டி ரூ 100 கோடி பணம் பறித்த பெண் சிக்கியது எப்படி?

2 months 1 week ago
சும்மா கிடக்குது என்றால்... காவி உடுப்பை கடாசி எறிந்து விட்டு, கலியாணம் கட்ட வேண்டியதுதானே. காவியும் வேணும், காமமும் வேணும் என்று... இரு தோணியில் கால் வைக்கப் படாது கண்டியளோ.... 😂

கனடாவில் அமைச்சர் கெரி ஆனந்தசங்கரிக்கு எதிராக எழுந்துள்ள குற்றச்சாட்டு

2 months 1 week ago
இலங்கையரின் குடியேற்ற சர்ச்சை; பொது பாதுகாப்பு அமைச்சர் மீது நம்பிக்கையுள்ளதாக கனேடிய பிரதமர் தெரிவிப்பு! கனடாவில் தற்சமயம் சர்ச்சைகளை எதிர்நோக்கியுள்ள இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த பொதுப் பாதுகாப்பு அமைச்சர் கேரி ஆனந்தசங்கரி (Gary Anandasangaree)க்கான ஆதரவினை அந் நாட்டுப் பிரதமர் மார்க் கார்னி வெளிப்படையாக கூறியுள்ளார். பொது பாதுகாப்பு அமைச்சர் கேரி ஆனந்தசங்கரி, அமைச்சராக வருவதற்கு முன்பு, கனடாவிற்குள் நுழைவதற்கு கூட்டாட்சி அதிகாரிகளால் தடை விதிக்கப்பட்ட இலங்கையர் ஒருவரின் குடியேற்ற விண்ணப்பத்தை அவர் ஆதரித்தார் என்ற அறிக்கை வெளியானதும் சர்ச்சைகள் எழுந்தது. இந் நிலையிலேயே பிரதமர் மார்க் கார்னி, கேரி ஆனந்தசங்கரி மீது நம்பிக்கை வெளியிட்டுள்ளார். நீதி அமைச்சரின் நாடாளுமன்றச் செயலாளராக ஆனந்தசங்கரி இருந்தபோது, இலங்கையைச் சேர்ந்த செந்தூரன் செல்வகுமாரனை நாட்டிற்குள் அனுமதிக்கக் கூடாது என்ற முடிவை இரத்து செய்வதற்கான விண்ணப்பத்தை ஆதரித்து கனடா எல்லை சேவைகள் நிறுவனத்திற்கு கடிதம் எழுதினார். கனேடிய குடிவரவு அதிகாரிகள் செல்வகுமாரன், தமிழ்ப் புலிகள் என்று அழைக்கப்படும் தீவிரவாத அமைப்பாக பட்டியலிடப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவராக இருக்கலாம் என்று தீர்மானித்த பின்னர் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக செவ்வாயன்று (15) குளோபல் நியூஸ் செய்தி வெளியிட்டது. தமிழீழ விடுதலைப் புலிகள், இலங்கையில் நீண்ட காலமாக சுதந்திரப் போரை நடத்தினர். மேலும் 2006 முதல் கனடாவின் பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் உள்ளனர். கனடா எல்லை சேவைகள் நிறுவனம் செல்வகுமாரனை அந்தக் குழுவில் உறுப்பினராக இருந்ததன் அடிப்படையில் குடியேறியவராக நிராகரித்திருந்தாலும், ஆனந்தசங்கரி அவர்களின் முடிவை மாற்றுமாறு கேட்டுக் கொண்டார். 2016 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில், டொராண்டோவிற்கு குடிபெயர்வதற்கான அந்த நபரின் முயற்சியை ஆதரித்து ஆனந்தசங்கரி கனடா எல்லை சேவைகள் நிறுவனத்துக்கு கடிதங்களை எழுதினார். அதில் மிகவும் அண்மைய கடிதம் நீதித்துறை நாடாளுமன்ற செயலாளராக கேரி ஆனந்தசங்கரி இருந்தபோது எழுதப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந் நிலையில், இது குறித்து புதன்கிழமை (16) எஃகுத் தொழிலைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் தனது திட்டங்களை வெளியிட்டதன் பின்னர் உரையாற்றிய கனடப் பிரதமர் கார்னி, “பொது பாதுகாப்பு அமைச்சர் அந்த சூழ்நிலையின் விவரங்கள் குறித்து வெளிப்படையாக இருந்தார், மேலும் அவர் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது,” என்று கூறினார். கடந்த மே 13 அன்று கனடாவின் தேசிய பாதுகாப்பு மற்றும் எல்லை பாதுகாப்பு நிறுவனங்களுக்குப் பொறுப்பான அமைச்சராக ஆனந்தசங்கரியை கார்னி நியமித்திருந்தார். வெள்ளை மாளிகை வர்த்தகப் போரைத் தவிர்க்க, போதைப்பொருள் மற்றும் புலம்பெயர்ந்தோர் கடத்தலுக்கு எதிராக கனடா தனது எல்லையை பலப்படுத்தப்பட்டுள்ளது என்பதை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை நம்ப வைக்கும் பொறுப்பு ஆனந்தசங்கரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆனால், கடந்த மாதம் உலகத் தமிழ் இயக்கம் தொடர்பான முடிவுகளில் இருந்து ஆனந்தசங்கரி தன்னை விலக்கிக் கொண்டபோது அவர் தொடர்பான கேள்விகள் எழுப்பப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1439541

புத்தத் துறவிகளை பாலியல் வீடியோ மூலம் மிரட்டி ரூ 100 கோடி பணம் பறித்த பெண் சிக்கியது எப்படி?

2 months 1 week ago
பணம் பறிக்கிறது ஒரு பக்கம் இருக்க... புத்த துறவிகள் என்றால்.... காமலீலை விளையாட்டு காட்டுவதில் ஸ்ரீலங்காவும், தாய்லாந்தும் ஒரு குட்டையில் ஊறிய மட்டைகள். 😂

கனடாவில் அமைச்சர் கெரி ஆனந்தசங்கரிக்கு எதிராக எழுந்துள்ள குற்றச்சாட்டு

2 months 1 week ago
//தனது வாக்காளர் ஒருவருக்கு பா.உ. இப்படியான கடிதங்கள் வழங்குவது மிக சாதராணவிடயம். அல்லாமல் இதில் எந்த ஒளிவு மறைவும் இல்லை. பாஉ வாக செயல்படும் போது அது சட்டமீறல் இல்லை எனில் இப்போதும் இல்லைத்தான்.// முன்னணி வக்கீலுக்கு உரிய தரமானதும், அசைக்க முடியாததுமான கருத்து. ✔️

கனடாவில் அமைச்சர் கெரி ஆனந்தசங்கரிக்கு எதிராக எழுந்துள்ள குற்றச்சாட்டு

2 months 1 week ago
Gary இதைவிடாது போராட வேண்டும். தனது வாக்காளர் ஒருவருக்கு பா ஊ இப்படியான கடிதங்கள் வழங்குவது மிக சாதராணவிடயம். அல்லாமல் இதில் எந்த ஒளிவு மறைவும் இல்லை. பாஉ வாக செயல்படும் போது அது சட்டமீறல் இல்லை எனில் இப்போதும் இல்லைத்தான். இது இலங்கையின் சதி. ஆங்கிலேய வழி வந்த நாடுகளில் the PM has full confidence என சொல்லிய பலர், அநேகமாக சில வாரங்களுக்குள் வீட்டுக்கு போவதே அதிகம். இவருக்கு இப்படி நிகழாது இருக்க வேண்டும். ஊரில் உள்ள தமிழ் எம்பிகள் கூட்டாக ஒரு ஆதரவு கடிதத்தை கனேடியன் ஹைகொமிசனரிடம் கொடுக்கலாம்.

அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு மீது பிடியாணை பிறப்பித்துள்ளது.

2 months 1 week ago
பெஞ்சமின் நெட்டன்யாகுவிற்கு எதிரான பிடியாணையை இரத்துசெய்யவேண்டும் - இஸ்ரேலின் கோரிக்கையை நிராகரித்தது சர்வதேச நீதிமன்றம் 17 JUL, 2025 | 12:07 PM இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ஆகியோர்களிற்கு எதிரான பிடியாணையை இரத்துச்செய்யவேண்டும், ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பகுதிகளில் இடம்பெறும் குற்றச்செயல்கள் குறித்த விசாரணைகளை கைவிடவேண்டும் என்ற இஸ்ரேலின் வேண்டுகோளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. மே 9ம் திகதி இஸ்ரேல் விடுத்த வேண்டுகோளை நிராகரித்துள்ளதாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தெரிவித்தள்ளது. பாலஸ்தீன பகுதிகளில் இழைக்கப்படும் குற்றங்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்கு சர்வதேச நீதிமன்றத்திற்கு நியாயாதிக்கம் இல்லை என்ற இஸ்ரேலின் வாதத்தை நிராகரித்துள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அதன் முந்தைய தீர்ப்பினை மீண்டும் உறுதி செய்துள்ளது. பாலஸ்தீனம் தனது கருத்துக்களை முன்வைப்பதற்கு இடமளிக்க கூடாது என்ற இஸ்ரேலின் வேண்டுகோளையும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. https://www.virakesari.lk/article/220206

புத்தத் துறவிகளை பாலியல் வீடியோ மூலம் மிரட்டி ரூ 100 கோடி பணம் பறித்த பெண் சிக்கியது எப்படி?

2 months 1 week ago
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் ஜிரொபோர்ன் ஶ்ரீசாம் & கோ ஈவ் பிபிசி 51 நிமிடங்களுக்கு முன்னர் தாய்லாந்து நாட்டில் துறவிகளை மிரட்டிய விவகாரத்தில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அப்பெண் பல துறவிகளுடன் பாலுறவு வைத்து, பிறகு அது சார்ந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பயன்படுத்தி துறவிகளை மிரட்டி பணம் பறித்துள்ளார். செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) அன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய காவல்துறையினர் இது தொடர்பாக கூடுதல் தகவல்களை வழங்கினர். அப்போது அவர்கள், அந்த பெண்ணை " கோல்ஃப்" என்ற பெயரில் அழைத்தனர். மேலும் குறைந்தது 9 துறவிகளுடன் அப்பெண் உறவில் இருந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர். மேற்கொண்டு பேசிய காவல்துறையினர், கடந்த மூன்று ஆண்டுகளில் அப்பெண் இந்த முறையில் 385 மில்லியன் பாட் (கிட்டத்தட்ட ரூ. 100 கோடி மதிப்பில்) பணம் பறித்துள்ளார் என்று தெரிவித்தனர். விசாரணை நடத்திய அதிகாரிகள், அப்பெண்ணின் வீட்டை சோதனையிடும் போது, அங்கே 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைக் கைப்பற்றினர். இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைக் காட்டியே துறவிகளிடம் அவர் பணம் பறித்தது குறிப்பிடத்தக்கது. புகழ்பெற்ற தாய்லாந்தின் புத்த அமைப்பு மீது சமீபத்தில் வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு இது. கடந்த சில ஆண்டுகளாகவே புத்த துறவிகள் பாலியல் குற்றங்களிலும் போதைப் பொருள் கடத்தலிலும் ஈடுபட்டு வருகின்றனர் என்ற குற்றச்சாட்டுகள் நிலவுவது குறிப்பிடத்தக்கது. பட மூலாதாரம்,THAI NEWS PIX படக்குறிப்பு, செய்தியாளர்கள் சந்திப்பில் காவல்துறையினர் ஜூன் மாதத்தின் போது தான் முதல் வழக்கானது காவல்துறையின் கவனத்திற்கு வந்தது. பாங்காங்கில் இருந்த புத்தமதத்துறவிகளின் தலைவர் ஒருவர், பெண் ஒருவரால் மோசடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து துறவறத்தைவிட்டு வெளியேறினார் என்று அவர்கள் கண்டறிந்தனர். கோல்ஃப் அந்த புத்தத்துறவியுடன் 2024-ஆம் ஆண்டு மே மாதம் காதல் உறவில் இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். பிறகு அந்த பெண் அவரின் குழந்தைக்கு தாயானதாகவும், குழந்தை பராமரிப்பிற்காக 7 மில்லியன் பாட் பணம் கேட்டதாகவும் காவல்துறையினர் விளக்குகின்றனர். அதிகாரிகள், மேலும் பல துறவிகள் இதே ரீதியில் அப்பெண்ணுக்கு பணம் அனுப்பியதை கண்டறிந்தனர். அப்படி அனுப்பப்பட்ட பணம் முழுமையும் கணக்கில் இருந்து எடுக்கப்பட்டது என்றும் அதில் குறிப்பிடத்தக்க அளவு பணம் ஆன்லைன் சூதாட்டத்திற்கு பயன்படுத்தப்பட்டது என்றும் காவல்துறையினர் கூறுகின்றனர். விசாரணை அதிகாரிகள் கோல்ஃபின் வீட்டை இந்த மாதத்தின் துவக்கத்தில் சோதனையிட்டனர். அப்போது அவருடைய போனைக் கைப்பற்றிய காவல்துறையினர், 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் அதில் இடம்பெற்றிருப்பதைக் கண்டனர். மிரட்டிப் பணம் பறித்தல், பண மோசடி மற்றும் திருட்டுப் பொருட்களை பெற்றது என்று பல்வேறு வழக்குகளை தற்போது அப்பெண் எதிர்கொண்டு வருகிறார். "மோசமாக நடந்து கொள்ளும் துறவிகள்" குறித்து புகார் அளிக்க சிறப்பு உதவி எண்களை அறிமுகம் செய்துள்ளதாகவும் காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தைத் தொடர்ந்து துறவற விதிமுறைகள் குறித்து மதிப்பாய்வு செய்ய சிறப்புக் குழு ஒன்றை அமைக்க இருப்பதாக கூறியுள்ளது தாய்லாந்து பௌத்த விவகாரங்களை நிர்வகிக்கும் சங்கா சுப்ரீம் கவுன்சில். துறவற விதிமுறைகளை மீறும் துறவிகளுக்கு அபராதம் மற்றும் சிறை தண்டனை உள்ளிட்ட கடுமையான தண்டனைகளை வழங்க அரசு தரப்பில் இருந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த ஜூன் மாதம் 81 துறவிகளுக்கு தாய்லாந்து நாட்டு மன்னர் உயர் பட்டங்களை வழங்கி உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்த விவகாரத்திற்கு பிறகு மன்னர் வஜிரலோங்கோர்ன் அந்த உத்தரவை ரத்து செய்தார். சமீபத்திய சம்பவங்களைமேற்கோள்காட்டிய அவர், பௌத்தர்கள் மனதில் பெரும் துன்பத்தை இது ஏற்படுத்தியுள்ளது என்று கூறினார். தாய்லாந்தில் 90%க்கும் மேற்பட்ட மக்கள் தொகையினர் புத்த மதத்தை பின்பற்றுபவர்கள். புத்த துறவிகள் மரியாதைக்குரியவர்களாக கருதப்படுகின்றனர். நற் கர்மத்தைப் பெறுவதற்காக தாய்லாந்து ஆண்கள் பலரும் குறிப்பிட்ட காலத்திற்கு துறவறம் மேற்கொள்வதுண்டு. ஆனால் சமீபத்தில் பல்வேறு ஊழல் புகார்களுக்கு ஆளாகியுள்ளது அங்குள்ள புத்த அமைப்பு. ஆடம்பர வாழ்க்கை வாழ்வதில் பெயர் பெற்றவரான விராபோல் சுக்போல் என்ற துறவி மீது 2017-ஆம் ஆண்டு பாலியல் குற்றங்கள், மோசடி, பண மோசடி போன்ற குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட போது, அவர் பெயர் தலைப்புச் செய்திகளானது. 2022-ஆம் ஆண்டு, தாய்லாந்தின் வடக்கு பிராந்தியத்தில் அமைந்திருக்கும் பெட்சாபூனில் உள்ள புத்த கோவில் ஒன்றில் இருந்த நான்கு துறவிகளும் போதைப் பொருட்கள் பரிசோதனையின் போது கைது செய்யப்பட்டனர். தாய்லாந்து சங்கா அமைப்பில் ஒழுக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பாக பல ஆண்டுகளாக விமர்சனம் வைக்கப்பட்டாலும் கூட, நூறாண்டுகால பழமை வாய்ந்த அந்த அமைப்பில் சிறிய அளவிலேயே மாற்றங்கள் வந்துள்ளன என்று பலரும் தெரிவிக்கின்றனர். பிரச்னையின் பெரும்பகுதி அதன் அதிகாரப் படிநிலையில் உள்ளது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். "இது தாய்லாந்து அதிகார அமைப்பைப் போன்றே செயல்படும் ஒரு சர்வாதிகார அமைப்பாகும். அங்கு மூத்த துறவிகள் உயர் அதிகாரிகளைப் போலவும், இளைய துறவிகள் அவர்களுக்குக் கீழ் பணிபுரிபவர்களாகவும் உள்ளனர்" என்று மத அறிஞர் சுரபோத் தவீசக் பிபிசி தாய்லாந்து சேவையிடம் பேசும் போது தெரிவித்தார். "அவர்கள் நெருடலை ஏற்படுத்தும் ஏதேனும் ஒன்றைக் கண்டால் அதனை எதிர்த்து அவர்கள் பேசத் துணிவதில்லை. ஏனெனில் புத்தக் கோவிலில் இருந்து அவர்கள் மிக எளிதில் வெளியேற்றப்பட்டுவிடுவார்கள்." தற்போது காவல்துறை மற்றும் சங்கா அமைப்பால் நடைபெற்று வரும் விசாரணைகளானது, தேவைப்படும் சீர்திருத்தத்தைக் கொண்டு வரும் முக்கிய நடவடிக்கையாகும். "உண்மையை வெளிக்கொண்டுவருவது மிகவும் முக்கியமானது." என்று ப்ரகிராதி சடாசுட் கூறுகிறார். அவர் பாங்காங் தம்மசாட் பல்கலைக்கழகத்தின் சமூகவியல் ஆராய்ச்சியாளராக உள்ளார். "தன் மதிப்பைக் காப்பாற்றிக் கொள்ள சுப்ரீம் சங்கா கவுன்சில் பலரின் தொடர்பை துண்டித்துக் கொள்ளுமா என்பதைப் பொறுத்தே அது அமையும்." - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cd975w0vzeko

பிரிட்டனின் இரகசிய ஆவணத்தில் உள்ள விபரங்கள் கசிந்த பின்னர் தலிபானால் கொல்லப்பட்டவர்களின் முகங்கள் - டெலிகிராவ்

2 months 1 week ago
Published By: RAJEEBAN 17 JUL, 2025 | 10:40 AM பிரிட்டனின் பாதுகாப்பு அமைச்சின் இரகசிய ஆவணம் கசிந்ததை தொடர்ந்து தலிபானால் கொல்லப்பட்ட 200க்கும் மேற்பட்ட ஆப்கானின் முன்னாள் படைவீரர்கள் மற்றும் பொலிஸாரின் பெயர்கள் வெளியாகியுள்ளன என டெலிகிராவ் செய்தி வெளியிட்டுள்ளது அமெரிக்கா தலைமையிலான பன்னாட்டு படையினருடன் இணைந்து செயற்பட்டவர்களே கொல்லப்பட்டுள்ளனர். இது குறித்து பிரிட்டனின் டெலிகிராவ் மேலும் தெரிவித்துள்ளதாவது. பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்கப் படைகளுடன் பணிபுரிந்த ஆப்கானியர்களின் அவல நிலையை எடுத்துக்காட்டும் சுயாதீன வழக்குரைஞர்களால் கொல்லப்பட்ட 200க்கும் மேற்பட்ட ஆப்கானின் முன்னாள் படைவீரர்கள் மற்றும் பொலிஸாரின் பெயர்கள் தொகுக்கப்பட்டன. ஆனால் ஒரு மூத்த நீதிபதி விதித்த நீதிமன்ற உத்தரவு இறந்தவர்கள் முதலில் பாதுகாப்பு அமைச்சக பட்டியலில் இடம்பெற்றார்களா என்பதை தி டெலிகிராஃப் செய்தியாக வெளியிடுவதைத் தடுக்கிறது. அந்த பட்டியல் பிப்ரவரி 2022 இல் தற்செயலாக வெளியிடப்பட்டது. பிரிட்டனின் பாதுகாப்பு அமைச்சின் இரகசிய ஆவணம் 2022 இல் தங்கள் வசம் வந்ததாகவும், அன்றிலிருந்து அதில் அடையாளம் காணப்பட்டவர்களை வேட்டையாடி வருவதாகவும் தலிபான் கூறுகிறது. தலிபானின் சிறப்புப் படைகளின் ஒரு பிரிவு - யார்மோக் 60 என அழைக்கப்படுகிறது - அவர்களைக் கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதை டெலிகிராவினால் செய்தியாக வெளியிட முடியும். 2021 ஆம் ஆண்டு காபூலின் வீழ்ச்சிக்குப் பிறகு பிரிட்டிஷ் துருப்புக்களுடன் பணிபுரிந்த ஆப்கானியர்களுக்கு அடைக்கலம் அளிக்கும் நோக்கில் பிரிட்டனின் பாதுகாப்பு அமைச்சகத்தால் நடத்தப்படும் புகலிடத் திட்டத்திற்கு விண்ணப்பித்தவர்களின் விபரங்கள் அடங்கிய ஆவணம் கசிந்துள்ளமையே தற்போது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. பட்டியலில் உள்ளவர்களில் எத்தனை பேர் தலிபான்களால் அடையாளம் காணப்பட்டனர், கண்காணிக்கப்பட்டு அதன் விளைவாகக் கொல்லப்பட்டனர் என்பது தெளிவாகத் தெரியவில்லை. தரவு மீறலின் விளைவாக யாராவது கொல்லப்பட்டார்களா என்பதை "உறுதியாகக் கூற முடியவில்லை" என்று பிரிட்டனின் பாதுகாப்பு அமைச்சர் ஜோன்ஹீலி புதன்கிழமை ஒப்புக்கொண்டார். பட்டியல் கசிந்த பின்னர் கொல்லப்பட்ட ஆப்கானியர்களில் இளவயதினரும் - நடுத்தர வயதினரும் உள்ளனர். இவர்கள் ஆப்கானின் பலபகுதிகளில் - சிலர் குடும்பத்தவர்களுடன் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த வருடம் ஜூன் 24ம் திகதி பொலிஸ் கொமாண்டோ பிரிவை சேர்ந்த கேர்ணல் டுர்ஜான் ஹெல்மண்டில் மசூதியிலிருந்து வெளியேறிக்கொண்டிருந்தவேளை குடும்பத்தவர்கள் பலருடன் சுட்டுக்கொல்லப்பட்டார். இதற்கு ஒரு மாதத்தின் பின்னர் மற்றுமொரு முன்னாள் இராணுவவீரர் கோஸ்ட் மாகாணத்தில் தலிபான்களால் கொல்லப்பட்டார். ஜூலை 23ம் திகதி ( 2024)அலிசார் மாகாணத்தில் ஹமிதுல்லா கோஸ்டி தலிபான்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இவர் திருமணமொன்றிற்காக அந்த பகுதிக்கு சென்றிருந்தார். https://www.virakesari.lk/article/220191

ஏமனில் பணம் கொடுத்தால் மரண தண்டனையிலிருந்து தப்பி விடலாமா? நிமிஷா பிரியா வழக்கின் பின்னணி என்ன?

2 months 1 week ago
நிமிஷா செய்த குற்றத்துக்கு மன்னிப்பு கிடையாது: உயிரிழந்த தலால் மெஹ்தியின் சகோதரர் திட்டவட்டம் 17 JUL, 2025 | 09:36 AM புதுடெல்லி: தன் சகோதரரை கொலை செய்த கேரள தாதி நிமிஷாவின் குற்றத்துக்கு மன்னிப்பு வழங்க முடியாது என அப்தெல்ஃபத்தா மெஹ்தி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “இந்திய ஊடகங்கள் குற்றவாளி நிமிஷாவை பாதிக்கப்பட்டவராக சித்தரிக்கும் பணியில் ஈடுவருகின்றன. இது எங்களது குடும்பத்தினரிடம் ஆழ்ந்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனது சகோதரர் தலால் அப்தோ மெஹ்தியை கொலை செய்த குற்றத்துக்காகவே நிமிஷா பிரியாவுக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது. எனவே அவருக்கு மரண தண்டனையை நிச்சயம் நிறைவேற்ற வேண்டும். இந்த குற்றத்துக்கு அவருக்கு மன்னிப்பு வழங்க முடியாது‘‘ என்றார். கடந்த 2017-ம் ஆண்டு தலால் அப்தோ மெஹ்தியை கொலை செய்த குற்றத்துக்காக கேரள செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு நேற்று அது நிறைவேற்றப்பட இருந்தது. இந்த நிலையில், நீண்டகாலமாக நடைபெற்ற பலமுனை பேச்சுவார்த்தைக்கு பிறகு நிமிஷாவின் மரண தண்டனை அடுத்த உத்தரவு வரும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கேரளாவின் இஸ்லாமிய மதத் தலைவர் அபூபக்கர் முஸ்லியாரின் மத்தியஸ்தம் மற்றும் இந்திய அரசின் தீவிர முயற்சியின் பலனாக இந்த தண்டனை நிறுத்தம் சாத்தியமாகியுள்ளது. இருப்பினும், கொலையான மெஹ்தியின் குடும்பத்துக்கு குருதிப் பணம் கொடுத்து நிமிஷாவை மீட்பதில் இன்னும் சிக்கல் நீடித்து வருகிறது. https://www.virakesari.lk/article/220186

புலர் அறக்கட்டளையின் செயற்பாடுகள் தொடர்பான காணொளிகள்

2 months 1 week ago
3) வீட்டுத்திட்ட பணிகளை நிறைவு செய்ய உதவுவதற்காக திரு கந்தையா சிவராசா (சுழிபுரம் கிழக்கு) பிரான்ஸ்) குடும்பத்தினர் 25000 ரூபாவை திரு லக்‌ஷன் அவர்களுடைய வங்கிக் கணக்கில் வைப்புச் செய்துள்ளனர். இதுவரை மொத்தமாக 104970 ரூபா திரு லக்சனுடைய வங்கிக் கணக்கில் வைப்புச் செய்யப்பட்டுள்ளது.
Checked
Sat, 09/27/2025 - 18:24
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed