1 month 3 weeks ago
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
1 month 3 weeks ago
அந்த அய்யாவுக்கு ...இதை ரெஜிஸ்டர் போஸ்டில் அனுப்பிடுங்க சாமி
1 month 3 weeks ago
இணுவில் இப்போது நல்ல முன்னேற்றம் போல் உள்ளது.
1 month 3 weeks ago
இஸ்ரேலுக்கு மட்டுமல்ல அமைச்சரே, மேலும் பல நாடுகளுக்கும் இலவச விசாவை அறிமுகப்படுத்தியிருக்கிறது இலங்கையரசு. இலவச விசாவை காட்டி சுற்றுலாப்பயணிகளைஅழைத்து, கல்லாப்பெட்டியை நிரப்புவதற்காக. எங்கே நீங்கள் இலங்கை அரசோடு இணைந்து தமிழரை நசுக்கினீர்களோ, அவ்வாறே உங்களுக்கு எதிராக இஸ்ரேலோடு இலங்கை இணைந்துவிடுமோ என அஞ்சுகிறீர்கள் போலிருக்கிறது. எதை விதைத்தீர்களோ அதையே அறுவடை செய்வீர்கள். இலங்கையே யுத்தக்குற்றவாளிகள் பிறந்த, நிறைந்த நாடு. இதில இவர் வேற புனித நாடு போல கதையளக்கிறார். எல்லோருக்கும் சப்பித்துப்புவதற்கு வேறு யாரும் கிடைக்க மாட்டார்கள். சிங்கள கிறிஸ்தவர்களை சொல்லப்பயம். ஏன் நீங்கள் அழுத்தங்களை கொடுப்பது? தமிழருக்கு சமஉரிமை வழங்கக்கூடாது என்பதற்காக சகல ஒத்துழைப்புகளையும் வழங்கினீர்கள். உங்களுக்குத்தான் அதிக பலம், உரிமை இருக்கிறது கேட்பதற்கு கேட்டுப்பாருங்கள். இப்போ புரியும், தமிழர் ஏன் போராடினார்கள் என்பது. உங்களுக்காக குரல் கொடுக்க யாருமே வரப்போவதில்லை கூப்பாடு போட்டுப்பாருங்கள், போராடிப்பாருங்கள் என்ன பதில் கிடைக்கிறது என அறிய ஆவல்! சும்மா சுற்றுலா வருபவர்களை நிரந்தரவாசிகளாக்கப்போகிறார்கள் கூப்பாடு போட்டு.
1 month 3 weeks ago
இவரும் வெகு விரைவில் பயங்கரவாத தடைப்பிரிவினரால் விசாரணைக்காக அழைக்கப்படலாம். உண்மையை எதிர்கொள்ள பயம், அதனால் உண்மையை வெளிக்கொணர்பவர்களை அச்சுறுத்துவது. அடக்கி ஒடுக்கினாலும் உண்மை வீறு கொண்டு எழும் என்பதற்கு இந்த மனித புதைகுழிகள் சான்று.
1 month 3 weeks ago
எதிரிகள் கையிலெடுக்கும் இறுதி ஆயுதம் இது. நாட்டில் தமிழருக்கெதிரான அடக்குமுறையில் குளிர் காய்ந்த, காய காத்திருக்கும் கூட்டம் பதட்டமடைந்திருக்கு.
1 month 3 weeks ago
முஸ்லீம் மக்கள் சார்பாக போராட போகின்ற போது DJ Tom Monagle யும் கூட்டி கொண்டு போங்கோ நல்லாக கூவுவார்
1 month 3 weeks ago
முதலில் பாடசாலை மாணவர்களிடம் இருந்து இந்த சமுக அக்கறை தொடங்க வேண்டும்
1 month 3 weeks ago
வகுப்பு எடுத்து ,கட்டுரை வரைந்து ,யூ டியுப் போட்டு தமிழ் அரசியலை இல்லாமல் பண்ணிபோடுவினம் சிலர்...
1 month 3 weeks ago
ஜனாதிபதியை ஒரு பெண்ணுடன் இணைத்து வதந்தி – சிஐடியில் முறைப்பாடு August 7, 2025 6:53 pm ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சமூக ஊடகங்களில் பரவி வரும் காணொளிகள் மற்றும் பதிவுகள் குறித்து முறையான விசாரணை நடத்தக் கோரி குற்றப் புலனாய்வுத் துறையில் (CID) புகார் அளிக்கப்பட்டுள்ளது. சட்டத்தரணி அகலங்க உக்வத்தே, ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் பிரகாரம் குறித்த முறைப்பாட்டை செய்துள்ளார். குறித்த பதிவு, ஜனாதிபதியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க கூடிய உள்ளடக்கத்தை கொண்டிருப்பதாக அவர் கூறியுள்ளார். ஊடகங்களுக்கு உரையாற்றிய அவர், ஒரு பெண் மற்றும் ஜனாதிபதி தொடர்பாக சமூக ஊடகங்களில் பகிரப்படும் காணொளிகள் மற்றும் படங்கள் மற்றும் பிற பதிவுகள் குறித்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரியதாகக் கூறினார். ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் பேரில் தான் இந்தப் புகாரைப் பதிவு செய்ததாகவும், இந்தச் செய்தி மற்றும் தொடர்புடைய தகவல்களைப் புகாரளித்த சமூக ஊடகக் கணக்குகள் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார். மேலும், முற்றிலும் ஆதாரமற்ற இந்த பதிவுகள் சமூகத்தை தவறான வழியில் வழிநடத்தக்கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://oruvan.com/rumor-linking-the-president-with-a-woman-complaint-filed-with-cid/
1 month 3 weeks ago
ஒரு எச்சரிக்கை! August 6, 2025 — கருணாகரன் — ஈழத் தமிழர்களுடைய அரசியல், முன்னெப்போதையும் விட இப்பொழுது பல முனைப்பட்டுள்ளது. பல முனைப்பட்டுள்ளது என்றால், அது ஏதோ முன்னேற்றமான – நல்விளைவுகளை உருவாக்கக் கூடிய மாற்றம் என்று அவசரப்பட்டுக் கருதிவிட வேண்டாம். இது சிதைவை நோக்கிய – எதிர்மறை அம்சங்களை உருவாக்கக் கூடிய பல – முனைகளாகும். உண்மையில் பல கோணங்களில், பல முனைகளில் இயங்குவது என்பது ஜனநாயக அடிப்படையில், பல சிந்தனைகளைக் கொண்டதாக இருப்பதாகும். அப்படி இருக்குமானால், அதனால் நன்மைகள் விளையும். முன்னேற்றம் ஏற்படும். அத்தகைய பன்முனைகள், பன்மைத் தன்மையை உள்ளீடாகக் கொண்டவை. அவை அழகுடையவை. அது ஆரோக்கியமான ஒன்றாகும். இது அப்படியானதல்ல. இந்தப் பன்முனைகள் என்பது, பல துண்டுகளாக, அணிகளாகச் சிதைவது. முன்னையது ஆரோக்கியமானது என்றால், பிந்தியது, பின்னடைவைத் தரக்கூடியது. பாதகமானது. ஏனென்றால், இங்கே நிகழ்ந்திருப்பது, சிந்தனையின் முதிர்வினாலான வெவ்வேறு நிலைப்பாடுகள், போக்குகள், பரிமாணங்கள், பரிணாமங்கள் அல்ல. இவை தனிநபர் மற்றும் அணி முரண்பாடுகளினால் உருவான முனைப்புகள். எனவே இதை நாம் சிதைவின் முனைப்பு என்றே சொல்ல வேண்டும். கடந்த முப்பது ஆண்டுகளாக ஈழத் தமிழரின் அரசியல் இப்படியிருக்கவில்லை. அப்பொழுதும் மாற்றுத் தரப்புகள், பிற அரசியற் போக்குகள் இருந்தன. தமிழரசுக் கட்சி, தமிழ்க் காங்கிரஸ், இடதுசாரிகள், தேசியக் கட்சிகளுக்கான ஆதரவு எனப் பல முனைகளும் முனைப்புகளும் இருந்தன. இருந்தாலும் தமிழரசுக் கட்சி பின்னாளில் அதனுடைய வழித்தோன்றலான தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகியவையே பெருந்திரள் மக்களின் ஆதரவைப் பெற்றிருந்தன. தமிழ்த்தரப்பாகவும் அவையே கருதப்பட்டன. இன்னொரு நிலையில் 1980 களில் 30 க்கு மேற்பட்ட ஈழ விடுதலை இயக்கங்கள் இருந்ததையும் நினைவு கொள்ளலாம். ஆனால், அப்படியெல்லாம் இருந்தது பல சிந்தனைப் போக்கின் வெளிப்பாடாக வெளியே தோன்றினாலும், நடைமுறையில் அவை தம்முள் குறுகிச் சிறுத்து, சிதைவை உள்மையமாகவே கொண்டிருந்தன. என்பதால்தான் எந்த இயக்கமும் வரலாற்றில் நிலைகொள்ள முடியாமல் போனது. மட்டுமல்ல அவை அனைத்தும் பெருந்திரள் மக்களிடம் செல்வாக்குச் செலுத்தவுமில்லை. அப்படித்தான் முன்னரும் பிற தரப்புகள் – மாற்று அரசியல் தரப்பினர் போன்ற சக்திகளும் மக்களிடம் பேராதரவைப் பெறவில்லை. நாட்டில் மட்டுமல்ல, புலம்பெயர் தேசங்களிலும் அத்தகைய மாற்று அரசியல் செல்வாக்குப் பெறவில்லை. அதாவது, அவற்றின் உள்ளடக்கச் செழுமைக்கு ஏற்றவிதத்தில் மக்களிடம் அவை செல்வாக்கைப் பெறத்தவறின. என்பதால், தமிழ்த்தேசிய நிலைப்பட்டிருந்த அல்லது ‘ஏகப்பிரதிநிதித்துவம்’ என்றுசொல்லப்பட்ட ‘தமிழ்த்தேசியவாத அரசியல்’தான் ஈழத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் செல்வாக்குப் பெற்றிருந்தது. புலிகளின் காலத்திலும் புலிகளுக்குப் பின்னும் கூட இந்த நிலைமையே நீடித்திருந்தது. ஆக, நீண்ட காலமாக ஒருமுகப்படுத்தப்பட்ட (ஏகநிலைப்பட்ட) அரசியலே ஈழத் தமிழர்களுடையதாக இருந்தது. அது முற்போக்கானதோ பிற்போக்கானதோ என்பதற்கு அப்பால் இதுதான் உண்மையான நிலைமையாகும். இந்த நிலையில் தற்போது மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. சரியாகச் சொன்னால் தளர்வு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழ்த்தேசியவாத அரசியல் இப்பொழுது சிதறுண்டுள்ளது. சிதறுண்டுள்ளது என்பதன் பொருள், தலைமைத்துவக் கட்டுப்பாட்டை இழந்து விட்டது. அல்லது தலைமைத்துவக் கடப்பாட்டை இழந்து நிற்கிறது. அதனால் பல அணிகள்,குழுக்கள் எனப் பிளவுண்டு சிதைந்திருக்கிறது. கருத்து நிலையில் மட்டுமல்ல, அணுகுமுறைகளில், செயற்பாடுகளில், கட்டமைப்புகளில் எல்லாம் இந்தப் பிரிவையும் பிளவையும் அவதானிக்கலாம். தமிழ் இனத்துவ அடையாள அரசியலை 1970 க்கு முன்னர் செல்வநாயகமும், அமிர்தலிங்கமும் அடுத்தடுத்துத் தலைமை தாங்கினர். சரி பிழைகளுக்கு அப்பால் இவர்கள் இருவரையும் ஏற்றுச் செல்கிற போக்கு அரசியற் தரப்பினரிடத்திலும் இருந்தது. தமிழ்ச்சமூகத்திடமும் இருந்தது. பிறகு இதை விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் சுவீகரித்துக் கொண்டார். 2009 வரையில் தன்னைத் தமிழ்த் தேசியவாதத்தின் தலைமைச் சக்தியாக ஸ்தாபித்து வைத்திருந்தார் பிரபாகரன். 2009 க்குப் பிறகு, புலிகளின் வீழ்ச்சியோடு இந்த நிலை சிதையத் தொடங்கியது. புலிகளின் வீழ்ச்சியோடு நாட்டில் மட்டுமல்ல, புலம்பெயர் நாடுகளிலும் புலிகளை ஆதரித்த சக்திகள் பிளவு பட்டன. ஆனாலும் இலங்கைச் சூழலில் நிலவிய அரசியல் நெருக்கடிகள், ஆட்சித்தரப்பினரின் இறுக்கமான போக்குகளால் தமிழ்த்தேசியவாதம் என்ற அடையாளமும் அதற்கான கட்டமைப்பும் (தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு) மெல்லிய அளவிலேனும் பேணப்பட்டது. இதற்கு ஒரு எல்லைவரை, தளம்பல்களுடன் சம்மந்தன் தலைமை தாங்கினார். சிதைவுகளைக் கட்டுப்படுத்தி, மீளமைப்பை அல்லது ஒருங்கிணைப்பைச் செய்யக் கூடிய அளவுக்கு அவருடைய தலைமைத்துவம் கடப்பாட்டுச் சிறப்புகளைக் கொண்டிருக்கவில்லை. அதனால், அந்தக் கட்டமைப்பும் (கூட்டமைப்பும்) பின்னாளில் சிதைவடையத் தொடங்கியது. இதனால் தமிழ் அரசியல் பரப்பில் வெவ்வேறு நிலைப்பாடுகளும் அணிகளும் படபடவெனத் தோற்றம் பெற்றன. எல்லா இடங்களிலும் பல அணிகளும் கட்சிகளும் உருவாகின. முன்னெப்போதும் இல்லாத ஒரு வளர்ச்சியாக கிழக்கில், கிழக்கு மைய அரசியற் சிந்தனையும் அரசியற் சக்திகளும் தலையெடுத்தன. வடக்கிலும் பல கட்சிகள் உதயமாகின. இப்பொழுது தமிழ்த்தேசிவாத அடையாளத்தைச் சுமந்தபடி 12 க்கு மேற்பட்ட கட்சிகள் இலங்கையில் உண்டு. தமிழரசுக் கட்சி, தமிழ்க் காங்கிரஸ் (தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி) ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணி என மூன்று பிரதான அணிகள் இருக்கின்றன. புலம்பெயர் சூழலில் இதை விட அதிகமுண்டு. அங்கே இமாலயப் பிரகடத்தினர் ஒன்றாகவும் பிரபாகரன் உயிரோடு உள்ளார் என்போர் ஒன்றாகவும் பிரபாகரன் இறந்து விட்டார் என்போர் இன்னொன்றாகவும் நாடு கடந்த தமிழீழத்தினர் வேறொன்றாகவும் எனப் பல அணிகள். இவ்வாறு பல முனைகளில், பல நிலைப்பட்டதாக, பல அணிகளாக, குழுக்களாக சிதைவடைந்த தமிழ்த் தேசியவாத அரசியலில் மிஞ்சியிருப்பது வெறும் பிரகடனங்களும் வரட்சியான அரசியல் போக்குமே. இவற்றில் எந்த ஒரு தரப்பிடமும் செயற்திறனும் புத்தாக்கச் சிந்தனையும் இல்லை. எல்லாம் ஒன்றை ஒன்று நிராகரிப்பதிலும் அதற்கான காரணங்களைத் தேடுவதிலும் குறியாக உள்ளனவே தவிர, பாதிக்கப்பட்ட மக்களை மீள்நிலைப்படுத்துவதைப்பற்றிச் சிந்திப்பனவாக இல்லை. மட்டுமல்ல, தோற்கடிக்கப்பட்ட அரசியலை எத்தகைய அடிப்படையில் வெற்றியடையச் செய்யலாம் என்று முயற்சிப்பதாகவும் கடந்த காலப் படிப்பினைகளிலிருந்தும் உலக அரசியல் போக்கிலிருந்தும் எதையும் கற்றுக் கொள்ளக் கூடியனவாகவும் இல்லை. இது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றே. ஏனென்றால், சிதைவில் உருப்படியானவற்றை எதிர்பார்க்க முடியாது. சிந்தனையினால் வேறுபடும் நிலை இருந்தால்தான் வித்தியாசங்களும் ஒன்றை ஒன்று இட்டு நிரப்பும் வளர்ச்சிப் போக்கும் காணப்படும். இங்கே நிலவுவது தனிநபர் அல்லது அணி வேறுபாடுகள், போட்டிகள் என்பதால் இவற்றுக்கிடையே காழ்ப்பும் அதனடியான குழிபறிப்புகளும் அதற்கான பழித்துரைப்புகளுமே மிஞ்சியிருக்கும். இப்போது நடந்து கொண்டிருப்பது இதுதான். என்பதால்தான் ஒவ்வொரு அணியும் மறு அணியை நிராகரிக்கும் விதமாக நடந்து கொள்கிறது. ஒவ்வொரு கட்சியும் பிற கட்சிகளை இழக்காரம் செய்கிறது. அப்படித்தான் புலம்பெயர் சூழலிலும் ஏட்டிக்குப் போட்டியும் ஒன்றை ஒன்று நிராகரிப்பதும் நடக்கிறது. ஒரு நீண்ட விடுதலைப் போராட்டத்தை நடத்திய சமூகம், அதற்காகப் பல்லாயிரக் கணக்கானோரைப் பலி கொடுத்த (தியாகம் செய்த) ஒரு இனக்குழாம், தன்னுடைய அரசியல் பின்னடைவைக் குறித்தோ, பாதிப்பைக் குறித்தோ, தோல்வியைக் குறித்தோ சிந்திக்காமல், வெற்றி பெறுவதைப்பற்றி எண்ணாமல், இப்படிச் சிதைந்து கொண்டிருப்பது அதனுடைய நிரந்தர அழிவுக்கே இட்டுச் செல்லும். அதுதான் நடந்து கொண்டுமிருக்கிறது. இந்தப் போக்கின் உச்சமாகவே புலிகளின் தலைவர் வே. பிரபாகரனுக்கு சுவிற்சர்லாந்தில் இந்த ஓகஸ்ட் மாதத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியும் அஞ்சலி செலுத்தக் கூடாது என்ற எதிர்ப்பும் வலுவடைந்துள்ளது. இரண்டு தரப்பும் பகிரங்கமாகவே மோதுகின்றன. இந்த மோதுகை அர்த்தமற்றது மட்டுமல்ல, காலம் கடந்த ஒன்றுமாகும். 16 ஆண்டுகளுக்கு முன்பே பிரபாகரன் இறந்து விட்டார் என்பது அனைவருக்கும் தெரியும். அதைத் தெரிந்து கொண்டே இவ்வளவு காலமும் இழுத்தடித்து வந்து இப்பொழுது சண்டையிடுகிறார்கள். இதை என்னவென்று சொல்வது? அப்படித்தான் இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வு பற்றியும் உச்ச முரண்பாடு நிலவுகிறது. ஒரு தரப்பு 13 ஆவது திருத்தம் – மாகாணசபையிலிருந்து மேலே போவோம் என்கிறது. இன்னொரு தரப்பு மாகாணசபையைப் பற்றிய பேச்சே எடுக்கக் கூடாது என்கிறது. இதனால் யாருக்கு லாபம்? எதிர்த்தரப்புக்குத்தானே! இப்படியே பிளவுண்ட – எதிரெதிரான – முரண்பட்ட போக்கினால் பலமடைவது நிச்சயமாக எதிர்த்தரப்புகளேயாகும். நிச்சயமாக மக்களல்ல. எதிர்த்தரப்புகள் பலமடையும்போது இந்தத் தரப்புகள் பலவீனப்படுகின்றன. இந்தத் தரப்புகள் பலவீனப்படும்போது இவற்றை ஆதரிக்கும் மக்களும் பலவீனப்படுகிறார்கள். தமிழ் (தேசியவாத) அரசியலின் நிலையும் தமிழ் மக்களின் நிலையும் இன்று இதுதான். ஆனாலும் இதையிட்ட கவலைகளோ, மீள்பார்வையோ, குற்றவுணர்ச்சியோ இந்தத் தரப்புகள் எவற்றிடமும் இல்லை. தமிழ் ஊடகப்பரப்பு, சிந்தனைப் பரப்பு போன்றவற்றிலும் இல்லை. அல்லது போதாது. காரணம், மக்களுக்கான அரசியலை செய்வதைப் பற்றி எவரும் சிந்திப்பதில்லை. அப்படிச் சிந்தித்தால்தானே அதில் உள்ள சிக்கல்கள், தவறுகள், முரண்பாடுகள், போதாமைகள் பற்றியெல்லாம் தெரியும். இவை செய்து கொண்டிருப்பதோ தனிநபர் அல்லது அணி அல்லது குழு அல்லது கட்சி அரசியல் மட்டுமே. என்பதால் அதற்கான, அதற்கு அளவான அளவில்தான் இவை சிந்திக்கின்றன. அந்தளவில்தான் இவர்களால் – இவற்றில் சிந்திக்க முடிகிறது. எனவேதான் தமிழ்த் தேசியவாத அரசியல் இன்று சிதைந்து பலவீனப்பட்டுள்ளது என்கிறோம். இதை மாற்றிப் புதிதாகச் சிந்திக்க வேண்டுமானால், உலகளாவிய அரசியல் மாற்றங்கள், தேசியவாத அரசியலில் ஏற்பட்டுள்ள நிலைமாற்றங்கள், அதனுடைய வளர்ச்சி, பிராந்திய அரசியல் சூழல், உலகளாவிய பொருளாதாரப் போக்குகள், உள்நாட்டு நிலைவரம், மக்களின் நிலைமை, பின்போர்க்காலச் சூழல், ஜனநாயக அடிப்படைகளைப் பேணும் அக்கறை எனப் பலவற்றிலும் விரிவு கொள்ள வேண்டும். அதற்கான உள நிலை முக்கியமானது. தனிநபர் முதன்மைப்பாடு, கட்சி நலன், குழு மனோபாவம் போன்றவற்றைப் பேணிக் கொண்டு இவற்றைப் பற்றிச் சிந்திக்க முடியாது மக்கள் நலன் அரசியலை முன்னெடுக்கவும் ஏலாது. இரண்டும் எதிரெதிர் துருவங்களாலானது. ஆகவே, மக்களுக்கான அரசியலை முன்னெடுப்பதற்கான ஒழுக்கத்துக்கு – முறைமைக்கு – தம்மைத் தயார்ப்படுத்த வேண்டும். மாற்றிக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் இப்போதையும் விட மோசமான பின்னடைவையே தமிழ் அரசியலும் தமிழ்ச் சமூகமும் சந்திக்கும். இது எச்சரிக்கைதான். https://arangamnews.com/?p=12244
1 month 3 weeks ago
07.08.2025 நேரம் இரவு 9.30 மணி #####...மன்னாரின் கனிய மணலகழ்வு...எங்கள் மக்களைச் சூழவுள்ள பேராபத்து...###### மன்னார் மாவட்டம் அண்மைய நாட்களில் பேசு பொருளாக மாறி இருக்கின்றது. மன்னாரில் மேற்கொள்ள இருக்கின்ற பல்வேறு செயற்பாடுகள் மன்னார் மக்கள் மத்தியில் கொதிநிலையை ஏற்படுத்தியிருக்கின்றது. ஏற்கனவே சில பகுதிகளில் அமைக்கப்பட்டு மீளவும் சில இடங்களில் அமைக்கப்பட இருக்கின்ற காற்றாலை மின்சார திட்டமும் எதிர்காலத்தில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு இருக்கின்ற கனியமணல் அகழ்வுச் செயற்பாடும் மன்னார் மாவட்ட மக்களிடையே மிகப்பெரிய பீதியை ஏற்படுத்தியிருக்கின்றது. இலங்கையினுடைய ஏனைய பிரதேசங்களோடு ஒப்பிடுகின்ற பொழுது மன்னார் தீவு தனித்துவமான புவியியல் அமைப்பை கொண்டிருக்கின்ற பிரதேசமாகும். இதிகாச அடிப்படையில் இராமாயணத்தில் கூறப்படுகின்ற ராமர் பாலத்தினுடைய தொடர்ச்சியாக மன்னார் தீவு காணப்படுகின்ற அதே வேளை இராமர் பாலத்தில் ஊடாக இலங்கைக்கு வந்த இராம சேனை மன்னார் தீவினூடாகவே முதன் முதலில் இலங்கைக்கு வந்தது இந்துக்களிடையே உள்ள மிகப்பெரிய நம்பிக்கையாகும். புவியியல் அடிப்படையில் மிகவும் தனித்துவமான அமைவிடத்தினை மன்னார் தீவு கொண்டிருக்கின்றது. இந்தியாவிற்கு மிக அண்மித்து இலங்கையில் உள்ள பகுதியாக மன்னார் காணப்படுகின்றது. மன்னார் தீவு அமைந்திருக்கின்ற புவியியல் மற்றும் புவிச்சரிதவியல் நிலைமைகள் என்பது மிகவும் சிறப்பு தன்மை வாய்ந்தது. மன்னார் தீவினுடைய தாய்ப்பாறை கடல் மட்டத்திலிருந்து மிக ஆழத்தில் காணப்படுகின்றது. இந்த தாய்ப்பாறை அமைந்துள்ள புவிச்சரிதவியலை காவேரி வடிநிலம் (C1) என அழைக்கப்படும். ஆனால் இதன் தடிப்பு இதனைச் சூழ உள்ள பல பகுதிகளுடன் ஒப்பிடும்போது குறைவாகும். இது 12- 35 கி.மீ. தடிப்பிலேயே காணப்படுகின்றது. இதற்கு மேலாக மயோசின் காலச்சுண்ணக்கற் படிவகள் காணப்படுகின்றன. இதற்கு மேல் அண்மைக்கால மணற் படிவுகள் உள்ளன. இவை அலைகளால் கொண்டு வந்து படிய விடப்பட்டுள்ளன. இவ்வாறு கொண்டு வரப்பட்டு படிய விடப்பட்ட மணல் படிவுகளே இன்று மன்னார் மாவட்டத்தின் இருப்பிற்கே சவால் விடுகின்ற அளவுக்கு மாறியுள்ளது. மன்னாரில் இயல்பாகவே கடலலைகளினால் கொண்டுவரப்பட்டு படிய விடப்பட்டிருக்கின்ற இல்மனைற் மணற்படிவுகள் பற்றிய ஆய்வுகள் 2004ம் ஆண்டளவில் ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும் கூட 2009 ஆம் ஆண்டிலிருந்து அதாவது குறிப்பாக யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் அதாவது 2009 இல் இருந்து 2014 வரையிலான காலப்பகுதியிலேயே மிக ஆழமான ஆராய்ச்சிகள் ஊடாக மன்னார் மாவட்டத்தில் பொருளாதார பெறுமதி மிக்க இல்மனைற் படிவுகள் இருப்பது அடையாளம் காணப்பட்டிருக்கின்றது. இந்த இல்மனைற் படிவுகள் இலங்கையின் பல பகுதிகளில் காணப்பட்டாலும் மொத்த பார உலோகங்களின் சதவீதம் கூடிய, சுத்திகரிப்பு செலவு குறைந்த குறிப்பாக இல்மனைற் செறிவு கூடிய கனிய மணற்படிவுகள், மிகப் பெரிய அளவில் மன்னாரில் அமைவு பெற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. தென்னாசியாவில் மிகப்பெரிய அளவிலான செறிவு மிக்க இல்மனைற் படிவுகளுடன் கூடிய மணற்படிவுகள் மன்னரில் அமைவு பெற்றுள்ளது. பொருளாதார அடிப்படையில் மிக பெறுமதியான மணற்படிவுகள் மன்னாரில் உள்ளமை பெருமையும் மகிழ்ச்சியும் தரக்கூடியது. ஆனால் மறு வகையில் மன்னாரின் அழிவுக்கும் அதுவே காரணமாக அமையக்கூடும் என்பது துன்பமானது. மன்னாரில் காணப்படும் கனிய மணலில் Ilmenite (இல்மனைற், Leucoxene: (லியூகோக்சீன்), Zirconium: (சிர்க்கோனியம்), Rutile (ரூடைல்),Titanium oxide(டைட்டானியம் ஒக்சைடு),Granite (கருங்கல்),Sillimanite (சிலிமனைட்) மற்றும் Orthoclase(ஓர்த்தோகிளாஸ்) போன்ற கனிமங்கள் உள்ளன. அதனால் தான் மன்னாரில் உள்ள கனிய மணல் பொருளாதார பெறுமதிமிக்கதாக உள்ளது. மன்னார் தீவு 26 கிலோ மீற்றர் நீளமும் 6 கிலோமீற்றர் அகலமும் கொண்ட 140 சதுர கிலோமீற்றர் பரப்பைக் கொண்ட ஒரு தீவாகும். இந்த தீவினுடைய சராசரி உயரமாக 7.8 மீற்றர் காணப்படுகின்றது. இருந்தாலும் இந்த சராசரி உயரம் என்பது எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியானதாக இல்லை. சில பிரதேசங்களில் மிகக் குறைவான உயரமும் கொண்டதாக அதாவது கடல் மட்டத்தை விட உயரம் குறைந்ததாகவே காணப்படுகின்றது. தாழ்வுப்பாடு எழுத்தூர், சவுத் பார், தோட்ட வெளி, எருக்கலம்பிட்டி, கொன்னையன் குடியிருப்பு, தாராபுரம், செல்வா நகர் போன்ற பிரதேசங்களின் சராசரி உயரம் கடல் மட்டத்தை விட குறைவாக அல்லது அதற்கு அண்மித்ததாக உள்ளமை குறிப்பிடத்தக்கது. அதேவேளை சில பிரதேசங்களில் கடல் மட்டத்தை விட 12 மீட்டர் உயரம் கொண்டதாகவும் காணப்படுகின்றது. மிக சிறப்பான பொருளாதார பெறுமதிமிக்க இந்த இல்மனைற் மணல் அகழ்வினை மேற்கொள்வதற்காக இலங்கையில் ஐந்து நிறுவனங்கள்( உள்ளூர் நிறுவனங்களின் பெயரில் வெளிநாட்டு நிறுவனங்கள்) விண்ணப்பித்து ஐந்து நிறுவனங்களுக்குமே மன்னார் தீவின் கனியமணல் அகழ்வுக்கான அனுமதியினை கடந்த கால அரசாங்கங்களின் ஆட்சிக் காலத்தில் தேசிய கனிய வளங்கள் ஆய்வு மற்றும் மற்றும் சுரங்கமறுத்தல் பிரிவு (NGSMB) அனுமதியை வழங்கி இருக்கின்றது. இதில் வேடிக்கை என்னவென்றால் இந்த அனுமதி தொடர்பாக மன்னாரில் அமைந்துள்ள தேசிய கனிய வளங்கள் மற்றும் சுரங்கமறுத்தல் பிராந்திய காரியலத்திலிருந்து ஒப்புக்காகவேனும் தகவல்கள் எதுவும் பெறப்படவில்லை. இந்த அனுமதி பெற்ற நிறுவனங்களில் நிறுவனங்களில் கில்சித் எக்ஸ்ப்ளோரேஷன் (Kilsythe Exploration) (செப்டம்பர் 2015 இல் 1 அனுமதிப்பத்திரம்), ஹேமர்ஸ்மித் சிலோன் (Hammersmith Ceylon)(செப்டம்பர் 2015 இல் 2 அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டன), சுப்ரீம் சொல்யூஷன் (Supreme Solution) (நவம்பர் 2015 இல் 2 அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டன), சனூர் மினரல்ஸ் (Sanur Minerals) (செப்டம்பர் 2015 இல் 2 உரிமங்கள் வழங்கப்பட்டன) மற்றும் ஓரியன் மினரல்ஸ் (Orion Minerals) (ஜூலை 2015 இல் 2 உரிமங்கள் வழங்கப்பட்டன) ஆகியவை அடங்கும். அனுமதி வழங்கப்பட்ட இந்த ஐந்து நிறுவனங்களில் மூன்று நிறுவனங்கள் மணல் அகழ்வுக்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகளில் தம்மை ஈடுபடுத்தி வருகின்றன. அவர்கள் இந்த கனிய மணலை அகழ்ந்து, அவுஸ்திரேலியா, அமெரிக்கா, யப்பான் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவுள்ளன. மன்னாரின் கனிய மணல் அகழ்விற்காக விண்ணப்பித்திருக்கின்ற அனைத்து நிறுவனங்களுமே கடல் மட்டத்திலிருந்து 12 மீற்றர் ஆழம் வரைக்கும் மணல் அகழ்வை மேற்கொள்ளவுள்ளதாகவும் அகழப்பட்ட மணலில் கனிமங்கள் மட்டும் தனித்து பிரித்தெடுக்கப்பட்டு பின்னர் மிஞ்சிய மணல்கள் மீண்டும் அகழப்பட்ட இடத்திலே கொட்டப்படும் என்று குறிப்பிடப்பட்டிருக்கின்றது. ஆனால் மன்னார் தீவினுடைய சராசரி உயரம் கடல் மட்டத்திலிருந்து 7.8 மீற்றர். ஆனால் 12 மீற்றர் அகழப்பட்டால் அது அகழப்படும் இடம் முழுவதும் கடல் மட்டத்திலிருந்து சராசரியாக 10 அடி ஆழத்தில் தோண்டியதற்கு சமமாகவே அமையும். அகழ்வுக்காக முன்மொழியப்பட்ட மூன்று பிரதானமான இடங்களிலும் பல சதுர கிலோமீற்றர் பரப்பிற்கு 10 அடி ஆழத்திற்கு தோண்டியதற்கு சமனாகும். இந்த 10 அடி ஆழத்திற்கும் கடல்நீர் உள்வந்து நிறைந்து விடும். இதனை சாதாரண மக்களும் விளங்கும் வகையில் சொல்வதானால் மணல் அகழப்படும் இடங்கள் முழுவதும் 10 அடி ஆழ கடலாக மாறிவிடும். பொதுவாக ஒரு இடத்தில் இயற்கையாக படிந்த மணலை அல்லது மண்ணை அகழ்ந்து அதே மண்/ மணல் முழுவதையும் மீண்டும் அதே இடத்தில் கொட்டினால் கூட அந்த பிரதேசம் ஒரு குறிப்பிட்ட நாட்களின் பின்னர் பள்ளமாகவே மாறிவிடும். ஆகவே அனுமதி பெற்ற நிறுவனங்கள் குறிப்பிடுவது போல அந்த பிரதேசத்தில் அகழப்பட்ட மண்ணைக் கொண்டே அந்த அகழ்வுக் குழி மூடப்படும் என்பது மக்களை ஏமாற்றும் தந்திரம். சில நாட்களில் அந்த இடம் மீண்டும் பள்ளமாகும். இந்த கனிய மணல் அகழ்விற்காக அனுமதி பெற்ற நிறுவனங்கள் அகழ்வுச் செயற்பாட்டுக்காக பகீரதப் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றன. பல வழிகளிலும் முயன்று வருகின்றனர். இந்த நிறுவனங்களில் சில உள்ளூர் மக்களிடம் காணிகளைக் கொள்வனவும் செய்துள்ளார்கள். உள்ளூரின் சந்தைப்பெறுமதியை விட பல மடங்கு விலை கொடுத்து காணிகளை வாங்கியுள்ளார்கள். எடுத்துக்காட்டாக 10000/- பெறுமதியான காணி ஒன்றை அந்த நிறுவனங்கள் 100000/- கொடுத்து வாங்குகிறார்கள் எனில் அகழ்விற்கு பின்னாலுள்ள பொருளாதாரப் பெறுமதி எத்தகையது என்பது நோக்கற்பாலது. மன்னார் தீவின் கனிய மணல் அகழ்வினை மேற்கொள்வதற்கு பல மட்டங்களில், பல தரப்புக்களினாலும், பல வகைகளான தந்திரங்களும் பாவிக்கப்படும் என அறியக் கிடைக்கின்றது. ஆனால் மன்னார் தீவில் கனிய மணலகழ்வு என்பது; 1. மன்னார் தீவு முழுவதும் 10 அடி பள்ளமாக மாறி கடல் நீரால் நிரப்பப்படும். 2. அகழ்வுக்காக மன்னார் தீவிலுள்ள பனை வளங்களில் குறைந்து 10000 பனைகளாவது அழிக்கப்படும். 3. தரைக்கீழ் நீர்வளம் முழுமையாக பாதிக்கப்படும். 4. மன்னார் தீவின் உருவவியல் மாறிவிடும். எனவே என் அன்புக்குரிய மன்னார் உறவுகளே............ நீங்கள் இப்பொழுது விழித்துக் கொள்ளாவிட்டால் இனி எப்போதும் மன்னார் தீவைக் காப்பற்ற முடியாது. அகழ்வை மேற்கொள்ள விரும்புபவர்களுக்கு மன்னார் ஒரு கனிய மணல் அகழ்வு மையம். ஆனால் எங்களுக்கு மன்னார் எங்கள் தாய் நிலம். அன்புக்குரிய வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் மக்களே, இது மன்னார் தீவுக்கு மட்டுமேயுரித்தான பிரச்சினையல்ல. எங்கள் எல்லோருக்கும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பிரச்சினை. இது தொடர்பாக உங்களுக்கு தேவைப்படும் புவியியல் சார்ந்த ஆலோசனைகளை எப்பொழுதும் உங்களோடு பகிர்ந்து கொள்வேன். உங்களோடு இருப்பேன். ( இந்த கனிய மணல் அகழ்வோடு தொடர்புபட்ட அரசியல் மற்றும் பொது வெளியில் பகிர முடியாத பல விடயங்களை தவிர்த்தே இந்தப் பதிவினை எழுதியுள்ளேன் என்பதனைக் கருத்தில் கொள்க). - நாகமுத்து பிரதீபராஜா - https://www.facebook.com/Piratheeparajah
1 month 3 weeks ago
இளமைக் கவிதைகள் இறக்கை விரிக்கின்றன .......... நல்லாஇருக்கு ......... ! 👍
1 month 3 weeks ago
சசிகாந்த செந்தில் ஒரு காங்கிரஸ் கட்சி சார்ந்த மக்களவை உறுப்பினர், முன்னாள் இந்திய நிர்வாக சேவை (IAS) அதிகாரி. அண்மையில் வடகரோலினாவில் நடந்த FeTNA ஆண்டு விழாவில் இவரது பேச்சைக் கேட்டேன். உலகில் வலதுசாரிகள் ஆட்சி ஏன் ஓங்கி வருகிறது என்பது பற்றிப் பேசினார். மிக அருமையான உரை. "சாதாரண மக்கள் செய்யக் கூடிய மிகப் பெரிய துரோகம், இந்த வலது சாரிகளுக்கு எதிராகப் பேசாமல் இருப்பது தான்" என்று கூறியிருந்தார், அரங்கம் நிறைந்த கரகோசம் கிடைத்தது. அந்த உரையிலும், ஈழத்தமிழர்கள் இன அழிப்பிற்குள்ளாகியிருக்கிறார்கள், அது இன்னும் தொடர்கிறது என்று பேசியிருந்தார்.
1 month 3 weeks ago
"மூன்று கவிதைகள்" 'உன்னை நினைத்தே உலகில் இருந்தேன்' உன்னை நினைத்தே உலகில் இருந்தேன் உண்மைக் காதல் என்று நம்பிவந்தேன் உடலைத் தந்து என்னை மயக்கினாய் உள்ளதையும் பறித்து வீதியில் விட்டாய்! கண்கள் நான்கும் சந்தித்த வேளை விண்ணில் பறந்தேன் அறிவைத் தொலைத்தேன் எண்ணம் மறந்து கையைப் பிடித்தேன் வண்ண அழகில் பொய்யை மறைத்தாய்! மனைவியை மறந்து புத்தன் ஆனான் மணவாட்டியின் ஆட்டத்தில் புத்தி கெட்டேன்! கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம் ................................................................................ 'கண்களென்ன வண்டினமா என்னை மொய்க்கிறதே' கண்களென்ன வண்டினமா என்னை மொய்க்கிறதே கன்னியென்னை முகர்ந்து பார்த்து மகிழ்கிறதே கன்னமிரண்டிலும் முத்தம் கொடுத்து பறக்கிறதே கட்டியணைத்து தேன் குடிக்க மேய்கிறதே! பெண்களென்ன காமம் சுரக்கும் உடலா கிண்ணத்தில் ஏந்திக் குடிக்கும் போதையா பெண்மையைப் போற்றி காதலைத் தேடு மண்ணின் பெருமையை அவளிடம் காட்டு! கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம் ........................................................... 'பட்டாம்பூச்சியின் தேடல்' பட்டாம்பூச்சி பூவைச் சுற்றித் தேடி பச்சைக் கொடியில் தவம் இருந்து பக்குவமாக மலரின் மணத்தை முகருது! பருவக் காளை பூவையரை நாடி பல்வரிசைக் காட்டி பின்னால் தொடர்ந்து பகட்டை நம்பி தன்னையே தொலைக்குது! கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம் "மூன்று கவிதைகள்" https://www.facebook.com/groups/978753388866632/posts/30730529339928977/?
1 month 3 weeks ago
ஊடகவியலாளர் குமணன் பயங்கரவாத தடுப்பு பிரிவினால் விசாரணைக்கு அழைப்பு - அரசின் இந்த அடக்குமுறையை அனைவரும் எதிர்க்கவேண்டும் - ரஜீவ்காந் Published By: RAJEEBAN 07 AUG, 2025 | 08:48 PM ஊடக தர்மத்தின் அடிப்படையில் செய்திகளை வழங்கும் ஒரு ஊடகவியாலாளர் அச்சுறுத்தப்படுவதும் போலியான குற்றச்சாட்டுக்கு உள்ளாவதும் மிகவும் கண்டிக்கத்தக்கது. இதை நாம் இத்தோடு விட முடியாது அரசின் இந்த மோசமான அடக்குமுறையை முழுமையாக அனைவரும் எதிர்க்க வேண்டும்.மக்கள் போராட்ட முன்னணியின் ராஜ்குமார் ரஜீவ்காந் தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது- ஊடகவியலாளர் குமணன் அவர்களை பயங்கரவாத தடுப்புப் பிரிவு தொடர்ச்சியாக அச்சுறுத்தி வருகின்றது. ஏற்கனவே சென்ற வருடம் அவரின் தாய் தந்தையினர் அச்சுறுத்தப்பட்டனர். பின்னர் அதன் பின்னர் எந்த தொடர்பும் ஏற்படுத்தப்படவில்லை. மீண்டும் தற்பொழுது விசாரணைக்கு அழைக்கப்பட்டிருக்கின்றார். வி.புகள் தொடர்பான பதிவுகள் என்ற போலியான காரணங்களே கூறப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக செம்மணி விடயங்களை முழு உலகிற்கும் கொண்டு செல்லும் குமணன் போன்ற சுயாதீன ஊடவியாளர் மேல் பயங்கரவாத தடுப்புப் பிரிவு விசாரணை மேற்கொள்வதை நாம் பார்த்துக்கொண்டு இருக்க முடியாது. இந்த நேரத்தில் ஊடக தர்மத்தின் அடிப்படையில் செய்திகளை வழங்கும் ஒரு ஊடகவியாலாளர் அச்சுறுத்தப்படுவதும் போலியான குற்றச்சாட்டுக்கு உள்ளாவதும் மிகவும் கண்டிக்கத்தக்கது. இதை நாம் இத்தோடு விட முடியாது, அரசின் இந்த மோசமான அடக்குமுறையை முழுமையாக அனைவரும் எதிர்க்க வேண்டும். https://www.virakesari.lk/article/222082
1 month 3 weeks ago
காசாவில் காயமடைந்த 2000 பாலஸ்தீனியர்களிற்கு தனித்தீவில் மருத்துவசிகிச்சை - இந்தோனேசியா திட்டம் 07 AUG, 2025 | 05:07 PM காசாவில் உள்ள 2000 நோயாளிகள் மற்றும் காயமடைந்தவர்களிற்கு தனித்தீவொன்றில் வைத்து சிகிச்சையளிக்கவுள்ளதாக இந்தோனேசியா தெரிவித்துள்ளது. 2023 ஒக்டோபர் ஏழாம் திகதி முதல் காசாவிற்கு மனிதாபிமான உதவிகளை வழங்கிவரும் முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழும் நாடான இந்தோனேசியா மக்கள் வசிக்காத கலாங் தீவில் உள்ள மருத்துநிலையமொன்றை பாலஸ்தீனியர்களிற்கு சிகிச்சை வழங்குவதற்காக திருத்தவுள்ளதாக தெரிவித்துள்ளது. யுத்தத்தினால் காயமடைந்த இடிபாடுகளின் கீழ் சிக்குண்டு காயமடைந்த 2000 பாலஸ்தீனியர்களிற்கு இந்தோனேசியா மருத்துவ சிகிச்சையை வழங்கும் என அந்த நாட்டு ஜனாதிபதியின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். ஆனால் இது காசாவிலிருந்து பாலஸ்தீனியர்களை வெளியேற்றும் முயற்சியில்லை என தெரிவித்துள்ள அவர் மருத்துவசிகிச்சை முடிந்து காயங்கள் ஆறியதும் அவர்கள் மீண்டும் காசா திரும்புவார்கள் என தெரிவித்துள்ளார். எனினும் இந்த திட்டம் எப்போது ஆரம்பமாகும் என்பது குறித்து அவர் எதனையும் தெரிவிக்கவில்லை. https://www.virakesari.lk/article/222072
1 month 3 weeks ago
ராஜபக்ச - நல்லாட்சி காலத்தை போல தொடர்ந்தும் செயற்படும் பாதுகாப்பு எந்திரம்; ஊடகவியலாளர்கள், சிவில் செயற்பாட்டாளர்களை விசாரணைக்கு அழைப்பதை நிறுத்துமாறு அரசாங்கம் உத்தரவு பிறப்பிக்கவேண்டும் - அம்பிகா சற்குணநாதன் Published By: RAJEEBAN 07 AUG, 2025 | 05:03 PM மகிந்த ராஜபக்ச காலத்தில் ராஜபக்ச அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் பாதுகாப்பு எந்திரம் முறையான மற்றும் முறைசாரற்ற வழிகளில் வளர்ந்ததை நல்லாட்சி காலத்தில் அகற்றவில்லை. இதன் காரணமாகவே ஊடகவியலாளர்கள் சிவில் சமூகத்தினர் உட்பட பலரை பயங்கரவாத விசாரணை பிரிவினரும் குற்றப்புலனாய்வு பிரிவினரும் தொடர்ந்தும் விசாரணைக்கு அழைக்கின்றனர், கண்காணிக்கின்றனர், அச்சுறுத்துகின்றனர் என தெரிவித்துள்ள இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் அரசாங்கம் விசேட உத்தரவொன்றை பிறப்பிக்காவிட்டால் இது தொடரும் என எச்சரித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, ஊடகவியலாளர் குமணனை பயங்கரவாத விசாரணை பிரிவினர் விசாரணைக்காக அழைத்துள்ளமை பல வருடங்களாக இடம்பெறும் துன்புறுத்தல்கள் அச்சுறுத்தல்களின் சமீபத்தைய சம்பவமாகும். பயங்கரவாத விசாரணை பிரிவினர் குற்றப்புலனாய்வு பிரிவினர் தகவல் வழங்க கோரி அவரை பலமுறை விசாரணைக்காக அழைத்துள்ளனர், அவரை அச்சுறுத்தியுள்ளனர், அவரது வீட்டிற்கு சென்றுள்ளனர் அவரை பின்தொடர்ந்துள்ளனர். இவ்வாறான அழைப்பாணைகள் தொலைபேசி அழைப்புகள், வீடுகளிற்கு செல்லுதல் போன்றவற்றை எதிர்கொண்டவர் குமணன் மாத்திரமில்லை. பல சிவில் சமூக பிரதிநிதிகள் செயற்பாட்டாளர்கள், முன்னாள் போராளிகள், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்கள், காணமலாக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர்கள் போன்றவர்களும் இந்த நிலையை எதிர்கொண்டுள்ளனர். இன்றும் இது தொடர்வது ஆச்சரியமளிக்கும் விடயம் மாத்திரமில்லை. ஏனெனில் ராஜபக்ச அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் பாதுகாப்பு எந்திரம் முறையான மற்றும் முறைசாரற்ற வழிகளில் வளர்ந்ததை நல்லாட்சி காலத்தில் அகற்றவில்லை. தற்போது அது முன்னர் போலவே செயற்படுகின்றது. இந்த அரசாங்கம் இவற்றை நிறுத்துமாறு அவர்களிற்கு விசேட உத்தரவை பிறப்பித்தால் ஒழிய அது தொடரப்போகின்றது. விசாரணை, துன்புறுத்தலுக்குக் கொடுக்கப்படும் காரணங்கள் மற்றும் கேள்விகளில் மனித உரிமைகள் பிரச்சினைகள், வெளிநாட்டு நிதியைப் பெறுதல், இலங்கைக்கு அவப்பெயரை ஏற்படுத்துதல், தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை சர்வதேச அளவில் விளம்பரப்படுத்துதல் மற்றும் ஐ.நா மற்றும் சர்வதேச சமூகத்துடனான ஈடுபாடு ஆகியவை அடங்கும் பாதுகாப்பு நிறுவனங்கள் சட்டபூர்வமான அரசியலமைப்பு ரீதியாக பாதுகாக்கப்பட்ட நடவடிக்கைகளை உண்மையில் குற்றமாக்குகின்றன. மேலும் ஒரு சமூகத்தை இன ரீதியாக அடையாளம் காணவும் துன்புறுத்தவும் அரிதான அரசு வளங்களை வீணாக்குகின்றன - தமிழர்கள் இயல்பாகவே சந்தேகத்திற்குரியவர்களாகவும் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடியவர்களாகவும் கருதப்படுகிறார்கள். https://www.virakesari.lk/article/222069
1 month 3 weeks ago
எங்கட தேசத்திற்காக சமரசம் இன்றி நிற்கும் இளந்தாரி
1 month 3 weeks ago
சமஷ்டி முறையிலான அதிகாரப்பகிர்வை வலியுறுத்தி மன்னாரில் கவனயீர்ப்பு போராட்டம் 07 AUG, 2025 | 06:28 PM இணைந்த வடக்கு - கிழக்கு மாகாணத்திற்கு மீளப்பெற முடியாத, சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை வலியுறுத்தி இன்றைய தினம் (7) மன்னாரில் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இணைந்த வடக்கு - கிழக்கு மாகாணத்துக்கு, மீளப் பெற முடியாத வகையில், சமஸ்டி முறையிலான அதிகாரப்பகிர்வை வலியுறுத்தும் வடக்கு - கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் மூன்றாவது ஆண்டு தொடர்ச்சியும் மற்றும் அதனுடன் தொடர்புடைய கவனயீர்ப்புப் போராட்டமானது 100 நாள் செயல்முறையில் 7வது நாளான இன்று மன்னார் மாவட்டத்தில் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் அந்தோனியார் புரம் பகுதியில் நடத்தப்பட்டது. "சமஸ்டி முறையிலான அதிகாரப்பகிர்வே தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றக்கூடிய ஒரே தீர்வாகும்" என்ற ஒரே கோசத்துடன் இந்த போராட்டம் பெரும் எண்ணிக்கையான மக்களின் பங்கேற்பில் நடைபெற்றது. இதன் நோக்கமானது, தமிழர்களின் அரசியல் உரிமைகள் தொடர்பில் மறுபடியும் தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் கவனிக்கப்படவேண்டும் என்பதேயாகும். தொடர்ச்சியாக, 100 நாட்கள் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள 8 மாவட்டங்களிலும் சுழற்சி முறையில் இத்தரப்பினரால் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அவ்வரிசையில், இன்றைய போராட்டத்தின் இறுதியில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மகஜர் வாசிக்கப்பட்டது. இந்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: நிலையான அரசியல் தீர்வுக்கான 100 நாட்கள் செயல்முனைவின் 5வது வருடம் இலங்கையின் இணைந்த வடக்கு - கிழக்கு மாகாணத்துக்கு மீளப் பெறமுடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வே அவசியம். 1948க்குப் பின்னரான இலங்கையின் 75 வருடகால அரசியல் வரலாற்றில், இனத்துவ அரசியலே மேலோங்கிக் காணப்படுகிறது. இலங்கை அரசானது சிங்கள பெரும்பான்மை இனத்தைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற அரசாங்கங்களாலும் தலைவர்களாலும் ஆளப்பட்டு வருகிறது. 1908 முதற்கொண்டு ஏனைய தேசிய இனங்களான வடக்கு - கிழக்கு தமிழ் மக்கள், முஸ்லிம் மக்கள், மலையகத் தமிழ் மக்கள் ஆகியோருக்கு அரச அதிகாரத்தில் உரிய பங்கு வழங்கப்படவில்லை. அரசியல் அதிகாரம் உரிய முறையில் பகிர்ந்துகொள்ளப்படவில்லை. மாறாக, மொழி ரீதியான, மத ரீதியான அடக்குமுறைகள் மேலோங்கின. சுதந்திரம் கிடைத்து ஒரு வருடம் நிறைவடைவதற்குள் மலையகத் தமிழர்களுக்கு எதிராக 1948ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பிரஜாவுரிமைச் சட்டம் கொண்டுவரப்பட்டது. அதைத் தொடர்ந்து, வடக்கு - கிழக்கில் மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள், தமிழர்களுக்கு எதிராக 50களில் கிழக்கிலும், மலையகப் பகுதிகளிலும், தெற்கிலும் மேற்கொள்ளப்பட்ட இன வன்முறைகள், சுதந்திரத்துக்குப் பின் அபிவிருத்தி நடவடிக்கைகளில் புறக்கணிக்கப்பட்டமை என இனவாதம் விரிவாகியது. அதன் உச்சமாக 1956இல் அமுலுக்குக் கொண்டுவரப்பட்ட தனிச் சிங்களச் சட்டமானது அரச கட்டமைப்பை சிங்களமாக்கியது. இதுவே வடக்கு - கிழக்கு தமிழர்கள் தமக்கான "சமஷ்டி" முறையிலான அரசியல் அதிகாரப் பகிர்வை கோரக் காரணமானது. ஆட்சிக்கு வந்த சிங்கள அரசாங்கங்கள் அரசியல் தீர்வு பற்றி பல உறுதிமொழிகளை தமிழர்களுக்கு வழங்கினாலும், பேச்சுவார்த்தைகளை நடத்தினாலும் எதுவுமே நிறைவேற்றப்படவில்லை. மாறாக, இனவாதமும் அடக்குமுறைகளும் அதிகரித்து இறுதியில் தமிழின அழிப்பு யுத்தத்தில் நிறைவுற்றது. போருக்குப் பின்னரான காலத்தில் அரசியல் தீர்வு குறித்து அரசாங்கங்கள் அக்கறை காட்டவில்லை. திடமான அரசியல் தீர்வுக்கான உரையாடல்கள் முன்னெடுக்கப்படாமல், தமிழ் மக்களின் அரசியல் தளம் வெறுமையானது. இந்த நிலையை மாற்றி வடக்கு, கிழக்கு ரீதியாக மக்கள் மத்தியில் அரசியல் தீர்வுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்குடன் 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி "அரசியல் தீர்வுக்கான 100 நாட்கள் செயல்முனைவை" ஆரம்பித்தோம். வடக்கு, கிழக்கின் கிராமங்கள், நகரங்கள் என 100 இடங்களில் இந்த ஜனநாயக வழிப்பட்ட மக்கள் திரள் செயற்பாடு தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு 100வது நாளான 2022 நவம்பர் எட்டாம் திகதி "சமஷ்டி அரசியல் தீர்வுக்கான மக்கள் பிரகடனத்துடன்" நிறைவேறியது. தற்போது, தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் புதிய தலைமைத்துவங்களுடன் இலங்கையில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ளது. "ஜனநாயகம்", "கட்டமைப்பு மாற்றம்", "இன, மத பேதமின்மை" எனும் கொள்கைகளை முன்வைத்து இவர்கள் ஆட்சிக்கு வந்துள்ளன எனும் அரசியல் தீர்வு குறித்து தேசிய மக்கள் சக்தி அரசு மௌனம் காத்துவருகிறது. வடக்கு, கிழக்கில் இராணுவமயமாக்கம், காணி அபகரிப்பு, தொல்பொருள் திணைக்களத்தில் ஆக்கிரமிப்பு, மகாவலி குடியேற்றம் மற்றும் சிங்களமயமாக்கம், பௌத்த மயமாக்கம், தமிழ் மொழி உரிமை புறக்கணிப்பு, இனவாத அச்சுறுத்தல்கள் ஆகியன தொடர்ந்தவண்ணம் உள்ளன. இந்த அடக்குமுறைகள் அனைத்தையும் வைத்துக்கொண்டு "இன மத பேதமின்மை" குறித்து அரசு கதைப்பது நேர்மையின்மையாகும். வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் எழுபது ஆண்டுகளுக்கு மேலாக முன்வைத்து வரும் சமஷ்டி முறையிலான அரசியல் அதிகாரப் பகிர்வுக்கான கோரிக்கையை "இன, மத பேதமின்மை" எனும் கோஷத்தின் பின்னால் மறைக்கவோ மறுதலிக்கவோ முடியாது. மேலும், 2015ஆம் ஆண்டில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம் 30/1இல் இலங்கை அரசு இணைப் பங்காளராக இருந்து கையொப்பம் இட்டுள்ளது. இத்தீர்மானத்தின் ஏற்பாடு 20ஆனது அரசியல் அதிகாரப் பரவலுக்கான இலங்கையின் கடப்பாட்டை கூறுகிறது. ஆகவே. இனவாதத்தை சார்ந்திருந்த பழைய அரசுகளைப் போல் இல்லாமல் தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது, நிலையானதும் கௌரவமானதும் உரிமைகளுடன் கூடிய சமஷ்டி முறையிலான அரசியல் அதிகாரப் பகிர்வை உறுதிப்படுத்தும் தீர்வுத் திட்டத்தை உடன் முன்னெடுக்கக் கோருகிறோம். சமஷ்டி அரசியல் தீர்வு என்பது நாட்டைப் பிரிப்பது அல்ல. அது மிகவும் உயரிய ஜனநாயக அரசியல் அமைப்பின் வெளிப்பாடாகும். போருக்குப் பின் ஜனநாயக அரசியலை முன்னெடுத்துவரும் நாடுகள், எமது அண்டை நாடான நேபாளம் அடங்கலாக, சமஷ்டி முறைமையையே பொருத்தமானதாக ஏற்று அமுல்படுத்துகின்றன. எழுபது வருடங்களுக்கு மேற்பட்ட இன அடக்குமுறையையும் முப்பது வருடகால இன அழிப்பு யுத்தத்தையும் எதிர்கொண்ட இலங்கையின் வடக்கு, கிழக்கு மக்களுக்கு பொருத்தமான அதிகாரப் பகிர்வு இணைந்த வடக்கு, கிழக்கு மாகாணத்துக்கு மீளப் பெறமுடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வாகும். இதுவே வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் திடமான அரசியல் அபிலாசையாகும் என அந்த மகஜரில் குறிப்பிடப்பட்டிருந்தது. https://www.virakesari.lk/article/222073
Checked
Mon, 09/29/2025 - 06:46
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed