புதிய பதிவுகள்2

தமிழ்நாட்டை விட எமது கலைஞர்களுக்கு முதலிடம் கொடுங்கள் .

1 month 3 weeks ago
“அக்குட்டியும் பிச்சுமணியும்” காணொளிகள்… தமிழர் மத்தியில் நிகழும் முக்கிய செய்திகளை அடிப்படையாகக் கொண்டு நகைச்சுவை வடிவில் தயாரித்து வழங்குவார்கள். மிக நன்றாக இருக்கும். அண்மையில்…. சாவகச்சேரி காதலி, தனது காதலனுக்கு 19 பவுண் நகை களவெடுத்து விற்று, 12 லட்சம் ரூபாய்க்கு புது மோட்டார் சைக்கிள் வாங்கிக் கொடுத்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து ஒரு காணொளி தயாரித்து இருந்தார்கள். பயங்கர பகிடியாக இருந்தது. அவர்களின்…. முக பாவனையும், காணொளியின் தரமும் சிறப்பாக இருக்கும்.

தமிழ், முஸ்லிம் தலைமைகள் ஒன்றாய் அமர்ந்து பேசினால் உள்ளக முரண்பாடுகள் முடிவுறும் ; பாராளுமன்றம் அலைய வேண்டியதில்லை - ரிஷாட் எம்.பி.

1 month 3 weeks ago
06 AUG, 2025 | 05:38 PM தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கு இடையிலான உள்ளக முரண்பாடுகளை, ஒரே மேசையில், ஒன்றாய் அமர்ந்து பேச்சு நடத்தி, தீர்க்க முடியுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லா கொண்டுவந்த ஓட்டமாவடி எல்லைப் பிரச்சினையை தீர்ப்பது தொடர்பான பிரேரணை தொடர்பில் உரையாற்றியபோதே ரிஷாட் பதியுதீன் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது: சிறுபான்மை சமூகங்களின் பிரச்சினைகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து தீர்வு காண முடியாது. எந்த அரசாங்கமானாலும் எமது சமூகங்களின் பிரச்சினைகளைத் தூண்டிவிட முயற்சிக்குமே தவிர, தீர்த்துவைக்க முயற்சிக்காது. கடந்தகால அனுபவங்களினூடாக நாங்கள் புரிந்து வைத்துள்ள உண்மையே இது. ஓட்டமாவடி பிரதேச சபையை எமது கட்சியே வென்றிருந்தது. எனினும் எங்களை ஆட்சி அமைக்கவிடாமல், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் கூட்டு சேர்ந்து ஆட்சி அமைத்துள்ளன. இவ்விடயத்தில் ஏற்பட்ட புரிந்துணர்வு போன்று ஏனைய காணி பிரச்சினை மற்றும் கல்விப் பிரச்சினைகளில் ஏன் இவர்களால் ஒன்றுபட முடியாது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தமிழ், முஸ்லிம் சமூங்களின் அக முரண்பாடுகளை பேசித் தீர்க்க முடியும். கல்முனை வடக்கு பிரதேச செயலக விடயத்தையும் இழுத்தடிக்க வேண்டியதில்லை. சமூகத் தலைமைகள் இணைந்தால் இதையும் இலகுவாகத் தீர்க்கலாம். தனிநாடு, சமஷ்டி கோரிப் போராடிய தமிழ் தலைமைகள் முஸ்லிம்களின் உள்ளக விடயங்களை பெரிதுபடுத்தவேண்டிய அவசியமுமில்லை. பாராளுமன்றத்துக்கு கொண்டுவரப்பட்ட சிறுபான்மை சமூகங்களின் எந்தப் பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டதாக வரலாறுகள் இல்லை. எனவே, நமது உள்ளக பிரச்சினைகளை நாமே பேசித் தீர்த்துக்கொள்வோம். தமிழ், முஸ்லிம் தலைமைகள் ஒரே மேசையில் அமர்ந்தால், எல்லா உள்ளக முரண்பாடுகளுக்கும் முடிவு கிடைக்கும் என தெரிவித்தார். https://www.virakesari.lk/article/221963

"அமைதி நினைவு விழா [ஹிரோஷிமா / ஆகஸ்ட் 6] / Peace Memorial Ceremony" [Hiroshima / August 6]

1 month 3 weeks ago
"அமைதி நினைவு விழா [ஹிரோஷிமா / ஆகஸ்ட் 6] / Peace Memorial Ceremony" [Hiroshima / August 6] ஆகஸ்ட் 6, 1945 அன்று, இரண்டாம் உலகப் போரின் போது (1939-45), ஒரு அமெரிக்க B-29 குண்டுவீச்சு விமானம் உலகின் முதல் அணுகுண்டை ஜப்பானிய நகரமான ஹிரோஷிமா மீது வீசியது, மூன்று நாட்களுக்குப் பிறகு, இரண்டாவது B-29 நாகசாகியின் மீது மற்றொரு அணுகுண்டை வீசியது. ஒரு ஆகஸ்ட் 6, மற்றும் ஆகஸ்ட் 9, ஆகிய தேதிகளில் ஹிரோஷிமா மற்றும் நாகசாகிக்கு நான் சென்ற போது, அங்கு முன்பு ஏற்பட்ட பேரழிவை என் கண்களால் நேரடியாக பார்த்த பிறகு, முன்பு அறிவும் உண்மையான விளக்கமும் வர நீண்ட காலமாக இருந்ததாக உணர்ந்த நான், இப்போது, அது எனக்கு வந்துவிட்டது என்று நான் நம்புகிறேன். அணுகுண்டு பாதிப்பால் ஹிரோஷிமா நகரில் பலியான பல ஆயிரக் கணக்கான மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும், அணு ஆயுதத்தின் பேரழிவை உலகுக்கு உணர்த்தும் நாளாகவும், இத் தினம் அனுசரிக்கப் படுகிறது. உலக வரலாற்றில் அமெரிக்கா தான் முதன் முதலாக அணுகுண்டு தாக்குதலை தொடங்கியது. ஆனால் "லிட்டில்பாய்' என்கிற இந்த அணுகுண்டு வாங்கிய உயிர் பலி எவ்வளவு தெரியுமா? ஒரு லட்சத்துக்கும் மேல். மீண்டும் மூன்று நாட்கள் கழித்து ஆகஸ்ட் 9ம் தேதி ஜப்பானின் நாகசாகி நகரின் மீது "பேட்மேன்' என்ற அணுகுண்டை 2வது முறையாக அமெரிக்கா வீசியது. இத் தாக்குதல்களால், இரண்டு நகரங்களும் நிலை குலைந்தன. கதிர்வீச்சு காரணமாக இறந்தோரின் எண்ணிக்கை 2 லட்சத்து 30 ஆயிரத்தை எட்டியது. எனது அதிர்ஷ்ட்டம் இந்த இரண்டு நினைவு நாளிலும், நான் அங்கு ஷிமோனோசெக்கி பல்கலைக்கழகம், ஜப்பானில், கல்வி கற்றபொழுது நேரடியாக கலந்து அஞ்சலி செலுத்தியது ஆகும். "அமெரிக்கர் தனது வேகமான மற்றும் சக்திவாய்ந்த B-29 விமானத்தில் பறந்து, ஹிரோஷிமா மற்றும் நாகசாகி நகரங்களுக்கு எதிராக வீசினர்! பிரபஞ்சத்தின் அனைத்து சக்திகளாலும் நிரப்பப்பட்ட ஒரு ஒற்றை எறிபொருள். பத்தாயிரம் சூரியன்களைப் போல பிரகாசிக்கும் புகை மற்றும் நெருப்பின் ஒரு ஒளிரும் தூண், அதன் அனைத்து வலிமையிலும் எரிந்து உயர்ந்தது! அது இரகசிய ஆயுதம், இரும்பு இடி, ஒரு பிரம்மாண்டமான மரண தூதர், இது ஹிரோஷிமா மற்றும் நாகசாகியின் முழு மக்களையும் சாம்பலாக்கியது! "பிணங்கள் மிகவும் எரிந்து, அடையாளம் காண முடியாத அளவுக்குப் போயிருந்தன. முடி மற்றும் விரல் நகங்கள் உதிர்ந்து விழுந்தன, மட்பாண்டங்கள் காரணமின்றி உடைந்தன. ... உணவுப் பொருட்கள் விஷமாகிவிட்டன. தப்பிக்க, வீரர்கள் தங்களைத் தாங்களே கழுவிக் கொள்ளவும், தங்கள் உபகரணங்களை கழுவவும் ஓடைகளில் குதித்தனர்!" On August 6, 1945, during World War II (1939-45), an American B-29 bomber dropped the world’s first uranium gun-type atomic bomb (Little Boy) over the Japanese city of Hiroshima and Three days later, a second B-29 dropped another plutonium implosion-type atomic bomb (Fat Man) on Nagasaki. Some time knowledge & true interpretation was a long time in coming, but, I believed, it did arrive now, After seeing with my own eyes the devastation wreaked upon Hiroshima & Nagasaki, when I visited there on August 6, & August 9, respectively, When I was at University of Shimonoseki,Japan.! Every August 6, "A-Bomb Day", the city of Hiroshima holds the Peace Memorial Ceremony to console the victims of the atomic bombs and to pray for the realization of lasting world peace. "The American flying in his swift and powerful B-29, hurled against the cities of Hiroshima and Nagasaki a single projectile charged with all the power of the universe. An incandescent column of smoke and fire, as brilliant as ten thousand suns, rose in all its splendor. It was the secret weapon, the iron thunderbolt, a gigantic messenger of death, which reduced to ashes the entire population of Hiroshima and Nagasaki. The corpses were so burnt they were no longer recognizable. Hair and finger nails fell out, Pottery broke without cause. ... Foodstuffs were poisoned. To escape, the soldiers threw themselves in streams to wash themselves and their equipment." கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம் Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna "அமைதி நினைவு விழா [ஹிரோஷிமா / ஆகஸ்ட் 6] / Peace Memorial Ceremony" [Hiroshima / August 6] https://www.facebook.com/kandiah.thillaivinayagalingam/posts/pfbid02JNJngNMaMgn2mKjwbkkUFUgMkQhEFV7oZ4kV76JghCZnRX6pebmt6aF6PuhHtm5bl?

தமிழ்நாட்டை விட எமது கலைஞர்களுக்கு முதலிடம் கொடுங்கள் .

1 month 3 weeks ago
முற்றத்து மல்லிகை "அக்குட்டியும் - பிச்சுமணியும்"--- தமிழ்நாட்டை விட எமது கலைஞர்களுக்கு முதலிடம் கொடுங்கள் *பேச்சு வழக்கில் வெளிப்படும் சிலேடைச் சொற்கள். --- ----- ----- ------ நகைச்சுவை தமிழுக்கே உரிய சிறப்பு. அக்குட்டி - பிச்சுமணி என்று அழைக்கப்படும் “Valvai Sulax” -“கஜன் தாஸ்” என்ற இருவரும் தொடர்ச்சியாக, தமது நகைச்சுவை நடிப்பின் மூலம் வெளிப்படுத்தி வரும் கதாபாத்திரங்கள் யதார்த்தத்தை உணர்த்தி நிற்கிறது. “இடுக்கண் வருங்கால் நகுக" என்பது திருவள்ளுவர் வாக்கு. இதன் பொருள், "துன்பம் வரும்போது மனம் தளராமல் சிரிக்க வேண்டும் என்பதாகும். ஆகவே, துன்பத்தை வெல்ல மகிழ்ச்சியைவிட சிறந்த வழி வேறில்லை என்ற பொருளில் நகைச்சுவையின் மேன்மை அமைந்துள்ளது. மனதளவில் மகிழ்ச்சியாக இருந்தால், எந்த துன்பத்தையும் எளிதாக கடந்து விடலாம் என்று வள்ளுவர் அன்றே கூறிவிட்டார். ஆகவே, வள்ளுவர் வாக்கை மையப்படுத்தி துன்பத்தை வெல்ல “மகிழ்ச்சி” ஓர் ஆயுதம் என்பதை அக்குட்டி - பிச்சுமணி என்ற இரு கலைஞர்களும் நிறுவியுள்ளனர். ஈழத் தமிழர்களை மையப்படுத்திய கதாபாத்திரங்களில், சிலேடைச் சொற்கள் சில, தூய தமிழில் - சாதாரண பேச்சு மொழியில் இவர்களின் வார்த்தைகளில் இருந்து இவர்களை அறியாமலேயே வெளிப்படுகின்றன. அதுவும் ஆங்கில கலப்பில்லாத பேச்சு மொழி. அந்த சிலேடைச் சொற்கள் பல கற்பிதங்களை உணர்த்துகிறது. முகபாவங்கள் கூட வாழ்வியல் அர்த்தங்கள் பலதை தருகின்றன. அதாவது, ஒரு குடும்பத்தில் அன்றாடம் நடக்கும் நிகழ்வுகள் - சமூகத்தில் நடக்கும் சம்பவங்கள், இந்த இரு கலைஞர்களின் முகபாவங்களில் இருந்து வெளிப்படுகின்றன. இருவரும் வெளிப்படுத்தும் முகபாவங்கள் இயல்பான நகைச்சுவை தன்மை கொண்டது. வாழ்வியல் உண்மைகளும் புடம்போட்டு காண்பிக்கின்றன. ஆகவே, சமுதாய வாழ்வியல் சீர்திருத்தங்கள் எளிய முறையில் நகைச்சுவை உணர்வுடன் கையாளப்பட்ட வேண்டும் என்பதற்கு அக்குட்டியும் - பிச்சுமணியும் என்ற பாத்திரங்கள் சிறந்த வகிபாகத்தை கொடுத்துள்ளன. அதுவும் தாயகத்தில் இருந்து ... யூரியுப் போன்ற சமூக வலைத்தளங்களை பலர் தவறாகப் பயன்படுத்தி பிழையான கருத்தியல்களை சமூகத்தில் விதைத்து வரும் சூழலில், அக்குட்டி - பிச்சுமணி என்ற இரு கலைஞர்களும் சமூக யதார்த்தங்களை நகைச்சுவையாக வெளிப்படுத்தி சீர்திருத்தங்களுக்கு வழி வகுப்பது சிறப்பு. சம்மந்தப்பட்டவர்களை உணர வைத்து திருந்த வழி வகுக்கும் ஏற்பாடு என்று கூடச் சொல்ல முடியும். இந்தியக் கலைஞர்கள் குறிப்பாக தமிழ்நாட்டில் இருந்து வரும் கலைஞர்கள், பாடகர்கள் போன்றோரை விடவும் உள்ளூர் கலைஞர்கள் என்று பெருமைப்படக்கூடிய அக்குட்டி - பிச்சுமணி மற்றும் உள்ளூரில் உள்ள ஏனைய நகைச்சுவை கலைஞர்கள், பாடகர்கள் போன்றோரை ஈழத்தமிழர்கள் முதலில் வரவேற்க வேண்டும். உற்சாகப்படுத்த வேண்டும். எமது வீட்டு முற்றத்து மல்லிகையின் வாசத்தை நுகர பழக வேண்டும். அ.நிக்ஸன்- பத்திரிகையாளர்- https://www.facebook.com/1457391262/posts/pfbid0KJ3F44wkhyAUbiSbFhAYSNHP8UnKW9H9PxhKi8pUHf7HBQXX7bBsjc6crbUXMFBVl/? நானும் இவர்களின் காணொளிகளைக் கண்டு கொள்வதில்லை. இனிமேல் தொடர்ந்து பார்த்து ஆதரவு கொடுக்க வேண்டும்.

மட்டக்களப்பு வாவியில் கழிவுகள் உட்புகுவதை தடுக்க தடுப்பு சுவர் அமைக்கும் பணிகள் ஆரம்பம்

1 month 3 weeks ago
06 AUG, 2025 | 03:14 PM இலங்கையின் இரண்டாவது மிகப்பெரிய வாவியான மட்டக்களப்பு வாவியிவில் வீதியில் உள்ள கழிவுகள் மற்றும் மண் என்பன வாவியினுள் உட்புகுவதை தடுத்து மண்ணரிப்பு ஏற்படாமல் வாவியை பாதுகாக்கும் நடவடிக்கைகளை வீதி அபிவிருத்தி அதிகார சபை ஊடாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. இத்திட்டத்திற்கமைய மட்டக்களப்பு வாவியோரம் சுமார் ஒன்றரை மீட்டர் மற்றும் இரண்டு மீட்டர் வரையான அளவிலான உயரமான தடுப்பு சுவர் அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. மட்டக்களப்பு லேடி மெனிங் டிரைவ் வாவியோரத்தில் இத்திட்டத்தின் முதற்கட்டம் நடைமுறைப்படுத்துகிறது. இதற்கென 58 மீட்டர் நீளமான தடுப்புச் சுவர் சுமார் 4 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு வருவதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர் தெரிவித்தார். ஆரம்பத்தில் இத்திட்டம் நாலு மில்லியன் செலவில் நடைமுறைப்படுத்தப்படுவதுடன் தொடர்ந்தும் மட்டக்களப்பு வாவியோரத்தில் இவ்வாறான தடுப்பு சுவர் அமைக்கும் பணிகள் இடம்பெறும் என அவர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/221956

தமிழகத்தில் தொடரும் சாதி கொலைகள் - நிபுணர்கள் கூறும் தீர்வு என்ன?

1 month 3 weeks ago
படக்குறிப்பு, திருநெல்வேலியில் மென்பொறியாளர் கவின் சமீபத்தில் கொலை செய்யப்பட்டார். கட்டுரை தகவல் மோகன் பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தமிழ்நாட்டில் சமீபத்தில் சாதியின் பெயரில் நடைபெற்ற கொலை சம்பவங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது. இத்தகைய கொலைகளை தடுக்க வலுவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளும் கட்சியான திமுகவின் கூட்டணி கட்சிகள் கோரி வருகின்றன. இதில் அரசு மற்றும் காவல்துறையின் செயல்பாடுகள் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன. காவல்துறைக்கு அரசியல் அழுத்தம் இருக்கும், ஆனால் அவர்கள் அதைக் கடந்து செயல்பட வேண்டும் என்கிறார் ஓய்வு பெற்ற காவல் கண்காணிப்பாளரான எஸ்.கருணாநிதி. அரசியல் கட்சிகளிலிருந்து அரசு நிர்வாகம் வரை அதன் செயல்பாடுகளில் சாதி என்பது ஆதிக்கம் செலுத்துவதாகக் கூறுகிறார் அரசியல் விமர்சகர் ராமு மணிவண்ணன். சாதியின் பெயரில் நடக்கும் கொலைகளுக்கு தனிச் சட்டம் தான் தீர்வாக இருக்க முடியும் என ஒரு தரப்பினர் கூறுகின்றனர். அதே சமயம் தனிச்சட்டம் தேவையில்லை எனக் கூறுபவர்கள் காவல்துறை சுதந்திரமாக செயல்பட விட்டாலே போதுமானது என்கின்றனர். நீதிமன்ற விசாரணை தமிழ்நாட்டின் இரு வேறு பகுதிகளில் சாதியின் பெயரால் பட்டியல் சாதியைச் சேர்ந்த இருவர் கொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்குகள் இந்த வாரம் சென்னை உயர்நீதிமன்றத்தின் முன் விசாரணைக்கு வந்தன. திருநெல்வேலியில் நிகழ்ந்த கொலை தொடர்பான வழக்கு மதுரைக் கிளையிலும், கடலூரில் நிகழ்ந்த மற்றுமொரு கொலை தொடர்பான வழக்கு சென்னையிலும் விசாரணைக்கு வந்துள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் பட்டியல் சாதியைச் சேர்ந்த மென்பொறியாளர் கவின் கொலை செய்யப்பட்ட வழக்கின் விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. அவருடன் பழகி வந்த பெண்ணின் சகோதரர் சுர்ஜித்தும், தந்தை சிறப்பு சார்பு ஆய்வாளரான சரவணனும் கைது செய்யப்பட்டுள்ளனர் எனக் காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த வழக்கை நீதிபதியின் மேற்பார்வையில் விசாரிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு தொடரப்பட்டிருந்தது. இந்த மனுவில் முறையாக விசாரணை நடத்த வேண்டுமென்றும் 8 வாரங்களுக்குள் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் சிபிசிஐடிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, சென்னை உயர்நீதிமன்றம் (கோப்புப்படம்) அதே போல கடலூர் மாவட்டம் அரசகுழி கிராமத்தில் சாதியின் பெயரால் நிகழ்ந்த ஒரு கொலை தொடர்பான வழக்கின் விசாரணையை வேறு அமைப்புக்கு மாற்ற வேண்டும் என கொலையுண்ட பட்டியல் பிரிவைச் சேர்ந்த பிகாம் மாணவரின் தந்தை கோரியிருந்தார். இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. "தமிழ்நாட்டில் பல ஆணவக் கொலை சம்பவங்கள் நிகழ்கின்றன. ஆனால் துர்திருஷ்டவசமாக இத்தகைய குற்றங்களுக்கு எந்த முற்றுப்புள்ளியும் இல்லை. ஆணவக் கொலை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. ஆனால் அதன் பின் உள்ள உண்மைகள் வெளிக்கொண்டு வரப்படுவதில்லை" என நீதிபதி பி வேல்முருகன் தெரிவித்துள்ளதாக நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி தெரிவிக்கிறது. பட மூலாதாரம், FACEBOOK/HARIPARANDHAMAN படக்குறிப்பு, உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன் பெரம்பலூரில் என்ன நடந்தது? இந்தநிலையில் அரசுத் துறைகளில் சாதிய உணர்வுகள் அவ்வப்போது வெளிப்படுவதாக உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன் கூறுகிறார். இதற்கு சமீபத்திய உதாரணமாக பெரம்பலூரில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தையும் மேற்கோள் காட்டுகிறார் அவர். பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை கிராமத்தில் வேத மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோவிலின் தேரை பட்டியல் சாதியினர் வசிக்கும் தெரு வழியே கொண்டு செல்வது தொடர்பாக பிரச்னை நிலவிய நிலையில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. ஜூன் 3ஆம் தேதி நடந்த அமைதிப் பேச்சுவார்த்தையில், தேர் தங்கள் தெருவுக்குள் வர வேண்டியதில்லை என பட்டியல் சமுக மக்கள் சிலரிடம் கையெழுத்து பெறப்பட்டுள்ளது. இதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் மாவட்ட வருவாய் அலுவலரை கண்டித்ததுடன், அமைதிப் பேச்சுவார்த்தை தீர்மானத்தையும் உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. தேரை போலீஸ் பாதுகாப்புடன் பட்டியல் சமூக மக்கள் வசிக்கும் தெருக்களுக்குள் மாவட்ட நிர்வாகம் எடுத்துச் செல்ல வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. இது ஒரு உதாரணம் தான் என்கிறார் அரிபரந்தாமன். பிபிசி தமிழிடம் பேசிய அவர், "இதுபோல பல சந்தர்ப்பங்களில் காவல்துறை உள்ளிட்ட அரசுத்துறைகள், உள்ளூர் அரசியல் போன்ற காரணங்களுக்காக பாதிக்கப்படும் மக்களுக்கு ஆதரவாகச் செயல்படுவதில்லை. தற்போது சமூக ஊடகங்களின் வீச்சு அதிகமாகிவிட்டதால் எந்த சிக்கலென்றாலும் உடனடியாக வெளிச்சத்திற்கு வந்துவிடுகிறது." எனத் தெரிவிக்கிறார். அரசியல் தலைவர்கள் என்ன சொல்கிறார்கள்? திருநெல்வேலியில் கவினின் குடும்பத்தினரைச் சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை ஆணவக் கொலைகள் தமிழ்நாட்டிற்கு அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது எனத் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் நீண்டகாலமாக ஆணவக் கொலைக்கு எதிராக தனிச்சட்டம் வேண்டும் என்று கோரி வருவதாகக் கூறிய அவர், "சாதியப் பெருமையால் நடத்தப்படும் மிருகத்தனமான சம்பவங்களை எந்த ஜனநாயக சக்திகளும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதற்கு எடுக்கப்படும் நடவடிக்கை ஒரு பாடமாக இருக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார். ஆணவக் கொலைகளைத் தடுக்க ஏற்கெனவே உள்ள சட்டங்களை திறம்பட அமல்படுத்த வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இந்த சட்டங்களை அமல்படுத்துவதில் ஏற்படுகிற தோல்விதான் இத்தகைய குற்றங்கள் தொடர காரணமாக அமைகின்றன என்றும் தெரிவித்தார். ஆணவக்கொலைகளை தடுக்க தனிச்சட்டம் கொண்டு வர வலியுறுத்துவோம் என சிபிஎம் கட்சியைச் சேர்ந்த கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி பிபிசி தமிழிடம் தெரிவித்தார். மேலும் அவர், "சட்டமன்றத்தில் இது தொடர்பாக பேசிய போது தனிச்சட்டம் தேவையில்லை என முதலமைச்சர் தெரிவித்தார். இதன் தீவிரத்தன்மையை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்துவோம். அதேசமயம் இதுதொடர்பான தீவிர விழிப்புணர்வும் காவல்துறைக்கும் கூட தேவைப்படுகிறது. அரசு நிர்வாகச் சீர்திருத்தங்களைச் செய்ய முன்வர வேண்டும்" எனத் தெரிவித்தார். பட மூலாதாரம், FACEBOOK/NAAGAI MALI படக்குறிப்பு, கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்த கண்ணகி - பட்டியல் சாதியைச் சேர்ந்த முருகேசன் கொலை வழக்கை நடத்திய வழக்கறிஞர் ரத்தினம், சமூகத்தில் ஆதிக்க சாதி உணர்வு குறையவில்லை என்கிறார். கண்ணகி முருகேசன் வழக்கில் நடந்த ஒரு நிகழ்வையும் அவர் மேற்கோள் காட்டுகிறார். பிபிசி தமிழிடம் பேசிய அவர், "சாதிய அமைப்புகளால் பாதிக்கப்படும் குடும்பங்கள் மிரட்டப்படுகின்றன அல்லது விலை பேசப்படுகின்றன. சாட்சியங்களைப் பாதுகாப்பதற்கான வழிமுறைகள் போதுமானதாக இல்லை. கண்ணகி முருகேசன் வழக்கை கூட சிபிஐ தான் விசாரித்தது. சில அமைப்புகளின் அழுத்தத்தால் முருகேசனின் நெருங்கிய ஒரு உறவினரே சாட்சியத்தை மாற்றிக் கூறினார். ஒரு சாட்சியம் மாறினால் கூட அது வழக்கின் விசாரணையை கடுமையாகப் பாதிக்கும்." என்று தெரிவித்தார். தமிழ்நாட்டில் சமூக, அரசியல் மற்றும் பொருளாதார கட்டமைப்பு சாதி அடிப்படையிலானது என்கிறார் அரசியல் விமர்சகரும் ஓய்வுபெற்ற அரசியல் அறிவியல் துறை பேராசிரியருமான ராமு மணிவண்ணன். பிபிசி தமிழிடம் பேசிய அவர், "தேர்தலில் தொடங்கி நிர்வாகம் வரை இங்கு பல விஷயங்கள் சாதி அடிப்படையிலான வாங்கு வங்கி அரசியலால் தீர்மானிக்கப்படுகின்றன. யார் ஆட்சியில் இருந்தாலும் நிலைமை இவ்வாறுதான் இருக்கும்." என்றார். சாதியின் பெயரால் நடக்கும் கொலைக்கு என தனிப் பிரிவுகள் உண்டா? கௌரவம் என்ற பெயரில் சாதிக்காக நடக்கும் கொலை வழக்குகளுக்கு என்று தனிப் பிரிவுகள் எதுவும் இல்லை என்கிறார் வழக்கறிஞர் ரத்தினம். பாதிக்கப்பட்டவர்கள் பட்டியல் சாதியைச் சேர்ந்தவர்களாக இருந்தால் எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவுகள் கூடுதலாக சேர்க்கப்படும் எனத் தெரிவித்தார். காவல்துறைக்கு அரசியல் அழுத்தம் இருப்பது உண்மை தான் என்கிறார் ஓய்வு பெற்ற காவல்துறை கண்காணிப்பாளரான கருணாநிதி. தற்போது காவல்துறைக்கும் மக்களுக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்து விட்டது என்று அவர் தெரிவிக்கிறார், "இதற்கு முக்கியமான காரணம் காவல்துறைக்கு உள்ள பணி அழுத்தம் தான். பெரும்பாலான காவலர்கள் அவர்களின் நிலைய எல்லைக்குள் வேலை செய்வதே குறைந்துபோனது. இதனால் அதிகாரிகளுக்கும் மக்களுக்கும் இடையேயான இடைவெளி அதிகமாகிவிட்டது" என்கிறார். "ஆணவக்கொலை வழக்குகளில் அரசியல்வாதிகளிடமிருந்தும் எதிர் தரப்பினரிடம் இருந்தும் அழுத்தம் வரும். ஆனால் அது சம்மந்தப்பட்ட அதிகாரிகளைப் பொருத்தது. அவர்கள் அதற்கு கட்டுப்பட வேண்டியதில்லை. ஆனால் எல்லோராலும் அதைச் செய்ய முடிவதில்லை. அதனால் தான் போலீஸ் விசாரிக்கக்கூடாது எனக் கூறுகிறார்கள். ஆனால் சிபிசிஐடி என்பது காவல்துறையின் ஒரு பிரிவு தான். அவர்களுக்கு அழுத்தம் கொடுக்காமல் வேலை செய்யவிட்டாலே போதுமானது" எனத் தெரிவித்தார். தனிச்சட்டம் தீர்வாக அமையுமா? பட மூலாதாரம், GETTY IMAGES சாதியின் பெயரால் நடக்கும் கொலைகளை தடுக்க தனிச்சட்டம் தேவை என்கிறார் பேராசிரியர் ராமு மணிவண்ணன். ஆனால் அதற்கான அவசியம் இல்லை என்கிறார் வழக்கறிஞர் ரத்தினம். சமூகத்தில் ஆதிக்க உணர்வுகளைக் கட்டுப்படுத்த சட்டங்கள் உதவும் என்கிறார் ராமு மணிவண்ணன். இது தொடர்பாக மேலும் விவரித்தவர், "நகர்ப்புறங்களை விட கிராமங்களில் சாதிய இறுக்கம் அதிகமாக இருக்கும். காவல்துறையும் சமூகத்தில் ஒரு அங்கமாகத் தான் உள்ளனர். எனவே அவர்களிடமும் அதன் தாக்கம் இல்லாமல் இருக்காது. தற்போது அனைத்து கொலை வழக்குகளைப் போலதான் ஒரு ஆணவக் கொலை வழக்கும் நடத்தப்படுகிறது." என்றார். ''ஒரு குற்றத்திற்கு என தனிச்சட்டம் வருகிறபோது அவை கூடுதல் கவனம் பெறும். இது பொதுமக்களுக்கானது மட்டுமல்ல. காவல்துறையும் நீதித்துறையும் கூட அந்த வழக்குகளை மேலும் சுதந்திரமாக கையாளத் தொடங்கும். தண்டனை ஒன்று மட்டுமே நம்மிடம் உள்ள ஒரே தடுப்பு. சட்டத்தின் கை இல்லாமல் அதைச் செய்ய முடியாது" எனத் தெரிவித்தார். ஏற்கெனவே உள்ள சட்டப்பிரிவுகளை வலுவாக்குவதே போதுமானது எனத் தெரிவிக்கிறார் ரத்தினம். "புதிய சட்டம் கொண்டு வந்தாலும் அதைச் செயல்படுத்துவது இதே காவல்துறையும் நிர்வாக அமைப்பும் தான். இதே அமைப்பு தான் சில வழக்குகளில் தண்டனை பெற்றும் கொடுத்துள்ளது. எனவே ஏற்கெனவே உள்ள தண்டனைச் சட்டங்களில் சில பிரிவுகளைச் சேர்த்துவதே போதுமானதாக இருக்கும். கூடுதலாக எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் உள்ளதைப் போல சாதி ஆணவக் கொலைகளுக்கு எதிராக மாவட்ட அளவில் குழுக்களை உருவாக்க வேண்டும்" எனத் தெரிவித்தார். இதற்கிடையே திமுகவின் கூட்டணி கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட் (சிபிஐ), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (சிபிஎம்), மற்றும் விடுதலை சிறுத்தைகள் (விசிக) கட்சிகளின் தலைவர்கள் முதலமைச்சர் ஸ்டாலினை இன்று அவருடைய இல்லத்தில் சந்தித்தனர். சாதியின் பெயரால் நடக்கும் கொலைக்கு எதிராக தனிச் சட்டம் இயற்றுவது தொடர்பாக கோரிக்கை வைத்துள்ளனர். இந்த சட்டத்தை தேர்தலுக்கு முன்பாக கொண்டு வர வேண்டும் என முதல்வர் ஸ்டாலினிடம் கூறியதாக விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சட்டம் இயற்ற மத்திய அரசுக்கும் அழுத்தம் கொடுத்து வருவதாகவும் கூறியுள்ளார். இந்தச் சந்திப்பின் போது சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன், சிபிஎம் செயலாளர் சண்முகம் ஆகியோர் உடனிருந்தனர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/crlzdx924lno

96ஆவது அகவையில் தடம் பதிக்கிறது வீரகேசரி! : நூற்றாண்டை நோக்கி வீறுநடை!

1 month 3 weeks ago
வீரகேசரி ....... எவ்வளவோ இன்னல்களையும் கடந்து தாக்குப் பிடித்து இவ்வளவு வந்ததே பெரிய விடயம் . ...... இன்னும் பலநூறு வருடங்கள் காண வேண்டும் என வாழ்த்துக்கள் .......... ! 🙏

மண்ணுக்குள் புதைந்து போன ஐவர் காயங்களுடன் மீட்பு

1 month 3 weeks ago
Published By: DIGITAL DESK 3 06 AUG, 2025 | 02:14 PM மஸ்கெலியாவில் மண்மேடொன்று சரிந்து விழுந்ததில் புதையுண்ட ஐவர் காயங்களுடன் மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மஸ்கெலியா சாமிமலை பிரதான வீதியில் பனியன் பாலத்திற்கு அருகில் உள்ள வீடு ஒன்றின் மீது இடிந்து விழுந்த மண் மேட்டின் கீழ் புதைந்திருந்த ஐந்து பேரை அப்பகுதி மக்கள் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் நேற்று செவ்வாய்க்கிழமை (05) மஸ்கெலியா பகுதியில் பெய்த கடும் மழையினால் வீடொன்றின் மீது பாரிய மண் திட்டு சரிந்து வீழ்ந்துள்ளது. இன்று புதன்கிழமை (06) மதியம் 12:00 மணியளவில் அந்த மண் மேட்டை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த ஐவர் மீது மற்றொரு மண் மேடு சரிந்து விழுந்துள்ளது. பொது மக்கள் இணைந்து மண் மேட்டின் கீழ் புதையுண்டிருந்த ஐவரையும் மீட்டு மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். https://www.virakesari.lk/article/221950

96ஆவது அகவையில் தடம் பதிக்கிறது வீரகேசரி! : நூற்றாண்டை நோக்கி வீறுநடை!

1 month 3 weeks ago
Published By: NANTHINI 06 AUG, 2025 | 07:44 PM வரலாற்றில் இன்று : ஒரு நாளேடு உதயமான கதை! (மா.உஷாநந்தினி) வரலாற்றில் இன்று, அதிசிறப்பான ஒரு நாள். ஒரு தமிழ்ப் பத்திரிகைப் பரம்பரையின் முதல் தலைமுறை, முதல் முறையாகக் கண்டு, கைகளில் தாங்கி, முகர்ந்து, அறிவாலும் உணர்வுகளாலும் அனுபவித்துக் கொண்டாடிய, ஒரு நாளேட்டின் உதயம், இதே புதன்கிழமையில், இதே திகதியில், 95 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்தது. “இலங்கைவாழ் தமிழ் மக்கள் பேராவலோடு எதிர்நோக்கியிருந்த சீரிய, தேசீய, செந்தமிழ்த் தேன்பிலிற்றும், தினசரி ‘வீரகேசரி’ என்ற இன்னுரைக் களஞ்சியம் வெளிவந்துவிட்டது!” என்ற பேரறிவிப்போடு, 1930ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6ஆம் திகதி நிகழ்ந்த, அந்த அற்புதமான, அதி உன்னதமான தொடக்கத்தையும், இன்றைய தினம், 95ஆவது அகவையை நிறைவு செய்து, 96ஆவது அகவையில் தடம் பதித்திருக்கும் ‘வீரகேசரி’யையும், சிரேஷ்ட மற்றும் புதிய தலைமுறை ஊழியர்கள், வாசகர்கள் என அனைவரும் ஆத்மார்த்தமாக மகிழ்ந்து வரவேற்கின்றனர் என்பதை இக்கணம் உணர முடிகிறது. துணிவும் கம்பீரமும் அறிவொளியும் நடுநிலையும் பொருந்திய ‘வீரகேசரி’யானது மிக விரைவில், நூற்றாண்டு பயணச் சாதனையை அடையப்போகும் நன்னாளுக்காக நம்பிக்கையோடு காத்திருக்கும், இத்தமிழ் ஊடகத்தை அடையாளமாகக் கொண்டு இயங்கி வரும் ஸ்தாபனமான எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் (சிலோன்) (பிரைவேட்) லிமிட்டெட் நிறுவனத்தின் ஊழியர்களின் உழைப்பும் நலன் விரும்பிகளின் ஆலோசனைகளும் ஆதரவும் வாசகப் பெருமக்கள் அளிக்கும் வரவேற்பும் அன்பும் அளவிட முடியாதது. இப்பத்திரிகையின் மீது வாசகர்கள் சில விமர்சனங்கள், மாற்றுக் கருத்துக்களைக் கொண்டுள்ள போதிலும், “வாசிக்க ஆரம்பித்த நாள் முதல் இன்று வரை வீரகேசரியுடன் இருக்கிறேன்...” என்று சொல்பவர்களையும் பார்த்திருக்கிறேன்... “காலையில் முதல் வேலையாக, வீரகேசரியை வாங்கி முழுதாய் வாசித்துவிட்டுத்தான் மறுவேலை!” என்று உரிமை பாராட்டுபவர்களையும் சந்தித்திருக்கிறேன். பேருந்தின் ஜன்னலோரம் உட்கார்ந்து, ஒரு முதியவர், வீரகேசரியை விரித்து, பின்பு, தான் வாசிக்கவேண்டிய ஒரு சிறு பகுதியை மட்டுமே, காகிதமும் கசங்காமல், கைக்கும் நோகாமல் நேர்த்தியாக, இரண்டு மூன்று மடிப்பாக மடித்து, வாசிக்கின்ற அழகையும் பார்த்திருக்கிறேன். நாளேடுகளை ஓர் எளிய வாசகன் கையாளும் விதம் அத்தனை அழகு! ஒரு பத்திரிகையின் ஆணிவேரும் வாசகன்தான். அதன் இருப்பைத் தீர்மானிப்பவனும் வாசகன்தான். அந்த வகையில், வாசகர்களின் உற்சாகமும் ஒத்துழைப்பும் அவர்களது அறிவுத் தேடலுமே, ‘வீரகேசரி’ என்ற நாமம் தரித்த இந்தப் பாரம்பரிய ஊடகத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக விளங்குகிறது என்றால் அது மிகையல்ல. 'தரமான வழியில் தெளிவான தகவல்’ என்ற மகுட வாசகத்துக்கு இணங்க, தரமான உள்ளடக்கங்களும், தெளிவான அறிக்கையிடலும் அறம் பிறழாத அணுகுமுறைகளும் விசாலமான கருத்துச் செறிவும் அறிவார்ந்த கருத்தாடல்களும் ஆச்சரியமூட்டும் கருத்துக்கணிப்புகளும் வீரகேசரிக்கு தனித்துப் பெருமை சேர்க்கின்றன. உள்ளூர், உள்நாட்டு விவகாரங்களில் மட்டுமல்ல, சர்வதேசமெங்கும் தொலைநோக்குப் பார்வையை செலுத்தி, உலகில், எங்கோ ஒரு புள்ளியில் நிகழும் சிறு சம்பவமாயினும், உலகளாவிய பிரச்சினைகளாயினும் பாரதூரமான விவகாரங்களாயினும், அவற்றையும் பொதுவெளிக்குக் கொண்டு வருகிறது. பல்வேறு சமூகத்தினர் இணைந்து வாழும் இந்நாட்டில், அந்தந்த சமூகத்தவர்களின் வளமான வாழ்க்கைக்காகவும், பொருளாதார எழுச்சிக்காகவும் மக்களது வாழ்வியல் மேம்பாட்டுக்காகவும் சமூக அபிவிருத்தி நலன்களுக்காகவும் கொண்டுவரப்பட்ட சில திட்டங்கள் கூட, ஒரு தமிழ்ப் பத்திரிகை என்ற வகையில், வீரகேசரி தலையிட்டு வெற்றிகரமாக செயற்படுத்த துணை புரிந்ததற்கு, கடந்த கால வரலாறுகள் சான்றுகளாகின்றன. அத்தோடல்லாமல், வீதி அபிவிருத்தி என்ற பெயரில் இடம்பெறும் மோசடிகள், பின்தங்கிய கிராமங்களில் காணப்படும் பிரச்சினைகள், சரிவர பராமரிக்கப்படாத பாடசாலைகளின் நிலைமைகள், கல்வியில் பின்நிற்கும் மாணவர்களின் எதிர்காலம் குறித்த கரிசனை, பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள், பால்புதுமையினருக்கு எதிரான கடும்போக்குத்தனம், இயற்கைப் பேரிடர்களால் பாதிக்கப்படும் மக்களின் அவல நிலை, போதைப்பொருள் பாவனை உள்ளிட்ட சமுதாய சீர்கேட்டுத்தனங்களை சுட்டிக்காட்டியும், கண்டித்தும் கரிசனையோடு குரல் கொடுத்து வருகிறது. பத்திரிகைத்தர்மம் காப்பதில் காலங்காலமாக வெவ்வேறு சந்தர்ப்பங்களில், இடையூறுகளுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் வீரகேசரி முகங்கொடுத்து வருகிறபோதிலும், நேர்மையான செய்தியிடலின் ஊடாக துணிவோடு நீதியை சுட்டிக்காட்டவோ, பொதுமக்களின் பிரச்சினைகளையும் அவலங்களையும் வெளிச்சம் போட்டுக் காட்டவோ, அவற்றுக்கான தீர்வுகளை நாடவோ வீரகேசரி பின்நிற்பதில்லை. உள்நாட்டு யுத்த சூழ்நிலைகள், இனக் கலவரங்கள், வன்செயல்கள், சமூக சீர்கேடுகள், கல்வி மற்றும் கலாசார முரண்பாடுகள், பாதாள உலகக் கும்பல்களின் அராஜகங்கள், அரசியல் குழப்பங்கள், சில அரசியல்வாதிகளின் இடையூறுகள், ஊடக அடக்குமுறைகளையும் தொடர்ந்து வீரகேசரி சந்தித்திருக்கிறது. அதைவிடவும் நாட்டில் அதிகப்படியாக தலைவிரித்தாடிய இனக் கலவரங்களால் தமிழர்கள் சந்தித்த இடப்பெயர்வுகள், போராட்டங்கள், பத்திரிகை நிறுவன ஊழியர் பற்றாக்குறை, உற்பத்திக்கான வசதி வளம் குன்றியமை, சுனாமி ஆழிப் பேரலை அனர்த்தம், கொரோனோ நோய்த்தொற்றுப் பரவல், பொருளாதார நெருக்கடி, அரசியல் குளறுபடிகள், போராட்ட நிலைமைகள், உணவு மற்றும் எரிபொருள் பற்றாக்குறைகள், அனைத்துக்கும் மேலாக, அச்சுப் பணியை கொண்டுசெல்வதில் பெருந்தடையாய் உருவெடுத்த காகிதப் பற்றாக்குறை, ஊழியர்களின் பணி இடைநிறுத்தம் முதலான பாரிய வீழ்ச்சிகளையும் மேடு பள்ளங்களையும் கையறு நிலையையும் இப்பத்திரிகை நிறுவனம் கடுமையாக எதிர்த்துப் போராடியிருக்கிறது. எனினும், எத்தனைத் தடைகள் வந்துபோனபோதிலும், ஊழியர்களது தளராத உழைப்பும், வாசகர்கள் இப்பத்திரிகையின் மீது கொண்ட நம்பிக்கையுமே வீரகேசரியை மீண்டும் மீண்டும் தூக்கி நிறுத்தியிருக்கிறது என்றே சொல்லவேண்டும். வீரகேசரி உருவான கதை ‘வீரகேசரி’யின் வெற்றிப் பயணத்தை இன்று நாம் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம். ஆனால், இந்த நாளேடு ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து, இன்று வரை, இந்த ஒன்பது தசாப்தங்களுக்கும் மேலான பயணம், அத்தனை எளிதானதல்ல. தமிழ்ப் பேசும் மக்களுக்காக, ஒரு தமிழ் தேசிய நாளேடு தோன்றிய காலமும் பொற்காலமன்று, அது, 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பகாலம். இலங்கை சுதந்திரம் அடைவதற்கு முந்தைய அந்தக் காலகட்டத்தில் வாழ்ந்த தமிழ் மக்களைப் பற்றி நாம் சற்றே சிந்தித்தாக வேண்டும். அன்றைய தமிழ் மக்களின் மனநிலையும் வாழ்க்கை முறையும் பெரிதும் வேறு. அவர்கள் வெகுளித்தனமானவர்கள். வெளியுலகம் அறியாதவர்கள். நாட்டு நடப்போ உலக நிலைவரமோ தெரியாதவர்களாகத்தான் அவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். காரணம், நாட்டிலும் உலகிலும் நடக்கும் விடயங்களை அன்றைய தமிழ் மக்களுக்கு அறியத்தர, ஒரு தமிழ் ஊடகம் அப்போது நம் நாட்டில் இருக்கவில்லை. அந்த காலகட்டத்தில் ‘கொழும்பு ஜேர்னல்’ என்றொரு ஆங்கிலப் பத்திரிகையும், ‘லங்கா லோக்கய’ என்ற சிங்கள பத்திரிகையும் ‘உதய தாரகை’ என்றொரு தமிழ்ப் பத்திரிகையும் வெளிவந்துகொண்டிருந்தன. இவற்றில் ‘கொழும்பு ஜேர்னல்’, 1832இல் வெளியான முதல் ஆங்கிலப் பத்திரிகையாகவும், ‘லங்கா லோக்கய’, 1860இல் காலியில் வெளியான முதல் சிங்கள பத்திரிகையாகவும், ‘உதய தாரகை’, 1841இல் யாழ்ப்பாணத்தில் வெளியான முதல் தமிழ்ப் பத்திரிகையாகவும் அறிமுகமாயின. அப்போது ‘உதய தாரகை’ தமிழ்ப் பத்திரிகை வெளிவந்தபோதும், அது, யாழ்ப்பாண மாவட்டத்தில் மட்டுமே விற்பனையாகி வந்தது. இதனால், யாழ்ப்பாண மாவட்ட தமிழ் மக்களைத் தவிர, வேறு மாவட்டங்களைச் சேர்ந்த தமிழ் மக்களால் அந்தப் பத்திரிகையைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலை இருந்தது. அவ்வாறான ஒரு சூழ்நிலையில், இலங்கைவாழ் இந்தியத் தமிழரான திரு. பெ.பெரி. சுப்பிரமணியம் செட்டியார் அவர்கள், நாடெங்கும் உள்ள அனைத்து தமிழ்ப் பேசும் மக்களும் வாசித்து, உலக நடப்புகளை அறிந்து, பயன் பெறும் வகையில், ஒரு தமிழ்ப் பத்திரிகையை தேசிய அளவில் உருவாக்க வேண்டும் எனக் கருதினார். அது மட்டுமன்றி, அக்காலகட்டத்தில், நாட்டில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளைக் கூட தமிழ் மக்களால் அறிந்துகொள்ள முடியவில்லை. 1927ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து மகாத்மா காந்தி இலங்கைக்கு வருகை தந்தபோது, அவரது இலங்கை விஜயம் பற்றியோ அதன் நோக்கம் பற்றியோ, மக்களுக்காக காந்தி ஆற்றிய உரையோ கருத்துக்களோ எதுவுமே தமிழ் மக்களை போய்ச் சேரவில்லை. இதுபோன்ற முக்கியமான வரலாற்று நிகழ்வுகள், சம்பவங்கள், நாட்டு நிலவரம் குறித்து தமிழ் மக்களுக்கு அறியத்தருவதற்கென ஒரு தமிழ்ப் பத்திரிகை இல்லையே என்ற தவிப்பும் ஏக்கமும் சுப்பிரமணியம் செட்டியார் அவர்களுக்கு நிச்சயம் ஏற்பட்டிருக்கும். தவிர, மலையக மக்கள் மீதும் கரிசனை கொண்ட சுப்பிரமணியம் செட்டியார் அவர்கள், அந்த மக்களின் பிரச்சினைகளும் தேவைகளும் வெளியுலகுக்குத் தெரியவரவேண்டும் எனில், அதற்காகவேனும் ஒரு தமிழ்ப் பத்திரிகை கட்டாயம் தேவை என்று சிந்தித்தார். காலச் சூழ்நிலைகளையும் தேவைகளையும் கருத்திற்கொண்டு, தமிழ்ப் பேசும் மக்களின் குரலாக ‘வீரகேசரி’ என்கிற ஒரு தேசிய தமிழ்ப் பத்திரிகையை உருவாக்கினார். கேசரி என்றால் சிங்கம். சுப்பிரமணியம் செட்டியாரின் துணிவு மிகு பிரவேசமாக ‘வீரகேசரி’ வெளியாவதை எடுத்துக்காட்டும் விதமாக, பெயருக்குத் தகுந்தாற்போல் வாளேந்திய இரண்டு சிங்கங்களின் உருவங்கள் வீரகேசரி இலச்சினையில் வரையப்பட்டன. 1930ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6ஆம் திகதி புதன்கிழமை வீரகேசரியின் முதல் நாளிதழ் 8 பக்கங்களை உள்ளடக்கி வெளியானது. அந்த முதல் நாளேட்டின் விலை வெறும் 5 சதமே என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? அன்றைய வீரகேசரி காரியாலயம் கொழும்பு - மருதானையில் அமைந்திருந்தது. அதன் பின்னர், கொட்டாஞ்சேனைக்கு மாற்றப்பட்டு, சிறிது காலத்தின் பின், தற்போதைய அமைவிடமான கொழும்பு - கிராண்ட்பாஸ் பிரதேசத்துக்கு மாற்றப்பட்டு, இன்று வரை நிலைபெற்றிருக்கிறது. ‘வீரகேசரி’ ஆசிரியர்களும் முகாமைத்துவப் பணிப்பாளர்களும் வீரகேசரியின் ஸ்தாபகரும் அதன் ஆசிரியருமான திரு. பெ.பெரி.சுப்பிரமணியம் செட்டியாரைத் தொடர்ந்து, திரு. எச். நெல்லையா, திரு. வ.ராமசாமி, திரு. கே.பி.ஹரன், திரு. கே.வி.எஸ்.வாஸ், திரு. கே.சிவப்பிரகாசம், திரு. ஆ.சிவனேசச்செல்வன், திரு. எஸ்.நடராசா, திரு. ஆர்.பிரபாகன் ஆகியோர் ஆசிரியர்களாக பணிபுரிந்துள்ளனர். இவர்களின் வரிசையில், தற்போது திரு. எஸ்.ஸ்ரீகஜன் பிரதம ஆசிரியராகக் கடமையாற்றி வருகிறார். வீரகேசரி ஸ்தாபனமானது, எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் (சிலோன்) (பிரைவேட்) லிமிட்டெட் என மாற்றப்பட்ட பின்னர், இந்த ஸ்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர்களாக திரு.டி.பி.கேசவன் கடமையாற்றினார். அவரையடுத்து, திரு. ஹரோல்ட் பீரிஸ், திரு. ஆர்.ஏ.நடேசன், திரு. எஸ்.கிருஷ்ணமூர்த்தி, திரு. ஏ.வை.எஸ்.ஞானம், திரு. எம்.ஜி.வென்சஸ்லாஸ் ஆகியோர் பதவி வகித்தனர். அவர்களை அடுத்து, தற்போது, எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் (சிலோன்) (பிரைவேட்) லிமிட்டெட் ஸ்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளராக திரு. குமார் நடேசன் வழிநடத்தி வருகிறார். நாளேட்டுக்கு நிகரான சஞ்சிகைகள் வீரகேசரி இதழுக்கு நிகராக, ஆரம்ப காலங்களில் நாளேட்டுடன் இணைந்து வெளியான சஞ்சிகைகளும் விசேட பக்கங்களும் கூட பெரிதளவில் வாசகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றன. அந்த வகையில், 1960களில் தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகளை வெளிப்படுத்தும் ‘தோட்ட மஞ்சரி’, ‘குறிஞ்சி மலர்’ போன்றன பெரிதளவில் பேசப்பட்டன. அத்துடன் அதே ஆண்டில் வெளியான ‘மித்திரன்’ மாலை தினசரி, ‘ஜோதி’ குடும்ப வார சஞ்சிகை, பின் ‘மித்திரன் வாரமலர்’ ஆகியவை வாசகர்களை அதிகமாக ஈர்த்தன. அதன் பின், மெட்ரோ நியூஸ், விடிவெள்ளி, சுகவாழ்வு, கலைக்கேசரி, ஜோதிட கேசரி, ஜீனியஸ், தமிழ் டைம்ஸ், சூரியகாந்தி, நாணயம், சுட்டி கேசரி, ஜூனியர் கேசரி, மாலை எக்ஸ்பிரஸ், Weekend Express என மேலும் சில வெளியீடுகள் வரத் தொடங்கின. எனினும், 2020ஆம் ஆண்டு கொரோனோ நோய்த்தொற்றுப் பரவலின் தாக்கம் காரணமாக நாடு முடக்கப்பட்டமை, பின்னர் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி ஆகிய காரணங்களால் அனேகமான இணை வெளியீடுகள் நிறுத்தப்பட்டன. தற்போது ‘வீரகேசரி நாளிதழ்’, ‘வீரகேசரி வாரஇதழ்’ மற்றும் ‘விடிவெள்ளி’ ஆகிய பத்திரிகைகள் மட்டுமே வெளிவருவதோடு, இம்மூன்று பத்திரிகைகளுடன் சேர்ந்து மித்திரன் வாரமலரும் மின்னிதழாக (E-Paper) வெளியாகின்றமை குறிப்பிடத்தக்கது. சில முக்கிய வரலாற்றுப் பதிவுகள் வீரகேசரி உருவான நாள் முதல் இன்று வரை, உள்நாடு மற்றும் சர்வதேச அளவில் இடம்பெற்றுள்ள பல்வேறு முக்கிய வரலாற்று நிகழ்வுகளை பத்திரிகைகளில் செய்திகளாக, ஆசிரியர் தலையங்கங்களாக, கட்டுரைகளாக, ஆக்கங்களாக, பத்திகளாக பதிவு செய்துள்ளன. அவற்றில் சில நிகழ்வுகளை நோக்குவோமாயின், 'சங்கநாதத்துடன் இலங்கை சுதந்தரோதயம்' (1948.2.4) 'இந்தியா பூரண சுதந்திர குடியரசாகிறது' (1950.1.26) 'நீச்சல் வீரர் நவரத்தினசாமி வல்வெட்டித்துறையில் இருந்து பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து தமிழகம் கோடிக்கரையை அடைந்து சாதனை' (1954) போன்றவற்றை குறிப்பிடலாம். இவற்றோடு, தனிச்சிங்கள சட்டம் (1956), பண்டா - செல்வா ஒப்பந்தம் (1957), இன வன்முறை சம்பவங்கள் (1958), ஸ்ரீ குழப்பம், முன்னாள் பிரதமர் பண்டாரநாயக்க படுகொலை - வழக்கு (1959), தமிழரசுக் கட்சியின் வடக்கு கிழக்கு சத்தியாக்கிரகம் (1961), சீன கம்யூனிஸ்ட் கட்சி யாழ். மே தின ஊர்வலம் மீது பொலிஸார் தாக்குதல், அமெரிக்க தூதுவர் மீது முட்டை வீச்சு (1965), ஜே.வி.பி. ஆயுதப் போராட்டம், யாழ். நூலக எரிப்பு (1981) முதலானவற்றை பதிவிட்டுள்ளன. மேலும், பரிசுத்த பாப்பரசர் சின்னப்பர் மறைவு, தந்தை செல்வா மறைவு, சீன மக்கள் குடியரசு தலைவர் மாவோ சே துங் மறைவு, கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமான விடயம், இந்திய அரசியல் தலைவர் காமராஜர் மறைவு, கிழக்கு பாகிஸ்தானை பங்களாதேஷ் என இந்தியா அங்கீகரித்தமை, மறைந்த இந்திய முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் இலங்கை விஜயம் போன்றனவும் அடங்குகின்றன. பின்வந்த நாட்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் இன ரீதியான போராட்டம் முடிவுற்றமை, அரசியல் கட்சிகளிடையே முறுகல் நிலை, குருந்தூர் மலை விவகாரம், கொரோனா பெருந்தொற்றுப் பரவல் - நாடு முடக்கப்பட்டமை, அரசியல் கட்சிகளிடையே மோதல், பொருளாதார நெருக்கடி, அரகலய மக்கள் போராட்டம், பாப்பரசர் பிரான்ஸிஸின் மறைவு, 2024 ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்ற அநுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாக தெரிவாகி பதவியேற்றமை, ஜே.வி.பி. ஆட்சியில் புதிய அரசாங்கம், செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம்.... போன்ற காத்திரமான செய்திகளாயினும், அவற்றை மிகைப்படுத்தல் இன்றி, நடுநிலையுடன் அறிக்கையிடுவதிலும் பிரசுரிப்பதிலும் வீரகேசரி அவதானமாக செயற்படுகிறது. இணைய, டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சி அன்று, எழுத்துக்கள் காகிதங்களில் அச்சேற்றப்பட்டு, அச்சு ஊடகமாக உருப்பெற்ற வீரகேசரி, இன்று, இணையமேறி, டிஜிட்டல் தொழில்நுட்ப வசதிகளின் ஊடாக, பல்வேறு நவீனங்களைத் தாங்கி, பரிணாமம் அடைந்து, உரு மாறி, இன்றைய காலச் சூழ்நிலைக்கு ஏற்ப, பொதுமக்களை எளிய முறையில் அணுகும் இலத்திரனியல் ஊடகமாகவும் மிளிர்கிறது. அவ்வாறே செய்திகள், கட்டுரைகள், நேர்காணல்கள், விளம்பரங்கள், ஏனைய அறிவித்தல்களை தாங்கியவாறு வீரகேசரி நாளிதழ் மற்றும் வார இதழ் வெளிவருவதோடு, நாளேட்டின் உள்ளடக்கங்கள் இணையத்தில் கட்டமைக்கப்பட்டு, வீரகேசரி இணையத்தள செய்திச் சேவையும் தனித்துவமாக இயங்கி வருகிறது. 2002ஆம் ஆண்டு இலங்கையில் முதல் தமிழ் செய்தி இணையத்தளமாக virakesari.lk உருவாக்கப்பட்டது. இதழியலை இலத்திரனியலோடு இணைக்கும் அடுத்தகட்ட முயற்சியாக 2005இல் வீரகேசரி மின்னிதழாக (E-paper) பதிவாகத் தொடங்கியது. வீரகேசரி வெறுமனே பத்திரிகைகளாக மாத்திரம் கைகளில் தவழ்ந்த காலம் போய், இன்று எண்ணும சஞ்சிகைகளாகவும் இணையத்தில் உலா வருவதைக் காண்கிறபோது, நாளுக்கு நாள் வீரகேசரி அதன் இருப்பை புதுப்பித்துக்கொள்கிற விதம் ஆச்சரியம்தான். அவ்வாறே, இணையத்தின் மூலம் பத்திரிகையை பல தளங்களிலும் உலகெங்கிலும் உள்ள தமிழ் பேசும் மக்களுக்கு எடுத்துச் சென்ற வீரகேசரி இணையத்தளமானது, 2010ஆம் ஆண்டில் “இலங்கையின் அபிமான தமிழ் இணையத்தளமாக” bestweb.lkஆல் தெரிவுசெய்யப்பட்டது. அத்துடன், நமது செய்திகள், நேர்காணல்கள், அரசியல் மற்றும் சமூகம் சார் கருத்துக்கணிப்புகள், பொருளாதார நிலவரம், குற்றச் சம்பவங்கள், வரலாற்று ஆவணப் பதிவுகள், விளையாட்டு, சினிமா சுவாரஸ்யங்கள், கலை, கலாசார நிகழ்வுகள், சமையல் குறிப்புகள், மருத்துவம், மங்கையருக்கான அம்சங்கள் போன்றவை ஒளிஃ ஒலி வடிவ இணைப்புப் பெற்று, காணொளிகளாக உருவாக்கப்பட்டு, வீரகேசரி என்ற ஒற்றைக் குடையின் கீழ் இணையவெளியில் பதிவிடப்பட்டு, அவை யூடியூப், முகநூல், எக்ஸ் தளம், வட்ஸ்அப் முதலிய சமூக ஊடகங்களிலும் பகிரப்பட்டு, வாசகர்களின் காட்சிக்கெளியனாகவும் தோன்றுவது, வீரகேசரியின் மற்றுமொரு வளர்ச்சி. ‘வீரகேசரி’ பற்றி திரு. பெ.பெரி. சுப்பிரமணியம் செட்டியார் அவர்களின் நினைவுப் பதிவு ‘வீரகேசரி’யின் முதலாவது நாளிதழில், அதன் ஆசிரியரான திரு. பெ.பெரி. சுப்பிரமணியம் செட்டியார் அவர்கள், தனது ஆசிரியத் தலையங்கத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “தன்னால் இயன்ற அளவு பொது ஜனங்களுக்குத் தொண்டு செய்ய வேண்டுமென்ற அவாவினால் தூண்டப்பட்டே வீரகேசரி தோன்றுகிறான். அசாதாரண காரியங்களைச் செய்து முடிக்கும் திறன் பெற்றவனென அவன் வீறு பேசுத் தயாராயில்லை. நியாய வரம்பை எட்டுணையும் மீறாமல், நடுநிலைமையிலிருந்து, உலகத்தின் முன்னேற்றத்திற்கான இயக்கங்களையும் பிரச்சினைகளையும் பரிவுடன் ஆராய்ந்து, பொதுஜன அபிப்பிராயத்தை நல்ல முறையில் உருவகப்படுத்த வேண்டியதையே வீரகேசரி தன்னுடைய முதற்கடனாகக் கொண்டுள்ளான். இராஜீய, சமூக, பொருளாதாரப் பிரச்சினைகளை வீரகேசரி அவ்வப்போது ஆராய்வதிலிருந்து இவ்வுண்மையை நண்பர்கள் அறிந்துகொள்ளட்டும். தாராள சிந்தனையும், பரந்த நோக்கும், சமரஸ உணர்ச்சியும் பெற்ற வீரகேசரி, சமயச் சண்டைகளில், சாதிச் சமர்களில், வீண்கிளர்ச்சிகளில், கலந்துகொள்ள மாட்டான். நியாயமே அவன் வீற்றிருக்கும் பீடம், அவனது அபிப்பிராயங்கள் நீதியையே அடிப்படையாகப் பெற்றிருக்கும். பொதுஜனங்களுடைய உரிமைகளைப் பாதுகாக்கும் விஷயத்தில் தளராத ஊக்கமும், சலியாத உழைப்பும் அசைக்க முடியாத உறுதியும் காட்டி நமது கேசரி திகழ்வான்........................................................ மிகப் பெரிய பொறுப்பைத் தாங்கிக்கொண்டு, உயர்ந்த நோக்கங்களுடன் வெளிவரும் வீரகேசரி, தமிழ் மக்களின் ஆதரவையும், அன்பையும் நாடுகிறான்.” வீரகேசரி பத்திரிகையை ஆரம்பித்ததன் பின்னணியில் உள்ள தனது நோக்கத்தை இவ்வாறு அவர் வெளிப்படுத்தியிருந்தார். பத்து வருடங்களுக்குப் பின்... 1940 ‘வீரகேசரி’யில் சுப்பிரமணியம் செட்டியார்... அதன் பிறகு, பத்து ஆண்டுகள் கழித்து, வீரகேசரியின் பத்தாவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு, 1940ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6ஆம் திகதி வெளியான வீரகேசரி நாளிதழின் 6ஆம் பக்கத்தில், சுப்பிரமணியம் செட்டியார் எழுதிய “வீரகேசரியின் வளர்ச்சி வரலாறு” என்கிற கட்டுரைத் தொடர்ச்சியைக் காணக் கிடைத்தது. அதில் அவர், “பத்து வருடங்களுக்கு முன்னர் விளையாட்டாக நான் இந்த 'வீரகேசரி’யை ஆரம்பித்தேன். அது இன்று மிகப் பெரிய அமைப்பாகவும், மதிக்கமுடியாத மாணிக்கமாகவும், ஒப்புயர்வற்ற தொண்டனாகவும் ஓங்கி வளர்ந்துவிட்டது. மனித வாழ்க்கை நிலையில்லாதது. இன்னும் சில வருடங்களோ, பல வருடங்களோ நான் இந்த ‘வீரகேசரி’யை நடத்திக்கொண்டு போகமுடியும். அதற்குப் பின்னர் ‘வீரகேசரி’யின் நிலை என்ன? ‘வீரகேசரி’யின் தொண்டும், ‘வீரகேசரி’யும் இலங்கையில் சாசுவதமாக இருக்க வேண்டும்” என்று கேசரி மீதான தனது அபிலாசையினை வெளிப்படுத்தியிருந்தார். அன்று, அவர் எண்ணியது, விரும்பியது, எதிர்பார்த்தது இன்று பல மடங்கு நிறைவேறியிருக்கிறது. ஒவ்வோர் ஆண்டாக முன்னகர்ந்து, 96ஆவது அகவையை எட்டியுள்ள ‘வீரகேசரி’ விரைவில் நூறு ஆண்டுகளைத் தொட்டு, இலங்கையின் தமிழ் நாளேடுகளில் நூற்றாண்டு நாயகனாக சாதனை படைக்கும் நாளை நோக்கி நாமும் கம்பீரமாக, சந்தோஷமாக பயணிப்போம்....! வீரகேசரியின் நெஞ்சார்ந்த நன்றிகள் அனைவருக்கும் உரித்தாகட்டும்! https://www.virakesari.lk/article/221915

தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனை வழிநின்று நாசகாரச் சக்திகளை விரட்டியடிப்போம்!

1 month 3 weeks ago
தலைவர் இறந்து விட்டார் என்பதை இந்தியா ஸ்ரீலங்கா போன்ற நாடுகள் அடுத்த நூறு ஆண்டுகளுக்கு அல்லது எப்போதுமே தெளிவுபடுத்த போவதில்லை. அப்படி தெளிவுபடுத்துவதாக இருந்தால் அவர்கள் மே 2009 செய்திருக்க முடியும். அவர்களை பொறுத்த வரை தமிழர்களுக்கு இந்த குழப்பம் இன்னும் ஒன்று அல்லது இரண்டு தலைமுறைகள் அழியும் வரை இருக்க வேண்டும். இதை வைத்தே தமிழர்கள் தங்களுக்குள்ள குழுக்களாக மோதி நேரத்தை செலவிடுவது அவர்களுக்கு சாதகமானது. நாமும் 16 ஆண்டுகளாக வெற்றிகரமாக அந்த நிகழ்ச்சி நிரலை செய்துகொண்டு இருக்கிறோம். 02.08. சுவிசில் அஞ்சலிக்கூட்டம் நடத்தியவர்கள் அடுத்து வரும் ஆண்டுகளில் தலைவருக்கும் மாவீரர் தினத்தில் தான் அஞ்சலி செலுத்தப்படும் என்று கூறியிருக்கிறார்கள். அடுத்த மாவீரர் தினம் இரண்டாக நடந்தாலும் நடப்பதற்கு வாய்ப்புள்ளது. மே 18 என்பது தலைவருக்கான அஞ்சலி நாளாக அமையாது. அது தமிழின அழிப்பு நாள் என்றே தொடர்ந்து இருக்கும் என்றும் சொல்லியிருக்கிறார்கள்.

ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்

1 month 3 weeks ago
உக்ரைனின் விசேட படைப்பிரிவினரின் தாக்குதலில் 330 ரஸ்ய படையினர் பலி - 550க்கும் அதிகமானவர்களிற்கு காயம் 06 AUG, 2025 | 02:55 PM உக்ரைனின் விசேட படைப்பிரிவினர் மேற்கொண்ட தாக்குதலொன்றில் 330 ரஸ்ய படையினர் கொல்லப்பட்டுள்ளனர் என உக்ரைனின் பாதுகாப்பு புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது. உக்ரைனின் விசேட படைப்பிரிவான டிமுர் எதிரிகளின் நிலைகளிற்குள் ஊருடுவி மேற்கொண்ட தாக்குதலில் விளாடிமிர் புட்டினின் பெருமளவு படையினரை கொன்றுள்ளனர் என உக்ரைனின் பாதுகாப்பு புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது. இருதரப்பும் நெருக்கமான கடும்மோதலில் ஈடுபட்டனர் ஆளில்லா விமான ஆட்டிலறி தாக்குதல்களும் இடம்பெற்றன என உக்ரைன் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக சமி என்ற பகுதியை நோக்கி ரஸ்யாவின் முன்னேற்றம் இடைநிறுத்தப்பட்டுள்ளது என உக்ரைன் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல் இடம்பெற்ற திகதியை உக்ரைன் குறிப்பிடவில்லை எனினும் கடந்த சில வாரங்களாக உக்ரைனின் கடும் தாக்குதலால் ரஸ்யாவின் முன்னேற்றம் நிறுத்தப்பட்டுள்ளது என டெலிகிராவ் தெரிவித்துள்ளது. உக்ரைனின் படையினர் தாழப்பறக்கும் ஹெலிக்கொப்டரில் இலக்குகளை நோக்கி செல்வதையும்,காட்டுப்பகுதியில் மோதலில் ஈடுபடுவதையும் காண்பிக்கும் வீடியோவை உக்ரைன் வெளியிட்டுள்ளது. ரஸ்ய படையினர் உக்ரைனின் நிலைகளை தாக்க மறுத்துள்ளமை அவர்கள் மத்தியிலான உரையாடல்களை இடைமறித்து கேட்டபோது தெரியவந்துள்ளதுஎன தெரிவித்துள்ள உக்ரைனின் இராணுவ புலனாய்வு பிரிவு 334 ரஸ்ய படையினர் கொல்லப்பட்டனர், 550க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர் என தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/221934

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ கைது!

1 month 3 weeks ago
காலையில் கைதுசெய்யப்பட்ட சஷீந்திர ராஜபக்‌ஷ, விளக்கமறியல் ஜெயிலில் வைக்கப்பட்டார். அவர் கைதுசெய்யப்பட்டு அழைத்து செல்லப்படுவதை படங்களில் காணலாம்! Vaanam.lk

மாற்றுத்திறனாளிகளின் கலைத் திறமைக்கு தேசிய மேடை!

1 month 3 weeks ago
மாற்றுத்திறனாளிகளின் கலைத் திறமைக்கு தேசிய மேடை! மாற்றுத்திறனாளி சிறுவர்களின் அழகியல் திறமைகளை தேசிய மட்டத்திற்கு கொண்டு செல்வதற்காக சமூக சேவைகள் திணைக்களத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘சித் ரூ – 2025’ கலை நிகழ்ச்சி கொழும்பு தாமரைத் தடாக அரங்கில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. ‘ஒன்றாக – கைவிடாத’ எனும் அரசாங்கத்தின் தேசிய கொள்கையின் கீழ் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளை பாதுகாத்து, சமூகமயப்படுத்தல், வலுப்படுத்தல் மற்றும் நாட்டின் பொருளாதார செயற்பாட்டில் அவர்களின் பங்கேற்பை உறுதிப்படுத்தும் முயற்சியாக இந்நிகழ்ச்சி நடை பெற்றது. ஆறு வருட இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் இடம்பெற்ற இந்த நிகழ்வுக்காக சமூக சேவைகள் திணைக்களத்துக்கு இவ்வாண்டு வரவுசெலவுத் திட்டத்தின் கீழ் ரூ.632 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. மாகாண மட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற சிறுவர் வழிகாட்டல் மையங்கள், சிறுவர் பராமரிப்பு மையங்கள் மற்றும் தொழிற்பயிற்சி நிறுவனங்களில் பயிலும் பிள்ளைகள் இந்நிகழ்வில் பங்கேற்றனர். இதன்போது ஜனாதிபதி அவர்களுக்கு பரிசுகள் மற்றும் விருதுகளை வழங்கி கௌரவித்திருந்தார். அத்துடன் பிள்ளைகளுடன் நேரில் உரையாடியும், குழு புகைப்படங்கள் எடுத்தும் தனது அன்பை பகிர்ந்துகொண்டார். இதன்போது , மாணவியொருவரால் வரையப்பட்ட ஜனாதிபதியின் ஓவியமும், ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது. நிகழ்வில் அமைச்சர் உபாலி பன்னிலகே, பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ, சமூக சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். https://athavannews.com/2025/1442018

புலம்பெயர் தமிழர்கள் பழிவாங்கல் செயற்பாட்டினை ஜனாதிபதி மூலம் முன்னெடுக்கின்றனர் – விமல்வீரவங்ச

1 month 3 weeks ago
புலம்பெயர் தமிழர்கள் பழிவாங்கல் செயற்பாட்டினை ஜனாதிபதி மூலம் முன்னெடுக்கின்றனர் – விமல்வீரவன்ச. தமிழீழ விடுதலை புலிகள் இயக்கம், இலங்கையில் இருந்து இல்லாமல் செய்யப்பட்டுள்ள நிலையில் புலம்பெயர்தமிழர்கள், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மூலம் அவர்களின் திட்டங்களை தற்போது நிறைவேற்றி வருவதாக தேசிய சுதந்திரமுன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் விமல்வீரவங்ச இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து விமல் வீரவன்ச மேலும் தெரிவித்துள்ளதாவது ” தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு இந்த நாட்டில் இருந்து ஒழிக்கப்பட்டுள்ளனர். எனவே புலம்பெயர் தமிழர்கள் பழிவாக்கும் நோக்கில் தற்போது நாட்டில் பல திட்டங்களை முன்னெடுத்துள்ளனர். கடற்படை, இராணுவம் மற்றும் புலனாய்வு ஆகிய துறைகளில் புலம்பெயர் தமிழர்களின் பழிவாங்கும் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. இந்த நாட்டில் உள்நாட்டு யுத்தத்தில் தமிழீழ விடுதலை புலிகளை முற்றாக ஒழிப்பதற்கு கடற்படையினரே அழுத்தங்களை கொடுத்தனர் என்பதை புலம்பெயர்தமிழர்கள் நன்கு அறிவார்கள். இதனை நான் கூறவில்லை. தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினர் அரசியல்துறை பொறுப்பாளர் தமிழினியே இதனை தெரிவித்துள்ளார். யுத்த காலத்தில் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்புக்கு பாரியளவில் ஆட்பலம் இல்லாத நிலையே காணப்பட்டிருந்தது. எனவே அதனை முகாமைத்துவம் செய்வதற்கு அவர்களிடம் இருந்த மிகப்பெரிய பலம் ஆயுதப் பலமே, எனவே தான் உள்நாட்டு யுத்தத்தில் தமிழீழ விடுதலை புலிகளை முற்றாக ஒழிப்பதற்கு கடற்படையினர். இராணுவம் மற்றும் புலனாய்வுதுறையினரை அழுத்தம் கொடுத்தனர். இதனாலே அவர்களை பழிவாங்கும் நடவடிக்கையை புலம்பெயர் தமிழர்கள் ஆரம்பித்துள்ளனர். புலம்பெயர் தமிழர்கள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மூலம் தங்களின் திட்டத்தினை செயற்படுத்துகின்றனர். இதுவே தற்போது அநுரகுமார திசாநாயக்கவின் மறுமலர்ச்சியுகத்தின் திட்டமாகும். அதாவது மறுமலர்ச்சி யுகத்தினை ஏற்படுத்துவதாக கூறும் அநுர அரசாங்கம், புலம்பெயர்தழிமர்களின் கோரிக்கையினை நிறைவேற்றுவதாக வாக்குறுதியளித்துள்ளதாகவே தெரிகிறது. இந்தநாட்டில் இராணுவம் கடற்படை அரசபுலனாய்வு துறை என்பன பலமிக்கதாக இருந்த வரலாறே கடந்த காலத்தில் காணப்பட்டது. ஆனால் இன்று அங்கு வெற்றிடம் நிலவுகிறது. https://athavannews.com/2025/1442127

இலங்கைக்கான சேவையை மீண்டும் ஆரம்பிக்கும் இஸ்ரேலின் ஆர்கியா ஏர்லைன்ஸ்!

1 month 3 weeks ago
இலங்கைக்கான சேவையை மீண்டும் ஆரம்பிக்கும் இஸ்ரேலின் ஆர்கியா ஏர்லைன்ஸ்! எதிர்வரும் செப்டெம்பர் முதல் இஸ்ரேலின் ஆர்கியா ஏர்லைன்ஸ் இலங்கைக்கான விமான சேவையை மீண்டும் தொடங்க திட்டமிட்டுள்ளது. இறுதியாக 2024 மே மாதம் ஆர்கியா ஏர்லைன்ஸ் இலங்கைக்கான சேவை தொடர்ந்தது. இந்த நிலையில் 2025 செப்டம்பர் 23, 25 அன்று சேவை மீண்டும் தொடங்கியவுடன், டெல் அவிவ் – கொழும்பு வழித்தடம் விமான நிறுவனத்தின் குல்லிவேர் ஏர்பஸ் A330-200 விமானத்தின் மூலமாக இணைக்கப்படும். மீதமுள்ள கோடை காலத்திற்கு விமான நிறுவனம் வாராந்திர விமானப் பயணத்தைத் திட்டமிட்டுள்ளது. https://athavannews.com/2025/1442083

இலங்கை முழுவதும் இந்தியாவின் கையில்; விமல் வீரவன்ஸ கொதிப்பு!

1 month 3 weeks ago
நம்ப வைத்துக் கழுத்தறுக்கும் இந்தியா, அதில் சந்தேகமில்லை. ஆனாலும் விமல் வீரவன்ச ஒரு காகம். அந்தாள் கிளறுவதற்கு கிட்டவும் போகமுடியாது. இருந்தும் நாங்கள் காகத்தை அழைத்து சோறு வைப்பதுபோல், புதிய உதயனும் அந்தாளை அழைத்து அவர் செய்தியைப் போட்டுள்ளது.🤧

காசாவை முழுமையாக கைப்பற்றுமாறு பெஞ்சமின் நெட்டன்யாகு இஸ்ரேலிய படையினருக்கு உத்தரவிடவுள்ளார் - சிஎன்என்

1 month 3 weeks ago
காஸா: நெதன்யாகு அரசின் புதிய திட்டம் இஸ்ரேலில் பிளவை ஏற்படுத்தியுள்ளது ஏன்? பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, காஸாவில் மனிதனால் உருவாக்கப்பட்ட பஞ்சம் நிலவுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது கட்டுரை தகவல் யோலண்ட் நெல் மத்திய கிழக்கு செய்தியாளர் யாங் டியன் பிபிசி நியூஸ் 41 நிமிடங்களுக்கு முன்னர் காஸாவை முழுமையாக மீண்டும் ஆக்கிரமிக்க இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டமிடுவதாக செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து காஸாவில் இஸ்ரேல் ராணுவ நடவடிக்கையை விரிவுபடுத்தினால் அது பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தும் என ஐநா மூத்த அதிகாரி எச்சரித்துள்ளார். இத்தகைய நகர்வு "மிகவும் கவலையளிக்கும்" எனவும், இது மேலும் பல பாலத்தீனர்களின் உயிர்களையும், ஹமாஸால் பிணையாக வைக்கப்பட்டுள்ள இஸ்ரேலிய பணயக்கைதிகளின் உயிர்களையும் ஆபத்தில் ஆழ்த்தலாம் எனவும் ஐநா உதவி பொதுச் செயலாளர் மிரோஸ்லாவ் ஜென்கா ஐநா பாதுகாப்பு அவையில் கூறினார். நெத்தன்யாகு தனது பாதுகாப்பு அமைச்சரவையுடன் இந்த வாரம் ஆலோசனை நடத்த திட்டமிட்டிருப்பதாக இஸ்ரேல் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. "முடிவு எடுக்கப்பட்டுவிட்டது. நாங்கள் காஸா பகுதியை முழுமையாக கைப்பற்றி, ஹமாஸை தோற்கடிக்கப் போகிறோம்," என நெதன்யாகு அரசை சேர்ந்த ஒரு மூத்த நபர் கூறியதாக செய்தியில் மேற்கோள் காட்டப்பட்டது. பட மூலாதாரம், AFP VIA GETTY IMAGES ஆனால், வியாழக்கிழமை நடைபெறவுள்ள பாதுகாப்பு அமைச்சரவைக் கூட்டம் இத்தகைய நடவடிக்கையை அங்கீகரிக்க வேண்டும். சமீபத்தில் போர் நிறுத்த பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து ஹமாஸ் மீது அழுத்தம் கொடுக்கும் உத்தியாக இந்தத் திட்டம் இருக்கலாம் அல்லது நெதன்யாகுவின் தீவிர வலதுசாரி கூட்டணியில் உள்ள கூட்டாளிகளின் ஆதரவை உறுதிப்படுத்தும் முயற்சியாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. காஸாவில் நடைபெறும் யுத்தம் தொடர்பாக இஸ்ரேலுக்கு சர்வதேச அழுத்தம் அதிகரித்து வந்திருக்கிறது, காஸாவில் படிப்படியாக பஞ்சம் ஏற்பட்டு வருவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். தனது உரையில் ஜென்கா, இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகளை விரிவாக்குவதற்கு எதிராக எச்சரித்தார். "இது பல மில்லியன் பாலத்தீனர்களுக்கு பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தும் மற்றும் காஸாவில் மீதமுள்ள பணயக்கைதிகளின் உயிர்களை மேலும் ஆபத்தில் ஆழ்த்தலாம்," என்று அவர் கூறினார். சர்வதேச சட்டத்தின் கீழ், "காஸா எதிர்கால பாலத்தீனத்தின நாட்டின் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கிறது, இருக்க வேண்டும்" என்று அவர் மேலும் கூறினார். இஸ்ரேலின் ராணுவம், தற்போது காஸாவின் 75% பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகக் கூறியது. ஆனால் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பாலத்தீனர்கள் வாழும் பகுதிகள் உட்பட முழு பகுதியையும் ஆக்கிரமிக்க புதிய திட்டத்தை இஸ்ரேல் பரிந்துரைக்கும் என கூறப்படுகிறது ராணுவத் தளபதி மற்றும் பிற ராணுவத் தலைவர்கள் இந்த உத்திக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் இந்த முன்மொழிவுகள் இஸ்ரேலில் பிளவை ஏற்படுத்தியுள்ளன . இத்திட்டம் குறித்து ஊடகங்களில் பேசிய பெயர் குறிப்பிடாத அந்த மூத்த நபர், "இது ராணுவ தளபதிக்கு ஏற்புடையதில்லையென்றால் அவர் பதவி விலக வேண்டும்," என்று பதிலளித்தார். பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, 2023 அக்டோபர் முதல் உணவு பற்றாக்குறையால் 89 குழந்தைகள் உட்பட 154 பேர் இறந்ததாக ஹமாஸ் கட்டுப்பாட்டில் இயங்கும் காஸாவின் சுகாதார அமைச்சகம் கூறியது இத்தகைய முடிவு தங்கள் அன்புக்குரியவர்களின் உயிர்களை ஆபத்தில் ஆழ்த்தலாம் என்று பணயக்கைதிகளின் குடும்பங்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். 49 பணயக்கைதிகள் இன்னும் காஸாவில் சிறைவைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது, அவர்களில் 27 பேர் இறந்துவிட்டதாக நம்பப்படுகிறது. போர் நிறுத்தம் மற்றும் அனைத்து பணயக்கைதிகளையும் உடனடியாகவும் நிபந்தனையின்றியும் விடுவிக்க வேண்டும் ஆகியவற்றை ஜென்கா பாதுகாப்பு அவையில் அவர் மீண்டும் வலியுறுத்தினார். பாலத்தீனர்கள் எதிர்கொள்ளும் "அசுத்தமான" மற்றும் "மனிதாபிமானமற்ற" நிலைமைகளைக் குறிப்பிட்டு, உடனடியாக போதுமான மனிதாபிமான உதவிகளை தடையின்றி அனுமதிக்க வேண்டும் என்று இஸ்ரேலை அவர் வலியுறுத்தினார். "இஸ்ரேல், காஸாவிற்கு உள்ளே நுழையும் மனிதாபிமான உதவிகளை கடுமையாகக் கட்டுப்படுத்தி வருகிறது, மேலும் அனுமதிக்கப்படும் உதவிகள் முற்றிலும் போதுமானதாக இல்லை," என்று ஜென்கா கூறினார். மே 2023 முதல் உணவு மற்றும் பொருட்களைப் பெற முயன்றபோது 1,200-க்கும் மேற்பட்ட பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாகக் கூறி உணவு விநியோக மையங்களில் நடைபெறும் தொடர்ச்சியான துப்பாக்கிச்சூடுகளை அவர் கண்டித்தார். 2023 அக்டோபர் முதல் உணவு பற்றாக்குறையால் 89 குழந்தைகள் உட்பட 154 பேர் இறந்ததாகக் ஹமாஸ் கட்டுப்பாட்டில் இயங்கும் காஸாவின் சுகாதார அமைச்சகம் கடந்த வாரம் கூறியது. காஸாவில் மனிதனால் உருவாக்கப்பட்ட, பரவலான பட்டினி நிலவுவதாக ஐநா முகமைகள் எச்சரித்துள்ளதுடன் இந்த மாதம் குறைந்தது 63 ஊட்டச்சத்து குறைபாடு தொடர்பான மரணங்கள் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளன. உதவி வழங்கப்படுவதற்கு எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லை என்றும், காஸாவில் "பட்டினி இல்லை" என்றும் இஸ்ரேல் முன்னதாக வலியுறுத்தியிருந்தது. ஹமாஸ் 2023 அக்டோபர் 7 ஆம் தேதி தெற்கு இஸ்ரேலில் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் காஸாவில் ராணுவத் தாக்குதலைத் தொடங்கியது, அந்தத் தாக்குதலில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 251 பேர் காஸாவிற்கு பணயக்கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர். இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகளால் 60,000-க்கும் மேற்பட்ட பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாக அந்தப் பிரதேசத்தின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cqxg4d8jyn8o

மன்னாரில் இளையோர்களினால் முன்னெடுக்கப்பட்ட 'கருநிலம் பாதுகாப்பு' மண் மீட்பு போராட்டம்

1 month 3 weeks ago
06 AUG, 2025 | 02:21 PM மன்னார் மாவட்டத்தில் பல்தேசிய நிறுவனங்களின் இல்மனைட் கனிய மணல் சுரண்டல்களினால் மக்களின் வாழ்விடங்கள் மற்றும் பூர்வீக நிலங்கள் அழிவடையும் அபாயம் காணப்படுகின்ற நிலையில் குறித்த நடவடிக்கைகளை கண்டித்து, மன்னார் மாவட்ட இளையோர் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த விழிப்புணர்வு போராட்டம் இன்று புதன்கிழமை (06) காலை 10.30 மணியளவில் மன்னார் பஜார் பகுதியில் இடம்பெற்றது. 'மன்னார் மாவட்டத்தின் இயற்கை வளங்களில் ஒன்றாக மணல் உள்ளது. இந்த மணல், இல்மனைட் கனிமத்தை கொண்டிருப்பதால் உலகளவில் பெரும் கேள்வி உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு மேலாக அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த பல்தேசிய நிறுவனம் ஒன்று இல்மனைட் மணல் அகழ முயற்சித்து வருகிறது. இதற்கான அனுமதிகள் இழுபறியில் இருந்த போதிலும் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் அவை வழங்கப்படுவதற்கான சூழல் உருவாகியுள்ளதாக தெரிய வருகிறது. குறிப்பாக அவுஸ்திரேலிய நிறுவனம் அகழ்வுக்கு சூழலியல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை ஒன்றை சுற்றுச்சூழல் அதிகார சபையிடம் சமர்ப்பித்திருந்தது. இதற்கு சுற்றுச்சூழல் அதிகார சபை சாதகமான அறிக்கையை வழங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து பல்தேசிய நிறுவனங்களுக்கு மணல் அகழ்வதற்கான அனுமதி வழங்கப்படுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு இல்மனைட் மணல் அகழபட்டால் அடுத்த 10 ஆண்டுகளுக்குள் மன்னார் மாவட்டத்தின் வாழ்நிலங்களுக்குள் கடல் நீர் உட்புகுந்து மக்களின் வாழ்விடங்களையும் பூர்வீக நிலங்களையும் அழித்து விடும் அபாயம் உள்ளது. இந்த அழிவை தடுக்கவும், எமது பூர்வீக நிலங்களையும் மக்களின் இருப்பையும் பாதுகாக்கவும் 'கருநிலம் பாதுகாப்பு' என்ற கருப்பொருளுடன் மக்களை விழிப்புணர்வு செய்யும் போராட்டத்தை முன்னெடுக்க இளையோர் நடவடிக்கைகளை முன்னெடுத்த நிலையில் குறித்த விழிப்புணர்வு போராட்டம் இன்று புதன்கிழமை (6) மன்னார் நகர சுற்றுவட்ட பகுதியில் இடம்பெற்றது. இதன் போது கலந்து கொண்ட இளையோர் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பேரணி ஒன்றை முன்னெடுத்தனர். குறித்த பேரணி மன்னார் நகர சுற்றுவட்ட பகுதியில் ஆரம்பமாகி மன்னார் பொலிஸ் நிலைய வீதியூடாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை வீதியை சென்றடைந்தது. அங்கிருந்து மன்னார் பொது விளையாட்டு மைதான வீதியூடாக மன்னார் நகர சுற்று வட்ட பகுதியை சென்றடைந்தது. அதனைத் தொடர்ந்து கணிய மணல் அகழ்வுக்கு எதிராக ஜனாதிபதிக்கு அனுப்பும் வகையில் தபாலட்டையில் கையொப்பம் சேகரிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டத்தின் ஒரு அங்கமாக விழிப்புணர்வு நாடகம், கையெழுத்து பெற்றுக் கொள்ளும் செயற்பாடுகள் நாளை வியாழக்கிழமை (7) இடம் பெற்று இறுதியில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபருக்கு மகஜர் ஒன்று கையளிக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/221949
Checked
Mon, 09/29/2025 - 03:46
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed