2 months 1 week ago
👍.......................... இது ஒரு மோசமான ஏமாற்று வேலை என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். 💯 🤣 நன்றி அண்ணா
2 months 1 week ago
வணக்கம் வாத்தியார் . ........ ! பெண் மற்றும் குழு : {என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம் எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்} (2) பெண் மற்றும் குழு : நான் மெய் மறந்து மாற ஒரு வார்த்தை இல்லை கூற பெண் : எதுவோ மோகம் பெண் : கண்ணிரண்டில் நூறு வெண்ணிலாக்கள் தோன்றும் ஆனாலும் அனல் பாயும் நாடி எங்கும் ஏதோ நாத வெள்ளம் ஓடும் ஆனாலும் என்ன தாகம் பெண் : மெய் சிலிர்க்கும் வண்ணம் தீ வளர்த்ததென்ன தூபம் போடும் நேரம் தூண்டிலிட்டதென்ன என்னையே கேட்டு ஏங்கினேன் நான் பெண் : கூடு விட்டு கூடு ஜீவன் பாயும் போது ஒன்றில் ஒன்றாய் கலந்தாட ஊன் கலந்து ஊனும் ஒன்று பட தியானம் ஆழ்நிலையில் அரங்கேற பெண் : காலம் என்ற தேரே ஆடிடாமல் நில்லு இக்கணத்தை போல இன்பம் ஏது சொல்லு காண்பவை யாவும் சொர்க்கமே தான் ......... ! --- என்னுள்ளே என்னுள்ளே ---
2 months 1 week ago
நல்லவேளை நான் பிழைத்துக் கொண்டேன் .......... ! 😍
2 months 1 week ago
2 months 1 week ago
2 months 1 week ago
ஆஹா ...... வாசிக்கவே ஆடிக்கூழ் குடித்ததுபோல் ஒரு உணர்வு ........ ! 😀
2 months 1 week ago
இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவிற்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு.
2 months 1 week ago
ஈழத்தில் தமிழ் மொழிக்கென பல இலக்கிய வடிவங்களை உருவாக்கிய தங்க தாத்தா !!!
2 months 1 week ago
சிங்கள கடும் கோட்பாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள் அதிகாரத்தில் உள்ளபோது திட்டமிட்ட வகையில் தமிழ் சமுதாயத்தை சீரழிக்கக்கூடிய வகையில் பல்வேறு திட்டங்களை இரகசியமாக முன்னெடுப்பார்கள் என்பது ஊகிக்கக்கூடியதே. ஆனால், எங்கடையதுகள் தமது சுய நலன்களிற்காக ஏதும் செய்வார்கள் என்பதும் எதிர்பார்க்கப்படக்கூடியதே. தமிழ் சமுதாயத்தை சீரழிப்பவர்கள் வெளியாராக உள்ள தேவை இல்லை. யாழ்ப்பாணத்தில் தனியார் வகுப்புகளிற்கு செல்லும் மாணவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கப்படும் எழுதுகோலினுள் போதைப்பொருள் வைக்கப்பட்டுள்ளதாக கூறும் ஒரு எச்சரிக்கை காணொளி எங்கோ பார்த்தேன். 53 பேருக்கு எல்லா (09 பாடங்களும் அதிவிசேட சித்தி கிடைத்ததா?
2 months 1 week ago
Published By: VISHNU 16 JUL, 2025 | 08:13 PM (நா.தனுஜா) நாம் ஒரு சிறுமிக்காக துன்பப்படவில்லை என்றால், எம்மால் ஒரு சிறுமிக்காக நீதி கோரமுடியவில்லை என்றால், நாம் உண்மையில் எந்த நிலையில் இருக்கிறோம்? கடந்தகாலம் எம்மைத் துரத்துவதாக இதனைக் கருதமுடியாது. மாறாக நிகழ்காலத்தில் உண்மையை வெளிப்படுத்துமாறு கோரப்படுவதாகவே இதனைக் கருதவேண்டும் என சட்டத்தரணி பெனிஸ்லஸ் துஷான் சுட்டிக்காட்டியுள்ளார். செம்மணி மனிதப்புதைகுழியில் நீலநிறப்புத்தகப்பை மற்றும் சிறுவர்களின் விளையாட்டு பொம்மை என்பவற்றுடன் கண்டறியப்பட்ட என்புத்தொகுதி 4 - 5 வயதுடைய சிறுமியினுடையதாக இருக்கலாம் என சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் செவ்வாய்க்கிழமை (15) யாழ் நீதிவான் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்துள்ளார். செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம் குறித்து பொதுமக்கள் மத்தியில் தொடர்ந்து வெளிச்சம் பாய்ச்சிவரும் மனித உரிமைகள் செயற்பாட்டாளரும், சட்டத்தரணியுமான பெனிஸ்லஸ் துஷான் இதுகுறித்து அவரது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் செய்திருக்கும் பதிவில் மேலும் கூறியிருப்பதாவது: செம்மணி மனிதப்புதைகுழியில் நீலநிறப்புத்தகப்பை மற்றும் விளையாட்டு பொம்மை என்பவற்றுடன் கண்டறியப்பட்ட என்புத்தொகுதி 4 - 5 வயதுக்கு உட்பட்ட ஒரு சிறுமிக்குச் சொந்தமானது என சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் செவ்வாய்க்கிழமை யாழ் நீதிவான் நீதிமன்றுக்கு அறிவித்திருக்கிறார். நான்கு அல்லது ஐந்து வயதைத் தாண்டாத சிறுமியொருவர் படுகொலை செய்யப்பட்டு, மனிதப்புதைகுழியில் புதைக்கப்பட்டு, அச்சிறுமியைப் பாதுகாக்கவேண்டிய கடப்பாட்டைக் கொண்டிருப்பவர்கள் அதுபற்றி மறந்துபோயிருக்கும் நாட்டிலேயே நாம் வாழ்கிறோம். இப்போது, தசாப்தங்கள் கடந்து, அந்த நிலம் தனது அமைதியை முடிவுக்குக்கொண்டுவந்திருக்கிறது. உண்மையை நீண்டகாலத்துக்குப் புதைத்து வைத்திருக்கமுடியாது. அவ்வாறிருந்தும் நாம் அதற்கான நீதியையும், கௌரவத்தையும், பொறுப்புக்கூறலையும் கோருகையில் பிறிதொரு எதிர்க்குற்றச்சாட்டு முன்வைக்கப்படுவதனைப் பார்க்கிறோம். துரோகிகள் என்றும், அமைதியை குழப்புபவர்கள் என்றும், நாட்டின் பொருளாதாரம் நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் வேளையில் ஸ்திரமற்றதன்மையைத் தோற்றுவிப்பவர்கள் என்றும் அக்குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. இருப்பினும் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட ஒரு நபருக்கு 6.9 மில்லியன் மக்கள் வாக்களித்ததன் விளைவாகவே தற்போது சுட்டிக்காட்டும் இந்த பொருளாதார நெருக்கடி உருவானது என்பதை அவர்கள் தெளிவாகப் புரிந்துகொள்ளவேண்டும். அங்கு வாக்குகள் அச்சத்தின் நிமித்தம் அளிக்கப்பட்டவையே தவிர, தூரநோக்கு சிந்தனையின் அடிப்படையில் அளிக்கப்பட்டவை அல்ல. அந்நபருக்கு வாக்களிப்பதென மேற்கொள்ளப்பட்ட தெரிவு எமது பொருளாதாரத்தை வங்குரோத்துநிலைக்கு இட்டுச்சென்றதுடன் மாத்திரமன்றி, நாட்டின் நேர்மை மற்றும் மனசாட்சி என்பவற்றையும் சீர்குலைத்தது. நாம் ஒரு சிறுமிக்காக துன்பப்படவில்லை என்றால், எம்மால் ஒரு சிறுமிக்காக நீதி கோரமுடியவில்லை என்றால், நாம் உண்மையில் எந்த நிலையில் இருக்கிறோம்? கடந்தகாலம் எம்மைத் துரத்துவதாக இதனைக் கருதமுடியாது. மாறாக நிகழ்காலத்தில் உண்மையை வெளிப்படுத்துமாறு கோரப்படுவதாகவே இதனைக் கருதவேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/220169
2 months 1 week ago
தமிழுக்காக அறுபது ஆண்டுகளுக்கு மேலாகத் தொண்டாற்றிய ‘தங்கத் தாத்தா’ என்றழைக்கப்படும் நவாலியூர் சோமசுந்தரப் புலவர் ( 25.05.1878 - 10.07.1953 ) யாழ்ப்பாணத்தில் உள்ள நவாலி என்ற ஊரில் 1878 இல் பிறந்தார். சிறுவயதிலேயே தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்றுத் தேர்ச்சி பெற்றதோடு ஆங்கிலத்தையும் கற்றார். சிறு வயதிலேயே பேச்சாற்றலும், விவாதத் திறமையும் ஒருங்கே பெற்றிருந்தார். ஏராளமான பாடல்கள் இயற்றினார். 'அட்டகிரி முருகன் பதிகம்', 'அட்டகிரி முருகன் திருஊஞ்சல்', 'சாவித்திரி கதை', 'பசுவின் கதை' உள்ளிட்ட நூல்கள் இவர் இளம் வயதில் இயற்றியவை. வட்டுக்கோட்டையில் இருந்த சின்னத்தம்பி ஆசிரியருடன் இணைந்து ஆங்கிலப் பாடசாலை தொடங்கி அங்கு நாற்பது ஆண்டுகாலம் ஆசிரியராகப் பணியாற்றி தமிழ், ஆங்கிலம் மற்றும் இதிகாசங்களைக் கற்பித்தார். ‘சைவ வாலிபர் சங்கம்’ என்ற அமைப்பைத் தொடங்கி, சமய பாடங்களைக் கற்பித்தார். ஆசிரியர் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின்பும், சைவ சித்தாந்தம் உள்ளிட்ட இலக்கிய வகுப்புகளை நடத்தினார். பதிகம், ஊஞ்சல், கலம்பகம், நான்மணி மாலை, அட்டகம், அந்தாதி, சிலேடை வெண்பா என பல வடிவில் பாடல்கள் பாடியுள்ளார். 400 இற்கும் மேற்பட்ட அடிகள் கொண்ட கலிவெண்பா பாவகையில் அமைந்த தாலவிலாசம் மிகவும் பிரசித்தமானது. சிலேடை வெண்பா இயற்றுவது இவரது தனிச்சிறப்பு. யாப்பிலக்கணங்களைக் கற்பதற்கு முன்பாகவே பல தனிப்பாடல்களைப் பாடியுள்ளார். இதனால், இவரை ‘வரகவி’ என்று அழைத்தனர். ‘உயிரிளங்குமரன்’ என்ற நாடகமும் எழுதியுள்ளார். 'சைவபாலிய சம்போதினி’ என்ற சைவ சித்தாந்த மாத இதழை 1910 இல் தொடங்கி, 5 ஆண்டுகள் நடத்தினார். 1927 இல் ஈழத்துத் தென்னிந்தியத் தமிழ் அறிஞர்கள் இவருக்குப் பொற்கிழியும் புலவர் பட்டமும் வழங்கினர். ஆங்கில ஆட்சியை எதிர்த்து தேசிய விழிப்புணர்வைத் தூண்டும் பாடல்களை எழுதினார். குழந்தைகளுக்கான 'ஆடிப்பிறப்பு', 'கத்தரிவெருளி', 'புளுக்கொடியல்', 'பவளக்கொடி', 'இலவுகாத்த கிளி' உள்ளிட்ட ஏராளமான பாடல்களை இயற்றி "சிறுவர் இலக்கிய முன்னோடி" என்ற பெருமை பெற்றார். 'தாடி அறுந்த வேடன்', 'எலியும் சேவலும்' உள்ளிட்ட இவரது கதைப் பாடல்கள் சிறுவர்களை சிரிக்கவும் சிந்திக்கவும் வைப்பவை. ஏறக் குறைய 15 ஆயிரம் பாடல்களை எழுதியுள்ளார். சிறுவர்களுக்காக இவர் பாடிய பாடல்கள் ‘சிறுவர் செந்தமிழ்’ என்ற பெயரில் நூலாக வெளிவந்தது. தமிழி_அமைப்பு
2 months 1 week ago
16 JUL, 2025 | 04:40 PM கனடா நாட்டுக்கு செல்வதற்காக முகவர் ஒருவரிடம் பெரும் தொகை பணத்தினை கொடுத்து ஏமார்ந்த குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துள்ளார். யாழ்ப்பாணம், புங்குடுதீவு பகுதியை சேர்ந்த 34 வயதுடையவரே உயிரிழந்துள்ளார். கனடா செல்வதற்காக கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் முகவர் ஒருவரிடம் 80 இலட்சம் ரூபாய் பணத்தினை வழங்கியுள்ளார். இரண்டு வருட காலமாக கனடா அனுப்பாது முகவர் தொடர்ந்து ஏமாற்றி வந்தமையால், பணத்தை மீள தருமாறு முகவருடன் தர்க்கப்பட்டு வந்துள்ளார். அதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமையும் தனது பணத்தை மீள தருமாறு முகவருடன் தர்க்கம் புரிந்த நிலையிலும் பணத்தை முகவர் கொடுக்க மறுத்தமையால், விரக்தியில் தனது உயிரை மாய்க்க முயன்றுள்ளார். அதனை அவதானித்த வீட்டார், அவரை மீட்டு புங்குடுதீவு வைத்திய சாலையில் அனுமதித்த நிலையில், மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார். https://www.virakesari.lk/article/220151
2 months 1 week ago
16 JUL, 2025 | 04:36 PM போரால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கை மீளக் கட்டியெழுப்புவதற்கு கனடாவும் தம்மால் முடிந்த ஒத்துழைப்பை வழங்கும் என அந்நாட்டுத் தூதுவர் தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் உறுதியளித்துள்ளார். இலங்கைக்கான கனடா தூதுவருக்கும், தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜெ.ரஜீவன், ஸ்ரீபவானந்தராஜா மற்றும் க.இளங்குமரன் ஆகியோருக்கும் இடையிலான சந்திப்பு இன்றைய தினம் புதன்கிழமை (16) யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. இதன்போது யாழ். மாவட்டத்தின் தற்போதைய நிலைவரம், காணி பிரச்சினை, வடக்கை இலக்காகக் கொண்டு அமையவுள்ள முதலீட்டு வலயங்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டன. தமிழ் மக்கள் எதிர்நோக்கும் அரசியல், பொருளாதார மற்றும் சமூக பிரச்சினைகளுக்கு தேசிய மக்கள் சக்தியால் நிச்சயம் தீர்வுகள் முன்வைக்கப்படும் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாகவும், தமிழ் மக்களும் முழு அளவில் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளனர் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தூதுவரிடம் சுட்டிக்காட்டியுள்ளனர். அத்துடன், வடக்கு, கிழக்கை கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் திட்டங்களுக்கு கனடாவும் உதவி நல்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர். இதற்கு கனடா தம்மால் முடிந்த ஒத்துழைப்புகளை வழங்கும் என தூதுவர் பதிலளித்துள்ளார். கடந்த அரசாங்கத்தை போல இல்லாமல் இந்த அரசாங்க ஆட்சியாளர்கள் மிகவும் வித்தியாசமானவர்கள், மக்களுக்கு சேவை செய்யக்கூடியவர்களே தற்போது இருக்கின்றார்கள் எனவும், தற்போதைய ஜனாதிபதியும் சர்வ அதிகாரம் கொண்டவராக இல்லாமல் மக்களின் தலைவனாக செயற்படுகிறார் எனவும் தூதுவர் தெரிவித்துள்ளார். அதேபோல கனடாவில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் முதலீடுகள் செய்வதற்கான சூழல் பற்றியும் பேசப்பட்டுள்ளது. வடக்கில் பெண் தலைமைத்துவ குடும்பங்களை இலக்கு வைத்து கனடாவால் முன்னெடுக்கப்படவுள்ள திட்டம் வெற்றியளிக்க அரசாங்கத்தின் ஒத்துழைப்பு வழங்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் எம்.பிக்கள், தூதுவரிடம் எடுத்துரைத்தனர். இலங்கைக்கான கனடா தூதுவர் தமது சேவைக்காலம் முடிவடைந்து இம்மாதத்துடன் தாயகம் திருப்பவுள்ளார். அவர் ஆற்றிய சேவைகளுக்கு தேசிய மக்கள் சக்தி எம்.பிக்கள் நன்றியும் பாராட்டுகளையும் தெரிவித்தனர். https://www.virakesari.lk/article/220150
2 months 1 week ago
கூமாங்குளம் வன்முறைதொடர்பில் இருவர் கைது 16 JUL, 2025 | 04:34 PM வவுனியா கூமாங்குளம் பகுதியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் தொடர்பில் இருவர் வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். வவுனியா, கூமாங்குளம் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை (11) மோட்டர் சைக்கிளில் சென்ற நபர் ஒருவர் வீதியில் விழுந்து மரணமடைந்திருந்தார். குறித்த மரணத்திற்கு அந்தபகுதியில் பயணித்த போக்குவரத்து பொலிஸாரே காரணம் எனத் தெரிவித்த ஒரு குழுவினர் குழப்பத்தில் ஈடுபட்டதுடன், பொலிஸார் மீதும் தாக்குதல் மேற்கொண்டனர். இந்நிலையில், மரணித்தவர் மாரடைப்பு காரணமாக மரணித்ததாக சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கை வெளியாகியுள்ளது. இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் வாக்குமூலம் பெறுவதற்காக இருவரை அழைத்திருந்தனர். அவர்களிடம் வாக்குமூலம் பெற்ற பொலிசார் பல்வேறு குற்றச்சாட்டுக்களின் கீழ் அவர்களை கைது செய்து வவுனியா நீதிமன்றில் முற்படுத்தினர். அவர்கள் இருவரையும் எதிர்வரும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். இதேவேளை குறித்த சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மேலும் சில நபர்களை கைதுசெய்யுமாறு பொலிசாருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார். செவ்வாய்க்கிழமை (15) விளக்கமறியலில் வைக்கப்பட்டவர்களுள் ஒருவர் தமிழ் மக்கள் கூட்டணியின் வவுனியா தெற்கு தமிழ்ப் பிரதேச சபை உறுப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/220149
2 months 1 week ago
ஆடிக்கூழ். நாளை ஆடிப்பிறப்பு. (17.07.2025) ஆடிப்பிறப்பன்று ஆடிக்கூழ் காய்ச்சுதல் அன்றைய காலம் முதல் இன்றைய காலம் வரை பெரும்பாலான (வீடுகளில்) இடங்களில் நடைபெறும் சம்பிரதாயம். ஆடிக்கூழ் செய்யும் முறை 👇 தேவையான பொருட்கள்: 750 கிராம் பனங்கட்டி 1 ¼ கப் சிவப்பு பச்சை அரிசி ½ கப் முழுப் பயறு ½ கப் வறுத்த உளுத்தம் மா ½ கப் தேங்காய் சொட்டு 2 ரின் தேங்காய்ப்பால் (400 மி.லீ x 2) 3 ¼ லீட்டர் தண்ணீர் (-/+) ½ மே.க மிளகு(-) உப்பு செய்முறை: அரிசியை குறைந்தது 2 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். அடுத்ததாக தண்ணீரை வடித்து, வடியில் வார விடவும். வாரவிட்ட அரிசியை மிக்சியில் அரைத்து, அரிதட்டால் அரித்து எடுக்கவும்( மிளகு சேர்க்க விரும்பினால் அரிசியுடன் சேர்த்து அரைக்கவும்). மாவை இரு பங்குகளாக பிரித்து வைக்கவும். தேங்காயில் சின்னச் சின்ன சொட்டுகளாக ½ கப் சொட்டுகள் வெட்டி வைக்கவும். ஒரு பாத்திரத்தில் பனங்கட்டியுடன் 1 லீட்டர் தண்ணீர் சேர்த்து, கரையும் வரை கொதிக்க விடவும். முழுப்பயரை வறுத்து வைக்கவும். ஒரு பாத்திரத்தில் 2 லீட்டர் தண்ணீர் விட்டு, கொதித்ததும், வறுத்த பயறைச் சேர்த்து அவிய விடவும். பயறு அரைப்பங்கு அவிந்ததும் அதனுள் பனங்கட்டிப்பாணியை வடித்து விடவும். அரைப்பங்கு அரிசிமாவுடன் உளுத்தம்மா, 1 சிட்டிகை உப்பு சேர்த்துக் கலந்து, 1 கப் தண்ணீர் விட்டு கட்டிகள் இல்லாமல் கரைத்து வைக்கவும். மீதமுள்ள மாவில் 1 சிட்டிகை உப்பு சேர்த்து கலந்து, கொதித்த பனங்கட்டிப்பாணியை கொஞ்சம் கொஞ்சமாக விட்டுக் குழைத்து எடுத்து, அதனை சிறிய சில்லுகளாக தட்டவும் அல்லது உருண்டைகளாக உருட்டி வைக்கவும். பயறு அவிந்தவுடன் அதனுடன் தட்டிய சில்லுகள் அல்லது உருட்டிய மா உருண்டைகளை ஒவ்வொன்றாக சேர்த்து அவியவிடவும். அதனுடன் தேங்காய்ப்பால் மற்றும் தேங்காய்ச் சொட்டுகளையும் சேர்த்து அவியவிடவும். சில்லுகள் / உருண்டைகள் அவிந்ததும், உளுத்தம்மா கரைசலை விட்டு கைவிடாமல் கிண்டவும். கொதித்து இறுகத்தொடங்கவும் அடுப்பில் இருந்து இறக்கி பரிமாறவும். ஆடிக் கூழ் தயார்! குறிப்பு: கூழ் சிறிது தண்ணித் தன்மையாக வேண்டும் என்றால் 1 கப் அரிசி எடுக்கவும். பயறு அதிகம் விரும்பாதவர்கள், 6 மே.க பயறு சேர்க்கவும். சில்லுகள் / உருண்டைகள் அதிகம் விரும்பாதவர்கள் 2/3 பங்கு மாவை கரைத்தும் மீதி 1/3 பங்கு மாவில் சில்லுகள் / உருண்டைகளை செய்யவும். வறுத்த உளுத்தம் மா, தேங்காய் சொட்டு மற்றும் பயற்றின் அளவை, உங்கள் ருசிக்கேற்ப்ப கூட்டிப் குறைக்கவும். Babu Babugi
2 months 1 week ago
Published By: DIGITAL DESK 3 16 JUL, 2025 | 04:33 PM சூரிய சக்தியைப் பயன்படுத்தும் எதிர்காலத்திற்காக பிராந்திய ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு இலங்கை அர்ப்பணிப்புடன் செயல்படும் என பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய சர்வதேச சூரிய சக்தி கூட்டமைப்பின் 7 ஆவது மாநாட்டில் தெரிவித்துள்ளார். சர்வதேச சூரிய சக்தி கூட்டமைப்பின் (ISA) ஆசிய மற்றும் பசிபிக் பிராந்தியக் குழுவின் ஏழாவது மாநாடு கொழும்பு ஐசிடி ரத்னதீப ஹோட்டலில் இன்று புதன்கிழமை (16) பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தலைமையில் ஆரம்பமானது. "பன்முகத்தன்மையும் வாய்ப்புகளும் நிறைந்த பிராந்தியத்தின் ஊடாக சூரிய சக்தி ஒத்துழைப்பை முன்னெடுத்துச் செல்லுதல்" எனும் தலைப்பில் நடைபெற்ற இந்த மாநாட்டின் இணைத் தலைமைத்துவத்தை இலங்கை வகித்தது. இதன்போது கருத்துத் தெரிவித்த பிரதமர், பிராந்திய சூரிய சக்தி ஒத்துழைப்பைப் பலப்படுத்துவதற்கும், நிலையான அபிவிருத்தியின் மூலம் சக்தி பாதுகாப்பை அடைவதற்கும் இலங்கை அர்ப்பணிப்புடன் உள்ளது என்பதை வலியுறுத்தினார். இலங்கைக்கும் சர்வதேச சூரிய சக்தி கூட்டமைப்பின் பிராந்தியக் குழுவிற்கும் இடையிலான உள்ளூர் பங்களிப்பைக் குறிக்கும் வகையில், உத்தியோகபூர்வ வரைபடத் திட்டம் கையெழுத்திடப்பட்டு வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி அவர்களிடம் கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் உரையாற்றிய வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி, சூரிய சக்தி பயன்பாட்டை விரிவுபடுத்தும் அரசாங்கத்தின் "சூரிய சக்திக்கான போராட்டம்" எனும் திட்டம் மற்றும் 2030 ஆம் ஆண்டுக்குள் 70% புதுப்பிக்கத்தக்க வலுசக்தி இலக்கை அடையும் நோக்கத்துடன் அரசாங்கம் செயல்பட்டு வருவதாகத் தெரிவித்தார். இந்த மாநாடு புதிய பிராந்தியப் பங்காளிகளை உருவாக்குவதற்கான வாய்ப்பாக அமைந்ததுடன், மொரட்டுவ பல்கலைக்கழகமானது, சூரிய வலுசக்தி புத்தாக்கத்திற்கான பிரதான அறிவுசார் ஆராய்ச்சி மையமாக அடையாளம் காணப்பட்டது. சூரிய சக்தி தொழில்நுட்பத்தின் மூலம் பிராந்திய அபிவிருத்தி மற்றும் பல்வகை சமூக-பொருளாதாரச் செயல்பாடுகளுக்கு சூரிய சக்தியைப் பயன்படுத்துவதற்கான நடைமுறைச் சாத்தியமான தீர்வுகள் உள்ளிட்ட விசேட சூரிய சக்தி தாக்க புத்தாக்கக் கண்காட்சியின் ஆரம்ப விழாவிலும் பிரதமர் கலந்துகொண்டார். இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, சர்வதேச சூரிய சக்தி கூட்டமைப்பின் பணிப்பாளர் நாயகம் ஆஷிஷ் கன்னா உள்ளிட்ட ஆசிய-பசிபிக் பிராந்தியத்தின் பிரதிநிதிகள் மற்றும் 124 நாடுகளின் உறுப்பினர்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். https://www.virakesari.lk/article/220146
2 months 1 week ago
பட மூலாதாரம்,RAMESHWARAN படக்குறிப்பு, பூனைக்கண் பாம்பு கட்டுரை தகவல் க. சுபகுணம் பிபிசி தமிழ் 28 நிமிடங்களுக்கு முன்னர் கொம்பேறி மூக்கன் என்றதும் பலருக்கும் நினைவுக்கு வருவது, அதுகுறித்த மூடநம்பிக்கை நிறைந்த தவறான தகவல்களே. நஞ்சற்ற, மரத்தில் வாழக்கூடிய இந்தப் பாம்பு இனம், "மிகவும் ஆபத்தான நஞ்சுள்ள பாம்பு" என்ற தவறான புரிதல் பலருக்கும் உள்ளது. இப்படியாக நஞ்சற்ற பல பாம்புகள் குறித்து மக்களிடையே இருக்கும் தவறான புரிதலைப் போக்க உதவுகிறது "தமிழகத்தில் பரவலாகக் காணப்படும் பாம்புகள்" என்ற புதிய கையேடு. பாம்புகள், இயற்கைச் சமநிலையின் முக்கியமான ஓர் அங்கம். இருந்தாலும், அவற்றைப் பார்த்தால் மட்டுமல்ல, காதில் கேட்டாலே மனித மனதில் பதற்றம் தொற்றிக் கொள்கிறது. இதன் விளைவாக பாம்புகள் பாதுகாப்பு பற்றிய அறிவியல் பல உயரங்களைத் தொட்டாலும், பொது மக்கள் மத்தியில் அது குறித்த அச்சமும், தவறான புரிதல்களும், மூட நம்பிக்கைகளும் இன்னமும் நீடிக்கவே செய்கின்றன. மக்கள் பாம்புக்கடியில் இருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ளவும், சுற்றுச்சூழலில் பாம்புகளின் பங்கை உணர்த்தவும் அடிப்படைத் தேவை, பொது மக்கள் மத்தியில் பாம்புகள் குறித்த புரிதலை ஏற்படுத்துவதே என்று காட்டுயிர் ஆய்வாளர்களும் ஆர்வலர்களும் பல ஆண்டுகளாகக் கூறி வருகின்றனர். பாம்பு கடித்த ஒருவரை காப்பாற்ற உடனே செய்ய வேண்டியதும் செய்ய கூடாததும்30 மே 2025 பாம்புகளை பார்த்தவுடன் அடித்துக் கொன்றவர், இன்று பாம்புகளின் பாதுகாவலர்19 மே 2023 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நாகப் பாம்பு உள்பட தமிழகத்தில் காணப்படும் 9 வகை நச்சுப் பாம்புகள் பற்றிய தகவல்களை இந்தக் கையேடு வழங்குகிறது. அதோடு, பாம்பு கடித்த பிறகு ஒருவர் செய்ய வேண்டியவை குறித்து நிலவும் பல தவறான புரிதல்களே, பாம்புக் கடியால் உயிரிழப்புகள் அதிகம் நிகழக் காரணமாக இருப்பதாக பல்வேறு ஆய்வுகள் சுட்டிக்காட்டியுள்ளன. இந்த நிலையில், ஊர்வனவியலாளர் ரமேஸ்வரன் மாரியப்பன் மற்றும் பாம்பின் நஞ்சு குறித்து ஆய்வு செய்து வரும் பாம்புக்கடி விஞ்ஞானி முனைவர் மனோஜ் இணைந்து உருவாக்கியுள்ள பாம்புகள் தொடர்பான கையேடு, இத்தகைய தவறான புரிதல்களைத் தெளிவுபடுத்துவதோடு, தமிழ்நாட்டில் மக்கள் மத்தியில் அதிகம் காணப்படும் நஞ்சுள்ள, நஞ்சில்லாத பாம்புகள் பற்றிய அறிவையும் எளிய வகையில் வழங்குகின்றன. பாம்பு கடிப்பதால் உடலில் என்ன நடக்கும்? ஒருவரை நச்சுப் பாம்பு கடித்துவிட்டாலும், உடனடியாக மரணம் ஏற்படாது என்று கூறும் இந்தக் கையேடு, "நம்பகத்தன்மையற்ற மருத்துவ முறை, மூட நம்பிக்கைகள், காலம் தாழ்த்துதல் ஆகியவையே பாதிப்பைத் தீவிரப்படுத்துவதாக" கூறுகிறது. அதோடு, பாம்பின் நஞ்சு துரிதமாகச் செயல்படுவதால், உடலில் பல்வேறு உபாதைகள் ஏற்படுவதாகவும் அதுகுறித்த விழிப்புணர்வுடன் உரிய நேரத்தில் செயல்பட்டால், உயிரைக் காப்பாற்ற முடியும் எனவும் "தமிழகத்தில் பரவலாக காணப்படும் பாம்புகள்" என்ற புதிய கையேடு வலியுறுத்துகிறது. பாம்பும் கீரியும் இயற்கையாகவே பகையாளிகளாக இருக்க என்ன காரணம்? பாம்பு விஷம் கீரியை ஒன்றும் செய்யாதா?20 பிப்ரவரி 2025 'தமிழிகம்' என்று பெயர் சூட்டப்பட்ட புதிய விலாங்கு மீனின் தனிச்சிறப்புகள் என்ன?22 மார்ச் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கட்டு வரியன் இப்படியாக, தமிழ்நாட்டில் அதிகம் காணப்படும் 30 வகையான பாம்புகள் குறித்து விரிவான புகைப்படங்களுடன், அவற்றின் உடலமைப்பு, வடிவம், நஞ்சின் தன்மை மற்றும் வீரியம், காணப்படும் நிலப்பகுதிகள், உலவக்கூடிய நேரம் என அனைத்துத் தகவல்களும் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, மக்களிடையே அதிகம் தென்படக்கூடிய 9 வகையான நச்சுப் பாம்புகள் பற்றிய ஆழமான அறிவியல்பூர்வ தகவல்களும் புகைப்படங்களும் இந்தக் கையேட்டில் வழங்கப்பட்டுள்ளது. "பாம்புகள் குறித்த அடிப்படைப் புரிதலோ, முதலுதவி குறித்த தெளிவோ இல்லாததுதான் பெரும்பாலான பாம்புக் கடி மரணங்களுக்குக் காரணமாக உள்ளன. இந்தக் கையேடு மக்களிடையே அந்தத் தெளிவை ஏற்படுத்தும். அதன்மூலம், பாம்புக் கடியைத் தவிர்ப்பது முதல் கடித்துவிட்டால் உயிரைக் காப்பாற்றிக் கொள்வது வரை தங்கள் பாதுகாப்புக்குத் தேவையான ஆழமான புரிதல் ஏற்படும்," என்று விவரித்தார் புத்தகத்தின் ஆசிரியர்களில் ஒருவரான முனைவர் மனோஜ். யுனிவர்சல் பாம்புக்கடி கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் நிறுவனரும் முதன்மை விஞ்ஞானியுமான இவர், "ஒவ்வொரு பாம்பின் நஞ்சும் எத்தகையது, அதனால் உடலில் எவ்வித பாதிப்புகள் ஏற்படும் என விரிவான தகவல்கள் இந்த நூலில் உள்ளதாக" தெரிவித்தார். படக்குறிப்பு, ஊர்வனவியலாளர் ரமேஸ்வரன் மாரியப்பன், முனைவர் மனோஜ் இணைந்து உருவாக்கிய இந்தக் கையேட்டை தமிழக வனத்துறை வெளியிட்டுள்ளது. பாம்பு கடித்தவுடன் முதல் நிமிடத்தில் என்ன செய்ய வேண்டும்? பாம்புகளை அடையாளம் காண்பது முதல் அவை கடித்தவுடன் உடலில் என்ன நடக்கும், எப்படிச் செயலாற்றுவது என்பதை மக்கள் தெரிந்து கொள்வதே பாம்புக்கடியால் நிகழ்வும் இறப்புகளைத் தடுக்கப் பெரியளவில் உதவும் என்கிறார் முனைவர் மனோஜ். மேலும், அந்த அறிவை பள்ளிக் குழந்தை முதல் மருத்துவர்கள் வரை அனைவரும் எளிதில் பெறுவதற்கு இந்தப் புத்தகம் உதவும் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்தக் கையேட்டில், பாம்பு கடித்துவிட்டால் அதன் முதல் நிமிடத்தில் இருந்து உயிரைக் காப்பாற்றுவது வரை என்ன கடைபிடிக்க வேண்டியவை, தவிர்க்க வேண்டியவை போன்ற தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன. உதாரணத்திற்கு, ஒருவரை பாம்பு கடித்துவிட்டால், அது நஞ்சுள்ளது, நஞ்சற்றது என எதுவாக இருந்தாலும் முதல் நிமிடத்தில், "உடனடியாக அருகில் இருப்பவரை உதவிக்கு அழைக்க வேண்டும். அல்லது அவசர உதவி எண்ணை உடனடியாகத் தொடர்புகொள்ள வேண்டும். கடிபட்ட நபர் இருக்கக்கூடிய சூழ்நிலைக்கு ஏற்ப, சாத்தியக்கூறுகளை உணர்ந்து, உடனடியாக எப்படியாவது மருத்துவமனையை அடைவதற்கான வழிகளைக் கண்டறிய வேண்டும்," என்று கையேடு வலியுறுத்துகிறது. இப்படியாக, மக்கள் பாம்புகளைப் புரிந்துகொள்ளவும், பாம்புக் கடியில் இருந்து தற்காத்துக் கொள்ளவும் தேவையான தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன. எறும்புகள் தங்களுக்குள் போரிட்டுக் கொள்வது ஏன்? - நேரடி கள ஆய்வில் கிடைத்த சுவாரஸ்ய தகவல்கள்29 ஆகஸ்ட் 2024 ஆட்டுக்கால் சூப் குடிப்பதால் என்ன நன்மை? அதை யாரெல்லாம் சாப்பிடக் கூடாது?22 ஜூன் 2025 மக்களிடையே அதிகம் தென்படக்கூடிய நச்சுப் பாம்புகள் பட மூலாதாரம்,SUBAGUNAM KANNAN படக்குறிப்பு, சுருட்டை விரியன் தமிழ்நாட்டில் 130 பாம்புகள் 11 அறிவியல் குடும்பங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. அதில் 8 அறிவியல் குடும்பங்களைச் சேர்ந்த, தமிழ்நாட்டில் மக்களிடையே அதிகம் காணப்படும் பாம்பு இனங்கள் பற்றிய விரிவான தகவல்கள் இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன. இந்தக் கையேடு, தமிழகத்தில் அதிகமாக மக்கள் மத்தியில் தென்படும் பாம்புகள் என ஒன்பது நச்சுப் பாம்புகளைக் குறிப்பிட்டுள்ளது. அவற்றில் மிகவும் அதிகமாகத் தென்படும், அதிக பாம்புக்கடி விபத்துகளுக்குக் காரணமாக இருக்கும் நான்கு வகைப் பாம்புகளும் அடக்கம். அவை, நாகப் பாம்பு கட்டு வரியன் சுருட்டை விரியன் கண்ணாடி விரியன் இவைபோக, மேலும் ஐந்து நச்சுப் பாம்புகள் குறித்து புத்தகத்தில் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளன. அவை, ராஜநாகம் அல்லது பெருநாகம் (King Cobra) குறுந்தலைக் கடற்பாம்பு (Branded Sea Snake) நாணற்குச்சி பவளப் பாம்பு (Slender Coral Snake) கூர்மூக்கு குழிவிரியன் பாம்பு (Hump-nosed pit viper) மூங்கில் குழிவிரியன் பாம்பு (Bamboo pit viper) தினசரி எத்தனை கிராம் உப்பு எடுக்கலாம்? இந்தியர்கள் அதிக உப்பு உட்கொள்வதால் என்ன பிரச்னை?6 மணி நேரங்களுக்கு முன்னர் எண்ணெய் மற்றும் சர்க்கரை உணவுகள் குறித்து எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன ஆபத்து?15 ஜூலை 2025 பாம்புகளை தெரிந்துகொள்வதால் மக்களுக்கு என்ன பயன்? படக்குறிப்பு, 'தமிழகத்தில் பரவலாக காணப்படும் பாம்புகள்' கையேட்டை 200 பள்ளிகளுக்கு முதல்கட்டமாக கொண்டு செல்லத் திட்டமிட்டு இருப்பதாகத் தெரிவித்தார் சுப்ரியா சாஹு தங்கள் அன்றாட வாழ்வில் பாம்புகளை அதிகம் எதிர்கொள்ளக்கூடிய மக்களிடையே, அவை குறித்த புரிதல் முழுமையாக இல்லை என்பதைத் தனது 24 ஆண்டுகால கள ஆய்வுகளின்போது உணர்ந்ததாகவும், அதுவே இப்படியொரு கையேட்டை தமிழில் கொண்டு வர வேண்டிய தேவை இருப்பதைத் தனக்கு உணர்த்தியதாகவும் கூறுகிறார், "தமிழகத்தில் பரவலாகக் காணப்படும் பாம்புகள்" என்ற நூல் உருப்பெறுவதில் முக்கியப் பங்காற்றிய சுயாதீன ஊர்வனவியலாளர் ரமேஸ்வரன் மாரியப்பன். பாம்புக் கடியால் மக்கள் பாதிக்கப்படுவது, மக்களால் பாம்புகள் கொல்லப்படுவது என இரண்டுமே நிகழ்வதற்குச் சில பொதுவான காரணங்கள் இருப்பதாகக் கூறுகிறார் ரமேஸ்வரன். அதில் முதன்மையான காரணம் பாம்பின் நஞ்சு. "பாம்பின் நஞ்சு தங்களுக்கு ஆபத்தானது என்று கருதுவதால் மக்கள் அவற்றைக் கண்டதும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்றனர்." ஆனால், அதேவேளையில், எந்தெந்த பாம்புகள் மனிதர்களுக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய நஞ்சுள்ளவை, எவை நஞ்சற்றவை என்பதில் பொது மக்கள் மத்தியில் போதிய புரிதல் இல்லை என்கிறார் அவர். இதுவே, "நஞ்சற்ற பாம்பு என்ற தவறான புரிதலில் நஞ்சுள்ள பாம்பிடம் எச்சரிக்கையின்றி செயல்படுவதும், நஞ்சுள்ள பாம்பு என்று அஞ்சி ஆபத்தில்லாத, நஞ்சற்ற பாம்பை அடித்துக் கொல்வதும் நடக்கின்றன. நஞ்சுள்ளது, நஞ்சற்றது என இரு வகைப் பாம்புகளுமே சுற்றுச்சூழலுக்கு அளப்பறிய சேவைகளைச் செய்கின்றன. அதே வேளையில், தங்கள் உயிரைப் பாதுகாத்துக் கொள்ள, ஆபத்தான பாம்புகள் குறித்த அறிவும் மக்களுக்கு அவசியம்" என்று விளக்கினார் ரமேஸ்வரன். அவரது கூற்றுப்படி, பாம்புகள் கொல்லப்படுவதையும், பாம்புக் கடிக்கு ஆளாவதையும் தடுப்பதற்கான அடிப்படைத் தீர்வு, "மக்களிடையே அவை குறித்த அறிவியல் புரிதலை ஏற்படுத்துவதுதான்." அதையும் அவர்களின் மொழியிலேயே வழங்க வேண்டியது அவசியம் எனக் கூறிய ரமேஸ்வரன், "இந்த நோக்கத்துடன் தான் பல்லாண்டுக் காலமாக, அனுபவ அடிப்படையில், கள ஆய்வுகளின் மூலம்" பாம்புகள் பற்றிய அறிவியல்பூர்வ தகவல்களைச் சேகரித்து வந்ததாகத் தெரிவித்தார். ஒப்பீட்டளவில் கிராமங்களைவிட நகரங்களில் பாம்புகள் மீதான அச்சம் அதிகம் எனக் குறிப்பிடும் தமிழக சுற்றுச்சூழல், காடு மற்றும் காலநிலை மாற்றத்திற்கான துறையின் கூடுதல் தலைமைச் செயலர் சுப்ரியா சாஹூ, "அந்த அச்சத்தைப் போக்குவதற்கான அடிப்படைத் தேவை அவை குறித்த அறிவுப் பகிர்வுதான். அதைச் சாத்தியமாக்குவதில் தமிழ் மொழியில் வெளியிடப்பட்டுள்ள இந்தக் கையேடு பேருதவியாக இருக்கும்," என்றார். மேலும், வனத்துறையால் வெளியிடப்பட்ட இந்தக் கையேட்டை பசுமைப் பள்ளிகளாக மாற்றப்பட்டிருக்கும் 200 அரசுப் பள்ளிகளுக்கு முதல்கட்டமாகக் கொண்டு செல்லவிருப்பதாகவும், அடுத்தடுத்த முயற்சிகளில் இதை மேலும் பரவலாகக் கொண்டு செல்லும் திட்டம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c307yjr9ry2o
2 months 1 week ago
மாகாண சபைகளின் அபிவிருத்தி பணிகளுக்காக 53,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு! உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகளின் கீழ் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒதுக்கப்பட்ட 76 பில்லியன் ரூபா நிதியை எதிர்வரும் நவம்பர் மாதத்துக்கு முன்னர் பயன்படுத்த வேண்டுமென பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது. அந்தவகையில் உள்ளூராட்சி அமைப்புகளின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக கடந்த பாதீட்டில் இருந்து 23 பில்லியன் ரூபாவும் மாகாண சபைகளின் கீழ் அபிவிருத்திப் பணிகளுக்காக 53 பில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் ருவான் செனரத் தெரிவித்தார். https://athavannews.com/2025/1439452
2 months 1 week ago
தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களை விடுதியிலிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தல் 16 JUL, 2025 | 03:36 PM தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தைச் சேர்ந்த முதலாமாண்டு மாணவர்கள் நால்வர் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையிலும் ஒலுவில் பிரதேச வைத்தியசாலையில் மாணவர் உட்பட பல்கலைக்கழக சாரதி என ஆறு பேர் தற்போது வரை சிகிச்சை பெற்று வருவதாக தென்கிழக்கு பல்கலைக்கழகப் பதிவாளர் எம்.ஐ. நௌபர் தெரிவித்தார். இதேவேளை இரவு விடுதியில் தங்கி கல்வி கற்றுவரும் 1 ஆம் வருட பொறியியல் பீட மாணவர்கள் அனைவரும் மறு அறிவித்தல் வரை உடனடியாக விடுதிகளை விட்டு வெளியேறுமாறு செவ்வாய்க்கிழமை (15) பல்கலைக்கழக நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதற்கமைய அனைத்து மாணவர்களும் வெளியெறி உள்ளதாக பல்கலைக்கழக தகவல்கள் தெரிவித்துள்ளன. சிரேஸ்ட மாணவர்களின் கல்வி செயற்பாடுகள் வழமை போன்று நடைபெற்று வருவதுடன், குறித்த மோதலானது ஒரே வகுப்பினை சேர்ந்த 1 ஆம் வருட மாணவர்களின் இரு குழுக்களுக்கிடையே விடுதியில் ஏற்பட்டதாக பல்கலைக்கழக நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது. இதனால் அம்பாறை ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீடத்தின் முதலாம் வருட மாணவர்களை நேற்று இரவு 8 மணியுடன் விடுதிகளிலிருந்து வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெறவிருந்த பரீட்சையும் பிற்போடப்பட்டுள்ளதாக தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீடத்தின் முதலாம் வருட மாணவர்கள் இடையே நேற்று ஏற்பட்ட மோதலை அடிப்படையாகக் கொண்டு இந்த அறிவிப்புகள் விடுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் நேற்றைய தினம் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் ஆரம்பக்கட்ட விசாரணைகள் நடத்தப்படுவதாக தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் தெரிவித்துள்ளார். செய்தி பின்னணி தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தைச் சேர்ந்த முதலாமாண்டு மாணவர்கள் ஐவர் மற்றும் பல்கலைக்கழக சாரதியொருவர் - தாக்குதலுக்குள்ளான நிலையில் செவ்வாய்க்கிழமை (15) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதன் பின்னர் குறித்த தாக்குதலின் காரணமாக ஒலுவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 5 மாணவர்களில் நால்வர் விசேட வைத்திய நிபுணரின் ஆலோசனையைப் பெறுவதற்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக மாற்றப்பட்டுள்ளதாக தென்கிழக்கு பல்கலைக்கழகப் பதிவாளர் எம்.ஐ. நௌபர் குறிப்பிட்டார். இதேவேளை ஒலுவில் வைத்தியசாலையில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட 4 மாணவர்களும் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் ஐ.எம். ஜவாஹிர் தெரிவித்தார். மேலும் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட 1 ஆம் வருட மாணவர்கள் இரண்டு குழுக்களாக பிரிந்து ஏற்பட்ட மோதல் காரணமாக இச்சம்பவம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/220139
2 months 1 week ago
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அலிபேபிக்கு மரண தண்டனை! அலிபேபி என்றழைக்கப்படும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் வெலிகெபொல பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் கொடித்துவக்கு ஆராச்சிலக் வசந்தா என்பவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வெலிகெபொல ஹட்டங்கல பகுதியில் 2012 ஆம் ஆண்டு ஒருவரைக் கடத்தி கொலை செய்த குற்றச்சாட்டில் அவர் குற்றவாளியாக இனங்காணப்பட்டுள்ளார். எம்பிலிப்பிட்டிய உயர் நீதிமன்ற நீதிபதி புத்திக எஸ். ராகலவினால் குறித்த உத்தரவு இன்று (16) பிறப்பிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2025/1439445
Checked
Sat, 09/27/2025 - 18:24
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed