2 months 1 week ago
விசாரித்தமைக்கு நன்றி! வெள்ளம் வரமுதலே இடர் வானிலை பற்றிய எச்சரிக்கைகள் தொலைபேசியில் சில தடவைகள் வந்ததால், எல்லோரும் வீட்டுக்குப் போய் ஒதுங்கிக் கொண்டோம், அதன் பிறகு தான் ஒரு சீசனில் பெய்ய வேண்டிய மழை இரு மணி நேரங்களில் கொட்டித் தள்ளியது. வீதிகள், கார் தரிப்பிடங்களில் வாகனங்கள் சில இடங்களில் வெள்ளத்தில் மாட்டிக் கொண்டிருக்கின்றன. அதிர்ஷ்டவசமாக உயிர் இழப்புகள் இல்லை. ரெஸ்லா போன்ற மின்சாரக் கார்கள் மட்டும் தான் தண்ணீர் மேவிச் சென்றாலும் ஓடக்கூடிய அளவுக்குத் தப்பியிருக்கின்றன. Exhaust pipe இல்லாதது தான் காரணம் என்கிறார்கள்.
2 months 1 week ago
அய்யா என்னுடைய உறவு ஒன்று ..அனுபவித்தையே எழுதினேன்....புதிதாக எதையும் கண்டுபிடிக்கவில்லை ..அவ்வளவுதான்.. எந்த இடத்தில் என்ன நடக்கும் என்பதையே இப்போதைய நிகழ்வுகள் ...சொல்கின்றன...எதற்கும் அவதானமாக இருப்பது...நல்லது
2 months 1 week ago
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் முக்கிய பதவிகள் பரமேஸ்வரன் கோவிலில் சென்று வழிபட்டு திருநீறு அணியக் கூடிய சைவர்களுக்குத் தான் கிடைக்கும். ஏனையோர் குதிரைக் கொம்பு போல அரிது! அதே டிசைனில் முஸ்லிம்களுக்கு என்று உருவான பல்கலை தான் தென்கிழக்குப் பல்கலை. இது இலங்கையில் சாதாரணமான போக்கு. ஆனால், நீங்கள் சொல்வது போல இஸ்லாமியப் பாணி கட்டுபாடுகள் கடுமையென்பது பொய்க்கதை. இலங்கையின் ஏனைய அரச பல்கலைகள் போலவே இங்கேயும் பள்ளிவாசலுக்கு மேலதிகமாக சைவக் கோவில், கிறிஸ்தவ ஆலயம், பௌத்த விகாரை என்பன இருக்கின்றன.
2 months 1 week ago
2 months 1 week ago
2 months 1 week ago
நம்ம ட்ரம்ருக்கு..கனடாவில் உள்ள சிவன்கோவிலுக்கு வந்து எள்ளெண்ணை எரிக்கச் சொல்லவும்... ஜஸ்டிசார் ..கவனமாய்ருப்பாரே...சுழியோடி...கப்பலே வைத்திருப்பார்...அவசரத்துக்கு தொடர்பு..கொள்ளவும்..ரசோ..நில்மினி..மற்றும் பெயர் மறந்த அமெரிக்கவாழ் உறவுகள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கவும்
2 months 1 week ago
மன்னிக்கவும் அல்வாயன். நான்தான் தவறான தகவலை வழங்கி விட்டேன். மேலே நீங்களும், நிழலியும் கூறியதே சரியான தகவல்.
2 months 1 week ago
இது உண்மையா....நான் ஒலுவில் பகுதியில் அமைந்த பல்கலைக்கழம் என்று கருவிட்டேன் ...எதுக்கும் உங்கள் கருத்தையும் மீளாய்வு செய்க ...என் தவறெனில் சாரி... நன்றி நிழலி....இங்கு இசுலாமியக் கோட்பாடு கடுமையாக கடைப்பிடிக்கப்படுவதாக அறிந்தேன்.
2 months 1 week ago
தகவலுக்கு நன்றி நிழலி. 🙂
2 months 1 week ago
தமிழ் சிறி, மஹிந்தவின் ஊர் அம்பாந்தோட்டை. தென் கிழக்கு பல்கலைக்கழகம் அம்பாறை மாவட்டத்தில் ஒலுவிலில் அமைந்திருக்கு. இங்கு முஸ்லிம், தமிழ் மற்றும் சிங்கள மாணவர்கள் என மூவினமும் கல்வி கற்கின்றனர். முஸ்லிம் மாணவர்களின் எண்ணிக்கை இங்கு அதிகம்.
2 months 1 week ago
6 வயது சிறுமி பாலியல் குற்றவாளிக்கு, ஆண்மை நீக்க உத்தரவிட்ட மடகஸ்கார் நீதிமன்றம்!
2 months 1 week ago
ஓடின சைக்கிள் சில்லை ஒருமாதிரி கொண்டுவந்து ஒய்யாரமாய் வீட்டிலே ஒளிரும் விளக்காக்கி ஒரின்பம் காண்கின்றேன்❤️ Thava Arumugam
2 months 1 week ago
பாலியல் துஷ்பிரயோகம் செய்தவர் எந்த நாடு என்று தெரியவில்லை. ஆனால்... ஜேர்மனியில் இருந்து சென்ற மற்ற ஒருவர் சண்டித்தனம் செய்து இருக்கின்றார். இந்த விடுமுறைக்கு... இன்னும் நிறைய சம்பவம் நடக்கும் போலுள்ளது.
2 months 1 week ago
அங்க துட்டு கூடவோ? ஐயா புறம் ஜேர்மனி?கனடா? சுவிஸ்? வெளிநாடுகளில் இருந்து போகிறவர்கள் தங்கள் மிகவும் கூடிய சொந்தங்களிலேயே கையை காலைப் போடுகிறார்கள். வெளிநாட்டு சாமான்களைக் கொடுத்தே ஒரு கவற'சியை உண்டு பண்ணுகிறார்கள் போல தெரிகிறது. சுலபமாக தப்பாமல் கடும் தண்டனை கொடுக்க வேண்டும்.
2 months 1 week ago
ஆமாம் வீட்டிலே தான். 22ம் திகதிவரை நிற்பேன். ஜஸ்ரினின் ஊரில் மிக மோசமான வெள்ளம். வாழ்க்கையில் போராட்டமா? போராட்டமே வாழ்க்கையா? இப்போ தான் ரெக்சாஸ் மாநிலத்தில் 120 பேர் இறந்து இன்னும் பலரைக் காணவில்லை.
2 months 1 week ago
அல்வாயான், தென் கிழக்கு பல்கலைக்கழகம் என்றால்... மகிந்த ராஜபக்சவின் ஊர். அரசன் எவ்வழியோ... குடிகளும் அவ்வழியே. 😂 அதுக்காக.. மற்ற சிங்களப் பகுதிகள் திறம் என்று நினைக்கப் படாது. 🤣
2 months 1 week ago
அபச்சாரம் ..அபச்சாரம்...உலகத்திலேயே ...சுத்தமான...மதபபற்றுள்ள நற்குடிகள் வாழும் படிக்கும் பல்கலையில் இது நடக்கலாமா...சிறியர் ..பெயர்ப்பலகை வடிவம் என்னை கொஞசம் ...உணர்ச்சி வசப் படுத்திவிட்டது ...மன்னிக்கவும் ..
2 months 1 week ago
பிரியன் சார் ...பாதுகாப்பு முக்கியம் சாரே.....கவனமாக இருங்க...என்ன சாரே போற இடமெல்லாம் தண்ணியும் ..காற்றும் ...நெருப்புமாக இருக்கே... கவனம் கவனம்
2 months 1 week ago
2 months 1 week ago
விமல் வீரவன்சவைக் கைது செய்ய முடியாவிடின் ஜனாதிபதி பதவி விலக வேண்டும்! விமல் வீரவன்சவை கைது செய்ய முடியாவிடின் ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என அகில இலங்கை மக்கள் எழுச்சி கட்சியின் செயலாளர் அருள் ஜெயேந்திரன் தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” செம்மணி மனித புதைகுழியிலே குழந்தைகளின் எலும்புக்கூடுகள், பெண்களின் ஆடைகளுடன் மீட்கப்படும் எலும்புக்கூடுகள் அனைத்தும் வந்து கொண்டிருக்கின்ற நிலையில் நாங்கள் சர்வதேச நீதி வேண்டிக் கொண்டிருக்கிறோம். இந்த நிலையில் புற்றுக்குள் இருந்து கொண்டு பாம்பு வந்தது போல ஜேவிபி கட்சியின் முன்னாள் உறுப்பினர் விமல் வீரவன்ச கோஷமிடுகின்றனர். 1988, 1989 களில் எந்த காரணமும் இல்லாமல் ஜேவிபினர் போராடினார்கள். தமிழ் மக்கள் போராடியதற்கு காரணம் இருக்கிறது. ஜேவிபி போராடியதற்கு என்ன காரணம் என்பதை சொல்ல வேண்டும். எத்தனை கொலைகளை செய்தீர்கள்? விமல் வீரவன்ச இங்குள்ள புதைகுழிகளில் இருந்து வரும் எலும்புக்கூடுகள் தொடர்பாக இன்று பல கதைகளை கூறுகிறார். எல்லாவற்றையும் மூடி மறைத்து தாங்கள் கொலைகளை செய்து முடித்துவிட்டு தேவையில்லாமல் பல விடயங்களை விமல் வீரவன்ச கதைக்கிறார். விமல் வீரவன்ச தனது சொந்த வீட்டிலேயே வேலைக்காரியை கொலை செய்தவர். கொலைகாரன் விமல் வீரவன்சவை கைது செய்து அவருக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை யாழ்ப்பாணத்தில் இருந்து நான் வலியுறுத்துகிறேன். அவருக்கு நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் நீங்கள் அரசாங்கம் நடத்துவதில் அர்த்தம் இல்லை. இந்த நேரத்தில் செம்மணி மனித புதைகுழி விவகாரம் தொடர்பாக விமல் வீரவன்ச அறிக்கை விட என்ன காரணம்? ஜேவிபியுடன் சுற்றிவிட்டு பின்னர் ராஜபக்ஷ பக்கம் பாய்ந்து சென்றார். அடுத்தவர்களை பயமுறுத்தி தன்னை விளம்பரப்படுத்தி தனது கெட்டிக்காரத்தனத்தைக் காட்டிக் கொண்டு வெட்டிப்பேச்சு பேசிக்கொண்டு திரிகின்றார். கடந்த காலங்களில் அவர் செய்த ஒரே ஒரு கொலை மட்டுமே வெளியில் வந்தது. ஆனால் இன்னும் எத்தனை நடந்தது என்று தெரியாது. இந்த தருணத்தில் அவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்காவிட்டால் ஜனாதிபதி பதவி விலக வேண்டும்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1439284
Checked
Sat, 09/27/2025 - 15:24
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed