புதிய பதிவுகள்2

தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனை வழிநின்று நாசகாரச் சக்திகளை விரட்டியடிப்போம்!

1 month 3 weeks ago
இன்று இரண்டு காணெளி பார்த்தேன் முழு காணொளியும் பார்க்க நேரம் இல்லை நண்பர்கள் குறிப்பிட்ட இடங்களை பார்த்தேன் புனர்வாழ்வளிக்கபட்ட போராளி என்று ஒருவர் பேசினார் இனி ஒரு போர் தொடங்குமாய் இருந்தால் அது இலங்கை அரசுடன் இல்லை .அஞ்சலி செலுத்திய கள்ளர்களுடன் அந்த போர் இருக்கும் என்றார் மற்றவர் பேசினார் ஜேவிபி அரசு நல்லவற்ற தமிழ் மக்களுக்கு செய்ய தொடங்கி உள்ளது இவற்றை குழப்பும் நோக்கத்தில் கொண்டுவரபட்டதே இந்த அஞ்சலி செலுத்துகின்ற நிகழ்வு.

இலங்கையில் நாளொன்றுக்கு 8 பேர் தற்கொலை?

1 month 3 weeks ago
இலங்கையில் நாளொன்றுக்கு 8 பேர் தற்கொலை? adminAugust 7, 2025 பல்வேறு சமூகக் காரணிகளால் பாடசாலை மாணவர்கள் தற்போது ஓரளவு மன அழுத்தத்தை அனுபவித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த வருடம் நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பில் இந்த விடயம் தெரியவந்ததாக சுகாதார அமைச்சின் உளநலப் பணிப்பாளர் காரியாலயத்தின் பதில் பணிப்பாளர் சமூக மருத்துவ நிபுணர் வைத்தியர் லக்மினி மாகொடரத்ன தெரிவித்தார். சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய மருத்துவ நிபுணர் லக்மினி மாகொடரத்ன கருத்து தெரிவிக்கையில், 2024 ஆம் ஆண்டில் இலங்கையில் பாடசாலை சுகாதார கணக்கெடுப்பு நடத்தப்பட்டது, எங்கள் குழந்தைகளின் தரவுகளைப் பார்த்தபோது, 22.4% குழந்தைகள் தனிமையால் பாதிக்கப்பட்டனர். 13-17 வயதுக்கு இடைப்பட்ட பாடசாலை மாணவர்களில் 11.9% பேர் ஏதோ ஒன்றைப் பற்றி கவலைப்பட்டு இரவில் தூங்குவதில் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். சுமார் 18% பேரிடம் மனச்சோர்வின் அறிகுறிகள் தென்பட்டது. 7.5% பேருக்கு நெருங்கிய நண்பர்கள் இல்லை. 25% மாணவர்கள் தங்கள் மனதில் உள்ள ஒரு பிரச்சினையைப் பற்றிப் பேச யாராவது இருப்பதாகக் கூறினர். அதாவது 75% மாணவர்களுக்கு நெருக்கமானவர்கள் யாரும் இல்லை. எனவே இலங்கையில் இது நடக்குமா என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. மாணவர்கள் அதிக மன அழுத்தத்தில் இருக்கிறார்கள். அதே நேரத்தில், பெரியவர்கள் பல்வேறு மன அழுத்தத்தில் இருக்க முடியும். பல்வேறு சமூகப் பிரச்சினைகளும் மன அழுத்தமும் இவர்களையும் பாதிக்கலாம். இதேவேளை, நாட்டில் ஒவ்வொரு நாளும் சுமார் 8 தற்கொலைகள் பதிவாவதாக தேசிய மனநல நிறுவனத்தின் மனநல வைத்தியர் சஜீவன அமரசிங்க தெரிவித்தார். 1996 ஆம் ஆண்டில், தற்கொலைகளின் அடிப்படையில் உலகில் இரண்டாவது இடத்தில் இருந்தோம், ஒரு இலட்சத்திற்கு 47 பேர். அந்த காலகட்டத்தில் ஜனாதிபதி ஆணைக்குழுவுடன் எடுக்கப்பட்ட முடிவுகளால் நாங்கள் மிகவும் வீழ்ச்சியடைந்தோம். இப்போது அது ஒரு லட்சத்திற்கு 15ஆக மாறியுள்ளது. வருடத்திற்கு 3,500 பேர். கடந்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் இது அதிகரிக்கவில்லை. நாளொன்றுக்கு சுமார் 8 தற்கொலைகள் நடக்கின்றன. பிரபலமான மரணங்கள் மட்டுமே ஊடகங்களுக்குச் செல்கின்றன. இன்னும் பல தற்கொலைகள் உள்ளன. தற்கொலைகளில் குறிப்பிடத்தக்க மாற்றம் எதுவும் இல்லை என்றாலும், இந்த சர்ச்சைக்குரிய தற்கொலைகள் இப்போதெல்லாம் நடந்து வருகின்றன. ஆனால் ஊடகங்கள் கடந்த காலங்களைப் போல இதுபோன்ற விடயங்களைப் பெரிதாக காண்பிப்பதில்லை. அது ஒரு பெரிய முன்னேற்றம். https://globaltamilnews.net/2025/218936/

இளைஞனை நிர்வாணமாக்கி தாக்கிய சம்பவம் - 08 மாத காலம் ஆகியும் பிரதான சந்தேக நபரை கைது செய்யாத காவற்துறை!

1 month 3 weeks ago
இளைஞனை நிர்வாணமாக்கி தாக்கிய சம்பவம் - 08 மாத காலம் ஆகியும் பிரதான சந்தேக நபரை கைது செய்யாத காவற்துறை! adminAugust 7, 2025 யாழ்ப்பாணத்தில் இளைஞன் ஒருவரை நிர்வாணமாக்கி , தாயின் கண் முன்னால் கட்டி வைத்து தாக்கிய கும்பலின் பிரதான சந்தேக நபரை 08 மாத கால பகுதி கடந்தும் பொலிஸார் கைது செய்யாது அசமந்தமாக செயற்படுவதாக பாதிக்கப்பட்ட தரப்பினரின் குற்றம் சாட்டியுள்ளனர். பிரதான சந்தேக நபருக்கும் வடக்கில் உள்ள காவற்துறை உயர் அதிகாரிகளுக்கும் இடையில் மிக நெருங்கிய தொடர்புகள் காணப்படுவதனால் , காவற்துறை யினர் அந்நபரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் , சில காவற்துறை உத்தியோகஸ்தர்கள் அந்நபரை கைது செய்ய முயற்சித்த வேளையிலும் , உயர் அதிகாரிகளின் அழுத்தம் காரணமாக அந்நபரை கைது செய்யவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் , தமது நலன் சார்ந்து மூத்த சட்டத்தரணி ஒருவரை நியமித்து, அவரூடாக யாழ் . நீதவான் நீதிமன்றில் குறித்த வழக்கினை நகர்த்தல் பத்திரம் ஊடாக விசாரணைக்கு எடுத்து , காவற்துறையினர் பிரதான சந்தேக நபரை 08 மாத காலம் கடந்து கைது செய்யாது , அசமந்தமாக செயற்படுவதாக மன்றின் கவனத்திற்கு கொண்டு வந்தனர். அதனை அடுத்து குறித்த சந்தேகநபரை இதுவரையான கால பகுதி வரையில் கைது செய்யாதமைக்கான காரணம் தொடர்பில் மன்றிற்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிமன்று காவற்துறையிருக்கு கட்டளையிட்டுள்ளது. பின்னணி இரு குடும்பங்களுக்கு இடையிலான பிரச்சனையில் கடந்த ஜனவரி மாதம் 20ஆம் திகதி இணுவில் பகுதியை சேர்ந்த இளைஞனை அவரது தாய்க்கு முன்னால் ஆடைகளை களைந்து நிர்வாணமாக்கி , சித்திரவதை புரிந்து கட்டி வைத்து மிக மோசமான முறையில் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர். சித்திரவதை மற்றும் தாக்குதல்களை மேற்கொள்ளும் போது , தாக்குதலாளிகள் அவற்றை கையடக்க தொலைபேசியில் வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுத்துள்ளனர். சம்பவம் தொடர்பில் கோப்பாய் காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் சுமார் 15 வரையில் காவற்துறையினர் அடையாளம் கண்டு கொண்டனர். அவர்களில் ஒரு சிலரை மாத்திரம் கைது செய்து வழக்கு விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர். சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட ஏனைய சந்தேகநபர்களை காவற்துறையினர் 08 மாத கால பகுதி கடந்தும் இதுவரையில் கைது செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2025/218934/

37ஆவது பொலிஸ் மா அதிபரைத் தெரிவு செய்வதற்காக இன்று கூடும் அரசியலமைப்பு பேரவை! 37ஆவது பொலிஸ் மா அதிபரைத் தெரிவு செய்வதற்காக இன்று கூடும் அரசியலமைப்பு பேரவை!

1 month 3 weeks ago
37ஆவது பொலிஸ் மா அதிபரைத் தெரிவு செய்வதற்காக இன்று கூடும் அரசியலமைப்பு பேரவை! நாட்டின் 37ஆவது பொலிஸ் மா அதிபரைத் தெரிவு செய்வதற்காக அரசியலமைப்பு பேரவை இன்று கூடவுள்ளது. இதன்படி, அரசியலமைப்பு பேரவை இன்று பிற்பகல் 1.30 மணியளவில் நாடாளுமன்ற வளாகத்தில் கூடவுள்ளது. பொலிஸ் மா அதிபர் பதவியிலிருந்து தேஷபந்து தென்னகோனை நீக்குவதற்காக, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பாக சபாநாயகர் அனுப்பியுள்ள கடிதத்திற்கு ஜனாதிபதி அனுமதி வழங்கியிருந்தார். அதன்படி, புதிய பொலிஸ் மா அதிபர் பதவிக்கான பெயரை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அரசியலமைப்பு பேரவைக்குப் பரிந்துரைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தற்போதைய பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய, புதிய பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்படுவதற்கான சாத்தியம் அதிகளவில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1442186

7 வருடங்களுக்குப் பின்னர் சீனாவுக்கு இந்தியப் பிரதமர் மோடி விஜயம்!

1 month 3 weeks ago
7 வருடங்களுக்குப் பின்னர் சீனாவுக்கு இந்தியப் பிரதமர் மோடி விஜயம்! இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஏழு வருடங்களுக்குப் பின்னர் சீனாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 2025ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காகவே மோடி இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. சீனாவின் குவாங்சௌ( Guangzhou) நகரத்தில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் பல்வேறு ஆசிய நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் விஜயம் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான உறவுகளில் புதிய ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக 2020ஆம் ஆண்டு லடாக் எல்லைப் பகுதியில் இரு நாடுகளுக்கும் இடையே இடம்பெற்ற கோரத்தனமான இராணுவ மோதல் இருநாட்டு உறவுகளை கடுமையாகப் பாதித்திருந்தது. இந்நிலையில் பிரதமர் மோடியில் சீன விஜயம் இந்திய -சீன உறவுகளை மீளாய்வு செய்யும் எனவும் எதிர்கால ஒத்துழைப்புகளுக்கு வழிவகுக்கும் எனவும், மற்றும் பாதுகாப்பு, வர்த்தகம், பிராந்திய நிலைமை தொடர்பான விவாதங்களுக்கு ஒரு புதிய திருப்பு முனையாக அமையும் எனவும் அரசியல் விமர்சகர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். எவ்வாறு இருப்பினும் மோடியின் சீன விஜயம் குறித்து இந்திய அரசு அதிகாரப்பூர்வமாக எவ்விதமான அறிவிப்பும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1442200

கானாவில் ஹெலிகொப்டர் விபத்து: பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர்கள் உட்பட 8 பேர் உயிரிழப்பு!

1 month 3 weeks ago
கானாவில் ஹெலிகொப்டர் விபத்து: பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர்கள் உட்பட 8 பேர் உயிரிழப்பு! கானாவில் (Ghana) நேற்று இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில், அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் எட்வர்ட் ஓமனே போமா (Edward Omane Boamah) மற்றும் சுற்றுச்சூழல், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் இப்ராஹிம் முர்தலா முகமது (Ibrahim Murtala Muhammed )உட்பட எட்டு பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. கானா விமானப்படைக்கு சொந்தமான Z-9 வகை ஹெலிகொப்டர், அசாந்தி( Ashanti) மாகாணத்தின் ஆதான்சி பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. ஹெலிகொப்டர் அக்ராவிலிருந்து( Accra) ஒபுவாசி (Obuasi) நோக்கி பயணித்துக் கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. விபத்தில் உயிரிழந்தோர் அனைவரும் நாட்டிற்காக பணியாற்றிய அமைச்சர்கள் மற்றும் படைவீரர்கள் எனக் கூறப்படும் நிலையில், ஜனாதிபதி மற்றும் அரசாங்கம், இறந்தோரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர். விபத்துக்கான காரணம் தொடர்பில் அதிகாரிகள் உடனடியாக எந்தவொரு விளக்கத்தையும் வழங்கவில்லை. இருப்பினும், குறித்த ஹெலிகொப்டர் விபத்து இடம் பெறுவதற்கு முன்னர் ரேடார் தொடர்பு துண்டிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1442204

யாழ். செம்மணியில் 3 அடி ஆழத்தில் மனித எலும்புக்கூடு மீட்பு ; பாரிய புதைகுழியாக இருக்கலாமென அச்சம்

1 month 3 weeks ago
செம்மணி புதைகுழி: இதுவரை 147 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்; 133 அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது - சட்டத்தரணி வி.எஸ்.நிரைஞ்சன் Published By: VISHNU 06 AUG, 2025 | 08:09 PM செம்மணி மனித புதைகுழியில் 147 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டு இலக்கமிடப்பட்டதுடன் 133 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டது என சட்டத்தரணி வி.எஸ்.நிரைஞ்சன் தெரிவித்தார். செம்மணி அகழ்வுப்பணிகள் இரண்டாம் கட்டத்தின் 32 ஆவது நாள் யாழ்ப்பாணம் நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜாவின் மேற்பார்வையில் புதன்கிழமை (6) முன்னெடுக்கப்பட்டது. அகழ்வு பணிக்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே சட்டத்தரணி வி.எஸ்.நிரைஞ்சன் இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், புதிதாக ஆறு மனித எலும்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டு இலக்கமிடப்பட்டுள்ளது. மூன்று மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டு நீதிமன்ற கட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளது. 147 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டு இலக்கமிடப்பட்டதுடன் 133 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டு நீதிமன்ற கட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளது. எலும்புக்கூடொன்று நேற்று முன்தினம் செருப்புடன் அடையாளம் காணப்பட்ட நிலையில் குறித்த எலும்புக்கூடு அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன், இடுப்பில் தாயம் ஒன்றுடன் எலும்புக்கூடொன்று அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. அதேவேளை செருப்பு, தாயம், காசு உள்ளிட்ட சான்று பொருட்கள் புதைகுழிகளில் இருந்து மீட்கப்பட்ட நிலையில் அவை நீதிமன்ற கட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளன. இன்றுடன் தற்காலிகமாக அகழ்வு பணிகள் நிறுத்தப்படுவதால் அடையாளம் காணப்பட்ட மேலும் எழு எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார். https://www.virakesari.lk/article/221997

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்

1 month 3 weeks ago
80 அடி இந்திய இழுவைப் படகுடன் 10 மீனவர்கள் கைது Published By: VISHNU 06 AUG, 2025 | 08:03 PM இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து, தடைசெய்யப்பட்ட இழுவை வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 10 பேரையும், அவர்கள் வந்த படகையும் இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. 80 அடிக்கும் அதிகமான நீளம் கொண்ட இந்த இழுவைப் படகு தமிழ்நாட்டைச் சேர்ந்ததாகும். இது பத்தலன்குண்டு பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டு, பின்னர் டிக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில், கைது செய்யப்பட்ட படகில் நவீன தொழில்நுட்ப சாதனங்கள், GPS வரைபடங்கள் மற்றும் மீன்களைக் கண்டறியும் கருவிகள் இருந்ததாகவும், இதன் மூலம் இந்த மீனவர்கள் வேண்டுமென்றே இலங்கைக் கடற்பரப்பிற்குள் நுழைந்திருப்பது உறுதியாகியுள்ளதாகவும் தெரிவித்தார். இலங்கையில் இழுவை வலை மீன்பிடித் தொழில் சட்டத்தால் தடைசெய்யப்பட்டுள்ளதுடன், இது உள்ளூர் மீனவ சமூகத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. உள்ளூர் மீனவர்கள் தமது வாழ்வாதாரத் தொழிலை மேற்கொள்ளும் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து இவ்வாறான சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவது உள்ளூர் மீனவர்களின் கடும் எதிர்ப்புக்கு காரணமாக அமைந்துள்ளது. கைது செய்யப்பட்ட மீனவர்கள் மருத்துவப் பரிசோதனை மற்றும் ஏனைய சட்ட நடைமுறைகளுக்குப் பின்னர், கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். https://www.virakesari.lk/article/221995

சம்பூர் கடற்கரையோர பகுதியில் மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு

1 month 3 weeks ago
சம்பூரில் மனித எலும்பு எச்சங்கள் - அகழ்வுப் பணிகளைத் தொடருமாறு நீதிமன்றம் உத்தரவு 06 AUG, 2025 | 08:20 PM மனித எலும்பு எச்சங்கள் காணப்பட்ட சம்பூர் காணியில் மேலும் மனித எலும்புக்கூடுகள், மற்றும் எச்சங்கள் உள்ளனவா என்பதை அறிய, கிழக்கு பிராந்திய இராணுவ கட்டளைத்தளபதியின் ஆலோசனையைப் பெற்று இராணுவ பாதுகாப்பு ஆளணியின் உதவியுடன் முறைப்படி அகழ்வு நடத்தப்பட வேண்டும் என்று மூதூர் நீதவான் தஸ்னீம் பெளஸான் இன்று (6) உத்தரவிட்டார். மேலும், இது தொடர்பான வழக்கு விசாரணையை எதிர்வரும் 26ஆம் திகதி எடுத்துக்கொள்வதாகவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது. அத்துடன், இதுவரை அங்கு கண்டெடுக்கப்பட்ட மூன்று எலும்புக்கூடுகளில் ஒன்று, 25 வயதிற்கு குறைந்த ஆண் ஒருவருடையது; மற்றையது, 25 - 40 வயதுக்குட்பட்ட ஒருவருடையது; அடுத்தது 40 - 60 வயதுக்குட்பட்ட ஒருவருடையது என்றும் இன்றைய வழக்கு மாநாட்டின்போது மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி அறிக்கை முன்வைத்தார். அதனைத் தொடர்ந்து பேசிய சட்ட வைத்திய அதிகாரி, இந்த இடம் மயானம் என்பதற்கு இதுவரை ஆதாரங்கள் முன்வைக்கப்படவில்லை. மேலும் ஒன்றுக்கு மேற்பட்ட எலும்பு எச்சங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த எச்சங்களுக்குரியவர்கள் இயற்கையாக மரணம் அடைந்தார்களா?அல்லது ஏதேனும் குற்றச்செயல்கள் மூலம் மரணம் நிகழ்ந்ததா? என்பதை கண்டறிய மேலும் ஆய்வுகள் செய்யப்பட வேண்டும் என்று கூறினார். இக்காணி அரச காணியாக உள்ளபோதும் இங்கு ஒரு மயானம் இருந்ததற்குரிய ஆதாரங்கள் ஏதும் இல்லை என்று இந்த வழக்கு மாநாட்டில் தொல்பொருள் திணைக்களம், பிரதேச செயலக செயலாளர் மற்றும் பிரதேச சபை செயலாளர் ஆகியோரால் அறிக்கை முன்வைக்கப்பட்டது. இந்த அறிக்கைகளை ஆராய்ந்த பின்னரே நீதிமன்று அகழ்வு நடத்தப்பட வேண்டும் என்ற உத்தரவை பிறப்பித்துள்ளது. இன்றைய வழக்கு மாநாட்டில் மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி, தொல்பொருள் திணைக்கள அதிகாரி, புவிச்சரிதவியல் துறை அதிகாரி, பொலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவினர், தேசிய கண்ணிவெடி அகற்றும் நிறுவனத்தினர், மெக் மிதி வெடி அகற்றும் நிறுவனத்தினர், பிரதேச செயலாளர், பிரதேச சபைச் செயலாளர், காணாமல் ஆக்கப்பட்டோர் தேசிய செயலகத்தின் சட்டத்தரணி, பிரதேச காணி உத்தியோகத்தர், பிரிவிற்கான கிராம சேவை அலுவலர் ஆகியோர் கலந்துகொண்டனர். கடந்த ஜூலை 19ஆம் திகதி மிதிவெடி அகற்றும் பணிகள் அப்பகுதியில் செயற்படுத்தப்பட்டபோது, மனித மண்டையோடு, கால் எலும்பு என்பன கண்டுபிடிக்கப்பட்டன. இதனையடுத்து, கடந்த 23ஆம் திகதி சம்பவ இடத்தை மூதூர் நீதிவான் நேரில் சென்று பார்வையிட்டார். அதனையடுத்து, கடந்த 30ஆம் திகதி இவ்விடயம் தொடர்பில் மூதூர் நீதிமன்றில் விசாரணைகள் நடைபெற்றது. அன்றைய தினம் நீதிபதி விடுத்த அறிவிப்பின்படி, புதன்கிழமை (6) நீதிமன்ற கூட்டம் நீதிபதி தலைமையில் நடைபெறும் எனவும், இக்கூட்டத்தின் பின்னர் இந்த மனித எச்சங்கள் தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/221981

நிசாந்த உலுகேதன்ன பாரிய மனித உரிமை மீறல்களிற்கு காரணமாவர் - சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம்

1 month 3 weeks ago
நிசாந்த உலுகேதன்ன கடற்படை புலனாய்வு பிரிவிற்கு பொறுப்பாகயிருந்த காலத்தில் திருகோணமலை தளத்திற்குள் சுதந்திரமாக நடமாடிய வெள்ளை வான்கள் - சித்திரவதைகள் - சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் Published By: RAJEEBAN 06 AUG, 2025 | 05:36 PM இலங்கையின் நீதிமன்ற ஆவணங்களுடன் வெளிநாடுகளில் உயிர்பிழைத்து வாழும் தமிழர்களின் வாக்குமூலங்களையும் கன்சைட்டில் பணியாற்றிய சிங்கள படையினரினதும் கடற்படையினரும் ஆதாரங்களையும் கண்ணால் பார்த்தவர்களின் தகவல்களையும் அடிப்படையாக வைத்து இலங்கையில் சிஐடியினரால் கைதுசெய்யப்பட்டுள்ள முன்னாள் கடற்படை தளபதி நிசாந்த உலுகேதன்ன இலங்கையில் தமிழர்கள், சிங்களவர்கள், முஸ்லீம்களிற்கு எதிராக இழைக்கப்பட்ட பாரிய மனித உரிமை மீறல்களிற்கு காரணமாவர்களில் ஒருவர் என்ற முடிவிற்கு நாங்கள் வந்தோம் என சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் தெரிவித்துள்ளது. நிசாந்த உலுகேதன்ன குறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள நீண்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, நிசாந்த உலுகேதென்ன 2010 ஒக்டோபர் மாதம் முதல் டிசம்பர் 2013 வரை கடற்படையின் புலனாய்வு பிரிவின் தலைவராக பணியாற்றினார். 2025 ஜூலை மாதம் இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி நிசாந்த உலுகேதென்ன இலங்கையின் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டார். ஆள்கடத்தல், சித்திரவதை, பலவந்தமாக காணாமல் போகச்செய்தல் மற்றும் நாட்டின் மிக பாதுகாப்பான கடற்படை தளமான திருகோணமலை கடற்படை தளத்தில் சட்டவிரோத படுகொலைகள் ஆகியவை தொடர்பான விசாரணைகளை தொடர்ந்து இவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்டவர்கள் என தெரிவிக்கப்படுபவர்கள் திருகோணமலை கடற்படை தளத்தில் நிலத்தின் கீழ் அமைக்கப்பட்டிருந்த கட்டிடத்திற்குள் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். (இது கன்சைட் என அழைக்கப்பட்டது) இவர் கைதுசெய்யப்பட்ட பின்னர் வெளியான நம்பகதன்மை மிக்க அறிக்கையிடல்களின் படி கன்சைட் எனப்படுவது தடுத்துவைப்பதற்காக பயன்படுத்தப்பட்ட சட்டவிரோதமான அனுமதியளிக்கப்படாத பகுதி என்பதை முன்னாள் கடற்படை தளபதி ஏற்றுக்கொண்டுள்ளார். கன்சைட் என்ற நிலத்தின் கீழ் அமைந்துள்ள சட்டவிரோத சித்திரவதை கூடம் ஒன்று உள்ளது என்பதை 2015 முதன்முதலில் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் அம்பலப்படுத்தியிருந்தது. இலங்கையின் நீதிமன்ற ஆவணங்களுடன் வெளிநாடுகளில் உயிர்பிழைத்து வாழும் தமிழர்களின் வாக்குமூலங்களையும் கன்சைட்டில் பணியாற்றிய சிங்கள படையினரினதும் கடற்படையினரினதும் ஆதாரங்களையும் கண்ணால் பார்த்தவர்களின் தகவல்களையும் அடிப்படையாக வைத்து இலங்கையில் தமிழர்கள் சிங்களவர்கள் முஸ்லீம்களிற்கு எதிராக இழைக்கப்பட்ட பாரிய மனித உரிமை மீறல்களிற்கு காரணமாவர்களில் நிசாந்த உலுகேதென்னவும் ஒருவர் என்ற முடிவிற்கு நாங்கள் வந்தோம். மூன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக தன்னிச்சையாகவும் சட்டவிரோதமாகவும் தடுத்து வைக்கப்பட்டு கடுமையான சித்திரவதை மற்றும் பாலியல் வன்முறை உள்ளிட்ட பிற வகையான கொடூரமான மனிதாபிமானமற்ற அல்லது இழிவான சித்திரவதைகளிற்கு உட்படுத்தப்பட்ட உயிர் பிழைத்த தமிழர்களிடமிருந்து விரிவான தகவல்களின் அடிப்படையில் பெறப்பட்டவிரிவான தகவல்களின் அடிப்படையில் சர்வதேசஉண்மை மற்றும் நீதிக்கான திட்டம் இந்த நிலத்தடி சட்டவிரோத தடுப்பு மற்றும் சித்திரவதை கூடம் இருப்பதை முதன்முதலில் 2015 இல் வெளிப்படுத்தியது. பின்னர் அவை 2015 நவம்பர் மாதம் அந்த இடத்திற்கு விஜயம் செய்த பலவந்தமாக காணாமல் போதல் தொடர்பான ஐக்கிய நாடுகளின் பணிக்குழுவால் சரிபார்க்கப்பட்டன. சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்திடம் அதன் செயல்பாட்டின் போது குறைந்தது 75 - 100 நபர்கள் சட்டவிரோதமாக "கன்சைட் தளத்தில்" தடுத்து வைக்கப்பட்டதாக மதிப்பிட்டுள்ளது. இது 2005 - 2006 முதல் 2012 வரை இடம்பெற்றதாக நம்பப்படுகிறது. இங்கு தடுத்துவைக்கப்பட்டிருந்தவர்கள் மிகமோசமான மனிதாபிமானமற்ற நிலையில் ஒழுங்கமைக்கப்பட்ட விதத்தில் சித்திரவதைகள் மற்றும் பாலியல் வன்முறைகளிற்குள்ளாக்கப்பட்டனர். அக்டோபர் 2019 இல் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கானதிட்டம் இலங்கை இலங்கை கடற்படையின் "கன் சைட்" எனப்படும் ரகசிய தடுப்பு முகாமில் சித்திரவதை, கட்டாயமாக காணாமல் போதல் மற்றும் பிற கடுமையான மீறல்கள் உள்ளிட்ட கடுமையான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஒரு விரிவான அறிக்கையை வெளியிட்டது. இந்த மீறல்கள் உள்நாட்டுப் போரின் போதும் அதற்குப் பின்னரும் நடந்ததாகக் கூறப்படுகிறது. இந்த அறிக்கை 2008 - 2009ல் ("திருகோணமலை 11") திருகோணமலை கடற்படைத் தளத்தில் 11 பேர் காணாமல் போனது தொடர்பான இலங்கை காவல்துறையின் கடந்த கால விசாரணையிலிருந்து ஆவண ஆதாரங்களையும் 2008 முதல் 2012 வரை இலங்கை கடற்படையின் பரந்த முறையான மீறல்களைப் பற்றிப் பேசிய நேரில் கண்ட சாட்சிகள் மற்றும் நேரில் கண்ட சாட்சிகளின் சாட்சியங்களையும் அடிப்படையாகக் கொண்டது. குறிப்பாக 2008 ஆகஸ்ட் 25 முதல் 2009 பிப்ரவரி வரை கொழும்பில் பதினொரு இளைஞர்கள் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பான “திருகோணமலை ” விசாரணையை சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் இலங்கை ஆய்வு செய்தது. பாதிக்கப்பட்டவர்கள் முதலில் கொழும்பில் உள்ள கடற்படை தலைமையகத்தில் தன்னிச்சையாகவும் சட்டவிரோதமாகவும் தடுத்து வைக்கப்பட்டனர். பின்னர் மார்ச் 2009 இல் “கன்சைட்டிற்கு” மாற்றப்பட்டனர். இந்தக் குழுவில் ஆறு தமிழர்கள் அடங்குவர், இருவர் சிங்களவர்கள் மற்றும் மூவர் முஸ்லிம்கள். இந்த குறிப்பிட்ட வழக்கைத் தாண்டி புலிகள் மற்றும் பயங்கரவாதத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் அதே இடத்தில் சட்டவிரோதமாக தடுத்துவைக்கப்பட்டிருந்ததை - பெரும்பாலும் தமிழர்களை - சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் ஆவணப்படுத்தியது. அவர்களில் பலர் இன்னும் உயிருடன் உள்ளனர், மற்றும் சித்திரவதை மற்றும் பாலியல் வன்முறை உட்பட அவர்கள் அனுபவித்த கடுமையான மனித உரிமை மீறல்களுக்கு சாட்சிகளாக இருக்கலாம். அக்டோபர் 2010 முதல் டிசம்பர் 2013 வரை கடற்படை புலனாய்வு இயக்குநராகவும் கடற்படை ஆயுத இயக்குநராகவும் நிஷாந்த உலுகேதென்ன பணியாற்றினார். 2008 முதல் 2012 நடுப்பகுதி வரையிலான காலகட்டத்துடன் நேரடியாக ஒன்றுடன் ஒன்று இணைந்த ஒரு காலம் கடற்படை உளவுத்துறையால் ஏராளமான பாதிக்கப்பட்டவர்கள் உயிர் பிழைத்தவர்கள் "கன் சைட்" இல் தடுத்து வைக்கப்பட்ட காலகட்டம். நிசாந்த உலுகேதென்னவின் கட்டுப்பாட்டின் கீழ் காணப்பட்ட கடற்படை பிரிவான கடற்படை புலனாய்வு பிரிவினால் பாதிக்கப்பட்ட பெருமளவானவர்களும் உயிர் பிழைத்தவர்களும் கன்சைட்டில் தடுத்துவைக்கப்பட்டிருந்தனர். சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்திடம் வாக்குமூலம் வழங்கியவர்கள் மற்றும் நீதிமன்ற ஆவணங்களின்படி மிகவும் கடுமையான பாதுகாப்புடன் காணப்பட்ட கடற்படை தளத்திற்குள் கடற்படையினர் சுதந்திரமாக சென்று வந்தனர். கடற்படை புலனாய்வு பிரிவினரின் வாகனங்களிற்கு சோதனையிலிருந்து விலக்களிக்கப்பட்டது, அவர்களின் வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்படவில்லை, ஆனால் ஏனைய அனைத்து நடவடிக்கைகளும் துல்லியமாக பதிவு செய்யப்பட்டன. சட்டவிரோத கடத்தல்கள் தன்னிச்சையாக தடுத்துவைக்கப்படுதல், சித்திரவதை மற்றும் பலவந்தமாக காணாமல்போதல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களை வெள்ளை வான்கள் தளத்திற்குள் இலகுவாக கொண்டு போவதை சுலபமாக்கியது. நாட்டின் கடும் பாதுகாப்பு மிக்க தளத்திலிற்குள் இந்த வெள்ளை வான்கள் எந்த வித சோதனையும் இன்றி சென்று வந்தன. கடற்படை புலனாய்வுத் துறையில் அவரது உயர் பதவி திருகோணமலை கடற்படைத் தளத்திற்கான மிகவும் இறுக்கமான பாதுகாப்பு நெறிமுறைகள் மற்றும் சிஐடியில் அவரது சொந்த அனுமதிகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு நிஷாந்த உலுகேதென்ன தனது கட்டளையின் கீழ் நீண்டகாலமாகவும் முறையாகவும் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்து முழுமையாக அறிந்திருந்தார் ஆனால் பொறுப்பானவர்களைத் தண்டிக்க மற்றும் மேலும் மீறல்களைத் தடுக்க பயனுள்ள நடவடிக்கைகளை எடுக்கத் தவறிவிட்டார். மீறல்களுக்குப் பொறுப்பேற்காமல் அவர் மே 2019 இல் கடற்படைத் தலைமைத் தளபதியாகவும் ஜூலை 2020 இல் கடற்படைத் தளபதியாகவும் நியமிக்கப்பட்டார். இறுதியில் டிசம்பர் 2022 இல் ஏராளமான கௌரவங்களுடன் ஓய்வு பெற்றார். 17 அக்டோபர் 2023 இல் அவர் கியூபாவிற்கான இலங்கைத் தூதராக நியமிக்கப்பட்டார். 18 நவம்பர் 2024 இல் அவர் அரசாங்கத்தால் திரும்ப அழைக்கப்பட்டதாக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. https://www.virakesari.lk/article/221977

இதயங்களின் மொழி

1 month 3 weeks ago
penetration test மாதிரி முதல் மூன்றைத் திறந்தால் தான் மற்றது தெரிய வரும் போல. எங்கடை batch இலையே 5,6 பேருக்கு மாரடைப்பு வந்திட்டுது. சிந்திக்க வைக்கும் நிகழ்வுகள்.

சிறுகதை - 184 / 'குண்டுகளின் மத்தியில் ஒரு காதல்'

1 month 3 weeks ago
சிறுகதை - 184 / 'குண்டுகளின் மத்தியில் ஒரு காதல்' இலங்கை உள்நாட்டுப் போரின் இறுதி மாதங்களில், முல்லைத்தீவு ஒரு சிதைந்த நிலமாக, ஆனால் இன்னும் நம்பிக்கையின் கல்லறையாக இருந்தது. பசி குண்டுகளை விட சத்தமாக அலறியது. என்றாலும் சரியான உணவின்றி, ஆனால் இன்னும் நம்பிக்கையில் உயிர் வாழும் மக்கள் அங்கு நிறைந்து இருந்தனர். மருந்தின்றி துடிக்கும் குழந்தைகள், குண்டுகளின் வெடிப்பினால் ஏற்பட்ட நஞ்சு கலந்த காற்றினாலும் மக்களுக்கு பயம் கலந்து இருந்தது. வீடுகளும் நிலங்களும் எரிந்தன. குழந்தைகள் பால் இல்லாமல் அழுதனர். வயதான பெண்கள் மருந்து இல்லாமல் மயக்கமடைந்தனர். மௌனம் கூட பயமாகத் தோன்றியது. அங்கே விழுந்து கிடந்த பிணங்களை அகற்றவோ அல்லது யார் எவர் என்று அடையாளம் காணவோ அல்லது எத்தனை என்று எண்ணுவதற்கோ அங்கு ஒருவரையும் காண முடியவில்லை. இரதம் நீர்போல் ஓடிக்கொண்டு இருந்தது. பொதுமக்கள் பதுங்கு குழிகளில் ஒழிந்து, வேகவைத்த இலைகளையும் பிரார்த்தனைகளையும் பகிர்ந்து கொண்டனர். அப்படியான அந்தச் சிதைந்த மண்ணில், ஒரு இளம் பெண் போராளி – மதி – படுகாயமடைந்து, ஒரு தற்காலிக மருத்துவமனைக்குள் தடுமாறி நுழைந்தாள். அவள் முகத்தில் சோர்வு தெரிந்தது, ஆனால் அவள் கண்கள் அமைதியான உறுதியைக் கொண்டிருந்தன. அங்கு 28 வயதான டாக்டர் கஜன், எஞ்சிய மருந்துகளால் உயிர்களை காக்க முயன்று கொண்டு இருந்தார். அவர் சோர்வடைந்த மனதுடன் கைகளை பிசைந்து கொண்டு உட்கார்ந்து இருந்த பொழுது, எந்த வித சலனமும் இன்றி மெதுவாக அடிமேல் அடி வைத்து வந்த மதியின் கோலத்தைக் கண்டு அவன் திகைத்து விட்டான். என்றாலும் அவள் கண்களும் அவன் கண்களும், அந்த சூழலிலும் சல்லாப்பித்துக் கொண்டன. மதியின் கண்ண்களில், அந்த வேதனையிலும் ஒரு அசைக்க முடியாத உறுதி நிலைத்து இருந்தது. கஜன் அதில் ஒரு மின்னலை உணர்ந்தார். ஆனால் அவன் தன கடமையை மறக்கவில்லை. உடனடியாக அவர் அவளுடைய காயங்களை மெதுவாக சுத்தம் செய்தார். “உன் பேர் என்ன?” என்று மெதுவாகக் கேட்டான். “மதி,” அவள் வேதனையிலும் கிசுகிசுத்தாள். “நீ தோட்டாக்களையும் நம்பிக்கையையும் சுமந்து சென்றாயா?” அவள் லேசாகச் சிரித்தாள். “தோட்டாவை விட நம்பிக்கையை அதிகமாக நான் என்றும் சுமப்பேன்" தள்ளாடும் நிலையிலும் திமிராகப் பதிலளித்தாள். அவன் சிகிச்சை அளிக்கும் பொழுது, அவனது கண்கள் எனோ அவளையே ரசித்துக்கொண்டு இருந்தது. அவள் சிரித்தாள்: "மூச்சுக்கே இடமில்லாத போர்க்களத்தில் நிஜமான காதல் முளைக்குமா?". ஆனால் அவன் மெதுவாக அவள் காதில் குனிந்து சொன்னான், "மீள முடியாத இடத்தில்தான் பாசம் பிறக்கிறது." முதலில், மெளனத்தில் வந்த பார்வைகள். பின்னர் ஒரு புன்னகை. பின் சில வார்த்தைகள். உடைந்த தங்குமிடத்தில், இரவுகள் குண்டுகளால் சூழப்பட்டன, விடியல்கள் விரக்தியுடன் வந்தன. ஆனாலும் காதல் மலர்ந்தது - மென்மையாகவும் ரகசியமாகவும். அவர்கள் கிசுகிசுப்பாகப் பேசினார்கள், திருடப்பட்ட புன்னகையைப் பரிமாறிக் கொண்டனர். ஒரு நாள் அந்த தற்காலிக மருத்துவமனையின் சாலைகளில் அவ்வளவாக கூட்டம் இல்லை. நாலப்பக்கமும் குண்டுகள் முழங்கி கொண்டிருந்தது. தெருவெல்லாம் குருதி ஆறு ஓடி கொண்டிருந்தது. எட்டுத்திக்கும் மரண ஓலங்கள், ஆண்களின் அலறல்கள் பெண்களின் கதறல்கள். ஆர்ப்பரித்து ஓடிய இரத்த வெள்ளங்களில் பல்லாயிரக்கணக்கான சடலங்கள். மூக்கை பழுது பார்க்கும் பிணவாடைகள். கைக்கடிகாரங்கள் அணிந்திருந்த கைகள், திருமண மோதிரங்கள் அணிந்திருந்த விரல்கள், விலையுயர்ந்த காலணி அணிந்திருந்த கால்கள், பால்சுரந்த கொங்கைகள் என அங்குமிங்குமாக சிதறிகிடந்தது ஏராளம் ஏராளம். வான் மழை கூட பெய்ய மறுத்த அந்த நிமிடங்களில் வானூர்திகள் குண்டு மழை பொழிந்து கொண்டிருந்தது அது ஒரு மூடர் கூட்டத்தின் இரத்த வெறி கொண்டாட்டம். அப்பொழுது மதி மருத்துவமனை கட்டிலில் படுத்திருந்தபடி, “நாம் வேறொரு காலத்தில் பிறந்திருந்தால்...” என்று அவள் தொடங்கினாள். “நீ இன்னும் என் வாழ்க்கையில் நுழைவாய்,” என்று அவன் பதிலை முடித்தான். வெளியே, அரசாங்கப் படைகள் தங்கள் பிடியை இறுக்கிக் கொண்டிருந்தன. உணவு லாரிகள் தடுக்கப்பட்டன. பொதுமக்கள் கடத்தப்பட்டனர். பெண்கள் துன்புறுத்தப்பட்டனர். வாழ்க்கைக்கு பாதுகாப்பான ஒரு இடமும் காணவில்லை, ஏன் தாயின் கருப்பை கூட பாதுகாப்பாக இல்லாத காலம் அது! அவள் அவனை ஒரு முறை கிண்டல் செய்தாள்: “நான் போர்முனைக்குத் திரும்பிய பிறகு, உன் அன்பான இந்த நோயாளியை நீ மிஸ் பண்ணுவாயா?” "நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன், உன்னுடன் இருக்க ஒரு டாக்டராக என்னிடம் உள்ள அனைத்தையும் நான் விட்டுவிடுவேன்,” என்று அவன் அதற்க்கு பதிலளித்தான். போரின் இருளில் அவர்களின் இதயங்கள் தொட்டன. மதிக்கு காயங்கள் மட்டுமல்ல, உள்ளத்தின் பயமும் இருந்தது. கஜன் அவற்றையெல்லாம் பொறுமையுடன் சிகிச்சையளித்தார். காயங்களை மட்டும் அல்லாது, உறவின் வெதுவெதுப்பையும் சேர்த்து அளித்தார். கட்டிலில் படுத்தபடி அங்கு சுற்றிலும் நடப்பவைகளை மெல்ல கவனித்து கொண்டிருந்தாள் அவள். அவளின் பதினாறு நாள் காதலுக்கு கிடைக்க போகும் பரிசை எண்ணி மட்டும் திக்குமுக்காடி போய் இருந்தாள். அவள் கண்களும் அவன் கண்களும், குண்டுகளின் சொற்ப நேர அமைதிகளுக்கிடையில், அந்த சொற்ப இடைவெளியில், சல்லாப்பித்து கொண்டிருந்தன. முகத்தில் வியர்வை துளிகள் வழிய இதழில் காதல் கசிந்து கொண்டிருந்தது. அவன் வலது கை அவள் கன்னங்களை வருடி கொண்டிருந்தது அவன் இடக்கையோ அவள் இடுப்பின் அளவினை அளந்து கொண்டிருந்தது. அவள் இரு கைகளும் அவன் பின்னந்தலையில் பின்னப்பட்டிருந்தது! மக்கள் பட்டினியில் வாடினர். ஒரு தேயிலை சாயமும், ஒரு பசியும், ஒரு கண்ணீரும் மட்டும் இருந்தது. அரசுப் படைகள் அனுதாபம் காட்டவில்லை. உதவிகளைத் தடுத்தனர். பெண்கள் இழிவுகளுக்கு ஆளாகினர். இளைஞர்கள் காணாமல் போனார்கள். அந்த சூழலில் தான் அவள் இன்னும் மருத்துவ முகாமில் கொஞ்சம் பாதுகாப்பாக, முழுமையாக குணமடைவதற்காக இருந்தாள். அங்கே அவள் சிரிப்பும், கஜனின் இதயமும் நெருக்கமாக மாறியது. அவள் மேலும் அவனை ஈர்த்தாள். அது அவள் வசிகரமா அல்லது அவன் பலவீனமா என்று ஆராய்வது தேவையற்றது. ஏனேன்றால் அது காதலின் இலக்கண விதி. அவனும் அவளும், கொஞ்சம் போர் ஓய்ந்த நேரத்தில், ஒரு சாயங்காலம் குளத்தங்கரைக்கு குளிப்பதற்காக சென்றார்கள். அங்கே குளக்கரைக்கு பக்கத்தில் 'பங்களா'வென்று ஒரு காலத்தில் மரியாதையாக கூறியது, இப்போது அந்தக் கட்டிடத்தின் கூரையில் பல துவாரங்கள் காணப்பட்டன. கீழ்த்தரை குண்டும் குழியுமாயிருந்தது. திண்ணைக்குப் பாதுகாப்பு" அல்லது "காவலாகவும் அலங்காரமாகவும் அமைந்திருந்த மூங்கில் வேலி பல இடங்களில் முறிந்து விழுந்து கிடந்தது. பங்களாதான் இப்படி என்றால், பங்களாவுக்கு எதிரில் இருந்த அந்த குளமும் களை குன்றிக் காணப்பட்டது. குளத்தில் தண்ணீருக்குக் குறைவில்லை. ஆனால் முன்னொரு காலத்தில் கரையோரமாக வளர்ந்திருந்த அலரிச் செடிகளையும் செம்பருத்திச் செடிகளையும் இப்போது காணவில்லை. குளத்தின் படித்துறை பாசி பிடித்தும் இடிந்தும் காணப்பட்டது. அவனும் அவளும் குளக்கரையில் இடிந்த படிக்கட்டில் உட்கார்ந்து கொண்டார்கள். சிறிது நேரம் மதி சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டேயிருந்தாள். சுற்றுப்புறத் தோற்றத்தில் இன்னும் ஏதோ ஒரு வித்தியாசம் இருப்பதாக அவளுக்குத் தோன்றிக் கொண்டேயிருந்தது. பளிச்சென்று அது என்ன என்பது புலனாயிற்று. "கஜன் ! குளத்தின் மேலக்கரையில் இருந்த சவுக்கு மரத்தோப்பு எங்கே?" என்று கேட்டாள். "அதை வெட்டி விறகாக்கி விட்டார்கள்?" என்றான் கஜன். அவனின் வகிடு எடுத்து [முடியை பிரித்து] வழித்து வாரிய தலைமயிர், புருவம் உயர்த்திய சீரிய கண்கள், அளவான சிரிப்போடு இதழ்கள், மரண வாடையின் நெடி வீசும் அந்த சூழலிலும் அவனை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே இருந்தாள் மதி. அவனும் அவளை ஏறெடுத்து பார்த்துக்கொண்டே இருந்தான். அவனை அவள் கண்கள் சுற்றி சுற்றி வந்தது. காதல் அனுக்கள் கசிந்து இருவரையும் கிளர்ச்சி அடையச் செய்தது. 'தடாகத்தில் மீனிரண்டு காமத்தில் தடுமாறி தாமரைப்பூமீது விழுந்தனவோ?! இதைக்கண்ட வேகத்தில், பிரம்மனும் மோகத்தில் படைத்திட்ட பாகந்தான் உன் கண்களோ?! காற்றில் அசைந்து வரும் நந்தவனத்துக்கிரு கால்கள் முளைத்ததென்று நடை போட்டாள்.. ஜதி என்னும் மழையினிலே ரதியிவள் நனைந்திடவே, அதில் பரதம்தான் துளிர்விட்டு பூப்போலப் பூத்தாட.. மனமெங்கும் மணம் வீசுது – எந்தன் மனமெங்கும் மணம் வீசுது' ["ஜதி என்னும் மழையில்" அல்லது "இசையின் மழையில்"] என்று அவன் முணுமுணுத்துக்கொண்டு இருந்தான். என்றாலும் அவளுக்கு காதலை விட கடமை பெரிதாக இருந்தது. "நான் இனி உடனடியாக போர்க்கழகத்துக்கு திரும்பணும், கஜன்." என்றாள் மதி. ஆனால் கஜனோ: "மதி, நீயில்லாமல் இந்த முகாமே வீணாகிவிடும். என் வலிமை, என் நம்பிக்கை எல்லாம் நீதான் " என்றான். "நான் போராளி. என் காதலுக்கும் எல்லை இருக்கு டாக்டர்." அவள் மறுத்தாள் அவர்களின் அந்த குறுகிய கால உறவு இருவருக்கும் சங்க இலக்கியக் காதலை நினைவுபடுத்தியது. "அர்ஜுனனின் மகன் அபிமன்யு விராடனின் மகள் உத்தராவை மணக்கிறான் என்றாலும், அபிமன்யு போரில் இறப்பதால், அவர்களின் காதல் விரைவில் முடிவடைந்து விட்டது, டாக்டர் கஜன், நானும் ஒரு போராளி, அது தான் தூர விலக விரும்புகிறேன். இங்கே உங்கள் முன் இருந்தால், ஒரு வேளை இன்று மாதிரி நான் தடுமாறிவிடுவேன். நீங்கள் வாழவேண்டியவர், என்னை விட்டுவிடுங்கள்" என்றாள் மதி. ஆனால் கஜன் குழம்பி இருந்தான். எத்திறத் தாள்நின் இளங்கொடி? உரைஎன குருகுபெயர்க் குன்றம் கொன்றோன் அன்னநின் முருகச் செவ்வி முகந்துதன் கண்ணால் பருகாள் ஆயின்இப் பைந்தொடி நங்கை ஊழ்தரு தவத்தள் சாப சரத்தி காமற் கடந்த வாய்மையள் என்றே தூமலர்க் கூந்தல் சுதமதி உரைப்ப (5: 12-18) அந்த குழப்பத்தில் அவனுக்கு உதயகுமாரன், மணிமேகலை ஞாபகம் வந்தது. மணிமேகலை தவநெறி புகுந்தவள் என்பதால், அதற்கு இடையூறாக இருக்கும் உதயகுமாரனின் காதலை, அவனின் தகுதி செல்வாக்கு போன்றவற்றைக்கூட பார்க்காமல், அவனை, அவனின் காதலை தூக்கி எறிந்தாள். இன்று மதியும் அப்படியே! "உன்னை சொல்லி குற்றமில்லை என்னை சொல்லி குற்றமில்லை காலம் செய்த கோலமடி கடவுள் செய்த குற்றமடி மயங்க வைத்த கன்னியர்க்கு மணம் முடிக்க இதயமில்லை நினைக்க வைத்த கடவுளுக்கு முடித்து வைக்க நேரமில்லை" அவன் மனம் மௌனமாக பாடியது! அவளுடைய இறுதிக் காலைப் பொழுதில், கஜன் அவளுக்கு பாதி பிஸ்கட்டை - அவன் பாக்கெட்டில் இருந்த கடைசி பிஸ்கட்டையும் கொடுத்தான். மற்றும் படி உப்பில்லா காஞ்சி இன்னும் அங்கு இருந்துகொண்டு தான் இருந்தது. “உன்னுடைய மீட்பு சிற்றுண்டி,” என்று அவன் நகைச்சுவையாகச் சொன்னான். அவள் முதல் முறையாக - முழுமையாக, அழகாக - சிரித்தாள். அந்த நொடியே வான்வெடி தாக்கியது. குண்டு விழுந்தது. பூமி பிளந்தது. மதி சிதைந்தாள். புகை நீங்கியதும், எஞ்சியிருப்பது சிவப்பு மண், இடிபாடுகள் மற்றும் அமைதியின் கசப்பான சுவை மட்டுமே. மதி போய்விட்டாள். கஜன் மட்டும் உயிரோடு! கஜன் இன்னும் வாழ்ந்துகொண்டு இருக்கிறார், ஆனால் மீண்டும் ஒருபோதும் முழுமையாக இல்லை. அவளுடைய இரத்தம் அவன் நினைவுகளைக் கறைபடுத்தியது, அவளுடைய சிரிப்பு ஒவ்வொரு அமைதியான மணி நேரத்திலும் எதிரொலித்தது. அவர்களின் காதல் இறக்கவில்லை. அமைதியிலும், மண்ணிலும், பல கதைகளைப் புதைத்த ஒரு போரின் வடுக்களிலும் அது நிலைத்திருந்தது!! கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம் ........................................................................................ சிறுகதை - 184 / 'குண்டுகளின் மத்தியில் ஒரு காதல்' [200 வார்த்தைகளில்] இலங்கை உள்நாட்டுப் போரின் இறுதிக்காலத்தில், முல்லைத்தீவு சிதைந்த நிலமாக இருந்தது — பட்டினி, பீரங்கி தாக்குதல்கள், பயம் நிரம்பிய நாட்கள். அந்தப் பூமியில் காயமடைந்த இளம் பெண் போராளி மதி, ஒரு தற்காலிக மருத்துவமனைக்குள் தடுமாறி நுழைந்தாள். அங்கே, 28 வயதான டாக்டர் கஜன், குறைந்த மருந்துகளுடனும் துடிப்பான மனதுடனும் உயிர்களை காப்பாற்றிக் கொண்டிருந்தார். மதியின் கண்களில் அவர் வீரத்தையும் வேதனையையும் பார்த்தார். மௌனத்தில் ஏதோ மின்னி இருவரையும் ஈர்த்தது. அதில் ஒரு காதல் தீபம் ஒளிர்ந்தது. இரவும் பகலும் வெடிப்புகளால் அச்சமுற்றிருந்தன. ஆனால், காயங்களுக்கு மருந்து போடுவதற்கும் மரணத்தைத் தவிர்ப்பதற்கும் இடையில், அவர்கள் திருடப்பட்ட அரவணைப்பு தருணங்களை மறக்கவில்லை. ஒரு விடியற்காலை, பிஸ்கட்டை அவளிடம் ஒப்படைத்த அந்த நிமிடத்தில், வான்வழித் தாக்குதல் பூமியையே பிளந்தது. புகை நீங்கியபோது, இரத்தத்தில் மதியின் உடல் துண்டு துண்டாக கிடந்தது. கஜன் உயிர் தப்பினார் — அந்த காதல் மரணிக்கவில்லை — அது மண்ணில், மெளனத்தில், அவன் விழிகளில் வாழ்ந்துகொண்டே இருந்தது! கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம் துளி/DROP: 1830 [சிறுகதை - 184 / 'குண்டுகளின் மத்தியில் ஒரு காதல்'] / எனது அறிவார்ந்த தேடல்: 1248 https://www.facebook.com/groups/978753388866632/posts/30719807144334530/?

புலம்பெயர் தமிழர்கள் பழிவாங்கல் செயற்பாட்டினை ஜனாதிபதி மூலம் முன்னெடுக்கின்றனர் – விமல்வீரவங்ச

1 month 3 weeks ago
புலிகளை ஒழித்திருக்கலாம் ஆனால் நாட்டில் முக்கியமான புரையோடிப்போயுள்ள பிரச்சனை தீர்க்கப்படவில்லை. அதனாலேயே உங்களால் நிம்மதியாக தூங்க முடியவில்லை. யாரைப்பார்த்தாலும் எதைக்கண்டாலும் புலி என உளறுகிறீர்கள். உங்களுடைய நீதிமன்றங்களிலேயே வழக்குகள் தொடரப்படுகின்றன, உங்கள் இராணுவமும் புலனாய்வுமே சாட்சிகள் அளிக்கின்றனர். உங்கள் நீதிமன்றங்களில், அதிகாரிகளில், நீதிபதிகளில் உங்களுக்கு நம்பிக்கை இல்லையெனில், பயம் வேண்டாம். சர்வதேச நீதிமன்றங்களை நாடலாம் அமைச்சரே. கடந்த காலங்களில் பயங்கர வாதச்சட்டம், நீதிபதிகள், விசாரணை அதிகாரிகளை மாற்றி நீங்கள் போட்ட நாடகம், அதனாலேயே உங்களுக்கு இவற்றின்மேல் நம்பிக்கையில்லை. உங்களைப்போல் இவர்களும் பழிவாங்குகிறார்கள் என்று மக்களை திசை மாற்றுகிறீர்கள். எங்கே உண்மையை வெளியில் கொண்டுவந்துவிடப்போகிறார்கள் என அஞ்சி விசாரணை அதிகாரியை மாற்றினீர்கள். இப்போ அதிகாரம் இழந்து, படைகள் உங்களை காட்டிக்கொடுக்கப்போகிறார்கள் என்பதால் படைகளுக்காக அழுகிறீர்கள். வெகு சீக்கிரம் உங்களுக்காகவும் அழுவீர்கள்.
Checked
Mon, 09/29/2025 - 03:46
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed