2 months 1 week ago
Published By: DIGITAL DESK 3 15 JUL, 2025 | 03:54 PM அமெரிக்காவில் மாசசூசெட்ஸ் மாநிலத்தில் மூன்று மாடி முதியோர் காப்பகத்தில் ஞாயிற்றுக்கிழமை (13) இரவு ஏற்பட்ட தீ விபத்தில் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர். தீ விபத்தை தொடர்ந்து ஏற்பட்ட புகை மூட்டத்தில் சிக்கிய முதியவர்கள் ஜன்னல்கள் அருகே ஒடிவந்து உதவி செய்யுமாறு கெஞ்சியுள்ளார்கள். "நான் இறந்துவிட்டேன் என்று நினைத்தேன்," "நான் என்னை படைத்தவரை சந்திக்கப் போகிறேன் என்று நினைத்தேன்." . "என் வாழ்க்கையில் இதுபோன்ற எதையும் நான் பார்த்ததில்லை. என்னால் மூச்சு விட முடியாமல் போனது " என குளியலறை ஜன்னலிலிருந்து வெளியே இழுக்கப்பட்டு காப்பாற்றப்பட்ட லோரெய்ன் ஃபெரார தெரிவித்துள்ளார். 50 தீயணைப்பு வீரர்கள் இருந்தும் மீட்பு பணிகள் கடினமானதாக இருந்ததாக தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களில் ஏழு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 70 வயது வயோதிப பெண்ணும், 77 வயது ஆணும் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. ஆபத்தான நிலையில் உள்ள ஒருவர் உட்பட சுமார் 30 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஐந்து தீயணைப்பு வீரர்கள் சிறிய காயங்களுக்குள்ளாகி உள்ளனர். தீ விபத்துக்கான காரணம் தொடர்பில் விசாரணை நடந்து வருகிறது. https://www.virakesari.lk/article/220054
2 months 1 week ago
இலங்கையில் 16 வயதிற்கு உட்பட்ட சிறார் மீதான துஸ்பிரயோக செயற்பாடுகளுக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை அண்ணை.
2 months 1 week ago
ஏமனில் நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனை ஒத்தி வைப்பு - கடைசி நேரத்தில் என்ன நடந்தது? படக்குறிப்பு, கேரள செவிலியர் நிமிஷா பிரியா 15 ஜூலை 2025, 09:03 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஏமனில் கேரள செவிலியர் நிமிஷா பிரியாவின் மரண தண்டனையை நிறைவேற்றுவது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஹூதி பிரிவின் கீழ் இயங்கும் ஏமன் குடியரசின் நீதித்துறை அறிவிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. நாளை திட்டமிடப்பட்டிருந்த நிமிஷா பிரியாவுக்கான மரண தண்டனை நிறைவேற்றத்தை ஒத்தி வைக்க அட்டர்னி ஜெனரல் முடிவெடுத்திருப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது. நிமிஷா பிரியாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நிறைவேற்றுவதை மறு அறிவிப்பு வரும் வரை ஒத்தி வைக்கப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடைசி நேரத்தில் என்ன நடந்தது? முன்னதாக, இதுகுறித்து சாதகமான முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக சேவ் நிமிஷா குழுவின் வழக்கறிஞர் சுபாஷ் சந்திரன் தெரிவித்திருந்தார். அவர் பகிர்ந்து கொண்ட தகவலின்படி, "கேரளாவைச் சேர்ந்த முஸ்லிம் மதகுருவான கிராண்ட் முஃப்தி ஏ.பி. அபுபக்கர் முஸ்லியாரின் தலையீட்டுக்குப் பிறகு, நிமிஷா பிரியா சம்பந்தப்பட்ட முக்கியமான பிரச்னை தொடர்பான பேச்சுகளில் முன்னேற்றம் இருக்கிறது. தலால் அப்தோ மஹ்தி குடும்பத்தினருடனான சந்திப்பு இன்று நடக்கும். ஷேக் ஹபீப் உமரின் ஆலோசனைப்படி, ஹொடைடா மாநில தலைமை நீதிபதியும், ஏமன் ஷுரா கவுன்சிலின் உறுப்பினருமான, மரணமடைந்த மஹ்தியின் நெருங்கிய உறவினர் ஒருவர் இன்றைய கலந்துரையாடலில் பங்கேற்க மஹ்தியின் சொந்த ஊரான தமருக்கு வந்துள்ளார். அவர் ஷேக் ஹபீப் உமரின் சூஃபி கட்டளையைப் பின்பற்றுபவர் மட்டுமின்றி மற்றொரு முக்கிய சூஃபி தலைவரின் மகன் என்பதும் நம்பிக்கை தருவதாக உள்ளது." படக்குறிப்பு, கேரளாவைச் சேர்ந்த முஸ்லிம் மதகுரு கிராண்ட் முஃப்தி ஏ.பி. அபுபக்கர் முஸ்லியார். "மஹ்தி குடும்பத்துடன் பேச்சுவார்த்தை" "மஹ்தியின் கொலை அவரது குடும்பத்திற்கு மட்டுமின்றி, மஹ்தி வாழ்ந்த பிராந்தியத்தின் பழங்குடியினர் மற்றும் குடியிருப்பாளர்கள் மத்தியிலும் உணர்ச்சிப்பூர்வமான பிரச்சினையாகும். இதனால்தான் இதுவரை அந்தக் குடும்பத்தினருடன் யாரும் தொடர்பு கொள்ள முடியாத நிலை இருந்தது. முஸ்லிம் மதகுருவான கிராண்ட் முஃப்தி ஏ.பி. அபுபக்கர் முஸ்லியாரின் தலையீட்டால் மட்டுமே குடும்பத்தினருடன் தொடர்பு கொள்ள முடிந்தது. புகழ் பெற்ற அறிஞரும் சூஃபியுமான ஷேக் ஹபீப் உமர் பின் ஹபீஸின் மத்தியஸ்தம் மூலம் இந்த விஷயத்தை மறுபரிசீலனை செய்ய மஹ்தி குடும்பத்தினர் ஒப்புக் கொண்டுள்ளனர். இன்றைய விவாதம் 'ப்ளட் மணி' (Blood money) அல்லது தியா (Diyah) எனப்படும் நஷ்டஈட்டை (பெரும்பாலும் பணம்) ஏற்றுக்கொள்வது குறித்து இறுதி முடிவை எட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மஹ்தி குடும்பத்தினரை சமாதானப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என்று சேவ் நிமிஷா குழுவின் வழக்கறிஞர் சுபாஷ் சந்திரன் தெரிவித்துள்ளார். படக்குறிப்பு, நிமிஷா பிரியாவின் தாயார் பிரேமா குமாரி இந்திய அரசிடம் சிறப்பு அனுமதி பெற்று கடந்த வருடம் ஏமன் சென்றார். உடன் சாமுவேல் ஜெரோம். "மரண தண்டனை ரத்து செய்யப்பட்டதாக பொருளல்ல" ஏமனில் நிமிஷா பிரியா வழக்கைக் கையாளும் அதிகாரம் பெற்றவரான சாமுவேல் ஜெரோமும் நிலைமையில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக பிபிசி தமிழிடம் கூறியுள்ளார். "எல்லாம் நேர்மறையாக இருக்கிறது. மரண தண்டனை ரத்து செய்யப்பட்டதாக அதற்கு பொருளல்ல. நிமிஷாவின் மரண தண்டனையை நிறைவேற்றுவது ஒத்திவைக்கப்படும். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் பகிர்ந்து கொள்வேன்" என்று அவர் கூறினார். "மஹ்தியின் குடும்பத்தினர் இதுவரை மன்னிப்பு வழங்கவில்லை. அவர்கள் மன்னிப்பு வழங்கினால் மட்டுமே மரண தண்டனை ரத்து செய்யப்படும், மரண தண்டனையை ஒத்திவைப்பது மட்டுமே இப்போதுள்ள ஒரே வழி, இது மன்னிப்பு பெறுவதற்காக மஹ்தி குடும்பத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்த எங்களுக்கு அதிக நேரத்தை கொடுக்கும்." என்று சாமுவேல் ஜெரோம் தெரிவித்தார். வழக்கின் பின்னணி என்ன? கேரளாவின் பாலக்காட்டைச் சேர்ந்த நிமிஷா பிரியா, கடந்த 2008ஆம் ஆண்டு ஏமன் நாட்டிற்கு செவிலியர் பணிக்குச் சென்றார். அங்கிருந்த சில மருத்துவமனைகளில் பணிபுரிந்த அவர், 2011ஆம் ஆண்டு கேரளாவுக்கு திரும்பி வந்து டோமி தாமஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார். டோமி தாமஸும், நிமிஷாவின் மகளும் இப்போது கேரளாவில் வசித்து வருகின்றனர். நிமிஷா, 2015ஆம் ஆண்டில், ஏமன் நாட்டைச் சேர்ந்த தலால் அப்தோ மஹ்தி என்பவருடன் இணைந்து ஒரு மருத்துவமனையைத் தொடங்கினார். 2017ஆம் ஆண்டு ஒரு தண்ணீர் தொட்டியில் மஹ்தியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. மஹ்தியின் துண்டாக்கப்பட்ட உடல் தண்ணீர் தொட்டியில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு மாதம் கழித்து சௌதி அரேபியாவை ஒட்டிய ஏமன் எல்லையில் நிமிஷா கைது செய்யப்பட்டார். மஹ்திக்கு 'அதிகப்படியான மயக்க மருந்து' கொடுத்து கொலை செய்ததாகவும், அவரது உடலை அப்புறப்படுத்த முயன்றதாகவும் நிமிஷா மீது குற்றம் சாட்டப்பட்டது. மஹ்தி நிமிஷாவை உடல் ரீதியாக சித்திரவதை செய்ததாகவும், அவரது பணத்தை எல்லாம் பறித்ததாகவும், பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்ததாகவும், துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாகவும் நிமிஷாவின் வழக்கறிஞர் வாதிட்டார். தனது பாஸ்போர்ட்டை மஹ்தியிடம் இருந்து மீட்கவே, அவருக்கு நிமிஷா மயக்க மருந்து கொடுத்தார் என்றும் ஆனால் தவறுதலாக மருந்தின் அளவு கூடிவிட்டது என்ற வாதமும் முன்வைக்கப்பட்டது. ஆனால், 2020ஆம் ஆண்டில், சனாவில் உள்ள நீதிமன்றம் நிமிஷாவுக்கு மரண தண்டனை விதித்தது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c307249pzjjo
2 months 1 week ago
2 months 1 week ago
ஆழ்ந்த அனுதாபங்கள்
2 months 1 week ago
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
2 months 1 week ago
ஒரு பதில் சொல்லலாமா. 😂 அமிர்தலிங்கத்தை நினைவு கூர... சுமந்திரனின் தமிழரசு கட்சியும் மறந்து விட்டது என்பதே உண்மை. ஆக, முன்னாள் ஒட்டுக் குழு... புளட் மட்டுமே, அமிர்தலிங்கத்தை நினைவு கூர்ந்தது. சும்மா... சகட்டு மேனிக்கு, பொய்க் கதைகளை அவிட்டு விட்டுக் கொண்டு இருக்கப் படாது. கேட்கிறவன் கேனையன் என்றால்... எருமை ஏரோப்பிளேன் ஓடுமாம். வரலாற்றின் குப்பைத் தொட்டியில்... சம்பந்தருடன், அமிர்தலிங்கமும் போய் விட்டார் என்பதே கள நிலைமை.
2 months 1 week ago
அமிர்தலிங்கத்தை நினைவு கூர... சுமந்திரனின் தமிழரசு கட்சியும் மறந்து விட்டது. ஆக, முன்னாள் ஒட்டுக் குழு... புளட் மட்டுமே, அமிர்தலிங்கத்தை நினைவு கூர்ந்தது. வரலாற்றின் குப்பைத் தொட்டியில்... அமிர்தலிங்கமும் போய் விட்டார் என்பதே கள நிலைமை.
2 months 1 week ago
திருச்செல்வத்துக்கு விசர் முத்திப் போட்டுது. 😂 🤣
2 months 1 week ago
நான் நினைக்கிறன் இவருடைய ஒரு தங்கை மருத்துவ தாதியாக பணியாற்றியவர். எனது கணிப்பு சரியா? மிகவும் சிவந்த நிறமுள்ளவர்.
2 months 1 week ago
ம். நன்றாகவே தெரியும். பெயரை நான் சொல்லாமல் விட்டதற்கு காரணம் ஒருவேளை அவராக இல்லாமல் இருந்திருந்தால் என்பதற்காகவே. அவர் யாழ்ப்பாண பெண்கள் பாடசாலையில் அதிபராக இருந்திருப்பார் என நினைக்கிறன். அவர்களை இரணைமடுவுக்கு சுற்றுலா கூட்டிச்சென்றபோது தவறுதலாக இரு பெண்கள் குளத்தில் விழுந்து இறந்து விட்டார்கள். இதனால் மிகவும் மனமுடைந்து கஸ்ரப்பட்டார்கள்.
2 months 1 week ago
என்ன இது? நல்ல நண்பர்கள், கலியாண வீட்டில் பொட்டலம் எல்லாம் கடத்தி, கட்டியணைத்தீர்கள். விலாசம் தெரியாமலா? விலாசம் தராமலா பார்சல் வரவில்லை என்று ஏங்குகிறார்? பயணம் போவதும் வருவதும் பிரச்சனையல்ல, கொண்டுவரும் பொருட்களை கொடுத்து முடிப்பதே பெரிய வேலை.
2 months 1 week ago
அது தான் மத நல்லிணக்க தமிழ் அரசியல். இனி போகின்ற போக்கில் மார்க்கத்தின் அடிப்படையில் அவர்களை திருப்திபடுத்த யூதர்களையும் தாக்கி பேசுவார்கள்
2 months 1 week ago
ஆணவ சிந்தனையும் ஒரு காரணம்
2 months 1 week ago
பட மூலாதாரம்,INSTA/R.C.C.LPS.EAST.MANGAD படக்குறிப்பு,தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் ப வடிவ இருக்கை முறை அமல்படுத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கட்டுரை தகவல் சாரதா வி பிபிசி தமிழ் 15 ஜூலை 2025, 02:51 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டு அரசுப் பள்ளி வகுப்பறைகளில் மாணவர்களின் இருக்கைகள் 'ப' வடிவத்தில் இருக்க வேண்டும் என்று மாநில பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. 'கடைசி பெஞ்ச்' மாணவர்கள் என்ற கருத்து இதன் மூலம் உடைபடும் என்று அரசு நம்புகிறது. ப வடிவ இருக்கைகள் ஆசிரியர் - மாணவர் இடையேயான உரையாடலை அதிகரிக்கும் என்றும், பொதுவாக பேச தயங்கும் மாணவர்களும் இந்த வடிவில் இருக்கைகள் அமைக்கப்படும் போது வகுப்பறையில் அதிகம் பங்கேற்பார்கள் என்று தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அறிக்கை கூறுகிறது. ஆனால் இருக்கைகள் 'ப' வடிவில் இருந்தால் மட்டும் போதுமா? என்ற விமர்சனங்கள் பல தரப்பிலிருந்து எழுப்பப்படுகின்றன. ஆரோக்கியமான வகுப்பறை சூழலுக்கு ஆசிரியர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது, போதுமான கட்டுமானங்கள் இருப்பது ஆகியவற்றை செய்யாமல் இருக்கைகளை மாற்றியமைப்பது எப்படி உதவும் என்றும் கேள்விகள் எழுப்பப்படுகின்றன. 'ப' வடிவ இருக்கை முறை அறிமுகம் சமீபத்தில் வெளியான 'ஸ்தானார்த்தி ஸ்ரீகுட்டன்' என்ற மலையாள திரைப்படத்தில் ப வடிவ இருக்கை முறையின் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தப்பட்டது. இந்த திரைப்படம் வெளியானதை அடுத்து, கேரளாவில் சில பள்ளிகளில் ப வடிவ இருக்கை முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையும் இந்த முறையை அறிமுகப்படுத்த உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில், "ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாக அமரும் பாரம்பரிய இருக்கை முறையில், மாணவர்- ஆசிரியர் உரையாடல் குறைவாக இருக்கலாம். ப வடிவ இருக்கை முறையில், மாணவர்களின் ஈடுபாடு அதிகரிக்கும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இது சோதனை முயற்சியே என்றும், ஒரு வாரம் கழித்து முதன்மை கல்வி அலுவலர்களிடம் அறிக்கை பெற்று அவர்களின் கருத்துகள் பெறப்படும் என்றும் தெரிவித்தார். அரசின் இந்த உத்தரவை பாஜக, பாமக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன. ப வடிவ இருக்கை முறையில் மாணவர்களின் மனநிலை மேம்படும் உள்ளிட்ட சாதக அம்சங்கள் இருப்பது போலவே குறைகளும் உள்ளன என்று சுட்டிக்காட்டியுள்ளார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பெரும்பான்மையான வகுப்பறைகள் 20 அடி அகலமும், 20 அடி நீளமும் கொண்டவையாகவே உள்ளன. இந்த வகுப்பறைகளில் ப வடிவில் அதிக அளவாக 20 முதல் 24 மாணவர்களை மட்டுமே அமர வைக்க முடியும்; அதற்கும் கூடுதலாக மாணவர்கள் இருந்தால் அனைவரிடத்திலும் ஆசிரியர்கள் கவனம் செலுத்த முடியாது." என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், "தமிழ்நாடு முழுவதும் 3,800 தொடக்கப்பள்ளிகளில் 5 வகுப்புகளை கையாள்வதற்கு தலா ஓர் ஆசிரியர் மட்டுமே உள்ளனர். மீதமுள்ள 25,618 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் சராசரியாக ஒரு பள்ளிக்கு 2.5 ஆசிரியர்கள் என்ற வீதத்தில் மட்டுமே உள்ளனர். இவ்வளவு குறைவான விகிதத்தில் ஆசிரியர்களை வைத்துக் கொண்டு அரசு பள்ளிகளில் தரமான கல்வியை எவ்வாறு வழங்க முடியும்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார். இந்த உத்தரவை விமர்சித்து பேசியுள்ள பாஜக மூத்தத் தலைவரும் தெலங்கானாவின் முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் பள்ளிகளில் முதலில் அடிப்படை வசதிகள் இருப்பதை அரசு உறுதிசெய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். கிராமப்புற பள்ளிகளில் கழிவறைகள் இல்லை, குடி நீர் இல்லை, கற்பிக்க போதுமான ஆசிரியர்கள் இல்லை என்று அவர் விமர்சித்துள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, உலகில் ப வடிவம், வட்ட வடிவம், குழுக்களாக அமர்வது என பல்வேறு வகுப்பறை இருக்கை முறைகள் உள்ளன. 'ப' வடிவ இருக்கை முறை : சாதகம் vs பாதகம் ப வடிவ இருக்கை முறை வகுப்பறையில் சில சாதகமான தாக்கங்களை ஏற்படுத்துகிறது. ப வடிவ முறையில் ஒவ்வொரு மாணவரும் ஆசிரியரையும், கரும்பலகையையும் பிற மாணவர்களையும் பார்க்க முடியும். எல்லா மாணவர்களையும் பார்த்து ஆசிரியரால் பேச முடியும். பிற மாணவர்கள் பேசுவதை கேட்கவும், அவர்களுடன் கலந்துரையாடவும் இந்த இருக்கை முறை உதவும். ப வடிவில் மாணவர்கள் அமரும் போது, ஆசிரியர் வகுப்பறைக்குள் நடமாட முடியும், அனைத்து மாணவர்களும் என்ன செய்கிறார்கள் என்பதை கவனிக்க முடியும். மாணவர்கள் வகுப்புகளில் அதிக ஈடுபாட்டுடன் இருக்க உதவும். பேச தயங்கும் மாணவர்கள் இந்த இருக்கை முறையில் கலந்துரையாடலில் பங்கேற்க அதிக வாய்ப்புகள் உண்டு ப வடிவ முறையின் இந்த சாதகமான அம்சங்களை யாரும் மறுக்காத நிலையில், இதற்கான பாதகங்களும் சுட்டிக்காட்டப்படுகின்றன. கல்வியாளர் பாலாஜி சம்பத், " மாணவர்கள் ப வடிவ முறையில் அமரும் போது, அனைத்து மாணவர்களாலும் கரும்பலகையை நேராக பார்க்க முடியாது. சில மாணவர்கள் இடது அல்லது வலது புறம் தங்கள் கழுத்தை திருப்பியே பார்க்க வேண்டியிருக்கும். பல மணி நேரம் இப்படி அமர்வதால் மாணவர்களுக்கு கழுத்து வலி ஏற்படும்." என்கிறார். அதிக மாணவர்கள் இருக்கும் பட்சத்தில், வகுப்பறையில் அனைவரையும் ப வடிவ முறையில் அமர வைப்பது சிரமமாக இருக்கலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ப வடிவ இருக்கை முறை 'கடைசி பெஞ்ச்' மாணவர்கள் என்ற கருத்தை நீக்கிட உதவும் என்று அரசு கூறுகிறது. சர்வதேச அளவில் என்னென்ன இருக்கை முறைகள் உள்ளன? உலகில் பல்வேறு விதமான வகுப்பறை இருக்கை முறைகள் உள்ளன. அவை அந்தந்த கற்றல் முறையின் வெளிப்பாடாக உள்ளன. ப வடிவம்/ யூ என்ற ஆங்கில எழுத்து (U) வடிவ இருக்கை முறையில் மாணவர்களுடன் ஆசிரியர் உரையாடல் நிகழ்த்தவும், ஆசிரியர் அனைத்து மாணவர்களுக்கும் கவனம் செலுத்தவும் உதவும். சிறுசிறு குழுக்களாக மாணவர்கள் ஒரு மேசைக்கு அருகில் அமரும் முறையில் மாணவர்கள் தங்களுக்குள் சொல்லிக் கொடுத்து கற்றுக் கொள்ள உதவும். வட்ட வடிவிலான இருக்கை முறை குழு விவாதங்கள் நடத்தவும், அனைத்து மாணவர்களுக்கும் சமமாக பங்கேற்க வாய்ப்பு வழங்கவும் உதவும். இரு மாணவர் அமரும் முறை ஆசிரியர் மேசைகளுக்கு இடையே சென்று அனைத்து மாணவர்களையும் கவனிக்க உதவும். தரமான கல்வி முறையை கொண்டதாக கூறப்படும் பின்லாந்து நாட்டில், நவீன பள்ளிகள் சிலவற்றில் வகுப்பறைகளில் பாரம்பரிய மேசை, நாற்காலிகளுக்கு பதிலாக நகர்த்துவதற்கு எளிதான மென்மையான நாற்காலிகள், சோஃபாக்கள், நவீன மேசைகள் பயன்படுத்தப்படுகின்றன. இதன் மூலம் மாணவர்கள் தங்களது இருக்கை முறையை தேவைப்படும் போது மாற்றியமைத்துக் கொண்டே இருக்கலாம். அங்கே மாணவர்கள் குழுக்களாக அமரும் முறையும் உள்ளது. ஆசிரியர்களுக்கும் வகுப்பறையில் நிரந்தரமான இடம் கிடையாது. மாணவர்கள் தாங்கள் என்ன செய்யலாம் என்று தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை இந்த வகுப்பறை வழங்கும். பட மூலாதாரம்,GETTY IMAGES சாகித்ய அகாடமி விருது பெற்ற சிறார் எழுத்தாளர் ஆயிஷா இரா.நடராசன் 'யாருடைய வகுப்பறை' என்ற தனது நூலில், பின்லாந்து வகுப்பறைகளில் வட்ட வடிவ இருக்கை முறை எப்படி கற்றலை மேம்படுத்தவும், வகுப்பறையை ஆசிரியர் மையப்படுத்தியதாக இல்லாமல் மாணவர்களை மையப்படுத்தியதாக இருக்க உதவுகிறது என்று குறிப்பிட்டுள்ளார். பிபிசி தமிழிடம் பேசிய அவர் இந்த உத்தரவை வரவேற்காமல் இருக்க முடியாது என்றார். " கொரோனா பெருந்தொற்று காலத்துக்கு பிறகு மாணவர்களிடம் 'என்னை கவனி' என்ற எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. கடைசி பெஞ்சில் இருக்கும் மாணவர்களின் பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளை ஏன் கடைசியில் அமர வைத்துள்ளீர்கள், முதல் வரிசையில் அமர வையுங்கள் என்று ஆசிரியர்களுக்கு அழுத்தம் கொடுக்கின்றனர்" என்று கூறினார். எனினும் 25 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதம் இருந்தால் மட்டுமே வகுப்பறையில் இந்த இருக்கை முறை சாத்தியம் என்றும் அவர், "அனைத்து வகுப்பறைகளிலும் இந்த விகிதம் இல்லை, பல இடங்களில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அது போன்ற வகுப்பறைகளில் இருக்கை முறையை எப்படி அமைய வேண்டும் என்பதை ஆசிரியரின் சுதந்திரத்துக்கே விட்டுவிட வேண்டும்." என்கிறார். பட மூலாதாரம்,ஆயிஷா இரா. நடராசன் படக்குறிப்பு, சாகித்ய அகாடமி விருது பெற்ற சிறார் எழுத்தாளர் ஆயிஷா இரா.நடராசன், சில வரம்புகள் இருந்தாலும் அரசின் இந்த உத்தரவு வகுப்பறை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்கிறார். பட மூலாதாரம், பாலாஜி சம்பத் படக்குறிப்பு,கல்வியாளர் பாலாஜி சம்பத் வருடாந்திர கல்வி நிலை (ASER) 2024 -ன் அறிக்கையின் படி தமிழ்நாட்டில் அரசுப் பள்ளி மாணவர்களில் ஐந்தாம் வகுப்பில் 37% பேருக்கே வாசிக்க தெரிந்திருந்தது. (தனியார் பள்ளிகளில் 32.3% மாணவர்களுக்கு வாசிக்க தெரிந்திருந்தது). அதே போன்று அரசுப் பள்ளிகளில் ஐந்தாம் வகுப்பு மாணவர்களில் 20.2% பேருக்கே வகுத்தல் கணக்குகளை செய்ய தெரிந்திருந்தது. இதுபோன்ற அடிப்படை கற்றல் திறன்களை மேம்படுத்த அரசு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று பாலாஜி சம்பத் கூறுகிறார். "அதை செய்வது சிரமமான காரியம் அல்ல. கழித்தலோ, வகுத்தலோ தெரியாத மாணவர்களை அழைத்து அவர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தி சொல்லி தர வேண்டும். இது போன்ற சிறுசிறு முயற்சிகளை தொடர்ந்து செய்து வந்தால் தான் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். ஒரே ஒரு விசயம் மொத்தமாக கல்வி முறையை மாற்றியமைத்து விடும் என்று நம்புவது தவறு" என்கிறார் அவர். தமிழ்நாட்டில் வாட்டர் 'பெல் திட்டம்' துவக்கம் - மாணவர்கள் எந்தெந்த நேரங்களில் தண்ணீர் குடிக்க அனுமதிக்கப்படுவர்? 'தமிழில் கல்வி, ஆங்கிலம் மலையாளத்தில் தேர்வு' - கேரளாவில் தமிழ் மாணவர்களுக்கு அநீதியா? 'கட்டணம் செலுத்த பள்ளிகள் நெருக்கடி', தவிக்கும் பெற்றோர் - கட்டாயக்கல்வி உரிமைச் சட்ட நிதி எப்போது கிடைக்கும்? குழந்தைகளின் மூளை வளர்ச்சியை மெல்ல மெல்லச் சிதைக்கும் வீடியோ கேம்களில் புதைந்துள்ள ஆபத்து கடந்த 21 ஆண்டுகளாக அரசுப் பள்ளி ஆசிரியராக பணிபுரிந்து வரும் வேலூர் மாவட்டத்தை ஷண்முகப்பிரியா ப வடிவ வகுப்பறையை அரசு வலியுறுத்தும் முன்பே தங்களது பள்ளியில் அறிமுகப்படுத்தப்பட்டு விட்டதாக கூறுகிறார். "மாணவர்களின் கவனம் அதிகரிக்கும் என்பதால் ப வடிவ இருக்கை முறையை ஏற்கெனவே வகுப்பறைகளில் அமல்படுத்தியுள்ளோம். இந்த வடிவில் அமரும் போது, ஆசிரியரால் அனைத்து மாணவர்களையும் கவனிக்க முடியும். மெதுவாக கற்கும் மாணவர்களுக்கும் முழு கவனம் கிடைக்கும். மாணவர்கள் வகுப்பை கவனிக்காமல் தங்களுக்குள் பேசிக் கொள்வது குறைந்தது" என்கிறார். எனினும் வகுப்பறையின் அளவை பொருத்தே இதை அமல்படுத்த முடியும்" என்று அவர் கூறினார். கடந்த ஆண்டு ஒரு வகுப்பறையில் 23 மாணவர்கள் இருந்தபோது எளிதாக ப வடிவ முறையை அமல்படுத்த முடிந்தது என்றும் இந்த ஆண்டு 38 மாணவர்கள் இருப்பதால் சிரமமாக இருப்பதாகவும் அவர் கூறுகிறார். மாணவர்களுக்கு கழுத்து வலி ஏற்படலாம் என்ற விமர்சனம் குறித்து கேட்ட போது, மாணவர்களின் அமரும் இடங்களை ஒவ்வொரு வகுப்புக்கும் மாற்றியமைக்கலாம் என்கிறார் எழுத்தாளர் ஆயிஷா நடராசன். "ஒவ்வொரு வகுப்பின் போதும் மாணவர்கள் இடம் மாறி அமர்வது அவர்களுக்கு புத்துணர்வு தரும். இதனை நேர விரயமாக ஆசிரியர்கள் கருத கூடாது" என்பது அவரது கருத்து. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cj4epnzdqk5o
2 months 1 week ago
Published By: RAJEEBAN 15 JUL, 2025 | 12:16 PM இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு பிரதமர் பதவியில் தொடர்ந்தும் நீடிப்பதற்காகவே ஹமாசிற்கு எதிரான யுத்தத்தை நீடித்தார் என நியுயோர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளதை இஸ்ரேலிய பிரதமர் நிராகரித்துள்ளார். நியுயோர்க் டைம்ஸ் தனது நீண்ட புலனாய்வு செய்தியறிக்கையிடலில் தொடர்ந்தும் அதிகாரத்தில் நீடித்திருப்பதற்காக பெஞ்சமின் நெட்டன்யாகு ஹமாசிற்கு எதிரான யுத்தத்தை நீடிக்கின்றார் என தெரிவித்துள்ளது. பெஞ்சமின் நெட்டன்யாகு உள்நாட்டில் தனது பிம்பத்தை மீட்டெடுப்பதற்காகவும் அதிகாரத்தில் நீடிப்பதற்காகவும் தனது அரசியல் இலக்குகளை அடைவதற்காககவும் வேண்டுமென்றே காசா யுத்தத்தை நீடித்தார் என நியுயோர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது. தீவிரவலதுசாரி நிதியமைச்சர் பெசெலேல் ஸ்மோட்ரிச் அரசாங்கத்தை கவிழ்ப்பேன் என எச்சரித்ததால் பெஞ்சமின் நெட்டன்யாகு 30 பணயக்கைதிகளை காப்பாற்றியிருக்ககூடிய காசா யுத்த நிறுத்த உடன்படிக்கையை கைவிட்டார், என தெரிவித்துள்ள நியுயோர்க் டைம்ஸ் தீவிரவலதுசாரி பாதுகாப்பு அமைச்சரின் எச்சரிக்கை காரணமாக இஸ்ரேல் சவுதி அரேபியாவிற்கு இடையிலான உறவுகளை மேம்படுத்தும் அமெரிக்காவின் திட்டத்தை இஸ்ரேலிய பிரதமர் கைவிட்டார் என குறிப்பிட்டுள்ளது. காசா யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவரும் நிபந்தனையுடன் சவுதிஅரேபியா இஸ்ரேலுடனான உறவை வலுப்படுத்த தயாராகயிருந்தது. பெருமளவு அரச ஆவணங்கள் இராணுவ ஆவணங்கள் இஸ்ரேல் அமெரிக்கா உட்பட பல நாடுகளை சேர்ந்த 110 அதிகாரிகளுடனான உரையாடல்களை ஆகியவற்றை அடிப்படையாக வைத்து பெஞ்சமின் நெட்டன்யாகு குறித்த இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளதாக நியுயோர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது. இந்த கட்டுரை தொடர்பில் பேட்டிக்காகவும் ஏனைய விடயங்களிற்காகவும் இஸ்ரேலிய பிரதமரின் அலுவலகத்தை தொடர்புகொண்ட போதிலும் உரிய அனுமதி கிடைக்கவில்லை என நியுயோர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது. கடந்த வருடம் ஏப்பிரல் மாதம் பெஞ்சமின் நெட்டன்யாகு குழப்பிய காசா யுத்த நிறுத்த திட்டம் யுத்தத்தை நிரந்தரமாக முடிவிற்கு கொண்டுவரக்கூடியதாகவும் மீதமுள்ள பணயக்கைதிகளை முடிவிற்கு கொண்டுவரக்கூடிய வாய்ப்பினை உருவாக்ககூடியதாகவும் காணப்பட்டது நியுயோர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது. இந்த யுத்த நிறுத்த திட்டத்தினை தொடர்ந்தும் முன்னெடுத்திருந்தால் சவுதி அரேபியாவுடன் இஸ்ரேல் உறவுகளை சுமூகமாக்கும் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டிருக்கலாம் என நியுயோர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது. காசா யுத்தம் முடிவிற்கு கொண்டுவரப்பட்டால் இஸ்ரேலுடனான சமாதான உடன்படிக்கையை துரிதப்படுத்த தயார் என்ற சமிக்ஞைகளை சவுதி அரேபியா வெளியிட்டுவந்தது என நியுயோர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது. நெட்டன்யாகுவிற்கும் உயர் பாதுகாப்பு அதிகாரிகளிற்கும் இடையிலான உறவில் கசப்புணர்வு காணப்படுவதாக தெரிவித்துள்ள நியுயோர்க் டைம்ஸ் போரின் போது பாதுகாப்பு அதிகாரிகள் குறித்த பெஞ்சமின் நெட்டன்யாகுவின் அவநம்பிக்கை அதிகரித்தது. இராணுவ அதிகாரிகளை தான் சந்திக்கும் போது அந்த உரையாடல்கள் பதிவு செய்யப்படவில்லை என்பதை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளில் நெட்டன்யாகு ஈடுபட்டார் என குறிப்பிட்டுள்ளது. இதேவேளை இந்த செய்தி குறித்து மறுப்பு வெளியிட்டுள்ள இஸ்ரேலிய பிரதமர் அலுவலகம் நியுயோர்க் டைம்ஸ் செய்திகள் இஸ்ரேல், அதன் துணிச்சலான மக்கள் மற்றும் வீரர்கள் மற்றும் அதன் பிரதமரை இழிவுபடுத்துகிறது" என்றுஎன தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/220039
2 months 1 week ago
நான் பணி புரியும் பாடசாலையில் 53 A 23 A, B Toatal 177
2 months 1 week ago
இங்கு 14 வயது சிறுமியில் கை வைத்தால்.... அங்கிள், ஆயுள் முழுக்க... களி தின்ன வேண்டி வரும். அதுதான்... அங்கிள் ஊருக்கு வந்தவுடன், தனது குரங்கு சேட்டையை ஆரம்பிக்கின்றார்.
2 months 1 week ago
அங்க இல்லாததா இங்க கிடைக்கப்போகிறது அங்கிளுக்கு 😂😂
2 months 1 week ago
Checked
Sat, 09/27/2025 - 15:24
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed