புதிய பதிவுகள்2

மூளைச்சாவும் உடல் அவயவங்களின் தானமும்

2 months ago
மூளைச்சாவும் உடல் அவயவங்களின் தானமும் நிஜத்திலிருந்து..... சட்ட மருத்துவம் December 16, 2025 1 Minute கடந்த வாரம் யாழ். போதனா வைத்தியசாலையில் மூளைச்சாவு அடைந்த ஒருவரிடம் இருந்து பெறப்பட்ட சீறுநீரகங்கள் வேறு தேவையான நபர்களுக்கு பொறுத்தப்படவுள்ளன. இந்நிலையில் மனிதனில் இறப்பு என்றால் என்ன, அதன் வகைகள் என்ன, மூளைச்சாவு என்றால் என்ன, மூளைச்சாவு – சட்ட ரீதியான வலு என்ன மற்றும் மூளைச்சாவின் பொழுது உறவினர்கள் உடல் அங்க தானங்களுக்கு பின்னிற்க மத ரீதியான காரணங்கள் என்ன போன்ற பல்வேறு விடயங்களை இப்பதிவு அலசுகின்றது. மருத்துவத் துறையில் இறப்பு என்றால் எமது இருதயம் நுரையீரல் ஆகியவற்றின் செயற்பாடுகள் அதாவது சுவாசம் மற்றும் இதயத்துடிப்பு ஆகியன முற்றாக நிறுத்தப்படுவதினை தொடர்ந்து மூளையின் செயற்பாடு நிறுத்தப்படல் இறப்பு ஆகும். சில சந்தர்ப்பங்களில் மூளையின் செயற்பாடு முதலில் நிறுத்தப்படுவதினை தொடர்ந்து இருதய மற்றும் சுவாச செயற்பாடுகள் நிறுத்தப்படும் உதாரணம் தலையில் நிகழும் துப்பாக்கி சூடு. மருத்துவத் துறையில் மனிதனின் இறப்பை பின்வரும் 03 வகைகளாக பிரிக்கலாம். 1. உடலியல்/மருத்துவ மரணம் (Somatic/Clinical Death): இரத்த ஓட்டம், சுவாசம் மற்றும் மூளை செயல்பாடு ஆகியவற்றின் முழுமையான, மீளமுடியாத நிறுத்தம். மரணித்த நேரம் என்பது உயிர்ப்பித்தல் சாத்தியமற்றதாக மாறும் புள்ளியைக் குறிக்கிறது. 2. மூளை மரணம் அல்லது மூளைச்சாவு (Brain Death) : பல்வேறு காரணங்களினால் மூளை அதனுடன் இணைந்த மூளைத்தண்டு இறத்தல். இதயம் இயந்திரங்களால் தொடர்ந்து துடித்தாலும், மூளைத் தண்டு உட்பட அனைத்து மூளை செயல்பாடுகளின் நிரந்தர இழப்பு மீளமுடியாததாகக் கருதப்படுகிறது. 3. கல/மூலக்கூற்று மரணம்( Cellular/Molecular Death): ஆக்ஸிஜன் குறைந்து உடலியல் இறப்புக்குப் பிறகு சில மணிநேரங்களுக்குப் பிறகு ஏற்படும் தனிப்பட்ட செல்கள் மற்றும் திசுக்களின் மரணம். இரத்த ஓட்டம் முற்றாக தடைப்படும் இடத்து அதாவது ஓட்ஸிசன் இல்லாதவிடத்து மனித மூளையின் கலங்கள் 3 தொடக்கம் 7 நிமிடங்கள் முற்றாக இறந்து விடும், இருதய கலங்கள் 3 தொடக்கம் 5 நிமிடங்களில் இறந்துவிடும் அவ்வாறே தசைகளில் உள்ள கலங்கள் பல மணித்தியாலங்களில் இறக்கும். பல சந்தர்ப்பங்களில் உடற்கூராய்வு பரிசோதனைக்கு வரும் இறந்தவர்களின் உறவினர்கள் என்னிடம் வினவும் முக்கிய கேள்வி யாதெனில் தூக்கு மாட்டி 5 நிமிடத்தில் நாம் தூக்கு கயிற்றினை வெட்டி அகற்றி விட்டொம், நீரில் வீழ்ந்து சில நிமிடங்களில் தூக்கி விட்டொம் ஏன் இறந்து விட்டார் என்பதே ஆகும். அதற்பொழுது உங்களுக்கு விளங்கும் உடலில் முக்கிய அவயவங்களான மூளை மற்றும் இருதயம் போன்றவற்கு 5 நிமிடங்கள் இரத்தம் அல்லது ஓட்ஸிசன் முற்றாக தடைப்பட்டால் இறப்பு நிகழும் என்பது. மூளைச்சாவு, இச்செயற்பாட்டின்பொழுது சில சந்தர்ப்பத்தில் மூளையின் தண்டுவடம் (brainstem) உயிர்ப்பான நிலையில் இருக்கும் அதன் காரணமாக மூளை தண்டு வடத்தில் காணப்படும் சுவாச, இருதயத்தினை கட்டுப்படுத்தும் பகுதிகள் வேலை செய்யும் இதன் காரணமாக குறித்த நபரின் இருதயம் துடித்துக் கொண்டிருக்கும் நுரையீரல் சுருங்கி விரிந்து சுவாசத்தினை மேற்கொண்டு கொண்டிருக்கும். ஆனால் மூளை மீள இயங்க முடியாதவகையில் இறந்திருக்கும். சில சந்தர்ப்பத்தில் மூளை தண்டுவடம் இறந்தால் சுவாச மற்றும் இருதய செயற்பாடுகளை நாம் இயந்திரங்கள் மூலம் மேற்கொள்ளலாம் சட்ட ரீதியாக (Transplantation Of Human Tissues Act (No. 48 of 1987)ஒருவரின் மூளை இறந்து விட்டால் அவர் சாவடைந்தவராகவே கருதப்படுவார். எனவே தான் மூளைச்சாவடைந்தவர்களிடம் இருந்து சிறுநீரகம் போன்ற அவயவங்கள் பெறப்பட்டு மற்றவர்களுக்கு மாற்றீடு செய்யப்படுகின்றன. எனவே மேற்படி செயற்பாட்டினை நாம் சட்டரீதியாக சவாலுக்கு உட்படுத்த முடியாது. இவ்வாறு மூளைச்சாவு அடைந்தவர்கள் மற்றும் இறந்தவர்களிடம் இருந்து பல்வேறுபட்ட உடல் அவயவங்கள் பெறப்பட்டு தேவையான நோயாளிகளுக்கு மாற்றீடு செய்யப்படும். தென்னிலங்கையில் குறிப்பாக சிங்கள மக்கள் இவ்வாறு உடல் உறுப்புக்களை தானம் செய்யவதில் முன்னிலை வகிக்கின்றனர். இதன் காரணமாகவே இலங்கை கண் (விழிவெண்படலம்) வழங்குவதில் முன்னிலை நாடாக திகழ்கின்றது. குறிப்பாக பௌத்த மதம் இவ்வாறான உடல் உறுப்பு தானங்களை ஊக்குவிக்கின்றது. சைவ மற்றும் ஏனைய மதங்களில் அவ்வாறான ஊக்குவிப்புக்கள் இல்லை. இதன் காரணமாக மேற்குறித்த மதத்தினரின் மூலம் உடல் உறுப்பு தானங்கள் மற்றும் இரத்த தானம் உட்பட குறைவாகவே நடைபெறுகின்றது. சைவசித்தாந்த கோட்பாடுகளும் மூளைச்சாவு அடைந்தவரிடம் இருந்து உடல் உறுப்பு தானமும் சைவ சித்தாந்த தத்துவத்தில் முக்கிய இடம் பெறுவது முப்பொருள்கள் ஆகும். அவையாவன பதி, பசு, பாசம் என்பனவே ஆகும். அந்த வகையில் பதியை அடுத்துள்ள நிலையில் உள்ளது பசுவாகும். பசுவானது ஆன்மா, ஆத்மா, உயிர், அனேகன், ஜீவன், ஜீவாத்மா மற்றும் சதசத்து என்றெல்லாம் அழைக்கப்படுகின்றது. உடலை இயக்கக்கூடிய கண்ணிற்குத்தெரியாதொரு சூக்குமப்பொருளே ஆன்மாவாகும். சித்தாந்திகளிக் கருத்துப்படி உடலை இயக்கும் சக்தியே ஆன்மாவாகும். சைவ சமயத்தின்படி, உடல் என்பது நிலையற்ற, அழிவுக்குட்பட்ட பொருள், அது ஆன்மாவைத் தாங்கும் ஒரு வாகனம். மாறாக, ஆன்மா என்பது நிலையான, அழிவற்ற, அழிந்துபோகாத ஒரு சாராம்சம். இது உடலை இயக்கும் சக்தி, அறிவின் இருப்பிடம், மற்றும் வாழ்வின் ஆதாரமாகும். எனவே மூளைச்சாவு அடைந்த ஒருவரிடம் இருந்து சிறுநீரகம், ஈரல் … போன்ற உடல் அங்கங்களை அகற்றுவதினால் அவரின் ஆன்மாவினை நாம் அழிக்க முடியாது மாறாக உடல் அவயவங்களை அதாவது உடலை இயக்கும் சூக்கும சக்தியான ஆன்மாவினை நாம் வேறு உடலுக்கு மாற்றுவதன் மூலம் குறித்த நபரினை சில காலம் பூமியில் வாழ வழிசெய்யலாம் அதாவது இறந்தவரின் ஆத்மாவினை இன்னொருவரின் உடலில் வாழ வழிசெய்யலாம். உணர்ச்சி பூர்வமாக சிந்திக்காது அறிவு பூர்வாமாக சிந்திப்போம். நன்றி https://tinyurl.com/c82yh7rb

ராமநாதன் அர்ச்சுனாவுக்கு பிடியாணை!

2 months ago
எங்களுக்கு பார்க்க அவருக்கு ஏதோ மண்டை பிரச்சனை போல உள்ளது. ஆனால், அவர் தெரிந்துகொண்டே பல விடயங்களை செய்கின்றார் என நண்பர் ஒருவர் கூறினார். முக்கியமாக சனங்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக அவர் கருத்துக்களை இடக்கு முடக்காக சொல்கின்றாராம். இவர் யூரியூப்பில் காணொளி காண்பித்தால் அதை விரும்புவதற்கும், பாராட்டுவதற்கும் பலர் உள்ளார்கள். அர்ச்சுனாவை சுற்றியுள்ள தமிழ், சிங்கள அரசியல்வாதிகளுக்கு அர்ச்சுனா அளவுக்கு பொது அறிவு, சோசல் மீடியாவில் புகுந்து விளையாடக்கூடிய அறிவு, பரீட்சயம் இல்லாமையால் மற்றவர்களை முக்கியமாக இதர தமிழ் அரசியல்வாதிகளை அர்ச்சுனாவால் நல்லாய் வறுத்து எடுக்க முடிகின்றது. நேற்று ஒரு நண்பனுடன் நாட்டு விடயங்களை பற்றி கதைத்தபோது அர்ச்சுனா பற்றி குறிப்பிட்டு அவருடன் அழைப்பு எடுத்து கதைக்கலாமே என்று பகிடியாக சொன்னேன். ஐயையோ இவனுடன் கதைக்கபோனால் அவன் எனது போன் நம்பரை எடுத்து எல்லாரும் பார்க்கும்படி யூரியூப்பில் போட்டு விடுவான் என நண்பன் சொன்னான்.

இலங்கையின் முக்கிய தலைவர்களை சந்தித்தார் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர்

2 months ago
இந்திய வெளிவிவகார அமைச்சர் - இலங்கை வெளிவிவகார அமைச்சர் இடையில் சந்திப்பு! 23 Dec, 2025 | 04:19 PM இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இடையில் செவ்வாய்க்கிழமை (22) சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார். இந்த விஜயத்தின் ஒரு அங்கமாக, இந்திய வெளிவிவகார அமைச்சர், இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த கலந்துரையாடலின் போது, 'திட்வா' சூறாவளியால் இலங்கை பாதிப்பட்ட போது முதல் நாடாக விரைந்து வந்து இந்தியா வழங்கிய உதவிகளையும், 'சாகர் பந்து' நடவடிக்கையையும் பாராட்டி, மீட்பு பணிகளின் அடுத்த கட்டத்திலும் இந்தியாவின் ஆதரவை எதிர்பார்ப்பதாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/234210

பழைய பூங்காவினுள் உள்ளக விளையாட்டரங்கு - சுமந்திரன் தரப்புக்கு தோல்வியா ?

2 months ago
இதில் வழக்கு போட்டவர் சுமன்னால் போன தேர்தலுக்கு உள்ளீர்க்கப்பட்ட “கிட்டு” என்கின்ற கிருஸ்ணவேணி என நினைக்கிறேன். நிழலிக்கும் தெரிந்தவர்தான் என நினைக்கிறேன். இந்த வழக்கை போட அவருக்கு முடியாது எனில் மாநகரசபை அல்லது பசுமை அமைப்புகள் போடலாம். இந்தியாவின் பசுமை தீப்பாயம் போல கொழும்பிலும் ஒரு அமைப்பு உள்ளது. ரிசார்ட் வில்பற்றில் போட்ட கள்ள ரோட்டில் அது தலையிட்டது. சுமனை குறை சொல்வதே பிறவி கடன் என இராமல் - இப்படி ஏதும் அல்லது மேன்மிறையீட்டுக்கு முயலாலம். சுமன் இதையாவது செய்தார்…. கஜன், சிறிகந்தா, மணி, தவராசா….எல்லாரும் லோயர்தானே? ஒரு துரும்ப்பைதன்னும் தூக்கி போட்டவையோ?

பழைய பூங்காவினுள் உள்ளக விளையாட்டரங்கு - சுமந்திரன் தரப்புக்கு தோல்வியா ?

2 months ago
உங்கள் கருத்தில் நான் தவறேதும் சொல்லவில்லை. நீங்கள் உட்பட சுமன் பற்றிய பலரின் பார்வைதான் எனதும். ஆங்கிலத்தில் “கழுவிய தண்ணீரோடு, குழந்தையையும் எறிய கூடாது” என்பார்கள். என் நிலைப்பாடும் அதுவே. ஒத்தை சீட்டு ஒப்பிலாமணி தாக்கப்பட்டார்😂

ராமநாதன் அர்ச்சுனாவுக்கு பிடியாணை!

2 months ago
ராமநாதன் அர்ச்சுனாவுக்கு பிடியாணை! நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறப்படும் வழக்கின் விசாரணையின் போது நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறியதால், யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிராக கொழும்பு, கோட்டை நீதிவான் நீதிமன்றம் பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, கொழும்பு, கோட்டை நீதிவான் இசுரு நெத்திகுமார நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனவை கைது செய்து நீதிமன்றில் முன்னலைப்படுத்த இன்று உத்தரவிட்டார். https://athavannews.com/2025/1457050

பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்

2 months ago
Ex Commodity Floating Developed Float CODE US Dollar USD Euro EUR Japanese Yen JPY British Pound GBP Swiss Franc CHF Swedish Krona SEK (E)urop, (M)iddle(E)ast, (A)sia EMEA Float CODE Czech Koruna CZK Hungarian Forint HUF Israeli Shekel ILS Polish Zloty PLN Romanian Leu RON Ukranian Hryvnia UAH AsiaPac Float CODE Korean Won KRW Philippine Peso PHP New Taiwan Dollar TWD Thai Baht BHT Vietnamese Dong VND Ex-Commodity Pegged Developed (ExCom) PEG CODE Danish Krone EUR/DKK Asia (Ex-Comm) PEG CODE Hong Kong Dollar USD/HKD Singapore Dollar SGD/? Commodity Floating Developed Commodity Float CODE Australian Dollar AUD New Zealand Dollar NZD Canadian Dollar CAD Norwegian Kroner NOK EMEA Commodity Float CODE Egyptian Pound EGP Icelandic Krona ISK Russian Rouble RUB (M) South African Rand ZAR Turkish Lira TRY Asia Commodity Float CODE Indian Rupee INR Indonesian Rupiah IDR Kazakhstan Tenge KZT Malaysian Ringgit MYR இலத்தீன் அமெரிக்க நாடுகள் LATAM Commodity Float CODE Argentine Peso ARS Brazilian Real BRL Chilean Peso CLP Colombian Peso COP Mexican Peso MXN Peruvian New Sol PEN EMEA Commodity PEG CODE Kuwaiti Dinar KWD/? Saudi Arabian Riyal USD/ SAR UAE Dirham USD/AED Bahrainian Dinar USD/BHD Omani Rial USD/OMR Qatar Riyal USD/QAR Asia Commodity PEG CODE Chinese Yuan CNH/Not known

கதை - 192 / "மெழுகுவர்த்தி கேள்வியை சந்தித்தபோது / When the Candle Met the Question"

2 months ago
கதை - 192 / "மெழுகுவர்த்தி கேள்வியை சந்தித்தபோது / When the Candle Met the Question" / பகுதி / Part: 02 / In English & Tamil சாமுவேல் யாழ்ப்பாண போதனை மருத்துவ மனையிலும் சாரா வேம்படி மகளீர் கல்லூரியிலும் கடமையாற்றுவதால், திருமணமான பின், அவர்கள் யாழ்ப்பாணத்திலேயே தங்கள் வாழ்வை தற்காலிகமாக அமைத்தார்கள். சாரா, திருமண தம்பதிகளாக, தங்களது முதல் கிறிஸ்துமஸ்ஸை பிரத்தியேகமாக கொண்டாட, வீட்டை கவனமாக அலங்கரித்தாள். ஜன்னல் அருகே ஒரு சிறிய கிறிஸ்துமஸ் மரம் நின்றது. மெழுகுவர்த்திகள் மெதுவாக மின்னின. அவள் வீட்டு வேலைகள் செய்யும் போதும் கூட கிறிஸ்துமஸ் பாடல்களைப் பாடினாள். ஆனால் சாமுவேல், இவைகளில் ஒன்றிலும் தனிக்கவனம் செலுத்தாமல், தானும் தன்பாடாக இருந்தான். அதைக்கவனித்த சாரா, "கிறிஸ்துமஸ் நெருங்குகிறது, 2026 பிறக்கப்போகுது, ஆனால் நீ அமைதியாக இருக்கிறாய்," என்று அவள் சிரித்துக் கொண்டே சொன்னாள். "உன் ஆர்வத்தை, மகிழ்வை, செயலை பார்த்து, நான் யோசித்துக் கொண்டு இருக்கிறேன்," என்று அவன் பதிலளித்தான். "இது உலகை இரட்சிக்க பிறந்த இயேசுவின் பிறந்தநாள்," என்று அவள் இயல்பாகச் சொன்னாள். சாமுவேல் தயங்கி, பின்னர் மெதுவாகக் கேட்டான், "அவர் எப்போது பிறந்தார் என்று எப்படி உனக்குத் தெரியும்?" சாரா சிரித்தாள். "டிசம்பர் 25. அது அனைவருக்கும் தெரியும். ஏன் குட்டி பிள்ளைக்கு கூட , வேண்டும் என்றால் கேட்டுப் பாருங்க" என்றாள். ஆனால், அப்பொழுது சாமுவேல் வாக்குவாதம் செய்யவில்லை. அவன் அமைதியாக சிரித்தான், மெழுகுவர்த்திகளை ஏற்றி வைக்க உதவினான். அன்பு, பொறுமையுடன் தொடங்க வேண்டும் என்பது அவனுக்குத் தெரியும். மற்றது, இது, திருமணத்தின் பின், அவளின், முதல் கிறிஸ்மஸ். வாரங்கள் கழித்து, ஒரு சாதாரண மாலையில், உப்பரிகையில் [பால்கனியில்] அமர்ந்து இருவரும் நிலா ஒளியில் கொஞ்சம் ஓய்வு பெற்றுக் கொண்டு ஒருவர் மேல் ஒருவர் சாய்ந்து கொண்டு இருந்தார்கள். அன்று மூன்றாம் பிறை வானில் ஒளிர்ந்துகொண்டு இருந்தது. சாமுவேலுக்கு அப்பொழுது பாரதிதாசனின் ஒரு பாடல் நினைவுக்கு வந்தது. துருக்கச் சிறுவன் ... "மூன்றாம் பிறையாய்த் தோன்றும் காலை என்கூட்டத்தார் உன்னைத் தொழுவார் ஆதலாலே அழகு நிலவே துருக்கருக்குச் சொந்தப் பொருள் நீ ! கத்தோலிக்கச் சிறுவன்... "கன்னி மரியாள் உன்மேல் நிற்பாள் ஆதலாலே அழகு நிலவே கத்தோலிக்கச் சொத்து நீதான்! இந்துச் சிறுவன்... எங்கள் சிவனார் முடியில் இருப்பாய் ஆதலாலே அழகு நிலவே இந்து மதத்தார் சொந்தப் பொருள் நீ ! அவன் அந்த பாடல் வரிகளை பாடிக் காட்டிவிட்டு, சாராவிடம் கேட்டான்: மூன்று பேரும் மொழியைக் கேட்டால், யாருக்கு சொந்தம் தீர்ப்புச் சொல்வாய்? சாரா, எந்த சிந்தனையும் செய்யாமல், எடுத்த உடனேயே, அது கத்தோலிக்கருக்கே என்றாள். சாமுவேல், அவள் கன்னத்தை கிள்ளிவிட்டு, ... பாரதிதாசனின் அடுத்தவரியை பாடினான். சுயமரியாதைச் சிறுவன்... யாவரும் மனிதர் என்பது தெரிந்தால், நிலவும் பொதுவே என்பது தெரியும், அறிந்து வாழ்வீர் அன்பர் கூட்டமே! அவள் ஒன்றும் சொல்லவில்லை, மௌனமாக அவனைப் பார்த்தாள். சாமுவேலும் மௌனமாக ஒரு வரலாற்றுப் புத்தகத்தைத் திறந்தான். “சாரா,” அவன் மெதுவாகக் கூறினான், கிருஸ்து [இயேசு] இறந்து 340 ஆண்டுகளுக்கு பின்புதான், போப் ஜூலியஸ் I [Pope Julius I] டிசம்பர் 25 ஆம் திகதியை கிறிஸ்மஸ் கொண்டாட்டத்திற்கான திகதியாக அறிவித்தார். எனினும் இதற்கு முன்பு, இது மூன்று வெவ்வேறு திகதிகளில் கொண்டாடப்பட்டுள்ளது. 29 மார்ச், 6 ஜனவரி, மற்றது ஜூன் மாதத்தில், திகதி சரியாகத் தெரியவில்லை என்றான். அவள் மேலே பார்த்தாள், பின் சாரா முகம் சுளித்தாள். “அப்படியானால் அதை ஏன் மாற்ற வேண்டும்?” அவள் சட்டென்று கேட்டாள். அங்குதான் அவர்களின் சூழ்ச்சியே இருக்கிறது என்றவன், "கிறிஸ்மஸ் விழாவை டிசம்பர் 25 இல் தீர்மானித்தது, கிறிஸ்த்தவ சமயம் அன்றி, வேறு சமயத்தைச் சார்ந்த ஐரோப்பியர்களை கிறிஸ்தவத்திற்கு மாற்றுவது [converting the heathen to Christianity] இலகுவாக இருந்தது. ஏன் என்றால், அவர்கள் ஏற்கனவே, மாரிகாலத்தின் நடுவில் சில விழாக்களை கொண்டாடிக் கொண்டு இருந்ததால் - “சாட்டர்னேலியா. யூல். பேகன் [Saturnalia. Yule. Pagan] கொண்டாட்டங்கள் - அதனுடன் கிறிஸ்மஸ் விழாவை ஒன்றிணைக்கும் பொழுது பெரும் பிரச்சனைகள் எழவில்லை." சுருக்கமாக, “கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களை மாற்ற, கிறிஸ்தவத் தலைவர்கள் ஏற்கனவே உள்ள பண்டிகைகளை கிறிஸ்துவின் கதையுடன் இணைத்தனர்.” என்றான். அறை அமைதியாகிவிட்டது. சாரா கோபப்படவில்லை. ஆனால் அவளுக்குள் ஏதோ ஒன்று மாறியது. அதை கவனித்த சாமுவேல், " சாரா நான் ஒன்றையும் பழிக்கவில்லை, இன்றைய இந்து சமயம் கூட, தென் இந்தியரை, தங்களுக்குள் உள்வாங்க, தங்களின் வேத சமயத்துக்குள், பண்டைய தமிழரின் சைவ சமயத்தை உள்வாங்கியது ஒரு வரலாறு. அதற்காக முருகன் → ஸ்கந்தன் / சுப்பிரமணியன் ஆனான்! திருமால் → விஷ்ணு ஆனான்! சிவன் → ருத்திரன் ஆனான்! கொற்றவை →பார்வதி / துர்க்கை ஆனாள்! அதற்குத் தக்க புராணங்களும் இயற்றப்பட்டன." என்றான். அறை அமைதியாகிவிட்டது. சாரா கோபப்படவில்லை. ஆனால் அவளுக்குள் ஏதோ ஒன்று மாறியது. அவளின் வாயும் மனமும் உலக நாடுகளின் அன்பு இரட்சகரை துதித்துக்கொண்டு இருந்தது. "உலக நாடுகளின் அன்பு இரட்சகர் உலர்ந்த தொட்டிலில் பிரகாசித்த கதையை குடும்பம் ஓங்கிட தெம்பை கொடுக்க கேளுங்கள் அதை நம்பிக்கை கொண்டு!" "வானத்தில் ஒளிர்ந்து மினுங்கும் தாரகை கானத்தில் நிற்பவருக்கும் வழி காட்டிட மூன்று ஞானிகள் அறிகுறி அறிந்து அன்பு தெய்வத்தை தேடி வந்தனர்!" "காடுமலைகள் தாண்டி மழலையை பார்த்திட மேடுபள்ளம் நடந்து பரிசுடன் வந்தனர் பாலகன் மேலே விண்மீன் நிற்க இலக்கு உணர்ந்து விழுந்து வணங்கினர்!" "ஆத்மபலம் கொண்ட பரிசு கொண்டுவந்து கந்தல்களில் மறைந்திருந்த பாலகனை காட்டி உண்மை ஆண்டவனுக்கு சாட்சி பகிர்ந்து மண்ணுக்கும் விண்ணுக்கும், அடையாளம் காட்டினர்!" Brief of 'When the Candle Met the Question' / Part: 02 The First Christmas It was their first Christmas as a married couple, still living near Jaffna. Sarah decorated the house carefully. A small Christmas tree stood near the window. Candles flickered softly. She sang hymns as she worked. Samuel watched. “You’re quiet,” she said, smiling. “I’m thinking,” he replied. “It’s Jesus’ birthday,” she said naturally. Samuel hesitated, then asked gently, “Do you know when he was born?” Sarah laughed. “December 25. Everyone knows that.” Samuel did not argue that night. He only smiled and helped her light the candles. Love, he knew, must begin with patience. The Question Enters the House Weeks later, on an ordinary evening, Samuel opened a history book. “Sarah,” he said softly, “did you know that Christmas was officially fixed on December 25 only 340 years after Jesus’ death?” She looked up. “Pope Julius I made that declaration,” he continued. “Before that, Christians remembered Jesus’ birth on March 29, January 6, and even a date in June.” Sarah frowned. “Why change it then?” “Because Europe already had midwinter festivals,” Samuel said. “Saturnalia. Yule. Pagan celebrations.” “To convert non-Christians, Christian leaders merged existing festivals with Christ’s story.” The room fell silent. Sarah was not angry. But something inside her shifted. Her mouth and mind were filled with praise for the beloved Savior of the world. "Jesus, devoted redeemer of all nations, has shone forth, Let the whole family of the faithful celebrate the stories The shining star, gleaming in the heavens, makes him known at his birth and, going before, has led the Magi to his cradle Falling down, they adore the tiny baby hidden in rags, as they bear witness to the true God by bringing a mystical gift" நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 03 தொடரும் / Will follow துளி/DROP: 1951 [கதை - 192 / "மெழுகுவர்த்தி கேள்வியை சந்தித்தபோது / When the Candle Met the Question" / பகுதி / Part: 02 https://www.facebook.com/groups/978753388866632/posts/32961478550167367/?

உக்ரேனின் முக்கிய பிராந்தியமான ஒடேசா மீது தாக்குதலை தீவிரப்படுத்திய ரஷ்யா!

2 months ago
உக்ரேனின் முக்கிய பிராந்தியமான ஒடேசா மீது தாக்குதலை தீவிரப்படுத்திய ரஷ்யா! தெற்கு உக்ரேன் பிராந்தியமான ஒடேசாவில் ரஷ்யா தனது தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது. இதனால் பரவலான மின்வெட்டு ஏற்பட்டு, பிராந்தியத்தின் கடல்சார் உள்கட்டமைப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. உக்ரைன் துணைப் பிரதமர் ஒலெக்ஸி குலேபா, மொஸ்கோ இப்பகுதியில் “திட்டமிட்டு” தாக்குதல்களை நடத்தி வருவதாகக் கூறினார். மீண்டும் மீண்டும் தாக்குதல்கள் நடத்துவது, உக்ரேனின் கடல்சார் தளவாடங்களுக்கான அணுகலைத் தடுககும் மொஸ்கோவின் முயற்சி என்று ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறினார். டிசம்பர் மாத தொடக்கத்தில், கருங்கடலில் ரஷ்யாவின் நிழல் கடற்படை டேங்கர்கள் மீது ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டதற்கு பதிலடியாக உக்ரேனின் கடலுக்கான அணுகலைத் துண்டிப்பதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அச்சுறுத்தினார். “நிழல் கடற்படை” என்பது 2022 ஆம் ஆண்டு உக்ரேன் மீதான முழு அளவிலான படையெடுப்பிற்குப் பின்னர் விதிக்கப்பட்ட மேற்கத்திய தடைகளைத் தவிர்க்க ரஷ்யாவால் பயன்படுத்தப்பட்ட நூற்றுக்கணக்கான டேங்கர்களைக் குறிக்கும் ஒரு சொல். திங்கட்கிழமை (23) மாலை தாக்குதடல்கள் ஒடேசாவில் உள்ள துறைமுக உள்கட்டமைப்பைத் தாக்கி, ஒரு சிவிலியன் கப்பலை சேதப்படுத்தியதாக பிராந்திய ஆளுநர் கூறினார். இது நூற்றுக்கணக்கான தாக்குதல்களின் அண்மையது ஆகும் – இது இப்பகுதியில் பல நாட்களாக மின்சார விநியோகத்தை சீர்குலைத்து பல உயிரிழப்புகளை ஏற்படுத்தியது. ஞாயிற்றுக்கிழமை இரவு முன்னெடுக்கப்பட்ட தாக்குதல்கள் 120,000 பேருக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டதுடன், ஒரு பெரிய துறைமுகத்தில் தீ விபத்துக்கும் வாழிவகுத்தது. இது டஜன் கணக்கான மாவு மற்றும் தாவர எண்ணெய் கொள்கலன்களை அழித்தது. கடந்த வாரம், ஒடேசாவின் கிழக்கே உள்ள பிவ்டென்னி துறைமுகத்தில் நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் எட்டு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் குறைந்தது 30 பேர் காயமடைந்தனர். இந்த வார தொடக்கத்தில் நடந்த மற்றொரு தாக்குதலில் தனது மூன்று குழந்தைகளுடன் காரில் பயணித்த ஒரு பெண் கொல்லப்பட்டார். மேலும் உக்ரேன் மற்றும் மொல்டோவாவை இணைக்கும் ஒடேசா பிராந்தியத்தின் ஒரே பாலம் தற்காலிகமாக துண்டிக்கப்பட்டது. https://athavannews.com/2025/1457017

முன்னாள் மனைவிக்கு எதிரான குற்றச்சாட்டில் கணவன் மீது 56 பாலியல் குற்றச்சாட்டு!

2 months ago
ஸ்விண்டனில் முன்னாள் மனைவிக்கு எதிரான குற்றச்சாட்டில் கணவன் மீது 56 பாலியல் குற்றச்சாட்டு! தனது முன்னாள் மனைவிக்கு 13 ஆண்டுகளாக போதைப்பொருள் கொடுத்து பாலியல் வன்புணர்வு செய்தமைக்காக முன்னாள் டோரி கவுன்சிலர் ஒருவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில் மேலும் ஐந்து ஆண்கள் மீதும் பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. வழக்கில் தற்போது லண்டன், என்ஃபீல்டில் வசித்து வரும் 49 வயதான பிலிப் யங் என்ற பிரதான சந்தேக நபர் மீது பாலியல் வன்புணர்வு உட்பட குறைந்தது 56 குற்றச்சாடுகள் சுமத்தப்பட்டுள்ளதாக வில்ட்ஷயர் பொலிஸார் தெரிவித்தனர். யங் முன்பு 2007 முதல் 2010 வரை ஸ்விண்டன் பெருநகர உள்ளூராட்சி அமைப்பின் கன்சர்வேடிவ் கவுன்சிலராக இருந்தார். அவர் 2010 ஆம் ஆண்டுக் காலப் பகுதியில் கலாச்சாரம், மீளுருவாக்கம் மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்கான அமைச்சரவை உறுப்பினராக பதவி வகித்தார். அண்மையில் அவர் ஆலோசனை நிறுவனமான பிரசெடோவில் தலைமை இயக்க அதிகாரியாக இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த வழக்கில் யங் தவிர மேலும் ஐந்து ஆண்கள் மீதும் பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள நிலையில் அவர்களது பெயர் விபரங்கள் வெளியிடப்படவில்லை. இந்த நிலையில் குறித்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஆறு சந்தேக நபர்களையும் இன்று ஸ்விண்டன் நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை வில்ட்ஷயர் பொலிஸார் மேற்கொண்டனர். https://athavannews.com/2025/1457042

தங்கத்தின் விலையில் புதிய உச்சம்; ஒரு பவுண் 306,000 ரூபா!

2 months ago
அமெரிக்கா – வெனிசுலா பதட்டம்; தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சம்! சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையானது திங்கட்கிழமை (22) 4,400 அமெரிக்க டொலர்களுக்கு மேல் உயர்ந்து புதிய வரலாறு காணாத உச்சத்தை எட்டியது. அதிகரித்து வரும் புவிசார் அரசியல் பதட்டங்கள் மற்றும் மென்மையான பணவியல் கொள்கை ஆகியவை இந்த விலை ஏற்றத்திற்கு முக்கிய உந்துதல்களாக அமைந்ததாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். ஸ்பாட் தங்கம் திங்கள் மதியம் 1:54 மணிக்கு (18.54 GMT) அவுன்ஸ் ஒன்றுக்கு 2.2% உயர்ந்து $4,434.26 ஆக இருந்தது. இதற்கு முன்பு அது $4,441.92 என்ற உச்சத்தை எட்டியது. அதேநேரம், அமெரிக்க தங்க எதிர்காலம் 1.9% உயர்ந்து அவுன்ஸ் ஒன்றுக்கு $4,469.40 ஆக விற்பனை செய்யப்பட்டது. அமெரிக்காவிற்கும் வெனிசுலாவிற்கும் இடையிலான அதிகரித்த புவிசார் அரசியல் பதட்டங்கள் அதிகரித்துள்ள நிலையில் குறுகிய கால இடைவேளையில் இந்த உயர்வு ஏற்பட்டுள்ளது. புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார நிச்சயமற்ற காலங்களில் தங்கம் ஒரு பாதுகாப்பான சொத்தாக செழித்து வளர்கிறது. வலுவான அமெரிக்க மத்திய வங்கி கொள்முதல், பாதுகாப்பான புகலிட ஓட்டங்கள் மற்றும் குறைந்த வட்டி விகிதங்கள் ஆகியவற்றால் தூண்டப்பட்ட 1979க்குப் பின்னர் அதன் மிகப்பெரிய வருடாந்திர உயர்வில் தங்கத்தின் விலை இந்த ஆண்டு 69 சதவீதத்துக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. அதேநேரம், 69.44 டொலர்கள் என்ற புதிய உச்சத்தை எட்டிய பின்னர், ஸ்பாட் வெள்ளி 1.9% உயர்ந்து $68.40 ஆக இருந்தது. இந்த ஆண்டு இதுவரை அதன் விலைகள் 136% க்கும் அதிகமாக உயர்ந்துள்ளன. இந்தியாவில் பண்டிகைக் காலத்தில் அதிகரித்து வரும் வெள்யின் தொடர்ச்சியான விநியோக-தேவை பற்றாக்குறை மற்றும் இறக்குமதி தேவை என்பன வெள்ளியின் அண்மைய விலை உயர்வுக்கு காரணமாக உள்ளன. இதேவ‍ேளை, பிளாட்டினத்தின் விலை 5.4% உயர்ந்து $2,079 ஆக இருந்தது – 17 ஆண்டுகளுக்குப் பின் மேலான அதிகபட்சத்தை எட்டியது. அதே நேரத்தில் பல்லேடியம் 2.1% உயர்ந்து $1,748.84 ஆக உயர்ந்து – கிட்டத்தட்ட மூன்று ஆண்டு உயர்வை எட்டியது. இலங்கை விலை விபரம்! கொழும்பு, செட்டியார் தெருவின் தங்க விலைகளுக்கு அமைவாக இலங்கையில் இன்று 24 கரட் தங்கம் ஒரு பவுணின் விலையானது 352,000 ரூபாவாக காணப்படுகிறது. அதேநேரம், 22 கரட் தங்கத்தின் விலையானது 325,600 ரூபாவாக காணப்படுவதாக அகில இலங்கை நகைகள் விற்பனையாளர் சங்கப் பொதுச் செயலாளர் ஆர்.பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1457032

பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்

2 months ago
வளர்ந்த நாடுகளில் மற்ற G10 நாடுகளான Australia - AUD Canada - CAD New Zealand - NZD Norway - NOK இந்த நாலு நாடுகளின் நாணயங்களின் பெறுமதியினை அந்த நாடுகளின் commodity export தாக்கம் செலுத்துவததால் இந்த நாலு நாடுகளையும் Commodity float என கூறப்படுகிறது.

பங்கு/கிரிப்டோ வர்த்தகம் - வா பங்கு ஒரு கை பார்க்கலாம்

2 months ago
1992 காலப்பகுதியில் முகாமைத்துவமையப்பட்ட மிதக்கவிடப்பட்ட நாணய கொள்கைகளை(Managed float) நாடுகள் பின்பற்றினாலும் அந்த நாண்யங்களின் பெறுமதி ERM இனால் கட்டுபடுத்தப்பட்டு ஒரு pegged currencies போல ஜேர்மன் நாணயத்திற்கெதிராக செயற்பட்டது, அதனாலேயே பிரித்தானியா ERM இன் விதியினை பின்பற்றுவதற்காக தனது வெளிநாட்டு இருப்புக்களை தொடர்ந்து விற்றது (வெளிநாட்டு இருப்பினை விற்று பவுண்ட்ஸினை வாங்குவதன் மூலம் அன்னிய செலாவணி பரிமாற்று விகிதத்தினை உயர்த்த முயன்றது, அதே நேரம் குறித்த நாளிலேயே இரண்டு வட்டி விகித அதிகரிப்பினை 12%, 15% என அதிகரித்து அன்னிய செலாவணி வர்த்தகர்களை short squeeze செய்யமுயன்று தோற்றுப்போனது. 90 களின் இறுதியில் தோற்றம் பெற்ற யுரோ நாணயம் இந்த பிரச்சினைக்கு முடிவுகட்டியது ஒரு நாணயம் இருந்ததால் அதற்கென ஒரு மத்திய வங்கியும் உருவானது.
Checked
Tue, 02/24/2026 - 19:36
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed