புதிய பதிவுகள்2

பாம்பை பிடித்து மாலை போல கழுத்தில் சுற்றியிருந்த நபர் - அதனிடமே கடிபட்டு இறந்த அவலம்

2 months 1 week ago
பட மூலாதாரம்,SURAH NIYAZI படக்குறிப்பு, தீபக் மஹவார், ராகோகரில் உள்ள ஜேபி கல்லூரியில் பல ஆண்டுகளாக பாம்புகளின் நண்பராக (பாம்புகளை மீட்கும்) பணியாற்றினார் கட்டுரை தகவல் ஷுரைஹ் நியாஸி பிபிசி ஹிந்திக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் மத்திய பிரதேசத்தின் குணா மாவட்டத்தில் உள்ள ராகோகரில், 'பாம்புகளின் நண்பர்' தீபக் மஹவார் அலட்சியத்தால் உயிரிழந்துள்ளார். மீட்கப்பட்ட பாம்பை காட்டில் விடுவிப்பதற்குப் பதிலாக, தனது கழுத்தில் போட்டுக் கொண்டார். கழுத்தை சுற்றியிருந்த பாம்பு கடித்ததில் அவர் உயிரிழந்தார். முதலில், பாம்புகடியை சாதாரணமாக எடுத்துக் கொண்டு, முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார். ஆனால் நஞ்சு படிப்படியாக பாதிக்கவே, அவரது நிலை இரவில் மோசமடைந்தது. மீண்டும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது அவர் இறந்தார். பாம்புகளை மீட்பதில் அந்த வட்டாரத்தில் பிரபலமாக இருந்த தீபக், இதற்காகவே அவர் ஜேபி கல்லூரியில் பணியமர்த்தப்பட்டிருந்தார். ராகோகரில் ஒரு வீட்டில் பாம்பு புகுந்துவிட்டதாக திங்கட்கிழமை நண்பகல் சுமார் 12 மணிக்கு அவருக்கு ஓர் அழைப்பு வந்தது. தீபக் அந்தப் பகுதியை அடைந்து பாம்பை பாதுகாப்பாக மீட்டார். இதற்கிடையில், அவரது 12 வயது மகனின் பள்ளியிலிருந்து அவருக்கு தொலைபேசி அழைப்பு வந்தது, பள்ளி மூடப்பட்டுள்ளதாகவும், வந்து மகனை அழைத்துச் செல்லலாம் என்றும் கூறப்பட்டது. அவசரத்தில் பாம்பை பெட்டியில் அடைப்பதற்குப் பதிலாக, தனது கழுத்தைச் சுற்றி போட்டுக்கொண்டு பள்ளிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். தனது மகனை வண்டியின் பின்புறம் அமர வைத்துக்கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, கழுத்தைச் சுற்றியிருந்த பாம்பு அவரது வலது கையில் கடித்தது. பாம்பு கடித்தவுடன் மருத்துவமனையை அடைந்த தீபக் மஹவார் பட மூலாதாரம்,SURAH NIYAZI படக்குறிப்பு, மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்திருந்தால் தீபக் காப்பற்றப்பட்டிருக்கலாம் என மருத்துவர் கூறுகிறார் பாம்பு கடித்தவுடனே, தீபக் தனது நண்பர் ஒருவரை அழைத்தார், அவர் வந்து ராகோகரில் மிக அருகே இருந்த மருத்துவமனைக்கு தீபக்கை அழைத்துச் சென்றார். அங்கு முதல்கட்ட சிகிச்சைக்குப் பிறகு மருத்துவர்கள் அவரை குணாவில் உள்ள மருத்துவமனைக்குச் செல்ல அறிவுறுத்தினர். தனது உடல்நிலையில் ஏற்பட்ட முன்னேற்றத்தைப் பார்த்த தீபக், மாலையில் தனது வீட்டுக்குச் சென்று இரவு உணவை முடித்துக்கொண்டு தூங்கச் சென்றுவிட்டார். ஆனால் இரவில் அவரது நிலை மோசமடைந்த நிலையில் அவர் காலையில் உயிரிழந்தார். "அவர் எங்களிடம் வந்தபோது அவரது நிலை சாதரணமாக இருந்தது. அவரது முக்கிய உறுப்புகள் நலமாக இருந்தன, அவர் பேச்சு சாதாரணமாக இருந்ததுடன் முழு நினைவுடன் இருந்தார்," என ராகோகர் ஆரம்ப சுகாதார நிலையத்தைச் சேர்ந்த மருத்துவர் தேவேந்திர சோனி பிபிசியிடம் தெரிவித்தார். "நாங்கள் நிலையான நடைமுறைகளின்படி உடனடியாக அவருக்கு சிகிச்சையைத் தொடங்கினோம். அவருக்கு ஐவி செலுத்தப்பட்டது, நஞ்சு முறிவு மருந்து மற்றும் இதர மருந்துகளைக் கொடுத்த பின்னர் இங்கு அனைத்து வசதிகளும் இல்லாததால் குணாவில் உள்ள மருத்துவமனைக்குச் செல்ல அறிவுறுத்தினோம்." குணாவில் உள்ள மருத்துவமனையில் சில மணிநேரம் இருந்த தீபக், நன்றாக இருப்பதாக உணர்ந்ததால் வீடு திரும்பிவிட்டதாக மருத்துவர் சோனி தெரிவித்தார். "மிக மெதுவாகவே வேலை செய்யக்கூடிய நஞ்சைக் கொண்ட நாகம் போன்று அந்தப் பாம்பு தெரிந்தது. இதைப் போன்ற சூழ்நிலைகளில், நோயாளிகள் குறைந்தது 24 மணிநேரத்திற்கு மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பது அவசியம். அவர் வீடு திரும்பாமல் மருத்துவமனையில் மருத்துவ கண்காணிப்பில் இருந்திருந்தால் உயிர் பிழைத்திருக்கக்கூடும்," என மருத்துவர் சோனி தெரிவித்தார். பாம்பு மீட்கும் திறன் பெற்றுத் தந்த வேலை பட மூலாதாரம்,SURAH NIYAZI I படக்குறிப்பு, அவரது இளைய சகோதரர் நரேஷ் மஹவாரின் கூற்றுப்படி இதற்கு முன் பலமுறை தீபக்கை பாம்பு கடித்துள்ளது தீபக் மஹவார் ராகோகரில் இருக்கும் ஜேபி கல்லூரியில் பாம்புகளின் நண்பராக (பாம்பு பிடிப்பவர்) பணியாற்றி வந்தார். அருகில் உள்ள கிராமங்களில் பாம்பு இருப்பதாகவும், அதனை மீட்க வேண்டும் என கோரிக்கை வந்தால், அவர் அங்கே சென்று பாம்புகளை மீட்பார். சம்பவம் நடந்தபோது, தீபக் தனது இளைய மகனை பள்ளியில் இருந்து அழைத்து வரச் சென்றிருந்தார். தீபக்கிற்கு இரண்டு மகன்கள் உள்ளனர், அவர்களில் ஒருவருக்கு 14 வயது, மற்றொருவருக்கு 12 வயது. அவரது மனைவி சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். தீபக்கின் இளைய சகோதரர் நரேஷ் மஹவார், "தீபக் இந்தப் பணியை பல ஆண்டுகளாகச் செய்துகொண்டிருந்தார், பாம்பு பிடிக்கும் கலையை அவர் வேறு யாரிடம் இருந்தோ கற்றுக்கொண்டார். கடந்த சில ஆண்டுகளில் அவர் தனது கலையில் நிபுணத்துவம் பெற்றிருந்ததால் அவருக்கு ஜேபி கல்லூரியில் வேலை கிடைத்தது. இந்த கல்லூரி பாம்புகள் அதிகம் காணப்படும் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ளது" என பிபிசியிடம் தெரிவித்தார். "இதற்கு முன்பும் தீபக்கை பல முறை பாம்புகள் கடித்துள்ளன. பெரும்பாலும் மூலிகைகளைக் கொண்டு தனக்குத் தானே சிகிச்சை செய்து கொள்வார். ஆனால் ஒருமுறை அவர் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிருந்தது. இந்த முறையும் இது சாதாரண வீக்கம்தான் எனவும், தான் விரைவில் குணமடைந்து விடுவோம் எனவும் நினைத்தார். அதனால் அதை அவர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை," என நரேஷ் கூறுகிறார். "இந்தச் சம்பவத்தைப் பற்றி எழுதும்போது மனிதாபிமான உணர்வுடன் எழுத வேண்டும் என்பதே எங்களது வேண்டுகோள். என் சகோதரர் இறந்துவிட்டார், இப்போது அவரது இரு சிறிய குழந்தைகள் மட்டுமே உள்ளனர். அரசு இந்த விவகாரத்தை மனிதாபிமான கண்ணோட்டத்தில் பார்த்தால், ஒருவேளை ஏதாவது உதவி கிடைக்கலாம். இதனால் இந்தக் குழந்தைகளின் எதிர்காலம் பாதுகாக்கப்படலாம்," என அவர் கூறினார். "தவறான புரிதல்களைத் தாண்டி, தீபக் பலமுறை தனது உயிரைப் பணயம் வைத்து மற்றவர்களுக்கு உதவிய நல்ல மனிதராக இருந்தார்" என்றும் அவர் தெரிவித்தார். இந்தியாவில் பாம்புக்கடி மரணங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் பாம்புக் கடியால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு இந்தியா பெயர் பெற்றது. உலக சுகாதார அமைப்பின் (WHO) தரவுகள்படி இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் சுமார் 50 லட்சம் பாம்புக் கடி சம்பவங்கள் பதிவாகின்றன. இவற்றில் சுமார் 25 லட்சம் சம்பவங்களில், மக்களின் உடலை பாம்பின் நஞ்சு பாதிக்கிறது. பதிவான பாம்புக்கடி சம்பவங்களின் அடிப்படையில் இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் சுமார் ஒரு லட்சம் பேர் பாம்புக் கடியால் உயிரிழக்கின்றனர். சுமார் நான்கு லட்சம் பேர் உடலின் ஏதோ ஓர் உறுப்பை இழக்கின்றனர் அல்லது அவை நிரந்தரமாகச் செயல்படாமல் போகின்றன. கடந்த 2020ஆம் ஆண்டு பிபிசியின் செய்தி ஒன்றிலும் இந்தியாவில் ஆண்டுதோறும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பாம்புக் கடியால் உயிரிழக்கின்றனர் எனக் கூறப்பட்டுள்ளது. பாம்புக் கடி அதிகமுள்ள பகுதிகளில் ஒன்றாக மத்திய பிரதேசம் கருதப்படுகிறது. இங்கு மருத்துவமனை மற்றும் உடற்கூறாய்வு அறிக்கைகளின் அடிப்படையில் ஒருவரின் மரணம் பாம்புக் கடியால் ஏற்பட்டது என நிரூபிக்கும் குடும்பங்களுக்கு அரசு இழப்பீடு வழங்குகிறது. 'தி ராயல் சொசைட்டி ஆஃப் ட்ராபிகல் மெடிசின் அண்ட் ஹைஜீன்' இதழில் 2024ஆம் ஆண்டு வெளியான ஓர் ஆய்வு, இழப்பீடுகள் குறித்து பகுப்பாய்வு செய்திருந்தது. இதில், 2020-21 மற்றும் 2021-22ஆம் ஆண்டுகளில் மத்திய பிரதேச சுகாதாரத் துறையால் வழங்கப்பட்ட புள்ளிவிவரங்கள் மதிப்பாய்வு செய்யப்பட்டன. இந்த ஆய்வில், இந்த இரண்டு ஆண்டுகளில் மொத்தம் 5,728 குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டதாகக் கண்டறியப்பட்டது. மாநில அரசு, பாம்புக் கடியால் ஏற்பட்ட மரணங்களுக்கு மொத்தம் ரூ. 229 கோடி நிவாரணத் தொகையை விநியோகித்து இருந்தது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c5y76ljgkr8o

வேலணை, சாட்டி கடற்கரையில் சாதாளை தாவரங்களை அகற்ற நடவடிக்கை - தவிசாளர் அசோக்

2 months 1 week ago
18 JUL, 2025 | 03:31 PM (எம்.நியூட்டன்) சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்குடன் வேலணை - சாட்டி கடற்கரையோரத்தில் காணப்படும் சாதாளை தாவரங்களை அகற்றி, கடற்கரையை தூய்மையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வேலணை பிரதேச சபையின் தவிசாளர் அசோக்குமார் தெரிவித்தார். அத்துடன் இந்த நடவடிக்கையின்போது அகற்றப்படும் சாதாளைகள், தாவரங்களுக்கான சிறந்த பசளையாக பயன்படுத்தக்கூடியதாக இருப்பதால் இந்த சாதாளையை மிகக் குறைந்த விலைக்கு பொதுமக்களுக்கு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஆடி அமாவாசை தினத்திற்கு முன்னராக இந்த செயற்பாட்டை பிரதேச சபை மேற்கொள்ளவுள்ளதால் கடற்சாதாளைகளைப் பெற விரும்புவோர் வேலணை பிரதேச சபையின் தலைமை அலுவலகத்துடன் தொடர்புகொண்டு உரிய கட்டணங்களைச் செலுத்தி தேவையான கடற்சாதாளைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றார். https://www.virakesari.lk/article/220316

குளிக்கும் வேலை

2 months 1 week ago
உங்களின் மாமி இப்பொழுது சுகமாகி இருப்பார் என்று நினைக்கின்றேன், அண்ணா. கனடாவில் நண்பன் ஒருவனின் அம்மாவிற்கும் இப்படி நடந்துவிட்டது. படுத்த படுக்கையாக இருக்கின்றார். அந்த நினைவும், அலுவலகத்தில் நடந்த விடயமும் சேர்ந்து தான் இப்படி ஒன்றை எழுத வைத்திருக்கின்றது போல.................... சும்மா பகிடியாகவே எழுதினேன். தெரிந்தவர்கள் சிலருக்கு இப்படி நடந்திருப்பது இப்பொழுது வரிசையாக ஞாபகத்திற்கு வந்தது. அதில் ஒருவர், அவர் இலங்கையில் ஓரளவு பிரபலமானவர். குளியலறையில் விழுந்த பின் சென்னைக்கு கொண்டு போனார்கள் என்று நினைக்கின்றேன். அல்லது கொழும்பில் இருந்த அப்பல்லோ மருத்துவமனையோ என்று சரியாக ஞாபகம் இல்லை. அங்கு சில மாதங்கள் இருந்தார் போல. நிறைய செலவாகியது. ஆனால் அவர் சுகப்படவே இல்லை.

யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்களுக்கான பேருந்துக்கு நிதி திரட்டல் : தென்னிந்திய பாடகர் ஶ்ரீ நிவாஸின் இசை நிகழ்ச்சி

2 months 1 week ago
யாழை வந்தடைந்தனர் பாடகர் ஸ்ரீனிவாஸ் தலைமையிலான குழுவினர் 18 JUL, 2025 | 04:40 PM தென்னிந்திய பிரபல பாடகர் ஶ்ரீநிவாஸ் பங்குபெறும் இசை நிகழ்ச்சி யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் சனிக்கிழமை (19) மாலை ஆறு மணிக்கு இடம்பெறவுள்ள நிலையில், ஸ்ரீநிவாஸ் தலைமையில் தென்னிந்திய பாடகர்கள், இசை கலைஞர்கள் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் ஊடாக வெள்ளிக்கிழமை (18) யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர். அதன் போது, யாழ்ப்பாணத்தில் அவர்களுக்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது. யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்களின் போக்குவரத்து வசதிகளுக்காக பேருந்து ஒன்றை கொள்வனவு செய்வதற்கான நிதியை திரட்டும் முகமாக குறித்த இசைநிகழ்ச்சி யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வு ஒரு களியாட்ட நிகழ்வாக அல்லாமல் மருத்துவ பீட மாணவர்களையும் மருத்துவ சமூகத்தையும் மேம்படுத்தும் ஒரு நிகழ்வாக இது காணப்படும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர் ஒன்றியம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/220318

பிரமிட் திட்டங்களின் பரவலுக்கு எதிரான தேசிய விழிப்புணர்வு வாரம் நாளைமுதல் ஆரம்பம்!

2 months 1 week ago
சட்டவிரோத பிரமிட் திட்டங்கள் தொடர்பில் விசேட வௌிப்படுத்தல் Jul 18, 2025 - 17:11 நாட்டில் 50க்கும் மேற்பட்ட அடையாளம் காணப்படாத சட்டவிரோத பிரமிட் திட்டங்கள் செயல்பட்டு வருவதாக இலங்கை மத்திய வங்கியின் நிதி மற்றும் நுகர்வோர் உறவுகள் திணைக்களத்தின் பிரதி பணிப்பாளர் சட்டத்தரணி யானக ரணவீர தெரிவித்துள்ளார். டி.வி தெரணவில் ஒளிபரப்பான "ரீ பில்ட் சிறிலங்கா" நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், இதுவரை 22 பிரமிட் திட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகக் கூறினார். இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த அவர், "இருபத்தி இரண்டு பிரமிட் திட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவை குறித்த மேலதிக விசாரணைக்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. நாங்கள் அடையாளம் கண்டிருப்பது அவ்வளவுதான். இந்த நேரத்தில் கூட இந்த பிரதேசத்திற்குள் மிகப் பெரிய எண்ணிக்கையிலானவர்கள் செயல்படுகிறார்கள். ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் இருப்பதாகச் சொல்வது சரியாக இருக்கும். முதற்கட்ட விசாரணைகளை நடத்துவதற்காக 50க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் எங்களுக்கு வந்துள்ளன.'' என்றார். மேலும், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற இலங்கை மத்திய வங்கியின் மாத்தளை பிராந்திய அலுவலகத்தின் முகாமையாளர் யாசினி ராஜபக்ஷ, பிரமிட் திட்டத்தில், இறுதி வாடிக்கையாளரை அடையாளம் காண முடியாது என்றும், இந்தத் திட்டத்தில் விற்பனைக்குப் பிந்தைய சேவை இல்லை என்றும் கூறினார். மேலும் கருத்து தெரிவித்த அவர், ''பிரமிட் திட்டங்களால் வாக்குறுதியளிக்கப்பட்ட நன்மைகள் உண்மையில் நடைமுறைக்கு சாத்தியமற்றது. அதை நம்புவது கடினம். உதாரணமாக, இந்த பிரமிட் திட்டத்தில், நாங்கள் முதலீடு செய்யும் பணம் மிகக் குறுகிய காலத்தில் இரட்டிப்பாக்கப்படும் அல்லது மூன்று மடங்காக அதிகரிக்கும் என்று அவர்கள் கூறுகிறார்கள். ஒரு தயாரிப்பு விற்பனை அமைப்பில் ஒரு பொருளை வாங்குவதன் மூலமும் நீங்கள் இதில் சேரலாம். மேலும், பிரமிட் திட்டத்தில் இறுதி வாடிக்கையாளரை நாங்கள் அடையாளம் காணவில்லை. "ஒரு பிரமிட் திட்டத்தில் உங்களுக்கு உண்மையில் விற்பனைக்குப் பிந்தைய சேவை கிடைக்காது." என்றார். https://adaderanatamil.lk/news/cmd8r0pp101c2qp4kjm9crrth

கூட்டணி ஆட்சிதான்.. 3 முறை அமித்ஷாவே சொல்லிவிட்டார்.. மாற்ற முடியாது.. எடப்பாடிக்கு அண்ணாமலை பதிலடி

2 months 1 week ago
தமிழ்நாட்டில் ஒரு கூட்டணித் தகராறு Published By: VISHNU 18 JUL, 2025 | 07:13 PM தி. இராமகிருஷ்ணன் பாரதிய ஜனதா கட்சிக்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் இடையிலான உறவுகள் புதுப்பிக்கப்பட்டிருக்கின்றன என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த ஏப்ரில் மாதம் அறிவித்த போதிலும், இரு கட்சிகளும் அவற்றுக்கிடையிலான முரண்பாடுகளை மறைப்பதற்கு எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. "எடப்பாடிஜியின் தலைமையில் நாம் தேர்தலில் போட்டியிடுவோம்" என்று அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமியுடன் கூட்டாக நடத்திய செய்தியாளர்கள் மகாநாட்டில் அமித் ஷா கூறினார். வெற்றி கிடைக்கும் பட்சத்தில் "கூட்டரசாங்கம்" ஒன்று அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார். அந்த அறிவிப்புக்கு சாதகமான முறையில் அண்ணா தி.மு.க. பதிலளித்திருக்கவில்லை. அண்ணா தி.மு.க. மாத்திரமல்ல, ஆளும் திராவிட முன்னேற்றக் கழகமும் கூட தமிழ்நாட்டில் கூட்டரசாங்கம் என்ற யோசனைக்கு எப்போதுமே எதிராகவே இருந்து வந்திருக்கினாறன. 1980 சட்டசபை தேர்தலில் தி.மு.க. -- காங்கிரஸ் கூட்டணி அதிகாரத்தைக் கைப்பற்றத் தவறியது. அந்த கூட்டணியின் பங்காளிக் கட்சிகள் சம எண்ணிக்கையிலான ஆசனங்களிலேயே போட்டியிட்டன. தி.மு.க.வுடன் ஒரு சுற்று இழுபறிக்கு பிறகு அதன் தலைவர் மு. கருணாநிதியை் முதலமைச்சர் வேட்பாளராக முன்னிலைப்படுத்துவதற்கு காங்கிரஸ் இறுதியாக இணங்கியது. ஆனால், அந்த கூட்டணி தேர்தலில் மக்களின் ஆதரவைப் பெற்று வெற்றியடையவில்லை. பதிலாக, அந்த வருடம் ஏற்கெனவே நடைபெற்ற லோக்சபா தேர்தலில் இரு ஆசனங்களில் மாத்திரமே வெற்றி பெற்று பிறகு தமிழ் நாட்டில் ஆட்சியதிகாரத்தையும் இழந்த அண்ணா தி.மு.க.வே சட்டசபை தேர்தலில் பெருவெற்றி பெற்றது. 2001 சட்டசபை தேர்தலில் அண்ணா தி.மு.க. 141 ஆசனங்களில் போட்டியிட்டபோது ( முன்னென்றும் இல்லாத வகையில் அந்த கட்சி குறைந்தளவு ஆசனங்களில் போட்டியிட்ட சந்தர்ப்பம் அதுவே ) கூட்டணி நிர்ப்பந்தங்களின் பின்புலத்தில் அந்த கட்சியினால் தனியாக சாதாரண பெரும்பான்மை ஆசனங்களை கைப்பற்றக் கூடியதாக இருக்குமா என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது. ஆனால், 234 ஆசனங்களைக் கொண்ட தமிழ்நாடு சட்டசபையில் அண்ணா தி.மு.க. 118 ஆசனங்களை கைப்பற்ற வேண்டியிருந்தது. அண்ணா தி.மு.க.வின் தாபகர் எம்.ஜி. இராமச்சந்திரனும் அவருக்கு பிறகு கட்சியின் தலைவராக இருந்த ஜெயலலிதாவும் மாநிலத்தில் அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்ளும் யோசனைக்கு ஒருபோதும் ஆதரவாக இருந்ததில்லை. ஆனால், கட்சி அந்த தேர்தலில் 132 ஆசனங்களை கைப்பற்றியதால் கவலைப்படுவதற்கு காரணம் இருக்கவில்லை 2006 சட்டசபை தேர்தலில் சாதாரண பெரும்பான்மைக்கு குறைவான ஆசனங்களில் (96) தி.மு.க. வெற்றிபெற்றது. அவ்வாறிருந்தாலும், தி.மு.க. அதன் கூட்டணிக் கட்சிகளுடன் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ள மறுத்தது. காங்கிரஸுடன் அதிகாரத்ணைப் பகிர்ந்துகொள்ளாமல், மாநிலத்தில் அரசாங்கத்தை அமைக்கக்கூடிய அளவுக்கு தி.மு.க. தலைவருக்கும் காங்கிரஸின் அன்றைய தலைவி சோனியா காந்திக்கும் இடையில் நல்லதொரு நட்புறவு இருந்தது. எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கூட்டரசாங்கம் அமையும் என்று ஏப்ரிலில் அறிவித்த பிறகுைஅமித் ஷா அந்த நிலைப்பாட்டை பல நேர்காணல்களில் ஊடகங்களுக்கு மீண்டும் வலியுறுத்தி தெரிவித்தார். ஆனால், அது விடயத்தில் அண்ணா தி.மு.க.வுக்கு தெளிவு இருக்கவில்லை. மத்திய அமைச்சரின் நிலைப்பாடு தொடர்பாக கருத்து தெரிவித்த அண்ணா தி மு.க. பேச்சாளர் வைகைச்செல்வன் தமிழ்நாடு மாநிலத்தில் கூட்டரசாங்கம் என்ற கோட்பாட்டை மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொண்டதில்லை என்று குறிப்பிட்டார். அதேபோன்றே 2026 சட்டசபை தேர்தல்களுக்கு முன்னதாக மாநிலம் தழுவிய சுற்றுப் பயணத்தை ஜூலை 7 ஆம் திகதி தொடக்கிய பழனிச்சாமியும் தனியாக பெரும்பான்மை ஆசனங்களை கைப்பற்றிய பிறகு அண்ணா தி.மு.க அரசாங்கத்தை அமைக்கும் என்று குறிப்பிட்டதை காணக்கூடியதாக இருந்தது. அமித் ஷாவின் நிலைப்பாடு தொடர்பாக பழனிச்சாமியிடம் கேட்கப்பட்டபோது மாநிலத்தில் தனிக்கட்சி ஆட்சியை ஷா ஏற்றறுக் கொண்டதாகவே அவரின் கருத்தை தான் அர்த்தப்படுத்துவதாக கூறினார். இரு கட்சிகளுமே முரண்பாடான கருத்துக்களைை வெளிப்படுத்தியிருப்பதற்கு மத்தியிலும் பாரதிய ஜனதாவின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனும் மத்திய இணையமைச்சர் எல். முருகனும் பழனிச்சாமியின் பிரசாரத் தொடங்க நிகழ்வில் பங்கேற்றிருந்தனர். ஒரு நேர்காணலில் அமித் ஷா முதலமைச்சர் பதிவிக்கு அண்ணா தி.மு.க.வில் இருந்தே நியமனம் செய்யப்படும் என்று கூறினாலும் பழனிச்சாமியின் பெயரை அவர் குறிப்பிடவில்லை. இதை தி.மு.க. வட்டாரங்கள் கவனிக்கத் தவறவில்லை. அண்ணா தி.மு.க.வின் பொதுச் செயலாளரை அசௌகரியப்படுத்துவதில் நாட்டம் காட்டிய தி.மு க . மத்திய அமைச்சர் ஷாவின் கருத்து பழனிச்சாமியின் தலைமைத்துவ தகைமைகளில் அவருக்கு நம்பிக்கையில்லை என்பதையே வெளிக்காட்டுகிறது என்று கூறியது. இறுதியில், பழனிச்சாமியே அரசாங்கத்துக்கு தலைமை தாங்குவார் என்று தெளிவுபடுத்த வேண்டிய நிலை நாகேந்திரனுக்கு ஏற்பட்டது. அவ்வாறிருந்தாலும், கோயம்புத்தூரைச் சேர்ந்த முன்னாள் மாநகராட்சி நிருவாக அமைச்சர் எஸ்.பி. வேலுமணியையே அமித் ஷா மனதில் கொண்டிருக்கக்கூடும் என்ற ஊகங்கள் பரவலாக அடிபட்டன. முன்னர் அண்ணா தி.மு.க.வில் பலம்பொருந்தியவராக விளங்கும் வேலுமணி சுமார் மூன்று வாரக்களுக்கு முன்னர் பேரூர் ஆதீனத்தின் தலைவர் சாந்தலிங்க இராமசாமி அடிகளாரின் நூற்றாண்டு பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ராஷ்டிரிய சுயம்சேவக் .(ஆர்.எஸ்.எஸ். ) தலைவர் மோகன் பகவாத்துடனும் பாரதிய ஜனதாவின் மூத்த தலைவர்களுடனும் ஒரே மேடையில் கலந்து கொண்டார். அது தொடர்பாக பிறகு விளக்கமளித்த வேலுமணி அந்த நிகழ்வை ' அரசியல் சார்பற்றது " என்று வர்ணித்ததுடன் உள்ளூர் ட்டசபை உறுப்பினர் என்ற வகையில் மாத்திரமே அதில் பங்கேற்றதாகவும் குறிப்பிட்டார். இரு கட்சிகளுக்கும் இடையிலான கூட்டு குறித்து அறிவிக்கப்படுவதற்கு முன்னதாக வேலுமணி உட்பட மூத்த சகாகக்களுக்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கும் இடையில் அபிப்பிராய பேதங்கள் நிலவியதாக செய்திகள் வெளியாகின. அரசாங்கத்தின் தன்மை குறித்து மூண்டிருக்கும் விவாதம் எதிர்க்கட்சிகளுக்கு பாதகமாக அமையும் என்பதால், அந்த பிரச்சினையை நேரகாலத்தோடு தீர்த்துக்கொள்வது கூட்டணியின் நலன்களுக்கு உகந்ததாக அமையும். பல்வேறு கூட்டணிகளில் அங்கம் பெறவிருக்கும் அரசியல் கட்சிகள் குறித்து இன்னமும் இறுதி செய்யப்படாமல் ஒரு சூழ்நிலையில் அண்ணா தி.மு.க. -- பாரதிய கூட்டணியில் இந்த விவாதம் மூண்டிருப்பதை விளக்கிக்கொள்ள முடியவில்லை. (தி இந்து ) https://www.virakesari.lk/article/220351

குருக்கள் மடத்தில் வெட்டியும், சுட்டும் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் புதைகுழி வழக்கில் நகர்த்தல் பத்திரம்

2 months 1 week ago
இதை சொன்னால் அதை ஏன் சுமந்திரனிடம் கேட்கிறீர்கள் என்பது.....???

யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்களுக்கான பேருந்துக்கு நிதி திரட்டல் : தென்னிந்திய பாடகர் ஶ்ரீ நிவாஸின் இசை நிகழ்ச்சி

2 months 1 week ago
நொச்சி அவர்கள் உணர்ச்சிபூர்வமாக உரையாடுபவர். அவரது இந்தக் கருத்தை சில நாட்களின் முன் வாசித்தேன். மிகவும் முரண்பாடான கருத்து இது. பலருக்கு தெரியாத விடயம் ஒன்று என்ன என்றால் தமிழர் அல்லாத இதர சமூகத்து மாணவர்களின் தொகை கணிசமான அளவு யாழ் பல்கலைக்கழகத்தில் உள்ளது. யாழ் மருத்துவபீடத்து மாணவர்களின் தீர்மானங்களுக்கு எதிராக குரலை உயர்த்த வேண்டிய தேவை இங்கு இல்லை.

போலீஸ் காவலில் என்ன நடந்தது? விசாரணையின் போது உடனிருந்த சகோதரர் அளித்த முழு விவரம்

2 months 1 week ago
இந்த வழக்கில் சில சங்கி பொலிஸ்காரரகள் கேம் ஆடுவதாக முன்னர் மருத்துவர், நடிகை, பாடகி சந்தேகம் வெளியிட்டார். நேற்று ஒரு பொட்டு வைத்த பொலிஸ்காரார் ஆபீசுக்கு நடந்து போய், பேட்டி எல்லாம் கொடுத்து இன்னொரு புகாரை கிளப்பி உள்ளார். இது ஒரு திட்டமிட்ட நகர்வாகவே தெரிகிறது. தமிழ்நாடு காவல்துறையில் அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்கள்.. நிர்வாக குளறுபடியா, உள்ளடி வேலையா? Updated: Friday, July 18, 2025, 18:27 [IST] சென்னை: சிவகங்கையில் அஜித் குமார் மரண வழக்கின் தாக்கம் தணிவதற்கு முன்பாகவே, மயிலாடுதுறை டிஎஸ்பி சுந்தரசேனின் அதிர்ச்சிப் புகார்கள் தமிழக அரசியலிலும், காவல்துறையிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை செய்யும் சில அத்துமீறிய சம்பவங்கள் ஆட்சிக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளதாக கூறுகிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். தமிழக காவல் துறை வரலாற்றில் ஒரு உயரதிகாரி தனது உயர் அதிகாரிகளுக்கு எதிராக வெளிப்படையாக இத்தகைய குற்றச்சாட்டுகளை முன்வைப்பது அரிதான நிகழ்வாகும். இச்சம்பவம் தற்போது விஸ்வரூபம் எடுத்து, காவல்துறையைக் கட்டுப்படுத்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது. மயிலாடுதுறை டிஎஸ்பி சுந்தரசேண், இந்த அரசுக்கு உயர் அதிகாரிகளே களங்கத்தை ஏற்படுத்துவதாக வெளிப்படையாகக் குற்றம்சாட்டியுள்ளார். முன்பு ஒருமுறை போக்குவரத்து துறை ஊழியர்களுக்கும், போலீசாருக்கும் இடையே, பாஸ் விவகாரத்தில் மோதல் வெடித்தது. தமிழக அரசின் இரு துறை ஊழியர்கள் மோதிக்கொண்டதும் அரிதான நிகழ்வுதான். இந்த நிலையில்தான், காவல்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள முதலமைச்சரின் முழுமையான கட்டுப்பாட்டில் காவல்துறை செயல்படுகிறதா என்ற கேள்வியை எழுப்பும் வண்ணம் இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேறத் தொடங்கியுள்ளன. ஆனால், இது வலதுசாரிகளின் சதி என்கிறார்கள் திமுக ஆதரவாளர்கள். கடந்த எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி காலத்தில் வலதுசாரிகள் அதிகார மையங்களில் முக்கிய இடம் பிடித்ததாகவும், அதன் பலனை தற்போது பார்ப்பதாகவும் திமுக ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகிறார்கள். தேர்தல் நெருங்குவதால் வேண்டுமென்றே வலதுசாரி ஆதரவு போலீசார் திமுக அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்த ஏதேதோ செய்கிறார்கள் என்பது அக்கட்சியினர் வாதம். அதேநேரம், ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகளாகியும், ஏன் திமுக அரசு தங்களுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்த திட்டமிடும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கேள்வியை அதிமுகவினர் எழுப்புகிறார்கள். மேலும், அரசு வேலையில் இருக்கும் யாரும் இதுபோல வேண்டுமென்றே செய்து தங்கள் வருங்காலத்தை இழக்க விரும்பமாட்டார்கள், இது நிர்வாக குளறுபடிதானே தவிர வேறில்லை என்பது அதிமுகவினர் வாதம். இதில் உங்கள் கருத்து என்ன? https://tamil.oneindia.com/news/chennai/tamil-nadu-police-turmoil-shocking-allegations-by-mayiladuthurai-dsp-sundarasen-spark-political-con-721519.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=News-Cards

'கருணாநிதியின் உதவி, ஏசி வசதி' - காமராஜர் பற்றி திருச்சி சிவா பேசியதில் உண்மை உள்ளதா?

2 months 1 week ago
கட்டுரை மிக தெளிவாக ஆதாரங்களையும், கருணாநிதி-காமராசர் இடையான உறவையும் விளக்குகிறது. திருச்சி சிவா சொன்னது போல் கருணாநிதி காமராஜருக்கு ஏ சி போட்டு கொடுத்தார் என்பதற்கு போதிய ஆதாரங்கள் உள்ளதாகவே தெரிகிறது. தமிழ் நாட்டை காப்பாற்று என கூறியது கருணாநிதியின் பிலடப் ஆக இருக்க கூடும். ஆனா எமெர்ஜென்சிக்கு பிறகு அரசியலில் இருவரும் நெருக்கமாககி, ஆலோசனை, ரகசிய சந்திப்பு எல்லாம் நடந்தபடியால் இதையும் பொய் என ஒதுக்க முடியாது.

யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்களுக்கான பேருந்துக்கு நிதி திரட்டல் : தென்னிந்திய பாடகர் ஶ்ரீ நிவாஸின் இசை நிகழ்ச்சி

2 months 1 week ago
ஶ்ரீநிவாஸ் எப்போ எம்மை கருவறுத்தார் அல்லது முயன்றார்? புலம்பெயர் குமுகாயம், கமுகமரம் எல்லாம் தென்னிந்திய தயாரிப்புகளை அடியோடு புறக்கணித்தே விட்டீர்களா? யாழ் பல்கலை மாணவர் ஒன்றியம் என்ன ஒட்டு குழுவா? அவர்களுக்கு தெரியாத? எப்போதும் உங்களிடம் கை ஏந்த வேண்டுமா? இசை நிகழ்சி மூலம் தம்மிடையே நிதி திரட்டினால் ஆகாதா? இப்படியவது பண்பாட்டு மையம் பயன்பாட்டுக்கு வந்ததே பெரிய விடயம்.

குருக்கள் மடத்தில் வெட்டியும், சுட்டும் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் புதைகுழி வழக்கில் நகர்த்தல் பத்திரம்

2 months 1 week ago
உங்களுக்கு விளங்குதோ விளங்கவில்லையோ தெரியவில்லை சாத்தான்… நாம் ஏன் 16 வருடமாக ஒரே இடத்தில் நிண்டு சுத்துகிறோம் என்பதை உங்கள் நீண்டபதில்கள் விளக்கி நிற்கிறன. புலிகள் தவறிழைத்தார்கள், அதில் அப்பாவி முஸ்லிம்களும் பாதிக்கப்பட்டார்கள். முஸ்லிம் ஜிகாத், ஊர்காவல் படைகளால் தமிழர்களும் பாதிக்கப்பட்டார்கள். இராணுவத்தால் தமிழர்கள் பாதிக்கப்பட்டார்கள். இவை அனைத்தையும் விசாரிக்க வேண்டும். இதில் அப்போ அதிகாரத்தில் இருந்த, இப்போ எஞ்சியுள்ள அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும். இதற்கு ஈடாக ஒரு நியாயமான தீர்வு வர வேண்டும். இதுதான் உண்மையான நல்லிணக்க, பொறுப்புகூறும் முடிவாக இருக்கும். (Truth and reconciliation). இதை முந்தள்ளும் இயலுமையை நாம் பெறாதவரை, உங்கள் போன்றோரின் சிந்தனை எமது மக்களை வழி நடத்தும் வரை….. அடிப்படைவாத முஸ்லிம்களும், இலங்கை அரசும், பெளத்த பேரினவாதிகளும், அருண் சித்தார்துகளும் வென்றுகொண்டே இருப்பார்கள்.

வெளிநாட்டு பயணிகளுக்கு விமான நிலையத்திலேயே சாரதி அனுமதி பத்திரம் வழங்க நடவடிக்கை!

2 months 1 week ago
இதுபற்றி முன்னரும் கூறியிருந்தார்கள். ஆனாலும் நடைமுறையில் எதையும் காணவில்லை. இதை நடைமுறைப்படுத்தினால் நல்லது. ஒவ்வொரு தடவை இலங்கை போகும்போதும் இன்ரநசினல் அனுமதிப் பத்திரம் எடுத்துக் கொண்டே போகிறேன். சிலர் இதை இலங்கையில் பாவிக்க முடியாது என்கிறார்கள். இந்தமுறை கொழும்புதுறைக்கு மீன்வாங்க சென்றபோது மாம்பழம் சந்தியில் பொலிசார் நிற்பாட்டினார்கள். அருகில் சென்று நிற்பாட்டும்போது போகச் சொல்லி சைகை காட்டினார்கள். அனேகமான நாட்களில் மோட்டார் சைக்கிளிலேயே திரிந்தோம்.
Checked
Sat, 09/27/2025 - 21:27
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed