புதிய பதிவுகள்2

'அடக்குமுறையில் இருந்து காத்தது கல்விதான்' - தமிழ்நாட்டின் முதல் திருநங்கை பேராசிரியர் பேட்டி

2 months 1 week ago
நான் கிறிஸ்தவ மத குருக்களிற்கு போட்டியாக அர்த்தநாரீஸ்வரர் கருத்தை கூறியதாக நீங்கள் சொல்லவில்லை எனவே கருதுகிறேன், அவ்வாறு நிங்கள் கருதினால் உங்கள் கருத்தில் கூறப்பட்ட படித்தவர்கள் முற்போக்கானவர்கள் எனும் கருத்து, அத்துடன் கத்தோலிக்க மத குருக்கள் மத சார்பான கற்கை நெறி மட்டுமல்லாமல் துறைசார் கல்வியும் கற்றவர்கள், இந்த துறைசார் கல்வி அறிவே முற்போக்கு சிந்தனைக்கு காரணம் என நீங்கள் கருதுகிறீர்கள் என நான் கருதுகிறேன், யாழ்ப்பாணத்தில் பெரும்பாலானவர்கள் துறைசார் கல்வி கற்றவர்கள் உள்ளார்கள் ஆனால் யாழ்ப்பாணத்தில்தான் மிக மோசமான பிற்போக்குவாதம் உள்ளது, படித்தவர்கள்தான் பெரும்பாலும் வரதட்சணை வாங்குபவர்களாக உள்ளார்கள் (நீங்கள் அப்படி செய்திருக்கமாட்டீர்கள் என நம்புகிறேன்😌). அவருக்கு கிடைத்த வேலை அவரது திறமைக்கு கிடைத்த வேலை, இவரரது கடந்த கால வாழ்க்கை மிகவும் அடக்குமுறைக்குள்ளான வாழ்கையாக இருந்துள்ளது, ஆனால் தற்போது அந்த நிலை இல்லை என்பது அவரரது கருத்தில் இருந்து தெளிவாக உணரமுடிகிறது, அதற்கு காரணம் கல்வி என அவர் கருதுகிறார் அவரரது உண்மையான அடையாளம் அவரரது திறமை (கல்வி).

புனித நீரூற்றை பாதுகாக்க அதானி குழுமத்திற்கு எதிராகப் போராடும் ஆஸ்திரேலிய பழங்குடிகள்

2 months 1 week ago
எதிர்கால சந்ததியினர் மேலும் ஏழ்மையாகும் நிலை உருவாகும் என கூறப்படுகிறது, தற்போதே மக்களால் சொந்தமாக வீடு வாங்க முடியாது எனும் நிலை அவுஸ்ரேலியாவில் உருவாகிவிட்டது, பெரு நிறுவனங்கள் மக்களின் வளங்களை மட்டும் சுரண்டுவதுடன் நிற்பதில்லை, அவர்களுடன் வீடுகளை வாங்குவதிலும் போட்டியிட ஆரம்பித்து விட்டன. விவசாயம் என அனைத்து துறைகளிலும் மக்களை விரட்டுகின்ற நிலை காணப்படுகிறது. இந்த நிறுவனங்களின் பண செல்வாக்கினால் அரசியல்வாதிகள் இந்த நிறுவனங்களுக்கு சாதகமான முறையில் சட்டங்கள் இயற்றப்படுகின்றன, மக்களால் எதுவும் செய்யமுடியாத நிலையில்தான் உலகு செல்கிறது, மக்களுக்கு சார்பாக வளங்களை தேசிய மயப்படுத்த முயலும் அரசியல் தலைவர்கள் ஆட்சியில் இருந்து கவிழ்க்கப்படுகிறார்கள். இந்த ஆர்டீசியல் கிணறு பற்றி சிறிய வயதில் படித்த நினைவு உண்டு, அவுஸ்ரேலியா வந்த ஆரம்பத்தில் அனைவரிடம் கேட்பதுண்டு இந்த ஆர்டீசியல் கிணறு எங்கே உள்ளது என இதுவரை பார்த்ததில்லை. கிட்டதட்ட எமது சுண்ணாம்புகல் நிலத்தடி நீர் போன்ற ஒரு அமைப்பு.

யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்களுக்கான பேருந்துக்கு நிதி திரட்டல் : தென்னிந்திய பாடகர் ஶ்ரீ நிவாஸின் இசை நிகழ்ச்சி

2 months 1 week ago
சமீபத்தில் கனடாவில் ஒரு கோவிலை இடம் மாற்றியிருந்தார்கள். முன்னர் இருந்த இடத்தில் இருந்து ஒரு புதிய இடத்திற்கு. இதனால் கோவிலின் கணக்கில் இருந்த நிதி முழுவதுமாக முடிந்துவிட்டது. இப்பொழுது புதிய நிதியை திரட்டுவதற்காக சில சூப்பர் சிங்கர் பாடகர்களை அழைத்து ஒரு இசை நிகழ்ச்சியை நடத்த வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. அவர்களின் போக்குவரத்து செலவு, தங்குமிடம் மற்றும் கட்டணம் பற்றி ஒரு நண்பன் சில தகவல்களை சொன்னான். எங்கேயென்றாலும், சரியாகத் திட்டமிட்டால், நிதி திரட்டுவதற்கு இது ஒரு இலகுவான வழி போல.

யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்களுக்கான பேருந்துக்கு நிதி திரட்டல் : தென்னிந்திய பாடகர் ஶ்ரீ நிவாஸின் இசை நிகழ்ச்சி

2 months 1 week ago
இன்றைய தாயக அரசியலை சீர்கெடுத்ததே இப்படியான புலம் பெயர் முன்னாள்களின் ரிமூட் கொன்றோல் செயற்பாடுகளே.

யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்களுக்கான பேருந்துக்கு நிதி திரட்டல் : தென்னிந்திய பாடகர் ஶ்ரீ நிவாஸின் இசை நிகழ்ச்சி

2 months 1 week ago
தமனா வரவில்லையா...? அட் லீஸ்ட் கயாடு லோகர் தானும் வரவில்லையா?

கிருலப்பனையில் காலாவதியான விசாவுடன் இணைய சூதாட்டத்தில் ஈடுபட்ட 21 இந்தியர்கள் கைது

2 months 1 week ago
களவு, (மீன்) கொள்ளை, பாலியல் வன்கொடுமை, கொலை, மொள்ளமாரி, முடிச்சவிக்கித்தனம், அயோக்கியத்தனம் இதெல்லாம் இந்தியனுகளுக்குக் இயற்கை தந்த வரம்!

யாழ்ப்பாணத்தில் இசைத்துறையில் ஆர்வமுள்ளவர்களுக்கு பயற்சிகள் வழங்க ஆதரவு வழங்குவேன் - பாடகர் ஸ்ரீநிவாஸ்

2 months 1 week ago
Published By: VISHNU 18 JUL, 2025 | 09:25 PM இசைத்துறைக்கு தென்னிந்தியாவில் உள்ளது போன்ற வாய்ப்புக்கள் வசதிகள் இங்கே குறைவு. ஆனாலும் இங்குள்ள பிள்ளைகள் இசைத்துறையில் மிளிர இசை தொடர்பான வகுப்புக்கள், பயற்சிகளுக்கு என்னால் முடிந்த ஆதரவை நிச்சயமாக வழங்குவேன் என தென்னிந்திய பிரபல பாடகர் ஸ்ரீநிவாஸ் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் சனிக்கிழமை (19) நடைபெறவுள்ள இசை நிகழ்வில் கலந்து கொள்வதற்காக யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள ஸ்ரீனிவாஸ், வெள்ளிக்கிழமை (18) மருத்துவ பீடத்தில் தனது மகள் சரண்ஜாவுடன் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்திற்கு வந்தது பெரும் சந்தோசம். உலகில் எந்த நாட்டுக்கு போனாலும் அங்கே ஈழ தமிழர்கள் எனக்கு தரும் அன்பும் ஆதரவும் அதிகம் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த நேரம் முதல் இங்குள்ளவர்கள் அன்பை மட்டுமே வெளிப்படுத்திக்கொண்டு இருக்கின்றார்கள். நடைபெறவுள்ள இசை நிகழ்வு மருத்துவ பீட மாணவர்கள் தமது கற்றல் செயற்பாட்டுக்கு சென்று வருவதற்கு பேருந்து வாங்க நிதி திரட்டவே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த இசை நிகழ்வு மிக பிரமாண்டமான முறையில், நடைபெறும். நிகழ்வில் உங்களுக்கு பிடித்த பாடல்களை பாடி மகிழ்விப்போம். என்னுடன் பாடல்களை பாடி உங்களை மகிழ்விக்க, எனது மகள் சரண்ஜா, அக்சயா, ஜீவன் மற்றும் உங்கள் பாடகி கில்மிசா ஆகியோரும் சேர்ந்து பாடல்களை பாடி மகிழ்விக்க காத்திருக்கிறோம். மருத்துவ பீட மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்காக நிதி திரட்டும் இசை நிகழ்வு என்பதனால் நான் ஊதியம் பெறவில்லை. கற்றல் செயற்பாட்டுக்கு என்னால் முடிந்தது. அதே போன்று இசை நிகழ்வுக்கு உங்கள் ஆதரவுகளை வழங்க வேண்டும். தற்காலத்தில் திரையுலகில் பாடகர்களுக்கான வாய்ப்புக்கள் குறைந்துள்ளது. முன்னைய கால படங்களில் ஒவ்வொரு படங்களிலும் ஐந்தாறு பாடல்கள் இருக்கும். தற்கால படங்களில் அவ்வாறு இல்லை. ஆனாலும் தற்போது இசை மேடைகள் தாரளமாக பாடகர்களுக்கு வாய்ப்புக்களை வழங்கி வருகிறது. அதனால் பாடகர்களுக்கு வாய்ப்புக்கள் கிடைக்கின்றன. அதனூடாக பாடகர்கள் சம்பாதிக்கின்றார்கள் என்பதனை தாண்டி இசை மேடைகளில் நேரடியாக பாடி இரசிகர்களை மகிழ்விப்பது ஒரு மன திருப்தியை பாடகர்களுக்கு தருகிறது. யாழ்ப்பாணத்தில் திறமையான கலைஞர்கள் நிறையவே இருக்கின்றார்கள். தற்போது தென்னிந்திய தொலைக்காட்சிகள் ஊடாக அவர்களின் திறமைகள் வெளிப்படுகின்றன. இருந்தாலும் தென்னிந்தியாவில் உள்ள வாய்ப்புகள் வசதிகள் போன்று இங்கு இல்லை. அதனால் இசைத்துறை சார்ந்து கற்பவர்களுக்கு வகுப்புகள் பயற்சிகள் தொடர்பில் இங்குள்ளவர்கள் ஏற்பாடுகளை செய்தால் நிச்சயமாக எனது ஆதரவை வழங்குவேன் என மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/220355

விடுதலைப் புலிகள் சிங்களவர்களை படுகொலை செய்தது மனிதப் படுகொலை இல்லையா? - அசேப எதிரிசிங்க

2 months 1 week ago
விடுதலைப் புலிகள் சிங்களவர்களை படுகொலை செய்தது மனிதப் படுகொலை இல்லையா? அதற்கு யார் நீதியை பெற்றுக்கொடுப்பது? - அசேப எதிரிசிங்க 18 JUL, 2025 | 07:30 PM (இராஜதுரை ஹஷான்) விடுதலை புலிகள் சிங்களவர்களை படுகொலை செய்தது. இது மனித படுகொலை இல்லையா, இதற்கு யார் நீதியை பெற்றுக்கொடுப்பது. பழைய செம்மணி புதைகுழி தற்போது தோண்டப்படுகிறது. யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தவர்கள் மனித படுகொலையாளிகளாகவும், பயங்கரவாதிகள் வீரர்களாகவும் சித்தரிக்கும் நிலை தற்போது காணப்படுகிறது. ஐ.நா சபை நடுநிலையாக வகையில் செயற்பட வேண்டும் என்று நாட்டுக்கான தேசிய அமைப்பின் செயலாளர் அசேப எதிரிசிங்க தெரிவித்தார். கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்தின் முன்பாக வியாழக்கிழமை (17) எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, இந்த நாட்டில் இடம்பெற்ற 30 ஆண்டுகால யுத்தத்தால் நாட்டில் அனைத்து பகுதிகளிலும் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். ஒட்டுமொத்த மக்களின் மனித உரிமைகளும் மீறப்பட்டன. இவ்வாறான நிலையில் ஒருபகுதியை மாத்திரம் இலக்காகக் கொண்டு அவதானம் செலுத்தப்படுகிறது. இலங்கை இராணுவத்தினர் மனித உரிமை மீறல் செயற்பாடுகளில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. விடுதலை புலிகள் அமைப்பினர் நாடு முழுவதும் மேற்கொண்ட 100 தாக்குதல்களின் படங்களை ஐக்கிய நாடுகள் சபையின் காரியாலயத்தின் முன்பாக காட்சிப்படுத்தியுள்ளோம். விடுதலை புலிகளின் அமைப்பினால் இந்த நாட்டில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர். விடுதலை புலிகளின் அமைப்பினால் சிவில் பிரஜைகளின் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளது. இவற்றை ஆராய்வதை விடுத்து இலங்கை இராணுவத்தினர் மீது தான் தொடர்ந்து குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகிறது. யுத்தத்துக்கு தலைமை தாங்கியவர்களை மனித படுகொலைகாரர்களாக்கி, பயங்கரவாதிகளை வீரர்களாக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகிறது. இதற்கு இலங்கை அரசாங்கமும், ஐக்கிய நாடுகள் சபையும் இடமளிக்க கூடாது. இந்த நாட்டில் இன்றும் நாட்டு பற்றுள்ளவர்கள் உள்ளார்கள் போலியான மனித உரிமைகளுக்கு ஐ.நா. சபை அடிபணிய கூடாது. உண்மையை ஆராய வேண்டும். விடுதலை புலிகள் சிங்களர்களை படுகொலை செய்தது. இது மனித படுகொலை இல்லையா, இதற்கு யார் நீதியை பெற்றுக்கொடுப்பது. பழைய செம்மணி புதைகுழி தற்போது தோண்டப்படுகிறது. சிங்களவர்களின் படுகொலை புதைகுழிகளை யார் அகழ்வது. மக்களாணையை அரசாங்கம் மலினப்படுத்தக் கூடாது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை நடுநிலையான வகையில் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/220339

கிருலப்பனையில் காலாவதியான விசாவுடன் இணைய சூதாட்டத்தில் ஈடுபட்ட 21 இந்தியர்கள் கைது

2 months 1 week ago
Published By: DIGITAL DESK 2 18 JUL, 2025 | 06:57 PM சுற்றுலா விசாக்களில் இலங்கைக்கு வந்து, அவை காலாவதியான பிறகும் கிருலப்பனை பகுதியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 21 இந்திய பிரஜைகள், இணையம் மூலமாக சூதாட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவர்கள் அனைவரும் வெள்ளிக்கிழமை (18) குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள விசாரணை பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். இடர் மதிப்பீட்டுப் பிரிவு சார்ந்த அதிகாரிகள், தங்கள் வசமுள்ள தரவுகளை பகுப்பாய்வு செய்த பின்னர், இந்த இந்திய பிரஜைகள் சட்டவிரோத இணைய சூதாட்ட நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தமை கண்டறியப்பட்டது. கைது செய்யப்பட்ட அனைத்து இந்திய பிரஜைகளும் 22 - 36 வயதிற்குட்பட்டவர்கள் ஆவர். அவர்களை உடனடியாக இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்காக வெலிசரவில் உள்ள தடுப்பு நிலையத்தில் தடுத்து வைக்க, குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். https://www.virakesari.lk/article/220348

மரபிழந்த பாரம்பரிய பண்பாட்டை வெளிப்படுத்தி வவுனியாவில் பண்பாட்டு ஊர்த்திப் பவனி

2 months 1 week ago
கிராமங்களில் அழுகை இருக்கிறது, தன்னை மீறி துயரம் கூடுகையில் வருவது தானே. இன்னொரு துயரம் பிள்ளைகள், சகோதரங்கள் வரும் வரை உடலை பதப்படுத்தி 4 - 5 நாட்கள் வைத்திருக்க வீட்டில் இருப்பவர்களும் அழுது களைத்துவிடுவார்கள். முன்னைய காலங்கள் போல் இறந்து 24 மணித்தியாலங்களில் இறுதிச்சடங்கை முடிக்கவேணும்.

குளிக்கும் வேலை

2 months 1 week ago
🤣......... கிட்டத்தட்ட இன்னொரு ஜென்மம் எடுத்தது போலவே............. 🤣.......... ஒரு வயதுக்கு மேலே புதிதாக எதையும் கண்டுபிடித்தால் என்ன, கண்டுபிடிக்காவிட்டால் என்ன என்ற ஒரு மெத்தனப் போக்கு பொதுவாக வந்து விடுகின்றது போல, சுவி ஐயா............

மரபிழந்த பாரம்பரிய பண்பாட்டை வெளிப்படுத்தி வவுனியாவில் பண்பாட்டு ஊர்த்திப் பவனி

2 months 1 week ago
யுத்த காலத்தின் பின் இருப்பவர்களில் அனேகருக்கு இந்த பாரம்பரியங்களைப் பற்றி தெரிய வாய்ப்பும் இல்லை அவற்றை பின்பற்றுவார்கள் என்றும் இல்லை.இப்போ இறப்பு வீடுகளில் அழுவது கூட மெல்ல, மெல்ல இல்லாமல் போய் விட்டது என்று அண்மையில் ஒருவரது பதில் படித்தேன்.அதுவும் புலம் பெயர்ந்தவர்கள் வருகையின் பின் வந்த மாற்றங்கள் என்ற பொருள் பட எழுதப்பட்டு இருந்தது.

தெல்லிப்பழை வைத்தியசாலை தொடர்பில் விசாரணை நடத்தாதது ஏன்? ; அரசாங்கம் ஊழலுக்கு துணைபோகிறதா? - அர்ச்சுனா இராமநாதன் கேள்வி

2 months 1 week ago
18 JUL, 2025 | 04:26 PM (எம்.நியூட்டன்) யாழ். தெல்லிப்பழை வைத்தியசாலை தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் உள்ள நிலையில், விசாரணைகள் நடத்தப்படாமல் இருப்பதற்கு காரணம் என்ன? ஆட்சியில் உள்ள அரசாங்கம் ஊழலுக்கு துணைபோகிறதா? என மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் கேள்வி எழுப்பியுள்ளார். யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் அமைச்சர் சந்திரசேகர் தலைமையில் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. இதன்போது அர்ச்சுனா கூறுகையில், யாழ். தெல்லிப்பழை வைத்தியசாலை தொடர்பாக பல்வேறு முறைப்பாடுகள் கூறப்பட்டு வரும் நிலையில், அவை தொடர்பான முறையான விசாரணைகளை நடத்த தாமதிப்பது எதற்காக? தெல்லிப்பழை வைத்தியசாலை தொடர்பாக நான் பல விடயங்களை முன்வைத்துள்ளேன். வைத்தியசாலையின் பெயரை வைத்து சொந்தப் பெயரில் வங்கிக் கணக்குகளை திறக்க முடியுமா? வைத்தியசாலை நோயாளர் நலன்புரிச் சங்கம், இரு கணக்குப் புத்தகங்களை பாவித்து பணம் கையாடப்பட்டுள்ளது. இவை தொடர்பில் நிதிக் குற்றப் பிரிவில் வழக்குத் தாக்கல் செய்வதற்கு அந்த வங்கிப் புத்தகத்தின் முகப்புப் பக்கங்கள் தேவையாக உள்ளது. அதனை ஒருங்கிணைப்புக் குழு எனக்கு பெற்றுக்கொடுக்கவேண்டும். மக்களின் பணத்தை மோசடி செய்தவர்களை கைவிட முடியாது. இந்த அரசாங்கம் ஊழலற்ற ஆட்சி எனக் கூறி ஆட்சியை பிடித்தது, இந்த அரசாங்கத்தின் அமைச்சராக, இருக்கும் நீங்கள் ஊழலை ஊக்குவிக்கும் அமைச்சரா என கேள்வி எழுப்பினார். மேலும், நான் கணக்காய்வு அறிக்கை கேட்டு 6 மாதங்கள் ஆகிறது. இன்னும் தரவில்லை. நான் ஏதும் கேட்டால் என்னை அச்சுறுத்துகிறார்கள். வழக்கு தொடருவோம் என்கிறார்கள். என்ன நடந்தாலும் பரவாயில்லை. மக்களின் பணத்தை கொள்ளையடிக்க விடமுடியாது. இந்த ஒருங்கிணைப்புக் குழு வைத்தியசாலையின் கணக்கு விபரங்களை எனக்கு பெற்றுத்தரவேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/220329

குட்டிக் கதைகள்.

2 months 1 week ago
🌷கரிசக்காட்டுப்பூவே🌷 செல்வன் சௌந்தரராஜ் · prdsneoSot7f96246iamm81lt9uh3iic62lhu3l3132cgci0g g0h3h660t1 · ஒரு பெருமைமிக்க வழக்கறிஞர் தனது கிணற்றை ஓய்வு பெற்ற ஆசிரியருக்கு விற்றார். இரண்டு நாட்களுக்குப் பிறகு, வழக்கறிஞர் ஆசிரியரிடம் வந்து, "ஐயா, நான் உங்களுக்கு கிணற்றை விற்றுவிட்டேன், ஆனால் அதில் உள்ள தண்ணீரை அல்ல. நீங்கள் தண்ணீரைப் பயன்படுத்த விரும்பினால், நீங்கள் அதற்குத் தனியாக பணம் செலுத்த வேண்டும்" என்றார். ஆசிரியர் புன்னகையுடன், "ஆம், நானும் உங்களிடம் வரப் போகிறேன். என் கிணற்றிலிருந்து உங்கள் தண்ணீரை வெளியேற்றச் சொல்லப் போகிறேன், இல்லையெனில் நாளை முதல் நீங்கள் கிணற்றில் தண்ணீரை சேமித்து வைப்பதற்கு பணம் செலுத்த வேண்டும்" என்றார். இதைக் கேட்டதும், வழக்கறிஞர் பயந்து, "ஓ, நான் விளையாடினேன்!" என்றார். ஆசிரியர் சிரித்துக்கொண்டே, "மகனே, நான் உன்னைப் போன்ற பல குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுத்து அவர்களை வழக்கறிஞர்களாக்கியுள்ளேன்!" என்றார்........ !

மரபிழந்த பாரம்பரிய பண்பாட்டை வெளிப்படுத்தி வவுனியாவில் பண்பாட்டு ஊர்த்திப் பவனி

2 months 1 week ago
18 JUL, 2025 | 04:04 PM மரபிழந்த பாரம்பரிய பண்பாட்டை வெளிப்படுத்தி வவுனியா பிரதேச செயலக பண்பாட்டு விழாவை முன்னிட்டு ஊர்திப் பவனி சிறப்பாக இடம்பெற்றது. வவுனியா பிரதேச செயலகம் மற்றும் வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் அனுசரணையில் வவுனியா பிரதேச கலாசார பேரவையும், பிரதேச கலாசார அதிகார சபையும் இணைந்து நடத்திய பண்பாட்டு ஊர்திப் பவனி பிரதேச செயலாளர் இ.பிரதாபன் தலைமையில் பிரதேச செயலக முன்றில் வெள்ளிக்கிழமை (18) ஆரம்பமாகியது. வவுனியா பிரதேச செயலக முன்றில் இருந்து ஆரம்பமாகிய ஊர்திப் பவனி தமிழர் பாரம்பரியம், கலாசாரம், வரலாறு, தொல்லியல், கலைகள் என்பவற்றை பறைசாற்றி கிராம மக்களின் பங்களிப்புடன் வவுனியா, கண்டி வீதியை அடைந்து பசார் வீதி, மணிக்கூட்டு கோபுர சந்தி, புகையிரத நிலைய வீதி, குருமன்காடு, மன்னார் வீதி ஊடாக சென்று பிரதேச செயலகம் முன்பாக நிறைவடைந்தது. இதில் தமிழர் வாழ்வியலின் பாரம்பரியத்துடன் தொடர்புடைய விவசாய முறைகள், நீர்பாசன முறைகள், உணவு தயாரித்தல், கைவினை உற்பத்திகள், வழிபாட்டு முறைகள், சடங்கு முறைகள், கிராமிய கலை மரபுகள், கிராமிய உணவு பழக்கவழக்கம் உள்ளிட் பல்வேறு அம்சங்களை தாங்கிய 47 க்கும் மேற்பட்ட ஊர்திகள் இதன் போது பவனி வந்திருந்தன. இந்நிகழ்வில் வடமகாண கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் பற்றிக் நிரஞ்சன், வவுனியா அரச அதிபர் பீ.ஏ.சரத் சந்திர, மேலதிக அரசாங்க அதிபர் நா.கமலதாசன், வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் த.முகுந்தன், வவுனியா தெற்கு வலய பிரதி கல்விப் பணப்பாளர் அமல்ராஜ், அரச அதிகாரிகள், அரச உத்தியோகத்தர்கள், மதகுருமார், சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், சமயம் சார் அமைப்புக்கள், கிராமிய மக்கள் எனப் பலரும் இதில் கலந்துது கொண்டதுடன், வீதிகளில் மக்களும் குழுயிருந்து அதனை பார்த்து உற்சாகப்படுத்தினர். https://www.virakesari.lk/article/220322

சர்வதேச விசாரணைகளை மேற்கொள்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் - யாழ். கத்தோலிக்க மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு

2 months 1 week ago
மனித புதைகுழிகள் தொடர்பில் சர்வதேச விசாரணைகளை மேற்கொள்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் – யாழ். கத்தோலிக்க மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு வேண்டுகோள் Published By: DIGITAL DESK 2 18 JUL, 2025 | 04:03 PM நல்லிணக்கம் ஏற்படவேண்டுமாயின் தமிழ் மக்கள் மீது நடாத்தப்பட்டுள்ள குண்டுதாக்குதல்கள், புதைகுழிகள், காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பிலாவது சர்வதேச விசாரணைகளை மேற்கொள்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என யாழ் கத்தோலிக்க மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக "செம்மணி புதைகுழி கிளறிய சில சிந்தனைகள்" என குறிப்பிட்டு அவர்கள் வெளியீட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளார்கள். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : 1996ம் ஆண்டு சுண்டிக்குளி மகளிர் கல்லூரி மாணவி கிருஷாந்தி குமாரசாமி பரீட்சை முடிந்து செம்மணியூடாக வீடு திரும்பும் போது செம்மணியில் நிலைகொண்டிருந்த இராணுவத்தினரால் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டமையும் அவரைத்தேடிச் சென்ற அவரது தாயும் உறவுகளும் படுகொலை செய்யப்பட்டு அங்கே புதைக்கப்பட்டதும் பின்னர் இந்நிகழ்வுகள் வெளிவந்து குற்றவாளிகள் கோர்ப்புரல் சோமரட்ண ராஜபக்ஷ ஆகியோர் குற்றவாளிகளாகக்காணப்பட்டு 1998 ஆண்டு ராஜபக்ஷவிற்கு மரண தண்டனைத்தீர்ப்பு வழங்கப்பட்டு பின்னர் 2015ம் ஆண்டுக்குப்பின் கோத்தபாய ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த போது அவருக்கு மன்னிப்பு வழங்கப்பட்டவை என்பன வரலாறுகள். கிருஷாந்தி குமாரசாமி கொலை வழக்கின் பிரதான குற்றவாளியாகிய சோமரட்ண ராஜபக்ஷ கொடுத்த வாக்குமூலத்தில் மேலும் சில தமிழ் மக்கள் செம்மணியில் கொல்லப்பட்டு அங்கு புதைக்கப்பட்டிருந்தார்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்தும் அப்போது செம்மணிப்பகுதி ஒரு பாரிய மனிதப்புதைகுழியாக இருக்கலாம் என்ற சந்தேகம் இருந்தாலும் அதன்பின் அதுபற்றி எவரும் பெரிதாக பேசவில்லை. ஆயினும் சில மாதங்களுக்குமுன் செம்மணிப்பகுதியில் ஒரு தகனமேடைக்கெனத் துப்புரவுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டபோது, மனித உடற் பாகங்கள் கண்டு பிடிக்கப்பட்டு நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. பின்னர் உத்தியோகபூர்வமாக அப்பகுதியில் நீதிமன்ற அனுசரணையுடன் தோண்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது மேலும் பல எலும்புத் தொகுதிகள் கண்டுபடிக்கப்பட்டன. இரண்டு கட்டங்களாக இடம் பெற்ற அகழ்வுப்பணிகள் தற்காலிகமாக 10.7.2025 நிறுத்திவைக்கப்பட்போது ஏறக்குறைய 65 மனித உடற்தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டன. இவை இன்னும் பகுப்பாய்வு செய்யப்படவில்லையாயினும் மேலெழுந்தவாரியாக பார்க்கும் போது அதிர்ச்சியூட்டுபவையாகவுள்ளன. அவற்றுள் சில சிறுவர்களுடையது. ஒரு இடத்தில் சிறுவர்களது விளையாட்டு பொம்மை, பாடசாலை புத்தகப்பை, சிறுமியின் உடை, சில வளையல்கள் போன்ற பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 15.7.2025 அன்று இவ்வழக்குக்குப் பொறுப்பான நீதிவான் அ. ஆனந்தராஜா முன்னிலையில் அகழ்வின் போது பிரசன்னமாயிருந்த தொல்லியல் பேராசிரிய ராஜ்சோம தேவாவும், சட்டவைத்திய அதிகாரி வைத்தியர் செல்லையா பிரணவனும் பிரசன்னமாயிருந்தனர். அப்போது தொல்லியல் பேராசிரியரும் சட்ட வைத்திய நிபுணரும் தமது இடைக்கால அறிக்கைகளில் இப்புதைகுழியில் உள்ள எலும்புக்கூடுகள் உள்ள இடம் ஒரு குற்றப்பிரதேசமாகவும், மனித உரிமை மீறல்கள் இடம் பெற்ற இடமாகவும் கருதப்படச்சான்றுகள் உள்ளன என்றும் குறிப்பாக 4-5 வயதுச்சிறுமியின் பகுப்பாய்வுக்குட்படுத்தப்படவேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது சடலம் மேலும் இக்காலகட்டத்தில் கிருஷாந்தி கொல்லப்பட்டதற்கு (1996க்கு) முந்திய பிந்திய காலப்பகுதியில் யாழ் குடாநாட்டில் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக இராணுவ முகாம்களும் வீதிக்குவீதி சென்ற்றி போயின்ற்றுகளும் இருந்தன. சர்வ சாதாரணமாக கைதுகளும், கைது செய்யப்பட்டவர்கள் காணாமல் போவதும் இடம்பெற்றுவந்தன. யாழ் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் இது பற்றி பாராளுமன்றத்தில் 2025 ஆனி ஆடி இடம் பெற்ற பாராளுமன்ற அமர்வுகளில் குறிப்பிட்டிருந்தார். ஆங்கிலத்தில் 'tip of the iceberg' (நீரில் மிதக்கும் பனிப்பாறையின் வெளியே தெரியும் சிறிய பகுதிஎன்று ஒரு சொற்றொடர் உண்டு, பாரிய பனிப்பாறைகள் கடலில் மிதந்துவரும் போது வெளியே கண்ணுக்குத்தெரியும் சிறியதொரு பனிக்கட்டியை இது குறிக்கின்றது. ஆனால் அதைப்போல் ஏழு மடங்கு பெரிய பனிப்பாறை தண்ணிருக்குள் அமிழ்ந்திருப்பது வெளியே தெரியாது) இது போலத்தான் இதுவரை செம்மணி சிந்துபாத்திப்பகுதியில் அகழ்ந்தெடுக்கப்பட்ட 65 மனித எலும்புக்கூடுகள் (பாடசாலை சிறுமிகளது உட்பட) சோமரட்ண ராஜபக்சவின் சாட்சியத்தின் அடிப்படையில் பார்க்கும் போது இந்த எலும்புக்கூடுகள் இப்பகுதியில் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டு புதைக்கப்பட்ட 600க்குக்குறையாத எலும்புக்கூடுகளாயிருக்கலாம் என்பது மிகைப்படுத்தப்பட்ட கூற்றாக இருக்க முடியாது என்ற முடிவுக்கு வரமுடியும். இதற்குமேலாக 2024ம் ஆண்டு குழாய்நீர் வசதி வழங்க சில அகழ்வு மேற்கொள்ளப்பட்ட கொக்கு தொடுவாயில் கண்டெடுக்கப்பட்ட சூட்டுக்காயங்களுடன் கொல்லப்பட்டு புதைக்கப்பட்ட இறந்த இளைஞர், இளம் பெண்களுடைய எலும்புக்கூடுகள், மன்னார் பாலத்துக்கருகாமையில் 'சதோச' வளாகத்தில் கண்டெடுக்கப்பட்டு இதுவரை முடிவு வெளிவராத எலும்புகூட்டு விபரங்கள், திருக்கேதிஸ்வரத்தில் கண்டெடுக்கப்பட்ட எலும்புகள் எல்லாவற்றையும் செம்மணியில் கண்டெடுக்கப்பட்டதை பார்க்கும் போது எலும்பு கூடுகள் படுகொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்டவர்களுள் வீதமானவர்களது எலும்புக்கூடுகள் என்ற முடிவுக்கு வரலாம். அண்மையில் ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணைக்குழு கமிஷனர் வோக்கர் டக் இலங்கைக்கு வந்த போது யாழ்ப்பாணத்திற்கும் வந்திருந்தார். அப்போது அணையா விளக்கு' நிகழ்வும் சிவில் சமுகங்கள் செயற்பாட்டாளர்கள் சரியான நேரத்தில் செம்மணிப்பகுதியில் ஏற்பாடு செய்த 3 நாள் கவன ஈர்ப்பு நிகழ்விலும் கலந்து கொண்டது வரவேற்கத்தக்கது. ஆயினும் இவரது கருத்துக்கள் விசாரணையில் சர்வதேச பங்களிப்பை சுட்டிக்காட்டாதிருப்பது பெரும் ஏமாற்றமே. 3000 நாட்களைக் கடந்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள் போரின் பின் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகள் எங்கே என்று கவனயீர்ப்பை நடத்திக் கொண்டிருந்தார்கள். இந்த 3000 நாட்களில் கவனயீர்ப்பில் ஈடுபட்டவர்களுள் 200க்கு மேற்பட்டவர்கள் தமது உறவுகளைக் காணாது இறந்துவிட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பலவிதமான வாக்குறுதிகளுடன் பதவிக்கு வந்து தொடர்ந்தும் புதுப்பித்த வாக்குறுதிகளை வழங்கிக்கொண்டிருக்கும் தற்போதைய அரசின் செயற்பாடும் 'பேச்சு பல்லக்கு தம்பி கால் நடை' என்று தான் உள்ளது. காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் இந்த அரசின் செயற்பாடு ஒரு அங்குலம் தானும் முன்னேறவில்லை. நல்லிணக்கத்தைக்கொணர்வோம் என்று பதவிக்கு வந்த தற்போதைய அரசு தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினை சம்பந்தமாக அதன் செயற்பாடுகள் மந்த கதியிலேயே உள்ளன. வீதிகள் திறக்கப்பட்டாலும் மறுபுறத்தில் இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள சில வீதிகள் காணிகள் இன்னும் முறைப்படி விடுவிக்கப்படவில்லை. பாரம்பரியக்காணிகள் கிழக்கில் தமிழரது பெரும்பான்மையினருக்குத் தாரைவார்க்கப்படுகின்றன. வெடுக்குநாறி, குருத்தூர், தையிட்டி ஆகிய இடங்களில் தமிழ் மக்களின் தொன்மை மிகு இடங்கள் பறிக்கப்பட்டமைக்கு தீர்வு காணப்படவில்லை. பயங்கரவாத தடைச்சட்டம் இன்னமும் நீக்கப்பட்டபாடில்லை. 2009 ம் ஆண்டு யுத்தம் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டு முடிவுக்கு வந்த பின் போர்க்குற்றங்கள் (சரணடைந்தவர்களைக் கொல்வது உதாரணம் : இசைப்பிரியா, பாலச்சந்திரன் போன்றவர்கள்) பற்றிய பொறுப்புக்கூறல் இதுவரை இடம் பெறவில்லை. செம்மணி, கொக்குத்தொடுவாய், மன்னார் திருக்கேதிஸ்வரம் போன்ற இடங்களில் உள்ள புனித குழிகள் பற்றிய அகழ்வுக்கும் ஆய்வுக்கும் உள்நாட்டில் நிபுணத்துவம் இல்லையென்று தெரிந்தும் வெளிநாட்டு தலையீடுகளுக்கு அனுமதி மறுப்பு. போர்க்காலத்தில் இடம் பெற்ற படுகொலைகள் உதாரணம், நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயம் ஆலயக்குண்டு வீச்சு, நாகர்கோவில் குண்டுவீச்சு, புனித ஜேம்ஸ் ஆலய குண்டுவீச்சு, மடு தேவாலய செல் வீச்சு, மூதூர் வெளிநாட்டு தொண்டு நிறுவன ஊழியர் படுகொலை, திருகோணமலையில் பரீட்சை எழுதிமுடித்திருந்த 5 மாணவர் படுகொலை போன்றவை எவற்றிலும் உள்நாட்டுப் பொறிமுறையில் ஒரு அங்குலம் முதலாக முன்னேற்றம் இல்லை. இதனால் தான் தமிழ் மக்கள் நல்லிணக்கம் ஏற்படவேண்டுமாயின் மேற்குறிப்பிட்ட சில விடயங்களிலாவது வெளிநாட்டு தலையீடு ஏற்பட்டிருக்க வேண்டும். சாத்வீரசேகர, விமல்வீரவன்ச, விமல ரத்னதேரர் போன்றவர்களது இனவாத கருத்துக்களுக்கு இவ் அரசும் அடிபணிகிறது போலத் தென்படுகிறது. 2009ம் ஆண்டுக்குமுன் குறிப்பாக 30 ஆண்டுகாலம் நடந்த உக்கிரமான மோதல்களில் பல்லாயிரக்கணக்கில் பொதுமக்கள் விமானக்குண்டு வீச்சுக்கள் மூலமும் தரையில் கடத்தப்பட்டதும், கைது செய்யப்பட்டதும், சித்திரவதைக்குள்ளாகி, கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டு, கடலில் சாதாரண பயணிகள் கொல்லப்பட்டதாலும் (குமுதினி படுகொலை) ஆசியாவை இனப்படுகொலை அல்லது இனச்சுத்திகரிப்புக்களின் வெளிப்பாடுகளே. அத்துடன் யாழ் நூலக எரிப்பு, பொதுமக்களின் காணிகள் ஆக்கிரமிப்பு, ஆக்கிரமிக்கப்பட்ட இடங்களில் பெளத்த விகாரைகள் நிர்மாணம் எல்லாம் இனஅழிப்பின் பல்வேறு பரிமாணங்களே. அத்துடன் ஒவ்வொரு வருடமும் 2009ம் ஆண்டுக்குப்பின் யுத்த வெற்றி நாள் கொண்டாடப்பட்டு கடற்படை, விமானப்படை, தரைப்படையினருக்கு யுத்தகால வீரதீரச்செயல்களுக்குப்பதவி உயர்வுகளும், பதக்கங்களும் வழங்கப்படுகின்றன. மேற்குறிப்பிட்டவற்றுள் எந்த வீரதீரச்செயல்களுக்காக இப்பதக்கங்களும் பதவி உயர்வுகளும் வழங்கப்படுகின்றன? இது போன்ற துன்பியல் நிகழ்வுகள் இனி நிகழாது, நல்லிணக்கமே எமது குறிக்கோள் என்று பதவிக்கு வந்த இவ்வரசு இவ்வருட வெற்றி விழாவில் மேற்படி வீர தீரச்செயல்களுக்காக பதவி உயர்வுகளும் பதக்கங்களும் வழங்கியிருந்தது என்பது சுட்டிக்காட்டத்தக்கது என்றுள்ளது. https://www.virakesari.lk/article/220320

குருக்கள் மடத்தில் வெட்டியும், சுட்டும் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் புதைகுழி வழக்கில் நகர்த்தல் பத்திரம்

2 months 1 week ago
தமிழ் எம்பி மட்டுமல்ல அவர் ஒரு கட்சியின் அதிமுக்கிய தலைவர். ஆனால் நான் தொடர்ந்து சொல்வது தான் இது போன்று தலைவர்கள் மக்கள் பணிகள் மூலம் இனம் காணப்பட்டு மக்கள் பிரதிநிதிகளாக வரணும். கரி ஆனந்தசங்கரி ஒரு தேசிய வாதி. முரண்பட்ட இரு தேசங்களை கையாளும் போது....,?
Checked
Sat, 09/27/2025 - 21:27
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed