புதிய பதிவுகள்2

184 பேர் படுகொலை செய்யப்பட்ட சத்துருக்கொண்டானில் பாரிய மனிதப் புதைகுழி; இன்றும் பல சாட்சிகள் உள்ளன

1 month 3 weeks ago
184 பேர் படுகொலை செய்யப்பட்ட சத்துருக்கொண்டானில் பாரிய மனிதப் புதைகுழி; இன்றும் பல சாட்சிகள் உள்ளன சத்துருக்கொண்டான் படுகொலை நடைபெற்ற இராணுவமுகாமில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படவேண்டும் என சத்துருக்கொண்டான் படுகொலை நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு தலைவர் வைரமுத்து குழந்தைவடிவேல் கோரிக்கை விடுத்துள்ளார். மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இதன்போது கருத்து தெரிவித்த அவர், மட்டக்களப்பு மாவட்டத்தில்.1990.09.09 அன்று சத்துருக்கொண்டான் பனிச்சையடி கொக்குவில் பிள்ளையாரடி ஆகிய கிராமங்களில் 184 பேர் படுகொலை செய்யப்பட்டு இருக்கின்றனர். இலங்கை ராணுவத்தினராலும், முஸ்லிம் ஊர்காவல் படையினராலும் இந்த படுகொலை செய்யப்பட்டது. இந்த படுகொலைக்கு நேரடியாக சாட்சியங்களும் இருக்கின்றது. புதிய அரசாங்கத்தில் படுகொலைகள் அனைத்தும் தோண்டப்பட்டு கொண்டிருக்கின்றது. உதாரணமாக செம்மணி படுகொலை தோண்டப்பட்டு இருக்கின்றது. அதே நேரத்தில் கிழக்கு மாகாணத்தில் மிகக் கொடூரமாக நடந்த படுகொலை என்றால் சத்துருக்கொண்டான் படுகொலை. இந்த படுகொலை சத்துருக்கொண்டானில் அமைந்த ராணுவ முகாமில் 184 பேரை அழைத்து கொண்டு செல்லப்பட்டு வாளாளும் கத்தியாலும் வெட்டி டயர்கள் போட்டு எரிக்கப்பட்டனர். இன்று இதற்கான நீதி இதுவரைக்கும் கிடைக்கவும் இல்லை. இரண்டு ஆணைக்குழுவில் நான் சாட்சிகள் தெரிவித்துள்ளேன். ஒன்றும் சந்திரிகா அம்மையார் கால ஆணைக்குழுவில்சாட்சிகள் தெரிவித்திருந்தேன். இதில் நேரடியாக சந்திரிகா அம்மையார் ஒரு ஆனைக்குழுவை நிறுவி இதில் ஓய்வு பெற்ற ஒரு நீதி அரசர் பாலகிட்ணர். விசாரணை செய்ததில் நான்கு இலங்கை ராணுவத்தினர் இனங்காணப்பட்டு பெயர்களும் இங்கே கூறப்பட்டது. இதில் முக்கியமான சூத்திரதாரி பிரிகேடியர் பேர்சி பெனாண்டோ, கேப்டன் ஹெரத், கேப்டன் வர்ணகுலசூரிய, கேப்டன் விஜயநாயக்க இந்த நால்வரும் அந்த ஆணைகுழுவால் இவர்கள்தான் படுகொலைக்கு முக்கிய சூத்திரதாரி என்று இனங்காணப்பட்டு, இதுவரைக்கும் எந்த நீதியும் கிடைக்கப்பெறவில்லை. எனவே இந்த படுகொலையை உடனடியாக புதிய அரசாங்கம் சர்வதேச விசாரணைக்கு கொண்டு செல்ல வேண்டும். உள்நாட்டு விசாரணையில் எந்த நம்பிக்கையும் எங்களுக்கு இல்லை. அதே நேரத்தில் இந்த படுகொலை இடம்பெற்ற முகாம் அமைந்திருந்த இடத்தில் அகழ்வு செய்தால் நிறைய எலும்புக்கூடுகள் எடுக்கலாம் என தெரிவித்தார். https://akkinikkunchu.com/?p=335764

இலங்கையில் இஸ்ரேலியர்களுக்கு சிறப்பு பாதுகாப்பா? – அரசாங்கம் விளக்கம்!

1 month 3 weeks ago
அறுகம்பே, வெலிகம பகுதிகளில் இஸ்ரேலியர்களின் சட்டவிரோத வணிகங்களுக்கு எதிராக நடவடிக்கை - அரசாங்கம் உறுதி Published By: VISHNU 06 AUG, 2025 | 03:00 AM (நா.தனுஜா) அறுகம்பே மற்றும் வெலிகம உள்ளிட்ட பகுதிகளில் இஸ்ரேலியர்கள் உள்ளடங்கலாக வெளிநாட்டவர்களால் சட்டவிரோதமாக நடாத்தப்பட்டுவரும் வணிகங்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு செவ்வாய்க்கிழமை (5) கொழும்பிலுள்ள அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. அதன்போது இலங்கையில் அறுகம்பே, வெலிகம மற்றும் உனவட்டுன போன்ற பகுதிகளில் அதிகரித்துவரும் இஸ்ரேலியப்பிரஜைகளின் ஆதிக்கம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மேற்கண்டவாறு தெரிவித்தார். அதேபோன்று வாராந்தம் ஒருமுறை இஸ்ரேலியர்கள் கூடும் இடத்துக்கு அவ்வேளையில் பாதுகாப்பு வழங்கப்படுவதற்குக் காரணம் சுற்றுலாப்பயணிகளுக்கு உரிய பாதுகாப்பை அளிக்கவேண்டிய கடப்பாடு அரசாங்கத்துக்கு இருப்பதனாலேயே தவிர, வேறெந்த விசேட பாதுகாப்பும் வழங்கப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார். அதேவேளை மேற்குறிப்பிட்டவாறு சுற்றுலாப்பயணிகளாக நாட்டுக்கு வருகைதரும் வெளிநாட்டவர்களால் இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் உரிய அனுமதிபெறாமல், சட்டவிரோதமான முறையில் நடாத்தப்பட்டுவரும் வணிகங்கள் கண்டறியப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார். அத்தோடு இலங்கைக்கு வருகைதரும் இஸ்ரேலிய விமானங்களுக்குப் பாதுகாப்பு வழங்கும் தீர்மானம் கடந்த 2023 ஆம் ஆண்டு கடந்த அரசாங்கத்தில் நிமல் சிறிபால டி சில்வா தலைமையிலான குழுவினராலேயே மேற்கொள்ளப்பட்டதாகவும், அத்தீர்மானமே தற்போது நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். https://www.virakesari.lk/article/221929

வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இலங்கையில் சாரதி அனுமதி பத்திரத்தை எவ்வாறு பெறலாம்?

1 month 3 weeks ago
வௌிநாட்டினருக்கான சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பில் வௌியான தகவல் ஓகஸ்ட் மாதம் 3 ஆம் திகதி முதல் வெளிநாட்டினருக்கு தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்காக கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் திறக்கப்பட்ட கருமபீடம் வழியாக 120 வெளிநாட்டினருக்கு சாரதி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டதாக மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க தெரிவித்துள்ளார். கனரக வாகன சாரதி அனுமதிப்பத்திரங்களை பெற வெளிநாட்டினரிடமிருந்து அதிகளவான கோரிக்கை இருக்கும் நிலையில், அவ்வாறு அனுமதிப்பத்திரத்திரம் வழங்கப்படாது என்றும் அவர் கூறினார். "சுற்றுலாவை ஊக்குவிக்கவும், சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்படும் சிரமத்தைத் தடுக்கவும், ஓகஸ்ட் 3 ஆம் திகதி முதல் இலங்கையில் உள்ள கட்டுநாயக்க விமான நிலையத்தில் தற்காலிக அனுமதிகளை வழங்க கருமபீடத்தை திறந்துள்ளோம். இது 24 மணி நேரமும் திறந்திருக்கும். கோரிக்கைகள் முன்வைத்தாலும் சில அனுமதிகளை வழங்க முடியாது. குறிப்பாக முச்சக்கர வண்டிகள் மற்றும் கனரக வாகனங்களை செலுத்த நாங்கள் அனுமதிப்பதில்லை. அத்தகைய கோரிக்கைகள் நிராகரிக்கப்படுகின்றன. வௌிநாட்டினரின் விசா காலத்தின் அடிப்படையில் இரண்டு மாதம் முதல் 5 மாதங்கள் வரை விசா அனுமதிப் பத்திரம் மற்றும் சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுப்படியாகும் காலத்திற்கு அமைய தற்காலிக அனுமதி வழங்கப்படுகிறது. மேலும், நாங்கள் ஒரு நிரந்தர அனுமதியை வழங்குகிறோம். நாங்கள் விமான நிலையத்தில் அதை வழங்குவதில்லை. வழக்கம் போல், இது வெரஹெர அலுவலகத்தில் செய்யப்படுகிறது." என்றார். புதிய வாகனங்களை பதிவு செய்வது குறித்தும் கமல் அமரசிங்க தனது கருத்துக்களை வௌியிட்டார். "ஜனவரி முதல், நாங்கள் 133,678 வாகனங்களைப் பதிவு செய்துள்ளோம். இதில் மிகப் பெரிய எண்ணிக்கை மோட்டார் சைக்கிள்கள் ஆகும், அவற்றில் 100,451 பதிவு செய்யப்பட்டுள்ளன. அடுத்த பெரிய எண்ணிக்கையாக 20,535 கார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அத்துடன், இரட்டை பயன்பாட்டு வாகனங்கள், லொறிகள் மற்றும் முச்சக்கர வண்டிகள் போன்ற வாகனங்கள் உள்ளன. பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை நாங்கள் அவதானிக்கின்றோம்." என்றார். https://adaderanatamil.lk/news/cmdziqq8y026sqp4kbwkduttd

முஸ்லிம்களின் இழப்புகளும் நீதிக்கான கோரிக்கைகளும்

1 month 3 weeks ago
புலிகள் நிகழ்த்திய காத்தான்குடி, ஏறாவூர் பள்ளிவாசல் படுகொலை குருக்கள்மடம் பிரதேசத்தில் வைத்து முஸ்லிம்கள் விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்பட்ட வழக்கின் விசாரணைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், காத்தான்குடிப் பள்ளிவாசல்களில் இறைவழிபாட்டில் ஈடுபட்டிருந்த முஸ்லிம்களை மிலேச்சத்தனமாகப் புலிகள் கொன்று குவித்த சம்பவத்தின் 35ஆவது நினைவு தினமும் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. ஆபத்து வருகின்றபோது மக்கள் ஒன்றுகூடுகின்ற, அடைக்கலம் தேடுகின்ற இடமாக எப்போதும் வணக்கஸ்தலங்கள் இருக்கின்றன. இறை நம்பிக்கையுள்ள மக்களின் கடைசிப் புகலிடமாகவும் இவை உள்ளன. இதில் எந்த மதக் குழுமத்தைச் சேர்ந்தவர்களும் விதிவிலக்கல்லர். கொழும்பிலும் வேறுபல இடங்களிலும் கத்தோலிக்க தேவாலயங்களில் நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் மிக மிலேச்சத்தனமானது. இதனை யாருமே ஏற்றுக்கொள்ளவில்லை. இதனோடு சம்பந்தப்பட்டவர்களின் ஜனாஸாக்களை முஸ்லிம்கள் பொறுப்பேற்காமைக்கும், இதுவரை அந்தக் கும்பலுக்காக வக்காலத்து வாங்காததற்கும் காரணம் இது இஸ்லாத்திற்கு விரோதமான, மனித குலத்திற்கு எதிரான செயல் என்பதனாலாகும். அது மட்டுமன்றி, ஒரு புனித நாளில் வழிபாட்டுத் தலங்களுக்குள் தாக்குதல் நடத்துவதற்கு முஸ்லிம் அடிப்படைவாத, பயங்கரவாத குழுவொன்று துணைபோனதை முஸ்லிம் சமூகத்தால் ஒருபோதும் ஜீரணிக்கவே முடியாது. இறைவனின் சந்நிதியிலேயே பலியெடுக்கப்பட்ட மக்களின் வலி கொடியது. அது பெரும் பாவமாகும். ஆனால், இந்த அனுபவத்தை முஸ்லிம்கள் 35 வருடங்களுக்கு முன்னரேயே பெற்று விட்டனர். காத்தான்குடி, ஏறாவூர் மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களிலும் அக்கரைப்பற்றிலும் பள்ளிவாசல்களில் தொழுகைக்காக ஒன்று கூடியவர்களைத் துளியளவு கூட ஈவிரக்கமின்றி கொலை செய்ததை, எந்தப் போராட்ட கோட்பாட்டினாலும் நியாயப்படுத்தி விட முடியாது. இதுபோல, தலதா மாளிகை போன்ற வழிபாட்டு இடங்களிலும் குண்டுத்தாக்குதல்கள் இடம்பெற்றதை நாமறிவோம். அப்படியென்றால், 90களில் இந்த மோசமான கலாசாரத்தை ஆரம்பித்து வைத்தது விடுதலைப் புலிகளும் அவர்களுடன் சில திட்டங்களில் சேர்ந்த்தியங்கிய ஆயுதக் குழுக்களும் என்றுகூடச் சொல்லலாம். தமிழர்களும் முஸ்லிம்களும் மொழியால் நிலத்தால் மட்டுமன்றி அரசியல், சமூக ரீதியாகவும் பிட்டும் தேங்காய்ப்பூவும் போல, இருந்த காலமொன்று உள்ளது, அப்போதிருந்த மூத்த தமிழ் அரசியல்வாதிகள் முஸ்லிம்கள் தனியான ஒரு இனக் குழுமம் என்ற அடையாளத்தையும் அந்தஸ்தையும் கொடுத்தனர் எனலாம். இருப்பினும், 80களின் நடுப்பகுதியில் பல தமிழ் ஆயுதக் குழுக்கள் அரசியல் கட்சிகளை மேவத் தொடங்கின. ஆயுதங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டது. கணிசமான தமிழ் அரசியல்வாதிகளும் கட்சிகளும் குறிப்பாக விடுதலைப் புலிகளுடன் ஒத்திசைவாகச் செயற்படத் தொடங்கினர். அப்போது முஸ்லிம்கள் தனிவழியில் பயணிக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. முஸ்லிம் காங்கிரஸ் உருவானது இந்த தருணத்தில்தான். நிலைமை இப்படியிருக்கும் போது புலிகளும் இன்னும் ஒருசில தமிழ் ஆயுதக் குழுக்களும் முஸ்லிம்களை நசுக்கத் தொடங்கின. 90களில் இந்த திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன. தமிழ-முஸ்லிம் உறவில் முதல் கீறல் என்பது கிழக்கு மாகாணத்தில் புலிகள் நடத்திய பள்ளிவாசல் படுகொலைகளில் ஆரம்பித்தது. இரண்டாவது பெரிய உறவு முறிவு வடக்கு முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதில் நடந்தேறியது. வரலாற்றை அறிந்த யாரும் இதனை மறுக்க முடியாது. 1990ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3ஆம் திகதி முஸ்லிம்கள் வழக்கமாக இரவுத் தொழுகையில் ஈடுபட்டிருந்த வேளை அயற் கிராமங்களின் ஊடாக காத்தான்குடிக்குள் நுழைந்த விடுதலைப் புலிகள் பள்ளிவாசல்களுக்குள் இறைவழிபாட்டில் ஈடுபட்டிருந்த பெரியவர்களும் சிறுவர்களுமாக சுமார் 103 பேரை கொன்று குவித்து விட்டுப் போனார்கள். காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா பெரிய ஜும்ஆப்பள்ளிவாசல், அதே பகுதியிலுள்ள மஸ்ஜிதுல் {ஹஸைனிய்யா பள்ளிவாசல் ஆகிய இரண்டி லும் தொழுகையி ல் ஈடுபட்டுக் கொண்டிரு ந்த 103 முஸ்லிம்கள் புலிகளால் அன்றைய தினம் சுட்டுக் கொல்லப்பட்டனர். 140 பேர் காயமடைந்தனர்.அன்று வெள்ளிக்கிழமை இரவு இஷாத் தொழுகைக்கான அதான் சொல்லப்பட்டதும் சிறியவர், பெரியவர் என அனைவரும் பள்ளியினுள் சென்று வுழூ செய்து கொண்டு தொழுகைக்காக இமாமின் பின்னால் வரிசையாக நின்று கொண்டிருந்த போது புலிகள் இவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து குண்டுத் தாக்குதலையும் நடத்தினர். இதன்போது, பலரின் உயிர் அவ்விடத்திலேயே பிரிந்தது. புலிகள் பள்ளிவாசலினுள் புகுந்து துப்பாக்கிப் பிரயோகம் செய்கின்றார்கள் என்பதை அங்கு தொழுது கொண்டிருந்த பலரும் பின்னர்தான் புரிந்து கொண்டார்கள். பலர் படுகாயங்களுடன் குற்றுயிராய்க் காணப்பட்டு பின்னர் மரணித்தனர். தொழுகைக்காக வந்த சிலரை உள்ளே அவசரமாகச் செல்லுங்கள் என பள்ளிக்குள் அனுப்பி விட்டு அவர்கள் மீது புலிகள் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாக அப்போது பலர் கூறினர். புலிகள் முஸ்லிம்களைப் போல அபாயக் குரல் எழுப்பி, சிறிய காயங்களுடன் கிட ந்தவர்கள் மற்றும் உயிர் த ப்பிக் கிடந்தவர்களையும் எழுப்பி அவர்களையும் தந்திரமாகக் கொன்றதாகவும் சொன்னார்கள். ஒரு சிறுபான்மைச் சமூகத்தின் உரிமைக்காகப் போராடுவதாகக் கூறிய இயக்கம், தமக்குப் பக்கத்திலேயே வாழும் இன்னுமொரு சிறுபான்மைச் சமூகத்தை மிக கீழ்த்தரமான முறையில், ஈவிரக்கமில்லாமல் கொன்று குவித்ததை போல ஒரு பேரவலம் உலகில் வேறெங்கும் நடந்திருக்காது. குருக்கள்மடத்தில் நூற்றுக்கு மேற்பட்ட முஸ்லிம்கள் விடுதலைப் புலிகளால் கொலை செய்யப்பட்ட சூடு ஆறுவதற்கிடையில் ஒரு மாதத்திற்குள்ளேயே இந்த கைங்கரியத்தைப் புலிகள் மேற்கொண்டனர். முஸ்லிம்களை அழித்தொழிக்கும் திட்டத்தில் புலிகள் எந்தளவுக்கு ஈடுபாடாக இருந்தார்கள் என்பதற்கு இதுவொரு சான்றாகும். அத்தோடு நிற்கவில்லை.இந்த சம்பவம் நடந்து ஒரு வாரத்தில் அதாவது ஆகஸ்ட் 11ஆம் திகதி ஏறாவூர் பள்ளிவாசலில் தொழுது கொண்டிருந்த முஸ்லிம்கள் 121 பேர் இதே பாணியில் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதே காலப் பகுதியில்தான், அக்கரைப்பற்று பள்ளிவாசலிலும் வேறு இடங்களிலும் புலிகள் தாக்குதல் நடத்தி பலரை கொன்றனர். ஆனாலும், அவர்களின் வெறி அடங்கியிருக்கவில்லை. 1990ஆம் ஆண்டு ஒக்டோபரில் வடக்கில் வாழையடி வாழையாக வாழ்ந்த முஸ்லிம்கள் ஒரு இலட்சம் பேர் உடுத்திருந்த ஆடையோடு மட்டும் சில மணிநேரங்களில் அங்கிருந்து இதே புலிகளால் வெளியேற்றப்பட்டனர். முஸ்லிம் சமூகம், தமிழரின் விடுதலைப் போராட்டத்திற்கும் அரசியலுக்கும் செய்த பங்களிப்புக்களையும் வரலாற்று உண்மைகளையும் மறைத்து விட்டு, அற்ப காரணங்களுக்காகவும் முஸ்லிம்களை அடக்குவதற்காகவும் விடுதலைப் புலிகள் மட்டுமன்றி, இன்று ஜனநாயகம் பேசுகின்ற பல தமிழ் குழுக்கள் செய்த கடத்தல்கள், கப்பம்கோரல், அட்டூழியங்கள் என்று அடுக்கிக் கொண்டே போகலாம். இந்த விவகாரங்களை முஸ்லிம்கள் இறைவனிடம் பாரம் கொடுத்துவிட்டு ஒதுங்கிக் கொண்டனர் என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு சில பாதிக்கப்பட்ட குடும்பங்களும் செயற்பாட்டாளர்களும் சில முயற்சிகளைச் செய்தாலும், முஸ்லிம் அரசியல் தலைவர்கள் இதற்காக நீதி வேண்டிப் பேராராடவில்லை. தமிழர்களுக்கு நடந்த அநியாயங்களுக்காகப் பேசிய, பேசும் தமிழ் அரசியல்வாதிகள் ‘முஸ்லிம்களுக்கும் ஏன் அப்பாவிச் சிங்கள மக்களுக்கும் நடந்ததும் மீறல்தான். அதற்கும் விசாரணைகள் வேண்டும்' என்று கூறியதாக ஞாபகத்தில் இல்லை. இப்படியான ஒரு சூழலில்தான் நல்லிணக்கம் பற்றிப் பேசுகின்றோம். எனவே, வடக்கில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமை, கடத்தல், காணாமலாக்கபடுதல் சம்பங்கள் மற்றும் கிழக்கில் பல இடங்களில் மேற்கொள்ளப்பட்ட பள்ளிவாசல் படுகொலைகள் என, 30-35 வருடங்களாக நீதி நிலைநாட்டப்படாத விவகாரங்களுக்கும் நீதி விசாரணைகள் நடத்தப்படவில்லை என்பதை யாரும் மறந்து விடக் கூடாது. புலிகளில் தலைவர் பிரபாகரன், இவ்வாறான பெரிய அநியாயத்தை ‘ஒரு துன்பியல் நிகழ்வு' என்று ஒரே வசனத்தில் சொல்லி முடித்துக் கொண்டார். அவ்வாறே, விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டு விட்டார்கள் என்று கூறி இந்த சம்பவங்களுக்கான நீதி விசாரணைகளை நடத்தாமல் விட முடியாது. இந்தப் படுகொலைகளுக்கு யார் கட்டளையிட்டார்கள், யார் செய்தார்கள் என்ற உண்மை கண்டறியப்பட்டு அவர்கள் குற்றவாளிகள் என்பது உலகுக்கு அறிவிக்கப்பட வேண்டும். புலிகள் அமைப்பில் மீதமாக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இருப்போர் பொருத்தமானவர்களாக இருப்பார்களாயின் இதற்கு பொறுப்புக்கூறச் செய்யப்பட வேண்டும். https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/புலிகள்-நிகழ்த்திய-காத்தான்குடி-ஏறாவூர்-பள்ளிவாசல்-படுகொலை/91-362355

இலங்கை முழுவதும் இந்தியாவின் கையில்; விமல் வீரவன்ஸ கொதிப்பு!

1 month 3 weeks ago
இலங்கை முழுவதும் இந்தியாவின் கையில்; விமல் வீரவன்ஸ கொதிப்பு! இந்தியா இலங்கையை முழுவதுமாக ஆக்கிரமித்துவிட்டது என்றும் இலங்கையின் பல முக்கியமான துறைகள் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டன என்றும் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ஸ குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது- இந்தியா எமது நாட்டை முழுமையாக ஆக்கிரமித்துள்ளது. டிஜிற்றல் அடையாள அட்டைகளைத் தயாரிக்கும் பணி அந்த நாட்டுக்கு வழங்கப்படுவதன் மூலம் எமது நாட்டுப்பிரஜைகள் அனைவரினதும் தகவல்கள் இந்தியாவிடம் சென்றுவிடும். அதுமட்டுமல்ல, இந்த நாட்டுக்குயாரெல்லாம் சுற்றுலாவிகளாக வருகிறார்கள் என்று அறிவதற்கு இந்தியா முயற்சி செய்கிறது. இதை வெளிநாட்டுச் சுற்றுலாவாசிகள் விரும்பமாட்டார்கள். இந்தியாவின் தொழில்நுட்பத்தை நம்பமுடியாது. இந்தியாவின் தொழில்நுட்பம் என்ற பெயரில் இஸ்ரேலின் தொழில்நுட்பத்தை ஈரானுக்கு வழங்கியது இந்தியா. அதனால்தான் ஈரான் இலகுவாக இஸ்ரேலைத் தாக்கியது. இவ்வாறு துரோகம் செய்கிற நாடு தான் இந்தியா. அது நம்பிக்கைக்குரிய நாடு அல்ல. எமது நாட்டை அது வேறு சக்திகளுக்குக் காட்டிக்கொடுத்துவிடும். துறைமுகத்தின் ஒரு பகுதியை இந்தியாவின் டொக்யார்ட் நிறுவனத்துக்கு வழங்கவுள்ளது இலங்கை அரசு. அந்த இடத்தில் இந்தியப் போர்க்கப்பல்களும் நீர் மூழ்கிக் கப்பல்களும் தயாரிக்கப்படும். இந்தியாவுடன் பாதுகாப்பு ஒப்பந்தங்களைச் செய்துள்ளது இந்த அரசாங்கம். ஆனால், அவற்றை வெளியிட முடியாது என்று சொல்கிறது. ஜே. ஆர். கூட இலங்கை இந்திய ஒப்பந்தத்தை வெளியிட்டார். ரணில்கூட புலிகளுடன் செய்த போர் நிறுத்த ஒப்பந்தத்தை வெளியிட்டார். அரசாங்கம் இந்தியாவுடன் செய்த ஒப்பந்தத்தை வெளியிடமறுக்கிறது என்றால் அது பாரதூரமான எமது நாட்டுக்கு எதிரானதாகவே இருக்க வேண்டும். இதற்கு எதிராக எதிர்க்கட்சிகளும் பேசுவதில்லை. ஊடகங்களும் பேசுவதில்லை. ஊடகங்கள் அனைத்தையும் வாங்கிவிட்டது இந்தியா- என்றார். https://newuthayan.com/article/இலங்கை_முழுவதும்_இந்தியாவின்_கையில்;_விமல்_வீரவன்ஸ_கொதிப்பு!

செம்மணி உடைமைகளை அடையாளம் காணும் தீர்மானத்தை UN வரவேற்றுள்ளது!

1 month 3 weeks ago
செம்மணி உடைமைகளை அடையாளம் காணும் தீர்மானத்தை UN வரவேற்றுள்ளது! adminAugust 6, 2025 செம்மணி மற்றும் கொக்குத்தொடுவாய் கூட்டுப் புதைகுழி தளங்களில் இருந்து மீட்கப்பட்ட தனிப்பட்ட உடைமைகளை அடையாளம் காண்பதில் பொது மக்களின் உதவியை நாடும் தீர்மானம் இலங்கையில் உண்மை மற்றும் நீதி நல்லிணக்கத்தை நோக்கிய ஒரு குறிப்பிடத்தக்க மற்றும் நீண்டகாலமாக எதிர்ப்பாக்கப்பட்ட ஒரு நடவடிக்கை ஆகும் என ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை அலுவலகம் தெரிவித்துள்ளது. https://globaltamilnews.net/2025/218886/

ஜனவரி முதல் 133,678 புதிய வாகனங்கள் பதிவு!

1 month 3 weeks ago
ஜனவரி முதல் 133,678 புதிய வாகனங்கள் பதிவு! ஜனவரி முதல் இலங்கையில் மொத்தம் 133,678 புதிய வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் ஜெனரல் கமல் அமரசிங்க தெரிவித்துள்ளார். அதன்படி, புதிய பதிவுகளில் பெரும்பாலானவை மோட்டார் சைக்கிள்கள் ஆகும். 2025 ஆம் ஆண்டில் இதுவரை மொத்தம் 100,451 புதிய மோட்டார் சைக்கிள்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் குறிப்பிட்டார். ஜனவரி முதல் 20,535 கார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார். மீதமுள்ள பதிவுகளில் இரட்டை பயன்பாட்டு வாகனங்கள், லொரிகள் மற்றும் முச்சக்கர வண்டிகள் அடங்கும். https://athavannews.com/2025/1442044

கருத்து படங்கள்

1 month 3 weeks ago
(முன்னாள்) பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை பாராளுமன்றத்தில் 177 பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. 👇 சோமரத்ன ராஜபக்ச சம்பந்தமாக... தொடர்புடைய செய்தி கீழே உள்ளது. 👇

பதவியிலிருந்து நீக்கப்பட்டார் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் !

1 month 3 weeks ago
தேசபந்து விவகாரம்; நாடாளுமன்ற தீர்மானம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பு! தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்காக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பிரேரணை சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்னவினால் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 2002 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க, அலுவலர்களை அகற்றுதல் (நடவடிக்கைமுறை) சட்டத்தின் 17 ஆம் பிரிவின் பிரகாரம் ரி.எம்.டபிள்யூ. தேசபந்து தென்னகோனை பொலிஸ்மா அதிபர் பதவியிலிருந்து நீக்குவதற்காக முன்வைக்கப்பட்ட தீர்மானம் நேற்று (05) நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையான வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. தேசபந்து தென்னக்கோனை பொலிஸ்மா அதிபர் பதவியிலிருந்து நீக்குவதற்கான தீர்மானம் நேற்று மு.ப 11.30 மணி முதல் பி.ப 4.00 மணிவரை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து பி.ப 4.10 மணிக்கு நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் நாடாளுமன்றத்தில் (வருகைதராத உறுப்பினர்கள் உள்ளடங்கலாக) முழு உறுப்பினர்களின் எண்ணிக்கையில் பெரும்பான்மையானவர்கள், அதாவது 177 உறுப்பினர்கள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர். இதற்கு அமைய பெரும்பான்மையான வாக்குகளால் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வாக்கெடுப்பில் தீர்மானத்திற்கு எதிராக எந்த வாக்கும் பதிவாகவில்லை. ஒரு உறுப்பினர் வாக்களிப்பிலிருந்து தவிர்ந்துகொண்டிருந்தார். பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை அப்பதவியிலிருந்து நீக்குவது தொடர்பில் விசாரணைக் குழுவொன்றை நியமிக்குமாறு கோரும் தீர்மானம் 115 உறுப்பினர்களின் கையொப்பத்துடன் சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்னவிடம் கடந்த மார்ச் மாதம் கையளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து குறித்த விசாரணைக் குழுவை அமைப்பதற்கான தீர்மானம் 2025 ஏப்ரல் 08 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து பொலிஸ்மா அதிபர் ரி.எம்.டபிள்யூ. தேசபந்து தென்னக்கோனினால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் துர்நடத்தை மற்றும் பதவித் தத்துவங்களை பாரதூரமான வகையில் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் விசாரணை செய்வதற்கான குழு நியமிக்கப்பட்டது. இந்தக் குழு அப்போதைய உயர்நீதிமன்ற நீதியரசர் பி.பி. சூரசேனவின் தலைமையில் மற்றும் நீதிபதி டபிள்யூ.எம்.என்.பி. இத்தவல மற்றும் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் ஈ.டபிள்யூ.எம் லலித் ஏக்கநாயக்க ஆகியோரை உள்ளடக்கியதாக அமைக்கப்பட்டது. இந்தக் குழு நாடாளுமன்றத்தில் கூடி, சட்டத்திற்கு அமைய விசாரணைகளை நடத்தியிருந்தது. விசாரணைகளின் முடிவில் குழுவின் அறிக்கை கடந்த ஜூலை 21 ஆம் திகதி சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது. இந்த அறிக்கையை சபாநாயகர் கடந்த ஜூலை 22 நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார். விசாரணைக் குழுவின் அறிக்கைக்கு அமைய பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள மொத்தம் 23 குற்றச்சாட்டுகளில் 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 13, 14, 15, 16, 17, 18, 19, 22, மற்றும் 23 ஆம் இலக்கக் குற்றச்சாட்டுகளில் அவர் குற்றவாளியெனக் கண்டறியப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1441995

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ கைது!

1 month 3 weeks ago
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ கைது! முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் (CIABOC) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். சஷீந்திர ராஜபக்ஷ இன்று (06) காலை கெழும்பு, நுகேகொடையில் உள்ள அவரது வீட்டில் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. https://athavannews.com/2025/1442026

மன்னார் தீவுப் பகுதியில் புதிதாக காற்றாலை மின் கோபுரங்கள் அமைக்க மக்கள் எதிர்ப்பு

1 month 3 weeks ago
மன்னாரில் மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் கொண்டு வரப்பட்ட காற்றாலை பாகங்கள்! மன்னாரில் மக்களின் கடுமையான எதிர்ப்பிற்கு மத்தியில், நூற்றுக்கணக்கான பொலிஸாரின் பாதுகாப்புடன் காற்றாலை மின் உற்பத்திக்கான கோபுர பாகங்கள் இன்று அதிகாலை 2.30 மணியளவில் மன்னார் நகருக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மன்னார்-மதவாச்சி பிரதான வீதியில் முருங்கன் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காற்றாலை பாகங்களை, மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போதும், பொலிஸாரின் கடும் பாதுகாப்புடன் நகருக்குள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. முன்னதாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை ( 3) இரவு மன்னார் தள்ளாடி சந்தியில் மக்கள், குறித்த பாகங்களை நகருக்குள் எடுத்து வரக் கூடாது என்ற கோரிக்கையை முன்வைத்து போராட்டத்தை முன்னெடுத்தனர். தொடர்ச்சியாக திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளிலும் மன்னார் பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் போராட்டங்கள் தொடரப்பட்டன. இதனைத் தொடர்ந்து நேற்றைய தினம் மன்னார் பஜார் பகுதியில் உள்ள பல வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டன. இதேநிலையில்,இன்று அதிகாலை மக்கள் கண்காணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தபோதும் , பொலிஸாரின் கடும் பாதுகாப்புடன், காற்றாலை பாகங்களை ஏற்றிய வாகனங்கள் நகருக்குள் உள்நுழைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. https://athavannews.com/2025/1442009

வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இலங்கையில் சாரதி அனுமதி பத்திரத்தை எவ்வாறு பெறலாம்?

1 month 3 weeks ago
120 வெளிநாட்டினருக்கு தற்காலிக சாரதி அனுமதிப் பத்திரம்! கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) புதிதாக நிறுவப்பட்ட சேவை கருமபீடம் ஆகஸ்ட் 3 ஆம் திகதி தொடங்கப்பட்டதிலிருந்து மொத்தம் 120 வெளிநாட்டினருக்கு தற்காலிக சாரதி அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. சுற்றுலாத்துறையை மேம்படுத்தவும், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு ஏற்படும் சிரமத்தைக் குறைக்கவும் இந்த முயற்சி அறிமுகப்படுத்தப்பட்டது. 24 மணி நேரமும் செயல்படும் சேவை கவுண்டர், தகுதியுள்ள வெளிநாட்டினரின் விசாக்களின் செல்லுபடியாகும் காலம் மற்றும் ஏற்கனவே உள்ள சாரதி அனுமதிப் பத்திங்களின் அடிப்படையில் தற்காலிக சாரதி அனுமதிப் பதிரங்களை வழங்க உதவுகிறது. தற்காலிக அனுமதிப் பத்திரத்தின் செல்லுபடியாகும் காலம் இரண்டு முதல் ஐந்து மாதங்கள் வரை இருக்கும் என்று மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையர் ஜெனரல் கமல் அமரசிங்க குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், கனரக வாகனங்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்கான உரிமங்கள் இந்த சேவையின் மூலம் வழங்கப்படாது என்றும் அவர் வலியுறுத்தினார். https://athavannews.com/2025/1442019

பிரான்ஸில் பற்றி எரியும் காட்டுத் தீ! 10,000 ஹெக்டேயர் வனப்பகுதி தீக்கிரை

1 month 3 weeks ago
பிரான்ஸில் பற்றி எரியும் காட்டுத் தீ! 10,000 ஹெக்டேயர் வனப்பகுதி தீக்கிரை. பிரான்ஸின் அவூட் (Aude) மாவட்டத்தில் நேற்று மாலை ஏற்பட்ட பாரிய காட்டுத்தீயினால் ஏழு தீயணைப்புப்படை வீரர்கள் உட்பட 9 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த பகுதியில் உள்ள 10,000 ஹெக்டேயர் வனப்பகுதி இதுவரை தீயில் கருகி, சாம்பல் மேடாக காட்சியளிப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் இக் காட்டுத் தீயினால் ஆயிரக்கணக்கானோர் தங்களது வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் எனவும், 3 வீடுகள் முற்றாக தீக்கிரையாகியுள்ளதாகவும், கிட்டத்தட்ட 6,000 வீடுகளுக்கு மின்சாரம் தடைப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் பரவி வரும் தீயைக் கட்டுப் படுத்தும் முயற்சியில் 1,200 தீயணைப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாது அப்பகுதியை நோக்கிச் செல்லும் நெடுஞ்சாலைகளும் மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று பிற்பகல் ஆரம்பித்த தீ பரவல் கட்டுக்கடங்காமல் மிக வேகமாக பரவி வருவதால் தீப் பரவலைக் கட்டுப்படுத்துவது மிகவும் சவாலாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1442005

ஹிரோஷிமா அணுகுண்டு தாக்குதல் இன்றுடன் 80 ஆண்டுகள் நிறைவு!

1 month 3 weeks ago
ஹிரோஷிமா அணுகுண்டு தாக்குதல் இன்றுடன் 80 ஆண்டுகள் நிறைவு! ஹிரோஷிமா நகரின் மீது அமெரிக்கா அணுகுண்டை வீசி 80 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, ஜப்பானில் புதன்கிழமை (06) காலை மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இன்று காலை நடைபெற்ற நிகழ்வில் ஜப்பானிய பிரதமர் ஷிகெரு இஷிபா, உலகம் முழுவதிலுமிருந்து வந்த அதிகாரிகளுடன் கலந்து கொண்டார். மேற்கு ஜப்பானிய நகரமான ஹிரோஷிமா 1945 ஆகஸ்ட் 6, அன்று தரைமட்டமாக்கப்பட்டது. அப்போது அமெரிக்கா “லிட்டில் பாய்” என்ற செல்லப்பெயர் கொண்ட யுரேனியம் குண்டை வீசியது. இந்த குண்டுவெடிப்புகளில் 200,000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் – சிலர் உடனடியாகவும், ஏனையவர்கள் கதிர்வீச்சு நோய் மற்றும் தீக்காயங்களாலும் மரணித்தனர். இரண்டாம் உலகப் போரின் போது ஹிரோஷிமா சில இராணுவப் பிரிவுகளின் தலைமையகமாகவும், ஒரு முக்கிய விநியோகத் தளமாகவும் இருந்தது. இந்த நிலையில், ஹிரோஷிமா மற்றும் நாகசாகியில் குண்டுகள் வீசப்பட்டதைத் தொடர்ந்து, ஜப்பான் சரணடைந்ததன் மூலம் இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்தது, இது பல நாட்கள் இடைவெளியில் நடந்தது. அணுசக்தி வல்லரசான அமெரிக்கா மற்றும் அணு ஆயுதங்கள் இருப்பதை உறுதிப்படுத்தவோ மறுக்கவோ இல்லாத இஸ்ரேல் உட்பட 120 நாடுகள் மற்றும் பிரதேசங்களின் பிரதிநிதிகள், இந்த மைல்கல் ஆண்டிற்கான ஹிரோஷிமா அமைதி நினைவு பூங்காவில் நடைபெற்ற வருடாந்திர விழாவில் கலந்து கொண்டனர். குண்டுவெடிப்பு நடந்த சரியான நேரமான உள்ளூர் நேரப்படி காலை 8:15 மணிக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. https://athavannews.com/2025/1442012

வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இலங்கையில் சாரதி அனுமதி பத்திரத்தை எவ்வாறு பெறலாம்?

1 month 3 weeks ago
இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு மகிழ்ச்சித் தகவல். பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் புதிதாகத் தொடங்கப்பட்ட வருகைப் பதிவு சேவை கருமபீடத்தில், இரண்டு நாட்களுக்குள் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு 120 தற்காலிக சாரதி அனுமதி பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம் தெரிவித்துள்ளது. சுற்றுலாப் பயணிகள் தங்கள் விசா செல்லுபடியாகும் தன்மை மற்றும் சொந்த நாட்டு உரிமத்தின் அடிப்படையில் தற்காலிக அனுமதி அனுமதி பத்திரங்களைப் பெற தகுதியுடையவர்களாவர். 10 நிமிடங்களுக்குள் இருப்பினும் முச்சக்கர வண்டி மற்றும் கனரக வாகன உரிமங்களுக்கான கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இலங்கை வந்தவுடன் 10 நிமிடங்களுக்குள் தற்காலிக சாரதி அனுமதி பத்திரங்கள் வழங்கப்படுவதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. Tamilwinஇலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு மகிழ்ச்சித் தகவல்பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் புதிதாகத் தொடங்கப்பட்ட வருகைப் பதிவு சேவை கருமபீடத்தில், இரண்டு நாட்களுக்குள் வெள...

ஈழச்சொந்தங்களை இழிவுப்படுத்தும் கிங்டம் திரைப்படத்தைத் தமிழ்நாட்டில் திரையிடுவதை நிறுத்தாவிட்டால் திரையரங்கை முற்றுகையிட்டு தடுத்து நிறுத்துவோம் - சீமான்

1 month 3 weeks ago
தெலுங்கில் தயாரிக்கப்பட்டு தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக விமர்சனம் படிக்க முடிந்தது.இந்த திரைப்படம் சம்பந்தமாக ஒட்டப் பட்டிருந்த போஸ்டர்களை சீமானின் ஆதரவாளர்கள் நீக்கும் காட்சியை இன்று ஒரு லிங்கில் பார்க்கவும் முடிந்தது.மேலேயுள்ளதிலும் அப்படித் தான் இருக்கிறது.வழமையாக சொல்வது போல் கண்டும் காணமல் போவதே மேல்.🖐
Checked
Mon, 09/29/2025 - 03:46
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed