2 months 1 week ago
அவரிகளுடன் சேர்ந்து ஆட்சியும் அமைப்பார்கள் அவர்கள் இனம் சார்ந்து பேசுவார்கள் நடப்பார்கள் நம்மவர்கள் அரசியல் கதிரைக்காக பேசுவார்கள்
2 months 1 week ago
நடந்து முடிந்ததே வரலாறு தணிக்கைக்கு இடமில்லை! தேசியத் தலைவரின் நிலை தொடர்பில் முன்னாள் போராளி பஷீர் காக்கா அறிக்கை எமது புனிதமான விடுதலை இயக்கத்தின் தலைவரை தமிழினம் இழந்துவிட்டது என்ற செய்தியை அனைவரும் ஏற்றுக்கொள்ளவும் உணர்ந்து கொள்ளவும் வேண்டும் இவ்வாறு முன்னாள் மூத்த போராளி பஷீர் காக்கா(மு.மனோகர்) தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவரால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் உள்ளதாவது:- 2009ஆம் ஆண்டின் பின்னர் தாயகத்திலும் உலகப்பரப்பிலும் உள்ள தமிழ் பேசும் மக்களின் மனதில் எழுந்து நிற்கின்ற வினா, எமது தேசியத் தலைவரின் இருப்புத் தொடர்பானது. பொதுவாகத் தாயகத்தில், குறிப்பாக முள்ளிவாய்க்கால் வரை பயணித்த மக்கள் கள நிலைமையைச் சரியாகவே புரிந்துகொண்டவர்கள் என்ற வகையில் இனி எக்காலத்திலும் எங்கும் எம் கண்ணில் அவர் தோன்றமாட்டார் என்ற கசப்பான உண்மையைப் புரிந்து கொண்டனர். கடந்த காலங்களில் எடுக்கப்பட்ட வீடியோக்களை மட்டுமே பார்த்து இவ்வாறான உயரிய தலைவனின் காலத்தில் வாழ்ந்தோம் பங்களித்தோம் என்ற உணர்வினைப் பெற்றனர். தாயகத்தில் தலைவரின் புதல்வி துவாரகாவின் வித்துடலுக்கு மண்தூவி வீர வணக்கம் செய்தவர்கள் இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அப்படியிருக்கையில் துவாரகாவின் பெயராலும் மோசடி செய்யும் ஈனப்பிறவிகள் உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். எமது புனிதமான விடுதலை இயக்கத்தின் தலைவரை தமிழினம் இழந்துவிட்டது என்ற செய்தியை அனைத்துலகப் பொறுப்பாளரென ஏற்கனவே தலைவர் உத்தியோகபூர்வமாக நியமித்த கே.பி. மற்றும் அம்பாறை மாவட்டச் சிறப்புத் தளபதி ராம், பிராந்திய அரசியற்துறைப் பொறுப்பாளர் தயாமோகன் ஆகியோர் உலகுக்குத் தெரியப்படுத்தினர். அந்த நாள் 2009ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் திகதியென்று அவர்கள் குறிப்பிட்டிருந்தனர். இந்த உண்மையை ஏற்றுக்கொள்ளும் திராணி எப்போதும் போராட்டத்துக்கும் தேசியத்தலைவருக்கும் விசுவாசமாக இருப்போம் என சத்தியப்பிரமாணம் எடுத்துக்கொண்ட அனைவருக்கும் இருக்க வேண்டும். உத்தியோகபூர்வமாகத் தலைவரால் நியமிக்கப்பட்ட இந்த மூவரும் விடுத்த அறிவித்தலை இனி எவரும் உதாசீனம் செய்யமுனையமாட்டார்கள் என நான் நம்புகிறேன். ஏற்கனவே நடந்து முடிந்ததே வரலாறு, இதில் தணிக்கைக்கோ சமரசத்துக்கோ இடமில்லை. பெரும்பான்மையினரின் முடிவு என்று தீர்மானிப்பதற்கு இது தேர்தல் அரசியலல்ல. நாம் எடுக்கும் முடிவுகள் இவ்வளவு காலமும் வாழ்ந்த வாழ்க்கையின் அர்த்தத்தைப் பிரதிபலிக்கவேண்டும். வேறு எந்த சக்திகளின் முடிவுகளையும் அமுலாக்கும் விதமாக வரலாற்றை மாற்றியமைக்க முயலக்கூடாது என எமது மாவீரர் குடும்பங்களின் சார்பில் வேண்டிக்கொள்கிறேன் - என்றுள்ளது. https://newuthayan.com/article/நடந்து_முடிந்ததே_வரலாறு_தணிக்கைக்கு_இடமில்லை!
2 months 1 week ago
இலங்கையுடனான இருதரப்பு ரி20 கிரிக்கெட் தொடரில் பங்களாதேஷ் முதலாவது வெற்றியை சுவைத்தது Published By: VISHNU 16 JUL, 2025 | 11:05 PM (நெவில் அன்தனி) இலங்கை - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் கொழும்பு, ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் புதன்கிழமை (16) நடைபெற்ற தீர்மானம் மிக்க கடைசி சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் சகலதுறைகளிலும் அபரிமிதமான திறமையை வெளிப்படுத்திய பங்களாதேஷ் 8 விக்கெட்களால் அபார வெற்றியீட்டியது. இந்த வெற்றியுடன் 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ரி20 கிரிக்கெட் தொரை 2 - 1 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் பங்களாதேஷ் கைப்பற்றியது. இரண்டு அணிகளுக்கும் இடையில் 2013இலிருந்து நடைபெற்றுவந்த 2 அல்லது அதற்கு மேற்பட்ட போட்டிகளைக் கொண்ட ஐந்து சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடர்களில் பங்களாதேஷ் வெற்றியை சுவைத்தது இதுவே முதல் தடவையாகும். இந்த இரண்டு அணிகளுக்கும் இடையில் 2003இல் நடைபெற்ற ஒற்றை ரி20 போட்டியில் இலங்கை வெற்றிபெற்றிருந்தது. அதன் பின்னர் விளையாடப்பட்ட 4 தொடர்களில் ஒரு தொடர் சமநிலையில் முடிவடைந்ததுடன் மற்றைய 3 தொடர்களில் இலங்கை வெற்றிபெற்றிருந்தது. பங்களாதேஷின் இந்த வெற்றியில் மெஹிதி ஹசனின் 4 விக்கெட் குவியல், தன்ஸித் ஹசனின் ஆட்டம் இழக்காத அரைச் சதம் என்பன முக்கிய பங்காற்றி இருந்தன. தீர்மானம் மிக்க கடைசிப் போட்டியில் வெற்றிபெறுவதாக இருந்தால் இலங்கை அணி சகலதுறைகளிலும் பிரகாசிப்பது அவசியம் எனவும் குறிப்பாக துடுப்பாட்டத்தில் முழுத் திறமை வெளிப்படவேண்டும் எனவும் சனத் ஜயசூரிய கூறியிருந்தார். அதுமட்டுமல்லாமல் இலங்கை அணி மீண்டு எழும் எனவும் அவர் தெரிவித்தார். ஆனால், அவர் கூறியவற்றுக்கு எதிர்மாறாகவே இலங்கை அணியின் விளையாட்டு அமைந்திருந்தது. இதேவேளை, இந்தப் போட்டியில் அதிக தவறுகளை இழைத்ததாலேயே தோல்வி அடைய நேரிட்டதாகத் தெரிவித்த அணித் தலைவர் சரித் அசலன்க, தவறுகளைக் குறைப்பதற்கான வழிமுறைகளைப் பின்பற்றவேண்டும் எனவும் கூறினார். கடைசிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இலங்கை 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 132 ஓட்டங்களைப் பெற்றது. இலங்கையின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை. பவர் ப்ளே ஓவர்களுக்குள் 3 விக்கெட்களை இழந்ததால் இலங்கை பெரும் தடுமாற்றத்திற்குள்ளானது. குசல் மெண்டிஸ் 6 ஓட்டங்களுடன் வெளியேறிய சொற்ப நேரத்தில் குசல் ஜனித் பெரேரா தொடர்ச்சியான இரண்டாவது தடவையாக ஓட்டம் பெறாமல் களம் விட்டகன்றார். மூன்று வருடங்களுக்குப் பின்னர் சர்வதேச ரி20 அணிக்கு மீளழைக்கப்பட்ட தினேஷ் சந்திமால் தவறான அடி தெரிவால் 4 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். தொடர்ந்து மெஹிதி ஹசனின் பந்துவீச்சை புரிந்துகொள்ள முடியாதவராக அணித் தலைவர் சரித் அசலன்க போல்ட் ஆகி 3 ஓட்டங்களுடன் வெளியேறினார். இந்நிலையில் பெத்தும் நிஸ்ஸன்கவும் கமிந்து மெண்டிஸும் அணியை மீட்டெடுக்க கடுமையாக முயற்சித்தனர். ஆனால், அதுவரை தனி ஒருவராக திறமையை வெளிப்படுத்திய பெத்தும் நிஸ்ஸன்க 46 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது மெஹிதி ஹசன் வீசிய பந்தை அரைகுறை மனதுடன் அடித்து அவரிடமே பிடிகொடுத்து ஆட்டம் இழந்தார். அதன் பின்னர் கமிந்து மெண்டிஸும் தசுன் ஷானக்கவும் 6ஆவது விக்கெடடில் 22 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது கமிந்து மெண்டிஸ் 21 ஓட்டங்களுடன் களம் விட்டகன்றார். அவரைத் தொடர்ந்து ஜெவ்றி வெண்டசே 7 ஓட்டங்களை மட்டும் பெற்று ஆட்டம் இழந்தார். தசுன் ஷானக்க கடைசி ஓவரில் 2 சிக்ஸ்களையும் 2 பவுண்டறிகளையும் விளாசி அணியை ஓரளவு கௌரவமான நிலையில் இட்டார். அவர் அடித்து ஒரு பந்து விளையாட்டரங்கில் உள்ள எண்ணிக்கை பலகைக்கு மேலாக கூரையைக் கடந்து சென்று மைதானத்திற்கு வெளியே வீழ்ந்தது. அந்த பந்து கிடைக்காததால் வெறொரு பந்து அதன் பின்னர் பயன்படுத்தப்பட்டது. 25 பந்துகளை எதிர்கொண்ட அவர் 4 பவுண்டறிகள், 2 சிக்ஸ்கள் உட்பட 35 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். தசுன் ஷானக்கவும் மஹீஷ் தீக்ஷனவும் பிரிக்கப்படாத 8ஆவது விக்கெட்டில் பகிர்ந்த 29 ஓட்டங்களே இலங்கையின் சிறந்த இணைப்பாட்டமாக இருந்தது. பந்துவீச்சில் மெஹிதி ஹசன் ஒரு ஓட்டமற்ற ஓவர் உட்பட 4 ஓவர்களில் 11 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களை வீழ்த்தினார். 133 ஓட்டங்கள் என்ற சுமாரான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 16.3 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 133 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. பினுர பெர்னாண்டோ வீசிய முதல் பந்திலேயே பங்களாதேஷின் ஆரம்ப வீரர் பர்வெஸ் ஹொசெய்ன் ஏமொன் (0) ஆட்டம் இழந்ததும் இலங்கை பெரு மகிழ்ச்சியில் மிதந்தது. ஆனால், 2ஆவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்த தன்ஸித் ஹசன், அணித் தலைவர் லிட்டன் தாஸ் ஆகிய இருவரும் 50 பந்துகளில் 74 ஓட்டங்களைப் பகிர்ந்து பங்களாதேஷை பலப்படுத்தினர். லிட்டன் தாஸ் 32 ஓட்டங்கள் பெற்றிருந்தபோது கமிந்து மெண்டிஸின் பந்துவீச்சில் குசல் பெரேரவின் சிறப்பான பிடி மூலம் ஆட்டம் இழந்தார். தொடர்ந்து தன்ஸித் ஹசன், தௌஹித் ஹிரிதோய் ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 3ஆவது விக்கெட்டில் 59 ஓட்டங்களைப் பகிர்ந்து பங்களாதேஷின் வெற்றியை உறுதிசெய்தனர். தன்ஸித் ஹசன் 47 பந்துகளில் ஒரு பவுண்டறி, 6 சிக்ஸ்கள் உட்பட 73 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். தௌஹித் ஹிரிதோய் ஆட்டம் இழக்காமல் 27 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் கமிந்து மெண்டிஸ், நுவன் துஷார ஆகிய இருவரும் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். ஆட்டநாயகன்: மெஹிதி ஹசன். தொடர்நாயகன்: லிட்டன் தாஸ். https://www.virakesari.lk/article/220174
2 months 1 week ago
யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்! யாழ்ப்பாணம் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் அதன் தலைவரும் அமைச்சருமான சந்திரசேகரன் தலைலையில் இணைத்தலைவரும் வடக்கு மாகாண ஆளுநருமான வேதனாயகனின் பங்கேற்புடன் இன்று( 17) காலை 9 மணியளவில் யாழ். மாவட்ட செயலகத்தில் ஆரம்பமானது. யாழ்ப்பாண மாவட்டத்தில் 2025 ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடலாகவே இன்றையதினமும் குறித்த கூட்டம் இடம்பெற்றது. இக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், திணைக்கள தலைவர்கள் பொது அமைப்புகளின் பிரதினிதிகள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர். மேலும், வீதி அவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் சுத்திகரிப்பு, போக்குவரத்து, மின்சாரம், வீடமைப்பு, சட்டம் ஒழுங்கு, கடற்றொழில் மற்றும் விவசாயம் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://newuthayan.com/article/யாழ்._மாவட்ட_ஒருங்கிணைப்பு_குழு_கூட்டம்!
2 months 1 week ago
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் சாரதா வி பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாடு சுகாதாரத்துறையும் காவல்துறையும் சேர்ந்து கடந்த சில நாட்களாக 25 வயது பழங்குடியின கர்ப்பிணி பெண் ஒருவரை தேடிக் கொண்டிருக்கின்றனர். இடம் : ஈரோடு மாவட்டம் தாளவாடி தாலுகா, சோளகர் தொட்டி கிராமம் தேதி : ஜூலை 05-ஆம் தேதி, மாலை 5மணி. அழகான மலைப்பகுதிகளுக்கு நடுவே அமைந்துள்ள சோளகர் தொட்டி கிராமத்தில் மாவட்ட சுகாதாரத்துறையினர், கர்ப்பிணி பெண்களை கண்காணிக்கும் வழக்கமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர். அந்த கிராமத்தில் இருந்த சேவந்தி என்ற 25 வயது கர்ப்பிணி பெண்ணுக்கு ஜூலை 7-ஆம் தேதி பிரசவ தேதி குறிக்கப்பட்டிருந்தது. அவருக்கு இது இரண்டாவது பிரசவம். ஒரு வாரம் முன்பே அவரை மருத்துவமனையில் அனுமதிக்க கிராம சுகாதார செவிலியர் ஜோதி வலியுறுத்தியிருந்தார். ஆனால் சேவந்தி மற்றும் அவர் குடும்பத்தினர் மறுத்துவிட்டனர். ஜூலை 5-ஆம் தேதி சேவந்தியை சந்திக்க சென்ற போது, ஜூலை 7-ஆம் தேதி மருத்துவமனைக்கு வருவதாக சேவந்தி கூறியிருந்தார். ஆனால் ஜூலை 7-ஆம் தேதி காலை ஜோதி அங்கு சென்ற போது, சேவந்தியின் வீடு பூட்டியிருந்தது. அவர் வீட்டிலிருந்த அவரது கணவர் சந்திரன், அவரது 3 வயது குழந்தை, அவரது மாமியார் நான்கு பேரும் காணவில்லை. அந்த கிராமத்தில் எங்கு தேடியும் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. படக்குறிப்பு,சோளகர் தொட்டி கிராமத்தில் மாவட்ட சுகாதாரத்துறையினர், கர்ப்பிணி பெண்களை கண்காணிக்கும் வழக்கமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர். பத்து நாட்களுக்கும் மேலாக தேடப்பட்டு வரும் கர்ப்பிணி தமிழ்நாடு பிரசவங்கள் மருத்துவமனைகளில் நடைபெறுவதை தீவிரமாக ஊக்குவிக்கும் மாநிலமாகும். தேசிய குடும்ப நல ஆய்வு (2020-2021) தரவுகள் படி 99.6% பிரசவங்கள் மருத்துவ நிலையங்களில் நிகழ்கின்றன. Pregnancy and Infant Cohort Monitoring and Evaluation (PICME) திட்டத்தின்படி, ஒவ்வொரு கர்ப்பிணி பெண்ணின் பிரசவமும் கண்காணிக்கப்படுகிறது, குறிப்பாக கிராமங்களில் இந்த கண்காணிப்பு தீவிரமாக உள்ளது. செவிலியர் ஜோதி மட்டுமல்லாமல், பிளாக் மருத்துவ அலுவலர், விவசாய சங்கத் தலைவர் என பலர் முயற்சி எடுத்தும் சேவந்தி எங்கு இருக்கிறார் என்று கண்டறியமுடியவில்லை. அவரின் செல்போன் எண் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது. மாவட்ட சுகாதாரத்துறை, சேவந்தியை கண்டுபிடித்து தரக் கோரி மாவட்ட காவல்துறையின் உதவியை நாடியுள்ளது. காவல்துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது. ஜூலை 16-ஆம் தேதி மாலை வரை சேவந்திக்கு பிரசவம் நடைபெற்றதா இல்லையா, அவர் எங்கு உள்ளார் என்ற தகவல் மாவட்ட நிர்வாகத்தினருக்கு கிடைக்கவில்லை. ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜாதா பிபிசி தமிழிடம் பேசிய போது, "ஜூலை 14ம் தேதி கர்ப்பிணியை காணவில்லை என்று சுகாதாரத்துறை புகார் அளித்தனர். முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரது செல்போன் எண் அணைக்கப்பட்டுள்ளது. கிராமத்தில் உள்ள அவரது குடும்பத்தினரும் ஒத்துழைக்கவில்லை" என்றார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் ஈரோடு மாவட்டம் தாளவாடி தாலுகாவில் அமைந்துள்ளது சோளகர் தொட்டி கிராமம். சோளகர் பழங்குடியினத்தை சேர்ந்த மக்களே அந்த கிராமத்தில் வசித்து வருகின்றனர். பொதுவாக பிரசவங்களை வீட்டிலேயே பார்த்துக் கொள்ளும் வழக்கம் கொண்டவர்கள். "அவர் முதல் பிரசவத்திலேயே மருத்துவமனைக்கு வருவதற்கு தயக்கம் காட்டினார். பிறகு அவரிடம் பேசி அவரை கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வரவழைத்தோம். அவருக்கு சுகபிரசவம் ஆனது. எனவே இந்த முறை அவரை ஆரம்பத்திலிருந்தே தொடர்ந்து கண்காணித்து வந்தோம். மகப்பேறு பரிசோதனைகளுக்கு அவர் தவறவிடாமல் வந்தார். ஆனால் கடைசி நேரத்தில் அவரை காண இயலவில்லை. இவரை போன்ற பலர் பிரசவ நேரத்தில் மருத்துவமனைக்கு வர வேண்டிய அவசியத்தை புரிந்து கொள்வதில்லை. பல மணி நேரங்கள் உட்கார்ந்து பேசி பல பெண்களை பாதுகாப்பாக மருத்துவமனைக்கு கூட்டி வந்துள்ளோம். ஆனால் அவரை காணவேயில்லை என்பதுதான் இதில் எங்களுக்கு சவால்" என்கிறார் இதில் சம்பந்தப்பட்ட அரசு மருத்துவர் ஒருவர். சேவந்தியை தேடும் பணியில் பல தரப்பினர் உதவியையும் சுகாதாரத்துறை நாடியுள்ளது. முதல் பிரசவத்தின் போதும் சுகாதாரத்துறையினரின் மிகுந்த வற்புறுத்தல், காவல்துறையினர் தலையீட்டுக்கு பிறகே சேவந்தி மருத்துவமனைக்கு வந்துள்ளார். தாளாவடி விவசாய சங்கத் தலைவர் கண்ணையன், "முதல் பிரசவத்தின் போது சேவந்திக்கு ரத்த சோகை இருந்தது. வேறு சில உடல் நல பிரச்னைகளும் இருந்தது. எனவே மருத்துவ நிபுணர்களை நேரில் சென்று ஆலோசனைப் பெற வேண்டும் என்று சுகாதார ஊழியர் கூறியிருந்தார். அவரை அழைத்துச் செல்ல வாகனம் வந்திருந்தது, ஆனால் அவர் அதில் ஏற மறுத்துவிட்டார். உதவிக்காக நான் கொடுத்த காசையும் வாங்க அவரது மாமியார் மறுத்துவிட்டார். பிறகு இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் அவரிடம் பேசி, மருத்துவரே காரை எடுத்துக் கொண்டு வந்த அவரை பரிசோதனைக்கு அழைத்துச் சென்றனர். நானும் உடன் சென்றிருந்தேன். அப்போது அவரது மாமியார், 'இவர்களுக்கு என்ன தெரியும்? நான் எத்தனை பிரசவங்கள் பார்த்திருக்கிறேன்' என்றார்" என்று பிபிசி தமிழிடம் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பழங்குடியினரின் உணவு பழக்கங்களில் நுண் ஊட்டச்சத்துக்கள் குறைவாக இருக்கும் என்கிறார் சுகாதாரத்துறை உயர் அதிகாரி ஒருவர். (கோப்புப்படம்) சோளகர் தொட்டி அருகில் இருக்கும் மருத்துவ நிலையம் 4 கி.மீ தொலைவில் இருக்கும் பைனாபுரம் ஆரம்ப சுகாதார நிலையம். அடுத்து கிராமத்திலிருந்து 20 நிமிடத்தில் செல்லக் கூடிய தாளவாடி மேம்படுத்தப்பட்ட 24 மணி நேர ஆரம்ப சுகாதார நிலையம். அங்கு பிரசவம் பார்ப்பதற்கான வசதி உண்டு என்றாலும், அவருக்கு ரத்த சோகை இருந்ததால் கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். "பிரசவத்தின் போது கடைசி நேர சிக்கல்கள் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக அவர் பெரிய மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு எந்த பிரச்னையும் இல்லாமல் சுகப்பிரசவம் நடந்தது. ஆனால் அதையே காரணம் காட்டி அவரது மாமியார், எந்த பிரச்னையும் இல்லாத போதே பல கிலோ மீட்டர் தள்ளியுள்ள மருத்துவமனைக்கு தேவையில்லாமல் எங்களை அழைத்துச் சென்றீர்கள், எங்களுக்கு ரூ.7ஆயிரம் முதல் ரூ.8 ஆயிரம் வரை செலவாகிவிட்டது என்று கூறுகிறார்" என்கிறார் கண்ணையன். "அவருக்கு முதல் பிரசவத்திலேயே ரத்த சோகை இருந்தது. இந்த முறையும் அவருக்கு ஹீமோகுளோபின் அளவு 8 மட்டுமே இருந்தது. இதை ஆரம்பத்திலேயே கண்டறிந்ததால், தேவையான இரும்புச் சத்து கொடுத்து அவரது ஹீமோகுளோபின் அளவு 11.2 ஆக உயர்ந்திருந்தது." என்கிறார் சேவந்தியை கண்காணித்து வந்த கிராம சுகாதார ஊழியர் ஒருவர். சேவந்திக்கு அரசு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் இரண்டு ஊட்டச்சத்து பெட்டகங்கள் கிடைத்துள்ளன. மேலும் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ரூ.14 ஆயிரத்தின் முதல் தவணை கிடைத்துள்ளது என்கிறார் கிராம சுகாதார ஊழியர். ஏன் பழங்குடியினர் மருத்துவமனை வர தயங்குகின்றனர்? சோளகர் தொட்டி கிராமம் வீரப்பன் தேடுதல் வேட்டை தீவிரமாக நடத்தப்பட்ட கிராமம். "அவரது மாமியார் காவல்துறை துன்புறுத்தலால் பாதிக்கப்பட்டு, சமீபத்தில் தான் அரசின் இழப்பீட்டை பெற்றிருக்கிறார். இந்தப் பகுதியில் அவரைப் போன்று மேலும் சிலர் உள்ளனர். எனவே இப்பகுதியினருக்கு அரசு மீதான நம்பிக்கையும் குறைவாகவே உள்ளது. தாளாவடியில் தாலுகா மருத்துவமனை வேண்டும் என்பது இப்பகுதியினரின் நீண்ட நாள் கோரிக்கை," என்று கூறும் கண்ணையன் சோளகர் தொட்டி கிராமத்தைச் சேர்ந்த பிள்ளைகள் சிலர் கல்வி பயில உதவி வருகிறார். இதய நோய்கள் உள்ள கர்ப்பிணிகள் செய்யக் கூடாதவை என்னென்ன? மதுரை: அரசு செவிலியரின் மூன்றாவது கர்ப்பத்திற்கு மகப்பேறு விடுப்பு மறுப்பு - நீதிமன்றம் எடுத்த நடவடிக்கை என்ன? மாதவிடாய், மகப்பேறு காலங்களில் பெண்களை தனிமைப்படுத்தும் ஆந்திர கிராமம் கொல்லிமலை பழங்குடிகளின் உணவுமுறையையே மாற்றிய காலநிலை மாற்றம் - ஆய்வில் தெரிய வந்த உண்மை பழங்குடியின பெண்களின் எதிர்பார்ப்பை சரியாக புரிந்துக் கொள்ள வேண்டும் என்கிறார் பெயர் குறிப்பிட விரும்பாத சுகாதாரத்துறை உயர் அதிகாரி ஒருவர். "பழங்குடி பெண்களிடம் பிரசவ தேதி வந்துவிட்டது, மருத்துவமனைக்கு வாருங்கள் என்று கூறுவதை அவர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். வலி வந்தால்தான் பிரசவத்துக்கு உடல் தயாராகிறது என்பது அவர்களின் புரிதலாக இருக்கும். ஏனென்றால் அவர்கள் குடும்பங்களில் அந்த வழக்கத்தையே அவர்கள் பார்த்திருப்பார்கள்." என்கிறார். பழங்குடியின பெண்கள் மத்தியில் ரத்த சோகை பரவலாக காணப்படுவதாகவும் அவர் கூறுகிறார். "பழங்குடியினரின் உணவு பழக்கங்களில் நுண் ஊட்டச்சத்துக்கள் குறைவாக இருக்கும். அவர்கள் வசிக்கும் பகுதியை பொறுத்து அதிக புரதம், அதிக கொழுப்பு இருக்கலாம். செருப்பு இல்லாமல் நடக்கும் பழக்கம் இருந்தால் கொக்கிப்புழு தொற்று ஏற்படலாம். அதுவும் ரத்த சோகைக்கு காரணமாகலாம்" என்றார். மேலும் அவர், "கர்ப்பிணி பெண்ணுக்கு அனைத்தும் இலவசம் என்றாலும், அவருடன் இருப்பவருக்கான தங்கும் செலவு, உணவு செலவு, போக்குவரத்து செலவு ஆகியவை அதிகரிக்கிறது. இந்த பெண்ணின் மாமியார் கூறியது போல, கையிலிருந்து செய்ய வேண்டிய செலவு அதிகரிக்கிறது. தேவைப்படும் இடங்களில், நோயாளியுடன் வருபவருக்கும் தனியார் மருத்துவமனைகளில் இருப்பது போல தனி படுக்கை, உணவு ஆகியவற்றை வழங்க ஆலோசிக்க வேண்டும்," என்று கூறினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ce37ewp130do
2 months 1 week ago
17 JUL, 2025 | 08:43 AM நல்லூர் பெருந்திருவிழாவை முன்னிட்டு காங்கேசன்துறை - நாகபட்டினம் இடையே கப்பல் போக்குவரத்தில் ஈடுபடும் பயணிகளுக்கு விசேட சலுகைகளை வழங்கவுள்ளதாக சிவகங்கை கப்பல் நிறுவனத்தின் உரிமையாளர் சுந்தர்ராஜன் தெரிவித்ததாக அந்த நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது காங்கேசன்துறை - நாகபட்டினம் இடையே கப்பல் வழியாக போக்குவரத்தில் ஈடுபடும் பயணிகளுக்கு இருவழி கட்டணமாக 28 ஆயிரத்து முந்நூறு ரூபாவும், காங்கேசன்துறையில் இருந்து நாகபட்டினம் செல்வதற்கு ஒருவழி கட்டணமாக 12 ஆயிரத்து முந்நூறு ரூபாவும், நாகபட்டினத்தில் இருந்து காங்கேசன்துறை வருவதற்கு ஒருவழி கட்டணமாக 16 ஆயிரம் ரூபாவும் அறவிடப்படுகிறது. இதேவேளை நல்லூர் பெருந்திருவிழாவினை முன்னிட்டு எமது பயணிகளுக்காக விசேட சலுகைகளை வழங்கவுள்ளோம். அந்த சலுகைகள் தொடர்பாக விரைவில் அறிவிப்போம். எமது கப்பல் சேவையானது வழமை போல செவ்வாய் கிழமை தவிர்ந்த ஆறு நாட்களும் சிறப்பான சேவையில் ஈடுபட்டு வருகின்றது. கப்பல் சேவையில் ஏதாவது மாற்றங்கள் நிகழுமிடத்து அவை குறித்து நாங்கள் முற்கூட்டிய அறிவிப்பு வழங்குவோம் என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/220182
2 months 1 week ago
நீங்கள் பயணிக்கும் வாகனம் நீர் நிலை ஒன்றில் விழுந்து மூழ்கிவிட்டது என்று வைத்துக்கொள்ளுங்கள் - நடக்கக்கூடாது 🤲🤲🤲 - முதலில் என்ன செய்வீர்கள்? அது பற்றிய சில வழிகாட்டல்களையே இங்கு பார்க்கப் போகிறோம். நம்மில் பெரும்பாலானவர்களுக்கு இப்படி ஒரு நிலை ஏற்பட்டால் என்ன செய்வது என்று தெரியாது. ஆதலால் நீங்கள் பின்வரும் வழிகாட்டல்களை பின்பற்றத் தவறாதீர்கள். ♦️நீங்கள் உடனே கதவுகளைத் திறக்க முயற்சித்து நேரத்தை வீணாக்காதீர்கள். ஏனெனில் தண்ணீரின் அழுத்தம் அதனை திறப்பதை சாத்தியமற்றதாக்குகிவிடும். தப்பிக்கவும் முடியாமல் போகும். ♦️ஜன்னல்களையும் நீங்கள் பணிக்க முற்படாதீர்கள். ஏனெனில் பாய்ந்து வரும் நீரோட்டத்தில் சிக்கி, உங்களால் தப்பிப்பது மிகவும் கடினமாகும். ♦️உங்கள் வாகன இருக்கையில் காணப்படும் "ஹெட்ரெஸ்ட்டை" தலைத் தலையாணையை கழற்றி, அதிலுள்ள உலோக முனையை பயன்படுத்தி அல்லது வாகனத்தினுள் காணக்கிடைக்கும் ஏதாவது உடைக்கும் கருவிகளைப் பயன்படுத்தி வாகனத்தின் பின்புற கண்ணாடியை உடைக்க முயற்சி செய்யுங்கள். அதுவே நீங்கள் தப்பிக்க இலகுவான வழியாகும். ♦️ஏன் பின்புறக் கண்ணாடி? பெரும்பாலான வாகனங்கள் தணீணீரில் மூழ்கும் போது முதலில் பின்புறம் மிதக்கும் படியாகவே வடிவமைக்கப்படுகின்றன. ♦️ஆதலால் தீங்கள் பின்புற கண்ணாடியால் தப்பிக்க முயற்சிப்பதே மிகவும் எற்றமான மற்றும் பாதுகாப்பான வழியாகும். பாதுகாப்பான பயணம் அமைய வாழ்த்துக்கள். Imran Farook
2 months 1 week ago
2 months 1 week ago
அலாஸ்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை விடுப்பு! அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தின் கடற்கரையில் புதன்கிழமை (16) 7.3 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தின் மையப்பகுதி தீவு நகரமான சாண்ட் பாயிண்டிலிருந்து தெற்கே சுமார் 87 கி.மீ தொலைவில் அமைந்திருந்ததாகவும் கூறப்படுகிறது. அலாஸ்கா நேரப்படி புதன்கிழமை பிற்பகல் 12:37 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அலாஸ்காவின் கடற்கரையோரப் பகுதிகளில் வசிப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்கவும் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றுமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தினர். எனினும், பிற்பகல் பிற்பகல் 2:45 மணிக்கு சுனாமி எச்சரிக்கை முற்றிலும் நீக்கப்பட்டது. நிலநடுக்கத்தால் உண்டான சேத விபரங்கள் குறித்து தெளிவாகத் தெரியவில்லை. https://athavannews.com/2025/1439478
2 months 1 week ago
இங்கிலாந்தின் வேகபந்து வீச்சாளருக்கு சமனாக அல்லது சற்று மேலாக பும்ரா, டீப், கிருஸ்ணா கூட்டு இருப்பதும், தற்போதைய வரட்சி காலநிலையும் காரணம் என நினைக்கிறேன். ஆனால் எட்பாஸ்டன் மைதானம் தயாரித்தவரின் தவறு என ஸ்டோக்ஸ் தனிப்பட்டு விமர்சித்தாராம். ஹெடிங்லி, லோர்ட்ஸ் இரெண்டும் இரு அணிகள், பேட்ஸ்மன், போலர்களுக்கு சமவாய்ப்பை வழங்கின. மான்செஸ்டர் மழைக்கு புகழ் போன இடம். ஸ்பின்னும் கிடைக்கும். பார்க்கலாம். இங்கிலாந்து டவுசனை கொண்டு வருகிறார்கள். இந்தியாவில் ஜடேஜா மட்டும்தான். ஓவல் இந்தியாவுக்கு வாய்பாகவே (எட்ஜ்பாஸ்டன் போல) இருக்கும் என நினைக்கிறேன்.
2 months 1 week ago
இவை சிலருக்கு ஒரு வடிகால்களே என்பதில் மற்றுக்கருத்து கிடையவே கிடையாது. இதில் சிலரை பல்கலைக் கழகம் முடிந்து பல வருடங்கள் பின்னரும் நான் அறிந்து இருக்கின்றேன். இந்த நடவடிக்கைகள் வேறு ஏதோ வகைகளில் அவர்களிடமிருந்து வெளிப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன. புதிய மாணவர்களுக்கு நிறைய உதவிகள் தேவையே. செய்யப்படும் சின்ன உதவிகளைக் கூட பலரும் வாழ்நாளில் மறப்பதில்லை. 'மெய்யழகன்' படத்தில் வரும் அந்த சைக்கிள் கதை போல நெகிழ்ந்து சொல்லுகின்றார்கள். இப்படி வரும் பிணைப்பும், நட்பும் என்றும் அழியாமல் நிற்கின்றது........👍.
2 months 1 week ago
இங்கிலாந்து கூட கட்டாந்தரை பிட்சில் இந்தியாவினை விளையாட வைக்கிறது? அவுஸ்ரேலியா இந்தியாவிற்கு வேக பந்து வீச்சாளருக்கு சாதகமான ஆடுகளமே வழமையாக கொடுப்பதுண்டு, ஆனால் சில வேளை அவர்கள் விரித்த வலையில் அவர்களே சிக்கி இந்தியாவிடம் அடி வாங்குவதுண்டு.
2 months 1 week ago
பெடியள் உப்பிடித்தான் ஓல் எல் ல சும்மா பம்பல் அடிப்பாங்கள்… ஆனால் ஏ எல் எண்டதும் விட்டு விளாசுவாங்கள். பெண்பிள்ளைகள் ஓ எல் நல்ல விலாசம் காட்டுவினம், ஆனால் ஏ எல் ல பெரிதா இராது. இது காலாகாலமாக நடக்கும் யதார்த்தம்.
2 months 1 week ago
மதங்கள் மக்களை நலவழிப்படுத்த உருவாக்கப்பட்டவை ஆனால் அவை காலத்திற்கேற்ப தம்மை புதிப்பதில்லை, அதற்கு காரணம் கடும் கோட்பாட்டாளர்களே! சில இயற்கை விடயங்களை ஏற்றுகொள்ளும் மனநிலை அல்லது புரிதல் இல்லாதவர்கள் அது ஒரு சமூக பிரழ்வாக மாறிவிடும் எனும் நோக்கத்தில் சில விடயங்களை இந்த மதங்கள் எதிர்க்கின்றன, ஆரம்பத்தில் கத்தோலிக்க சபை கூட அவ்வாறுதான். சில மதங்கள் குறிப்பாக இந்து மதத்தில் அர்தநாரீஸ்வரர் என இவ்வாறான இயற்கையினை கடவுளாக பார்க்கிறார்கள். இங்கு மக்கள் தமது விருப்பங்களையும், நம்பிக்கைகளையும் மற்றவர்கள் மேல் திணிப்பதுதான் தவறாக மாறிவிடுகிறது. எமது புரிதல் தவறானது என்பதனை புரிந்து கொள்ள மதங்கள் தேவை இல்லை, அதற்கான தைரியம் இருந்தாலே போதுமானது.
2 months 1 week ago
தொடர் அருமையாக போகிறது. 3ம் டெஸ்ட் தேவையில்லாமல் இங்கிலாந்தை சீண்டி இந்தியா வாங்கி கட்டி கொண்டது. அதுவும் போலிங் போடும் போது சண்டித்தனம் காட்டிய சிராஜ் கடைசியில் துரதிஸ்டவசமாக அவுட் ஆகியமை - poetic justice 🤣. 2வது டெஸ்ட் ஆகிய பெர்மிங்ஹாம் எட்ஜ்பாஸ்ட்டனில் நடந்த ஆட்டத்தை 4,5 ம் நாட்கள் போய் பார்த்தேன். என்ர லக்குக்கு இந்தியா வென்று விட்டார்கள். இந்திய ரசிகர்கள் போட்ட ஆட்டத்தை பார்த்து எனக்கு ஒரே காண்டு 🤣. ஆனால் நாலாம் நாள் கில், பாண்ட் அடித்த அடியை காண கண்கோடி வேண்டும். அதேபோல் ஆகாஷ் டீப் 5 நாள் பந்து வீச்சும் -அகோரம். ஆனால் 5ம் நாள் மழை உதவியோடு ஒரு நல்ல பார்ட்னசிப் போட்டிருந்தாலே, 2ம் டெஸ்டில் இந்தியாவை வெல்லாமல் தடுத்திருக்க முடியும். பார்ப்போம் அடுத்த மான்செஸ்டர், இலண்டன் ஒவல் போட்டிகளுக்கும் டிக்கெட் எடுத்து வைத்துள்ளேன். எனது லக் வேலை செய்யாது என நம்புவோம்🤣.
2 months 1 week ago
புதிய மாணவர்களுக்கு உதவி நிச்சயமாக தேவைப்படும் என கருதுகிறேன், அவ்வாறு உதவினாலே புதிய மாணவர்களும் பழைய மாணவர்களும் இயல்பாக பழகலாம், பகிடி வதை என்பது குரூர புத்தி கொண்ட சிலரது வக்கிரங்களுக்கு வடிகாலாக இருப்பதலாலேயே சிலர் இதனை விரும்பி செய்கிறார்கள் என கருதுகிறேன், உடைந்து போன ஒரு சமூகத்தில் இருக்கும் பொதுவான அம்சம் (வர்க்க, மத, சாதி வேறுபாடுகள்) இது என கருதுகிறேன்.
2 months 1 week ago
"என் இனமே என் சனமே” (செம்மணி சித்துபாத்தி இந்து மயான மனிதப் புதைகுழிகளில் புதைந்த வரலாற்றைப் பிரதிபலிக்கும் ஒரு கற்பனைச் சிறுகதை) மேல் வானம் தாழ்வாகத் தொங்கியது, அதுவும் துக்கம் அனுசரிப்பது போல. சிவப்பு பூமியின் அடியில், நீண்ட நேரம் அலறல்கள், பிரார்த்தனைகள் மற்றும் கனவுகளுடன் மங்கின. முப்பத்தி மூன்றாவது மண்டை ஓடு மெதுவாகத் தோண்டி எடுக்கப்பட்டதால், இந்த வாரம் அமைதி மீண்டும் உடைந்தது. அதன் அருகில் - ஒரு சிறு குழந்தையின் பள்ளிப் பை, காலத்தால் மங்கிப்போனது, ஆனால் அதன் இருப்பு பல கதைகளைச் சொல்லப்போகுது. மறக்கப்பட்ட ஒரு தாலாட்டை உச்சரிப்பது போல, தமிழ் எழுத்துக்கள் அதன் குறுக்கே நடனமாடின. அந்தக் செம்மணி சித்துபாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியின் அருகே, கூடியிருந்த பார்வையாளர்களிடையே, ஐம்பது அகவை மதிக்கத்தக்க அனந்தி என்ற பெண், 1996 ஆம் ஆண்டு ஒரு சோதனைச் சாவடியில் அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் காணாமல் போன தனது தம்பி சிவகுமாரின் புகைப்படத்தை கையில் ஏந்தி நின்றாள். "கண்ணா, நீ அழுதாயா? உன்னைப் பேச அனுமதித்தார்களா? நீ இறந்தபோது நீ தனியாக இருந்தாயா?" இப்படியான அவளின் மனஉளைச்சலுக்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை, அவள் பதில்களை எதிர்பார்க்கவும் இல்லை. ஆனால் இன்று, ஏதோ மாற்றம் ஏற்பட்டது. குழந்தையின் எலும்புகளுக்கு அருகில் ஒரு சிறிய கண்ணாடி கண்டுபிடிக்கப்பட்டது. அவளுடைய இதயம் பதைபதைத்தது. அவள் கண்கள் கலங்கின. ஒருகாலத்தில் தம்பி அந்தக் கண்ணாடியை, பக்கத்து வீட்டுக்காரரின் குழந்தைக்கு வாங்க உதவியிருந்தார் என்பது, அவளுக்குத் திடீரென நினைவில் வந்தது. 1948-இல் சுதந்திரம் வந்தபின் தொடங்கியது – ‘சிங்களமொழி மட்டும்’, கல்வித் தரப்படுத்தல், நில ஆக்கிரமிப்பு, மற்றும் சிறைகள் இல்லாத கொலைகள்! அதன் உச்சியில் – 1996: கிருஷாந்தி குமாரசுவாமி. ஒரு பள்ளிச்சிறுமி. செம்மணி இராணுவத்தினரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டது. தாயார், சகோதரர், உறவினரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். இது வரை முறையான விசாரணை அல்லது அதற்கு ஏற்ற நீதி இல்லை. எதோ ஆரம்பித்தார்கள். தீர்ப்பளித்தார்கள். கிடங்கில் போட்டார்கள். புண்ணிய புத்த பூமியில் புத்தரின் முறையான போதனையைக் கேட்க ஒருவரும் இல்லை. அங்கொன்று இங்கொன்றாக பலர் பரந்து இருக்கிறார்கள். ஆனால், மௌனமாக? ஏன் புத்த சிலைகள் கூட ஆக்கிரமிப்பில் தான் ஈடுபடுகிறது! அவர்களின் உடல்கள் செம்மணியில்த் தான் புதைக்கப்பட்டன. அவள் எண்ணங்கள் பின்னோக்கி நகர்ந்தன. இன்று, தடயவியல் நிபுணர் எச்சங்களின் மீது மண்டியிட்டு எதோ தேடுகிறார். அவருடன், கூட இருந்த தொல்பொருள் பேராசிரியர் மண் வடிவங்களை ஆய்வு செய்கிறார். மேலும் செயற்கைக்கோள் படங்கள் மற்றும் அறிவியலைப் பயன்படுத்தி திகிலை வெளிப்படுத்துகிறார்கள். ஆனால் அவ்வளவு மட்டும் தான். அது மட்டும் தான் அவர்களால் முடியும் ! இவை சாதாரண மரணங்கள் அல்ல. இவை போரில் உயிரிழந்தவை அல்ல. இவர்கள் பொதுமக்கள் - பள்ளி குழந்தைகள், ஆசிரியர்கள், கடைக்காரர்கள் - கைது செய்யப்பட்டு காணாமல் போனவர்கள். மீட்கப்பட்ட எலும்புகள், பழிவாங்கலைப் பற்றி கிசுகிசுக்கவில்லை ஆனால் அவை சாட்சியைக் கோருகின்றன. அவை நீதியைக் கேட்கின்றன. ஆனந்திக்கு அவை தன்னிடம் கேட்பது போலவே இருந்தது! அவள் செம்மணியில் கூடியது துக்கம் பின்பற்ற மட்டுமல்ல, உண்மை அறிந்து நினைவு கூருவதற்காகவும். மண்ணில் உள்ள எலும்புகள் வெறும் அட்டூழியத்தின் சான்றுகள் மட்டுமல்ல - அவை தமிழ் தேசத்தின் ஆன்மாவின் துண்டுகள் என்பதை எடுத்துக் காட்டவுமே! அவள் அந்தக் கண்ணாடியைப் பற்றி சொல்ல நினைத்தாள், ஆனால் கேட்கத்தான் அதிகாரிகள் இல்லை. அங்கு இருந்த படை வீரர்களும் அரச அதிகாரிகளும் அவளை, அகழாய்வு செய்பவர்களிடமோ, அதை மேற்பார்வையிடம் நீதிபதியிடமோ செல்ல அனுமதிக்கவில்லை. ஆனால், அவளை காவல் நிலையத்தில் வந்து சொல்லும்படி கட்டளையிட்டனர். காவல் நிலையத்தில் எத்தனை முறைப்பாடுகள், சான்றுகள் தூங்கிக் கிடக்கின்றன என்பது அவளுக்கு நன்றாகத் தெரியும். அது அவளின் அனுபவம் கூட. அவள் அன்று இரவே மக்களுக்கு தன் இணையத் தளத்தின் மூலம் வேண்டுகோள் விடுத்தாள். என் இனமே என் சனமே … நம்மை அழிக்க முயன்றவர்கள், நம்மை மறக்கச் சொல்லுகிறார்கள். ஆனால், இந்தக் குழந்தைகளின் எலும்புகள் பேசுகின்றன. கண்ணாடியும் பாடசாலைப் பையும் சத்தமில்லா சாட்சிகள்! சம தருமம் இல்லா நீதியின் முகத்தை, நீதி மன்றமில்லாத இராணுவ கெடுபிடியை, இன அழிப்பின் பிசாசை, இந்த செம்மண் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது! நாம் அழக்கூடாது. நாம் பேச வேண்டும். நாம் பதிவு செய்ய வேண்டும். செம்மண் நாம் உறங்கும் இடமல்ல — நம் சத்தியத்துக்கான மன்றம்! அங்கு புதைந்துள்ள ஒவ்வொரு எலும்பும், “நீதி” என்றொரு குரல்! நீதி ஒரு நாள் பிறக்கும். அந்த நாளுக்காக — நாம் மறவாமலிருப்பதே நாம் செய்யும் பெரிய போராட்டம்! நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
2 months 1 week ago
'கடைக் கண்ணாலே இரசித்தேனே' கடைக் கண்ணாலே இரசித்தேனே அன்று கடைத் தெருவிலே ஒன்றாய்ப் போனோமே! இடைவெளி விட்டு நடந்து சென்றாலும் இடையை வருட உன்கை மறக்கவில்லையே! பொதுநூலகம் புத்தகம் மட்டுமா தந்தது பொறுமையாக அழகைப் பார்க்கவும் விட்டதே! பொறாமை கொண்டேன் உன்னைக் கண்டு பொங்கி எழுந்ததே காதலும் காமமும்! பொய்யிலே பிறந்த கவிதாயினி நானல்ல மெய்யிலே கவர்ந்த காந்தை இவளே! கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்
2 months 1 week ago
Nagamuthu Piratheeparajah rodnetposSch1c8ca98m594cih37mgc7a647ga8a615af19cl3u8316m120m · 16.07.2025 புதன்கிழமை இரவு 11.45 மணி. ***.ஆடிப்பிறப்பும் காலநிலையியலும் *** நாளை ஆடிப் பிறப்பு.... பொதுவாக தமிழர்களின் பண்டிகைகளுக்கும் காலநிலையியலுக்கும் மிகப் பெரிய தொடர்பு உள்ளது. தமிழர்களின் பண்டிகைகளுக்கு பின்னணியான பல புவி விஞ்ஞான விடயங்கள் மிகவும் ஆச்சரியமானவை. ஏனெனில் நவீன தொழில்நுட்பங்கள் வருவதற்கு முன்னரே தமிழர்கள் புவிச்சுற்றுகை, புவிச் சுழற்சி போன்றவற்றை மிகத் துல்லியமாக கணித்து அதற்கேற்ற வகையில் தமது பண்டிகைகள் மற்றும் அவை கொண்டாடும் முறைகளை வடிவமைத்து இயற்கையுடன் இணைந்ததாக ஆனால் விஞ்ஞான ரீதியிலான அர்த்ங்களோடு பண்டிகைகளைக் கொண்டாடி வந்துள்ளனர். சூரியனைப் புவி சுற்றுகின்ற பாதையின் அமைவிடங்களை மையப்படுத்தியே தமிழர்களின் பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. உதாரணமாக தைப்பொங்கல் என்பது தென்னரைக்கோளத்திலிருந்து வடவரைக் கோளத்துக்கான சூரியனின் நகர்வின் ( உண்மையில் சூரியன் நகர்வதில்லை. பூமி தான் நகர்கின்றது. ஆனால் இதனை படிக்கும் அனைவரும் புரிந்து கொள்ள வசதியாக சூரியன் நகர்வதாக குறிப்பிடுகின்றேன். ) தொடக்க நாளை தைப்பொங்கல் என கொண்டாடுகின்றோம். இதனை உத்தராயணம் எனவும் அழைப்பர். அவ்வாறு நகர்ந்து மத்திய கோட்டை அண்மிக்கும் போது சித்திரை வருடப் பிறப்பினைக் கொண்டாடுகின்றோம். வடவரைக் கோளம் வந்த சூரியன் மீள வடவரைக்கோளத்திலிருந்து தென்னரைக் கோளம் நோக்கி நகரும் நாளை ஆடிப் பிறப்பு என அழைக்கின்றோம். நகர்ந்து மத்திய கோட்டை அண்மிக்கும் போது தீபாவளியைக் கொண்டாடுகின்றோம். கருதுகோளின் அடிப்படையில் தெற்கு 90° யிலிருந்து சூரியன் புறப்படும் நாளையும் (தைப்பொங்கல்), மத்திய கோட்டை (,0°) அணமிக்கும் நாளையும்( சித்திரை வருடப் பிறப்பு) பின்னர் வடக்கு 90° யிலிருந்து புறப்படும் நாளையும் ( ஆடிப் பிறப்பு) மத்திய கோட்டை அண்மிக்கும் நாளையும்( தீபாவளி) நாம் பண்டிகைகளாக கொண்டாடுகின்றோம். சூரியனை புவி நீள் வட்டப் பாதையில் சுற்றி வரும்போது புவியின் எந்த பகுதியும் ஆண்டின் இரண்டு தடவைகள் சூரியனுக்கு அண்மையாகவும் இரண்டு தடவைகள் சூரியனுக்கு சேய்மையாகவும் அமையும். நாம் சித்திரை வருடப் பிறப்பு மற்றும் தீபாவளிக்கு அண்மித்த காலங்களில் சூரியனுக்கு மிக அண்மையாக வருகின்றோம். ஆனால் தென்னரைக்கோளத்தில் இருந்து வடக்கு நோக்கிய சூரியனின் நகர்வு வடவரைக்கோளத்திற்கு நகரும் காலம் வரை அதாவது ஜனவரி 01 முதல் ஜூலை 01 வரை எமது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் தென்னிந்தியாவிலும் சற்று வெப்பமான வானிலை நிலவும். மாறாக வடவரைக்கோளத்திலிருந்து தெற்கு நோக்கிய சூரியனின் நகர்வு தென்னரைக் கோளத்தினை அடையும்வரை அதாவது ஜூலை 01 முதல் டிசம்பர் 31 வரை மழையுடனான வானிலை நிலவும். இரண்டு காலங்களிலும் புவியின் நகர்வு காரணமாக இரண்டு வேறுபட்ட வானிலை கோலங்கள் நிலவும். இந்த வேறுபட்ட வானிலை நிலைமைகளுக்கு ஏற்ற வகையில் நாம் நம்மைத் தயார்ப்படுத்த வேண்டும் என்பதனை அறிவிக்கவே இந்த பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. குறிப்பாக தைப்பொங்கல் பண்டிகையின் ஊடாக வெப்பமான வானிலை நிகழ்வை அறிவித்தாலும் அதை விட இன்னமும் வெப்பமான வானிலையை அனுபவிக்க போகிறோம் என்பதை அறிவிக்க சித்திரை வருடப் பிறப்பு கொண்டாட்டமும், ஆடிப்பிறப்பினூடாக மிதமான வெப்பநிலை கொண்ட வானிலையை அனுபவிக்க போகிறோம் என்பதை அறிவித்தாலும் கூட கன மழையுடன் கூடிய வானிலையை அனுபவிக்க போகிறோம் என்பதை அறிவிக்க தீபாவளி பண்டிகையைக் கொண்டாடுகின்றோம். குறிப்பாக இந்த பண்டிகைகளின் கொண்டாட்ட முறைமைகளின் பின்னால் மிகப் பெரிய காலநிலை சார் விடயங்கள் காணப்படுகின்றன. குறிப்பாக வெப்பமான வானிலையை வரவேற்க பிரதானமாக பொங்கல் பொங்கி வரவேற்கின்றோம். இதற்காக தான் தைப்பொங்கலுக்கும் சித்திரை வருடப் பிறப்பிற்கும் பொங்கல் பொங்கி கொண்டாடுகின்றோம். மாறாக குளிரான அல்லது மழையுடன் கூடிய வானிலையை வரவேற்க மாப்பொருட்களாலான பண்டங்களை செய்து பண்டிகைகளைக் கொண்டாடுகின்றோம். அதனால் தான் ஆடிப்பிறப்பிற்கு கொழுக்கட்டை, மோதகம், ஆடிக்கூழ் போன்றவற்றுடன் கொண்டாடுகின்றோம். இதனை இன்னொரு வகையில் கூறுவதானால் ஆடி மாதம் முதல் பண்டைய தமிழர்களின் முதன்மையான மற்றும் முக்கியமான தொழிலான விவசாய நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கான காலமாகவும் கருதுவார்கள். ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை விவசாயிகள் வயல் வேலைகளுக்கு செல்வார்கள். அவர்கள் அதிக உடலுழைப்பைச் செலுத்தும் அதேவேளை மிக நீண்ட நேரம் வேலை செய்வார்கள். அவர்கள் நீண்ட நேரம் பசிக்களையின்றி வேலையைத் தொடர மாப்பொருட்களாலான பண்டங்களை உண்பார்கள். அதனைக் கருத்தில் கொண்டு நாம் மாப்பொருட்களாலான உணவுப் பழக்கத்துக்கு மாற வேண்டும் என்ற அடிப்படையிலேயே ஆடிப் பிறப்புக்கு மாப்பொருட்களாலான பண்டங்களை செய்து பண்டிகைகளைக் கொண்டாடி வருகின்றோம். இன்றைய உலகம் வலியுறுத்தும் காலநிலைத் தழுவல்( Climate Adaptation) என்பதனை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மிகச்சரியாக கடைப்பிடித்தவர்கள் தமிழர்கள். அதற்கு மிகச்சிறந்த உதாரணம் இந்த பண்டிகைகளும் அவை கொண்டாடப்படும் முறைகளும். தமிழர்கள் மிக நீண்ட காலங்களுக்கு முன்னரே புவியின் சுழற்சி மற்றும் சுற்றுகைகளை மிகச்சரியாக கணித்துள்ளார்கள். தற்போதைய விஞ்ஞான ரீதியிலான கணிப்புக்களுக்கு எந்த வகையிலும் குறைவில்லாத வகையில் புவிச்சுழற்சி மற்றும் புவிச்சுற்றுகை பற்றிய தமிழர்களின் கணிப்பு அபரிமிதமானது. நவீன கணிப்புக்களோடு சில நாட்கணக்கில் வேறுபாடுகள் இருந்தாலும் பல நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னான அவர்களின் கண்டுபிடிப்பு இன்று வரை நிலைத்து நிற்கின்றது. இவ்வாண்டு கூட தென்னரைக் கோளத்திலிருந்து வடவரைக் கோளத்துக்கான நகர்வு 03.01.2025 அன்று ( தமிழர்களின் கணிப்பின்படி ஜனவரி -14 : தைப்பொங்கல்.... 11 நாட்கள் வேறுபாடு) நிகழ்ந்துள்ளது. அதேவேளை வடவரைக் கோளத்திலிருந்து கடந்த 04.07.2025 அன்று ( தமிழர்களின் படி நாளை 17.07.2025: ஆடிப்பிறப்பு ... 13 நாட்கள் வேறுபாடு) சூரியன் தென்னரைக்கோளம் நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. பல விடயங்களில் தமிழர்கள் மிகச் சிறப்பாக காலநிலைத் தழுவலைக் கடைப்பிடித்துள்ளார்கள். உணவுகள், உடைகள், பண்டிகைகள், திருவிழாக்கள், நீர்ப்பாதுகாப்பு,வனப் பாதுகாப்பு என்ற வகையில் பல விடயங்களில் தமிழர்கள் காலநிலையோடு இணைந்து மிகச் சிறப்பாக செயற்பட்டுள்ளார்கள்( இவை பற்றி விரிவாக இன்னொரு பதிவில் காண்போம்). நாளை ஆடிப்பிறப்பு. இதனை வெறுமனே சம்பிரதாயத்துக்காகவன்றி இதன் பின்னாலான அர்த்தங்கள் நிறைந்த காரணங்களை அறிந்து கொண்டாடுவோம். 'ஆடி உழவைத் தேடி உழு ' என்ற வாக்குக்கமைவாக ஆடி மாதத்தில் எம் விவசாயிகள் பலர் வயல் உழவு வேலைகளைத் தொடங்குவார்கள். அதற்கேற்ப எதிர்வரும் 22.07.2025 வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளமையும் குறிப்பிடத்தக்கது. -நாகமுத்து பிரதீபராஜா-
2 months 1 week ago
இந்த லொயோலா கல்லூரி ஒரு கத்தோலிக்க கல்வி நிறுவனம் என்பதைச் சுட்டிக் காட்ட வேண்டும். கத்தோலிக்க திருச்சபையில், யேசு சபை (Society of Jesus) என்ற ஒரு குருக்கள் சபை இருக்கிறது. இந்த யேசு சபையினரால் நிர்வகிக்கப் படும் பல உயர் கல்வி நிறுவனங்களில் ஒன்று தான் லொயொலா கல்லூரி. இந்தச் சபையில் விண்ணப்பிக்கும் எல்லோரையும் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள். அனேகமாக ஒரு உயர் கல்வித் தகுதி இருக்க வேண்டும். அத்தோடு, ஒரு துறை சார் நிபுணராகவும் இருக்க வேண்டும். கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் யேசு சபையில் சேரும் கத்தோலிக்க குருக்கள் முற்போக்காளர்களாக இருப்பர். முன்னாள் போப் பிரான்சிஸ் யேசு சபையைச் சேர்ந்தவர், அவரது முற்போக்கான கொள்கைகளுக்கு இது ஒரு காரணம்.
Checked
Sat, 09/27/2025 - 18:24
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed